இப்பதிவில் நான் குறிப்பிடப்போகும் திறமைகள் என்னிடம் மெதுவாக ஒட்டிக் கொண்டத் திறமையோ, என்னையறியாமலே வந்த திறமையோ, எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே இருந்த திறமையோ அல்ல.
எங்கள் வீட்டுக்கருகில் இருக்கும் மளிகைக் கடையில் பெரிய லிஸ்டைக் கொடுத்து சாமான்களை எடுத்து, அவற்றுக்கு பில் போடும்போது கடைக்காரர் ஒவ்வொரு பொருளுக்குமான தொகைகளை எழுதும்போதே நான் அவற்றை மனதிலேயே ஒன்றன் பின் ஒன்றாகக் கூட்டி விடுவேன். நான்கு/மூன்றிலக்கத் தொகைகளை சுலபமாகவே கூட்டிட இயலும். எல்லாவற்றையும் எடுத்து எழுதி அவர் கால்குலேட்டரை எடுக்கும்போது மொத்தத் தொகையையும் முதலிலேயே கூறி விடுவேன். அவர் கூட்டி முடித்துப் பார்த்தால் கிட்டத்தட்ட 100% சதவிகிதம் நான் சொன்னதுதான் வந்திருக்கும். சில சமயம் சரியாக வராமல் போவது அவர் எழுதும் எண்களை மாற்றிப் படிப்பதால் வரும். உதாரணத்துக்கு சிலர் 4 என எழுதுவது 9 போலத் தோன்றும் அபாயம் உண்டு.
நான் கடைக்கு சென்றால் இதை நாங்கள் எல்லோருமே ஒரு விளையாட்டாகவே பாவிப்போம். இதில் என்ன திறமை வந்தது என்றால், மனதுக்குள்ளேயே கணக்கு போடும் திறமைதான். நாங்கள் பள்ளீயில் படிக்கும்போது 4 மற்றும் ஐந்தாம் வகுப்பில் மனக்கணக்குகளை அதிகம் போடச் சொல்வார்கள். பிறகு நான் மேல் வகுப்புகளுக்கு சென்றபோது அந்த பழக்கமே கிட்டத்தட்ட அழிந்தது எனக் கொள்ளலாம்.
இப்போதெல்லாம் எல்லாவர்றுக்கும் கால்குலேட்டரையே எடுக்கிறார்கள். நான் பார்த்த ஒரு பிரெஞ்சு பிரகஸ்பதி 10 + 2 = 12 என்பதற்கும் கால்குலேட்டரைத் தேடியதை என்னால் இன்னும் மறக்கவியலவில்லை. சிலர் கூறலாம் கால்குலேட்டர்கள் இருக்கும்போது ஏன் மண்டையை உடைத்துக் கொள்ளவேண்டும் என. அவர்கள் இந்தத் திறமையின் மிகச்சிறந்த அனுபவத்தையே இழக்கிறார்கள் என்பேன். நாங்கள் அக்காலத்தில் லாகரிதம் எல்லாம் கற்றோம். இப்போதும் அதைக் கற்பிக்கிறார்கள் என நினைக்கிறேன். சமீபத்தில் 1990-91 கல்வியாண்டில் இரு ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு நான் கணக்கு சொல்லிக் கொடுத்த போதும் அது இருந்தது, இன்று இன்னும் இருக்கிறது என நம்ப விரும்புகிறேன்.
பொருளாதார நிர்ப்பந்தங்களால் பல திறமைகள் தேவையின்றியும் போயுள்ளன. அவற்றில் முக்கியமானது நல்ல கையெழுத்துடன் எழுதுவது. அக்காலங்களில் பத்திரங்கள் எழுத நல்ல காப்பி ரைட்டர்கள் தேவைப்பட்டனர். ஆனால் இப்போது அவர்களுக்கு தேவையின்றி கணினி ஃபாண்டுகள் வந்து விட்டன. பாட்டுகளை கம்போசிங் செய்வதிலும் கணினியின் உபயோகம் வந்துள்ளதக அறிகிறேன்.
இவை எல்லாம் நல்லதுக்கா இல்லையா என்பதை எளிதாகக் கூறிவிட முடியாது. பொருளாதார மாறுதல்கள் சில திறமைகளைத் தேவையில்லாமல் ஆக்கினாலும் நான் முதலில் கூறிய மனக்கணக்கு திரமைகள் மாணவர்களிடம் இல்லாமல் போவது நல்லதுக்கல்ல என்றே கூறுவேன். ஆகவே மாணவர்களிடம் எடுத்த எடுப்பிலேயே கால்குலேட்டர்கள தராது பார்த்துக் கொள்ள வேண்டும்.
நான் வழக்கமாக பத்திரிகைகள் வாங்கும் கடை முதலாளிக்கு பத்தாம் வகுப்பில் படிக்கும் ஒரு சுட்டிப் பெண் இருக்கிறாள். அக்குழந்தையை நான் அவளது ஐந்தாம் வகுப்ப்லிருந்தே கவனித்து வருகிறேன். நான் 100 ரூபாயைக் கொடுத்து 34.50 க்கு பத்திரிகைகள் எடுத்திருப்பதாகக் கூறினால், அந்த சுட்டிப் பெண் மீதி 65.50 என்பதை ஆங்கிலத்தில் உரக்கக் கூறிவண்ணம் சரியான சில்லறை தருவாள். அவள் பெற்றோகளோ முதலில் ஐம்பது பைசாவை எடுத்து 35 எனக்கூறிவிட்டு, 5 ரூபாயை எடுத்து 40 எனக்கூறி, பிறகு முறையே 10 மற்றும் ஐம்பது ரூபாய் நோட்டுக்களை சேர்த்து 100 எனக் கூட்டி நம்மிடம் தருவார்கள். சில்லறை நோட்டுகள் கைவசம் ரெடியாக இல்லாவிட்டால் கால்குலேட்டரே துணை. தென்றல் என்னும் பெயருடைய அந்தச் சுட்டிப் பெண் ஆறாம் வகுப்பிலேயே கணக்குக்கான ஒலிம்பியாட்டில் கலந்து கொண்டு மூன்றாம் பரிசு பெற்றவள். சகபோட்டியாளர்கள் பலர் அச்சமயம் அவளை விட 4 அல்லது 5 வயது பெரியவர்கள்.
இந்தச் சுட்டிப் பெண் போல குழந்தைகள் இருக்கும்வரை நமது இளைய சமுதாயத்தின் மேல் உள்ள எனது நம்பிக்கை குறையாதுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
-
( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால்
உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம்
ஆகிய ...
13 hours ago
19 comments:
மறு ஒலிபரப்போ ?
அட.. வடை எனக்குத்தான்..
மீ தி பர்ஸ்ட்..
பகிர்ந்தமைக்கு நன்றிகள் . அந்த பெண்ணிற்கு வாழ்த்துக்கள்..
கணித அறிவு தான் மென்பொருள் துறைக்கு அடிப்படை.
@மாதவன்
இல்லை, மறு ஒலிபரப்பு இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
MS ஆபீஸ்ல ஆட்டோ ஸ்பெல் செக் இருப்பதால் நிறைய பேரு ஸ்பெல்லிங் mistake பத்திக் கவலைப்படுவதில்லை.
\\நான் பார்த்த ஒரு பிரெஞ்சு பிரகஸ்பதி 10 + 2 = 12 என்பதற்கும் கால்குலேட்டரைத் தேடியதை என்னால் இன்னும் மறக்கவியலவில்லை. \\
இப்பல்லாம் 10 + 2 =? அப்படின்னு கூகுள்ல டைப் பண்ணிப் பாக்குறாங்க:)
எங்கள் காலத்தில் வாய்பாட்டு புத்தகத்தில், பெருக்கல் வாய்ப்பாட்டில் 20 வரைக்கும் இருந்தாலும் 16 வரை தான் படிக்கசொல்லி க்கொடுப்பார்கள் (16X16 வரைதான் எனக்கு மனப்பாடம் )அப்படியே சுருக்கி சுருக்கி இப்ப 1 X 1 க்கு கால்குலேட்டர் வேண்டியிருக்கிறது.கேட்டால் மெயின் மெமரியை தொந்திரவு பண்ணாமல் ஆக்சிலரி மெமரியை பயன்படுத்துவதாக வியாக்கியானம்.
இந்த காலத்தில்` தென்றல்` மாதிரி இருப்பது ஆச்சர்யம். போற்றுவோம்.
நீங்கள் சொல்வது சரிதான்...
//@மாதவன்
இல்லை, மறு ஒலிபரப்பு இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன் //
Sorry, But, I feel like I 'd already read this.... was it like this.. it was posted for a very short time & kept in edit mode... and in such a short gap, by change I had read it..(it was at least a month back..)
--- I agree with the author that '10= 2 = ..' requires calculator
ஆமாம் நிறைய திறமைகள் வழக்கொழிந்து விட்டுவிட்டன.
ஓலைச்சுவடிகளில் எழுதிக்கொண்டிருந்தோம்.பிறகு காகிதத்துக்கு மாறினோம். ஓலைச்சுவடிகளிலேயே எழுதிக்கொண்டிருந்தவர்கள் அங்கலாய்த்திருப்பார்கள்.
சுட்டிப் பெண் தென்றலுக்கு வாழ்த்துக்கள். அவள் வாழ்வில் இன்னும் பல சாதனை புரிய ஆண்டவனை வேண்டுகிறேன்.
What is the meaning of "blow my own trumpet"...:)
இப்போ பசங்க 20/1 க்கு கூட step எழுதி தான் விடை எழுதறாங்க.
சில எளிமையான steps ஐக் கூட மனதில் போடுவதில்லை
அந்தப் பெண் abacus படிக்கிறாளா இருக்கும்
போன மாதம் Ph.D படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான் தேர்வில் நான் கேட்ட கேள்விக்கான பதில் மற்றும் பயன் படுத்த வேண்டிய சூத்திரத்தையும் கொடுத்திருந்தேன். 24 மாணவர்களில் ஒருவர் கூட சரியான விடை அளிக்காதது, இன்றைய கல்வி கற்பித்தலின் தரத்திற்கு எடுத்துக்காட்டு. அந்த கேள்வி, 5 mm உயரம், 2mm விட்டம் கொண்ட உருளையின் 2mm நீளத்தை கண்ணாடியில் பதித்து விட்டால், வெளியே உள்ள உருளையின் பரப்பளவு என்ன? இந்த கணக்கீடு, ஃபியூயெல் செல் ஆராய்ச்சியில் அவசியம்.
சமீபத்திய Ph.D நேர்காணலின் போது, பல மாணவர்கள் நானோ துகள்களில் ஆராய்ச்சி செய்ய ஆர்வம் வெளியிட்டனர். ஏன் நானோ துகள்கள் அவசியம் என்பது கேள்வி. ஒரு sphere ரின் surface area மற்றும் volume ற்கான சூத்திரம் தெரிந்தால் இதை மிக எளிதாக விளக்கலாம். நாங்கள் நேர்கண்ட 300 க்கு மேற்பட்ட மாணவர்களில் ஏறக்குறைய 100 பேரிடமாவது இந்த கேள்வி கேட்கப்பட்டது. யாருக்கும் பதில் தெரியவில்லை. Teaching in the schools must improve.
-கிருஷ்ணமூர்த்தி
Maths is the Queen of science. Have seen people who excel in mathematics are usually sharp-minded and good planners.
Also its essential to kids to throw light on the significance of mental arithmetic, visualizing complex shapes and structures.
http://thatstamil.oneindia.in/news/2010/08/18/sohrabuddin-encounter-narendra-modi-cbi.html
சமீபகாலமா திரும்ப வரிசைக்கு அனானி கமெண்ட் போட ஆரமிச்சிட்டீங்க போல.நடத்துங்க.
சமீபத்துல ஒரு பிரபல பதிவரோட இடுகைக்குப்போயி வரிசைக்கு ஆபாச அனானி கமெண்ட் போட்டீங்களே..அதைச் சொன்னேன்.
தொலைந்து போனது திறமைகள் மட்டும் இல்லை.
மனிதமும் தான்.
கருத்துப் பரிமாற்றம் என்ற பெயரில் உங்கள் பதிவுகளில் அருள், ஜோ போன்றோர் வைக்கும் அபத்தக் கருத்துக்களும், அதை மறுப்பதாகச் ஆதரிப்பதாகச் சொல்லிக் கொண்டு சிலர் வைக்கும் ஆபாசக் கருத்துகளும், இதையெல்லாம் அனுமதிக்கும் உங்கள் கருத்துச் சுதந்திரமும் எனக்குப் புரியவில்லை. எந்த ஒரு விஷயத்துக்கும் ஒரு purpose இருக்கும். இதெற்கெல்லாம் என்ன purpose என்று எனக்குப் புரியலை?
இது உங்க தளம். இதில் எதை வெளியிடலாம் என்பது உங்கள் விருப்பம் என்றாலும் ஒரு ஒழுங்குமுறைப் படுத்துதல் இருக்கலாம் இல்லையா ?
இதைப்படித்தவுடன் எனக்கு ஐசக் ஆசிமோவின் கதை ஒன்று ஞாபகம் வந்துவிட்டது.
@வஜ்ரா
என்ன ஆச்சரியம் வஜ்ரா? அதே கதைதான் எனது இப்பதிவுக்கு தூண்டுதல்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இங்கே வந்த எல்லோருமே டோன்டு ஸார் கேட்ட
10 + 2 = ?
என்ற கேள்விக்கு பல விதமாக ரீ ஆக்ட் செய்திருக்கிறார்கள்.
உண்மையிலே இது அரித்மெடிக் அல்ல.
பத்துக்குழந்தைகள் பெற்ற கணவனும் மனைவியும் என்ன ஆவார்கள் ?
என்பது தான் கேள்வி.
இது கூகுள் லே கிடைக்குமா அல்லது கால்குலேட்டர்லே கிடைக்குமா ?
சுப்பு ரத்தினம்.
http://kandhanaithuthi.blogspot.com
Post a Comment