12/27/2008

தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு 27.12.2008

இந்த ஆண்டின் கடைசி வலைப்பதிவர் சந்திப்பு என வர்ணிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்று (27.12.2008) மாலை 5 மணிக்கு தியாகராய நகர் நடேசன் பூங்காவில் ஆரம்பிப்பதாக நிகழ்ச்சி நிரல். எனது மின் ரயில் வண்டி மாம்பலம் ஸ்டேஷனுக்கு வரும்போது மாலை 04.55. ரங்கநாதன் தெருவை தாண்ட அடுத்த 10 நிமிடங்கள் ஆயிற்று. நான் சமீபத்தில் 1979 முதல் 1981 வரை வசித்த மோதிலால் தெரு, மற்றும் ராமானுஜம் தெரு வழியாக சென்று நடேசன் பூங்காவை அடையும்போது சந்திப்பு ஆரம்பம் ஆகிவிட்டிருந்தது.

நான் இம்முறை நோட்டு புத்தகம் ஏதும் கொண்டு செல்லாததால் எல்லாவற்றையும் நினைவிலிருந்து எழுத வேண்டிய கட்டாயம். வந்தவர்களின் பெயர் விவரங்கள் முழுமையானதாக இருக்காது என அஞ்சுகிறேன். ஆகவே பெயர் விட்டு போனவர்கள் பின்னூட்டம் மூலம் தத்தம் பெயர்களையோ தம் நண்பர்கள் பெயரையோ கூறினால் அவற்றையும் லிஸ்டில் ஏற்றுவேன்.

நான் பார்த்தவர்கள் அக்கினி பார்வை, லக்கிலுக், பாலபாரதி, தாமிரா, கடலையூர் செல்வம், அதிஷா, நர்சிம், முரளி கண்ணன், சென்சிபிள் சென், ஜோசஃப் பால்ராஜ், புதுகை அப்துல்லா, திரு, மதுரை கணேஷ், அத்திரி, இளவஞ்சி, கேபிள் சங்கர், தராசு, குகன், கார்க்கி, விவேக் (அக்கினி பார்வையின் நண்பர்), அன்பு, காவேரி கணேஷ், ஜியோராம் சுந்தர், ஊர்சுற்றி, ராஜராஜன், பாலு, பாபு (தமிழ்க்கணினி), ஸ்ரீ ஆகியோர். சில பெயர்களை எனக்கு டெலிஃபோனில் நான் கேட்டபோது ஞாபகப்படுத்திய லக்கிலுக்குக்கு நன்றி. இன்னும் சில பெயர்களை எனக்கு நினைவூட்டிய அத்திரியின் பதிவுக்கு நன்றி.

ஒரு மாறுதலுக்காக முரளி கண்ணன் அவர்கள் தனது பதிவில் விளையாட்டாக குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலை எடுத்து பேசலாம் என விளையாட்டாக தீர்மானிக்கப்பட்டு மணமானவ்ர்கள் புலம்பலை தாமிரா அவர்கள் ஆரம்பிப்பார் என கூறப்பட அவர் தயங்க, சமீபத்தில் 1970களில் திருமணம் செய்துகொண்ட பதிவர்களும் இதுதொடர்பாக தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன் என தனது பதிவில் எழுதியிருந்த லக்கிலுக் ஆரம்பித்தார். கல்யாணம் அவசியமா என்பதிலிருந்து ஆரம்பித்து விவாதம் சென்றது. கல்யாணத்தைவிட சேர்ந்து வாழ்வதில் சம உரிமை பேணப்படுகிறது என பாலபாரதி (?) கூறினார். அம்மாதிரி சேர்ந்து வாழ்வது பெண்ணுக்கு பாதுகாப்பாக இருக்காது என நான் தெளிவாக கூறினேன். முந்தைய தலைமுறை வாழ்க்கை பற்றி என்னைக் கேட்க எனக்கு வயது 26 மட்டுமே ஆவதால், வேறு யாராவது வயதானவர்களை கேட்குமாறு அன்புடன் ஆலோசனை கூறினேன். தாம்பத்திய பிரச்சினைகள் எல்லா காலத்திலும் உண்டு என்றும், ஜொள்விடும் ஆண்கள் எல்லா காலத்திலும் இருந்து வந்திருக்கின்றனர் என்றும் கூறி சமீபத்தில் 1981-ல் விகடனில் வந்த சிவசங்கரி அவர்கள் எழுதிய பாலம் என்னும் தொடர்கதையில் வந்த ஒரு நிகழ்ச்சியை (கதைப்படி 1907-ல் நடந்தது) எடுத்து கூறினேன். அவ்வளவு காலமாக இருந்து வந்திருக்கிறது என்பதால் இந்த பழக்கவழக்கங்கள் அப்ப்டியே வைத்திருக்க வேண்டுமா என பால பாரதி கேட்டதற்கு நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதுபாட்டுக்கு இருக்கும் என கூறினேன். எது எப்படியானாலும் துணை அவசியம் என முடிவுக்கு எல்லோரும் வர ஒருபதிவர் ஆணுக்கு ஆண் துணையாக இருக்கக் கூடாதா என்ற நெருப்பு போன்ற யோசனை கூற “அவனா நீயி” என அவரிடமிருந்து சற்றே ஒதுங்குவது போல பாவனை செய்யப்பட்டது.

குளிர் காலமாகையால் சட்டென்று இருள் சூழ்ந்தது. கூட கொசுத்தொல்லை வேறு. ஓரிடத்திலிருந்து பூங்காவின் இன்னொரு இடத்துக்கு போனாலும் அங்கும் தொல்லைதான்.

அடுத்த ஐட்டமாக வரும் பாராளுமன்றத் தேர்தல் சம்பந்தமாக பேச்சு வந்தது. இதையும் லக்கிலுக்கே துவக்கி வைத்தார். ஓரிரு மாதங்களுக்கு முன்னால் திமுகவுக்கு 40 இடங்களிலும் தோவி என்று தனக்கு தோன்றியதாகவும் ஆனால் பாதிக்கு பாதி என்ற அளவுக்கு நிலைமை தேறியிருப்பதாகவும் அவர் கூறினார். மத்தியில் பாஜக வரும் வாய்ப்பு இருக்கலாம் என கூறப்பட்டாலும் தமிழகத்தில் அதற்கு சங்குதான் என கூறப்பட்டது. பாஜக அனுதாபியான என்னிடம் இது பற்றி கேட்கப்பட்டபோது நானும் தமிழகத்தை பொருத்தவரை பாஜக அனாதைதான் என உறுதி செய்தேன்.

“ஏதாவதுசெய்யணும் பாஸ்” என சமூகத்திற்க்கு பதிவர்களின் பங்களிப்பு பற்றிய விவாதத்தை நர்சிம் தொடங்கி வைத்து பேசினார். பீச்சு பதிவர் கூட்டத்தை பற்றிய அவரது பதிவில் ஒரு அனானி “நீங்கள் கூடி என்ன கிழித்தீர்கள்” என அவருக்கு பின்னூட்டமிட்டதாகவும், அவருக்கு அப்போது தக்க பதிலைக் கூறினாலும் (“நீங்களே இதை சொல்ல அனானியாகத்தானே வந்தீர்கள்?), நிஜமாகவே நாம் ஏதாவது செய்ய வேண்டாமா என அவர் கேள்வி கேட்க, அதெல்லாம் சிறு சிறு குழுக்களாக செய்வதுதான் பிராக்டிகல் என்று கூறிய பாலபாரதி என்றென்றும் அன்புடன் பாலா (அந்தோணிமுத்துவுக்கு சக்கர நாற்காலி போன்ற உதவிகள்) மற்றும் செந்தழல் ரவி ஆகியோர் ஏற்கனவே செய்து வரும் தொண்டுகளையும் குறிப்பிட்டார்.

இதற்குள் நேரம் 7 மணிக்கு மேல் ஆகிவிட்டது. கொசுத்தொல்லை தாங்க முடியலை நாராயணா என்பதால் இடத்தை காலி செய்து பூங்காவுக்கு பின்னால் உள்ள டீக்கடைக்கு சென்றோம். அங்கு பல குழுக்களாக பிரிந்து டிஸ்கஷன் நடந்தது. பதிவர் தராசு திடீரென வந்து என்னிடம் மன்னிப்பு கோரினார். முதலில் திகைத்த நான் அவரிடம் விவரம் கேட்க அவர் எனது ஒரு தவறு இன்னொரு தவற்றை நியாயப்படுத்தாது என்ற தலைப்பில் நான் இட்ட பதிவுக்கு தான் இட்ட பின்னூட்டத்தை எனக்கு நினைவுபடுத்தினார். இதெல்லாம் ஒன்றுமேயில்லை என நான் அவரை ஆசுவாசப்படுத்தினேன். அதே சமயம் செக்‌ஷன் 498-A துர் உபயோகம் செய்யப்படுவதை எதிர்த்து பதிவுபோட்டவர் தனது உதாரணங்களில் ஜாக்கிரதையாக இல்லாததால் அவர் தனது கேசை தானே பலவீனப்படுத்தினார் என்பதை மறுபடியும் வலியுறுத்தினேன். இதே மாதிரித்தான் சாதிக் கொடுமைக்கு எதிராக எழுதுபவர்கள் எல்லா குழப்பங்களுக்கும் பார்ப்பனரே காரணம் என எழுதுவதன் மூலம் விவாதம் திசைதிரும்பிப் போவதையும் நான் அவரிடம் குறிப்பிட்டேன். அவ்வாறு செய்வதால் அவர்கள் கேசுகளுக்கு பார்ப்பனர் தர்க்கூடிய ஆதரவு கிடைக்காமல் போகிறது எனக் கூறி நான் எழுதிய சகபதிவாளர்களே உங்களுக்கு வேண்டியது என்ன என்னும் பதிவில் எழுதிய “சிலர் கூறலாம் நாங்கள் பார்ப்பனியத்தைத்தான் எதிர்க்கிறோம், பார்ப்பனரை அல்ல. பார்ப்பனியம் என்று உயர்சாதீயத்தையே கூறுகின்றனர். உயர்ச்சாதீயம் என்ற ஒரு தனிச்சொல் இருக்கும்போது தேவையற்று பார்ப்பனீயம் என்று பேசி பார்ப்பனரை ஏன் இழிவுபடுத்த வேண்டும்? இப்போது என்ன நடக்கிறது என்றால் வன்கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட பார்ப்பனருக்கு மோட்டிவேஷன் இல்லாமல் போகிறது. என்ன வேண்டுமானாலும் அடித்து கொள்ளுங்கள் நாங்கள் ஓரமாக நிற்கிறோம் என்ற மனநிலையில்தான் அவர்கள் உள்ளனர். இதே போல ஒரு பதிவர் தமிழிசைக்கு ஆதரவாக பதிவுபோடும்போது தேவையின்றி "தமிழில் பாட மறுக்கும் பாப்பாத்திகள்" என்று கொச்சையான தலைப்பை வைத்து பார்ப்பனரை இப்போதைய நிலைக்கு பொறுப்பாக்க முயற்சி செய்ததில், தமிழிசைக்கு ஆதரவு தெரிவிக்கும் குரல்கள் அப்பதிவில் அந்த அளவுக்கு பலமிழந்தன” என்னும் கருத்துக்களை இன்னொரு முறை வலியுறுத்தினேன்.

இப்போது இப்பதிவை நான் போடுவதற்கான உண்மை காரணத்துக்கு வருகிறேன். உண்மை கூறப்போனால் முதலில் பதிவுபோடும் எண்ணம் என்னிடம் சுத்தமாகவே இல்லை. ஆனால் கடலையூர் செல்வம் அவர்கள் நாடி ஜோசியம் பற்றி தனது அனுபவத்தைக் கூறினார். மனிதர் அந்த அனுபவத்தில் ஆடிப்போயுள்ளார். தான் டெக்ஸ்டைல் டெக்னாலஜி துறையில் வேலை செய்வது உட்பட பல விஷயங்கள் அவர் பெயருக்கு கிடைத்த ஓலையில் இருந்ததாகக் கூறி அதிசயித்தார். தான் பெரியார் பாசறையை சேர்ந்தவர் என்றும் நம்பிக்கையில்லாமலேயே சென்றதாகவும் இப்போது என்ன நினைப்பது எனத் தெரியவில்லை என்றும் கூறினார். அக்கினி பார்வையும் தனது அனுபவத்தை கூறினார். அவரது ஓலை திருச்சியில்தான் இருக்கும் என கூறப்பட்டதாகவும் தான் இன்னும் போய் பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார். சிங்கை பதிவர் ஜோசஃப் பால்ராஜ் அவர்களும் நாடி ஜோசியத்தில் தனது தாயின் முழுப்பெயரும் கூறப்பட்டது என்று அதிசயத்துடன் கூறினார். பேச்சு இப்போது “சிதம்பர ரகசியம்” சீரியல் பற்றி திரும்பியது. இந்திரா சவுந்திரராஜன் அவர்கள் எழுதியது. அதுவரை இந்த சந்திப்பைப் பற்றி பதிவு வேண்டான்மெனெ நினைத்தவன் போட்டு வைப்போம் என துணிந்தேன். “ஆக இந்த அறுவை பதிவுக்கு கடலையூர் செல்வமே பொறுப்பு” என கத்துகிறான் முரளி மனோஹர். நன்றாக கத்தட்டும். கிடக்கிறான் சின்னப் பயல்.

உலகத் தரம் வாய்ந்த படங்கள் பற்றி பேச்சு வந்தது. பருத்திவீரன் என்னும் படம் கண்டிப்பாக உலகத் தரம் வாய்ந்தது என லக்கிலுக் கூறினார். என்ன, பாடல்களை மட்டும் எடுத்து விட வேண்டும் என்றார். கில்லி படத்தில் த்ரிஷா ஓடி வந்து விஜய் மேல் தாவி ஏறுவதை 20 டேக்குகள் எடுத்தார்கள் என ஒரு பதிவர் அலுப்புடன் (பொறாமையுடனும்?) கூறினார். சண்டைக்காட்சி ஷூட்டிங் பார்க்க ஆசை தெரிவித்தார் இன்னொருவர்.

மணி ஒன்பது ஆனதும் ஒவ்வொருவராக விடைபெற்று செல்ல நானும் எனது மின் ரயில் வண்டியை பிடித்து மீனம்பாக்கம் சென்றேன். பதிவு ஆரம்பித்த நேரம் இரவு 10.23. இப்போது நேரம் 11.47. குட் நைட்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

68 comments:

Anonymous said...

ஸ்பீடு போஸ்ட் ஸ்பீடு போஸ்ட்ன்னு சொல்றாங்களே அது இது தானா டோண்டு சார்?

அன்புடன்
அபிஅப்பா

ஆமா உண்மை தமிழன் கலந்துகலையா?

dondu(#11168674346665545885) said...

என்னைவிட ஸ்பீடாக குகன் போட்டு விட்டாரே. ஆக, குகனோடு ராகவன் சேர்ந்து நாம் இருவரானோம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

SP.VR. SUBBIAH said...

உங்கள் சுறுசுறுப்பை பாராட்டி மகிழ்கிறேன்!
வழக்கமாகச் செல்லும் ரத்னா கஃபேவிற்கு செல்லவில்லையா?

அக்னி பார்வை said...

இருந்தாலும்.. இது ரொம்ப வேகம்...இப்படியா நான் சந்திப்பு முடித்து வீட்டுக்கு வருவதற்க்குள் பதிவை போடுவது!!!

:O

புருனோ Bruno said...

Thanks for the immediate report :)

enRenRum-anbudan.BALA said...

சூப்பர் அப்டேட், சுவையாக, தகவல்களை விடாம, அருமையா எழுதியிருக்கீங்க.

அப்படியே, இடுகையில் என்னை மென்ஷன் பண்ணதற்கு, என் வலைப்பதிவு லிங்கை தந்து விடுங்கள்.

பதிவர்கள் என் வலைப்பதிவுக்கு வந்து, சமூக உதவி சார் இடுகைகளை வாசிக்க முடியும். நன்றி...

enRenRum-anbudan.BALA said...

//வழக்கமாகச் செல்லும் ரத்னா கஃபேவிற்கு செல்லவில்லையா?
//
சுப்பையா சார்,
டோண்டு சார் சாம்பாரை அப்டியே குடிக்கிறார்னு அவரை ஹோட்டல்காரங்க உள்ளே விட மாட்டேங்கிறாங்களாம் ;-)

ரமணா said...

பிரபல சென்னை பதிவர்களின் தி.நகர் நடேசன் பூங்கா சந்திப்பு பற்றிய பதிவு அருமை.
பதிவு பதிந்த நேரம் ,சுப்பையா வாத்யார் பின்னூட்டமிட்ட நேரத்தை பார்த்தால், நள்ளிரவு நேரம்.
பதிவர் சந்திப்பில் அலசப் பட்ட விசயங்கள் பற்றிய தொகுப்புக்கு பாராட்டுக்கள்.
நாடி ஜோதிடம் பற்றி தெரிய வேண்டுமென்றால் ,மயிலாடுதுறை அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில் செல்லவேண்டும்.அங்குதான் நாடி ஜோதிடம் பார்ப்போர் அதிகம்.
பெரிய பெரிய அதிகாரிகள்,வணிகப் பெருமக்கள்,அரசியல் பிரமுகர்கள் போன்றொரும் தங்களின் எதிர்காலம் பற்றி அறிய அங்கு காத்துக்கிடப்பது நாளும் நடைபெறும் வாடிகை நிகழ்ச்சி.
ஒவ்வொருவருக்கும் பல காண்டங்களாக ஒலைச் சுவடிகள் உள்ளனவாம்.
முதலில் நமது பெருவிரல் ரேகை பதிந்து கொள்கிறார்கள்.
நமது வாழ்க்கை பற்றிய ஓலை இருந்தால் மட்டுமே பலன் சொல்கிறார்கள்.
சிலர் காசெட்டுகளிலும் பதிந்து கொடுக்கிறார்கள்.

ஆனால் நாடி ஜோதிடம் பற்றி வகுப்ப்றை2007 ஆசிரியர் சுப்பையா அவர்களால் மட்டுமே ,மேலும் விளக்கமாய் சொல்லமுடியும்.

ஒரு கிசு கிசு:

திரை உலகிலிருந்து பிரபலமாய் இருக்கும் ஒரு சில அரசியல் தலைவர்களில், ஒருவரின் ஒலையில் அவரது முதல்வர் ஆசை நிறைவேறும் என்று உள்ளதாம்.

Anonymous said...

//ஒரு கிசு கிசு:

திரை உலகிலிருந்து பிரபலமாய் இருக்கும் ஒரு சில அரசியல் தலைவர்களில், ஒருவரின் ஒலையில் அவரது முதல்வர் ஆசை நிறைவேறும் என்று உள்ளதாம்.//

athu karuppu mgr thaane?

Unknown said...

//enRenRum-anbudan.BALA said...
சூப்பர் அப்டேட், சுவையாக, தகவல்களை விடாம, அருமையா எழுதியிருக்கீங்க.

அப்படியே, இடுகையில் என்னை மென்ஷன் பண்ணதற்கு, என் வலைப்பதிவு லிங்கை தந்து விடுங்கள்.

பதிவர்கள் என் வலைப்பதிவுக்கு வந்து, சமூக உதவி சார் இடுகைகளை வாசிக்க முடியும். நன்றி...//



http://balaji_ammu.blogspot.com/

அவர்களின் பதிவினை அனைவரும் பார்க்கவும்

Anonymous said...

டோண்டு அவர்களே,

நீங்கள் பார்ப்பனீயம், ஜாதீயம் பற்றி எழுதியதை பார்த்ததும் அட என்று வியந்தேன். ஏறக்குறைய இதே தோரணையில் ஒரு வாரம் முன் ஒரு போஸ்ட் எழுதி இருந்தேன் - http://koottanchoru.wordpress.com/2008/12/22/பார்ப்பனர்கள்-பார்ப்பனீ/

இளைஞரான உங்கள் வாழ்க்கையில் ஜாதி பற்றிய பிரக்ஞை எங்கே எல்லாம் குறுக்கிட்டிருக்கிறது? இதை பற்றி எழுதினால் என்னை போன்ற அரை கிழங்கள் கொஞ்சம் புரிந்து கொள்வோம்.

dondu(#11168674346665545885) said...

@RV

எனது வெளிப்படையான எண்ணங்கள் என்னும் பதிவில் நான் எழுதியதை அப்படியே இங்கு தருகிறேன். அதற்கான பின்னுட்டங்கள்ஐ பார்க்க இங்கு செல்லவும்: http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html
“என்னை பார்ப்பன வெறியனாகவே பலரும் சித்தரித்து வந்திருக்கின்றனர். அதற்குக் காரணம் நான் என் ஜாதியை வெளிப்படையாகக் கூறியதே ஆகும். அவ்வாறு நான் முதல் முறையாக தமிழ்மணத்தில் கூறியதன் பின்புலனை இப்போது இங்கு பார்க்கலாம்.

எல்லாம் எழுத்தாளர் அசோக மித்திரன் அவர்கள் அவுட்லுக்கிற்கு அளித்த பேட்டியிலிருந்து ஆரம்பித்தது. அதில் அவர் தமிழகத்தில் பார்ப்பனர் நிலையைப் பற்றி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஈஸ்வர பிரசாத் அவர்களின் வலைப்பூவில் அசோக மித்திரன் கூறியது பற்றி அப்போது விவாதிக்கப்பட்டது. அதில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ:

"பார்ப்பனத்தன்மையை மறைத்துக் கொள்ள முயற்சித்ததும் இப்போதையப் பார்ப்பனரின் நிலைமைக்கு ஒரு காரணம். ஆனால் இவ்வாறு செய்ததில் மற்றவர் வலையில் விழுந்ததுதான் பலன். ஊரார் வாய்க்குப் பயந்து பயந்து இன்னும் இழிவுபடுத்தப்பட்டதுதான் மிச்சம். என்னதான் செய்தாலும் போதாது இன்னும் செய்ய வேண்டும் என்றுதான் கூறுவார்கள். "அடப் போய்யா நான் பார்ப்பனன்தான் அதற்கு என்ன இப்போது" என்று எதிர்த்துக் கொண்டால் என்ன ஆகி விடும்?

இவ்வாறு நினைத்துத்தான் நான் சமீபத்தில் 1963-ல் பொறியியல் கல்லூரி நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். மூன்று மூன்று மாணவர்களாக ஒரு குழுவை உருவாக்கி நேர்க்காணல் நடந்தது. என்னுடன் கூட வேறு இருவர் நேர்க்காணப்பட்டனர். தேர்வுக் குழுவின் தலைவர் திரு. முத்தையன் அவர்கள். அப்போது அவர் தொழில் நுட்பக் கல்வி ஆணையத் தலைவர். அவர் மற்றக் கேள்விகளைக் கேட்டு விட்டுக் கடைசியாக என்னைக் கேட்டார், "நீங்கள் பார்ப்பனரா?" என்று."ஆம் ஐயா" என்றேன். பார்ப்பனராக இருப்பதில் பெருமைப் படுகிறீரா?" என்று அடுத்தக் கேள்வி. அவர் கண்களைப் பார்த்துக் கொண்டு பதிலளித்தேன் "நிச்சயமாக ஐயா" என்றேன். அவர் புன்னகை புரிந்த வண்ணம் இன்டர்வியூ முடிந்தது என்றார். வெளியில் வந்ததும் என்னுடன் கூட வந்தவர்கள் எனக்கு கண்டிப்பாக சங்குதான் என்றார்கள். "அடப் போடா மயிரே போச்சு" என்றேன். என்ன ஆச்சரியம்! தேர்வு கிடைத்தது. இந்த அழகில் ஏற்கனவே என் தந்தை சிபாரிசுக்குச் செல்ல மாட்டேன் என்று வேறு கூறியிருந்தார். ஆக, முத்தையன் அவர்கள் என் பதிலுக்காக கோபம் எல்லாம் படவில்லை.

இதிலிருந்து ஒரு பாடம் கற்றேன். பயப்படக்கூடாது. இப்போதுத் திரும்பிப் பார்க்கிறேன். இவ்வளவு ஆண்டுகளும் அவ்வாறே வாழ்ந்திருக்கிறேன். தேவையில்லாது மற்றவர் ஆதரவை எதிர்ப்பார்த்தால் கடைசியில் அவமானம்தான் மிஞ்சும். செயலாற்றும்போது மற்றவர் அனுமதியையெல்லாம் எதிர்பார்க்க மாட்டேன். என் செயலுக்கும் அதன் விளைவுகளுக்கும் நானே பொறுப்பு. மற்ற எந்த ஜாட்டானும் எனக்குப் பொருட்டல்ல.

நாய்கள் துரத்தினால் ஓடாதீர்கள். அவற்றை எதிர்கொள்ளுங்கள். அவை ஓடி விடும். இந்தப் பாடம் கற்றுக் கொண்டு உலகுக்குத் தெரிவித்தது விவேகானந்தர் அவர்கள்."

இப்போது வலைப்பூவில் பார்க்கிறேன். எழுதுபவனின் ஜாதியைத்தான் முதலில் கவனிக்கிறார்கள். "கமலின் நடிப்பு எனக்குப் பிடிக்கும், அவருக்கு வாரிசாக மாதவனையும் அரவிந்தசாமியையும் பார்க்கிறேன்" என்று வெங்கடேஷ் எழுதப் போக, "ஆஹா அவர்கள் பார்ப்பனர்கள் என்பதால்தான் இவ்வாறுக் கூற முனைந்தீரா" என்றுத் தோள் தட்டிக் கொண்டு வந்தார் ஒருவர். ஒரு பின்னூட்டம் இட்ட என்னை "நீங்கள் வடகலையா அல்லது தென்கலையா" என்றுக் கேட்டதாலேயே நான் வடகலை என்று உண்மையைக் கூற என்னமோ நான்தான் அதை முதலில் கூறியது போல கேட்டவர் திரித்து எழுத "நீங்கள் கேட்டதால்தான் கூறினேன்" என்று நான் கூறியதை அந்த மனிதர் கவனிக்கவேயில்லை.

அதே போல என்றென்றும் அன்புடன் பாலா வீட்டிற்குச் சென்ற போது எனக்கு ஏற்பட்ட ஹைப்பெர் லிங்கைப் பற்றிக் கூறப்போக, "நீங்கள் பார்ப்பனரானதால்தான் அவ்வாறு கண்டு பிடிக்க முடிந்தது" என்றுத் தேவையின்றி சாதியை இழுத்தார் இன்னொருவர். அதற்கும் மேலாக பார்ப்பனர்கள் தங்கள் சாதியை எப்படியாவது வெளிப்படையாக்குகிறார்கள் என்ற நக்கல் வேறு.

இப்போது கூறுகிறேன். நான் டோண்டு ராகவன். வடகலை ஐயங்கார். பார்ப்பன ஜாதியில் பிறந்ததற்குப் பெருமிதம் அடைகிறேன். நான் பார்ப்பனன் என்பதை எப்போதும் தெளிவுபடக் காட்டிக் கொண்டவன். இனிமேலும் அவ்வாறுதான் செய்யப் போகிறவன்”.

பார்ப்பனீயம் என சொல்பவர்கள் சொல்லட்டும். அதை மக்குத்தனமாக ஏற்று சில பார்ப்பனர்களே பேசுவதுதான் அபத்தம். இப்படியெல்லாம் பேசினால் தாங்கள் முற்போக்கானவர்கள் என சில (காலணாவுக்கு பிரயோசனமில்லாத) இணைய தாசில்தார்கள் ஒப்பு கொள்வார் என நினைக்கிறார்கள். அவர்களை எப்போதுமே மற்ற சாதியினர் ஒப்பு கொள்ள மாட்டார்கள். தேவையானால் “நீயும் பாப்பன்தானே” என்று கூறி மட்டம் தட்டுவார்கள். எனது மேலே சொன்ன பதிவு அம்மாதிரியான பார்ப்பனர்களைத்தான் குறி வைத்து வந்தது.

ஆகவே ஆர்.வி. அவர்களே அடித்து ஆடுங்கள். எந்த ஜாட்டான் வந்து நம்மை திட்டுகிறான் என பார்த்து விடுவோம். சுயமரியாதை மிகவும் முக்கியம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//நாய்கள் துரத்தினால் ஓடாதீர்கள். அவற்றை எதிர்கொள்ளுங்கள். அவை ஓடி விடும். இந்தப் பாடம் கற்றுக் கொண்டு உலகுக்குத் தெரிவித்தது விவேகானந்தர் அவர்கள்."//


well said dondu sir

Anonymous said...

//இப்போது கூறுகிறேன். நான் டோண்டு ராகவன். வடகலை ஐயங்கார். பார்ப்பன ஜாதியில் பிறந்ததற்குப் பெருமிதம் அடைகிறேன். நான் பார்ப்பனன் என்பதை எப்போதும் தெளிவுபடக் காட்டிக் கொண்டவன். இனிமேலும் அவ்வாறுதான் செய்யப் போகிறவன்”.//

hats off to dondu sir

Cable சங்கர் said...

ஆனாலும் ரொம்பவே சுறுசுறுப்பா இருக்கீங்க.. நீங்க யூத்தான் ..டோண்டுசார்..

Anbu said...

ஐயா,
நானும் இக்கூட்டத்தில் முதல் முறையாக கலந்துகொண்டேன். எல்லோரும் எப்படி இப்படி எழுதி தள்றாங்கன்னு ஆச்சர்யபட்டதுண்டு. இவ்வளவு நிஜமான பதிவர்களை கண்டு அதிசயித்து போனேன்.
முதல்முறைங்கறதால அதிகம் பேசவில்லை!
அடையாளத்திற்கு காவேரி கணேசுடன் வந்திருந்தேன்.
அன்புடன்,
அன்பு

dondu(#11168674346665545885) said...

அன்பு மற்றும் காவேரி கணேஷின் பெயர்களையும் வந்தவர்கள் பெயர் பட்டியலில் சேர்த்து விட்டேன். நன்றி அன்பு அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

@என்றென்றும் அன்புடன் பாலா
உங்கள் அந்தோணிமுத்து பதிவுக்கு லிங்க் கொடுத்துள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//செக்‌ஷன் 498-A துர் உபயோகம் செய்யப்படுவதை எதிர்த்து பதிவுபோட்டவர் தனது உதாரணங்களில் ஜாக்கிரதையாக இல்லாததால் அவர் தனது கேசை தானே பலவீனப்படுத்தினார் என்பதை மறுபடியும் வலியுறுத்தினேன்//

Your obssesion about this puticular blogger's carelessness on facts is understandable. But your gross indifference towards the women who openly claims that her own child is a ""bastard"" shows your unfounded sympathy to a women of this kind

Anonymous said...

நெற்றியில் அடித்தது போல உங்க அப்பா பேரு ஆராவமுதன் நீங்கள் எவர் சில்வர் பாத்திரம் விற்கிறீர்கள் என்றெல்லாம் அவர்கள் சொல்வதில்லை.அது ஒரு ஏமாற்று வேலைதான்.

வாலில்லாத தம்பி

Anonymous said...

ஓவ்வொரு வலைப் பதிவர் சந்திப்பும் இப்படி தான் மழை, கொசு கடி ஏன்றே போகிறதே ஒரு சிறு ஹாலை வாடகைக்கு எடுத்து நடத்த மாட்டீர்களா ? சிலவை சரி சமமா பிரிச்சுக்கிட்டா போச்சு.

வாலில்லாத தம்பி

Anonymous said...

உங்கள் இந்தப் பதிவின் வேகத்தைப் பார்க்கும் போது ரொம்ப ஆச்சர்யமாக இருக்கிறது. "சமீபத்தில்" மற்றும் மகரநெடுங்குழைக்காதன் என்பவனவற்றை வலை முழுதும் தெளித்ததும் உங்கள் சமீபத்திய சாதனை

வாலில்லாத தம்பி

Anonymous said...

இந்தப் பார்ப்பனப் பதாகை உங்களுக்கு ஒரு வியாதியாக ஆகிவிட்டது.

komanakrishnan

Anonymous said...

சார் அடிக்கடி பார்பான் என்று யாரவது இழுத்து விடுகிறார்கள். அதற்காகவே இப்போ ஆர்.வி.-க்கு கொடுத்தது போல பதிலை சேமித்து வைத்திருப்பீர்களா அல்லது கேஸ் டு கேஸ் பதிலாக தட்டசுவீர்களா?

வாலில்லாத தம்பி

Anonymous said...

பதிவர் சந்திப்புக்கு ஏதேனும் ஒரு "மொட்டை மாடி" போதாதா. நான் பிரபலமான மொட்டை மாடியைச் சொல்லவில்லை.

வாலில்லாத தம்பி

dondu(#11168674346665545885) said...

@வாலில்லாத தம்பி
சமீபத்தில் ஓக்கே. ஆனால் மகரநெடுங்குழைகாதன்? என் அப்பனை நான் இங்கு குறிப்பிடவில்லையே.

நான் ந்ல்லபடிக்கு பதிவு போட்டு கொண்டு, கும்மியடித்து எல்லோரையும் படுத்துவதற்கு அவனருள்தான் காரணம் என்பது மட்டும் நிஜந்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

நான் சொல்லவந்தது இன்னான்னா, இறைவன் அருள் என்று குறிப்பிடுவதற்கு பதில் அந்த மகரநெடுங்குழைக்காதானுக்கே வெளிச்சம் என்று பலரும் தற்போது பயன்படுத்துவதை.
பை தி வே, தென் திருப்பேரை தஞ்சாவூர் பக்கமா இல்லை திருநெல்வெல்லி பக்கமா.

வாலில்லாத தம்பி

dondu(#11168674346665545885) said...

@வாலில்லாத தம்பி
என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனை பற்றி நான் இட்ட இப்பதிவை பார்க்க: http://dondu.blogspot.com/2005/03/blog-post_22.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

பெரியார் கொள்கைகளில் உறுதியாய் இருப்பவர்களுக்கு ஏன் இந்த தடுமாற்றம். பகுத்தறிவின் படி எதிர்காலத்தை யாரும் கண்டு சொல்ல முடியாது என்பது தானே நிஜம்.

வாலில்லாத தம்பி

Anonymous said...

பதிவர் சந்திப்பை யாராவது போட்டொ பிடிச்சு போட்டிருக்காங்களா!

வாலில்லாத தம்பி

Anonymous said...

//சமீபத்தில்" மற்றும் மகரநெடுங்குழைக்காதன் என்பவனவற்றை வலை முழுதும் தெளித்ததும் உங்கள் சமீபத்திய சாதனை//
//வாலில்லாத தம்பி
சமீபத்தில் ஓக்கே. ஆனால் மகரநெடுங்குழைகாதன்? என் அப்பனை நான் இங்கு குறிப்பிடவில்லையே//

பாத்தீங்களா பாத்தீங்களா "சமீபத்தில்" என்கிற வார்த்தை எத்தனை டேஞ்சர் ஆனதென்று, நான் உங்கள் பானியில் "சமீபத்திய சாதனை"
பயன்படுத்தியதற்கு சரியான அர்த்தம் கொண்டு விட்டீர்கள். எனக்கு நிறைய இடங்களில் இது போல ஏற்படுவது உண்டு, அது பூமராங்க் ஆனதில் எனக்கு இன்று பரம திருப்தி

வாலில்லாத தம்பி

Anonymous said...

பதிவர்கள் கூடிக் கூடி பேசுவது சரி அங்கே உங்களுக்குள் சுய கட்டுப்பாடு வைத்துக் கொள்கிற மாதிரி ஏதும் பேச மாட்டீர்களா !. எ.கா.
1. ஒருவர் மீது இருவர் சேற்றை இறைப்பதில்லை
2."சில" உணர்வு என்ற பெயரில் தாய் நாட்டை தரக் குறைவாக எழுதவதில்லை.
இப்படி ஏதேனும் உத்தேசங்களை இனி வருகிற கூட்டங்களில் எடுக்கலாமே!


வாலில்லாத தம்பி

Anonymous said...

பருத்தி வீரனை எல்லோரும் புகழ்கிறார்கள். வட்டார வழக்கைச் சரியாகக் கையான்டாதையும் புதுமுக நடிகரை நன்றாக நடிக்கவைததையும் தவிர்த்து அதில் என்ன சிறப்பு என்றே எனக்கு விளங்கவில்லை.

ஒரு இலக்கில்லாத ரவுடி அவரைப் புரியாமல் பின் தொடரும் பெண் என்ன படமோ !

வாலில்லாத தம்பி

Anonymous said...

சுப்பிரமணியபுரமும் அப்படித்தான். "சமீபத்திய" ஸ்டைலில் பெல்பாட்டமும் தலமுடியையும் தவிர்த்து என்ன சிறப்பு அதில. சமூக விரோதிகளை கொண்டாடுவதை தமிழ் சினிமா என்னிக்கு விடும்

வாலில்லாத தம்பி

Anonymous said...

பழைய பதிவைப் பார்த்தேன். ஓப்பிலியப்பன் கோவிலில் அழகே தனி தான் இல்லையா. நானும் சமீபத்தில் சென்றிருந்தேன் , அந்த குட்டி யானை காப்பி குடிக்கும் தெரியுமா ? நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும், ஆனாலும் சிறிய சில்வர் அண்டாவில் ஒரு அம்மாள் தினமும் கொன்டுவருவதாக யானைப்பாகன் கூறினார். நான் நேரிலும் பார்த்தேன். ஆனா இந்த மாதிரி செய்திகளை சாதரனமா நம்பறது கஷ்டம் தான், இருந்தாலும் இங்கே தந்திருக்கிறேன்


வாலில்லாத தம்பி

Anonymous said...

//Anonymous said...
பழைய பதிவைப் பார்த்தேன். ஓப்பிலியப்பன் கோவிலில் அழகே தனி தான் இல்லையா. நானும் சமீபத்தில் சென்றிருந்தேன் , அந்த குட்டி யானை காப்பி குடிக்கும் தெரியுமா ? நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும், ஆனாலும் சிறிய சில்வர் அண்டாவில் ஒரு அம்மாள் தினமும் கொன்டுவருவதாக யானைப்பாகன் கூறினார். நான் நேரிலும் பார்த்தேன். ஆனா இந்த மாதிரி செய்திகளை சாதரனமா நம்பறது கஷ்டம் தான், இருந்தாலும் இங்கே தந்திருக்கிறேன்


வாலில்லாத தம்பி//


இன்னிக்கு வாலில்லாத தம்பியின் கும்மி
படு ஜோராக்கீது சாமியோவ்.




கும்மிகள் சங்க உறுப்பினர்.
அகில உலக கும்மிகள் சங்கம்
கும்மிகள் சங்க ரோடு
கும்மியூர்(அஞ்சல்)
கும்மி மாவட்டம்

வால்பையன் said...

நாடி சோதிடம் சில எழுத்துகளை மட்டும் சொல்லி நம் வாயிலேயே உண்மையை புடுங்குவது

Anonymous said...

//இளைஞரான உங்கள் வாழ்க்கையில் ஜாதி பற்றிய பிரக்ஞை எங்கே எல்லாம் குறுக்கிட்டிருக்கிறது? இதை பற்றி எழுதினால் என்னை போன்ற அரை கிழங்கள் கொஞ்சம் புரிந்து கொள்வோம்.//

.))))))))))))))(((((((((((((((((

Anonymous said...

அதுகுள்ள ஒரு அனானி கும்மியப்பா அதை நம்ப மாட்டேன்றாறே! அதிகாலையில் நான் சென்ற போது அந்தக் குட்டி யானை ஏகத்துக்கும் அலை பாய்ந்து கொன்டிருந்தது. இன்னும் காப்பி வரலையா என்று ஒரு ஊழியர் கேட்டு விட்டு சென்றார்.சும்மா தமாசுக்கு என்று நினைத்திருந்த நான் அதுக்கு நிஜமாவே காப்பி வந்ததைப் பார்த்து அதிர்ந்தேன். இதெல்லாம் கொஞ்சம் நெட்டுவாக்கில் இருக்கிற உன்மைகள் முழுங்கவே முடியாது அப்புறம் எப்படி ஜிரணிக்கிறதாம்.


வாலில்லாத தம்பி

Anonymous said...

நான் ஒரு தடவை ஏடு பார்க்கப் போனேன், உன் ஏடு எங்ககிட்ட இல்ல ஸ்ரீஈரங்கம் போ அப்படின்னாங்க. அங்க போன அங்கயும் இல்லைன்னாங்க . நமக்கு வால் இல்லாத ஒரே காரணத்துக்காக இப்படி அலைக் கழிப்பதாக அப்போது நினைத்தேன். ஆனா இப்பதான் புரியுது அவங்களால என் வாயிலிருந்து எதுவும் புடுங்க முடியலைன்னு.


வாலில்லாத தம்பி

Anonymous said...

ஏடு பார்க்க போய்ட்டு அதோட வர்றவங்க பரவாயில்ல, சில பேர் அவங்க சொல்ற பரிகாரமும் (நத்திங்க் பட் பணம் பறிப்பு) செய்யும் போது முழுக் கோயிந்து ஆகிக்கிட்டெ இருக்கோம் என்பதே தெரியாமல் கோயிந்து ஆகிவிடுவார்கள்.

வாலில்லாத தம்பி

Anonymous said...

//Anonymous said...
அதுகுள்ள ஒரு அனானி கும்மியப்பா அதை நம்ப மாட்டேன்றாறே! அதிகாலையில் நான் சென்ற போது அந்தக் குட்டி யானை ஏகத்துக்கும் அலை பாய்ந்து கொன்டிருந்தது. இன்னும் காப்பி வரலையா என்று ஒரு ஊழியர் கேட்டு விட்டு சென்றார்.சும்மா தமாசுக்கு என்று நினைத்திருந்த நான் அதுக்கு நிஜமாவே காப்பி வந்ததைப் பார்த்து அதிர்ந்தேன். இதெல்லாம் கொஞ்சம் நெட்டுவாக்கில் இருக்கிற உன்மைகள் முழுங்கவே முடியாது அப்புறம் எப்படி ஜிரணிக்கிறதாம்.


வாலில்லாத தம்பி//

தம்பி

கலக்குங்க

தம்பி

Anonymous said...

//Anonymous said...
நான் ஒரு தடவை ஏடு பார்க்கப் போனேன், உன் ஏடு எங்ககிட்ட இல்ல ஸ்ரீஈரங்கம் போ அப்படின்னாங்க. அங்க போன அங்கயும் இல்லைன்னாங்க . நமக்கு வால் இல்லாத ஒரே காரணத்துக்காக இப்படி அலைக் கழிப்பதாக அப்போது நினைத்தேன். ஆனா இப்பதான் புரியுது அவங்களால என் வாயிலிருந்து எதுவும் புடுங்க முடியலைன்னு.


வாலில்லாத தம்பி//

அப்போ வால்பையன் அண்ணா போனா?

Anonymous said...

//பதிவர் சந்திப்பை யாராவது போட்டொ பிடிச்சு போட்டிருக்காங்களா!

வாலில்லாத தம்பி//

இந்த லிங்கை சொடுக்கவும்

http://cablesankar.blogspot.com/

Anonymous said...

//ஒரு கிசு கிசு:

திரை உலகிலிருந்து பிரபலமாய் இருக்கும் ஒரு சில அரசியல் தலைவர்களில், ஒருவரின் ஒலையில் அவரது முதல்வர் ஆசை நிறைவேறும் என்று உள்ளதாம்.//

athu karuppu mgr thaane?//


அவர் வேகாத வெய்யிலுல நின்னு கூத்து கட்டி சம்பாரிச்ச துட்டை காலி பன்னுரவரைக்கும் விடமாட்டங்களே

எல்லாம் பாசக் கார பயலுவ

Anonymous said...

//அப்போ வால்பையன் அண்ணா போனா?//
இதுக்கு என்ன பதில சொல்றது. பதிவரைப் பத்திக் கேட்டிருந்தீங்கன்னா சாரி... அது பத்தி நான் கமென்ட் அடிக்க முடியாது.
ஆனா நிஜமா வால் இருகிற ஆள் போனா,
ஏடு பார்கிற ஆசாமிக்கு ரொம்ப ஈசி தான். பேரு ஊரு குணம் எல்லாத்தையும் ஏடப் பார்த்து படிக்காம வாலப் பார்த்தே படித்துடுவாங்களோ என்னமோ !


வாலில்லாத தம்பி

Anonymous said...

//Anonymous said...
ஏடு பார்க்க போய்ட்டு அதோட வர்றவங்க பரவாயில்ல, சில பேர் அவங்க சொல்ற பரிகாரமும் (நத்திங்க் பட் பணம் பறிப்பு) செய்யும் போது முழுக் கோயிந்து ஆகிக்கிட்டெ இருக்கோம் என்பதே தெரியாமல் கோயிந்து ஆகிவிடுவார்கள்.

வாலில்லாத தம்பி//


இது கொஞ்சம் ஓவர்

அவங்க அவங்க தொழில் பண்ணுவது குடுமபம்,குட்டிகளை காப்பாத்ததானே

இந்த தந்திரம் எல்லா வியபாரத்திலேயும் உள்ளது தானே

Anonymous said...

//Anonymous said...
//அப்போ வால்பையன் அண்ணா போனா?//
இதுக்கு என்ன பதில சொல்றது. பதிவரைப் பத்திக் கேட்டிருந்தீங்கன்னா சாரி... அது பத்தி நான் கமென்ட் அடிக்க முடியாது.
ஆனா நிஜமா வால் இருகிற ஆள் போனா,
ஏடு பார்கிற ஆசாமிக்கு ரொம்ப ஈசி தான். பேரு ஊரு குணம் எல்லாத்தையும் ஏடப் பார்த்து படிக்காம வாலப் பார்த்தே படித்துடுவாங்களோ என்னமோ !


வாலில்லாத தம்பி//


தம்பி
நீங்க
தங்கக் கம்பி

Anonymous said...

//ஏடு பார்க்க போய்ட்டு அதோட வர்றவங்க பரவாயில்ல, சில பேர் அவங்க சொல்ற பரிகாரமும் (நத்திங்க் பட் பணம் பறிப்பு) செய்யும் போது முழுக் கோயிந்து ஆகிக்கிட்டெ இருக்கோம் என்பதே தெரியாமல் கோயிந்து ஆகிவிடுவார்கள்.

வாலில்லாத தம்பி//


இது கொஞ்சம் ஓவர்

அவங்க அவங்க தொழில் பண்ணுவது குடுமபம்,குட்டிகளை காப்பாத்ததானே

இந்த தந்திரம் எல்லா வியபாரத்திலேயும் உள்ளது தானே//யானை காப்பி குட்டித்ததை சொல்லும் போது இதை யாரும் நம்பா மாட்டங்களே என்று எனக்கே கூச்சமாகி விடும். இப்படி கூட நாட்டில அப்பவிங்க இருக்காங்கன்னு உங்களைப் பத்தி யார் கிட்டயும் சொன்னா யாரு நம்பப் போராங்க! சத்தியமா வெளில சொல்ல மாட்டேன். இனிமே ரயில்ல மயக்க பிஸ்கட் கொடுத்தாக்கூட அப்படியஏ வாங்கி சாப்பிட்டனும்ன்னு சொன்னாலும் சொல்லுவீங்க. ஆமா குழந்தை குட்டிகளை காப்பத்துனும்னா எது செஞ்சாலும் நியாயம் தானே, ஸ்பெக்டரம் கூட தொழில் தந்திரம் தான். எனக்கு வாலில்லைங்கறதுக்காக எதுவேனாலும் சொல்லுவீங்களா?

வாலில்லாத தம்பி

Anonymous said...

அய்யா அனானி, நீங்க ஏடு சோதிட நிலையம் நடத்தறவரா ! அப்படின்னா நீங்க் சொல்றது சரி

வாலில்லாத தம்பி

Anonymous said...

//ஸ்பெக்டரம் கூட தொழில் தந்திரம் தான். எனக்கு வாலில்லைங்கறதுக்காக எதுவேனாலும் சொல்லுவீங்களா?

வாலில்லாத தம்பி//


கடைசியிலே இந்தியாவையே உலுக்கப் போற ,ஒரு லட்சம் கோடி அரசுக்கு லாஸ் கேசு பத்தி பேசுறீக தம்பி

இது பெரிய இடத்துச் சமாச்சாரமாச்சே.

ஸ்ரீ.... said...

திரு. ராகவன் அவர்களுக்கு,

பதிவர் சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது. யாவருக்கும் நன்றி. எனது பதிவையும் பார்க்குமாறு அழைக்கிறேன்.

வணக்கங்களுடன்,

ஸ்ரீ...

குப்பன்.யாஹூ said...

i regret that I missed the meet. Very good write up as always.

kuppan_yahoo

Anonymous said...

திருநெல்வேலிக்கே அல்வா விற்ற கதையாகிவிட்டது. உங்கள் மறுமொழியை பார்த்ததும், "பார்ப்பனராக பிறந்ததில் என்ன பெருமை" என்று நானே கேட்டிருந்த ஞாபகம் வந்தது. உங்களிடமே வந்து ப்ளாக் உலகில் பார்ப்பன வெறுப்பை பற்றி நான் எழுதியதை பார்க்க சொல்லி இருக்கிறேனே! நம் கருத்துகள் இங்கே ஒன்றுபட்டிருப்பது மகிழ்ச்சி.

உங்கள் வாழ்க்கையில் ஜாதியின் தாக்கத்தை நீங்கள் உணர்ந்த தருணங்கள் என்னென்ன? அனுபவத்தில் மூத்தவர் என்ற முறையிலும், இளைஞர் என்ற முறையிலும், உங்கள் அனுபவங்கள் சுவாரசியமாக இருக்குமே!

Anonymous said...

/////RV said...
திருநெல்வேலிக்கே அல்வா விற்ற கதையாகிவிட்டது. உங்கள் மறுமொழியை பார்த்ததும், "பார்ப்பனராக பிறந்ததில் என்ன பெருமை" என்று நானே கேட்டிருந்த ஞாபகம் வந்தது. உங்களிடமே வந்து ப்ளாக் உலகில் பார்ப்பன வெறுப்பை பற்றி நான் எழுதியதை பார்க்க சொல்லி இருக்கிறேனே! நம் கருத்துகள் இங்கே ஒன்றுபட்டிருப்பது மகிழ்ச்சி.

உங்கள் வாழ்க்கையில் ஜாதியின் தாக்கத்தை நீங்கள் உணர்ந்த தருணங்கள் என்னென்ன? அனுபவத்தில் மூத்தவர் என்ற முறையிலும், இளைஞர் என்ற முறையிலும், உங்கள் அனுபவங்கள் சுவாரசியமாக இருக்குமே!/////


தோஸ்த்த கண்டுக்கினிகளா

பட்டய கிளப்புங்க

Anonymous said...

RV said...

//திருநெல்வேலிக்கே அல்வா விற்ற கதையாகிவிட்டது//


கொல்லர் உலையில் ஊசி விற்ற கதைபோலா?

Anonymous said...

சோ போன்றவர்கள் தீவிரவாதிகளின் இலக்குகளை தாக்க வேண்டும் என்று சொல்கிறர்கள் என்ற தகவலுக்கு தங்களின்
ஆதரவு எப்படி?

ஆளும் அரசு இதைச் செய்யுமா?

போர் என்றால் பொருளாதரச் சிக்கல் இன்னும் கூடிவிடுமா?

dondu(#11168674346665545885) said...

//உங்கள் வாழ்க்கையில் ஜாதியின் தாக்கத்தை நீங்கள் உணர்ந்த தருணங்கள் என்னென்ன? அனுபவத்தில் மூத்தவர் என்ற முறையிலும், இளைஞர் என்ற முறையிலும், உங்கள் அனுபவங்கள் சுவாரசியமாக இருக்குமே!//
இதையும் பதிவாக்கினால் போயிற்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//dondu(#11168674346665545885) said...
//உங்கள் வாழ்க்கையில் ஜாதியின் தாக்கத்தை நீங்கள் உணர்ந்த தருணங்கள் என்னென்ன? அனுபவத்தில் மூத்தவர் என்ற முறையிலும், இளைஞர் என்ற முறையிலும், உங்கள் அனுபவங்கள் சுவாரசியமாக இருக்குமே!//
இதையும் பதிவாக்கினால் போயிற்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்//


அப்போ ஹிட் கவுண்டர் எகிறப் போவுது
4 லடசம் 5 மாசத்துக்கு முன்னாலேயா வா?

ஒரு சிலர் பெரியவரின் ஹிட் கவுண்டரை ஏத்தினதே அவரது இந்தக் கருத்துக்கு எதிர் எண்ணம் கொண்டவர்கள் எனச் சொல்வது உண்மையா?

Anonymous said...

http://timesofindia.indiatimes.com/Pakistani_textbooks_build_hate_culture_against_India/articleshow/3898659.cms


Pak textbooks build hate culture against India
27 Dec 2008, 0239 hrs IST, ARIF MOHAMMED KHAN
Print Email Discuss Share Save Comment Text:
The empowerment of terror in Pakistan has not happened overnight. This is the logical culmination of the politics and policies pursued by

Pakistan for years now.

Terrorism in Pakistan has its roots in the culture of hate and the ethos of inequality on the ground of religious faith, leading to their being deeply ingrained in the Pakistani psyche and mindset.

One factor that has played a crucial role in creating this culture of hate is the educational policy of the government of Pakistan pursued since 1977. The officially prescribed textbooks, especially for school students, are full of references that promote hate against India in general, and Hindus in particular.

A cursory glance at Pakistani school textbooks - especially the compulsory subjects like Pakistan studies and social studies - gives an idea of how history has been distorted and a garbled version prescribed to build this mindset and attitude.

The objective of Pakistan's education policy has been defined thus in the preface to a Class 6 book: "Social studies have been given special importance in educational policy so that Pakistan's basic ideology assumes the shape of a way of life, its practical enforcement is assured, the concept of social uniformity adopts a practical form and the whole personality of the individual is developed." This statement leaves no doubt that "social uniformity", not national unity, is a part of Pakistan's basic ideology.

The Class 5 book has this original discovery about Hindu help to bring British rule to India: "The British had the objective to take over India and to achieve this, they made Hindus join them and Hindus were very glad to side with the British. After capturing the subcontinent, the British began on the one hand the loot of all things produced in this area, and on the other, in conjunction with Hindus, to greatly suppress the Muslims."

The Std VIII book says, "Their (Muslim saints) teachings dispelled many superstitions of the Hindus and reformed their bad practices. Thereby Hindu religion of the olden times came to an end."

On Indo-Pak wars, the books give detailed descriptions and openly eulogize ‘jihad' and ‘shahadat' and urge students to become ‘mujahids' and martyrs and leave no room for future friendship and cordial relations with India.

According to a Class 5 book, "In 1965, the Pakistani army conquered several areas of India, and when India was on the point of being defeated, she requested the United Nations to arrange a ceasefire. After 1965, India, with the help of Hindus living in East Pakistan, instigated the people living there against the people of West Pakistan, and finally invaded East Pakistan in December 1971. The conspiracy resulted in the separation of East Pakistan from us. All of us should receive military training and be prepared to fight the enemy."

The book prescribed for higher secondary students makes no mention of the uprising in East Pakistan in 1971 or the surrender by more than 90,000 Pakistani soldiers. Instead, it claims, "In the 1971 India-Pakistan war, the Pakistan armed forces created new records of bravery and the Indian forces were defeated everywhere."

The students of Class 3 are taught that "Muhammad Ali (Jinnah) felt that Hindus wanted to make Muslims their slaves and since he hated slavery, he left the Congress". At another place it says, "The Congress was actually a party of Hindus. Muslims felt that after getting freedom, Hindus would make them their slaves."

And this great historic discovery is taught to Std V students, "Previously, India was part of Pakistan."

Commenting on this literature that spreads hate, leading Pakistani educationist Tariq Rahman wrote, "It is a fact that the textbooks cannot mention Hindus without calling them cunning, scheming, deceptive or something equally insulting. Students are taught and made to believe that Pakistan needs strong and aggressive policies against India or else Pakistan will be annihilated by it."

(The author is a former Union minister)

மெட்ராஸ்காரன் (Madrasi) said...

Sir,

My questions to you for the week. I am typing them in english as I cannot type in tamil from office. Please translate
1. What is your take on Jothidam? Do you have any personal experience (correct/incorrect predictions)?
2. What about Nadi Jothidam? Do you have any information on that?
(It would be great if you can have a post on this.Appadi seithal naan dhanyan aaven)
3. Bomb blast in Bangalore , Ahmedabad, Mumbai attack all happening in very short intervals (periods).It is quite obvious that we are missing a major link in combating terrorism. Do you think our goverment has learnt any lesson? Any specific measures being carried out in Gujarat to your knowledge?
4. Have you read "Washingtinil Nallathanbhi"? Do you agree that this sattire still has relevance even after 25+ years?

Thanks for the time and efforts:)

ரமணா said...

//My questions to you for the week. I am typing them in english as I cannot type in tamil from office. Please translate
1. What is your take on Jothidam? Do you have any personal experience (correct/incorrect predictions)?
2. What about Nadi Jothidam? Do you have any information on that?
(It would be great if you can have a post on this.Appadi seithal naan dhanyan aaven//


please visit classroom2007 of sri subbiah sir .


http://classroom2007.blogspot.com/

ramana

செல்வம் said...

டோண்டு சார்....

நான் இந்தப் பதிவைப் படிக்கவே 2 நாட்கள் ஆகியுள்ளபோது...உங்கள் வேகம் வியக்க வைக்கிறது.மற்றபடி நாடிஜோதிடம் குறித்த என் ஆச்சரியங்கள் உண்மையே.வால்பையன்
கூறியது போல் அது நம் வாயிலிருந்தே விடயங்களை வாங்குவதாக நான் நினைக்கவில்லை.

நானும் முத‌லில் "யார் ம‌ன‌சுல‌ யாரு உங்க‌ ம‌ன‌சுல‌ யாருன்னு" கிராண்ட்மாஸ்ட‌ர் மாதிரி
விளையாடுகிறார்க‌ள் என்று தான் நினைத்தேன். ல‌ட்சக்க‌ண‌க்கான‌ பெய‌ர்க‌ளில் என் பெய‌ர்
பெற்றோர் பெய‌ர்,நான் ப‌டித்த‌ துறை, என் பிற‌ந்த தேதி போன்ற‌வ‌ற்றைக் கூறிய‌து விளையாட்ட‌ல்ல‌.

அதுவும் என்னைப் பாட்டுடைத்த‌லைவ‌னாக‌க்(கொஞ்ச‌ம் ஓவர்தான் இல்லை)கொண்டு எழுத‌ப்ப‌ட்ட‌ பாட‌ல் ச‌த்தியமாக‌ ந‌ம் ச‌ம‌கால‌த் த‌மிழ் இல்லை.அதுவும் அவ‌ர்க‌ள் ஏதோ ஒரு பார்முலாவைப் ப‌ய‌ன்ப‌டுத்தி ஓலைக‌ளை செக்ரிகேட் செய்து வைத்துள்ளார்க‌ள் என்றே தோன்றுகிற‌து.

என் ம‌ற்ற‌ ஆச்ச‌ரிய‌ங்க‌ளை நேர‌ம் கிடைக்கும் போது ப‌திவிடுகிறேன்.

ந‌ன்றி

செல்வ‌ம்

Anonymous said...

செல்வம்,
நான் கடவுள் நம்பிக்கையுள்ளவன் அதே சமயம் கடவுளின் நம்பிக்கையை யாராவது திரிக்க முயன்றால் அதை ஏற்காதவன்.இது கண்டிப்பாக ஏமாற்று வேலை. 4 அல்லது 5 ஒன்றுக் கொன்று மாறுபட்ட செற்றொடரைப் படித்து உங்களிடமிருந்தே விடை பெறப்படுகிறது.

தற்போது நான் ஓட்டத்தில் இருக்கிறேன் நாளை உங்களுக்கு உதாரனத்துடன் விளக்கம் தருகிறேன்.
ரிஷபன்

Anonymous said...

//செல்வம்,
நான் கடவுள் நம்பிக்கையுள்ளவன் அதே சமயம் கடவுளின் நம்பிக்கையை யாராவது திரிக்க முயன்றால் அதை ஏற்காதவன்.இது கண்டிப்பாக ஏமாற்று வேலை. 4 அல்லது 5 ஒன்றுக் கொன்று மாறுபட்ட செற்றொடரைப் படித்து உங்களிடமிருந்தே விடை பெறப்படுகிறது.

தற்போது நான் ஓட்டத்தில் இருக்கிறேன் நாளை உங்களுக்கு உதாரனத்துடன் விளக்கம் தருகிறேன்.
ரிஷபன்//

thanks .

please write about this naadi jothidam and its credibility.

Anonymous said...

தமாதத்தை சிறிது பொறுத்தருள்வீர்களாக. இன்றோ நாளையோ கன்டிப்பாக பதில் அளிக்க முயல்கிறேன்.

ரிஷபன்

Anonymous said...

////Anonymous said...
தமாதத்தை சிறிது பொறுத்தருள்வீர்களாக. இன்றோ நாளையோ கன்டிப்பாக பதில் அளிக்க முயல்கிறேன்.

ரிஷபன்////

thank you sir.

ரிஷபன்Meena said...

நாடி ஜோதிட‌த்தைப் ப‌ற்றி பின்னூட்ட‌ங்க‌ளில் எழுதினால் அது நீண்டு கொண்டே போகும் என்பதால் த‌னிப் ப‌திவாக‌ இட்டுள்ளேன்.புதியதாக‌ ப‌திவு தொட‌ங்குவ‌தால் என‌க்கு இத்த‌னை நாளாகிவிட்ட‌து. எப்ப‌டித் தொட‌ங்குவ‌து,யாரிட‌ம் உத‌வி கேட்ப‌து என்று யோசித்து யோசித்து க‌டைசியில் டிரைய‌ல் அன்டு எர‌ர் முறையில் நானே தொட‌ங்கி இருக்கிறேன். இன்னும் நாள் க‌ட‌த்த‌ வேண்டாம் என்ப‌தால் எழுதிய‌வ‌ரை, ப‌திவிட்டுள்ளேன். http://rishaban.blogspot.com

ரிஷப‌ன்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது