1/18/2009

நிஜமாகவே இது ஒரு சின்னஞ்சிறு உலகம்தேன்

ஆங்கிலத்தில் கூறுவார்கள் It is indeed a small world! என்று. உதாரணம் என்று கூற வேண்டுமென்றால் நீங்கள் மெக்சிகோவில் ஒரு வீதியில் நடந்து கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக உங்க்ள் பக்கத்து வீட்டுக்காரரை எதிர்கொள்வதை சொல்லாம். இதை கதையில் எழுதினால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் பலமுறை நடந்துள்ளது. இன்னொரு உதாரணமாக எனது ஹைப்பர்லிங்குகளை கூறலாம்.

இப்ப ஏன் இத்தச் சொல்லறன்னு கொட்டாவியுடன் கேட்கும் முரளி மனோகரா சற்றே பொறுமை காப்பாய்.

சமீபத்தில் 2001-ல் நான் நிரந்தரமாக சென்னைக்கு வந்தவுடன் செய்த முதல்வேலைகளில் ஒன்று அல்லியான்ஸ் ஃபிரான்ஸேஸுக்கு சென்று உறுப்பினர் ஆனதுதான். அங்கு மாணவர்களுக்கான ஆலோசகரை கண்டு பேசியபோது எனது மொழிபெயர்ப்பு சரித்திரத்தை கூறி (முக்கியமாக ஃபிரெஞ்சு மொழி சம்பந்தமானவை) யாராவது மொழிபெயர்ப்பு வேலைகளுக்காக அவரை அணுகினால் என் பெயரையும் பரிந்துரைக்குமாறு கேட்டு கொண்டேன். அவர் ஒரே ஒரு விஷயம் சொன்னார், “ராகவன், நான் நினைக்கிறேன் நாங்கள் உங்களுக்காகத்தான் காத்திருந்தோம்” என்று. என்ன விஷயம் என கேட்டதில் அவரது நிறுவனம் பல மொழி பெயர்ப்பு வேலைகள் செய்தாலும் தொழில்நுட்பம் சம்பந்தமான வேலைகளை சட்டென ஏற்பதில்லை என தெரிந்தது. இப்போது எனது பொறியியல் மற்றும் மொழிபெயர்ப்பு அனுபவம் அவரை அம்மாதிரி பேச வைத்தது.

அதன் பிறகு பல ஃபிரெஞ்சு வேலைகள் அவர் மூலமாகவே எனக்கு வந்தன. அவ்வாறு வந்த வாடிக்கையாளர்கள் பிறகு நேரடியாகவே என்னிடம் வருகின்றனர். அம்மாதிரித்தான் சமீபத்தில் 2002-ல் ஒருமுறை L&T-யிலிருந்து ஒரு ஃபோன் வந்தது. ஃபோன் செய்தவர் என்னை அடுத்தநாளுக்கு வேலை சம்பந்தமாக பேச அழைத்தார். நானும் சரி என கூறினேன். அதன் பிறகு அதே தினம் அதே நிறுவனத்திலிருந்து மேலும் நான்கு தொலைபேசி அழைப்புகள் வெவ்வேறு அதிகாரிகளிடமிருந்து. ஒவ்வொருவரும் அடுத்த நாளைக்கு என்னை பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். எனக்கு சிரிப்பு ஒரு புறம், திகைப்பு ஒருபுறம். அவர்களில் ஒருவரிடமும் நான் மற்றவர்களை பற்றி கூறவேயில்லை. அடுத்த நாளைக்கு போய் என் கார்டை ரிசப்ஷனில் கொடுத்து முதலில் அழைத்த அதிகாரியின் பெயரைக் கூறி நான் வந்த நோக்கத்தை சொன்னவுடன், அவர்களும் அதிகாரியுடன் உள்தொலைபேசியில் பேசி உறுதி செய்து கொண்டு என்னை அங்கு அனுப்பி வைத்தனர். உள்ளே போனால் மொத்தம் ஐவர் உட்கார்திருந்தனர். நான் முதலில் பார்க்க சென்ற அதிகாரி என்னிடம் மற்ற நால்வரும் ஆளுக்கு ஒரு மொழிபெயர்ப்பாளரை அழைத்திருப்பதாகவும் அவர்களும் வந்த பிறகு பேச ஆரம்பிக்கலாம் என கூறினார். அந்த நான்கு அதிகாரிகளின் பெயரையும் கூறி அவர்களிடம் என் பெயரை கூறும்போதே என்னால் புன்னகையை அடக்க இயலவில்லை. பிறகு நால்வரும் முதலில் பேய்முழி முழித்துவிட்டு தாங்களும் என்னைத்தான் அழைத்திருப்பதாகக் கூற, ஒரு சங்கடமான மௌனம் சில நொடிகளுக்கு நிலவியது. பிறகு குபீர் சிரிப்புதான். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் அல்லியான்ஸின் அந்த அதிகாரியைத்தான் முதலில் எல்லோரும் அணுகியுள்ளனர். அவரும் ஒவ்வொருவருக்கும் எனது பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள மட்டும் கூறியுள்ளார். ஆனால் அவ்வாறு அணுகியவர்களில் ஒருவரிடமும் ஏற்கனவே தான் என்னை மற்றவருக்கு பரிந்துரைத்த விவரத்தை கூறவில்லை.

என்ன நடந்திருக்கும் என்றால், ஐந்து மொழிபெயர்ப்பாளர்களையும் ஒருவருக்கொருவருடன் போட்டியிட வைத்து குறைந்த ரேட்டில் ஆள்பிடிக்க நினைத்திருக்க வேண்டும். ஆனால் நிலைமையோ தலைகீழாயிற்று. நான் கேட்ட ரேட்டை ரொம்பவும் விவாதிக்காமல் அப்படியே ஒத்து கொண்டனர். நிஜமாகவே சின்னஞ்சிறு உலகம்தேன்.

சரி, இதெல்லாம் இப்ப ஏன் ஞாபகத்துக்கு வரணும்? சில நாட்களுக்கு முன்னால் தில்லியில் நிலைகொண்டிருக்கும் மொழிபெயர்ப்பு ஏஜன்சியின் சென்னை கிளையிலிருந்து எனக்கு ஜெர்மன் துபாஷி 43 நாட்களுக்கு தேவை எனக் கூறி தொலைபேசி அழைப்பு வந்தது. அவர்களிடம் என் ரேட்டை கூறி மிகுதி ஷரத்துகளையும் கூறினேன். இப்போது பார்த்தால் நேற்றிலிருந்து துவங்கி அதே வேலைக்கு இன்னும் ஐந்து தில்லி ஏஜன்சிகளிலிருந்து தொலைபேசி அழைப்புகள். நானும் பொறுமையாக ஒவ்வொருவருக்கும் ஒரே கண்டிஷன்களை போட்டிருக்கிறேன். கொடுப்பார்களா மாட்டார்களா எனத் தெரியவில்லை. ஆனால் நிலைமை அவர்களை பொருத்தவரை சீரியஸ்தான். ஏனெனில் அவர்களுக்கு ஜெர்மன் மற்றும் தமிழ் மொழிக்கான துபாஷிதான் தேவை. ஆகவே தமிழ் தாய்மொழி இல்லாதவர்கள் கவுண்டமணி கூறுவது போல எடுத்த உடனேயே அன்செலக்டட்தான். ஆனால் ஒவ்வொருவரும் நான் சொன்ன ரேட்டை கேட்டு புழுபோல துடித்தார்கள். ஒருவர் சொன்னார், நாற்பது நாட்களுக்கான பெரிய வேலை, ஆகவே ரேட்டை குறைத்து கொள்ளவேண்டும் என்று. டோண்டு ராகவனா இதற்கெல்லாம் மசிவான்? உறுதியாக ஆனால் மரியாதையுடன் மறுத்து விட்டேன்.

பார்ப்போம். வந்தால் சந்தோஷம், இல்லாவிட்டாலும் பரவாயில்லை. கைவசம் வீட்டில் கணினி துணைகொண்டு மொழிபெயர்க்க வேண்டிய கோப்புகள் வேணது உள்ளன. என்ன, இந்த வேலை கிடைத்தால் பகல் முழுக்க அங்கு வேலை. மிகுதி நேரங்களில் வீட்டில் மொழிபெயர்ப்பு வேலை. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது தமிழமணத்தில் பஜனை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

13 comments:

Anonymous said...

\\ஒருவர் சொன்னார், நாற்பது நாட்களுக்கான பெரிய வேலை, ஆகவே ரேட்டை குறைத்து கொள்ளவேண்டும் என்று. டோண்டு ராகவனா இதற்கெல்லாம் மசிவான்? உறுதியாக ஆனால் மரியாதையுடன் மறுத்து விட்டேன். \\


HATS OFF TO DONDU SIR

அத்திரி said...

//மிகுதி நேரங்களில் வீட்டில் மொழிபெயர்ப்பு வேலை. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது தமிழமணத்தில் பஜனை.//


நல்ல பஜனையா பாடுங்க ஐயா

ராபின் ஹூட் said...

வரும் வெள்ளிக் கிழமைக்கான கேள்விகள்.
1. திரு.கருணாநிதி,ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆட்சியில் செய்த நல்ல விசயங்கள் சிலவற்றைக் கூறுங்கள்.

2. தாங்கள் வருமான வரி செலுத்துவது உண்டா?

Anonymous said...

//நல்ல பஜனையா பாடுங்க ஐயா//

.))))))))

Anonymous said...

\\Anonymous said...
//மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?//

ஆவ்வ்வ்வ்... இந்த டார்ச்சர் எப்ப முடியும்?

வரும் வெள்ளிக் கிழமைக்கான கேள்விகள்.
1. திரு.கருணாநிதி,ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆட்சியில் செய்த நல்ல விசயங்கள் சிலவற்றைக் கூறுங்கள்.

2. தாங்கள் வருமான வரி செலுத்துவது உண்டா?\\


அடுத்த வார டார்ச்சர் தொடர்கிறது

ஆவ்வ்வ்வ்...ஆவ்வ்வ்வ்...

Anonymous said...

to day i saw a trailor about mgr's animated film


information about animation film about MGR.


mgr's first 3 D animated film

http://puratchithalaivan.com/


Contact Us At:
Mayabimbham Media (P) Ltd.
Plot No. 6/1,
Nakkeeran Street,
Valasaravakkam,
Chennai - 600 087.
Phone No : 91-44-24866149
: 91-44-65877828
E Mail ID : info@mayabimbham.com

குப்பன்.யாஹூ said...

இதே போல தான் இப்போது வேலை வாய்ப்பு சந்தையிலும் நடக்கிறது.

உங்களின் resume ai நோக்ரி, மொன்ச்டேரில் பதிவு செய்யுங்கள். அடுத்த இரு நாட்களில் ஒரே வேலைக்கு ஒன்பது வேலை வாய்ப்பு நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும் (from 9 recruitment consultance firms), ஒரே கன்சல்டன்சி இல் இருந்தே மூன்று ஊழியர்கள் அழைப்பு செய்வார்கள்.

இதுதான் இன்றைய உலகம்.


குப்பன்_யாஹூ

Anonymous said...

//அடுத்த வார டார்ச்சர் தொடர்கிறது

ஆவ்வ்வ்வ்...ஆவ்வ்வ்வ்..//

இந்த கமேண்டை போட்டது செந்தழல் ரவி இல்லை

வால்பையன் said...

உலகம் மெய்யாலுமே சிறுசு தான்!

ராபின் ஹூட் said...

இன்னொரு கேள்வி,

உங்களுக்கு அறிவாலயத்திலும், துக்ளக் அலுவலகத்திலும் ஒரே சமயத்தில் ஒரே மாதிரியான வேலை கிடைக்கிறது வைத்துக் கொள்வோம்.
துக்ளக் அலுவலக வேலையில் சம்பளம் மற்றும் வசதிகள் ஆகியவை அறிவாலயத்தில் கிடைப்பதை விடப் பாதிதான் எனில் எந்த இடத்தில் வேலைக்குச் சேர்வீர்கள்? ஏன்?

கட்டுப்பாடு(condition): ஒரு நேரத்தில் ஒரு வேலையில் தான் சேர வேண்டும்.

dondu(#11168674346665545885) said...

@ராபின்ஹூட்
இது என்ன குழந்தைத்தனமான கேள்வி? அறிவாலயத்தில்தான் சேருவேன். நான் சீரியசான தொழில்காரன்.

மற்றப்படி முழுநேர வேலைக்கு நான் போவது நடக்காத காரியம். பல ஆஃபர்கள் வந்தன. நான் மறுத்து விட்டேன். இந்த சுதந்திரம் எனக்கு முக்கியம்.

இப்பதிவு போட்ட பிறகு ஆறாவது காலாக சென்னை ஏஜன்சி ஒன்றிலிருந்து இதே வேலைக்காக ஆஃபர் கேட்டு வந்தது. பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Jay said...

வாழ்கை மிகவும் அற்புதமயமானது!

dondu(#11168674346665545885) said...

@Jay
நிச்சயமாக. வாழ்கை மிகவும் அற்புதமயமானது!

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது