8/16/2010

பேராண்மை - என்னைக் கவர்ந்த படம்

இப்படத்தின் பிளாட்டை முன்பு படித்த நினைவிருக்கிறது. ஆனால் படம் வெளியானபோது பார்க்கவில்லை. நேற்று கூட எதேச்சையாக சன் டிவியில் இப்படத்தைப் பாதியிலிருந்துதான் பார்த்தேன். அச்சமயம் நிறைய காட்சிகள் போயிருந்திருக்கும்.

ஜெயம் ரவியை மதர் சுப்பீரியரிடம் மாட்டிவிட ஐந்து பெண்கள் முயற்சி செய்தபோதுதான் படம் பார்த்தேன். ஆனால் பார்த்தவுடனேயே என்னக் கதை என்பது புரிந்ததாலும், வேறு உருப்படியான வே;லைகள் கைவசம் இல்லாதிருந்ததாலும் படத்தைத் தொடர்ந்து பார்க்க முடிவு செய்தேன். அதற்காக மகிழ்ச்சியடைகிறேன்.

பிறகு இப்படம் பற்றி இணையத்தில் என்ன கூறினார்கள் என்பதைப் பார்த்ததில் இது The dawns here are quiet" என்ற ரஷ்ய படத்தின் காப்பி என்பதை அறிந்தேன்.

இப்படத்தின் விஸ்தாரமான விமரிசனத்தை கேபிளார் கொடுத்து விட்டார். வேறு பலரும் கொடுத்து விட்டனர். ஆகவே எனது எண்ணங்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். கவனிக்க, இது விமரிசனம் அல்ல.

ஏற்கனவேயே சொன்னது போல பாதியிலிருந்துதான் படம் பார்த்ததால், விட்டுப் போனதை இணையத்தின் மூலம் பார்க்கலாம் என நினைத்தால் முடியவில்லை. சிறப்பான காட்சிகள் என தொகுத்து போட்டிருந்தாலும் அவை ஓப்பன் ஆவதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொண்டன. அதுவும் நல்லதுக்குத்தான். இப்படத்தின் மூலக்கருவே இனிமேல்தான் வர வேண்டும் என்னும் நிலையில் படம் பார்க்க ஆரம்பித்ததால் இழப்பு அதிகம் இல்லை.

ரஷ்யன் படமும் அப்படித்தான் ஆரம்பமாகியிருக்கும். தமிழில்தான் மசாலா சேர்த்திருப்பார்கள். அவற்றை பார்க்காததால் ஒன்றும் குடி முழுகிவிடாது. இதில் ஜெயம் ரவியின் மேலதிகாரியாக வரும் பொன்வண்ணனை கிட்டத்தட்ட ஒரு சாடிஸ்டாகவே காட்டியுள்ளனர். கடைசி வரை அவர் கொழித்து, மெடலையும் தட்டிச் செல்வது போல அமைந்த கதையமைப்பு மனதுக்கு நிறைவைத் தரவில்லை. அதுதானே ரியலிசம் என ஜனநாதன் கூறினாலும், தீமை வெற்றி பெறுவது போல காட்டியது ஆரோக்கியமாக இல்லை. கடைசியில் ஏதோ டாகுமெண்டரி பார்ப்பது போன்ற உணர்வு. அது சரி, கடைசியில் மிஞ்சிய மூன்று பெண்கள் உண்மையைக் கூறாமலேயாவா கேம்பிலிருந்து சென்றிருப்பார்கள்? நம்பும்படியாக இல்லையே.

காட்டில் ஒரு பெண் ஜெயம் ரவியிடம் அவரை பெண்சபலக்காரராக காட்டி மாட்டி விட்டதற்காக மன்னிப்பு கேட்கும்போது, தன்னை நம்பி தனது கிராமத்தில் பெண்களுக்கு பிரசவம் பார்க்க விடுவார்கள் என்ற செய்தியை சர்வசாதாரணமாகக் கூறுவார்.

அதே போல வெள்ளைக்கார கொலைஞனிடம் ஆங்கிலத்தில் அவர் பேசுவதை அதிசயத்துடன் பார்க்கும் ஒரு பெண் தங்கள் எதிரில் அவ்வளவு அதிகமாக ஆங்கிலம் பேசவில்லையே எனக்கேட்க, ஜெயம் ரவி ரிசர்வேஷன் கோட்டாவில் வந்த தான் அவ்வாறு பேசுவதை அவர் போன்ற மேட்டுக்குடி பெண்கள் விரும்ப மாட்டார்கள் என அனாயாசமாகக் கூறிவிட்டுச் செல்லும் காட்சியும் நன்றாக இருந்தது.

சந்தடி சாக்கில் ஜனநாதன் கம்யூனிச பிரச்சாரமும் செய்கிறார். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வதை குற்றமாகக் கொள்ளமுடியாதுதான்.

காட்டுவாசிகளின் குழந்தை படித்துக் கொண்டிருக்கும்போது பொன்வண்ணன் அதன் முதுகில் கட்டையால் அடிக்க குழந்தை வீறிட்டு அழும் காட்சி ரத்தத்தை உறையச் செய்தது. சர்வ சாதாரணமாக வனவாசிகளை அதிகார வர்க்கம் எவ்வாறு விரோதித்துக் கொள்கிறது என்பது அழுத்தந்திருத்தமாகவே காட்டப்பட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10 comments:

வால்பையன் said...

நல்லாயிருக்கு

பெசொவி said...

//காட்டுவாசிகளின் குழந்தை படித்துக் கொண்டிருக்கும்போது மணிவண்ணன் அதன் முதுகில் கட்டையால் அடிக்க குழந்தை வீறிட்டு அழும் காட்சி ரத்தத்தை உறையச் செய்தது.//

மன்னிக்கவும், அது நடிகர் மணிவண்ணன் அல்ல, பொன்வண்ணன்.

அருள் said...

நீங்க ரொம்ப லேட். அது போகட்டும்!

ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவனது வெற்றியால் கிடைத்த பதக்கத்தை, மேலசாதிக்காரர் ஒருவர் பறித்துக்கொள்வதாக கடைசியில் காட்டப்படுவதை கவனித்தீரா?

இடஒதுக்கீட்டால் எந்த தீமையும் இல்லை, நன்மையே என்பதும் கூட இந்தப்படத்தில் உள்ள செய்தி - அது பற்றி உங்கள் கருத்து என்ன?

dondu(#11168674346665545885) said...

//மன்னிக்கவும், அது நடிகர் மணிவண்ணன் அல்ல, பொவண்ணன்.//
நன்ற்றி தவற்றைத் திருத்திவிட்டேன். அக்காட்சி பார்க்கும்போது மட்டுமல்ல, இவ்வரிகளை எழுதும்போதும் என் உணர்வுகளையே உறையச்செய்து விட்டது. ஆகவே தவறாக பெயர் வந்துவிட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவனது வெற்றியால் கிடைத்த பதக்கத்தை, மேலசாதிக்காரர் ஒருவர் பறித்துக்கொள்வதாக கடைசியில் காட்டப்படுவதை கவனித்தீரா?//
அதைத்தான் தீமையின் வெற்றி மனதை உறுத்தியது என்றும் எழுதியிருந்தேனே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ராகவேந்திரன் said...

@வந்துட்டாருய்யா அருள் அய்யா வந்துட்டாருய்யா ,நிற்க, ஜகநாதன் அவர்களின் இயற்கை, மற்றும் ஈ படங்களும் என்னை கவர்ந்தன, காரணம் அநீதிக்கு எதிராக போராடுதல், மற்றும் இயற்கை படத்தில் போடப்பட்ட செட்டுகள் போன்றன இயல்பான படங்களை கொடுக்க முன்வருகிறார், சில காம்பரமைஸ்களுடன்,

KANTHANAAR said...

படத்தை முற்போக்கக காட்ட வேண்டுமே என்று ஜன நாதன் நிறைய UNREALISTIC காட்சிகள் வைத்திருக்கிறார்
1) எந்த அரசு PSUல் SC/ST கேவலப்படுதுகிறார்கள் (கிராமங்களில் நடக்கிறது ஆனால் அலுவலகங்களில் நடப்பதில்லை)
2) ஒரு மேல் அதிகாரி அப்படி பேசினால் PCR கிழ் நடவடிக்கை எடுக்கலாம்
3)HERO என்ன படித்திருகிறார்.. காடு இலாகா அதிகாரி தானே...? ஆனால் படத்தில் ROCKET technology, satelitte technology modern போர் தளவாடங்கள் என்று புகுந்து விளையாடுகிரார் நம்ம MGR மாதிரி
4) மேல் அதிகாரி சாதி ரீதியாக என்ன பேசினாலும் இவர் மவுனமாக இருப்பதேன். ஆனல் வெள்ளைக்காரனை இந்தியாவுக்காக பந்தாடும் இவர் தன் சாதிக்காக என்னதான் கீழ்மை படுத்தினாலும் பேசாமல் இருப்பரா
என்று
சொல்லிக்கொண்டே போகலாம்

ம.தி.சுதா said...

மிகவும் விறுவிறுப்பாக தமிலில் டுயட் இல்லாமலும் வெல்லலாம் என காட்டிய படம் .. வாழ்த்துக்கள்.

Anonymous said...

//எந்த அரசு PSUல் SC/ST கேவலப்படுதுகிறார்கள் (கிராமங்களில் நடக்கிறது ஆனால் அலுவலகங்களில் நடப்பதில்லை)//

Looks like you are a student and young.

Sridhar

KANTHANAAR said...

//Looks like you are a student and young.///
What you intend to say by this. You mean there is untouchable practice in PSU. I categorically say there is no repeat no such practice in Govt Offices/PSUs.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது