டிஸ்கியை கடைசியில் தருகிறேன்.
தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!
ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..
குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.
இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..
இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்கப்படவேண்டியுள்ளது.
ஏனென்றால்,
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.
இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...
குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய
உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.
(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)
ஆனால்... இன்று..
அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக
கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.
மீண்டும் உங்கள் நினைவிற்கு..
1. குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
2. ஓட்டுக்கு பணம் கிடையாது.
3. டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .
4. கரண்ட் கட் கிடையாது.
[இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது].
5. மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
6. இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.
7.இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
8. TATA, Hyundai, Ford, Reliance, Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.
9. இந்தியாவின் No-1 மாநிலம் (தொழில், பொருளாதாரம், மக்களின் வாழ்க்கைத்தரம், உள்கட்டமைப்பு, வருமானம், சட்டம்/ஒழுங்கு)
நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)
அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.
நம் மாநிலத்தின் நிலை??
அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும். (நல்ல வேளையாக இப்போதைக்கு மஞ்சத் துண்டு குடும்பத்துக்கு மக்கள் செக் வைத்துள்ளனர். சீக்கிரம் பட்டா பட்டி டிராயரை போட்டுவிட்டு அவிங்களை களி திங்க வச்சாத்தான் தமிழர் மனம் ஆறும்).
இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல.
மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.
இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்
(சம்மட்டி அடி கொடுத்தாயிற்று, மேலே சொன்னதை எல்லாம் மக்களும் நினைத்திருக்க வேண்டும்).
இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம் (நல்ல வேளை அவ்வாறு செய்யவில்லை).
உலகம் நம்மை காரி உமிழும் [அதுவும் இப்போதைக்கு இல்லை:))].
நல்ல வரலாறு படைப்போம்.நன்றி! (அதற்கான அடி எடுத்து வைத்தாயிற்று).
டிஸ்கி: இதை நான் ஏப்ரல் மாதத்தில் டிராஃப்டில் போட்டுவிட்டு மறந்து விட்டேன். இன்று எதேச்சையாக பார்த்தேன். இற்றைப்படுத்தி இப்போது போடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சுவனப்பிரியனுக்காக சேர்த்தது. அவருக்கான பதிலை பின்னூட்டப் பெட்டியில் போட இயலவில்லை. ஆகவே இச்சேர்க்கை:
@சுவனப்பிரியன்
மோதிக்கு எதிராக பேசுங்கள் நாங்கள் துணையாக இருக்கிறோம் என ப. சிதம்பரம் வகையறாக்கள் கூறியாகி விட்டது. இன்னும் அவருக்கு பயப்படுகிறார்கள் என உதார் விட்டால் எப்படி?
2002, மற்றும் 2007 பொது தேர்தலில் எலெக்ஷன் கமிஷனும் அதன் அப்போதைய கோமாளி கமிஷனர்களும் காங்கிரஸ் பூத் ஏஜெண்டாக செயல்பட்டதை மறந்தீர்களா?
பின்னே எப்படி மோதியின் மிரட்டல் பற்றிப் பேசுகிறீர்கள்?
அது சரி கோத்ரா கரசேவகர்களை எரித்த விஷயம் பற்றி மூச்சே இல்லை? அதை ஆதரிக்கிறீர்களா?
அந்த நேரத்தில் மகாத்மா காந்தியே முதன் மந்திரியாக இருந்திருந்தாலும் கலவரம் வெடித்திருக்குமே.
மோதியின் மேல் ஊழல் புகார் கூற முடியாமல் பொய்யையே கூறினால் அது உண்மையாகுமா?
மற்றும் ஏழை முஸ்லிம் வாக்காளர்?
மோதி பற்றி சுஹேல் சேத் என்னும் பிற மாநில இசுலாமியர் எழுதியதை கீழே தருகிறேன். இதில் நான் என வருவது சுஹேல் சேத்.
”முதலில் சில விஷயங்களை தெளிவுபடுத்துவேன்: மற்ற எல்லோரையும் விட மோடிக்கு எதிராக நான் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன். அவற்றில் கோத்ரா நிகழ்வுக்கு பிறகு நடந்த கலவரங்களை மோடி கையாண்ட விதம் பற்றி பல விமரிசனங்கள் தந்துள்ளேன். தற்கால ஹிட்லர் என மோடியைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன். கோத்ரா அவர் மேல் மட்டுமல்ல, நாட்டின் அரசியல் வர்க்கத்தின் மீதே ஒரு களங்கமாக இருக்கும் என்றும் கூறியுள்ளேன். கோத்ரா விவகாரத்துக்காக நாடு பெரிய விலையைத் தரவேண்டிய்ருக்கும் என்று இன்னமும் கூறுவேன்.
விஷயம் என்னவென்றால் அதற்கப்புறம் காலம் தன் வழியில் செல்ல ஆரம்பித்து விட்டது. மோடியும்தான் மாறிவிட்டார். மதவாதத்துக்காக குற்றம் சாட்டப்படுபவர்களில் மோடி மட்டும் தனியாக இல்லை. கூடவே மற்ற அரசியல்வாதிகளும் உள்ளனர். மதசார்பற்ற அரசியலை நடத்துவதாக விதந்தோதப்படும் காங்கிரஸ் ஆட்சியில்தான் 1984-ல் சீக்கியர்கள் மேல் கொலைவெறித் தாக்குதல்கள் நடந்தன. 3500-க்கும் அதிகமாக சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அதாவது குஜராத்தில் கொல்லப்பட்டவர்களை விட மூன்று மடங்கு.
மறுக்க முடியாத விஷயம் என்னவென்றால், மோடியை விட இந்திய அரசியல் வானில் வல்லவர் யாரும் இல்லை என்பதுதான். மூன்று வாரங்கள் முன்னால் நான் அஹமதாபாத் சென்றிருந்தேன். YPO (Young President's Organisation) கூட்டத்தில் பங்கெடுக்கவே நான் சென்றிருந்தேன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மோடி அவர்களை சந்திக்கலாம் என முடிவு செய்தேன். அங்கு செல்வதற்கு முந்தைய மாலைதான் அவருக்கு டெலிஃபோன் செய்து பேசினேன். நான் அங்கு வந்து சேரும் நாள் அன்றே அவரை பார்க்க அனுமதி தந்தார். அதுவும் அவர் அலுவலகத்தில் அல்ல, அவர் இல்லத்தில்தான். எளிமையின் உருவம் மோடி.
இந்த விஷயத்தில் சோனியா, மாயாவதி போன்றவர்கள் மோடியிடமிருந்து பாடம் கற்பது நல்லது. மீட்டிங்கில் மோடியை சுற்றி எந்த அள்ளக்கைகளும் இல்லை. நாங்கள் இருவர் மட்டுமே. தேனீரை ஊற்றுவதற்காக ஒரு வேலையாள் அவ்வளவே. மோடியிடமிருந்து நேர்மறை எண்ணங்கள் வந்த வண்ணம் இருந்தன. குஜராத்தின் முன்னேற்றம், மறுமலர்ச்சி, அதன் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மேம்பாடு அவற்றையெல்லாம் எடுத்துரைக்கும்போது அவர் வெளியிட்ட மகிழ்ச்சி ஆகியவற்றை அந்த எண்ணங்கள் பிரதிலித்தன. சில உதாரணங்கள்: சிங்கப்பூர்வாசிகள் அருந்தும் பாலில் கிட்டத்தட்ட முழு அளவு குஜராத்திலிருந்து வருகிறது. அதே போல ஆஃப்கானிஸ்தானில் உண்ணப்படும் தக்காளி, கனடாவில் உட்கொள்ளப்படும் உருளைக்கிழங்கு போன்ற எல்லாமே குஜராத்தில் விளைந்தவை. அதே சமயம் தொழிற்சாலைகளும் அவற்றில் உற்பத்தியாகும் பொருட்களும் மோடியின் முன்னுரிமைகளில் உண்டு.
ஒரு குழந்தையின் குதூகலத்துடன் அவர் அருகிலுள்ள மேஜையிலிருந்து GIFT என்று அறியப்படும் குஜராத்தில் அமையவிருக்கும் புது தொழில் நகரத்தைப் பற்றிய புத்தகத்தை எனக்கு காட்டினார். சபர்மதி நதியின் கரையில் வரப்போகும் இந்த நகரம் துபாயையும் ஹாங்காங்கையும் ஜுஜூபி என்று சொல்ல வைக்கும். பை தி வே குஜராத்தில் உள்ள நதிகளை இணைத்து மோடி அவர்கள் சபர்மதியின் தண்ணீர் பற்றக்குறையை தீர்த்து வைத்துள்ளார்.
ரத்தன் டாட்டாவின் புது நானோ கார் தொழிற்சாலை பர்றியும் அவர் பேசினார். டாட்டா அவர்களிடம் பார்சிக்காரர்கள் முதலில் குஜராத்தில் வந்த போது நடந்த நிகழ்ச்சியை எடுத்து கூறி அவரை உணர்ச்சிக்குவியலாக்கியதையும் சொன்னார். அக்கதை பின்வருமாறு: பார்சிகள் முதல் முதலில் குஜராத்தில் வந்தபோது குஜராத் அரசர் அவர்களுக்கு ஒரு டம்ளர் நிறைய பால் கொடுத்து அனுப்பினாராம். அதாவது ஏற்கனவே குஜராத் ஹவுஸ்ஃபுல், அவர்களுக்கு இடமில்லை என்று கோடி காட்டியுள்ளார். பார்சிக்காரர்களோ அந்தப் பாலில் சர்க்கரையை கலந்து திருப்பி அனுப்ப, அரசர் மனம் மாறினாராம். அதாவது சர்க்கரை போல பார்சிக்காரர்கள் குஜராத்தின் தரத்தை உயர்த்துவார்கள் என்பதுதான் அவர்கள் செய்ததன் பொருள்.
நரேந்தர் மோடி முன்னேற்றப் பாதையில் செல்லும் அவசரத்தில் உள்ளார். அவரை விட்டால் பிஜேபிக்கு அத்வானியைத் தவிர வேறு பெரிய தலைவர்கள் இல்லை என்பதுதான் நிஜம். தீவிரவாதத்தை ஒழிக்க அரசியல் சாராத கடும் நடவடிக்கைகள் வேண்டும் என அவர் உறுதியாக நம்புகிறார். தில்லியில் குண்டு வெடிக்கலாம் என்பதை அவர் முன்கூட்டியே பிரதமருக்கு கூறியும் தக்க ஏற்பாடுகள் செய்யாது கோட்டை விட்டனர் என்று வருந்தினார் அவர். அவரது இந்த உறுதியை நான் விதந்தோதுகிறேன். தீவிரவாதத்தை சகித்து கொள்ள கிஞ்சித்தும் அவர் விரும்பவில்லை என்பது அவர் நடவடிக்கைகளிலிருந்து தெரிகிறது. சிறுபான்மையினரை அழிக்க அவர் முயல்கிறார் என சிலர் குதர்க்கமாக பேசினாலும் அவர் என்னவோ தெளிவாகத்தான் உள்ளார். சட்ட ஒழுங்கில் அவர் எந்த சமரசமும் செய்வதாக இல்லை.
மோடியின் வீட்டிலிருந்து திரும்பும்போது கார் டிரைவரிடம் மோடி பற்றி பேசினேன். மோடி கடவுள் என்னும் ரேஞ்சில் அவர் பேசினார். மோடிக்கு முன்னால் குஜராத்தில் ஒன்றுமே சரியாக இல்லை. சரியான சாலைகள் இல்லை, மின்சாரம் இல்லை, கட்டுமான வசதிகள் இல்லை. ஆனால் இன்றோ மின்சாரத்தில் உபரி உற்பத்தியை குஜராத் எட்டியுள்ளது. இந்தியாவில் மற்ற எல்லா மாநிலங்களுக்கும் சேர்ந்தாற்போல் வரும் புது தொழில்களை விட அதிகமாக குஜராத்தில் வருகின்றன. பன்னாட்டு நிறுவனக்கள் முதலீடு செய்ய அதிகம் விரும்பும் மானிலம் குஜராத். அதே சமயம் அரசின் செயல்பாடுகளில் இருக்கும் நேர்மை மற்ற மானிலங்களில் இல்லை.
YPO (Young President's Organisation) உறுப்பினர்கள் கூட்டத்துக்கு பிறகு அவர்களில் பலரிடம் மோடி பற்றி கேட்க எல்லோருமே ஒருமுகமாக மோடியை கடவுள் என்றே கூறினர்.
மேலும் அவர்கள் கூறியதாவது. ஐந்து மோடிகள் இருந்தால் இந்தியா மிகச் சிறந்த நாடாக உருவெடுக்கும் என்று. இது குஜராத்திய மிகைப்படுத்தலா என்று தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம். அவரது குறைபாடுகளையும் மீறி நாட்டில் நல்ல மாறுதல்களை கொண்டுவர மோடி போன்றவர்கள் இன்றியமையானவர்கள். இன்னும் பல மோடிகள் நாட்டுக்கு தேவை”!
மீண்டும் டோண்டு ராகவன். இதையெல்லாம் நான் எப்போதோ
பதிவாக போட்டாகி விட்டது:
சும்மா குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவதை நிறுத்துங்கள்.
ஹாஜியார் நலமா? அவருக்கு என் வணக்கங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்