செக்சன் 498-A சம்பந்தமாக வரும் வழக்குகளில் பல அந்தப் பிரிவை துர் உபயோகம் செய்தே போடப்படுகின்றன என்ற கான்சப்டில் போடப்பட்ட இப்பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை இங்கு இடுவதற்கு முன்னால் அப்பதிவைப் பற்றி ஒரு அறிமுகம்.
முக்கியமாக வரதட்சணைக் கொடுமை மற்றும் பெண்கள் படும் மன உளைச்சலுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இப்பிரிவை பலர் துர் உபயோகம் செய்வதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அதை பற்றி எல்லோருக்கும் சரியான பிரக்ஞையையும் உருவாக்கல் வேண்டும்தான். அதிலும் மாற்று கருத்துக்கு இடம் இல்லை. ஆனால் நான் மேலே குறிப்பிட்டப் பதிவில் அந்த காரியத்தை முரட்டுத்தனமாக செய்ய நினைப்பதுதான் வெளியே தெரிகிறது.
இப்போது அப்பதிவில் கூறப்பட்ட செய்தியையும் எனது பின்னூட்டத்தையும் பார்ப்போம்.
முதலில் பதிவின் சில பகுதிகள்:
“திருநெல்வேலியைச் சேர்ந்த பவானி என்னும் 38 வயதுள்ள இந்து, தமிழ், பிராமின், ஐயர் பெண்மணிக்கு, ஜெண்டிலான, ஒத்துப் போகக்கூடிய, கடவுள் பக்தியுள்ள, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய, குடும்பப் பாங்கான கணவன் வேண்டுமாம். “மேரே ஜீவன் சாத்தி" என்னும் வலைத்தளத்தில் தன் ஃபோட்டோவையும் போட்டு விளம்பரம் கொடுத்துள்ளாள். அவளைப் பற்றி அந்த விளம்பரத்தில் கொடுத்துள்ள விவரத்தைக் காணுங்கள்:-
“அவளுடைய சொந்த பிசினஸ் நன்கு நடந்து வந்த வேளையில் திருமணம் நடந்தது. பிறகு மணவாழ்விலிருந்த பிரச்னையால் பிசினசைக் கவனிக்க முடியவில்லை.
விவாகரத்து பெற்ற அவள் இனி பிசினசை பெருக்கி நடத்தவோ, அல்லது வேறு வேலை பார்க்கவோ, அல்லது வீட்டு வேலை பார்த்துக்கொண்டு வீட்டோடு இருக்கவோ ரெடி. இயல்பில் அவள் மிகவும் ஒத்துப் போகக்கூடிய, புரிந்து கொண்டு அனுசரிக்கக் கூடிய,அக்கரையுடன் நலம் பேணக்கூடிய, குடும்பப் பாங்கான, கடவுள் பக்தியுள்ள, அனைத்து குடும வேலைகளும் தெரிந்த நல்ல பெண்."
சரி. அடுத்து அவள் கொடுத்திருக்கும் தன் "நல்ல குணங்களை"ப் பற்றிய சான்றுகளைப் பாருங்கள்:-
"அவளுடைய முந்தைய திருமணம் முறிந்ததற்குக் காரணம் அவளுடைய பொறுப்பற்ற, அக்கறையற்ற கணவன்தான். அவனும் அவனுடைய குடும்பத்தினரும் மிகவும் கொடுமைப் படுத்தினார்கள்.
மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு "இருவரும் ஒப்புதலளித்த" (Mutual consent) விவாகரத்து நிகழ்ந்தது. 2002-ல் கணவனிடமிருந்து பிரிந்தவள் 2004-ல் விவாகரத்து பெற்றாள்.
முந்தைய கணவனுக்குப் பிறந்த குழந்தையைப் பார்க்க அதன் தந்தைக்கு எந்த உரிமையும் இல்லை. அவனுடன் எந்த தொடர்பும் என் குழந்தைக்கு நான் அனுமதிக்கவில்லை. அந்தக் குழந்தையைப் பொறுத்தவரை தன் தந்தை யார் என்பதே அவளுக்குத் தெரியாது. தந்தை என்று ஒரு உறவு உள்ளது என்பதே அவளுக்குத் தெரியாமல் அவள் வளர்க்கப்பட்டுள்ளாள். ("As far as the child is concerned, she has no idea who her father is, and has never been made aware of fatherhood.")"
எப்படிப் போகிறது கதை! நிசசயம் அவள் Sec 498A of IPC, மற்றும் என்னென்ன சட்டங்கள் உண்டோ எல்லாவற்றைய்ம் அந்தக் கணவன் மற்றும் அவனுடைய பெற்றோர்கள் மேல் போட்டுத் தாக்கி, ஏராளமான பணத்தைய்ம் கறந்து கொண்டு விவாகரத்து பெறிருப்பாள்”.
பதிவர் வெறுமனே விளம்பரத்தைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார். ஒரு பெண்மணியை மரியாதையாகக் கூட குறிப்பிடாது அவள் என்று ஒருமையில் கூறியுள்ளார். இந்த காண்டக்ஸ்டில் அவர் என்று சொல்லக்கூட மனம் இல்லை. மேலும் அப்பதிவில் தரப்பட்டுள்ள சுட்டிக்கு போனால் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “The natural father of the child does not have any visiting rights at all, nor any other contact (maintenance, alimony, or any other right over the child)”. ஆக ஜீவனாம்சமோ, பராமரிப்புக்காகவோ முந்தைய கணவனிடமிருந்து ஒரு தொகையும் பெற்றதாகத் தெரியவில்லை.
அதைவிட மோசமான விஷயம் என்னவென்றால் அப்பெண்ணின் முழு அடையாளங்களையும் தரும் சுட்டியையும் தருகிறார். இதைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அப்பெண்மணியை பற்றி ஒருவிஷயமும் தெரியாது அனுமானங்களின் அடிப்படையில் இவர் எழுதியிருப்பது பொறுப்பற்ற அவதூறு என்பதைத் தவிர வேறு எதுவும் கூற இயலவில்லை. இப்போது எனது பின்னூட்டத்துக்கு வருவோம்:
“//நிசசயம் அவள் Sec 498A of IPC, மற்றும் என்னென்ன சட்டங்கள் உண்டோ எல்லாவற்றைய்ம் அந்தக் கணவன் மற்றும் அவனுடைய பெற்றோர்கள் மேல் போட்டுத் தாக்கி, ஏராள பனத்தைய்ம் கறந்து கொண்டு விவாகரத்து பெற்றிருப்பாள்//.
இதுதான் உண்மையா அல்லது உங்கள் அனுமானமா? இந்த கேஸ் பற்றி ஏதேனும் தனிப்பட்ட முறையில் தகவல் தெரியுமா? தெரியாது என்றால் இவ்வாறு எழுதுவது என்ன நியாயம் என நினைக்கிறீர்கள்”?
அதற்கு அவர் தரும் சப்பைக்கட்டு பதில்:
“ஒரு குழந்தைக்கு அதன் தகப்பனை கண்ணிலோ கருத்திலோ காண்பிக்காமல் தந்தை என்று ஒருவன் இருக்கிறான் என்பதே தெரியாமல் அவளை வளர்த்துள்ளேன் என்று ஒரு தாய் பெருமையாக அறைகூவுவது உங்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. ஆனால் அந்தப் பெண் தந்துள்ள விவரங்களின் அடிப்படையிலும், அன்றாடம் ஆயிரக்கணக்காக இது போன்று பொய் வழக்குகளைப் போட்டு காசு பிடுங்கி mutual consent divorce பெறும் நிகழ்வுகளாலும் இது ஒரு steriotype என்று உரைத்தால் "ஆதாரம் எங்கே" என்று கேட்கிறீர்கள். இதுதான் typical faminiazi attitude. இது போன்ற அணுகுமுறைதான் இப்போது நம் நாட்டு இளைஞரிடையே திருமணம் என்றாலே ஒரு வெறுப்பைத் தோற்றுவிக்கும் நிலைக்குக் கொணர்ந்துவிட்டது.
உங்களுக்கு நான் சொல்வது முழுதும் புரிய வேண்டுமெனில் ஒரு நாள் சென்னையிலுள்ள family court-க்கு சென்று பாருங்கள் அல்லது http://mynation.net/ , http://saviindianfamily.org/ போன்ற வலைத்தளங்களுக்குச் சென்று பாதிக்கப்பட் கணவர்கள் மற்றும் அவர்களுடைய வயதான தாயார் ஆகியோரது புலம்பல்களைக் கேளுங்கள்”. அதற்கு எனது பதிலை இங்கே தருகிறேன். “நீங்கள் ஆயிரம்தான் சொன்னாலும் இந்த கேஸை பொருத்தவரை உங்களுக்கு உண்மை விவரம் ஏதும் தெரியாமல் இப்படித்தான் நடந்திருக்கும் என்று எழுதுவது கண்டிப்பாக தவறுதான். பல தவறான உதாரணங்களை எவ்வளவு நீங்கள் பார்த்திருந்தாலும் இந்த ஒரு விஷயத்தில் நீங்கள் தவறியது தவறியதுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
13 hours ago
58 comments:
Sir,
Do you think that those middle aged ladies should not get a second innings in life?
Even IPC clearly states that, a jailed convict can be pardoned and paroled, if he or she, understand the heinous crime that led to jail term... if the person does not become a menace to the society. This is apart from Goondas Act, which clearly says, you can keep of unwanted social elements, who are perceived to be trouble for society, who might not set a good example etc... (may be all politicians... connections?)
So the constitution protect every Indian. Those ladies should be given a better life and chance.
Whomsoever wrote that, might have been a person, who got affected badly.
I saw a person on Rose, who cried all along... was working in Gulf, who got affected by this.
Well there was only one side of story played on air, his version.
If that ladies anguish, or may be her long separation could have traumatized (ref Schizophrenia) for her to believe something is wrong isnt it?
Finally, marriage as an institution... never understood from our Indian society on what is needed... give and take... can you write on it, based on your family experience, without giving any names? (expectation, selection and life)
நம்ம ஆளுங்க தான் தெருவில ஒட்டியிருக்கிற போஸ்டர பார்த்தே படத்தோட கதையை சொல்லிருவாங்களே!
இதுக்காவது அவர்களோட கற்பனை சக்தி பயன்படுதேன்னு சந்தோஷ்ப்படுங்க
வரதட்சனை கொடுமைச் சட்டங்களும்,வன்கொடுமை தடுப்புச் சட்டங்களும்,பாலியல் பலாத் கார தடுப்புச் சட்டங்களும், திண்டாமை ஒழிப்பு சட்டங்களும் பலரால் தவறாய்
பயன்படுத்தத் தொடங்கியுள்ள காலம் இது.
காலம் கலிகாலம்
அதுவும் முற்றிப் போச்சாம்
பகவான் தான் நம்மை காப்பாற்ற வேண்டும்.
இப்போ உள்ள பேஷன்:
நடுத்திரக் குடும்பங்களில் வயதான கனவனை(retired persons having less income) அவரது மனைவிகள் கோபமாய் ( முதல் மனைவி தான்)பேசும்
பேச்சும் ஏச்சும் காது கொண்டு கேட்க முடியவில்லை.
இன்று பேரூந்தில் ஒரு சம்பாஷனை:
பேரூந்தில் ஏறிய ஒரு வயதான தம்பதியர்.(பார்ப்பனர் போல் தெரிந்தது-பேச்சை வைத்து).கூட்டம் அதிகம் அதனால் உட்கார சீட் கிடைக்கவில்லை.
மனைவி( சுமாரான அழகுதான்):
கூட்டத்தை பார்த்து பஸ்ஸில் ஏற வேண்டமா வோய், எத்தனை தர சொல்றது( கோபமாய்)
கணவன் : அசடு வழிகிறார்
மனைவி: மரம்மாதிரி மச மசன்னு நிற்க்காதிங்கோ,பேய் பின்னால் இடமிருக்க பாரூம் வோய்.
( அவர் மாமிக்கு ஆதரவாய் பக்கத்தில் நிற்க) மிண்டும் கோபத்துடன் மனைவி
எனக்கு ஒன்னும் ஆகாது நீர் போரும்( முகத்தை கடு கடுப்பாய் வைத்துக் கொண்டு)
இது ஒரு சாம்பிள்தான்
நல்ல நாகரிகத்திற்கும்,
உயர் பண்புக்கும்,
நற்குணத்துக்கும்,
மேன்மையான ஆசாரத்திற்கும்,
ஆழ்ந்த பக்திக்கும்,
பழி பாவத்துக்கு அஞ்சும் குணத்திற்கும்
மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் எண்ணப்படும்
( இந்த வார்த்தைக்கு திராவிடக் கட்சி ஆதரவாளர்கள் பின்னிப் பெடல் எடுக்கப் போறாங்கா- டோண்டு சார் தான் காப்பற்றனும்)
பார்ப்பனர் தம்பதியே இப்படி என்றால்
டோண்டு ராகவன் அவர்களின் தீர்ப்பென்ன?
ஒரு பட்டி மன்றம் தொடங்கலாமே
நடுவர்: டோண்டு சார்
ஒரு அணித் தலைவர்:குப்புக் குட்டி சார்
மற்றொரு அணித் தலைவர்: சாத்தப்பன் சார்
முன்னிலை: வால்பையன் சார்
//நடுவர்: டோண்டு சார்
ஒரு அணித் தலைவர்:குப்புக் குட்டி சார்
மற்றொரு அணித் தலைவர்: சாத்தப்பன் சார்
முன்னிலை: வால்பையன் சார் //
நானெல்லாம் குழந்தைக்க
என்ன போய் முன்னாடி நிக்க வச்சிருக்கிங்க
அவ்வ்வ்வ்வ்வ்
//வால்பையன் said...
//நடுவர்: டோண்டு சார்
ஒரு அணித் தலைவர்:குப்புக் குட்டி சார்
மற்றொரு அணித் தலைவர்: சாத்தப்பன் சார்
முன்னிலை: வால்பையன் சார் //
நானெல்லாம் குழந்தைக்க
என்ன போய் முன்னாடி நிக்க வச்சிருக்கிங்க
அவ்வ்வ்வ்வ்வ்//
பங்கு வணிகத்தில் வால்பையன் புலி என டோண்டு ஐயா அவர்கள் ஒரு விவாதத்தில் சொன்னதாய் நினைவு.
கல்யாணப் பரிசில்
தங்கவேலு சொன்ன மாதிரி
இருக்கிற திறமையயை சொல்ல விடமாட்டாங்கிராங்களே சாமி
//பங்கு வணிகத்தில் வால்பையன் புலி என டோண்டு ஐயா அவர்கள் ஒரு விவாதத்தில் சொன்னதாய் நினைவு.//
அதான் பங்கு வணிகத்துல இருக்கிற எல்லா புலிக்கும் கொட்டை எடுத்து விட்டாங்களே!
எனக்கு டவுசர் தப்பியது தம்பிரான் புண்ணியம்
நான் இருக்கிறது கமாடிடி மார்க்கெட்
www.tradeinmetals.co.cc
// வால்பையன் said...
//பங்கு வணிகத்தில் வால்பையன் புலி என டோண்டு ஐயா அவர்கள் ஒரு விவாதத்தில் சொன்னதாய் நினைவு.//
அதான் பங்கு வணிகத்துல இருக்கிற எல்லா புலிக்கும் கொட்டை எடுத்து விட்டாங்களே!
எனக்கு டவுசர் தப்பியது தம்பிரான் புண்ணியம்
நான் இருக்கிறது கமாடிடி மார்க்கெட்
www.tradeinmetals.co.cc//
வால்பையன் சார்
கச்சா எண்ணெய் 147 டாலராய் இருக்கும் போது 200 டாலருக்கு போகும் எனத் தவறாய் கணித்து
6 மாத தேவைக்கு பல நாடுகள் பணத்தை டாலராய் முடக்கியதால் தான் இந்த பொருளாதார நெருக்கடி உண்மையா?
கச்சா எண்ணெய் 25-35 டாலருக்கு வருமாமே நம்பலாமா?
உணவுப் பொருட்களின் விஷ விலை ஏற்றத்துக்கு காரணம் இந்த யூக வணிகம் உண்மையா?
//வால்பையன் சார்
கச்சா எண்ணெய் 147 டாலராய் இருக்கும் போது 200 டாலருக்கு போகும் எனத் தவறாய் கணித்து
6 மாத தேவைக்கு பல நாடுகள் பணத்தை டாலராய் முடக்கியதால் தான் இந்த பொருளாதார நெருக்கடி உண்மையா?
கச்சா எண்ணெய் 25-35 டாலருக்கு வருமாமே நம்பலாமா?
உணவுப் பொருட்களின் விஷ விலை ஏற்றத்துக்கு காரணம் இந்த யூக வணிகம் உண்மையா?
//
கச்சா எண்ணையால் தான் பெரும் பொஏஉலாதார சரிவு ஏற்ப்பட்டது உண்மை,
நிதி நிறுவனங்கள் சும்மா இல்லாமல் மக்களை உசுபெத்தி இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டார்கள்.
கச்சா எண்னையின் விலை குறைவுக்கு முதல் காரணம் யூக வணிகத்தில் அதற்கு இருந்த மார்ஜின் பணத்தை உயர்த்தியதே!
இந்திய அளவில் அது இன்றும் 10% மட்டுமே, உலக அளவில் அது 50% மாக உயர்ந்து விட்டது.
வரும் 17-ம் தேதி ஓபெக் விலை குறைவின் காரணமாக தனது உற்பத்தியில் 2 மில்லயன் பேரல்களை குறைக்கிறது, இது ஒரு நாளைக்கு, கச்சா எண்ணையின் விலை லாபம் தரும் அளவுக்கு மீண்டும் உயரும் வரை இது நீடிக்கும் என்று எச்சரிக்கை தந்துள்ளார்கள்.
தற்போதய விலை 43.75 டாலர், விரைவில் 75 டாலராக உயர வாய்புண்டு.
நீண்ட கால முத்லீடாக கச்சா எண்னை மற்றும் காப்பரை நம்பலாம்.
மற்றவைகள் மேலும் இறக்கத்தை சந்திக்கலாம்.
உணவு பொருள்களின் விலையேற்றத்துக்கு யூக விணிகம் காரணமில்லை, பெட்ரோலிய பொருள்களின் விலையுயர்வே அதற்கு காரணம்,
அதாவது வரப்புயர நீர் உயர்வது போல்
பெட்ரோல் விலையுயர எல்லாம் உயர்ந்து விட்டது.
வாய்ப்பளித்தமைக்கு நன்றி
As a father i would not want my daughter to walk out of my Home naked.
Dowry per se is not wrong.
Only because of some avaricious parents and brothers of Girls who want to throw their daughter out at the mercy of her husband are denying her rightful share
The blogger tamil498a.blogspot.com has highlighted the sorry state of affairs where a Child was brought up by its own mother not making the child aware who its father is therby bastardizing her own son.She was in fact proud of her act in public domain. Every child has a right to know who its mother or father is even if the mother is prostitute and father is a Murderer. He preceived that such a women would have filed 498a against her husband.
அய்யா, நான் பதிவு உலகத்துக்கு பரிச்சயமாகியே இரண்டு மாசம் தான் ஆகுது. அதிலும் இருபது நாளா தான் பின்னூட்டம் இடுறேன்.
அதுக்குள்ளே டோண்டு சார் என்னன்னா ஒரு தனிப் பதிவு போடறாரு! நீங்க குப்புக் குட்டி இல்லாம பின்னூட்டம் இடுவதே இல்லைன்னு வச்சுகிடீங்க (ராமசாமி -ன்ற பேரில் வருகிறவர் இன்று சாதா அனானியாக வந்திருப்பதாக யூகிக்கிரேன்)
நான் கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவன். அட்ரஸ் இல்லாத ஆளு. பதிவு அரசியல் பார்த்து பயந்து தான் தான் வெறும் அனானியாவே சுத்திகினுகிறேன். ஏன்னா வம்பு வாக்குவாதம் எனக்கு ஆவாது (சுரம் வந்துடும்).
ரெண்டு நாளா நான் போட்ட பின்னுட்டாங்களைப் படித்த என் மனைவி, வலையில் போயும் வம்பா, இனி இரண்டு லைன்-க்கு மேல எழுதக் கூடாதுன்னு சொல்லியிருக்கிறார். இது தான் நான் இடும் கடைசி மெகாப் பின்னூட்டம். நான் மனைவி சொல்லைத் தட்டுவதில்லை. நாம் வாழும் வாழ்க்கை இரண்டு பேருக்குமானது, இதைப் புரிந்து கொண்டால் எந்த சட்டமும் நம் குடும்பத்தில் நுழையாது. கணவனுக்கு மனைவி பயப்படுவதோ அல்லது மனைவிக்கு கணவன் பயபப்டுவதோ ஒன்றும் கேவலமானது அல்ல. இங்கே பயம் என்ற வார்த்தையே தவறு. சரியான வார்த்தை அனுசரிப்பது.
அதற்காக மாடு மாதிரி தலை ஆட்ட வேண்டும் என்று பொருள் கொள்ள வேண்டியதில்லை. நான் கூறுவது அறிவுப் பூர்வமான அனுசரிப்பு.
கணவனோ மனைவியோ யாருக்கு அந்த சப்ஜெக்ட்டில் அறிவும் ஆளுமையும் உள்ளதோ அதை அவர்கள் கையாள அனுமதித்தால் அது குடும்பத்துக்கு சிறப்பு சேர்க்கும்.
இந்த பதிவே விசாரிக்காமல் எழுதாதே என்பது தான். ஆனால் இந்த சதா அனானி எப்படி அப்படி முடிவுக்கு வந்தார் எனப் புரியவில்லை. மனவி அழகாக இருந்தால் அவர் சிடுசிடுக்கலாம் என்கிறாரோ ! அய்யா ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் அழகில்லா விட்டாலும் அன்பிருக்கும், எரிந்து விழுந்தாலும் அன்பிருக்கும். அவர்களுடைய அண்டர்சடாண்டிங்க-ஐ பற்றி உங்களுக்கு என்ன தெரியும்.
சாதா அனானி-க்கு கச்சேரி இன்னும் முடியலை, அடுத்த பதிவில் தொடரும்.
அந்த பதிவுக்கு அப்பறம் குப்புக் குட்டி-ன்னா குறள் மாதிரி இரண்டு லைன் தான்.
அன்பு நண்பன் (சாத்தப்பன் சார் கிட்ட கத்துகிட்டது)
குப்புக் குட்டி
பின் குறிப்பு:
பட்டி மன்றத்துக்கு வேணும்னா இந்த சினிமா பட்டை எல்லாம் வச்சு கேள்வி கேட்டாரே அவரைக் போட்டுக்குங்க, லியோனி எபக்ட் கிடைக்கும் ஆமா பாடுவார் இல்ல.
//உணவு பொருள்களின் விலையேற்றத்துக்கு யூக விணிகம் காரணமில்லை,//
இது தவறான கருத்து...
ஆனா இங்கெ அதப் பத்தி பேசலாமான்னு தெரியலை. பதிவு வேறெதப்பத்தியோ இருக்கு. டோண்டு சார் அனுமதிச்சாலோ வால் சார் தனியா பதிவு போட்டாலோ இதப்பத்தி விவாதம் செய்யலாம்
- புரளி மனோகர்
//கச்சா எண்னையின் விலை குறைவுக்கு முதல் காரணம் யூக வணிகத்தில் அதற்கு இருந்த மார்ஜின் பணத்தை உயர்த்தியதே!
இந்திய அளவில் அது இன்றும் 10% மட்டுமே, உலக அளவில் அது 50% மாக உயர்ந்து விட்டது//
வால் பையன் அவர்களின் விரிவான விளக்கத்திற்கு நன்றி.
இந்தியாவிலும் நேர்மையான பங்கு வணிகம் வேண்டுமென்றால்
கையில் பணமிருந்தால் வாங்கு இல்லாவிட்டால் ஒடு.அதாவது 100 % மார்ஜின் இது சாத்யமா?
23000 க்கு சென்று இன்று 8500-9500க்கும் இடையெ ஊசலாட்டம்.நிதி அமைச்சகம் மற்றும் அரசின் அதிரடி அறிவிப்புகள் ஐ.சி.யு ல் இருக்கும் பங்கு வணிகத்திற்கு
1.ரத்தம்-ரெபொ ரேட் குறைப்பு ( 9% லிருந்து 5 .5 %)
2.ஆக்ஸிசன்- தாராள பணப்புழக்கம்( 2 லட்சம் கோடி)
3.மருந்து,மாத்திரைகள்- அரசின் 4 %சென்வாட் வரி குறைப்பு, பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு
4.குளுகோஸ்-செலைன்- அந்நிய முதலிட்டில் கண்டுக் கொள்ளாத் தன்மை.
உள்ளே வெளியே/மங்காத்தா/3 சீட்டு, நாக் அவுட் போல் பங்கு வணிகத்தை ஆக்கிவிட்டார்களே.
இந்தியாவில் நிலவும் பொருளாதர நெருக்கடி மறைக்கப் படுகிறது.
அநேகர் வேலை இழக்கும் ஆபத்தில் உள்ளனர்.
எல்லாத் துறைகளிலும் மெளனத்துடன் ஒரு சுணக்கமான தேக்கம்.
மாதத்திற்கு 300 க்கு மேல் விற்பனை இப்போது 30
அரிசி விலை ஒரு கிலோ ரூபாய் 50ஐ தாண்டி 100 தொடும் போல்
தெரிகிறது.
காய்கறி விலையோ கேட்கவே வேண்டாம்.
ஒரு மேல் நாட்டு பொருளாதார ஆர்வலர் சொன்ன ஒரு தகவல்.
இன்னும் 10-15ஆண்டுகளில்( 2020 வாக்கில்
மனிதனுடய மொத்த வருமானமும் அவனது உணவு/உடை/இருப்பிடம்( வாடகை)ஆகியவ்ற்றிற்கே பற்றக்குறை
ஆகிவிடும்
அதனால் மனை விலை,ஆடம்பரப் பொருட்களின்விலை பெரும் வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்புள்ளது.
இப்போது ஏறிவரும் விலைவாசி/வீட்டு வாடகை பார்க்கும் போது !
//Finally, marriage as an institution... never understood from our Indian society on what is needed... give and take... can you write on it, based on your family experience, without giving any names? (expectation, selection and life)//
ரொம்பவும் பெரிய சீரியசான விஷயத்தை கேட்டுள்ளீர்கள். இது பற்றி எழுத மிகுந்த உழைப்பு தேவைப்படும். நேரம் கிடைக்கும் போது முயற்சிக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
////Anonymous said...
//உணவு பொருள்களின் விலையேற்றத்துக்கு யூக விணிகம் காரணமில்லை,//
இது தவறான கருத்து...
ஆனா இங்கெ அதப் பத்தி பேசலாமான்னு தெரியலை. பதிவு வேறெதப்பத்தியோ இருக்கு. டோண்டு சார் அனுமதிச்சாலோ வால் சார் தனியா பதிவு போட்டாலோ இதப்பத்தி விவாதம் செய்யலாம்
- புரளி மனோகர்//
manoharin nalla manamarraththirku
paarattukkal
dOndu aiyaavidam karuththuch suthantthiram tharaalam
ONE EMAIL RECEIVED FROM MY FRIEND
( JUST FOR FUN-DONT THINK OTHERWISE)
A man with a gun goes into a bank and demands their money.
Once he is given the money, he turns to a customer and asks, 'Did you see me rob this bank?'
The man replied, 'Yes sir, I did.'
The robber then shot him in the temple , killing him instantly.
He then turned to a couple standing next to him and asked the man, 'Did you see me rob this bank?'
The man replied, 'No sir, I didn't, but my wife did!'
Moral - When Opportunity knocks.... MAKE USE OF IT !
1. பா.ஜ.க வின் ஆட்சிக் கனவு அவ்வளவுதானா?
2.துகளக் சோ அவர்களின் முயற்சி அம்மையார் ஜெ யிடம் எடுபடவில்லையே?
3.அஞ்சா நெஞ்சன் அழகிரி-சன் சகோதரர்கள் சமரசம் ,ஆனால் கனிமொழி கருனாநிதி கடும் கோபத்திலாமே?
4.சசிகலா-ராஜாத்தி அம்மாள் சந்திப்பு புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா?
5.சோதிடர்களின் கணிப்பு படி மீண்டும் சோனியா அம்மையாரின் ஆட்சி தொடரும் போலுள்ளதே-2009 -2014?
//இந்த பதிவே விசாரிக்காமல் எழுதாதே என்பது தான். ஆனால் இந்த சதா அனானி எப்படி அப்படி முடிவுக்கு வந்தார் எனப் புரியவில்லை. மனவி அழகாக இருந்தால் அவர் சிடுசிடுக்கலாம் என்கிறாரோ ! அய்யா ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் அழகில்லா விட்டாலும் அன்பிருக்கும், எரிந்து விழுந்தாலும் அன்பிருக்கும். அவர்களுடைய அண்டர்சடாண்டிங்க-ஐ பற்றி உங்களுக்கு என்ன தெரியும்.//
குப்புக்குட்டி சார் அந்த உரையாடல் முழுவதையும் எடிட் பண்ணி சொல்லியிருந்தேன்.
ஒரு செய்தி படியுங்கள்
அப்பாவிக் கணவர் கொஞ்சம் தாமதமாய் ,பின்னால் காலி இடம் இருக்கா என்று பார்க்கப் போனதால் (பிரயாணம் முழுவதும் நிற்பாசனம் தான்)
மனைவியின் கோபம் விசுவாமித்திரரையும் மிஞ்சியது
இந்த உதவாக்கரை மனுசாளை,அம்மாஞ்சியை என் தலையில் கட்டிட்டாளே, பெருமாளே
நான் போன ஜென்மத்தில் என்ன பாவம் பண்ணினேனோ?இந்தாளுடன் இன்னும் எவ்வளவு நாள் குப்பை கொட்டனுமோ பகவானே!
குப்புக் குட்டியின் கச்சேரி தொடரட்டும்
பதிவுலகத்திற்கு புதிது என்றாலும்
உங்களுக்கு நன்றாய் எழுத வருகிறது
அதுவும் சாத்தப்பன் சாருக்கு (உங்கள் நண்பர்- கட்டிப்பிடி வைத்தியம்) பதிலடியாக ஒரு கதை சொன்னீங்களே
பிரமாதம்.
ஒரு பத்திரிக்கையில் வந்த தகவல்.
உண்மையா? கற்பனையா ? தெரியாது.
ஒரு பிரபல பத்திரிக்கை குடிசைவாழ்,நடுத்திர வர்க்கம்,பங்களா வாசிகள்,கோடீஸ்வரர் முதலிய குடும்பங்களை சேர்ந்த 100 தம்பதிகளை ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு அழத்துச் சென்று மெகா விருந்து கொடுத்துவிட்டு,கணவன் மார்களையும்,மனைவிமார்களையும் தனித் தனியாக அழைத்து ஒரு கேள்வி பதில் உள்ள சீட்டை கொடுத்து நிரப்பச் சொன்னார்களாம்.
அந்த ஒரு மில்லியன் டாலர் கேள்வி
இப்படி கற்பனை செய்து கொள்ளவும்.
இன்றிலிருந்து நீங்கள் கனவன் மனவி இல்லை.
மீண்டும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப் பட்டால் இதே நபரை(same spouse) கணவன்/மனைவி ஆக மீண்டும் வாழ்க்கைத் துணைவராய் ஏற்றுக் கொள்ள சம்மதிப்பீர்களா? கட்டாயம் எதும் இல்லை.
என்ன பதில் சொல்லியிருப்பார்கள்?
குப்புக் குட்டி சாரின் பதிலுக்கு பிறகு
அந்த யாரும் எதிர் பார்க்காத பதிலை சொல்லுகிறேன் ஐயா.
சாத்தப்பன் சார் வேலைப் பளு அதிகமா?
உங்கள் நண்பர் குப்புக்குட்டி சார் சார்பில் நீங்களும் பதில் சொல்லலாமே!
//அப்பாவிக் கணவர் கொஞ்சம் தாமதமாய் ,பின்னால் காலி இடம் இருக்கா என்று பார்க்கப் போனதால் (பிரயாணம் முழுவதும் நிற்பாசனம் தான்)
மனைவியின் கோபம் விசுவாமித்திரரையும் மிஞ்சியது
இந்த உதவாக்கரை மனுசாளை,அம்மாஞ்சியை என் தலையில் கட்டிட்டாளே, பெருமாளே
நான் போன ஜென்மத்தில் என்ன பாவம் பண்ணினேனோ?இந்தாளுடன் இன்னும் எவ்வளவு நாள் குப்பை கொட்டனுமோ பகவானே!//
super imaginary narration
BJP has got 39 % votes
congress has got only 37 % votes
in Rajasthaan.
But the no of seats won by congress is 96.
what is your comment?
will the same trend repeat in next general election also ?
ramakrishanahari said...
//அப்பாவிக் கணவர் கொஞ்சம் தாமதமாய் ,பின்னால் காலி இடம் இருக்கா என்று பார்க்கப் போனதால் (பிரயாணம் முழுவதும் நிற்பாசனம் தான்)
மனைவியின் கோபம் விசுவாமித்திரரையும் மிஞ்சியது
இந்த உதவாக்கரை மனுசாளை,அம்மாஞ்சியை என் தலையில் கட்டிட்டாளே, பெருமாளே
நான் போன ஜென்மத்தில் என்ன பாவம் பண்ணினேனோ?இந்தாளுடன் இன்னும் எவ்வளவு நாள் குப்பை கொட்டனுமோ பகவானே!//
super imaginary narration//
கற்பனை கலவாத உண்மைத் தகவல்
பேரூந்து தடம்: சேலம் டூ கோவை by pass rider
நாள்:08-12-2008
நேரம்: 10 to 1100 a.m
பக்கத்தில் இருந்ததால் வரிக்கு வரி அவர்கள் சம்பாஷனையைத்தான் எழுதியுள்ளேன்.
பாரதப் பிரதமர் மந்திரிசபை மாற்றத்திற்காக குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் என்பது செய்தி
கனிமொழி/தயாநிதி/அழகிரியின் அன்பு மகள்
யாருக்கு பதவி யோகமோ?
யாருக்கு கல்தாவோ/
டோண்டு ஐயாவின் கணிப்பு என்ன?
பதில் உடனே தந்தால் நலம்.
////உணவு பொருள்களின் விலையேற்றத்துக்கு யூக விணிகம் காரணமில்லை,//
இது தவறான கருத்து...
ஆனா இங்கெ அதப் பத்தி பேசலாமான்னு தெரியலை. பதிவு வேறெதப்பத்தியோ இருக்கு. டோண்டு சார் அனுமதிச்சாலோ வால் சார் தனியா பதிவு போட்டாலோ இதப்பத்தி விவாதம் செய்யலாம்
- புரளி மனோகர் //
இதனை பற்றி நான் எழுதிய இரண்டு பதிவுகளை இங்கே தருகிறேன்.
சுருக்கமாக ஒரு விளக்கம். யூக வணிகம் பத்து வருடமாக இருக்கிறது.
ஆனால் விலைவாசி என்னமோ இந்த பத்து வருடமாகத் தான் ஏறுகிற மாதிரி பேசுவதை தான் புரிந்து கொள்ல முடியவில்லை,
”சமீபத்திய” நாயகன் டோண்டு சாரிடமே கேட்போன்.
அவருடய அனுபவத்தில் ஒவ்வோரு பத்து வருடத்துக்கும் விலைவாசி எப்படி உயர்ந்தது என்று?
பதிவு 1
பதிவு 2
//கனிமொழி/தயாநிதி/அழகிரியின் அன்பு மகள்//
மத்திய அரசில் திமுக மட்டும்தான் கூட்டணிக் கட்சியா என்ன?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நல்ல நாகரிகத்திற்கும்,
உயர் பண்புக்கும்,
நற்குணத்துக்கும்,
மேன்மையான ஆசாரத்திற்கும்,
ஆழ்ந்த பக்திக்கும்,
பழி பாவத்துக்கு அஞ்சும் குணத்திற்கும்
மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் எண்ணப்படும்
( இந்த வார்த்தைக்கு திராவிடக் கட்சி ஆதரவாளர்கள் பின்னிப் பெடல் எடுக்கப் போறாங்கா- டோண்டு சார் தான் காப்பற்றனும்)
.))))))))
நளாயனி கதை பற்றி ?
//dondu(#11168674346665545885) said...
//கனிமொழி/தயாநிதி/அழகிரியின் அன்பு மகள்//
மத்திய அரசில் திமுக மட்டும்தான் கூட்டணிக் கட்சியா என்ன?
அன்புடன்,
டோண்டு ராகவன்
மற்றவர்கள் இருந்தாலும்
ஆட்சியின் லகான்
தலைவர் மு.க கையில் தானே.
சரி
யாருக்கு யோகம்,
யாருக்கு அல்வா
நாளை தெரிந்துவிடுமே!
//Vajra said...
நளாயனி கதை பற்றி ?//
சனி ஞாயிறுகளில் மென்பொருள் வல்லுனர்கள் அதிகம் உள்ள பெங்களுரில் போய்ப் பார்த்தால், அவர்கள் பற்றி வரும், மிகை படுத்தப் படும் செய்திகள்
நளாயினி கதையை யாரும் நம்புவார்களோ மாட்டார்களோ!
இப்போ லேட்டஸ்ட் பேஷன்
அனுபவி ராஜா அனுபவி
//சனி ஞாயிறுகளில் மென்பொருள் வல்லுனர்கள் அதிகம் உள்ள பெங்களுரில் போய்ப் பார்த்தால், அவர்கள் பற்றி வரும், மிகை படுத்தப் படும் செய்திகள்
நளாயினி கதையை யாரும் நம்புவார்களோ மாட்டார்களோ!
இப்போ லேட்டஸ்ட் பேஷன்
அனுபவி ராஜா அனுபவி//
ithuthaan male saavanishamaa
pona nurraandu aankalukku
intha nurraandu naveena nalayeenikalukku
vazhakkai sakkaram matri suzhaluthu
498 A வின் பதிவில், இதே போல பல விஷயங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆந்திராவில் தொடர் திருமணம் செய்து ஏமாற்றும் அம்மா, மகள் பற்றியது, கணவன் மற்றும் அவரது வீட்டிலுள்ள அனைத்து உறவினர்களின் மீதும் வழக்கு தொடுத்த கதை, இன்னும் ஒருபடி மேலே போய் கணவனின் தங்கை கணவர் மேலும் வழக்கு, வழக்கை விசாரித்து தீர்ப்பு சொல்ல தயாரானால், தீர்ப்பை எப்படியாவது தள்ளிபோட முயற்ச்சித்து, கணவன் வீட்டாரை ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்கு இழுத்தடித்து அவமானப்படுத்துவது என பல பிரச்சினைகளை குறித்து பதிவுகள் உள்ளன.
ஆனால், அவாளை குறித்து ஒரு செய்தியை வெளியிட்டவுடன், ஒரு முதிய பதிவர் இதை அனைத்து பதிவுகளோடு சேர்ந்த மற்றும் ஒரு பதிவாக பார்க்காமல் அலசி ஆராய்கிறார். அவரது பார்வையில் அவாளைப்பற்றிய இந்தப்பதிவு:
////ஆனால் நான் மேலே குறிப்பிட்டப் பதிவில் அந்த காரியத்தை முரட்டுத்தனமாக செய்ய நினைப்பதுதான் வெளியே தெரிகிறது.////
////பதிவர் வெறுமனே விளம்பரத்தைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார்.////
////ஒரு பெண்மணியை மரியாதையாகக் கூட குறிப்பிடாது அவள் என்று ஒருமையில் கூறியுள்ளார். இந்த காண்டக்ஸ்டில் அவர் என்று சொல்லக்கூட மனம் இல்லை////
////அதைவிட மோசமான விஷயம் என்னவென்றால் அப்பெண்ணின் முழு அடையாளங்களையும் தரும் சுட்டியையும் தருகிறார். இதைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அப்பெண்மணியை பற்றி ஒருவிஷயமும் தெரியாது அனுமானங்களின் அடிப்படையில் இவர் எழுதியிருப்பது பொறுப்பற்ற அவதூறு என்பதைத் தவிர வேறு எதுவும் கூற இயலவில்லை. ////
////“நீங்கள் ஆயிரம்தான் சொன்னாலும் இந்த கேஸை பொருத்தவரை உங்களுக்கு உண்மை விவரம் ஏதும் தெரியாமல் இப்படித்தான் நடந்திருக்கும் என்று எழுதுவது கண்டிப்பாக தவறுதான். பல தவறான உதாரணங்களை எவ்வளவு நீங்கள் பார்த்திருந்தாலும் இந்த ஒரு விஷயத்தில் நீங்கள் தவறியது தவறியதுதான்.////
ஆக மற்றவர்களைப்பற்றி எப்படி வேண்டுமானாலும் எழுதுங்கள். ஆனால் அவாளைப்பற்றி முதலாவது எழுதுவதே தப்பு, அப்படியே எழுதினாலும் மரியாதையுடன் எழுத வேண்டும், மேலும் அவாள் செய்வதெல்லாம் சரி என்றுதானே எழுத வேண்டும். அந்த மாண்புமிகு, கனம்பொருந்திய, கண்ணியம் மிக்க, லட்சுமிகரமான, குடும்பத்தின் குலவிளக்கான அம்மாள் செய்தது தவறு என எப்படி எழுதலாம்?
இதை சுட்டிக்காட்டினால், ந்மது பின்னூட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்படும். நம்மீது ஒரு முத்திரை குத்தப்படும்.
//இதை சுட்டிக்காட்டினால், ந்மது பின்னூட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்படும்.//
நீங்கள் என்னதான் வளைத்து வளைத்து எழுதினாலும் நான் குறிப்பிட்ட பதிவில் எழுதப்பட்டவை மேம்போக்காக கணித்து அவதூறாக எழுதப்பட்டவை. அப்பதிவராலும் அதை மறுக்க இயலவில்லை. நான் ஏற்கனவே கூறியதுதான். சரியாக கணிக்காது எழுதினால் இப்படித்தான் எதிர்வினைகள் வரும்.
எனது லேட்டஸ்ட் பதிவை பார்க்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
விசாரிக்காமல் ஒரு தனிப்பட்ட கேசை எழுதியது வேண்டுமானால் தவறு. ஆனால் இந்த சட்டம் மிகக் கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பது தான் உண்மை. பெண் பாதிக்கப்படும் போது மட்டுமல்ல ஆண் பாதிக்கப்படும் போதும் ஒரு குடும்பம் அல்லலுக்கும் அவஸ்தைக்கும் ஆளாகிறது. நம் குடும்ப கட்டமைப்பையே பல சமயம் தகர்த்து விடப் போகிறதோ என்ற ஐயமும் இருக்கிறது. பெண் குற்றம் சாட்டினால் அது கண்டிப்பாக உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதற்கு ஒரு கட்டுப்பாடு வேண்டும். பல மென்மையானவர்கள் இதனால் துன்பப் பட்டத்தை கண்ணால் பார்த்திருக்கிறேன்.
//ஆனால் இந்த சட்டம் மிகக் கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பது தான் உண்மை.//
நானும் அதைத்தான் கூறுகிறேன். முக்கியமாக வரதட்சணைக் கொடுமை மற்றும் பெண்கள் படும் மன உளைச்சலுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இப்பிரிவை பலர் துர் உபயோகம் செய்வதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அதை பற்றி எல்லோருக்கும் சரியான பிரக்ஞையையும் உருவாக்கல் வேண்டும்தான். அதற்காக இம்மாதிரியெல்லாம் வாயில் வந்தபடி எழுதினால் அவரது கேஸை அவரே பலவீனப்படுத்துவது போல ஆகாதா? அதுவும் இந்த கேசில் இப்பதிவின் காரணத்தால் அப்பெண்மணியை எவ்வளவு பேர் போனில் கூப்பிட்டு தொல்லை செய்யப் போகிறார்களோ தெரியவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆனால் எனது கேள்வியே உங்களுக்கு இந்த பெண்ணை பற்றிய எழுத்துகளின் மீது மாத்திரம் ஏன் அக்கறை வருகிறது, மற்ற பெண்களை பற்றிய செய்திகளில் நீங்கள் ஏன் அக்கறை கொள்வதில்லை?
இது என்ன கேள்வி தராசு. கண்ணில் இது பட்டது கேட்டேன். பதிவரும் தான் பொதுவாக எழுதியதை ஒத்து கொண்டது போலத்தான். மீதி ஆராய்ச்சிகள் அனாவசியம்தானே.
இப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தட்டிக் கேட்டதற்கு உங்களுக்கு ஏன் கோபம் வரவேண்டும் என்று நானும் கேட்கலாமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//dondu(#11168674346665545885) said...
இது என்ன கேள்வி தராசு. கண்ணில் இது பட்டது கேட்டேன். பதிவரும் தான் பொதுவாக எழுதியதை ஒத்து கொண்டது போலத்தான். மீதி ஆராய்ச்சிகள் அனாவசியம்தானே.
இப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தட்டிக் கேட்டதற்கு உங்களுக்கு ஏன் கோபம் வரவேண்டும் என்று நானும் கேட்கலாமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்//
அது தானே பகுத்தறிவிப் பகலவன்,ஈரோட்டுச் சிங்கம் தந்தை பெரியார் இவர்களுக்கு கற்றுக் கொடுத்த பாடம்
பாம்பையும் பார்பனையும் பார்த்தால்
பாம்பை விட்டு விடு
பார்ப்பனை அடி.
அதுவும் தராசுக்கு பார்ப்பனர்களை தாக்குவது என்றால் இனிப்பு சாப்பிடுவது போல
பதில் இன்னும் ஷார்ப்பாக கொடுத்திருக்கலாமே.
வால், சுட்டிக்கு நன்றி. உங்க பதிவுக்கு வர்றேன்.
- புரளி
//தமிழ் மணத்தில் உங்கள் பதிவு ஹிட் ஆக வேண்டுமா?
சுலபமான 10 வழிகள்:
5. இந்துவின் பெயரில் பதிவை ஆரம்பித்துவிட்டு இந்துத்துவத்தைபற்றி கேவலமாக எழுதுங்கள். சிலைவழிபாடுகள், நாட்டார் தெய்வங்கள், வருணாசிரமகொள்கைகள், மனுதர்மம், இன்னும் எதையெல்லாம் சொன்னால் ஒரு சர்ச்சை கிளம்பி குறைந்த பட்சம் ஒரு 70 பின்னூட்டமாவது கிடைக்குமோ அந்த வார்த்தைகளையெல்லாம் தேடிப்பிடித்து பதிவிடுங்கள்.
Posted by தராசு//
பார்ப்பன எதிர்ப்பு இதுக்கா?
முதல் பதிவுக்கு பின்னூட்டம் 32 க்கு எகிறி
டிச 6 - அருமையான ஆபத்துக் காலத்தில் பதிவுக்கு "0" பின்னூட்டம்.
Posted by தராசு at 5:53 PM 0 comments Links to this post
Labels: நெருக்கடி நேரங்கள்
மிச்சம் சொச்ச வழிகளை கடைப் பிடியுங்கள் தராசு .
ஆனால் பிராமண துவேசம் வேண்டாமே
அது இனி பலன் கொடுக்காது.
டோண்டு சார் அனாவசியமான ஆராய்ச்சிகள் வேண்டாம் என சொல்லிவிட்டார். அவரே ஒத்துக்கொண்டார், அவருக்கு இந்த ஒரு பதிவு தான் கண்ணில் பட்டுதாம். விஷயம் தெளிவாகி விட்டது. சரி, ஆராய்ச்சிகளை மூட்டை கட்டி வைப்போம்.
அண்ணே ஸ்ரீராம் அண்ணே!!!
கண்ணை திறந்து படியுங்கள். எனது பதிவுகளுக்கு யாரும் பின்னூட்டம் இடவில்லையென நான் அழுதேனா?? எனக்கு எந்த பிராமணன் மேலும் வருத்தம் கிடையாது அன்பரே, எந்து நலம் விரும்பிகளில் அநேகர் பிறப்பால் (மனதால் அல்ல)பிராமிணர்களே, பாவம் நீங்கள் என்ன பண்ணுவீர்கள், பிராமணீயம் என்ற சக்கரவியூகத்துக்குள் புகுத்தப்பட்டுள்ளீர்கள். நீங்கள் விரும்பினால் கூட இனிமேல் உங்களால் வெளிவர முடியாது.ஆனால் பிராமணீயத்தை பொறுத்துக் கொள்ளுமளவிற்கு பொறுமை இல்லை எனக்கு.
//இப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தட்டிக் கேட்டதற்கு உங்களுக்கு ஏன் கோபம் வரவேண்டும் என்று நானும் கேட்கலாமா?//
கேட்கத் தேவையே இல்லை. உங்களது பார்ப்பனர் மேல் வெறுப்பு பளீரென மின்னுகிறது. சக்கரவியூகத்திற்குள் நீங்கள்தான் இருக்கிறீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//dondu(#11168674346665545885) said...
//இப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தட்டிக் கேட்டதற்கு உங்களுக்கு ஏன் கோபம் வரவேண்டும் என்று நானும் கேட்கலாமா?//
கேட்கத் தேவையே இல்லை. உங்களது பார்ப்பனர் மேல் வெறுப்பு பளீரென மின்னுகிறது. சக்கரவியூகத்திற்குள் நீங்கள்தான் இருக்கிறீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
WELL SAID
//அண்ணே ஸ்ரீராம் அண்ணே!!!
கண்ணை திறந்து படியுங்கள். எனது பதிவுகளுக்கு யாரும் பின்னூட்டம் இடவில்லையென நான் அழுதேனா?? எனக்கு எந்த பிராமணன் மேலும் வருத்தம் கிடையாது அன்பரே, எந்து நலம் விரும்பிகளில் அநேகர் பிறப்பால் (மனதால் அல்ல)பிராமிணர்களே, பாவம் நீங்கள் என்ன பண்ணுவீர்கள், பிராமணீயம் என்ற சக்கரவியூகத்துக்குள் புகுத்தப்பட்டுள்ளீர்கள். நீங்கள் விரும்பினால் கூட இனிமேல் உங்களால் வெளிவர முடியாது.ஆனால் பிராமணீயத்தை பொறுத்துக் கொள்ளுமளவிற்கு பொறுமை இல்லை எனக்கு.//
கருப்புச் சட்டைக்காரர்கள் போல் பேசுகிறீர்களே தராசு.
உங்களது எழுத்துத் திறைமையை நல்ல செயல்களுக்கு துணையாகட்டுமே.
திராவிடக் கட்சிகளே பார்ப்பனர் எதிர்ப்பின் தீவிரத்தை குறைத்துள்ள போது தாங்கள் பிராமணன்/பிராமணியம்
பிறப்பால்/மனதால் என்ற பழைய கதை வேண்டாம் என்றுதானே சொன்னேன்.
விவாதம் ஓ.கே
விதண்டாவாதம் வேண்டாமே
டோண்டு சார் சொன்ன மாதிரி
Quid pro quo தான் நல்லது.
இன்று கிடைத்துள்ள பல வசதிகளுக்கும்,வாய்ப்புக்களுக்கும் பேருதவிபுரிந்திட்ட பெரியவர்களில் பெரும் பகுதியினிர் பிராமண சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பதை தாங்கள் அறியாததல்ல.
///இன்று கிடைத்துள்ள பல வசதிகளுக்கும்,வாய்ப்புக்களுக்கும் பேருதவிபுரிந்திட்ட பெரியவர்களில் பெரும் பகுதியினிர் பிராமண சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பதை தாங்கள் அறியாததல்ல.///
ஹே ஹே :)))
பாஸ் நூல் ஈஸ் கம்மிங் அவுட் !!!
//செந்தழல் ரவி said...
///இன்று கிடைத்துள்ள பல வசதிகளுக்கும்,வாய்ப்புக்களுக்கும் பேருதவிபுரிந்திட்ட பெரியவர்களில் பெரும் பகுதியினிர் பிராமண சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பதை தாங்கள் அறியாததல்ல.///
ஹே ஹே :)))//
உங்கள் கலைஞரின் சமீபத்திய அறிக்கை:
திராவிட இயக்கத்தில் இளமைக் காலந் தொட்டே என்னை ஒப்படைத்துக் கொண்டாலும், பிராமண சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை நான் பாராட்டிப் போற்றத் தவறியதில்லை. மகாகவி பாரதி தொடங்கி, ராஜாஜி, வ.வே.சு.அய்யர், தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம், உ.வே.சா., கல்கி, ஏ.எஸ்.கே.அய்யங்கார், வெ.சாமிநாத சர்மா, ஆசிரியர் சாவி, நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமமூர்த்தி என நீண்ட பட்டியல் உண்டு.
வ.ரா.,வின் துணைவி புவனேஸ்வரியை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து, மாதந்தோறும் அவருக்கு 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் உத்தரவை ஒப்படைத்தேன். வ.ரா.,வின் நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் கொண்டாடினோம். திருவள்ளுவர் உருவத்தை தீட்டித் தந்த, வேணுகோபால் சர்மாவின் குடும்ப வாழ்வாதாரத்திற்கு நிதி வழங்கிய பெருமை இந்த அரசுக்கு உண்டு.
பரிதிமாற்கலைஞர் என்ற சூரியநாராயண சாஸ்திரி வாழ்ந்த வீட்டைப் புதுப்பித்து, அவரது உற்றார், உறவினர், பேரன், பேத்திகள் நிரம்பிய பெருங் குடும்பத்தை சிறப்பித்தவன் நான். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
என்ன அனானி விவரம் தெரியாத ஆளா இருக்கிங்க, தேர்தல் வந்துகிட்டு இருக்கு இப்போ போய் திட்டி கவிதை எழுத முடியுமா?
சொறிஞ்சி விட்டா தானே ஓட்டு கிடைக்கும்
(எல்லா அரசியல்வாதிகளையும் சேர்த்து தான் சொல்றேன்)
நம்மூர் அரசியல்வாதிகளிடம் ட்ரைனிங் எடுத்தவர்கள்
அந்த போஸ்ட பாருங்க
//வால்பையன் said...
என்ன அனானி விவரம் தெரியாத ஆளா இருக்கிங்க, தேர்தல் வந்துகிட்டு இருக்கு இப்போ போய் திட்டி கவிதை எழுத முடியுமா?
சொறிஞ்சி விட்டா தானே ஓட்டு கிடைக்கும்//
இதனால் தான் பிளிச்சிங் பெளடர் தாங்கள் தான் என்ற பொய்யான தகவலை பரப்புகிறார்களோ?
//இதனால் தான் பிளிச்சிங் பெளடர் தாங்கள் தான் என்ற பொய்யான தகவலை பரப்புகிறார்களோ?//
ஹா ஹா ஹா
அப்புறம் சும்மா லுலுலாயிக்கு சொன்னேன் என்றும் சொல்வார்கள்
வணக்கம் டோண்டு ஸார்,
நான் ரொம்ப நாளா நீங்க எழுதுறதை எல்லாம் படிச்சிட்டுவறேன் ஸார். எனக்கு உங்களை மாதிரி அனுபவமிக்க ஒருத்தரிடம் இருந்து சில விவரங்களை தெரிஞ்சிக்கனும்னு ஆசை ஸார்..
எனக்கும் ரொம்ப நாளா எழுதனும்னு ஆசை , ஆனால் எழுத முடியவில்லை... அதற்கு சில காரணங்கள்,
1. இந்த வலைப்பதிவர்கள் சமூகத்தில் , ஒர் தணிப்பட்ட ஒருவரின் சொந்த வாழ்க்கையில், புகுந்து விளையாடுறாங்க. இது எனக்கு சரிபடாது.. நான் நிறையவே கோபப்படுவேன், என்னை ஒருத்தன் கிண்டல் பண்ணா அது தப்பு இல்லை, ஆனா இங்க சொந்த வாழ்க்கையில் தலையிடுறாங்க்.. இது ரொம்ப தப்புனு தோனுது... இதை எல்லாம் எத்துக்க முடியாது... (ஒவர் ஸின் போடுறான்டானு யாராவது சொல்லிடுவாங்களோ யோசிசுதான், பெயரையை கூட போடலை..
2. இரண்டாவது , தமிழ்ல எழுதனும்னு ஆசை தான், ஆனா தமிழ் நமக்கு தரிகினத்தோம் தான்.. எப்படி எழுதறதுணு தெரியலை.. அதிகமான எழுத்துப்பிழை வேற வ்ருது, சரியான தமிழ் நடை வரமாட்டேனங்குது...என்ன பன்னறது...
3. இரண்டாவதா நான் சொன்ன காரணத்தை விட , முக்கியமானது, யாராமே நமக்கு கமண்ட் போட மாட்டாங்கனு தோனுது... "கடமையை செய், பலனை எதிர்ப்பார்பேன்". நீங்க ப்லாகிங் பன்ன ஆரம்பிச்சப்போ எப்படி இருந்தது...
இப்படி இருக்கிற என்னை மாதிரி மக்களுக்கு எல்லாம் என்ன அட்வைஸ் பண்ணுவீங்க...
ரிப்பளை ப்னனுவீங்கனு நம்பிட்டு இருக்கேன்.,
நண்றி.
வாசகன்...
//எனக்கும் ரொம்ப நாளா எழுதனும்னு ஆசை , ஆனால் எழுத முடியவில்லை... அதற்கு சில காரணங்கள்,
1. இந்த வலைப்பதிவர்கள் சமூகத்தில் , ஒர் தணிப்பட்ட ஒருவரின் சொந்த வாழ்க்கையில், புகுந்து விளையாடுறாங்க. இது எனக்கு சரிபடாது.. நான் நிறையவே கோபப்படுவேன், என்னை ஒருத்தன் கிண்டல் பண்ணா அது தப்பு இல்லை, ஆனா இங்க சொந்த வாழ்க்கையில் தலையிடுறாங்க்.. இது ரொம்ப தப்புனு தோனுது... இதை எல்லாம் எத்துக்க முடியாது... (ஒவர் ஸின் போடுறான்டானு யாராவது சொல்லிடுவாங்களோ யோசிசுதான், பெயரையை கூட போடலை..//
இதை தவிர்க்க வேண்டு மென்றால்
( இது ஒரு கற்பனைதான் .சாத்யமில்லை)
நிபந்தனைகள் செட் 1.
1.பிராமண எதிர்ப்பை காட்டக் கூடாது
2.பக்திமான்களை கிண்டல் பண்னக் கூடாது
3.கடவுள் நிந்தனை கூடவே கூடாது
4.இந்து மதக் கொள்கைகளை விமர்சிக்கக் கூடாது.
5.பா.ஜ.க,சோ.ஹிண்டு ராம்,டோண்டு ,இட்லிவடை,அன்புடன் பாலா,நல்லதந்தி,ராமனுஜம் போன்ற பார்ப்பன பதிவாலர்களை கண்ணியத்துடன் விமர்ச்சிக்க வேண்டும்
6.இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் பார்வேட்காஸ்ட் பற்றி தவறாய் சொல்லக் கூடாது.
நிபந்தனைகள் செட் 2.
1.இட ஒதுக்கீடு பற்றி எதிர் கருத்து கூடவே கூடாது
2.ஒடுக்கப்பட்ட ஜாதிகளை விமர்சனம் செய்யக் கூடாது
3.பிற்பட்ட ஜாதியை சார்ந்த தலைவர்களை கண்ணியத்துடன் பாராட்ட வேண்டும்.
4.தமிழை பாராட்டி மகிழ வேண்டும்
5.ஜாதி மோதல்களை ஒட்டி வரும் பதிவுகளில் நடுநிலமை பின்னூட்டம் விட்டு இருதரப்பையும் சமரசம் செய்ய முயலவேண்டும்.
நிபந்தனை செட் 3.(மிக முக்கியமானது)
1.விடுதலை புலிகள் பற்றி எதுவும் சொல்லக்கூடாது
( ஆனால் இப்படி அருட் பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை வள்ளலராய்,யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் கொள்கை காப்பவராய்,
ரமண மகரிஷி போல் இருக்க முடியுமா)
//2. இரண்டாவது , தமிழ்ல எழுதனும்னு ஆசை தான், ஆனா தமிழ் நமக்கு தரிகினத்தோம் தான்.. எப்படி எழுதறதுணு தெரியலை.. அதிகமான எழுத்துப்பிழை வேற வ்ருது, சரியான தமிழ் நடை வரமாட்டேனங்குது...என்ன பன்னறது...//
1.முரசொலி தினம் படியுங்கள்
2.கலைஞரின் பழைய அறிக்கைகளையும்,மேடைப் பேச்சுகளையும் திரும்பத் திரும்பப் படியுங்கள்
3.விஜய் டீவி புகழ் தமிழ்க் கடல் நெல்லைக் கண்ணன் பதிவுகளை படிக்கவும்
4.மக்கள் தொலைக் காட்சி தொடர்ந்து பார்க்கவும்.
//3. இரண்டாவதா நான் சொன்ன காரணத்தை விட , முக்கியமானது, யாராமே நமக்கு கமண்ட் போட மாட்டாங்கனு தோனுது... "கடமையை செய், பலனை எதிர்ப்பார்பேன்". நீங்க ப்லாகிங் பன்ன ஆரம்பிச்சப்போ எப்படி இருந்தது...//
இதற்கு தராசின் ஆலோசனையை பார்க்கவும்.
குறிப்பாக எதாவது ஒரு குழுவில் சேர்ந்து விடுங்கள். முதுபெரும் எழுத்தாளர்களான லக்கிலுக்,புதுகை அப்துல்லா, டோண்டு, கார்க்கி,அப்புறம் இன்னும் ஒருவர் தங்கமணி, ரங்கமணி என எழுதுவார், வெண்பூ, இன்னும் எத்தனையோ அறிவு ஜீவிகள் பதிவுலகத்தில் வலம் வருகிறார்கள், இவர்களுக்கு ஜால்ரா தட்டிவிட்டு, மேலும் மீ த ஃபர்ஷ்டூ என்று வேறு சொன்னீர்களானால் உங்கள் பதிவு அதிகம் கவனிக்கப்படும்.
பின்குறிப்பு:
ஒரு அன்பு வேண்டு கோள்
டோண்டு சார் தவறாய் எடுத்துக் கொள்ளாதீர்கள்.
//டோண்டு சார் தவறாய் எடுத்துக் கொள்ளாதீர்கள்.//
:))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
//dondu(#11168674346665545885) said...
//டோண்டு சார் தவறாய் எடுத்துக் கொள்ளாதீர்கள்.//
:))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்த :)))))))) ?
//இந்த :)))))))) ?//
தவறாக எடுத்து கொள்ளவில்லை, ரசித்தேன் என்று அர்த்தம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//dondu(#11168674346665545885) said...
//இந்த :)))))))) ?//
தவறாக எடுத்து கொள்ளவில்லை, ரசித்தேன் என்று அர்த்தம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
நன்றி.
//இப்படி இருக்கிற என்னை மாதிரி மக்களுக்கு எல்லாம் என்ன அட்வைஸ் பண்ணுவீங்க...
ரிப்பளை ப்னனுவீங்கனு நம்பிட்டு இருக்கேன்.,
நண்றி.
வாசகன்...//
நாளை வெள்ளிகிழமை பதிவின் வரைவுக்கு சென்றுவிட்டதா ?(இவருடைய கேள்விக்கான பதில்கள்)
புதியவர்களுக்கு உங்களிடம் ஹெல்ப் நஹி என்று தன் தோனுது சாரே. சோ மற்றும் பிராமணீயத்துக்கு மட்டும் தான் உடனடி பதில் மற்ற எல்லாத்துக்கும் நஹி ( அது என் சௌகரியத்தை பொறுத்தது என்ற பதில் வரும் என்று தெரிந்துது தான் இதை எழுதுகிறேன்) அனானி கொடுத்த பதிலே போதுமா ? அது வேடிகையான்னா இருக்கு
@அரசு
பிளாக் எப்படி எழுதுவது என்று ஏன் கேட்க வேண்டும்? பேசாமல் எழுத ஆரம்பிக்க வேண்டியதுதான். தமிழில் எழுத வருகிறதல்லவா, அது போதாதா? மற்றப்படி தமிழ்ப் பிழைகளுக்காக யாரும் இங்கே மார்க்கையெல்லாம் குறைக்க மாட்டார்கள்.
ஆகவே, Get ready and go.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//arasu said...
புதியவர்களுக்கு உங்களிடம் ஹெல்ப் நஹி என்று தன் தோனுது சாரே. சோ மற்றும் பிராமணீயத்துக்கு மட்டும் தான் உடனடி பதில் மற்ற எல்லாத்துக்கும் நஹி ( அது என் சௌகரியத்தை பொறுத்தது என்ற பதில் வரும் என்று தெரிந்துது தான் இதை எழுதுகிறேன்) அனானி கொடுத்த பதிலே போதுமா ? அது வேடிகையான்னா இருக்கு//
உங்கள் பதிவை இதிலிருந்தே
தொடங்கவும்.
அரசுவின் முத்தான மூன்று கேள்விகளும் பெயரிலியின் வேடிக்கையான பதில்களும்
அப்புறம் பாருங்க
தமிழ்மணத்தில் சூடான ஈடுகையில்
ஆனால் ஒரு கண்டிசன்
நிபந்தனை செட் 1,2,3 ல் ஒன்றைக் கூட மீறக் கூடாது.
முக்கியமாய் இப்படி எழுதக் கூடவே கூடாது.
புதியவர்களுக்கு உங்களிடம் ஹெல்ப் நஹி என்று தன் தோனுது சாரே. சோ மற்றும் பிராமணீயத்துக்கு மட்டும் தான் உடனடி பதில் மற்ற எல்லாத்துக்கும் நஹி ( அது என் சௌகரியத்தை பொறுத்தது என்ற பதில் வரும் என்று தெரிந்துது தான் இதை எழுதுகிறேன்)
பட்டைய கிளப்புங்க
தூள் பண்ணுங்க
இனிமே உங்க காட்டிலே மழை
அரசுவின் ராஜாங்கம்
சென்று வா அரசு
வென்று வா அரசு
பதிவுலகம் அரசுவை அழைக்கிறது
பாசத்துடனே அரசுவை பார்க்கிறது
கவச குண்டலம் கர்ணனுக்கு
காக்கும் நிபந்தனைகள் அரசுக்கு
நால்வகை வர்ணத்தாரும் போற்றிடுவரே
நானிலம் பாரட்டி மகிழ்ந்திடுமே.
*******************************
இது டோண்டு ஐயாவுக்கு.
அவருக்கு ஆலோசனைகள் தந்து உதவிடலாமே.
அவரது கேள்விகளுக்கு மட்டும் பதில் அளிக்காததால் அவர் என்ன சொல்கிறார் பாருங்கள்.
ஆகவே, Get ready and go.
மட்டும் போதாது.
அதே பதிவரின் இன்னொரு பதிவில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்கு காத்திருக்கிறது. பார்க்க: http://tamil498a.blogspot.com/2009/05/498a_29.html
//அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், செல்வியின் கணவர் குமார் மற்றும் மாமியார் சரஸ்வதி, கொழுந்தனார் பிரகாஷ், கொழுந்தியாள் சத்தியபாமாவாசு, பொன்மணி, சம்பூரணம் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
----------------------------
எந்தவித முகாந்திரமோ தொடர்போ இல்லாமல் யாரை வேண்டுமானாலும் 498A புகாரில் சேர்த்து குற்றவாளியாக்கலாம் என்பதுதான் இந்தச் சட்டத்தின் செயல்பாட்டில் இருக்கும் நிலை.//
மறுபடியும் பொதுப்படையாகவே பதிவிட்டுள்ளீர்கள். இந்த குறிப்பிட்ட வழக்கில் மனைவி பொய் வழக்கு போட்டார் என்பது உங்கள் எண்ணமா? அதற்கு அடிப்படை என்ன? இந்த கேஸ் பற்றி மேலதிகத் தகவல்கள் ஏதேனும் தெரியுமா? அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லையே?
நீங்கள் கூறுவதையேதான் வன்கொடுமை சட்டத்திற்கும் கூறுகின்றனர். அதை முதலில் ஏற்கிறீர்களா? ஏனெனில் அதிலும் பொய்யாக குற்றம் சாட்டுவது சர்வசாதாரணமாக நடக்கிறது.
அவன் ஆம்பிளை இப்படி அப்படித்தான் இருப்பான் எனக்கூறி இளம் மனைவியை சித்திரவதை செய்த கேஸ்களே இல்லையா? அதற்கெல்லாம்தானே இச்சட்டமே வந்தது? எந்த கேசாக இருந்தாலும் டீஃபால்ட்டாக இளம் மனைவிதான் குற்றம் செய்திருப்பாள் என்ற ஊகத்தில்தானே உங்களது முக்கால்வாசி பதிவுகள் வருகின்றன?
சற்றே சமநிலையில் இருந்து எழுதவும். குறிப்பிட்ட கேசில் இளம் மனைவி வேண்டுமென்றே கேஸ் போட்டது தெரிந்தால் அதை தாராளமாக எடுத்து கூறவும்,. மற்றப்படி வெறுமனே வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றெல்லாம் எழுதக் கூடாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment