அமெரிக்காவின் முதல் குடியரசு தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் என்பது தெரிந்ததே. அவர் சிறுவனாக இருந்தபோது அவருக்கு பரிசாக கிடைத்த கோடாலியை வைத்து தன் வீட்டு தோட்டத்தில் உள்ள செர்ரி மரம் ஒன்றை வெட்டியதும் தெரிந்ததே. அவர் தந்தை அந்த மரத்தை யார் வெட்டியது என்று கேட்க, ஜார்ஜ் தானே அதை வெட்டியதாக உண்மை உரைத்ததும், மரம் போன வருத்தம் இருந்தாலும், பிள்ளை உண்மை சொன்னானே என அவர் தந்தை மகிழ்ந்ததும் தெரிந்ததே.
மேலே கூறப்பட்ட நிகழ்வு பள்ளிப் பரீட்சைகளில் கேட்கப்பட்டு மேலே உள்ளது போல எழுதினால் ஐந்து மார்க்குகள் கொடுக்கப்பட்டதும் தெரிந்ததே.
ஆனால் உண்மையில் அம்மாதிரி நிகழ்ச்சி நடக்கவேயில்லை என்பது மட்டும்தான் பலருக்கு தெரியாததே என ஆகியுள்ளது. ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய Mason L. Weems என்னும் பிராடஸ்டண்ட் மினிஸ்டரின் கைவரிசை அது என அறிகிறோம். அவர் அக்கதையை எழுதிய 1800-ஆம் ஆண்டு அமெரிக்கர்களுக்கு ஒரு கதாநாயகர் தேவைப்பட்டிருக்கிறார். அதற்கு கிடைத்தவர் ஜார்ஜ் வாஷிங்டன் அவ்வளவே.
நான் ஒரு கனவு கண்டேன் எனத் துவங்கும் மார்ட்டின் லூதர் கிங்கின் பேச்சை பலர் நினைவு வைத்திருப்பார்கள். அது இலக்கியத் திருட்டு என்று ஒரு கோஷ்டி கூறுகிறது. Archibald Carey என்னும் நீக்ரோ ஆத்திகப் பிரசாரகர் 1952-ல் ரிபப்ளிக்கன் கட்சி கூட்டத்தில் பேசியதைத்தான் மார்ட்டின் லூதர் சுட்டார் என இங்கு கூறுகிறார்கள். அது உண்மையாக இருப்பின் மார்ட்டின் லூதரின் செயல்பாடு கண்டனத்துக்குரியது. யாரும் எப்போதுமே ஒரிஜினலாக பேச இயலாது என்பது உண்மைதான். ஒருவர் படிக்கும் பல விஷயங்களிலிருந்துதான் பேச வேண்டிய விஷயங்களை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. ஆனால் அம்மாதிரி செய்யும்போது மூலத்தையும் சுட்டிவிட்டு பேசியிருந்தால் யார் குறை கூறப்போகிறார்கள். அதை செய்யாததுதான் இங்கு பிரச்சினையானது.
அலெக்ஸ் ஹாலி என்பவர் தான் எழுதிய “வேர்கள்” என்னும் புத்தகத்தின் மூலம் தனது ஆப்பிரிக்க வேர்களை சுட்டிக் காட்டியுள்ளார். இப்புத்தகம் மிகப்பிரபலமானது. ஆனால் இப்போது பார்த்தால் இதெல்லாமே Kunta Kinte என்பவரது எழுத்துக்களையும், கண்டுபிடிப்புகளையும் சுட்டுத்தான் பெறப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.
Urban legends என்ற வகை கதைகளை கேள்விப்பட்டுள்ளீர்களா? உதாரணத்துக்கு குவளைக்கண்ணன் என்னும் பெயருடைய ஒருவன் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தானாம். அவனுக்கு முன்னால் ஒரு பெரிய லாரியில் இரும்புத் தகடு எடுத்து சென்று கொண்டிருந்தார்களாம். திரேனெ ஒரு தகடு சரிந்து தெருவில் பின்னால் பைக்கில் வந்து கொண்டிருப்பவன் மேல் விழுந்து அவன் தலையை துண்டித்ததாம். தலை துண்டிக்கப்பட்ட முண்டம் மோட்டார் பைக்கில் லாரியை ஓவர்டேக் செய்ய, அதைப் பார்த்த லாரி ட்ரைவர் கதிரேசன் பயத்தில் தாறுமாறாக வண்டியை ஓட்டி, தெருவில் நின்று கொண்டிருந்த பூங்கொடி (16 வயது), இசக்கி (23 வயது) ஆகியோர் மீது ஏற்றி அவர்கள் மரணத்துக்கு காரணமாக இருந்தானாம். இதே கதையை பல வெர்ஷன்களில் கூறுவார்கள். இக்கதையை முதன்முறையாக சமீபத்தில் 1955-ல் கேட்டுள்ளேன். அதற்கு பிறகும் பலமுறை கேட்டுள்ளேன். எதை நம்புவது. இம்மாதிரி அர்பன் லெஜெண்டுகளில் ஒரு விஷயம் என்னவென்ற்றல், அக்கதையை சொல்பவர் தானே நேரில் கண்டதாகக் கூற மாட்டார். அவரது நண்பர் கூறியதாகக் கூறிக்கொள்வார். இதைத்தான் ஆங்கிலத்தில் FOAF (friend of a friend) சொன்ன கதை என்போம்.
சொல்லப்படும் கதைக்கு தரப்படும் ருசுக்களும் தமாஷானவை. ஒருவன் தேமேனென்று தன் வேலையைப் பார்க்க போய்க் கொண்டிருந்தானாம். திடீரென ஒரு பேய் அவன் முன்னால் தோன்றி அவன் மேல் ஒரு கல்லை எறிந்ததாம் என்று கதை விடுவான். கடைசியில் இதற்கெல்லாம் என்னப்பா ஆதாரம் என்றால், “இதோ அந்தக் கல்” எனக்கூறி ஒரு அரை செங்கலை எடுத்துக் காண்பிப்பானாம்.
அதே போல மகாத்மா காந்தி இறக்கும் தருவாயில் ஹே ராம் எனக்கூறவில்லை அவரது உதவியாளர் கல்யாணம் திட்டவட்டமாகக் கூறியும், நம்மவர்களுக்கு காந்தி அவ்வாறு கூறியிருப்பார் என்று நம்புவதுதான் பிடித்திருக்கிறது. மனிதர்களுக்கு சில நம்பிக்கைகள் தேவைப்படுகின்றன.
ஜெர்மனியிலும் சரி, ஸ்டாலினின் ரஷ்யாவிலும் சரி அச்சமயங்களில் நடந்த அட்டூழியங்கள் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு தெரியாது, அவற்றை அவருக்கு தெரியாது கீழ்மட்ட அதிகாரிகள்தான் நடத்தினார்கள் என்பதை நம்ப பெரும்பான்மையினர் தயாராகவே இருந்தனர். லேட்டஸ்டாக ஜூனியர் விகடனில் தனது அதிமுக வாழ்க்கை பற்றி எஸ்.வி. சேகர் எழுதிய தொடரிலும் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லாது சசிகலா வகையறாக்கள்தான் செயல்பட்டுள்ளார்கள் என நம்ப ரொம்பவுமே முயற்சித்துள்ளார். அது முற்றிலும் தவறான நம்பிக்கை என்பது வெளியில் உள்ள நமக்குத் தெரியும். அவருக்கும் அது தெரியுமாகத்தான் இருக்கும். ஆனால் ஒத்துக்கொள்ளத்தான் தயக்கம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
புத்தகக் குழுமங்கள்- குழந்தைகளுக்கான மீட்பியக்கம்.
-
மின்னணு அடிமைத்தனமும் மீட்பும் எண்பதுகளில் நூல்குழுமம் (Book club) எனும்
அமைப்பு சர்வதேச அளவில் மிகப்புகழ் பெற்றிருந்தது. கேரளத்தில் எல்லா
நூலகங்களிலும், ந...
3 hours ago
14 comments:
1.அண்ணா புற்று நோயால் சிரமப்படும் நாளில் பெருந்தலைவர் காமராஜை தோற்கடிக்கவேன்டும் என காரணம் கூறி அதிக ஒளி வீசும் கேமிரா முன்னால் நீண்ட் நேரம் நிற்க வைத்ததால் தான் அவருக்கு மரணம் நேர்ந்தது.அதற்கு இன்றைய அரசியல் பெரும்புள்ளி சதி செய்தார் என்று சொல்லபட்டதே உண்மையென்ன?
2.1967 ல் எம்ஜிஆர் ராதாவால் சுடப்படார் என்பது செய்தி .பின் வழக்கு நடந்தது.ஒரு சில தகவல்கள் அரசியல் செல்வாக்கு இதில் தலை நுழைத்து ஜாதகமாய் காரியங்கள் நடந்தன என்று சொல்லபட்டதே.இதில் எது உண்மை ?
3.இதற்கு பிரதி உபகாரமாய் 1972ல் திமுகவை இரண்டாய் உடைப்பதற்கு சதி செய்தார் எனும் திமுக தலைவரின் குற்றச்சாட் சொல்லபட்டதே அந்தரங்க உண்மை ?
4.ரஜினி காதலிக்கும் பெண் பெயர் லதா எனகேள்வி பட்டதும் அது தனது கதாநாயகி லதா எனத் தவறாய் புரிந்து,வசூல் சகக்ரவர்த்தி கொடுத்த சித்திரவதையின் காரணமாய் ரஜினி மனநலம் பாதிக்க பட்டார் என்று சொல்லபட்டதே , உண்மை?
5.நாகேஸ் வேடிக்கையாய் சின்னவரை கிழவன் என கேலி பேசயதால் கோபப் பட்டு அவரது நகைச்சுவை நடிகர் வாழ்வுக்கு மங்களம் பாடினார் சின்னவர் என்று சொல்லபட்டதே,உண்மையா?
எஸ்.வீ சேகர் மாட்டர் முடிஞ்சுபோன புஸ்வாணம். இதுக்குப்போயி இவ்வளவு புல்டப்பா? நியாயமா?
அஹ்...அதெப்படி சிலாகிக்கும்போதே டமால் என்று முடிவுக்கு வந்து விடுகிறீர்கள்.
-வித்யா
//அர்பன் லெஜெண்டுகளில் ஒரு விஷயம் என்னவென்ற்றல், அக்கதையை சொல்பவர் தானே நேரில் கண்டதாகக் கூற மாட்டார். அவரது நண்பர் கூறியதாகக் கூறிக்கொள்வார். இதைத்தான் ஆங்கிலத்தில் FOAF (friend of a friend) சொன்ன கதை என்போம். //
பேயை பார்த்தேன், நாக மாணிக்கத்தை பார்த்தேன் வகையறாக்களும் இதே தான்!
//ஒருவன் தேமேனென்று தன் வேலையைப் பார்க்க போய்க் கொண்டிருந்தானாம். திடீரென ஒரு பேய் அவன் முன்னால் தோன்றி அவன் மேல் ஒரு கல்லை எரிந்ததாம் என்று கதை விடுவான். கடைசியில் இதற்கெல்லாம் என்னப்பா ஆதாரம் என்றால், “இதோ அந்தக் கல்” எனக்கூறி ஒரு அரை செங்கலை எடுத்துக் காண்பிப்பானாம்.//
தமிழ்கத்தில் சமீககாலமாக பேய்கள் கற்கள் எரிவதில்லை!, அதற்கு பதிலாக கடவுள்கள் கனவில் வந்து எனக்கு அங்க கோவில் கட்டு, இங்க கோவில் கட்டுன்னு சொல்லுதாம்!
இப்படி தான் நட்டுவச்ச நிறையா மைல்கல்கள் கோவிலாப்போச்சு!
//மனிதர்களுக்கு சில நம்பிக்கைகள் தேவைப்படுகின்றன.//
மான்கொம்பு, சிட்டுகுருவி லேகியம் நம்பிக்கைகளுமா!?
//எஸ்.வி. சேகர் எழுதிய தொடரிலும் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லாது சசிகலா வகையறாக்கள்தான் செயல்பட்டுல்ளார்கள் என நம்ப ரொம்பவுமே முயற்சித்துள்ளார். அது முற்றிலும் தவறான நம்பிக்கை என்பது வெளியில் உள்ள நமக்குத் தெரியும். அவருக்கும் தெரியுமாகத்தான் இருக்கும். ஆனால் ஒத்துக்கொள்ள தயக்கம்.//
BUT IT IS TOLD BY MANY PEOPLE THAT MRS.THOZHI HAS USED HIS GOOD OFFICES TO SEND SVS EKAR OUT OF ADMK
§º¸÷ ¦Ã¡õÀ ¿øÄÅÕ §À¡Ä þÕ째
//§º¸÷ ¦Ã¡õÀ ¿øÄÅÕ §À¡Ä þÕ째//
சேகர் ரொம்ப நல்லவரு போலிருக்கே
டிஸ்கியில் ஏன் எழுதுகிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
@ரமணா
17-ஆம்தேதிக்கான பதிவில் உங்கள் கேள்விகள் பதிலளிக்கப்படும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// dondu(#11168674346665545885) said...
//§º¸÷ ¦Ã¡õÀ ¿øÄÅÕ §À¡Ä þÕ째//
சேகர் ரொம்ப நல்லவரு போலிருக்கே
டிஸ்கியில் ஏன் எழுதுகிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்//
?
//
17-ஆம்தேதிக்கான பதிவில் உங்கள் கேள்விகள் பதிலளிக்கப்படும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
டோன்டுவின் பதில்கள் பதிவுக்கு வரும் கேள்விகளில் சில நடப்பு சம்பவங்கள் சார்ந்ததாய் இருப்பது தெரிந்ததே.60 கேள்விகள் என்ற இலக்கோடு கேள்விகள் லிமிட் செய்யப் பட்டு அடுத்தடுத்த பதிவுகளுக்கு பார்வோடு செய்யபடுகிறது .அது மாதிரி கேள்விகளை 60 கேள்விகளோடு ஒரு இணைப்பாக வெளியிட்டால் இன்னும் சுவை கூடும் வாய்ப்புள்ளது.காலம் கடந்து விட்டால் பொருள்கூட மாறிவிடலாம்.இன்னும் பதிவோடு ஒட்டிய கேள்விகளுக்கு வியாழன் வரை செல்லாமல் உடனுக்குடன் பதிலளித்தால் இன்னும் பதிவுக்கு வரவேற்பு கூடும்.டோண்டுவுக்கு வரும் கேள்விகள் பின்னூட்டங்கள் ஒரு குறிப்பிட்ட சில நபர்களிடமிருந்தே வருகிறது.ஆனால் பழைய பதிவுகளை பாருங்கள் வித்தியாசம் தெரிய வரும்.கல கலப்புகள் ,கருத்து மோதல்கள்,சமதானங்கள்,சவால்கள் தொடரட்டும்.
@அனானி
என்ன செய்வது. ராவுத்தர் குதிரை மாதிரி ஆகிவிட்டன கேள்விகள். முதலில் ஒவ்வொரு வியாழனன்றும் பதிவு போடும்போது நிலுவையை பூஜ்யமாக வைக்க முயன்றேன். அதனால் சில பதிவுகளில் 100-150 கேள்விகள் வரை கேட்கப்பட்டன. அது மட்டுமல்ல, எல்லாம் முடிந்தது என எண்ணியிருக்கும்போது புதன் மாலை 20 கேள்விகள் போல வரும்.
இப்போது அப்படியெல்லாம் இல்லை. சனி ஞாயிறுக்குள் அடுத்த வியாழனுக்கான பதிவு இறுதி வடிவம் எடுத்து அச்சிடும் ஆணையை முன்கூட்டியே தந்து விடுவேன். வியாழன் காலை 5 மணிக்கு அது கில்லி மாதிரி வெளி வந்து விடும்.
தேவையானால் புதனன்று ஒருமுறை அச்சுப்பிழைக்காக பதிவை மேலோட்டமாகப் பார்ப்பதுடன் பிரச்சினை இல்லை.
இப்போதுதான் கடைசி நேர கழுத்துப் பிடிப்புகள் இல்லாமல் இருக்க முடிகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒரு சோதனையாக செய்து பார்க்கவும் வரவேற்பில்லை என்றால் பழைய முறைக்கு மாறிவிடவும்.
பிறரின் ஆலோசனை சரி எனப்பட்டால் அதை நிறவேற்றுவது உங்கள் வாடிக்கை என பலமுறை நிருபித்துள்ளீர்கள்
1.கேள்விபதில் பதிவு தொடக்கம்( அனானியின் வேண்டுகோள்)
2.கேள்வி பதில் பதிவு வெள்ளியிலிருந்து வியழனுக்கு(பலரின் வேன்டுகோள்)
3.60 கேள்விகள் என்ற இலக்கு(பலரின் வேண்டுகோள்)
4.டோண்டு ரசித்த நிகழ்வுகள்,செய்திகள் பதிவு தொடங்கப்பட்டு பின்னர் அது இப்போது நங்கநல்லூர் பஞ்சாமிர்தமாய் வாசகர்கள் அனைவரையும் இனிக்கச் செய்யும் செயல்
5.இந்த முயற்சியும் பலன் அளிக்கும்
Post a Comment