ஆண்டுவிழா கூட்டத்தின் முதற்பகுதி
இப்போது கேள்வி கேட்டவர் ஜீ.கே. பாலு என்பவர். அவர் கேட்டது என்னவென்றால் 1) 1996-ஆம் ஆண்டு சோவும் ரஜனியுமாக சேர்ந்து முயற்சி செய்து திமுகவை திரும்ப கொண்டு வந்தார்கள். இப்போது ஒரு குடும்பத்தினர் கையிலே தமிழகமே இருக்கிறது. இதற்கு என்ன பரிகாரம் செய்ய எண்ணியிக்கிறார் சோ? (அரங்கில் பலத்த கரகோஷம்). 2) தமிழ்த் திரையுலகு எல்-டி.டி.யினர் வசம் இருப்பதாக எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் கூறியிருப்பதற்கு சோ என்ன பதில் கூறுவார்? 3) மத்தியில் தீவிரவாதத்துக்கு எதிராக ஒரு ஒருங்கிணைந்த ஆணையம் தோன்றுவதற்கு மோடி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தது பற்றி சோ என்ன கூறுகிறார்? இதையெல்லாம் கேட்டுவிட்டு 39 ஆண்டுகள் நிறைந்து 40-ஆம் ஆண்டில் பிரவேசிக்கும் துக்ளக் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் என கூறினார். இதற்கு பதில் கூறப் புகுந்த சோ அவர்கள் இந்த வயது பற்றி கூறியதை வேண்டுமென்றே தனக்கு என எடுத்து கொண்டு, ரஜனிகாந்த் தன்னிடம் தனக்கு கிட்டத்தட்ட 85 வயதிருக்கும் என நம்பியதாகக் கூறினாராம். ஏனெனில் பல வயதுக்காரர்கள் தாம் சோவுடன் படித்ததாக பல சமயங்களில் கூறியதால் இவ்வாறு எண்ணினாராம். ஆக தனக்கு இப்போது வயது 40-தான் என மகிழ்ச்சியுடன் அவர் கூறினார். தமிழ்த் திரையுலகத்தில் எல்.டி.டி.இ-யின் பங்கு பற்றி பேசியதற்கு, இதை சொன்னவர் எஸ்.ஆர்.பி. அவர்கள். காங்கிரசில் பொறுப்பான இடத்தில் இருப்பவர். ஆகவே ப. சிதம்பரம் அவ்வப்போது பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விட்டது போக மிஞ்சும் நேரத்தில் இதையும் கவனிக்கலாம் என பரிந்துரைத்தார். 1996-ல் அதிமுக அரசு போக வேண்டிய அரசு, ஆகவே அக்காலக் கட்டத்தில் தானும் ரஜனியும் செய்தது சரியே என அவர் அழுத்தம் திருத்தமாக கூறினார். அப்படியும் பரிகாரம் என்றால் அதை 2001-லேயே செய்து அதிமுக திரும்ப வர உதவி செய்ததாகக் கூறினார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிகத் தவறு செய்யாத நிலையில் அதிமுக அரசு 2006-ல் தோற்றதற்கு மக்கள்தான் பரிகாரம் செய்ய வேண்டும் என கூறினார். மத்தியில் தீவிரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்த முயற்சி செய்யப்படுவது நல்லதே. ஏனெனில் ஒவ்வொரு மாநிலமும் இதற்கு தத்தம் அஜெண்டா வைத்துள்ளது. இந்த நிலையில் இது சரியான முயற்சி. இது சம்பந்தமாக மோடி சொல்வதை ஏற்பதற்கில்லை என்றார் அவர்.
பிறகு வந்தவர் கணேசன், கோயம்புத்தூரிலிருந்து கேட்டது: ஸ்ரீலங்கா அரசு செய்வதை ஏன் டவுன்ப்ளே செய்கிறீர்கள்? மும்பை ஊடுருவல் விஷயமாக அரசு ஏன் ஒன்றும் செய்யாமல் இருக்கிறது?
இதற்கு சோ கூறிய பதில்: எல்.டி.டி.இ. ஒரு பயங்கரவாதக் குழு. மக்களை வேண்டுமென்றே கேடயம்,ஆக பயன்படுத்துகிறது. மற்றப்படி பயங்கரவாதிகளை அரசு எப்படித்தான் எதிர்க்க இயலும்? இதில் சிவிலியன்களுக்கு கொல்லாடரல் சேதம் வருவது தவிர்க்க இயலாது, ஏனெனில் எல்.டி.டி.யின் தாக்குதலே சிவிலியன்கள் பின்னாலிருந்தே செய்யப்படுகிறது. மேலும் இலங்கையிலிருந்து ஆனந்தசங்கரி டக்லஸ் தேவானந்தா ஆகியோர் சிவிலியன் இறப்பு எல்.டி.டி.இ. பொய்ப் பிரச்சாரம் செய்வது போல அவ்வளவு அதிகம் இல்லை என்றுதான் கூறுகின்றனர். இங்குள்ள பலரோ தாங்களே ஆயுதம் எடுத்து போர் புரிவது போல வீரவசனம் பேசுகின்றனர். அப்படியாவது எடுத்து தமிழகத்தை விட்டுப் போனால் நல்லதே. ஸ்ரீலங்கா படையினர் இவ்வளவு நாட்களாக ஏதோ பாய்ஸ்கவுட்கள் போலத்தான் இருந்திருக்கின்றனர். ஒரு இடத்தை பிடிப்பார்கள் பிறகு கோட்டை விடுவார்கள். ஆகவே புலிகள் முற்றிலும் ஒடுக்கப்பட்டதாக கூற இயலாது. இறுதியாக புலிகளை ஒடுக்கிய பின்னால் இந்திய அரசு தலையிட வேண்டும். இலங்கை அரசு மீது ராஜரீதியான மற்றும் பொருளாதார நிர்ப்பந்தங்களை இட்டு இலங்கைத் தமிழருக்கு சம உரிமை வாங்கித் தரவேண்டும். ஆனால் எல்.டி.டி.யினருக்கு உதவக் கூடாது. மற்றப்படி எல்.டி.டி.யினருக்கு இலங்கையில் பின்னடைவு அவர்கள் இங்குதான் வருவார்கள். ஆகவே மத்திய அரசு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மும்பை ஆக்கிரமிப்பு நிகழ்ச்சியில் அரசின் செயல்பாடு பற்றி அவர் ஏதேனும் கூறியதாக எனது குறிப்புகள் தெரிவிக்கவில்லை. கூறியிருந்தால் அவற்றை மிஸ் செய்து விட்டேன்.
இப்போது கேள்வி கேட்டவர் ஜெயராமன் என்பவர். அவர் கேட்டது: மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலை நேரடியாக ஒளிபரப்பியது பற்றி சோ அவர்கள் என்ன கூறுகிறார்? ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் எதிர்காலம் அவ்வளவுதானா? ரஜனிகாந்த அரசியலுக்கு வருவாரா, வந்தால் எப்போது வருவார்? உங்களுக்கு இதுவரை எப்போதாவது இதயம் இனித்து கண்கள் பனித்துள்ளனவா (இக்கேள்விக்கு பயங்கர சிரிப்பு ஆடியன்ஸிடமிருந்து). இதற்கு சோ அளித்த பதில்கள்: டைரக்ட் டெலிகாஸ்ட் செய்தது மிகவும் தவறான செயல். அதனால் டெர்ரரிஸ்டுகளுக்குத்தான் அதிக உதவி கிடைத்தது. தம் மூஞ்சியை டி.வி.யில் காண்பிப்பதற்காகவே பல அதிகாரிகள் நிதானமாக தங்கள் வியூகங்களை எல்லாம் விளக்கினர். பத்திரிகை மீடியா என்றால் கருத்து ஏதுமில்லை எனச் செல்பவர்கள் இங்கு மட்டும் அசடு வழிந்தனர். போலீசார்களும் வீரப்பன் காலக் கட்டங்களில் தாங்கள் எந்த இடத்திற்கு எப்போது போகப் போகிறோமென விலாவாரியாக கூறி சொதப்பியது போலவே இங்கும் நடந்தது. ஆஸ்திரேலியாவுக்கு இது பின்னடைவு மட்டுமே. ஏனெனில் அவர்களிடம் இரண்டாம் மற்றும் மூன்றாம் லைன்களில் ஆட்டக்காரர்கள் உள்ளனர். ஆகவே அவர்களை எல்லாம் முடிந்தது என அவ்வளவு சுலபமாகக் கைகழுவி விட முடியாது. ரஜனி அரசியலுக்கு வருவது குறித்து இன்னும் 50 ஆண்டுகளுக்கு பிறகும் கேள்விகள் கேட்பார்கள் போலிருக்கிறது என்ற போது ஒரே சிரிப்பு. அவரை மாதிரி யாரேனும் அரசியலுக்கு வந்தால் நல்லது என்பது எனது கருத்து என சோ கூறினார். கண்கள் பனித்தனவா என்றால், வெங்காயம் உரித்தால் கண்கள் பனிக்கும். மேலும் கலைஞர் உரித்ததும் ஒரு விதத்தில் வெங்காயத்தைத்தானே. அதை உரித்து தனது குடும்பத்தினர் ஒவ்வொருக்காக தந்தார். சென்னையை நீ பாத்துக்கோ, மதுரையை நீ வச்சுக்கோ, நீ டிவியை வச்சுக்கோ, நீ டில்லிக்கு போ. ஓ உனக்கு ஒண்ணும் இல்லையா சங்கமம் விழா மாதிரி ஏதாவது நடத்திக்கோ. மற்றப்படி இதயம் இனித்தது? வாய் இனிக்கும், வயிறு இனிக்கும் என்றாலும் ஒத்துக்கலாம். இதயம்? ரொம்ப கஷ்டமாச்சே. இதயத்தில் சக்கரை ரொம்ப சீரியஸ் கண்டிஷன் ஆச்சே. உம், என்ன செய்வது இம்மாதிரி டூப்பெல்லாம் அடிச்சுட்டே போகலாம். கேட்டுக்கத்தான் நாம இருக்கோமே.
அடுத்து சோ சில பெயர்களை கூற ஒருவர் வந்தார். வந்தவர் நேராக தனது பெயரைக் கூறாது கேள்விகள் கேட்டு பிறகு சென்று விட்டார். அவர் கேள்விகள்: மும்பை தாக்குதல் சமயம் பி.ஜே.பி. அரசு இருந்திருந்தால் என்ன செய்திருக்கும்? நேஷனல் ஐ.டி. கார்டுகளை பிஜேபி அரசு தருமா? (சோ அவர்கள் தந்ததாக இரண்டாம் கேள்விக்கான பதில் எனது குறிப்புகளில் இல்லை. இங்கு ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். கேள்விகளை அவரது உதவியாளர் அவருக்கு அவ்வப்போது எடுத்துரைக்கிறார். இருந்தும் சில கேள்விகள் மிஸ் ஆகி விடுகின்றன. நான் அம்மாதிரி இக்கூட்டத்தில்`கேள்வி கேட்டால் அவற்றை எழுதி வைத்து கொண்டு நகலை திரும்பப் போகும் முன்னால் அவரது உதவியாளரிடமே தந்திருப்பேன். அதை சோ அவர்கள் கையில் கொடுத்தால் இம்மாதிரி மிஸ் ஆகாது என்பது எனது கருத்து). மும்பை தாக்குதல் சம்பந்தமாக இப்போதைய மத்திய அரசு ஒண்ணுமே செஞ்சிருக்காது என்பது பற்றி கேள்வி கேட்டவருக்கே தெரிஞ்சிருக்கு என்றுதான் கூற வேண்டும். இந்த அரசு மாறினாலே பாகிஸ்தான் இன்னும் உஷாராக இருக்கும். பி.ஜே.பி. அரசு வந்தால் அது யோசிக்கும். எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி அத்வானி மன்மோகனுடன் பேசியிருக்கிறார். மற்ற உலக நாடுகள் ஏதேனும் கூறுவதற்கு முன்னால் பேசாமல் பாகிஸ்தானில் உள்ள பயிற்சி முகாம்களை தாக்க வேண்டும். அதற்கு மன்மோகன் சிங் யோசித்து கொண்டே இருக்கிறார். பாஜக அதை செய்திருக்கலாம். இதனால் எதிர்விளைவுகள் வரலாம். அவற்றை எதிர் கொள்ளத்தான் வேண்டும். ஒரு வேளை இம்மாதிரி செய்தால் தேர்தலில் வாக்குகள் கிடைக்கும் என்றால் மட்டும் காங்கிரஸ் அரசு அதை செய்யலாம்.
இப்போது பேசியவர் டி.சி. பாலசுப்பிரமணியம் என்பவர். மைக் இருப்பதை கண்டுகொள்ளாது மிக உரக்க பேசினார். காதில் சரியாக விழாமல் ஒரே இரைச்சல். கடைசியில் சோ அவரை பேசியது போதும் என அனுப்பியதுதான் நடந்தது. நான் கேட்டவரையில் தமிழக அரசியல்வாதிகள் எல்.டி.டி.யிடம் பணம் வாங்கித்தான் அவ்வாறு பேசினார்களா என்ற ஒரு கேள்வி இருந்தது. இதற்கு சோ அவர்கள் பதிலளிக்கையில் அவ்வாறு பணம் வாங்கினார்களா என்பதை நிரூபிக்க இயலாது. ஆனால் ஒரு முறை கருணாநிதி அவர்களே நெடுமாறன் மீது இப்புகாரை கூறியிருக்கிறார். அதே சமயம் திருமங்கலம் தேர்தலில் ஒரு கட்சியுமே இ;ப்பிரச்சினை பற்றி பேசவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். ஒரு வேளை அவர்கள் நிஜமாகவே பணம் வாங்கியிருந்தால் தமிழகத்தில் அவர்கள் புலிகள் சம்பந்தமாக கூத்து அடித்ததை புரிஞ்சுக்கலாம் என்றார்.
இப்போது வந்தவர் ராஜா புதுக்கோட்டையிலிருந்து. அவரது கேள்விகள் கலைஞரின் புத்திர பாசம் திருதிராஷ்டிரனுடையதை போல இருக்கிறதே. உலகப் பொருளாதாரச் சரிவின் பாதிப்பு இந்தியாவில் அவ்வளவாக இல்லாமல் போனதுக்கு காரணம் தாங்கள் நடத்திய போராட்டங்கள்தான் காரணம், அதனால்தான் அரசு உலகமயமாக்கலை முழுதும் நிறைவேற்றவில்லை என கம்யூனிஸ்டுகள் கூறுகின்றனரே. அமெரிக்காவின் ஒபாமா பற்றி என்ன கூறுவீர்கள்? இப்போது சோ பதிலளிக்கையில் முதலில் திமுகவின் எதிர்காலம் பற்றி பேச ஆரம்பித்தார். “ஒருத்தர் எங்கிட்டே இந்தியன் எக்ஸ்பிரஸ் பற்றி ஒரு விஷயம் சொன்னார். அவர் இந்த அரங்கத்திலேதான் இருக்கார், அவர் பேரையெல்லாம் சொல்ல மாட்டேன். அவர் இருக்கும் திக்கை பார்க்காமலேதான் பேசுகிறேன் (ஆடியன்ஸில் சிரிப்பு. நான் நினைக்கிறேன் என்னைப் போலவே பலரும் குருமூர்த்தியைத்தான் நினைத்தார்கள் என்று). அதாவது கோயங்கா தனக்கு பிறகு இந்தியன் எக்ஸ்பிரசே இருக்கக் கூடாது என எண்ணியது போலத்தான் அவரது நடப்பு இருந்தது என்று. அதேபோல கலைஞரும் தனக்கு பிறகு திமுக இருக்ககூடாது என்று நினைக்கிறார் என தோன்றுகிறது. அது கட்சிக்கு நல்லதல்ல. இந்தியப் பொருளாதாரம் விஷயத்தில் அரசே எச்சரிக்கையாகத்தான் இருந்திருக்கிறது. அதில் கம்யூனிஸ்டுகளும் சற்றே பணியார்றியிருக்கலாம் ஆனால் முழுக்க முழுக்க அவர்களுக்கு கிரெடிட் தர இயலாது, ஏனெனில் அவர்கள் ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தைல் உலகமயமாக்கம் முழு அளவில் செயல்படுகிறது. இப்போது ஒபாமா பற்றி. உண்மையாகவே கூறுகிறேன் அமெரிக்காவில் டெமாக்ரடிக் கட்சி சார்ந்த ஜனாதிபதிகளை எனக்கு பிடிக்காது (என்ன பெரிசு இதப் பாத்தியா ஒன்னிய மாதிரியே சோ பேசறார் எனக் கூறும் முரளி மனோகர் சரியாகவே பேசுகிறான்). எப்போதுமே அவர்களால் இந்தியாவுக்கு தொல்லைதான். அணுசக்தி விஷயங்களில் தேவையற்ற கெடுபிடி காட்டுகிறார்கள். நாம் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்துகிறோம், இந்தியாவில் மனித உரிமை பிரச்சினை என்றெல்லாம் தேவையின்றி மூக்கை நுழைப்பார்கள். இப்போது ஒபாமாவே காஷ்மீர் பற்றி ஏடாகூடமாகவே பேசுகிறார். பார்ப்போம் போகப் போக என்ன ஆகிறது என்று. (நான் ரிபப்ளிகன்களை ஆதரிப்பதற்கு சொன்ன விஷயங்கள் அமெரிக்காவின் பார்வை கோணத்திலிருந்து கூறினேன் என்பதை எனது இது சம்பந்தமான அப்பதிவிலிருந்தே பார்க்கலாம். சோ அவர்கள் இந்தியக் கோணத்திலிருந்தே கூறுகிறார். ஆனாக்க ரிசல்ட் ஒன்ணுதான்! :))))).
அடுத்ததாக வந்தவர் பாலசுப்பிரமணியம். அவர் கேட்டது. துக்ளக் சார்பில் அறக்கட்டளை நிறுவி என்னைப் போன்ற ஏழைகளின் குழந்தைகளும் கான்வெண்டில் படிக்க வழிசெய்ய இயலுமா? இதற்கு சோ அவர்கள் கூறியது. இதிலெல்லாம் கடைசியில் கெட்டப் பெயர்தான் மிஞ்சும். மேலும் நான் ஒரு அமைப்பை நடத்தும் மனோபாவமுள்ள மனிதன் இல்லை. என் சகோதரன் ஒரு பள்ளி நடத்துகிறான். ரொம்ப கண்டிப்பு. யாரையாவது சேர்க்க வேண்டுமென நானே சிபாரிசு செய்தாலும் போடா எனக் கூறிடுவான். அவனைப் போன்றவர்கள்தான் ஒரு அமைப்பை நடத்தத் தேவையான மனோபாவத்துடன் உள்ளவர்கள். மேலும் அவர் தனது சகோதரர் பற்றி பேசுகையில் அவர் மனம் பெருமிதமானதை உணர முடிந்தது. ஹாஸ்டலில் இருக்கும் மாணவர்கள் நல்ல சாப்பாடு சாப்பிட டே ஸ்காலர்கள் மட்டும் கையில் சிறு டிஃபன்பாக்ஸ் எடுத்து வருவதை சகிக்காமல் அவர்களுக்கும் ஹாஸ்டல் உணவு இலவசம் என சாப்பாடு போடுகிறார். வெறுமனே சத்துணவு போட்டேன், முட்டை போட்டேன் என பெருமை பேசும் அரசியல்வாதிகள் மத்தியில் அவர் ஃபுல் மீல்ஸே போடுகிறார். இம்மாதிரி சகோதரனை அடைந்த சோ பாக்கியசாலியே. தயானந்த் சரஸ்வதி அவர்களே இப்பள்ளிக்கு வந்து பார்த்துவிட்டூ இம்மாதிரி தான் நடத்தும் பள்ளிகளிலும் செய்ய வேண்டுமென கூறியதையும் சோ அவர்கள் நியாயமான பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தனது குடும்பத்திலேயே அவரே திறமைசாலி என்றும் பிறகு தன்னைப் பற்றி பேசுகையில் தான் ஆர்கனைசேஷனை நடத்தும் அளவுக்கு பொறுமையெல்லாம் இல்லாதவர், நேர்மையுடன் செயல்படுகிறவர் அவ்வளவே. ஆனால் நேர்மை மட்டும் போதாது. திறமைசாலியாகவும் இருக்க வேண்டும். என்ன நடக்கிறதென்றால் நேர்மையானவன் திறமைசாலி அல்ல, திறமைசாலியோ அயோக்கியனாக இருக்கிறான். மோடி போன்ற சிலரே நேர்மை மற்றும் திறமையுடன் உள்ளனர்.
அடுத்து வந்த திருவொற்றியூர் பாலன் என்பவர் கேட்டது: 1. 2008-ன் சிறந்த மனிதர் யார்? 2. சங்கமம் பற்றி? 3. ஆண்டுவிழா கூட்டங்களை வடசென்னையில் நடத்துவீர்களா? ஆண்டுவிழா கூட்டங்கள் பற்றி ஒரே சப்ளிமெண்டாக போட்டு அடுத்த துக்ளக் இதழுதன் தருவீர்களா? 4. எஸ்.வி. சேகர் இப்போது என்ன செய்கிறார்? சோ பதில்கள்: 1) 2008-ன் சிறந்த மனிதர் அழகிரி. (ஒரே சிரிப்பு). பின்னே என்ன, கருணாநிதியே ரிசல்ட் குறித்து பயந்தார். அதை அப்படியே தலைகீழாக மாற்றியவர் அழகிரியே. வேறு யாராவது இம்மாதிரி கடைசி ஒரு மணி நேரத்தில் 30 % வோட்டளிப்பை பல பூத்துகளில் உண்டாக்கியதுண்டா? நிலைமையையே தலைகீழாக்கியவர். அவரை விட வேறு யாருக்கு தகுதி? கை ரொம்ப தாராளம் அவருக்கு. ஒரு ஓட்டுக்கு 7000-ம்னா சும்மாவா? விலைவாசி ஏறிவிட்டதல்லவா? எல்லோர் மாதிரியும் பிச்சைக்காரத்தனமாகவா ஓட்டு கேட்டார்? பணம் கொடுத்தார் வாங்கினார். நேர்மையான மனிதர். 2) சங்கமம் பற்றி என்ன சொல்வது? ஒரு கமாண்ட் ஆடியன்ஸை வைத்து நடத்தப்படுகிறது. கர்நாடக சங்கீதக் கச்சேரிகளை பப்ளிக்காக பார்க்குகளில் நடத்துவது சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு கேவலம். பாடகர் ஒரு பக்கம் பாட அதை அவ்வப்போது யாராவது வேடிக்கை பார்ப்பார்கள். ஒரு ஓரமாக யாராவது இருவர் சண்டையிட்டு கொண்டிருப்பார்கள். என்ன செய்வது, குடும்ப செட்டில்மெண்ட். 3) ஆண்டுவிழா கூட்டத்துக்கு நேரு ஸ்டேடியம் கிடைக்காது. பார்க்கலாம் என்ன செய்ய முடியும் என்று. அதே சமயம் ஒரே சப்ளிமெண்டெல்லாம் போட்டு இலவசமாக தரும் வேலையெல்லாம் செய்யப்படமாட்டாது. இத்தனை ஆண்டுகளாக ஃப்ரீ கிஃப்ட், ஷாம்பூ பொட்டலம் மற்றும் இன்னபிற இனாம்கள் இல்லாமல் நடத்திய பத்திரிகை அப்படியே நடத்தப்படும். மன்னிக்கவும். ஆகவே மீட்டிங் பற்றி கவரேஜ் இன்ஸ்டால்மெண்டில்தான் வரும். மற்றப்படி வேறு இடங்களில் நடத்துவது பற்றி யோசிப்போம். 4) எஸ்.வி. சேகர் பற்றி எல்லோருமே மறந்து விட்டனர். நானும் மறந்து விட்டேன். இப்போதைக்கு அதிமுகவில் உள்ளார். நாளை எங்கிருப்பார் என்பது யாருக்கும் தெரியாது.
பிறகு பேசியது துபாய் ராமகிருஷ்ணன். அவர் கேட்டது. 1) துக்ளக் பத்திரிகையில் உங்களுக்கு பிறகு யாரை வாரிசாக நியமிப்பீர்கள்? 2) நடிகர், வக்கீல், கதாசிரியர், இயக்குனர், பத்திரிகையாளர், அரசியல் விமரிசகர் என தசாவாதாரம் எடுத்து மகாபாரதம் பேசுகிறது எழுதிய கலியுக வியாசரே உங்கள் இளமையின் ரகசியம் என்ன? 3) இளைய தலைமுறையினருக்கு அறிவுரை ஏதேனும்? சோ பதில்: 1) வாரிசு என யாரும் கிடையாது. தேவைபட்டபோது எனக்கு பிறகு துகளக்கை நடத்த யாராவது வரலாம். வராமலும் போகலாம். நான் வேண்டுமானால் உயிருடன் இருக்கும்போதே யாருக்காவது பொறுப்பை ஒப்படைத்துவிட்டு போவேனே தவிர எனக்கு பிறகு இவர் என்றெல்லாம் கூற மாட்டேன். நிச்சயமாக எனது பிள்ளை இதில் வாரிசு இல்லை, ஏனெனில் அவனுக்கு இது பிடிக்காது. 2) இளமையின் ரகசியமா? எனக்கு முடி இல்லை ஆகவே நரை இல்லை. தலை வெளியே இல்லாமல் இருப்பது போல உள்ளேயும் வளர்ச்சி இல்லாததால் ஒரு வேளை ஒரு முன்னேற்றமும் இல்லை என்பதைத்தான் இப்படி இளமை எனக் கூறுகிறார்கள் போலும். 3) அறிவுரை எல்லாம் கூறும் தகுதி எனக்கில்லை.
இப்போது கேள்வி கேட்டது சுந்தர் என்பவர். குருமூர்த்தி த்குக்ளக்கில் எழுதிய கட்டுரைகள் புத்தகங்களாக வருமா. சத்யம் விவகாரம் பற்றி எழுதுமாறு அவரை கேட்டு கொள்வீர்களா. சோ அவர்களது பதில். குருமூர்த்தியின் புத்தகங்கள் ஏற்கனவே வந்து விட்டன. துக்ளக்கிலும் அது பற்றி அறிவிப்புகள் வந்துள்ளன. குருமூர்த்தியை பார்த்து, “சார் சத்யம் பற்றியும் எழுதுங்க”. ஆக, நீங்கள் கேட்டு கொண்டதற்கேற்ப அவரையும் கேட்டு விட்டேன்.
கடைசியாக கேள்வி கேட்டது பரசுராமன் என்பவர்: 1) அடுத்த தேர்தலில் திமுக மெஜாரிட்டி பெற அழகிரி உதவுவாரா? 2) பாகிஸ்தான் மீது போர் தொடுக்காவிட்டால் ஆதரவு வாபச் என சமாஜ்வாதி ஜனதா மன்மோகன் அரசுக்கு கூறுவது பற்றி? 3) சரத்குமாரின் நிலை என்ன?
சோ பதில்கள். 1) அழகிரி பற்றி பிறகு பேசுகிறேன். 2) சமாஜ்வாதி கட்சி ஒப்புக்கு அவ்வாறு கூறுகிறது. பிற்காலத்தில் கூட்டணி பேரத்தில் அதிக சீட்டுகள் பெறும் உத்தி அது. 3) ச்ரத்குமார் வெற்றிகரமாக படங்களில் நடித்தவர். ஆனால் அதெல்லாம் ஓட்டாகும் என நினைத்தது அவர் தவறு.
இத்துடன் வாசகர் கேள்விகள் அவற்றுக்கு சோவின் பதில்கள் முடிந்தன. இனிமேல் சோ அவர்கள் பேசியது அடுத்த பதிவில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கே.வி.சுப்ரமணிய ஐயர்
-
கந்தாடை வைத்தி சுப்ரமணிய அய்யர் தமிழ் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாய்வாளர்.
தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டெழுத்துக்கள் தமிழ்ப் பிராமி எழுத்துருவில்
வடிக்கப்பட்...
20 hours ago
6 comments:
சார் நல்லா விளக்கமா கூறி இருக்கீங்க.
நீங்க கேள்வி பதில்களை தனி தனி வரியாக இடம் விட்டு எழுதினால் படிக்க எளிதாக இருக்கும், பாராவாக படிக்க சிரமமாக உள்ளது.
"சோ" அவர்கள் பேசியதையும் விரைவில் பதிவிடுங்கள், நன்றி.
பன்முக வல்லுனர் சோ அவர்களின் 39 வது துகளக் ஆண்டு விழா நிகழ்ச்சிகளின் கேள்வி பதில் பற்றிய தொகுப்பு பகுதி 1,பகுதி 2 அருமை.
நன்றி.
தங்களின் கேள்வி பதில் பதிவு போல், சோ அவர்களிடம் வாசகர்களால் கேட்கப் பட்ட கேள்வி முதலில், பின்னர் அவருடைய பதில் என்று இருந்தால் படிப்பதற்கு அனைவருக்கும் ஏதுவாக இருக்கும்.
சோ புராணம் இன்னும் இருக்கா?
இரண்டாம் பகுதியும் அருமை. உங்கள் கவரேஜ் அருமை.
சோ கூறி உள்ள பெருமபாலான பதில்கள் எனக்கு உடன் பாடில்லை.
சோ பாரளுமன்றத்தில் பேசியது குறித்த லிங்க் இருந்தால் அனுப்பவும். இன்றும் டெல்லியில் தமிழக எம் பி என்றால் உடனே நினைவுக்கு வருபவர் வைகோ ஒருவரே.
ஒரு பாராளுமன்ற உறுப்பினராக கூட சோ கிண்டி அருகில் ஒரு சமுதாய கூடத்திற்கு உதவி செய்து உள்ளார்., அது போக பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் அவர் என்ன செய்தார் என்று தெரிய வில்லை.
டி ஆர் பாலு கூட சைதை, பல்லாவரம், வேளச்சேரி போன்ற பெருது நிறுத்தங்களுக்கு பணம் செலவு செய்துள்ளார்.
குப்பன்_யாஹூ
கிழ் கண்டவற்றை தமிழில் மொழி பெயர்த்து பதிவாக வெளியிட்டு உதவ முடியுமா?
'And Then They Came For Me'
By Lasantha Wickrematunge
NO other profession calls on its practitioners to lay down their lives for their art save the armed forces and, in Sri Lanka, journalism. In the course of the past few years, the independent media have increasingly come under attack. Electronic and print-media institutions have been burnt, bombed, sealed and coerced. Countless journalists have been harassed, threatened and killed. It has been my honour to belong to all those categories and now especially the last.
I have been in the business of journalism a good long time. Indeed, 2009 will be The Sunday Leader's 15th year. Many things have changed in Sri Lanka during that time, and it does not need me to tell you that the greater part of that change has been for the worse. We find ourselves in the midst of a civil war ruthlessly prosecuted by protagonists whose bloodlust knows no bounds. Terror, whether perpetrated by terrorists or the state, has become the order of the day. Indeed, murder has become the primary tool whereby the state seeks to control the organs of liberty. Today it is the journalists, tomorrow it will be the judges. For neither group have the risks ever been higher or the stakes lower.
Why then do we do it? I often wonder that. After all, I too am a husband, and the father of three wonderful children. I too have responsibilities and obligations that transcend my profession, be it the law or journalism. Is it worth the risk? Many people tell me it is not. Friends tell me to revert to the bar, and goodness knows it offers a better and safer livelihood. Others, including political leaders on both sides, have at various times sought to induce me to take to politics, going so far as to offer me ministries of my choice. Diplomats, recognising the risk journalists face in Sri Lanka, have offered me safe passage and the right of residence in their countries. Whatever else I may have been stuck for, I have not been stuck for choice.
But there is a calling that is yet above high office, fame, lucre and security. It is the call of conscience.
The Sunday Leader has been a controversial newspaper because we say it like we see it: whether it be a spade, a thief or a murderer, we call it by that name. We do not hide behind euphemism. The investigative articles we print are supported by documentary evidence thanks to the public-spiritedness of citizens who at great risk to themselves pass on this material to us. We have exposed scandal after scandal, and never once in these 15 years has anyone proved us wrong or successfully prosecuted us.
The free media serve as a mirror in which the public can see itself sans mascara and styling gel. From us you learn the state of your nation, and especially its management by the people you elected to give your children a better future. Sometimes the image you see in that mirror is not a pleasant one. But while you may grumble in the privacy of your armchair, the journalists who hold the mirror up to you do so publicly and at great risk to themselves. That is our calling, and we do not shirk it.
Every newspaper has its angle, and we do not hide the fact that we have ours. Our commitment is to see Sri Lanka as a transparent, secular, liberal democracy. Think about those words, for they each has profound meaning. Transparent because government must be openly accountable to the people and never abuse their trust. Secular because in a multi-ethnic and multi-cultural society such as ours, secularism offers the only common ground by which we might all be united. Liberal because we recognise that all human beings are created different, and we need to accept others for what they are and not what we would like them to be. And democratic... well, if you need me to explain why that is important, you'd best stop buying this paper.
The Sunday Leader has never sought safety by unquestioningly articulating the majority view. Let's face it, that is the way to sell newspapers. On the contrary, as our opinion pieces over the years amply demonstrate, we often voice ideas that many people find distasteful. For example, we have consistently espoused the view that while separatist terrorism must be eradicated, it is more important to address the root causes of terrorism, and urged government to view Sri Lanka's ethnic strife in the context of history and not through the telescope of terrorism. We have also agitated against state terrorism in the so-called war against terror, and made no secret of our horror that Sri Lanka is the only country in the world routinely to bomb its own citizens. For these views we have been labelled traitors, and if this be treachery, we wear that label proudly.
Many people suspect that The Sunday Leader has a political agenda: it does not. If we appear more critical of the government than of the opposition it is only because we believe that - pray excuse cricketing argot - there is no point in bowling to the fielding side. Remember that for the few years of our existence in which the UNP was in office, we proved to be the biggest thorn in its flesh, exposing excess and corruption wherever it occurred. Indeed, the steady stream of embarrassing expos‚s we published may well have served to precipitate the downfall of that government.
Neither should our distaste for the war be interpreted to mean that we support the Tigers. The LTTE are among the most ruthless and bloodthirsty organisations ever to have infested the planet. There is no gainsaying that it must be eradicated. But to do so by violating the rights of Tamil citizens, bombing and shooting them mercilessly, is not only wrong but shames the Sinhalese, whose claim to be custodians of the dhamma is forever called into question by this savagery, much of which is unknown to the public because of censorship.
What is more, a military occupation of the country's north and east will require the Tamil people of those regions to live eternally as second-class citizens, deprived of all self respect. Do not imagine that you can placate them by showering "development" and "reconstruction" on them in the post-war era. The wounds of war will scar them forever, and you will also have an even more bitter and hateful Diaspora to contend with. A problem amenable to a political solution will thus become a festering wound that will yield strife for all eternity. If I seem angry and frustrated, it is only because most of my countrymen - and all of the government - cannot see this writing so plainly on the wall.
It is well known that I was on two occasions brutally assaulted, while on another my house was sprayed with machine-gun fire. Despite the government's sanctimonious assurances, there was never a serious police inquiry into the perpetrators of these attacks, and the attackers were never apprehended. In all these cases, I have reason to believe the attacks were inspired by the government. When finally I am killed, it will be the government that kills me.
The irony in this is that, unknown to most of the public, Mahinda and I have been friends for more than a quarter century. Indeed, I suspect that I am one of the few people remaining who routinely addresses him by his first name and uses the familiar Sinhala address oya when talking to him. Although I do not attend the meetings he periodically holds for newspaper editors, hardly a month passes when we do not meet, privately or with a few close friends present, late at night at President's House. There we swap yarns, discuss politics and joke about the good old days. A few remarks to him would therefore be in order here.
Mahinda, when you finally fought your way to the SLFP presidential nomination in 2005, nowhere were you welcomed more warmly than in this column. Indeed, we broke with a decade of tradition by referring to you throughout by your first name. So well known were your commitments to human rights and liberal values that we ushered you in like a breath of fresh air. Then, through an act of folly, you got yourself involved in the Helping Hambantota scandal. It was after a lot of soul-searching that we broke the story, at the same time urging you to return the money. By the time you did so several weeks later, a great blow had been struck to your reputation. It is one you are still trying to live down.
You have told me yourself that you were not greedy for the presidency. You did not have to hanker after it: it fell into your lap. You have told me that your sons are your greatest joy, and that you love spending time with them, leaving your brothers to operate the machinery of state. Now, it is clear to all who will see that that machinery has operated so well that my sons and daughter do not themselves have a father.
In the wake of my death I know you will make all the usual sanctimonious noises and call upon the police to hold a swift and thorough inquiry. But like all the inquiries you have ordered in the past, nothing will come of this one, too. For truth be told, we both know who will be behind my death, but dare not call his name. Not just my life, but yours too, depends on it.
Sadly, for all the dreams you had for our country in your younger days, in just three years you have reduced it to rubble. In the name of patriotism you have trampled on human rights, nurtured unbridled corruption and squandered public money like no other President before you. Indeed, your conduct has been like a small child suddenly let loose in a toyshop. That analogy is perhaps inapt because no child could have caused so much blood to be spilled on this land as you have, or trampled on the rights of its citizens as you do. Although you are now so drunk with power that you cannot see it, you will come to regret your sons having so rich an inheritance of blood. It can only bring tragedy. As for me, it is with a clear conscience that I go to meet my Maker. I wish, when your time finally comes, you could do the same. I wish.
As for me, I have the satisfaction of knowing that I walked tall and bowed to no man. And I have not travelled this journey alone. Fellow journalists in other branches of the media walked with me: most of them are now dead, imprisoned without trial or exiled in far-off lands. Others walk in the shadow of death that your Presidency has cast on the freedoms for which you once fought so hard. You will never be allowed to forget that my death took place under your watch. As anguished as I know you will be, I also know that you will have no choice but to protect my killers: you will see to it that the guilty one is never convicted. You have no choice. I feel sorry for you, and Shiranthi will have a long time to spend on her knees when next she goes for Confession for it is not just her owns sins which she must confess, but those of her extended family that keeps you in office.
As for the readers of The Sunday Leader, what can I say but Thank You for supporting our mission. We have espoused unpopular causes, stood up for those too feeble to stand up for themselves, locked horns with the high and mighty so swollen with power that they have forgotten their roots, exposed corruption and the waste of your hard-earned tax rupees, and made sure that whatever the propaganda of the day, you were allowed to hear a contrary view. For this I - and my family - have now paid the price that I have long known I will one day have to pay. I am - and have always been - ready for that. I have done nothing to prevent this outcome: no security, no precautions. I want my murderer to know that I am not a coward like he is, hiding behind human shields while condemning thousands of innocents to death. What am I among so many? It has long been written that my life would be taken, and by whom. All that remains to be written is when.
That The Sunday Leader will continue fighting the good fight, too, is written. For I did not fight this fight alone. Many more of us have to be - and will be - killed before The Leader is laid to rest. I hope my assassination will be seen not as a defeat of freedom but an inspiration for those who survive to step up their efforts. Indeed, I hope that it will help galvanise forces that will usher in a new era of human liberty in our beloved motherland. I also hope it will open the eyes of your President to the fact that however many are slaughtered in the name of patriotism, the human spirit will endure and flourish. Not all the Rajapakses combined can kill that.
People often ask me why I take such risks and tell me it is a matter of time before I am bumped off. Of course I know that: it is inevitable. But if we do not speak out now, there will be no one left to speak for those who cannot, whether they be ethnic minorities, the disadvantaged or the persecuted. An example that has inspired me throughout my career in journalism has been that of the German theologian, Martin Niem"ller. In his youth he was an anti-Semite and an admirer of Hitler. As Nazism took hold in Germany, however, he saw Nazism for what it was: it was not just the Jews Hitler sought to extirpate, it was just about anyone with an alternate point of view. Niem"ller spoke out, and for his trouble was incarcerated in the Sachsenhausen and Dachau concentration camps from 1937 to 1945, and very nearly executed. While incarcerated, Niem"ller wrote a poem that, from the first time I read it in my teenage years, stuck hauntingly in my mind:
First they came for the Jews
and I did not speak out because I was not a Jew.
Then they came for the Communists
and I did not speak out because I was not a Communist.
Then they came for the trade unionists
and I did not speak out because I was not a trade unionist.
Then they came for me
and there was no one left to speak out for me.
If you remember nothing else, remember this: The Leader is there for you, be you Sinhalese, Tamil, Muslim, low-caste, homosexual, dissident or disabled. Its staff will fight on, unbowed and unafraid, with the courage to which you have become accustomed. Do not take that commitment for granted. Let there be no doubt that whatever sacrifices we journalists make, they are not made for our own glory or enrichment: they are made for you. Whether you deserve their sacrifice is another matter. As for me, God knows I tried.
Post a Comment