12/26/2008

சரித்திரத்தின் இருண்ட பக்கத்திலிருந்து

இன்று காலை காஷ்யப குமரில்லா என்பவர் அனுப்பிய மின்னஞ்சல் வந்தது. அது எனக்கு சுவாரசியமாகப் பட்டது. ஆகவே அவர் கேட்டதற்கிணங்க இப்பதிவு போடப்படுகிறது. ஆங்கிலத்தில் ஏற்கனவே போட்டாயிற்று. சோவியத் யூனியனுக்கு சப்பைகட்டு கட்டுபவர்கள் இதனால் எல்லாம் மனம் மாறப்போவதில்லை. நடுநிலைமையில் உள்ளவர்களுக்காகவாவது இது பயன்படட்டும். அக்கால சோவியத் ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவுக்கு கட்சி மாறிய Yuri Bezmenov-ன் நேர்க்காணல் டேப்புகளை இன்னும் முழுமையாகப் பார்க்க நேரம் இல்லை. ஆனால் கூடிய சீக்கிரம் அதை செய்வேன். வந்த மின்னஞ்சலை அனுப்பியவர் முகவரி மறைத்து கீழே தடித்த சாய்வெழுத்துகளில் தருவேன்.

இப்போது மின்னஞ்சலின் தமிழாக்கம்.

from Kashyapa Kumarila
reply-to
to
date Fri, Dec 26, 2008 at 6:42 AM
subject Fw: Video: How communist subversion of India happened
mailed-by xxx.com
signed-by xxx.com

ஐயா,

கீழே கண்டுள்ளவற்றை உங்கள் வலைப்பூவில் பதிவாக மாற்ற இயலுமா?

நன்றி,
KK
----------------------------------------------------------------

Yuri Bezmenov கெ.ஜி.பி. பிரச்சார பிரிவில் பணி புரிந்தவர். தில்லியில் சோவியத் தூதரகத்தில் அறுபதுகளில் 1970 வரை பணி புரிந்தவர். அந்த ஆண்டு அவர் அமெரிக்காவுக்கு ஓடினார்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் அவரது தொலைகாட்சி நேர்காணல் ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அது யூ ட்யூப்பில் 9 பாகங்களாக வந்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் கம்யூனிஸ்டுகள் அந்த நாட்டை கவிழ்க்க என்னென்ன முயற்சிகள் எல்லாம் செய்கின்றனர் என்பதை இந்த நேர்க்காணல் சுட்டிக் காட்டுகிறது. இந்தியாவின் பத்திரிகைக்காரர்க, எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் எவ்வாறெல்லாம் கம்யூனிசம் மற்றும் மார்க்சிசத்துக்கு தோதாக மூளைச்சலவை செய்யப்பட்டனர் என்பதையும் இதில் காணலாம். முக்கியமாக டேப்புகளின் 6, 7 மற்றும் 8-ஆம் பாகங்களை கூர்ந்து நோக்கவும். நம்மவர் பவிசு அதில் பல்லிளிக்கிறது.

ப்ளே லிஸ்ட்: http://www.youtube.com/view_play_list?p=96832BA85ECDC4FF

எல்லாவற்றையும் ஒத்து கொள்ளாவிட்டாலும் எவ்வாறெல்லாம் கம்யூனிஸ்டுகள் செயல்பட்டு நம்மூர் “முற்போக்காளர்கள், விடுதலைவாதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள்” ஆகியோரை செதுக்கினர் என்பதையாவது பார்த்து அறியலாம்.

இப்போதைய இந்தியாவுக்கும் இது பொருந்தும். கிறித்துவ சர்ச்சுகள், அரபி முல்லாக்கள் ஆகியோரும் இம்மாதிரித்தான் செயல்பட்டு, குஹா போன்ற போலி மதசார்ப்பற்றவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளை உருவாக்குகின்றனர்.


மீண்டும் டோண்டு ராகவன். நேர்க்காணல் 9 பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் சொல்லப்பட்டவை எழுத்து ரூபத்தில் கிழே கண்ட 3 உரல்களில் காணக்கிடைக்கின்றன. விருப்பமிருந்தால் அவற்றையும் பார்க்கவும்.

பகுதி 1
பகுதி 2
பகுதி 3

அவற்றைப் பார்த்தால் / படித்தால் நீங்கள் ஆச்சரியப்படுவது நிச்சயம்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகு இம்மாதிரி பல விஷயங்கள் வந்தன. இது பற்றி நான் ஏற்கனவே பதிவுகள் போட்டுள்ளேன். மனித இயற்கைக்கு புறம்பான ஒரு தத்துவம், சரித்திரம் உருவாகும்போது ஆகியவை இதில் அடங்கும். பை தி வே, கிழக்கு ஜெர்மனி விழுந்த பிறகு நான் இட்ட ஷ்டாஸி பற்றிய பதிவிலும் இதைத் தொட்டுள்ளேன். இது உலகளாவிய செயல்பாடு என்பதையும் அப்பதிவு காட்டியுள்ளது. முக்கியமாக இந்திய கம்யூனிஸ்டுகள் மற்றும் அறிவுஜீவிகள் அசடு வழிந்ததையும் காணக்காண மனம் பொருமுகிறது. இந்தியர்களின் ஒத்துழைப்பை மிக குறைந்த விலைக்கு சோவியத் யூனியன் பெற்றது என்பது சரித்திர உண்மை.

இப்போதைக்கு இவ்வளவுதான். நேரம் கிடைத்ததும் எல்லா டேப்புகளையும் முழுக்க கேட்டு தேவையானால் இன்னொரு முறை உங்கள் முன்னால் வருகிறேன்.

அதுவரைக்கும் வணக்கம் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: ஒரு மாதிரியாக டேப்புகளின் எழுத்து வடிவை படித்தேன். மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

24 comments:

Unknown said...

Please use this request as a personal request.
This need not be taken as comment


Respected dondu sir,

Could you please add your one of your mail ids ( need not give personal email id)in your blogger profile, enablig all, to ask personal questions, as a new year gift to your 55 Followers.

ramakrishnahari.

dondu(#11168674346665545885) said...

If you want to get my email id, you can do so in the following manner.

Give me a comment with the clear indication "Not for publication". Therein you can give me your email id and I will definitely send you an email. The concerned comment will not be published of course.

Regards,
Dondu N. Raghavan

வால்பையன் said...

கம்யூனிசம் என்பது ஒரு உணர்வு, அதை தவறாக பயன்படுத்தியதால் சில நாடுகள் தோல்வியுற்றிருக்கலாம்.
ஆனால் இன்னும் சில நாடுகள் அமெரிக்கா அளவுக்கு வீழ்ச்சி அடையவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

உலகமயமாக்கல் வேண்டுமானால் ஏற்றுகொள்ள கூடிய விசயமாக இருக்கலாம்.

ஆனால் முதலாளித்துவம் என்றுமே சுயநலமிக்கதாய் தான் இருக்கிறது.

Anonymous said...

உம்ம‌ அமெரிக்காவின் இல‌ட்ச‌ண‌த்தைத்தான் பார்க்கிறோமே இப்போது. ச‌ரிதான் மூடும‌ய்யா..

கோம‌ண‌காந்து

Che Kaliraj said...

கம்யுனிச தத்துவத்தில் குறைபாடுகள் காணப்பட்டால், கம்யுனிச குறைபாடுகளை களையலாம் . ஆனால் முதலாளித்துவ குறைபாடுகளை எங்கனம் களைவது ? முதலாளித்துவம் லாப பங்கை பிரித்து தொழிலாள வர்கத்துக்கு கொடுத்தால் சரிதான். சொத்தை பொதுவுடைமையாக்கி, அனைவர்க்கும் பங்கிடப்பட வேண்டும். முதலாளித்துவ நடைமுறையில் கல்வி இப்போது வியாபாரப்பொருள் ஆகிவிட்டது . மருத்துவமும் இப்படியே.


புண் சீல் பிடித்து இருக்கும் போது அறுவை சிகிச்சை அவசியம். சில நேரங்களில் மரணிக்க நேரலாம் அது கவனக்குறைவால் இருந்ததால் வந்த விளைவே அன்றி வேறில்லை. சில தவறுகள் கம்யுனிச ஆட்சியில் நடந்திருக்கின்றன. ஆனால் அவை கலையபட்டிருப்பின் சோவியத் சிதைவுற்று இருக்காது. இப்போது பரிகாச சிரிப்புகள் இருந்திருக்காது

Anonymous said...

கேள்விகள். எம்.கண்ணன்.

1. குமுதத்தின் சேர்மன் எஸ்.ஏ.பி புதல்வர் ஜவஹர் பழனியப்பன் கருணாநிதியை சந்தித்து ஒரே செண்டி டயலாக் எல்லாம் விட்டு வந்திருப்பதை சுதாங்கன் கிழி கிழி என கிழித்திருக்கிறாரே ? உமது எண்ணம் என்ன ? படிக்க: http://sudhanganin.blogspot.com/2008/12/blog-post_26.html

2. துக்ளக் சத்யா எப்படி இருப்பார் ? அவரது புகைப்படம் இதுவரை வெளியானதுண்டா ?
(அப்படி ஒருவர் இருக்கிறாரா இல்லை சோ புனைப்பெயரில் எழுதுகிறாரா ?)

3. மொட்டை மாடிக் கூட்டம் கூட்டி, வெறும் காபி, பக்கோடா வைத்தே புத்தகம் வெளியிட்டு - பெரிய விழா/ஹால் செலவில்லாமல் கிழக்கு பதிப்பகம் சாமர்த்தியம் எப்படி ?

4. சாரு நிவேதிதாவைச் சந்தித்தால் என்னென்ன கேள்விகள் கேட்க விருப்பம் ?

5. அரி-கிரி அசெம்பிளி பாஸ்கியும் சோவைப் போல முடி வளராதவரா ? இல்லை வாராவாரம் மொட்டை அடித்துக் கொள்பவரா ?

6. பெரும்பாலான தமிழ் டிவி சேனல்கள் இரவில் 9.30 அல்லது 10.00 மணிக்குப் பிறகு காமெடி நிகழ்ச்சிகளையே ஒளிபரப்புகின்றனவே? இது ஒரு விதத்தில் தூங்கப் போகுமுன் ஒரு லேசான உணர்வோடு செல்ல மனதை தயார் செய்கிறது என்றாலும் மீண்டும் மீண்டும் அதே காட்சிகளையே கட்டுகின்றனரே ? ஏன் பழைய படங்களிலிருந்து (நாகேஷ், சந்திரபாபு, பாலையா, சிவாஜி..) காட்சிகள் காண்பிப்பதில்லை ?

7. சன் டிவியில் வரும் 9.30 மணி ராதிகாவின் அரசி சீரியலில் - தமிழக அரசியல் சம்பவங்களை / நடப்புகளை கிண்டல் அல்லது விமர்சனம் செய்யும் வகையில் வசனங்கள் வருகிறதே ? இது சரத்குமாரின்/ராதிகாவின் சொந்த முடிவா இல்லை இதற்குப்பின் கலாநிதி மாறனின் உள்குத்து இருக்குமா ?

8. சரத் ரெட்டியை (கலைஞர் டிவி) அடிக்கும் அளவிற்கு சகோதரர்களுக்கு அவ்வளவு துணிவு வந்துவிட்டதா என்ன ?

9. தமிழ் இணைய உலகத்தில் ஒரு காலத்தில் பிராமண எதிர்ப்புகளை போராடி வந்த நியுஜெர்சி அருண் வைத்தியநாதன், தற்போது சிநேகா, பிரசன்னாவை வைத்து 'அச்சமுண்டு அச்சமுண்டு' தமிழ்ப்படம் எடுத்து வருகிறார். அவரது பழைய பதிவுகளைப் படித்ததுண்டா ? கொஞ்சம் உங்கள் எண்ண சாயலில் இல்லை ? உங்கள் கமென்ட்டும் அந்தப்பதிவில் உள்ளது.

http://arunhere.com/pathivu/?p=24

(என்ன தான் சொன்னாலும், தமிழ் மொழிக்காக ஆங்கிலப் பலகைகளில் தார் பூசுவதோ அல்லது இந்தி எழுத்துக்களில் சாணியடிப்பதையோ என்னால் ‘ஆஹா…சபாஷ்’ என்று கைதட்டி வரவேற்க முடியாது. அதே போல, பார்ப்பனீயம், பார்ப்பனர்கள் என்று தமிழகத்தில் எழுப்பப்படும் கோஷங்களை வலைப்பதிவுகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி எழுதப்படும் போது, பல்லாயிரம் மைல்கள் கடந்து வந்து, பல தரப்பட்ட கலாச்சாரம் மற்றும் மக்களோடு பழகி வரும் என்னால் சிரிக்கத்தான் முடிகிறது. அதற்காக நான் பூணூல் அணியமாட்டேன் என்றோ அல்லது சடங்குகள் சம்பிரதாயங்களில் ஈடுபடமாட்டேன் என்றோ சொல்லவில்லை. யாரையும் எந்த விதத்திலும் ‘டிஸ்டர்ப்’ செய்யாத எந்த சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் எனக்கு வருத்தமோ கோபமோ கிடையாது. அது போன்ற விஷயங்களை நான் செய்து கொண்டு தானிருப்பேன். ஏனென்றால், அது எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், எனக்கும் திருப்தியைத் தரும் சமாச்சாரம்)


10. வைரமுத்து எழுதிய திரைப்பாடல்களில் உங்களுக்குப் பிடித்த பாடல்கள் / வரிகள் என்ன ? ஏன் ?

Anonymous said...

//கம்யூனிசம் என்பது ஒரு உணர்வு, அதை தவறாக பயன்படுத்தியதால் சில நாடுகள் தோல்வியுற்றிருக்கலாம்//
உளருவது என்று முடிவெடுத்துவிட்டால் அதற்கு அளவு இருக்கிறதா டோன்டு சார்.

வால்பையன் said...

////கம்யூனிசம் என்பது ஒரு உணர்வு, அதை தவறாக பயன்படுத்தியதால் சில நாடுகள் தோல்வியுற்றிருக்கலாம்//
உளருவது என்று முடிவெடுத்துவிட்டால் அதற்கு அளவு இருக்கிறதா டோன்டு சார். //

அய்யா அதை உளறியது நான்!

கம்யூனிசம் என்பது சக மனிதனை தோழனாக பார்க்கும் உணர்வு,
உங்களுக்கு வேற உணர்வு தோன்றினால் நான் பொறுப்பல்ல

Anonymous said...

//கம்யூனிசம் என்பது சக மனிதனை தோழனாக பார்க்கும் உணர்வு,
உங்களுக்கு வேற உணர்வு தோன்றினால் நான் பொறுப்பல்ல//
தலைவர் மஞ்சத் துண்டுக்கு கொடுத்த விளக்கமே மேல்! ஏன் சார் இது மாதிரி பதிலெல்லாம் ரூம் போட்டு யோசிச்சு சொல்லுவீங்களா இல்ல தன்னால பொங்குதா !

ராஜ நடராஜன் said...

ஒரு வித்தியாசமான இணைப்பை அறிய தந்தமைக்கு நன்றி.இருந்தும் 30,40 வருசத்துக்கு முந்திய பழைய சரக்கை declassified பண்ணிய காலகட்டத்துக்குள் வாசிப்பது சூடாறுன பலகாரம் மாதிரி இருக்கிறது.

ராஜ நடராஜன் said...

முந்தைய பின்னூட்டத்தில் சொல்ல மறந்து போன இன்னொரு விசயம் நேர்வழி செல்லாத எந்த இஸமும் தனது சுயத்தை இழக்கும்.

Anonymous said...

//குஹா போன்ற போலி மதசார்ப்பற்றவர்கள், பத்திரிகையாளர்கள் மற்ரும் அறிவுஜீவிகளை உருவாக்குகின்றனர்.//
அவர் மட்டும் தானா இல்லை பிள்ளையார் சதுர்த்திக்கு அசிங்கமாக எழுதி வாழ்த்துக்கள் என்று சொல்லிவிட்டு , கிறிஸ்துமஸ் , மிலாடி நபிக்கு அடக்க ஒடுக்கமாக வாழ்த்துச் சொல்லும் தருதலையும் இதில் சேர்த்தியா? இவனை எவன் வாழ்த்தலைன்னு கேட்டது, பொ.கிட்டு இருக்கவேன்டியது தானே
(மதம் மாறியவர் என்றும் இவரைச் சொல்கிறார்கள் தெரியவில்லை)
க.பழனிவேலன்.

Anonymous said...

Communism in any form or feeling is evil and anti-people. It's time India becomes a civilized Nation and ban 'em like the rest of World.

All that talks of it being a "mis-used 'ism" are BS.

க. கா. அ. சங்கம் said...

அது தான் சொல்லிவிட்டாரே, இந்த நொடி ஆரம்பித்தாலும் 15-20 ஆண்டுகள் ஆகும் இந்த கம்யூனிஸ்டு கொள்கைத் தேவ$யாட்களை (ideological prostitutes) ஓழிக்க என்று.

இந்தியாவில் இந்த தேவ$யாட்கள் பல இடங்களில் இருக்கிறார்கள். கல்வியில், ஸ்கூல் வாத்தியார்கள் முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வரை. அரசியலில் அடிமட்டத் தொண்டன் முதல் முதலமைச்சர்வரை.

இவர்களை ஒழிக்காவிட்டால் நாடு விழங்காது என்பது திண்ணம்.

இந்தியாவுக்கு ஒரு மெக்கார்த்தி தான் உடனடித் தேவை.

Anonymous said...

Thanks for posting such a nice revelations. Please continue to do so.

You are doing a great service by educating the facts.

வஜ்ரா said...

இன்னும் சே காளிராஜ் போன்றோர் நம்மிடயே உலவிக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணும் போது வேதனையாக இருக்கிறது.

கம்யூனிஸ்டு சோவியத் யூனியன் 2 தலைமுறைக்கு மூளைச்சலவை செய்தார்கள். இப்போது இவர்கள் வருங்காலத் தலைமுறைகளை இப்படி தருதலைமுறையாக மாற்றிவிட்டிருக்கிறார்கள் என்று எண்ணும் போது ஆத்திரம் வருகிறது.

இவர்களுக்கெல்லாம் அறிவு வராது என்று தெளிவாகத் தெரிந்தபின்னும் நாம் இவர்களுக்கெல்லாம் பத்மஸ்ரீ பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கிறோமே, எப்பேர்ப்பட்ட மானங்கெட்ட மடையர்களாக இருக்கிறோம் பாருங்கள்.

Useless Dissident said...

I can't read most of this, but thanks for the link to my blog.

dondu(#11168674346665545885) said...

//I can't read most of this, but thanks for the link to my blog.//
But then I have posted another post in English in my English blog. Please go to:
http://raghtransint.blogspot.com/2008/12/from-dark-pages-of-history.html
By the way, I cannot give my feed back to your excellent transcripts, as your comment settings do not permit outsiders' comments. Otherwise I would have expressed my appreciation there itself.

Please accept my thanks.

Regards,
Dondu N. Raghavan

வஜ்ரா said...

பதிவுக்குச் சம்பந்தம் இல்லாதது என்றாலும் இந்த விசயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

மார்ச் ஆஃப் லா என்ற வலைப்பூ, பிரபு ராஜதுரை அவர்களுடையது. அதில் சமீபத்திய கஜினி பற்றிய பதிவில் ஒரு பின்னூட்டத்தில் மு. சுந்தரமூர்த்தி என்பவர் ஒரு வணிக வானொலி நிகழ்ச்சிக்கான சுட்டி கொடுத்திருந்தார். அதில் itwofs.com என்ற வலைத்தளம் பற்றி சொல்லப்பட்டது. தமிழ்/இந்தி சினிமாப் பாடல்கள் பல அப்பட்ட காப்பியாக இருக்கிறது பற்றி ஆதாரத்துடன் பதிவு செய்திருக்கிறார் அந்த வலைத்தள உரிமையாளர் கார்த்திக். பங்களூரைச் சேர்ந்தவர் அவர்.

உதாரணத்திற்கு வல்லவன் ஒருவன் படப்பாடலான
பலிங்குனால் ஒரு மாளிகை (1966) ஆல்பர்டோ டொமிங்குவெஸ் உருவாக்கிய Frenesi என்ற ஜாஸ் இசையை அப்படியே ஒத்திருக்கிறது.

ஷோலே படத்தின் ஐட்டம் நம்பர் பாடலாம மெஹபூபா மெஹபூபா (1975) டெமிஸ் ரூஸ்ஸோஸின் Say you love me (1974) வை அப்படியே உல்டா செய்திருக்கிறார் இசையமைப்பாளர் R.D. Burman.

தயவு செய்து அந்த வலைத்தளத்திற்குச் சென்று ஒரு பார்வை பார்த்துவிட்டு வந்து அதைப்பற்றியும் ஒரு பதிவு போடுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அர டிக்கெட்டு ! said...

//இந்த நொடி ஆரம்பித்தாலும் 15-20 ஆண்டுகள் ஆகும் இந்த கம்யூனிஸ்டு கொள்கைத் தேவ$யாட்களை ஓழிக்க //

என்னத்த பண்ண கெட்ட நேரம்...! எல்லாம் இந்த மொதளாளிங்கள சொல்லணும்...,
திடீருன்னு சம்பளத்த குறைக்கிரான், ஷிப்டுநேரத்த கூட்டுறான், வேலையை சேக்குறான்,வேலைய விட்டு போங்கறான், விலைவாசியை ஏத்துறான் மொத்த்துல நிம்மதி வாழ உடமாட்டேங்குறான்..இவனுங்க மட்டும் உருப்புடியா இருந்தா இந்த கம்மீனிஸ்ட்டுங்க இருக்க முடியுமா??? அதனால மொதல்ல இந்த மொதளாளிங்கள ஒழிச்சுப்புடுவோம் அதுக்கு அதிக நேரம் ஆகாது ஏன்னா எண்ணிக்க ரொம்ப கம்மி பாருங்க....அப்புறம் பாத்துக்கலாம் இந்த கம்மினிஸ்டுங்கள...!!!!ஹேய் ஒரு நிமிசம்..!!!மொதலாளிங்களை ஒழிக்கறதுதானே கம்யூனிஸம்...?????????????????????????????????????

Anonymous said...

//
ஹேய் ஒரு நிமிசம்..!!!மொதலாளிங்களை ஒழிக்கறதுதானே கம்யூனிஸம்...?????????????????????????????????????
//

ஆமாம்...மொதலாளிகளையெல்லாம் ஒழித்து எல்லோரையும் ஏழையாக்குவது தான் கம்யூனிஸம்.

அர டிக்கெட்டு ! said...

///மொதலாளிகளையெல்லாம் ஒழித்து எல்லோரையும் ஏழையாக்குவது தான் கம்யூனிஸம்....//

உலகிலேயே ஏழைகளே இல்லாத நாடு இந்தியா...இந்தியா...இந்தியா!!!!!!!

dondu(#11168674346665545885) said...

@அர டிக்கெட்டு
எஸ்.வி. சேகர் நாடகம் ஒன்றிலிருந்து டயலாக்:
கேள்வி: குடிசைகளே இல்லாத நாடு எது?
பதில் (எஸ்.வி.சேகர்): பங்களாதேஷ்

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

"""""""""""மொதலாளிங்களை ஒழிக்கறதுதானே கம்யூனிஸம்...??????"""""""""""""""""""""
முதலாளிகளை ஒழிப்பதற்குன்னு சொல்லி ஆரம்பிச்சதுதான் கம்யூனிஸம்னா அப்புரம் ஏன் மில்லியன் கணக்கான மக்களை கொன்றீர்கள்.இதைப்பற்றி கேட்டால் இதெல்லாம் முதலாளிகளின் சதியென்று அந்தர் பல்டியடிக்கின்றீர்கள்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது