8/17/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 17.08.2009

Voldemort ஆக டி.ஆர். மற்றும் விஜயகாந்த் நடித்தால்
நீங்களே அந்தக் கொடுமையை பாருங்கள். டி.ஆர். ஹாரி பாட்டரின் தாய் மாமனாம். கூடவே பின்னால் வரும் விஜயகாந்த் இங்கிலிபீஸ் பேச Malfoi உட்பட எல்லோரும் சரண்டர் ஆகிடறாங்க.

அங்க போனதுல இன்னொரு வீடியோவும் பார்க்க முடிஞ்சது. நீங்களும் பாருங்க, நொந்து போயிடுவீங்க.

Les états désunis (Disunited States)
எனது வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது பதிவில் நண்பர் வால்பையன் அமெரிக்கா காலி என்று வாது புரிகிறார். அவருக்கு எதிராக சில வாதங்கள். அவரது பதில்கள் ஆகியவற்றை முதலில் பார்ப்போம்.

வால்பையன்: உலக நாட்டாமை அமெரிக்காவின் சொம்பு ஏற்கனவே நசுங்கி போய் விட்டதால்! இனிமேல் அமெரிக்காவுக்கு யாரும் சொம்பு தூக்க வேண்டாம் என அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்!

அனானி: அமெரிக்காவை யாரும், அத்தனை எளிதாக தூக்கி எறிய முடியாது. அந்த நாட்டின் அடிப்படை வசதிகளும், அரசு மற்றும் தனியார் கட்டமைப்பும், வேறெந்த நட்டாலும கொண்டு வர முடியாது. டாலர் வெறும் பேப்பர் ஆக இருந்தாலும், அது தான் இன்னும் உலக கரன்சி.
உலக பொருளாதாரம் சீர்பட அமெரிக்க மக்கள் வாங்கினால் தான், உலக தொழிற்சாலைகள் இயங்கும். அதன் fundamental strengths, அங்கு வாழ்ந்தால் தான் தெரியும்.

இன்னொரு அனானி (வால் பையனுக்கு ஆதரவாக): அடுத்தவன் சொத்துக்கு ஆசப்பட்டவன் தானும் அழிந்து தன் சொத்தையும் இழப்பான் என்பது முது மொழி.
அமெரிக்கா ஒரு கடைந்தெடுத்த சுயநலமி. வினை விதைத்தவன் வினை அறுக்கிறான்.

கோதுமைக்கும்,பால் பவுடருக்கும் இன்னும் பிற உணவுப் பொருட்களுக்கும் நம் பாரத்தை கையேந்தும் நிலை 21-12-2012 ல் அமெரிக்காவிற்கு வரலாம்

அமெரிக்காவை நீதிதேவன் நிச்சயம் தண்டித்து தூக்கி எறிவான். உலக வரை படத்தில் இனி அமெரிக்காவை( பொருளாதர நிலையில்) தேட வேண்டிய சூழ்நிலை வரலாம்.

உப்பை மட்டும் ( அடுத்த நாட்டினரது உழைப்பையும்)தின்ன அமெரிக்கா? காலம் பதில் சொல்லும். ஓபாமாவின் சித்து வேலைகள் செயல்படா சூழ்நிலை. அமெரிக்கா இனி பேரிக்காய் (இது ஒரு ரைமுக்குத்தான்)விற்றுத்தான் பொழைக்கவேண்டும்.

இனியும் (கலாச்சார,பொருளாதரச் சீரழிவுகளை பார்த்த பிறகும்) அமெரிக்காவை பார்த்து பாராட்டுவதை விட்டு விட்டு நம் பாரதத்தை மாபெரும் வல்லரசாய் பிறருக்கு உதவிடும் நல்லரசாய் மாற்றிக் காட்டுவோம்.

மறுபடியும் வால்பையன் (ராமர் பாணம் போல 3 பின்னூட்டங்கள்)
//@வால்பையன்
அமெரிக்காவை யாரும், அத்தனை எளிதாக தூக்கி எறிய முடியாது. //
ஆமாம், அது ரொம்ப பெருசு!

//அந்த நாட்டின் அடிப்படை வசதிகளும், அரசு மற்றும் தனியார் கட்டமைப்பும், //
அரசு மற்றும் தனியார் கட்டமைப்புகள் ஊத்திகிட்டு தான் அடிப்படை வசதிகள் இல்லாமல் பலர் வீட்டை விட்டு தெருவில் திரிகிறார்கள்!

//டாலர் வெறும் பேப்பர் ஆக இருந்தாலும், அது தான் இன்னும் உலக கரன்சி.//
சும்மா சொல்லிக்க வேண்டியது தான்! அவன் பாட்டுக்கு அடிச்சு தள்ளுவான்! உங்களை போல் ஆட்கள் அதை கொண்டாடுங்கள்! எல்லா நாடும் நாசமாக போகட்டும்!

//உலக பொருளாதாரம் சீர்பட அமெரிக்க மக்கள் வாங்கினால் தான், உலக தொழிற்சாலைகள் இயங்கும்.//

உலக சந்தை யூரோப் நாட்டு பக்கம் சாய்ந்து பல வருடங்களாகிவிட்டது! இனி அமெரிக்காவில் குப்பை கொட்டுவதை விட்டுவிட்டு வேறு நாடு தேடி கொள்ளுவது உத்தமம்!

August 18, 2009 9:33 AM
வால்பையன் said...
//உலக வரை படத்தில் இனி அமெரிக்காவை (பொருளாதார நிலையில்) தேட வேண்டிய சூழ்நிலை வரலாம்.//

நிலப்பரப்பிலேயே தேட வேண்டிய நேரம் வரும்! கடலோர பிரதேசங்கள் அழிந்து அமெரிக்கா 45% மட்டுமே மிஞ்சும் என்பது விஞ்ஞானிகள் கருத்து! நீங்கள் சொன்ன அதே வினை தான் இதற்கும் காரணம்! இயற்கையை ஓவராக சீண்டினால் அது தான் கதி!

இப்போது டோண்டு ராகவன். அமெரிக்காவுக்கு இம்மாதிரி பிரச்சினை நிலைகள் புதிதல்ல. 1861-ல் நடந்த உள்நாட்டு போரைவிடவா? 1929 பொருளாதார வீழ்ச்சியை விடவா? 1938-ல் நிலவிய குழப்பத்தை விடவா? 1960-களில் நிலவிய வியட்நாம் யுத்த அமர்க்களத்தை விடவா?

வால் பையன் சொன்னதற்கும் மேல் பேசி அமெரிக்கா பூட்ட கேஸ் என கோஷித்து 1938-ல் Les États-Désunis (உடைந்த அமெரிக்க ஐக்கிய நாடுகள்)
என்னும் தலைப்பில் Vladimir Pozner எழுதிய ஃபிரெஞ்சு புத்தகம் எனது நினைவுக்கு வருகிறது. சுதந்திர பொருளாதாரத்தை பாவிக்கும் எல்லா நாடுகளிலுமே இம்மாதிரியான நெருக்கடிகள் சகஜம். அவை தீர்ந்து போவதும் சகஜம். பலர் எதிர்வினை புரியும்போது சில சமயங்களில் இம்மாதிரி நிகழ்வது புரிந்து கொள்ளக் கூடியதே. கூடவே சேர்ந்து கொண்டது தனிமனித பற்றும் பத்திரிகை சுதந்திரம். அமெரிக்காவை எதிர்த்து இங்கு தரப்படும் வாதங்கள் முக்கால்வாசி அமெரிக்க பத்திரிகைகளில் வந்தவையே என்றால் மிகையாகாது.

ஆனால் அவைதான் அமெரிக்காவின் பலமும் கூட.

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் (ஒரு சிறு டைவர்ஷன்)
ராமு: தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பதை நேற்றுத்தான் நான் உணர்ந்தேன்.
சோமு: என்ன! நேற்று உன் கனவில் நமீதாவை பார்த்து தொலைத்தாயா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

26 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

சரிதான்! இங்க வந்து அமெரிக்க சோம்பு நசுங்கிப் போச்சுன்னு பின்னூட்டம் இட்ட கையேடு வால்பையன் அங்கே "செத்த கடவுள்"என்று கவிதை எழுத ஆரம்பித்து விட்டார்!

இங்கே நீங்களோ,
'தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும். என்பதற்கு "என்ன! நேற்று உன் கனவில் நமீதாவை பார்த்து தொலைத்தாயா?" என்று கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்!

'தொலைத்தாயா' என்ற வார்த்தையை கடுமையாக ஆட்சேபிக்கிறேன்:-)))

வால்பையன் said...

முதலாம் உலகப்போரைவிட இரண்டாம் உலகப்போரில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுமே பெரும் பாதிப்பை அடைந்தது!
இப்போ என்ன அழிஞ்சா போச்சு எலா நாடும்!
ஆனா உங்க சதை அமெரிக்காவுக்கு மட்டும் ஆடுவது தான் சிரிப்பாக இருக்கிறது! இங்கே யாரும் அமெரிக்காவின் எதிரி நாடுகளுக்கு சப்போர்ட் செய்து பேசவில்லை, அது தேவையுமில்லை, முறைந்த பட்சமாக யாரும் இந்தியாவிற்காக கூட பேசவில்லை! ஆனால் உங்களது அமெரிக்கா பாசத்திற்கு காரணம்.

முதலாளித்துவம்=அமெரிக்கா

என்ற ஒரே காரணம் தான்!

நீங்கள் சொன்ன நிகழ்வுகள் எல்லாம் சதாரண விபத்துகள் தான்! சங்கு ஊதபோறது இப்போ தான்!

அச்சடித்த நோட்டுகள் பணவீக்கத்தை அதிகபடுத்திவிட்டன! தகவல் தொழில்நுட்ப வேலைகள் வேறு நாடுகளுக்கு கை மாறிவிட்டன!
இன்னும் கொஞ்ச நாளில் மிஸ்லீம் நாடுகள் அமெரிக்காவுக்கு பெட்ரோல் தராது! வருடத்திற்கொருமுறை காத்திரினா போன்ற புயல்களின் அதிரடி முத்தம் வேறு!

விவசாய பூமிகள் அழிக்கப்பட்டு பயோ டீசலுக்காக மட்டுமே பயிரிடப்படுகிறது!
எந்த நாடு அடிப்படை தேவைகளை உற்பத்தி செய்யவில்லையோ அதற்கு சங்கு தான்!

dondu(#11168674346665545885) said...

@வால் பையன்
//ஆனா உங்க சதை அமெரிக்காவுக்கு மட்டும் ஆடுவது தான் சிரிப்பாக இருக்கிறது!//
நமீதா இருக்க போயும் போய் அமெரிக்காவுக்காக சதை ஆடும் என்பதைக் கேட்டால் சிரிப்பு சிரிப்பா வருது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

உண்மையில் வால்டிமோண்ட் ஹாரியின் தாய் மாமனா ?

அந்த உண்மை கடைசி பகுதியில் தெரியவருகிறதா ?

அப்படி இருந்தாலும் நன்றாக இருக்கும் ? கடைசியில் ஹாப்பி எண்டிங் ஆகியிருக்கும்.

Anonymous said...

give answer for the following?

1.As per latest rules in India will the benefits of reservation be extended to a girl who belongs to general category and has married to a boy who belongs to schedule caste.

2. Tell whether the present reservation policy helped the poor among the poorest?

3.In India all the political parties are supporting the reservation to sc/st with out any question.Is it for vote bank or real concern?

4.There is demand for reservation quota in time bound promotions also. Will it be granted?when?

5.will the inter caste marriage be the final solution to eradicate the cast sysytem?

dondu(#11168674346665545885) said...

@வஜ்ரா
என்ன தைரியம் உங்களுக்கு வோடிமோர் ஹாரியின் தாய் மாமனாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதற்கு?

ஹாரி பாட்டர் விசிறிகள் சார்பில் நீங்கள் வீராச்சாமி படத்தை ஒரேயடியாக 4 முறைகள் பார்க்கும் தண்டனை அளிக்கிறேன். :))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

//
3.In India all the political parties are supporting the reservation to sc/st with out any question.Is it for vote bank or real concern?
//

A government that robs peter to pay paul can always count on the support of paul.

Its Socialism 101.

dondu(#11168674346665545885) said...

இயங்கு என்பவரது இப்பதிவில் நான் இட்ட இப்பினூட்டம் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது. பார்க்க: http://iyangu.blogspot.com/2009/08/blog-post_8919.html

இதுதான் பார்ப்பனர்களின் யோகியதை என தார்மீக கோபத்துடன் பதிவிட்ட நீங்கள் இங்கு இதுதான் முசல்மான்களின் யோக்கியதை என எழுதுவதிலிருந்து உங்களை எது தடுக்கிறது?

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டு ராகவனே இட்டான் என்பதை குறிக்க அதன் நகலை எனது நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 18.08.2009 பதிவில் பின்னூட்டமாக இடுவேன்.

பார்க்க: http://dondu.blogspot.com/2009/08/17082009.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

இயங்கு தள இயக்குனருக்கு மூளை இயங்குவதில் பிரச்சனை என்று நினைக்கிறேன்.

இவருக்கெல்லாம் பதில் சொல்லிட்டு ஏன் வெட்டி பப்ளிசிட்டி கொடுக்குறீங்க ?

M Arunachalam said...

வால்பையன்,

எப்பொழுதிலிருந்து தாங்கள் ஜோசியம் பார்க்கும் தொழிலில் இறங்கினீர்கள்? அப்படியே கொஞ்சம் இந்திய கம்யூனிஸ்டுகளின் ஜாதகத்தையும் அலசி விடுங்களேன். குத்துயிரும், கொலையுயிருமாக மரணப்படுக்கையில் ரொம்பவே அவஸ்தை பட்டுக்கொண்டு இருக்கிறதே என்ற பரிதாபம்தான் காரணம்.

வால்பையன் said...

கம்யூனிஸ்டுகள் மட்டும் உத்தமர்கள் என்று நான் சொல்லவில்லையே!
அவர்களும் புத்தக புழுக்கள் தானே!
மார்க்ஸ், லெனின், ஏங்கல் சொல்லாத புதிய கருத்துகளை யாராவது சொல்லிவிட்டு பிறகு தங்களை கம்யூனிஸ்டு என்று சொல்லி கொள்ளட்டும்!

krishnakumar said...

one mail received by me is reproduced (just for fun)


one letter from Banta Singh to Bill Gates,

Dear Mr. Bill Gates,

This letter is from Banta Singh from Punjab. We have bought a computer for our home and we found problems, which I want to bring to your notice.

1. After connecting to internet we planned to open e-mail account and whenever we fill the form in Hotmail in the password column, only ****** appears, but in the rest of the fields whatever we typed appears, but we face this problem only in password field. We checked with hardware vendor Santa Singh and he said that there is no problem in keyboard. Because of this we open the e-mail account with password *****. I request you to check this as we ourselves do not know what the password is.

2. We are unable to enter anything after we click the 'shut down ' button.



3. There is a button 'start' but there is no "stop" button. We request you to check this.

4. We find there is 'Run' in the menu. One of my friend clicked 'run ' has ran upto Amritsar! So, we request you to change that to "sit", so that we can click that by sitting.

5. One doubt is that any 're-scooter' available in system? As I find only 're-cycle', but I own a scooter at my home.

6. There is 'Find' button but it is not working properly. My wife lost the door key and we tried a lot for tracing the key with this ' find', but unable to trace. Is it a bug??

7. Every night I am not sleeping as I have to protect my 'mouse' from CAT, So I suggest u to provide one DOG to kill that cat.

8. Please confirm when u are going to give me money for winning 'HEARTS' (playing cards in games) and when are u coming to my home to collect ur money.

9. My child learnt 'Microsoft word' now he wants to learn 'Microsoft sentence', so when u will provide that?

Best regards,
Banta Singh

Anonymous said...

2012 ல் உலகம் அழியுமா?

பல திக்குகளிலிருந்து வாதங்கள்.
(மின்னஞ்சலில் வந்த விசயம்)


1.மயன் காலண்டர் 21.12.2012 பூமியின் அழிவு நாள் என சொல்லுகிறது.




2.சூரியனிலிருந்து வெளிபடும் வெப்பக் கதிர்வீச்சு (சூரியப் புயல்)2012 அதீதமாய் மனித குலத்தையே பொசுக்கலாம்.

3.ஐரோப்பிய விஞ்ஞானிகளின் விஷப் பரிடசை அணுப் பரிசோதனை 2012ல்( 27 கி,மிக்கு குகை அமைத்து வெடிச் சோதனை)
.
4. பைபுளும் 2012 ல் சாத்தானுக்கும் தேவனுக்கும் நடக்கும் இறுதி சண்டை உலக் அழிவுக்கு காரணமாகலாம்.

5.அமெரிக்க மஞ்சள்கல் தேசியப் பூங்காவில் உள்ள சூப்பர் எரிமலை வெடித்து சிதறும் நாள் 2012ல்,அது எழுப்பும் புழுதிச் சாம்பல் சூரியனயே மறைக்கும் பனிப் புயல் தோன்றி பேரழிவுக்கு வழி செய்யலாம்


6.பூமியின் காந்த வடது இடது முனைகள் பக்கவாட்டில் வேகமாய் நகர்வது 2012ல் அதிகமாகி காந்த பீல்டு சமன் நிலை தவறி அனத்து உயிரினக்களும் பொசுங்கி...........


விஞ்ஞான சான்றுகளின் அடிப்படையில் விவாதம் தொடங்கட்டுமே!

டோண்டு அல்லது வால்பையனை விவாதத்தை தொடங்க அழைக்கிறேன்


"வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது?"
ஒருவேளை இது எமனுக்கு கேட்டு விட்டதோ!

21-12-2012
ஆண்டவனின் கடைசி தீர்ப்பு !
இயற்கையின் தண்டனை

Anonymous said...

//வால்பையன் said...

கம்யூனிஸ்டுகள் மட்டும் உத்தமர்கள் என்று நான் சொல்லவில்லையே!
அவர்களும் புத்தக புழுக்கள் தானே!
மார்க்ஸ், லெனின், ஏங்கல் சொல்லாத புதிய கருத்துகளை யாராவது சொல்லிவிட்டு பிறகு தங்களை கம்யூனிஸ்டு என்று சொல்லி கொள்ளட்டும்!//


அலுவலகங்களில் ஒரு ஜோக் சொல்வார்கள் இடதுசாரி/வலது சாரி தொழிற் சங்கங்களுக்கு இடையே உள்ள போட்டி,சண்டை,சச்சரவுவை பார்த்த மற்ற சங்க ஊழியர்கள்

உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் உள்ளூர் தொழிலாளர்களே அடித்து சாகுங்கள்.

ரமணா said...

தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் ஆட்களுக்கு கறியும் சோறு படைத்து, ஓசி கலர்டீவீ பாருண்ணு கவர் செய்து,ஓட்டுக்கு ருபாய் 200 கொடுத்த பிறகும் இடைத் தேர்தலில் அனத்தும் கோவிந்தா வானால்

இவர்கள் என்ன சொல்லி சமாளிப்பார்கள்
1.திருவாரூரார்
2.தளபதியார்
3.அஞ்சாநெஞ்சார்
4.கவிதாயினியார்
5.நகரத்தார்
6.வட புலத்து அம்மையார்
7.வருங்கால பிரதமர்

Anonymous said...

//கம்யூனிஸ்டுகள் மட்டும் உத்தமர்கள் என்று நான் சொல்லவில்லையே!
அவர்களும் புத்தக புழுக்கள் தானே!
மார்க்ஸ், லெனின், ஏங்கல் சொல்லாத புதிய கருத்துகளை யாராவது சொல்லிவிட்டு பிறகு தங்களை கம்யூனிஸ்டு என்று சொல்லி கொள்ளட்டும்!//

சித்திரச் சோலைகளே! உமை நன்கு
திருத்த இப் பாரினிலே - முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தன
ரோ!உங்கள் வேரினிலே.

நித்தம் திருத்திய நேர்மையி னால்மிகு
நெல்விளை நன்னிலமே! - உனக்
கெத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தனர் காண்கிலமே.

தாமரை பூத்த தடாகங்களே! உமைத்
தந்தஅக் காலத்திலே - எங்கள்
தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே.

மாமிகு பாதைகளே! உமை இப்பெரு
வையமெ லாம் வகுத்தார் - அவர்
ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெலாம் உழைத்தார்.

ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே! - உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ? - நீங்கள்
ஊர்த்தொழி லாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய்அல்லவோ?

கீர்த்திகொள் போகப் பொருட்புவியே! உன்றன்
கீழிருக்கும் கடைக்கால் - எங்கள்
சீர்த்தொழி லாளர் உழைத்த உடம்பிற்
சிதைந்த நரம்புகள்தோல்!

நீர்கனல் நல்ல நிலம்வெளி காற்றென
நின்ற இயற்கைகளே! - உம்மைச்
சாரும் புவிப்பொருள் தந்ததெவை? தொழி
லாளார் தடக்கைகளே!

தாரணியே! தொழி லாளர் உழைப்புக்குச்
சாட்சியும் நீயன்றோ? - பசி
தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும்
செல்வர்கள் நீதிநன்றோ ?

எலிகள் புசிக்க எலாம்கொடுத்தே சிங்க
ஏறுகள் ஏங்கிடுமோ? - இனிப்
புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே பெரும்
புதரினில் தூங்கிடுமோ?

கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார் இனிக்
கெஞ்சும்உத் தேசமில்லை - சொந்த
வலிவுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த
வார்த்தைக்கு மோசமில்லை.
(இந்த பாட்டை 1970 களில் கேட்கும்போது எப்படி இருந்தது)

Anonymous said...

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.
புதியதோர் உலகம் ...

பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்.
புதியதோர் உலகம் ...

இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
யுஇதுஎனதெரு ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்
புதியதோர் உலகம் ...

உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
யுஒருபொருள் தனிருஎனும் மனிதரைச் சிரிப்போம்!
புதியதோர் உலகம் ...

இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம்.
புதியதோர் உலகம் ...


எப்படி இருந்த மாபெரும் இயக்கம் இப்போ?

வால்பையன் said...

//(இந்த பாட்டை 1970 களில் கேட்கும்போது எப்படி இருந்தது) //

அப்போ நான் பிறக்கவேயில்லையே எங்கிருந்து பாட்டு கேக்குறது!

வால்பையன் said...

2012 ல் உலகம் அழியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை!

ஆனால் இந்த உலகம் நிலைக்காது என்று மட்டும் தெரிகிறது!
பதவி சண்டை,
சந்தை சண்டை,
நாடு பிடித்தல்,
சுகாதார சீர்கேடு,
மரங்கள் அளித்தல்

ஆகியவை மனிதனை வெகு விரைவில் அழித்துவிடும்!

கிருஷ்ண மூர்த்தி S said...

/ //(இந்த பாட்டை 1970 களில் கேட்கும்போது எப்படி இருந்தது) //

அப்போ நான் பிறக்கவேயில்லையே எங்கிருந்து பாட்டு கேக்குறது!

August 18, 2009 10:33 PM
Blogger வால்பையன் said...

2012 ல் உலகம் அழியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை!/

இங்கயும் அந்த வரும்.. ஆனா வராது' தானா?

கிருஷ்ண மூர்த்தி S said...

/Blogger வால்பையன் said...

கம்யூனிஸ்டுகள் மட்டும் உத்தமர்கள் என்று நான் சொல்லவில்லையே!
அவர்களும் புத்தக புழுக்கள் தானே!/

தாங்கள் உத்தமர்கள் என்று அவர்களும் இப்போது சொல்லிக் கொள்வதில்லை!!

வால்பையன் said...

//தாங்கள் உத்தமர்கள் என்று அவர்களும் இப்போது சொல்லிக் கொள்வதில்லை!! //

முதலாளிமார்கள் சொல்லி கொள்கிறார்களே!
தாங்கள் தான் உலகத்தையே தூக்கி நிறுத்துவதாக

செழியன் said...

//தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் ஆட்களுக்கு கறியும் சோறு படைத்து, ஓசி கலர்டீவீ பாருண்ணு கவர் செய்து,ஓட்டுக்கு ருபாய் 200 கொடுத்த பிறகும் இடைத் தேர்தலில் அனத்தும் கோவிந்தா வானால்

இவர்கள் என்ன சொல்லி சமாளிப்பார்கள்
1.திருவாரூரார்
2.தளபதியார்
3.அஞ்சாநெஞ்சார்
4.கவிதாயினியார்
5.நகரத்தார்
6.வட புலத்து அம்மையார்
7.வருங்கால பிரதமர்//


பதிவுலகில் உலாவரும் ரமணாக்களின் சோதிடம் பலிக்காது, திரைப்படத்தில் ரமணாவாய் நடித்து அடுத்த தமிழக முதல்வராய் வருவோம் எனும் விஜயகாந்தின் பகல் கனவும் பலிக்கப்போவதில்லை.

எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.நடந்து முடிந்த ஐந்து சட்டமன்ற இடைதேர்தலில் திமுகழகத்தின் ஆட்சியில் கலைஞரின் சீரிய தலைமையில் ,துணை முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலில் படியும் மக்கள் பெற்றுவரும் அரசின் தங்கு தடையற்ற உதவிகள் , தென்பகுதிக் காவல்காரனாய் வெற்றிப் பவனிவரும் அழகிரியின் அரசியல் சாணக்கிய சீர் மிகு மக்கள் நல மிகு செயல்களால் அக மகிழந்த மக்கள் மக்களால் தூக்கி எறியப்பட்ட ஒரு சில எதிர்க்கட்சிகளின் தலைமைகளின், தேர்தல் புறக்கணிப்புக் கோரிக்கையை புறந்தள்ளி சார் சாரியாய் 70 விழுக்காடுக்கு மேல் வாக்குகளை உதய சூரியன்,கை சின்னங்களில் பதிந்து தங்கள் ஜனநாயக் கடமை ஆற்றிய மகோன்னத செயல் கண்டு தமிழன்னையும் பாரதத் தாயும் உவகைப் பெருங்கடலில் பேரானந்தத்தில்.

இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு சில கட்சிகளுக்கு முடிவுரை எழுதப் படும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை.

நட்பு பாரட்டி பேசி சம பந்தி விருந்து அருந்தி விட்டு ,புற வாசலில் கனவுல சினிமா கேப்டன் கட்சியோடு கூட்டு வைத்தால் அதிக லாபம் வரும் 2011ல் என்ற மாபாதக துரோகச் சிந்தனையை தூள் தூளாய் ஆக்கிய இனமான சிங்கங்களுக்கு அடுத்து இன்னும் அரசின் உதவியாய் என்ன அளிக்கலாம் என்பது தான் இனி கழகத்தின் அடுத்த சிந்தனை.

இந்த வரலாற்றுப் புகழ் வெற்றி கண்டு சோனியா அம்மையார் அவர்கள் தலைவர் கலைஞருக்கு இந்தியாவின் உயரிய பெரும் பரிசான “பாரத ரத்னா”
ஜ்னவரி 26, 2010 ல் அளித்து கெளரவம் செய்ய வேணும் என்பதே உலகெங்கும் வாழும் 10 கோடி தமிழ் உள்ளங்களின் கோரிக்கை முழக்கம்.

வாழ்க தமிழ்
வெல்க கலைஞர்
வெற்றி பேரிகை முழங்கட்டும்
உலகெங்கும் கழ்கத்தின் புகழ் பரவட்டும்

Anonymous said...

//நட்பு பாரட்டி பேசி சம பந்தி விருந்து அருந்தி விட்டு ,புற வாசலில் கனவுல சினிமா கேப்டன் கட்சியோடு கூட்டு வைத்தால் அதிக லாபம் வரும் 2011ல் என்ற மாபாதக துரோகச் சிந்தனையை தூள் தூளாய் ஆக்கிய இனமான சிங்கங்களுக்கு அடுத்து இன்னும் அரசின் உதவியாய் என்ன அளிக்கலாம் என்பது தான் இனி கழகத்தின் அடுத்த சிந்தனை.//


ஜாக்கிருதை
ஜாக்கிருதை

Anonymous said...

//இந்த வரலாற்றுப் புகழ் வெற்றி கண்டு சோனியா அம்மையார் அவர்கள் தலைவர் கலைஞருக்கு இந்தியாவின் உயரிய பெரும் பரிசான “பாரத ரத்னா”
ஜ்னவரி 26, 2010 ல் அளித்து கெளரவம் செய்ய வேணும் என்பதே உலகெங்கும் வாழும் 10 கோடி தமிழ் உள்ளங்களின் கோரிக்கை முழக்கம்.//


அடுத்த குடியரசுத் தலைவர் அவர்தானுங்ஙோ!

Anonymous said...

//வாழ்க தமிழ்
வெல்க கலைஞர்
வெற்றி பேரிகை முழங்கட்டும்
உலகெங்கும் கழ்கத்தின் புகழ் பரவட்டும்//


பிரபஞ்சத்தை விட்டுறாதீங்க சாமி!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது