6/24/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் 99 & 100

பகுதி - 99 (22.06.2009)
நீலகண்டன் தன் திகைப்பை தொடர்ந்து வெளிப்படுத்துகிறார். இத்தனை நாள் இறந்தவர்னு நினைத்து கொண்டிருந்த ரமேஷ் திடீர்னு உயிரோட வந்து நிற்கிறார். இது illogical இல்லை, inconceivable. நிச்சயமா மனித சக்திக்கு மேலே ஒரு சக்தி இருப்பதை தான் இப்போது ஒத்து கொள்வதாக நீலகண்டன் கூற, உமா இப்போதாவது பகவான் என்று இருப்பதை அவர் ஒத்து கொள்கிறாரா என உமா கேட்கிறாள். அது பகவான்னு சொன்னாலும் சரி, வேறு ஏதாவது பேர்ல அதை குறித்தாலும் சரி, தன்னுடை இத்தனை ஆண்டுகால நாத்திகவாதத்தை இந்த ஒரு நிகழ்ச்சி தூள்தூளாக உடைத்து விட்டது என அவர் கூற, உமா மனம் நெகிழ்வுடன் தந்தையின் தோள்களை பற்றுகிறாள்.

சட்டென்று அப்பால் சென்ற பர்வதம், ஒரு தட்டில் விபூதி எடுத்து வருகிறாள், நீலகண்டனை அதை நெற்றியில் பூசிக்கொள்ள சொல்கிறாள். அவர் மிகவும் தயங்கி தான் இத்தனை நாள் ஆண்டவனை திட்டியதற்கு அதற்கான தகுதி த்ன்னிடம் இல்லை என ஐயப்படுகிறார். பகவான் நம் எல்லோரையும் காப்பவர். கண்டிப்பாக அவர் மன்னித்து ஏற்று கொள்வார் என உமா கூற, நீலகண்டன் விபூதியை எடுத்து பூசுகிறார். தாய்ம் மகளும் மகிழ்ச்சியுடன் அதை பார்க்கின்றனர்.

“இது என்ன சார், ஆஃப்டர் ஆல் விபூதிதானே, அதை பூசிக்கறதுங்கறது இவ்வளவு பெரிய விஷயமா?” என சோவின் ந்ண்பர் கேட்க, சோ தான் ஏற்கனவே கூறியபடி விபூதி என்பது சாம்பல்தான் வாழ்வின் அல்டிமேட் என்பதை குறிக்கிறது எனக் கூறிவிட்டு, கூன் பாண்டியன், அவன் மனைவி மங்கையர்க்கரசி, மந்திரி குலச்சிறையார், திருஞான சம்பந்தர், சைவ சமண வாதங்கள் ஆகியவை அடங்கிய நிகழ்வை எடுத்து காட்டுகிறார். அதில் கடைசியாக கூன் பாண்டியன் சமண மதத்திலிருந்து சைவ மதத்துக்கு மாறி அவனுக்கு திருஞான சம்பந்தர் விபூதி பூசியது அவனுக்கு கிடைத்த அருள் என்பதை விளக்குகிறார்.

டாக்டர் கைலாசம் வெளிநாட்டு ட்ரிப்பிலிருந்து திரும்பி வந்துள்ளார். சாரியார் அவரை பார்க்க வருகிறார். தான் வெளிநாட்டில் இருந்த கடந்த 2 மாதங்களில் இங்கு பல தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது பற்றி டாக்டர் குறிப்பிடுகிறார். சாரியாரின் மகன் பாச்சாவுக்கும் நடேச முதலையாரின் இரண்டாம் மகள் சோபனாவுக்கும் கல்யாணம் நிச்சயமாயிருப்பதை குறிப்பிட்ட, சாதி அதிகம் பார்த்த முதலியார் எப்படி ஒத்து கொண்டார் என அவர் திகைக்கிறார். சோபனாவின் பெயர் ஏற்கனவே பேப்பரில் அதிகம் அடிபட்டதால் அவளுக்கு கல்யாணம் என ஒன்று ஆனால் போதும் என்னும் நிலையில் முதலியார் வேறு என்ன செய்திருக்க இயலும் என சாரியார் திரும்பக் கேட்கிறார். சாரியாருக்கு அது திருப்தியளிக்கிறதா என டாக்டர் கேட்க அவரும் தனது சம்மதமும் இதில் உண்டு என கூறி விடுகிறார்.

பிறகு 25 ஆண்டுகளுக்கு முன்னால் குழந்தைகள் மாறிய விவகாரம் தனக்கும் தெரிந்து விட்டது எனவும், அதை தான் சமாளித்து விட்டதாகவும் சாரியார் கூறி, இந்த விஷயம் தன்னை மீறி வெளியே போகாது என்பதையும் குறிப்பிட, திடுக்கிட்ட டாக்டர் தான் அவ்வாறு அன்று பார்வதியிடம் சொன்னது சாரியாரை சோதிக்கவே என்றும், அது உண்மையில்லை, பாச்சா உண்மையிலேயே அவர் குழந்தைதான் என கூறுகிறார். சாரியார் அவரை நம்ப மறுக்கிறார். நர்ஸ் பார்வதியையே அழைத்து சாரியாரிடம் உண்மையை சொல்ல வைக்க அவர் முயலும்போது பார்வதி குழந்தைகள் மாறியது நிஜமே எனக் கூறி டாக்டரை அசர வைக்கிறார்.

சாரியார் அந்தண்டை போனதும் டாக்டர் பார்வதியிடம் அவள் ஏன் இம்மாதிரி தன் காலை வாரிவிட்டாள் எனக் கேட்க அவள் தனது தங்கை சோபனாவின் கல்யாணம் இதனால் நின்றுவிடுமோ என்ற பயமே தன்னை இவ்வாறு பேச வைத்தது எனக் கூறுகிறாள். பாச்சா ஹரிஜனப் பையன் என்ற நினைப்பில் சாரியார் இருப்பதே இக்கல்யாணத்தை பொருத்தவரை நல்லது, ஏனெனில் பாச்சா உண்மையிலேயே தனது மகனே என்றிருந்தால் அவர் இந்த திருமணத்துக்கு ஒத்து கொண்டிருக்க மாட்டார் என அவரே கூறியதை தான் நேரடியாகக் கேட்டதாக அவள் கூறுகிறாள்.

“அம்மாதிரி சீன் எதுவும் வரவில்லையே” என சோவின் நண்பர் கேட்க, சோ அவர்கள் பார்வதி தான் கேட்டதாக கூறுகிறாள். அதுவே போதும், ஏனெனில் பல காட்சிகள் அம்மாதிரி டயலாக்கிலேயே முடிந்து விடுவதும் பல நாடகங்களில் நடப்பதுதான் என சோ அவர்கள் கூறுகிறார்.

டாக்டருக்கு இந்த திருமணத்தில் சம்மதம் இல்லையா என பார்வதி கேட்க, சாரியார் அறியாமையில்தான் ஒத்து கொண்டுள்ளார். அவருக்கு உணமை தெரிந்திருந்தால் இக்கல்யாணம் நடந்திராது என்பதுதான் அவரது ஆட்சேபணைக்கு காரணம். தனது தங்கையின் திருமணத்துக்கு பிறகுதான் தனக்கும் நிரஞ்சனுக்கும் (சேட்டு பையன்) திருமணம் என்பதால் இவள் இவ்வாறு சுயநலமாக செயல்படுகிறாள் என டாக்டர் குற்றஞ்சாட்ட, தனது திருமணத்தை தன்னிச்சையாக தான் தள்ளிப் போட்டதில் சுயநலம் எங்கிருந்து வருகிறது என்று அவள் திருப்பி கேட்கிறாள். எது எப்படியானாலும் தனது பொய்யே தன்னைக் கட்டிப் போட்டது என டாக்டர் ஆயாசத்துடன் கூறுகிறார்.

அசோக்கும் கிரியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். தனது தந்தை சிகாமணி முதலியார் பற்றி அவன் பெருமையுடன் பேசுகிறான். உண்மைக்கு மதிப்பு கொடுப்பவர் எனக் கூறி அதற்கு ஒரு உதாரணமும் தருகிறான். அசோக் அவனிடம் தான் அவனது தந்தையை நேரில் பார்க்க விரும்புவதாகக் கூற, சரி என்கிறான் கிரி. அசோக்கும் சிகாமணியும் பேசுகின்றனர். அவரது வடமொழி அறிவை மிகவும் சிலாகிக்கிறான் அசோக். சிகாமணி வேதம் அந்தம் இரண்டும் சேருவதே வேதாந்தம் என்கிறார். எல்லா வேதங்களுமே பரம்பொருளை அந்தத்தில் அடைகின்றன என்கிறார்.

“அப்படியா சார்?” என சோவின் நண்பர் கேட்கிறார். வார்த்தைகளில் சேர்க்கை அப்பொருளைத்தான் தருகிறது என கூறுகிறார் சோ அவர்கள். வேதங்கள் நான்கு, ஒவ்வொன்றுக்கும் நான்கு அங்கங்கள் உண்டு. அவை சம்ஹிதை (மந்திரங்கள்), பிராம்மணம் (யாகங்கள்), ஆரண்யீயம் (யாக செய்முறைகள்) மற்றும் உபநிஷத் (ஆத்ம விசாரங்கள்). கடைசியாக கூறப்பட்ட உபநிஷத் வேதங்களில் ஒரு பகுதி என்றாலும், மேற்கத்தியர்கள் அவற்றை தனியாக நிற்பவை எனக் கருதினார்கள். ஆனால் அது சரியில்லை. இவ்வாறாக மேலும் சில விவரங்களை அவர் தருகிறார்.

தான் உண்மையான பிராம்மணனை தேடுவதாக அசோக் கூற முயற்சிக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் சிகாமணி. சிகாமணி அவர்களே உண்மையான பிராமணனாக ஏன் இருக்க கூடாது என அசோக் கேட்க, you are going too far என சிகாமணி கூறுகிறார். பிராமணனாக இருக்க பிறப்பு காரணம் இல்லை என்றாலும், தன்னை பொருத்தவரை அந்த ஒரே க்வாலிஃபிகேஷன் போதாது என்கிறார் சிகாமணி. அவ்வாறு பிறப்பின் மூலம் வராது தகுதியால் வருபவர்களுக்கு உதாரணமாக அவர் விஸ்வாமித்திரரை எடுத்து கூற, அசோக்கோ உண்மையை பேசிய சத்யகாம ஜாபாலி பற்றி பேசுகிறான். அதே போல சிகாமணி அவர்களும் தனது உத்தியோகத்துக்கு வரக்கூடிய ஆபத்தை பொருட்படுத்தாது உண்மையை பேசியதையும் சுட்டிக் காட்டி அவர் உண்மையான பிராமணனே என தான் நினைப்பதற்கு ஆதாரம் தேடுகிறான். அவ்வாறு உண்மை கூறுவது மட்டுமே போதாது என சிகாமணி மறுதளிக்க, “அப்படியா சார்” என்கிறார் சோ அவர்களின் நண்பர்.

பகுதி - 100 (23.06.2009)
ஆம் என ஆமோதிக்கும் சோ அவர்கள் பிராமணனாக ஏற்று கொள்ளப்படுவதற்கான மற்ற விதிமுறைகளையும் அடுக்கிறார். கேட்டாலே தலை சுற்றும் அளவுக்கு அவை உள்ளன. தூய்மையாக இருக்கணும். சமப்பார்வை வேண்டும், அதாவது எலோருமே சமம் என்ற மனநிலை. பணம் சம்பாதிக்கக் கூடாது, அடுத்த நாளைக்கு என எதையும் சேமித்து வைக்கக் கூடாது. யாசிக்காமல் கிடைப்பதை வைத்துத்தான் சாப்பிட வேண்டும். வயல், சந்தை ஆகிய இடங்களில் கீழே சிந்தி கிடக்கும் தானியங்களை திரட்டி எடுத்து உணவாக்கி உண்ண வேண்டும். இதுதான் உண்மையான உஞ்சவிருத்தி. பலர் நினைப்பது போல யாசிப்பது அல்ல. வசதியான வாழ்க்கை இருக்கக் கூடாது.

யாகம் செய்வது, செய்விப்பது. வேதம் கற்பது கற்பிப்பது, தானம் பெறுவது, தானம் அளிப்பது. தானம் மட்டும் வாங்கலாமா என்றால், தானம் செய்யும் கடமைக்காக அதுவும் செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறாக பல கட்டுப்பாடுகள் உல்ளன. பிராமணன் ஆக பிறப்பால் முடியாது, உடலால் இயலாது, தோஷமற்ற அறிவால் இயலாது. அது தோஷமற்ற, பிறப்பற்ற, எல்லையற்ற, முடிவற்ற ஆன்மா பற்றிய அறிவு வேண்டும். அதை பெற்று விருப்பு வெறுப்பற்ற சமபார்வை வேண்டும். இவ்வாறெல்லாம் பல தகுதிகள் வேண்டும். இதையெல்லாம் கூறுவது வஜ்ரசூசிகா என்னும் உபநிஷத். மேலும் இது பற்றி பாரதம், பாகவதம் போன்ற புராணங்களிலும் பல இடங்களில் கூறப்பட்டது என்கிறார் சோ அவர்கள்.

“ஒரே ஒரு இதழ் மட்டும் மலராக முடியாது. அதே போல உண்மையை சொல்வது மட்டும் என்னை பிராமணனாக்க முடியாது. அரிச்சந்திரனே பிராமணன் ஆகமுடியவில்லையே, நான் எந்த மூலைக்கு? ஆனாலும் இந்த உண்மை சொல்லும் தன்மையே என்னை ஒரு நாள் இலக்கு நோக்கி நகர்த்தும். எங்கே பிராமணன் என தேடும் உனது முயற்சி வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்” என கூறுகிறார் சிகாமணி.

அசோக் பல கோவில்களுக்கு செல்கிறான். பல அறிஞர்களுடன் தனது தேடல் பற்றி விவாதிக்கிறான். ஆனால் இக்காட்சிகளெல்லாம் வாய்ஸ் ஓவராக காட்டப்படுகின்றன.

சாரியார் நடேச முதலியார் வீட்டுக்கு வருகிறார். நடேச முதலியார் அவரை அன்புடன் வரவேற்று நடக்கவிருக்கும் சோபனா பாச்சா கல்யாணம் பற்றி பேசுகிறார். சாரியார் சுரத்தேயில்லாமல் பேசுவதை இவர் கவனிப்பதாகத் தெரியவில்லை. திடீரென இந்த கல்யாணம் நடக்கக் கூடாது என ஒரு குண்டை தூக்கி போடுகிறார். நடேச முதலியார் திகைக்கிறார். அவர் என்ன பேசினாலும் பிடி கொடுக்காத சாரியார் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். சாரியார் திடீரென சாதியை பார்க்கிறாரா என அவர் கோபத்துடன் கேட்க, கண்டிப்பாக இல்லை எனக்கூறும் சாரியார், பாச்சாவின் ஜாதகத்தை அன்றுதான் பார்த்ததாகவும், அதில் அவனுக்கு குறைந்த ஆயுள் என்பதை கண்டதாகவும், சோபனா திருமணம் முடிந்த ஓராண்டுக்குள் விதவையாகி விடுவாள் எனவும் அவர் கூறி, சோபனாவின் நலனை நோக்கியே தான் திருமணத்தை நிறுத்துவதாக சாரியார் கூறி பயங்கரமாக பல விஷயங்களை குறிப்பிட்டு அவற்றின் மேல் ஆணை வைக்கிறார்.

சாரியார் கிளம்பி சென்றதும் நடேச முதலியார் சோர்வுடன் பார்வதியிடம் திருமண ஏற்பாடுகளை நிறுத்த சொல்லிவிட்டு கபாலீஸ்வரர் கோவிலுக்கு செல்கிறார். சாரியாரை துரத்தி சென்ற பார்வதி அவரை திரும்ப வீட்டுக்கு அழைக்கிறாள். அவரும் வருகிறார். வையாபுரியின் மகன் பிறந்த நேரம் அன்று காலைதான் தனக்கு கிடைத்ததாகவும் அதை வைத்து ஜாதகம் கணித்ததில் பாச்சாவுக்கு அல்பாயுஸ் என அறிந்ததாகவும் அவர் விளக்கிக் கூற, பார்வதி நிம்மதியாக பெருமூச்சு விட்டு, டாக்டரும் தானும் டாக்டர் வெளிநாடு செல்லும் சமயத்தில் வேண்டுமென்றே சாரியாரை டெஸ்ட் செய்யவே கூறிய பொய்யை பற்றி கூறி, உண்மையாகவே பாச்சாதான் சாரியாருடைய பிள்ள எனவும், டாக்டர் உண்மையை கூறியபோது தான் கூறாததற்கு காரணமே தனது தங்கை சோபனாவின் கல்யாணம் நடக்க வேண்டும் என்பதற்காகவே என்னும் விளக்கமும் தருகிறாள். ஆனால் அந்தோ சாரியார் இதை நம்ப மறுத்து விட்டு, சோபனாவின் திருமணத்துக்கப்புறம் பார்வதி நிரஞ்சனை திருமணம் செய்ய உத்தேசித்திருப்பதை எடுத்து கூறி அவள் சுயநலத்துக்காக தங்கை விதவையானாலும் பரவாயில்லை என செயல்படுவதாக அவளிடம் குற்றம் கண்டுவிட்டு அப்பால் செல்கிறாள். டாக்டர் தனது பொய்யாலேயே தான் கட்டிப் போடப்பட்டதை எண்ணி திகைத்தது போல பார்வதியும் இப்போது திகைக்கிறாள். இங்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டும். சாரியார் நடேச முதலியார் வீட்டுக்கு வந்து கல்யாணத்தை நிறுத்தும் காட்சி அப்படியே சோ அவர்கள் எழுதிய “சாத்திரம் சொன்னதில்லை” என்னும் நாடகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

அசோக்கின் தேடல் தொடர்கிறது. பலரிடம் பேசுகிறான். அந்த காட்சிகளும் வாய்ஸ் ஓவர்களாகவே போகின்றன.

நாதன் வீட்டுக்கு சிங்காரம் அழுது கொண்டே வருகிறான். மதுராந்தகத்துக்கு தன் குடும்பத்தினருடன் காரில் சென்ற வையாபுரி வழியில் ஒரு கிராமத்தில் ஜாதிக்கலவரத்தில் சிக்கி, காருடன் சேர்த்து எல்லோருமே எரிக்கப்பட்டனர் என கதறுகிறான். எரிந்த அத்தனை உடல்களையும் சேர்த்து மூட்டையாக கட்டி பெசண்ட் நகர் சுடுகாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர் என அழுகிறான். நாதனும் வசுமதியும் செய்வதறியாது திகைக்கின்றனர். நாதன் இறுதி மரியாதை செய்ய புறப்படுகிறார். போவதற்கு முன்னால் வசுமதியிடம் சாதி அரசியல் செய்த வையாபுரி சாதியாலேயே இறந்தார் என சொல்லி வருந்துகிறார்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10 comments:

Anonymous said...

you are given a chance to become the leader/president for one day for the following organisations what will you do ?( one by one)
1.congress(tamil nadu)
2.dmk
3.admk
4.pmk
5.mdmk
6.nadikarkal sangam
7.vivasaiyikal sangam
8.viyaapaarikal sangam
9.vakkeelkal sangam
10.manavarkal sangam

Anonymous said...

congrats for this 100

வஜ்ரா said...

சாம்பல் தான் வாழ்வில் அல்டிமேட் என்பதைக் குறிக்கும் விவிலிய வரி:

From dust you came to dust you shall return.

Anonymous said...

1.சின்னத்திரையும், சினிமாவும்,செல்பெசியும்,இண்டெர்நெட்டும் இளைஞர்களை சீரழிக்கின்றனவா?
2.உலக,இந்திய,தமிழக அரசியல் இன்று எப்படியிருக்கிறது?
3.தமிழகக் காங்கிரசார் இனி என்ன செய்தால் காமராஜ் ஆட்சி மலரும்?
4.பெண்கள் நகை வாங்குவதால் தான் தங்கத்தின் விலை உச்சத்திலா?
5.மூச்சுப்பயிற்சி செய்யும் பழக்கம் ப்ரவாலாகிவருவது பற்றி?
6.கோ ஆப் டெக்ஸின் பொருளாதார நிலை எப்படி?
7.தமிழக அரசியலில் இன்று வேகமாக (புகழில்) வளர்ந்துவரும் இருவர் யார் யார்?
8.இந்திய அரசியலில் இன்று வேகமாக (புகழில்) வளர்ந்துவரும் இருவர் யார் யார்?
9.உலக அரசியலில் இன்று வேகமாக (புகழில்) வளர்ந்துவரும் இருவர் யார் யார்?
10.பருவ மழையின் கண்ணா மூச்சி விளையாட்டு?

Anonymous said...

வரலாற்றில் மூன்று கிரகணங்கள் தொடர்ந்து வந்தால் பேரழிவுகள் நடந்துள்ளதற்கு சான்றுகள்( இரண்டாம் உலகப் போர்) உள்ளதாயும் இந்த ஆண்டு அதன் தாக்கம் உண்டு என்ற தகவல் ?

வெடிகுண்டு வெங்கட் said...

டோண்டு சார்,

சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்.

அய்யம் பேக் (பேக்கு இல்லைங்க, பேக் BACK).

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
இந்தியாவின் மானத்தை புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் எப்படி காப்பாற்றினார்?

Vijay said...

Dondu Sir, you have missed to include the name of Cho's friend. In the begining of the 100th episode, Cho when trying to answer the qualities of Brahmanan will address his friend as Mr Narayansamy.. Even I was curious to know whether this is the right name for his friend..

ராஜசுப்ரமணியம் said...

எங்கே பிராமணன் தொடரில் சமீபமாக title song “வேத கோஷம் ..” பாட்டு வருவதில்லையே, ஏன்? அதில் நடிக்கும் நடிக, நடிகைகள் பெயர்களும் வருவதில்லையே, ஏன்? ஏதாவது
பிரச்னையா?

ராஜசுப்ரமணியம்
25-06-2009

ராஜசுப்ரமணியம் said...

எங்கே பிராமணன் தொடரில் சமீபமாக title song “வேத கோஷம் ..” பாட்டு வருவதில்லையே, ஏன்? அதில் நடிக்கும் நடிக, நடிகைகள் பெயர்களும் வருவதில்லையே, ஏன்? ஏதாவது
பிரச்னையா?

ராஜசுப்ரமணியம்
25-06-2009

ராஜசுப்ரமணியம் said...

இன்றைய (25-06-09) 102-ஆம் பகுதியில், நீலகண்டனும் அவர் மனைவியும் கோயிலில் ஸ்வாமி ஸன்னதி முன்னாலேயே சாம்பு சாஸ்திரிகளுக்கு விழுந்து நமஸ்காரம் பண்ணுகிறார்கள்.

கோயிலுள் ஸவாமியைத் தவிர எந்த ஒரு மனிதனுக்கும் விழுந்து நமஸ்காரம் பண்ணக் கூடாது. இயக்குனர் சறுக்கி விட்டாரே!

ராஜ சுப்ரமணியம்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது