எஸ்கலேஷன்
எல்லாவித ஒப்பந்தங்களிலும் காணப்படும் முக்கிய ஷரத்து எஸ்கலேஷன் ஷரத்து எனப்படும். இந்த எஸ்கலேஷனுக்கு தமிழில் என்ன சொல்லலாம் என யோசித்து கொண்டிருக்கிறேன். இப்பதிவை எழுதும்போது இது பற்றிய சிந்தனை ஆழ்மனதில் ஓடுமாறு ஆணை பிறப்பித்துவிட்டு மேலே எழுதுகிறேன். எழுதி முடிப்பதற்குள் பதில் மனதுக்கு தோன்றி விடும் மொழிபெயர்ப்பை கூறிவிடலாம் என நினைக்கிறேன்.
முதலில் எஸ்கலேஷன் என்றால் ஒப்பந்தங்களில் அது எவ்வாறு பொருள் கொள்ளப்படுகிறது என்பதை பார்ப்போம். ஒப்பந்தம் செய்யும் இரு/எல்லா தரப்பினரும் தத்தம் சார்பில் அந்த ஒப்பந்தம் சம்பந்தமாக பதில் சொல்லுதல்/கேள்வி கேட்டல் ஆகிய காரியங்களுக்கு ஒரு அதிகாரியை பெயர் மற்றும் அவர் பதவியை குறிப்பிட்டு நியமிப்பார்கள். உதாரணத்துக்கு மன்னார் கம்பெனிக்கும் ராஜமன்னார் கம்பெனிக்கும் ஒப்பந்தம் என வைத்துக் கொள்வோம். ராஜமன்னார் மன்னாருக்கு ஒரு தொழில்நுட்பத்தை விலைக்கு தருகிறது. அத்துடன் அந்த தொழில்நுட்பத்தை மன்னார் கம்பெனியின் தளத்தில் நிறுவவும் செய்கிறது. சில காலகட்டத்துக்கு அதை நடாத்தியும் தருகிறது. இதற்கிடையே அதே நேரத்தில் மன்னார் கம்பெனியின் ஊழியர்களுக்கு அந்த தொழில்நுட்பத்தை நடாத்தவும் பயிற்சி தருகிறது.
இப்போது இரு கம்பெனிகளுக்குமிடையே கருத்து பரிவர்த்தனை நடக்கும். சில தகவல் அறிதலுக்காக இருக்கும், சில புகார்களாக இருக்கும். இதையெல்லாவற்றையும் ஒருங்கிணைக்க அதற்கென இரு கம்பனிகளிலும் மேலே சொன்னது போல ஆட்களை நியமித்திருப்பார்கள். அவர்களை தொடர்பாளிகள் (contact persons) என அழைப்பார்கள். அவர்களே நல்ல சீனியாரிட்டியோடு இருப்பவர்கள்தாம். அவர்களுக்கு வரும் கேள்விகளுக்கு தத்தம் கம்பெனிகளில் பேசியோ அல்லது தனக்கே தனிப்பட்ட முறையில் தரிந்ததை வைத்தோ குறிப்பிட்ட நேரத்தில் பதில் சொல்ல வேண்டியது.
குறிப்பிட்ட நேரத்தில் பதில் தராவிட்டால் கேள்வி கேட்ட தரப்பு அந்த தொடர்பு அதிகாரியின் மேலதிகாரிக்கு தகவல் அனுப்பும். அங்கிருந்து பதில் வர இன்னும் அவகாசம் தரப்படும். அங்கும் பதில் கிடைக்காவிடில் அவருக்கும் மேல் அதிகாரிக்கு புகார் போகும். இது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட எல்லா தரப்பினரது கம்பெனிகளிலும் நடக்கும். ஆக இம்மாதிரி மேலே மேலே போவதைத்தான் எஸ்கலேஷன் என்பார்கள். அந்த எஸ்கலேஷனில் யார் யார் இருப்பார்கள், எஸ்கலேஷன் காலநிரல் என்ன என்பதையும் ஒப்பந்தத்திலேயே கூறுவார்கள். இதையெல்லாம் கூறும் ஷரத்துதான் எஸ்கலேஷன் ஷரத்து.
இதை தமிழில் நான் புகார்/கோரிக்கை அளித்தலின் ஏறுவரிசை ஷரத்து என்று மொழிபெயர்க்கலாம் என நினைக்கிறேன்.
ராகவன் ஒழிக
நான் சமீபத்தில் 1955-56 கல்வியாண்டில் சென்னை திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் A செக்ஷனில் படிக்கையில் (வகுப்பாசிரியர் ரங்காராவ் சார்) திடீரென ஒழிக கோஷங்கள் சுவர்களில் எழுதப்பட்டன. முதலில் டி.ஆர். ராதாகிருஷ்ணன் ஏ.பாலசுப்பிரமணியம் ஒழிக என எழுதினான். அவன் கையெழுத்தை அடையாளம் கண்டு கொண்ட ஏ. பாலசுப்பிரமணியன் டி.ஆர். ராதாகிருஷ்ணன் ஒழிக என எழுதினான். பார்த்து கொண்டிருக்கும்போதே அவன் ஒழிக, இவன் ஒழிக என்றெல்லாம் சுவர்களில் எழுத ஆரம்பித்து விட்டார்கள். அதிர்ஷ்டவசமாக நான் இதில் சிக்கவில்லை.
சில நாட்கள் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்து விட்டு சிரித்து கொண்டிருந்தேன். திடீரென வரதராஜன் ஓடி வந்து “டேய் ராகவா, ராகவன் ஒழிகன்னு யாரோ எழுதியிருக்காங்கடா என்றான். போய் பார்த்து விட்டு அதனால் என்ன, ராகவன் என்றால் நான் மட்டும்தானா என சமாதானம் செய்து கொண்டேன். வரதராஜனிடமும் அவ்வாறே கூறினேன். இரண்டு நாட்களிலேயே என். ராகவன் ஒழிக என எழுதப்பட்டிருந்தது கண்டு முதலில் துணுக்குற்றாலும் வேறு யாராவது என். ராகவனாயிருக்கும் என எண்ணி சமாதானமானேன். ஆனால் கடைசியில் 5A. என்.ராகவன் ஒழிக என்ற செய்தியுடன் வரதராஜன் வந்ததும் அசடு வழிந்தேன்.
இங்கு/இப்போது ஏன் அந்த விஷயம் ஞாபகத்துக்கு வர வேண்டும்? எஸ்கலேஷன் ஷரத்துக்கு தமிழாக்கத்தை தேட நான் ஆணை பிறப்பித்த எனது ஆழ்மனதானது கொசுறாக இந்த நிகழ்ச்சியையும் என் நினைவிலிருந்து தோண்டி எடுத்து வெளியே போட்டது. யோசித்து பார்த்தால் இதுவும் ஒரு எஸ்கலேஷன் விஷயம்தானே?
இப்போது ஒரு சிறு சம்சயம். ஒருவேளை இங்கு பிரஸ்தாபிக்கப்பட்ட அந்த வரதராஜன் ஏதேனும் விஷமம் செய்திருப்பானோ?
அன்புடன்,
டோண்டு ராகவன்
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
-
அன்புள்ள ஜெ அண்மையில் ஒரு கடிதத்தில் உறுதியான கருத்துக்கள்
கொண்டிருக்கக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். இளம்வாசகர்கள் உடனடியாக
உறுதியான கருத்துக்கள் கொண்...
3 hours ago
21 comments:
நண்பர்கள் தினமாகப் பார்த்து இப்படிப்பட்ட விஷமம் எல்லாம் எஸ்கலேட் ஆகி ஞாபகம் வருது பாருங்க...அதுல கூட ஒருஏறு வரிசையா?
எஸ்கலேஷன் ஷரத்து பற்றி தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள். நன்றி சார்.
வரதராஜன் ஒழிக விஷயமும் சுவரஸ்யமாக இருக்கிறது...
பிரபாகர்.
டோண்டு சார் நீங்கள் எழுதிய பதிவுக்கும் இந்தக் கட்டுரைக்கும் தொடர்பில்லை. இருந்தாலும் உங்களின் பார்வைக்கு, உங்களின் சிந்தனைக்கு இந்த கட்டுரையை பதிவு செய்கிறேன்.
"இப்பல்லாம் யார் சார் ஜாதியைப் பாக்குறாங்க? பாப்பான், தமிழன் என்றெல்லாம் பிரிப்பது சரியா? என்று கேட்கும் ஏமாளித் தமிழர்களின் சிந்தனைக்கு கீழ் கண்ட கட்டுரையை பதிவு செய்கிறேன். படியுங்கள் தெளியுங்கள்.
"ஆவணி அவிட்டம்!
இப்பல்லாம் யார் சார் ஜாதியைப் பாக்குறாங்க? நீங்கதான் தேவையில்லாமல் பாப்பான், தமிழன் என்றெல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க, இதெல்லாம் அவுட்டேட் என்று கூறும் படித்த மேதாவிகள் பார்ப்பனர் அல்லாதாரில் உண்டு. கெட்டியாக மூடிக்கொண்டிருக்கும் இந்த அறியாமைக் கண்களைத் திறக்க இதோ ஒரு செய்தி. ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் திரு. வைத்தியநாதய்யரை ஆசிரியராகக் கொண்ட தினமணி (1.8.2009, பக்கம் 4) ஏட்டில் இடம்பெற்றுள்ள சேதிதான்.
ஆவணி அவிட்டத் தினத்தன்று (ஆகஸ்ட் 5) இணைய தளம் மூலம் வேத மந்திரங்களைக் கேட்டு பூணூல் மாற்றிக் கொள்ளும் வசதியை டிரெடிஷனல் விஸ்டம் என்ற அமைப்புச் செய்துள்ளது.
www.traditionalwisdom.in என்ற இணைய தளம்மூலம், கட்டணம் ஏதுமின்றி, வெளிநாட்டில் உள்ளோரும் அன்றைய தினம் வேத மந்திரங்களைக் கேட்டு பூணூலை மாற்றிக் கொள்ளலாம். அதற்கான நேரங்கள் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்கள் அறிய... (ஒரு முகவரி கொடுக்கப்பட்டுள்ளது).
..... ..... .....
இதற்குப் பிறகும் இப்பல்லாம் யார் சார் ஜாதியைப் பாக்குறாங்க? என்று எவராவது மே(ல்)தாவித்தனமாகச் சொல்வார்களே யானால் அவர்களுக்கு ஆப்புக் கொடுக்க இதனைக் கத்தரித்து சட்டைப் பைக்குள்ளேயே தயாராக வைத்துக் கொள்ளலாம்.
பூணூலை மாற்றுவது எதற்காக? அழுக்கடைந்த சட்டையைச் சலவை செய்து மாற்றிக்கொள்வது போன்றதா இது?
அதுவரை பார்ப்பனச் சிறுவனாக இருந்தவன், துவிஜாதியாக இரு பிறப்பாளனாக பிராமணனாக ஆக்கப்படுவதற்குப் பெயர்தான் பூணூல் கல்யாணம். வருடந்தோறும் அதனைப் புதுப்பித்துக் கொள்வதற்குத்தான் இந்த ஆவணி அவிட்டம்.
இன்னும் சில அறிவு ஜீவிகள், ஏன் சார் நம்ப ஆசாரி, பத்தர், செட்டியார் எல்லாம்கூட பூணூல் போட்டுக் கொள்கிறார்களே, பார்ப்பனர்களை மட்டும் குறை சொல்லலாமா? என்று கேட்பதுண்டு.
இது புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதைதான். சாஸ்திரத்தில் சூத்திரர்கள் பூணூல் போட இடம் இல்லையே.
சூத்திரன் பிராமண ஜாதிக் குறியைபூணூல் முதலியவற்றைத் தரித்தால் அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிட வேண்டும் (மனுதர்மம் அத்தியாயம் 9, சுலோகம் 224) என்கிறது மனுதர்மம்.
பார்ப்பனர்கள் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் என்று ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, பூணூல் மாட்டுவது புதுப்பிப்பது என்பது நம்மைச் சூத்திரன் என்று இழிவுபடுத்தும் அதிகாரப்பூர்வமான ஏற்பாடு என்பதை சற்சூத்திரர்கள் அறிவார்களாக!
"தமிழர்களே, உங்கள் சூத்திரப் பட்டம் ஒழிய பார்ப்பானைப் பிராமணன் என்று அழையாதீர்!"
- தந்தை பெரியார்.
--------------------- மயிலாடன் அவர்கள் 1-8-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை"
எஸ்கலேஷன் ஷரத்து = மேல்தொடர்பு ஷரத்து
//இப்போது ஒரு சிறு சம்சயம்//
സംശയം
அது இதுதானே டோண்டு சார்... :-)
//இது புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதைதான். சாஸ்திரத்தில் சூத்திரர்கள் பூணூல் போட இடம் இல்லையே.//
ஆக, பார்ப்பனர்கள் புலிகள்தான் என ஒத்து கொள்கிறீர்கள். :)))
//பூணூலை மாற்றுவது எதற்காக? அழுக்கடைந்த சட்டையைச் சலவை செய்து மாற்றிக்கொள்வது போன்றதா இது?//
இதை தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க? சொன்னாலும் புரியாது ஆளை விடுங்கள்.
//சூத்திரன் பிராமண ஜாதிக் குறியைபூணூல் முதலியவற்றைத் தரித்தால் அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிட வேண்டும் (மனுதர்மம் அத்தியாயம் 9, சுலோகம் 224) என்கிறது மனுதர்மம்.//
இப்போ என்ன மனுதர்மம் இங்கே இருக்கு? இஷ்டப்பட்டா நீங்களும் பூணல் போட்டுக்கலாமே. யார் தடுப்பது? கடந்து போன விஷயத்தை வைத்து இப்போ ஏன் கேவல் எல்லாம்?
அது சரி, இதென்ன கூத்து? பெரியார் விஷயங்களை வேற யாரும் பப்ளிஷ் பண்ணக்கூடாதுன்னு அழிச்சாட்டியம் பண்றாரே விரமணி? அவர் செய்கைக்கும் நீங்கள் சாடின மனுசாத்திரத்துக்கும் என்னங்காணும் வித்தியாசம்?
வந்ததுதான் வந்தீங்க, உங்க இஸ்ரேல் பற்றிய பதிவில் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறாமல் எஸ்ஸாயிட்டீங்களே? இதைத்தான் பெரியார் கற்றுத் தந்தாரா?
முதல் தடவையாக எனது இடுகைக்கு வந்ததற்கு நன்றி.
பை தி வே போலி தமிழ் ஓவியா விஷயம் எந்த மட்டில் உள்ளது? நான் உங்களுக்கு கொடுத்த ஆலோசனைகளை செயல்படுத்துங்கள். விஷயம் தெரிய வேண்டுமானாலும் போயும் போயும் டோண்டு என்கிற பாப்பானைப் போய் கேட்பதா என்றெல்லாம் தயங்காதீர்கள். நம்ம கருத்து வேற்றுமை வேறு, உங்களுக்கு வேண்டிய தகவல் தருவது வேறு.
முடிந்தால் சென்னையில் இருப்பின் வலைப்பதிவர் சந்திப்பில் சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//dondu(#11168674346665545885) said...
//இது புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதைதான். சாஸ்திரத்தில் சூத்திரர்கள் பூணூல் போட இடம் இல்லையே.//
ஆக, பார்ப்பனர்கள் புலிகள்தான் என ஒத்து கொள்கிறீர்கள். :)))
//பூணூலை மாற்றுவது எதற்காக? அழுக்கடைந்த சட்டையைச் சலவை செய்து மாற்றிக்கொள்வது போன்றதா இது?//
இதை தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க? சொன்னாலும் புரியாது ஆளை விடுங்கள்.
//சூத்திரன் பிராமண ஜாதிக் குறியைபூணூல் முதலியவற்றைத் தரித்தால் அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிட வேண்டும் (மனுதர்மம் அத்தியாயம் 9, சுலோகம் 224) என்கிறது மனுதர்மம்.//
இப்போ என்ன மனுதர்மம் இங்கே இருக்கு? இஷ்டப்பட்டா நீங்களும் பூணல் போட்டுக்கலாமே. யார் தடுப்பது? கடந்து போன விஷயத்தை வைத்து இப்போ ஏன் கேவல் எல்லாம்?
அது சரி, இதென்ன கூத்து? பெரியார் விஷயங்களை வேற யாரும் பப்ளிஷ் பண்ணக்கூடாதுன்னு அழிச்சாட்டியம் பண்றாரே விரமணி? அவர் செய்கைக்கும் நீங்கள் சாடின மனுசாத்திரத்துக்கும் என்னங்காணும் வித்தியாசம்?
வந்ததுதான் வந்தீங்க, உங்க இஸ்ரேல் பற்றிய பதிவில் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறாமல் எஸ்ஸாயிட்டீங்களே? இதைத்தான் பெரியார் கற்றுத் தந்தாரா?
முதல் தடவையாக எனது இடுகைக்கு வந்ததற்கு நன்றி.
பை தி வே போலி தமிழ் ஓவியா விஷயம் எந்த மட்டில் உள்ளது? நான் உங்களுக்கு கொடுத்த ஆலோசனைகளை செயல்படுத்துங்கள். விஷயம் தெரிய வேண்டுமானாலும் போயும் போயும் டோண்டு என்கிற பாப்பானைப் போய் கேட்பதா என்றெல்லாம் தயங்காதீர்கள். நம்ம கருத்து வேற்றுமை வேறு, உங்களுக்கு வேண்டிய தகவல் தருவது வேறு.
முடிந்தால் சென்னையில் இருப்பின் வலைப்பதிவர் சந்திப்பில் சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
வாழ்க! வளர்க !!
ஒற்றுமை ஓங்குக!!!
//பை தி வே போலி தமிழ் ஓவியா விஷயம் எந்த மட்டில் உள்ளது? நான் உங்களுக்கு கொடுத்த ஆலோசனைகளை செயல்படுத்துங்கள். விஷயம் தெரிய வேண்டுமானாலும் போயும் போயும் டோண்டு என்கிற பாப்பானைப் போய் கேட்பதா என்றெல்லாம் தயங்காதீர்கள். நம்ம கருத்து வேற்றுமை வேறு, உங்களுக்கு வேண்டிய தகவல் தருவது வேறு.//
நண்பர் தினப் பரிசு
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் உடன்பாட்டின் படி பாமகவுக்கு ஒரு டெல்லி மேல்சபை உறுப்பினர் கொடுக்க வேண்டுமே
ஜெ. கொடுக்காவிட்டால்? ஷரத்து மீறியதாகுமா?
டாகடர் எங்கே முறையிடுவார்?
அரசியல் சூறாவ்ளியில் அனிதாக்களே பறக்கும் போது?
///பூணூலை மாற்றுவது எதற்காக? அழுக்கடைந்த சட்டையைச் சலவை செய்து மாற்றிக்கொள்வது போன்றதா இது?//
இதை தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க? சொன்னாலும் புரியாது ஆளை விடுங்கள்.//
சொல்லுங்க புரிஞ்சுக்க முயற்சி பண்ணுறேன்.
//இப்போ என்ன மனுதர்மம் இங்கே இருக்கு? இஷ்டப்பட்டா நீங்களும் பூணல் போட்டுக்கலாமே. யார் தடுப்பது? கடந்து போன விஷயத்தை வைத்து இப்போ ஏன் கேவல் எல்லாம்?//
இந்த கேள்வி உங்களும்தான்.
பூணூல் என்பது ஆதிகாலத்து விச்யம். அதையும் அதைப்போன்ற பல விசயங்களையும் இன்னும் பிடித்துவைத்து கொண்டாடிக்கொண்டிருக்கிறீர்கள்.
மேலும், பார்ப்பனர்கள் தங்களை மற்றவர்களிடமிருந்து தனித்து காட்டு இப்படிப்பட்ட ஆச்சாரங்களைப் பயன்படுத்துகிறார்கள். மதம், கடவுள் என்பதெல்லாம் கப்சா. இஙுகு சாதியுணர்வுதான் தீபம் போடப்படுகிறது.
இப்படி நீங்கள் செய்து கொண்டு, மற்றவனை மனுவைப்பிடித்து தொங்குகிறாயா என்று மற்றவரைக்கேட்பது எவ்வகையில் நியாயம் ராகவா?
மனுவையே எடுத்துக்கொண்டாலும், உங்கள் சாதிச்சட்ங்குகள் பலபல அவர் சொன்னவற்றிலும் உள்ளன் மனு எழுதிய புத்தகத்தைப் பார்க்காத பார்ப்பனர்கள் வாழ்க்கையில் கூட மனு நன்றாக ஜாம் ஜாம் என்று உள்ளான்.
//August 02, 2009 5:10 PM
தமிழ் ஓவியா said...
///பூணூலை மாற்றுவது எதற்காக? அழுக்கடைந்த சட்டையைச் சலவை செய்து மாற்றிக்கொள்வது போன்றதா இது?//
இதை தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க? சொன்னாலும் புரியாது ஆளை விடுங்கள்.//
சொல்லுங்க புரிஞ்சுக்க முயற்சி பண்ணுறேன்.
//
ஒரு மயிரும் வேண்டாம். உனக்கு என்ன தான் புரிஞ்சுது, இதை நீ புரிஞ்ச்க்குற்துக்கு? முதல்ல மத்தவன் உணர்ச்சிகளைப் புரிஞ்சுக்கறதுக்கு முயற்சி பண்ணுங்க.
உலகம் பரந்த இணையத்துல வெறுப்பை உமிழும் குப்பைகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்.
இது முதலில் உன் மரமண்டைக்குள் ஏறினால், அப்புறம் பூணூல் பத்தி விவாதிப்போம்.
//
இது புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதைதான். சாஸ்திரத்தில் சூத்திரர்கள் பூணூல் போட இடம் இல்லையே.
//
ஐயோ, தோடா...
பார்ப்புக்கள் புலிகளா ?
உடல் வலிமையில்லாத காரணத்தால் எந்த ஒரு முடிவையும் பயந்து நடுங்கி எடுக்கும், பார்ப்புக்கள் புலிகளாம்.
இதைவிட பெரிய காமடி எதுவுமே கிடையாது.
//www.traditionalwisdom.in என்ற இணைய தளம்மூலம், கட்டணம் ஏதுமின்றி, வெளிநாட்டில் உள்ளோரும் அன்றைய தினம் வேத மந்திரங்களைக் கேட்டு பூணூலை மாற்றிக் கொள்ளலாம். அதற்கான நேரங்கள் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்கள் அறிய... (ஒரு முகவரி கொடுக்கப்பட்டுள்ளது).//
நன்றி தமிழ் ஓவியா லிங்க் கொடுத்ததற்கு.
நான் தற்பொழுது துபாயில் உள்ளேன் .ஆவணி அவிட்டம் அன்று என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தேன்.
நல்ல வேலை கடவுள் புண்ணியத்தில் நீ்ங்களே லிங்க் கொடுத்து விட்டீர்கள்.
மிக்க நன்றி.
முரளி
பெரியார் வாழ்ந்த காலம் வேறு.
நாம் வழும் காலம் வேறு
காலம் எவ்வளவோ மாறிப்போச்சு.
பிராமணர்களில் ஒரு சிறு பிரிவினரை தவிர பெரும் பகுதியினர் நல்ல இதய சுத்தியுடன் ஆத்மார்த்த உணர்வுடன் ஜாதி,மத எல்லைகளை எல்லாம் உடைத்து சரி சமமாய் அனைத்துதர மக்களுடன் அன்பு பாரட்டும் செயல்களும் செய்திகளும் ஏராளம்.
இன்னும் தனது பிற்பட்ட ஜாதியினரது ஓட்டு வங்கியை காப்பாற்றும் கயமை எண்ணத்துடன் செயல்படும் நடிப்பு சுதேசி அரசியல் தலைவர்கள் வேண்டுமென்றால் பார்ப்பணர் எதிர்ப்பு,துவேஷம் ,பெரியார் புராணம் பாராட்டல் போன்றவற்றை செய்து மகிழட்டும்.அது அவர்களது புழைப்பு.
பிறர் அதை தவிர்த்து நட்பு பாரட்டி மகிழலாமே.
கிருஷ்ணகுமார்.
கிருஸ்ணகுமார்!
அப்படியில்லை. இன்றைய் தலமுறை முன்றைய தலைமுறையோடு பார்க்கும்போது, மிகத்தீவிரமாக ஜாதிப்பற்றோடு இருக்கிறது.
பார்ப்பன வலைபதிவாளர்க்ளின் ஜாதீயப்பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களைப் படித்தால் புரியும்.
தொண்டுவின் பிளாக்கும் இதில் அடங்கும்.
‘நான் வடகலை அயங்கார்...அதில் பெருமையடைகிறேன்’ என்ற அந்த டிவிப்பெண்ணுக்குத்தான் எவ்வளவு ஆதரவு. அதை ஆத்ரித்து, அதைப்போல்வே சொன்ன தொண்டு ராகவனுக்கும்தான் எவ்வளவு ஆதரவு!
இத்தலைமுறைதானே செய்கிறது?
அமெரிக்காவுக்குப்போனாலென்னா? அவுச்த்ரேலியாவுக்குப் போனாலென்ன?
மனம் அதே ‘நாம் பார்ப்பன ஜாதி. நம்மை எதிர்க்க முடியுமா? நாம் எப்படிப்பட்டவர்கள்! அணிதிரளுங்கள் பார்ப்பனர்களே! என்பது இந்த தலைமுறைதான்.
தமிழ்ப்பார்பன்ருக்கென்றே இருக்கும் வலைபதிவுக்கும் ஆர்க்கிட்டுக்கும் போய்ப்பாருங்கள். உஙகள் கனவு தவிடுபொடியாகும்!
கனவுலகத்தில் வாழாதீர்கள்.
கேள்விகள்:
எம்.கண்ணன்
1. ஆவணி அவிட்டம் வீட்டிலேயாவா ? இல்லை உறவினர்கள் / நண்பர்களுடன் கூடி கோவில் அல்லது மண்டபத்திலா ?
2. காயத்ரீ ஜபத்தினன்று முழுவதுமாக 1008 பண்ணுவீரா இல்லை 108 தானா ?
3. வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நன்றாக வரும் என குழந்தைகளுக்குச் சொல்வார்கள். இது நிஜமா ? ஏதேனும் ஆய்வினால் கண்டறியப்பட்டிருக்கிறதா ?
4. சன் டிவியின் ஆரம்ப வருடங்களில் ஞாயிறு மாலை 4 அல்லது 4.30 மணிக்கு ஒரு சமையல் நிகழ்ச்சி வருமே ? (பெயர் மறந்துவிட்டது) அந்த நிகழ்ச்சியின் சிடி/டிவிடி கிடைக்குமா ?
5. ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடை விளம்பரத்தில் ஸ்ரீதேவியின் மூப்படைந்த முகத்தினைப் பார்த்தவுடன் உங்களுக்கு எந்தப் படத்து இளமையான ஸ்ரீதேவி ஞாபகம் வந்து அங்கலாய்க்க வைக்கும் ? (யாரிடமோ தேங்க்ஸ் சொல்வது போல முகத்தை ஆட்டுகிறாரே - அதற்கான ஜாலி டயலாக் ஒண்ணு எழுதுங்களேன்)
6. எந்த ஜோடியின் காதல் காட்சிகள் (திரையில்) டாப் ? ஏன் ? சிவாஜி - பத்மினி, சிவாஜி - கே.ஆர்.விஜயா, சிவாஜி - ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் - லதா, எம்.ஜி.ஆர் - சரோஜாதேவி ? எந்தப் படங்களில் இவர்களது காதல் காட்சிகளை மிகவும் ரசித்தீர்கள் ?
7. தென்னாடுடைய சிவனே போற்றி - சிவனுக்கு தென்னாடு என ஏன் சொல்லப்படுகிறது ? இதன் விரிவான அர்த்தம் என்ன ?
8. ஹமாம் சோப்பின் 'என் பெண்ணுக்கு தன்னம்பிக்கை போயிடும்' என்கிற அபத்தமான விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள். அதென்ன நலங்குமாவு சோப் ?? நலங்குமாவு என இதற்குமுன் கேள்விப்பட்டதே இல்லையே ? சிந்தால், லைஃப்பாய், ஹமாம், ரெக்சோனா, லக்ஸ், சந்தூர், சந்திரிகா, மெடிமிக்ஸ் இவையே அதிகம் விளம்பரம் செய்யப்படும் சோப்புகளா ? எது பெட்டர் ?
9. லக்கிலுக்கின் சைபர் கிரைம் தொடர் குமுதம் ரிப்போர்ட்டரில் படிக்கிறீர்களா ? ரிப்போர்ட்டர் சேல்ஸ் அதிகமாமே ? விகடனும் போட்டியாக நிருபரின் தொடர் ஒன்று வெளியிடுகிறதே ? அடுத்து என்ன 'ஒரு நடிகையின் கதை' மீள் தொடராக வருமா ?
10. அதிகம் சர்குலேஷன் உள்ள ஆங்கில பத்திரிக்கைகளே ரூ 3 அல்லது 3.50 ரூ4 என்றெல்லாம் விற்கையில், தமிழ் தினசரிகள் (தினகரன் ரூ.2 நீங்கலாக) - எப்படி அதிக விலை வைத்து விற்கிறார்கள் ? (எ.கா: தினமலர், தினத்தந்தி) எப்படி ரூ.3 அல்லது 3.50 விலையை குறைக்காமலும் சர்குலேஷனை மெயிண்டெயின் பண்ணுகிறார்கள் ?
எம்.கண்ணன்
வரும் வியாழனுக்கான பதில்கள் பதிவின் கேள்விகள் 60க்கும் மேலாகி விட்டதால், உங்கள் கேள்விகளுடன் 13-ஆம் தேதிக்கான பதிவு ஆரம்பிக்கும்.
8-ஆம்தேதிக்கான பதிவு அன்று காலை சரியாக 5 மணிக்கு வெளியாகும்படி அமைத்திருக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அஞ்சாவது படிக்கும் போதே செலிபிரட்டி ஆயாச்சா!?
// dondu(#11168674346665545885) said...
எம்.கண்ணன்
வரும் வியாழனுக்கான பதில்கள் பதிவின் கேள்விகள் 60க்கும் மேலாகி விட்டதால், உங்கள் கேள்விகளுடன் 13-ஆம் தேதிக்கான பதிவு ஆரம்பிக்கும்.
8-ஆம்தேதிக்கான பதிவு அன்று காலை சரியாக 5 மணிக்கு வெளியாகும்படி அமைத்திருக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
2009 காலண்டர்படி ஆகஸ்ட் 6-ஆம்தேதிதானே வியாழக்கிழமை
ஏன் இந்த மாற்றம்?
காரணம்?
//2009 காலண்டர்படி ஆகஸ்ட் 6-ஆம் தேதிதானே வியாழக்கிழமை. ஏன் இந்த மாற்றம்? காரணம்?//
காரணம் ஒன்றுமில்லை. 8-ஆம் தேதி என்பது தட்டச்சுப் பிழைதான். அதை 6-ஆம் தேதி என படிக்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment