சமீபத்தில் ஏஷியாட் 1982 சமயத்தில் நாட்டில் முதன்முறையாக கலர் டிவிக்கள் புழக்கத்துக்கு வந்தன. அப்போது மத்தியத் தகவல் & ஒலிபரப்பு மந்திரி திரு. வசந்த் சாத்தே அவர்கள். கலர் டெலிவிஷனுக்காக மிகவும் பாடுபட்டவர். பல இடங்களில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று, “ஏழைகள் மிகுந்த நம் நாட்டில் கலர் டிவிக்கு என்ன முக்கியத்துவம்”? இப்போது குழந்தைத்தனமாகப் படும் அக்கேள்வியை அவர் பொறுமையுடன் கையாண்டார்.
முன்னேற்றம் என்பது இம்மாதிரியான எண்ணங்களால் தடைபடக்கூடாது என்பதை அவர் பல முறை பல விதமாக எடுத்துக் காட்டிய வண்ணம் இருந்தார். கடைசியில் அவர் சொன்னதுதான் நடந்தது. கலர் டிவி இப்போது இரண்டாவது அல்லது மூன்றாவது தலைமுறைக்கு வந்து விட்டது. அதனால் பல வேலை வாய்ப்புக்கள் (வன்பொருள் மற்றும் மென்பொருள்) வந்தது ஒரு பைபிராடக்டாக இப்போது பார்க்கலாம்.
எங்கள் வீட்டில் வழக்கம்போல அது லேட்டாகத்தான் மூன்றாண்டுகள் கழித்து 1985-ல்தான் வந்தது. கூடவே வி.சி.ஆரும் வந்தது. இப்போது அது சிடி மற்றும் டிவிடிக்களின் உபயத்தால் இல்லை என்பது வேறு விஷயம்.
இன்னொரு விஷயம் டெலிஃபோன். 1987-ல் 8000 ரூபாய் கட்டி OYT திட்டத்தில் புக் செய்த நான் 1990 நவம்பர் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அரசின் ஏகபோக ஆதிக்கத்தில் இருந்ததால் டெலிஃபோன் இணைப்பு பெற மிகவும் தொங்க வேண்டியிருந்தது. எல்லாமே சோஷலிசம் என்ற மனித இயற்கைக்கு புறம்பான அரசு கொள்கையால் கட்டுண்டிருந்தன. டெலிஃபோன் என்பது பணக்காரர்களுக்கே கட்டுப்படியாகும் என்ற மனப்பான்மை ஆழ்ந்திருந்த காலம்.
இந்த நிலையால்தான் 1997-ல் நிதிமந்திரி சிதம்பரம் வருமானவரி ரிட்டர்ன்ஸைத் தரவேண்டிய கட்டாயத்தை உருவாக்கியபோது ஆறுவகையான மக்கள் அதற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் சில வகையினர், டெலிஃபோன் வைத்திருப்பவர்கள், செல்ஃபோன் வைத்திருப்பவர்கள், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், சொந்தவீடு வைத்திருப்பவர்கள், வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருப்பவர்கள், கிளப் அங்கத்தினர்கள் ஆகியோர் அடங்குவர்.
இப்போது? செல்ஃபோன் யாரிடம்தான் இல்லை? எல்லோரும் ரிட்டர்ன் சப்மிட் செய்ய வேண்டுமென்றால் வருமான வரி அலுவலகத்தினர் விக்கி விக்கி அழுவார்களே. ஏற்கனவேயே இப்போதெல்லாம் வரிகட்டும் அளவுக்கு வருமானம் இல்லையென்றால் ரிட்டர்னே தராதீர்கள், புண்ணியமாகப் போகட்டும் என கை கூப்பி விட்டார்களே (ஜூலை 2005 முதல்).
“அதெல்லாம் சரி, இதெல்லாம் இப்போ இங்கே வந்து ஏன் சொல்லறே பெரிசு”? என மிரட்டுகிறான் முரளி மனோகர்.
காரணம் இன்று மாலை “நாதஸ்வரம்” சீரியலில் வந்த ஒரு காட்சி. அதில் வரும் அந்தப் பெண் மகா, தனது அத்தானுடன் சேர்ந்து ஃபோட்டோ எடுக்கும்படி கூறி, தன் கையிலிருந்த காமெரா செல்ஃபோனை இன்னொரு பெண்ணிடம் தருகிறாள். இந்தக் காட்சியில் வரும் அப்பெண் சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவளாகவே காட்டப்படுகிறாள். இம்மாதிரியான பாத்திரத்தின் வீட்டில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் சாதாரண டெலிஃபோன் கூட இருந்திராது. இப்போது என்னவென்றால் கேமரா செல்ஃபோன். (இப்போது கூட “மெட்டி ஒலி” சீரியல் மறு ஒளிபரப்பில் சிதம்பரம் வீட்டில் ஃபோன் கிடையாது, பக்கத்து வீட்டுக்குத்தான் போன் வரும், அங்கிருந்து கூப்பிடுவதாக காட்சி அமைந்திருக்கும். இத்தனைக்கும் அந்த சீரியல் 2002-ல் வந்தது).
அதற்குப் பிறகு வந்த சீரியல்களிலேயே முன்னேற்றம் தெரிய ஆரம்பித்து விட்டது. மலர்கள் சீரியலில் எல்லார் வீட்டிலும் டெலிஃபோன், இப்போது வரும் சீரியல்களிலோ அவரவர் கைகளில் செல்பேசிகள். ஏழை பணக்காரன் என்றெல்லாம் பாகுபாடே இல்லை. ரொம்பக் கேஷுவலாக சிம் கார்ட் வேறு மாற்றுகிறார்கள் (எனக்கு அது இன்னும் செய்யத் தெரியாது).
இதில் என்ன தமாஷ் என்றால் கேமரா செல்ஃபோன் என்னிடம் கிடையாது. வாங்க முடியாது என்றில்லை, தேவையில்லை என்பதாலேயே அதை நான் வைத்துக் கொள்ளவில்லை. இன்னும் ஒரு படி மேலே சென்று கூறுவேன், எனக்கு அது கட்டாது என. அதாகப்பட்டது, வாடிக்கையாளர் அலுவலகங்கள், தொழிற்சாலைக்கு மொழிபெயர்ப்பு வேலைக்காகச் செல்லும்போது கேமரா செல்பேசி ஏதேனும் இருந்தால் அதை செக்யூரிடி டெஸ்கில் வைத்து விட்டுச் செல்ல வேண்டும். அதற்காகவே நான் அதை வாங்காமல் விட்டேன். ஆகவே விடுங்கள், அது இங்கு முக்கியம் இல்லை.
என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? ஆங், மக்கள் உபயோகத்துக்காக கிடைக்கும் உபகரணங்களின் எண்ணிக்கை மிக வேகமாகப் பரவுவதுதான்.
ஆனால் என்னைப் பொருத்தவரைக்கும் ஏனோ பல உபகரணங்கள் மிக அத்திவாசியத் தேவை என பலமுறை உணர்ந்த பிறக்கே வாங்குவது வழக்கமாகி விட்டது. இந்தப் பழக்கம் டிவி செட் வைத்துக் கொள்வதில் இருந்தே ஆரம்பித்து விட்டது. ஸ்கூட்டர்/பைக்? நோ சான்ஸ், அவற்றை இயக்கவே இன்னும் தெரியாது. காரா? அதுவும்தான் தேவையேயில்லையே!
அதே போலத்தானே இந்தக் கேமரா செல்பேசியும், விடுங்கள். இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் முக்கியக் காரணமே சோஷலிசம் என்னும் வறட்டுக் கொள்கைக்கு குட்பை சொன்னதுவே காரணம் என்பதை மகிழ்ச்சியுடன் பார்க்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
-
( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால்
உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம்
ஆகிய ...
13 hours ago
18 comments:
We got color tv only during 1999 :).
Socialism is a noble concept., But humans are not.
I also personally feel that, These scientific inventions also stopped humans to socialize in the public (not online) as Most gets glued to their TV.
We got color tv only during 1999 :)
Wrong. Already in 1982, it came on an experimental basis and then remained to conquer.
We got color TV in 1985 on 23rd June, the day of Kanishka crash.
And we were sort of late in changing over to color TV.
Regards,
N. Raghavan
Dear Dondu,
By we i meant , my family :)
// //காரா? அதுவும்தான் தேவையேயில்லையே!// //
நீங்கள் சொன்னதிலேயே இதுதான் மிகச்சிறந்த கருத்து.
நகர்ப்புற போக்குவரத்திற்கு கார் எனப்படும் மகிழுந்துகள் தேவையில்லாதவை மட்டுமல்ல, அவை தொந்தரவானவை, போக்குவரத்தை சிதைப்பவை. பொது மக்கள் போக்குவரத்து முறைகளான பேருந்து, மிதிவண்டி, நடை பயணம் - இவற்றுக்கெல்லாம் இடைஞ்சலாக இருப்பவை.
சென்னையின் முக்கியமான சந்தைப் பகுதிகளில் கார்கள் தடை செய்யப்பட்டு, மற்ற இடங்களில் கார்களைக் கட்டுப்படுத்தும் காலம் வந்தால் தான் போக்குவரத்து நெரிசல் குறையும்.
அருள்-
கள்ளு கடை (Midas, Mallaya group) காசிலே தானே கட்சி கொடி ஏறுது இங்கே
கார் கம்பனி (Hyundai, Ford)காசிலே தானே கட்சி செயல் வீர்கள் கூட்டம் கூடுது இங்கே
Agrees with Arul on this.
These scientific inventions also constitute greater amount of pollution.
சில நேரங்களில் அறிவியல் முன்னேற்றம், நவீனம் என்பது "பின்னோக்கி" போவதுபோலவும் தோன்றக்கூடும்.
எடுத்துக்காட்டாக, இப்போது சென்னை போக்குவரத்தில் எது நவீனம் என்று கேட்டால் - மேம்பாலங்கள் கட்டுவதும் அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் கட்டுவதும்தான் "முற்போக்கு" என்கிற சிந்தனை நமது ஆட்சியாளர்களிடம் உள்ளது.
ஆனால், எண்ணற்ற மேம்பாலங்களையும் அடுக்குமாடி வாகன நிறுத்தங்களைக் கட்டி முடித்த வளர்ந்த நாடுகளில் இவையெல்லாம் "பிற்போக்காக" ஆகிவிட்டன.
தென்கொரியாவின் சியோல் நகரின் மையமாக இருந்த பிரதான மேம்பாலத்தியே இடித்து ஆற்றுடன் கூடிய பூங்காவாக ஆக்கிவிட்டனர்.
எப்படியிருந்த மேம்பாலம் எப்படி ஆனது என்பதை இங்கே காணவும்: http://www.streetsblog.org/2006/12/08/seouls-new-heart/
http://www.inhabitat.com/2010/02/22/seoul-recovers-a-lost-stream-transforms-it-into-an-urban-park/
நமது ஊரில் கார் தான் நவீனம், ஆனால் பாரிஸ் நகரில் மிதிவண்டி நவீனமாகிவிட்டது: http://en.wikipedia.org/wiki/Vélib'
அன்பர் அருள் உங்களை மிகவும் தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்.
கால் டாக்ஸி இல்லாமல் நீங்கள் வெளியில் செல்வதில்லை என்பது அவருக்குத் தெரியாது போலும்.
பிரான்ஸ் நாட்டில் வருடத்தில் 4-5 மாதங்கள் மட்டுமே மக்கள் ரோட்டில் வெகுதூரம் நடப்பது, சைக்கிள் ஓட்டுவது சாத்தியம். குளிர் காலத்தில் -10 டிகிரி குளிரில் சைக்கிள் ஓட்டுவது வாழ்க்கைக்கு நல்லதல்ல. மேலும் 10 செ.மீ பனியில் சைக்கிள் மிதிப்பது மெரீனா பீச் மணலில் சைக்கிள் மிதிப்பதற்கு சமம்.
அங்கெல்லாம் அவர்கள் பொழுதுபோக்குக்காக சைக்கிள் ஓட்டுகிறார்கள். நம்மூரில் பலர் சைக்கிள் ஓட்டுவது வாழ்வாதாரத்துக்காக. அந்த கேவல நிலையில் நாம் இருப்பதற்கு என்ன காரணம் என்று அருள் யோசித்தால் நலம் உண்டாகும்.
Arul,
The seoul project link is really good.
More about it here with some more good pics.
http://en.wikipedia.org/wiki/Cheonggyecheon
வஜ்ரா said...
// //குளிர் காலத்தில் -10 டிகிரி குளிரில் சைக்கிள் ஓட்டுவது வாழ்க்கைக்கு நல்லதல்ல....அங்கெல்லாம் அவர்கள் பொழுதுபோக்குக்காக சைக்கிள் ஓட்டுகிறார்கள்.// //
வஜ்ரா தவறான தகவலைத் தருகிறார். -10 டிகிரி குளிரில் சைக்கிள் ஓட்டுவது வாழ்க்கைக்கு நல்லதல்ல என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் மிதிவண்டி ஓட்டுவது தினசரி இயல்பான பயணத்திற்காகத்தான். பொழுதுபோக்கிற்காக அல்ல.
குளிரில் மிதிவண்டி ஓட்டுவது சற்று கடினம் என்றாலும், அதற்கேற்ப முன்னேற்பாடுகளை அவர்கள் செய்து கொள்கிறார்கள்.
கடந்த ஆண்டு ஐ.நா.காலநிலை மாநாட்டிற்காக டென்மார்க் நாட்டின் கோபன்ஹெகன் நகருக்கு சென்றிருந்தபோது இதனை நான் நேரில் கண்டிருக்கிறேன். அப்போது, - 15 டிகிரி கடும் குளிர் காலமாக இருந்தது.
பனிகொட்டும் குளிரில் அதற்கேற்ப அரசாங்கம் அதிகாலையிலேயே - மிதிவண்டி பாதையின் பனிக்கட்டிகளை அகற்றி, மேலும் பனி படியாமலிருக்க உப்பை தூவி வைக்கிறது. மக்கள் குளிருக்கேற்ப பிரத்தியோக உடை அணிகின்றனர். பெரும் மழை போன்று பனி கொட்டும் போது மட்டும் ஒரமாக ஒதுங்கி நிற்கின்றனர்.
கடுங்குளிரில் மக்கள் மிதிவண்டி ஓட்டுவதை இங்கே காண்க: http://www.copenhagencyclechic.com/2009/01/cycling-chic-in-winter.html
நம்முடைய ஊரில் மழைக்காலத்தில் மிதிவண்டியில் செல்வது சற்று குறைவது போன்று ஐரோப்பிய நாடுகளிலும் சற்று குறையக்கூடும். மற்றபடி - "குளிரில் சைக்கிள் ஓட்டுவது நல்லதல்ல." "அங்கெல்லாம் அவர்கள் பொழுதுபோக்குக்காக சைக்கிள் ஓட்டுகிறார்கள்." - என்றெல்லாம் அள்ளிவிடுவது ரொம்ப அதிகம்.
ஐரோப்பிய நாடுகளின் மிதிவண்டி கலாச்சாரம் குறித்து மேலும் அறிய: http://www.copenhagenize.com/
உலகெல்லாம் மிதிவண்டிகள் எப்படி பிரபலமாகி வருகின்றன என்று அறிய, இந்த நூலின் - பக்கம் 24 இல் Bike-Sharing Goes Viral கட்டுரை காண்க: http://www.itdp.org/documents/st_magazine/ST21_Winter09.pdf
அருள்,
நான் சொல்லவரும் விசயம் இது தான்.
வறுமையின் காரணமாக சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கும் நாட்டில் சைக்கிள் ஓட்டுவது உடல் நலத்திற்கு நன்மை தரும் என்று பிரச்சாரம் செய்வது ஒருவித cruel joke.
நீங்கள் 10 நாள் மாநாட்டைப் பார்த்துவிட்டுச் சொல்கிறீர்கள்.
நான் கடந்த சில ஆண்டுகளாகவே இங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இங்கே சைக்கிளை ரயில் வண்டியில் ஏற்றிக்கொண்டு எந்த ஐரோப்பிய ஊருக்கும் சென்று நீங்கள் ஓட்டலாம். ஆனால், -10 டிகிரி குளிரில் மிக மிக சிலரே ஓட்டுவர். பேருந்து, டிராம், மெட்ரோ வசதியாக இருப்பதால் அதிலேயே பயணிப்பார்கள். சொந்த கார் உள்ளவர்கள் காரில் வருவார்கள்.
இத்தகய choice நமக்கு நம் நாட்டில் இல்லை. அதெல்லாம் நமக்கு கிடைக்கும் போது மிதிவண்டி உடல் நலத்திற்கு சிறந்தது என்று பிரச்சாரம் செய்தால் அர்த்தம் இருக்கும்.
வஜ்ரா,
அருள் சொன்னா அப்பீல் செய்யக்கூடாது.
அவரு யாரு தெரியுமில்ல? அமெரிக்க கைப்புள்ள ஒபாமா மாதிரி இவரு நம்மூரு கைப்புள்ள.
வஜ்ரா said...
// //வறுமையின் காரணமாக சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கும் நாட்டில் சைக்கிள் ஓட்டுவது உடல் நலத்திற்கு நன்மை தரும் என்று பிரச்சாரம் செய்வது ஒருவித cruel joke.// //
மன்னிக்கவும்.
நீங்கள் தவறாக புரிந்துகொண்டு பேசுகிறீர்கள். உடல்நலத்திற்கான மிதிவண்டி குறித்து நான் பேசவில்லை, "நகர்ப்புற போக்குவரத்தில் சமூகநீதி" குறித்து பேசுகிறேன்.
எடுத்துக்காட்டாக, சென்னை மக்களில் பெரும்பான்மையானோர் குறைவான வருமானம் உடையவர்கள். இவர்களின் போக்குவரத்து நடைபயணம், மிதிவண்டி, பேருந்து மூலமாக நடக்கிறது. ஆனால், அரசாங்கம் பெரும்பான்மை மக்களின் தேவைகளைப் புறக்கணித்துவிட்டு, மகிழுந்து வைத்திருக்கும் சிறுபான்மையோரின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறது.
சென்னை நகரின் ஒட்டுமொத்த பயணத்தில் கார் 4 %, மோட்டார் பைக் 18 % என வெறும் 22 % மட்டுமே தனியார் மோட்டார் வாகனங்கள் மூலம் நடக்கிறது (2004 ஆம் ஆண்டு கணிப்பு). ஆனால், சாலையில் 80 % இடத்தை இவை அடைத்துக்கொள்கின்றன.
அதேசமயம் பேருந்து 29 %, மிதிவண்டி 13 % நடை பயணம் 28 % என மொத்தம் 70 % பயணங்களுக்கு காரணமாக இருக்கும் போக்குவரத்து முறைக்கு சாலையைல் 2 % இடம் கூட இல்லை.
(காண்க சென்னை Master Plan 2026 http://www.cmdachennai.gov.in/Volume1_English_PDF/Vol1_Chapter04_Transport.pdf)
"சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் முன்னுரிமை அளிக்காமல், மக்கள் பயணங்களின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கவேண்டும்" என்கிற இந்திய அரசின் நகர்ப்புற போக்குவரத்து கொள்கைக்கு எதிராகவே அரசாங்கம் நடக்கிறது. http://www.urbanindia.nic.in/policies/TransportPolicy.pdf
மக்களின் முக்கிய போக்குவரத்து வசதிகளான பேருந்துகள், நடைபாதை, மிதிவண்டிக்கு பாதுகாப்பான வழி என்பதை அரசாங்கம் புறக்கணித்துவிட்டு, தனியார் வாகன உரிமையாளர்களின் வசதிக்காக மேம்பாலம் கட்டுவதிலும், அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டுவதிலும் கவனம் செலுத்துகிறது.
1998 ஆம் ஆண்டில் சென்னையில் ஓடிய தனியார் வாகனங்கள் சுமார் 8 லட்சம், பேருந்துகள் 2800. இன்று தனியார் வாகனங்கள் 30 லட்சம் - ஆனால் பேருந்துகள் வெறும் 3000.
இவ்வாறு பெரும்பான்மை மக்களின் போக்குவரத்து தேவைகளைப் புறக்கணிப்பது சமூக நீதிக்கு எதிரானது.
எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான வஜ்ரா அய்யா!
மத்தவங்க சொல்வதையும் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்பீரோ?
முக்காலமும் அறிந்த ஞானியாகிய தாங்கள் இஸ்ரேலிலேயே தங்கியிருப்பது எமக்கெல்லாம் பேரிழப்பே!
ஆப்பீசர்,
அருள் விளக்கம் கொடுத்துவிட்டார். உனக்கு அதில் எந்த சம்பந்தமும் இல்லை.
ஒனக்குத் தேவையில்லாத பிரச்சனையில் மூக்கை நுளைக்காதே.
அது சரி, நீங்க எந்த மாதிரி ஆப்பீசர் ? வெண்ணை வெட்டி ஆப்பீசரா ?
நீங்கள்ளாம் ஆப்பீசரா இருக்குற நாட்டுல நாங்கள்ளாம் கொலைகாரனாகியிருப்போம்னு தான் என்னவோ என்னை ஆண்டவன் வெளிநாட்டுக்கே அனுப்பிட்டான்.
வஜ்ரா said...
அங்கெல்லாம் அவர்கள் பொழுதுபோக்குக்காக சைக்கிள் ஓட்டுகிறார்கள்.
உண்மை தான். இன்னொன்று Cholesterol குறைவதற்காகவும்.
Post a Comment