7/27/2010

வாடிக்கையாளரை மூக்கில் குத்தத் தோன்றும் பத்து தருணங்கள்

1. அக்டோபர் 1981 முதல் ஜூலை 2001 வரை நான் தில்லியில் இருந்த காலகட்டத்தில் இணையம் எல்லாம் எனக்கு பரிச்சயம் இல்லை. நான் வாடிக்கையாளரை அடையாளம் காணும் முறையே தமாஷானது. ஒரு அக்கவுண்டண்ட் வேலைக்கு விண்ணப்பம் கோரி விளம்பரம் வந்திருக்கும். அது எனக்கு வேலைக்காகாது. ஆனால் அதில் சம்பந்தப்பட்ட கம்பெனி ஜெர்மானிய அல்லது ஃபிரெஞ்சு நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது என்ற ஒரு வாக்கியம் வந்தால் அதன் தலைமை நிர்வாகிக்கு நான் எனது மொழிபெயர்ப்பு சேவைகளை அவருக்கு கடிதம் எழுதி ஆஃபர் செய்வேன். அதில் நான் பொறியாளரும் கூட என்பதை குறிப்பிட்டு, ஆகவே நான் தொழில்நுட்ப சம்பந்தமான கட்டுரைகளை நன்கு மொழிபெயர்ப்பேன் என்றும் குறிப்பிட்டிருப்பேன். பல முறைகள் இதனால் பலன் ஏற்பட்டு மொழிபெயர்ப்பு வேலைகள் கிடைத்துள்ளன. அக்கடித்தத்தில் நான் ஃப்ரீலேன்சாகத்தான் வேலை செய்கிறேன் என்பதை தெளிவாகக் குறிப்பிட்டிருந்தாலும், சில பிரகஸ்பதிகள் எனக்கு இவ்வாறு கடிதம் அனுப்புவர்:

அ) பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் வேலைக்கு உங்கள் விண்ணப்பம் வந்து சேர்ந்தது. எங்களிடம் அம்மாதிரியான வேலை காலி இல்லை.

ஆ) மின்பொறியாளராக வேலை கேட்டு உங்கள் விண்ணப்பம் கிடைக்கப் பெற்றோம், உடனே நேர்காணலுக்கு வருக (இது எப்படியிருக்கு).

முதல் வகை கடிதமாவது பரவாயில்லை. ஆனால் இரண்டாம் வகை கடிதத்துக்கு? சான்சே இல்லை. அந்த நிறுவனத்துக்கு முதலில் நன்கு ஆங்கிலம் தெரிந்த ஒருவரே முதற்கண் தேவை. அதற்கு முன்னால் அவர் மூக்கில் குத்துவிட ஆசை. ஆனால் அவ்வாறு வெளிப்படையாக நடந்து கொள்ள முடியாதே!

2. நேர்காணலின்போது நான் முழுநேர வேலையாக எங்கே வேலை செய்கிறேன் என்பதை அறிவதில் பலர் அதீத ஆவலுடன் இருப்பர். அதற்காக அவர்கள் விடாது கேள்வி கேட்கும் போது மூக்கில் ஒரு குத்து விட ஓர் ஆசை!

3. கையில் ஒரே ஒரு வேலையை வைத்துக் கொண்டு ஆயிரக்கணக்கான பக்கங்கள் இருப்பதாக உதார் விடும்போது பசக்கென ஒரு குத்து மூக்கில்.

4. ஒரு பெண்மணி என்னிடம் வந்து ரொம்ப அலட்டினாள், அவளது அத்தை பிள்ளை மட்டும் இருந்திருந்தால் இலவசமாகவே மொழிபெயர்த்து கொடுத்திருப்பான் என. அவனோ வெளிநாட்டில். அப்புறம் இங்கு வந்து என்ன பந்தா? மூக்கில் பசக் என ஒரு குத்து (அத்தைப்பிள்ளைக்கு அவள் தரக்கூடிய ‘சலுகைகளை’ எனக்கும் தருவதாக இருந்திருந்தாலாவது ஏதாவது யோசிக்கலாம்).

5. வாடிக்கையாளர் தனது நிறுவனம் லாபநோக்கற்ற அமைப்பு என புருடா விடும்போது மூக்கில் பசக்கென ஒரு குத்து.

6. பில்லுக்கான பணம் கொடுக்காது காக்கா நரி கதைகளை வாடிக்கையாளர் கூறும்போது அவர் மூக்கில்....

7. கோப்புகளில் பல வாக்கியங்கள் திரும்பத் திரும்ப வரும் என்பதால் அவற்றுக்கு ஒரு முறைக்கு மேல் சார்ஜ் செய்யக்கூடாது என கருத்து கந்தசாமிகளாக வாடிக்கையாளர் மாறும்போது ஒரு குத்து பசக்கென மூக்கில்.

8. தேவையே இன்றி மிக அர்ஜண்ட் என்று சாதாரண வேலைகளுக்கும் பந்தா செய்பவர்கள் சில வாடிக்கையாளர்கள். அப்படியே அர்ஜண்டாக வேலை செய்து மின்னஞ்சலில் அனுப்பித்தால் அவரது செட் செய்யப்பட்ட ஆட்டமேட்டிக் பதில் வரும், அதில் அவர் வெளிநாடு சென்றுள்ளார் என்றும் பத்து நாள் கழித்துத்தான் வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். வேண்டுமென்றே டென்ஷன் செய்த அந்த மனிதரின் மூக்கு மேலே ஒரு கராட்டே அடி.

9. வேலைக்கு வரச்சொல்லிவிட்டு அங்கு சென்று காத்திருக்கும்போது திடீரென கேன்சல் செய்து காலணா கொடுக்காது அனுப்ப நிறுவனம் முயலும்போது, என்ன மூக்கில் குத்து விடவேண்டியதுதானே?

10. நமக்காக நிறுவனம் தெரிவு செய்துள்ள தொடர்புக்கான நபர் (contact person) தனது தவறுகளையும் நம் மேல் திசைதிருப்ப நினைக்கும்போது அந்தாளை சும்மா விட்டுவிட முடியுமா என்ன?

ஆனால் இமாதிரியான ஒரு தருணத்திலும் நான் அதை செயல்படுத்தியிருந்தால் இப்பதிவை போட்டுக் கொண்டிருக்க முடியாது. திகாரிலோ அல்லது புழலிலோதான் இருந்திருப்பேன். ஆகவே நான் அவற்றை சமாளிக்க வேண்டியிருந்தது. அவற்றை நான் கையாண்ட விஷயங்களே எனது வாடிக்கையாளரை அணுகும் முறையில் வருகின்றன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

24 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

இருட்டுச் சந்தில் ஒரு பதிவர் இன்னொரு பதிவரை மூக்கில் குத்தி ஆரம்பித்து வைத்தாலும் வைத்தார்!அப்புறம் தான் இந்த மாதிரிக் குத்துவிடும் கொலை வெறி எல்லாப் பதிவர்களிடமும் இருப்பது ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டிருக்கிறது என்று பார்த்தால்......!


நீங்களுமா...?!

அருள் said...

// //(அத்தைப்பிள்ளைக்கு அவள் தரக்கூடிய ‘சலுகைகளை’ எனக்கும் தருவதாக இருந்திருந்தாலாவது ஏதாவது யோசிக்கலாம்)// //

அடக்கடவுளே......!

மங்களூர் சிவா said...

ஹா ஹா !
சுவாரசியம்.

Anonymous said...

ஆருயிர், வந்தது வந்திட்டீங்க, கமான் கமான்..... எடுங்க சாட்டைய

Anonymous said...

//அடக்கடவுளே......!//

மிஸ்டர் ஆருயிர், ஒரு டைரக்‌ஷன் மிஸ்டேக் பாத்தீங்களா, உங்களுக்கு தான் கடவுள் இல்லையே ??

Anonymous said...

//மிஸ்டர் ஆருயிர், ஒரு டைரக்‌ஷன் மிஸ்டேக் பாத்தீங்களா, உங்களுக்கு தான் கடவுள் இல்லையே ??//

This shows your ignorance and arrogant immaturity. He never claimed as you said.

You really deserve a quota.

Unknown said...

ஹஹஹ... :) குத்துங்க குத்துங்க...

ஆமா, இங்கே வாடிக்கையாளர்னா வரும்??? ம்ம்ம்ம்....

அருள் said...

// //
//அடக்கடவுளே......!//

ஒரு டைரக்‌ஷன் மிஸ்டேக் பாத்தீங்களா, உங்களுக்கு தான் கடவுள் இல்லையே ??// //

நான் கடவுள் மறுப்பாளன் என்று கூறவில்லையே!

இசுலாம், கிறித்தவம், புத்தமதம் குறித்தெல்லாம் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை.

இந்திய மக்களின் வழிபாட்டுமுறைகள், குறிப்பாக நாட்டார் தெய்வ வழிபாடுகள் குறித்தும் எனக்கு முரண்பாடு ஏதும் இல்லை.

கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம், பண்பாட்டு உரிமை என்றே நினைக்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

//இந்திய மக்களின் வழிபாட்டுமுறைகள், குறிப்பாக நாட்டார் தெய்வ வழிபாடுகள் குறித்தும் எனக்கு முரண்பாடு ஏதும் இல்லை.

கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம், பண்பாட்டு உரிமை என்றே நினைக்கிறேன்.//
ஆக, இப்போது கூறுங்கள். பார்ப்பனர்களது சமூக வழக்கங்களில்/மத நம்பிக்கைகளில் ஒன்றான பூணல் போடுவதில் மட்டும் உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்க முடியும்?

டோண்டு ராகவன்

அருள் said...

டோண்டு ராகவன் Said...

// // //இப்போது கூறுங்கள். பார்ப்பனர்களது சமூக வழக்கங்களில்/மத நம்பிக்கைகளில் ஒன்றான பூணல் போடுவதில் மட்டும் உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்க முடியும்?// // //

பண்பாட்டு பன்முகத்தன்மையை நான் வரவேற்கிறேன். ஆனால், அதற்குள் ஏற்றத்தாழ்வு கற்பிப்பதை எதிற்கிறேன்.

பண்பாட்டு பன்முகத்தன்மை என்பது "அகண்ட பாரதமும் ஒரே நாடு, அதில் உள்ள மக்கள் எல்லோரும் இந்துக்கள், அவர்களது முதன்மை மொழி சமற்கிருதம் (அது முடியாவிட்டால் இந்தி)" என்கிற கொள்கைக்கு எதிரானது.

கிறித்தவர்கள் சிலுவை அணிகிறார்கள் - அந்த சிலுவையில் ஏற்றத்தாழ்வு ஏதுமில்லை. சீக்கியர்கள் தலைப்பாகைக் கட்டுகிறார்கள் - அதிலும் ஏற்றத்தாழ்வு எதுவுமில்லை.

பூணூல் அத்தகைய ஏற்றத்தாழ்வைக் கற்பிக்காத ஒரு பண்பாட்டு அடையாளமா?

தமிழர், மலையாளி, தெலுங்கர் இடையே வேறுபட்ட அடையாளங்கள் உள்ளன. ஆனால், அவையெல்லாம் ஏற்றத்தாழ்வையா கற்பிக்கின்றன?

தமிழ்நாட்டின் முதன்மைத் திருநாள் பொங்கல். இதனை எல்லோரும் ஒரே மாதிரியாகக் கொண்டாடுவது இல்லை. சிலர் காலையிலும், சிலர் மதியமும் - சிலர் வீட்டுக்கு உள்ளேயும், சிலர் வீட்டுவாசலிலும் பொங்குகின்றனர். இதில் ஒன்று உயர்ந்தது மற்றது தாழ்ந்தது என்றா இருக்கிறது?

தமிழ்நாட்டில் ஒவ்வொரு பிரிவுக்கு இடையேயும், வாழும் பகுதிக்கு ஏற்பவும், குடும்ப மரபுக்குத் தக்கவகையிலும் திருமணச் சடங்குகள் மாறுபடுகின்றான, தாலியின் வடிவம் மாறுபடுகிறது. இதனால், ஒரு திருமணம் உயர்ந்தது மற்றது தாழ்ந்தது என்று கூறிவிட முடியுமா?

இதுபோல, பூணூல் என்பது பார்ப்பனர்களின் அடையாளச் சின்னமாக இல்லை. அது அவர்களது "மேல்நிலையை - இருபிறப்பை" அடையாளப் படுத்துகிறது. இதன்மூலம் BC/MBC/SC/ST பிரிவினரை அவமானப்படுத்துகிறது.

தந்தை பெரியாரின் பார்வையில் சொன்னால் - பூணூல் BC/MBC பிரிவினரை சூத்திரர்கள் (வேசி மகன்கள்) என்கிறது.

அது போகட்டும் - எத்தனையோ 'இந்துக்கள்' மதம் மாறி சிலுவை அணிந்துள்ளனர். பெரியார்தாசன் கூட இசுலாமுக்கு போய் சுன்னத் செய்து கொண்டார். அதுபோல - எவராவது, இந்துமதத்திற்கு வந்து பூணூல் போட்டது உண்டா?

dondu(#11168674346665545885) said...

//அதுபோல - எவராவது, இந்துமதத்திற்கு வந்து பூணூல் போட்டது உண்டா?//இஸ்கான்காரர்கள் குடுமி வைத்து பூணல் கூட போட்டுக் கொள்கின்றனர். அதுக்கென்ன இப்போ?

//இதுபோல, பூணூல் என்பது பார்ப்பனர்களின் அடையாளச் சின்னமாக இல்லை. அது அவர்களது "மேல்நிலையை - இருபிறப்பை" அடையாளப் படுத்துகிறது. இதன்மூலம் BC/MBC/SC/ST பிரிவினரை அவமானப்படுத்துகிறது.

தந்தை பெரியாரின் பார்வையில் சொன்னால் - பூணூல் BC/MBC பிரிவினரை சூத்திரர்கள் (வேசி மகன்கள்) என்கிறது.//
அது உங்கள் பிரமை, தாழ்வு மனப்பான்மை. அதற்கு பூணல் போடுபவர்கள் ஒன்றும் செய்வதற்கில்லை.

டோண்டு ராகவன்

அருள் said...

டோண்டு ராகவன் Said...

// //இஸ்கான்காரர்கள் குடுமி வைத்து பூணல் கூட போட்டுக் கொள்கின்றனர். // //

இஸ்கான்காரர்கள் நம்ப "நந்தனார்" மாதிரி இல்லையே!

இஸ்கான்காரர்கள் வெளிநாட்டு பார்ட்டி. சூத்திரனும் இல்லை. அதேசமயம் காசும் அதிகம் - "பலித்தவரைதான் பார்ப்பானர்கள்" என்பது தெரிந்த கதைதானே. எல்லாம் லாபம் கிடைக்கும் வரைதான்.

ராம்ஜி_யாஹூ said...

உங்கள் மொழி பெயர்ப்பு பணியில், கட்டணம் முன்பணமாக வாங்கி விடுவீர்களா.

நீங்கள் தவறாக மொழி பெயர்த்து கொடுத்து (தவறுதலாக) அதனால் விளைவுகள் ஏதும் ஏற்பட்டு இருக்கிறதா.

Anonymous said...

//அது உங்கள் பிரமை, தாழ்வு மனப்பான்மை. அதற்கு பூணல் போடுபவர்கள் ஒன்றும் செய்வதற்கில்லை//

Dear Dondu Sir

Do you really think so?

Do you think all the people were allowed to enter in your house irrespecive of caste? May be changed in this generation.

Tell the truth , please.

I know, some have to remove their slippers (if they had) when they have to enter in particular streets. Come on.

But, I have no bad feeling, for you people having 'poonool'.

Sridhar

dondu(#11168674346665545885) said...

Hi Dondu,

Congrats!

Your story titled 'வாடிக்கையாளரை மூக்கில் குத்தத் தோன்றும் பத்து தருணங்கள்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 28th July 2010 11:25:02 AM GMT

Here is the link to the story: http://ta.indli.com/story/310619

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

நன்றி தமிழிஸ்

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//Do you think all the people were allowed to enter in your house irrespecive of caste? May be changed in this generation.
Tell the truth , please.//
என் வீட்டில் ஜாதி பார்த்து யாரையுமே உள்ளே வரவிடாது தடுத்ததில்லை. எனக்கு பிடிக்காதவன் என்றால் அவன் பார்ப்பனனாக இருந்தாலும் உள்ளே வரவிட மாட்டேன். அது வேறு விஷயம்.

நீங்கள் குறிப்பிடும் செருப்பணிய விடாமல் இருப்பது இப்போதும் பார்ப்பனரல்லாத மேல் சாதியினர், மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் மூலம் தலித்துகளுக்கு நடத்தப்படுகிறது. கண்டதேவி தேர்பிரச்சினை, உத்தபுரம் கோவில் பிரச்சினை ஆகியவற்றை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

I know, some have to remove their slippers (if they had) when they have to enter in particular streets. Come on.

dondu(#11168674346665545885) said...

//இஸ்கான்காரர்கள் வெளிநாட்டு பார்ட்டி. சூத்திரனும் இல்லை. அதேசமயம் காசும் அதிகம் - "பலித்தவரைதான் பார்ப்பானர்கள்" என்பது தெரிந்த கதைதானே. எல்லாம் லாபம் கிடைக்கும் வரைதான்.//
பூணல் போடுகிறார்களா இந்து மதத்துக்கு கன்வெர்ட் ஆனவர்கள் என கேட்டீர்கள், நானும் உதாரணம் தந்தாயிற்று.

பூணல் போடுவதை அனுமதிப்பதோ தடுப்பதோ பார்ப்பனர் கையில் இல்லை. அவர்களுக்கு அதற்கான அதிகாரமும் இல்லை.

இன்று இருக்கும் சூழ்நிலையில் யார் வேண்டுமானாலும் பூணல் போட்டுக் கொள்ளலாம். யாரும் தடுக்க மாட்டார்கள். அவரவருக்கு ஆயிரம் வேலை. ஆளை விடுங்கள்.

டோண்டு ராகவன்

Anonymous said...

மிஸ்டர் ஆருயிர், வெல்டன் எப்படியோ ”பூனூலை” பிடிச்சிட்டீங்க!!

டோண்டுவாள் வெல்டன், அருள் பேசாட்டியும் வலுக்கட்டாயமா ”பூனூல்” பேசவச்சுட்டீர் வோய்

அருள் said...

டோண்டு ராகவன் Said...

// //அவரவருக்கு ஆயிரம் வேலை. ஆளை விடுங்கள்.// //

"சோவின் எங்கே பிராமணன்" பார்ட் பார்ட்'டா எழுதினீங்களே, அதெல்லாம் வேலையா, அல்லது பொழுதுபோக்கா?

ஆர்.எஸ்.எஸ்'ல இதுபோல எழுதுவதற்காகவே சம்பளம் கொடுத்து ஆள் வைக்கிறங்க. அவங்களுக்கெல்லாம் 'ப்ளாக்ல எழுதுறதும், பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் எழுதறதும்' பொழுதுபோக்கு இல்லை. அதுவே, முழுநேர, பகுதி நேர வேலை.

ஆனால், நீங்கள் இலவசமாவே அந்த சேவையை செய்து வரீங்க. இப்போ அலுத்துகிட்டா எப்படி?

Anonymous said...

மிஸ்டர் ஆருயிர், வெல்டன் எப்படியோ ”பூனூலை” பிடிச்சிட்டீங்க!!

டோண்டுவாள் வெல்டன், அருள் பேசாட்டியும் வலுக்கட்டாயமா ”பூனூல்” பேசவச்சுட்டீர் வோய்

JARF பாருங்க, இப்ப நிறைய பேரு உங்களை மாதிரி எழுத ஆரம்பிச்சிட்டா ? ஆர் அவியளை இப்படி எழுத சொன்னது

virutcham said...

முன்காலத்தில் எல்லோரும், பெண்கள் உட்பட பூணூல் போட்டுக் கொண்டிருந்தாங்க என்பதெல்லாம் உங்களுக்குத் தெரிந்து இருக்கும்.கொஞ்சம் கொஞ்சமா இந்தப் பழக்கம் குறைந்து போச்சு.

அதனால தான் கர்மம், திதி செய்யும் போது எல்லா தரப்பினரும் பூணூல் அணிவதை பார்க்க முடிகிறது.

பிராமணர்கள் கொஞ்சம் விடாப்பிடியா கடை பிடிக்கிறாங்க. அதுவும் அடுத்த தலைமுறையில் குறைந்து விடும் என்று தான் தோன்றுகிறது.
இப்போவும் ஆசாரிகள் சிலர் போட்டுக் கொள்ளுகிறார்கள்.

அதனால் அது ஏற்றத் தாழ்வை காட்டுது என்று சொல்லும் காலம் போச்சு. அப்புறம் எல்லாம் BC/MBC தாழ்வு என்பது அரசாங்கம் கொடுக்கும் certificate தானே.

அதை வேண்டாம்னு சொல்லிட துணிவீங்களா என்ன?
கொஞ்சம் படித்து மேலே வந்து விட்ட உங்களைப் போன்றவர்கள் துணிந்து OC எடுத்துக் கொண்டு இன்னும் முதல் தலைமுறை கூட படிக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வழி விடுங்களேன். தயாரா?
challenge எல்லாம் ஒன்றும் இல்லை. ஒரு ஆதங்கம் தான்.

ஸ்ரீதர் said...

//உங்களைப் போன்றவர்கள் துணிந்து OC எடுத்துக் கொண்டு இன்னும் முதல் தலைமுறை கூட படிக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வழி விடுங்களேன். தயாரா?
challenge எல்லாம் ஒன்றும் இல்லை. ஒரு ஆதங்கம் தான்.//

கேட்டுட்டீங்க இல்ல, இப்ப உங்க "விருட்சட்த" தேட ஒரு உதவாக்கரை கும்பல் கிளம்பி இருக்கும்.

உங்க விருட்சட்த தேடி உங்கள கட்டம் கட்டி, நீங்க கேட்ட கேள்விய மறக்க செய்யனும் அதான் அவிங்க பொழப்பு.

Krishnakumar said...

Mr. Arul,

In many places of TN the "Eversilver" tumbler is not given to Dalits when they are served the tea. Does that mean the "Ever silver" tumbler is a sign of opperssion and it should not be used by people who have ever silver tumbler?

smart said...

Dear dondu,
Expecting some article regarding PMK demand over Reservation. Atleast, Mr.arul will enjoy.

Thanks

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது