அனானி (120 கேள்விகள் கேட்டவர்):
51. சென்னை உஸ்மான் சாலையில்தான் தங்க நகைக் கடைகள் இருப்பதன் காரணம் யாது?
பதில்: தி.நகரில் மிக முக்கியமான தெரு உஸ்மான் சாலை. தி.நகர் பஸ்கள் கிட்டத்தட்ட எல்லாமே அத்தெரு வழியாகத்தான் போகும் வரும். மேலும் தி.நகர் சற்றே வசதியானவர்கள் வசிக்கும் இடம். இம்மாதிரி பல காரண்ங்கள் ஒன்று சேர்ந்து இவ்வாறு ஆயிற்று.
52. இலங்கையில் உள்ள இனப்பிரச்னை எப்போது முடியும்?
பதில்: தெரியவில்லை.சீக்கிரம் இது முடிவுக்கு வரவேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன்.
53. கலைஞர், ஜெயலலிதா இவர்களின் பேச்சு,எழுத்து திறமைகளை ஒப்பிடுக?
பதில்: இரண்டிலும் அதிகம் சோபிப்பவர் கலைஞர்.
54. சென்னை கராத்தே தியாகராஜன் எப்படி உள்ளார்?
பதில்: காங்கிரசில் சௌக்கியமாக இருக்கிறார். கடைசியாக நான் அவரைப்ற்றி அறிந்த சேதிக்கு இந்த உரலுக்கு செல்லவும்.
55. எல்லோர் பிள்ளைகளும் பெற்றோர் சொல்வதைக் கேட்காமல் ஊதாரித்தனமாகச் செலவு செய்கிறார்களே?
பதில்: "இக்காலப் பசங்களுக்கு சொகுசே பிரதானமாகி விட்டது, சுத்தமா மரியாதையே இல்லை. அரசைத் துச்சமாக நினைக்கிறார்கள். தேகப் பயிற்சி செய்வதை விட வாய்க்கு அதிகப் பயிற்சி கொடுத்து வம்பு பேசவே ஆசைப்படுகிறார்கள். குழந்தைகள் கொடுங்கோலர்களாகி விட்டார்கள். வீட்டுக்கு அடங்குவதில்லை. தாய் தந்தையரை எதிர்த்து பேசுகின்றனர். பெரியவர்கள் வந்தால் மரியாதையாக எழுந்து நிற்பதையே விட்டு விட்டனர். நாசுக்கிலாமல் வாயில் உணவை அடைத்துக் கொள்கின்றனர். ஆசிரியர்களிடம் அடாவடி செய்கின்றனர்."
மேலே இருப்பது சமீபத்தில் கி.மு. 399-ல் காலமான சாக்ரட்டீஸ் கூறியதாக இப்போது அறியப்படுகிறது. இல்லை, இது சாக்ரட்டீஸ் சொன்னது இல்லை என்று சிலர் வாது புரிய தயாராகலாம். சரி, சாக்ரட்டீஸ் சொல்லவில்லை. யாரோ பொல்லோனியஸ் கூறியிருப்பார், அரிஸ்டாட்டிலாகக் கூட இருக்கலாம். அதை விடுங்கள். நான் சொல்ல வருவது வேறு.
அந்தக் காலம் போல வருமோ என்று பெரிசுகள் என்னைப் போன்ற இளைஞர்களிடம் இப்போதும் பெருமூச்சு விடும்போது, நான் அவர்களிடம் சாக்ரட்டீஸ் கூறியதாகச் சொல்லப்படுவதை பெயர் குறிப்பிடாமல் கூற, அவர்களும் ஆவலுடன் யார் சொன்னது என்று கேட்க நான் சாக்ரட்டீஸ் கூறியது என்று போட்டு உடைப்பேன். நேற்றுக் கூட அறுபது வயது இளைஞனாகிய இந்த டோண்டு ராகவன், 55 வயசான ஒரு பெரிசிடம் இதைக் கூற அவர் ரொம்பவே நொந்துப் போனார்.:)))
"ஒவ்வொரு தலைமுறையும் தான்தான் செக்ஸைப் பற்றிக் கண்டுபிடித்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறது" என்று ஹர்ஷர் காலத்தில் வாழ்ந்த வாத்சாயனர் வேறு கூறியிருக்கிறார். அக்கால ஆசிரியர்கள் போல இக்காலத்தில் எங்கு கிடைக்கிறார்கள் என்று சமீபத்தில் 1930-ல் வெளி வந்த தனது "ஏட்டிக்கு போட்டி" புத்தகத்தில் பேராசிரியர் கல்கி பொருமியிருப்பார். இதுவும் மேலும் நான் இந்த விஷயம் பற்றி எழுதியதைப் பார்க்க இந்த உரலுக்கு செல்லவும்.
56. துப்புரவுப் பணிகளைத் தனியார்மயம் ஒப்படைககப்பட்ட பின், அது எப்படி உள்ளது?
பதில்: ஆரம்ப சூரத்தனம் எல்லாம் போயே போயிந்தி. மேலும் நகரசபை துப்புரவு தொழிலாளிகள் வேடிக்கை பார்க்க எங்கள் ஏரியாவில் தனியார் ஊழியர்கள்தான் வேலை செய்கிறார்கள். சம்பளம் என்னவோ முன்னவருக்குத்தான் அதிகம்.
57. சேலம் இரயில் கோட்டம் முழுமையாய் செயல்படுகிறதா?
பதில்: எனக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது.
58. நல்ல நண்பனை எப்படி கண்டு கொள்வது?
பதில்: உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. இதைவிட தெளிவாக யாரேனும் கூற இயலுமா?
59. செல்போனில் ஒருவரையொருவர் பார்த்துப் பேசும் வசதி 3 ஜி-ல் உண்டா?
பதில்: தெரியவில்லையே. அப்படியே வந்தாலும் போனை எங்கே வைத்து கொண்டு பேசுவது? இந்தப் பதிவர் மாதிரியா? ரொம்ப தமாஷா இருக்கும். இல்லை அப்படியெல்லாம் சர்க்கஸ் செய்து போனை பிடிக்க வேண்டாம் என நேற்று (05.01.2009) பங்களூரில் என்னை சந்தித்த பதிவர் ஒருவர் கூறினார். வந்த பதிவர்களில் யார் அதை கூறியது என்பதை மறந்து விட்டேன். இக்கேள்விக்கு மேலும் பதிலளிக்க அவரையே அழைக்கிறேன்.
60. பகலில் தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதை யாரும் கண்டு கொள்வதில்லயே?
பதில்: அம்மாதிரியான விளக்குகளுக்கு டைமரை செட் செய்து வைத்திருப்பார்கள். ஆனால் அம்மாதிரி செட்டிங்குகள் எல்லாம் ஆற்காட்டார் மின்சாரத்திடம் செல்லாது. பவர்கட் காரணமாக அந்த டைமர்கள் சரியான நேரத்தில் ட்ரிப் ஆகாது. விளைவு நீங்கள் சொல்வது போலத்தான்.
61. மாணவர்களுக்கு தமிழக அரசால், வழங்கப்படும் இலவச சைக்கிள் திட்டத்தில் பயனாளிகளில் வசதி படைத்தவர்களும் உள்ளனரே?
பதில்: வசதி இல்லாதவர்களுக்கு என்று வைத்தாலும் பொய்யாக சான்றிதழ் கொண்டு வருவார்களே.
62.எதிர்க்கட்சித் தலைவர்கள் சோர்ந்து போயுள்ளனரா, தேர்தல் முடிவுகளை பார்த்து?
பதில்: அவர்கள் புத்திசாலிகளாக இருந்தால் அம்மாதிரி எல்லாம் சோர்ந்து போகக்கூடாது. என்ன செய்வது அப்படியெல்லாம் புத்திசாலிகள் அங்கில்லை என்கிறீர்களா? யோசிக்க வேண்டிய விஷயம் அது.
63.குடி குடியைக் கெடுக்கும்,தெரிந்த பிறகும் டாஸ்மார்க்கே கதி என இருப்போரை?
பதில்: குடி குடியைக் கெடுக்கும், புகை பிடித்தால் புற்று நோய் வரும். சூதாட்டத்தில் ஈடுபட்டால் குடும்பம் திவாலாகும் என்றெல்லாம் புத்தகத்தில் படித்த ஒருவன் உடனே நிறுத்தி விட்டானாம், புத்தகம் படிப்பதை.
64. வில்லிசைக் கலிஞர் சுப்பு ஆறுமுகத்தின் வில்லிசை கேட்டு இருக்கிறீர்களா? எப்படி?
பதில்: ஆகா கேட்டிருக்கிறேன். அற்புதமாக பாடுவார். அவருடைய குழு அவருக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்குகிறது.
65. எம்.எல்.ஏ./எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியால் பெரும் பங்கு லாபம் யாருக்கு?
பதில்: நல்ல நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட திட்டம். ஆனால் என்ன செய்வது? எல்லோருமே சோ மாதிரி இல்லையே.
66. பெற்றோருக்குப் படியாத பிள்ளைகளின் எண்ணிக்கை கூடி கொண்டே பொகிறதே? பெண்பிள்ளைகளும் இப்படி என்றால்?
பதில்: கேள்வி எண் 55 பார்க்கவும்.
67. நக்சலைட்டுகள் திருந்தி விட்டார்களா?
பதில்: நாய் வால் நிமிர்ந்ததா?
68.அதிமுக காளிமுத்து-ராபின் மெயின் கேசு என்னாச்சு?
பதில்: காளிமுத்து இறந்து விட்டார். கேசும் அவ்வளவுதான் என நினைக்கிறேன். சட்ட நுணுக்கம் அறிந்தவர்கள் மேலே கூறலாம்.
69. அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை போட்டி போட்டு வழங்கும் அரசியல் கட்சிகள் தேர்தலை மனதில் வைத்தா?
பதில்: வேறு என்ன காரணம் இருக்க இயலும் என்கிறீர்கள்? ஏதேனும் வேண்டுதலா பாழாய்ப் போகிறது?
70. இதிலே எது சரி? அ)மன்னிக்கிறவன் கடவுள், மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன் ஆ) மன்னிக்கிறவன் மனுஷன், மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்
பதில்: தவறு செய்வது மனிதவியல்பு, மன்னிப்பது இறையியல்பு என்றுதான் கேள்விப்பட்டுள்ளேன். இது என்ன புதுசா இருக்கு?
71. இந்திரா காந்தி அம்மையாரால் கொண்டுவரப் பட்ட நிகழ்வு - எமர்ஜென்சி மீண்டும் வருமா?
பதில்: நிஜமான வெளி உள் நெருக்கடிகள் இருந்தால் வர இயலும். அல்லது சர்வாதிகார ஆட்சி அமைய வேண்டும். மற்றப்படி அலகாபாத் நீதிமன்ற தீர்ப்புக்கெல்லாம் அது சாதாரணமாக வராது.முன்னொரு மறை வந்ததும் சர்வாதிகாரி அப்போது ஆட்சியில் இருந்ததால்தான்.
72.பொதுவாய் தனியார் மருந்தகங்கள் -ரமணா பாணி சுருட்டல் தொடர்கிறதே?
பதில்: கவலையளிக்கும் விஷயம் இது.
73. தி.மு.க.வுடன் இருந்த கூட்டணிக் கட்சிகள் கருத்து வேறுபாடு காரணாமாய் பிரிந்தனவா? இல்லை திமுகவின் செல்வாக்கை பார்த்தா?
பதில்: கருத்து வேறுபாடுதான். ஒரு கட்சியே கொள்ளையடிப்பது நியாயமில்லைதானே. கூட்டாளி கட்சிகள் வாயில் விரலை வைத்து கொண்டிருக்க வேண்டுமா, என்ற கருத்து வேறுபாடு.
74. விற்கப்படும் மினரல் வாட்டர் எல்லாம் தரமுள்ளதா? அரசு என்ன செய்கிறது?
பதில்: பல மினரல் தண்ணீர் கம்பெனிகள் தரக்குறைவாகத்தான் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால் தருவதில் குறையில்லாததால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
75.தொலைக்காட்சிகளில் வர்ணிப்பாளர்களின் அழகு தமிழை கேட்கும் போது - தேசியக் கவி பாரதி இருந்தால்?
பதில்: இன்பத் தேள் வந்து பாயுது காதினிலே எனக்கூறியிருப்பார்!
( உங்களது மீதி கேள்விகள் அடுத்த பதிவுகளில்தான், மன்னிக்கவும்)
ஸ்ரீராமன்:
1. ஸ்ரீராமபிரானின் பக்தன் அனுமனின் ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு கூடி கொண்டே வருகிறதே பார்த்தீர்களா?
பதில்: மகிழ்ச்சி அடைய வேண்டிய நல்ல விஷயம்தானே.
2. கம்ப ராமயணத்தில் வரும் மானிட கற்பு, தெய்வீக கற்பு, அரக்க கற்பு பற்றி விளக்கம் பக்தி பிரசங்கத்தில் கேட்டுள்ளிர்களா?
பதில்: கேட்டதில்லை. ஆனால் அருச்சுனன் தன் தந்தை இந்திரனைக் காண தேவருலகம் சென்றபோது ஊர்வசி அவனிடம் மயங்கியதாகவும், இந்திரனுக்கும் அவளுக்கும் இருக்கும் தொடர்பால் அவள் தனக்கு தாய் முறை என அருச்சுனன் மறுக்க, இந்த கற்பு கோட்பாடுகள், உறவுமுறை தயக்கங்கள் தேவருலக்த்தில் செல்லாது என அவள் கூறியதை மட்டும் படித்துள்ளேன். இந்த வாக்குவாதத்தால் அவள் அருச்சுனனை ஆண்மையிழக்க சபிப்பதாகவும், அதை ஓராண்டுக்கு மட்டும் செல்லுபடியாக்கி அவன் விரும்போது அதை எடுத்து கொள்ளலாம் என இந்திரன் அனுமதி அளிக்க, அஞ்ஞாத வாசத்தில் அவன் பிருகன்னளையாக வருகிறான் என்கிறது மகாபாரதம்.
3. அயோத்தி சென்று இருக்கிறீர்களா? 4. அங்கு இப்போது ராமர் கோவில் கட்டும் சாதுக்களின் நிலை எப்படியுள்ளது? 5. புராண காலத்தோடு தொடர்பு உள்ள சரயு நதியில் ஸ்நானம் பண்ணியுள்ளீர்களா?
பதில்: இல்லை, ஆகவே மற்ற கேள்விகளே எழவில்லை.
6. தாம்பிராஸின் செயல் பாடு எப்படியுள்ளது?
பதில்: எங்கள் வீட்டின் எதிரே உள்ள மண்டபத்திலவர்களது ஹோமம் நிகழ்ச்சி நடந்தது. நான் போகவில்லை.
7. பிராமணர் தமிழக ஜனத் தொகையில் எத்தனை சதவிகிதம் உள்ளனர் என்ற அறிவிக்கப் படும் தகவல் முன்னுக்குப் பின் முரணாய் உள்ளதே?
பதில்: மூன்று சதவிகிதம்தான் என நான் படித்துள்ளேன். வடக்கே அவர்கள் கணிசமான என்ணிக்கையில் இருந்து அரசியல் ரீதியாகவும் செயலுடன் இருப்பதால் ஓட்டு விவகாரங்களில் அச்சாதியினரும் அங்கீகாரம் பெற முடிகிறது என சோ அவர்கள் ஒருமுறை குறிப்பிட்டது சரி என்றுதான் எனக்கு தோன்றுகிறது.
8. சிறு சிறு கோவில்களில் சொற்ப மாத ஊதியம் பெற்று கொண்டு கஷ்ட ஜீவனம் நடத்தும், ஏழை பிராமணர்களின் குழந்தைக்கு இட ஒதுக்கீட்டு சலுகை அளிக்கும் முயற்சி வெற்றி பெறுமா?
பதில்: அரசு செய்யும் என நம்புவதை விட தாம்பிராஸ் போன்ற அமைப்புகள் அதை செய்வதே அதிக பலனைத் தரும் என்பது என் கருத்து. நாடார்கள் அவ்வாறுதான் முன்னுக்கு வந்தனர்.
9. அரசு இந்துக் கோவில்களை மட்டும் தன் பராமரிப்பில் வைத்து இருப்பது மாறுமா?
பதில்: மதசார்பற்ற அரசு என்று தன்னைக் கூறிக்கொள்ளும் அதே சமயம் இந்து அறநிலைத்துறை அமைச்சர் என்று ஒரு மதத்து கோவில்களுக்கு மட்டும் இருப்பது அரசியல் சட்டத்துக்கே புரம்பானது. யாராவது பொதுநல வழக்கே இதற்கு போடலாம். நான் கூறுவது இதுதான். மற்றமத வழிப்பாட்டுத் தலங்களுக்கும் அம்மாதிரி அமைச்சகங்கள் கொண்டு வாருங்கள் அல்லது இந்து கோவில்களை இந்து அமைப்புகளிடமே தந்து விடுங்கள். ஆனால் யார் இம்மாதிரி வழக்கு போடுவது? அட்டோக்களை சமாளிப்பது?
10. கடவுள் நம்பிக்கை அற்ற திமுக கட்சியினர் கோவில் அறங்காவலராய் இருப்பதை நினைக்கும் போது?
பதில்: வேதம் புதிது சத்தியராஜ் மாதிரி ஆட்கள் மந்திரியாவதில் எந்தக் கெடுதியும் இல்லை என்பதே என் கருத்து. ஆனால் உண்மை நிலை அப்படியில்லையே?
கிரிதரன், வெ.:
1) பாப்ரி மசூதியை ஹிந்து மதவாதிகள் இடித்தது பற்றி உங்கள் கருத்து? அதற்கும் முகலாய மன்னர்கள் இந்து கோவில்களை இடித்ததற்கும் இடையில் நான் ஒரு வேறுபாடும் காணவில்லை.
பதில்: பாப்ரி மசூதியை இடித்தது தவறுதான். அது ஒரு கருப்பு தினம்.
2) பமக அண்ட் கோ “தமிழன் மட்டுமே தமிழகத்தை ஆளவேண்டும்” என்பதற்கும் சிவசேனை மராட்டியரல்லாதவரிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதற்கிடையிலும் ஏதேனும் வித்தியாசங்கள் கூற இயலுமா?
பதில்: சிவசேனா அரசியல் ரீதியாக அதிக சக்தி வாய்ந்தது, ஆகவே அதிக அபாயம் அதனால் உண்டு. மற்றப்படி தமிழனை மட்டுமே ஆதரிப்போம் என பாமக கூறுவதை அப்படியே ஏற்று கொண்டால், எம்ஜிஆர் மலையாளி என்றார்கள், உடனே எம்ஜிஆர் கருணாநிதியின் சாதியும் தெலுன்ஙர் சாதி என்று எடுத்து கூறினார். ஜெயலலிதா டெபாசிட் அவுட். விஜயகாந்த் அவுட். ஆக காமராஜ் மட்டும்தான் பச்சைத் தமிழன் என அக்காலத்தில் கன்னடரான பெரியார் கூறியதும் நினைவுக்கு வருகிறது. இப்போது மருத்துவர் மட்டும்தான் தேறுவார் போலிருக்கிறது.
3) ஒருவன் எவ்வாறு பிராம்மணத்துவத்தை அடைவது? பிறப்பாலா அல்லது ஒழுக்கத்தாலா? (ஸ்ரீராகவேந்திரர் படத்தில் ரஜனிகாந்த் ஒழுக்கத்தால் பிராமணத்துவத்தை அடையலாம் என கூறியுள்ளார்).
பதில்: மகாபாரதத்தில் நச்சுப்பொய்கை படலத்தில் இந்த விஷயமாக யட்சன் கேள்வியும் யுதிஷ்டிரர் பதிலும் இங்கு தருவேன்.
யட்சன்: பிறப்பு, வேதம் ஓதுதல், தர்ம சாஸ்திரங்களைப் பற்றிய அறிவு, ஒழுக்கம் - இவற்றில் எதன் மூலம் பிராமணத்துவம் உண்டாகிறது?
தருமர்: பிராமணத்துவம் உண்டாவதற்குக் காரணம் பிறப்போ, தர்ம சாஸ்திர அறிவோ, வேதம் ஓதுதலோ அல்ல. ஒழுக்கம்தான் பிராமணத்துவத்திற்குக் காரணம். ஒழுக்கமற்றவன் எவனாக இருந்தாலும் அவன் பாழானவனே! கல்வியும், சாஸ்திர அறிவும் மட்டுமே பயனளிப்பவை என்று நினைத்து, அதை மட்டும் பற்றி நிற்பவர்கள் மூடர்களே! தான் கற்ற சாத்திரப்படி நடப்பவனே பண்டிதன். ஒழுக்கத்துடன் நடந்து கொண்டு, யாகத்தில் பற்றுள்ளனவனாக, இந்திரியங்களை அடக்கியவன் எவனோ அவனே பிராமணன்.
4) இந்து மதத்துக்கு மாற ஏன் ஒரு வழியும் இல்லை? மற்றவர்களை நாம் ஏன் நமது மதத்துக்கு வருமாறு அழைப்பதில்லை?
பதில்: போன நூற்றாண்டு வரை நீங்கள் சொன்னதுதான் உண்மையாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. ஆரிய சமாஜத்தினர் ஹிந்து மதத்துக்குள் வெளி மதத்தவரை அனுமதிக்கின்றனர்.
5) எம்பெருமான் ராமனுஜர் தாழ்த்தப்பட்டவர்கள் என அழைக்கப்படுபவர்களையும் பார்ப்பனராக்கி வைணவ மதத்தில் சேர்த்துள்ளார். ஆகவே பார்ப்பன குலத்தில் பிறக்காவிட்டாலும் பார்ப்பனனாக முடியும் அப்படித்தானே?
பதில்: யட்சன் கேட்ட கேள்வியை பிற்கால உதாரணத்துடன் கேட்டுள்ளீர்கள். முந்தைய கேள்வியின் பதில்தான் இப்போதும்.
எம்.கண்ணன்:
1. சாரு நிவேதிதாவின் 'பெருமாள்', லதானந்த் அங்கிளின் ' மாதப்பன்' ; சுஜாதாவின் 'கணேஷ்+வசந்த்' - யாருடைய ஆல்டர் ஈகோ டாப்? யாருடைய பாத்திரப்படைப்பு நிஜத்தின் அருகில்?
பதில்: லதானந்த் மற்றும் சாருநிவேதிதாவின் முறையே மாதப்பன் மற்றும் பெருமாளை நான் அறியேன். ஆகவே எப்படி ஒப்பிடுவது? வேண்டுமானால் ஒன்று செய்யலாம். ஷெர்லாக் ஹோம்ஸ்-டாக்டர் வாட்ஸன், ஹெர்க்யூல் ப்வாரோ (Hercule Poirot) ஜோடியுடன் ஒப்பிடலாம். கணேஷ் வசந்த் ஜோடிதான் டாப். ஏனெனில் நான் ஏற்கனவே கூறியபடி கணேஷ் வசந்த் இருவரும் ஒருவரே.
2. திருமங்கலம் தொகுதி திமுக வேட்பாளர் லதா அதியமானின் மச்சினர், நாத்தனார், மாமியார் என குடும்பமே ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனரே ? திமுகவுக்கு திருமங்கலத்தில் வேட்டா?
பதில்: அஞ்சா நெஞ்சன் அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடுவாரா?
3. 'நிழல்' சண்முகநாதன் மீண்டும் கலைஞரின் பின்னே வந்துவிட்டாரே? என்ன காரணமாக இருக்கும்?
பதில்: பல சமாதான முயற்சிகள் நடந்தன. கலைஞரை பற்றி எல்லா விவரங்களும் தெரிந்த ஒருவரை வெளியில் போக அவ்வளவு சீக்கிரம் விட்டுவிட மாட்டார்கள்.
4. பாலகுமாரன், இல.கணேசன் - காபி வித் அனு - பார்த்தீர்களா ? கணேசன் மிக நன்றாக பேசியதாகப் படுகிறது. (அடுத்த (2ஆம்) பகுதி வரும் சனியன்று ஒளிபரப்பாகும் என தெரிகிறது.)
பதில்: பார்க்கவில்லை, ஏனெனில் எங்கள் வீட்டில் விஜய் டிவி பார்ப்பதில்லை. சோ மௌளி வந்த அப்பேட்டிகூட எனக்கு ஒருவர் முன்கூட்டியே தகவல் சொன்னதால்தான் பார்த்தேன். அதனால் என்ன யூட்யூப்பில் வராமலா போகப், போகிறது? பார்த்தால் போச்சு, தேவையானால் பதிவு ஒன்று போட்டாலும் போச்சு.
5. தற்போது மற்றும் அடுத்த 5 வருடங்களில் ரிடையராகப் போகும் 58+ பெரியவர்களில், அரசு துறையில் இல்லாமல் தனியார் துறையிலிருந்தோ அல்லது பென்ஷன் கிடைக்காத கம்பெனியிலிருந்தோ ஓய்வு பெறுபவர்கள் எதை வைத்து தங்கள் காலத்தை ஓட்ட முடியும் ? பென்ஷன் பிளான் என HDFC போன்றவர்கள் கூறும் திட்டத்தினால் பயன் உண்டா ? இவர்கள் ஓய்வு காலத்தில் தங்கள் குடும்பங்களை எப்படி கவனிப்பது ? அதற்கு உங்கள் ஆலோசனை என்ன?
பதில்: பிரச்சினை என்ன? மாணவர்கள் பரீட்சைக்கு தயார் செய்து, படித்து பாஸ் செய்கிறார்கள். பிறகு படிப்புக்கேற்ப வேலை தேட தங்களை தயார் செய்து கொள்கிறார்கள். வேலை காலத்தில் தங்களுக்கு பிரமோஷன் வருவதற்கான முஸ்தீபுகளையும் செய்கிறார்கள். எல்லாம் செய்பவர்கள், தங்களுக்கும் ஓய்வு பெறும் வயது வரும் என்பதை எப்படி மறக்கிறார்கள்? திடீரென ஓய்வு தரும் அலுவலக ஆணையை கையில் வாங்கி ஏன் நிலை குலைந்து போகின்றனர்? ஏன் ஐயா இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? வருடங்கள் கடப்பதை தடுக்க முடியுமா? முன்கூட்டியே ஓய்வுக்கு பிறகு என்ன செய்வது என்பதை யோசிக்க வேண்டாமா? இது பற்றி நான் எழுதிய பதிவுகள் 1 மற்றும் 2.
6. காதல் காட்சிகளில் நடிகையை நன்கு 'கை'யாளுபவர்/கையாண்டவர் எந்த எந்த ஹீரோக்கள்?
பதில்: எல்லோருமே அதில் மன்னர்கள்தான். அக்காட்சிகளுக்கு மட்டும் டூப் போட மாட்டார்கள்.
7. கிழக்கு பதிப்பகம் இன்னும் உங்களை புத்தகம் எழுத கூப்பிடவில்லையா ? ஏன் ? நீங்களும் கேட்கவில்லையா? அட்லீஸ்ட் மொழி மாற்றத்திற்கு?
பதில்: இல்லை. ஏன் கூப்பிட வேண்டும்? மொழிமாற்றம் ஜெர்மன் அல்லது பிரெஞ்சில் என்றால் வேண்டுமானால் கூப்பிடலாம். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்ய அவர்களிடம் தேவைக்குமதிமாகவே ஆள்பலம் உண்டு.
8. இந்த வருட டிசம்பர் சீசனில் எத்தனை கச்சேரிகளுக்குப் போனீர்கள்? ஆர்வம் உண்டா ? எந்த எந்த பாடகர்கள் (தற்போதைய) பிடிக்கும்?
பதில்: இல்லை போகவில்லை. சங்கீதத்தை ரசிக்கவும் ஒரு திறன் வேண்டும். எனக்கு நது அவ்வளவாக இல்லை.
9. சுஜாதாவின் மறைவிற்குப் பிறகு கமல்ஹாசன் இரா.முருகனை தனது படக்குழுவில் சேர்த்துள்ளாரே? இரா.முருகனால் சுஜாதா இடத்தை இட்டு நிரப்ப முடியுமா?
பதில்: கண்டிப்பாக முடியும். இரா. முருகன் அவர்கள் எழுதிய குறுநாவல் ஒன்று “யானை வருது”. அதை படித்துவிட்டு அதன் சோகத்தால் பாதிக்கப்பட்டு விக்கி விக்கி அழுதேன். அவரிடமே அது பற்றி கூறியபோது அவர் அக்கதையின் நகல் தன்வசம் இல்லை என்றார். உங்களில் யாராவது அதை பெற முடிந்தால் முருகனுக்கு அனுப்பவும். அல்லது எனக்கு தகவல் தரவும். அவரிடம் அக்கதையை நான் சேர்த்து விடுவேன்.
10. பழ.கருப்பையாவின் நேர்முகம் (ஜெயா டிவியில் சென்ற ஞாயிறு - ரபி பெர்னார்ட்) பார்த்தீர்களா ? கலைஞரை ஒரு பிடி பிடித்தது மட்டுமில்லாமல் ஜெ. அடுத்த பிரதமர் என்றெல்லாம் பேசினாரே?
பதில்: ஜெயா டிவியில் அவ்வாறு பேசக்கூடியவர்களைத்தானே சாதாரணமாக அழைப்பார்கள்?
ராஜ மார்தாண்ட ராஜ குலோத்துங்க இரண்டாம் அதிவீர ராம பாண்டியன்:
1. கடைக்கண் பார்வை ->காதல்->மோகம்->காமம்--->உங்கள் கமெண்ட் என்ன?
பதில்: ஜாக்கிரதை, அவளும் கடைக்கண் பார்வை பார்க்க, நீங்களும் அவ்வாறே பார்க்க, உங்கள் இருவரையும் ஸில்வஸ்டர் ஸ்டல்லோன் போல இருக்கும் அவள் தந்தை கடைக்கண் பார்க்க, உங்களைப் பொருத்தவரை காதல்->மோகம்->காமம் என்பது காதல்->மொத்தல்->ஆஸ்பிடல் என்று மாறிவிடப் போகிறது.
2. கோவில்களில் உள்ள கோபுரங்களில், தேரின் சிலைகளில் உள்ள கலவிக் கலை சார்ந்த சிற்பங்களின் தாத்பரியம் என்ன?
பதில்: ஆங்கிலேயர் வருகைக்கு முந்தைய இந்தியர்களின் வாழ்க்கையில் காமமும் ஒரு அங்கமே. அதில் அசிங்கம் ஏதும் இல்லை. ஆங்கிலேயர் வந்ததும், அதிலும் அவர்களது மகா கோர விக்டோரியா மகாராணி வந்ததும்தான் காமம் என்பது அசிங்கம் என்றெல்லாம் போதனைகள் வர ஆரம்பித்தன. நீங்கள் சொல்லும் சிற்பங்கள் வாழ்க்கை ரகசியங்களை கேஷுவலாக போதித்தன.
3. மத்தியப் பிரதேசத்தில் உள்ள "கஜீரகோ"கலவிக்கலை அதி உன்னத உலகப் புகழ் பெற்ற சிற்பக் கோவிலில் பார்த்து ரசித்து உண்டா? இல்லை என்றால் 64 கலையை சொல்லித்தரும் "கஜுராஹோ கோவில்" போட்டோக்கள்/வீடியோக்கள்/மாடல் சிற்பங்கள் இவற்றை பார்த்து ரகசியமாய் ரசித்து உண்டா?
பதில்: கஜுராஹோ சென்றதில்லை. போட்டோக்களை வெளிப்படையாகவே ரசித்துள்ளேன்.
4. ஆயகலைகள் 64 ஐயும், கலவிக்கலையில் சொல்லப் பட்ட 64 நிலைகளையும் பற்றி படித்த அனுபவம் உண்டா?
பதில்: படித்திருக்கிறேன்.
5. அதிவீர ராம பாண்டியனின் பண்டயக் கால கலவிக் கலையை கற்றுத்தரும் "கொக்ககோ சாஸ்திரம்" எனும் புத்தகத்தை இளமைக் காலத்தில் படித்தது உண்டா? கைவசம் இருக்கா?
பதில்: உண்டு, ஆனால் இப்போது கைவசம் இல்லை. சாதாரணமாக அம்மாதிரி புத்தகங்களை படித்ததும் அவை கைவசம் இருக்காது. யாராவது உயிர்த்தோழன் சுட்டு கொண்டு போயிருப்பான். ஆனால் கைவசம் நிச்சயமாக வேறு ஒன்று இருக்கும். :))
6. மைசூர் சாமுண்டீஸ்வரி அச்சகத்திலிருந்து பழங்கால நடிகை சரோஜா தேவி
பெயரில் இரண்டு ரூபாய் விலையில் வெளிவந்த பலான புத்தகங்களை, பிற புத்தகங்களுக்கு இடையே மறைத்து வைத்து படிதத அனுபவம் உண்டா?
படித்திருக்கிறேன். ஆனால் மறைத்து கொண்டல்லாம் அல்ல. இது பற்றி நான் போட்ட சரோஜாதேவி புத்தகங்களும் இன்னும் பிற இலக்கியங்களும் என்ற பதிவை மேலதிகத் தகவலுக்கு பார்க்கவும்.
7. புத்தகப் பிரியரின் புததக சேமிப்பில் அவை இன்னும் இருக்கா? (இது கொஞ்சம் ஒவர் தான், மன்னிச்சுங்கோ சார்)
பதில்: இல்லை. இதற்கெல்லாம் ஏன் மன்னிப்பு கேட்டு கொண்டிருக்கிறீர்கள்?
8. படித்து இருந்தால் முதல் புதத்கம் படிக்கும் போது உங்களின் வயது? மனநிலை? புதத்கம் கொடுத்த அந்த சிகாமணி புண்யவான்?
பதில்: 18 வ்சயது, புத்தகம் “வாழு வாழவிடு” மனநிலை? கைவசம் புத்தகம் இல்லை. புண்யவான் பெயர் நாராயணன்.
9. கலவிக் காட்சிகள் அடங்கிய வண்ணத்தில் தயாரான வெளி நாட்டு புத்தகங்கள் நகரங்களில் உள்ள கல்லூரி விடுதிகளில் ருபாய் 10 தின வாடகைக்கு கிடைத்தது. உங்கள் பொறியியல் கல்லுரி அனுபவம் எப்படி?
பதில்: நான் டே ஸ்காலர். ஆகவே இந்த அனுபவம் இல்லை.
10. முன்பெல்லாம் கல்யாண முதல் இரவுக்கு செல்லும் மணப் பெண்ணிடம், இந்த பலான விசயத்தில் பழம் தின்னு கொட்டை போட்ட பெரிய மனுசிகள், கலவி நுணுக்கங்கள் பற்றி ஆலோசனையும்,அறிவுரையும் சொல்லுவதாய் பழக்கம் இருத்ததே. இப்போது?
பதில்: இப்போதும், அப்படித்தான்.
11. முதல் முதலாய் கலவிக் கலவி பற்றிய "வீடியோ" பார்த்த அணுபவம்?
பதில்: ஐந்து நிமிடங்களிலேயே ஆர்வம் இழந்தேன். கேனத்தனமாக இருக்கும்.
12.30-40 வருடங்களுக்கு முன்னால் வயதுக்கு வரும் சிறுவர்களிடம் பரவலாய்க் காணப் பட்ட "முஷ்டி மைத்துணம்" தற்சமயம் மார்க்கட் இழத்துள்ளதா? என்ன காரணம்? விழிப்புணர்வா? கலவி சுகம் மலிவாய் வாய்க்கிறதா?
பதில்: எந்த உலகில் இருக்கிறீர்கள்? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் பழக்கம் அப்படி போய்விடாது. கலவி சுகம் மலிவாக இருக்கலாம், ஆனால் இது இலவசமாயிற்றே. “காசு கொடுத்து தேவிடியா கிட்ட போறதை விட கல் மறைவுல போய் கைமுட்டி அடிப்பதே மேல்” என ஒரு சரோஜாதேவி புத்தகத்தில் போட்டிருந்தார்களே.
13. பம்பாய் சிவப்பு விளக்குப் பகுதியை பார்வையிட மட்டும் சென்ற அனுபவம் உண்டா?
அப்போது உங்களின் மன நிலை? பெண்கள்,சிறுமிகளின் பரிதாப நிலையை பார்க்கும் போது காம உணர்வின் சப்த நாடியும் அடங்கி ஒடுங்கிய நிலை தானே?
பதில்: நான் தினமும் அலுவலகம் செல்ல பயன்படுத்தும் 65-ஆம் நம்பர் பஸ் ஃபோராஸ் ரோட் வழியாகத்தான் செல்லும். பார்க்கவே ரொம்ப கண்ராவிழாக இருக்கும். அங்கு போய் பணத்தையும் ஆரோக்கியத்தையும் இழப்பதை விட முந்தைய கேள்வியில் சொன்னதையே செய்து விடலாம். எய்ட்ஸும் வராது என ஒரு பிரெஞ்சுக்காரர் கூறியுள்ளார்.
14. பால்வினை நோய்கள் பற்றிய விழிப்புணர்வு பரவலாய் தற்சமயம் எப்படி உள்ளது?
பதில்: விழிப்புணர்வு உள்ளது ஆனால் போதாது.
15. கலவி ரகசியங்கள். பால்வினை நோய் பற்றிய அறிவியல் உண்மைகளை விளக்கும் திரைப் படங்கள் முன்பு வந்தது போல் இப்போது வருவது இல்லயே? என்ன காரணம்? மலையாளப் படங்கள் கூட "உஜாலாவுக்கு" மாறிடுச்சு இல்லையா?
பதில்: சமீபத்தில் 1974 குப்த க்யான் என்னும் ஹிந்திப் படம் பார்த்தேன். பாடம் நடத்துவது போல இருந்தது. பயங்கர அறுவை. அதற்கு பேசாமல் ஜோதி தியேட்டரில் பிட் படங்கள் பார்த்து தொலைக்கலாம். இணையத்திலும் பல தளங்கள் வந்து விட்டன. ஆகவே அம்மாதிரி படங்களுக்கு மார்க்கெட் இல்லை.
16. அரசின் இலவச "நிரோத்" வழங்கும் திட்டம் முழு வெற்றியா?
பதில்: நிறைய பலூன்கள் வானத்தில் பறப்பதாக கேள்வி.
17. ஆட்கொல்லி நோய் "எய்ட்ஸ்" பற்றிய பிரச்சாரம் என்னாச்சு?(புள்ளிராஜவும் பதில் சொல்லலாம்)
பதில்: ஆம், அவரே சொல்லட்டும்.
18. மேலை நாடுகளில் விபச்சாரம் இண்டெர்நெட் மூலம் கலக்குகிறார்களாமே? இந்தியாவில் நிலை எப்படி?
பதில்: அதே மேலை நாட்டு இண்டெர்நெட்டை யார் வேண்டுமானாலும் பார்க்கலாமே. மற்றப்படி இந்தியத் தளங்களுக்கும் குறைவில்லைதான்.
19. மேலை நாடுகளில் ஆண் விபச்சாரம் பற்றிய விளம்பரங்களும் இருக்காமே? கலாச்சார சீரழிவின் உச்சத்திலா உலகம்?
பதில்: இதென்ன போங்கு. பெண்களுக்கும் காம உணர்ச்சி வரும்தானே.
20. தெரு ஒரங்களில் காரின் கறுப்பு கண்ணாடி ஏற்றிக் கொண்டு ,தன்னை மறக்கும் இன்ப ஜோடிகளின் எண்ணிக்கை கூடுதாமே? எங்க போகுது பாழாய்ப் போன சமூகம்?
பதில்: I am afraid, you are protesting too much.
21. வெளியூர்ப் பயணங்களில் தங்கும் விடுதிகளில் உள்ள குளிப்பறைகளில் ரகசியக் கேமிரா வைத்து படம் எடுத்து வலையேற்றி விடுவது பற்றி?இதை சாமளிப்பதற்கு ஆலோசனைகள்?
பதில்: சிங்க முகமூடி போட்டு குளிக்கலாம். சற்று தேடினால் கேமிரா இருக்கும் இடத்தை கணிக்கலாம். ஆவற்றை துணியால் மூடலாம். அல்லது ஓசைப்படாமல் போலீசுக்கு தகவல் தரலாம்.
22. இன்றய இளைய சமுதாயத்தினரில் ஒரு பகுதியினர் சனி ஞாயிறு விடுமுறைக் கொண்டாடத்தில் பலான விசயத்தை 'ஜச்ட் லைக் தேட்'என கருதி வாழ்வை தொலைப்பது பற்றி?
பதில்: இதில் ஆண் பெண் பேதமின்றி எல்லோருமே சுகம் தேடுவதால் அவர்களுக்குள்ளேயே முடித்து கொள்கிறார்கள். வெளியே வராத வரைக்கும் என்ன பிரச்சினை?
23. சின்னஞ் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் பெருசுகளின் காமப் பிசாசுத் தனம் பற்றி?கட்டயிலே போற வயசிலே இதைச் செய்யும் களவாணிகளுக்கு அரேபிய முறையில் தண்டனை?
பதில்: கண்டிப்பாக வெட்டிவிட வேண்டியதுதான்.
24. ஆண்மை குறைவை மருத்துவ,மற்றும் மனோதத்துவ முறையில் நேர்மையாய் சரி செய்யும் ஆங்கில மருத்துவர்கள் இருக்கும் போது-போலி சித்த மருத்துவர்களின் ஆட்டம் பாட்டம் அதிகமாகிக் கொண்டே போகிறதே?
பதில்: தலைமுறை தலைமுறையாக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் டாக்டர். ாளிமுத்து ஆகியோர் இருக்க இது என்னவோ புதிது போல பேசுகிறீர்கள்?
25. எவ்வளவு யோக்கியனையும் ,நிதிமானையும் ,பக்திமானையும், நல்லவனையும், வல்லவனையும் இந்த விசயத்திலே மட்டும் "படு வீக்காய்" படைத்தவனின் படைப்பின் நோக்கம் என்ன? (வம்ச விருத்திக்குதான் என்று சொல்லி விடாதீர்கள்)
பதில்: இது என்ன போங்கு? வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
நக்கீரன் பாண்டியன்:
பாரதி தம்புராட்டி அவர்களின் கண்ணிர்க் கதை கல் நெஞ்சையும் கரைய வைத்துவிடும்.
இவர்களின் சோக வரலாற்றுக்கு யார்/எது காரணம்?
1. நாடு பிடிக்கும் பேராசைக்காரன் திப்பு சுல்தானா?-மண்ணாசை 2. வட கேரளாவிலிருந்து தென் கேரளா ஒடிய வயலாரின் தந்தையா? - உயிர் பயம் 3. தங்கை என்றும் பாராமல் சொத்தை அபகரித்த தாய்மாமனா?-பொன்னாசை 4. வயலாரின் தாய் அனுபவித்த வறுமையா? -தலைவிதி 5. மலட்டுத் தன்மையினால் பிறந்தகம் நோக்கி விரட்டப் பட்ட வயலாரின் முத்த மனைவிக்கு இயற்கை செய்த சதியா? -மருத்துவ ரகசியம் 6. மகனின் மனைவியும் ஒரு பெண்தான் என்ற உணர்வு இல்லமால் கொடுமைகள் செய்த வயலாரின் தாயாரா?-மாமியார் கொடுமைகள் 7. கவிஞர் எல்லோரும் இந்த உலகை மறந்து ஒரு கற்பனை உலகில் வாழும் புலவர் வாழக்கை முறையா?-இறைவனின் சாபமா? 8.கல் ஆனாலும் கணவன், புல்லானலும் புருசன் எனும் தத்துவம் ஆட்கொண்ட பாரதி தம்புராட்டி அவர்களின் பத்தாம் பசலித் தனமா-பெண்ணடிமை. சரி டோண்டு சார் இப்போ நம்ம கேள்விக்கு வருவோம்.
அனாதி காலத்திலிருந்து புலவர்கள்/கவிஞர்கள்/பாடகர்கள்/இசை சம்பந்தங்கள்
1. வறுமையில் வாடி வதங்கி உள்ளனர் 2. குடுபத்தை காக்கும் அறத்திலிருந்து நழுவி உள்ளனர் 3. குடி கெடுக்கும் குடியோடு கும்மாளம் போட்டு மூச்சையும் முழுங்கி மறைந்துள்ளார்கள் 4. வாழும் காலத்தில் பிறரால் மதிக்கப் படமால்,பின் அவர்களின் மறைவுக்குப் பிறகு இந்திரன் சந்திரன் எனப் போற்றப் பட்டுள்ளனர். 5. தான் கொண்ட கொள்கையை அடிக்கடி மாற்றியதால் நிரந்திர புத்தி இல்லை என்று பழிக்க பட்டுள்ளனர்.
6. தானாய்ச் சேர்ந்த திரண்ட செல்வத்தை தீய வழிகளில் தண்ணிராய் செலவழித்து, ஊரெல்லாம் கை நீட்டி கடன் வாங்கி, பின் கலங்கி நின்றுள்ளனர்.
மேலே சொல்லப்பட்டவைகளால் ஏற்படும் பாதிப்பு கொஞ்சமும் இல்லாத கவிஞர்/புலவர்/இசை சம்பந்தங்கள் யாரேனும் உள்ளனரா? இல்லை என்றால் என்ன காரணம்
1. விதிப் பயனா? 2. புகழ் தரும் போதையா? 3. அறிவு மிகுதி தரும் சித்த பிரமையா?
4.கல்வியா? செல்வமா? வீரமா அன்று நாரதர் தொடங்கிய புராணக் கற்பனை கதை - இன்று இயற்கை அன்னையின் கரத்திலா?
பதில்: மிகப் பெரிய கேள்வி. விலாவாரியான பதிலுக்கு ஒரு தனிப்பதிவே போட்டு விடுகிறேன்.
செந்தழல் ரவி:
1. மோடத்தை ஆப் பண்ணி ஆன் பண்ணா தமிழ்மணத்டுல புதுசா ஓட்டு (வாசகர் பரிந்துரை) போட முடியும் என்று சொல்வது எந்த அளவில் உண்மை?
பதில்: அப்படியெல்லாம் அடிக்கடி செய்து மோடம் ரிப்பேராகி செலவு வைத்தால் மேடத்தின் கோபம் உங்கள் மேல் பாயுமே பரவாயில்லையா?
2. நேதாஜி உண்மையிலேயே விமான விபத்தில் இறந்தாரா?
பதில்: அதுதான் உண்மை. எது எப்படியானாலும் இன்னும் அவர் உயிருடன் இருக்கிறார் என எண்ணுவது அபத்தம்.
விஜய்:
1. இந்தியா மீது மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் படையெடுத்தார்கள் என்பதை நம்புகிறீர்களா?
பதில்: பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பாரத வர்ஷம் என்பது ஆஃப்கானிஸ்தானத்தையும் தன்னுள்ளே கொண்டது. ஆனால் இந்த பாரத வர்ஷம் அரசியல் ரீதியான அமைப்பு அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆக நீங்கள் கேட்கும் கேள்விக்கு இல்லை என்பதுதான் என் பதில்.
2. ஜவஹர்லால் நேருவின் Discovery of India புத்தகத்தைப் படித்ததுண்டா? அதில் அவர் எழுதியதை என்னவோ ஆய்வுக் கட்டுறையாக எடுத்துக் கொண்டு அதையே சில சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஆரியப் படையெடுப்பு உண்மை என்று சொல்கிறார்களே, உங்களின் அபிப்பிராயம் என்ன?
பதில்: நேரு அவர்களுக்கு இம்மாதிரி ஆராய்ச்சி எல்லாம் செய்ய ஏது நேரம் இருந்திருக்கிறது? ஏதோ அவர் அக்காலக் கட்டங்களில் படித்த புத்தகங்களிலிருந்து எழுதியிருக்கிறார். அவர் படித்த புத்தகங்களை எழுதியவர்களும் நேரடியாக ஆராய்ச்சி செய்து தெளிவு பெற்றார்களா என்பதும் யோசிக்கத் தக்கது.
3. ஹராப்பா மொஹஞ்சதாரோவில் இருந்தவர்கள் தான் உண்மையான இந்தியர்கள். அவர்கள் தான் இன்று தமிழகத்திலும் இருக்கிறார்கள் என்று ஒரு சாரார் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: நானும் படித்திருக்கிறேன். அங்கு கிடைத்த சில எழுத்து மாதிரிகளில் தமிழ் போன்ற உருவமைப்பு இருக்கிறதாக கூறிக் கொள்கிறார்கள்.
4. கர்நாடக சங்கீதம் கேட்பதுண்டா?
பதில்: இப்போதுதான் அதையெல்லாம் கேட்கும் ஆசை வருகிறது. அவற்றை கேட்டு கொண்டே மொழிபெயர்ப்பு செய்வது சுகமான அனுபவம்.
5. மார்கழி சீசனில் கச்சேரி போகும் வழக்கமுண்டா?
பதில்: முதலில் இண்டரஸ்ட் இல்லை. பிறகு அங்கெல்லாம் போனால் மேகலா, கஸ்தூரி, கோலங்கள் ஆகிய சீரியல்களை தவற விட நேரிடும்.
6. அயல் நாட்டு மொழிகளான ஃப்ரென்சு ஜர்மன் இத்தாலி போன்ற மொழிகளில் பாண்டித்யம் பெற்ற நீங்கள் சமிஸ்கிருதம் கற்கவில்லையா? ஸமிஸ்க்ருதத்தைப் படிப்பதனால் டப்பு தேராது என்று விட்டு விட்டீர்களா? :-)
பதில்: விளையாட்டாக கேட்டாலும் உண்மை அதுதான். மேலும் வடமொழியில் என்ன பொறியியற் சம்பந்தமான பேப்பர்கள் வந்து விடப்போகின்றன? காளிதாசனின் சாகுந்தலம் எல்லாம் மொழிபெயர்க்கும் ரேஞ்சில் ஆசையேயில்லை.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
16 hours ago
32 comments:
பாதிப்பு கொஞ்சமும் இல்லாத கவிஞர்/புலவர்/இசை சம்பந்தங்கள் யாரேனும் உள்ளனரா? இல்லை என்றால் என்ன காரணம்
1. விதிப் பயனா? 2. புகழ் தரும் போதையா? 3. அறிவு மிகுதி தரும் சித்த பிரமையா?
4.கல்வியா? செல்வமா? வீரமா அன்று நாரதர் தொடங்கிய புராணக் கற்பனை கதை - இன்று இயற்கை அன்னையின் கரத்திலா?
பதில்: மிகப் பெரிய கேள்வி. விலாவாரியான பதிலுக்கு ஒரு தனிப்பதிவே போட்டு விடுகிறேன்.
நன்றி.
நக்கீரன் பாண்டியன்.
//சென்னை உஸ்மான் சாலையில்தான் தங்க நகைக் கடைகள் இருப்பதன் காரணம் யாது?//
இங்கதான் நிறைய ஐயராத்து மாமிகள் இருக்கா..........
1. இவ்வளவு கேள்விகளுக்கு பதில் சொல்லும் பொறுமை எப்படி வந்தது உங்களுக்கு?
@அனானி
என்னமோ நகைகள் வாங்குவது ஐயராத்து மாமிகள் என்ற ரேஞ்சில் கூறிவிட்டீர்கள்? ஆச்சிகளை பார்த்திருக்கிறீகளா? கத்தோலிக்க சிறியன் கிருத்துவர்கள் கல்யாணங்களில் மணமகன் வெறுமனே கலாசியாக இருந்தாலும் அரைக்கிலோவுக்கு குறையாது தங்கம் தரவேண்டும் என்பதை அறிவீர்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
@குடுகுடுப்பை
கேள்விகள் வரவர அவற்றை அடுத்த பதிவுக்கான வரைவில் போட்டு விட்டு அவ்வப்போது விடை அளித்தால் ஆயிற்று. எல்லாமே ஒரு நேர மேலாணமைதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
\\பிறகு அங்கெல்லாம் போனால் மேகலா, கஸ்தூரி, கோலங்கள் ஆகிய சீரியல்களை தவற விட நேரிடும்.\\
அய்யோ இம்புட்டு சீரியலா? பார்த்து சார். ரத்தக்கொதிப்பு எகிறிடப் போகுது.
\\குடி குடியைக் கெடுக்கும், புகை பிடித்தால் புற்று நோய் வரும். சூதாட்டத்தில் ஈடுபட்டால் குடும்பம் திவாலாகும் என்றெல்லாம் புத்தகத்தில் படித்த ஒருவன் உடனே நிறுத்தி விட்டானாம், புத்தகம் படிப்பதை. \\
Good Humour :-)
\\பாப்ரி மசூதியை இடித்தது தவறுதான். அது ஒரு கருப்பு தினம். \\
உண்மை. பா.ஜா.கா நடத்திய தேவையில்லாத அரசியல் ஸ்டன்ட்.
\\மற்றமத வழிப்பாட்டுத் தலங்களுக்கும் அம்மாதிரி அமைச்சகங்கள் கொண்டு வாருங்கள் அல்லது இந்து கோவில்களை இந்து அமைப்புகளிடமே தந்து விடுங்கள்.
தமிழ் நாட்டில் மட்டும் தான் இப்படியா, இல்லை, இந்தியா முழுவதுமே இதே நிலை தானா?
//தமிழ் நாட்டில் மட்டும் தான் இப்படியா, இல்லை, இந்தியா முழுவதுமே இதே நிலை தானா?//
இந்தியா முழுவதும் இந்து அறநிலையத்துறை உண்டு. இருப்பினும் தமிழகத்தில் உள்ள நாத்திக சூழ்நிலை, மற்றும் நாத்திகராக கூறிக்கொள்பவர்கள் அதிகாரத்தில் இருக்கும் சூழ்நிலை மற்ற மாநிலங்களில் கிடையாதுதான். கோவில் பணத்தை வேறு துறைகளுக்கு திருப்பிவிட்டு சைடில் காசு பார்ப்பவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க இயலும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//சென்னை உஸ்மான் சாலையில்தான் தங்க நகைக் கடைகள் இருப்பதன் காரணம் யாது?//
செளகார் பேட்டை பக்கம் போனதில்லையா!
தங்க நகைகளின் மொத்த வியாபாரமே அங்கே தான்.
உஸ்மான் ரோடு பாண்டிபஜார் மார்கெட் என்றால் செளகார்பேட்டை கோயம்பேடு மார்கெட்.
//இலங்கையில் உள்ள இனப்பிரச்னை எப்போது முடியும்?//
மற்ற நாடுகள் பொத்தி கொண்டு இருந்தாலே அது முடிந்து விடும்,
(மற்ற என்றால் யாரும் யாருக்கும் உதவி செய்யகூடாது என்று அர்த்தம் எடுத்து கொள்ளவும்)
//செல்போனில் ஒருவரையொருவர் பார்த்துப் பேசும் வசதி 3 ஜி-ல் உண்டா?//
அது தான் 3-ஜி
//போனை எங்கே வைத்து கொண்டு பேசுவது?//
ப்ளூடூத் அல்லது இயர்போன் பயன்படுத்தலாம்,
முதலில் இந்த வசதி வீட்டு போன்களுக்கு தான் கொடுக்கப்படும்.
உங்களுக்கும் ஒரு திரை இருக்கும் அதில் எதிரில் பேசுபவர் முகதையும் நீங்கள் பார்க்கலாம்
(ஆங்கிலப்படம் நிறைய பாருங்கப்பா)
///52. இலங்கையில் உள்ள இனப்பிரச்னை எப்போது முடியும்?
பதில்: தெரியவில்லை.சீக்கிரம் இது முடிவுக்கு வரவேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். ///
இலங்கையில் இப்போது நடை பெற்றுவரும் இலங்கை ராணுவத்தின் போர் உத்திகளுக்கு,அமெரிக்கா,இந்தியா,பாகிஸ்தான் படைத்தளபதிகளின் வழிகாட்டுதல் உண்டு என்று வரும் பத்திரிக்கை செய்திகள் பற்றி உங்கள் கருத்து?
//மாணவர்களுக்கு தமிழக அரசால், வழங்கப்படும் இலவச சைக்கிள் திட்டத்தில் பயனாளிகளில் வசதி படைத்தவர்களும் உள்ளனரே?//
இது இலவச தொலைக்காட்சிக்கும் பொருந்துகிறது,
அரசாங்க சலுகைகள் ஏழை மக்களுகென்று நினைத்து கொண்டிருக்கிறீர்களா, முதல்ல தூக்கத்துல இருந்து எந்திரிங்க தமிழ்நாட்டுல ஒன்னும் காமராஜர் ஆட்சி நடக்கல
//எதிர்க்கட்சித் தலைவர்கள் சோர்ந்து போயுள்ளனரா, தேர்தல் முடிவுகளை பார்த்து?//
சோர்ந்து போக அவனுங்க என்ன கை காசா செலவு பண்றாங்க! எல்லாம் நம்ம பணம்,
பெரிய பெரிய தொழிலதிபர்கள் கிட்ட நிதி வாங்கிறானுங்க, அந்த தொழிலதிபர்கள் அதுக்கும் சேர்த்து நம்ம கிட்ட பில்லு போட்டுடுறானுங்க!
//அவர்கள் புத்திசாலிகளாக இருந்தால் அம்மாதிரி எல்லாம் சோர்ந்து போகக்கூடாது. என்ன செய்வது அப்படியெல்லாம் புத்திசாலிகள் அங்கில்லை என்கிறீர்களா?//
அவர்கள் என்றும் புத்திசாலிகள் தான். அதனால் தான் இன்றும் நம்மை எதாவது கதை சொல்லி ஏமாற்ற முடிகிறது.
//குடி குடியைக் கெடுக்கும்,தெரிந்த பிறகும் டாஸ்மார்க்கே கதி என இருப்போரை?//
தமிழக அரசை வாழ வைக்கும் அவர்களை, தமிழக அரசே தத்து எடுத்து கொள்ள வேண்டும்
எம்.எல்.ஏ./எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியால் பெரும் பங்கு லாபம் யாருக்கு?//
உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறதே!
//நக்சலைட்டுகள் திருந்தி விட்டார்களா?//
அப்போ அரசியல்வாதிகள்?
//ஸ்ரீராமபிரானின் பக்தன் அனுமனின் ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு கூடி கொண்டே வருகிறதே பார்த்தீர்களா?//
ஆண்டுக்கு ஆண்டு மக்கள் தொகையும் கூடி கொண்டே வருகிறதே பார்த்தீர்களா?
//அருச்சுனன் தன் தந்தை இந்திரனைக் காண தேவருலகம் சென்றபோது ஊர்வசி அவனிடம் மயங்கியதாகவும், இந்திரனுக்கும் அவளுக்கும் இருக்கும் தொடர்பால் அவள் தனக்கு தாய் முறை என அருச்சுனன் மறுக்க, இந்த கற்பு கோட்பாடுகள், உறவுமுறை தயக்கங்கள் தேவருலக்த்தில் செல்லாது//
இதுக்கு தூக்கு போட்டுகிட்டு சாவலாம்.
(ஊர்வசியும்,அர்ஜுனனும் கூடவே இந்திரனும்)
//வெளியூர்ப் பயணங்களில் தங்கும் விடுதிகளில் உள்ள குளிப்பறைகளில் ரகசியக் கேமிரா வைத்து படம் எடுத்து வலையேற்றி விடுவது பற்றி?இதை சாமளிப்பதற்கு ஆலோசனைகள்?//
தற்சமயம் காம் ஃபைண்டர் என்னும் பொருள் கண்டு பிடித்திருக்கிறார்கள்,
ஆனால் இதை வெளியிட்டால் கிரிமினல்கள் கொள்ளை அடிக்கும் போது கேமரா எங்கே இருக்குனு கண்டு பிடிக்க பயன்படுத்துவார்கள் என வெளியிடவில்லை என தகவல்
//இன்றய இளைய சமுதாயத்தினரில் ஒரு பகுதியினர் சனி ஞாயிறு விடுமுறைக் கொண்டாடத்தில் பலான விசயத்தை 'ஜச்ட் லைக் தேட்'என கருதி வாழ்வை தொலைப்பது பற்றி?//
முதல்ல அதை பலான விசயம்னு நினைக்கிறதை விடுங்க!
இந்த உலகம் நியூட்டனின் மூன்றாம் விதியை மதிக்கிறது, தவறோ சரியோ அதன் பலன் அவர்களுக்கு தான்,
வண்டி ஓட்டும் போது தலைக்கு ஹெல்மெட் போடுங்க,
பெண்ணிடம் போகும் போது ”அதுக்கு” ஹெல்மெட் போடுங்க
//சின்னஞ் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் பெருசுகளின் காமப் பிசாசுத் தனம் பற்றி?//
இது ஒருவகையான மனநோய்,
இருபாலருக்கும் உண்டாம்.
குறிப்பிட்ட வயதுக்கு பின் பெண்களுக்கு மோனாபாஸ் வந்துவிடுகிறது, அதனால் செக்ஸில் நாட்டம் குறைகிறது.
ஆண்களுக்கும் வயது ஆக ஆக உடல் சோர்ந்தாலும் மனம் செக்ஸை நாடுகிறது, செக்ஸ் புத்தகம், வீடியோ கிடைக்கத பட்சத்தில் குழந்தைகள் என மனம் தடுமாறுகிறது.
இதற்கு கவுன்சிலிங்க் தேவை, வயதானாலும் ஆணும், பெண்ணும் ஒரே அறையில் கட்டி பிடித்து தூங்குவதில் தவறில்லை, அதுவே ஆணுக்கு போதுமானதாகவும் இருக்கிறது.
(எதற்கும், எப்போதும் வன்முறையை இரண்டாம் தீர்வாகவே வைத்திருங்கள்)
\\பாப்ரி மசூதியை இடித்தது தவறுதான். அது ஒரு கருப்பு தினம். \\
Very true.
//
செல்போனில் ஒருவரையொருவர் பார்த்துப் பேசும் வசதி 3 ஜி-ல் உண்டா?
பதில்: தெரியவில்லையே. அப்படியே வந்தாலும் போனை எங்கே வைத்து கொண்டு பேசுவது? இந்தப் பதிவர் மாதிரியா? ரொம்ப தமாஷா இருக்கும். இல்லை அப்படியெல்லாம் சர்க்கஸ் செய்து போனை பிடிக்க வேண்டாம் என நேற்று (05.01.2009) பங்களூரில் என்னை சந்தித்த பதிவர் ஒருவர் கூறினார். வந்த பதிவர்களில் யார் அதை கூறியது என்பதை மறந்து விட்டேன். இக்கேள்விக்கு மேலும் பதிலளிக்க அவரையே அழைக்கிறேன்.
//
ஆம், 3G ஃப்ன்களில் முகத்தைப் பார்த்துக் கொண்டு பேசலாம்.
அதற்கேற்றார் போல் 3G ஃபோன்கள், தங்கள் வடிவமைப்பை சீக்கிரமே மாற்றிக் கொள்ளும்.
இப்போது நோகியாவில் 3120 கிளாசிக் என்ற அடிப்படை மாடல் 3G வசதியுடன் வருகிறது.
ஸ்பீக்கர் ஃபோனில் பேசுவது போல் ஃபோனை எதிரில் வைத்துவிட்டு, ஹாண்ட்ஸ் ஃப்ரீ மாட்டிக் கொண்டு பேசவேண்டியது தான். இதிலென்ன வேடிக்கை ?
பார்டியில் தண்ணியடித்துக் கொண்டே, அம்மாவிடம் கோயிலில் இருக்கிறேன் என்று பொய் சொல்லமுடியாது ! அது தான் உண்மையான வேடிக்கை.
//செல்போனில் ஒருவரையொருவர் பார்த்துப் பேசும் வசதி 3 ஜி-ல் உண்டா?
பதில்: தெரியவில்லையே. அப்படியே வந்தாலும் போனை எங்கே வைத்து கொண்டு பேசுவது? இந்தப் பதிவர் மாதிரியா? ரொம்ப தமாஷா இருக்கும். இல்லை அப்படியெல்லாம் சர்க்கஸ் செய்து போனை பிடிக்க வேண்டாம் என நேற்று (05.01.2009) பங்களூரில் என்னை சந்தித்த பதிவர் ஒருவர் கூறினார். வந்த பதிவர்களில் யார் அதை கூறியது என்பதை மறந்து விட்டேன். இக்கேள்விக்கு மேலும் பதிலளிக்க அவரையே அழைக்கிறேன். ///
முடியும்..சமீபத்தில் 2005 ஆம் ஆண்டு இந்த வசதியை அவுஸ்திரேலியா சிட்னியில் டெஸ்ட் செய்திருக்கிறேன்...
இரண்டு கேமராவுடன் எல்.ஜி நிறுவனம் வெளியிட்ட மொபைலில்...
உங்களிடம் கேள்வி கேட்பதென்றால் டோண்டு பதில்கள் பகுதிக்கா அனுப்ப வேண்டும்? எனக்கு தெரியது இரண்டாம் உலக மகாயுத்தத்தில் ஜெர்மனி ஜெயித்திருக்கலாம் என்ற பதிவுக்கு அனுப்பி விட்டேன்.
எனது கேள்வி-
பாஜக புலிகளையும் இலங்கை பிரிவினையும் ஆதரிக்க போவதாக செய்திகள் வருகின்றன. ஒரு பெரிய கட்சி விடுதலைச் சிறுத்தைகள் தரத்திற்கு நடந்து கொள்ளலாமா?
//உங்களிடம் கேள்வி கேட்பதென்றால் டோண்டு பதில்கள் பகுதிக்கா அனுப்ப வேண்டும்?//
அப்படியெல்லாம் கட்டாயமில்லை. எந்தப் பதிவுக்கும் அனுப்பலாம். கூடவே வரும் வியாழன் கேள்வி பதில்கள் பதிவுக்காக எனக் கேட்டால் எனது வேலை எளிதாகி விடும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1இந்தியத் திருநாட்டில் மேட்டுக்குடியினர்-நடுத்திர வர்க்கம்-வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ் வாழும் ஏழை வர்க்கம்- இந்தப் பிரிவுகளுக்கு அரசின் பொருளாதர அளவுகோல் என்ன?
2அது சரியாய் நடை முறை படுத்தப் படுகிறதா?
3.கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதற்கு காரணம் ,இப்போது தில்லுமுல்லுகள் செய்வது எளிது என்ற காரணமா?
4.சத்யம் நிறுவனத்தில் நடந்தது போல் இன்னும் எதிலெல்லாம் இந்தக் கன்னக் கோல் தனங்கள் இருக்குமோ?
5.வழக்கம் போல் சட்டத்தின் ஓட்டைகளில் நுழைந்து சட்ட மேதைகளின் துணை கொண்டு இந்த பொருளாதர முகமூடிக் கொள்ளைகாரர்களை காப்பாற்றிவிடுவார்களா?
Sir,
It is unbelievable that after 11 days of slaughtering the children of Gaza, the world has yet to decide if it is going to call on Israel to stop its savage offensive. The attack on the U.N. facility and subsequent massacre of children was atrocious.
It is unbelievable that hundreds of children are being butchered with US-made Israeli weapons and the so-called Big Powers have yet to urge Israel to stop the war. I'm no fan of Hamas or its ideology, but this assault goes beyond politics. There is a far greater moral imperative that must be heeded. If you came across a burning house filled with women and children would you ask their political affiliation or dissect their worthiness before you tried to save them?
IDF have proven to be worst than Hitler’s Nazi brigade!
Do you still support Israel??
// சமீபத்தில் கி.மு. 399-ல் //
Enna Villaththanam ;)
தமிழக அரசின் இலவசத்திட்டங்களில் அரசுக்கு அதிகம் செலவாகும் திட்டம் எது?
பயன் பெறும் மக்களின் பார்வையில் எந்த திட்டம் அவர்களுக்கு திருப்தியான மன நிறைவை தருகிறது?
இலவசத் திட்டங்கள் எல்லாம் ஓட்டாய் மாறுமா?
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூட இந்த இலவசத் திட்டங்களால் அலங்கரிக்கப் படுமா?
இந்தியவிலே தமிழ்க மக்கள் தான் அரசு அளிக்கும் அதிக இலவச் திட்டங்களால் அதிக பயனடைகிறார்களா?
Post a Comment