12/16/2008

புதுக்கோட்டுக்கு ஜூட் - 2

இந்த வரிசையில் வந்த முந்தைய பதிவு

எனது இப்பதிவில் குறிப்பிட்ட என் அத்தை பிள்ளை ஸ்ரீதரனும் (என் மனைவியின் அண்ணன்) நானும் உறவினர்கள் என்பதைவிட அதிக அளவில் நண்பர்கள் என்றுதான் கூறவேண்டும். அவன் அப்பா திடீரென இறக்க அவனும் அவன் அக்காவும் அடுத்த ஆறு ஆண்டுகள் எங்கள் வீட்டில் தங்கி படித்தனர். நானும் அவனும் சேர்ந்து அடித்த கொட்டங்கள் அனேகம். அது பற்றி பிறகு.

அவன் அப்பா இந்தியன் வங்கியில் மேலாளராக ஆந்திராவில் பணிபுரிந்தார். அவனுக்கு டியூஷன் வைத்திருந்தனர். அவன் நண்பன் தனது டியூஷன் வாத்தியாரின் சிபாரிசால் டபிள் ப்ரமோஷன் வாங்கி படித்தான், அதாவது நான்காம் வகுப்பிலிருந்து நேரடியாக ஆறாம் வகுப்புக்கு சென்றான். ஸ்ரீதரனுக்கும் அவர்தான் டியூஷன் வாத்திய்யர். இவனும் அவ்வாறே ஆசைப்பட்டு அவரிடம் கூற அவர் அவனிடம் அவ்வாறெல்லாம் எல்லோராலும் முடியாது என்று கூறியிருந்தார். அப்படியே விட்டிருக்கலாம், ஆனால் அவர் நேரம்தான் என்று கூற வேண்டும். அவர் அவனிடம் மாடிப்படியில் நேரடியாக நான்காம் படிக்கு போக இயலாது, இதுபோலத்தான் அது, வேண்டுமானால் அவர் அவ்வாறு தாவிவிட்டால் ஆவன செய்வதாக வார்த்தையை விட்டு வைத்தார். நம்ம திருவாழத்தானும் வேகமாக ஓடிவந்து அவன் வீட்டு மாடிப்படியில் உள்ள நான்காம் படிக்கு தரையிலிருந்தே தாவி குதித்து விட்டான். திகைத்து போன வாத்தியார் “ஏதோ பேச்சுக்கு சொன்னால் அப்படியேவா எடுத்து கொள்வது” என முணுமுணுத்து கொண்டே ஜகா வாங்கினார். இதுவும் நான் முந்தைய பதிவில் சொன்ன புதுக்கோட்டுக்கு ஜூட் போன்ற நிலைதான். அதாவது பந்தயத்தில் தோற்றதும் அதன் ஷரத்தை அப்படியே மாற்றுவது அல்லது முழுக்கவே மறுத்துவிடுவது.

ஒரு கன்னட திரைப்படம் பார்த்தேன். அதில் பள்ளி மாணவர்கள் சீதைக்காக ராமர் வில்லை ஒடிக்கும் காட்சியை நடிக்கும் ஒரு காட்சி காட்டப்பட்டது. எல்லா அரசர்களும் அந்த சிவன் வில்லை எடுத்து நாணேற்ற முயல்கின்றனர். ராவணனும் முயல்கிறான், ஆனால் அவனும் மற்றவர்களை போலவே தோல்வியடைகிறான். பிறகு ராமர் வந்து வில்லெடுத்து நாணேற்ற வில் முறியும். ஆனால் அந்தோ இக்காட்சியில் ராவணனாக நடிக்கும் பையன் நிஜமாகவே வில்லை எடுத்து ஒடித்துவிட்டான். நாடகத்தை டைரக்ட் செய்து கொண்டிருந்த ஆசிரியை மடேரென மண்டையில் தட்டிக் கொள்வார். ஆடியன்சில் ஒரே கைத்தட்டல். அப்போதுதான் ஜனகராக நடித்த நடிகர் ஒரு காரியம் செய்தார். “யாரங்கே, எந்த மடையனடா இந்த வில்லை கொண்டு வந்து வைத்தது? இது சிவதனுஷு அல்லவே. அதை கொண்டு வாருங்கள்” என சமாளிப்பார். நல்ல வேளையாக ஒரு ஸ்பேர் வில் இருந்ததோ நாடகம் பிழைத்ததோ. இன்னொரு வில்லை கொண்டு வந்து வைக்க, மறுபடியும் ராவணன் வில்லிடம் செல்ல முயற்சிக்க, அவனை டிரில் மாஸ்டர் கெட்டியாக பிடித்து வைக்க, ராமர் அவசரம் அவசரமாக வந்து வில்லை ஒடிப்பார். இதுவும் புதுக்கோட்டுக்கு ஜூட்தான், ஆனால் ஏற்றுக் கொள்ளக்கூடியதே.

நான் சமீபத்தில் 1976-ல் மத்தியப் பொதுப்பணித் துறையில் வேலை செய்த தருணத்தில் Executive Engineer (Hindi) என்ற போஸ்டை உருவாக்கினர். அதற்கு முன்னுரிமை ஹிந்தியை தாய்மொழியாகக் கொள்ளாத Assistant Engineer களுக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஹிந்தியில் எம்.ஏ. படித்திருக்க வேண்டும் என்ற ஷரத்தும் வைக்கப்பட்டது. கூடவே ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் Assistant Engineer ஆக பணி புரிந்திருக்க வேண்டும். அவ்வாறு யாரும் கிடைக்காவிட்டால் ஹிந்தியைத் தாய்மொழியாக கொண்ட Assistant Engineer-களை இவ்வேலைக்கு பதவி உயர்வு தரலாம் என்று கடைசியாக ஷரத்து சேர்த்திருந்தார்கள். அவர்கள் தாய்மொழியாதலால் எம்.ஏ. தகுதி வற்புறுத்தப்படவில்லை. இந்த ஷரத்து கடைசியாக சேர்க்கப்பட்டிருந்தாலும் இதுதான் ஒரே ஷரத்து என்றுதான் கூறவேண்டும். யாராவது பி.இ. படித்து விட்டு எம்.ஏ. ஹிந்தி படிப்பார்களா? ஆகவே கடைசி ஷரத்தின்படித்தான் வேலை உயர்வு தரப்படவிருந்தது. விஷயம் என்னவென்றால் இதற்காக ஏற்கனவே வடமாநிலம் ஒன்றில் உள்ள ஒரு தேஷ்பாண்டேயையோ குப்தாவையோ தெரிவு செய்து வைத்திருந்தனர். அதற்காகவே இந்த போஸ்டையும் உருவாக்கினர்.

ஆனால் அவர்கள் கால்குலேஷன் எல்லாம் எகிறிப்போகும் அளவுக்கு ஒரு விஷயத்தை எங்கள் Assistant Engineer வீரப்பன் செய்தார். அவர் சமீபத்தில் 1961-ல் த்ட்சிண பாரத் ஹிந்தி பிரச்சார் சபா நடத்திய பிரவீண் என்னும் பரீட்சையில் தேர்வு பெற்றிருந்தார். அக்காலக் கட்டங்களில் இம்மாதிரி ஹிந்தி பிரைவேட்டாக படித்தவர்கள் அனேகம் பேர் உண்டு. பரீட்சைகள் பின் வருமாறு: பிராதமிக், மத்யமா, ராஷ்ட்ரபாஷா, பிரவேசிகா, விஷாரத், பிரவீண். கடைசியில் சொல்லப்பட்ட பிரவீண் பரீட்ட்சைக்கு எம்.ஏ. படிப்புக்கு சமமான அந்தஸ்து மத்திய அரசு ஆணையால் கொடுக்கப்பட்டுள்ளது. வீரப்பன் ஆறு ஆண்டுகளாக Assistant Engineer ஆக வேறு பணி புரிந்திருக்கிறார். ஆகவே அவர் கீழ்க்கண்டவாறு செயல்பட்டார். மத்திய அரசு ஆணையை தோண்டி எடுத்தார். தனது பிரவீண் பாஸ் செய்த சான்றிதழின் அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகலை தனது அப்ளிகேஷனுடன் போட்டு தனது மேலதிகாரிக்கு அனுப்ப, அதுவும் வரிசைக்கிரமமாகப் போய் இந்த வேலைக்காக தேர்வு செய்ய வேண்டிய குழுவிடம் போய் சேர்ந்தது. சம்பந்தப்பட்ட எல்லோருமே அசடு வழிந்தனர். பிறகு சில நாட்களுக்கு விஷயம் கிணற்றில் போட்ட கல்லாய் கிடந்தது. திடீரென ஒரு நாள் இந்த போஸ்டை உருவாக்கும் விஷயமே ஒட்டுமொத்தமாக டிராப் செய்யப்பட்டது. சிக்கன நடவடிக்கை எனக் கூறப்பட்டது. இதை நான் புதுக்கோட்டுக்கு ஜூட் விஷயத்துக்கு இன்னொரு உதாரணமாக பார்க்கிறேன்.

இதற்கு முந்தைய பதிவில் நான் குறிப்பிட்டிருந்த internationally branded car rental சேவைகள் சம்பந்தமான டெண்டரில் என்னதான் சொல்லியிருந்தார்கள் என்று பார்க்க விரும்பினேன். அதை கூகளிட்டு பார்த்ததில் ஒரு உரல் கிடைத்தது. அரசின் டெண்டர்களை பார்வையிட வழி செய்யும் உரல் அது. அதில் முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் விரும்பும் டெண்டரை அது அங்கு சேமிக்கப்பட்டிருந்தால் நாம் நோக்கிட இயலும். இந்த டெண்டரும் அதில் இருந்தது. சரி பதிவு செய்து கொள்ளலாம் என தீர்மானித்தேன். பயனர் பெயர், நமது கடவுச்சொல் (இருமுறை) நமது முகவரி, மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை உள்ளிட வேண்டும். நான் பத்து கேரக்டர்கள் வரும் ஆல்ஃபா ந்யூமெரிக் கடவுச்சொல்லை தேர்ந்தெடுத்தேன். எல்லாவற்றையும் உள்ளிட்டவுடன் எனது பதிவு விண்ணப்பம் ஏற்கப்பட்டது என கூறப்பட்டிருந்தது. இப்போது அந்த டெண்டர் உள்ள பக்கத்திற்கு சென்றேன். லாக் இன் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது. அவ்வாறே பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் இட்டு க்ளிக்கினால், “கடவுச்சொல் ஆறு கேரக்டர்களுக்கு மேல் இருக்கலாகாது” என்ற எர்ரர் மெச்ஸேஜ் வருகிறது. எனக்கு மூச்சே நின்று விட்டது. “பின்னே ஏண்டா எனது பதிவை முதலில் ஏற்று கொண்டாய் மொட்ட நாயே” என்று கத்திக்கொண்டே அப்பக்கத்தை மூடினேன். இன்னொரு முறை வேறு பயனர் சொல் போட்டு மெம்பராகியிருக்கலாம்தான். ஆனால் இந்த சொதப்பலால் அங்கு போகும் ஆசையே அற்றுப் போயிற்று. இன்னொரு புதுக்கோட்டுக்கு ஜூட் கதைதான் இது.

இது சம்பந்தமாக வேறு ஏதாவது ஞாபகத்துக்கு வந்தால் மேலும் வந்து மொக்கை போடுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

17 comments:

வால்பையன் said...

ராவணன் முறையில் சீதைக்கு அப்பா என்று சில பேசி கொள்கிறார்களே, பிறகு ஏன் ராவணன் வில்லை உடைக்க போனான்.

வால்பையன் said...

//Executive Engineer (Hindi)//

ஹிந்திக்கே இஞ்ஜினியரா நீங்க?

dondu(#11168674346665545885) said...

//ஹிந்திக்கே இஞ்ஜினியரா நீங்க?//
நான் இல்லை, வீரப்பன் அவர்கள்தான் முயன்றார். அவரது விண்ணப்பத்தால் வடமாநிலத்தில் சம்பந்தப்பட்டவர்கள் டரியல் ஆனதுதான் மிச்சம்.

ராவணன் சீதைக்கு அப்பா என்பது உலகில் உள்ள பல ராமாயணங்களில் ஒரு பதிப்பில் கூறுகிறார்கள். ராவணன் வில்லை ஒடிக்க வந்தது கூட வால்மீகி ராமாயணத்தில் இல்லை என்றுதான் கேள்விப்படுகிறேன். அதுவும் இன்னொரு வெர்ஷனில்தான் உள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//இது சம்பந்தமாக வேறு ஏதாவது ஞாபகத்துக்கு வந்தால் மேலும் வந்து மொக்கை போடுவேன்.//

பெரிதாக குறை சொல்ல ஒன்றுமில்லை,
அடுத்த மொக்கையில் இன்னும் கொஞ்சம் சுவை கூட்டுங்கள்

Jay said...

//இது சம்பந்தமாக வேறு ஏதாவது ஞாபகத்துக்கு வந்தால் மேலும் வந்து மொக்கை போடுவேன்.//

நல்ல பதிவு. இது போல பதிவுகளை வரவேற்கிறோம்.

மணிகண்டன் said...

ரொம்ப நாள் கழித்து உங்கள் பதிவை ரசித்து படித்தேன்.

மணிகண்டன் said...

வால்பையன், நான் கூட ஒரு ராமாயணம் எழுதி அதுல நீங்க வில்லை உடைக்க முயற்சி செய்து வெற்றி அடைந்ததாக ! என்ன சீதா தான் கிடைக்கமாட்டாங்க.

எந்த ராமயனத்துல ராவணன் வில்லை உடைக்க வர்ற மாதிரி இருக்குன்னு சொன்னீங்கனா வசதியா இருக்கும். டோண்டு சார்.

Anonymous said...

I have read one information about your "இஸ்ரேலி
எதற்கெடுத்தாலும் இஸ்ரேலியர்களை உதாரணமெடுக்கும் நாம் அவர்கள் கல்விக்கு அளித்த முக்கியத்துவத்தை நாம் உணர்ந்ததில்லை. இத்துணூண்டு இஸ்ரேலில் ஆறு பல்கலைக்கழகங்கள் உலகின் டாப் ரேட்டட் பல்கலைக்கழகங்கள். ஆறு மில்லியன் இஸ்ரேலியர்களால் ஒவ்வொரு வருடமும் 12 மில்லியன் புத்தகங்கள் வாங்கப்படுகின்றன.10,000 பேருக்கு 109 என்ற விகிதத்தில் அறிவியல் ஆய்வு கட்டுரைகள் எழுதப்படுகின்றன. அதற்கான பலனையும் அவர்கள் காண்கின்றார்கள்

Anonymous said...

நல்லா சொன்னீங்க ரமகிருஷ்ண ஹரி, நம்ம ஊர் பசங்க தாங்கள் எதுவுமே செய்யாமா இந்த நாட்டை மட்டுமே குறை சொல்வார்கள். இப்ப நம்ம அரசு கொடுக்கிறதுக்கு பேர் எல்லாம் கல்வியே கிடையாது. இதெல்லாம் மாற வேன்டுமென்றால் படித்த அறிவிலிகள் எல்லாம் தவறாதுஓட்டுப் போட்டு நல்ல அரசைத் தேர்ந்தெடுக்கனும். படிக்காதவர்கள் எல்லோரும் ஒட்டு போட தவருவதில்லை. (தவறான அரசை தேர்ந்தெடுத்தாலும் கூட) குப்புக் குட்டி

Anonymous said...

இஸ்ரேலில் 5 பல்கலைக்கழகங்கள் உள்ளன.

1. ஹீப்ரூ யுனிவர்சிடி, ஜெரூசலம்
2. பார் இலான் யுனிவர்சிடி, டெல் அவீவ்
3. டெல் அவீவ் யுனிவர்சிடி, டெல் அவீவ்
4. யுனிவர்சிடி ஆஃப் ஹைஃபா, ஹைஃபா
5. பென் குரியன் யுனிவர்சிடி, நெகவ் பாலைவனம்

ஒரு டெக்னிகல் பல்கலைக்கழகம் (IIT மாதிரி.)

1. இஸ்ரேல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, டெக்னியான், ஹைஃபா அருகில்.

ஒரு அறிவியல் பல்கலைக்கழகம்(IISc மாதிரி.)

1. வைட்ஸ்மென் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயன்ஸ். ரெஹோவொத் (இந்திய எம்பஸிக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் அதிகம் காணப்படும் இடம்)

ஒரு திரந்தவெளிப் பல்கலைக்கழகம்.
1. ஓப்பன் யுனிவர்சிடி ஆஃப் இஸ்ரேல்.

விவசாயப்பல்கலைக்கழகம் ஒன்று (அக்ரிகல்சுரல் யுனிவர்சிடி மாதிரி)

1. வொல்கானி ரிசர்ச் சென்டர், ரிஷோன்-லெ-சியோன்.

கல்லூரிகள் ஏகப்பட்டது உள்ளன.


வஜ்ரா

பட்டாம்பூச்சி said...

உங்களது மொக்கை மிகவும் ரசிக்கும்படியாகவே உள்ளது. இன்னும் நிறைய அனுபவங்களை கூடுதல் சுவையுடன் தாருங்கள் :-). உங்களது பதிவுகளை எப்போதும் படித்தாலும் இப்போதுதான் எனது முதல் பின்னூட்டம் அரங்கேற்றம்.

Giridharan V said...

To Dondu's Q&A section:
1) What is your opinion on Bush's connection with 9/11? There was a movie called “9/11” (I am not sure about the movie name) released to thrash American government.

2) If 9/11 was just a drama to attack IRAQ to conquer it for oil wealth, then how come we are trusting USA in our terrorist attack 26/11?

Regards,
Giri

Giridharan V said...

3) Many banks/departments under private sector in US are taking reverse to the control of government. So America's basic core ideas is being changed. Please comment.

Regards,
Giri

Giridharan V said...

4) I heard Albert Einstein and Google's CEO are Jewish. Is it so?

5) Jewish always live in groups. Also they won't encourage getting marriage outside their religion. Please authenticate this news.

Anonymous said...

The hit counter shows 3,24,952.

It seems today that it may cross 3,25,000

25,000 hits in just 40 days .
600-650 hits per day.

There are many comments from many people in your old blogs.

Why the no of comments are less nowadays, though the hits are in higher rate comparing the old periods?

Anonymous said...

//
4) I heard Albert Einstein and Google's CEO are Jewish. Is it so?

5) Jewish always live in groups. Also they won't encourage getting marriage outside their religion. Please authenticate this news.
//

Dondu has never ventured outside India. So, i seriously doubt the number of Jews he has met in his lifetime to make a judgment of that sort to answer your questions.

There are many reformed sects of Judaism which accepts Jewish-non jewish weddings (Hatuna). But, such marriages cannot be registered inside Israel. People travel to Cyperus and other European nations to register such marriages and come back to Israel where such registration certificates are recognized.

In United states there is no such problem. Many jewish women and men marry non jewish people and lead a happy life.

Extremely religious people where ever they live, are conservative and do not accept marriages outside their community.

Religious jews even have a ceremony like our பெண்பார்க்கும் படலம், where the bride groom and bride meet with their family and fix marriage on a later date.

வஜ்ரா said...

//
) Many banks/departments under private sector in US are taking reverse to the control of government. So America's basic core ideas is being changed. Please comment.

Regards,
Giri
//

American basic idea never changes. There is a huge cultural aversion to any thing that is related to Socialism in the USA.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது