எங்கள் மொழிபெயர்ப்பாளர் தலைவாசல் ப்ரோஸ்.காம்-ல் வந்த இச்செய்தி சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது.
அதிலிருந்து சில வரிகள்:
A Saudi Arabian translator is seeking an apology and compensation from the Australian government after an incident with the Australian ambassador that she says showed disgraceful rudeness and lack of cultural sensitivity.
Wafaa Saeed had been working for the embassy in Riyadh only a day when the ambassador, career diplomat Kevin Magee, allegedly lost his temper at a staff function because – in accordance with local Islamic practice – she declined to shake hands with him. Ms Saeed, 28, said the incident occurred at a farewell lunch on January 19 this year for the translator she was replacing.
Ms Saeed emailed then Prime Minister Kevin Rudd and Foreign Minister Stephen Smith two weeks later. In the emails she asked that Mr Magee be given cultural sensitivity training. She also said that taking into account the position she passed over and ”the vigorous emotional, ethical and professional abuse I encountered by the man who should be the most diplomatic and knowledgable, he has to compensate me for all that as a result of his inconsiderate behaviour”.
முழு விவரங்களுக்கு இங்கு செல்லவும்.
ஆஸ்திரேலிய தூதுவருக்கு சங்குதாண்டி. அவர் தூதுவருக்குரிய குணங்களுடன் இருப்பதாகத் தெரியவில்லை.
எனது சகமொழிபெயர்ப்பாளருக்கு எனது முழு ஆதரவு. ஆஸ்திரேலிய அரசு எவ்வாறு எதிர்வினை தரும் என்பதைப் பார்க்க வேண்டும். சவுதி அரசையும் அவதானித்தால் அவசியம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கிறிஸ்துவமே ஐரோப்பாவின் பண்பாட்டுமையம்
-
நியூயார்க் நகரின் மையத்தில் அமர்ந்து செய்த ஒரு காணொளி. அந்த இடத்தில்
அப்போது உருவான எண்ணம் அப்படியே வெளிவரவேண்டும் என நினைத்தேன். மைக்
பொருத்துவது வரை ஒரு ...
3 hours ago
14 comments:
ஆஸ்திரேலியர்கள் பெரும்பாலும் மரியாதை தெரியாதவர்களாகத் தான் இருக்கிறார்கள்.
பிரிட்டிஷாரில் இருவகை உண்டு -ஒன்று அதீத நாகரீகம் கடைப்பிடிக்கும் மரியாதை தெரிந்தவர்கள். மற்றொன்று அங்கே விலைபோகாமல் வளைகுடாவில் மேய வந்திருக்கும் அல்லக்கைகள் அவர்களும் இது போலத்தான். ஒன்றுமே தெரியாது ஆனால் மனலை கயிறாய் திரிப்பேன் என்று பேச்சிலேயே காலந் தள்ளி விடுவார்கள்.இந்தியர்கள் ”துரை”க்கு அடக்கமாக நடப்பதே ஜென்ம சாபல்யம் என்று திரிபவர்கள்
உண்மை தான். அந்த ambassador நடந்து கொண்டது சரியில்லை
ஆனாலும் இந்த cultural முறை வரவேற்புகள் பல முறை ஒரு கூத்தாகவே அணைக்குப் படுகிறது.
நான் வேலை பார்த்த ஒரு IT நிறுவனம் american client வந்த போது நெற்றியில் குங்குமம் இட்டு மாலை இட்டு வரவேற்க வெளியில் இருந்து (இதெற்கென்று நிறுவனகள் இருக்காம் ) ஒரு பெண்மணியை வரவழைத்துச் செய்தார்கள். காரணம் இந்துப் பெண்கள் இதை செய்யத் தயங்குவார்கள்என்று காரணம் சொல்லப் பட்டது.
சரி, இதை ஆண்கள் செய்யக் கூடாதா என்ன? என்ன cultural வரவேற்ப்போ என்று நினைத்துக் கொண்டோம்
தனியாக பயமாக இருக்கிறது... எப்போ வருவரோ, அருள் எப்போ வருவரோ என்று பாடத்தோன்றுகிறது.
என்ன தான் பெரிய அரசு தூதுவராக இருந்தாலும் அவர் ஆஸ்திரேலியாவில் இல்லை...அவர் இருப்பது சவுதியில். ஆகவே அவர் தான் கொஞ்சம் பிரச்சனையை டிப்ளமேடிக்காக கையாண்டிருக்கவேண்டும்.
Anonymous said...
// //தனியாக பயமாக இருக்கிறது... எப்போ வருவரோ, அருள் எப்போ வருவரோ என்று பாடத்தோன்றுகிறது.// //
ஹா...ஹா...
இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது?
இது இசுலாமியர் - கிறித்தவர் இடையேயான "சிக்கல்" என்பதால் இதனை டோண்டு எடுத்துப்போட்டிருக்கிறார். தவறு கிறித்தவரான ஆஸ்திரேலிய தூதருடையதுதான் என்பது எனது நிலைபாடு. (எனது நிலைபாட்டை யார் கேட்டது?).
இங்கே கவனிக்க வேண்டியது - "நீ தீண்டத்தகாதவள்" என்பது சிக்கலின் அடிப்படையாக இல்லை. "நீ தீண்டுவதை நான் மறுக்கிறேன்" என்பதே அடிப்படையாக இருக்கிறது. எனவே, மனித உரிமை அடிப்படையிலும் நியாயம் இசுலாமிய பெண்ணுடைய பக்கமிருக்கிறாது.
ஆனால், ஒரு பெரும் கூட்டத்தின் நிழல் பட்டாலே "தீட்டு" என்று வாழ்ந்த இந்திய சமூகத்திற்கு - இதெல்லாம் வியப்பாகத்தான் இருக்கும்.
இலங்கைத் தமிழர்கள் ஏன் ஆஸ்திரேலியாவை அவுஸ்த்ரேலியா என்றும் ரஹ்மானை றஹ்மான் என்றும் எழுதுகிறார்கள் ?
சன் டிவி கிடையாது சன் ரிவி ஏன் அப்படி எழுதுகிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா
I don't think anything will happen. Aus. politicians are very adamant in not accepting the mistakes (from Cricket up to the inhumane behavior in not accepting immigrants) that too when it comes to the asians.
No surprise an Aus. politician is involved in a despicable act.
@arul
தீண்டித் தீண்டி கீழேயே நிறுத்தி வைப்பதையோ, அல்லது எனக்குக் கிடைத்தது இடம் என்று மொத்தமாக வழியை தானும் தன் பரம்பரையுமாக அடைத்துக் கொண்டு விடுவதையோ விட, விலகி வழி விட்டு முன்னேறிக்கோங்க என்று விட்டு விடுதலே இன்றைய நிலைக்குத் தேவை. சும்மா பழங்கதை பபேசித்தன் இருப்பை தக்க வைத்துக் கொள்ளுதல் அல்ல
தமிநாட்டுத் தமிழர்கள் ஏன் அவுஸ்த்ரேலியாவை ஆஸ்திரேலியா என்றும் றஹ்மானை ரஹ்மான் என்றும் எழுதுகிறார்கள் ?
சன் ரிவி கிடையாது சன் டிவி - ஏன் அப்படி எழுதுகிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா?
என்ன சார் இது! எல்லா இடத்திலேயும் எல்லாத் துறையிலேயும் இந்த நிலைமைதானா!
நல்ல வேளை நான் ஃப்ரீலான்சா மொழிபெயர்ப்பு செய்யறேன். பிரச்சினை இல்ல.
//
இலங்கைத் தமிழர்கள் ஏன் ஆஸ்திரேலியாவை அவுஸ்த்ரேலியா என்றும் ரஹ்மானை றஹ்மான் என்றும் எழுதுகிறார்கள் ?
சன் டிவி கிடையாது சன் ரிவி ஏன் அப்படி எழுதுகிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா
//
அவிங்க பேசுறது சுத்தமான தமிழாம்...நாம பேசுறதெல்லாம் தமிழே இல்லை...அது ஆரிய மொழி கலந்த கலப்பு மொழியாம்...
சன் டி.வியை சன் ரீவீ என்று சொன்னால் அது சுத்தமாம்...
australia என்பதை ஆஸ்திரேலியா என்று சொன்னால் தவறு...ஏ.யூ சேரும்போது "அவு" என்றாகவேண்டுமாம்...அப்பத்தான் சுத்தமாம்...
மொழிப் பார்ப்பானீயர்கள்!
// //அவிங்க பேசுறது சுத்தமான தமிழாம்...நாம பேசுறதெல்லாம் தமிழே இல்லை...அது ஆரிய மொழி கலந்த கலப்பு மொழியாம்...
சன் டி.வியை சன் ரீவீ என்று சொன்னால் அது சுத்தமாம்...
மொழிப் பார்ப்பானீயர்கள்!// //
ஆங்கில வார்த்தையை அப்படியே பயன்படுத்துவது இது. இதில் சுத்தமான தமிழுக்கு என்ன வேலை? சன் டி.வி என்றாலும் ரீ.வி என்றாலும் - இது இரண்டுமே தமிழல்ல. "சன் தொலைக்காட்சி" என்பதுதான் தமிழ். (சன் என்பது நிறுவனப்பெயர். அதனைத் தமிழாக்கத் தேவை இல்லை)
இதில் மொழிப் பார்ப்பனீயம் எங்கே இருக்கிறது? சுத்தம் சுத்தமில்லை எனபதெல்லாம் இதில் எதுவும் இல்லை.
"urban" என்பதை மேலை நாட்டினர் "அர்பன்" என்று உச்சரிக்கின்றனர். அதுவே பிலிப்பைன்ஸ், தைவான் போன்ற பகுதிகளில் "உர்பன்" என்று உச்சரிக்கின்றனர்.
அதுபோலத்தான் - தமிழக, இலங்கை, மலேசிய தமிழரின் "ஆங்கில வார்த்தை உச்சரிப்பின்" வேறுபாடும்.
பொதுவாக மேற்கத்திய சமூக எதிர்ப்பார்ப்புகளில் கைகுலுக்கல் ஒருவர் மற்றொருவரை மதிக்கிறார் என்ற சமிஞ்னை செய்கிரது. அதனால் ஒருவர் மற்றொவர் கையை குலுக்க மறுத்தால், முன்னவர் பின்னவரை துச்சமாக நினைக்கிறார் என அர்த்தம். ஒரு மேற்கத்திய தூதுவராலயத்தில் பணி புரியும் நபர் ஏன் இந்த அடிப்படை மரியாதையை பின்பற்றக் கூடாது; அதுவும் தன் கடைசி நாளில் ஒருவர் கை குலுக்க மறுத்தால், தூதுவருக்கு நிச்சயம் கோபம் ஏற்ப்படும். அந்த பெண் செய்தது சரியில்லை. தூதுவர் கண்களில் அந்தப் பெண் அவரை மனிதராக மதிக்கவில்லை
விஜயராகவன்
மேலும் இந்த சவிது அரேபிய டிப்ளோமாடிச் பிராக்டீஸ் படி, இந்தியா சவுதிக்கு முஸ்லிம் தூதுவரைத்தான் அனுப்பணுமாம். நம் அசடு இந்திய அரசாங்கமும் ரியாதுக்கு முஸ்லிம் தூதுவரைத்தான் அனுப்புகிறது. சவுதியில் சர்வதேச தூதுவ நியமங்களை அனுசரிப்பதில்லை, தடுக்கி விழுந்தால் "இஸ்லாமிய கலாசாரம்" என்ற ஜோக்கர்படி மற்றவர்களை குறை சொல்லுவார்கள்
விஜயராகவன்
Post a Comment