8/23/2010

நேர்மறை எண்ணங்கள் கொண்ட பதிவர் Anthony Muthu அவர்கள் திடீர் மறைவு


பதிவர் அந்தோனி முத்து அவர்கள் மாற்றுத் திறன் கொண்டவர். இயற்கையால் மிக வஞ்சிக்கப்பட்ட நிலையிலும் தன்னம்பிக்கை தளராது உழைத்தவர். ‘அழகி’ தமிழ் எழுதி மென்பொருளை விரிவாக்குவதில் பங்கு பெற்றவர்.

அவர் இப்போது நம்மிடையே இல்லை. சில மணி நேரங்களுக்கு முன்னால் காலன் அவரை அழைத்துச் சென்று விட்டான். அவருக்கு உதவி கோரி பதிவர் என்றென்றும் அன்புடன் பாலா பதிவர்களிடம் வேண்டுகோள் விடுத்து அவருக்கு மடிக்கணினியும் சக்கர நாற்காலியும் பெற்றுத் தந்தது உங்களில் பலருக்கு நினைவிலிருக்கும் என நம்புகிறேன். நான் அவருக்காக பாலாஜி அவர்களிடம் அளித்த சிறு தொகைக்காக எனக்கும் ஃபோன் செய்து பேசியிருக்கிறார். அழகி மென்பொருளை நான் எனது விட்ஜெட்டில் போட்டதற்கும் நன்றி கூறினார். தொலை பேசியில் அவருடன் பேசும் புதியவர் யாருக்குமே அவருக்கு ஏதும் பிரச்சினை இருப்பதாகக் கூறவே இயலாத அளவுக்கு உற்சாகத்துடன் பேசுபவர் அவர்.

சில நிமிடங்களுக்கு முன்னால்தான் பாலா அவர்கள் என்னுடன் தொலைபேசினார். இந்த துக்ககரமான விஷயத்தையும் கூறினார். அந்தோனிக்கு மூச்சுத் திணறல் இருந்திருக்கிறது. பாலா இது சம்பந்தமாக மருத்துவர் ப்ரூனோவுடனும் பேசியிருக்கிறார். அவரும் அந்தோனியை மருத்துவ மனையில் இயன்ற அளவு கவனித்திருக்கிறார். இருப்பினும் அந்தோனியின் முதுகு தண்டுவட பிரச்சினை காரணமாக அவரது நுரையீரல் அழுத்தப் பெற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. இந்த பிரச்சினை அவருக்கு பல ஆண்டுகளாகவே இருந்து வந்திருக்கிறது. ஆகவே ஓரளவுக்கு மேல் ஒருவராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை.

நேற்றும் பாலாஜி எனக்கு ஃபோன் செய்து பேசினார்தான். ஆனால் அது மகிழ்ச்சிகரமான செய்தியுடன் வந்தது. அவர் உதவி செய்த இன்னொருவர் மருத்துவ மாணவி கௌசல்யா படிப்பு முடிந்து ஹவுஸ் சர்ஜன்சி செய்து வருபவர் அவர் வீட்டுக்கு நேற்று அவரைப் பார்க்க வந்திருக்கிறார். தனக்கு அவர் செய்த உதவியால் தான் முன்னுக்கு வந்ததாகவும், ஆகவே அவரது இம்மாதிரியான சேவைகள் தொடர தன்னால் இயன்ற அளவு பண உதவி செய்ய ஆசைப்படுவதாகவும் கூறி அவர் கையில் கணிசமான பணம் தந்திருக்கிறார். பாலா அப்பெண்ணை என்னுடனும் பேச வைத்தார். அவருக்கு நான் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் கூறினேன்.

அவருக்கு முதலில் பணம் தந்த போது நானும் சென்றிருந்தேன். அது சம்பந்தமாக நான் இட்டப் பதிவு இதோ. பாலா அவர்கள் இட்டது இங்கே.

ஆனால் இன்று இம்மாதிரியான துயரச் செய்தி. என்ன செய்வது. அதுதான் வாழ்க்கை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின்குறிப்பு: பாலாஜி அவர்கள் பதிவு போடும் சூழ்நிலையில் இல்லாததால் என்னைப் போடச் சொல்லி கேட்டுக் கொண்டார். ஆகவே இப்பதிவு.

59 comments:

எல் கே said...

anthonyin maraivukku varunthugiren. avarathu kudumbathaarukku enathu irangalgal

வலைஞன் said...

அந்தோணி சகோதரா!
உன் ஆன்மா சாந்தி அடைய கண்ணீருடன் பிரார்த்திக்கிறேன்!
அன்னை தெரசாவின் மறு உருவமாக செயல்பட்டு உன்னை 30 ஆண்டுகள் கண்ணுங்கருத்துமாக பார்த்துக்கொண்ட உன் அக்காவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். சகோதரி, நீங்கள் பெண்ண இனத்திற்கே பெருமை சேர்த்துவிட்டீர்கள் !
டோண்டு அவர்களுக்கு என் நன்றி(இப்பதிவி்ற்காக)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அண்ணா!
அவர் பதிவுகள் சிலவற்றுக்குப் பின்னூட்டமிட்டுள்ளேன். அவர் மனவலிமையை மெச்சியுள்ளேன்.
தன்னம்பிக்கைக்கு அடையாளமானவர்.
என் ஆழ்ந்த வருத்தங்கள். அவர் ஆத்மா சாந்தியுறும்;

settaikkaran said...

தாளமுடியாத துயரம் ஐயா! பாஸிடிவ் அந்தோணி முத்துவின் ஆன்மா அமைதியடைவதாக! அவரது குடும்பத்தாருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்.

கிருஷ்ண மூர்த்தி S said...

கிருஷ்ணமூர்த்தி said...

என்னை மிகவும் நெகிழ வைத்த பதிவாக உங்களுடைய சுய விவரம் மற்றும் பதிவுகளைப் பார்க்கிறேன்.

எனக்கு மிகவும் நெருங்கிய நட்புவட்டமாக இருக்கும் ஒரு குடும்பத்தில், மூன்று பேருக்கு மயோபதி என்ற நோயால், (ஏறத்தாழ போலியோவினால் தாக்கப் பட்டதுபோல கால்களில் இருந்து படிப்படியாக மேலே கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து வரும் ஒருவகை வியாதி, மஸ்குலர் டிஸ்ட்ரோபி என்றும் சொல்வார்கள்) பாதிக்கப் பட்டு, அதே நேரம் உங்களை மாதிரியே தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வதை நேரடியாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

தன்னம்பிக்கை, பாசிடிவாகச்சிந்திப்பது என்ற வடிவத்தில் தற்சமயம் வெளிப்படும் இறைவனது கருணை பூரணமாக என்றைக்கும் உங்களோடு இருக்கட்டும்.
May 19, 2010 2:31 PM

மூன்று மாதங்களுக்கு முன் என்னுடைய பதிவில் அவர் எழுதிய ஒரு பின்னூட்டத்தைத் தொடர்ந்து அவருடைய பதிவுக்குப் போய் எழுதியது இது.

பாசிடிவ் அந்தோணிமுத்துவின் மறைவுச் செய்தி நிஜமாகவே என்னைக் கொஞ்சம் உலுக்கி விட்டது.

அவர் கடைசியாக இட்ட பதிவு இது

ஏலி... ஏலி... லெமா சபக்தானி! (என் கடவுளே! என் கடவுளே..! ஏன் என்னைக் கைவிட்டீர்?)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அந்தோணி முத்துவின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்

உண்மைத்தமிழன் said...

மிக, மிக வருந்துகிறேன்..!

அவருடைய உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் இத்தனை நாட்கள் வலையுலகில் எழுதி வந்ததே மிகப் பெரிய விஷயம்..!

உத்வேகம், விடாமுயற்சி இவற்றுக்கு முக்கிய உதாரணமாக இருந்தவர் அந்தோணி முத்து..!

ராம்ஜி_யாஹூ said...

மிகவும் வருந்துகிறேன்

அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆறுதல்,

உங்களுக்கு, பால, நண்பர் ப்ருனோ, கௌசல்யா மற்றும் எல்லா பதிவர்களுக்கும் எல்லாருக்கும் மிகுந்த நன்றிகள்.

கௌதமன் said...

மறைந்த பதிவரின் குடும்பத்தினருக்கு, எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நிகழ்காலத்தில்... said...

நான் பதிவெழுத வந்த சமயம் அந்தோணி முத்து அவர்களின் பதிவைப்ப்பார்த்து மிகவும் சந்தோசப்பட்டு பல பின்னூட்டங்கள் இட்டிருக்கிறேன்.

இருந்து சாதிக்க வேண்டியது பல இருப்பினும், இறைவன் கருணையினால் உடல் துன்பங்களிலிருந்து விடுதலை அடைந்து விட்டதாகவே நினைக்கிறேன்.

தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி

enRenRum-anbudan.BALA said...

Thanks, Raghavan Sir ...

Anonymous said...

A rare person.

Seems belief in God has been the anchor of his soul.

May his soul rest in peace.

தருமி said...

வருந்துகிறேன்.

Vijay said...

ஐயையோ!! என் ஆழ்ந்த வருத்தங்கள்!!
அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

அன்புடன் அருணா said...

ஆழ்ந்த அஞ்சலிகள்.
அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆறுதல்.

குடுகுடுப்பை said...
This comment has been removed by the author.
கோவி.கண்ணன் said...

மிகவும் வருந்துகிறேன்......

:(

மணியன் said...

வருந்துகிறேன் :( ஆழ்ந்த அஞ்சலிகள்.

'பரிவை' சே.குமார் said...

சகோதரர் அந்தோணி முத்தின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

பழமைபேசி said...

ஆழ்ந்த இரங்கள்... ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

மிக, மிக வருந்துகிறேன்..!

ஜோசப் பால்ராஜ் said...

இம்மையில் இம்சித்த இறைவன்
மறுமையில் மகிழ்சியளிக்கட்டும் .

அ.முத்து பிரகாஷ் said...

அனைவரின் துயரங்களில் நானும் பங்கு கொள்கிறேன் ...
அந்தோணி முத்து அவர்களின் நேர்மறை சிந்தனைகள் நம்மிடையே பரவட்டும் ...

a said...

வருந்துகிறேன்...

cheena (சீனா) said...

ஆழ்ந்த அனுதாபங்கள் - ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்

PPattian said...

என் ஆழ்ந்த வருத்தங்கள்!!
அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

ஆ.ஞானசேகரன் said...

அந்தோணி முத்து மரணம் மனதை கசக்க செய்கின்றது... அவரின் நம்பிக்கை என்னை பல முறை வியக்க வைத்தது... ஆழ்ந்த இரங்கல்

கல்வெட்டு said...

பதிவர் அந்தோணி முத்து அவர்கள் மறைவிற்கு வருந்துகிறேன்.
பதிவுகள் மூலம் அறிந்தவரை அவர், வாழ்ந்துகாட்ட வேண்டும் என்ற போராட்டகுணம் உடையவர்.

அவருக்கு பேருதவியாக இருந்த அவரது சகோதரி , வேலை வாய்ப்பு அளித்து அவரை அங்கீகரித்தவர்கள், வலைப்பதிவுகள் மற்றும் பிறவழிகளில் உதவிய பாலா மற்றும் அனைவருக்கும் நன்றியுடன் நினைவு கூறப்பட வேண்டியவர்கள்.

முத்துகுமரன் said...

அதிர்ச்சிகரமான செய்தி. ஆழ்ந்த இரங்கல்கள்

All in All said...

What a Sister, Really Your Not Female, You are god..I never forget you in my life sister..

Ramesh said...

பதிவர் திரு அந்தோணி முத்து அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்...

அவர் இறந்தாலும் அவரது எழுத்துக்கள் காலம் காலமாய் இப்பதிவுலகில் நிலைத்து நிற்கும்..அவரது பிந்தைய தலைமுறையினர்...அவரது பதிவுகளைப் படித்து...பேருவகை கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை...

குடுகுடுப்பை said...

எனது ஆழந்த அஞ்சலிகள்

குடுகுடுப்பை said...

கவுசல்யா மற்றும் பாலாவின் சேவை தொடரட்டும்

Menaga Sathia said...

மிக, மிக வருந்துகிறேன்..!அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்!!

பா.ராஜாராம் said...

ஐயோ!

டி.வி.ஆர். சார் பதிவில் இவரின் உடல்நலமின்மை குறித்து இப்பதான் வாசித்தது போலான நினைவு.

சாந்தியாக, போய்ட்டு வாங்க தோழர்.

Anonymous said...

Heart felt condolence and May he rest in peace.

geevanathy said...

ஆழ்ந்த அஞ்சலிகள்.

அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

TechShankar said...

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

ஜெயந்த் கிருஷ்ணா said...

மிகவும் வருந்துகிறேன்

அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆறுதல்,

ப்ரியமுடன் வசந்த் said...

முத்துவின் ஆத்மா சந்தியடைய பிரார்த்தனைகள்

அவரது குடும்பத்திற்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்

பூங்குழலி said...

அந்தோணி முத்துவின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்

நீச்சல்காரன் said...

மிகவும் துயரமான செய்தி. அன்னார் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

சிங்கக்குட்டி said...

அவரது ஆன்மா அமைதியில் உறங்க இறைவனை வேண்டுகிறேன்.

ஜிஎஸ்ஆர் said...

திரு.அந்தோனி அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் என்ன செய்ய பிறப்பும், இறப்பும் நாம் அன்றாடம் காணும் நிகழ்வுகளில் ஒன்றாகி போனதே

SriRam said...

அஞ்சலிகள்.

கிளியனூர் இஸ்மத் said...

ஆழ்ந்த அனுதாபங்கள்....

Sukumar said...

அவரது மறைவிற்காக வருந்துகிறேன்... ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகளும்..

geethappriyan said...

மாற்றுதிறனாளிகளின் தன்னநம்பிக்கைக்கு மாபெரும் உதாரணமாக இருந்தவர்,மிகவும் வருந்துகிறேன்.அவரத்து ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மிகவும் வருந்துகிறோம்....

vasan said...

:(
மிக, மிக வருந்துகிறேன்..!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Thanks a lot for this post. I heard the news from you. I was sending him mail without realising anything.
May his soul rest in peace.

அந்நியன் said...

வீழ்ந்தது மரமல்ல... விதை... நம் கண்ணீரால் அது முலைக்கட்டும் மீண்டும் ஒரு ஆலமரமாய்...

http://rkguru.blogspot.com/ said...

மிகவும் வருந்துகிறோம்....

வால்பையன் said...

சென்ற மாதம் கூட என்னிடம் பேசினார், மிக அருமையான நண்பர்!

அவரது இழப்பு மிகவும் வருத்தத்தை தருகிறது!

உமர் | Umar said...

மிகவும் வருந்துகிறேன்.

அவரது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

:(

எண்ணங்கள் 13189034291840215795 said...

அந்தோணி முத்துவின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்

நீங்கள் செய்து வரும் அனைத்து நல்ல காரியங்களுக்கும் எனது பாராட்டுகள்..

virutcham said...

http://www.virutcham.com/?p=3571
எனக்குப் பிடித்த பதிவுகளில் உங்களின் இந்தப் பதிவையும் இன்னொரு பதிவையும் சேர்த்து இருக்கிறேன்.

Ramesh said...

எமது ஆழந்த அஞ்சலிகளும்...
அவரது நித்திரை பூரணமடைய பிரார்த்திப்போம்
இதய அஞ்சலிகள்

முகி said...

i am really shocked i got the news very late really i missed him...

avarudaya aanma santhi adaiya pirathikkinrean !

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது