இந்த வார குமுதத்தில் (26.11.2008 இதழ்) ஜென் கதை ஒன்று படித்தேன். முதலில் கதையைப் பாருங்கள் பிறகு பேசுகிறேன்.
மலைப்பகுதியில் தனியாய் குதிரைமீது பாடல்கள் பாடியபடி வந்து கொண்டிருந்தார் ஜென் ஞானி.
மாலையாகிவிட்டது. இருட்டத் துவங்கிவிட்டதால் தூரத்தில் வருவது யார் என்று பார்க்கக் கடினமாயிருந்தது. அருகில் எந்த ஊரோ, கிராமமோ தென்படவில்லை.
அந்த வழியில் வேகமாய் சென்று கொண்டிருந்த ஜென் ஞானி, தன் முன்னால் யாரோ மயங்கி ரோட்டோரமாகக் கிடப்பதைப் பார்த்தார். உடனே குதிரையை நிறுத்தினார்.
மூச்சு இருக்கிறதா? என்று பார்த்து அந்த நபருக்கு முதலுதவி செய்து குதிரையின் மேலேற்றி அமர்த்தினார். `சீக்கிரம் இவரை ஒரு மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்' என்று யோசித்தபடி... மயங்கியவரை `நன்றாக அமர்ந்துவிட்டாரா, கீழே விழமாட்டாரா' என்று ஒருமுறை உறுதி செய்துவிட்டு, `சரி நாமும் ஏறலாம்' என்று நினைத்து ஏற எத்தனித்தார்.
அதுவரை மயங்கிக் கிடந்தவர் எழுந்துகொண்டு குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துச் சுண்டினார். சீறிப் பறந்து ஓட, திகைத்து நின்றார். அவன் மயங்கியவனல்ல. அவன் மயங்கியவன் போல நடித்த ஒரு திருடன்.
`அவ்வளவு நேரம் அவன் நடித்துக் கொண்டிருக்கிறான் என்பது கூட எனக்குப் புரியவில்லை. இது எவ்வளவு பெரிய வேடிக்கை...' என்று நேற்று இரவு நடந்த திருட்டுச் சம்பவத்தால் கொஞ்சமும் பாதிக்கப்படாமல் பேசினார் குரு. இந்த நிகழ்ச்சியில் தங்களின் குருவை ஆச்சரியமாய்ப் பார்த்த சீடர்களில் ஒருவர் கேட்டார்.
``உங்களுக்கு இது பெரிய திகைப்பாக இல்லையா?''
``இருந்தது. ஒரு வினாடி இருந்தது. அப்புறம் சரியாகி விட்டது.''
``எப்படி அது உடனே சரியாக முடியும்?''
``அட! சில மனிதர்களின் சுபாவம் அப்படித்தான். அதான் நடந்தது, நடந்துவிட்டது. மாற்ற முடியாது. இதற்கு மேலும் ஏன் மாற்ற முடியாததை நம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு திரிய வேண்டும்!'' என்றார் வெகு இயல்பாக. ஆச்சரியத்தோடு குருவின் வார்த்தைகளைக் கேட்கக் கேட்க சீடர்களுக்குள்ளும் அதே இயல்பு நிலை மலர ஆரம்பித்தது.
அடுத்த நாள் காலை வேறு ஊர் நோக்கி அவர்கள் புறப்பட்டார்கள்.
அடுத்த ஊருக்குள் நுழைந்த ஜென் ஞானி, அந்த ஊர் சந்தை வழியாகச் செல்ல நேரிட்டது.
சந்தையில் தங்களுடைய குருநாதரின் குதிரையைப் பார்த்த சீடர்கள், ``அதோ நம் குதிரை'' என்று உற்சாகச் சத்தமிட்டார்கள். குதிரையை விற்பதற்காக நின்று கொண்டிருந்த திருடன் அதிர்ச்சியடைந்தான்.
``அச்சச்சோ எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டோமோ!'' என பதைபதைத்துக் கொண்டிருந்த திருடனின் அருகே சென்ற ஜென் ஞானி, அவனுடைய தோளைத் தொட்டு, கண்களைப் பார்த்து மெல்ல சிரித்தார். திருடன் பேயறைந்து நின்றான்.
திருடனிடம் ``சொல்லாதே!'' என்றார்.
மிரண்டு போன திருடன், ``எது? என்ன? எதைச் சொல்கிறீர்கள்?'' என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டினான்.
மீண்டும் சிரித்த சாது சொன்னார். ``அதான் நடந்தது நடந்துவிட்டது. அதை மாற்ற முடியாது. மாற்ற முடியாததை ஏன் இன்னும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறாய்?. இந்தக் குதிரையை நீயே வைத்துக்கொள்.
உனக்கு எப்படி இந்தக் குதிரை கிடைத்தது என்பதை மட்டும் யாரிடமும் சொல்லாதே. மற்றவர்களுக்கு இது தெரிந்தால், நிஜமாகவே ஒருவர் மயங்கிக் கிடக்கும்போது கூட உதவாமல் போய்விடுவார்கள். மக்களின் சுபாவம் அப்படி. உன் சுபாவம் இப்படி'' என்று சொல்லிவிட்டுச் சென்ற ஜென் ஞானியைப் பார்த்து, கண்ணீர் வடித்து நின்று கொண்டிருந்தான் திருடன். அழுதபடியே குருவைப் பின் தொடர்ந்தான் திருடன். பிற்காலத்தில் முழுமையாய் மலர்ந்த மிகச் சிறந்த சீடனானான்.
இந்தக் கதை சொல்லும் ஒரேயொரு சத்தியத்தை உள்வாங்கிக் கொள்ளுங்கள். தியானம் தன்னால் நிகழும். அது உங்களுடைய வாழ்வில் நிகழ்ந்த எப்பேர்ப்பட்ட அசம்பாவிதத்திலிருந்தும் உங்களை வெளிக்கொண்டு வந்து விடும்.
இதைத் தியானியுங்கள். இனிவரும் அசம்பாவிதங்களில் இருந்து கூட நிமிடத்தில் வெளிவரும் பக்குவம் பெற்றுவிடுவீர்கள்..
நன்றி குமுதம்.
மீண்டும் டோண்டு ராகவன். இதில் என்ன விசேஷம் என்றால் இன்று காலைதான் நான் “மோட்டிவேட் செய்வது என்பது ஒரு கலை” என்ற தலைப்பில் அக்டோபர் மாதத்தில் இட்ட இடுகை பற்றி யோசித்து கொண்டிருந்தேன். ஏன்? அப்போதுதான் எனது நெருங்கிய உறவினர் பற்றி நாங்கள் வீட்டில் பேசிக் கொண்டிருந்தோம். பழகுவதற்கு அருமையானவர். என்ன, அவ்வப்போது கால்வலி போக்க கால்களை பிடித்துவிடச் சொல்வார். சற்று நேரம் தாமதித்தாலும் “உடனே காலை பிடிச்சு விடவில்லைன்னாக்க அப்புறம் வேணாம்னு சொல்லிடுவேன்” என்று சீரியசாக முகத்தை வைத்து கொண்டு கூறுவார். இன்று இக்கதையை படித்ததும் சிந்தனை வேறு திசையில் பயணித்தது.
ஜென் ஞானி பெரிய மகான். அவர் கவலை எல்லாம் நிஜமாகவே துன்பத்தில் இருப்பவர்களுக்கு பாதகம் வந்து விடக்கூடாது என்பதே. இந்த மோட்டிவேட் செய்வதை பற்றியே எடுத்து கொள்வோம். ஒரு நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்னும் எதிர்ப்பார்ப்பில் பலர் செயலாற்றுகின்றனர். அதில் தவறு இல்லை. ஏனெனில் அதுதான் உலகம். அதையே திருப்பி சொல்லி பார்த்தால் கெடுதல் செய்தால் கெடுதல் விளையும். நீ ஒருவனை காலைவாரிவிட்டால் அவன் உன் காலை வாரிவிடும் சந்தர்ப்பத்தை கரையோர முதலையாக எதிர் நோக்கியிருப்பான். பிறகு குய்யா மிய்யா என்று கத்தி ஒருபலனும் இருக்காது. இன்னா செய்தாரை ஒருத்தல் அவருக்கு மூச்சுமுட்டும் வரை பதில் மரியாதையாக இன்னா செய்தல் என்ற கோட்பாட்டில் சராசரி மனிதன் உள்ளான். ஆனால் இது முடிவடையாமல் போய் விடுமே என்று கேள்வி கேட்டால், பதில் என்னவாக இருக்கும்? அது ஒரு கசப்பான உண்மை என்பதே அதன் பதில்.
எனது முந்தையப் பதிவையே பார்க்கலாம். செக்சன் 498-A தவறாக சிலர் பாவிப்பதால் என்ன ஆகிறது? அதை பாவிப்பவர் அத்தனை பேருமே சந்தேகத்துக்கு உட்படுகின்றனர். அதே சமயம் கேஸ் பை கேஸ் பார்க்காமல் அனுமானத்தில் ஒரு தரப்பினர்தான் தவறு செய்தது போல எழுதியவர் நிலை என்ன? மனிதர் இப்படித்தான் எல்லா நிலைகளிலும் தவறாக நடப்பார் என்றுதானே நினைக்கக் கூடும்? அதற்குத்தான் கூறுகிறேன் முடிந்தவரை நமது செயல்பாட்டில் குற்றம் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று. இல்லாவிட்டால் மற்றவர்களை குறைகூற முயலும்போது “நீ மட்டும் யோக்கியமோ” என்ற கேள்வியைத் தவிர்க்க இயலாது.
கள்ளக்கடத்தல்களில் கூட்டாளியாக இருப்பவர்கள் தங்கள் கூட்டாளிகளிடம் எதிர்பார்ப்பது வாக்கு சுத்தம். எதிராளிக்கும் அவ்வாறே தான் வாக்குசுத்தத்துடன் நடந்து கொள்ள வேண்டும். கோடிக்கணக்கான ரூபாய்கள் புரளும் மட்கா சூதாட்டத்தில் ஒரு சாதாரண பேப்பர் துண்டில் குறித்துள்ள எண்ணே போதும், பணம் கைமாற. இது எவ்வாறு சாத்தியம்? அது இல்லாவிட்டால் முழு காரியமே ஸ்தம்பித்து விடும். மற்றப்படி அவற்றில் ஈடுபடுபவர்கள் மகாத்மா எல்லாம் இல்லை.
பழங்காலங்களில் தூதனைக் கொல்லக்கூடாது என்ற சம்பிரதாயம் எவ்வாறு வந்தது என நினைக்கிறீர்கள்? எதிரியின் தூதனை நீ கொன்றால் உன் தூதனை எதிரி கொல்வான் என்ற பயமே காரணம். போர்விதி முறைகளும் அவ்வாறே. மகாபாரதத்தில் 15 ஆம் நாள் யுத்தம் வரை இரவில் யுத்தம் கிடையாது. மாலை சங்கு ஊதியவுடன் யாரும் பாணம் விடக்கூடாது. இரவில் இறந்தவர்களை எரிக்கும் நிகழ்ச்சிக்கு பாண்டவ கௌரவர் தரப்பிலிருந்து ஆட்கள் எதிரிகள் முகாமுக்கு செல்வது சர்வசாதாரண விஷயம். இதற்கெல்லாம் விதிமுறைகள் உண்டு. அது போலவே 15-ஆம் நாள் யுத்தத்தில் இரவும் போர் புரியலாம் என்ற நிலை வந்ததும் அதற்கான விதி முறைகள், சமிக்ஞைகள் ஆகியவை அவசர அவசரமாக உருவாக்கப்பட்டன.
இந்த விஷயத்தில் இரண்டு ஆங்கில சொலவடைகள் பற்றி கூறுவேன். ஒன்று Tit for tat இன்னோன்று Quid pro quo. நீ கெடுதல் செய்தால் பதிலுக்கு நானும் உனக்கு கெடுதல் செய்வேன் என்பது tit for tat. அதே போல நீ நல்லது செய்தால் நானும் உனக்கு நல்லது செய்வேன் என்பதுதான் quid pro quo. இரண்டுக்குமே வாழ்க்கையில் பல உதாரணங்கள் உண்டு. உண்மை கூறப்போனால் மனித நாகரிகமே இந்த இரு சொலவடைகளால்தான் உருவாயிற்று எனக் கூறினாலும் மிகையாகாது. ஆக, தினசரி வாழ்க்கையில் வரும் எல்லா விஷயங்களுக்கும் இச்சொலவடைகளை பொருத்தி பார்க்க இயலும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: பதிவின் வரைவு முதலில் போன மாதமே எழுதப்பட்டது. இன்றுதான் இற்றைப்படுத்தப்பட்டது.
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
-
( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால்
உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம்
ஆகிய ...
15 hours ago
12 comments:
//இந்த வார குமுதத்தில் (26.11.2008 இதழ்) ஜென் கதை ஒன்று படித்தேன். //
நீங்க குமுதம்லாம் படிப்பிங்களா?
இந்த கதையை படித்தவுடன் எனக்கு ஒன்று ஞாபகத்திற்க்கு வருகிறது, கேரளாவில் ஒரு பெண் ஆசிரியை தனது வகுப்பு மாணவன் தவறு செய்து விட்டான் என்று தெரிந்தும், அபன் ஒப்பு கொள்ளும் வரை தன்னை தானே அடித்து துன்புறுத்தி கொண்டார். அந்த மாணவன் குற்ற உணர்வுடன் தவறை ஒப்பு கொண்ட்டது மட்டுமில்லாது இனிமேல் தவறே செய்ய மாட்டேன் என்றும் கூறியிருக்கிறான்.
அந்த ஆசிரியையும் ஒரு ஜென் குரு தானே
ஜென் கதை அருமை , அதற்க்கு உங்கள் பதிவு அருமை.....
இந்த பதிவுல மகாபாரதத்த சேர்த்ததற்கான காரணம் புரியலை. பதினைந்தாம் நாள் இரவு யுத்தம் பற்றி எதற்கு எழுதினீர்கள் ?
//இந்த பதிவுல மகாபாரதத்த சேர்த்ததற்கான காரணம் புரியலை. பதினைந்தாம் நாள் இரவு யுத்தம் பற்றி எதற்கு எழுதினீர்கள்?//
மகாபாரதப் போர் நிகழும் முன்னால் இரு தரப்பினரும் கூடிப் பேசி போர் விதிகளை வகுத்து கொண்டார்கள். அந்த விதிகள் யுத்தம் ஒழுங்காக நடைபெற உதவியாக இருந்தன. அவற்றின் மோட்டிவேஷனே நான் சொன்ன tit for tat மற்றும் quid pro quo-வை அடிப்படையாக கொண்டவைதான். அதே போல விதிகளை மீறும் தருணம் வந்தபோதும் அதிலும் ஒழுங்கு செய்ததுதான் பதினைந்தாம் நாள் இரவுப் போர். ஆகவேதான் மகாபாரதம் உள்ளே வந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இந்த விஷயத்தில் இரண்டு ஆங்கில சொலவடைகள் பற்றி கூறுவேன். ஒன்று Tit for tat இன்னோன்று Quid pro quo. நீ கெடுதல் செய்தால் பதிலுக்கு நானும் உனக்கு கெடுதல் செய்வேன் என்பது tit for tat. அதே போல நீ நல்லது செய்தால் நானும் உனக்கு நல்லது செய்வேன் என்பதுதான் quid pro quo. இரண்டுக்குமே வாழ்க்கையில் பல உதாரணங்கள் உண்டு. உண்மை கூறப்போனால் மனித நாகரிகமே இந்த இரு சொலவடைகளாதான் உருவாயிற்று எனக் கூறினாலும் மிகையாகாது. ஆக, தினசரி வாழ்க்கையில் வரும் எல்லா விஷயங்களுக்கும் இச்சொலவடைகளை பொருத்தி பார்க்க இயலும்//
தமிழினத் தலைவர் கலைஞர் குடுபத்தில் ஒற்றுமை
இது வரை tit for tat
இனி quid pro quo. தானாம்.
அடுத்து கலைஞர் குழுமத்தில் இன்னும் இரண்டு சேனல்கள் ஆரம்பிக்க இருப்பதாய் தகவல்
வரும் தேர்தலில் சன் டீவி 5 சேனல்கள் + கலைஞர் டீவி 5 சேனல்கள் மொத்தம் 10 சேனல்கள் மக்களை வேறு எந்தச் சேனலை பார்க்க போகிறார்கள் .அப்படியே எல்லோரையும் ஹைஜாக் தான்.
வலம் வரும் தகவல்கள்
ஸ்டாலின் பட்டாபிஷேகம் ரெடியாம்
அழகிரிக்கு -அவர் அன்பு மகளுக்கு எம்.பி பதவியாம்
சூரியச் சகோதரர்களுக்கு மீண்டும் அரசின் ஆசிர்வாதச் சலுகைகள்
மொத்தத்தில் வியாழ பாகவனின் மஞ்சள் வர்ணம் கலைஞருக்கு இந்த குருப் பெயர்ச்சி அள்ளிக் கொடுக்க்ப் போவது போல் தெரிகிறது.
அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
விஜய்காந்த்,சரத்,கார்த்திக்,ரஜினி,விஜய்
2014 தேர்தல் வரை பொறுமை காக்கவேண்டும் போலுள்ளது.
ராஜஸ்தான்,டெல்லி,மிசோரம் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் பட்சத்தில்
ஏப்ரல் 2009 தேர்தல் 2004 மாதிரிதான் எனத் தெரிகிறது.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி
தமிழகத்தில் தளபதி ஸ்டாலின் ஆட்சி
உடன்பிறப்புக்களுக்கு ஆனந்தம்
இரட்டிப்பு மகிழ்ச்சி.
நல்ல கதை. அய்யன் வள்ளுவர் இதையே இரண்டு வரியில சொல்லியிருக்காரு.
இந்தப பதிவுலகில் ஒரு பச்சக் குழந்தை சுத்தி வருது. ஆனா அது கொடுக்கிற யு-டயூப் சுட்டிய எல்லாம் பார்த்தா அப்படி தெரியலையே !
குப்புக் குட்டி
//Anonymous said...
நல்ல கதை. அய்யன் வள்ளுவர் இதையே இரண்டு வரியில சொல்லியிருக்காரு.
இந்தப பதிவுலகில் ஒரு பச்சக் குழந்தை சுத்தி வருது. ஆனா அது கொடுக்கிற யு-டயூப் சுட்டிய எல்லாம் பார்த்தா அப்படி தெரியலையே !
குப்புக் குட்டி
வாங்க குப்புக் குட்டி சார்
கடைசியிலே வால்பையன் சாருக்கே ஆப்பா?
ராமசாமி
//எனது முந்தையப் பதிவையே பார்க்கலாம். செக்சன் 498-A தவறாக சிலர் பாவிப்பதால் என்ன ஆகிறது? அதை பாவிப்பவர் அத்தனை பேருமே சந்தேகத்துக்கு உட்படுகின்றனர்..//
Your preception that only "FEW" women are misusing the law is unfounded.
please visit www.saveindianfamily.org;
www.498a.org to find the truth for yourself. 98% of 498a cases are found to be false. 498a cases are filed with an inention extort money, divorce and wrest custody of child etc
Every male is liable to be arrested if anyone who is his reletive's wife makes even false allegation against him . You could also be arrested!
//Your preception that only "FEW" women are misusing the law is unfounded.//
அப்படியே வாதத்துக்கு வைத்து கொண்டாலும், இப்பதிவில் நான் குறிப்பிட்ட விஷயம், அதாவது என்ன ஏது என விசாரிக்காது சுட்டி தரப்பட்ட அந்தப் பெண் இச்சட்டத்தை தவறாக பிரயோகித்திருப்பார் என கூறுவது நிஜமாகவே பொறுப்பற்றத்தனம். பதிவர் இப்படித்தான் மற்ற இடங்களிலும் பொறுப்பற்று நடந்திருப்பார் என்னும் அனுமானத்துக்குத்தானே கூறுகிறது. ஆங்கிலத்தில் கூறுவது போல, he has shot his own foot.
மேலும் சட்டமீறல்கள் உள்ளன என்பதற்காக மட்டும் அச்சட்டமெ இருக்கக் கூடாது என எப்படி கூற இயலும்?
வன்கொடுமை சட்டத்தைக் கூடத்தான் சிலர் தவறாக பிரயோகம் செய்கின்றனர். அதனால் அச்சட்டத்தையே எடுத்துவிடலாமா? முடியாது, ஏனெனில் வன்கொடுமை நடந்து கொண்டுதான் உள்ளது.
அதே போலத்தான் பெண்களுக்கெதிரான கொடுமைகளும் நடந்தவண்ணமே உள்ளன.
சம்பந்தப்பட்ட பதிவருக்கு ஒரு வேண்டுகோள். அந்த இடுகையை தயவு செய்து நீக்குங்கள். உங்கள் செயல்பாட்டால் ஒரு தனிப்பட்ட நபருக்கு தவறு நடந்துள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1.ஹார்லிக்ஸ் - காம்ப்ளான் : விளம்பர யுத்தம் எப்படி?
2.இலங்கையில் தமிழன் செத்து மடிவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாததற்குக் காரணம்?
3.ரஜினியின் பிறந்த தினமான டிச.12-ந் தேதி அதிமுக கட்சியில் ரசிகர்கள் இணையும் விழாவிற்கு ஏற்பாடு செய்து ரஜினிக்கு அதிர்ச்சி வைத்தியம் அதிமுக கொடுக்கவுள்ளனரா?
4.
கச்சா எண்ணைய் விலை கடுமையாக குறைந்துள்ள போதும், மக்களின் சிரமங்களைப் போக்க முன்வராமல் ஒரு கண் துடைப்பு வேலையாக பெட்ரோல், டீசல் விலையை பெயரளவில் அரசு குறைத்துள்ளது.நியாயமா?
5.ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள தேக்கம் சரியாகுமா?
//என்ன ஏது என விசாரிக்காது சுட்டி தரப்பட்ட அந்தப் பெண் இச்சட்டத்தை தவறாக பிரயோகித்திருப்பார் என கூறுவது நிஜமாகவே பொறுப்பற்றத்தனம்.//
Visit her profile
http://www.jeevansathi.com/profile/matrimonial-1014291W4.htm
//Her previous marital life was unsuccessful because of an indifferent and irresponsible husband, and harrassment by himself and all his family members./
The women's matrimonial post itself is clearly states about "harassment" but she went for Mutual divorce! Logically she should have punished him thro Police action.Why go for Mutual?
But the real issue in the blog is that bringing up a child by hiding the facts of biological father.
I quote her
""she has no idea who her father is, and has never been made aware of fatherhood.""
Even terrorist father like Murugan have acces to his child even when he is in Jail.
Secondly it is nobody's case the law 498a should be scrapped. Misuse of law should not be ground for scrapping a law. But seeking punishment or exposing Misusing women and their actions is no crime.98% acquittal in 498a is not just misuse but it is legal terrorism as called by Supreme Court
You appear to have unfounded sympathy for this women and more concerned about her being exposed while conveniently ignoring her abusing the child.
Post a Comment