சமீபத்தில் 1963-64 கல்வியாண்டில் நான் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து கொண்டிருக்கும்போது நடந்த விஷயம் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. அந்த ஆண்டு ஒரு நாள் பேப்பர்களில் National Merit Scholarship அறிவிப்பு செய்யப்பட்டது. அதாவது பி.யு.சி. பரீட்சையில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 10 பேருக்கு மத்திய அரசு சார்பில் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட மாணவரின் பொருளாதார நிலை கணக்கில் எடுக்கப்படவில்லை. வெறுமனே திறமையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டது. அதாவது ஓட்டப் பந்தயத்தில் கப் தருவது போல என வைத்து கொள்ளுங்கள். இந்த லிஸ்டில் எனது நண்பன் காமாட்சிநாதனும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வந்தான். (அவன் ஆறாவது இடத்தில்).
இதில் என்ன விஷயம் என்றால் ஃபீஸ் கட்ட வேண்டியது இல்லை. ஆனால் ஏதாவது ஒரு ஆண்டில் கம்பார்ட்மெண்ட் வாங்கினால் அது நிறுத்தப்படும். பொருளாதார நிலை மற்றும் மெரிட் பார்த்து வழங்கப்பட்டது வேறு ஒரு ஸ்காலர்ஷிப், அதற்கு பெயர் Merit cum means scholarship. ஆனால் நான் இங்கு பேசுவது திறமையை மட்டும் அடிப்படையாகக் கொண்ட National Merit Scholarship. இதை ஸ்பான்சர் செய்தது மத்திய அரசு என்றாலும், வினியோகம் செய்ய வேண்டியது மாநில அரசுதான். அதில்தான் தமிழக அரசு ஒரு புதுக்கோட்டுக்கு ஜூட் வேலை செய்தது. இங்கும் சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோரின் சம்பளத்துக்கு வரைமுறை விதித்தது.
காமாட்சிநாதன் தன் தாத்தா பாட்டியுடன்தான் வசித்து வந்தான். அவன் தந்தைக்கு பெரிய சம்பளம் என்று சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தாத்தா பாட்டி கார் வைத்திருக்கும் அளவுக்கு வசதியானவர்கள். அவர்கள்தான் அவனுக்கு படிப்புக்கான ஃபீஸ் கட்டி வந்தனர். தந்தையை அணுகி அவரது சம்பளச் சான்றிதழை தந்து விண்ணப்பத்துடன் இணைத்தான். கோர்ஸ் முழுக்க ஸ்காலர்ஷிப்பிலேயே படித்து ஹானர்ஸ் கிரேடில் தேர்வு பெற்று சென்றான். பிற்காலத்தில் இது பற்றி அவன் என்னுடன் பேசினான். “ஒண்ணுமில்லைடா, நான் எனது திறமையால் மத்திய அரசிடம் பெற்றதை மாநில அரசு எனக்கு கொடுக்காமல் இருக்க பெரிய பிடுங்கி மாதிரி முயற்சி செய்தது. சாமி வரம் கொடுக்க பூஜாரி தடுத்த கதைதான் இது. அதற்காகவே முட்டாள்தனமான விதியை போட்டது. இம்மாதிரி விதிகள் மீறப்படுவதற்காகவே உள்ளன”. என்றான்.
யோசித்து பார்த்தால், அவன் ரொம்பவுமே பிராக்டிகல் என தெரிகிறது. இந்த விதியை எடுத்து கேஸ் போட்டிருக்கலாம். அதற்கெல்லாம் நேரம், பணம் ஆகியவை செலவழிக்க வேண்டியிருக்கும். அதற்காக முட்டாள்தனமாக பேசாமல் இருந்து, கிடைத்த சலுகையையும் விடக்கூடாது. அதற்கு அவன் செய்ததுதான் சரி.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
“அதெல்லாம் இருக்கட்டும்டா, இப்போ எதுக்கு மெனக்கெட்டு இதெல்லாம் ஞாபகத்துக்கு வரணும்” என்று கேட்கிறான் முரளி மனோஹர். நேற்று திடீரென காமாட்சிநாதனை பற்றி நினைத்தேன். அதனால்தான் இந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
13 hours ago
16 comments:
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும்
திமுக,அதிமுக,மதிமுக,விஜயகாந்த்கட்சி,சரத்கட்சி,ராஜேந்திரர்கட்சி,கார்த்திக்கட்சி,இடது சாரி மற்றும் வலது சாரி,பாமக,காங்கிரஸ் உட்பட இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் ,பொருளாதார அளவுகோல் இருக்கக் கூடாது என்று சொல்வதற்கும் இப்போதைய உங்களின் இந்த பதிவிற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
@அனானி
உங்கள் கேள்விக்கு பதில் வரும் வெள்ளியன்று வரும். அதை நான் ஏற்கனவே கொடுத்துள்ளேன், ஆனால் பப்ளிஷ் ஆவது வெள்ளியன்று மட்டுமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எத்தன புது கோட்டு வச்சிருக்கிங்க!
ஈரோட்டுக்கு ரெண்டு கொரியர் பண்றது!
//ஏதாவது ஒரு ஆண்டில் கம்பார்ட்மெண்ட் வாங்கினால் அது நிறுத்தப்படும். //
கம்பார்ட்மெண்ட் என்றால் என்ன?
ரயிலில் இருக்குமே அதுவா?
அதைகூட வாங்குவாங்களா என்ன?
என் அப்பாவின் ரேஷன் கார்டில் கூலி 600 ருபாய் என்று போட்டிருக்கிறது?
எனக்கு புது கோட்டு கிடைக்குமா?
நான் 3000 என்று போட்டிருக்கிறேன்!
அதனால் என்னிடம் இருக்கும் பழைய கோட்டை கூட பிடிங்கி விடுவார்களா?
@வால்பையன்: புதுக்கோட்டு அல்ல, புதுக்கோடு. இந்தப் பெயர்ச்சொல்லுடன் நான்காம் வேற்றுமை உருபு சேரும்போது ஒற்று மிகும். அதாவது புதுக்கோட்டுக்கு என்று கூறவேண்டும் என்பது நன்னூல் விதி. என் வசம் இம்மாதிரி மேலும் நான்கைந்து பதிவுகளுக்கு பல புதுக்கோடுகள் வைத்துள்ளேன்.
//எனக்கு புது கோட்டு கிடைக்குமா?//
//அதனால் என்னிடம் இருக்கும் பழைய கோட்டை கூட பிடிங்கி விடுவார்களா?//
ஏமாந்தால் கோமணத்தையே உருவி விடுவார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//@வால்பையன்: புதுக்கோட்டு அல்ல, புதுக்கோடு. இந்தப் பெயர்ச்சொல்லுடன் நான்காம் வேற்றுமை உருபு சேரும்போது ஒற்று மிகும். அதாவது புதுக்கோட்டுக்கு என்று கூறவேண்டும் என்பது நன்னூல் விதி. //
தமிழ் பாடங்களுக்கு நன்றி!
தமிழ் பாடங்களுக்கு நன்றி!
-----------------------------------
Romba TAMIL kaththu kuduthaa TAMIL THATHA (Manjal Kavignar MK), kochukka poraar.
Jaagradhai. Appuram oru neenda, nediya, virasa kavi ezhudhuvaaru, sollitten, sollitten, sollitten
1.கலைஞரைவிட இரண்டு வயது மூத்த முதலியார்வாளுக்கு,அதிகாரம் இல்லாத பொதுச் செயலர் பதவிதான் பெரிசு,அதை விடமாடேன்,வேணா தம்பிக்கு உதவிதலைவர் கொடுங்க எனபது ,காரியவாதித்தனத்தின் உச்சம் போல் தெரியவில்லையா?
2.கலைஞரே,தனது தலைவர் பதவியை விட்டுத்தர தாராள மனதாய் இருக்கும் போது,85 க்கு இருக்கும் பற்றற்ற தன்மை 87 க்கு இல்லை என்பது சரியா?
3.கடைசியில் தளபதிக்கு பொருளாளர் பதவிதான் போலுள்ளது.வெண்னெய் திரண்டும் வரும் போது தாளியை உடைத்தவரை பற்றி தொண்டர்கள் என்ன நினைப்பார்கள்?
4.கலைஞர் ஏன் முதலியாருக்கு இவ்வளவு சலுகை காட்டுகிறார்,தனது முடிவுகளை அமலாக்குவதில், சிக்கல்களை ஏற்படுத்தும்,தனி மனிதருக்கு.
5.பொதுக்கூட்டத்தில் கலைஞரை தளபதியாய் ஏற்பனே அன்றி,தலைவராய் ஏற்க மாட்டேன்.ஏன் என்றால் அப்படிச் செய்தால் என் மனைவி கூட மதிக்க மாட்டாள் என்றாரே! 40 ஆண்டானதால் கலைஞர் அதை மறந்துவிட்டு,அவரது செயல்களுக்கு செவி சாய்ப்பது ஏன்?
5.
வெள்ளிக் கிழமைக்காக!
1. மீண்டும் கூவமா? முன்பே ஒரு தடவை "அழகுத் தமிழினில் பாட்டிசைத்து, தோணிகள் ஓட்டி விளையாடி" விட்டோம்! படகு குழாம்கள் மட்டும் மிஞ்சியிருக்கின்றன - எத்தனை கோடி செலவு??
2.அந்துலே விஷயம் உங்கள் அபிமான சோ ஒரு சின்ன பெட்டிக்குள் அடக்கி வாசித்திருக்கிறாரே! இவ்வளவு நடந்தும் எல்லோரும் மௌனம் சாதிப்பது, பழைய விவகாரங்களாலா?
வெள்ளிக் கிழமைக்காக!
மு.க.வின் புது டிஸ்கவரி - ராமாயணம் ஒரு சுற்றுலாக்கதை!! கூவத்தைப் பற்றிப் பேசும்போதும், கூடவே ராமாயணத்தையும் இழுக்க வேண்டுமா? ஒன்று பார்த்தீர்களா? கழகக் கண்மணிகளின் இந்த வேலைகளால் ராமாயணமும் இந்து மதமும் பிராபல்யமாகிக் கொண்டே இருக்கின்றன
அப்பா -தலைவர்
பெரியப்பா-(அண்ணாத்தை)-பொ.செயலர்
சின்ன மகன் -பொருளாளர்
பெரிய மகன்-து.பொ.செயலர்
மகள்-கொ.ப.செயலர்
பேத்தி தமிழரசி-ம.செயலர்
மருமான் -இ.அ.செயலர்
கட்சியை ஒரு குடுமபம் போல் பாவிக்கும் தலைவரை, இனியும் குற்றம் சொல்லலாமா?
நல்லதொரு குடும்பமாய் நாட்டுக்கு உழைக்கும் ,நல்லவர்களை பாரட்ட வேண்டாமா?
திருமங்கல் வெற்றி உறுதி செய்யபட்டுவிட்டதாமே?
சரத் கட்சி ,ஒட்டைப் பிரிக்க தலைவரின் ஆசிபெற்று உள்ளதாம்?
சரத் கட்சி ஒட்டு திமுகவா?
1.எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுன் தற்போதைய நிலையென்ன?
2.இலஞ்சம் வாங்கும் பெண் ஊழியர்கள்
நாடு எங்கே போகிறது?
3.முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எப்படி,எங்கே இருக்கிறார்?
4.மாநில அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழல்கள் கொடிகட்டி பறக்கிறதே?
5.பாமக-சிறுத்தை உறவு இப்போது எப்படி?
6.மகளிருக்கு தொடர்ந்து அரசின் சலுகைகள்,ஆண்கள் பாவமில்லையா?
7.மதவெறியர்கள், தீவிரவாதிகள் இவர்களை திருத்த என்ன வழி?
8.டி.ராஜேந்தர் எங்கே ஆளையே கானோம் ?
9.தே.மு.தி.க. விஜயகாந்திற்கு ,அவரது கட்சியின் செலவுகளுகு எங்கிருந்து பணம் வருகிறது?யார் கொடுக்கிறார்கள்?
10. காங்கிரஸ் - தி.மு.க. உறவு தொடருமா? பிரியுமா?
11.பிரதமர் மன்மோகன்சிங்கின் ஆட்சியை பாராட்டலாமா?
12. நிகழ்காலத்தில் ஒரு நடிகையின் கணவனுக்கு கிடைக்கும் மரியாதை பார்த்தபிறகும் ,நடிகையை மணக்க முன்வருபர் நிலை?
13.வில்லன் நடிகர் ரகுவரன் சாவு,பிற குடிகார நடிகர்களுக்கு ஒரு பாடமாகுமா?
14.பங்கு மார்க்கெட் மேலே போவதும் புரியவில்லை?கீழே வீழ்வது புரியவில்லயே?உங்களுக்கு எப்படி?
15.பாராளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வருமா?
16.கம்யூனிஸ்டுகள் மேற்கு வங்கத்தில் ஆட்சியை ,அங்குள்ள மக்கள் பாராட்டுகிறார்களா?
17.தமிழக அரசின் வெள்ள நிவாரண உதவிகள் -2000-பணம்-10 கிலோ அரிசி
அடுத்த தேர்தலில் திமுகவுக்கு கை கொடுக்குமா?
18.சென்னையில் மேம்பாலங்கள் பற்றிய வழக்கு என்னாச்சு?
19.ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை முட்டுகட்டை போடும் கர்நாடக அரசை, மத்திய அரசு கண்டிக்காதது ஏன்?
20.பூமிதானத் தலைவர் வினோபாவேவைப் போன்ற நல்ல மனதுக்காரர்கள் இந்தியாவில் யாராவது உள்ளனரா?
21.2008 ஆண்டில் வெற்றிகரமான எழுத்தாளர் என்று யாரைச் சொல்லலாம்?
22. 3 ஜி சேவையால் செல்போன் கட்டணங்கள் இனி கூடுமாகுறையுமா?
23. பொது இடங்களில் புகைபிடிப்பவரை தடை செய்யும் சட்டம்?
24.கடன் அட்டை வாங்கி அல்லலுறுவர் பற்றி உங்கள் கருத்து?
25.ஒரு பக்கம் தொடர் மழை,மறுபக்கம் வறட்சி-பருவகாலத்தில் ஏன் இந்த மாற்றம்?
26.சின்னத்திரையும், சினிமாவும் இன்றைய கலாச்சார சீரழிவின் அடையாளங்களா?
27.இந்திய அரசியல் 2009 ல் எந்த திசையில் செல்லும்?
28.கலைஞரின் சாதுரியம் ஜெயலலிதாவின் சாதுரியம்-ஒப்பிடுக?
29.சென்னை நகரப் பேருந்துகளில் இன்றைய முன்னேற்றம் எப்படி?
30.தமிழகக் காங்கிரசார் அதிமுக பக்கம் சாய்கிறார்களா?
31.இந்தியாவில் பெட்ரோல் விலை குறையமா? குறையாதா?
32.தமிழ்கப் பெண்கள் அதிகமாய் நகை வாங்குவது சரியா?
33.தமிழகத்தில் கோ ஆப் டெக்ஸின் நிலை எப்படியுள்ளது?
34.கனிமொழி- தமிழச்சி- யார்முந்துகிறார்கள்?
35.வரும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் கல்ந்து ஜமாய்ப்பீர்களா?
36.கனிமொழி மத்திய அமைச்சராக வாய்ப்பு இனி உண்டா?
37.சென்னையில் வசதி படைத்தோர் பண்ணை வீடுகள் வாங்கிப் போட்டார்களே,அவை இப்போது?
38.பணத்தை அமுக்கிவதில் அதிகாரிகள் டாப்பா, அரசியல்வாதி டாப்பா?
39. சென்னை கடற்கரை ஜோடிகள் இரவிலும் , உலாவும் இடமாகிறதே?
40.90 நாள் முன்பதிவு முறை இரயில்வேயில் உள்ளதை பயன் படுத்தி சிலர் கொள்ளை அடிக்கிறார்களே?
41.பறவைகாய்ச்சல் நாமக்கல் கோழிப் பண்னைகளை பாடாய்படுத்துகிறதே?
42.சின்னத் திரையில் பெண்கள் அழாத சீரியல்கள் வருமா?
43.கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் நாத்திகர்களின் முடக்குவாதம் இப்போது அதிகமாய் காணவில்யே?
44.அரசியல் கட்சிகளின் பொதுக்குழு,செயற்குழு பற்றி சொல்லுக?
45.மயிலை எஸ்விசேகர் இனி என்ன செய்வார் அரசியலில்?
46.பிஹார் லாலுவின் ரயில்வே அமைச்சு செயல் பாடு எப்படி?
47.கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் எல்லோருக்கும் எப்போதும் 7.5 நாட்டு சனி போலுள்ளதே?
48.ரஜினி 1 கோடி கொடுத்து ஆரம்பித்து வைப்பதாய் சொன்ன நதி நீர் இணைப்பு?
49.தகவல் அறியும் உரிமைச் சட்டம் தமிழ் நாட்டில் பயன் பெறுகிறதா?
50.மருத்துவர் ராமதாஸ் மதுவுக்கு எதிராக தீவிரமாக இறங்கியிருக்கிறாரே
மருத்துவர் ஐயாவுக்கு இதில் அரசியல் ஆதயம் இருக்குமா?
@அனானி
உங்கள் முதல் 25 கேள்விகளுக்கு விடை அளித்து பதிவும் நாளை காலை சரியாக 5 மணிக்கு அச்சிடப்படும் அளவில் முன்னமைவு செய்யப்பட்டு விட்டது. அடுத்த 25 கேள்விகள் அடுத்த ஆண்டு முதல் பதிவில் வரும். ஏற்கனவே இங்கு கேள்விகள் மிக அதிகமாகி விட்டன.
இனிமேல் வரும் கேள்விகள் அடுத்த வாரத்துக்கு செல்லும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment