குஜராத்தில்கூட மோதிக்கு முன்னால் அவர் வந்த பிற்கு என பார்க்க வேண்டியுள்ளது.
முதலில் குஜராத்தில் மோதிக்கு முன்னால் எப்படி இருந்தது, அதை அவர் எவ்வாறு சரி செய்தார் என்பதை பார்ப்போமா.
1. மோதி பொறுப்பை ஏற்ற சமயம்கல்வி விஷயத்தில் அதுவும் பெண்குழந்தைகள் கல்வி விஷயத்தில் குஜராத் 20-ஆம்
இடத்தில்தான் இருந்தது. அதுவும் பாதியில் படிப்பை விடுபவர்கள் 49
விழுக்காட்டில் இருந்தனர்.
இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று மோதி முடிவு செய்தார். எல்லா பின் தங்கிய
பகுதிகளுக்கும் விசிட் செய்தார். முக்கியமாக பெண்கள் கல்வியறிவு பெறுவதற்கு
முன்னுரிமை அளித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் பாதியில் படிப்பை
விடுபவர்களது விழுக்காடு 2008-ல் 49-லிருந்து 4-க்கு வந்துள்ளது. (2011-ல் படிப்பாளிகள் 80%, அரசின் விடாமுயற்சியால்).
மேலும், பிரசவத்தில் பெண் மரணம் என்பது குஜராத்திலும் மற்ற இடங்களைப் போலவே துவக்கத்தில் இருந்திருக்கிறது.
மோதி அவர்கள் ஒரு காரியம் செய்தார். ஒவ்வொரு வெற்றிகரமான பிரசவத்துக்கு
பிறகும் வைத்தியம் பார்த்த மருத்துவருக்கு ரூபாய் இரண்டாயிரம் ஊக்கத் தொகை
அறிவித்தார். பிரசவத்துக்கு வரும் ஏழை பெண்களுக்கும் நல்ல மருத்துவ மற்றும்
பண உதவி அளிக்கப்பட்டது. (ஒரு நாளைக்கு ரூபாய் 200, கூட வரும்
அட்டெண்டண்டுக்கும் அதே தொகை). இதன் மூலம் 1,58,000 கர்ப்பிணிகள் பயன்
அடைந்தனர். இதெல்லாம் இல்லாத நிலையில் பிரசவ மரணம் 6000 என்ற
நிலையிலிருந்து ஒரே ஒரு மரணம் என்ற அளவில் பிரமிக்கத்தக்க முறையில்
இறங்கியுள்ளது என அவர்
துக்ளக் ஆண்டுவிழா கூட்டத்தில் கூறினார்.அதே கூட்டத்தில் அவர் கூறிய பிற விஷயங்கள் இன்வருமாறு:.
2. தமிழகத்தில் மின்சாரம் வந்தால் அது செய்தி. குஜராத்திலும் முதலில் அதே நிலைமைதான் மோடி அவர்கள் பதவிக்கு வந்த போது இருந்தது.
நிலைமையில் முன்னேற்றம் காண்பது கடினம் என்பது அதிகாரிகளின் கூற்று. மோடி
அவர்கள் சளைக்காது நடவடிக்கை எடுத்தார். பகுதி பகுதியாக எடுத்து
காரியமாற்றினார். முதல் 1000 நாட்களில் 45 விழுக்காடு கிராமங்களுக்கு முழு
மின்சாரம் வழங்கப்பட்டது. இப்போது அதே திட்டம் குஜராத் முழுக்க
விஸ்தரிக்கப்பட்டு 100 விழுக்காடு கிராமங்களுக்கு 24 மணி நேரமும் 3-phase
மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக மோடி அவர்கள் முதல் 1000 நாட்களில்
செய்த விஷயங்கள் பின்வருமாறு. 23 லட்சம் மின்கம்பங்கள், 56,000
ட்ரான்ஸ்ஃபார்மர்கள், 75000 எலெக்ட்ரிக் மீட்டர்கள் ஆகியவை பொருத்தப்பட்டன.
ஒரு அரசு மனது வைத்தால் என்னென்ன செய்ய முடியும் என்பதற்கு இதை விட நல்ல
உதாரணம் வேறு ஏது?
”500 நாட்களில் 700 கிலோமீட்டர் நீளத்துக்கு நர்மதா
திட்டத்தில் பைப்புகள் இடப்பட்டன” என்று சோ கூறியதை குறிப்பிட்டு அதை
அப்டேட் செய்தார். தற்போது அதே புள்ளிவிவரம் 700 நாட்களில் 1400
கிலோமீட்டர் பைப்லைன்கள் போடப்பட்டன என்று கூறினார். அந்த பைப்பில்
கருணாநிதி அவர்கள் தன்னுடைய குடும்பத்தாருடன் காரில் செல்ல இயலும் என்று
பைப்லைனின் விட்டத்தை பற்றி கூறுவதற்காக அவர் தமாஷாக மேற்கோள் காட்டினார். (ஜெயும் சசிகலா கூட அவ்வாறு செய்யலாம்).
ஒரே சிரிப்பு அரங்கில். தனக்கு எதிராக ஒரு ஊழல் புகாரும் இல்லை என்பது ஒரு
புறம் மகிழ்ச்சி அளித்தாலும், மறுபுறம் அதை தக்க வைத்து கொள்ள வேண்டுமே
என்ற கவலையும் இருக்கிறது என்றார்.
3. அரசு மனம் வைத்தால் வருவாயையும் பெருக்க இயலும் என்கிறார் மோதி. ஆனால் அது
லஞ்சத்தை ஒழித்தால்தான் முடியும். உதாரணத்துக்கு மஹாராஷ்டிரம்
மற்றும் குஜராத் வழியில் செல்லும் நெடுஞ்சாலையில் குஜராத் பக்கத்தில் ஒரு
எல்லை செக்போஸ்ட் உண்டு, மஹாராஷ்ட்ரா பக்கத்தில் ஒரு செக்போஸ்ட் உண்டு.
இரண்டிலும் ஒரே அளவு வண்டிகள் போக்குவரத்துதான். குஜராத் தரப்பினர் சட்ட
பூர்வமாக கலெக்ட் செய்வது ஒரு நிதியாண்டில் மஹாராஷ்ட்ரா தரப்பில் உள்ளதை விட 239 கோடியே 60
லட்சம் ரூபாய் அதிகம். சட்டப்படி என்னவெல்லாம் வருமானம் அரசுக்கு வரக்கூடும் என்பதை அது தெளிவாகக்
காட்டுகிறது. ஆனால் அதெல்லாம் செய்யாது விட்டால் கீழ்மட்டத்திலிருந்து
மேல் மட்டம் வரை அதிகாரிகள், மந்திரிகள் ஆகியோரது தனிப்பட்ட பணப்பைதான்
நிறைகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
4. மேலும் சில குஜராத் புள்ளி விவரங்கள். மோடி முதலில் ஆட்சிக்கு வந்தபோது
நிதி பற்றாக்குறை 6700 கோடி ரூபாய், தற்சமயம் (2008-ல்) 1000 கோடி ரூபாய் உபரியாக
கையில் உள்ளது. ஆண்டுக்கு 2500 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட் வரி உயர்வு
ஏதும் இன்றி 400கோடி ரூபாய் உபரி பட்ஜெட்டாக உயர்ந்துள்ளது.
முக்கிய காரணம் லஞ்சம் எல்லா தளங்களிலும் ஒழிக்கப்பட்டு வரி வசூல் சரியாக
நடந்ததே.
5. 2007 தேர்த்ல் சமயத்தில் காங்கிரஸ் கலர் டிவி தருவதாக வாக்களித்தபோது அவரிடம்
பத்திரிகைக்காரர்கள் இது பற்றி கேட்டுள்ளனர். கலர் டிவி தர இயலாது ஆனால்
தான் பதவிக்கு வந்தால் வரி கொடுக்காதவர்களை தேடி கண்டுபிடித்து நோட்டீஸ்
கொடுக்கப் போவதாக தயக்கமின்றி கூறியுள்ளார். மக்கள் தங்கள் நலனை
அறிந்தவர்கள். ஆகவே வரி வசூல் நோட்டீஸ் அனுப்பப் போவதாக சொன்ன தனக்கு ஓட்டு
போட்டு ஜயிக்க வைத்தனர் என்பதில் மோடிக்கு ஐயமேயில்லை. (இப்போது 2012-ல் மட்டும் என்ன வாழுகிறதாம்).
சரி குஜராத்தை பார்த்தாயிற்று. மர்ற்ற மாநிலங்களைப் பார்ப்போமா. தமிழகத்தையே எடுத்து கொள்வோம்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே ஊழலை ஊக்குவிப்பவையே. ஜெயலலிதா தேவலை என நான் முன்னால் கூறியதற்கு காரணமே கருணாநிதி worse என்பதால்தான். மற்றப்படி இருவரையும் மோதியுடன் ஒப்பிட்டால் நமக்கு டிப்ரஷன்தான் வரும்.
ஜெயும் சரி கேயும் சரி தாம் பதவியில் இருக்கும்போது மற்றவர் அடுத்த தேர்தலில் வெற்றி எற ஏதுவாகவே உழைக்கின்றனர். ஜெ பதவியில் இருப்பதால் முதலில் அவரது சொதப்பகளை பார்ப்போம்.
சமச்சீர் கல்வி, அரசு தலைமைச் செயலகம், அண்ணா நூல்நிலையம், சாலைப் பணியாளர் ஆகிய விஷயங்களில் அவர் தேவையின்றி அவசரமாக செயலாற்றி நேர விரயம் செய்துள்ளார். மின்வெட்டு விஷயமோ இன்னும் சரியாகவில்லை. முயற்சி செய்வதக அவர் கூறினாலும் அது பலனடையும்போதுதான் தெரியும்.
கே அவர்களோ சுத்தம். மானாட மயிலாட நிகழ்ச்சிக, தனக்கு அளித்த பாராட்டு நிகழ்ச்சிகள் ஆகியவர்றுக்கு நேரம் ஒதுக்கியதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அவரது குடும்பத்தினரோ ஐயையோ என்றுதான் கூற வேண்டும்.
இருப்பினும் எரியும் கொள்ளியில் எது நல்ல கொள்ளி என பார்த்து ஜெக்கு ஆதரவு தர வேண்டியிருக்கிறது.
தமிழகம் போலவே மற்ற மானிலங்களும் (குஜராத் தவிர). குஜராத்திலோ காங்கிரஸால் ஒறும் செய்ய இயலவில்லை. வெறுமனே பொரும வேண்டியதுதான்.
சரி, மோதி பிரதமராகலாமா? என்னைக் கேட்டால் அவர் இப்போதைக்கு குஜராத்திலேயே இருக்க வேண்டும் என்பேன். இன்னும் ஓர் ஐந்தாண்டு போகட்டும். அப்போதாவது குஜராத்தின் உதாரணம் மற்ற மானிலங்களுக்கு இன்னும் நன்றாக உரைக்கட்டுமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்சேர்க்கை: நண்பர்
அருண்பிரபு அவர்களது பதிவு அருமையாக உள்ளது. கண்டிப்பாக படிக்கவும்.