12/12/2008

சோ அவர்கள் எழுதிய அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் - 4

இந்த வரிசையில் நான் போட்ட முந்தையப் பதிவு இங்கே. இப்பதிவை போடுவதற்கு எதிர்பார்த்ததற்கு மேல் காலம் ஆகிவிட்டது. நடுவில் இப்பதிவும் வந்து விட்டது. அதிலிருந்து சில வரிகள் சோ தன்னைப் பற்றி கூறிகொண்டவை. அவற்றை முதலில் பார்ப்போம்.

சோ அவர்கள் தான் தனது அடையாளத்தைத் தேடுபவராக தன்னை வகைப்படுத்தினார். வக்கீல்கள் மத்தியில் இவரை நாடகக்காரராக பார்த்திருக்கிறார்கள். நாடகக்காரர்கள் இவரை பத்திரிகையாளராகப் பார்த்திருக்கிறார்கள், பத்திரிகைக்காரர்களோ இவரை நடிகராகப் பார்த்திருக்கிறார்கள். ஆக ஒரு குழப்பத்தை அவர் உருவாக்குகிறார் என்று அனு கூற அதுதான் தனது ஸ்டைல் என சோ கூறினார். சோ அவர்கள் மேலும் பேசுகையில் தனது தந்தை பெற்ற விவசாய விருதைப் பற்றி குறிப்பிட்டார். அந்த விருது இந்தியாவிலேயே இதுவரை இருவருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது என்று சொன்னார். அவரை பேர் சொல்லி யாரும் அழைத்ததில்லை. சார் என்றுதான் அவரை குறிப்பிடுவார்கள் என கூறினார். அவருடைய நெருங்கிய நண்பர்கள்கூட வீட்டுக்கு வந்தால் “சார் இருக்கானா” என்றுதான் கேட்பார்கள் என்பதையும் தெரிவித்தார். மொத்தத்தில் ரொம்பவும் பன்முனை மனிதர் என்று முத்தாய்ப்பு வைத்தார்.

சோ அவர்கள் தான் முதலில் என்னவாக வர வேண்டும் என்ற லட்சியம் வைத்திருந்தார் என அனு வினவ, அவர் தனது வாழ்க்கையே ஒரு இலக்கில்லாத அலைச்சல் என்று கூறினார். அட்வகேட், நடிகர், பத்திரிகாசியர் என்று எல்லா அவதாரங்களும் தானாகவே வந்தன என்று குறிப்பிட்டார்.எல்லாவற்றையும் நகைச்சுவை கோணத்தில் பார்ப்பது பற்றி பேசும்போது பல தருணங்களில் நகைச்சுவை அவரை சங்கடமான தருணங்களிலிருந்து காப்பாற்றியுள்ளன என்று கூறினார்.

ஒரு டைம் காப்ஸ்யூல் செய்து வைத்திருப்பதாகவும் அது சில நூறாண்டுகள் கழித்து வெளியே வரும்போது பல சாதனைகள் அவர் பெயரில் இருக்குமென்றும் (இந்திய அரசியல் சட்டத்தை எழுதியது போன்ற உடான்ஸ்கள்) கூறினார். 300, 400 ஆண்டுகளுக்கு பிறகு யார் இதையெல்லாம் சரி பார்க்க இயலும் என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டார். பிறகு, தான் நாடக உலகுக்கு வந்தது பற்றியும் குறிப்பிட்டார். “பெற்றால்தான் பிள்ளையா” நாடகத்தில் அவர் ஏற்ற மெக்கானிக் ரோல் முதலில் ஸ்கோப் இல்லாத பாத்திரமாகக் கருதப்பட்டதாகவும் வேறு யாரும் அதை எடுக்கத் தயாராக இல்லாததால் தான் எடுத்ததாகவும் கூறினார். பின்னால் அது வெற்றி பெற்று அதே நாடகம் “பார் மகளே பார்” என்ற பெயரில் சிவாஜி நடித்த போது சோவுக்கும் அவர் செய்த அதே மெக்கானிக் ரோல் கொடுத்தார் என்றும் குறிப்பிட்டார்.


ஆரம்பத்தில் மற்ற குழுக்களில் நடித்தவர் பிறகு தனது சொந்த நாடகக் குழுவையே உருவாக்கினது ஆகியவை பற்றி இப்புத்தகத்தில் சுவையாகக் கூறியுள்ளார். முதலில் தேன்மொழியாள் என்னும் நாடகத்தில் சிறு ரோலை பெற்று கொண்டவர் பின்னால் ஆசிரியர் கூத்தபிரானை பயமுறுத்தி தனது ரோலை அதிகரிக்க செய்துள்ளார். இவரது குழுவில் சில காலம் டைரக்டராக பணியாற்றிய கே. பாலசந்தர் இவரது ரவுசு தாங்காமல் அவ்வேலையை விட்டு செல்ல இவரே டைரக்டரானதும் வாழ்வின் குருட்டாம்போக்குத்தனத்தின் வெளிப்பாடே என்று சோ அவர்கள் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். எல்லாம் நாடக உலகின் தலைவிதி என்றும் அவரே கூறிவிட்டார். அதுதான் சோ. எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு தன்னைத் தானே கிண்டல் செய்து விடுவார். அவரது முழியைக் கூட திருட்டுமுழி என்னும் ரேஞ்சுக்கு கூறிவிடுவார். அப்புறம் மத்தவங்க என்ன சொல்லுவாங்களாம்?

நான் பார்த்த முதல் சோ நாடகம் சமீபத்தில் 1972-ல் பம்பாய் ஷ்ண்முகாநந்தா ஹாலில். “இன்பக்கனா ஒன்று கண்டேன்” என்று அதற்கு பெயர். அதில் அவர் சமீபத்தில் 1968-ல் வெளி வந்த முக்தா பிலிம்சின் படம் பொம்மலாட்டத்தில் ஏற்று நடித்த ஜாம்பஜார் ஜக்கு மாதிரியான கெட்டப்பில் இந்த நாடகத்தில் வந்தார். மேடையில் சிறிது நேரம் பேசிவிட்டு ஆடியன்சில் வந்து உட்காருகிறார். அப்போது அவர் ஒரு கனவு காண்கிறார். அதில் ஒரு ஊரில் எல்லோருமே நல்லவர்களாக இருக்கிறார்கள். எல்லோருமே ஊரில் நல்ல நிர்வாகத்துக்காக பாடுபடுகிறார்கள். எல்லோருமே தூய வெல்ளை நிற உடை அணிந்து போகும்போதும் வரும்போதும் ஒருவருக்கொருவர் முகமன் சொல்லிக் கொள்கிறார்கள்.

அதில் இருவருக்கும் மட்டும் வேலையில்லை. அவர்கள் நிர்வாகிகளுக்கான தேர்தல் வைக்கலாம் என ஆலோசனை கூறுகிறார்கள். திடீரென சோ அவ்ர்கள் “யோவ் நிறுத்தய்யா” என கத்திக் கொண்டே மேடைக்கு செல்கிறார். தேர்தல் நடக்காமல் தடுக்க பாடுபடுகிறார். கனவு அவருடையதாக இருக்கலாம் ஆனால் அவரது கனவு மாந்தர்கள் அவர் சொல்வதை கேட்கத் தயாராக இல்லை. தேர்தல் நட்க்கிறது. குளறுபடிகள் ஆரம்பமாகின்றன. முதல்வருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க சங்கதிகள் நகருகின்றன. கடையியில் சோ அவர்கள் பிடிவாதமாக கனவிலிருந்து விழிக்க எல்லா பாத்திரங்களும் மறைகின்றனர். அப்போது சோ ஒரு டயலாக் கொடுப்பார். “அத்தெல்லாம் சரி, ஆனாக்க முதல்லே பாத்தீங்களே, எல்லோரும் நல்லவங்களா இருக்கச்சே, அப்போ எவ்வளோ போர் அடிச்சது? அப்புறம்தானே ஒங்களுக்கே நாடகத்திலே சுவாரசியம் வந்தது” என்று கூற தியேட்டரே சிரிப்பில் ஆழ்ந்தது.

நாடகக் காவலர் மனோகர் பல சரித்திர நாடகங்கள் போட்டு அமோக வெற்றி பெற்றவர். அவர் ஒரு சமயம் கூறினார், “நாங்கள் எல்லாம் கஷ்டப்பட்டு பெறும் வெற்றிகளை சோ அவர்கள் தனது அமெச்சூர் குழுவை வைத்து அனாயசமாக பெற்றுவிடுகிறார் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்” என்று. “இறைவன் இறந்துவிட்டானா” என்னும் நாடகத்தில் பூகம்பம் நிகழ்வதை சோ காட்ட நினைத்ததுதான் பெரிய காமெடியாகப் போய்விட்டது. அதுவே மனோகராக இருந்திருந்தால் தூள் கிளப்பியிருப்பார் என எனக்கு பட்டது. அந்த ஒரு தோல்வியும் சோ தனக்கு பழக்கமில்லாததை செய்ய முயன்றதினாலேத்தான் என நினைக்கிறேன். தனது வலிமை இம்மாதிரி ட்ரிக் ஷாட்டுகளில் இல்லை என தெரிந்தவுடனேயே அதை மரியாதையாக கைவிட்டது அவரது புத்திசாலித்தனமே.

அவரது மனிதாபிமானத்தை விளக்க நண்பர் டி.வி. ராதாகிருஷ்ணன் அவர்களின் பதிவை பார்க்கலாம்.

இன்னும் சில நாடகங்கள் பற்றி அடுத்தப் பதிவில் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

38 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அவருடைய நெருங்கிய நண்பர்கள்கூட வீட்டுக்கு வந்தால் “சார் இருக்கானா” என்றுதான் கேட்பார்கள் என்பதையும் தெரிவித்தார்.



சோ...ல்ல

SUREஷ்(பழனியிலிருந்து) said...

முதலில் தேன்மொழியாள் என்னும் நாடகத்தில் சிறு ரோலை பெற்று கொண்டவர் பின்னால் ஆசிரியர் கூத்தபிரானை பயமுறுத்தி தனது ரோலை அதிகரிக்க செய்துள்ளார்.




வலைப் பதிவு எதுவும் போடுறாரா....

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கனவு அவருடையதாக இருக்கலாம் ஆனால் அவரது கனவு மாந்தர்கள் அவர் சொல்வதை கேட்கத் தயாராக இல்லை



சத்திய நித்திய.....

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி டோண்டு சார்

Unknown said...

திருவாளர் சோ அவர்களின் நாடகக்குழு
இப்போது போடும் நாடகங்களுக்கு மக்கள் ஆதரவு முன்பு மாதிரி இருக்கிறதா?
அவரது துகளக் விற்பனையில் ஒரு காலத்தில் சக்கை போடு போட்டதே, இப்போது சர்குலேசன் எப்படி?

துக்ளக் பத்திரிக்கயின் பேப்பர் தரம் பற்றிக் கூட சிலர் ரொம்ப அட்வெர்ஸாக கமெண்ட் அடித்தார்களே.
விற்பனை, விமர்சகர்கள் சொல்வது போல் குறைவு இல்லை என்றால் பேப்பர் தரத்தைகூட்ட ஏது தடை?
உங்களின் இந்த பதிவுகளை துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் படிப்பதுண்டா?
தன்னை பற்றி பதிவுகளில் வரும் விமர்சனங்களை பற்றி உங்களுடன் ஏதாவது சொல்வாரா?
அவர் ஏதாவது பதிவில் எழுதுகிறாரா?
சமிபத்தில் அவரைச் சந்தித்து உண்டா?
தொலைபேசி/கடித/மின்னஞ்சல் தொடர்பு உண்டா?
பொதுவாக நடுத்திரக் குடுப்பங்களில் 60 வயதை தாண்டியதும் ஞபாகக்குறைவு, செயல் பாட்டுக் குறைவு, உடல் நலக் குறைவு,முடிவெடுக்கும் ஆற்றல் குறையும் தன்மை சர்வ சதாரணமாய் இருக்கும் போது அரசியல்வாதிகள்/பெரும் ஆலை அதிபர்கள் /மத குருக்கள், ஆன்மீகச் செம்மல்கள்/பத்திரிக்கை யாளர்கள்/வக்கீல்கள்/ஆடிட்டர்கள்/டாக்டர்கள்/விஞ்ஞானிகள்/பேராசிரியர்கள்/சினிமா,டீவி ,விளம்பரத்துறை போன்ற உடகங்களில் தலமைப் பொறுப்பாளர்கள்/பதிவுலக ஜாம்பவான்கள்

ஆகியோரில் புகழ் பெற்ற பெரியவர்கள் 60,70 வயதை கடந்த பிறகும் தூள் கிளப்புகிறார்களே இது எப்படி சாத்யமாகிறது?

dondu(#11168674346665545885) said...

@நக்கீரன் பாண்டியன்:
முதலில் உங்கள் கேள்விகளுக்கு இங்கேயே பதில் அளித்தேன். பிறகு அதை நீக்கி அடுத்த பதில்கள் பதிவின் வரைவுக்கு கொண்டு போய் விட்டேன்.

@சுரேஷ்:
நக்கீரன் பாண்டியன் அவர்கள் கேட்ட கேள்விகளில் உங்கள் கேள்வியும் அடங்கி விடுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

நக்கீரன் பாண்டியன், இது போன்ற பின்னூட்டங்கள் படிப்பவர்களுக்கு சுவராஸ்யத்தைத் தருகிறது. ஆனால் இதை விடுத்து தமிழ் வலைப் பதிவர்கள் ஏன் வம்புகளில் இறங்குகிறார்கள் என்று எனக்குப் புரிவதில்லை. இது போன்ற கேள்விகள் எனக்கும் இருந்தாலும் கூட இத்தனை தெளிவாய் என்னால் வார்த்தைகளில் வடிக்க முடிந்ததில்லை.
வீன் விவாதம் செய்பவர்களுக்கு சொல்லிக் கொள்கிற மாதிரி நடையும் கிடையாது. வலையில் உள்ள சில பதர்களை வைத்து தமிழ்ர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைந்து விட்டதோ என்று நினைத்திருந்தேன். ஆனால் நல்லவேளையாக நிசத்தில் அப்படி இல்லை. புரளி மனோகர் வில்லங்கமாகக் கேட்டாலும் கூட ரசிக்கும் படி இருந்தது.
குப்புக் குட்டி

Anonymous said...

எதிலேயும் நியாய அநியாயம் பழி பாவம்,நீதி நேர்மை பார்த்து நம் முன்னோர்களில் பெரும் பாலோர் நடந்ததால் தான் நாடும் நாட்டு மக்களும் சுபிட்சமாய் இருந்தனர்.
மீதமுள்ளவர்களில் ஒரு பிரிவினர் ஆட்டமாய் ஆடி, பிறரை துன்பப் படுத்தி,கெட்ட வழிகளில் பெரும் பணம் சேர்த்த கெட்டவர்கள், அதன் பலனை தனது கடைசி காலத்தில் நிச்சயம் அனுபவித்து உள்ளனர் .இது காலம் கற்றுத் தந்த பாடம்.

மனதாலும் ,வாக்காலும்,செயலாலும் பிறருக்கு கிஞ்சிற்றும் கெடுதல் பண்ணுதல் கூடாது.

இது ஏதோ மத போதனை,கடவூள் தண்டனை தருவார் என்பதில்லை.

நண்பர்களே யோகக் கலையில் பெரும் நிபுணர்களாய் உள்ள பெருமக்கள் சொல்வதை பாருங்கள்.

இந்த பிரபஞ்சம் ஒன்றுதான்.நாம் அனைவரும் அதன் அம்சங்கள்.
இதில் ஜாதி இல்லை
மத மில்லை
ஆண்டான் இல்லை
அடிமை இல்லை
நீ ஒருவரைப் புகழ்ந்தால் அது உன்னை புகழ்ந்ததாய் அர்த்தம்
நீ மற்றொருவரையோ,மற்றொருவருடைய குடுப்பத்தையோ
தகாத வார்த்தைகள் கூறி பகடி பேசினால் அது உன்னை திட்டியதாய்த் தான் அர்த்தம்
ஏன் என்றால் நீயும் அவரும் ஒன்றே.
------------------------

சரி அப்படியென்றால் நாட்டில் நடக்கும் சாதி மத ஏற்ற தாழ்வுகள்,சண்டை சச்சரவுகள்,பூசல்கள் ஏன்?

இவைகளை ஒழிக்கத்தான் ராமலிங்க அடிகளார்,ரமண மகரிஷி போன்ற பெரியவர்கள் அரும் பணியாற்றி பெருந் தொண்டாற்றியுள்ளனர்.


நாகரிகமும் பண்பாடும் வளர்ந்த பிறகும்
மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவது போல்
தனி மனிதத் தாக்குதல்கள் தொடுப்பது
அதுவும் ஒரு பதிவாளர் சொன்ன கருத்து பிடிக்கவில்லை என்று ,மாற்றுக் கருத்து உள்ளவர்கள் அவரது குடும்பத்து பெண்டு,பிள்ளைகளை தீ போல் சுடும் வார்த்தைகளால்,வேண்டாம் நண்பர்களே!

இந்தக் கொடுமை எப்போது மறையும்.


பாரதியின் வரிகளை பாருங்கள்

காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்;நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;நோக்க நோக்கக் களியாட்டம்.


எதையும் கொண்டு வரவில்லை
எதையும் கொண்டு போகப் போவதில்லை
இடையில் இருப்பதோ
கொஞ்ச காலம்
இந்த காலத்தில்
ஒரு ஆத்மா பிறிதொரு ஆத்மாவுக்கு
அனுசரணையாய் இருப்போம்.


வரும் காலம் அனைவருக்கும் நல்வழி காட்டட்டும்

Anonymous said...

//நண்பர்களே யோகக் கலையில் பெரும் நிபுணர்களாய் உள்ள பெருமக்கள் சொல்வதை பாருங்கள்.

இந்த பிரபஞ்சம் ஒன்றுதான்.நாம் அனைவரும் அதன் அம்சங்கள்.
இதில் ஜாதி இல்லை
மத மில்லை
ஆண்டான் இல்லை
அடிமை இல்லை
நீ ஒருவரைப் புகழ்ந்தால் அது உன்னை புகழ்ந்ததாய் அர்த்தம்
நீ மற்றொருவரையோ,மற்றொருவருடைய குடுப்பத்தையோ
தகாத வார்த்தைகள் கூறி பகடி பேசினால் அது உன்னை திட்டியதாய்த் தான் அர்த்தம்
ஏன் என்றால் நீயும் அவரும் ஒன்றே.
------------------------

சரி அப்படியென்றால் நாட்டில் நடக்கும் சாதி மத ஏற்ற தாழ்வுகள்,சண்டை சச்சரவுகள்,பூசல்கள் ஏன்?

இவைகளை ஒழிக்கத்தான் ராமலிங்க அடிகளார்,ரமண மகரிஷி போன்ற பெரியவர்கள் அரும் பணியாற்றி பெருந் தொண்டாற்றியுள்ளனர்//

unmainilavaram verumaathiriyallava irukuu

still they are giving comments against dondu sir using bad language.

Let us pray god for a good change in tamil blogs.


http://sathirir.blogspot.com/2008/12/blog-post_305.html

Anonymous said...

யோவ் அனானி, நீர் ஏன் அந்தக் குப்பையெல்லாம் இங்க கொண்டுவந்து கொட்டுகிறீர். அபூர்வ சகோதரர்களில் ஜனகராஜ் -க்கு கூட வரும் கான்ஸ்டபிள் மாதிரி காரியம் பண்ணீட்டு இருக்கிறீர். உமக்கு வேலை கொடுத்த தான் சரியா வரும். புது வருட பதிவுகளில் போடற மாதிரி நியூ இயர் பாட்டுகளைத் டைப் செய்யது வைங்க.
குப்புக் குட்டி. (என் விரதத்தை மீறி இரண்டாவது பின்னூட்டம் போட வச்சிடீங்க்களே)

Anonymous said...

// வலையில் உள்ள சில பதர்களை வைத்து தமிழ்ர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைந்து விட்டதோ என்று நினைத்திருந்தேன். ஆனால் நல்லவேளையாக நிசத்தில் அப்படி இல்லை. புரளி மனோகர் வில்லங்கமாகக் கேட்டாலும் கூட ரசிக்கும் படி இருந்தது.
குப்புக் குட்டி//

குப்புகுட்டி அண்ணாச்சி வணக்கம் வாங்க.நம்ம நண்பர் சாத்தப்பன் சாரை கொஞ்ச நாளாய் கானோம்.இன்னும் கோபம் தீரவில்லையா.
அந்த தவளை கதையை நீங்கள் தவிர்த்திருக்கலாம்.

துகளக் சோ பற்றிய பதிவு வேற நம்ம டோண்டு ஐயா போட்டுருக்காக

ராமசாமி.

Anonymous said...

தவளை தன் வாயால் கெடும் என்பார்கள். அதை வச்சுக் கதை சொன்னாலும் கெடும் என்று இப்போ புரியுது. நீங்க எப்படி நினைத்தாலும் சரி அவர் மனசைப் புன்படுத்தியதற்கு நான் நிஜமாவே வருத்தப்படுறேன். திரும்ப படிக்கும் போது தான் தெரியுது அது அதிகமான தாக்குதலுடன் வந்திருக்குன்னு, விளையாட்டு வேடிக்கை தான் அவரின் நோக்கமாக இருந்திருக்கிறது. நான் தான் அதை ரொம்ப போட்டு துவைத்து விட்டேன்.
குப்புக் குட்டி

Anonymous said...

//Anonymous said...
தவளை தன் வாயால் கெடும் என்பார்கள். அதை வச்சுக் கதை சொன்னாலும் கெடும் என்று இப்போ புரியுது. நீங்க எப்படி நினைத்தாலும் சரி அவர் மனசைப் புன்படுத்தியதற்கு நான் நிஜமாவே வருத்தப்படுறேன். திரும்ப படிக்கும் போது தான் தெரியுது அது அதிகமான தாக்குதலுடன் வந்திருக்குன்னு, விளையாட்டு வேடிக்கை தான் அவரின் நோக்கமாக இருந்திருக்கிறது. நான் தான் அதை ரொம்ப போட்டு துவைத்து விட்டேன்.
குப்புக் குட்டி//


நன்றி.குப்புகுட்டி அவர்களே.

இதைத்தான் கிராமங்களில்
நீர் அடித்து நீர் விலகவா போகிறது என்பார்கள்.

இந்த பரந்த உலகில் அனைவரும் சுவாசிப்பது ஒரே காற்று
ஒருவர் சுவாசித்து வெளியே விடும் காற்று,பின் மற்றொருவரால் மீண்டும் சுவாசிக்கப் படுகிறது.
இதில் போல் ஜாதி வித்யாசம் பார்த்தால் உயிர் கோவிந்தா தான்.
அதே மாதிரி தண்ணீரை பயன்படுத்துவதும்.
யரோஒருவர் நெற்றிவேர்வை சிந்தி உழைத்து உற்பத்தியாகும் உணவும் பொருள் பிறிதொரு மனிதருக்கு உணவாய் மாறுகிறதே.

ஒருவர் மற்றொருவரை சார்ந்து வாழவே இயற்கை மனித குலத்தை படைத்திருக்கிறது.

நமக்குள் சண்டை எதற்கு
பண்பு போற்றும் ஆரோக்கிய விவாதம் சமுதாய முன்னேற்றத்திற்கு உதவட்டுமே.

வால்பையன் said...

அதிர்ஷ்டத்தை நம்புகிறவர்கள் திறமையற்றவர்கள் என்று நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறிங்க?

:)

Anonymous said...

//வால்பையன் said...
அதிர்ஷ்டத்தை நம்புகிறவர்கள் திறமையற்றவர்கள் என்று நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறிங்க?//

என்ன வால்பையன் அண்ணா- நீங்க வேறு
இப்பத்தான் நீங்கள் அவரோடு சமாதானம் ஆகி இரண்டு மாதம் ஆகியிருக்கும். அதுக்குள்ளே ?

சரி இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

நம்மை விட பெரிய திறைமை சாலிகள்,பெரிய படிப்பு படித்தவர்கள் நம்மை விட குறைந்த நிலையில்,வருமானத்தில் இருக்கிறார்கள்.
அதே சமயம் நம்மைவிட படிப்பில்,அறிவில்,திறமையில் குறைந்தவர்கள் நமக்கே பாஸாக வந்து
நம்மை உண்டு இல்லை என்று ஒரு வழி பண்ணிக் கொண்டிருக்கிறார்களே!

இதை துரதிர்ஸ்டம் என்பதா?

நம் தலை எழுத்து என்பதா?


போன ஜென்மப் பலன் என்பதா?

உங்களுக்கு 30 வயது தானே ஆகிறது(as per you porfile-as on Monday, November 12, 2007 )
50 வயதுக்கு பிறகு , கவியரசு கண்ணதாசன் காட்டிய வழியில் செல்லும் போது
கடவுள்,ஜோதிடம்,அதிர்ஷ்டம்,அடுத்தபிறவி,பாப புண்ணியம் பற்றியெல்லாம் நம்பிக்கை எல்லாம் வரத் தலை எடுக்கும்.


இதை நீங்கள் இப்போது மறுக்கலாம்
ஆனால் இதை விட தீவிர பகுத்தறிவு வாதம் பேசியவர்களின் வரலாறு உங்களுக்கு தெரியாததல்ல.

கடைசியாக ஒன்று

உங்களது கணணித் துறையில்(மற்றும் பங்கு வாணிபம்,கமாடிடி மார்க்கட்) சாதாரண 10 வகுப்பு படித்தவர்கள் கூட ( நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை ,பொதுவாகத்தான்)50,000 மாத வருமானம் பெறுகிறார்கள்.

( அவர்களுக்கு திறமை இல்லை என்று சொல்லவில்லை)

ஆனாலும் அவர்களின் ஜாதகத்தை வாங்கிப் பாருங்கள் இந்த யோகம் அதிர்ஷ்டம் பல பேருக்கு இருக்கும்.

சாராம்சம்:
திறமை இருந்தால் வெற்றி உண்டு( அடக்கத்துடன் நீங்களும் நானும் தான்)
அதிர்ஷ்டம் இருந்தால் பெரும் வெற்றி உண்டு(அதிர்ஷ்டம் மட்டும் உள்ளவர்கள்- தற்சமயம் பல துறைகளில் கொடிகட்டி வாழ்பவர்கள்)

அதிர்ஷ்டமும்,திறமையும் இருந்தால் வரலாறு படைக்கும் மாபெரும் வெற்றி
(பெரும் புகழ் பெற்ற கடந்த கால,நிகழ்காலப் பெரியவர்கள்)

வால்பையன் said...

//என்ன வால்பையன் அண்ணா- நீங்க வேறு
இப்பத்தான் நீங்கள் அவரோடு சமாதானம் ஆகி இரண்டு மாதம் ஆகியிருக்கும். அதுக்குள்ளே ?//

யார் கிட்ட எனக்கு சண்டை டோண்டுவிடமா?

சிரிப்பு தான் வருகிறது.

எங்கள் உரையாடல் மகனுக்கும்,தந்தைக்கும் நடுக்கும் வாதம் மாதிரி

வால்பையன் said...

//நம்மை விட பெரிய திறைமை சாலிகள்,பெரிய படிப்பு படித்தவர்கள் நம்மை விட குறைந்த நிலையில்,வருமானத்தில் இருக்கிறார்கள்.
அதே சமயம் நம்மைவிட படிப்பில்,அறிவில்,திறமையில் குறைந்தவர்கள் நமக்கே பாஸாக வந்து
நம்மை உண்டு இல்லை என்று ஒரு வழி பண்ணிக் கொண்டிருக்கிறார்களே!

இதை துரதிர்ஸ்டம் என்பதா?

நம் தலை எழுத்து என்பதா?//


இந்த மாதிரியான சிந்தனையை முதலில் ஓரங்கட்டுங்கள்.

என் படிப்பு ஒன்பதாங்கிளாஸ் வரைக்கும் தான்.

ஆனால் நான் கம்பியூட்டர் படித்தவன் சம்பாரிக்கும் ஐந்து இலக்கம் சம்பாரிக்கிறேன்.

படிப்பு வேறு அதை பயன் படுத்துதல் வேறு.

வாழ்க்கை நாம் ஓடும் வேகத்தில் இருக்கிறது.

தாழ்வு மனபான்மையை தவிர்த்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என யோசியுங்கள்,

கூடவே நானும்,டோண்டுவும் இருக்கிறோம்

வால்பையன் said...

//உங்களுக்கு 30 வயது தானே ஆகிறது(as per you porfile-as on Monday, November 12, 2007 )
50 வயதுக்கு பிறகு , கவியரசு கண்ணதாசன் காட்டிய வழியில் செல்லும் போது
கடவுள்,ஜோதிடம்,அதிர்ஷ்டம்,அடுத்தபிறவி,பாப புண்ணியம் பற்றியெல்லாம் நம்பிக்கை எல்லாம் வரத் தலை எடுக்கும்.//


இந்த கடவுள் இல்லை, அந்த கடவுள் இல்லை என்பதல்ல என் வாதம்

கடவுளில்லை

ஆனால் நீங்களும் கடவுள்
அன்பே சிவத்தில் சொன்ன மாதிரி


பின் குறிப்பு
அந்த வயதை நம்பாதீர்கள்

கற்று கொள்வதில் நான் இன்னும் 10 வயதை தாண்டவிலை

dondu(#11168674346665545885) said...

//எங்கள் உரையாடல் மகனுக்கும்,தந்தைக்கும் நடுக்கும் வாதம் மாதிரி//
அனானி நம்மைச் சொல்லவில்லை. உங்களையும் லக்கிலுக்கையும் சொல்கிறார் என நினைக்கிறேன் (லக்கி = அதிர்ஷ்டம்).

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//இதை நீங்கள் இப்போது மறுக்கலாம்
ஆனால் இதை விட தீவிர பகுத்தறிவு வாதம் பேசியவர்களின் வரலாறு உங்களுக்கு தெரியாததல்ல.//

எல்லோரும் இருந்தார்கள் என நானும் இருக்க வேண்டுமா என்ன?

என் பதிவுகளை படித்திருக்கிறீகளா?
நான் மனிதன் மட்டுமே
எனக்கு சாதி மத கடவுள் அடையாளங்கள் தேவையில்லை

வால்பையன் said...

//உங்களது கணணித் துறையில்(மற்றும் பங்கு வாணிபம்,கமாடிடி மார்க்கட்) சாதாரண 10 வகுப்பு படித்தவர்கள் கூட ( நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை ,பொதுவாகத்தான்)50,000 மாத வருமானம் பெறுகிறார்கள்.//

பாராட்டுகிறேன்.

நான் எங்கேயும் மண்டைகணம் பிடித்து அழையவில்லையே!

காமாடிடி மட்டுமல்ல!
இன்று தொழிலில் முன்னிலையில் இருப்பவர்கள் என்னைவிட குறைவாக படித்தவர்களே!

படிப்பை விட தொழிலில் கவனமும், சீரிய சிந்தனையும் இருந்தால் போதும்

வால்பையன் said...

//ஆனாலும் அவர்களின் ஜாதகத்தை வாங்கிப் பாருங்கள் இந்த யோகம் அதிர்ஷ்டம் பல பேருக்கு இருக்கும்.//

ஒருவன் இந்த நேரத்தில் பிறந்தால் நல்லாயிருப்பான் என்றால் இன்று நினைத்து மாத்திரத்தில் குழந்தை பிறக்கும் வழி அறிவர்.

இப்போதும் சொலிகிறேன்

அதிர்ஷ்டத்தை நம்புகிறவன் தன்நம்பிக்கை இல்லாதவன்

வால்பையன் said...

//திறமை இருந்தால் வெற்றி உண்டு( அடக்கத்துடன் நீங்களும் நானும் தான்)
அதிர்ஷ்டம் இருந்தால் பெரும் வெற்றி உண்டு(அதிர்ஷ்டம் மட்டும் உள்ளவர்கள்- தற்சமயம் பல துறைகளில் கொடிகட்டி வாழ்பவர்கள்)//


அதாவது தனது வெற்றியில் திருப்தி அடையாது மேலும் பேராசை கொள்ளும் மன நிலையை காட்டுகிறீர்கள்.

நாம் வாழ என்ன தேவையோ அதுபோதுமே

ஆனாலும் முயற்சி மெய் வருத்த கூலி தரும்

போராடிகொண்டே இருங்கள்

என்னை போல

அடுத்து என்னுடைய டார்கெட்
ஆறு இலக்கம்

வால்பையன் said...

//அதிர்ஷ்டமும்,திறமையும் இருந்தால் வரலாறு படைக்கும் மாபெரும் வெற்றி
(பெரும் புகழ் பெற்ற கடந்த கால,நிகழ்காலப் பெரியவர்கள்) //

புகழ் அடைந்தவர்கள் மட்டுமே மனிதர்களில்லை,

நீங்கள் நீங்களாக வாழ முயற்சியுங்கள்

புகழும் மறக்க கூடியதே

வாழ்வது மட்டுமே நம் கையில்

Anonymous said...

//வால்பையன் said...
//உங்களது கணணித் துறையில்(மற்றும் பங்கு வாணிபம்,கமாடிடி மார்க்கட்) சாதாரண 10 வகுப்பு படித்தவர்கள் கூட ( நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை ,பொதுவாகத்தான்)50,000 மாத வருமானம் பெறுகிறார்கள்.//

பாராட்டுகிறேன்.

நான் எங்கேயும் மண்டைகணம் பிடித்து அழையவில்லையே!

காமாடிடி மட்டுமல்ல!
இன்று தொழிலில் முன்னிலையில் இருப்பவர்கள் என்னைவிட குறைவாக படித்தவர்களே!

படிப்பை விட தொழிலில் கவனமும், சீரிய சிந்தனையும் இருந்தால் போதும்//


திறமை மட்டும் இருந்தால் போதாது
நேரம் நல்லாய் இருக்க வேண்டும்

இதைத்தான் பெரியவர்கள் அதிர்ஷ்டம்,யோகம் என்கிறார்கள்

உங்கள் ஊரைச் சார்ந்த தந்தை பெரியாரின் பக்தர்கள் இன்று பல கட்சிகளாய் பிரிந்து இருந்தாலும் அதில் பலர் நேரம், காலம், பெயர் ராசி ,பக்திப் பரவசம்,யாகங்கள் இப்படிப் போவதாய் உள்ளது யாவருக்கும் தெரிந்ததே.

திறமை உள்ளவர்களில் பலரும் இன்னும் அதிர்ஷ்டத்தை நம்புவது இப்போது சர்வ சாதாரணம்.

சிறிய கிராமங்களில் உள்ள ஜோதிடர்களின் தின வருமனம் கூட ரூபாய் 10,000 த்தை தாண்டுகிறதாம்

தினப் பலன்,வாரப் பலன்,ஆண்டுப் பலன்,ஜோதிடம் சார்ந்த புத்தகங்கள் விற்பனை களைகட்டுகிறதே

அதிர்ஷ்டத்தை படித்தவன்,பாமரன்,பணக்காரன்,ஏழை,
எல்லோரும் நம்புகிறார்கள்.

திறமை உள்ளவர்களும்( பெரும்பகுதியினர்) நம்புகிறார்கள்

Anonymous said...

//வால்பையன் said...
//என்ன வால்பையன் அண்ணா- நீங்க வேறு
இப்பத்தான் நீங்கள் அவரோடு சமாதானம் ஆகி இரண்டு மாதம் ஆகியிருக்கும். அதுக்குள்ளே ?//

யார் கிட்ட எனக்கு சண்டை டோண்டுவிடமா?

சிரிப்பு தான் வருகிறது.

எங்கள் உரையாடல் மகனுக்கும்,தந்தைக்கும் நடுக்கும் வாதம் மாதிரி//

//dondu(#11168674346665545885) said...
//எங்கள் உரையாடல் மகனுக்கும்,தந்தைக்கும் நடுக்கும் வாதம் மாதிரி//
அனானி நம்மைச் சொல்லவில்லை. உங்களையும் லக்கிலுக்கையும் சொல்கிறார் என நினைக்கிறேன் (லக்கி = அதிர்ஷ்டம்).

அன்புடன்,
டோண்டு ராகவன்//

டோண்டு ஐயா
வால்பையன் அவர்களின் உக்கிரத் தாக்குதலில் இருந்து காத்தற்கு நன்றிகள்.
உண்மை அது தான்.
பதிவுலகில் ஒரு வார்தையையும் அதன் அர்த்தத்தையும் வைத்துக்கொண்டு பயங்கர அர்ச்சனை பண்ணி விடுகிறார்களே. அதற்குத்தான் சொன்னேன்.வால்பையன் தவறாய் எடுத்துக் கொண்டார் போலிருக்கு.
மிண்டும் நன்றி

Anonymous said...

//நாம் வாழ என்ன தேவையோ அதுபோதுமே

ஆனாலும் முயற்சி மெய் வருத்த கூலி தரும்

போராடிகொண்டே இருங்கள்

என்னை போல

அடுத்து என்னுடைய டார்கெட்
ஆறு இலக்கம்//

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

கொஞசம் உங்க வாலை பிடித்து இழுப்பது போல் ஒரு கேள்வி.
(இதையும் பார்த்து கோபம் வேண்டாம்)

அப்போம் ஆன்லலயின் ட்ரடிங்-யுக வாணிபம் செய்பவர்களால் தான் அனைத்து விலை வாசியும் வான் உயரத்துக்கு போயிருக்கோ?( இப்பொ கொஞ்சம் குறைஞ்சிருக்கு-சில கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டதால்-சில பொருட்கள் பட்டியலிருந்து நீக்கப் பட்டதால்)

தங்கம் கிராம் 1200ஐ தாண்டி
இரும்பு கிலோ 56க்கு போச்சு
காப்பர் கிலோ 330 க்கு போச்சு
கச்சா எண்ணெய் 147 டாலருக்குப் போச்சு
அரிசி விலை 50 ஐ தாண்டப் போகிறதாம்
பருப்பு விலைகள் 50ஐ தாண்டி
ந.எண்னெய் விலைகள் 100ஐ தாண்டி

இதற்கெல்லாம் காரணம்

இந்தப் பொருளுக்கு சம்பந்த்தமில்லா யுக வாணிபர்கள் வெரும் 10% மார்ஜின் பணத்தை வைத்துக்கொண்டு,ஆடும் சூதாட்டம்தான் காரணம் என்று தமிழக அனைத்து வியாபாரிகள் சங்கத்தலைவர் திரு.வெள்ளையன் கூறியிருந்தார்


நிலத்தில் கடுமையாய் உழைத்து உற்பத்தி செய்யப் படும் விலைபொருட்களுக்கு நியாய விலை கிடக்காமல் அதிர்ஷ்டமில்லாமல் அவதிப் படும் போது( வட மாநிலங்களில் தன்னுடய இன்னுயிரைக்கூட மாய்த்துக் கொள்கிறார்களே அந்த அதிர்ஷ்டக் கட்டைகள்)

இடைத் தரகர்கள்,யூக வாணிபர்கள்,கணனியில் யுக வாணிபம் செய்பவர்கள் லட்சம் லட்சமாய் சம்பாதிப்பது , ஒரு குறிப்பிட்ட பகுதியினர் என்றாலும் இதைத்தான் அதிர்ஷ்டம்,யோகம் என்று பொதுவாய்ச் சொல்லுகிறர்கள்.


மிண்டும் சொல்கிறேன்

அதிர்ஷ்டத்தோடு கூடிய அறிவுத்திறமை,நல்ல நேரத்தில் செய்யப் படும் கடும் உழைப்பு

இவைதான் 100 % வெற்றிக்கும் புகழுக்கும்,பெருமைக்கும்,பெரும் பொருளீட்டலுக்கும் அடிப்படை

இவை எல்லாம் வால்பையனுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது.

இறைவன் கொடுத்த கருனைக்கொடை அல்லது வாங்கி வந்த வரம் என்றால் ஒத்துக்கொள்ளவா போகிறார்

வாழ்த்துக்கள்.


இவைகளை எல்லாம் ஒரு நண்பனின் விவாதமாக மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
தவறாய் ஏதாவது எழுதி இருந்தால்
சொல்லுங்கள்.

Anonymous said...

//அதிர்ஷ்டத்தோடு கூடிய அறிவுத்திறமை,நல்ல நேரத்தில் செய்யப் படும் கடும் உழைப்பு

இவைதான் 100 % வெற்றிக்கும் புகழுக்கும்,பெருமைக்கும்,பெரும் பொருளீட்டலுக்கும் அடிப்படை

இவை எல்லாம் வால்பையனுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது.

இறைவன் கொடுத்த கருனைக்கொடை அல்லது வாங்கி வந்த வரம் என்றால் ஒத்துக்கொள்ளவா போகிறார்//


டோண்டு ஐயாவுக்கு ஜாதகத்தில் வேண்டு மென்றால் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் ஆனல் இறை நம்பிக்கை,நல்ல நேரம்,கடவுளின் அருள்,
பாவ புண்ணியங்களின் பலாபலன்கள் இவைகளில் நம்பிக்கை ஒரளவுக்கு இருக்கும் எனத் தெரிகிறது.


சார் நீங்க சொல்லுங்கா

அதிர்ஷ்டத்தை நம்புகிறவர்கள்
திறமை குறைவு உள்ளவர்கள் மட்டுமா?

dondu(#11168674346665545885) said...

//அதிர்ஷ்டத்தை நம்புகிறவர்கள்
திறமை குறைவு உள்ளவர்கள் மட்டுமா?//
எனக்கு இறை நம்பிக்கை உண்டு. நல்ல நேரம், ராகு காலம் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லையாயினும் என் வீட்டம்மா அவற்றைக் கடைபிடிக்கும்போது அவரை கேலி செய்ய மாட்டேன் (கேலி செய்துவிட்டு யார் உதை வாங்குவதாம் என உடைத்துக் கூறும் முரளி மனோஹர் ஒரு துரோகி).

கீதாஞ்சலியில் வரும் வரிகள் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவை கூறுகின்றன, “துன்பம் வராமல் தடுத்துவிடு என நான் உன்னை யாசிக்கவில்லை என் இறைவா, அவற்றால் துவளாத மனம் மட்டும் தா என்று மட்டும் இறைஞ்சுவேன்”. அதுதான் டோண்டு ராகவனின் கோட்பாடும் கூட.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//பதிவுலகில் ஒரு வார்தையையும் அதன் அர்த்தத்தையும் வைத்துக்கொண்டு பயங்கர அர்ச்சனை பண்ணி விடுகிறார்களே. அதற்குத்தான் சொன்னேன்.வால்பையன் தவறாய் எடுத்துக் கொண்டார் போலிருக்கு.
மிண்டும் நன்றி //


மன்னிக்கவும் தவறாய் எடுத்து கொண்டதற்க்கு

வால்பையன் said...

//திறமை மட்டும் இருந்தால் போதாது
நேரம் நல்லாய் இருக்க வேண்டும்//

நேரம் என்பது மணிதுழிகள் தானே!



நான் ஏற்க மாட்டேன்
நான் மட்டும் நல்லாயிருக்க மற்றவர்கள் நாசமாய் போக இந்த நேரம் வழி சொன்னுமெனில்
அது எனக்கு தேவையில்லை

வால்பையன் said...

மற்ற கேள்விகளுக்கு நாளை பதில்

Anonymous said...

// வால்பையன் said...
மற்ற கேள்விகளுக்கு நாளை பதில்//


இந்தத் திறமை சாலிகளை பற்றியும் சொல்லவும்
1.பெரு நகரங்களில் இன்று பெரும் செல்வந்த வணிகர்களாய், தொழிலதிர்பர்களாய் நம் முன்னால் தெரிபவர்கள், ஆரம்ப காலத்தில் சிறு சிறு கடைகளில் நாள் சம்பளம் பெற்று வேலை பார்த்தனர்.எந்த ஒரு மூலதனமும்,பெரிய படிப்பு இல்லாமல் இன்றய நிலை இவர்களுக்கு எப்படி சாத்யமாயுள்ளது?
2.சிலர் டெண்டர்களில் தில்லுமுல்லு செய்து கோடிக் கணக்கில் சுருட்டிக் கொண்டாலும் எதிலும் மாட்டாமல் அடுத்த அறுவடைக்கு சென்று விடுகின்றனரே?
3.அரசியல் வாதிகளில் தவறான வழிகளில் பெரும் பணம் சம்பாதித்த யாரவது ஒருவர் சுதந்திரம் அடந்து இன்று வரை அதற்கான தண்டனை பெற்று உள்ளனரா?
4.அதிகாரிகளிலும் இந்த வகையினர் மாட்டுவதில்லையே

வால்பையன், என்ன இது அதிர்ஷ்டம் பற்றிய விவாதம் வேறு திக்கில் செல்கிறதா?


பொதுவாய் அனுபவம் வாய்ந்த பெரியவ
ர்கள் சொல்வார்கள்

அவனுக்கு நேரம் நல்ல இருக்குப்பா
அவன் தொட்டது எல்லாம் துலங்குதுப்பா
அவன் உப்பை சீனி என்று சொல்லி விற்றாலும் எல்லாரும் நம்பிடுவாங்கப்பா
அவன் ஒட்டகத்தை கூட ஊசியின் காது வழியாய் கொண்டு வந்து விடுவானப்பா
எந்த கேசுலே மாட்டினாலும் ,தப்பிச்சிருவானப்பா, எமகாதகன், அவன் ஸ்டார் நல்ல இருக்குப்பா.

Anonymous said...

//நான் ஏற்க மாட்டேன்
நான் மட்டும் நல்லாயிருக்க மற்றவர்கள் நாசமாய் போக இந்த நேரம் வழி சொன்னுமெனில்
அது எனக்கு தேவையில்லை//

வால்பையன், உங்களின் இந்த சுத்தமான நேர்மைக்கு என் வணக்கங்கள்.

நீங்கள் லட்சத்தில் ஒருத்தர்

அந்த ஆறுலக்க வருமானம் 2009ல் கிடைக்க நண்பனின் வாழ்த்துக்கள்
இன்றும்,என்றும் உண்டு.

Anonymous said...

தமிழ்மண திரட்டியில் பின்னூட்டத்தில் எப்போதும் பொதுவாக உங்கள் பெயர் முன்னணியில் இருக்கிறதே, ஒரு நாளைக்கு, பதிவு பின்னூட்டத்திற்கு செலவழிக்கும் நேரம் எவ்வளவு?

புகழ்பெற்ற,பரபரப்பாய்,சூடாய் உள்ள பதிவுகளில் வால்பையன் கட்டாயம் இருக்கிறார்-இது எப்படி?

Anonymous said...

ஒரு விண்ணப்பம்
உங்கள் கமாடிட்டி நண்பர்கள் உதவியுடன் இந்த தங்கத்தின் விலையை கொஞ்சம் குறைக்க ஏதாவது செய்தால் பரவாயில்லை.( கச்சா எண்ணெயை விலையை 150 டாலிருந்து 45 டாலருக்கு குறைத்த மாதிரி)

ஏன் என்றால் எல்லாப் பொருள் களின் விலைவாசியும் தங்கத்தின் விலையை ஒட்டித்தான்

இல்லேன்னா ஏழை பாழைகள் பாடு படு திண்டாட்டம் ஆகிவிடும்.

வால்பையன் said...

//ஒரு விண்ணப்பம்
உங்கள் கமாடிட்டி நண்பர்கள் உதவியுடன் இந்த தங்கத்தின் விலையை கொஞ்சம் குறைக்க ஏதாவது செய்தால் பரவாயில்லை.( கச்சா எண்ணெயை விலையை 150 டாலிருந்து 45 டாலருக்கு குறைத்த மாதிரி)//

கமாடிடி நண்பர்கள் நினைத்தால் முடியாது.

கம்முனாட்டி அரசியல்வாதிகள் மனம் வைக்க வேண்டும்.

தங்கம் டாலர் மதிப்பில் 1030$ ஆக இருந்த போது டாலருக்கு எதிரான நமது ருபாயின் மதிப்பு வெறும் 40 ரூபாய் தான் அப்போது தங்கம் 24 காரட் இந்திய மதிப்பில் 1350 ஆக இருந்தது.

இப்போது தங்கம் வெறும் 830$ தான் ஆனால் ருபாயின் மதிப்பு குறைந்ததால் 1310 24 காரட் ஒரு கிராம்.

அதாவது
1030$*40.00=1350 ரூபாய்
830$*48.15=1310 ரூபாய்

எங்கே இடிக்குது தெரியுதா?

கேனத்தனமாக பொருளாதாரக் கொள்கை வைத்திருக்கும் நமது நிதி அமைச்சர்களின் கைங்கர்யம் இது.

Anonymous said...

//இப்போது தங்கம் வெறும் 830$ தான் ஆனால் ருபாயின் மதிப்பு குறைந்ததால் 1310 24 காரட் ஒரு கிராம்.

அதாவது
1030$*40.00=1350 ரூபாய்
830$*48.15=1310 ரூபாய்

எங்கே இடிக்குது தெரியுதா?//

வால் பையனுக்கு டேங்ஸ்

அது சரி உலகப் போலிஸ் அமெரிக்காவின் டவுசர் கிழிஞ்சிருக்காமே
நம்ம கேசு கெட்டியாமே
அப்போ எப்படி டாலருக்கு
40 கொடுத்த நம்மவரிடமிருந்து இப்போம் அவுக 50 புடுங்குறாக
இதையும் விவரமாய் சொல்லுவீகளா!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது