8/22/2010

பதிவுகள் போட காசு கொடுத்து தளம் பெறுவது, ஏன் இந்த இம்சை

சுஜாதாவின் இரண்டாம் நினைவுநாள் நிகழ்வுக்கான கூட்டத்தில் சாரு நிவேதிதாவிடம் ஒரே ஒரு கேள்விதான் வைத்தேன். அப்போது அவர் தனது கட்டண இணையதளம் காசு தராததால் முடக்கப்பட்டதாக எழுதியிருந்தார். அப்படியேனும் காசு கொடுத்து ஏன் தளம் வாங்க வேண்டும்? பிளக்கர் வேர்ட்ப்ரெஸ் ஆகியவை இலவசமாகவே இடம் தரும்போது இதெல்லாம் தேவையா என்பதுதான் அக்கேள்வி.

தங்கள் காசு கொடுத்து இணையதளம் பெறுபவர்களாவது பரவாயில்லை. ஆனால் சாரு அதற்கான விலையை நண்பர்களிடமிருந்தே பெற்று தருகிறார். ஏன் ஐயா இப்படியாவது ஓசியில் பணம் பெற்று இந்த ஒய்யாரம் தேவைதானா என்று அவரிடம் அதிகப்படியாக ஒரு கேள்வியை இத்தருணத்தில் வைக்கிறேன்.

நான் நிஜமாகவே கேட்கிறேன், பிளாக்கரில் என்ன குறை கண்டீர்கள்? கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நான் பாவித்து வருகிறேனே, ஒரு தொல்லையும் இன்றி. பதிவுகள் எல்லாம் அவ்வாறே பத்திரமாக உள்ளனவே. அப்படியே உங்களுக்கு அவை காணாமல் போகும் அபாயம் உள்ளது எனத் தோன்றினால் ஒவ்வொரு பதிவையும் அதன் பின்னூட்டங்களுடன் சேர்த்து வேர்ட் கோப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலாமே.

நானும் முதலில் அவ்வாறு செய்தேன், ஆனால் போர் அடித்தது ஆகவே விட்டுவிட்டேன் என்பது வேறு விஷயம். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. நான் எழுதுவது ஒன்றும் காலத்தால் அழியாத இலக்கியங்கள் அல்ல, பெரும்பாலும் மொக்கைப் பதிவுகளே. ஆகவே அவை தொலைந்தாலும் அவற்றை விட அதிக மொக்கைகளை நான் உருவாக்கும் சக்தி பெற்றவன் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்பதையும் இங்கு இப்போது சொல்லிவைத்து விடுகிறேன்.

எவ்வளவு யோசித்தும் கட்டண இணையதளங்களின் பயன் புரியவே இல்லை. நான் எனது மொழிபெயர்ப்புக்கான இணைய தளம் வைத்திருக்கிறேன் என்றால் அது எனது தொழிலுக்கானது. காசும் குறைவுதான் (ஆண்டுக்கு 2500 ரூபாய்கள்). அதையும் வருவாயில் இருந்து கழித்து வருமான வரியையும் குறைத்து கொள்ளலாம். ஆக 20 அல்லது 30% வரி பிராக்கெட்டில் இருக்கும் நான் இங்கு மிச்சம் பிடிப்பது 500 அல்லது 750 ரூபாய். அதே சமயம் ப்ரோஸ்.காம்-ல் இருக்கும் எனது ப்ரொஃபைல் அதிக பயனுடையது, கூடவே இலவசம் வேறு. நான் அதில் பிளாட்டினம் மெம்பராக இருப்பதே இலவசமாகத்தான் (அது என் சேவையை அங்கீகரித்து தரப்பட்டது) என்பது இன்னொரு விஷயம், ஆனால் அது என் ஒருவனுக்கு மட்டுமே பொருந்தும்.

இங்கு பல பதிவர்கள் காசு கொடுத்து இணையதளம் பெற்று பதிவிடுகிறார்கள். அவர்கள் பின்னூட்டங்களில் அதன் அனுகூலங்களைக் கூறலாமே.

இன்னொரு எரிச்சல் தரும் விவகாரம் கட்டண மின்னஞ்சல் முகவரிகள். நான் டாட்டா இண்டிகாம் இணைய சேவையை பாவிப்பதால் எனக்கு ஒரு eth.net முகவரி உண்டு. அதை பெற்ற புதிதில் அதை உபயோகித்து எனது வாடிக்கையாளர்களுக்கு கோப்புகளை அனுப்பிப் பார்த்தேன். அவை உடனடியாக போய் சேராமல் அழும்பு செய்தன. பிறகு அதே கோப்புகளை யாஹூ அல்லது ஜிமெயில் மூலம் அனுப்பினாலோ அவை உடனடியாக இலக்கை அடைந்தன.

டாட்டா இண்டிகாமுக்கு ஃபோன் செய்து கேட்டால் அவர்கள் எப்படியும் மின்னஞ்சல்கள் 24 மணி நேரத்துக்குள் போய் சேரும் என பெருமையுடன் கூறுகின்றனர். அட நாய்களா, உங்கள் பெருமையில் இடி விழ. இன்னொன்றையும் கவனித்தேன். பல கம்பெனிகளுக்கு அவற்றின் கார்பரேட் மின்னஞ்சல் முகவரிக்கு கோப்புகள் அனுப்பினால் அவையும் உடனடியாக போய் சேர்வதில்லை. அவற்றின் பல அதிகாரிகள் எனக்கு தத்தம் யாஹூ அல்லது ஜீமெயில் முகவரிகளையும் கொடுத்து பீ.சி.சி. யில் கோப்புகளை பெற்றுக் கொள்கின்றனர். எனது கேள்வி இதுதான். காசு பெற்று மின்னஞ்சல் சேவை தருபவர்களது சேவையில் ஏன் இந்த குறைபாடு? இக்கேள்வியும் என் மனதைக் குடைகிறது.

ஆனால் ஒன்று. proz.com போன்ற மொழிபெயர்ப்பு தலைவாசல்களில் திரும்பத் திரும்ப ஒன்றையே கூறுகிறார்கள். அதாகப்பட்டது இலவச மின்னஞ்சல் சேவை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் விஷயத்தில் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று. கார்ப்பரேட் ஐ.டி. என்பது காசு கொடுத்துத்தான் பெறவியலும் என்பதால் அதை வைத்திருப்பவர்கள் நம்பத் தகுந்தவர்கள் என்பதே அதன் காரணம். இதிலும் உண்மை இல்லாமல் இல்லை. அதற்கு ப்ரோஸின் இந்த மன்ற விவாதத் திரியே சாட்சி. அதே சமயம் மின்னஞ்சல்கள் செல்வதில் தாமதம் ஏற்படுகின்றனவே. ஆகவே நான் என்ன சொல்கிறேனென்றால் இருவகைகளிலும் மெயில் அனுப்பலாம். கட்டண மின்னஞ்சல் சேவை நம்பிக்கைத்தன்மைக்காகவும், இலவச மின்னஞ்சல் சேவை துரித சேவைக்காகவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

16 comments:

Unknown said...

good question....

Bruno said...

ஒரு காலத்தில் ப்ளாக்கரில் சொந்த பெயரில் தளம் ஆரம்பிக்க முடியாது

எனவே சொந்தபெயர் வேண்டும் என்று நினைத்தவர்கள் தனித்தளம் துவங்கினார்கள்

ஆனால் இப்பொழுது அப்படி இல்லை

ஆனால் உண்மை தெரியாமல் பலர் இது போல் கோமாளி ஆகிறார்கள்

இது குறித்து விரிவாக ஒரு பதிவு எழுத முயல்கிறேன்

Bruno said...

2006 வரை சொந்த பெயரில் தளம் வைக்க ஒரே வழி தனி வழங்கியில் வோர்ட்பிரஸ் போன்ற மென்பொருட்களை நிறுவுவது தான்

எனவே வேறு வழியின்றி அனைத்து தலைவலிகளையும் பொருத்துக்கொண்டு (பணச்செலவு, பாதுகாப்பு அச்சம், பதிவு அழிந்து போகும் வாய்ப்பு) மூத்த பதிவர்கள் பலரும் தனித்தளத்தில் வழங்கியில் பதிவு வைத்திருந்தனர்

ஆனால் redirection வசதியை ப்ளாக்கர் இலவசமாக தரத்துவங்கிய பின்னர் டொமைன் பெயர் வைத்திருக்கும் விபரம் தெரிந்தவர்கள் (http://www.makkal-sattam.org/http://www.parisalkaaran.com/ http://www.luckylookonline.com/http://www.narsim.in/) அனைவரும் தங்கள் பெயரிலேயே முற்றிலும் இலவசமாக தளம் துவங்கி விட்ட்னர்.

(பாதுகாப்பு அச்சம் இல்லை. பதிவு அழியுமோ என்ற அச்சம் இல்லை)

விபரம் தெரியாதவர்கள் (அறியாமையால் செயலபடும் அவர்களின் பெயர்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன :) ) பணம் செலவழித்து கொண்டிருக்கிறார்கள் :) :) இதில் அவ்வப்போது security risk வேறு

R. Gopi said...

\\நான் எழுதுவது ஒன்றும் காலத்தால் அழியாத இலக்கியங்கள் அல்ல, பெரும்பாலும் மொக்கைப் பதிவுகளே. ஆகவே அவை தொலைந்தாலும் அவற்றை விட அதிக மொக்கைகளை நான் உருவாக்கும் சக்தி பெற்றவன் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்பதையும் இங்கு இப்போது சொல்லிவைத்து விடுகிறேன்.\\

இது சூப்பர். நாங்களும் அதற்கு எந்த விதத்திலும் குறையாத மொக்கையான பின்னூட்டம் போடுவோம் என்பதையும் இப்போதே சொல்லி வைத்து விடுகிறேன்:)

Anonymous said...

ஆகவே அவை தொலைந்தாலும் அவற்றை விட அதிக மொக்கைகளை நான் உருவாக்கும் சக்தி பெற்றவன் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்பதையும் இங்கு இப்போது சொல்லிவைத்து விடுகிறேன்

Finally you yourself admitted that it is mokkai... :)... good

But, you are not clear with your tpoic. started with something and ended with something... lol

ராம்ஜி_யாஹூ said...

dont use Tata incicom, Airtel email services. They dont serve the purpose.

Use Gmail or yahoo. They r musch fast, reliable and can attach big size documents

ஆகவே அவை தொலைந்தாலும் அவற்றை விட அதிக மொக்கைகளை நான் உருவாக்கும் சக்தி பெற்றவன் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்
(enjoyed these lines)

ராம்ஜி_யாஹூ said...

சாருவை மட்டும் கட்டண தளம் வைத்து இருப்பதை குறை கூறும் நீங்கள், மற்ற எழுத்தாளர்களை குறை கூறாமல் இருப்பது ஏன்.

பத்து வருடங்களுக்கு முன் தளங்கள் பெயர் பிடிப்பதில் ஒரு கவர்ச்சி, வணிகம் இருந்தது. உதாரணம்- தமிழ், தமிழ் இணையம் , தமிழ் வணிகம், இந்தியா, 99years என்ற பெயர்களை நாம் கட்டணம் செலுத்தி பதிவு செய்து விட்டு இரண்டு மாதங்கள் கழித்து அதிக விலைக்கு விற்கும் போக்கு இருந்தது.

இப்போது வீட்டு மனைகள் விலைகள் குறைந்தது போல இனைய தல விலைகளும் குறைந்து விட்டது.

Anonymous said...

ஒரு வாசகன் என்ற முறையில் நான் தனிப்பெயரில் உள்ள வலைப்பதிவுகளை எனது ஆபிசில் வாசிக்க முடியும். blogspot பதிவுகளை எனது ஆபிஸ் கம்ப்யூட்டர் சிஸ்டம் தடுத்து விடும். வினவு, லக்கிலுக், சவுக்கு பதிவுகளை நான் வாசிக்கலாம். எதோ காரணங்களால் புருனோவின் வலைப்பக்கத்தை திறக்க முடிவதில்லை.

சொக்கன்

Rajan said...

//இப்போது வீட்டு மனைகள் விலைகள் குறைந்தது போல இனைய தல விலைகளும் குறைந்து விட்டது. //


எந்த ஊர்ல சார்! அமெரிக்காவுலயா!

மாயவரத்தான் said...

புருனோ சார்,

டொமைன் நேம் வைத்து ரீடைரக்‌ஷன் செய்தாலும் அது பிளாகர் ஹோஸ்டிங்கில் தானே இருக்கும். அப்புறம் எப்படி

//(பாதுகாப்பு அச்சம் இல்லை. பதிவு அழியுமோ என்ற அச்சம் இல்லை)//

பிளாகர் சொதப்பினால் கோவிந்தா தானே?!

பிளாகரில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை வேர்டுபிரஸ்ஸில் புது கணக்கு துவங்கி அதில் பிளாகர் அக்கவுண்டை தெரிவித்தால், பிளாகரில் இருக்கும் அத்தனை பதிவுகளும் வேர்டு பிரஸ்ஸில் காப்பி ஆகிவிடும். எனவே, பிளாகர் போனாலும் வேர்டுபிரஸ்ஸில் பேக்-அப் இருக்கும்!

மாயவரத்தான் said...

Godaddy.com-ல் டொமைன், ஹோஸ்டிங் வாங்கி கூகுள் சர்ச் மூலம் கூப்பன் கோடு பெற்றால் மாதம் 200 ரூபாய்க்குள் டொமைன் / ஹோஸ்டிங் கிடைக்கும்!

மாயவரத்தான் said...

turbohide.com பயன்படுத்தினால் எந்த ஒரு வலைத்தலத்தையும் ஆபிஸில் பார்க்கலாம்!

Madhavan Srinivasagopalan said...

//ஆகவே அவை தொலைந்தாலும் அவற்றை விட அதிக மொக்கைகளை நான் உருவாக்கும் சக்தி பெற்றவன் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் //

The reality..(atleast in my case).

I also have bsnl email id.. never used it.

Gmailirukka Jayame!

ராம்ஜி_யாஹூ said...

ராஜன்-

அமெரிக்காவில் தொடங்கி ஆதம் பாக்கம் வரை , வீட்டு மனைகள் விலை குறைந்ததை சொல்கிறேன்

அதே போல இணைய தளங்கள் விளையும் குறைந்து விட்டன இப்பொழுது

Dondu sir, Where is your post on Yesterday (21 Aug10 ) chennai bloggers meet & Cable shankar's book release function

Srikanth said...

The one reason I can think of, for ordinary bloggers to create websites by paying money is, basically they can control the look and feel; meaning the design. One can design how the home page should look like, what are the category classifications, menus, media content etc.

சீனு said...

பதிவர்கள் கொஞ்சம் பிரபலமானவுடன் தனிக்குடித்தனம் போவதற்கு காரணம், Google Ad-sense-ன் வருமானம். Google Ad-sense தனித்தளத்தில் தான் நிறுவ முடியும் என்று நினைக்கிறேன்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது