Anonymous to Dondus dos and donts at November 28, 2008 7:34 AM
27 % பிற்பட்டோருக்கான ஒதுக்கீடு சலுகை அளிக்கும் மண்டல் கமிஷன் அறிக்கையை துணிச்சலாய் செயல்படுத்திய வி.பி.சிங்:
1. அரசியலில் பிரகாசிக்க முடியாதது ஏன்?
பதில்: திருவாளர் சுத்தம் என்று முதலில் அறியப்பட்டவர் பிறகு அவ்வளவு சொல்லிக் கொள்ளும்படியாக சுத்தம் இல்லை என தெரிய வந்ததும் ஒரு காரணம். அவர் பதவிக்கு வந்ததே ஒரு தில்லாலங்கடி வேலை செய்துதான்.
2. அவர் முற்பட்ட சமுகத்தை சேர்ந்தவர் என்பதாலா?
பதில்: வட இந்தியாவில் நீங்கள் சொல்லும் பிரச்சினை அவ்வளவாக இல்லை.
3. அவரது இந்த செயல் (மண்டல் புகழ்) அச்சமயத்தில் அரசியல் செல்வாக்கை பெறுவதற்கா அல்லது பிற்பட்டோரின்மீது உண்மையிலே பரிவுடனா?
பதில்: பரிவெல்லாம் ஒன்றும் இல்லை. இது அப்பட்டமான அரசியல் யுக்தி. இல்லாதிருந்தால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தூசி படிந்து கிடந்த ஒரு மண்டல் அறிக்கையை தேவையான இற்றைப்படுத்தல் இன்றி ஏனோதானோ என நிறைவேற்றியிருக்க மாட்டார். அவர் செய்த குளறுபடி இன்னும் வீறு கொண்டு இருக்கிறது.
4. பிற்பட்ட சமுகத் தலைவர்களில் கலைஞரைத் தவிர வேறு யாரும் இவரை கண்டு கொள்ளவில்லையே காரணம்?
பதில்: அப்படியெல்லாம் இல்லை போலிருக்கிறதே.
5. காங்கிரசை விட்டு விலக முக்கிய காரணம்?
பதில்: காங்கிரசில் நேரு குடும்பத்தினர் செயலாக இருக்கும் வரை அங்கு தலைமைப் பதவிக்கு வர மற்றவருக்கு வாய்ப்பில்லை. லால் பஹதூர் சாஸ்திரி மற்றும் நரசிம்மராவ் வந்த சமயம் அவர்கள் அவ்வளவு செயலாக இல்லாததே காரணம். ஆக, வி.பி. சிங் தனது அரசியல் முன்னேற்றத்துக்காக செயல்பட்டதில் யாருமே தவறு காணவியலாது என்பதே நிஜம்.
6. காங்கிரஸிலே இருந்திருந்தால் நல்லா இருந்திருக்குமே என சிங் நினைத்திருப்பாரா?
பதில்: கண்டிப்பாக நினைத்திருக்க மாட்டார்.
7. மண்டல் நாயகரின் மறைவு சமுகநீதி காக்கும் முயற்சிக்கு பெரும் இழப்பாகுமா?
பதில்: அவர் எப்போதோ செயலிழந்து ஓரம் கட்டப்பட்டு விட்டார். அதே போல அவரால் என்னென்ன இழப்பெல்லாம் உருவாக்க முடியுமா அவற்றையும் செய்து முடித்து விட்டார். இப்போது அவர் மறைந்ததால் இந்த விஷயத்தில் ஒரு மாற்றமும் இல்லை.
8. அவரது அரசியல் செயல்பாடு பற்றிய தங்களின்/முரளியின் கருத்து ஒன்றா?
பதில்: முரளி பானைகள் செய்து பொற்காலம் காண்பவர். எனக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? ஓ, முரளி மனோஹரை கூறுகிறீர்களா? அவனும் நானும் ஓருடல் ஓர் உயிர் ஆயிற்றே. என்ன, அவனை நேருக்கு நேர் சந்தித்ததில்லை.
9. அவரது பதவிக் காலத்தில் (2.12.1989 to 10.11.1990) பிற சாதனைகள்?
பதில்: மண்டல் கமிஷன் குளறுபடி உங்களுக்கு சாதனையாகத் தெரிகிறதா? கஷ்டம்டா சாமி.
10 .மண்டல் அறிக்கையை தவிர்த்திருந்தால் அவரது ஆட்சி பி.ஜே.பி ஆதரவுடன் தொடர்ந்திருக்குமா?
பதில்: பா.ஜ.க. ஒன்றும் வாயில் விரலை வைத்து கொண்டு தொடர்ந்து ஆதரவு தந்திருக்காது. அப்போதிருந்த மன நிலையில் எல்லோருமே தத்தம் கட்சிக்காக உழைத்தவர்கள். ஆகவே மேலும் ஓரிரு ஆண்டுகள் தாக்கு பிடித்திருக்கலாம் அவ்வளவே.
ரமணா:
1. அரசின் சட்ட திட்டங்களில் உள்ள குறைபாடுகளை சாதுர்யமாய் பயன்படுத்தி பெரும் லாபம் அடைந்து பின்னர் வசமாய் மாட்டிக் கொண்ட பிறகும் வக்கீல்களின் வாதத் திறமையால் குற்றம் செய்ததற்கு தகுந்த ஆதாரம் இல்லை என விடுவிக்கப் பட்டவர்களில் முதல் 10 பேர்களின் பட்டியலையும் அதில் முதல் பரிசை தட்டிச் செல்லும் நபரின் வழக்கு (case history and details) பற்றிய வரலாற்றையும் விவரிக்கவும்.
பதில்: பெரிய பதில் தேவைப்படும். இங்கு போதிய இடம் இல்லை. பிறகு முடிந்தால் தனிப்பதிவாக போடுகிறேன்.
புரளி மனோகர்: (இவரது கேள்விகளுக்கு பதிலளிக்கப் போவது முரளி மனோகர்)
1) உங்களுக்கு வரும் பின்னூட்டத்தில் கேள்விக்குறி இருந்தாலே அதை பிடித்துப் போட்டு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று மொக்கையை ஆரம்பித்து விடுகிறீகளாமே?
பதில்: ஆக, தெரிஞ்சுக்குங்க அப்பு, இந்த பெரிசுக்கு கேள்விக்குறி போட்டு ஒரு பின்னூட்டமும் போட்டுடாதீங்க. அப்படி போட்டீங்கன்னா “வெற்றிக்கொடி கட்டு” வடிவேலு பாணியில் உங்க ஆள்காட்டி விரலை உங்க கண்ணு முன்னாடி நீட்டி இனிமே இப்படி கேள்விக் குறியையெல்லாம் போடுவியான்னு நொந்துக்கணும். அப்ப பஸ் திடீர் பிரேக் போட்டா உங்க விரலே உங்க கண்ணை குத்திடும், சொல்லிப்பிட்டேன்.
2) பதிவெழுத வராவிட்டால் என்ன செய்து பொழுதைப் போக்கியிருப்பீர்கள்?
பதில்: காவிய ரேஞ்சுக்கு மகாபாரதம் எழுதியிருப்பாரு, அடப்போவீங்களா சும்மா சின்னப் பிள்ளத்தனமா கேள்வி கேட்டுக்கிட்டு. தூர்தர்ஷன்லே பேட்டி எடுக்கற வேலை ஏதாச்சும் பாக்கறீங்களா?
3) ஏன் சொல்லி வைத்ததைப் போல் எல்லா பிராமணர்களும் இலங்கைப் பிரச்சினையில் புலி எதிர்ப்பு நிலை எடுக்கிறீர்கள்?
பதில்: அது என்ன பார்ப்பனர்களை வெறுக்கும் எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் அவர்களே கண்ணுக்கு தெரிகிறார்கள்?
4) இடஒதுக்கீடு=திறமையின்மைக்கு முன்னுரிமை என்கிற உங்கள் குரூப்பின் வாதம் புரூணோ அவர்களின் சில பதிவுகளின் மூலம் அடிபட்டுப் போய் உள்ளதே - இப்போ என்ன சொல்கிறீர்கள்?
பதில்: இது ஆத்திக நாத்திக சர்ச்சை போலத்தான். அவரவர் கருத்து அவரவருக்கு. முதல் தலைமுறைக்கு ஒதுக்கீடு தருவதை ஏற்கலாம், ஏற்க வேண்டும். அப்படி ஒதுக்கீடு பெற்று முன்னுக்கு வந்தவுடன் தம் பிள்ளை, பேரன், கொள்ளுப்பேரன் என வரிசையாக ஒதுக்கீட்டை தள்ளிக் கொண்டு போகும் கிரீமி லேயருக்குத்தான் எல்லோரும் ஆட்சேபணை தெரிவிக்கிறார்கள், அதனால் பலன் அடைபவர்கள் தவிர. இதுக்கெல்லாம் முடிவே இருக்காது. என்ன, இப்போது அரசு வேலைகள் சுருங்கி விட்டன. தனியார் துறையில் வேலை அதிகம். அங்கு இட ஒதுக்கீடு இல்லை.
5) இப்படி திராபையான போரடிக்கும் நடையில் பதிவெழுதி வந்தும் எப்படி இத்தனை இத்தனை வருடம் தாக்குப் பிடிக்க முடிந்தது? மூர்த்தி ஒருவேளை உங்களை கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் கி.அ.அ அனானி போல் நீங்களும் சீந்துவாரின்றி இருந்திருப்பீர்கள்தானே?
பதில்: இப்ப அதைப் பேசி என்ன செய்யறது, பெரிசை சீண்டி விட்ட மூர்த்தியின் தலைவிதி அது. அதை விடுங்கள். சத்தியராஜ் சொல்லறா மாதிரி இந்தப் பெரிசின் காரக்டரையே நீங்க புரிஞ்சுக்கல்லையே அப்பு. அதுக்கு தன்னோட மொழிபெயர்ப்புத் துறையிலே மேலும் மேலும் முன்னேறுவதுதான் ஒரே குறி. அதுக்காகத்தான் தமிழிலும் எழுத வந்தது. மேலும் சண்டைக்கார பாப்பான் வேற. எல்லாம் சேர்ந்து ஒரு கலவையா போச்சு. ஆனா ஒண்ணு, சண்டை இல்லாம போயிருந்தாலும் அது எழுதாம விட்டிருக்காது.
(எனக்காக பதில் சொன்னதுக்கு நன்றி முரளி மனோகர்).
அனானி (30.11.2008 காலை 05.44-க்கு கேட்டவர்):
1. இந்தியாவை மட்டும் குறி வைத்து தொடர்ந்து திவீரவாதிகள் தாக்குவதன் காரணம் என்ன?
பதில்: அப்படி எல்லாம் அந்த தீவிரவாதிகளுக்கு பாரபட்சம் கிடையாது. அவர்கள் உலகளாவியவர்கள்.
2. அப்பாவி பொது மக்களை கொல்லுவது ஏன்?
பதில்: அப்போதுதான் அவர்களுக்கு சுவர்க்கமும், அங்கு பருத்த முலையுடைய அழகிய பெண்களும் கிடைப்பார்கள் என அவர்களை தூண்டிவிடுபவர்கள் மூளைச்சலவை செய்து வைக்கிறார்கள் என்பதுதான். அப்படி தூண்டிவிடுபவர்களும் தியாக உணர்ச்சி உடையவர்கள். தமக்கோ தமது பிள்ளைகளுக்கோ அந்த சுவர்க்கமும், அங்கு பருத்த முலையுடைய அழகிய பெண்களும் வேண்டும் என்றெல்லாம் நினைக்காது ஊரார் பிள்ளைகளுக்கே அவை கிடைக்கும்படி செய்வார்கள்.
3. இவர்களை தயார் படுத்தும் நாடு எது என்பதை தெரிந்தும் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே?
பதில்: அந்த நாடே இப்போது தீவிரவாதிகளிடம் திணறுவதாக அறிகிறேன்.
4. பொதுவாக இந்தியாவில் ஒரு சில மத மோதல்கள் இருந்தாலும் எல்லா அரசுகள் மதநல்லிணக்கத்தை நன்றாகத்தானே செயல் படுத்துகின்றன? பின் ஏன் இப்படி?
பதில்: ஆனால் எல்லாமே இந்திய அரசுகள்தானே. ஆகவே டீஃபால்ட்டாக நீங்கள் சொல்வது தீவிரவாதிகளுக்கு ஒரு பொருட்டல்ல.
5. இந்திய பாதுகாப்பு வீரர்களின் முன்னால் எந்த பயங்கர வாதிகளின் பாச்சா பலிக்காது என்று நன்றாய் தெரிந்தும் தற்கொலைப் படையாய் வரும் இளைஞர்களை மூளைச் சலவை செய்வது யார்?
பதில்: இரண்டாம் கேள்விக்கான பதில்தான் இங்கும்.
ஸ்ரீராம்:
1. தமிழ் நாட்டில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை 100% வெற்றிபெற்றது போல் மற்ற மாநிலங்களில் வெற்றி பெறாததற்கு உண்மையான காரணம்?
பதில்: அப்படியா? இம்மாதிரி எங்கும் நான் படிக்கவில்லையே.
2. இட ஒதுக்கீட்டு சலுகையினை ஒரு குறிப்பிட்ட பகுதியினர் தொடர்ந்து மொத்தமாய் அனுபவித்து வருகிறார்கள் என்ற குற்றச் சாட்டு பற்றி?
பதில்: உண்மைதான். அதற்காகத்தான் கிரீமி லேயர் பாகுபாடு தேவை என கோர்ட்டுகள் கருதுகின்றன.
3. ஆண்டு வருமானம் 4.5 லட்சம் என்ற வருமான இலக்கு தினவருமானம் 100 கூட இல்லாத பிற்படுத்த பட்ட மக்களின் குடும்பங்களை பாதிக்காதா?
பதில்: கண்டிப்பாக பாதிக்கும். என்ன செய்யலாம் என்கிறீர்கள்?
4. டாக்டர் புருனோ மாதிரி மருத்துவர்களின் பிள்ளைகள்கூட இந்த சலுகையை ஏழை எளியோருக்கு விட்டுத்தர மனமில்லையே?
பதில்: யாரை வேண்டுமானாலும் கூறுங்கள், ஆனால் மருத்துவர் புரூனோவை கூறாதீர்கள். அவர் கிரீமி லேயர் கான்சப்டை ஒத்து கொள்பவர். ஆனால் அவரது அளவுகோல்கள் வேறு. உதாரணத்துக்கு மருத்துவரின் மகனுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு இந்த கிரீமி லேயர் கோட்பாட்டால் தருதல் ஆகாது. ஆனால் வேறு துறைகளில் படிக்க இட ஒதுக்கீடு தரலாம். அதாவது பணம் மட்டும் போதாது கூடவே பெற்றோரும் படித்தவராக இருக்க வேண்டும் கிரீமி லேயரை அமல்படுத்த. மேல் விவரங்களுக்கு அவரை நேரிலே அணுகலாம்.
5. பொது உடைமை பேசும் அரசியல்வாதிகளிடம் கூட இதில் நியாயம் இல்லையே? இன்னல் படும் பிற்பட்டோரை உண்மையிலே முன்னேற்ற வேண்டுமென்றால் குறைந்த வருமானம் உள்ளோருக்கு உள் ஒதுக்கீடு செய்து, பின்னர் நிரப்பமுடியாவிட்டால் உள்ள காலியிடங்களை வசதி படைதோருக்கு(புருனோ போன்ற முன்னேறிய பாக்யவான்கள்) அளிப்பதே உண்மையான சமுகநீதி ஆகாதா?
பதில்: சமூக நீதி என காரியம் செய்தால் தேர்தல் சமயங்களில் யாரிடம் நிதி பெறுவதாம்?
6. தலித் தலைவர்கள்கூட இதில் பிற்பட்ட சமுகத் தலைவர்களை பின்பற்றுவது சரியா? குடும்பத்தில் முதல் மற்றும் இரண்டாம் தலைமுறைகளுக்கு மட்டும் சலுகை அளிக்கும் சுழற்சிமுறை நன்மைபயக்குமா வறியோருக்கு?
பதில்: தவறான புரிதல். கிரீமி லேயர் என்பது பிற்படுத்தப்பட்டவருக்குத்தான். தலித்துகளுக்கு அல்ல. அவர்கள் எவ்வளவு பணம் படைத்தவராக இருந்தாலும் கல்வி இலவசமே. விண்ணப்பப் படிவங்களுக்கு குறைந்த கட்டணமே. இன்னும் பல உண்டு.
7. தங்களை போன்ற பெரியவர்கள் இந்த நற்பணியை தொடங்கலாமே?
பதில்: செய்யலாம், ஆனால் என் ஜாதியைக் காட்டி நான் செய்வதை எதிர்ப்பார்கள். ஆளை விடுங்கள். எனக்கு வேறு முக்கியமான வேலைகள் உண்டு.
அனானி (30.11.2008 இரவு 9.26-க்கு கேட்டவர்):
1. ஐயங்கார் ஆத்து புளியோதரை, ஐயர் ஆத்து மாவடு இவை மட்டும் சுவைமிகுந்திருப்பது ஏன்? தயாரிப்பின் ரகசியம் என்ன?
பதில்: அதுதான் கூறிவிட்டீர்களே ரகசியம் என்று. எங்காத்து பொம்மன்னாட்டிகள் சுலபத்தில் அந்த ரகசியம் எல்லாம் சொல்ல மாட்டாங்களாக்கும். என் வீட்டம்மாவிடம் நைச்சியமாக புளியோதரை பற்றி கேட்க அவர் என்னை “அடே பாதகா” என்ற ரேஞ்சுக்கு முறைத்து பார்த்து விட்டு அகன்றார்.
எம். கண்ணன்:
1. பெரும்பாலும் எல்லா அரசு அதிகாரிகள் (ஏன் பொதுத்துறை அலுவலக அதிகாரிகள் கூட) தங்கள் நாற்காலியில் ஒரு டர்க்கி டவலை (பூத்துவாலை) போட்டு அதன் மீது சாய்ந்து கொள்கின்றனரே? அதில் என்ன சௌகர்யம்?
பதில்: I understand that it is being issued by the concerned departments as a matter of course to officers above certain levels, say Class I officers.
2. இந்திய/தமிழக அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கை என்ன ஆனது ? இப்போதெல்லாம் இது பற்றி யாரும் பேசுவதில்லையே? மக்கள்தொகை பெருகினால் நாடு நல்லாருக்கும்னு நெனைக்கிறாங்களா?
பதில்: சிறு குடும்பத்தின் சௌகரியத்தை மக்களாகவே பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என நினைக்கிறேன். இன்னொன்று, இது தொடர்ந்து நடக்கும் பிரச்சாரம். ஓரளவுக்கு பிறகு இந்த பிரச்சாரத்தை மக்கள் கவனிப்பதில்லை.
3. சஞ்சய் காந்தி பிரதமராக இருந்திருந்தால் நாடு எப்படி இருந்திருக்கும்?
பதில்: ஒன்று நிச்சயம். சஞ்சய் உயிருடன் இருந்திருந்தால் இந்திரா இறந்ததும் தில்லியில் உள்ள சீக்கியர்கள் முழுமையாக கொல்லப்பட்டிருப்பார்கள் என்று அக்காலக் கட்டத்தில் பலர் பேசியதை நான் கேட்டிருக்கிறேன்.
4. வெளிநாட்டு மருமகளான சோனியாவை வீட்டுக்குள் சேர்த்த இந்திராகாந்தி, உள்நாட்டு இந்து மருமகளை வெளியேற்ற என்ன காரணம்?
பதில்: மேனகா காந்தி தனிப்பட்ட முறையில் தன் செல்வாக்கை வளர்க்க நினைத்தார். சோனியா அப்படியில்லை. அதுதான் காரணம். அதுவே சஞ்சய் உயிருடன் இருந்திருந்தால் நிலைமையே தலகீழாக ஆகியிருந்திருக்கும்.
5. மணியடிக்கும் அமைச்சருக்கு முப்பத்தாறாயிரம் கோடி ரூபாய் ஸ்விஸ் வங்கியில் இருக்கிறதாமே (குமுதம்)? இவ்வளவு பணம் இந்தத் துறையில் எப்படி கிடைத்தது?
பதில்: யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் ஒன்று கூறுவேன். அரசியல்வாதியை எங்கு வைத்தாலும் சம்பாதிப்பான்.
6. ஸ்பெக்டிரம் ஊழலில் கிடைத்த பல்லாயிரம் கோடி ரூபாய்கள் ஃப்ரூட் லாங்குவேஜ் ஸ்விஸ் வங்கிக் கணக்கில் போடப்பட்டுள்ளதாமே? (குமுதம்) அவ்வளவு பணத்தை வைத்து என்ன செய்வார் அந்தக் கவிஞர்?
பதில்: தொலைக்காட்சி போட்டிகளில் வெற்றி பெற்றவரை பார்த்து காம்பியர் கேள்வி கேட்பது போல இருக்கிறது இக்கேள்வி. என்ன செய்வாரா? தற்சமயம் அடுத்த 3 தலைமுறைக்கு மட்டும்தானே இதுவரை சேர்த்தது போதுமானதாக இருக்கும். அதற்கு பின்னால் வரும் தலைமுறையினர் பாவம் இல்லையா?
7. சோ, சுஜாதா இவர்களுக்குப் பிறகு பிராமணர்களின் உணர்வுகளை மீடியாவில் முன்னெடுத்துச் செல்ல யாரும் இருப்பது போல் தெரியவில்லையே? (கவனிக்கவும் - இங்கு பிராமணீயத்தைக் குறிப்பிடவில்லை - பிராமணர்களின் உணர்வுக்கு ஒரு புரிதலையும் ஒரு ஸ்பேஸ் கிரியேஷன் செய்வது பற்றி) வேறு யார் தற்போது இருக்கிறார்கள்?
பதில்: சிறு டைவர்ஷனுக்கு மன்னிக்கவும். ஒரு ஹிந்தி எழுத்தாளர் இலக்கிய உலக ஜாம்பவான்களைப் பற்றி பேசும்போது இவ்வாறு கூறினாராம். “ஹிந்தி இலக்கிய உலகில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டு வருகிறது. பிரேம்சந்த் மறைந்தார். கவிஞர் ஹரிவன்ஷ்ராய் பச்சன் இப்போது நம்மிடையே இல்லை, எனக்கும் சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது”. ஆக சுஜாதா இல்லை. சோவுக்கும் வயதாகி கொண்டே போகிறது. இந்த டோண்டு ராகவனுக்கு மட்டும் வயது குறைகிறதா என்ன? :))))))))
8. ஹிண்டுவில் ரீடர்ஸ் எடிட்டர் பத்திகளில் பெரும்பாலும் என்.ராமின் நிலையை வாசகர்கள் வறுத்து எடுக்கின்றனரே? அதை ரீடர்ஸ் எடிட்டரும் அனுமதிக்கிறாரே? ஹிண்டுவில் வரும் ஆங்கிலத்தில் தற்போது அடிக்கடி தவறாக வருவது சுட்டிக் காண்பிக்கப்படுகிறது. ஹிண்டு நிருபர் மகனார் சொல்வது என்னவோ?
பதில்: என். ராமுக்கு தனது நிலைப்பாடு பற்றி தெளிவு உண்டு. ஆகவே தன்னைத் தாக்கிவரும் கருத்துக்களை கண்டு உணர்ச்சிவசப்படுவதில்லை என்பதுதான் நிஜம்.
ஒரு காலக்கட்டத்தில் ஹிந்து பத்திரிகையில் ஆங்கிலப் பிழை வந்தால் சம்பத்தப்பட்ட சப் எடிட்டரை வறுத்து எடுத்து விடுவார்கள். இப்போது பிழைகள் மலிந்து விட்டன என்றுதான் கூறவேண்டும். ஆனால் இது உலகளாவிய விஷயம். மக்களின் முன்னுரிமைகள் மாறி வருகின்றன. பணம் அதிகம் ஆட்சி செலுத்த ஆரம்பித்து விட்டது. இதை தவறு என கூறவியலாது. வாழ்க்கையில் வரும் திருப்பங்கள் வேகம் எடுத்துள்ளன.
9. வீட்டில் உடுத்துவது வேட்டியா? லுங்கியா? ஏன்?
பதில்: லுங்கிதான். ஆனால் தைத்த லுங்கி அல்ல. தட்டுக்கட்டுதான். இது சௌகரியம் கருதி.
10. ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன் போன்ற மெலடி பாடகர்களை தற்போது பாடல்களில் காண முடிவதில்லையே? என்ன காரணம்?
பதில்: மெலடி பாட்டுக்களே குறைந்து விட்டன போலிருக்கிறதே.
11. உங்கள் கேள்வி பதில் பகுதியை புதன்/வியாழனில் வெளியிட்டால் பதில்கள் பற்றிய விவாதங்கள் பின்னூட்டங்களில் அதிகம் வருமென்று நினைக்கிறேன். வெள்ளியில் வருவதால், பின்னூட்டங்கள்/விவாதங்கள் அவ்வளவாக இல்லை. உங்கள் கருத்து என்ன?
பதில்: அதாவது இணையத்தில் வருபவர்களில் முக்கால்வாசி பேர் அலுவலகங்களில் ஆணிபிடுங்காது தமிழ்மணம் பார்க்கிறார்கள், ஆகவே வார இறுதி நாட்களில் கணினி அருகே வரமாட்டார்கள் என்ற எண்ணமா?
சேதுராமன்:
1. This is a perennial complaint in the Tamil writers' world. Why should one be unhappy and jealous about others who are prospering? Most consider themselves intellectuals and comments freely about others. When will this curse go?
பதில்: இது தமிழ் இலக்கியவுலகுக்கு மட்டும் பொருந்தும் விஷயம் அல்ல. எல்லா மொழிகளிலும் உள்ளே புகுந்து பார்த்தால் இந்த விஷ்யங்களைக் காணலாம். பொறாமைப்படுவது மனித இயற்கை. அது இல்லாமல் இருந்திருந்தால் முன்னேற்றமே வந்திராது.
2. Last week I asked you whether Patil should still remain in the cabinet? - you now have the answers - Do you feel that these resignations will set things right?
பதில்: இதனால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? இஸ்ரவேலர்களின் மன உறுதியை போன்று நம்மவர்களும் பெறுவதே சிறப்பு. ஆனால் அவ்வாறு செய்வதற்கான அறிகுறிகள் லேது.
கிருஷ்ணன்:
1. Whom do you think instigated Mumbai siege this time?
பதில்: வழக்கம்போல இந்தியாவை வெறுக்கும் மனிதர்கள்தான்.
2. How do you think India should react ? I know you admire Israel. Will you call for strikes against Pakistan? I am sure you will keep in mind Pak's nuclear weapons capability.
பதில்: இஸ்ரவேலர்களை குறிப்பிட்டு கேட்பதால் கூறுகிறேன். இராக் அணு ஆயுதங்கள் செயலாம் என்ற நிலை வந்தபோதே அதன் அணுநிலையங்களைத் தாக்கி அழித்தது இஸ்ரேல். அப்போது அதை திட்டியவர்கள் வளைகுடா யுத்தத்தின்போது வெளிப்படையாக கூறாவிட்டாலும் மனதுக்குள் வாழ்த்தினார்கள். இஸ்ரவேலர்கள் இப்போது தரும் ஆலோசனைகளை இந்தியா ஏற்க மறுத்துவிட்டதில் நமக்குத்தான் நஷ்டம்.
3. What is your opinion of blanket coverage of Mumbai siege by English news channels?
பதில்: வெட்கக்கேடு. எரியும் வீட்டில் சிகரெட்டுக்கு நெருப்பு எடுப்பது போன்ற செயல்.
4. Most bloggers are severely castigating Barkha Dutt of NDTV, Rajdeep Sardesai of CNN-IBN and Arbab Goswami of Times Now. Do you agree that these correspondents overstepped their limits this time?
பதில்: ஆம்.
5. What is your take on Shri Hemant Karkare's wife's refusal of Shri Modi's one crore compensation?
பதில்: அது அவரது தனிப்பட்ட முடிவு. நான் இதில் கூற என்ன இருக்கிறது? அவரது சோகத்தை மதிக்கிறேன்.
6. Lastly, whom do you think is in the wrong - Maj. Sandeep's father for refusing to meet with Kerala Chief Minister or Kerala CM's uncharitable comments?
பதில்: இட்லி வடையார் இந்தப்பதிவில் கேட்ட கேள்வியின் பதில்தான் இங்கும். அதாவது:
மூளை இல்லாமல் எவ்வளவு நான் உயிருடன் வாழலாம்? விடை: தெரியாது. அச்சுதானந்தனின் வயசு என்ன ?
அனானி: (03.12.2008 பிற்பகல் 01.58-க்கு கேட்டவர்)
1. கலைஞர் அவர்களின் குடுமபத்தில், கழக உடன்பிறப்புக்களின் மகிழ்ச்சியை கூட்டும் வகையில் நடந்த சமரசம் எப்படி, யாரால் நடத்தப்பட்டது?
பதில்: எல்லோருக்கும் பணம் வருமென்றால் ஒற்றுமை வருவதற்கு என்ன தடை?
2. சமரசம் தொடருமா?
பதில்: தேர்தல் முடியும் வரைக்குமாவது நிச்சயம் தொடரும்.
3. மதுரை மாவீரன் அழகிரி திடிரென சமாதானம் புரியாத புதிராய் உள்ளதே?
பதில்: பணம் பாதாளம் வரை பாயும் அல்லவா?
4. ஸ்டாலின் அவர்களுக்கு லயன் க்ளியரா?
பதில்: அழகிரிதான் பதில் சொல்ல வேண்டும்.
5. இனி கேப்டன் கதை அவ்வளவுதானா?
பதில்: திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பிளக்கும் வரையில் அவரை விட்டு வைப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது.
6. அம்மையார் ஜெ.யின் கனவும் கலைந்துவிட்டதா?
பதில்: கனவு கண்டு பயன் இல்லை. செயல்தான் வேண்டும் என்ற அளவில் புரிதல் வந்தால் நல்லதுதானே.
7. இனி கலைஞர் டீவி தொடருமா?
பதில்: பிற்காலத்தில் மாறன் சகோதரர்கள் பால்மாறுவார்களோ என்னும் பயம் மறையும் வரைக்கும் அதுபாட்டுக்கு இருக்கும்.
8. கலைஞர்+சன் குழும செய்தி சேனல்கள் முன்னால் மத்தவை எல்லம் காற்றில் கரையும் பெருங்காயமாகுமா?
பதில்: அதைக் காலம்தான் தீர்மானிக்கும்.
9. அரசு டீவி,ராயல் கேபிள் விஸன் ஆகியவற்றின் எதிர்காலம்?
பதில்: அவற்றுக்கு மங்களம் பாடிவிடுவார்கள் என்று கூறக் கேட்டேன்.
10. ஸ்பெக்டரம் சர்ச்சை அடங்குமா? எகிறுமா?
பதில்: குடும்பத்தை சேராதவர்கள் காவு கொடுக்கப்படுவார்கள் என நினைக்கிறேன்.
11. 2000 கோடி பெற்றதாய் செல்லப்படுபவ்ர் தனிமைபடுத்தப்படுவாரா?
பதில்: இரண்டாயிரம் கோடி இருந்தால் தனிமை ஒரு பொருட்டா? “தனிமையிலே இனிமை காண முடியுமா” என்றெல்லாமா அதற்காக பாடவியலும்?
12. இரண்டாம் அக்னிநட்சத்திரமா?(பிரபு, கார்திக், மணிரத்னம் கூட்டணி)
பதில்: இரண்டாம் மகாபாரதமாகத்தான் தோன்றுகிறது, திருதிராஷ்டிரன் பாத்திரத்துக்கு ஆள் ரெடி என்பதால்.
13. மதுரை தினகரன் வழக்கு என்னவாகும்?
பதில்: வழக்கு ஆரம்பமானதாகவே தெரியவில்லையே.
14. பெரியவரின் நிம்மதி அவரது 85 வது வயதில் குருப்பெயர்ச்சி தந்த அருளா?
பதில்: அவருக்கு அதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. அதே சமயம் அவரது மனைவியருக்கு அதில் நம்பிக்கை இருந்து பூஜைகள் செய்து வரும் பிரசாதங்களைப் பெறுவது குறித்து ஆட்சேபணையும் இருக்காது.
15. ஸ்டாலினைவிட தயாநிதி படித்தவர்,பண்பாளர்,இளைஞர்,நிர்வாக இயல் படித்தவர், திறைமைசாலி... இதில் தங்களுக்கு மாற்று கருத்து உண்டா?
பதில்: மனப்பூர்வமாகவே கூறுகிறேன். ஸ்டாலின் அவர்கள் பல ஆண்டுகளாக உழைத்த அளவுக்கு தயாநிதி உழைக்கவில்லை. ஆகவே முதல்வர் பதவிக்கு ஸ்டாலினுக்கே அதிகத் தகுதி.
அனானி (03.12.2008 பிற்பகல் 02.06-க்கு கேட்டவர்)
1. இந்தியாவில் நடைபெற்றுவரும் பயங்கரவாத செயல்களுக்கு காரணமானவர்களை தேடி கைது செய்வதை முனைப்புடன் செயல்படுவதை தடுப்பது இஸ்லாமியர் ஓட்டு வங்கியா?
பதில்: அதுவும் ஒரு காரணம்.
2. அமெரிக்கா செய்ததுபோல் இந்தியாவும் ராணுவரீதியாக ஆக்கிரமிப்பு பகுதிகளில் தீவிரவாதிகளின் செயல் திட்டத்தை முழுவதும் முடக்கலாமே?
பதில்: பகல் கனவால் என்ன பலன்?
3. கேரள முதல்வருக்கு என்ன ஆச்சு? இப்படி ஒரு சிக்கல்?
பதில்: மேலே சேதுராமன் அவர்களுக்கு நான் அளித்த பதில்தான் இங்கும்.
4. பம்பாய் ஸ்டார் ஹோட்டல்களுக்கு தீவிரவாதிகளின் செயலால் சேதம் மதிப்பு எவ்வளவு இருக்கும்?
பதில்: அவர்களது இன்ஷூரன்ஸ் கம்பெனி தர வேண்டிய பதிலை நான் எவ்வாறு தருவதாம்?
5. புல்லட் புரூப் கோட்டுகளிலும் ஊழலா?
பதில்: ஒருவன் தலையில் சுட்டால் எப்படிப்பட்ட புல்லட் புரூஃப் கோட்டும் பலன் தராதே.
குப்புக்குட்டி:
1. சில பேருக்கு மஞ்சள், "படிக்க" சிலருக்கு நீலம், "பார்க்க" சிலருக்கு பச்சை, "பேச" சிலருக்கு சிவப்பு, "போக" -பிடிப்பது ஒரு வகையில் மன விகாரங்களுக்கு வடிகால் தேடும் உளரீதியான செயல் என்கிறார்கள். வலையில் யாரையேனும் கருத்துகளால் சாடமுடியாத போது அசிங்கமாக எழுதுகிறார்களே ! இது ஒரு நோயா அல்லது இதுதான் எண்ணுக்குத் தெரியும் என்ற இயலாமையா?
பதில்: வடிகால் மாதிரித்தான் அந்த உணர்ச்சிகளை உபயோகிக்கிறார்கள். என்ன, அதையே மற்றவர் இவர்களுக்கெதிராகச் செய்யும்போது அதை பொறுத்து போகும் பக்குவம் இல்லை. வலையில் மட்டும் ஏன், ஆதிசங்கரர் வாழ்க்கையிலேயே ஒரு உதாரணம் உண்டு. அவருக்கும் மண்டனமிகிரர் என்பவருக்கும் வாதம். மண்டனமிகிரரின் மனைவி சரஸ்வதியின் அம்சம். அவர்தான் நடுவராக இருக்கிறார். அவர் வாதமிடும் இருவருக்கும் ஒவ்வொரு மாலையை தந்து, அதை அணிந்து கொண்டு வாதம் செய்ய வேண்டும் என்றும், யார் மாலை முதலில் வாடுகிறதோ அவர் தோற்றதாகக் கருதப்படுவார்கள் என்றும் கூறுகிறார். இதில் என்ன சூட்சுமம் என்றால், வாதத்தில் வெல்ல முடியாதவனுக்கு கையாலாகாத கோபம் வரும் ஆகவே உடல் உஷ்ணமாகி மாலை சீக்கிரம் வாடிவிடும் என்பதே.
ராமகிருஷ்ணஹரி:
1. For want of a nail the shoe was lost// for want of a shoe the horse was lost//
for want of a horse the rider was lost// for want of a rider the battle was lost//
for want of a battle the kingdom was lost// and all for the want of a horseshoe//
Seeing this rhyme for all time reference, what is your expert comment in connection with present conditions in India?
பதில்: தேவிலால் விவசாயிகள் ஊர்வலம் நடத்த, அதற்கு எதிர்வினையாக பாஜக அத்வானி ரத யாத்திரை நடத்த, தான் மட்டும் லேசுப்பட்டவரா என வி.பி. சிங் மண்டலை எடுத்து தூசிதட்ட, பாஜக தனது ஆதரவை வாபஸ் வாங்க, வி.பி. சிங்கிற்கு பதவி பறிபோக, சந்திரசேகர் வர, கருணாநிதியின் அரசு கலைக்கப்பட, 1991-ல் ஜெயலலிதா பதவிக்கு வர என்று ஒரு கோர்ஸ் முடிந்தது.
அடுத்த கோர்ஸ் வளர்ப்புமகன் திருமணம் வர, நரசிம்மராவ் ஜெயலலிதாவுடன் ஒப்பந்தம்போட, தமாக உருவாக, ஜெயலலிதா தேர்தலில் தோல்வியடையஎன்றும் ஒரு கோர்ஸ் நடந்தது. இப்படி எல்லா விஷயங்களுக்கும் மூல காரணம் ஆரம்பத்தில் அல்பமாகவே இருந்து வந்திருக்கிறது. இதையே நம்ம ஔவை பிராட்டியார் நேர்மறையாகக் கூறியதுதான், “வரப்புயர நீருயரும், நீருயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோன் உயர்வான்”. ஔவை சொன்னதுக்கும் ஆங்கில ரைம்ஸுக்கும் உள்ள வித்தியாசம்? "Tit for tat", "Quid pro quo" என்னும் இரு வாக்கியங்களுக்கும் உள்ள பார்வைக் கோண வேறுபாடுதான்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
கிறிஸ்துவமே ஐரோப்பாவின் பண்பாட்டுமையம்
-
நியூயார்க் நகரின் மையத்தில் அமர்ந்து செய்த ஒரு காணொளி. அந்த இடத்தில்
அப்போது உருவான எண்ணம் அப்படியே வெளிவரவேண்டும் என நினைத்தேன். மைக்
பொருத்துவது வரை ஒரு ...
3 hours ago
12 comments:
Respected dondu sir,
Dondu's answers 5.12.2008 is published only at 05:50 hrs. But in your posting it is shown as 05:00.a.m. Please check your computer clock time setting .If computer setting is correct please explain the time difference between the two.
Thank you very much for replying my qestion , asked at 11:05 p.m.of 04-12-2008.
சூட்சுமமாக கவனித்துள்ளீர்கள். நேற்று இரவு 8 மணியளவில் எல்லாவற்றையும் முடித்துவிட்டு இன்று காலை 5 மணிக்கு பப்ளிஷ் ஆகுமாறு முன் அமைவு செய்து வைத்திருந்தேன். கணினியை மூடும் சமயத்தில் உங்கள் கேள்வி வந்தது. அதற்கும் பதிலளித்துத்தான் கணினியை மூடினே. ஆனால் திடீரென இன்று விடியற்காலை 04.50-க்கு மீள் பார்வை செய்யும்போது ஔவையின் வரப்புயர பாடலையும் சேர்க்கலாம் என தோன்றியது. கூகளில் அதைத் தேட வேண்டியிருந்ததால் முன்னமைவு செய்யப்பட்ட பதிவை வரைவாக மாற்றினேன். எல்லாம் சேர்த்து போடும்போது கீழே நேரத்தை மாற்ற மறந்திருக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சென்ற நூற்றாண்டிற்கும் இந்த நூற்றாண்டிற்கும் இடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள்,நன்மைகள்,தீமைகள்,ஆபத்துகள்,சாதனைகள்,வேதனைகள்,லாபங்கள் ஆகியவற்றை கீழ்கண்ட துறைகளில் ஓப்பிடுக
1.அரசியல்
2.வாணிபம்
3.நாடகம்
4.சினிமா
5.இசை
6.இலக்கியம்
7.பத்திரிக்கை
8.அறிவியல்
9.ஜாதி,சமயம்,பக்தி
10.மனிதநேயம் மற்றும் மனித உறவுகள்
//சேதுராமன்:
1. This is a perennial complaint in the Tamil writers' world. Why should one be unhappy and jealous about others who are prospering? Most consider themselves intellectuals and comments freely about others. When will this curse go?
பதில்: இது தமிழ் இலக்கியவுலகுக்கு மட்டும் பொருந்தும் விஷயம் அல்ல. எல்லா மொழிகளிலும் உள்ளே புகுந்து பார்த்தால் இந்த விஷ்யங்களைக் காணலாம். பொறாமைப்படுவது மனித இயற்கை. அது இல்லாமல் இருந்திருந்தால் முன்னேற்றமே வந்திராது.//
ப்ளாக்குல மட்டும் என்ன வாழுதாம்!
இந்தியா துணைக்கண்டத்தில், வட இந்தியாவில் பிரச்சனைக்குரிய இடங்களான காசி,அயோத்யா,மதுரா( உத்திர பிரதேச மாநிலம்) முதலிய புண்ணிய ஸ்தலங்களுக்கு விஜயம் செய்துள்ளீர்களா?அந்த இடங்களில் பலத்த போலிஸ் காவலும்,தீவிரக் கண்காணிப்பும் உள்ளதாய் செய்திகளும்,ஊடகங்களும் சொல்லுகின்றனவே.அந்த இடங்களின் உண்மை நிலையை வரலாற்று சான்றுடன் நடு நிலைமையுடன் விளக்கவும்.தங்களின் விளக்கம் இஸ்லாமிய சகோதரர்களின் கண்களைத்( ஒரு குறிப்பிட்ட பகுதியினர்) திறந்து நாளை மார்ச் 6 அமைதி காக்கும் நாளாய் தொடரவேண்டும்.(சிவகாசி பட்டாசு)வெடி சத்தம் இனி திபாவளி,கார்த்திகை,க்ருஸ்துமஸ்,புத்தாண்டு,சுதந்திர தினம் போன்ற பன்டிகை நாட்களில் மட்டும் ஒலிக்கட்டுமே!
இதை, நாளை தனி பதிவாய் போட்டால் நல்லது.தங்களின் கால அவகாசம்,வேலைப் பழு இவைகளுக்கு இடையே பாரததின் நன்மை கருதி இதை பதிவதற்கு அன்புடன் வேன்டுகிறேன்.
சங்கடமான கேள்விகளோ??
- புரளி
@புரளி
போலி டோண்டுவின் கதை முடிந்தாயிற்று. அவனைப் பற்றிய கேள்விகள் வேண்டாமே. முன்னே செல்வோம். வேறு பல முக்கிய விஷயங்களை கவனிப்போம்.
நீங்கள் கூட பிளாக்கராக வருவதையே விரும்புவேன். மற்றப்படி உங்கள் விருப்பம். கேள்விகள் கேளுங்கள் முடிந்தவரை பதிலளிக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சிக்கல் என்னவென்றால், உங்களை - when I say 'உங்களை' I mean all you brahmin bloggers - விமர்சித்தோ - உங்களால் எதிர்கொள்ள முடியாத கேள்விகளையோ கேட்டால் நீங்கள் இன்னும் கூட ( அதாவது பிரச்சினை தீர்ந்த பின்னும் கூட ) ஈஸியாக “-------ன் அல்லக்கை” என்று சொல்லி விடுகிறீர்கள். ஏன் எனக்கு பதிலளித்துள்ளதில் கூட இதே உத்தியைத் தானே பின்பற்றியிருக்கிறீர்கள்? இது தவறு தானே?
நானே அந்தக் கேள்விகளில் முதல் சில கேள்விகள் முடிந்தவுடன் அந்த நாத்தம் பிடித்த மேட்டர் போதும் என்று தானே சொல்லியிருந்தேன்?
சரி விடுங்கள்.... ஒரு சின்ன ஹெல்ப் பண்ணுங்க - நான் கேட்ட கேள்விகளில் ------ தவிர்த்து நாட் கேட்டதை நீங்களே கட் செய்து பிரசுரித்து விடுங்களேன்.
- புரளி
அட.. இப்பத்தான் கவனிக்கிறேன்.. ”உங்கள் எஜமான் -----ஐக் கேளுங்கள்” என்று இருந்ததை மாற்றியிருக்கிறீர்களே?
வெவரமானவர் தான்
- புரளி
//சரி விடுங்கள்.... ஒரு சின்ன ஹெல்ப் பண்ணுங்க - நான் கேட்ட கேள்விகளில் ------ தவிர்த்து நாட் கேட்டதை நீங்களே கட் செய்து பிரசுரித்து விடுங்களேன்.//
கண்டிப்பாக. அவற்றை வரைவில் போட்டாச்சு, முரளிமனோஹர் பதில்களும் தந்தாச்சு. அடுத்த வெள்ளிக்கிழைமைக்கு வெளி வரும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நீங்கள் இன்னும் கூட ( அதாவது பிரச்சினை தீர்ந்த பின்னும் கூட ) ஈஸியாக “-------ன் அல்லக்கை” என்று சொல்லி விடுகிறீர்கள். ஏன் எனக்கு பதிலளித்துள்ளதில் கூட இதே உத்தியைத்தானே பின்பற்றி யிருக்கிறீர்கள்? இது தவறு தானே?//
ஏதோ மூர்த்தியின் தயவு இல்லாவிட்டால் நான் கேட்பாரற்று போயிருப்பேன் என நீங்கள் வருத்தப்படுவது போல குறிப்பிட்டதும் தவறுதானே. அதனால்தான் முரளிமனோஹர் அப்படி எழுதினான்.
பிறகு நீங்கள் சொன்னதற்கு மதிப்பளித்து நீக்கவேண்டியதை நீக்கினேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
You seem to be liking Israel, Srilankan Government and Modi. Dont you think there is an explicit pattern?
Post a Comment