12/13/2008

போகட்டும் விடு நண்பா, சண்டை வேண்டாம்

சமீபத்தில் 1983-ல் வந்தது ஜானே பீ தோ யாரோ என்னும் ஹிந்திப்படம். முதலில் அதிலிருந்து ஒரு காட்சியைப் பாருங்கள். ஹிந்தி தெரியாவிட்டாலும் பரவாயில்லை, நான் பிறகு விளக்குகிறேன்.

முதலில் கதை ரவி பாஸ்வானி மற்றும் நஜுருத்தீன் ஷா ஆகிய இருவரும் லட்சிய நோக்கை கொண்டுள்ள புகைப்படக்காரர்கள். அவர்கள் ஒரு சமூக பிரச்சினைகளை அலசி விவாதிக்கும் பத்திரிகையில் சேருகின்றனர். பத்திரிகையின் ஆசிரியை ரொம்பவும் லட்சியவாதி (என காட்டி பந்தா செய்பவர்). அதே நகரத்தில் இரண்டு ஒப்பந்தக்காரர்கள், பங்கஜ் கபூர் மற்றும் ஓம்புரி. அவர்களுக்குள் போட்டி. அதில் முன்னவர் நகரசபை கமிஷனரை தன் வசப்படுத்தி பல ஒப்பந்தங்களை பெறுகிறார். இன்னொருவரும் கமிஷனரை தன்வசப்படுத்த, முதல் ஒப்பந்தக்காரர் கமிஷனரை போட்டுத் தள்ளிவிடுகிறார். கமிஷனரின் பிணத்தை சவப்பெட்டியில் வைத்து தான் கட்டிய மேம்பாலத்திலேயே ஓரிடத்தில் புதைத்து விடுகிறார்.

துரதிர்ஷ்டவசமாக சரியாக கட்டப்படாத அந்த மேம்பாலம் இடிந்து விழுகிறது.

எதேச்சையாக பிணத்தை கண்டெடுக்கின்றனர் நம் கதாநாயகர்கள். இதை அறிந்த பத்திரிகை ஆசிரியை பிணத்தைத் தன்வசப்படுத்த அவர்களை அனுப்ப, பிணம் காணாமல்போக, எப்படியோ பிணத்தை கண்டுபிடித்து இவ்விருவரும் அதற்கு ஸ்கேட்டிங் உருளைகளை அணிவித்து தங்களுடன் எடுத்து செல்ல என்று படம் விறுவிறுவெனச் செல்கிறது. கடைசியில் மகாபாரதத்தில் பாஞ்சாலி சபதம் காட்சி நடக்கும் கட்டத்தில் கிரீன்ரூமுக்குள் இவ்விருவரும் பிணத்துடன் வருகின்றனர். அதன் பிறகு வரும் காட்சிதான் மேலே உள்ள யூட்யூப் க்ளிப்பிங். பிணத்தை பாஞ்சாலி என துச்சாசனன் இழுத்து வருகிறான். துரியோதனன் பேசிக் கொண்டிருக்கும்போதே துரோபதை அவன் மேல் சாய்கிறாள். வியர்த்து விறுவிறுத்து போகிறான் துரியோதனன். நடுவில் நசிருத்தீன் ஷா துரியோதன வேடதாரியை அடித்து போட்டுவிட்டு தானே துரியோதனனாக மாறி துரோபதை தனது அண்ணி ஆகவே துகிலுரிய விடமாட்டேன் எனக் கூற, துச்சாசன நடிகர் குழம்ப பிறகு அவர் இடத்தில் ரவி பாஸ்வானி வந்து அண்ணன் துரியோதனன் சொல்வதுபோல அண்ணி அன்னைக்கு சமம் என டயலாக் விட, யுதிஷ்டிரர் துரியனிடம் சீறுகிறார், “தம்பி துரியோதனா, நீ இங்கு என்ன செய்ய்ய வேண்டுமோ அதைச் செய்யாது ஏன் சொதப்புகிறாய் எனக் கேட்க நாடக ஆடியன்ஸில் விசில் அமளி.

ஓம்புரி பீமன் நடிகரை சாய்த்துவிட்டு பீமனாக வந்து, அவர் வேறு அலம்பல் செய்கிறார். இதில் திருதிராஷ்டிரனாக வருபவர்தான் முடிந்தவரை நாடகத்தைக் காப்பாற்ற நினைக்கிறார். காப்பாற்றியும் இருப்பார், ஆனால் பங்கஜ் கபூர் அக்பராக உள்ளே வர, “this is too much, யே அக்பர் கஹான் சே ஆயா (இந்த அக்பர் எங்கேயிருந்து வந்தான்)” என சீறுகிறார்.

பிறகு போலீஸ் வருகிறது என வைத்து கொள்ளுங்கள். கதாநாயகர்கள் போலீஸ்காரனிடம் எல்லா உண்மைகளையும் கூறுகின்றனர். ஆனால் பயன் ஏதும் இல்லை. நகரசபை உதவி கமிஷனர் சண்டைக்கார ஒப்பந்தக்காரர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியை இவர்களுக்கிடையில் சமாதானம் செய்வித்து யார் யாருக்கு எவ்வளவு பணம் என்பதையும் தீர்மானம் செய்கிறார். அது சரி யாரை கைது செய்வது? குழப்பமே இல்லை. பங்கஜ் கபூர் கட்டிய மேம்பாலம் இடிந்து விழுந்ததற்கு கதாநாயகர்களே பொறுப்பு என குற்றம் சாட்டி அவர்களை கைது செய்கின்றனர்.

இப்போது பங்கஜ் கபூர் ஸ்க்ரீனுக்கு வந்து நம்மிடம் பேசுகிறார். “எல்லாம் ஒருவழியாக முடிந்தது. இவ்விருவரும் ஜெயிலில். கேஸ் நடக்கும். ஆறு மாதங்களுக்கு பிறகு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். அதற்குள் எல்லோரும் இந்த விஷயத்தை மறந்திருப்பார்கள்” என கதையை முடிக்கிறார்.

அதாவது ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் முடிந்துபோன கதை என்று சொல்வது போல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

26 comments:

Anonymous said...

//இப்போது பங்கஜ் கபூர் ஸ்க்ரீனுக்கு வந்து நம்மிடம் பேசுகிறார். “எல்லாம் ஒருவழியாக முடிந்தது. இவ்விருவரும் ஜெயிலில். கேஸ் நடக்கும். ஆறு மாதங்களுக்கு பிறகு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். அதற்குள் எல்லோரும் இந்த விஷயத்தை மறந்திருப்பார்கள்” என கதையை முடிக்கிறார்.

அதாவது ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் முடிந்துபோன கதை என்று சொல்வது போல.//

அப்போ அதுக்கும் மங்களம் பாடியாச்சா
சமரசம் இதனால் தானா?

டோண்டு சார் ஒரு சந்தேகம்.

பொதுவாக எந்த ஒரு தொழிலும் ஆண்டுக்கு 10 % டு 20 %வரை ஆண்டு வளர்ச்சி அல்லது லாபம் என்றால் ஓகே.

பகாசூரத் தரகர்களின் வஞ்சகத்தால் சென்னை போன்ற பெரு நகரங்களிலும் நடுத்தர நகரங்களிலும் வீட்டு மனைகள்,வீட்டுக் குடியிருப்புகளின் விலைகள் மற்றும் அத்னுடைய மாத வாடகைகள் கடந்த 3 ஆண்டுகளில் 300 % யையும் தாண்டி சென்றது.

இயற்க்கைக்கே பொறுக்க வில்லை
மரண அடி கொடுத்ததால்

உப்பை தின்னவர்கள் தண்ணி குடிக்கிறார்கள், வினை விதைத்தவர்கள் வினை அறுக்கிறார்கள்

இவர்களை காப்பாற்ற அரசு எழை எளியவர்களின் வரிப் பனத்தை கொட்டி எப்படியும் இந்தக் கூட்டத்தை தாங்கி பிடிக்க பல வழிகளை செய்கிறதே.

இது கடவுளுக்கே அடுக்குமா

இப்படியே விட்டால் ரியல் எஸ்டேட் விலை நிலவரம் எல்லோரும் வாங்கும் நியாய விலைக்கு வந்துவிடுமே.

ஏற்கன்வே பங்கு வர்த்தக சூதாடிகளுக்கு --மக்களின் சேமிப்பில் 2 லட்ச்ம் கோடி போன் இடம் தெரியவில்லை.

சாதரண கடைக்காரர்கள்கூட வாட் 12.5 % varaiபில்லில் காட்டுகிறார்கள்(computer generated bills without serial numbers)
மக்களிடம் கறாராக வசூலிக்கும் இந்த வரிப் பணம் அரசுக்கு போகிறதா தெரியவில்லை

தாமிரபரணி said...

நான் கூட ஏதோ நம்ம, மன்னிக்கனும் எங்க தமிழ் நாட்டை பத்தியோ தமிழ பத்தியோ இந்தி படத்துல சொல்லிருப்பானோ? அதபத்தின உங்க கருத்தைதான் சொல்லிருப்ங்களோனு நம்பி வந்தேன்,கிடைத்து ஏமாற்றமே, உங்களால நேரம்தான் விரயம் ஆச்சி

ரவி said...

நேற்று வண்டி ஓட்டிய இரானிய டாக்ஸி ட்ரைவர், நாற்பதாண்டுகளுக்கு முன் அவரது பதினாலாவது வயதில் பார்த்த ஹேமமாலினி, ராஜ்கபூர் படத்தை சிலாகித்து பதினைந்து நிமிடம் பேசினார்...

அவரது சின்ன வயதில் அந்த படம் அவரை ரொம்பவும் பாதித்துவிட்டதாகவும் சொன்னார்...

எனக்கு தெரிந்து பாதிப்பு என்பது மறக்கப்படக்கூடியதல்ல !!!

dondu(#11168674346665545885) said...

@செந்தழல் ரவி
நீங்கள் சொல்லும் படத்தின் பெயர் சப்னோன் கா சவுதாகர் (கனவுகளை விற்கும் வியாபாரி). ஹேமமாலினியின் முதல் படம் அது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி said...

அட !!!

Giridharan V said...

To Dondu's Q&A Section:

I saw your post on SuperStar Rajini's political stand. But Mr. Cho has solid belief in integrity and political power that our Thalaivar Superstar holds. Please comment.

Regards,
Giridharan

Giridharan V said...

2) What is your personal stand on Superstar's ideas on political things? I assume that you had a chance to read his direct interviews to AaVi, Kumudham and so many media.

3) You made a harsh comment about fans of Superstar in your last Q&A section. Yes, there are so many people willing to make money if he heads in to politics. But in his last meet with his fans he made this impossible because he clearly mentioned not to expect money from him for doing welfare. Also there are so many fans doing welfare and changed a lot.
See this: http://www.onlyrajini.com/?p=3291

Anonymous said...

1. பிரபாகரன் வழமை போல இந்த வருட மாவீரர் தின பேச்சில் இந்தியாவோடு உறவுகளை புதுபிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறாரே?
பிரபாகரன் ஏன் இதை போல வருடா வருடம் இந்தியாவிடம் கெஞ்சுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்?
2. பிரபாகரன் பிள்ளைகள் ஏன் தற்கொலை குண்டுதாரிகளாக போகவில்லை?
3.ஈழ தமிழ் மக்களின் மீது 50 வருட பொருளாதார தடை என்பது உண்மையா?
4. இந்த ஈழ போரால் பல ஈழ தமிழர்களின் ஐரோப்பா கனவுகள் பலித்தது என்பது உண்மையா?
5. சொகுசாக புலத்தில் இருந்து கொண்டு கற்பழிப்பு கொலை என்று பேசுபவர்கள் மன நிலை எப்படி இருக்கும்?
6. கண்முண்ணே நடந்த கற்பழிப்புகளை தடிக்க முடியாமல் புலத்துக்கு ஓடி வந்து சொகுசு வாழ்க்கையில் இதை எல்லாம் புறம் பேசுவது சரியா?
7. தமிழ் ஈழம் என்பது சாத்தியமா?
8. பிரபாகரனுக்கு பின்னர் ஈழ போராட்டம் ஓய்ந்து விடுமா?
9. யாழ்பாண மக்கள் பூ நகரி வழியாக தரைபாதை திறக்கபட்டபோது மூன்று சக்கர ஓட்டுநர்கள் வரவேற்று ஊர்வலம் நடாத்தியது ஈழ போராட்டம் தொய்வு அடைந்து விட்டது என்று ஏற்று கொள்ளாலாமா?

10. தமிழ் நாட்டு மக்களுக்கு இது வரை நெடுமாறன் செய்த நல் காரியங்கள் ஏதாவது உண்டா?

Anonymous said...

1. வாரணம் ஆயிரம் பாடல்கள் எப்படி?
2. இந்து தினசர் பெங்களூரில் 2 ரூபா ஹைதராபத்தில் 1.50 பைசா . ஆனால் சென்னையில் மட்டும் மாறுபட்ட விலை..அதே பக்கங்கள் அதே செய்திகள் ஆதே தாளின் தரம்.காரணம் என்ன?
3. இந்து தினசரி படிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதா?
4.தினகரன் - தினமலர்..ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்க
5. தினதந்தி இன்னமும் தமிழகத்தின் முதன்மையான தினசரியாக இருந்தும் குவாலிட்டி இல்லாத தாளில் தருகிறார்களே

Anonymous said...

1.நாட்டின் தலைநகர் தில்லியில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை விட மின்சார தடை அதிகமாமே?
2.கூடங்குள் அனுமின் திட்டம் திறக்கபட்டால் தமிழ்நாட்டின் மின் பற்றாகுறை தீருமா?
3. அது என்ன மத்திய அரசின் மின்சார தொகுப்பு கொஞ்சம் விளக்க முடியுமா?
4.கர்நாடாகவிற்க்கு நெய்வேலியில் இருந்து தான் மின்சாரம் செல்கிறதா?

Anonymous said...

ஜீனியர் முரளி மனோகர் said...
1.நாட்டின் தலைநகர் தில்லியில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை விட மின்சார தடை அதிகமாமே?
2.கூடங்குள் அனுமின் திட்டம் திறக்கபட்டால் தமிழ்நாட்டின் மின் பற்றாகுறை தீருமா?
3. அது என்ன மத்திய அரசின் மின்சார தொகுப்பு கொஞ்சம் விளக்க முடியுமா?
4.கர்நாடாகவிற்க்கு நெய்வேலியில் இருந்து தான் மின்சாரம் செல்கிறதா?

---------------------------
welcome to junior murali manohar to http://dondu.blogspot.com/

------------------------

In this way using other option in comments box, like this is also possible.
-----------------------------

Dondu sir just for fun.

Let this mitigate the street fighting in blogs
---------------------------
one request: You need not do the computer mouse test, since it is a open secret
----------------------------

Anonymous said...

//dondu(#11168674346665545885) said...
ஜீனியர் முரளி மனோகர் said...
1.நாட்டின் தலைநகர் தில்லியில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை விட மின்சார தடை அதிகமாமே?
2.கூடங்குள் அனுமின் திட்டம் திறக்கபட்டால் தமிழ்நாட்டின் மின் பற்றாகுறை தீருமா?
3. அது என்ன மத்திய அரசின் மின்சார தொகுப்பு கொஞ்சம் விளக்க முடியுமா?
4.கர்நாடாகவிற்க்கு நெய்வேலியில் இருந்து தான் மின்சாரம் செல்கிறதா?

---------------------------
welcome to junior murali manohar to http://dondu.blogspot.com/

------------------------

In this way using other option in comments box, like this is also possible.
-----------------------------

Dondu sir just for fun.

Let this mitigate the street fighting in blogs
---------------------------
one request: You need not do the computer mouse test, since it is a open secret
----------------------------//

போலி டோண்டு காலம் போச்சு ஜீனியர் முரளி மனோகர் காலம் வந்திச்சு டும் டும் டும்.

எது எப்படியோ எல்லோரும் சந்தோஷமாய் ,சுபிட்சமாய், சமரசமாய், தாயா புள்ளையாய்
ஓற்றுமையாய் இருப்போம்.

ஒன்று விழ ஒன்பதாய் எழும்.
வாழும் உலகெங்கும்.
வீழாது தமிழ்.( தமிழர் பண்பாடு)
பழகு தமிழை( பிறர் நலம் பேணிப் போற்றும் தன்மை) அழகு தமிழாய் (நல் வழிகளில் செல்வோம் )எழுதுவோம்.

நற்பண்பு காப்போம்
மனிதம் காப்போம்

Anonymous said...

2. பிரபாகரன் பிள்ளைகள் ஏன் தற்கொலை குண்டுதாரிகளாக போகவில்லை?

என்று ஒருவர் கேட்டிருக்கிறார்.

என்னுடைய கேள்வி

பலமுறை பிரபாகரன் சிறை பிடிக்கப்பட்டும் அவர் ஏன் சயனைடு சாப்பிடவில்லை. ஆனால், தனக்கு கீழ் உள்ள போராளிகளை சயனைடு சாப்பிடச்சொல்லி சாகடித்தார்?

வால்பையன் said...

ஸ்பெக்ட்ரம் பிரச்சனைக்கு முடிவு தெரியவில்லை என்றால் மக்கள் தமிழக அரசை திரும்ப பெறும் சட்டத்தை கையில் எடுக்க வேண்டியது தான்.

நான் கூட பொதுநல வழக்கு போடலாம் என்று இருக்கிறேன்.

Anonymous said...

//வால்பையன் said...
ஸ்பெக்ட்ரம் பிரச்சனைக்கு முடிவு தெரியவில்லை என்றால் மக்கள் தமிழக அரசை திரும்ப பெறும் சட்டத்தை கையில் எடுக்க வேண்டியது தான்.

நான் கூட பொதுநல வழக்கு போடலாம் என்று இருக்கிறேன்//


அன்பு உடன்பிறப்பே,

நடந்தேறிய வடபுலத்து சட்டமன்றத்துத்
தேர்தலில் இவர்களது பண்டாரக் கட்சி எதிர் பார்த்த வெற்றி பெறவில்லை என்றதும் , எங்கே தன்னுடைய ஆசானின் ஆத்மார்த்த குரு வின் பேராசையில் மண் விழுந்து விடுமே என பதை பதைத்து , பாரதப் பிரதமரே அலைவரிசை ஒதுக்கிடு விவகாரம் திருப்தி அளிக்கிறது என்று சொன்ன பிறகும், சோனியா அம்மையாரும் இது பற்றி ஒன்றும் சொல்லாத பிறகும்,வருணாசரத் தத்துவத்தை எப்படியும் மீண்டும் அரியணை ஏற்றி அழகு பார்க்க வேண்டும் என்ற பதவி வெறி பிடித்து, இந்தச் சாமனியனின் வரலாற்று சிறப்பு மிகு ஆட்சியை எப்படியும் கவிழ்த்துவிட வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டு, எனது குடும்பத்தில் ஏற்பட்ட ஓற்றுமையின் வலிமை கண்டு வயிரெரிந்து,அவர்களுக்கே உரித்தான நய வஞ்சக வலையை விரிக்கிறார்கள். அதுவும் எங்கிருந்து பார்த்தாயா ?

எந்த புண்ணிய பூமி நம் தந்தை பெரியாரை நமக்கு அளித்து பெருமை பட்டதோ அந்த புனித ஈரோட்டிலிருந்து.

வங்கக் கடலில் துயிலும் நம் அண்ணா அன்றே சொன்னார். உனக்கும் ஞாபகமிருக்கா?

இந்த ஆதிக்க மனதையுடைய மேல்தட்டு ஜாதியினர் ,தனது எல்லா ஆயுதங்களும் முனை மழுங்கிய உடன் , உன் இனத்தை சேர்ந்தவனின் கையை வைத்து உன் கண்ணை குத்த முயலுவார்கள்.

அவரது தீர்க்க தரிசனம் எப்படி இங்கே நமது சொந்ததால் நிகழ்த்தப் படுகிறது.
பாரீர் .
ஏ தமிழ்ச் சமுதாயமே நீ என்றுதான் இவர்களின் சுய ரூபத்தை தெரிந்து கொள்வாயோ?

*********************
வால்பையன் அவர்களே,

கடந்த 5,6 நாட்களாக வலையுலகில் நடை பெறும் அனைத்து வார்த்தை சாடல் களையும்,வசவுகளையும் காலையிலிருந்து முழுவதும் படித்தன் பாதிப்பு.வேறு ஒன்று மில்லை.

வால்பையன் said...

//எந்த புண்ணிய பூமி நம் தந்தை பெரியாரை நமக்கு அளித்து பெருமை பட்டதோ அந்த புனித ஈரோட்டிலிருந்து.//

நண்பரே புண்ணியம், பாவமெல்லாம் ஆத்திகர்கள் கண்டுபிடித்த வார்த்தை.
நமக்கு எதுக்கு அதெல்லாம்.

நேரடியாக இன்கம் டேக்ஸ் மட்டுபவன் மட்டும் இந்தியனில்லை.
நான் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி என் மூலமாக போய்கொண்டு தான் இருக்கிறது.

என் பணம் நாசமத்து போக நானே விரும்புவேனே.

கட்சி அடையாளமில்லாமல் அனைவரும் இந்த கேள்வியை எழுப்ப வேண்டுமென்பதே என் அவா?

வால்பையன் said...

//இந்த ஆதிக்க மனதையுடைய மேல்தட்டு ஜாதியினர் ,தனது எல்லா ஆயுதங்களும் முனை மழுங்கிய உடன் , உன் இனத்தை சேர்ந்தவனின் கையை வைத்து உன் கண்ணை குத்த முயலுவார்கள்.//

மேல்தட்டு சாதியனர் என்று யாரை குறிப்பிடுகிறீர்கள். பார்பனரையா?

சொன்னையெல்லாம் கேப்பான் திராவிடன் என்றால் அவன் பெற்றோர் சொல்வதையும், ஆசிரியர் சொல்வதையும் கேட்டிருப்பானே!

ஆடுவது தனக்கு எதாவது கிடைக்குமா என்று அழையும் புல்லுருவிகளே!

கிடைக்குமா என்பது பணம் மற்றும் புகழ்

மனிதன் அனைவரும் சொம்பை கிடையாது, அவனுக்கும் அறிவு இருக்கிறது.

காரணம் வாழ்வதற்க்கே குறைந்த பட்ச அறிவாவது வேண்டும் என்று அனைவருக்கும் தெரியும்

பார்பன, திராவிட பிட்டு போடும் அனைவரும் தன் தேவையை பூர்த்தி செய்து கொண்டு மீதமிருக்கும் நேரத்தில் கோபத்தை காட்டுபவர்கள்.

அந்த விளையாட்டுகெல்லாம் நான் வர முடியாது.

என்னை பொருத்தவரை


சாதி இரண்டொழிய வேறில்லை

வால்பையன் said...

//வால்பையன் அவர்களே,

கடந்த 5,6 நாட்களாக வலையுலகில் நடை பெறும் அனைத்து வார்த்தை சாடல் களையும்,வசவுகளையும் காலையிலிருந்து முழுவதும் படித்தன் பாதிப்பு.வேறு ஒன்று மில்லை. //


பாதிப்பை மனதில் ஏற்க்காதீர்.
ஒரு காலத்தில் நண்பர்கள் இன்று எதிரிகள்.

இன்றைய எதிரிகள் நாளை நண்பர்களாக கூடும்

Anonymous said...

//வால்பையன் said...
//வால்பையன் அவர்களே,

கடந்த 5,6 நாட்களாக வலையுலகில் நடை பெறும் அனைத்து வார்த்தை சாடல் களையும்,வசவுகளையும் காலையிலிருந்து முழுவதும் படித்தன் பாதிப்பு.வேறு ஒன்று மில்லை. //


பாதிப்பை மனதில் ஏற்க்காதீர்.
ஒரு காலத்தில் நண்பர்கள் இன்று எதிரிகள்.

இன்றைய எதிரிகள் நாளை நண்பர்களாக கூடும்//

வால்பையன் வாக்கு பலிக்கட்டும்
மீண்டும் பதிவர் மெகா சந்திப்புகள்
நடக்கட்டும்
பரஸ்பர நல்லுணர்வு விசாரிப்புகள் பரவட்டும்
நட்பு பாராட்டும் செயல் பாடுகள் ஆனந்தம் அடையட்டும்
அனைவரும் தமிழன்னையின் அம்சங்கள்
என்ற நிலைப் பாடு தொடரட்டும்

அது தான் இன்றைய தேவை.

உடன்பிறப்புக்கு எழுதியது ஒரு கற்பனையாக புனைந்து எழுதியதுதான் .
மன வருத்தமில்லையே?
பதில் கொஞ்சம் சூடாய் இருப்பது போலிருக்கே!

Anonymous said...

கருத்து
வார்த்தைக்கெல்லாம் சாயம் அடிக்காதீங்க, தமிழ் நுட்பமான மொழி வாத்தியாரே! இடத்துக்கு தகுந்த மாதிரி பொருள் வரும். "படி" எல்லா இடத்திலயும் படியா அப்"படி"

கொஞ்சம் வம்பு
வால் அண்ணாத்த, உங்களைப் பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு! நான் ஜெயிலுக்குப் போறேன் .......நான் ஜெயிலுக்குப் போறேன் .......எல்லாம் நல்லா பார்த்துக்குங்க நானும் ரவுடிதன் என்று வடிவேலு அலம்புவாரே அது மாதிரி ஆயிருச்சே உங்க நிலமை. சரி விடுங்க யார் ஒத்துக்கலன்னாலும் நீங்களும் நாத்திகர் தான்னு நான் ஒத்துக்கிறேன். (சத்தியம் பன்னுவதெல்லாம் ஆன்மீகத்தில் சேர்ந்தது என்று யாராவது சொன்னால் நம்ப வேண்டாம் அது அக்மார்க் நாத்திகமே!)

அப்பாவி அனானி -கொஞ்சம் எள்ளல் நடைக்கு முயற்சித்திருக்கிறார். ஆனா நீங்க “No Ball”-ல காட்ச் பிடிச்சிருக்கோம் என்பதே தெரியாமா சவுண்ட் வுட்டுடீங்க்ளே வால் !

கடைசியா வேடிக்கையா ஒன்னு ( கொஞ்சம் கோபப்பட்டலும் பரவாயில்ல): குதிக்கும் போது வாலைப் பத்திரமா பார்த்துகனும், ஏன்னா உங்க காலே வாலை மிதித்திடக் கூடாதில்லையா?
குப்புக் குட்டி

Anonymous said...

//கடைசியா வேடிக்கையா ஒன்னு ( கொஞ்சம் கோபப்பட்டலும் பரவாயில்ல): குதிக்கும் போது வாலைப் பத்திரமா பார்த்துகனும், ஏன்னா உங்க காலே வாலை மிதித்திடக் கூடாதில்லையா?
குப்புக் குட்டி//


குப்புக்குட்டி சார்
என்ன விரதம் விட்டாச்சா?
இந்தத்தடவை
அதுவும் வால்பையன் அண்ணா கூட
பதில் பின்னூட்டம் கொட்டோ கொட்டென்று கொட்டப் போகிறது

இப்படிச் சொன்னால் யாருக்கும் கோபம்
வரும்.

ஏற்கனவே உள்ள நிலமை தெரியுமில்லையா?

Anonymous said...

அனானி,


நீங்க "தெனாலி" ய விட பயந்த ஆளா இருப்பீங்க போல இருக்கே ! பேரை எழுதக் கூட இத்தனி பயமா ? அதென்ன வால் அண்ணன் கிட்டயேவான்னு ஒரு ஆச்சிரியக் குறி?

"உதை கொடுத்த கைப் புள்ளைக்கே இப்படின்னா உதை வாங்கினவன் நிலய நினைச்சுப் பாரு" -ணு உசுப்பி விடுவாங்களே" அந்த டெக்னிக்கா ? நடத்துங்க நடத்துங்க

குப்புக் குட்டி

Anonymous said...

பெயரில்லாத அனானி,

நீங்க வழக்கமா எங்க ஊரு பாட்டுக்காரன் ரேஞ்சுக்கு பாட்டு தானே எழுதிவீங்க ! இப்ப என்ன டிராக் -ஐ
மாத்திட்டீங்களா ?

குப்புக் குட்டி (பேருள்ள அனானி)

Anonymous said...

//Anonymous said...
பெயரில்லாத அனானி,

நீங்க வழக்கமா எங்க ஊரு பாட்டுக்காரன் ரேஞ்சுக்கு பாட்டு தானே எழுதிவீங்க ! இப்ப என்ன டிராக் -ஐ
மாத்திட்டீங்களா ?

குப்புக் குட்டி (பேருள்ள அனானி)//சாரி குப்புக்குட்டி சார்
சீரியஸாக எடுத்து கொண்டீர்களா?

என்றும் உங்கள்

நண்பன்
ராமசாமி

இன்றிலிருந்து நாமிருவரும் பெயருள்ள பெயரிலி முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்.

வால்பையன் said...

//கடைசியா வேடிக்கையா ஒன்னு ( கொஞ்சம் கோபப்பட்டலும் பரவாயில்ல): குதிக்கும் போது வாலைப் பத்திரமா பார்த்துகனும், ஏன்னா உங்க காலே வாலை மிதித்திடக் கூடாதில்லையா?
குப்புக் குட்டி //


ஹா ஹா ஹா

வால்பையன் said...

//அதுவும் வால்பையன் அண்ணா கூட
பதில் பின்னூட்டம் கொட்டோ கொட்டென்று கொட்டப் போகிறது
//

இன்னும் டீனேஜே தாண்டாத பொடியனை போய் அண்ணான்னு கூப்பிட்டு கேவலப்படுத்துரிங்களே!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது