அபத்தமான விளம்பரங்கள்
இந்த ஹமாம் விளம்பரத்தை பார்த்தாலே எனக்கு சிரிப்பு அடங்காமல் போய் விடும். பெண்ணை சோப்பு வாங்க அனுப்புகிறாள் இந்த அன்னை. பிறகு ஏதேனும் தவறான சோப்பு வாங்கிவிடப் போகிறாளே என்று பதறியபடியே பின்னால் ஒடுகிறாளாம். பெண் சென்ற பாதையில் சில நிமிடங்கள் தாமதித்து ஓடுகிறாள். அதற்குள் கற்பனைகள். அவள் கண்ட சோப்பை உபயோகிப்பது போலவும் முகமெல்லாம் அலர்ஜி வந்து விடுவதுபோலவும், எல்லோரும் அவளை தவிர்ப்பது போலவும், அவளுக்கு தன்னம்பிக்கையே போயிடுங்கற ரேஞ்சுக்கு அவை ஓடுகின்றன. இங்கு ஒரு சிறு டைவர்ஷன். முதலில் எல்லாம் இந்த விளம்பரத்தில் இப்போதுள்ள கடைசி வரியாகிய தன்னம்பிக்கை விஷயத்துக்கு பதிலாக வேறு வாக்கியம் இருந்தது. அதுதான் “அவளுக்கு கல்யாணமே ஆகாது” என்பதாகும். பிறகு பெண்ணியவாதிகள் செருப்பால் அடித்திருப்பார்கள் போல, பிறகு ஓசைப்படாமல் கடைசி வரியை மாற்றினர்.
கற்பனைகள் அதீதமாக இருந்தன என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். சோப்பு பெயரை கூறா விட்டால் என்ன, அப்பெண் சோப்பை வாங்கிக் கொண்டு வீட்டுக்குத்தானே வரப்போகிறாள். பின்னாலேயே ஓட வேண்டிய அவசியம் என்ன? அந்தப் பெண் என்ன கடையில் சோப்பை வாங்கி, அங்கேயே தெருக்குழாயிலா குளிக்கப் போகிறாள்? சுத்தமாக் காமன் சென்ஸே இல்லாத விளம்பரம். ஒரு வேளை ஹமாம் பாவிப்பவர்களுக்கு பகுத்தறிவு இல்லை என்பதை சூசகமாக சொல்கிறார்களா? ஹமாம் கம்பெனியின் விளம்பர மேனேஜர் கவனிக்க வேண்டிய விஷயம் இது.
சென்னை சில்க்ஸ்
இது நிஜமாகவே தமாஷாக இருந்தது. அதுவும் முதலிரவு நடக்கும் அறையில் மணமகனின் தலை ராஜகுமாரனாக மார்ஃப் ஆகும் இடத்தில் மணப்பெண் அடக்கமுடியாமல் வெடித்து சிரிப்பது ரொம்பவுமே நேச்சுரலாக இருக்கிறது. இந்த மாதிரி புத்திசாலித்தனமாக விளம்பரங்களை போடுவதற்காகவாவது மண்டையிலே இருக்கும் மசாலாவை கொஞ்சம் யூஸ் பண்ணுங்கப்பு.
ஸ்பெசிஃபிகேஷன்கள் மற்றவருக்கே போலிருக்கிறது
பத்திரிகைகள் ஊராருக்கு உபதேசம் செய்யும்போது நீட்டி முழக்கிக் கொண்டு வந்துவிடும். உதாரணத்துக்கு உலகமயமாக்கம் வந்துள்ள இக்காலத்தில் பத்திரிகைகள் அது பற்றி வாய்கிழிய ஆதரவாக பேசும். வெளிநாட்டிலிருந்து போட்டிகள் வந்தால் நல்லதுதானே என வக்கணையாக புத்தி சொல்லும். ஆனால் வெளிநாட்டு பத்திரிகைகளை இங்கிருந்து வெளியிடுவது என்ற பேச்சு வந்தால் மட்டும் பதறும். அடடா கண்கொள்ளாக் காட்சி அது.
பத்திரிகைகள் என்றதும் வார/மாதப் பத்திரிகைகள் நினைவுக்கு வருகின்றன. இப்போது எப்படியோ தெரியாது, ஒரு காலத்தில் பத்திரிகைகளில் வரும் தொடர்கதைகளை எடுத்து தனியாக பைண்ட் செய்வார்கள். அவற்றை படிப்பது மிக சுவாரசியமாக இருக்கும். உதாரணத்துக்கு கல்கியின் அமரதாரா நாவல் ஐம்பதுகளில் தொடர் கதையாக வந்த போது என் அம்மா அவற்றை தொகுத்து பைண்ட் செய்து வந்தார். கதையை படிக்கும்போது வரும் விளம்பரங்கள் நிஜமாகவே அக்காலத்தின் கண்ணாடியாகவே செயல்பட்டன. உதாரணத்துக்கு ஒரு டிம் பீஸ் கடிகாரம் 18 ரூபாயாம். 100 ரூபாய்க்கு நல்ல புடவைகள். ஆயிரம் ரூபாய்க்கான புடவையில் முழுக்க முழுக்க சரிகை இதழ்கள். அக்கால விலைவாசிகளை பார்த்தால் பெருமூச்சு வரும். அதுதான் மனித இயற்கை. அதே சமயம் அக்கால சம்பளங்களும் சொல்லிக் கொள்ளும்படியாக இருந்ததில்லை என்பதை அச்சமயம் மறந்து விடுவோம் என்பது வேறு கதை.
இம்மாதிரி பைண்ட் செய்வதற்காக கதைகளின் பக்கங்களை நீக்கும்போது சில எரிச்சலான விஷயங்கள் நடக்கும். ஒரு அத்தியாயம் முடிந்ததும், அதன் பின் பக்கத்திலேயே இன்னொரு தொடர்கதையின் அத்தியாயம் ஆரம்பிக்கும். இக்காலக் கட்டம் என்றால் பரவாயில்லை. ஜெரோக்ஸ் எடுத்து ஒரு கதைக்கு உபயோகிக்கலாம். என் அன்னைதான் பாவம், இரண்டு கதைகளில் ஒரு கதைக்காக கையொடிய ஒரு காலி பக்கத்தில் காப்பி எடுக்க வேண்டும் தன் சொந்த கையெழுத்தில். இன்னொரு இதழ் காப்பி வாங்கலாம் என்ற ஐடியாவே எழுந்ததில்லை என்பதும் அக்காலக் கட்டத்தின் பொதுவான பொருளாதார நிலையையே பிரதிபலிக்கிறது. இதில் பத்திரிகைகள் மனது வைத்திருந்தால் சில வேலைகள் செய்திருக்கலாம். ஒரு தாளின் ஒரு பக்கத்தில் ஒரு கதையின் அத்தியாயம் முடிந்தால், அதன் பின் பக்கத்தில் ஒரு விளம்பரம் போட்டு தொலைக்கலாமே. ஆனால் செய்ய மாட்டார்கள்.
இப்போது இவ்வரிகளை எழுதும்போது ஒரு எண்ணம் வருகிறது. வேண்டுமென்றேதான் செய்திருப்பார்களோ? பிற்காலத்தில் அக்கதையை புத்தகமாக தனியாக வெளியிட்டால் விற்பனைக்கு பாதிப்பு வரும் என இந்த தொடர்கதை ஐடியாவை டிஸ்கரேஜ் செய்யும் முயற்சியாக இருந்திருக்குமோ? ஆனால் அவ்வளவெல்லாம் முன்யோசனை இருந்திருக்கும் என்கிறீர்கள்? எனக்கு என்னவோ அப்படி தோன்றவில்லையே.
இப்போதும் இர்ரிடேட் செய்யும் இன்னொரு விஷயம் என்னவென்றால், பல பத்திரிகைகளில் பொருளடக்கம் போடுவதையே விட்டு விட்டார்கள். ஏண்டாப்பா நாங்கள் எல்லா பக்கத்தையும் புரட்டிப் பார்த்துத்தான் எங்களுக்கு வேண்டிய விஷயங்களை கண்டறிய வேண்டுமோ? இன்னும் சில பத்திரிகைகளில் பக்க எண்ணை தரவும் யோசிப்பார்கள். இந்த அழகில் ஒரு கட்டுரையின் தொடர்ச்சி 36-ஆம் பக்கம் என வேறு போட்டு வைப்பார்கள். படிப்பவர்கள் வேலை இல்லாதவர்கள் என நினைத்து விட்டார்களா.
வேறு ஒரு விஷயமும் நடக்கிறது. தொடர்கதைகளில் முன்னேல்லாம் அவ்வப்போது அது வரை வந்த அத்தியாயங்களின் சம்மரி போடுவார்கள். இப்போது சுத்தம், அப்படியென்று ஒரு இழவும் இல்லை. இப்போது கல்கி மற்றும் விகடனில் வரும் தொடர்கதைகள் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. என்னதான் கழட்டுகிறார்கள் பத்திரிகைக்காரர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
-
அன்புள்ள ஜெ அண்மையில் ஒரு கடிதத்தில் உறுதியான கருத்துக்கள்
கொண்டிருக்கக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். இளம்வாசகர்கள் உடனடியாக
உறுதியான கருத்துக்கள் கொண்...
7 hours ago
18 comments:
மீரா ஜாஸ்மின் நடிச்சு கூட சக்ரா கோல்டு டீ விளம்பரம் வந்திருக்காமே??
:)
//விகடனில் வரும் தொடர்கதைகள் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. என்னதான் கழட்டுகிறார்கள் பத்திரிகைக்காரர்கள்?//
விகடனில் தற்போது அதிகமாக எழுதிவருவது ந்மது வலைப்பதிவர்கள் தான்!
நீங்க யாரை குறி வைக்கிறிங்க!
டோண்டு சார் நல்ல பதிவு interesting ஆக இருந்தது.,
ஹமாம் ப்ராண்ட் முன்பு டாடாவிடம் இருந்தது பின் இந்துஸ்தான் லீவரிடம் கை மாறிய பின் தரம் வெகுவாக குறைந்து விட்டது.
ஆனால் இந்த விள்ம்பரம் வெற்றி தான். விள்ம்பரத்தின் target segment கண்டிப்பாக போய் செருகிறது. நீங்களே கவனித்து பதிவு போடுகிறீர்கள்.. இதுவே அவர்கள் விளம்பரத்துக்கு விளம்பரம்தானே !!
இந்த அஸ்வினி ஹேர் ஆயில் விள்ம்பரம் தொல்லை தாங்க முடியலை..அவர்களின் template 15 வருடமாக மாறவே இல்லை.. இதே அஸ்வினி அஸ்வினி அஸ்வினி லா லா தான்..
சென்னை சில்க் சத்யராஜ் விள்ம்பரமும் சரியான அறுவை. சத்யராஜை அந்த விள்ம்பரத்தில் பார்க்கும் போது பல பேருக்கு அவரு ஒக்கேனக்கல் உண்ணாவிரத போராட்ட(??)த்தில் பேசியது தான் ஞாபகம் வரும்..
எங்க வீட்டில் பொன்னியன் செல்வன் பைண்டிங்க பார்த்து இருக்கேன். நீங்கள் சொல்வது போல பல விளம்பரங்கள் .ஒட்டு சிந்தால் விளம்பரத்தில் அன்று வந்தது போலவே இன்று வரை அவங்க coverயை மாற்றவே இல்லை
என்ன சார் ..comment moderation இன்னும் வேண்டுமா??
//என்னதான் கழட்டுகிறார்கள் பத்திரிகைக்காரர்கள்?//
நல்ல கேள்வி...
இப்பத்தான் அண்ணாகண்ணன் எழுதியிருக்கும் கிட்டத்தட்ட இதே மாதிரியான பதிவைப் படிச்சுட்டு வரேன், அதுக்குள்ளே இங்கேயுமா..?!
@வால்பையன்
நான் சொல்வது தொடர்கதையை. சிறுகதையை அல்ல.
அன்புடன்,
டோண்டு ராகவன்
@அருண்குமார்
மாடரேஷன் நமக்கு தரப்பட்டுள்ள வரப்பிரசாதம். மேலும் இன்னும் வசவுகள் போலியின் அல்லக்கைகள் சிலரிடமிருந்து வருகின்றன.
@கிருஷ்ணமூர்த்தி
Great men think alike! :))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பின்னாலேயே ஓட வேண்டிய அவசியம் என்ன? அந்தப் பெண் என்ன கடையில் சோப்பை வாங்கி, அங்கேயே தெருக்குழாயிலா குளிக்கப் போகிறாள்? சுத்தமாக் காமன் சென்ஸே இல்லாத விளம்பரம்.//
Haa haa haa
ஹமாம் சோப்பு, சன் டைரக்ட் விளம்பரம் இரண்டும் செம கடுப்புதான் வரும் முன்னரே ரிமோட் எடுத்து மாற்றிவிடுவேன்.
எனக்கு இன்னொரு சந்தேகம்: நலங்கு மாவு சோப் என்று ஹமாம் விளம்பரம் செய்கிறார்களே.. நலங்கு மாவு என்று மாவு இருக்கி்றதா?-- கமலா பாட்டி
இன்றைய காலகட்டத்தில் தின/வார/மாத பத்திரிக்கைகள் ஆண்டு மலர்கள்,விழா மலர்கள் ,எப்.எம் வானொலிகள்,சின்னத்திரைகள்,பெரிய திரைகள் எல்லாம் விளம்பரச் சாமியின் புண்ணியத்தால்தான் ஆட்சி செய்து பெரும் பொருள் ஈட்டுகின்றன.
சன் தொலைகாட்சி நிறுவனத்தினர் இந்த யுக்தியை உபயோகித்து உருப்படாத படங்களை எல்லாம் ஆஹா ஓஹா என பொய் விளம்பரம் செய்து தமிழ்க முதல் கோடீஸ்வரர் எனும் இலக்கை நோக்கி செல்வது யாவரும் அறிந்த ஒன்று.
ஏன் எழுதி வைத்துகொள்ளுங்கள் இந்த விளம்பர சாமியின் அருளால் ஸ்டாலின்,அழகிரி,கனிமொழி ஆகியவ்ர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு ,கழகத்தையும் ,தமிழக ஆட்சியையும் சன் குழுமம் (தாத்தாவின் செல்ல பேரப் பிள்ளைகள் கைப்பற்றப் போகிறார்கள்.(( நாளைய பிரதமர் நம்பிக்கை நட்சத்திரம் ( பதவிக்காய் பேயாய் பறக்கும் இந்த கலிகாலத்தில் பதவி மோகம் இல்லாமல் பெருந்தன்மையின் விஸ்வரூபமமாய் வெற்றி உலா வரும் ) ராகுல் காந்தியின் ஆதரவுடன்))
அடுத்த வார கேள்வி பதிலுக்கு,
1.கலைஞரின் கச்சுத்தீவு மீட்புப் போராட்டம் , ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரசாரை மிரட்டவா?
கடைசி துருப்பு சீட்டா?
சும்மா பாவ்ல காட்டவா?
குடும்ப சண்டையை திசை திருப்பவா?
இடைத்தேர்தல் ஸ்டண்டா?
2.இலங்கை கடற்படையின் தாக்குதல் தமிழக மீனவர்மீது உண்மை நிலைதான் என்ன?
அத்துமீறுவது யார்?
விடுதலைபுலிகளின் வீழ்ச்சிதான் இதுக்கு காரணமா?
மத்திய அரசு என்ன செய்ய் வேண்டும்?
நம்து கடற்படையின் ரோந்துக் கப்பல்கள் என்ன் செய்கிற்து தமிழக மீனவ்ர்களை காக்கும் விசயத்தில்?
3.இலங்கையின் இந்திய கடல் எல்லைகளில் அத்து மீறல்கள் , சீனவின் இராணுவத் துணை இருக்கும் அசட்டு தைரியத்திலா?
இலங்கையின் இந்த வாலட்டத்தை தடுக்க் வேண்டமா?
இலங்கயில் சீனாவின் கடல் ஆதிக்கம் டேஞ்சர் அல்லவா?
பாகிஸ்தானும் தன் பங்குக்கு மூட்டிவிடுகிறதா?
இலங்கைக்கு சரியான பாடம் புகட்டுமா மன்மோகனின் வலிமையான அரசு?
4.சீனாவின் நில ஆக்கிரமிப்பு வாலாட்டம் மீண்டும் இந்தியாவிடம் எடுபடுமா?
ராணுவ பலத்தில் தற்சமயம் சீனாவின் கை ஒங்கியுள்ளது போன்ற தோற்றம் உண்மையா?
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மீது பொறமைப்படும் சீனாவின் தகிடுதத்தங்கள் விலை போகுமா?
பாகிஸ்தானும் சீனாவும் இணந்து போர் நெருக்கடி கொடுத்தால் நம்மளால் சமாளிக்கமுடியுமா?
அமெரிக்கா நம் பக்கம் பகவான் கிருஷ்ணர் போல் இருந்து நம்மை காக்க அணு ஆயுத ஒப்பந்தத்தில்( மற்றும் 123 ஒப்பந்தம்) ஏதேனும் ஷரத்து இருக்க்கிறதா?
5.சீனாவின் போலிமருந்து தயாரிப்பு மற்றும் மேலை நாடுகளில் விற்பனை, இந்தியாவின் பெயரால் இதை எப்படி மன்மோகன் அரசின் ரசாயனம் மற்றும் மருந்துகள் நடுவண் அமைச்சர் அண்ணன் அழகிரி சமாளிப்பார்?
சீனாவின் இந்த நம்மபிக்கை துரோகத்தை தடுக்க ,சீனாவின் பொருட்களின் இறக்குமதிக்கு தடைவிதிக்கலாமே?
இதுவும் சீனாவின் மறைமுகப் போரா பாரதத்தின் மீது?
மீண்டும் கெளரவ-பாண்டவ யுத்தம் ஆசியக் கண்டத்திலா?
அமெரிக்காவின் பெரியண்னன் ( world police )பதவியை கபளிகரம் செய்ய் முயலும் சீனாவின் செப்படி வித்தைகள் வெல்லுமா?
// உதாரணத்துக்கு ஒரு டிம் பீஸ் கடிகாரம் 18 ரூபாயாம் //
முற்றிலும் உண்மையே.மதுரையிலிருந்து தஞ்சைக்கு நான் மாற்றப்பட்டபோது, நான் 1962ல் வாங்கிய ஃபேவர் லூபா டைம் பீஸ் கடிகாரம்
பதினெட்டே ரூபாய்தான். அது இன்னமும் ஒரு தடவை கூட பழுதாகாது ஓடிக்கொண்டிருக்கிறது.
நான் ஓய்வு பெற்று எட்டு வருடமாயிற்று. இன்னும் அக்கடிகாரத்திற்கு ஓய்வு இல்லை. காசுவல்
லீவ், பிரிவிலேஜ் லீவ், மெடிகல் லீவ், மெடர்னிடி லீவ், ஸ்பெஷல் லீவ், ஃப்ரெஞ்ச் லீவ், யூனியன்
ஆஃபீஸ் ஃபேரர்ஸ் லீவ் இத்தனையிலும் ஒன்று கூட போடாமல் ஓடும் கடிகாரம் , எனது
அந்த நாள் கடிகாரம். இப்பொழுது வாங்கும் கடிகாரமோ யூஸ் அன்ட் த்ரோ என்கிறார்கள்.
ஒரு வருடத்திற்கு ஒரு வாட்சாம். அதற்கு மேலும் அது ஓடினால் அது அதிருஷ்டம். யூ ஆர்
லக்கி.
அதே சமாசாரம் தான் அன்று நான் படித்த குமுதம், ஆனந்த விகடன், கல்கி, சாவி எல்லாம்.
அவற்றின் இலக்கிய தரம் ஒன்றோடு ஒன்று போட்டி போடும் நிலையில் இருந்தன. சுவாரசியமான
அரசியல், சினிமா சமாசாரங்கள் கூட ஆக்க பூர்வ சிந்தனையைக் கிளறுபவையாகத் தான் இருந்தன. ஒரு
சமுதாய உணர்வுடன் செயல்பட்டன.
1960ம், 1970ம் வருட குமுதங்களையும் ஆனந்த விகடனையும் இன்றும் நீங்கள் உங்கள் மகனோ மகளோ அல்லது
பேரனோ அல்லது பேத்தியோ பக்கத்தில் இருக்கும்பொழுது படிக்கலாம்.
இப்போதோ ! என் வயதினர் குமுதத்தைக் கையில் எடுத்தாலே, விகடனைக் கையில் எடுத்தாலே,
இந்தக் கிழவன் இந்த வயசிலே பார்க்கிற படங்களைப் பாத்தீங்கள்லே என்று மருமகள்
மகனின் காதைக் கடிக்கிறார்கள்.
அறம், பொருளோடு சேர்த்துக் காமத்தைப் பார்த்தது அக்காலம். இக்காலத்திலோ ?
ஏதோ ! உலகத்தில், தமிழகத்தில் அரசியல், சினிமாவைத்தவிர வேறு எதுவுமே இல்லை போன்று
இருக்கிறது குமுதம், விகடன் உலகம். பரிகாரமாக ஒரு இரண்டு பக்கம் அந்த ஊர் கோவில்,இந்த ஊர் சாமி, குளம், அது இது என்று போட்டு, கூடவே ஜோசியத்திற்கும் ஒரு இரண்டு பக்கம் போடுகிறார்கள். கல்கியும் தற்பொழுது சிறிது சிறிதாக இந்த வலைக்குள் மாட்டிக்கொண்டு வருகிறது. 50 ஆண்டுகளாக கல்கியைப் படிக்கும் நான் இதை சற்று வேதனையுடன்தான் சொல்லிக்கொள்ள முடிகிறது. கலைமகளும்
மஞ்சரியும் தான் விதிவிலக்கு என நினைக்கிறேன். பாக்யா கூட பரவாயில்லை. பலானா சமாசாரத்தைகூட
பக்குவமாகச் சொல்கிறது. முதிர்ச்சி தெரிகிறது.
நிற்க.
இன்றைய சினிமாவும் பத்திரிகைகளும் இன்றைய தமிழ் பண்பு மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கின்றனவா !! சினிமா இருக்கட்டும். பத்திரிகைகளுக்கென ஒரு தனிப்பட்ட கொள்கை உண்டல்லவா ! அது என்ன ? ஆசிரியர் குழு அதைப்பற்றி சிந்திக்கிறதா ? அல்லது எது விற்கிறதோ அல்லது
விற்குமோ அதை அச்சிடுகிறார்களா ?
பத்திரிகை உலகம் இன்னமும் மக்களது பண்பு, கலாசாரம் இவற்றினைப் பாதுகாப்பதில்
பங்கு வகிக்கிறதா என்பதை திரு.சாலமன் பாப்பையா தலைமையில் ஒரு பட்டி மன்றம்
கூட்டி முடிவு செய்யவேண்டும்.
இதை விவரித்து ஒரு பதிவு எழுதுங்களேன்.
.
//இதை விவரித்து ஒரு பதிவு எழுதுங்களேன்//
எழுதலாம்தான். ஆனால் அவ்வாறு செய்தால் முரளி மனோகர் வந்து எனது “இந்தக் காலத்து பசங்க ஹூம்” என்னும் தலைப்பில் வந்த பதிவை சுட்டிக்காட்டி என்னை வெறுப்பேற்றுவானே.
பார்க்க: http://dondu.blogspot.com/2006/10/blog-post_05.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்லா இருந்தது.
--
எனது தந்தை சிறுவர்மலர் புத்தகங்களை சேர்த்து பைண்ட் செய்து வந்தது ஞாபகம் வருகிறது.
--
என்ன சார் ரொம்ப நாளா முரளி மனோகர ஆளையே காணோம்?
அந்த ஹமாம் விளம்பரத்தில் இன்னொரு அபத்தமான விஷயம், வீட்டை திறந்துவிட்டுப் போய்விடும் அந்த அம்மா! சோப்பில் காட்டும் அக்கறை வீட்டின் சேஃஃப்டியில் காட்டாமல் இருப்பாளாம்! அபத்தத்தின் உச்சம்!
1.இந்தியா முழுவதும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது எத்தனை வழக்குகள் உள்ளது?
2.இந்திய ஆக்கி அணியின் நிலை இப்போது என்ன?
3.தி.மு.க.வின் ராஜ்யசபை உறுப்பினர்களில் பெஸ்ட் யார்?
4.இப்போது அரசு அலுவலகங்களில் ஊழல்கள் உச்சத்திலா?
5.உங்களின் ஆலோசகராய் யாரை கருதுகிறிர்கள்?
6.பா.ம.க., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
7..ம.தி.முக., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
8..விஜய்காந்த்., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
9..சமத., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
10..வலது.கம்யூனிஸ்ட்., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
11..இடது.கம்யூனிஸ்ட்., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
12..தமிழக.காங்கிரஸ்., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
13..அதி.மு.க., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
14..திமு.க., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
15.மகளீர் இட ஒதுக்கீடு பற்றிய உங்கள் கருத்து?
16.மதவெறியர்களும், தீவிரவாதிகளும் அடங்கவே மாட்டார்களா?
17. டண்டணக்க அடுக்கு மொழி ஸ்பெஷலிஸ்டு டி.ராஜேந்தர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
18.2 ஜி செல் பேசியின் வரவால் சிட்டுக் குருவிகளை காணேம் பார்த்தீர்களா?
19. 3 ஜி வந்தால் ?
20.விஜயகாந்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது?
21.நேற்று காங்கிரஸ் - தி.மு.க. உறவு?
22.இன்று காங்கிரஸ் - தி.மு.க. உறவு?
23.நாளை காங்கிரஸ் - தி.மு.க. உறவு?
24.இந்தத் தடவை மன்மோகன்சிங்கின் அரசு எப்படியிருக்ககும்?
25.பங்கு மார்க்கெட் ஏன் உயர்கிறது/சரிகிறது?
26.பங்கு மார்க்கெட் -குதிரைப் பந்தயம்-சீட்டு விளையாட்டு( தாலியைக் கூட அடமானம் வைக்கும் நபர்கள்)-லாட்டரி சீட்டு(பெரும் கடன் வாங்கி மூடை மூடையாய் வங்கும் நபர்கள்) ஒப்பிடவும்?
27.கிரிக்கெட் வீரர்கள் ஏலம் போவதை பற்றி என்ன நினைக்றீர்கள்?
28.சென்னையில் ரோந்து போலீசாரின் நடவடிக்கைகள் எப்படி உள்ளது?பலன் எப்படி?
29.இரயில்வே//பொது பட்ஜெட்டால் அதிகம் பலனடயப் போகிறவர் யார்?
30.எல்லா அரசியல்வாதிகளுமே ........?
31.இந்த பழ்மொழி இபோது சாத்யமா-செல்விருந்தோம்பி வரு விருந்து காத்ருப்போன் என்பதெல்லாம் ?
32.மேற்கு வங்கத்தில் இடதுகளின் பிடி/செல்வாக்கு இனி அவ்வளவு தானா?
Post a Comment