ரொம்ப நாளாக நினைத்து கொண்டிருந்த விஷயம் இது. போன மாதக் கடைசியில்தான் வேளை வந்தது. பெரியார் திடலுக்கு சென்றிருந்தேன். 1965-ல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தபோது பெரியார் அதை ஆதரிக்கவில்லை, தீவிரமாக எதிர்த்தார். அக்காலகட்டத்தில் விடுதலை பத்திரிகையில் அப்போராட்டத்தை எதிர்த்து செய்திகளும் கட்டுரைகளும் வந்தன.
ஆனால் அதுபற்றி இப்போதைய தலைமுறைக்கு அவ்வளவாகத் தெரியாது. அக்காலகட்டத்தில் அக்கட்டுரைகளை நான் விடுதலை பத்திரிகையில் படித்தது எனக்கு நினைவில் இன்னும் இருக்கிறது. இருப்பினும் அவற்றை மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு ஆதாரபூர்வமாக எழுத நினைத்தேன்.
பத்ரி என்னிடம் ஒரு முறை பழைய விடுதலை பத்திரிகைகளை பார்க்க வேண்டுமானால் அதற்கு சிறந்த இடம் பெரியார் திடலில் உள்ள நூலகமே எனக் கூறினார். அங்கு போனால் பார்க்க விடுவார்களா எனக் கேட்டதற்கு வீரமணி அவர்கள் கண்டிப்பாக அனுமதிப்பார் என்றும் கூறினார்.
இப்போது முக்கியமாக அதற்குத்தான் சென்றேன். தினத்தந்தி அலுவலகம் பின்னால் ஈ.வி.கே. சம்பத் சாலையில் பெரியார் திடல் உள்ளது. அதற்குள்ளேயே பெரியார் நினைவிடம், பல்கலைக்கழகம், விடுதலை அலுவலகம், திருமண மண்டபம் ஆகியவை உள்ளன. பெரியார் நினைவிடம் அமைதியான சூழ்நிலையில் இருக்கிறது. பெரியாரின் வாக்குகள் பல இடங்களில் எழுதப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் தூய்மையாக வைத்துள்ளதை பாராட்ட வேண்டும்.
ஒரு சுற்று சுற்றிவிட்டு விடுதலை காரியாலயத்துக்கு வந்தேன். பழைய விடுதலை காப்பிகளை பார்க்க வேண்டும் என அதன் நூலகத்தில் கேட்டபோது வீரமணி அவர்கள் அனுமதிக்க வேண்டும் என்றார்கள். சரி எனக் கூறி அவர் இருக்கும் இடத்துக்கு சென்றேன்.
அவரை சுலபமாகவே பார்க்க முடிந்தது. என்ன விஷயம் என அவர் கேட்க, நான் விடுதலை பத்திரிகையின் 1965 ஜனவரி முதல் மார்ச் வரைக்கான நாளிதழ் காப்பிகளை ஆய்வுக்காக பார்க்க வேண்டும் என்றேன். பலர் இம்மாதிரி வருவதாகவும், பிறகு விஷயங்களை தெரிந்து கொண்டு விரோதமான விஷயங்களை எழுதுகிறார்கள் எனவும் அவர் சற்றே சீரியசாகக் கூறினார். நான் எதற்கு அவற்றை கேட்கிறேன் என்ற கேள்வியும் போட்டார்.
நான் எனது வலைப்பூ விஷயத்தை கூறி எனது விசிட்டிங் கார்டையும் கொடுத்தேன். நூலகம் சென்று ஒரு எழுத்துபூர்வமான விண்ணப்பம் தர வேண்டும் எனவும் பிறகு பார்க்கலாம் எனவும் எனக்கு கூறப்பட்டது. நான் எடுத்து சென்ற நோட் புத்தகத்திலிருந்தே ஒரு தாளை கிழித்து விண்ணப்பம் எழுதினேன். அதில் 1965-ஆம் ஆண்டு ஜனவரி 25 முதல் மார்ச் 15 வரைக்கான பேப்பர்களை பார்க்க அனுமதி கோரினேன். ஹிந்தி எதிர்ப்பு போராட்டில் விடுதலை பத்திரிகையின் நிலைப்பாட்டை அறியவே இக்கோரிக்கையை வைப்பதாகவும் அதில் கூறியிருந்தேன். நூலகர் நான் இதை வீரமணி அவர்களிடம் காட்டி அதில் அவரது அனுமதி பெற வேண்டும் எனக் கூறினார்.
ஆகவே திரும்பவும் வீரமணி அவர்கள் அறைக்கு சென்றேன். ஆனால் இம்முறை அவரைப் பார்க்க அவரது உதவியாளர் விடவில்லை. அவரிடமே எனது விண்ணப்பத்தைக் கொடுத்து வீரமணி அவர்களிடம் சேர்ப்பிக்க கேட்டுக் கொண்டேன். அவரும் எடுத்து சென்றார். சில நிமிடங்கள் கழித்து திரும்ப வந்து, உடனே அனுமதிக்க முடியாது என்றும், அடுத்த நாள் வந்து முயற்சி செய்யுமாறு கூறினார்.
இதில் என்ன சிக்கல் என்பது எனக்கு புரியவில்லை. ஒன்று அனுமதி தர வேண்டும் இல்லை முடியாது எனக் கூறி விட வேண்டும். இந்த திரிசங்கு நிலை ஆச்சரியத்தையே அளிக்கிறது. சரி, அது அவர்கள் பிரச்சினை. நான் மறுபடி அங்கு செல்வதாக இல்லை. நாளை நாளை என்றே அலைக்கழிப்பார்கள் எனத் தோன்றியதே காரணம். ஏனெனில் 1965 விஷயம் இப்போது வெளிப்படையாக தெரிந்தால் பெரியாரின் தொண்டர்களுக்குத்தான் சங்கடம். நான் அதை புரிந்து கொள்கிறேன்.
எது எப்படியானால் என்ன? ஹிந்தி எதிர்ப்புக்கு எதிராக பெரியார் செயல்பட்டது எனக்கு அப்படியே நினைவில் உள்ளது. அது பற்றி இப்போது பேசுவேன்.
1965-ல் பெரியார் காமராஜ் மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர். ஆகவேதான் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை தீவிரமாக எதிர்த்தார். அண்ணாதுரை மேல் விரோதம் வேறு சேர்ந்து கொண்டது. அதனால் 1938-ல் ராஜாஜி ஹிந்தி பாடத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திய போது அதை ஒரே மூச்சாக எதிர்த்த அதே பெரியார் இப்போது ஹிந்தி எதிர்ப்பையே எதிர்த்தார். அதில் ஹிந்திக்கு ஆதரவு என்பதும் பை பிராடக்டாக வந்துள்ளது. எனது பொறியியல் கல்லூரி சக மாணவன் ஒருவன் ஹிந்தியைக் கற்றால் தவறில்லை என்னும் தொனியில் எழுதிய சிறு கருத்து விவாதமும் அச்சமயம் அப்பத்திரிகையில் வந்தது.
பெரியார் அவர்கள் செய்த போராட்டங்களைப் பார்த்தால் இன்னொரு விஷயம் புலப்படும். வைக்கத்தில் அவர் போராடியபோது காங்கிரஸ் உறுப்பினராக இருந்தார். போராட்டமும் காங்கிரஸ் தரப்பிலிருந்துதான் நடந்தது. அதில் அவர் பெற்ற பேருக்கும் புகழுக்கும் அவர் முற்றிலும் உரியவர் என்பதில் ஐயமில்லை. ஆனால் நீதிக் கட்சிக்கு தலைவராகி அக்கட்சியை திராவிடக் கழகமாக்கிய பின்னால் அம்மாதிரி ஆலயப் பிரவேசப் போராட்டம் ஏதும் தலைமை தாங்கி நடத்தியதாக எனக்குத் தெரியவில்லை.
இரட்டை டம்ளருக்கு எதிராக இப்போது பெரியாரின் தொண்டர்கள் போராடுகின்றனர். அது பற்றி அவர்களது தளங்களிலும் செய்திகள் வருகின்றன. பாராட்ட வேண்டும். ஆனால் பெரியார் அவர்கள் இம்மாதிரி போராட்டம் ஏதேனும் தலைமை வகித்து நடத்தியிருப்பதாக கேள்விப்படவில்லை. அதுவும் ‘பிறாமணால் ஹோட்டல்’ என போர்டில் எழுதிக் கொண்டதற்கே அவற்றை தார் போட்டு அழித்தவர் இதற்கு கமுக்கமாக இருந்தது ஏன் எனத் தெரியவில்லை. இப்போது அமர்க்களப்படும் உத்தபுரம் அவர் காலத்திலும் இருந்திருக்கும்தானே. உயர் சாதியினரின் தெருக்களுக்குள் தலித்துகள் சைக்கிளில் செல்லக் கூடாது, செருப்பு போடக்கூடாது என்றெல்லாம் அப்போதும் இருந்திருக்கும்தானே. எனக்கு தோன்றுகிறது, பெரியாரின் எதிர்ப்புகள் எல்லாம் பார்ப்பனர்களை மட்டுமே குறிவைத்து செய்யப்பட்டவை. பார்ப்பனரல்லாத மேல் சாதியினரை அவர் எங்கும் பெயரிட்டு கண்டித்ததாகத் தெரியவில்லை. ஏன், இப்போதும் திராவிட கழகத்தினரின் வலைப்பூக்களில் பார்ப்பன எதிர்ப்பு மட்டும்தானே பிரதானமாக உள்ளது. பகுத்தறிவு நிரந்தர விடுப்பு எடுத்து கொண்டதுபோல.
எல்லாவற்றையும் விட மனதை கஷ்டப்படுத்தும் விஷயம் கீழ்வெண்மணி அரிசன எரிப்பு விஷயம். மனிதர் அப்படியே சொதப்பலாக ஒரு அறிக்கை கொடுத்தார். ஏன்? எரித்தது கோபால கிருஷ்ண நாயுடு. அதுவே கோபாலன் ஐயராக இருந்திருந்தால் என்னவெல்லாம் கூறியிருப்பார் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன். அங்கும் பார்ப்பனீயமே காரணம் என்று சரியாகத்தான் கூறியிருப்பதாக அவருக்கு சப்பைக்கட்டு கட்டுபவர்கள் கூறுகின்றனர். இந்த விஷயத்திலும் பெரியாரின் அப்போதைய அரசியல் ஆதரவு நிலையே காரணம். 1968-ல் தான் பலகாலம் தூற்றிவந்த அண்ணா அவர்களது ஆதரவாளராக அப்போது அவர் மாறிவிட்டிருந்தார். திமுக அரசுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற பயத்தில் 54 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதை பூசி மெழுகி அது வெறும் கூலித்தகராறு என்றும், அதை முன்னிறுத்தி போராடிய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட வேண்டும் என ஒரு சவசவ அறிக்கை தந்தார்.
பெரியாரை விடுங்கள். அவர் இறந்து 35 ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்று. ஆனால் அப்போது அவர் சொன்னதையே பைபிள் போல அவரது தொண்டர்கள் இன்னமும் பேசுவதுதான் விந்தை. அதுவும் அமுலில் இல்லாத மனு சாத்திரம், ஆரிய படையெடுப்ப்பை பற்றி முதலில் பேசிய ஐரோப்பியர்களே பிற்காலத்தில் தாங்கள் சொன்னதற்கு சரியான ஆதாரம் இல்லை எனக் கூறியதை லட்சியம் செய்யாமல் முதலில் சொன்னதையே வைத்து தொங்கிக் கொண்டு இருப்பது ஆகியவை மேலும் விசித்திரங்களே.
ஆனால் ஒன்று மட்டும் கூறவேண்டும். வெவ்வேறு காலகட்டங்களில் பெரியார் எடுத்த முரண்பட்ட நிலைகள் அவரது அப்போதைய அரசியல் சார்பைத்தான் குறித்தன என்பதை நினைவில் வைத்தால், அந்த முரண்பாடுகள் வியப்பளிக்கக் கூடாது. கீழ்வெண்மணியில் அந்த நிலைப்பாடு ஒரு அநியாயத்துக்கு துணைபோனதும் அதில் அடங்கும். அதற்காகவும் பெரியார் கவலைப்படவில்லை என்பதே நிஜம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மாணவர்களின் காந்திய நடைபயணம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு, முனை அமைப்பின் சார்பில் நாங்கள் நடத்திய நேர்வழி
விழாவில் கலந்து கொண்டமைக்கு நன்றி. விழாவில் அறிவித்தபடி இன்று வெள்ளிக்கிழமை
அன்று ஒ...
19 hours ago
186 comments:
சபாஷ்-நெத்தி அடி-பதில் விவாதம் சூடு பறக்கும்-மீண்டும் களைகட்டும்
திராவிடக் கட்சிகளின் பிராமணர் எதிர்ப்பு, தனது ஓட்டு வங்கியை காப்பாற்றி கொள்ளும் முயற்சியா?
வீரமணியின் இந்தத் தயக்கம் எதைச் சுட்டிக் காட்டுகிறது?
உண்மை ஊருக்கு தெரிந்துவிடும் என்பதலா?
பெரியார் ஆதரவாளர் மொத்தம் இப்போதும் எத்தனை பேர் இருப்பர்?
கருப்புச் சட்டை தொடர்கிறதா?
ஆட்சியாளர் யாரோ அவ்ர் பக்கம் ஜே ஜே ஜே போடும் வீரமணி, தன் சொத்தை காப்பாற்ற எனும் புகாரில் உண்மை உண்டா?
ஏற்கனவே பெரியார் இதைச் சொன்னார் அதைச் சொன்னார் என்று அவனவன் வாய்க்கு வந்ததை சொல்லிக்கொண்டு திரியறான்! இதில் வீரமணியாருக்கு பெரியார் எழுதியதை பட்டா போட்டுக் கொடுத்துவிட்டால் அப்புறம் சுண்டக்கஞ்சி குடிக்கறவன் சொல்றதை எல்லாம் பெரியார் சொன்னதாக எழுதிவிடுவார்கள்! உங்களுக்கு தெரிந்ததை எழுதுங்கள்! Let's get the story straight!
இது முக்கியமான செய்தி. இந்த செய்தியை ஆவணபடுத்தியதற்கு மிக்க நன்றி.
பெரியாரின் முக்கிய குறிக்கோளாக (இன்றளவும் பல தலைவர்களின் குறிக்கோளாகாவும்) இருந்தது ஒன்றே ஒன்றுதான். பிராமணகளை அவமானபடுத்தி தங்கள் ஜாதியினரை (இன்று பிற்படுத்தப்பட்ட ஜாதி என்று புளுகப்படும்) முன்னிறுத்துவதுதான். பெரியார் ஜாதியில்லா சமுதாயத்தை காண விரும்பவில்லை. தனது ஜாதிக்கும்பலுக்கு முக்கியத்துவதம் அதிகரிக்க முயற்சி எடுத்தார்.
பெரியார் ஹிந்தி எதிர்ப்பை எதிர்த்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. 38-இல் ஹிந்தி எதிர்ப்பு, 65-இல் நாடே கொந்தளிக்கும்போது ஹிந்தி எதிர்ப்புக்கு எதிர்ப்பு! மனிதர் முரண்பாட்டு மூட்டையாக இருந்திருக்கிறார்!
Curiosity-க்காக கேட்கிறேன். அப்போது காங்கிரசை எதிர்த்து சுதந்திரா கட்சி நடத்திய ராஜாஜி 65-இல் ஹிந்தி எதிர்ப்பை பற்றி என்ன சொன்னார்? இதற்காக வேறு ஏதாவது பத்திரிகை அலுவலகம் வரை போய் தேட வேண்டும் என்றால் வீணாக சிரமப்படாதீர்கள்!
/Curiosity-க்காக கேட்கிறேன். அப்போது காங்கிரசை எதிர்த்து சுதந்திரா கட்சி நடத்திய ராஜாஜி 65-இல் ஹிந்தி எதிர்ப்பை பற்றி என்ன சொன்னார்? இதற்காக வேறு ஏதாவது பத்திரிகை அலுவலகம் வரை போய் தேட வேண்டும் என்றால் வீணாக சிரமப்படாதீர்கள்!//
:)))))
@ஆர்.வி. & ஜோ
இதற்காக நான் எங்கும் போய் தேட வேண்டியதில்லை. ராஜாஜியும் சுதந்திரக்கட்சியும், கல்கி பத்திரிகையும் 1965-ல் தீவிரமாகவே ஹிந்தி திணிப்புக்கெதிரான நிலையையே எடுத்தனர்.
அப்போதைய கோஷம் மத்திய அரசில் English ever, Hindi never.
இதில் ஒரு குழப்பமும் தேவையில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பிறகு விஷயங்களை தெரிந்து கொண்டு விரோதமான விஷயங்களை எழுதுகிறார்கள் எனவும் அவர் சற்றே சீரியசாகக் கூறினார்.//
இதில் வீரமணி அவர்கள் கவலைப்பட என்ன இருக்கிறது? பழைய விடுதலையில் வந்துள்ள செய்திகளை தெரிந்து கொண்டு அவற்றை மேற்க்கோள் காட்டி தி. க. வினரின் மற்றும் பெரியாரின் நிலைப்பாடுகளில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? இதில் வீரமணி அவர்களுக்கு "உண்மை சுடுகிறதே" என்பதை தவிர வேறு என்ன நியாயமான கவலை இருக்க முடியும்?
Periyar had arrogance,vengence,treachery,beard and miserliness in big quantities. hence the tamils with very low IQ levels called him periyaar.look at the icons of other communities.they are all people of considerable stature and achievements and basically excellent human beings.tamils' icon, bearded cutlet was a terrorist and far from being a hunanist.he was a differentiator and not an integrator.
What are your favourite articles and writers in the Tamil Hindu web site?
தல, விடுதலைக்கே ஆப்பு வெச்சுடிகளே.
இது நியாயமா...
//பெரியார் ஹிந்தி எதிர்ப்பை எதிர்த்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. 38-இல் ஹிந்தி எதிர்ப்பு, 65-இல் நாடே கொந்தளிக்கும்போது ஹிந்தி எதிர்ப்புக்கு எதிர்ப்பு! மனிதர் முரண்பாட்டு மூட்டையாக இருந்திருக்கிறார்!//
பெரியார் ஹிந்தி திணிப்பை சு. ம. இயக்கத்திலிருந்து 1965 லும் எதிர்த்தார்.
ஹிந்தி திணிப்பை எதிர்ப்பதில் பெரியார் என்றும் சமரசம் செய்து கொண்டதில்லை. 1965 இலும் ஹிந்தி திணிப்பை எதிர்த்தார்.
1965 இல் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு என்ற பெயரில் அரசியல் கட்சிககள் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டன. அதே போல் மாணவர்களை தூண்டியும் விட்டனர்.
இந்த வன்முறைப் போராட்ட வடிவத்தைத் தான் பெரியார் எதிர்த்தாரே தவிர இந்தித் திணிப்பு போராட்டத்தை அல்ல என்பதை புரிந்து கொண்டாவர்களுக்கு குழப்பம் வராது.
@தமிழ் ஓவியா
அப்படியானால் வீரமணி அவர்கள் எனக்கு அனுமதி அளிக்க ஏன் அவ்வளவு தயங்க வேண்டும்? நான் தெளிவாக சொல்லித்தானே அனுமதி கேட்டேன். ஒரு நொடியில் தந்திருக்க வேண்டிய அனுமதிக்கு பதிலாக நாளை வாருங்கள் பார்க்கலாம் என்றால் என்ன பொருள் கொள்வது?
எனது ஞாபக சக்தி தெளிவாகவே உள்ளது. அதே காலகட்டத்தில் பெரியார் அவர்கள் விகடன் பத்திரிகைக்கும் பேட்டி தந்துள்ளார். முடிந்தால் அதையும் தேடி பார்க்கிறேன்.
இதற்கிடையில் ஒன்று செய்யுங்கள். இது வரை செய்யாதிருந்தால் 1965-ஆம் ஆண்டு விடுதலை ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் இதழகளின் ஸ்கேன் செய்த காப்பிகளை உங்கள் வலைப்பூவில் வெளியிடுங்கள். ஏற்கனவே செய்திருந்தால் சுட்டி தாருங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பெரியாரின் முக்கிய குறிக்கோளாக (இன்றளவும் பல தலைவர்களின் குறிக்கோளாகாவும்) இருந்தது ஒன்றே ஒன்றுதான். பிராமணகளை அவமானபடுத்தி தங்கள் ஜாதியினரை (இன்று பிற்படுத்தப்பட்ட ஜாதி என்று புளுகப்படும்) முன்னிறுத்துவதுதான். பெரியார் ஜாதியில்லா சமுதாயத்தை காண விரும்பவில்லை. தனது ஜாதிக்கும்பலுக்கு முக்கியத்துவதம் அதிகரிக்க முயற்சி எடுத்தார்//
அட அடையாளம் தெரியாத அனாமதேயங்களே பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்லுங்கள். பெரியாரின் அடப்படை நோக்கமே ஜாதியில்லா சமுதாயம் படைக்க வேண்டும் என்பதுதான். அதற்கு இன்று வரை த்டையாக இருப்பவர்கள் பார்ப்பனர்களே.
இது குறித்து பெரியார் கருத்து இதோ:
"சுதந்திரம் அடைந்த நாட்டிலே பார்ப்பனர்கள் ஏன் இருக்க வேண்டும் ? சூத்திரர்கள் ஏன் இருக்க வேண்டும் ? பஞ்சமர் ஏன் ? என்று கேட்டிருக்கிறீர்களா ? அப்படிக் கேட்டால் வகுப்புத் துவேசமா ? கூறுகிறார்களே வகுப்புத் துவேஷம் என்று '
ஜனவரி 26ஆம் தேதி முதற்கொண்டு பார்ப்பான் இருக்கக்கூடாது; இருந்தால் ஆறு மாதம் கடுங்காவல் என்று சட்டம் எழுத வேண்டாமா ?
இன்றும் பார்ப்பான் தன்னைப் பார்ப்பான் என்று பூணூல் போட்டுக்கொண்டிருக்கிறான் '.
சாதியை ஒழிக்கத் திட்டம் எழுதுகிறார்களே, சர்க்கார் ' இனிமேல் சாதியைக் குறிக்கும் சின்னத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறவேண்டாமா ? அதற்கு ஒரு சட்டம் செய்ய வேண்டாமா ?
இன்னமும் ஏன் பூணூல் இருக்கிறது ? ஏன் இன்னமும் பூணூலை ஒப்புக்கொள்ள வேண்டும், இந்த சர்க்கார் ?
(செங்கற்பட்டில் 5-11-1950ல் சொற்பொழிவு 'விடுதலை ' 12-11-50"
படித்தீர்களா? இன்னும் பூணூலைப் புதிப்பித்துக் கொண்டு இருக்கும் பார்ப்பனக் கும்பலின் அயோக்கியத்தனத்தை அறிந்து கொண்டீர்களா?
உண்மையிலேயே ஜாதி ஒழிந்த சமுதாயம் படைக்கும் எண்ணம் பார்ப்பனக் கும்பலுக்கு இருக்குமானால் இன்று முதல் நாங்கள் யாரும் பூணூல் போடுவதில்லை என்று அதை அறுத்தெறிந்து மக்கள் முன் காட்டுவார்களா?
இதற்கு தயாராக எத்தனை பார்ப்பனர்கள் வருகிறார்கள் என்பதை பார்த்து விடுவோம்.
டோண்டு அய்யா அவர்கள் இதை பொறுப்பேற்று செயல் படுத்தினால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்
@தமிழ் ஓவியா
இப்பதிவில் நான் கேட்ட தெளிவான கேள்விகளுக்கு பதில் கூறுங்கள்.
1. இரட்டைக் குவளை முறையை எதிர்த்து பெரியார் தலைமை தாங்கிய போராட்டம் ஏதேனும் உண்டா?
2. தலித்துகள் ஆலயப்பிரவேசத்துக்காக வைக்கத்துக்கு பிறகு ஏதேனும் போராட்டம்?
3. தலித்துகளுக்கு பார்ப்பனர் தவிர்த்த மற்ற சாதி இந்துக்களால் ஏற்பட்ட வன்கொடுமைகளுக்கு (உத்தபுரம் சுவர், தலித்துகள் பொதுக் கிணறை உபயோகிக்கக் கூடாது, தலித்துகளை உயிரோடு எரித்தது) எதிராக போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியுள்ளாரா?
நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஆனால் ஒன்று மட்டும் கூறவேண்டும். வெவ்வேறு காலகட்டங்களில் பெரியார் எடுத்த முரண்பட்ட நிலைகள் அவரது அப்போதைய அரசியல் சார்பைத்தான் குறித்தன என்பதை நினைவில் வைத்தால், அந்த முரண்பாடுகள் வியப்பளிக்கக் கூடாது.//
இது குரித்து பெரியார் அளித்த விளக்கத்தை அப்படியே தருகிறேன். படியுங்கள்!தெளியுங்கள்!!
"நான் அடிக்கடி கொள்கையில் மாற்றமடைபவன் என்று சொல்லப்படுகிறது. உண்மையாக இருக்கலாம். நீங்கள் அதை ஏன் கவனிக்கிறீர்கள் ? ஒரு மனிதன், அவன் பிறந்தது முதல் இன்று வரை திருடிக்க்கொண்டே இருக்கிற ஒரே நிலைக்காரன் என்று சொல்லப்பட்டால், அவன் மகா யோக்கியனா ? எந்த மனிதனும் ஒரே நிலையில் இருக்கவேண்டும் ' என்று நீங்கள் ஏன் ஆசைப்படுகிறீர்கள் ? அதனால் உங்களுக்கு என்ன இலாபம் ? மாறுதல் முற்போக்குள்ளதா, பிற்போக்குள்ளதா ? அதனால் மக்களுக்கு நன்மையா ? தீமையா ? என்பன போன்றவற்றைக் கவனிக்க வேண்டியதுதான் அறிவாளிகளின் கடமையாகும்.
மற்றும், பொது நன்மையை உத்தேசித்து-- கஷ்டப்படுகிற மக்கள் நன்மையை உத்தேசித்து மாறினானா ? அல்லது சுயநலத்திற்கு -- அக்கிரமமான இலாபமடைவதற்கு மாறினானா ? என்று பார்க்க வேண்டும். யோக்கியன், அறிவாளி, ஆராய்ச்சியாளி, பொறுப்பாளி, கவலையாளி ஆகியவர் மாறவேண்டியது அவசியமாகலாம். அதைப் பற்றிய கவலைஏன் ? யார் எப்படி மாறினாலும் பார்க்கின்றவர்களுக்கு புத்தியும் கண்ணும் சரியாய் இருந்தால், மாற்றத்தைப் பற்றி ஒன்றும் ஆபத்து வந்துவிடாது.
நான் பலதடவை மாறியிருக்கலாம்; பல குட்டிக்கரணங்கள் போட்டிருக்கலாம்; சுயநலத்திற்காகவும் போட்டிருக்கலாம்; பச்சோந்தியாகவும் இருக்கலாம். அதனால் உங்களுக்கு என்ன கெடுதி ? நாடகக் கொட்டகையில் நாடகம் பார்க்கின்ற போது ஒரு மனிதன் எத்தனை வேடம் மாறி மாறிப் போட்டு நடிப்பதை நீங்கள் காசு கொடுத்துப் பார்த்துவிட்டு, நடித்தவனையும் புகழ்ந்துக்கொண்டு போகின்றீர்களா, இல்லையா ?
கோயில் கட்டிய மக்கள், கோயிலை இடிக்க வேண்டியவர்களாகி விடுவார்கள். அகிம்சை பேசுபவர்கள் பலாத்காரத்தைப் பேச வேண்டியவர்களாகி விடுவார்கள். இராஜ விசுவாசிகள் இராஜத் துரோகிகள் ஆகிவிடுவார்கள். திருடக்கூடாது என்பவர்கள் கொள்ளையடிக்கச் சொல்வார்கள். இப்படியாக, அபிப்பிராயங்கள் மாறிக்கொண்டு போகலாம்.
இவற்றையெல்லாம், அபிப்ராயங்கள் மாறியதாலேயே குற்றம் என்று சொல்லிவிட முடியாது. தங்களை 'நல்ல சூத்திரர்கள் ' என்று சொல்லிக்கொண்டு பார்ப்பனர் கால்களைக் கழுவிய தண்ணீருக்கு பவுன் கொடுத்துச் சாப்பிட்டவர்கள் இன்று 'சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி, என்றும் 'பார்ப்பனர்கள் ஜாக்கிரதை ' என்றும் ஏன் சொல்லுகிறார்கள் ? இந்த மாற்றத்தால் இப்படிச் சொன்னவர்கள் அயோக்கியர்கள் ஆக முடியுமா ?
தவிர, 'சூத்திரன் பணம் வைத்திருந்தால், பிராமணர்கள் பலாத்காரத்தால் அதைப் பறித்துக் கொள்ளலாம், என்று மனுதர்ம சாஸ்திரத்தில் இருந்தது மாறி இப்போது வெள்ளையர் தர்மத்தில் 'தந்திரங்களாலும் சூழ்ச்சிகளாலும் மாத்திரந்தான் பறித்துக் கொள்ளலாம் ' என்கிறதான மாறுதல் ஏற்பட்டுவிட்டது நாளை ஒரு சமயம் சமதர்ம காலத்தில், 'பிராமணர்கள் (சரீரத்தால் பாடுபடாதவன்) சொத்து வைத்திருந்தால், மற்றவர்கள் பலாத்காரத்தில் பிடுங்கிக் கொள்ளலாம் ' என்று ஏற்பட்டாலும், ஏற்படலாம்.
இம்மாதிரி மாறுதல்கள் காலத்திற்கும் பகுத்தறிவிற்கும், நாட்டின் முற்போற்கிற்கும் ஏற்றாற்போல நடந்துதான் தீரும். எனவே, நான் மாறுதல் அடைந்துவிட்டேன் என்று சொல்லப்படுவதில் வெட்கப்படுவதில்லை.
நாளை நான் எப்படி மாறப்போகிறேன் என்பது எனக்கே தெரியாது. ஆகையால் நான் சொல்வதைக் கண்மூடித்தனமாய் நம்பாதீர்கள்.
(நாகையில், 3-10-1931-ல் சொற்பொழிவு-- 'குடி அரசு ' 11-10-1931)
பெரியாரின் மாறுதல் முற்போக்கானதா? பிற்போக்கானதா? என்பதை வைத்து முடிவு செய்தால் போதும். உண்மை தெட்டெனெ விளங்கும்.
//ஜாதி ஒழிந்த சமுதாயம் படைக்கும் எண்ணம் பார்ப்பனக் கும்பலுக்கு இருக்குமானால் இன்று முதல் நாங்கள் யாரும் பூணூல் போடுவதில்லை//
பார்ப்பனர்கள் பூணல் போடுவதும்ம் போடாததும் அவர்கள் இஷ்டம். உங்கள் சான்றிதழ் அவர்களுக்கு தேவையில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அட அடையாளம் தெரியாத அனாமதேயங்களே//
யாரை சொல்லுகிறீர்கள்? உங்களையேவா?
டோண்டு அவர்கள் கூறுவதே பெரியாருக்கு பிராமணர்களை தவிர வேறு எந்த மேல் ஜாதிகாரர்களையும் எதிர்த்து கேள்வி கேட்க தைரியம் இருந்ததில்லை என்பதுதான். அவருடைய சிஷ்யகேடிகளும் அவரை போலவே இன்னும் காலத்திற்க்கொவ்வாத பிராமண துவேஷத்தையே பிடித்துக்கொண்டிருப்பதே அவர்களுக்கு inferiority complex அதிகமாகி இருப்பதையே காட்டுகிறது. மேலும், உண்மையாகவே சாதி வெறியை கடைப்பிடிக்கும் மற்ற சில, பல சாதிகளை கண்டிக்கும் மனோ தைரியமும் இல்லை என்பதையே இது நிரூபிக்கிறது.
//பார்ப்பனர்கள் பூணல் போடுவதும்ம் போடாததும் அவர்கள் இஷ்டம். உங்கள் சான்றிதழ் அவர்களுக்கு தேவையில்லை.//
நல்ல் பசப்பல்.
பூணுல் சாதி வளர்க்க.
சாதியில்லா சமூகம் பூணுலால் தடைசெய்யப்படுகிறது என்பதே இங்கு எடுத்துவைக்கப்படும் வாதம்.
நழுவப்பார்க்காதீர் டொண்டு.
//உண்மையாகவே சாதி வெறியை கடைப்பிடிக்கும் மற்ற சில, பல சாதிகளை கண்டிக்கும் மனோ தைரியமும் இல்லை என்பதையே இது நிரூபிக்கிறது.//
அருணாச்சலம. முதலில் நீரும் உம்மாட்களும் திருந்த்ப்பாரும். மற்றவர்களைப் பின்னர் பாரும்.
நீர் என்று பூணுல் போட்டு ஜாதி வளர்ப்பதை நிறுத்தப்போகிறீர் என்று முதலில் சொல்லிவிட்டு வேறு விடய்த்திற்கு செல்லும்.
இல்லை. ஜாதி வளர்த்து குட்டுப்போடுவது எங்களுரிமை என ராகவன் போல் சொல்லப்போரீரா?
வீரமணி மறுத்தது சரி.
உணமையிலே அறிவுத்தாகம் கொண்ட்வனுக்கும், தன் சூழ்ச்சிக்கு பயன்படுத்த நினைக்கும் evil genius க்கும் இடையே பெரும் வேறுபாடு உண்டு.
பத்ரி தேடினால் உலகத்துக்கு நலம். டொண்டு தேடினால், பார்ப்பன ஜாதிபற்றாளருக்கு நலம்.
ஜாதி சேவை செய்ய ஜாதியை எதிர்த்தவன் உதவலாமா? எனவே, வீரமணி செய்தது சரியே
டோண்டு,
இதுதான் irony. 38-இல் ராஜாஜி தமிழ் நாட்டில் ஹிந்தி படிப்பை கொண்டு வந்தார். பெரியார் எதிர்த்தார். 65-இல் ராஜாஜி ஹிந்தி படிப்பை எதித்திருக்கிறார். பெரியார் ஆதரித்திருக்கிறார்!
தமிழ் ஓவியா,
பூணூல் போடுவதும் பொட்டு வைப்பதும் மீசை வைப்பதும் தாடி வைப்பதும் சுன்னத் செய்வதும் சிலுவை மாட்டிக் கொள்வதும் தலைப்பா கட்டிக்கொள்வதும் அவரவர் சொந்த இஷ்டம். அதை கேட்க நீங்கள் யார்? இல்லை பெரியார்தான் யார்? பூணூல் அடுத்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதை காட்டுகிறது என்று நினைக்கிறீர்களா? பிரச்சினை - தாழ்வு மனப்பான்மை - உங்களிடம் அல்லவா இருக்கிறது? அது எப்படி பார்ப்பனர்கள் பிரச்சினை ஆகும்? பால் தாக்கரே முஸ்லிம்கள் எல்லாரும் தாங்கள் இந்தியாவின் தேச பக்தர்கள் என்று நிரூபிக்க வேண்டும் என்று சொல்வது போல அல்லவா நீங்கள் பார்ப்பனர்கள் எல்லாரும் தங்கள் பூணூலை கழற்றி அவர்கள் அனைவரும் ஜாதி பார்க்கவில்லை என்று நிரூபிக்க எண்டும் என்று சொல்வது இருக்கிறது? எப்படி பால் தாக்கரே சொல்வது தவறோ, அது போலத்தான் நீங்கள் சொல்வதும். மகா முட்டாள்தனம்.
பெரியாரின் மாற்றம் பற்றிய பேச்சை கொடுத்திருந்தீர்கள். திருடவில்லை என்ற நிலையிலிருந்து திர்டுவோம் என்ற நிலைக்கு போவதும் மாற்றம்தான், அதனால் மாற்றம் என்ன திசையில் இருக்கிறது என்பது முக்கியம் இல்லையா? 38-இல் ஹிந்தி எதிர்ப்பிலிருந்து 65-இல் ஹிந்தி எதிர்ப்புக்கு எதிர்ப்பு என்ற மாற்றம் நல்ல திசையில் இருக்கிறது என்று சொல்கிறீர்களா? அப்படி என்றால் 38-இல் ஹிந்தி எதிர்ப்பு தவறு, அதை 65-இல் மாற்றிக் கொண்டார் என்று சொல்கிறீர்களா? கொஞ்சம் விளக்குங்களேன்!
ஒரு காலத்தில் ஹிந்தி படிக்க விரும்பினால் அரசு பள்ளிகளில் வசதி உண்டு, ஆனால் பாஸ் ஃபெய்ல் கிடையாது என்ற நிலை இருந்ததாம். எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் - அவர் பேரே எங்களுக்கு ஹிந்தி பண்டிட்தான் - சொல்லி இருக்கிறார். அது நல்ல ஸ்கீம் என்று தோன்றுகிறது.
//வீரமணி மறுத்தது சரி.//
அவர் செய்தது damage limiting செயல்பாடு என்ற முறையில் சரிதான். நான் அந்த விடுதலை இதழ்களை பார்த்திருந்தால் இன்னும் சுவையான முரண்பாடுகளை வெளிக் கொணர்ந்திருப்பேன். அவை இப்போது இல்லை.
பார்க்கலாம், கிடைக்காமலா போகப் போகின்றன. சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணத்தை நிறுத்தவியலுமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அனேகமாக அவர்களுக்கும் தற்போது நடக்கும் கோர்ட் பிரச்சனை காரணமாகக்கூட bold bell கொஞ்சம் boldness இல்லாமல் பயந்திருக்கலாம் அல்லவா ?
தமிழ் ஓவியாவுக்கு சொந்த கருத்துகள் எதுவுமே கிடையாதா!?
பெரியார் சொன்னது தான் வேதவாக்கா!?
//பார்ப்பனர்கள் பூணல் போடுவதும்ம் போடாததும் அவர்கள் இஷ்டம். உங்கள் சான்றிதழ் அவர்களுக்கு தேவையில்லை.//
அப்படியா டோண்டு. சரி உங்கள் வாதப்படியே வருவோம்.
உங்கள் வீட்டுக்கு எதிரில் அல்லது பக்கத்தில் குடியிருக்கும் ஒருவர் அவர் வீட்டில் "இது பத்தினி வீடு" என்று எழுதி வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படி அவர் எழுதி வைக்கும் போது மற்ற வீடுகள் என்ன வீடூகள் டோண்டு?
அப்போது உங்கள் நிலை.
அவர் வீட்டில் தானே எழுதி வைத்துள்ளார் என்று அமைதியாக இருப்பீர்களா?
பூணூலின் மாகாத்மியம் என்ன என்பதை பார்ப்போம். ஏற்கன்வே உங்களின் பார்வைக்கு வைத்தது தான். இதோ அந்தக் கட்டுரை:-
"ஆவணி அவிட்டம்!
இப்பல்லாம் யார் சார் ஜாதியைப் பாக்குறாங்க? நீங்கதான் தேவையில்லாமல் பாப்பான், தமிழன் என்றெல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க, இதெல்லாம் அவுட்டேட் என்று கூறும் படித்த மேதாவிகள் பார்ப்பனர் அல்லாதாரில் உண்டு. கெட்டியாக மூடிக்கொண்டிருக்கும் இந்த அறியாமைக் கண்களைத் திறக்க இதோ ஒரு செய்தி. ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் திரு. வைத்தியநாதய்யரை ஆசிரியராகக் கொண்ட தினமணி (1.8.2009, பக்கம் 4) ஏட்டில் இடம்பெற்றுள்ள சேதிதான்.
ஆவணி அவிட்டத் தினத்தன்று (ஆகஸ்ட் 5) இணைய தளம் மூலம் வேத மந்திரங்களைக் கேட்டு பூணூல் மாற்றிக் கொள்ளும் வசதியை டிரெடிஷனல் விஸ்டம் என்ற அமைப்புச் செய்துள்ளது.
www.traditionalwisdom.in என்ற இணைய தளம்மூலம், கட்டணம் ஏதுமின்றி, வெளிநாட்டில் உள்ளோரும் அன்றைய தினம் வேத மந்திரங்களைக் கேட்டு பூணூலை மாற்றிக் கொள்ளலாம். அதற்கான நேரங்கள் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்கள் அறிய... (ஒரு முகவரி கொடுக்கப்பட்டுள்ளது).
..... ..... .....
இதற்குப் பிறகும் இப்பல்லாம் யார் சார் ஜாதியைப் பாக்குறாங்க? என்று எவராவது மே(ல்)தாவித்தனமாகச் சொல்வார்களே யானால் அவர்களுக்கு ஆப்புக் கொடுக்க இதனைக் கத்தரித்து சட்டைப் பைக்குள்ளேயே தயாராக வைத்துக் கொள்ளலாம்.
பூணூலை மாற்றுவது எதற்காக? அழுக்கடைந்த சட்டையைச் சலவை செய்து மாற்றிக்கொள்வது போன்றதா இது?
அதுவரை பார்ப்பனச் சிறுவனாக இருந்தவன், துவிஜாதியாக இரு பிறப்பாளனாக பிராமணனாக ஆக்கப்படுவதற்குப் பெயர்தான் பூணூல் கல்யாணம். வருடந்தோறும் அதனைப் புதுப்பித்துக் கொள்வதற்குத்தான் இந்த ஆவணி அவிட்டம்.
இன்னும் சில அறிவு ஜீவிகள், ஏன் சார் நம்ப ஆசாரி, பத்தர், செட்டியார் எல்லாம்கூட பூணூல் போட்டுக் கொள்கிறார்களே, பார்ப்பனர்களை மட்டும் குறை சொல்லலாமா? என்று கேட்பதுண்டு.
இது புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதைதான். சாஸ்திரத்தில் சூத்திரர்கள் பூணூல் போட இடம் இல்லையே.
சூத்திரன் பிராமண ஜாதிக் குறியைபூணூல் முதலியவற்றைத் தரித்தால் அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிட வேண்டும் (மனுதர்மம் அத்தியாயம் 9, சுலோகம் 224) என்கிறது மனுதர்மம்.
பார்ப்பனர்கள் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் என்று ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, பூணூல் மாட்டுவது புதுப்பிப்பது என்பது நம்மைச் சூத்திரன் என்று இழிவுபடுத்தும் அதிகாரப்பூர்வமான ஏற்பாடு என்பதை சற்சூத்திரர்கள் அறிவார்களாக!
"தமிழர்களே, உங்கள் சூத்திரப் பட்டம் ஒழிய பார்ப்பானைப் பிராமணன் என்று அழையாதீர்!"
- தந்தை பெரியார்.
--------------------- மயிலாடன் அவர்கள் 1-8-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை
உங்கள் கேள்விகள் தாழ்த்தப்ப்பட்டோர்களுக்கு பெரியாரை எதிராக நிறுத்துவதாக உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டுகிறேன். இது போன்ற குற்றச் சாட்டுக்கள் பெரியாருக்கும் சரி பெரியார் தொண்டர்களுக்கும் சரி புதிதல்ல.
1957 ஆம் ஆண்டு முதுகளத்தூர் கல்வலரத்தின் போது பெரியார் நடந்து கொண்ட முறை பற்றியும் மேலும் ஒரு சில கருத்துக்களையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்
உங்களின் பார்ப்பனிய குணாம்சம் இதில் அப்பட்டமாக வெளிப்படுவதை வாச்கர்கள் நன்கு உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிரேன்.
இதோ விளக்கம்:-
இன்றும் தீண்டாமை ஒழிக்கப்படாததற்கு காரணம் யார்? தலித்துக்கள்- பார்பனரல்லாத வகுப்பாரின் பிரிக்க முடியாத அங்கமாக நடத்தப்பட தடுப்பது யார்? தலித்துக்கள் சமூக பொருளாதார அரசியல் நிலைகளில் உயர்வதற்கு வாய்ப்புகள் அளிக்கப்படாமல் குறுக்கே நிற்பது யார்? இந்த கேள்விக்கான பதிலை நாணயமாக உண்மையாக ஆராயந்து பாருங்கள். பார்ப்பனர்கள் என்பதுதான் பதிலாக வரும்.
தீண்டாமை ஒழியாமல் இருப்பதற்கு காரணமான கடவுள், மதம், சாதி இவைகளுக்கு ஊற்றுக் கண்ணாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் பார்ப்பனர்கள் தானே?
அதே போல் அன்றிலிருந்து இன்றுவரை ஆட்சியாளர்களும் சரி, ஆதிக்கவாதிகளும் சரி பிறவிப் பார்ப்பனர்களாகவே இருப்பது எப்படி? எதனால்? இதோ அம்பேத்கர் பேசுகிறார்.
“பார்ப்பனர்கள் பெற்றிருக்கும் அந்தஸ்தும் அதிகாரமும் இந்து நாகரிகம் தந்தது அது அவர்களை மட்டுமே உயர்ந்தவர்களாக ஆக்கியது. மற்றவர்களை எதையும் அறிந்து கொள்ள முடியாமல் செய்து, பார்ப்பனர்களுக்கு எதிராக எழுந்துவிடக் கூடாத நிலையில் வைத்து விட்டது. ஏனவே அவன் சந்நியாசியோ, கிருஹஸ்தனோ, அறிவாளியோ இல்லையோ, பழைமைவாதியோ, எதிரானவனோ தங்கள் உயர்வினை பாதுகாத்துக் கொள்வதில் ஒவ்வொரு பார்பபானும் முயலுவதில் வியப்பில்லை”
(நூல்:- தீண்டப்படாதவர் வரலாறு முன்னுரையிலிருந்து)
1948 இலேயே சாதி ஒழியாமல் தீண்டாமை எப்படி ஒழியும் என்று கேட்டவர் பெரியார் அதோடு “இந்திய அரசியல் நிர்ணய சபையால் செய்யப்படும் விதிகளில் இனிமேல் , சுதந்திர, சமதர்ம இந்தியாவில் மக்கள் பிறவியில் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் அரிஜனன் என்பதான பிரிவுகள் இருக்கக் கூடாது இப்பிரிவுகள் கொண்ட ஆதாரங்கள் இருக்கக் கூடாது, இருக்கப்படவுமாட்டாது இல்லாமல் செய்யப்படும் என்று ஒரு வாக்கியம் இருக்க வேண்டும்” (விடுதலை 2.12.1948) என்று குரல் கொடுத்தவர் பெரியார். குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டத்தை 1957ல் கொளுத்தியும் காட்டினார்.
இந்திய அரசியல் சட்டத்தை நான் எழுதியதாகச் சொல்லுகிறார்கள் இப்போது சொல்லுகிறேன். அந்தச் சட்டத்தை தீ வைத்துக் கொளுத்த நான் முதல் ஆளாக இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அம்பேத்கர் 3.9.1953 அன்று பாராளுமன்றத்திலேயே பேசியுள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு என்றுமே தடையாய் இருப்பவர்கள் பார்ப்பனர்கள் என்பதை அம்பேத்கரும் பெரியாரும் தெளிவாக கூறியுள்ளார்கள்.
--------------தொடரும்
----------தொடர்ச்சி
"கேள்வி:- பெரியாரைக் குற்றம் சுமத்தி அவரைத் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக சித்தரிக்கும் முயற்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மிசோரம் மாநில முன்னாள் ஆளுநர் திரு.ஆ.பத்மநாபன் அவர்களின்
பதில்:-
முட்டாள்தனம், அப்படிச் சித்தரிப்பது முட்டாள்தனம், பெரியார் இல்லை என்றால் இந்த அளவு கூட மனிதர்களாக நாம் இருந்திருக்க முடியாது.
அவர்கள் யாராவது பெரியாரைப் பார்த்திருக்கிறார்களா? அவருடைய பேச்சைக் கேட்டிருப்பார்களா? அவர் ஒவ்வொரு கூட்டத்திலும் ஆதி திராவிடர்களை பற்றிப் பேசாமல் இருக்க மாட்டடர். நான் அண்மையில் அம்பேத்கர் அகாதமியில் பேசும் போது கூட இது பற்றிப் பேசினேன். பெரியார் தான் பார்பனரல்லாத மக்களை மானமுள்ள மனிதர்களாக ஆக்கினார். பெரியாரைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? பெரியார் கருத்துக்களை முழுமையாகப் படித்திருப்பார்களா?
----------------“உண்மை”, டிசம்பர் 1-15,2002.
திரு.பத்மநாபன் அய்யா அவர்களின் விளக்கத்திதற்கு எந்தப் பொழிப்புரையும் தேவையில்லை. ஆதேபோல் இது குறித்து ஆதிதமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் திரு.அதியமான் என்ன சொல்கிறார் என்பதையும் பார்ப்போம்.
“இது ஒரு திரிபுவாதம் என்றே நான் கருதுகிறேன்;. அது சரியான கருத்தல்ல பெரியாரைப் பற்றி முழுமையாக புரிந்து கொண்டவர்கள் அப்படி நிச்சயமாக சொல்ல மாட்டார்கள். பெரியாரை எந்த வகையிலும் நாம் ஏற்றுக் கொள்கிறோம் இன்னும் சொல்லப்போனால் பெரியாரே கூட 1930, 33 கால கட்டங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு நான் வழிகாட்டலாகவும், உதவி புரிதலாகவும் இருக்க முடியுமேயொழிய உங்களுடைய போராட்டங்களை நீங்களோ, உங்கள் தலைவர்களோ முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார்கள். ஆகவே பெரியார் அவர்கள் மிகத் தெளிவாக தம்முடைய வரம்பை ஒரு காலகட்டத்திலே சொல்லிவிட்டார்கள்"
(“இனி” இதழ்)
பெரியாரைத் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக சித்தரிப்பது ஒரு திரிபுவாதம், முட்டாள்தனம் என்று சொல்லியுள்ளார்கள் தலைவர்கள்.
தாழ்த்தப்பட்டவர்கள் பாதிப்புள்ளாகும் போது பெரியாரும், பெரியார் தொண்டர்களும் கொதித்தெழுந்து அப்பிரச்சனைகளை, அப்பாதிப்புகளை நீக்க பாடுபட்டு வருகிறார்கள் என்பதுதான் உண்மை நிலை. உதாரணமாக முதுகுளத்தூர் கலவரத்தின்போது பெரியார் யார் பக்கம் நின்றார் என்பதைப் பார்ப்போம்.
1957ல் நடந்த தேர்தலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அணிக்கும், தோழர் இம்மானுவேல் அணிக்கும் பகை வலுவடைந்து செப்டம்பர் 11ம் தேதி இரவு 8.30 மணியளவில் இம்மானுவேல் வெட்டிக் கொல்லப்படுகிறhர். தேவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பெரியாரின் நிலைப்பாடு என்ன என்பதை “இம்மானுவேல் தேவேந்திரர் கதைப்பாடல்” எனும் நூலில் செ.சண்முகபாரதி அவர்கள் பதிவு செய்துள்ளார். ஆதன் விபரம் இதோ.
“கலவரத்தை ஒடுக்குவதில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் தனது முழுக்கவனத்தையும் செலுத்தியது. காங்கிரசின் செயலுக்காகப் பெரியார் காமராஜரைப் பாராட்டினார். அது மட்டுமின்றி இக்கலவரத்தில் சமூக விரோதிகளைக் கடுமையாய் தண்டித்துச் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தபடாவிட்டால் அமமக்களின் சார்பில் போராட்டத்தில் குதிப்பேன் (விடுதலை) என்று அறிக்கையும் விட்டார்”.
அடுத்து
“தாழ்த்தப்படடவர்களை இழிவாகக் கருதும் சூத்திரர்களாகிய கள்ளர் சமுதாயத்தினரைக் குறித்து பார்ப்பனர்கள் இழிவாக எழுதி வைத்திதருப்பதை வெள்ளைக்கார அறிஞர் எடகார்தர்ஸ்டன் என்பவர் குறிப்பிட்டுள்ளதை பெரியார் தனது இறப்புக்கு சில நாட்களுக்கு முன் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் (தி.க.பொதுச்செயலாளர் கி.வீரமணியும், வே.ஆனைமுத்துவும் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில்)வே. ஆனைமுத்துவைப் படிக்கச் செய்தார். கிடைத்த பலன் என்ன? மேடையை நோக்கி கற்கள் வீசப்பட்டன. தோழர்களும், பொது மக்களும் புடை சூழ்ந்ததால் கல்லடியிலிருந்து உயிர் பிழைத்தார் பெரியார்”.
(விடுதலை 2.11.1973 நூல்:- எஸ்.வி.ராசதுரை எழுதிய பெரியார் ஆகஸ்ட் 15, பக்கம் 620-621)
உயர் நீதி மன்றத்தில் தாழ்த்தப் பட்டவர் நீதிபதியாக வரக் காரணமாக யிருந்தவர் பெரியார்
இன்னும் பல சான்றுகள் உள்ளன. அருள்கூர்ந்து தாழ்த்தப்பட்டோரும் தந்தைபெரியாரும் என்ற நூலைப் படிக்க வேண்டுகிறேன்.
//38-இல் ஹிந்தி எதிர்ப்பு தவறு, அதை 65-இல் மாற்றிக் கொண்டார் என்று சொல்கிறீர்களா? கொஞ்சம் விளக்குங்களேன்!//
ஆர்.வி.யே ஏற்கனவே நான் எழுதிய பின்னூட்டத்தில் 1965 இல்பெரியாரின் நிலை பற்றி தெளிவாக சொல்லியுள்ளேன். மீண்டும் குழம்புகிகிறீர்களே.
நீங்கள் குழம்பாமல் இருக்க மீண்டும் எனது விளக்கம்
"பெரியார் ஹிந்தி திணிப்பை சு. ம. இயக்கத்திலிருந்து 1965 லும் எதிர்த்தார்.
ஹிந்தி திணிப்பை எதிர்ப்பதில் பெரியார் என்றும் சமரசம் செய்து கொண்டதில்லை. 1965 இலும் ஹிந்தி திணிப்பை எதிர்த்தார்.
1965 இல் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு என்ற பெயரில் அரசியல் கட்சிககள் (இதில் பார்ப்பனர்களையும் செர்த்துக் கொள்ளலாம்) வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டன. அதே போல் மாணவர்களை தூண்டியும் விட்டனர்.
இந்த வன்முறைப் போராட்ட வடிவத்தைத் தான் பெரியார் எதிர்த்தாரே தவிர இந்தித் திணிப்பு போராட்டத்தை அல்ல என்பதை புரிந்து கொண்டாவர்களுக்கு குழப்பம் வராது."
அட அடையாளம் தெரியாத அநாமதேயமே,
தமிழோவியா கோவிச்சுக்க போறாரு. கொஞ்சம் தைரியமா அவர் போலவே "ஒரிஜினல்" பேருலயே கமெண்ட் போடுங்க.
ஈ.வே.ராமசாமி நாயக்கர் பணக்கார, ஆதிக்க மேல் சாதியினருக்காக இயக்கம் நடத்தியவர். தலித்துக்களை போராட்டங்களில் அடிபட்டு ஜெயிலுக்குப் போக பயன்படுத்திக் கொண்டாரேயன்றி அவர்களின் மேம்பாட்டுக்காக அவர் ஒன்றும் செய்யவில்லை.
அது போகட்டும். அது பழைய கதை.
நிகழ்காலத்தில் திண்ணியத்தில் நடந்த கொடுமை, தலித்துக்களை சுவர் கொண்டு பிரித்தது, அவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதை தடுத்தது, மிகக் கேவலமான இரட்டைக் குவளை முறை - இதையெலாம் செய்வது யார்? பார்ப்பனர்களா?
இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் பார்ப்பனர்களும் தலித்துக்களும் தாழ்த்தப்பட்டவர்கள்தான்.
மாயாதேவி பிராமணர்களை அரவணைத்து உ.பி.யில் வென்றார். இங்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பிராமணர்கள் சேர்ந்தாயிற்று! இந்த மாற்றங்களை அறியாமல் தமிழ் ஓவியா போன்றோர் பழைய பார்ப்பன வெறுப்புக் குப்பையை வாந்தி எடுத்துக் கொண்டு அதைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்க வேண்டியதுதான். அந்த சரக்கு இனிமேல் விலை போகாது. வெறுப்பியல் என்றும் வெல்லாது.
ஊரறிஞ்ச பார்ப்பானுக்கு பூணூல் எதுக்குன்னு ஒரு சொல்வடை இருக்கு தெரியுமா? M Arunachalam s.
அது போல் என்னைப் பற்றி எந்தரகசியமும் கிடையாது. அனைவருக்கும் தெரியும். எனது வலைப்பூவைப் படியுங்கள்.
நன்றி
எஸ்.கே.
அம்பேத்கர் உட்பட முக்கிய தாழ்த்தப்பட்ட தலைவர்களின் கருத்தைத் தொகுத்து மேலே தந்துள்ளேன். இன்னுமொருமுறை படியுங்கள். உண்மையை உணருங்கள்.
பெரியாரின் தலித் எழுத்தை படியுங்கள். அதற்கான் சுட்டி இதோ:-
http://www.keetru.com/dalithmurasu/feb09/periyar_1.php
//இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் பார்ப்பனர்களும் தலித்துக்களும் தாழ்த்தப்பட்டவர்கள்தான்.//
இது இப்போது பார்ப்பனர்கள் வைக்கும் வாதம் எஸ்.கே.
மற்ற உங்களின் கேள்விகளுக்கு நவம்பர் 2008 தலித் முரசு தலையங்கம் உங்களுக்கு தெளிவை ஏற்படுத்தும் என்பதால் அதை அப்படியே தருகிறேன்.
"
இந்தியாவில் ஒரு தலித் பிரதமராகப் போகிறார்' என்ற குரல் முன்னெப்போதையும்விட, தற்பொழுது உரக்கக் கேட்கிறது. முதல்வர் மாயாவதியை முன்னிறுத்தி, பகுஜன் சமாஜ் கட்சி இப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. உத்திரப்பிரதேசத்தில் ஏற்கனவே மும்முறை முதல்வராக இருந்த மாயாவதி, இம்முறையும் முதல்வராகப் பதவி வகிக்கிறார். ஆனால் அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றம்தான் என்ன? தலித்துகள் பொருளாதார நிலையில் சற்று உயர்வதாலும், அரசியல் அரங்கில் ஓரளவுக்கு அறியப்படுவதாலுமே-அவர்கள் சமூக ரீதியாக முன்னேறி விட்டதாகப் பொருள் கொள்ளுவது மாபெறும் தவறு. தலித் மக்கள் சாதி ரீதியாக, சமூக ரீதியாகப் பின்தங்கி இருக்கும்வரை, எவ்வளவு பெரிய பொருளாதார மாற்றங்களோ, அரசியல் மாற்றங்களோ-சமூக மாற்றத்தைத் தன்னளவிலேயே கொண்டு வந்து விடாது.
எது சமூக மாற்றத்தை உருவாக்கும் என்பதற்கு, ஆழமான ஆய்வுகள் கூட தேவையில்லை. இந்து சாதிய சமூக அமைப்புக்கு எதிராக டாக்டர் அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு தளங்களில் நடத்திய இடையறாத போராட்டங்களை உற்று நோக்கினாலே போதும். அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சி, தமிழகத்தில் கால் பதிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் அக்கட்சியின் செயல்திட்டம் என்ன? சாதிரீதியாக பிரபலமானவர்களை கட்சியில் சேர்ப்பது. கொள்கை? மயிலாப்பூர் சட்டமன்ற (அ.தி.மு.க.) உறுப்பினர் எஸ்.வி. சேகர் என்ற பார்ப்பனர் சொல்கிறார்: “மாயாவதி கட்சியினர் என்னிடம் பேசினர். நான் மாயாவதியையும் சந்திப்பதாக இருக்கிறேன். பகுஜன் சமாஜ் கட்சி 25 முதல் 30 சதவிகித இடங்களை ‘பிராமணர்'களுக்குத் தரவிருக்கிறது. இது உண்மை எனில், நான் இதை கண்டிப்பாகப் பரிசீலிப்பேன். சமூகத்தில் ‘பிராமணர்'கள் ஒதுக்கப்படுகிறார்கள்; தலித்துகள் ஒடுக்கப்படுகிறார்கள். எனவே, இவ்விரு சமூகங்களும் கைகோக்க வேண்டும்'' (‘இந்தியன் எக்ஸ்பிரஸ்' 3.12.2008). இத்தகைய போக்குகள் சமூகப் பேரழிவுக்கே வழிவகுக்கும்.
அடுத்து, இந்திய ஆட்சிப் பணியை விட்டு, பகுஜன் சமாஜ் கட்சியின் முதன்மைப் பொதுச் செயலாளராகி இருக்கும் ப. சிவகாமி, பெண்கள் அய்க்கியப் பேரவையும் (அவர் தொடங்கியுள்ள அமைப்பு) ‘தினமலர்' நாளிதழும் இணைந்து- ‘கிராமப் பெண்கள் இணை ஒலிம்பிக் பந்தயம்' என்ற நிகழ்வை இலக்கியப் போட்டிகளுடன் மாவட்டம் தோறும் நடத்தி வருகிறார்கள்'' (‘புதிய கோடாங்கி') என்று அறிவித்துள்ளார். ‘தினமலர்' என்ற ஆர்.எஸ்.எஸ்.சார்பு நாளேட்டுடன், ஒரு தலித் இயக்கத்தை இணைத்து செயல்படுவது, இம்மக்களுக்கு இழைக்கும் துரோகம் அல்லவா?
சமூக மாற்றத்தையும், தலித் விடுதலையையும் முன்னிறுத்தி கட்சியைத் தொடங்கி, அரசியல் அதிகாரம் இருந்தால் தான் இது சாத்தியமாகும் என்று மக்களை நம்ப வைத்து, பிறகு இதனால் ஏற்படும் மக்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி-அரசியல்
அதிகாரத்திற்காக சில உத்திகளை (சமரசங்களை) செய்தாக வேண்டும் என்று மக்களை திசை திருப்பி, இறுதியில் சமூக மாற்றமே ஏற்படாத வகையில் ஆதிக்க சாதியினரிடமும்,மதவெறி கட்சிகளுடனும் கூட்டணியை ஏற்படுத்தி, அதற்கு அம்பேத்கரையும் சாட்சிக்கு அழைத்துக் கொண்டு, கட்சி நடத்துவதற்குப் பெயர் அரசியல் என்றால், இது பிழைப்புவாதமேயன்றி வேறென்ன?"
எஸ்.கே. ஆற அமர யோசியுங்கள் உண்மை புரியும்.
நன்றி
//ஊரறிஞ்ச பார்ப்பானுக்கு பூணூல் எதுக்குன்னு ஒரு சொல்வடை இருக்கு தெரியுமா? அது போல் என்னைப் பற்றி எந்தரகசியமும் கிடையாது. அனைவருக்கும் தெரியும். எனது வலைப்பூவைப் படியுங்கள்.//
I have never heard about you or your blog till date. Nor am I interested in reading your biased views. Thanks.
பெரியாரின் இரட்டை வேடம்,கொள்கையில் முரண்பாடு,ஆட்சியாளரின் பால் கரிசனம்
இவைகளை விரிவாய் பதிவு செய்தால்
உலகுக்கு பல உண்மைகள் தெரிய வரும்.
டோண்டு ஐயா,
தங்களின் அனுபவத்தை பதிவிட்டதற்கு நன்றி. நூலகங்களில் விடுதலை வாங்குகிறார்களா என்று தெரியவில்லை. அப்படி வாங்குகிறார்கள் என்றால் நீங்கள் கன்னிமாரா நூலகத்திலோ அல்லது சென்னைப் பல்கலைகழக நூலகத்திலோ பழைய விடுதலை இதழ்களை பார்க்கலாம்.
1.ஹிந்து ராம்,தினமணி வைத்திய நாதன் -பத்திரிக்கையாளர் என்ற பார்வையில் ஒரு ஒப்பீடு?
2.ஜெமினி கனேஷ்,கமல் இவர்கள் பார்வையில் பிராமணீயம்,பிரமண தோஷம்,அவணி அவிட்டம் பூணூல் பற்றிய கண்ணோட்டம்,பெரியார் கொள்கை பற்றிய விமர்சனம்?
3.கலப்பு திருமணங்களில் தலித்தும் பிரமணா சமூகம் மட்டும் பெரும் அளவில் என்ன காரணம்?
4.தலித்,பிராமணர் ஒற்றுமை தமிழ் நாட்டில் ஏற்பட வாய்ப்பு உண்டா?
5.சைவ உணவு சாப்பிடும் ஐயங்கார் சமுகத்தினர்,ஆண் பெண் இரு பாலரும் அறிவு ஜீவிகளாகவும்,ஆஜானுபாகர்களாகவும், இருப்பதற்கு அடிப்படை காரணம்?
@ராமகுமரன்
அருமையான யோசனை. கன்னிமாராவில் முயற்சி செய்து பார்க்கிறேன். பல்கலைக் கழக நூலகத்தில் சான்ஸ் சற்றே குறைவுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Try at Anna Arivalayam library. They are likely to have the back volumes of Viduthalai.You are not the first person to be refused permission, nor will you be the
last person.Walaja Vallavan, a follower of Periyar was asked not to come to the library as he opposed Veeramani's claims
over copyright. To be frank
the collection at Periyar Thidal
library is incomplete.They acknowledged this by giving a
notice in Viduthalai about volumes not available with them and requested those who have them to share them. They dont have the
complete collection of dailies
and other magazines published by
Periyar. Yet they bring out collected works of Periyar, subject wise, in many volumes.
As long as ignorant followers like Tamiloviya are there to support him Veeramani need not worry.
Tamiloviya, Periyar opposed the anti-Hindi agitation in 1965 and
DID NOT OPPOSE the imposition of
Hindi. You are trying to fool others.He supported the congress govt. and opposed the anti-Hindi
agitation.Rajaji opposed imposition of Hindi in 1965. But as you are a follower of Veeramani and Periyar, one cannot expect you to speak the truth.
@தமிழ் ஓவியா
பிராமனன் சரீரத்தால் பாடு படாதவன்.
ஒரு சமூகத்தில் சரீரத்தால் பாடுபடும் வேலைகளும் உண்டு , சரீரத்தால் பாடுபடாத வேலைகளும் உண்டு. சரீரத்தால் பாடுபடாதவர்கள் வேறு விதமாக பாடுபடுகிறார்கள். சரீரத்தால் மட்டுமே பாடுப்பட்டு கொண்டிருந்தால் கணக்கர்கள், விஞ்ஞானிகள் ,ஆசிரியர்கள், வக்கீல்கள், அம்பேத்கார் போன்றோர் பாடுபடவேயில்லை என்கிறீர்களா? அவர்களின் சொத்தையும் பிடுங்கிகொள்ளலாமா?
யார் சார் ஜாதியை பார்க்கிறாங்க?
முதலில் பார்ப்பனர் அல்லாத பத்திரிக்கைகளான தினத்தந்தி, தினகரன் போன்றவற்றை எடுத்து பாருங்கள் அதில் வரும் திருமன வரன்களுக்கான விளம்பரங்களை பாருங்கள். துளுவ வேளாளர் தகுந்த துளுவ வேளாளர் குடும்பத்திலிருந்து வரன் தேவை என்று தான் வருகின்றன. இது ஏன் தலித்களான தேவேந்திரகுலவேளாளருக்கு தேவேந்திரகுலவேளாளர் வரன் தேவை என்று தான் விளம்பரங்கள் வருகின்றன. அவர்களை முதலில் ஜாதியை விட சொல்லுங்கள் பிறகு பிராமணர்களை பூனூலை விட சொல்லாம்.
//பூணூல் போடுவதும் பொட்டு வைப்பதும் மீசை வைப்பதும் தாடி வைப்பதும் சுன்னத் செய்வதும் சிலுவை மாட்டிக் கொள்வதும் தலைப்பா கட்டிக்கொள்வதும் அவரவர் சொந்த இஷ்டம். அதை கேட்க நீங்கள் யார்? இல்லை பெரியார்தான் யார்? பூணூல் அடுத்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதை காட்டுகிறது என்று நினைக்கிறீர்களா?//
தாடி வைப்பதும் சுன்னத் செய்வதும் சிலுவை மாட்டிக் கொள்வதும் தலைப்பா கட்டிக்கொள்வதும் அவரவர் சொந்த இஷ்டம். ஆனால் இது யாரையும் இழிவுபடுத்தவில்லை.
பூணூல் இழிவுபடுத்துகிறேதே.எப்படி இழிவு படுத்துகிறது என்பதற்கான ஆதாரக்கட்டுரையை மெலே கொடுத்துள்ளேன். படியுங்கள்.
//"தமிழ் ஓவியாவுக்கு சொந்த கருத்துகள் எதுவுமே கிடையாதா!?
பெரியார் சொன்னது தான் வேதவாக்கா!?//
பெரியார் என்ன சொன்னார்? என்ன சொல்லவில்லை? என்பதுதானே இப்போ பிரச்சனை?
இதைத் தெரிந்தவர் சொன்னால் கேட்கவேண்டியதுதானே? அவர் உங்களுக்குச் சொல்லத்தானே இங்கே எழுதிக் கொண்டிருக்கிறார்?
அவர் தனிப்பட்ட கருத்து வேண்டுமானால், தனியாகத்தான் எழுதவேண்டும்.
ஏன், குழப்பம் உங்களுக்கு Vaal payan?
Give your comments apropos Periyaar's views, not Tamil Oviya
//I have never heard about you or your blog till date. Nor am I interested in reading your biased views. Thanks.//
But you are reading here and commenting upon. You shouldnt do this also. When TO's comments are biased in his blog, how come his comments are fair and unbiased here, Mr Arunaachalam? How come you are reading them and commenting on biased views?
தமிழ் ஓவியா,
டோண்டு சொல்வதை வைத்து பார்த்தால் பெரியாரின் ஹிந்தி எதிர்ப்பு நிலை நீங்கள் சொல்வது போல இல்லை. வீரமணியின் தயக்கமும் டோண்டுவின் நிலைக்கு வலு சேர்க்கிறது. உங்களுக்கு வீரமணி அவர்களை தெரியும் போலிருக்கிறது, நீங்களாவது அந்த விடுதலை இதழ்களை பார்க்க டோண்டுவுக்கு அனுமதி வாங்கி கொடுத்து டோண்டு சொல்வது சரி இல்லை என்று அவரையே சொல்ல வைக்கலாமே?
அப்புறம் பெரியாரை பற்றி டோண்டு எழுதிய கேள்விகளுக்கு பதில் இல்லையே? எனக்கு பெரியார் மீது மதிப்பு உண்டு, ஆனால் அவர் கீழ் வெண்மணி பற்றி பேசியது பெரும் உறுத்தல். நீங்கள் இந்த specific கேள்விகளுக்கு specific ஆக பதில் சொன்னால் என் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும். பத்மநாபன் சொன்னார் என்று நீங்கள் எழுதியதில் இந்த specific கேள்விகளுக்கு பதில் இல்லையே?
// பூணூல் இழிவுபடுத்துகிறேதே.எப்படி இழிவு படுத்துகிறது என்பதற்கான ஆதாரக்கட்டுரையை மெலே கொடுத்துள்ளேன். படியுங்கள். //
இழிவு உங்கள் கண்களில் இருக்கிறது. நாளை நான் "I am the Boss!" என்று எழுதிய ஒரு டி-ஷர்டை போட்டுக்கொண்டு வெளியே வந்தால் உங்களுக்கு ஐயோ அவன் பாஸ் என்றால் நான் வேலைக்காரனா? என்னை இழிவுபடுத்துகிறானே என்று தோன்றும் - அதை பற்றி வண்டி வண்டியாக எழுதுவீர்கள், உடனே நான் என் டி-ஷர்ட்டை தூக்கி கடாசிவிட வேண்டுமா என்ன? என் உடலில் நான் என்ன அணிகிறேன் என்பது என் இஷ்டம் - அது பூநூலாகவோ, மைக்ரோ மினி ஸ்கர்டாகவொ, தொப்புளில் வளையமாகவோ, "இதை படிப்பவன் ஒரு தாயோளி" என்று எழுதிய டி-ஷர்டாகவோ, என்ன இழவாக வேண்டுமானால் இருக்கலாம். அடுத்தவர் மனதில் என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை பொறுத்து என்னுடைய அணிமணிகள் இருக்க முடியாது. அது distasteful என்று நீங்கள் நினைக்கலாம். De gustibus non est disputandam (Of tastes there an be no dispute) என்ற லத்தீன் பழமொழியை (அப்பாடா! எனக்கு தெரிந்த ஒரே லத்தீன் வாக்கியத்தை பயன்படுத்திவிட்டேன்!) உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். அப்புறம் என் பக்கத்து வீட்டில் இது பத்தினி வீடு என்று போட்டுக்கொண்டால் எனக்கென்ன போச்சு? அது அவர்கள் immaturity-யை அல்லவா காட்டுகிறது? ஆர்எம்கேவி நாங்கள்தான் உலகின் சிறந்த புடவைக் கடை, மிச்ச எல்லாம் சொத்தை என்று விளம்பரம் செய்தால் நல்லி குப்புசாமி செட்டியார் தற்கொலையா செய்து கொள்ள போகிறார்?
//மாயாதேவி பிராமணர்களை அரவணைத்து உ.பி.யில் வென்றார். இங்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பிராமணர்கள் சேர்ந்தாயிற்று! //
அதற்காக இப்பொது வருந்துகிறார். உ.பி தலித்துகள் அவரை விட்டு விலக ஆரம்பித்துவிட்டனர். தற்போது நடந்த தேர்தலில், தலித்துகள் அவரை கைகழுவிவிட மூக்கறுபட்டார்.
அதே நிலை, திருமாவள்வனுக்கும் வ்ரும் நாள் தூரத்தில் இல்லை.
\\அதே போல் அன்றிலிருந்து இன்றுவரை ஆட்சியாளர்களும் சரி, ஆதிக்கவாதிகளும் சரி பிறவிப் பார்ப்பனர்களாகவே இருப்பது எப்படி? எதனால்? இதோ அம்பேத்கர் பேசுகிறார்.//
என்னது? அன்றிலிருந்து இன்று வரை ஆட்ஷியாளர்கள் பிறவிப் பார்ப்பனர்களா? தமிழ் ஓவியா, இருந்தாலும் வீரமணி உங்களுக்கு இப்படியொரு மூலைச்சலவை செய்திருக்கக் கூடாது.
\\தாடி வைப்பதும் சுன்னத் செய்வதும் சிலுவை மாட்டிக் கொள்வதும் தலைப்பா கட்டிக்கொள்வதும் அவரவர் சொந்த இஷ்டம். ஆனால் இது யாரையும் இழிவுபடுத்தவில்லை.//
அதே மாதிரி, பூணூல் போட்டுக் கொள்வதும் அவரவர் சொந்த விஷயம். இதில் என்ன அவமானத்தைக் கண்டீர்கள்?
பூணூல் போட்டதற்காக, குடுமி வைத்ததற்காக ராமசாமி நாயக்கரின் தொண்டர்கள் தான் பார்ப்பனர்களை அவமானம் செய்தார்கள். உங்கள் தலைவர் ராமசாமி நாயக்கர் சொன்னால் அது வேதவாக்கா? இது 2009 தமிழ் ஓவியா, வீரமணியும், ராமசாமி நாயக்கரும் உங்கள் காதில் முடிந்த அளவு குத்தியிருக்கிறார்கள்.
\\பெரியாரைத் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக சித்தரிப்பது ஒரு திரிபுவாதம், முட்டாள்தனம் என்று சொல்லியுள்ளார்கள் தலைவர்கள்.//
அப்படியென்றால், கீழவெண்மணி நிகழ்வில், தன் நிலையை தெளிவாகச் சொல்லாததன் காரணம் என்ன? அண்ணாவும், கருணாநிதியும், வீரமணியும் சொன்னால் அது உண்மையாகி விடுமா?
அன்புடன் அனானி
(இதை வெளியிட வேண்டாம்.
டோண்டு சார்,
உங்கள் போன பிறந்த நாளன்று தொலைபேசி வாழ்த்துச் சொன்ன அதே அன்புடன் அனானி.)
//அவர்களை முதலில் ஜாதியை விட சொல்லுங்கள் பிறகு பிராமணர்களை பூனூலை விட சொல்லாம்.//
அடுத்தவன் பாத்ரூம் போயிட்டு கழுவாம வந்துட்டா. நானும் அப்படியே.
அவன் கழுவட்டும் அப்புறம் நா கழுவுவேன்.
//பூணூல் அடுத்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதை காட்டுகிறது என்று நினைக்கிறீர்களா?//
RV!
கண்டிப்பாக. பூணூல் மட்டுமல்ல. பார்ப்பனர் செய்யும் பலபல் செயல்கள் - ம்தமொட்டிவந்தவை - பிறரைத் தாழ்ந்த்வர்கள் என்றும்,தன்னை உயர்ந்தவர்கள் என்றும் காட்டவே வந்தவை.
ஊரைக்கூட்டி தம் ஜாதியாருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுத்து, பிராமணச்சாமியாரை வைத்து, பூணுல் போடுவது, தான் பிராமணன், எஙக்ள் மதம் எங்களுக்கு மட்டுமே கொடுத்த உரிமை - அஃது, எங்களைப்பிறரிடமிருந்து உயர்த்திக் காட்ட - என்பதெல்லாம், பூணூல் சடங்கில் நுணுக்கங்களை, கரணியங்களையும், மந்திரங்களையும் உற்றுப்பார்ப்பின் புரியும். இது ஒரு மோசமான் சடங்கு. பிறமக்களை இழிவு படுத்தவே வந்தது.
பெரியார் கடவுள் இல்லையே!
அவர் சொன்னா எல்லாமே சரியா தான் இருக்கணுமா!?
நமக்கும் மண்டை இருக்குது!?
ஏன் எதுக்குன்னு யோசிக்கனும்!
இப்படி தூண்டி விட்டுகிட்டே இந்த திராவிட கட்சிகள் அரசியல் பண்ணும், மக்கள் கடைசி வரைக்கும் ஆட்டு மந்தைகளாகவே இருக்க வேண்டியது தான்!
//
தாடி வைப்பதும் சுன்னத் செய்வதும் சிலுவை மாட்டிக் கொள்வதும் தலைப்பா கட்டிக்கொள்வதும் அவரவர் சொந்த இஷ்டம். ஆனால் இது யாரையும் இழிவுபடுத்தவில்லை.
பூணூல் இழிவுபடுத்துகிறேதே.எப்படி இழிவு படுத்துகிறது என்பதற்கான ஆதாரக்கட்டுரையை மெலே கொடுத்துள்ளேன். படியுங்கள்.
//
சுன்னத் செய்வது, சுன்னத் செய்யாதவரை இழிவு படுத்தவே.
தாடி வைப்பது தாடி வளராத பெண்களைப் பார்த்து இழிவு படுத்தவே.
தலைப்பா கட்டுவது, தனக்கு மட்டும் தான் தலைப்பா கட்டுவதற்கு தகுதி இருக்கிறது என்பதைக் காட்டவே.
ஊரைக்கூட்டி தன் மதக்காரர்களுக்கு மட்டும் என்று சொல்லி, தம்மதப் போதகரை அழைத்து சிறுவர்களுக்கு சுன்னத் செய்வதும், அதில் ஒவ்வொரு முறை கூறப்படும் குரான் மந்திரத்திலும் அல்லாவை ஏற்காதவர்களான பிற மதத்தவர்களை எப்படி இழிவாகப் பேசுகிறது என்பது விழங்கும்.
ஆகவே, தமிழ் ஓவியா அவர்கள் ஒரு சுன்னத் கல்யாணத்தில் சென்று பிரியாணியில் கவனம் செலுத்துவதை விடுத்து ஓதும் மந்திரத்தில் கவனம் செலுத்தி ஒரு பதிவு போடுவார் என்று நம்புவோம்.
உடனே, உன்னை நிறுத்தச்சொன்னால் அவனைக்காண்பிக்காதே என்று ஜம்பம் கட்டிக்கொண்டு வரவேண்டாம்.
பார்ப்பானர்கள் பூனூல் அணிகிறார்கள் என்பதற்கு 10 பதில் எழுதும் தமிழ் ஓவியா இஸ்லாமியர் சுன்னத் செய்வது பற்றி ஒரு பதில் கூட எழுதாமல் இருப்பது அவரது மதச்சார்பற்ற நிலைக்கு அழகல்ல.
அதற்காகத் தான் சொல்கிறேன்.
//பெரியார் கடவுள் இல்லையே!
அவர் சொன்னா எல்லாமே சரியா தான் இருக்கணுமா!?
நமக்கும் மண்டை இருக்குது!?
ஏன் எதுக்குன்னு யோசிக்கனும்!//
உங்க மண்டையை வைச்சு நல்லா யோசி. சரின்னு தோணூச்சுன்னா ஏத்துக்க. இல்லைன்னா தூக்கிப் போடுட்டு போங்க.
//பார்ப்பானர்கள் பூனூல் அணிகிறார்கள் என்பதற்கு 10 பதில் எழுதும் தமிழ் ஓவியா இஸ்லாமியர் சுன்னத் செய்வது பற்றி ஒரு பதில் கூட எழுதாமல் இருப்பது அவரது மதச்சார்பற்ற நிலைக்கு அழகல்ல.//
கோட்சே காந்தியைக் கொல்வதற்கு முன்னால் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டும், சுன்னத் செய்து கொண்டும்,காந்தியைக் கொன்றான்.
போதுமா?
கம்யூனிஸ்டுகளைக் காயடிப்பவன்
//உங்க மண்டையை வைச்சு நல்லா யோசி. சரின்னு தோணூச்சுன்னா ஏத்துக்க. இல்லைன்னா தூக்கிப் போடுட்டு போங்க. //
நான் இங்கிலீஷ்லயா சொன்னேன்!
\\உங்க மண்டையை வைச்சு நல்லா யோசி. சரின்னு தோணூச்சுன்னா ஏத்துக்க//
இதுதான் தி க காரர்களின் பாணி. எதிராளி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியவில்லையென்றால் உடனே நீ, வா, போ, யோசி, ஏத்துக்க என்று ஒருமையில் இறங்கி பின் வெற்றிகொண்டானும், தீப்பொறி ஆறுமுகமும் வெட்கித் தலைகுனியும் அளவிற்குப் பேசித் தீர்ப்பார்கள்.
தமிழ் ஓவியா, பகுத்தறிவு ஏட்டில் மட்டும் எழுதுவது அல்ல, மண்டையில் இருக்கும் மசாலாவை உபயோகித்து தானாகவே இது நல்லது, இது கெட்டது என்று ஆராய்ந்து வருவது. உங்களுக்கு வேண்டுமானால் விடுதலையைப் படித்து பகுத்தறிவு வந்திருக்கலாம். வாக்குவாதத்தின் போது ஒருமையில் விளிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
அன்புடன் அனானி.
//பெரியார் கடவுள் இல்லையே!
அவர் சொன்னா எல்லாமே சரியா தான் இருக்கணுமா!?
நமக்கும் மண்டை இருக்குது!?
ஏன் எதுக்குன்னு யோசிக்கனும்!
இப்படி தூண்டி விட்டுகிட்டே இந்த திராவிட கட்சிகள் அரசியல் பண்ணும், மக்கள் கடைசி வரைக்கும் ஆட்டு மந்தைகளாகவே இருக்க வேண்டியது தான்!//
அடிப்படை வாதமே தவறு. பெரியாரைப் படித்து, அல்லது, கேட்டு, அவர்தம் கொள்கைகளை அனைவரும் கண்மூடி வாய்பொத்திக் கேட்டதாக இவர் கற்பனை பண்ணுகிறார்.
இந்த கற்பனை, புகழ்பெற்ற சாமியார் ஒருவன், சொல்ல, மக்கள் கேட்பார்கள். அவர்கள் சிந்திக்க மாட்டார்கள் அவர்க்ளதான் ஆட்டு மந்தைக்கூட்டம். அவர்களிடம் போய், வால் போய் சொல்லலாம். போவதற்குமுன் சாமியார் வேடம் போடவும்.
பெரியாரே சொன்னதாக நான் படித்திருக்கிறேன் தனது கொள்கைகளைக் கண்மூடித்தனமாக் ஏற்றுக்கொள்ள வேண்டாம். அவரவர் பகுத்தறிவைக் கொண்டு ஆராயுங்கள் என்ற்தாக!
எந்தச் சாமியாரும் இப்படிச் சொன்னதுண்டா? வேறு எவனும் இப்படிச் சொன்னதுண்டா?
//இப்படி தூண்டி விட்டுகிட்டே இந்த திராவிட கட்சிகள் அரசியல் பண்ணும், மக்கள் கடைசி வரைக்கும் ஆட்டு மந்தைகளாகவே இருக்க வேண்டியது தான்//
பண்ணவில்லை என்றால் என்ன ஆகும்? அதற்கு மாற்று என்ன? பார்ப்பனனின் கையில் சமூகம் போய்விடும். அவனே ராசா! அவனே மந்திரி! பார்ப்பன் ஆதிக்கமே, திராவிடக்கட்சிகளின் தோற்றத்துக்கு காரணம்.
Vaal payan!
Periyaar is a creation of Tamil paarppanars. It is their acts of excesses abusing the religion which gave birth to such iconoclasts like Periyaar. It is an indiputable fact. There is no reaction without an action.
Periyaar is now looked upto as the representative voice of people who resented the rule of brahmins in Tamil society.
It is a motivated lie from your side to say that periyaar is an individual and all his ideas are his own.
No!
His ideas are nothing but the pent-up feelings of angst against the autocracy of Tamil paarppanars.
HE GAVE VOICE TO NON-PAARPPNAA TAMILARS.
So, your charge that non-paarppana Tamils dont use their own independent evaluation of his ideas, and that they accept him without question - is basically wrong, if you accept that his views are just representative views of the whold non-paarppana tamils, except a few who are found in any society - the slaves to masters.
Periyaars angers brahmins like you because he taught others to question your hegemony in Tamil society! This is the real reason why Tamil paarppanars are against him as a whole. Nothing else! You want the hegemony back. Dont you?
I am not Tamil Oviya. I have never seen him writing in English.
I am enjoying Tamil Oviya's comments. Super Jolliya irukku.
In 2001-2006, 'BoldBell' went behind Jaya Amma, From 2006 onwards, the same bell is going behind 'Nidhi Ayya'. Reason is obvious.
He has inherited this quality from his Periya Ayya.
-Venkat V
கம்யூனிஸ்டை காயடிப்பவருக்கு!
ரொமப சரி.
அவாளோடு சடங்கிலே எல்லா நாமோ உசந்தவங்க! மத்தவங்க நம்ம கால நக்கனும்னுல்லா எழுதி வைச்சு, மந்திரம் ஓதல்ல.
நீங்க பண்றீங்க. அதுதான் நீஙக்ள் எதிர்க்கப்படுகிறீர்கள்.
இந்து மதச் சடங்குகளை - அஃதாவது, பார்ப்பன்ருக்கென்று எழுதிவைக்கப்பட்டவைகளை - படித்தால், நீர் - பார்ப்பனல்லாதவர் என்றால் - மனங்கொதிப்பீர். பார்ப்பனர் என்றால் மனங்குளிர்வீர்!
எல்லாமே வசதியா எழுதிகிட்டீங்கப்பா. சொல்லிக்காட்டினால், கோபப்ப்டுகிறீர்கள்.
குற்றமுள்ள மனம் குறுகுறுக்கும்.
நீஙக நிறுத்தமாட்டீங்க! அதுவ்ரை பார்ப்பனத்துவேசம் ஓயாது!
//இதுதான் தி க காரர்களின் பாணி. எதிராளி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியவில்லையென்றால் உடனே நீ, வா, போ, யோசி, ஏத்துக்க என்று ஒருமையில் இறங்கி பின் வெற்றிகொண்டானும், தீப்பொறி ஆறுமுகமும் வெட்கித் தலைகுனியும் அளவிற்குப் பேசித் தீர்ப்பார்கள்.
தமிழ் ஓவியா, பகுத்தறிவு ஏட்டில் மட்டும் எழுதுவது அல்ல, மண்டையில் இருக்கும் மசாலாவை உபயோகித்து தானாகவே இது நல்லது, இது கெட்டது என்று ஆராய்ந்து வருவது. உங்களுக்கு வேண்டுமானால் விடுதலையைப் படித்து பகுத்தறிவு வந்திருக்கலாம். வாக்குவாதத்தின் போது ஒருமையில் விளிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்.//
வால் பையன் ஆரம்பித்தார். இவர் தொடர்கிறார். இது ஒரு தந்திரம்.
தனிநபர் தாக்குதலைச் செய்து, விவாதத்தின் போக்கைத் திருப்பும் செயல்.
ஓவியா தொடர்ந்து எழுதட்டும். அவர் கருத்துகளுக்கு எதிர்வினை போடுங்கள். மற்றதெல்லாம் ஏமாற்று வேலை.
வா.பையன்...அவர் எழுதியதற்கு நான் எழுதியதற்கும் எதிர் க்ருத்துகள் போட்டால் நலம். திசை திருப்பி ஏமாற்றும் வேலை வேண்டாம். பச்சையா தெரியும்வே!
//பூணூல் மட்டுமல்ல. பார்ப்பனர் செய்யும் பலபல் செயல்கள் - ம்தமொட்டிவந்தவை - பிறரைத் தாழ்ந்த்வர்கள் என்றும்,தன்னை உயர்ந்தவர்கள் என்றும் காட்டவே வந்தவை.
ஊரைக்கூட்டி தம் ஜாதியாருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுத்து, பிராமணச்சாமியாரை வைத்து, பூணுல் போடுவது, தான் பிராமணன், எஙக்ள் மதம் எங்களுக்கு மட்டுமே கொடுத்த உரிமை - அஃது, எங்களைப்பிறரிடமிருந்து உயர்த்திக் காட்ட - என்பதெல்லாம், பூணூல் சடங்கில் நுணுக்கங்களை, கரணியங்களையும், மந்திரங்களையும் உற்றுப்பார்ப்பின் புரியும். இது ஒரு மோசமான் சடங்கு. பிறமக்களை இழிவு படுத்தவே வந்தது. //
பழனி அவர்களே, இது உங்கள் கண்ணோட்டம். பூணூல் அப்படி ஆரம்பித்திருக்கலாம். பூணூல் சடங்கின் நுணுக்கம், மந்திரம் எல்லாம் உற்றுப்பார்த்தால் அப்படி அர்த்தம் கூட இருக்கலாம். (எனக்கு தெரிந்து உற்று பார்ப்பவர்கள் தி.க.வினர்தான் - இது ஒரு பெரிய irony.) ஆனால் பூணூல் போட்டிருப்பவர்கள் எல்லாரும் அடுத்தவர்களை இழிவுபடுத்தவே பூணூல் போட்டிருக்கிறார்கள் என்று நீங்கள் நினைப்பதும் சொல்வதும் தவறு. எனக்கு தெரிந்து ஒருவர் கூட - கவனிக்கவும், ஒருவர் கூட - அப்படி நினைத்து பூணூல் போடுவதில்லை. நான் அரைக் கிழவன் - என் இத்தனை வருஷ வாழ்க்கையில் ஒருவர் கூட பூணூல் போட்ட நான் ஒசத்தி, பூணூல் போடாத நீ மட்டம் என்று பேசி கேட்டதில்லை. 99% சதவிகித பார்ப்பனர்கள் வாழ்க்கையில் இது ஒரு சடங்கு, சம்பிரதாயம், அவ்வளவுதான். குழந்தைக்கு மொட்டை அடிப்பது, காது குத்துவது என்று பல சடங்குகள் அழிந்து கொண்டே போகின்றன. இதுவும் ஒரு காலத்தில் தானாக மறைந்துவிடும். ஆனால் அடுத்தவர்களை பாதிக்காத எந்த சடங்கையும் நிறுத்த சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. தெருவுக்கு நாலு பிரியாணி கடை இருக்கும்போது கடா வெட்ட கூடாது என்று சட்டம் போட்ட mentality போலத்தான் இது.
இதனால் பார்ப்பனர்களில் ஜாதி வெறியர்கள் இல்லை என்று அர்த்தம் இல்லை - எல்லா ஜாதிகளிலும் இருப்பதை போலத்தான் இங்கேயும். சொல்லப் போனால் என் கருத்தில் பார்ப்பனர்கள் பெரிதும் நகர்ப்புறத்தில் வாழ்வதால் - urbanize ஆகிவிட்டதால் - அவர்கள்தான் இருப்பதில் குறைவாக ஜாதி பார்க்கிறார்கள்.
அப்புறம் ஊரை கூட்டி என்கிறீர்கள், அடுத்த வார்த்தையில் தம் ஜாதியாருக்கு மட்டுமே அழைப்பு என்கிறீர்கள். எது உங்கள் கருத்து?
\\பெரியாரே சொன்னதாக நான் படித்திருக்கிறேன் தனது கொள்கைகளைக் கண்மூடித்தனமாக் ஏற்றுக்கொள்ள வேண்டாம். அவரவர் பகுத்தறிவைக் கொண்டு ஆராயுங்கள் என்ற்தாக!//
10- 02 - 1963 அன்று பெரியார் தூத்துக்குடி மாநாட்டிலும் மற்றும் பல சமங்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.- "விடுதலை" 10 - 02 - 1963.
என்னைப் பொறுத்த வரையில் என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்க வேண்டுமென்ற கவலை எனக்குக் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து என் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய ஆட்கள் தான் எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா? முட்டாள்களா? பைத்தியக்காரர்களா? கெட்டிக்காரர்களா?என்பது பற்றி எனக்குக் கவலையில்லை.என் நண்பர் பா.வே. மாணிக்க நாயக்கர் ஈரோட்டில் எக்சிகியூடிவ் எஞ்சினியராக இருந்த போது தனக்கு இரு கொல்லர்கள் வேண்டுமென்றுக் கேட்கையில், அவர் சொன்னார். "கெட்டிக்காரர்களாயிருந்தால் இருவருக்குள்ளும் கெட்டிக்காரத்தனத்தனப் போட்டியால் வேலை கெட்டு விடும். அவர்களே எனக்கு யோசனை சொல்ல முந்தி என் திட்டம் ஆட்டம் கொடுத்து வேலை நடவாது. ஆகவே, நான் சொல்வதைப் புரிந்து அதன்படி வேலை செய்யக்கூடிய சுத்தி, சம்மட்டி பிடித்துப் பழகிய படிமானமுள்ள முட்டாளாயிருந்தால் போதும்" என்றார்.
என்னைப் பின்பற்றுபவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக் கூட கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டுமென்று கூறினேன். யாராவது ஒருவன் (தலைமை ஏற்று) நடத்தக் கூடியவனாக இருக்க முடியுமே தவிர எல்லோரும் தலைவர்களாக முடியாது. மற்றவர்கள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள்தான்.தோழர்களே! நான் இப்போது ஒருபடி மேலாகவே சொல்லுகிறேன்.
நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்த பகுத்தறிவை மட்டுமல்ல; உங்கள் மனசாட்சி என்பதைக் கூட நீங்கள் மூட்டைக் கட்டி வைத்து விட வேண்டியது தான். கழகத்தில் சேரும் முன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம்! என்னுடன் வாதாடலாம். ஆர அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம். ஆனால் உங்கள் மனசாட்சியும், பகுத்தறிவும் இடங்கொடுத்து கழகத்தில் சேர்ந்துவிட்டீர்களோ அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனசாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்து விட்டுக் கழகக் கோட்பாடுகளை கண்மூடிப் பின்பற்ற வேண்டியது தான் முறை.
\\என் நண்பர் பா.வே. மாணிக்க நாயக்கர் ஈரோட்டில் எக்சிகியூடிவ் எஞ்சினியராக இருந்த போது//
சாதி ஒழியப் பாடுபட்ட ராமசாமி நாயக்கர், தனது நண்பரை மாணிக்கம் என்று குறிப்பிடாமல், மாணிக்க நாயக்கர் என்று குறிப்பிட்டது எந்தப் பகுத்தறிவில் சேர்ந்தது என்று தமிழ் ஓவியா விளக்குவாரா?
அனானி இப்போது என்ன சொல்கிறீர்கள்?
அன்புடன் அனானி.
I have searched all 53 comments till now. Has tamil oviya or any dk'ers answered for this..
"@தமிழ் ஓவியா
இப்பதிவில் நான் கேட்ட தெளிவான கேள்விகளுக்கு பதில் கூறுங்கள்.
1. இரட்டைக் குவளை முறையை எதிர்த்து பெரியார் தலைமை தாங்கிய போராட்டம் ஏதேனும் உண்டா?
2. தலித்துகள் ஆலயப்பிரவேசத்துக்காக வைக்கத்துக்கு பிறகு ஏதேனும் போராட்டம்?
3. தலித்துகளுக்கு பார்ப்பனர் தவிர்த்த மற்ற சாதி இந்துக்களால் ஏற்பட்ட வன்கொடுமைகளுக்கு (உத்தபுரம் சுவர், தலித்துகள் பொதுக் கிணறை உபயோகிக்கக் கூடாது, தலித்துகளை உயிரோடு எரித்தது) எதிராக போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியுள்ளாரா?"
If they have answered(Clear crisp point blank answers) have i missed the comment. Please help me.
//பூணூல் போட்டிருப்பவர்கள் எல்லாரும் அடுத்தவர்களை இழிவுபடுத்தவே பூணூல் போட்டிருக்கிறார்கள் என்று நீங்கள் நினைப்பதும் சொல்வதும் தவறு.//
உங்கள் வாதப்படியே வருவோம்.
மற்றவர்களை இழிவு படுத்த பூணூல் போடவில்லை என்கிறீர்கள். அப்புறம் எதற்காக பூணூல் போடுகிறீர்கள்?
பூணூல் போடுவது இழிவுபடுத்துவதற்காக என்கிறோம். நீங்கள் அந்தப் பூணூலை அறுத்தெறிந்து இல்லை என்று காட்ட வேண்டமா?
எப்போது பூணூலை அறுத்தெறிகிறீர்கள் ஆர்.வி.
டோண்டு மற்றும் அணானி கேட்ட கேள்விகளுக்கு ஏற்கனவே பதில் அளித்துள்ளேன். ஊன்றிப்படித்து உண்மையை உணர வேண்டுகிறேன்
//
(இதை வெளியிட வேண்டாம்.
டோண்டு சார்,
உங்கள் போன பிறந்த நாளன்று தொலைபேசி வாழ்த்துச் சொன்ன அதே அன்புடன் அனானி.)//
தொடர்ந்து 32 கேள்விகள் கேட்பவரா?
// சாதி ஒழியப் பாடுபட்ட ராமசாமி நாயக்கர், தனது நண்பரை மாணிக்கம் என்று குறிப்பிடாமல், மாணிக்க நாயக்கர் என்று குறிப்பிட்டது எந்தப் பகுத்தறிவில் சேர்ந்தது என்று தமிழ் ஓவியா விளக்குவாரா? //
இது இந்த கால convention ஒன்றை அந்த காலத்தில் பொருத்தி பார்க்கும் anachronism. அந்த காலத்தில் உ.வே. சாமினதய்யார்தான், சி.வை. தாமோதரம் பிள்ளைதான், முத்துரங்க முதலியார்தான், ஸ்ரீனிவாச ஐயங்கார்தான், வரதராஜுலு நாயுடுதான், சிவஞான கிராமனிதான், காமராஜ நாடார்தான். அதனால் உ.வே.சா.வும், வ.உ.சி.யும், திரு.வி.க.வும் ஜாதி வெறியர்கள் என்று பொருள் கொள்வோமோ என்ன? இது காந்தி ஹரிஜன் என்று வைத்து அழைத்தார், தலித் என்று அழைக்கவில்லை என்று குறைப்பட்டு கொள்வது போல இருக்கிறது. எழுபதுகளில் துக்ளக்கில் சோவை ஒருவர கேட்டார் - நீங்கள் ஏன் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று ஜாதி பெயர் வைத்து எழுதுகிறீர்கள், ஈ.வெ.ரா. என்று எழுதலாமே என்று. சோ சொன்ன பதில் - அவ்வளவு பெரிய மனிதரை வெறுமனே ஈ.வெ.ரா. என்று எழுதினால் மரியாதை குறைவாக தோன்றுகிறது. 1930-களில் பிறந்த சோவுக்கு அப்படி என்றால் 1870-களில் பிறந்த பெரியார், மாணிக்க நாயக்கர் என்று சொல்வதில் என்ன ஆச்சரியம்?
அப்புறம் அனானி என்று ஏன் பின்னூட்டமிடுகிறீர்கள்? பேரை எழுதலாமே? அனானி என்று உங்களை விளித்தால் எனக்கு மரியாதை குறைவாக படுகிறது!
பழனிக்கு எழுதிய மறுமொழியில் ஒரு விஷயம் clarify செய்ய வேண்டும். நான் பிராமணன், அதனால் உயர்ந்தவன் என்று சொல்லி கேட்டிருக்கிறேன்; நான் பிராமணன், அதனால் படிப்பு நன்றாக வரும் என்று சொல்லி கேட்டிருக்கிறேன். ஆனால் பூணூல் போட்டிருக்கிறேன், அதனால் நான் உயர்ந்தவன் என்று இது வரை கேட்டதில்லை.
உண்மையில் தலித்துகளின் வளர்ச்சி கண்டு பொறமைப்படும் பிற பிற்பட்ட ஜாதியினரின் ( பிராமணரல்லாத முற்பட்ட ஜாதியினரும் இதில் அடக்கம்-குறிப்பாக சைவ பிள்ளைமார் சமூகம் -ஊத்தப்பபுரம்))
கொடுங்கரங்களால் சொல்லெணாத் துயரத்துக்கு ஆளாய் வாழும் தலித்துகள் துன்பம் துடைக்க நாயக்கர் நலம காக்கும் பெரியார் மற்றும் திராவிடக் கட்சிகள் எப்படி இதையெல்லம் செய்வார் என்று இன்னும் நம்புகிறீர்கள்
1. இரட்டைக் குவளை முறையை எதிர்த்து பெரியார் தலைமை தாங்கிய போராட்டம் ஏதேனும் உண்டா?
2. தலித்துகள் ஆலயப்பிரவேசத்துக்காக வைக்கத்துக்கு பிறகு ஏதேனும் போராட்டம்?
3. தலித்துகளுக்கு பார்ப்பனர் தவிர்த்த மற்ற சாதி இந்துக்களால் ஏற்பட்ட வன்கொடுமைகளுக்கு (உத்தபுரம் சுவர், தலித்துகள் பொதுக் கிணறை உபயோகிக்கக் கூடாது, தலித்துகளை உயிரோடு எரித்தது) எதிராக போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியுள்ளாரா?
மேலே சொல்லப்பட்டவைகளுக்கு,வன் கொடுமைகளுக்கும்
மதுரை,ராம்ணாதபுரம்,திருநெல்வெலி,கன்னியாக்குமரி மாவட்டங்களில் பிற்பட்ட ஆதிக்க ஜாதிகள்தான் காரணம்.பிராமணர்கள் அல்ல.
இதைதான் பழி ஓரிடம்
பாவம் ஓரிடம் என்பர்
ஊருக்கு இழைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.
இதற்கு ஒரே வழி தலித்,பார்ப்பணர் வெற்றிக் கூட்டணி
திருமால்வளவன் இதை செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர். ஆனால் பிற பிற்பட்ட ஜாதி, கட்சி தலிவர்களிடம் அவர் மிக ஜாக்கிரதையாய் இருப்பது நல்லது.
கிருஷ்ணகுமார்.
பெரியார்திடலில் டோண்டு மாதிரி
1.அண்ணா அறிவாலயத்தில் டோண்டு
2.அதிமுக தலைமைகழகத்தில் டோண்டு
3.சத்யமூர்த்திபவனில் டோண்டு
4.தாயகத்தில் டோண்டு
5.கொட்நாட்டில் டோண்டு
6.கோபலபுரத்தில்......
7.ஆலிவர் ரோட்டில்--------
8...............
தொடர் பதிவுகள் பல உண்மைகளை வெளிக் கொணரட்டும்!
//பெரியார்திடலில் டோண்டு மாதிரி
1.அண்ணா அறிவாலயத்தில் டோண்டு
2.அதிமுக தலைமைகழகத்தில் டோண்டு//
ஆக, டோண்டுவுக்கு சமாதி கட்டாமல் போக மாட்டீர்கள் போலிருக்கிறதே! :))
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆள் அனுவம் அறிவு வளர நிலைப்பாடு மாறும்....எது எப்படி இருந்தாலும் என்னை மாதிரி சூத்திரர்கள் வளர்ச்சிக்கு அவரும்(அவரை வட பல பேர் சத்தமில்லாமல்) முக்கிய காரணம்....இல்லையேல் எங்களது கதி..
இன்னும் நானூறு பின்னூட்டங்கள் வந்தாலும் ஒரு முடிவு தெரியாது.ஏன் எனில் நம் நாடு ஒரு குடியரசு .இங்கு வாதிகளும் பிரதிவாதிகளும்தான் .நீதிபதி கிடையாது.விவாதம் செய்ய மட்டும்தான் முடியும்.
ஜஸ்டிஸ், தி க, தி மு க ஆகிய கட்சிகளின் ஒரே நோக்கம் பிராமணர்களை (தமிழ்நாட்டை விட்டு)ஒழிப்பதுதான் .அதில் அவர்கள் வெற்றியும் பெற்றுவிட்டனர்.இனி பேசி எந்த பயனும் இல்லை
இதுவரை நடந்த வாய் சண்டை முடிந்து இனிமேல் கத்திசண்டைதான்.
(சட்ட கல்லுரி சண்டை ஞாபகம் உள்ளதல்லவா? )
//
உங்கள் வாதப்படியே வருவோம்.
மற்றவர்களை இழிவு படுத்த பூணூல் போடவில்லை என்கிறீர்கள். அப்புறம் எதற்காக பூணூல் போடுகிறீர்கள்?
பூணூல் போடுவது இழிவுபடுத்துவதற்காக என்கிறோம். நீங்கள் அந்தப் பூணூலை அறுத்தெறிந்து இல்லை என்று காட்ட வேண்டமா?
எப்போது பூணூலை அறுத்தெறிகிறீர்கள் ஆர்.வி.
//
ஐயா,
அப்படியானால் நாங்கள் எல்லாம், நீங்கள் பிராமணர்களை மட்டுமே குறை கூறுபவர் என்று கூறுகிறோம்.
இல்லை, நான் பிராமணமை மட்டும் குறை கூறவில்லை, பிற மேல் சாதிகளையும் தான் திட்டுகிறேன் என்று பகிரங்கமாக திட்டி உங்கள் சமத்துவத்தைக் காட்டவேண்டியது தானே.
அதை நீங்கள் செய்யும் போது பூனூல் போட்டவர்கள் எல்லாம் பூனூலை அறுத்து தங்கள் கழுத்தில் மாட்டிக்கொண்டு தூக்கு போட்டுக்கொள்வார்கள். சரியா...
?
//பிற்பட்ட ஆதிக்க ஜாதிகள்தான் காரணம்.பிராமணர்கள் அல்ல.//
இது சரியா? பெரியார் விளக்குகிறார். படியுங்கள். உண்மையை உணருங்கள்.
"உங்களுக்கும் சொல்ல வேண்டியது இன்னொன்றும் உண்டு. அநேக மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களில் தவறாக நினைக்கிறார்கள். பார்ப்பனரல்லாத மக்கள்தான் தங்கள் எதிரிகள் என்றும் பார்ப்பனர்கள் கூட அல்லவென்றும்! இது மிகவும் தவறான எண்ணமாகும். இதற்குக் காரணம் பார்ப்பன ஆட்சியில் பல ஆதிகாரங்களும், பண விநியோகமும் இருப்பதால் பார்ப்பானுக்கு நல்ல பிள்ளையாகவும், அவனது விஷமப்பிரச்சாரத்தை நம்புவதும் ஆகும். நாங்கள் வேறு என்றும் நீங்கள் வேறு என்றும் எண்ணக் கூடாது. சூத்திரர்கள் ஒரு இனமாக இருந்தால் தங்களுக்கு ஆபத்து என்று கருதி பல இனம் ஆக ஆக்கிவிட்டார்கள்.
ஆகவே இப்படியெல்லாம் உங்களை எண்ணும்படி வைப்பது பார்ப்பனர்கள் சூழ்ச்சிதானேயொழிய வேறில்லை. இப்படிப்பட்ட கருத்தைப் பார்ப்பனர்கள்தான் தூண்டிவிடுகிறார்களே ஒழிய வேறில்லை. இதையெல்லாம் உண்மை என்று நீங்கள் நம்பவேண்டாம்.
பார்ப்பான் எதை எதைச் செய்கிறானோ அவற்றையெல்லாம் இவன் (பார்ப்பான் அல்லாதவன் - சூத்திரன்) அவனைப் பார்த்து அதேபோல் செய்கிறானே தவிர வேறில்லை. ஆகவே அவன் (பார்ப்பான்) அதைச் செய்யவில்லை என்றால் மற்றவர்கள் அதைச் செய்யமாட்டார்கள்.
ஒரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன். ஈரோட்டில் எங்கள் தெருவில் தண்ணீர் குழாய் இருக்கிறது. அதில் எல்லோரும் தண்ணீர் எடுக்க வருவார்கள். ஒரு பார்ப்பாரப் பெண் வந்தால் அவள் கையில் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து அதை அந்தக் குழாய்க்கு மேல் ஊற்றி விட்டுப் பிறகுதான் குடத்தை வைத்துத் தண்ணீர் பிடிப்பாள். அதைப் பார்த்து எங்கள் பக்கத்து வீட்டு (முஸ்லிம்) சாயபு பொம்பளையும் செம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவந்து குழாய்மேல் ஊற்றிக் கழுவிவிட்டுத்தான் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்கிறாள்.
முதலாவது பார்ப்பாரப் பொம்பளை தண்ணீர் ஊற்றுவது மற்றச் சாதிக்காரர்கள் குழாயைத் தொட்டுவிட்டார்களே! தீட்டுப்பட்டு விட்டதே! என்பதற்காக ஊற்றிக் கழுவுகிறாள்.
இதைப் பார்த்து அதை அப்படியே காப்பி அடித்துச் செய்கிற மற்ற பெண்களுக்கு நாம் எதற்காக இப்படிச் செய்கிறோம் என்று தெரியாமலேயே செய்து கொண்டு வருகிறார்கள். அதுபோலத்தான் பார்ப்பனரல்லாதாரில் சாதி வெறியும், பிற்போக்கு மனப்பான்மையும் கொண்டுள்ளவர் நிலைமை அவர்களது இந்த மாதிரியான நடத்தைக்குக் காரணம் அறியாமையும், பார்ப்பானைப் பார்த்துக் காப்பி அடிப்பதுமே தவிர, அகம்பாவம் (பார்ப்பனர்களைப்போல்) கிடையாது. சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரைச் சரிப்படுத்தினால் மாணவன் தானே சரிப்பட்டு விடுவான்! ஆகவே இதற்காக நீங்கள் பெரும் அளவு உங்கள் நேரத்தைச் செலவழிக்க வேண்டியதில்லை.
பார்ப்பான்தான் நமக்கு முக்கிய எதிரி. பார்ப்பன மதம், பார்ப்பன புராணங்கள், பார்ப்பன சாஸ்திரங்கள், பார்ப்பனக் கடவுள்கள் இவை தான் நமக்கு எதிரிகளே யொழிய வேறில்லை. "பார்ப்பனரல்லாதார் அல்ல நமக்கு எதிரிகள்" என்பதை ஆதிதிராவிடர் ஆகிய நீங்கள் தெளிவாக உணர வேண்டும்.
ஆகவே நீங்கள் இவற்றை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இதற்காகப் பாடுபட வேண்டும். அப்போதுதான் நமது இழிவு ஒழியும் என்று கூறி இந்த வரவேற்புக்காக உங்களது அன்பிற்காக எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்து முடித்துக் கொள்ளுகிறேன்.
--------15.02.1959 அன்று புதுடெல்லி அம்பேத்கர் பவனத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. "விடுதலை" 22-02-1959
//ஆனால் பூணூல் போட்டிருக்கிறேன், அதனால் நான் உயர்ந்தவன் என்று இது வரை கேட்டதில்லை.
//
ஏன் போட்டிருக்கிறீர்கள? சின்னக்குழந்தைக்கு செய்வார்கள். அதற்கு ஒன்றும் தெரியாது. இப்பொது நீஙகள் குழந்தையா?
பூணுலைப்ப்ற்றி ஒன்றுமே தெரியாது என கதை வேறு. தெரிய்வைல்லையென்றால் ஏன் அது?
எனதுரிமை என்பது பின்னர். இப்பொது சொல்லுங்கள் அது எதற்கு?
நீங்கள் உயர்ந்தவர் என நினைக்கவவேண்டாம் மற்றவர் நினத்தால்..? மற்றவரைப்பற்றிக் கவலையில்லை என்றால், ஓவியா சொன்னதைப் போல, இந்த வீட்டில் பத்னிகள் இருக்கிறார்கள் என்பதைப் போல.
பூணுல் சாதிசடங்கு. பார்ப்பனகுழந்தைக்கு, ‘னீ பார்ப்பு. அனைவரைவிட நீதான் கடவுளுக்கு முதலில்...பார்..பார். கிருஷனரை அவரும் போட்டிருக்கிறார்.”
அப்படி இந்துமதத்தை எழுதி நம்பி, பிறரையும் நம்ப வைக்கும் ஏமாற்று வேலை இந்த பூணுல் சமாச்சாரம்.
பிற்மனிதருள் உம்மை ஒருவனாக் சமனிலையில் வைத்துப்பார்க்கும் எவருக்கும் இந்த பூணுல் தேவையில்லை.
//அதை நீங்கள் செய்யும் போது பூனூல் போட்டவர்கள் எல்லாம் பூனூலை அறுத்து தங்கள் கழுத்தில் மாட்டிக்கொண்டு தூக்கு போட்டுக்கொள்வார்கள். சரியா.....//
சரியில்லை. மற்றவன் சொல்லாமலே நீஙக்ள் சிந்தித்து அதைச் செய்திருக்க வேண்டும். செய்யவில்லை.
நான் ஏறகன்வே எழுதிவிட்டேன். அவனைக் கழுவச்சொல்லு...நான் கழுவுகிறேன் என்று நீங்கள் சொல்வதாக.
பிறர் சொல்லி செயயாதீர்கள். நீங்களே செய்யுங்கள்.
தன்னை பிராமணன் என்று சொன்னால், தலித்து, சூத்திரன் என்றெல்லாம் வரும்.
அதற்காகத்தான், சாதியையும், சாதிச்சடங்குகளையும் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
தமிழோவியா ஐயா!
விடாது கருப்பு என்ற சொலவடைக்குத் தகுந்த மாதிரியே, கொஞ்சம் கூட சளைக்காமல் பிட் நோடீஸ் விநியோகம் , சுவரொட்டி ஒட்டுகுகிற வேலையைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்!இந்த மாதிரிப் பொதுவிநியோகம் செய்பவர்கள் எல்லாம், தாங்கள் விநியோகிக்கிற பிட்நோடீஸ், சுவரொட்டிகளைத் தாங்களே படித்துப் பார்ப்பதில்லை என்பதையே திரும்பத் திரும்ப நிரூபித்து வருகிறீர்கள்.
எதற்கெடுத்தாலும் பார்ப்பான், பார்ப்பான், பார்ப்பனீயம் தானா? பெரியாருக்கே அது கொஞ்சம் அலுத்துப் போய் விட்ட மாதிரி 1967 இல கீழ வெண்மணியில் 42 பேர்களை ஒரே குடிசையில் பெருநிலக்கிழார் கோபாலகிருஷ்ண நாயுடு கொளுத்தியதை, வெறும் கூலிப் பிரச்சினை என்று மட்டுமே சொல்லியிருக்கிறார்.
இந்தப் பேச்சின் ஆரம்பத்தில் வழக்கம் போல காந்தியாருக்கு ஒரு கடி, பார்ப்பனனுக்கு ஒரு கடி என்று ஆரம்பம் இருந்தாலும், பழியைக் கம்யூனிஸ்ட் கட்சி மேல் போடுவதிலேயே கவனமாக, பேசியிருக்கிறார்:
"இந்த நிலையிலும் இந்தத் தன்மையிலும் நாட்டுக்கு ‘சுதந்திரம்' கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்குப் பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை கொலைகாரத்தனம், நாச வேலைகள் என்பவைகளில் ஒன்றுகூட பாக்கியில்லாமல் செல்வாக்குப் பெற்று, தினசரியில் நடைபெற்று வருகின்றன. அவை எந்த அளவுக்கு வளர்ந்தன என்றால் : 1. காந்தியார் கொல்லப்பட்டார் 2. தலைவர் காமராஜரைக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டன 3. போலிஸ் அதிகாரிகள் கட்டிப் போட்டு நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டனர் 4. நீதி ஸ்தலங்கள், ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. ஜெயில் கதவு உடைக்கப்பட்டது. பல வாகனங்கள் (பஸ்கள்) கொளுத்தப்பட்டன. வழிப்பறிகள் நடந்தன. மற்றும் நிலங்களில் துர் ஆக்கிரகமாகப் பயிர்கள் அறுவடை செய்து கொண்டு போகப்பட்டன. விவசாயிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன 5. கடைசி நடவடிக்கையாக நேற்று முன்தினம், தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டைப் பூட்டிவிட்டுக் கொளுத்தி, 42 பேரும் கருகி சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவும் அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப் பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்ட காயங்களாகும்."
http://www.keetru.com/dalithmurasu/mar06/periyar.php
இதன் இரண்டாம் பகுதி, தலித் முரசு ஏப்ரல் இதழில் தொடர்ந்திருக்கிறது.
கீழ வெண்மணி விவகாரத்தில் மட்டுமல்ல, பல விஷயங்களிலுமே பெரியார் முன்னுக்குப் பின் முனனாகப் பேசியிருக்கிறார். மாறி மாறிப் பேசியிருக்கிறார், இவை தமிழ் ஓவியா கொடுத்திருக்கும் சுட்டிகளிலேயே காணக் கிடைக்கின்றன.
மொத்தமாக, இது தான் பெரியார் பேசியது, செய்தது என்று வெளிப்படையாகக் கொண்டு வந்து விட்டால், ஏதோ ஒரு விதத்தில் பெரியாருக்குக் கிடைத்திருக்கிற பகுத்தறிவு பிராண்ட் இமேஜ் சேதப் பட்டு விடும், பெரியாரை வைத்துப் பகுத்தறிவுத் தாயத்து விற்பவர்கள்,இதைப் பலமுறை, கொஞ்சம் வெளிப்படையாகவும், சிலநேரங்களில் மறைமுகமாகவும் சொன்னது தான். புதிது ஒன்றுமில்லை.
அதைத் தான் வீரமணி "பலர் இம்மாதிரி வருவதாகவும், பிறகு விஷயங்களை தெரிந்து கொண்டு விரோதமான விஷயங்களை எழுதுகிறார்கள் எனவும் அவர் சற்றே சீரியசாகக் கூறினார்
//சரியில்லை. மற்றவன் சொல்லாமலே நீஙக்ள் சிந்தித்து அதைச் செய்திருக்க வேண்டும். செய்யவில்லை.//
எங்களிடம் பூணூலை கழற்றச் சொல்ல எந்த கொம்பனுக்கும் உரிமையில்லை. எந்த இணைய தாசில்தாரும் எங்களிடம், முக்கியமாக என்னிடம் அவ்வாறு பேசவியலாது. அவர்களது அங்கீகாரம் தேவைப்படுபவர்களிடம் தங்கள் உதார்களை விடட்டும்.
இப்பதிவில் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டு போங்கள். பகுத்தறிவு பற்றி நீட்டி முழக்கி பேசுபவர்கள் உண்மைக்கு ஏன் பயப்பட வேண்டும்? பழைய பத்திரிகைகளை பார்க்கத்தானே அனுமதி கேட்டேன். அதில் ஏதேனும் உங்களது இப்போதைய பொய் பிரசாரங்களுக்கு எதிராக விஷயம் கிடைக்குமா என்று பயமா?
தமிழ் ஓவியா, இக்கேள்விகளை உங்களிடமும் கேட்டேன். அவற்றுக்கு பதிலிருந்தால் கூறுங்கள். அதை விடுத்து 35 ஆண்டுகளுக்கு முன்னால் மரித்த ஒருவரது உளறல்களை காப்பி பேஸ்ட் செய்யாதீர்கள்.
பார்ப்பனரல்லாத உயர் சாதியினர் தலித்துகள் மேல் செய்யும் அயோக்கிய அராஜக செயல்களுக்கு பார்ப்பனரை காரணமாக காட்டுவது உங்களது பகுத்தறிவுக்கே பொருந்தாதே. அதுவும் கோபால கிருஷ்ண நாயுடுவின் பெயரைக் கூறாது சவசவ அறிக்கை விட்ட ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்னும் பலீஜா நாயுடு கூறியதை எந்த பகுத்தறிவாளனும் ஏற்று கொள்ள மாட்டான்.
டோண்டு ராகவன்
Adagapattadhu Tamil oviya oda karuthu padi,2 e jadhi thaan..Onnu brahmanan innonu 'matra ellam'. Brahmanann jaadhiya vittuta(jaadhi adayalangala vittuta) jaadhi prachnai mudinju poidum. Aprum vankodumai/2 kuvalai ellame... Apdi thaane?
Poonal podara function ku brahmanan a mattum koopadrangalam.adhu thappam. Mathavangala koopda maatangalam.
Neenga unga veetla epdinga. Unga veetu visheshathukku unga sonda pandangala koopda maatingala..apdi thaane..Ella madhathinarukkum oru custom iruku..Adhu kalyanamo/karumaadhiyo adhu avanga ishtam.
Nee pottukare..Naan pottukala..Adhunaala nee enna avamaana paduthare.. Ungalukullaye yen inda thaalvunarchi? Poonal Enna 10 kilo thangathulaya senju pottukarom?
Oor oor la nadakara dalit kodumaiku kaaranam Ayyaro/ayyangaro kedaiyadhu.. Neenga solra inna pira jaadi la irukaravangale thaan. Ida neenga unarndhu thappu seyravangala edhirnga. Appo thaan vidivu kaalam varum. Adha vittutu ellathukum brahmanargal mela pazhi pottenganna, thappu seyyaravanga vasadhiya thappu senjutte irupanga.
Periyar Jaadhikazhe ozhiyanum nu sollirundarna naan avara madhikaren..Aaana avar brahmanargal mattum ozhiyanum nu oru thatthu pithu vaadhatha mattum eduthukittaro..appo ve avar Periyar illa..Verum E.Ve ramasamy 'Naikkar'thaan.
Idhu vara vandha pinnotangalla ketta kelvigal ellathayum list pottu ungalukku ketta, copy paste pannama(periyar oda edo 1 pechulendhu), 2 vari la kaaram sollama chumma oppuku chappani statement vidama badhil solla thayara??
//அதை விடுத்து 35 ஆண்டுகளுக்கு முன்னால் மரித்த ஒருவரது உளறல்களை காப்பி பேஸ்ட் செய்யாதீர்கள்.
//
அந்த உளறல்களத்தானே தேடிப்போய் தர மறுக்கிறார்கள் என்கிறீர்கள்.
அவை உளறல்கள் என்றால், நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? விட்டுத்தொலைக்க வேண்டியதானே?
//எங்களிடம் பூணூலை கழற்றச் சொல்ல எந்த கொம்பனுக்கும் உரிமையில்லை. எந்த இணைய தாசில்தாரும் எங்களிடம், முக்கியமாக என்னிடம் அவ்வாறு பேசவியலாது. அவர்களது அங்கீகாரம் தேவைப்படுபவர்களிடம் தங்கள் உதார்களை விடட்டும்.//
அந்த கொம்பன் நீங்களாகவே இருக்கட்டும் என்பதுதான் நான் சொல்வது.
மற்றவன் என்ன சொல்வது? நீங்களே அதைக் கேட்பதுதானே?
பூணுல் நான் ஏன் போடுகிறேன்? அது எதை எனக்குப் போதிக்கிறது? அதன் மூலம் எனக்கு என்ன இலாபம்? இக்காலத்தில் தேவையா?
எனக்கேட்டீர்களா?
மாறாக, எந்தக்கொம்பன் கேட்பது என்று எத்தனை நாட்கள் சொல்லிக்கொண்டு காயடிப்பீர்கள்?
RV!
”பூணுல் யாரோ மாட்டிவுட்டார். நான் மாட்டிகொண்டலைகிறேன். அது எதற்காக என்றுகூட எனக்குத் தெரியாது” என்பது குழந்தைப் பேச்சு.
கற்றவர் சொல் அல்ல.
யர்ராவது தலையில் ஒரு கல்லை வைத்து சுமந்துகொண்டேயிரு என்றால் இருப்பீர்களா?
இங்கு எழுதும் பார்ப்பனர்கள் -
தங்களுக்கும் - பிறருக்கும் இடையில் இப்பிரச்சனையென்று சொல்லி, அல்லது நினைக்கவைக்கப்பட்டு, அந்த பிறரில் - இசுலாமியத்தமிழரையும், கிருத்துவத்தமிழரையும், இந்துத்தமிழரோடு சேர்த்துவைத்துப் பேசுகிறார்கள்.
இல்லை.
பார்ப்பனருக்கும் - பார்ப்ப்னரல்லாத இந்துத்தமிழருக்கும் இடையில் உள்ள பிரச்சனைதான் இது. பூணுல் மற்றவனைவிட தான் உயர்ந்தவன் எனப் பறைசாற்ற ஒரு உபாயம் என சொல்வது, பார்ப்ப்னரல்லாத இந்துத்தமிழரே. உங்கள் பூணுலைப்பற்றி இசுலாமியருக்கும், கிருத்துவ்ருக்கும் என்ன கவலை?
எல்லாரும் இல்லை. ஒரு சிலரே எங்களைக்கேட்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கும்படி இருந்தால், அவ்வள்வு தூரம் பார்ப்ப்னரல்லாத இந்துத்தமிழரை மூளைச்சலவை பண்ணியிருக்கிறீர்கள் என்று பொருள்.
“You may fool all the people some of the time, you can even fool some of the people all of the time, but you cannot fool all of the people all the time.” - Lincoln
Only 20 more comments to reach hundred. Friends and enemies please don't stop, continue your arguments.
//தமிழ் ஓவியா, இக்கேள்விகளை உங்களிடமும் கேட்டேன். அவற்றுக்கு பதிலிருந்தால் கூறுங்கள். அதை விடுத்து 35 ஆண்டுகளுக்கு முன்னால் மரித்த ஒருவரது உளறல்களை காப்பி பேஸ்ட் செய்யாதீர்கள்//
விடுதலை கேட்டு போராடும் வீரத்தமிழர்கள் குழாம்
ஏய் தமிழினமே!
இண்ணும் உன் உற்க்கம் கலையவில்லையா?
உன் தொடையில் திரி திரிக்கும் தில்லாலங்கடிகள் பற்றி புரியும் நாளும் வராதா?
ஆண்டான் அடிமை என நம் முன்னோரை சிறுமை படுத்திய கூட்டம் ஆலவட்டம் போடப் பார்க்கிறது?
பகுத்தறிவு பகலவனையே
கேலி பேசி மகிழும் கூட்டத்திற்கு தகுந்த பதிலடி கொடுக்க மீண்டும் பகுத்தறிவுப் பிரச்சாரம் தொடங்கட்டும் நாடு முழுவதும்
வ்ருணாசிரமத் தத்துவங்களுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க நினைப்போரை எதிர்க்க புயலென புறப்பட்டுவா
பிராமணர் சதி, தலித்-பிற்பட்டோர் முன்னேற்றத்தடை.
அதை உடைத்து சுக்கு நூறாக்கு
போர்ப்பரணி பாடி புது வரலாறு படைக்க கறுப்பு சட்டையுடன் சென்னை பெரியார் திடல் நோக்கி வா
புனை அல்ல புலி என ஆதிக்க சக்திகளுக்கு உண்ர்த்துவோம்
இது நமது பூமி
நமக்கே சொந்தம்
கைபர் கணவாய் வழி வந்தோரை விரட்டி அடிப்போம்
பெரியார் நாமம் வாழ்க
பெரியார் கொள்கை போற்றுதும் போற்றுதும்
பெரியாரே துணை நமக்கு
பெரியாரின் எழுத்துக்களே நமக்கு வேதம்
தமிழ் ஓவியா,
// உங்கள் வாதப்படியே வருவோம்.
மற்றவர்களை இழிவு படுத்த பூணூல் போடவில்லை என்கிறீர்கள். அப்புறம் எதற்காக பூணூல் போடுகிறீர்கள்?
பூணூல் போடுவது இழிவுபடுத்துவதற்காக என்கிறோம். நீங்கள் அந்தப் பூணூலை அறுத்தெறிந்து இல்லை என்று காட்ட வேண்டமா?
எப்போது பூணூலை அறுத்தெறிகிறீர்கள் ஆர்.வி. //
நீங்கள் நான் எழுதிய மறுமொழிகளை படித்ததாகவே தெரியவில்லையே! இன்றைக்கு அவன் போட்டிருக்கும் பூணூல் என்னை இழிவுபடுத்துகிறதாக நான் உணர்கிறேன், அதனால் அவன் அதை அறுத்தெறிந்து இல்லை என்று காட்ட வேண்டும் என்கிறீர்கள். இழிவு உங்கள் கண்களில் இருக்கிறது என்று நான் பல முறை எழுதிவிட்டேன். சரி நீங்கள் வேட்டி கட்டுவது என்னை இழிவுபடுத்தவதாக் நான் உணர்ந்தால் அதற்காக கழற்றிவிட்டு அம்மணமாக அலைவீர்களா? உங்கள் மனதில் என்ன ஓடுகிறது என்பதை வைத்தா அடுத்தவன் வாழ முடியும்? அப்புறம் ஒரு சனாதன தாத்தா வந்து குடுமி வை, இல்லாவிட்டால் எனக்கு இழிவு என்பார், ஒரு திராவிட கழக தாத்தா வந்து குடுமியை அறு, இல்லாவிட்டால் எனக்கு இழிவு என்பார். என்ன செய்யட்டும்?
பூணூல் போடுவதும், தொப்பி அணிவதும், சிலுவை போடுவதும், நான் வாங்கிய பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலை போடுவதும் என் சுதந்திரம். அது உங்களை tangible ஆக பாதித்தால் ஒழிய நீங்கள் தலையிடக்கூடாது. உங்கள் மனம் புண்படுகிறது, உங்களுக்கு இழிவாக தெரிகிறது, உங்களுக்கு கலாசார சீரழிவாக தெரிகிறது என்றால் நீங்கள் செய்யாதீர்கள். அப்படி அடுத்தவர் விஷயத்தில் நீங்கள் மூக்கை நுழைப்பதற்கும் ராம் சேனா தலைவர் பெண்கள் pub-க்கு போகக் கூடாது என்று சொல்வதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.
அப்புறம் டோண்டு கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லுங்கள். நீங்கள் இது வரை பதில் சொல்லவில்லை, ஆனால் என் பதில்களில் தேடிக்கொள்ளுங்கள் என்று எழுதுகிறீர்கள். இதற்கு மேல் தேட என்னால் முடியாது. தேடிய வரையில் கிடைக்கவும் இல்லை.
இது முக்கியமான விஷயம். டோண்டுவுக்கு பெரியார் மாமனிதர் இல்லை என்று நிரூபிக்கும் உள்நோக்கம் இருக்கலாம். :-) நான் உள்ளிட்ட பலருக்கு இல்லை. சந்தேகம் இருந்தால் பெரியார் பற்றி நான் எழுதிய ஒரு பதிவை படித்து பாருங்கள் - http://koottanchoru.wordpress.com/2008/12/23/பெரியார்/
பெரியார் தலிட் தவிர்த்த மற்ற சாதியினருக்காகவே பெரிதும் போராடி இருந்தாலும் அதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எல்லாரும் எல்லாமும் செய்துவிட முடியாது. அவரது focus பார்ப்பனர், தலித் தவிர்த்த மற்ற ஜாதியினரின் முன்னேற்றமாக இருந்திருக்கலாம். அதனால் அவரது தாக்கமும் சாதனைகளும் பூஜ்யம் ஆகிவிடுமா என்ன? நீங்கள் இந்த கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லுங்கள்.
//அந்த உளறல்களத்தானே தேடிப்போய் தர மறுக்கிறார்கள் என்கிறீர்கள்.
அவை உளறல்கள் என்றால், நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? விட்டுத்தொலைக்க வேண்டியதானே?//
அவற்றை உளறல்கள் என கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பயத்தைத்தான் அங்கு நான் உணர்ந்தேன். உணர்ந்ததை இங்கு பதிவாக்கினேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// dondu(#11168674346665545885) said...
//அந்த உளறல்களத்தானே தேடிப்போய் தர மறுக்கிறார்கள் என்கிறீர்கள்.
அவை உளறல்கள் என்றால், நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? விட்டுத்தொலைக்க வேண்டியதானே?//
அவற்றை உளறல்கள் என கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பயத்தைத்தான் அங்கு நான் உணர்ந்தேன். உணர்ந்ததை இங்கு பதிவாக்கினேன்.
அன்புடன்,
டோண்டு ராகவ//
பகுத்தறிவுப் பகல்வன் பெரியாரின் அமுத பொன் மொழிகளை உளரல் என் சொல்லும் கூட்டத்தின் கூச்சல் கேட்டு உன் புஜங்கள் துடிக்க வில்லையா?
புரட்சி தொடங்க வா?
புது வரலாறு படைப்போம்
நச்சுப் பாம்புகள் நெளிகின்றன
நஞ்சை கக்கும்
ஜாக்கிரதை
திக-திமுக-அதிமுக-மதிமுக-தேமுதிக
தொண்டர்களே ஓர் அணியில் சேர்வீர்
பெரியாரின் பததைகளை கரங்களில் ஏந்தி, அவர்தம் கொள்கைகளை நெஞ்சிலே நிலை நிறுத்தி ,அவ்ர் எழுத்துகளை தாங்கும் விடுதலை நாளிதளை காப்ப்போம்
நெடும் மரங்களையே சாய்க்கும் பேராற்றல் கொண்ட சூறாவளி பலத்தாரே
புறப்படு
பெரியார் திடல் நோக்கி உடனே
காத்திடு நம் சமுகச் சொத்தை
இனமானம் காக்கும் போராட்டம் வெல்க
பாதுகாப்பு அரணாய் மாறு
89.பெரியாரை மட்டும் நம்பு
90.பெரியாரே போற்றி போற்றி
91. பெரியார் இருக்க பயமேன்
92. பெரியாரின் வார்த்தைகளே வேதம்
93.பெரியாரின் எழுத்துக்களை காப்போம்
94. பெரியார் காட்டிய பாதையில் நடப்போம்
95.தமிழ் நாட்டையே பெரியார் நாடக்குவோம்
96. பெரியாரே நலிந்தோருக்கு வழிகாட்டி
96.பெரியாரே தவிப்போருக்கு கலங்கரை விளக்கம்
97. பெரியாரே தாகத்தை தீர்க்கும் --ஒடுக்கபட்டவர்களின் கங்கை
98. பெரியாரே நமக்கு காமதேனு
99,பெரியாரே ஏழை எளியோருக்கு கற்பக விருட்சம்
100.பெரியாருக்கு வெற்றி-பெரியார் கொள்கைக்கு மாபெரும் வெற்றி-பெரியாரின் தொண்டர்கள் அஞ்சாநெஞ்சர்கள்-பெரியாரின் கொளகைகள் பொக்கிஷம்-பெரியாரின் வைர வரிகள் சாக வரம் பெற்றவை-பெரியார் வாழ்ந்த ஈரோட்டு மண் புனித மண்- நலிந்தோருக்கெல்லாம் அது திரு நீரு-திரு நாமம்-ஜெயம் நமக்கு
// RV! ”பூணுல் யாரோ மாட்டிவுட்டார். நான் மாட்டிகொண்டலைகிறேன். அது எதற்காக என்றுகூட எனக்குத் தெரியாது” என்பது குழந்தைப் பேச்சு.
கற்றவர் சொல் அல்ல.
யர்ராவது தலையில் ஒரு கல்லை வைத்து சுமந்துகொண்டேயிரு என்றால் இருப்பீர்களா?//
அட எனக்கு குழந்தையாக இருப்பது பிடித்திருந்தால், கல்லாதவன் மாதிரி நடப்பது பிடித்திருந்தால், கல்லை சுமக்க பிடித்திருந்தால் அதில் தலையிட நீங்கள் யார்? உங்களுக்கு எந்த tangible பாதிப்பு இல்லாத முறையில் என் வாழ்க்கை நடக்கும்போது, என் வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்று அறிவுரை சொல்ல நீங்கள் யார்? எனக்கு அது கற்றறிந்தவன் மாதிரி நடப்பதாகவும், புத்திசாலி மாதிரி நடப்பதாகவும், மலரை சுமப்பது போலவும் இருக்கலாம். நீங்கள் நினைப்பது போலத்தான் உலகம் முழுதும் நடக்க வேண்டுமா?
நீங்கள் சொன்ன அதே வார்த்தைகளை நான் மது அருந்தும் பெண்களுக்கு ராம் சேனா தலைவர் முத்தாளிக் செல்வதாக மாற்றி எழுதி இருக்கிறேன். உங்களுக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம் என்று யோசித்து கொள்ளுங்கள்.
"பெண்ணே, யாரோ ஆஃபீஸ் பார்ட்டியிலே சும்மா ஒரு மரியாதைக்காக pub-க்கு வர சொன்னதாலே வந்தேன்னு சொல்லறியே, இது குழந்தை பேச்சு. கற்றவர் சொல் அல்ல. யாராவது தலையில் கல்லை வைத்து சுமந்து கொண்டிருன்னு சொன்னால் செய்வியா?"
இன்னும் ஒரு உதாரணம். அனானி என்று அழைத்து பதில் சொல்வது எனக்கு சரியாக படவில்லை. உங்கள் பேரை சொல்வதில் என்ன தயக்கம்? எனக்கு சரியாக படவில்லை என்பதால் நீங்கள் கட்டயாமாக பேரை சொல்லித்தான் ஆக வேண்டுமா? எனக்கு ஏதாவது justification கொடுத்தே ஆக வேண்டுமா? அது சரி தவறு என்று நினைப்பது என் கண்ணோட்டம், அதை நான் உங்கள் தலையில் வரிந்து கட்ட முடியாது என்பது எனக்கு புரிகிறது. உங்களுக்கு உங்கள் இஷ்டத்தை என் வாழ்க்கையில் புகுத்த முடியாது என்று தெரிய எத்தனை நாளாகும் என்றுதான் தெரியவில்லை.
//பெரியார் வாழ்ந்த ஈரோட்டு மண் புனித மண்- நலிந்தோருக்கெல்லாம் அது திரு நீரு-திரு நாமம்-ஜெயம் நமக்கு //
இதைவிட பெரியாரை அவமானப்படுத்த முடியாது!
//பெரியாரே நமக்கு காமதேனு //
பெரியார் பால் கொடுத்தாரா?
ஈரோட்டில் அப்படி யாரும் சொல்லவில்லையே!
//பெரியார் காட்டிய பாதையில் நடப்போம் //
இப்போ அந்த பாதையெல்லாம் அடைச்சிட்டு புதுசா ஃபோர் வே ட்ராக் போட்ருக்காங்க!
//பெரியாரின் வார்த்தைகளே வேதம் //
கிழிஞ்சது கிருஷ்ணகிரி!
//பெரியாரை மட்டும் நம்பு //
மத்ததெல்லாம் சொம்பு!
//திக-திமுக-அதிமுக-மதிமுக-தேமுதிக//
உருப்பட்டா மாதிரி தான்!
தி.மு.காவும், அ.தி.மு.காவும் பி.ஜே.பி கூட கூட்டணி வச்சதேயில்லையா!?
//பெரியாரைப் படித்து, அல்லது, கேட்டு, அவர்தம் கொள்கைகளை அனைவரும் கண்மூடி வாய்பொத்திக் கேட்டதாக இவர் கற்பனை பண்ணுகிறார்.//
பெரியார் யோசிக்க சொல்லவேயில்லை!
தான் சொல்வதை அப்படியே ஏற்கத்தான் சொன்னார்!
டோண்டு முழுவிளக்கம் அளிப்பார்!
//வால் பையன் ஆரம்பித்தார். இவர் தொடர்கிறார். இது ஒரு தந்திரம்.//
நான் யாரையும் நேரடியாக வா,போ என்று பேசவில்லை நண்பரே!
சாக்ரடீஷும், மார்க்ஸும் சொன்ன கருத்துகளை தான் பெரியாரும் சொன்னார், ஆனால் அடிப்படை காரணியான ”உனக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்” என்ற வார்த்தையை மறந்தார், அதை தான் நான் சுட்டி காட்டினேன்!
//டோண்டு மற்றும் அணானி கேட்ட கேள்விகளுக்கு ஏற்கனவே பதில் அளித்துள்ளேன். ஊன்றிப்படித்து உண்மையை உணர வேண்டுகிறேன்//
பெரியார் சொன்னது, வீரமணி சொன்னதை தவிர நீங்க என்ன சொல்றிங்கன்னு சொன்னா கொஞ்சம் தேவல!
//பெரியார் விளக்குகிறார். படியுங்கள். உண்மையை உணருங்கள்.//
உங்களுக்குன்னு சொந்தமா எந்த கருத்துமே இல்லையா!?
இப்படி இருக்காதிங்க தமிழ்ஓவியா
இயந்திரத்துக்கும் மனிதனுக்கும் இருக்குற வித்தியாசமே அது தான்!
//கைபர் கணவாய் வழி வந்தோரை விரட்டி அடிப்போம்
பெரியார் நாமம் வாழ்க
பெரியார் கொள்கை போற்றுதும் போற்றுதும்
பெரியாரே துணை நமக்கு
பெரியாரின் எழுத்துக்களே நமக்கு வேதம் //
பெரியார் பேரை சொல்லி ஏன் இஸ்லாமிரை விரட்டி அடிப்போம் என்கிறீர்!?
இஸ்லாமியர்களும் கைபர் கணவாய் வழி வந்தவர்கள் தானே!
//பெரியார் யோசிக்க சொல்லவேயில்லை!
தான் சொல்வதை அப்படியே ஏற்கத்தான் சொன்னார்!
டோண்டு முழுவிளக்கம் அளிப்பார்!//
ஏற்கனவே விளக்கம் அளித்தாகி விட்டது, பெரியார் தனது பக்தகோடிகளிடம் தான் சொல்வதை கைகட்டி, வாய் பொத்தி, அப்படியே கேட்டு நடந்து கொள்ள சொன்னதை. பார்க்க: http://dondu.blogspot.com/2008/12/blog-post_21.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
“You may fool all the people some of the time, you can even fool some of the people all of the time, but you cannot fool all of the people all the time.” - Lincoln
//
ரொம்ப ரொம்ப சரி.
எவ்வளவு நாளைக்குத்தான் பெரியார் பெயரைச் சொல்லி தலித்துகளை ஏமார்ரப்போகிறீர்கள் ?
//....உங்கள் வீட்டுக்கு எதிரில் அல்லது பக்கத்தில் குடியிருக்கும் ஒருவர் அவர் வீட்டில் "இது பத்தினி வீடு" என்று எழுதி வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படி அவர் எழுதி வைக்கும் போது மற்ற வீடுகள் என்ன வீடூகள் டோண்டு?
அப்போது உங்கள் நிலை.
......//
இந்தக் கேள்விக்கு டோண்டு சரியான பதிலடி கொடுப்பார்தான். இருந்தாலும் இரண்டு தகவல் விளக்கங்கள்:
1. பார்ப்பனர்கள் மட்டும் தங்களை உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளவில்லை.
2. பார்ப்பனர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை முதலில் ஏற்படுத்தியவர்கள் கிருத்துவ பாதிரியார்கள்.
ஈவேராவைத் தவிர மற்றவர் சொல்வதையும் கொஞ்சம் காதுகொடுத்துக் கேளுங்கள்.
ரொம்ப ரொம்ப சரி.
எவ்வளவு நாளைக்குத்தான் பெரியார் பெயரைச் சொல்லி தலித்துகளை ஏமார்ரப்போகிறீர்கள் ?
Vajra!
Two wrongs do not make a right.
I have already drawn a crude metaphor here - அவுங்க கழுவட்டும்; பின்ன நாங்க கழுவிக்கிறோம் will make you stink unbearably.
Their cheating dalits, as you say, wont exhonerate you at all, of all the 'excesses' that you have inflicted on Non-parpana Tamil Hindus in the name of religion. What are those excesses - periyaarists have basketful of information on that!
I have written a long reply to RV for his observation that it is his right to wear punuul and Dondu's ejaculation: எந்தக் கொம்பனும் எஙக்ளை ஒன்னும் செய்யமுடியாது, in my blog.
Reading that will explain my stand of anti-brahminism well, hopefully.
//அவுங்க கழுவட்டும்; பின்ன நாங்க கழுவிக்கிறோம் will make you stink unbearably.//
அவனவன் அவன் நாத்தத்தை பாத்துக்கிடட்டும். நீ பொத்திக்கிட்டு போ.
//I have written a long reply to RV for his observation that it is his right to wear punuul and Dondu's ejaculation: எந்தக் கொம்பனும் எஙக்ளை ஒன்னும் செய்யமுடியாது, in my blog.//
இதோடா, வந்துட்டாரு யோக்கியர் அனாமத்து. ஏம்பா நீயே அனாமத்து, இதிலே ஒன்னோட வலைப்பூவை நாங்க எங்கே தேடறது.
Thanks for the article Dondu Sir. We have to accept the fact that "Nobody is 100% perfect". I could have said something which is right for today and wrong for tomorrow and vice versa.
Basic question: Are all Hindus equal in our society?
Desired Answer: Yes
Truth: No
Periyar may be wrong in some or most of his thoughts. But it doesn't mean that he is always wrong.
Instead of supporting or opposing Periyar, we should take the best from him (even it is a lie/myth). Same applies to everything. Even though if somebody doesn't like Hinduism, it doesn't mean everything in Hinduism is wrong.
Thanks & Regards
Muthu
//அவனவன் அவன் நாத்தத்தை பாத்துக்கிடட்டும். நீ பொத்திக்கிட்டு போ.
//I have written a long reply to RV for his observation that it is his right to wear punuul and Dondu's ejaculation: எந்தக் கொம்பனும் எஙக்ளை ஒன்னும் செய்யமுடியாது, in my blog.//
இதோடா, வந்துட்டாரு யோக்கியர் அனாமத்து. ஏம்பா நீயே அனாமத்து, இதிலே ஒன்னோட வலைப்பூவை நாங்க எங்கே தேடறது.//
நீ..நா...
நல்ல வசனம்.
I wont adopt that language.
By this langauge, you have dashed your image of being an elder.
My blog is in my name. I will give to RV in his blog kuuttachchooru.
I will post replies in my blog the suitable replies to all your blog posts where you say, I am a brahmin and wont wash my bottom.
You have a one point agenda of imaginary superiority of an imaginary caste to which you were born. Even arvindan neelakantan has pointed out your disservice to the unity of Hindus. He begged you to give up your casteism with the intent to divide society.
What reply did you post to him?
என்னவோ சொந்த பேர் எழுதிட்டா யோக்கியரா?
இப்படியெல்லாரும் சொந்த பேரு எழுதிட்டு நாந்தான் யோக்கியர்னு சொல்ல முடிய்மா?
இங்கே பின்னூட்டம் போட்ட அனைவரும் சொந்த பேர்லயா எழுதறாங்க?
புனைப்பெயருக்கும். அனமத்துக்கும் என்ன வித்தியாசம் பெரியவரே?
ஒன்னும் இல்ல.
எல்லாம் தான் என்ற அகங்காரம்தான். அதை மூடிமறைக்க ஜாதி என்ற முகமூடி தேவை ராகவனுக்கு.
//My blog is in my name. I will give to RV in his blog kuuttachchooru.//
அங்கே கொடுப்பது இருக்கட்டும், முதலில் இங்கு தரவும். பிளாக்கராக லாக் இன் செய்து வந்தால் நான் ஏன் கேட்கப் போகிறேன்.
இன்னமும் அதே மாதிரி அனாமத்தாக வந்து உதார் விடுவதுதான் தமாஷாக உள்ளது.
டோண்டு ராகவன்
You still dont understand.
In internet fora, it is not advisable to divulge one's identity. You, too, did not write your blogs when you were in service. I have seen upteen members in CPWD, where I, too, worked in buraucracy (in allied organisation), using two e mail ids - one in official capacity divulging their real names, and the other, in their personal capacity using nicknames. It is common in other organisations. Almost all of us are working here or there; and to divulge our real identity is harmful to us personally.
Why do you bother who wrote? Why dont you bother what he wrote?
Isnt here - Views vs Views?
What contribution does it make to the proceeding in your feedback arena if a member divulges his real identity, Or not divulge it?
What are you going to do with his real identity - to write him commendatory letters if his views agree with yours? and menacing letters if disgreed with yours? Do you want to kill that fellow who comes here and post his views apropos yours in a fictitious nick or anoymously if he disagreed with you?
I simply dont understand your mind. You puzzle me.
Why do you bother at all about the real identity of the feebacker?
Please clarify your stand the idenitity of your feebackers.
@அனாமத்துகள்
அனாமத்தாக வாருங்கள், பிரச்சினை இல்லை. அப்புறம் ஏன் பெரிய கொம்பன் மாதிரி உங்கள் பிளாக்கில் பதில் தருவதாக சொல்லிக் கொள்ள வேண்டும்? அதை புரிந்து கொள்ள துப்பு இல்லாதவர்கள் என்னை புரிந்து கொள்ள முடிவதில்லை என்று சொல்வது நிஜமாகவே காமெடிதான்.
பிளாக்கராக லாக் இன் செய்து வந்தால் பலமுறை ஆனாலும் ஒருவரே பேசுகிறார் என நிச்சயமாக இருக்கலாம். ஆனால் எல்லாமே அனாமத்துகள், அட்ரெஸ் இல்லாததுகளாக இருந்தால் என்னவென்று கூறுவது?
டோண்டு ராகவன்
தமிழ் ஓவியாவின் உளறல் இது.
//மற்றவர்களை இழிவு படுத்த பூணூல் போடவில்லை என்கிறீர்கள். அப்புறம் எதற்காக பூணூல் போடுகிறீர்கள்?
பூணூல் போடுவது இழிவுபடுத்துவதற்காக என்கிறோம். நீங்கள் அந்தப் பூணூலை அறுத்தெறிந்து இல்லை என்று காட்ட வேண்டமா?
//
சுத்த கேனத்தனமான பார்வை. பூணூல் போடுவது இந்துக்கள் அனைவரும், பலிஜா நாயுடுகள் உட்பட செய்துவந்த வழக்கம். துவிஜன்கள் இருபிறப்பாளர் எனப்படும் சத்திரியர் பிராம்மணர் வைசியர் அனைவரும் செய்து வந்த பழக்கம் இது. தொல்காப்பியர் காலத்திலேயே இது சூத்திரர் உட்பட அனைவரும் செய்ய்த்தக்கத்தாக ஆயிற்று.
நடுவில் இந்துக்களில் பலர் பூணூல் அணிவதை நிறுத்தினர். ஆவணி அவிட்டம் மட்டுமே பூணூல் அணிய ஆரம்பித்தனர். பிறகு அதுவும் நின்றது.
இன்று பிராம்மணர்கள் மத்தியிலும் ஆச்சாரிகள் மத்தியிலும் பூணூல் அணியும் பழக்கம் அருகி வருகிறது. ஆனால் பிராம்மணரும் ஆச்சாரிகளும் மட்டுமே இன்று பூணூல் அணிகின்றனர் என்பது மட்டுமே உண்மை.
இது எல்லோரும் அணியலாம்.
இதனை நீங்கள் நிறுத்திவிட்டதால் அவர்கள் மட்டுமே தொடர்கிறார்கள். அதற்கு அவர்களையும் நிறுத்த வைக்க நீங்கள் போடும் நாடகமே இந்த பத்தினி புலம்பல்.
இது இந்துக்களின் அடையாளம். அவ்வளவுதான்.
பூணூல் அணியவில்லை என்றால் அவன் இந்து ஆகமாட்டான் என்றில்லை. ஆனால் அவன் பூணூல் அணிவது அவன் தனது இந்து அடையாளத்தை பேணுகிறான் என்று பொருள் அவ்வளவே.
//பூணூல் போடுவது இழிவுபடுத்துவதற்காக என்கிறோம். நீங்கள் அந்தப் பூணூலை அறுத்தெறிந்து இல்லை என்று காட்ட வேண்டமா?
//
இதே மாதிரி, கருப்புச்சட்டை போடுவது மற்றவர்களை இழிவு படுத்த என்று நாங்கள் சொல்கிறோம். நீங்கள் கருப்புச் சட்டைகளை கிழித்தெறிந்து இல்லை என்று காட்டவேண்டாமா?
எங்களுக்குத் தெரியும். கருப்புச்சட்டை என்பது உங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவும் கண்டனத்தை தெரிவிக்கவும் நீங்கள் எடுத்துக்கொண்ட உடை. நீங்கள் பேத்துவது போல நாங்கள் பேத்தமாட்டோம்.
திருநீறு அணிவதும், நாமம் அணிவதும் எபப்டி அடையாளமோ அதே போல பூணூல் அணிவதற்கும் உள்ளே ஒரு கருத்து உண்டு. அது மற்றவர்களை இழிவு படுத்த அல்ல, தன்னை கட்டுப்படுத்த.
விமர்சிக்கப் புகும்போது எதனை விமர்சிக்கிறோம். மற்றவர்கள் எதன் காரணமாக பூணூல் அணிகிறார்கள் என்று ஆராய்ந்து விமர்சிக்க வேண்டும். நீங்களாக வெறுப்பியலின் அடிப்படையில் காரணத்தை கண்டுபிடித்துக்கொண்டு உளறினால், துஷ்டரை கண்டால் தூர விலகு என்றுதான் போவார்கள்.
அனானி அவர்களே,
// Why do you bother at all about the real identity of the feebacker? //
ரொம்ப சிம்பிள். பத்து அனானி இருந்தால் எந்த அனானி எழுதுவதை பற்றி கருத்து சொல்கிறேன் என்பதை தெளிவாக்குவது கஷ்டமாக இருக்கிறது. உங்கள் பேரை சொல்வதில் உங்களுக்கு இஷ்டமில்லியாயா, இல்லை பிரச்சினை வரும் என்று பயப்படுகிறீர்களா, சரி ஒரு புனைபெயரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். "பெரியார் பக்தன்", "பூணூல் விரோதி", "குடுமி நண்பன்", எதோ ஒன்று. உங்கள் மறுமொழி பற்றி எழுதுபவர்களுக்கு வசதியாக இருக்கும் இல்லையா? Real identity வேண்டும் என்பதில்லை, ஒரு identity இருந்தால் வசதி, அவ்வளவுதான்.
இரண்டாவது, அனானி என்று உங்களை அழைப்பது எனக்கு மரியாதை குறைவாக படுகிறது.
அப்புறம் இதற்காக ப்ளாகர் அக்கௌன்ட் திறக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. மறுமொழியின் முடிவில் உங்கள் பெயரையோ, புனைபெயரையோ எழுதினால் போதுமே!
RV, Vajra and Dondu Raagahvan, atma too.
My blog url is as under, where I have written on the punul ceremony;
http://myownquiver.blogspot.com/
\\மற்றவர்கள் எதன் காரணமாக பூணூல் அணிகிறார்கள் என்று ஆராய்ந்து விமர்சிக்க வேண்டும்//
Thamizoviya,
Please go to
http://www.oldandsold.com/books/hindu/hindu-4.shtml
அன்புடன் அனானி
//My blog url is as under, where I have written on the punul ceremony;
http://myownquiver.blogspot.com//
இதை முதலிலேயே சொல்லுவதுதானே, அல்லது பிளாக்கராக லாக் இன் செய்து வந்திருப்பதுதானே? அதில் என்ன பிரச்சினை உங்களுக்கு?
நிற்க. உங்கள் அப்பதிவுக்கு அங்கு நான் இட்ட பின்னூட்டம் இதோ. பார்க்க: http://myownquiver.blogspot.com/2009/08/poonul-and-tamil-brahmins.html?showComment=1249521058695#c156465504916458924
//to pin down Periyaar in order to show he was a hypocrite in his attack on Tamil brahmins.//
ஏன் ஐயா, தமிழ் தெரியாதா? நான் சென்றது 1965 விடுதலை இதழ்களை பார்க்க. ஹிந்தி எதிர்ப்பு போருக்கு எதிராக பெரியார் செயலாற்றியதை ஆதாரத்துடன் விடுதலை பேப்பர் கட்டுரைகளிலிருந்தே எடுத்து காட்ட. அதில் பார்ப்பனர்கள் விஷயமே கிடையாது.
பூணூல் பார்ப்பனர் மட்டும் போடுவதில்லை. இன்னும் பல வகுப்பினரும் போடுகிறார்கள். அதையெல்லாம் தெரிந்து கொண்டு வாருங்கள்.
//With such thread on your back, you wander in society as a member of an exclusive club of Brahmins//
So what. முதலியார் சாதி சங்கம், கொங்கு வேளாளர் சங்கம் என்றெல்லாம் இருக்கும் தமிழ் நாட்டில் இதுவும் ஒன்று என வைத்து கொள்ள வேண்டியதுதான்.
அவரவர் சடங்குகள் அவரவருக்கு. வேண்டுமானால் நீங்களும் போட்டு கொள்ளலாம் உங்களை யாரும் கையை பிடித்து தடுக்க மாட்டார்கள். அதே போல மற்றவர்கள் போட்டு கொள்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
எனது வலைப்பூவில் அனானியாக வந்து விட்டு உங்களது வலைப்பூவை பார்க்குமாறு கூறிணீர்கள். நீங்களே யார் என்று தெரியாதபோது, அதுவும் வலைப்பூவின் சுட்டியும் தராத நிலையில் அப்படித்தான் உங்களை கேள்வி கேட்பார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//சரி ஒரு புனைபெயரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். "பெரியார் பக்தன்", "பூணூல் விரோதி", "குடுமி நண்பன்", எதோ ஒன்று. உங்கள் மறுமொழி பற்றி எழுதுபவர்களுக்கு வசதியாக இருக்கும் இல்லையா? Real identity வேண்டும் என்பதில்லை, ஒரு identity இருந்தால் வசதி, அவ்வளவுதான்.//
அதுவும் போதாது ஆர்.வி. அவர்களே. அதே பெரியார் பக்தன் என்னும் பெயரில் இன்னொருவன் ஏதாவது எழுதி விட்டு போனால், முதலில் பெரியார் பக்தனாக வந்தவன் நான் அவன் இல்லை என்பான். இந்த சிரமம் எல்லாம் வேண்டாம் என்றுதான் பிளாக்கராக வரச்சொல்வது.
இதனால் அதர் ஆப்ஷனில் வரும் கோளாறுகளையும் சமாளிக்கலாம். இதெல்லாம் கற்பனையாக யோசிக்கும் பிரச்சினை அல்ல, பல முறை வந்து விட்டன. நீங்கள் எனது இந்த வலைப்பூவில் “போலி டோண்டு” என்ற லேபலின் கீழ் உள்ள 11 பதிவுகளைப் பார்த்தால் தெரியும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
////பெரியார் விளக்குகிறார். படியுங்கள். உண்மையை உணருங்கள்.//
உங்களுக்குன்னு சொந்தமா எந்த கருத்துமே இல்லையா!?
இப்படி இருக்காதிங்க தமிழ்ஓவியா
இயந்திரத்துக்கும் மனிதனுக்கும் இருக்குற வித்தியாசமே அது தான்!//
பெரியார் பற்றிய விவாதம் செய்யப்படும்போது பெரியாரின் கருத்தைக் கொண்டு பதி அளிப்பது தானே சரியான செயல்.
என்னுடைய புலமையைக் காட்ட என்னை அறிவாளியாகக் காட்டிக் கொள்ள வலைப்பதிவு ஆரம்பிக்கவில்லை வால்பையன். என்னால் இயன்ற அளவுக்கு பெரியார் கொள்கை பரப்பும் நோக்கில் ஆரம்பிக்கப் பட்டதுதான் இந்த வலைப் பூ.
எனவே முதலில் நீங்கள் இதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
மேலும் எனக்கென்று சொந்தமாக கருத்து இருக்கிறதா என்று கேட்டுள்ளீர்கள்.
நான் சிறுவனாக இருக்கும் போது சமுதாயத்தில் நடக்கும் கொடுமைகளை கண்டு ஏன் இப்படி நடக்கிறது.இதை எப்படித் தீர்ப்பது என்று சிந்திக்கும் போது கிடைத்த விடை தான் பெரியார்.
அது மட்டுமல்லாது
பெரியார் தந்த புத்தி மனித நேயத்தை வலியுறுத்துவதால் சொந்தப் புத்தியை விட பெரியார் தந்த புத்தியைதான் அதிகமாகப் பயன்படுத்துகிறேன்.அதில் பெருமையும் படுகிறேன்.
சொந்தப்புத்தியைப் பயன்படுத்தும் போது ஆசாபாசம் குறுக்கிடும்.ஆனால் பெரியார் தந்த புத்தி நாணயமாக, நேர்மையாகச் செயல் பட வைக்கிறது வால் பையன்.
மீண்டும் நான் வலியுறுத்த விரும்புவது எனது புலமையை,அறிவாளித்தனத்தைக் காட்ட ஆரம்பிக்கப் பட்டதல்ல இந்த வலைப்பூ.
நன்றி வால்பையன்
//எதன் காரணமாக பூணூல் அணிகிறார்கள் என்று ஆராய்ந்து விமர்சிக்க வேண்டும். //
மூன்றரை கிலோ எடையுள்ள தங்கத்தினாலான பூணூலை காஞ்சி சங்கராச்சாரியார் திருப்பதி ஏழுமலையானுக்குச் சாத்துகிறார் என்றால், இதில் புதைந்துள்ள ஜாதிய ஆதிக்க உணர்வையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்; விளம்பரப்படுத்தப்பட்ட இந்து மதக் கடவுள் சிலைகளின் மார்பில் பூணூல் தொங்குவதையும் சிந்தித்தால், இதன் பின்னணியை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
//மீண்டும் நான் வலியுறுத்த விரும்புவது எனது புலமையை,அறிவாளித்தனத்தைக் காட்ட ஆரம்பிக்கப் பட்டதல்ல இந்த வலைப்பூ.//
புரிஞ்சிடுச்சு!
இனிமே சொந்த கருத்தை கேக்கல உங்ககிட்ட!
ஒரு சிறு சந்தேகம்,
பூனூல் அணிவது ஆதிக்க சாதி திமிர் என்பது போல் தனக்கென தனியா அடையாளப்படுத்தப்படும் அனைத்தும் பெரியார் சாடியிரிக்கிறாரா!?
உதாரணத்துக்கு விபூதி பட்டை, கழுத்தில் சிலுவை, தலையில் தொப்பி, இந்த்துவாவில் பெண்களுக்கு ஏன் பூனூல் இல்லை, இஸ்லாத்தில் ஏன் பெண்களுக்கு மட்டும் பர்தா இந்த மாதிரி.
இருந்தா சொல்லுங்க கேட்டுகிறேன்!
//
மூன்றரை கிலோ எடையுள்ள தங்கத்தினாலான பூணூலை காஞ்சி சங்கராச்சாரியார் திருப்பதி ஏழுமலையானுக்குச் சாத்துகிறார் என்றால், இதில் புதைந்துள்ள ஜாதிய ஆதிக்க உணர்வையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்;//
இதில் என்ன ஜாதி ஆதிக்க உணர்வு இருக்கிறது? ஜாபர் ஷெரீப் என்ற மத்திய மந்திரி கூட திருப்பதி வெங்கடாசலபதிக்கு வைர கிரீட்ம் வைத்தார். அதிலும் என்ன ஜாதி ஆதிக்க உணர்வு இருக்கிறது?
// விளம்பரப்படுத்தப்பட்ட இந்து மதக் கடவுள் சிலைகளின் மார்பில் பூணூல் தொங்குவதையும் சிந்தித்தால், இதன் பின்னணியை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
//
எல்லா இந்துக்கடவுள்களின் மார்பிலும் பூணூல் இருக்கும். மதுரை வீரனிலிருந்து சீரங்கம் ரங்கநாதர் வரைக்கும். இதில் என்ன பிரச்னை?
ஏன் திருப்பதி வெங்கடாசலபதி நாமம் அணிந்திருக்கிறார். ஏன் சிவபெருமான் திருநீறு அணிந்திருக்கிறார். இதிலெல்லாம் ஜாதி உணர்வுதான் இருக்கிறது என்றும் பேசுங்கள்.
ஏன் பூணூல் அணிகிறார்கள் என்று சொல்லிவிட்டேன். இதிலென்ன ஜாதி ஆதிக்க உணர்வு இருக்கிறது? திரும்பத்திரும்ப கிளிப்பிள்ளை மாதிரி உளறிக்கொண்டே இருந்தால் சென்னை வெயிலில் அலையும் ஏராளமான பைத்தியங்களில் ஒன்றாக உங்களையும் உதாசீனம் செய்துவிட்டு போகவேண்டியதுதான்.
//திரும்பத்திரும்ப கிளிப்பிள்ளை மாதிரி உளறிக்கொண்டே இருந்தால் சென்னை வெயிலில் அலையும் ஏராளமான பைத்தியங்களில் ஒன்றாக உங்களையும் உதாசீனம் செய்துவிட்டு போகவேண்டியதுதான்.//
இன்னுமா அதை நீங்கள் செய்யவில்லை ஆத்மா அவர்களே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு,
அப்படித்தான் விபரம் அறிந்தவர்கள் இந்த லூஸுகளை உதாசீனம் செய்துகொண்டிருந்தார்கள். அதனால், அவைகள் "எவனுக்குமே நமக்கு பதில் சொல்ல முடியவிலலை" என்று நினைத்துகொண்டுவிட்டன.
இந்துக்கள் அனைவரும் திருமணம், காதுகுத்து என்று செய்யும் போது தற்காலிகமாக பூணூல் அணிந்துதான் செய்கிறார்கள். ஏனென்றால், பூணூல் அணிந்துதான் ஒரு இந்து இருக்கவேண்டும். அதனை புரோகிதர்கள்தான் போட்டுவிடுகிறார்கள். பூணூல் என்பது ஜாதி பெருமைக்காக என்று இருந்தால், ஏன் புரோகிதர்கள் எல்லா இந்துக்களுக்கும் பூணூல் போட்டுவிடவேண்டும்?
தமிழ் ஓவியா சற்றேனும் சுயமாக சிந்தித்து பார்க்கவேண்டும்.
இதெல்லாம் எழுதுவது தமிழ் ஓவியாவுக்கு மட்டுமல்ல.
//பூனூல் அணிவது ஆதிக்க சாதி திமிர் என்பது போல் தனக்கென தனியா அடையாளப்படுத்தப்படும் அனைத்தும் பெரியார் சாடியிரிக்கிறாரா!?
உதாரணத்துக்கு விபூதி பட்டை, கழுத்தில் சிலுவை, தலையில் தொப்பி, இந்த்துவாவில் பெண்களுக்கு ஏன் பூனூல் இல்லை, இஸ்லாத்தில் ஏன் பெண்களுக்கு மட்டும் பர்தா இந்த மாதிரி.
இருந்தா சொல்லுங்க கேட்டுகிறேன்!//
நீங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பெரியார் தெளிவா பதில் சொல்லியுள்ளார். இயலுமானால் எனது வலைப்பூவான தமிழ் ஓவியாவில் தேடிப் பாருங்கள் அந்தப் பதிவுகள் இருக்கும்.
இல்லையென்றால் தெரிவியுங்கள் பதிவு செய்கிறேன்.
எனக்கும் இது போன்ற அய்யங்கள் வந்ததுண்டு. தேடும் போது பெரியார் கருத்துக்களில் விடை கிடைத்தது.
எனவே தேடிப்பாருங்கள் வால்பையன். விடை கிடைக்கும்.
உங்களின் புரிந்துணர்வுக்கு மிக்க நன்றி
பூணூல் அணிவது பற்றி கந்தியார் தரும் தகவல் இதோ:-
“நான் பெரியவன் ஆகிவிட்ட பிறகு இந்தியாவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் பலர் நல்ல எண்ணத்தின் பேரிலேயே, நான் பூணூல் போட்டுக் கொள்ளும்படிச் செய்ய முயன்றார்கள். ஆனால், அவர்கள் முயற்சி வெற்றியடையவில்லை. சூத்திரர்கள் பூணூல் போட்டுக் கொள்ளக் கூடாது என்றால், மற்ற வருணத்தினருக்கு மட்டும் அதைப் போட்டுக் கொள்வதற்கு என்ன உரிமையிருந்தது என்று விவாதித்தேன். பூணூல் போட்டுக் கொள்வது அநாவசியமான பழக்கம் என்பது என் கருத்து. ஆகையால் அதை அணிய வேண்டும் என்பதற்குப் போதுமான நியாயம் இருப்பதாக (வைசியனான) எனக்குத் தோன்றவில்லை... இந்து மதமும் இந்தியாவும் இன்றுள்ள நிலைமையில் ஆன்மீகப் புனர் வாழ்வுக்குச் சின்னமான இந்தப் பூணூலை அணிந்து கொள்ளத் தங்களுக்கு உரிமையுண்டு என்று இந்தக்களால் காட்ட முடியுமா என்று சந்தேகப்படுகிறேன். இந்து மதத்திலிருந்து தீண்டாமை ஒழிந்து, உயர்வு-தாழ்வு என்ற வேற்றுமைகளெல்லாம் நீங்கி, அதில் இப்போது மலிந்து கிடக்கின்ற பல்வேறு தீமைகளும் வேஷங்களும் ஒழிந்த பிறகு தான் இந்துக்களுக்குப் பூணூல் அணியும் உரிமை ஏற்பட முடியும். ஆதலால் பூணூல் அணிந்து கொள்வது என்ற கருத்தையே என் மனம் வெறுக்கிறது” (பக்கம் 397 - சத்திய சோதனை-காந்தியார் சுயசரிதை-மொழிபெயர்ப்பு ரா.வெங்கட்ராஜலு).
மேலும் விவரங்கள் அறிய கீழே சுட்டி தந்துள்ளேன். படியுங்கள்.
http://thamizhoviya.blogspot.com/2009/08/blog-post_6556.html
//கழுத்தில் சிலுவை//
கழுத்தில் சிலுவை என்பது சாதித்திமிர் என்று பெரியார் சொல்லியிருக்கும் ஒரு இணைப்பை இங்கே பதியுங்களேன் தமிழ் ஓவியா.
அப்படி கழுத்தில் சிலுவை என்பது சாதித்திமிர் என்று பெரியார் சொல்லியிருந்தால், பெரியாரை விட உலக மகா மடையர் இருக்கமுடியாது.
> தமிழ் ஓவியா said...
>உங்களின் புரிந்துணர்வுக்கு மிக்க நன்றி
தமிழ் ஓவியா, நீங்கள் காபி-பேஸ்ட் தவிர வேறு எதவும் செய்வதில்லை என எல்லொருக்கும் புரிந்துணர்வு இருக்கு. 40, 50, 60, 70 வருடங்கள் முன்னாடி ஒருவர் எழுதியதை வாந்தி எடுக்கத்தான் உங்களுக்கு தெரியும் என்ற புரிந்துணர்விற்கு, எல்லோருக்கும் நன்றி சொல்லவும்.
வடக்கே எப்படியோ தெரியாது. ஆனால் தெற்கில், தொல்காப்பியர் காலத்திலேயே நால்வருணத்தவரும் பூணூல் அணிந்திருந்தனர். ஆதாரங்களை தொல்காப்பியம் அறிந்தவர்களிடம் கேளுங்கள். (கலைஞரிடம் அல்ல)
ஆனால் வடக்கிலும் இன்று அனைத்து இந்துக்களும் அணிய எந்த தடையும் இல்லை. சொல்லப்போனால், இன்று பிகாரிலே மிக மிக முக்கியமான இந்துக்கோவில்களுக்கு தலித்துகளை பூஜாரிகளாக நியமித்துள்ளனர். கடந்த ஐம்பது வருடங்களில் மாபெரும் மாற்றங்கள் நிகழந்துள்ளன. இது இந்து மதத்தையும் இந்துக்களையும் வளப்படுத்தியிருக்கிறது. ஆனால், 50 வருடங்களுக்கு முன்னர் எழுதியவற்றையே மறுபடி மறுபடி வாந்தி எடுப்பவர்களுக்கு இன்றைய செய்திப்பத்திரிக்கைகளை காண்பித்தாலும் புரியாது, அதற்கு முந்திய வரலாறும் தெரியாது.
வடக்கு தெற்கு எந்த பிரதேசத்திலும் இன்று பூணூல் அணிய எந்த தடையும் இல்லை.
பூணூல் அணிவது பற்றி காந்தி சொல்லியுள்ளது பற்றி என்ன நினைக்கிறீங்க ஆத்மா
//கழுத்தில் சிலுவை என்பது சாதித்திமிர்//
உங்க வாதம் கள்ளுக் குடித்த பைத்தியகாரன் உளறுவது போல் இருக்கு ஆத்மா
//வடக்கு தெற்கு எந்த பிரதேசத்திலும் இன்று பூணூல் அணிய எந்த தடையும் இல்லை.//
கையில் கடிகாரம் கட்டுவது மணி பார்க்க, அது போல் பூணூல் அணிவதால் என்ன பயன் ஆத்மா?
எதுக்கும் பயனில்லாத பூணூலை எல்லோருக்கும் போடுவதை விட, 3 சதவீதம் பேர் போட்டிருக்கும் பூணூளை அறித்தெறிவது சுலபமல்லவா?
அய்யா நீங்கள்தானே அப்படிப்பட்ட அடையாளங்கள் எல்லாமே சாதித்திமிர் என்று பெரியார் சொன்னதாக சொன்னீர்கள். அதனைத்தான் கேட்டேன்.
--
எல்லோரும் பூணூல் போடும் நிலை வரும் வரைக்கும் தான் பூணூல் போடுவதில்லை என்று காந்தியார் சொன்னார். நான் பூணூல் போடுவதில்லை என்பதால் எவனும் பூணூல் போடக்கூடாது என்று பெரியார் சொல்கிறார். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?
காந்தியார் சொன்னதற்குத்தான் பதில் எழுதியிருக்கிறேன். படியுங்கள்.
மூவர்ணத்தவர் மட்டுமே பூணூல் அணியலாம் என்ற நிலை மாறி, அனைவரும் பூணூல் அணியலாம் என்று வரும்போது நான்பூணூல் அணிவேன் என்று காந்தியார் சொல்கிறார்.
அந்த நிலை ஏற்கெனவே தமிழ்நாட்டில் இருந்துதான் வந்திருக்கிறது என்று நான் சொல்கிறேன்.
இன்று அனைத்து இந்துக்களும் இந்தியா முழுவதும் பூணூல் அணியும் நிலை இருக்கிறது.
ஏன், நீங்களே பூணூல் போட்டுக்கொள்ள விரும்பினாலும் யாரும் தடுக்கப்போவதில்லை. அல்லது பூணூலை கழட்டி வைத்தாலும் யாரும் தடுக்கப்போவதில்லை.
தமிழ் ஓவியா,
டோண்டு தலித்-பெரியார் பற்றி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலே இல்லையே? நீங்கள் நழுவுகிறீர்கள் என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது.
மீண்டும் சொல்கிறேன், பெரியார் பார்ப்பனர் அல்லாதவர்களின் நிலையில் மட்டும் focus செய்திருந்தால் அது தவறு இல்லை. அவர் கீழ்வெண்மணி பற்றிய பேச்சுக்காக வேண்டுமானால் அவர் மீது குறை காணலாம், ஆனால் அவர் இது செய்யவில்லை, அது செய்யவில்லை என்பது குறை காண்பது தவறு. அவருக்கு எது முக்கியம் என்று பட்டதோ அதற்காக அவர் போராடி மாற்றத்தை ஏற்படுத்தினால் அது பாராட்டப்பட வேண்டிய விஷயமே. ஒருவரை நீங்கள் தலைவர் என்று ஏற்றுக்கொண்டால் அதற்காக அவரது ஒவ்வொரு செயலுக்கும், செயலின்மைக்கும் justification தேடி அவர் மாசு மறுவற்ற உத்தமர் என்று நிறுவ ஒரு அவசியமும் இல்லை. பெரியாரும் மனிதர்தான், பொது வாழ்வில் தான் தவறு செய்ததே இல்லை என்று அவரே கூட சொல்லமாட்டார். அவரை தலைவராக ஏற்றுக்கொண்ட ஒரே காரணத்துக்காக அவர் அரசியல், ஆன்மிகம், இலக்கியம், தொழில், கல்வி, மருத்துவம், பொறியியல், சட்டம், சமையல், கத்தி சண்டை, குதிரை ஏற்றம் எல்லாவற்றிலும் வல்லுநர் என்று நிறுவ வேண்டியதில்லை. அதை அவரை போன்ற hippocrisy இல்லாத மனிதர் ஒரு நாளும் விரும்ப மாட்டார்.
டோண்டு எழுப்பி இருக்கும் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லுங்கள். அது டோண்டுவுக்கு முக்கியமோ இல்லையோ, பெரியார் தமிழ் நாட்டில் ஒரு positive influence என்று நினைக்கும் என் போன்றவர்களுக்கு முக்கியம்.
//கையில் கடிகாரம் கட்டுவது மணி பார்க்க, அது போல் பூணூல் அணிவதால் என்ன பயன் ஆத்மா?//
பூணூல் அணிபவர்களுக்கு அது பயனாக இருக்கிறது. அவ்வளவுதான். கலைஞர் மஞ்சள்துண்டு போடுவதால் என்ன பயனிருக்கிறது? கிழித்தெறியுங்கள் என்று அவரிடம் சொல்லுங்களேன். அது என்ன மணி காட்டுகிறதா? நீங்கள் கருப்புச்சட்டை போடுவதால் என்ன பயனிருக்கிறது? அது என்ன மணி காட்டுகிறதா?
ஆத்மா தொல்காப்பியர் கால்த்துக்கும் போகலாம். அந்த சாதி போடுது இந்த சாதி போடுது எனலாம். ஆனால், மக்கள் பார்வை என்ன?
பூனூல் என்றால் பார்ப்பனன். பார்ப்பனன் என்றால் பூனூல்.
பொதுமக்கள் பார்வையில் - பெரியார் பார்வையில் என்று சொல்லி தப்பிக்காதீர்கள்@- இது ஒரு சாதி அடையாளமே. மற்றவர்கள் எப்போதாவது போடுவார்கள். தலித்துகள் கூட போடுவார்கள் எனக்கேள்விப்பட்டதுண்டு.
எனினும், பார்ப்பனரைத்தவிர மற்ற் எவருக்கும் இது ஒரு சாதிச் சின்னமல்ல.
நீங்கள் எவ்வளவுதான் இல்லை என்று மறுத்து மந்திரங்களைக் காட்டினாலும், இது ஒரு சாதிச்சின்னமே. உங்களுள் எவர் இன்று அதை புனித எண்ணத்துடன் செய்கிறார்? எல்லாரும், நாம் பிராமண்ர் என்பத்ற்காகவே செய்யப்படுதல். பெற்றோர் - ‘நாமெல்லாரும் பிராமணகுலம் குழந்தாய்!’ என்று சொல்லித்தான் அச்சடங்குக்கு இழுத்துச்செல்கிறார்கள். விளம்பரங்கள் கொடுக்கப்படுகின்றன. பிராமணாள், அவாளோட குழந்தகளுக்கெல்லாம் உப்நயனம் பண்ணுங்கோ.’ வேறெந்த சாதிசனம் இப்படி செய்கிறது/ ‘நான் பிராமணன். எனவே நான் போட்டுக்கொள்ளவேண்டும்’ என்றுதான் குழந்தை நினக்கிறது. பிஞ்சு நெஞ்சில் ஜாதியுணர்வை வித்தாக்க இச்சடங்கை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்!
புனூல், பஞசகட்சம், ம்டிசார்புட்வை -இவைய்ல்லாம் tamil brahmin identies. These are not fashion or religious statements. These are just political or socially agressive statements like burga of muslims. பெரும் பக்தியென்றெல்லாம் இலலை. பிராமணத்துவம் என்ற ஒன்றை இன்று கடைபிடிக்க இயலாத போது எதற்கு இந்த வெளிவேசங்கள்?
நாமத்தையும் திருனீற்றையும் யாரும் சாதிச்சின்னங்களாகப் பார்ப்பதில்லை.
நாமம் மட்டும் அபபடியாகி விட்டது என்று சொல்லலாம். அதற்கு, இந்த ஐய்ங்கார் என்னும் பார்ப்பனேரே காரணம். My blog will bear a separte post on this subject soon.
சாமிக்கு போடுவதும், சாமியைப் பிராமணன் உருவத்தில் காட்டுவத்ற்கே. சாமியும் பஞ்சக்ட்சம்தான் கட்டுவார். அலமேலு மங்காவும் மடிசார்தான்.
எப்படியெல்லாம் செய்ய ஆசைப்பட்டீர்களே, அப்படியெல்லாம் செய்து கொண்டீர்கள். ஜாதியை வளர்க்க மதம் தேவைப்படுகிறது.
மற்றவர்கள் பார்த்துகொண்டிருப்பார்கள். பெரியார் மாதிரி ஒருவன் வந்தால், சபாஷ் ! எனச்சொல்லி ஊக்குவிப்பார்கள்.
தமிழகத்தில் பார்ப்பனச்த்துவேசத்திற்கு பார்ப்பன்ர்களின், ‘நாங்கள் தனி’ என்ற வாழ்க்கையே காரணம் என்றால் மிகையில்லை.
மக்களின் உணர்வுகளைப்புரிய மறுத்து, ’பெரியாரே காரணம்’ என நொண்டிச்சாக்கு சொல்லி, ஜாதீயம் வளர்ப்பதற்கு இந்து மதச்சடங்குகளை தனக்காக ஒதுக்கிக் கொண்டீர்கள். பூனுல் ஒன்றுமட்டுமல்ல. வேறு நிறையவுண்டு. அதை ஓவியா ஒவ்வொன்றாக போடனும் அவர் பதிவில்.
இப்பொழுது கூட இங்கு ‘ஜாதியைக்காப்பாற்ற’ தொல்காப்பியர் காலம் உதவுமா எனப் பார்க்கிறீகள். இல்லையா?
பெரியார் போய்விட்டார். ஓவியாவும் ஒருநாள் மண்ணைவிட்டுப் போய்விடுவார். பெரியார் என்ற பெயரே காணாமல் போய்விடும்.
பிராமண வேஷம் போட்டுக்கொண்டு, ‘எந்த கொம்பனாலும் எங்களைத் தடுக்க முடியாது!’ என்று கொக்கரிப்பு கேட்டுக்கொண்டே இருக்கும். பார்ப்பனத்துவேசமும் இருக்கும் ஆனால் - ஏறி, இறங்கி - எதிராளிகள் ஒருவர் வெல்ல, மற்றவர் தோற்க, அது, மாறி, மாறி வரும்.
தமிழர்களில் தலையெழுத்து இது!
இப்படிக்கு
நெருஞ்சி முள்.
தமிழ் ஓவியா,
// கையில் கடிகாரம் கட்டுவது மணி பார்க்க, அது போல் பூணூல் அணிவதால் என்ன பயன் ஆத்மா?
எதுக்கும் பயனில்லாத பூணூலை எல்லோருக்கும் போடுவதை விட, 3 சதவீதம் பேர் போட்டிருக்கும் பூணூளை அறித்தெறிவது சுலபமல்லவா?//
தலையில் முடி இருப்பதால் கூடத்தான் ஒரு பயனும் இல்லை. எல்லாரும் மொட்டை அடித்துகொண்டு அலைய வேண்டுமா? பெரியார் க்ளீன் ஷேவ் செய்து கொள்ளவில்லையே என்று குறைப்படுவது போல இருக்கிறது.
நெருஞ்சிமுள்,
ஒரு தலைமுறைக்கு முன்னால் வரை எந்த பிராம்மணரும் நடனம் கற்றுக் கொண்டது கிடையாது. பாட்டு கற்றுகொண்டது கிடையாது. அவர்கள் வேலை அது அல்ல.
ஆனால் ஒரு காலத்தில் எல்லோரும் பாட்டையும், நடனத்தையும் விட்டபோது காப்பாற்றவென்று தங்களில் பலரை பாட்டு கற்றுக்கொள்ளவும் நடனம் கற்றுக்கொள்ளவும் அனுப்பினார்கள்.
நடனம் ஆடக்கற்றுக் கொள்ள முனையும்போது பிராம்மணர்கள் மத்தியிலேயே எவ்வளவு எதிர்ப்பு இருந்தது என்பதை சற்று வரலாற்றை புரட்டி பார்த்தால் தெரியும். பரதநாட்டியத்தை கூத்தியாள் கூத்து என்று விமர்சித்தார்கள் பிராம்மணர்களில் ஒரு சிலர்.
ஆனால் இன்று பரதநாட்டியம் கர்னாடக இசை என்றாலே பிராம்மணர்கள் என்ற அளவுக்கு ஆகியதற்கு பிராம்மணர்கள் காரணமல்ல. பிராம்மணரல்லாதவர்கள் அதிலிருந்து விலகியதுதான் காரணம்.
இன்று பொதுமக்கள் அப்படி நினைக்கிறார்கள் என்பதால், பரதநாட்டியமும் கர்னாடக சங்கீதமும் பிராம்மண அடையாளங்களாகவும், சாதித்திமிராகவும் தமிழ் ஓவியா போன்றோரால் எழுதப்படும். அது எந்த அளவுக்கு சரியானது?
பிராம்மணர்கள் மட்டுமே போட்டுக்கொண்டிருப்பதால், பூணூல் பிராம்மணர்களது சாதி அடையாளம் அல்ல. பிராம்மணர்கள் காப்பாற்றியதால், கர்னாடக சங்கீதமும் பரதநாட்டியமும் சாதி அடையாளம் அல்ல.
இவை அனைத்து இந்துக்களுக்கும் பொது. இந்திய பாரம்பரிய கலைகளும், இந்திய சடங்குகளும் வழக்கங்களும் அனைத்து இந்துக்களுக்கும் பொது. அதனை மீட்டெடுக்க வேண்டியது அனைத்து இந்துக்களின் கடமை.
பஞ்சகச்சமும் அப்படித்தான். பஞ்சகச்சம் போட்டுத்தான் சத்திரியர்கள் உடைவாளை வைத்துக்கொண்டு நிற்கிறார்கள் எல்லா சிலைகளிலும். வைசியர்களும் அப்படியே. ஆனால், வசதிக்காக நாலுமுழம் அப்படியே கட்டுவது எல்லா சாதியினரும், பிராம்மணர் உட்பட அணிவது வழக்கம்தான். ஏன் குடுமி கூட சற்று பின்னே சென்றீர்கள் என்றால் எல்லோருமே குடுமிதான் வைத்திருந்தார்கள். புரோகிதர்கள் தங்களது சடங்குகளை காப்பாற்றவென்றும் தாங்கள் சடங்குகளை செய்யும்போது சொல்லிய முறைபடி செய்யவேண்டுமே என்பதற்காக குடுமியையும் பஞ்சகச்சத்தையும் பூணூலையும் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். பெண்கள் கூட இன்னமும் புடவைதான் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். முறைப்படி தினசரி வீட்டு பூஜை செய்வது அவர்கள்தான். அந்த முறையில் செய்யவேண்டுமே என்பதற்காக புடவை கட்டுகிறார்கள்.
நான் பிராம்மணன் அல்ல. நான் ஆச்சாரியும் அல்ல. இந்த இரண்டு பேர்கள் மட்டுமே இன்றும் தமிழ்நாட்டில் பூணூல் அணிகிறார்கள். ஆனால் உண்மையில் இது அனைத்து இந்துக்களுக்கும் பொது. இவர்கள்தான் இன்னமும் விடாப்பிடியாக இருக்கிறார்கள் என்பதால் அது அவர்கள் சொத்து ஆகியும் விடாது, அவர்களது சாதிதிமிராகவும் ஆகிவிடாது.
நம் கலைகளையும் பழக்க வழக்கங்களையும் காப்பாற்றும் ஆச்சாரிகளுக்கும் பிராம்மணர்களுக்கும் நம் நன்றி உரித்தாகட்டும். அவர்களை வெறுப்பின் உச்சத்துக்கு தள்ளவேண்டாம்.
@ஆத்மா
எங்கே பிராமணன் பதிவு ஒன்றில் நான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளேன்:
“அசோக் தேடுவது வர்ணரீதியான பிராமணனை. ஆனால் தறசமயம் இருப்பவர்களோ சாதி ரீதியான பிராமணர்கள் என்கிறார் சோ அவர்கள். பிறகு நான்கு வர்ணங்களையும் அவர் ஒரிஜினலாக கொடுத்த விளக்கங்கள் பிரகாரம் வர்ணிக்கிறார். அவற்றில் பிராமணன் என்பவன் பொது நலனுக்காக பிரும்ம ஞானத்தை நோக்கி செல்பவன். க்ஷத்திரியன் தனது வலிமையால் மற்றவர்களை காப்பவன். வைசியன் பொருள்களில் வணிகம் செய்து செயல் புரிபவன். சூத்திரன் என்பவன் பிறர் துன்பம் காண சகிக்காமல் அவர்களுக்கு சேவை செய்பவன். ஆக, பழைய முறையில் வகுக்கப்பட்ட வர்ணங்கள் ஒன்றும் அப்படியே நிற்கவில்லை. காலத்தின் கட்டாயத்தில் அவை மாறி விட்டன. ஒன்று வேண்டுமானால் கூறலாம். இப்போது இருக்கும் நிலையில் எல்லோருமே ஒரு விதத்தில் வைசியர்களே. பிராமணன் புரோகிதம் செய்து பொருள் ஈட்டுகிறான். போர் வீரர்களும் தங்கள் சேவைகளை விற்கிறார்கள். சூத்திரர்களும் அவ்வாறே. ஆக, எல்லோருமே வைசியர்கள் ஆகிவிட்டார்கள்.
சாதி என்பது பிறப்பால் மட்டுமே என ஆகிவிட்ட பிறகு. சாதியை மாற்றிக் கொள்ள இயலாதுதான். ஆனால் வர்ண ரீதியாக மாறவியலும் என்பது பல முறை பார்க்கப்பட்டு விட்டது. இருப்பினும் பிராமண சாதி மட்டும் அதே வர்ணப் பெயரில் அறியப்படுவதற்கான காரணமே அவர்களில் பலர் இன்னும் பழைய கொள்கைகளை ஓரளவுக்கு கடைபிடிப்பதே ஆகும்”.
அவர்களும் எல்லாவற்றையும் விடவேண்டும் என வாலறுன்த நரி ரேஞ்சில் மற்றவர்கள் கூறுவதை பொருட்படுத்துவதற்கில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இப்போது சொந்த வேலையாக வெளியே செல்கிறேன். திரும்ப சற்று நேரம் ஆகும். வந்ததும் சேர்ந்திருக்கும் பின்னூட்டங்களை மட்டுறுத்துகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நான் பிராம்மணன் அல்ல. நான் ஆச்சாரியும் அல்ல. இந்த இரண்டு பேர்கள் மட்டுமே இன்றும் தமிழ்நாட்டில் பூணூல் அணிகிறார்கள். //
பூணூல் போடும் பார்ப்பானும், பூணூல் போடும் ஆசாரியும் இந்து மதத்தில் சமத்தகுதி உடையவர்களா?
கோயில் கருவறைக்குள் பூணூல் போடும் பார்ப்பான்தான் போக முடியுமே தவிர, பூணூல் போட்ட ஆசாரி செல்ல முடிவதில்லை!
பார்ப்பான் பூணூலுக்கும் ஆசாரி பூணூலுக்கும் இதுதான் வேறுபாடு ஆத்மா?
இது குறித்து மனுதர்ம சாத்திரம் கூறுவது என்ன என்பதையும் பார்ப்போம் ஆத்மா
"
பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும், க்ஷத்திரியனுக்கு க்ஷணப்ப நாரினாலும், வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகப் பூணூல் தரிக்க வேண்டியது என்றுதான் கூறப்பட்டுள்ளதே தவிர, சூத்திரர்களுக்குச் சொல்லப்படவில்லை
-----------மனுதர்ம சாத்திரம் அத்தியாயம் 2; சுலோகம் 44
ஆத்மா அவர்களுக்கு இன்னொன்றையும் சுட்டிக் காட்டினால் பளிச் சென்று புரியும். இதோ அந்தத் தகவல்;
இராஜகோபாலாச்சாரி முதலமைச்சராக இருந்த போது
" தங்கம் மற்றும் தச்சு வேலை செய்யும் சாதியினர் தங்கள் பெயருக்குப் பின்னால் ``ஆச்சாரியார்'' என்று போடக் கூடாது ``ஆசாரி'' என்றே போட வேண்டும்(காரணம் ``ஆச்சாரியார்'' என்பது பார்ப்பன சாதிப்பிரிவு) என்று உத்திரவு பிறப்பித்தார்"
ஆக
பூணூல் என்பது அனைத்து இந்துக்களுக்கும் பொது என்பது மோசடி ஆத்மா?
பூணூல் பற்றி ஆத்மா அவர்களின் தவறான பார்வை நீங்க மேலும் ஒரு தகவல்:-
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்- நக்கீரன் இதழில் "இந்துமதம் எங்கே போகிறது?" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் பூணூல் பற்றி குறிப்பிடும் பகுதி இதோ
பிராமணர்கள் இங்கே வந்தபோது அவர்கள் அணிந்திருந்த நூல்.. அதாவது பூண்டிருந்த நூல். அதாவது பூணூல் (இப்போது பெயர்க்காரணம் புரிகிறதா).. பார்த்து ஆச்சரியப்பட்டார்கள் இங்கிருந்தவர்கள் என்ன இது? என கேட்க.. அதற்கு பிராமணர்கள் பதில் சொன்னார்கள் 'சமூகத்தில் நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்பதற்காக அணிவிக்கப் பட்டிருக்கும் அந்தஸ்து’..
ஆத்மா நீங்கள் பூணூலுக்கு வக்காலத்து வாங்குவது இருக்கட்டும் பூணூல் அணிவது பற்றி பார்ப்பனர்கள் கூறிய இக்கருத்துக்கு எதுவும் விளக்கம் தேவையில்லையே.
ஆக 'பார்ப்பனர்கள் தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளும் ஒரு அடையாளம் தான் இந்த பூணூல்.
ஆத்மா இனியும் ஏமாறமாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்......
நன்றி
// பிராம்மணர்கள் காப்பாற்றியதால், கர்னாடக சங்கீதமும் பரதநாட்டியமும் சாதி அடையாளம் அல்ல.
இவை அனைத்து இந்துக்களுக்கும் பொது. இந்திய பாரம்பரிய கலைகளும், இந்திய சடங்குகளும் வழக்கங்களும் அனைத்து இந்துக்களுக்கும் பொது. அதனை மீட்டெடுக்க வேண்டியது அனைத்து இந்துக்களின் கடமை. //
ஆத்மா, சிறு திருத்தம். பாரத நாட்டியமும், கர்நாடக சங்கீதமும் அனைத்து இந்தியர்களின் பாரம்பரிய பெருமைகள். இந்துகளுடையது மட்டும் இல்லை. (அப்புறம் ஷேக் சின்ன மௌலாநா கோபித்துக் கொள்ளப் போகிறார்!)
..பூணூல் அணிபவர்களுக்கு அது பயனாக இருக்கிறது..//
ஆத்மா!
அது என்ன பயன்?
நெருஞ்சி முள்
//தலையில் முடி இருப்பதால் கூடத்தான் ஒரு பயனும் இல்லை. எல்லாரும் மொட்டை அடித்துகொண்டு அலைய வேண்டுமா? பெரியார் க்ளீன் ஷேவ் செய்து கொள்ளவில்லையே என்று குறைப்படுவது போல இருக்கிறது//
இதுவா பதில்?
நான், என் வலைப்பூவில் எழுதியது போல, பூனுலை வைத்து என்ன செய்வது என்பது உங்கள் விருப்பம். நான் மற்றவர் சொல்வதுபோல் அறுத்தெரிய்ங்கள் எனச் சொல்ல மாட்டேன். My last sentence in my blog leaves it your education and conscience.
அதனால் என்ன பயன்? என்பதே கேள்வி. உங்களைப் பிராமணர் என மற்றவர் அடையாளங்காட்ட உதவுவதைத் தவிர வேறு என்ன பயன்?
மேலும் எல்லோரும் பிராமணர்கள் என்று வாழ்ந்தா வருகிறீர்கள்? பின் ஏன் அந்த அடையாளம்? மற்றும் பஞ்சகட்சம், மடிசார். இவைகளும் மத வழி வந்தவை என நாம் எடுக்கும்போது! Many things, which are orignally religions, have come down to be morphed into cultural and casteists identieies of Brahmins.
ஆர்.வி! You astonish me with your ignorance about hair in bodies. Astonishment increases when I know you are a science student.
தலைமயிர் மட்டுமல்ல, உடலில் உள்ள ஒவ்வொரு பாகமும் ஒரு பயனைத்தரவே படைக்கப்பட்டிருக்கிறது. தலைமயிரும் அப்படியே. ஒரு அடிப்படை மனித உயிரியல் நூல் இதை உங்களுக்குச் சொல்லும்.
பூனுலால் என்ன பயன்? அதை ஏன் போடுகிறீர்கள்?
மத சம்பந்தமானது. எனவே என்ன ப்யன் எனக்கேட்பது அபத்தம். சரி. அந்த மதசம்பந்தத்தை எல்லாரும் விட்டுவிட்டோம் நாங்கள் விடாப்ப்டியாகப் பிடித்துகொண்டோம் என்கிறார் ஆத்மா.
ஏன் பிடித்துக்கொண்டீர்கள்?
தொண்டு இரரகவன் சொல்வது - ’உங்களுக்கு வேண்டுமென்றால் போட்டுக்கொள்ளுங்கள்’ என்பதெல்லாம் குழந்தைத்தனமான பேச்சாகும். அது பதில அல்ல.
ஒருவர் ஒன்றைச் செய்ய மற்றவர் இது சரியா எனக் கேட்க, நீ வேண்டுமானால் அதைச் செய், நான் கேட்கமாட்டேன் எனபது விதண்டாவாதம்.
நெருஞ்சி முள்
@Nerunji Mul
Please refrain from poking your nose in our habits and customs. You surely have better things to do.
Regards,
Dondu N. Raghavan
நான் அனைவரும் பூணூல் போட்டிருந்தார்கள் என்று சொல்கிறேன். நீங்கள் என்னடாவென்றால் இப்போது போட்டிருக்கும் பிராம்மணர்கள் சொல்வதே வேத வாக்கு என்கிறீர்கள். தாத்தாச்சாரி 40000 வருடங்களுக்கு முன்னால் சென்று பிராம்மணர்கள் உள்ளே வந்ததையும் அவர்களும் மற்றவர்களும் பேசியதை கேட்டு சாட்சியாக இருந்தாராமா? யாரிடம் காது குத்துகிறார்?
அக்னி ஹோத்ரம் தாத்தாவுக்கு நீங்கள் மட்டுமே இவ்வளவு மரியாதை கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு பிராம்மணர் சொன்னதால் அது உண்மையாகிவிடாது. அது உங்களுக்கு தேவை எனப்தால்தான் அதனை பிடித்துகொண்டு தொங்குகிறீர்கள். அந்த புத்தகமே சுத்த உளறல். அது அந்தாள் பெயரில் திராவிட கழகமே எழுதி வெளியிட்டது என்று ஒரு புரளி உண்டு.
பிராம்மணர்களே எங்களுக்கு மட்டுமே பூணூலுக்கு உரிமை உண்டு என்று சொன்னாலும், பரதநாட்டியத்துக்கும் கர்னாடக சங்கீதத்துக்கும் உரிமை உண்டு என்று சொன்னாலும் அது உண்மை ஆகிவிடாது.
மஞ்சள் துண்டையும் கருப்பு சட்டையையும் பெரியார் சிலைக்கு நீங்கள் போடும் மாலையையும் கிழித்தெறியும்போது பூணூலை பற்றி பேசுங்கள். முடி தேவை என்றால் மேலே போடும் உடை அனைத்தும் இயற்கை படைக்காதது தானே? அதனை ஏன் போடுகிறிர்கள்? பெரியார் மாதிரி அம்மணமாக அலையவேண்டியதுதானே?
நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்க உங்களுக்கு உரிமை இல்லை.
நெருஞ்சி முள்,
பல முறை சொல்லிவிட்டேன் - அடுத்தவர் மேல் எந்த tangible விளைவும் இல்லாதபோது தனி மனித சுதந்திரத்தில் குறுக்கிடுவது ஏற்க முடியாத விஷயம் என்று. பூணூல் போடுவதால் எந்த tangible விளைவும் இல்லை, அதனால் அதில் தலையிடும் உரிமை யாருக்கும் இல்லை என்று விளக்கிவிட்டேன். வாதம் செய்வது என்றால் அடுத்தவர் சொல்லும் கருத்துக்கு மாற்று கருத்து சொல்ல வேண்டும். நீங்கள் மாற்று கருத்து ஒன்றும் சொல்லாமல் பூணூல் அடுத்தவர்களை இழிவுபடுத்த போடப்படுகிறது என்று சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். பட்டுக்கோட்டைக்கு என்ன வழி என்றால் கொட்டைப் பாக்கு எட்டணா விலை என்றானாம் அந்த மாதிரி இருக்கிறது. ஏன் அடுத்தவர் நேரத்தை வீணடிக்கிறீர்கள்? இதில் இங்கே வருபவர்கள் உங்கள் தளத்துக்கு போய் கடைசி வரியை தேடி படிக்க வேண்டுமாம். அந்த கடைசி வரி - accept or not - நீங்கள் உண்மையிலே சொல்வதாக இருந்தால் இந்த வெட்டி வாதம் ஏன்?
அப்புறம் முடியின் பயன் வேறு? உங்கள் தாடி எவ்வளவு நீளம்? எத்தனை நாளுக்கு ஒரு முறை ஷேவ் செய்கிறீர்கள்? தாடி இல்லை என்றால் பயனுள்ள தாடியை ஏன் எடுத்து விட்டீர்கள்? நீங்கள் பெண் என்றால் உங்கள் கணவர்/அப்பா/அண்ணன்/தம்பியின் தாடி எவ்வளவு நீளம்? வழுக்கை தலையர்கள் எந்த விதத்தில் கஷ்டப்படுகிறார்கள்? சும்மா உதார் உட்டுக்கிட்டு!
அய்யா/அம்மா, பேச வேண்டும் என்றால் பூணூல் எந்த விதத்தில் அடுத்தவர்களை tangible ஆக பாதிக்கிறது என்று விளக்குங்கள்; தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவது எந்த விதத்தில் சரி ஆகும் என்று சொல்லுங்கள்; அப்படி பூணூல் என்ற அடுத்தவர்களை tangible ஆக பாதிக்காத தனி மனித சுதந்திரத்தில் உங்களுக்கு இழிவாக படுகிறது என்ற intangible காரணத்துக்காக நீங்கள் தலையிடுவது சரி என்றால் வேட்டி, மேலாடை, தலைமுடி, தலைப்பாகை, சிலுவை, தோடு, குல்லா, போன்ற ஆயிரக்கணக்கான தனி மனித விஷயங்களில் atutthavarkaL தலையிடுவது ஏன் தவறு என்று விளக்குங்கள்; அதில் எல்லாம் தலையிடக்கூடாது என்றால் பூணூல் மட்டும் ஏன் விதிவிலக்கு என்று சொல்லுங்கள். இல்லாவிட்டால் வாயை மூடிக்கொண்டு போய்விடுங்கள். கேனத்தனமான வாதங்களுக்கு எத்தனை முறை பொறுமையாக பதில் சொல்ல முடியும்?
தமிழ் ஓவியா, பெரியார்-தலித் கேள்விகளைப் பற்றி வாயையே திறக்க மாட்டேன் என்கிறீர்களே?
என்ன பயன்?
http://en.wikipedia.org/wiki/Upanayanam
Nothing is constant but change என்பார்கள். Old order changeth yielding place to new என்பதும் டோண்டுக்குத் தெரிந்திருக்கும். 'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழவல - காலவகையினானே' எனும் நன்னூல் சூத்திரம் கண்ணில் பட்டிருக்கலாம்.
ஆனால், டோண்டுவின் சநாதன தர்மம் இருக்கிறதே, அது மாறாதது! உலகமே மாறினாலும் உன்மத்தம் பிடித்த பார்ப்பன மதம் மாறாதாம். அதன் சடங்குகள் மாறாதாம். ஆச்சார அனுஷ்டானங்கள் மாறாதாம். அப்படி, இயற்கைக்கு மாறாத ஜன்மாக்கள்.
எழுதிவைத்து, ஏற்றிவைத்த வருண ஜாதி ஏற்றத் தாழ்வுகளை - செய்தவனே நினைத்தாலும்கூட மாற்றமுடியாது எனவும் கூறும் இறுமாப்பு கொண்டவர்கள். அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த பிச்சு எதற்காகப் பெரியார் திடலுக்கு வருகிறது? என்ன உள்நோக்கம் என்ன malafide intention?
டோண்டு இந்தியை ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா? அதைச் சொல்லட்டுமே! அபேதவாதம் எழுதிய ஆச்சாரியார், பணக்காரர்களைப் பாதுகாக்க ஸ்சுதந்த்ராக் கட்சியைத் தொடங்கியது பற்றி ஆராய்ச்சியைக் செய்து முடித்துவிட்டு இங்கே வரலாமே! சும்மா, ஒரு யோசனைதான்!
ஆதித்திராவிடத்த பால்காரரை பார்ப்பனச் சேரிக்கு உள்ளே வரக்கூடாது எனத் தடுத்த அக்கிர(ம)காரத்தைப் பற்றி ஆராயலாமே! பார்ப்பனச் சேரியில் இருந்த Post Office இல் ஆதித்திராவிடப் போஸ்ட் மாஸ்டர் மாறுதலில் வந்தபோது அவரை join பண்ணவிடாமல் பார்ப்பனர்கள் சிண்டை விடைத்துக்கொண்டு பூணூலைப் புடைத்துக் கொண்டு கூச்சல் கிளப்பிப் போலீஸ் வரைக்கும் போனதை ஆராய்ச்சி பண்ணலாமே! ஹி... ஹி.... என்னுடன் படித்துக்கொண்டு இருக்கும் ஆ.தி.மாணவன் இதைக்கூறுகிறான்.
காந்தியாரின் வார்தா கல்வித்திட்டம் வந்தால், நான் என் பூணூலை அறுத்துப் போடுவேன் என்று சபதம் கூறிய திருச்சி, தேசியக் கல்லூரி சாரநாத அய்யங்கார் பற்றி ஆராய்ச்சி செய்யலாமே!
இடம் கேட்டுவந்த ஆதிதிராவிட மாணவர்களை, அம்பேத்கரிடம் போய்க் கேள் என்று விரட்டிய கல்லூரிப் பிரின்சிபால் பற்றி ஆராய்ச்சி செய்யலாமே!
ஜாதிக் கொடுமைகள் செய்வதைப்போல், முள்மரத்தின் கிளைகள்கூட நம்மை உறுத்துகின்றன; கிளைகளை வெட்டுகிறோம். வேறு கிளையும் அதே வேளையைச் செய்கிறது. அதையும் வெட்டுகிறோம். இப்படியே செய்து கொண்டிருப்பதைவிட மரத்தையே வெட்டிவிட்டால் - முள்குத்துவது என்கிற கொடுமையிலிருந்து தப்பிக்கலாம் அல்லவா? அப்படி மரத்தை வெட்டும் காரியம்தான் ஆரியத்தை எதிர்ப்பது. இதை விளங்கிக் கொள்ளாத டோண்டு - அல்லது விளங்காததுபோல நடிக்கும் டோண்டு - ஏன் அந்தக் கிளையை வெட்டவில்லை எனக் கேட்பதில் ஞானம் இருக்கிறதா? சூன்யம் தெரிகிறதா?
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பண்டியன் கூறினார் - வெற்றிலைப் பாக்குக் கடைக்காரன், மளிகைக் கடைக்காரன், லாரி, வட்டிக் கடைக்காரர்கள் எல்லோருமே சுரண்டுகிறார்கள். டிவிஎஸ் முதலாளி நிறைய சுரண்டுகிறார்!
எல்லோரும் சுரண்டுகிறார்கள். ஆனால், உச்சமுதலாளி - சுரண்டலுக்கே கோபுரமாக இருந்துவரும் ஏகபோக முதலாளியைத் தாக்கினால் மற்றதெல்லாம் சரியும். ஜாதியில் எது ஏகபோகமாக இருக்கின்றதோ அதனைத் தாக்குவது ஏனோ புரியவில்லை, என்றார்.
அவரிடம் போய் மோதிவிட்டுப் பிறகு திராவிடக் கட்சிகளிடம் வராமே, கோண்டு! எப்படி வசதி?
டோண்டுவும் நானும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் - சட்டப்படி. இந்த நாட்டுச் சட்டப்படி. இந்த நாட்டுச் சட்டப்படி எவரெல்லாம் யூத, கிறித்துவ, பார்சி, முசுலிம் அல்லவோ அவரெல்லாம் இந்துதான்! விஸ்வ ஹிந்து பரிஷத்தில் அதனால்தான் ஜைன டொகாடியா இருக்கிறார், சீக்கிய மாஸ்டர்களும் இருக்கின்றனர். ஒரே (ஹிந்து) மதத்தில் ஏனய்யா வேறுபாடு? டோண்டுக்கு ஏன் பூணூல் எனக் கேட்டால், அவர்கள் ஏன் ஆண்குறியின் முன்தோலை அகற்றுகிறார்கள்? என என்னை (ஹிந்துவை)க் கேட்கிறது என்ன ஞாயம்?
ஏன் Circumcise என்கிறாய் என ஆரியர்களின் பங்காளிகள் - ஆரியர்களைப் போலவே நாடற்ற இனமான - யூதர்களைக் கேட்பது தானே ! இந்தக் கேள்வியைக் கேட்பதன் மூலம் டோண்டுவின் ஆர்எஸ்எஸ் வெறி அடையாளம் காட்டிக் கொண்டு வெளியே குதித்து விட்டது.
வைக்கத்தில் பெரியார் நடத்திய போராட்டம் கோயில் நுழைவுக்கல்ல; தெருக்களில் நடக்கும் உரிமைக்காக ! சுய மரியாதை இயக்கம் தொடங்கிய பிறகு ஈரோடு, திருவண்ணாமலை, திருச்சி, மாயூரம், சீர்காழி எனப் பலப்பல ஊர்களிலும் கோயில்களில் தாழ்த்தப்பட்டோரை அனுமதிக்க வேண்டும் எனப் போராடியவர் பெரியார். வரலாறு படிக்காமல் டோண்டு எதையாவது பேத்திக்கொண்டிருக்கக்கூடாது. திராவிடர் கழகம் எனப் பெயர் வைத்தபிறகு 1945இல் தீர்மானம் போட்டுப் போராடியதன் விளைவாகத்தான் 1946இல் திருவாரூர், ராமேசுவரம் கோயில்கள் திறந்துவிடப்பட்டன என்பது வரலாறு.
ஆலயப் பிரவேசக்கூட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்ததற்காக ஆச்சாரியாருக்குப் பாராட்டு விழா நடத்தியபோது இந்தச் சாதனைக்குக் காரணம் சு.ம.இயக்கம் என்று அவர் பேசியது சுதேசமித்திரன் ஏட்டிலேயே 1937இல் வந்தது என்பதை விக்டரி ஹவுஸ் ஆவணங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
வேணுங்கிற டிசர்ட் போட்டுக்கொண்டு கர்ப்பக்கிருகம் போக முடியாது. பூணூலைப் போட்டுக் கொண்டால் போகமுடிகிறதே! எப்படி? இது Discrimination இல்லியா?
பொறியாளர் பா.வே.மாணிக்க நாயக்கர் அதே மாதிரி அறியப்பட்டார். ஜாதி வாலை அவர் விட்டதில்லை - ராஜகோபலாச்சாரிபோல! ராஜகோபாலன் என்று எழுதினால், எப்படி? அப்படித்தான் மாணிக்க நாயக்கரும்! ஆனால், 1929இல் மாநாடு கூட்டித் தீர்மானம் போட்டு ஜாதி வாலை வெட்டிவிட்ட பெரியாரை, இன்னமும் நாயக்கர் சேர்த்து, எழுதுவது பச்சைப் பார்ப்பனக் கொழுப்புதானே?
திருமாவளவனை - திருமால்வளவன் என்றெழுதி, உம் பார்ப்பன விஷமத்தை ஆரம்பிச்சுட்டீரே! கில்லாடிதான் நீர்!
--------------------------------
மானா மூள்ள டமிலன் அவர்களே,
நீங்கள் பேசுவது 1929, 37, 40, 45 என்ற கணக்கில் இருக்கிறது.
இன்று தேதி 9 ஆகஸ்ட் 2009. 45 க்குப்பிறகு கங்கையிலும் காவேரியிலும் பல முறை வெள்ளம் கரை புரண்டு ஓடிவிட்டது. இன்னும் நீங்கள் மட்டும் பார்ப்பானர்களைத் திட்டுவதில் என்ன பயன் ?
பயன் ஒன்றும் இல்லாத காரியத்தைச் செய்வது சுய இன்பம் கொள்வது போலத்தான்.
தமிழ் ஓவியா, மானமுள்ள தமிழன், நெருஞ்சி முள் என்று எழுதுபவர்கள் திரும்பத்திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நான் எழுதிய எதனையும் படித்தும் பார்ப்பதில்லை, சிந்தித்தும் பார்ப்பதில்லை. சற்றேனும் வரலாற்றையும் இந்து பாரம்பரியத்தை பற்றியும் புரிந்து வைத்திருந்தார்கள் என்றால், அவர்களது கேள்விகளுக்கே பொருளிருக்காது.
1) பூணூல் சாதித்திமிர் காட்ட என்று சொன்னால், ஏன் புரோகிதர்கள் அனைத்து மக்களுக்கும் இந்து சடங்குகளின் போது பூணூல் போட்டுவிடுகிறார்கள்?
2) மற்ற இந்துக்கள் இந்திய பாரம்பரிய கலைகளை பராமரிக்காததாலும், பிராம்மணர்கள் பராமரிப்பதாலும், பரதநாட்டியமும், கர்னாடக சங்கீதமும் பிராம்மணர்களின் சாதித்திமிர், அல்லது சாதி அடையாளம் என்று ஆகிவிடுமா?
3) பிராம்மணர்களும் ஆச்சாரிகளும் மட்டுமே பூணூல் இன்று போடுவதால், பிராம்மணர்கள் ஆச்சாரிகளின் சாதி அடையாளம் என்று ஆகிவிடுமா?
4) பூணூல், கர்னாடக சங்கீதம், பரதநாட்டியம் எல்லாம் பிராம்மணர்களின் சொத்து அதில் மற்றவர்களுக்கு என்னவேலை என்று பிராம்மணர்கள் சொன்னாலும், கர்னாடக சங்கீதம், பரதநாட்டியம் ஆகியவை அவர்களின் சொத்து ஆகிவிடுமா?
பூணூலை கழற்றி வைப்பதும், கர்னாடக சங்கீதத்தையும் பரதநாட்டியத்தையும் இன்ன பிற இந்திய பாரம்பரிய கலைகளையும் உதாசீனம் செய்வது உங்கள் உரிமை. ஆனால், இந்து பாரம்பரியத்தை நான் பின்பற்றுவேன் என்று பின்பற்றுபவர்களை தடுப்பது அத்துமீறல். அது மற்றவர்களின் உரிமையில் தலையிடுவது.
டோண்டு சார்,
இந்த விஷயத்தில் ராஜாஜியின் மாற்றம் குறித்து ஏதாவது கருத்து?
@ஆர்.வி.
எந்த மாற்றம் குறித்து கேட்கிறீர்கள்? இந்தி எதிர்ப்பு பற்றி என்றால் 1965 ஜனவரி 1965, 25-ஆம் தேதி முதல் ஹிந்தி மட்டும் இந்தியாவின் ஏகபோக ஆட்சிமொழியாக உருவெடுத்தது. நேருவின் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. அதைத்தான் ராஜாஜி எதிர்த்தார். அவர் 1938-ல் ஹிந்தி கற்பிப்பதைத்தான் கொண்டு வந்தார். அதில் கட்டாயம் ஏதும் இல்லை. ஆனால் அப்போது அதையே மூர்க்கமாக எதிர்த்த பெரியார், 1965-ல் கட்டாய ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை கேலி செய்து பழித்தார்.
அதைத்தான் நான் 1965 விடுதலை இதழ்களைலிருந்தே கொண்டுவர எண்ணினேன். அதை நன்கு உணர்ந்த வீரமணியும் அனுமதி மறுத்தார். சீப்பை ஒளித்து கல்யாணத்தை நிறுத்தப் பார்க்கும் முயற்சிதான் அது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
@Purasai Manickam
தமிழ் ஹிந்துவை நான் அதிகம் படிப்பதில்லை. பெரியாரின் மறுபக்கங்கள் மட்டும் படித்து வருகிறேன், அவ்வளவுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
/திருமாவளவனை - திருமால்வளவன் என்றெழுதி, உம் பார்ப்பன விஷமத்தை ஆரம்பிச்சுட்டீரே! கில்லாடிதான் நீர்!//
Whether the writer of the above para knows it or not, and whether the writer of the word, திருமால்வளவன் knows it or not, and whether the politician himself knows it or not, I know that to call the politician திருமால்வளவன் is also correct.
The thirunaamam of the thiruththanthaiyaar of Thiurmaliyisai Alwaar is exactly the name of the politician. The father was an ST; nomadic tribe of Northern Tamilnadu - maybe, the modern Kuravas - who lived in and around the Kanchi.
Since the mischievous parrppanars do not like the alvaar to be born to an ST - here you are correct, Mr Tamizan - the parpanars are so proud that they wont accept that tribe - they changed the story thus:
The alvaar was born to a muniver couple (baargava muniver) and was abandoned at birth because the child looked so ugly (the guruparamabar pirabaavam says it was a piNdam acutally) that the parents threw away the child under a bush and disappeared. The holy duty of picking up the pindam fell to the lucky lot of the tribal man திருமாலவளவன். He took it up eagerly as he had no issue and his wife was delighted to get the baby.
The tribal couple brought the alvaar up till he turned around 20 and took to sanyasam. Rest is history.
Have you seen the mischief played by the paarppanars here. You will know it clearly when you read the alvar. He himself confessed that he was born to ST, did not go to school, knew nothing of anything that an upper caste hindu knows.
But the parppanar wont accept his statement.
Ever since I came to know the story, my respect of Kuravas went up in proportion to the respect of paarppnars which went down.
Paarppana thuvesham is just here.
Tone down your harsh words, though, Mr Tamilan.
Nerunji Mul
(Sorry friends, I have no access to Tamil software right now)
//தமிழ் ஓவியா, மானமுள்ள தமிழன், நெருஞ்சி முள் என்று எழுதுபவர்கள் திரும்பத்திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நான் எழுதிய எதனையும் படித்தும் பார்ப்பதில்லை, சிந்தித்தும் பார்ப்பதில்லை. சற்றேனும் வரலாற்றையும் இந்து பாரம்பரியத்தை பற்றியும் புரிந்து வைத்திருந்தார்கள் என்றால், அவர்களது கேள்விகளுக்கே பொருளிருக்காது.//
ஆத்மா!
நீங்கள் என்னைப்புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் என நான் தாராளமாகச் சொல்லலாம்.
தமிழ்ப் பார்ப்பனர்களையொட்டித்தான் இங்கு பேசப்படுகிறது. பூனூல் அணிவிப்பு (உபநயனம்) எப்படி பிற தமிழர்களால் பார்க்கப்படுகிறது என்பதுதான் இங்கே எடுத்துகொள்ளப்படுகிறது. நீங்கள் அதன் அடிப்படைக்கொள்கைக்குப் போகின்றீர்கள். பீகர்ர் தலித்துகளுக்குப் போகிறீர்கள்.
கொள்கை வேறு..அது எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பது வேறு.
எ-டு. சாதிக்கொள்கை. எவரும் தலித்து என்பவன் தீண்டத்தகாதவன் என்று சொல்லி வருணக்கொள்கை எழுதவில்லை. ஆனால், நடந்தது, நடக்கிறது என்ன? அதைப்போலத்தான் இதுவும்.
பூணுல் தமிழ்நாட்டில், பார்ப்பனரே செய்துகொள்ளும் தனிப்பட்ட சாதிச்சடங்காகவே பார்க்கப்படுகிறது. நீங்கள் ஆசாரி போடுகிறார் என்று சொல்லி மழுப்ப முடியாது. ஆசாரி வேத பண்டிதரை வைத்துப் போட்வில்லை. அவருக்கு அது மதச்சடங்கு அல்ல. ஆனால், உங்களுக்கு மத வழி வந்த பின்னர் சாதிசசடங்காக மாறிய் ஒன்றாகும்.
பிறதமிழர், நீஙகள் உங்களை மற்றாரிடமிருந்து பிரித்துக்கொண்டு, தனிக்கலாச்சாரத்தை உண்டாக்கிக் கொண்டு, வாழ இதைப்போன்ற் சடங்குகளைப் பயன்படுத்திகிறீர்கள் என நினைக்கிறார்கள். இது மதவழி வந்தனால், பிற தமிழர் எனச் சொல்வது, பிற இந்து தமிழர்கள் என்பதாகும். ஆசாரியும் இந்து தமிழர்தான். ஆனால் அவரை மக்கள் இப்பார்வை பார்க்கவில்லை.
பிற இந்துக்களிடம், ’இது எங்கள் தனிப்பட்ட உரிமை. எந்த கொம்பனால் எங்களைகேட்க முடியாது’ என்று சொல்வது ஆணவம்.
மத வழி சடங்குகள் தனியுரிமை அல்ல. அப்படி ஆக்கிக்கொண்டீர்கள் என்பதே இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த ஒரு சடங்கு மட்டுமல்ல. பலபல உள.
புரிந்து கொள்ளப் பாருங்கள். ’பூனுலை கழற்றி எறிந்துவிடுங்கள்’ என நான் சொல்லமாட்டேன். மாறாக, நீங்கள் ஒரு பார்வைக்கு உள்ளாகிறீர்கள் எனத்தான் சொல்கிறேன். அப்பார்வையை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறீர்கள்.
ஆர்-வியைப் போல, ’அது கல்லாயிருந்தாலும் அது என் கல். நான் சுமப்பேன் என் தனிநப்ர் உரிமை’ எனச் சொல்லப்போகிறீர்களா?
அல்லது, தோண்டு இராகவனைப்போல, ‘எங்களை எந்தக் கொம்பனும் கேள்வி கேட்க முடியாது’ எனச் சொல்லப்போகிறீர்களா?
தமிழ்நாட்டிலேயே நின்று, தமிழர்கள் வாழ்ககையைப் பற்றித்தான் பேசவேண்டும். இந்து மத அடைப்படைகளுக்குப் போகக்கூடாது.
இவன்
நெருஞ்சி முள்.
/ எப்படி பிற தமிழர்களால் பார்க்கப்படுகிறது//
தமிழர்களால் நேற்று எப்படி பார்க்கப்படுகிறது என்பதும் விஷயம்தான். இன்று எப்படி பார்க்கப்படுகிறது என்பது எப்படி சமீபகாலத்தில் பிரச்சாரப்படுத்தப்பட்டது என்பதை பொறுத்தது.
பிரச்சாரத்தை தாண்டி உண்மை என்று ஒன்று உண்டு. அதனை நாட முயற்சி செய்வோம்.
//தீண்டத்தகாதவன் என்று சொல்லி .//
ஆமாம். அதிலும் இந்து சமூகத்தில் எப்போது தீண்டாமை உள்ளே வந்தது என்பதையும் ஆராயவேண்டும். அதனை ஆராயுங்கள். அதிர்ச்சி அடைவீர்கள். பௌத்தமும் சமணமுமே தீண்டாமையை கொண்டு வந்தன என்ற சௌகரியமற்ற உண்மையை அடைவீர்கள். சாதி முறை மூலம் பல சாதியினருக்கு தீங்கு நடந்தது என்பதை மறுக்கவில்லை. அதில் வருணக்கொள்கைக்கும் நிச்சயம் பங்கு உண்டு. அது நடந்தது உண்மை. ஆனால், அந்த கொடுமையில் மற்ற சாதியினர் அனைவருக்கும் பங்கு உண்டு என்பதையும் ஒப்புக்கொள்வோம்.
//ஆசாரி ..அது மதச்சடங்கு அல்ல.//
இல்லை ஆச்சாரிகளுக்கும் அது மதச்சடங்குதான். போய் கேட்டுப்பாருங்கள். எல்லா இந்துக்களுக்கும் அது மதச்சடங்குதான். அதனால்தான் எல்லா இந்துக்களுக்கும் எல்லா சடங்குகள் காலத்திலும் புரோகிதர்கள் பூணூல் போட்டுவிடுகிறார்கள்.
//பிறதமிழர், நீஙகள் உங்களை மற்றாரிடமிருந்து பிரித்துக்கொண்டு, .//
நான் பிராம்மணனும் இல்லை. ஆசாரியனும் இல்லை. பிறப்பால் சத்திரிய குலத்தை சேர்ந்த இந்து. என்னுடைய மூதாதையர்கள் இடுப்பில் உடைவாளும், பஞ்சகச்சமும், மார்பில் பூணூலுமாக நின்றவர்கள் என்பது எனக்கு தெரியும். அதில் எனக்கு எந்த வித தாழ்வு உணர்ச்சியும் கிடையாது. பெருமை உணர்ச்சியும் கிடையாது. அது உண்மை. அதனை ஒப்புக்கொள்வது என் நேர்மை.
//ஆசாரியும் இந்து தமிழர்தான். ஆனால் அவரை மக்கள் இப்பார்வை பார்க்கவில்லை.//
இல்லை ஆச்சாரிகளுக்கு எதிராக பெரியார் பிரச்சாரம் செய்யவில்லை. அதுதான் உண்மை. ஆச்சாரிகளுக்கு எதிராக கிறிஸ்துவர்களும் இஸ்லாமியரும் பிரச்சாரம் செய்யவில்லை. செய்திருந்தால் அவர்களையும் உங்களது லிஸ்டில் சேர்த்திருப்பீர்கள்.
//’இது எங்கள் தனிப்பட்ட உரிமை. எந்த கொம்பனால் எங்களைகேட்க முடியாது’ என்று சொல்வது ஆணவம்.//
அப்படி எந்த ஒரு பிராம்மணர் சொல்லியிருந்தாலும் சொன்னாலும் சொல்வதாக இருந்தாலும் அது ஆணவமே. ஏனெனில் அது உண்மை இல்லை. அது அவர்களது தனிப்பட்ட உரிமை இல்லை. எல்லா இந்துக்களுக்கும் பொதுவானது. கர்னாடக சங்கீதம், பரதநாட்டியம், பஞ்சகச்சம், மடிசார், வேட்டி போன்ற எதுவும் அவர்களது சொந்த உரிமை இல்லை. அவர்களுக்கு மட்டுமே ஆன பாத்தியதை இல்லை. அவர்கள் இந்த உடைகளை பாரம்பரியத்தை காப்பாற்றினார்கள். காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதன் காரணம் அவர்கள் மீது மற்றவர்கள் வைத்த எதிர்பார்ப்பு. சிந்தித்து பாருங்கள். நீங்களே எப்போதாவது கறி சாப்பிடும் பிராம்மணனை பார்த்து “பிராம்மணன் கறி சாப்பிடலாமா?” என்று யோசித்ததில்லை? கிண்டல் செய்ததில்லை? அதுதான் எதிர்ப்பார்ப்பு. அதே போல பிராம்மணர்களை வெறுத்தாலும் பிராம்மணர்கள் இந்திய பாரம்பரியத்தை காப்பாற்றவேண்டும், அவர்களது நடை உடை ஒழுக்கங்களை காப்பாற்றவேண்டும் என்று நாம் எதிர்ப்பார்க்கிறோம். எதிர்பார்த்தோம். அதனாலேயே அவர்கள் தங்களது பாரம்பரியத்தை காப்பாற்ற நிர்பந்திக்கப்பட்டனர். பீடி குடித்துக்கொண்டிருக்கும், தண்ணி அடித்து நாற்றம் வீசுகிற, பூணூல் போடாத, கிராப் வெட்டிய பிராம்மணரை யார் புரோகிதம் செய்ய அழைப்பார்கள்?
//
சொல்லப்போகிறீர்களா?
//
நான் சொன்ன பதில்களில் உண்மை இருக்கிறது. சிந்தித்து பாருங்கள்.
//தமிழ்நாட்டிலேயே நின்று, தமிழர்கள் வாழ்ககையைப் பற்றித்தான் பேசவேண்டும். இந்து மத அடைப்படைகளுக்குப் போகக்கூடாது.
இவன்
நெருஞ்சி முள்.
//
அதனைத்தான் நானும் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் கடந்த 50 வருடங்கள்தான் தமிழர்கள் வாழ்க்கை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
இழந்த பாரம்பரியத்தை மீட்டெடுப்பது உங்கள் கடமை. அந்த கடமையை செய்யாமல் இருப்பது உங்கள் உரிமை. ஆனால், பாரம்பரியத்தை காப்பாற்றிக்கொண்டிருப்பவர்கள் அந்த பாரம்பரியத்தை அழிக்கவேண்டும் என்று கோருவது அத்துமீறல். அவர்களது உரிமையில் தலையிடுவது.
நட்புடன்
ஆத்மா
@நெருஞ்சிமுள்
”உங்களிடம்தான் பிளாக் இருக்கிறதே, பிளாக்கராக ஏன் லாக் இன் செய்து வரமாட்டேன் என்கிறீர்கள்?”
//That is none of your business. If not like me, reject comments. I will act I want. No unwanted advice from you.
Nerunji Mul//
பார்க்க: http://dondu.blogspot.com/2009/08/07082009.html
வெறுமனே சாதாரணமாக கேட்க்கப்பட்ட கேள்விக்கே இவ்வளவு ஆணவத்துடன் கூறுபவர் மற்றவரது ஆணவத்தை பற்றி பேசலாகாது.
அதிலும் முக்கியமாக இப்பதிவே பெரியார் திடலில் அடாவடித்தனமாக அனுமதி மறுத்தது பற்றித்தான். அது பற்றி பேச ஒரு வாயும் இல்லாமல் சம்பந்தமில்லாமல் பேசினால் போடா ஜாட்டான் என்ற ரேஞ்சில்தான் பதில் வரும்.
டோண்டு ராகவன்
தமிழ் ஓவியா அவர்களே,
உங்கள் மௌனம் மிக ஆச்சரியமாக இருக்கிறது. டோண்டு பெரியார்-தலித் பற்றி சில கேள்விகளை எழுப்பினார். (பெரியார் மீது மதிப்பு வைத்திருக்கும் நானும்) நாலைந்து முறை நினைவு படுத்திவிட்டேன். நீங்கள் கண்டுகொள்ளவே மாட்டேன் என்கிறீர்கள். பெரியாரின் முரட்டு பக்தராக இருக்கும் உங்கள் மவுனத்தை வைத்து பார்த்தால் பெரியார் தலித்களுக்காக வைககத்துக்கு பிறகு எந்த போராட்டமும் நடத்தவில்லை என்றுதான் தோன்றுகிறது. இது தவறான அனுமானம் என்று காட்டுவதற்காகவாவது கொஞ்சம் வாயை திறந்து பேசுங்கள்!
//உங்கள் மௌனம் மிக ஆச்சரியமாக இருக்கிறது.//
இதைத்தான் நான் இடி போன்ற மௌனம் என குறிப்பிடுவேன்.
பெரியார் நிகழ்த்திய போராட்டங்கள்:
1. சமீபத்தில் 1956 வாக்கில் பிறாமணாள் ஹோட்டல் என போர்டுகளில் போட்டு கொண்டதை எதிர்த்து தார் அழிப்பு போராட்டம், அவரே தலைமை தாங்கினார். திருவல்லிக்கேணி பைக்ராஃப்ட்ஸ் சாலையில் உள்ள முரளி கஃபேயில்தான் அது அவரால் நிகழ்த்தப் பெற்றது.
2. பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம்
3. ராமர் படங்களுக்கு செருப்புமாலை போட்டது.
4. சங்கராச்சாரியார் படத்துக்கு அவமதிப்பு.
செய்யாத போராட்டங்கள்:
1. இரட்டை குவளை பாவித்த டீக்கடைகளின் முன்னால் போராட்டம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
2. அரிஜன ஆலயப் பிரவேச போராட்டமும் (வைக்கத்துக்கு அப்புறம்) இல்லை. (சரிதான், ஆலயத்தையே ஒழிக்கச் சொன்னவர் என சமாதானப்படுத்திக் கொள்ளலாம்)
இன்னும் லிஸ்ட் தேவையா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
''@நெருஞ்சிமுள்
”உங்களிடம்தான் பிளாக் இருக்கிறதே, பிளாக்கராக ஏன் லாக் இன் செய்து வரமாட்டேன் என்கிறீர்கள்?”
//That is none of your business. If not like me, reject comments. I will act I want. No unwanted advice from you.
Nerunji Mul//
பார்க்க: http://dondu.blogspot.com/2009/08/07082009.html
வெறுமனே சாதாரணமாக கேட்க்கப்பட்ட கேள்விக்கே இவ்வளவு ஆணவத்துடன் கூறுபவர் மற்றவரது ஆணவத்தை பற்றி பேசலாகாது.
அதிலும் முக்கியமாக இப்பதிவே பெரியார் திடலில் அடாவடித்தனமாக அனுமதி மறுத்தது பற்றித்தான். அது பற்றி பேச ஒரு வாயும் இல்லாமல் சம்பந்தமில்லாமல் பேசினால் போடா ஜாட்டான் என்ற ரேஞ்சில்தான் பதில் வரும்.
டோண்டு ராகவன்//
I am surprised to see this message and also, the message in the link.
That message was not posted by me.
Who has played such mischief?
Only God and the mischief-maker know it.
In a short message like this, I will never make a grammatical or spelling error. In long messages, maybe, there are such errors.
I value my English prose always. I always feel that it is my duty to write good English so that if anyone happens to read me, he may get to experience some good English in blog reading, no matter whether he accepts my opinion or not.
Read the message alleged to have been posted by me:
"That is none of your business. If not like me, reject comments. I will act I want. No unwanted advice from you."
Will I write such English? -
If not like me...
I will act I want.
No unwanted advice.
I would have written thus:
"Yes, I do have a blogger id. All that you want is my name, any name for that matter, dont you? Then, it is available as Nerunji Mul without logging in with my google id. What more do you want?"
Even the same message would have been worded by me like this:
"That is none of your business, I am afraid. If you dont like my comments, you can reject them by all means. I will continue to use the mode of 'Anonymous' only.
Sorry, I cant accept unsolicited advice from you"
Who is the mischief-maker? He may like to understand that anyone can defraud others, but the fraudster should be good at the game. In my case, he has used such English that gave him away. Better luck next time.
If I have learnt a lesson from dondu blogs, that is this:
'A dissenter should be cautious here. He can be conned by fraudsters impersonating him. If he cant be cautious, he should not enter this blog.'
Shock and disbelief!
I am not that much cautious. I wont appear here again.
Nerunji Mul
இங்கு நடக்கும் விவாதத்தைப்பார்க்கும் போது, பெரியாரும் அவர்தம் சீடர்களும் பார்ப்பானீயம் என்று சொல்லி பிராமண மேலாதிக்கத்தை எதிர்க்கவில்லை. மாறாக பிராமணனை மாற்றுவதால் மற்றவர்கள் அவர்களைப்பார்த்து மாறுவார்கள் என்று எண்ணித்தான் செயல்பட்டுள்ளனர்.
அவர்கள் ஜாதி அடிப்படை மேலாதிக்கம் இருக்கக்கூடாது என்று எண்ணியதாகத் தெரியவில்லை. மாறாக எத்தகய ஆதிக்கமானாலும் சரி மாற்றமானாலும் சரி. அது பிராமணனே முதலில் கடைபிடிக்கவேண்டும் என்று தான் அவர்கள் போராட்டத்தைச் செயல்படுத்தியுள்ளனர்.
ஆக, பிராமண மேலாதிக்கம் (brahmin supremacy) எப்பொழுதுமே இருந்திட வேண்டும் என்று தான் பெரியாரும் அவர்தம் சீடர்களும் எண்ணுகின்றனர்.
//I wont appear here again.//
ஐயா நெருஞ்சி முள், இப்போ புரியுதா, பிளாக்கரில் லாக் இன் பண்ணிட்டு வரதோட பலன்? அதில்லாமே அனானியா வரும்போது இன்னொருத்தர் வந்து உங்க பேரில் போடலாமே. இப்ப இந்த பின்னூட்டம் உங்களதுதான் என்பதில் சந்தேகம் இல்லாமல் போச்சல்லவா. அதைத்தான் நான் கூறியது. இதை புரிந்து கொள்ள இவ்வளவு தாமதமா?
அது சரி, இந்த புலம்பலில் சப்ஜக்டை விட்டுட்டீங்களே சாமி. இப்பதிவில் நான் முதலிலிருந்து கேட்ட கேள்விக்கு என்ன பதில்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
Only God and the mischief-maker know it.
//
So you accept there is God! contrary to what your "Periyar" preached.
Thats excellent improvement.
//
'A dissenter should be cautious here. He can be conned by fraudsters impersonating him. If he cant be cautious, he should not enter this blog.'
Shock and disbelief!
I am not that much cautious. I wont appear here again.
Nerunji Mul
//
குப்புற விழுந்தாலும் மீசையில் மண்ணு ஒட்டல..என்று சொல்லி விடைபெருகிறார் நெருஞ்சி முள்ளு.
//So you accept there is God! contrary to what your "Periyar" preached./
பெரியார் அவரது சமாதியில் புரண்டு படுப்பார். :)))))
//'A dissenter should be cautious here. He can be conned by fraudsters impersonating him. If he cant be cautious, he should not enter this blog.'//
இந்த வலைப்பூ என்றில்லை, எங்குமே பிளாக்கராக லாக் இன் செய்து போவதுதான் பத்திரமானது. அனானியாக வந்தால், it cuts both ways என்பதை உணர இம்மாதிரி சந்தர்ப்பங்கள் வரும்.
அனானியாக வந்தபோது தனது வலைப்பூ என சுட்டி ஏதும் தராது பிதற்றியதிலிருந்தே இந்த நெருஞ்சி முள் தான் ஒரு அரைகுறை என்பதை நிரூபித்து விட்டவர். இப்போது அதை மீண்டும் நிரூபிக்கிறார் அவ்வளவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Nerinji Mul
You talk like a moron. You claim to write good English, but one can easily pick on your writing. For example "Who has played such mischief?" is better as "Who has played this mischief?".
You say "If he cant be cautious, he should not enter this blog.". If you are not cautious, you should not enter any blog. Some body impersonating once you can't be damaging you in any way since you yourself is hiding behind a nick and nobody knows who you are. You are making yourself a bigger moron by expressing shock and disbelief.
Talking of mornoity, this takes the cake. No brahmins or anybody asked your advice, still you keep advising brahmins. Yet you write "I cant accept unsolicited advice from you".
Whether you appear or don't appear in this blog or any blog does not matter to anyone. Or you can be Dondu's guest here and bitch on.
And I have my own doubts that it was none other than this Nerunji Mul who recorded the arrogant feedback and is now pretending to be shocked and all that.
Regards,
Dondu N. Raghavan
dear dondu,
i find the discussion interesting.i have been writing about the dravidian movement in www.tamilhindu.com.the name of the series is poga poga theriyum.on the vikatan interview: it is in my library. i will find it and get back to you.
yours
subbu
தமிழ் ஓவியாவின் இப்பதிவில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது, பார்க்க: http://thamizhoviya.blogspot.com/2011/03/blog-post_4819.html
//சுமார் 70 வருடங்களுக்கு முன் திரு. பா.வெ. மாணிக்க நாயக்கர் அவர்கள் ஈரோடு கரூர் டிவிஷனில் அஸிஸ் டெண்ட் இன்ஜினீயராக நியமிக்கப் பட்டபோது, ஒரு ஓவர்சீயரிடம் வேலை கற்க அமர்த்தப்பட்டார்.//
மாணிக்க நாயக்கர் என முழு சாதிப்பெயருடன் சொன்னார் ஈ.வே. ராமசாமி நாயக்கர். ஆனால் ஓவர்சீயர் என மொட்டையாக எப்படி சொல்லப் போச்சு? அவர் பெயர் என்ன? அவர் பார்ப்பனரா அல்லது வேறு ஏதாவது சாதியா? வேறு ஏதாவது சாதி என்றால் அந்த சாதியை கூற தில் இல்லையா?
கோபாலகிருஷ்ண நாயுடுவின் பெயரையும் அப்படித்தானே தனது சவசவ அறிக்கையில் மறைத்தார் இந்த பலீஜா நாயுடு?
எனது இப்பின்னூட்டத்தை எனது இந்தப் பதிவிலும் போட்டு வைக்கிறேன், பார்க்க: பெரியார் திடலில் டோண்டு ராகவன், http://dondu.blogspot.com/2009/08/blog-post.html
டோண்டு ராகவன்
பார்பனியம் என்றால் அது அநீதி என்று பொருள் படும்.
மற்றவர்கள் மனு தர்மத்தை, பார்ப்பான் மேல் புகுத்தினால் ஒத்து கொள்வார்களா?
தான் அடி படும் வரை உரைக்காது.
பொய் மட்டுமே பார்பனியத்தின் ஆதாரம். எவ்வளவு தூக்கி பிடித்தாலும் அது பொய் தான்.
ஆதவன் இது பற்றி எழுதி உள்ளார்.
http://aadhavanvisai.blogspot.sg/2012/02/blog-post_17.html
Brahmin bashing in tamilnadu is used as a convenient tool to keep the masses ignorant of the real facts.for an arguement let us assume brahmins impose themselves thru manu etc etc.why is it there is not a single hindu god who is a brahmin?except prrhaps parasurama,who no one seems to worship?very clear that the brahmins have no problems respecting and acknowledging any one with good gunas.the champions of self respect need to introspect and stop chasing shadows and get on with real issues that plague the tamils
Ram
Post a Comment