டோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.
இது ஒரு மீள்பதிவு. புது பதிவாகத்தான் போட நினைத்தேன். ஆனால் போன ஆண்டின் பதிவையே சற்றே இற்றைப்படுத்தினாலே போதும் என மனதுக்கு பட்டதாலேயே இந்த மீள் பதிவு. முதலில் பழைய பதிவைப் பார்ப்போம். பிறகு இற்றைப்படுத்துகிறேன்.
“நகைச்சுவையில்தான் இவர் தூள் கிளப்புவார் என நினைத்திருந்தேன். பலே, மனிதர் அதிமுக செயற்குழு/பொதுக்குழு கூட்டங்களுக்கு தனக்கு அழைப்பு அனுப்பாத விஷயத்தில் முனைந்து சிக்சர்களாகவும் கோல்களாகவும் அடித்து தூள் கிளப்பி விட்டார்.
போன ஜூ.வி. இதழில் எப்படியும் தான் வானகரத்தில் நடக்கவிருந்த பொதுக்குழு மீட்டிங்கிற்க்கு அழைப்பில்லாவிட்டாலும் போகப்போவதாக எஸ்.வி.சேகர் அவர்கள் கூறியதை பற்றி கழுகார் ஒரே வரியில் க்ரிப்டிக்காகக் குறிப்பிட்டு பறந்தார். உண்மையாக அந்த மீட்டிங்க் நடந்த தினத்தில் அவர் செய்த வியூகங்கள் கலகலப்பை உண்டாக்கின என்றால் மிகையாகாது. பொதுக்குழு பபரப்பையும் 'ஹைஜாக்' செய்து எல்லோரும் தன்னை பார்க்கும்படி செய்து விட்டார் 'அன்றைய தினத்தில்'.
பிப்ரவரி 13-ஆம் தேதி வானகரம் ஏரியாவே பரபரப்பில் இருந்த போது எஸ்.வி.சேகர் அவர்கள் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் பொருட்டு கோட்டைக்கு சென்று கொண்டிருக்கிறார் என்ற தகவல் சூடாக வந்தது. ஜெயலலிதா அவர்களை வரவேற்பதற்காக பொதுக்குழு வளாகத்தில் காத்திருந்த செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் ஆகியோரது செல்போன்கள் எல்லாம் அடுத்த நிமிஷம் பிஸியாகி விட்டன. ஆனால் எஸ்.வி.சேகரின் மொபைலோ 'ஸ்விட்ச் ஆஃப்'பில்'.
அது போதாது என்று ஜெயலலிதா அவர்கள் காரில் வந்து இறங்கி, "எஸ்.வி. சேகர் வந்தாரா" என்று கேட்க அடிப்பொடிகள் டரியல் ஆனார்கள். அதே சமயம் கோட்டையில் மொத்த மீடியாவும் எஸ்.வி.சேகரை சூழ்ந்து கொள்ள, தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் வைத்தி அங்கே ஆஜராகி, "அண்ணே, அம்மாவை விட்டு போயிடாதீங்கண்ணே" என்று அவர் காலில் விழுந்து கெஞ்ச, ஒரே ரகளைதான். எம்.நடராஜனின் தம்பி ராமச்சந்திரனும் வந்து சேகரிடம் பேசினார். பிறகு மீடியாவிடம் பேசிய சேகர், "நான் அதிமுகவை விட்டு போக மாட்டேன். நான் வாங்கியிருக்கும் புது காருக்கு ஃபேன்ஸி நம்பர் வாங்கவே வந்தேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பினார். :))))))))
சேகர் வானகரம் வந்தபோது பொதுக்குழு முடிந்துவிட்டது. இருந்தும் ஜெயலலிதாவுக்கு பெரிய வணக்கம் வைத்தார். தனக்கு அழைப்பு அனுப்பவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி விட்டார்.
முழு விவரங்களை காண லேட்டஸ் ஜூனியர் விகடன் இதழ் (20-02-2008) பார்க்கவும்.
எது எப்படியோ என்ன செய்தால் காரியம் நடக்குமோ அதற்கேற்ப செயல்பட்டு சேகர் தான் நினைத்ததை சாதித்து விட்டார்.
இது சம்பந்தமாக சில எண்ணங்கள். அதிமுகவில் ஜெயலலிதாவை மீறி செயல் புரியும் தைரியம் யாருக்கும் இல்லை. ஆக, அழைப்பு அனுப்பாத விஷயம் அவருக்கு தெரியாமல் போயிருக்காது. தன் கீழ் இருப்பவர்களை இம்மாதிரி மோதவிட்டு யார் வெற்றிபெறுகிறார்களோ அவருக்கு ஆதரவளிப்பது பல தலைவர்களின் உத்தியே. எல்லோரையும் திரிசங்கு நிலையில் வைப்பதே ஜெயலலிதா அவர்களின் ஸ்டைல். இம்முறை எஸ்.வி. சேகர் சாதித்திருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் அவர் ஒன்றை மறக்கக் கூடாது. அதாவது ஜெயலலிதா அவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி. எஸ்.வி.சேகர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஜெயலலிதாவை ரொம்பவும் நெருங்கி விடக்கூடாது. தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பதுவே பலன் தரும்.
அதே சமயம் எந்த சொந்த விஷயத்துக்கும் out of the way உதவி கேட்கக்கூடாது. சோ அவர்கள் சிறந்த பத்திரிகையாளராக செயல்படுவதன் சூட்சுமமே அதுதான். தனக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை பாஜக தந்தபோது, தனது சுதந்திரம் பாதிக்கும் வகையில் தான் செயலாற்ற இயலாது என்று கூறியே அவர் அப்பதவியை ஏற்று கொண்டார். கடந்த 38 ஆண்டுகளில் தனது தனிப்பட்ட விஷயங்களில் யாரிடமும் போய் சிபாரிசுக்கு அவர் நின்றதாகத் தெரியவில்லை. அம்மாதிரி அணுகுமுறையை எஸ்.வி. சேகர் அவர்களும் பாவிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்”.
இப்போது இற்றைப்படுத்தலை பார்ப்போம். வெகு நாட்களாகவே சேகரின் அதிமுக வாழ்க்கை நாட்கள் எண்ணப்பட்டன என்பதில் எனக்கு ஐயமே இல்லை. எப்போது அது முடியும் என்பதுதான் கேள்வி. சாதாரணமாக ஜெயலலிதா என்றாலே வெளிக்கு போகும் அதிமுக உறுப்பினர்கள் மத்தியில் எஸ்.வி. சேகர் மிக பளிச்சென்ற விதிவிலக்காக இருந்தார். அதுவே தலைவிக்கு பொறுக்கவில்லை என்பது க்ளியராகத் தெரிகிறது. மகாபாரதத்தில் கூறப்படும் கணிக நீதியை ஏறக்குறைய மாற்றமேயின்றி அப்படியே பாவிப்பவ்ரகள் நமது அரசியல் தலைவர்கள். அந்த நீதியின் சில அம்சங்கள் இதோ.
தண்டனை வழங்க எப்போதும் தயாராக இருக்கும் அரசனைக் கண்டு குடிமக்கள் அஞ்சுவார்கள். அதே போல எதிரிகளை ஒழிப்பதில் தாட்சண்யமேயின்றி நடந்து கொள்ள வேண்டும். எதிரி முழுமையாக அழிக்கப்படவேண்டும். எதிரி மிக பலவானாக இருந்தால் சமயம் பார்த்து அவனை கொல்ல வேண்டும். அதற்கு சாம, தான, பேத, தண்ட முறைகளை முறையாக பிரயோகிக்க வேண்டும். அம்முறையில் எதிரியை அழித்த பிறகு, அவர்கள் சாவுக்கு வருந்துவது போன்ற பாவனை செய்ய வேண்டும். அம்மாதிரி செய்தால் எதிரியின் நண்பர்கள் இவன் பக்கமே இருந்து விடுவார்கள். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் எதிரிகள் என்பது உறவினர்களையும் சேர்த்து, உள் எதிரிகளையும் குறிக்கும். ஆக மனிதாபிமானம் என்பதை சுத்தமாக கண்பித்தலே கூடாது. இந்த ரீதியிலேயே இந்த கணிக நீதி கூறிக்கொண்டு செல்கிறது.
மீண்டும் சேகர் விஷயத்துக்கு வருவோம். அவர் இத்தனை அவமானங்களை சகித்து கொண்டு கட்சியில் எப்படி தொடர்ந்தார் என்பது பலருக்கு புரியாதிருந்தது. விஷயம் என்னவென்றால், அவராக ராஜினாமா செய்திருந்தால் அவரது எம்.எல்.ஏ. பதவி கட்சித் தாவல் தடுப்பு சட்டப்படி பறிபோயிருக்கும். இப்போது கட்சியே அவரை நீக்கியதால் அவர் கட்சித் தாவியராக கருதப்பட மாட்டார். ஆகவே அவரது பதவி அப்படியே இருக்கும். இனிமேல் அவர் சட்டசபையில் பேச தடை ஏதும் இருக்கக் கூடாது.
அதிமுக வரலாற்றில் சேகர் ஒரு மைல்கல். சாதாரணமாக அதிருப்தியாளர்கள் தலைவியின் காலில் விழுவதுதான் நடந்து வந்துள்ளது. இவர் வித்தியாசமாக நடந்து கொண்டிருக்கிறார் இதுவரைக்கும். இனிமேலும் அப்படித்தான் நடப்பார் என கருதுகிறேன்.
இந்தத் தருணத்தில் திருநாவுக்கரசர் பற்றி பேசாமல் இருக்கவியலாது. தனக்கென ஒரு ஃபால்லோவிங் வைத்திருந்த அவர் தேவையின்றி ஜெயிடம் பலமுறை சரணடைந்தது என் மனதை உறுத்துகிறது. இப்போதும் கூட அவர் பாஜகவை விட்டு அதிமுகவுக்கு திரும்பலாமா என்ற யோசனையில் இருப்பதாக செய்திகளில் படித்தேன். அவ்வாறு செய்தால் அவர் இருக்கும் சுயமரியாதையை இழப்பார் என்பதே நிஜம்.
எது எப்படியானால் என்ன. Sekar has won the war of nerves. ஆகவே மீண்டும் கூறுவேன், சபாஷ் எஸ்.வி. சேகர்.
கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?
அனானி (32 கேள்விக்காரர்) 1. தாய், தாரம் இவர்களில் யாருடைய அன்பு நமக்கு அதிகம்? பதில்: ஒரு ராஜ்கிரண் படத்தில் அவர் சொல்லும் டயலாக், “ஒரு மனுஷனுக்கு தாய் ரொம்ப முக்கியம். ஆனால் அவர் எப்போதுமே அவனுடன் இருக்க முடியாது என்பதலேயே அவனுக்கு தாரம் வருகிறாள்”.
2. இக்காலத்தில் பெண்களுக்கு அதிக செல்லம் கொடுப்பது சரியா? பதில்: பெண்களுக்கு அதிக செல்லம் கொடுத்தால் மனைவியே கோபிக்கிறாளே. என்ன செய்வது? இங்கு நான் பெண்கள் எனக் குறிப்பிடுவது மகள்களைத்தான். நீங்கள் என்னவென்று நினைத்தீர்கள்?
3. மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன பெரிய வித்தியாசம்? பதில்: மனிதனிடம் மட்டும் உள்ள ஆறாவது அறிவு.
4. மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன ஒற்றுமை? பதில்: மீதி ஐந்து அறிவுகள்.
5. முழுநேரச் செய்திப் பிரிவு டீவிகளில் எது பெஸ்ட்? பதில்: எனக்கு தெரிந்து பி.பி.சி. ஐ மிஞ்சக் கூடிய நியூஸ் சேனல் இல்லை.
6. முழுநேரச் செய்திப் பிரிவு டீவிகளில் எது ஒர்ஸ்ட்? பதில்: அப்படி என்று சொல்ல இயலாது.
7. துன்பத்தில் பெரிய துன்பம்? பதில்: ஒருவன் படும் துன்பத்தை ஒருத்தரும் கண்டுகொள்ளாமல் போவதுதான்.
8. இன்பத்தில் பெரிய இன்பம்? பதில்: இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி, வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
9. பேரின்பம் எது? பதில்: சிற்றின்பம் என்பது நிஜமாகவே சிறிய இன்பம்தான் என உணரமுடியும் நிலை.
10. தாய், தாரம் இவர்களில் யாருடைய அன்பு நமக்கு அதிகம்? பதில்: அந்தந்த காலத்தை பொருத்தது. ராஜ் கிரணே மேலே சொன்னதுபோலத்தான்.
11. நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்று எண்ணுபவர்கள் பற்றி? பதில்: அவர்களை வெல்தல் யார்க்கும் அரிதாம்.
12. தியாகராஜ பாகவதர், என்.எஸ் கிருஷ்ணன, இவர்களின் வீழ்ச்சி யாரால், எதனால் ஏற்பட்டது? உண்மை என்ன? பதில்: ஒரு இன்ஸ்பெக்டருக்கு அவர்கள் சம்திங் தர மறுத்ததில் அவர் கேசில் இவர்களை இழுத்து விட்டதாக நான் படித்துள்ளேன். பிரீவி கவுன்சிலில் இந்த இருவருக்கும் எதிரான கேசில் சரியான ஆதாரங்கள் இல்லாதது குறித்து அவர்கள் வியப்பும் தெரிவித்ததாகக் கேள்விப்பட்டேன். இங்கு அவர்கள் முதலில் குற்றவாளி கூண்டில் நின்றபோது பொதுமக்களின் பிரதிநிதிகளை கொண்ட ஜூரி சிஸ்டம் அமுலில் இருந்தது.
13. மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன ஒற்றுமை? பதில்: ஏற்கனவே பதில் கூறியாகி விட்டது.
14. உலகில் நிம்மதியாக இருப்பவர்களில் யாராவது குறிப்பிடுங்களேன்? பதில்: தாயின் கருவிலிருக்கும் குழந்தைக்குத்தான் அதிக பாதுகாப்பு. மேலும் அதற்கென்று பயங்கள் இன்னும் டெவலப் ஆகவில்லை. ஆகவே அக்குழந்தைகள்தான் அதிக நிம்மதியானவர்கள்.
15. கோயிலே கதியென்று இருக்கும் பெண்களைப் பற்றி உங்கள் விமர்சனம்? பதில்: அரசனை நம்பி புருஷனை கைவிட்டது போல என்பார்கள். குழந்தை கொடுக்க வேண்டிய கணவனை சார்ந்திராது வெறும் அரச மரத்தை சுற்றினால் குழந்தை வந்து விடுமா என்றும் அதற்கு பொருள் உண்டு என ஒரு கோஷ்டி சொல்லித் திரிகிறது.
16. கம்யூனிஸ்டுகள் அணுஒப்பந்தத்தில் இப்போதைய நிலை? பதில்: அவர்கள் தற்சமயம் இந்திய அரசியலில் முந்தைய செல்வாக்கோடு இல்லைதானே.
17. சென்னையில் குடியிருப்பு என்றாலே அது குப்பைக்கூளங்களின் மேடு என்றாகி வருவது பற்றி? பதில்: தத்தம் வீடுகள் மட்டும் சுத்தமாக இருக்க வேண்டும், ரோடுகள் நாசமாகப் போகட்டும் என்ற அசட்டை இருக்கும் எந்த நகரத்தையும் காப்பாற்ற இயலாது.
18. பொதுவாய் இன்று காதலர்கள் பெருகிவிட்டார்களே? பதில்: ஜனத்தொகை பெருக்கத்தில் தவிர்க்க முடியாத பக்க விளைவுதான் அது.
19. நிறைவேறாத சின்ன ஆசை ஏதும்? பதில்: எனது நிறைவேறாத ஒரு ஆசை சக்கரம் ஓட்டுவது. பழைய சைக்கிள் சக்கரத்தின் ரிம்மை வைத்து என் நண்பர்கள் அலட்டுவார்கள். அந்த ரிம் க்ரூவில் ஒரு குச்சியை கொடுத்து தெருத் தெருவாக ஓடும் ஒரு சிறுவனின் மகிழ்ச்சியை முன்னால் நம்ம தல அஜீத் கூட ரேஸ் காரில் பெற முடியாது என்பது என் உறுதியான எண்ணம். இது எனக்கு ஒருபோதும் கிடைத்ததில்லை. என் அப்பாவிடம் கேட்டும் கிடைக்கவில்லை. இப்போது ரிம் கிடைக்கும், ஆனால் அதை வைத்துக் கொண்டு ஓடினால் பக்கத்து, எதிர் வீட்டு மாமாக்கள் "என்ன ராகவையங்கார் ஸ்வாமி, இளமை திரும்புகிறதா" என்று கோட்டா பண்ணுவார்களே!
என்னை மாதிரி பலருக்கும் இம்மாதிரி அல்ப ஆசைகள் உண்டு என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. சருக்கு மரத்தில் விளையாட ஆசைப்படாதவரும் உண்டோ? ஆனால், வருந்த வேண்டாம். நம்மைப் போன்றவர்களுக்குத்தான் கணினி விளையாட்டுகள் வந்துள்ளனவே.
20. மனைவியை இழந்த ஆண்களைவிடக் கணவனை இழந்த பெண்கள் மனநிம்மதியோடு இருக்கிறார்கள் என்கிற சமீபத்திய ஆய்வு பற்றி? பதில்: உண்மைதான். ஆணை விட பெண்ணுக்கு மனோபலம் அதிகம்.
21. வைகோ எப்படியிருக்கிறார்? பதில்: யாருக்கு தெரியும். அவர் இர்ரெலெவண்ட் ஆகி வருகிறார்.
22. ராமதாஸின் அடுத்த மூவ்? பதில்: 2011-க்கு இன்னும் காலம் இருக்கிறதே. அதற்கான திட்டம் வகுத்தாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
23. ஒகேனக்கல் திட்டம் என்னாச்சு? பதில்: கிணற்றில் இட்ட கல் போல இருக்கிறது.
24. விஷமாய் விலைவாசி உயர்வுகளைப் பற்றி? பதில்: அதுதான் புரியவில்லை. என்னவோ பணவீக்கம் மைனசுக்கு போய் விட்டது என ஒருவர் கூறுகிறார். அது ரொம்ப தப்பாச்சேன்னு இன்னொருத்தர் சொல்லறார். ஆனால் துவரம் பருப்பு விலை திடீரென கிலோ 100 ரூபாய் என்ற கணக்கில் சென்றது என்ன காந்தி கணக்கோ தெரியவில்லை.
விலைவாசி உயர்வு என்பது எப்போதுமே இருந்து வருவதுதான். ஆனால் சமீபத்தில் 1974-ல் சில மாதங்கள் gallopping inflation என்று கூறும் அளவுக்கு விலைகள் உயர்ந்தன. அதே போல இரண்டாம் உலக மகா யுத்தம் முடிந்ததும் விலைகள் கண்மூடித்தனமாக உயர்ந்தன. நான் என்ன நினைக்கிறேன் என்றால், இது ஒன்றும் தட்டையாகப் பார்க்கக் கூடிய விஷயம் இல்லை. அதற்கு மேல் கூற எனக்கு பொருளாதார அறிவு லேது.
25. அடுத்து அ.இ.அ.தி.மு.க., ஆட்சிக்கு வருவது சாத்தியமா? பதில்: அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
26. இன்றைய காலகட்டத்தில் பத்திரிகை ஆரம்பித்தால்? பதில்: பயங்கரமான அளவில் போட்டிகள் நிறைந்தது பத்திரிகைத் தொழில். அவற்றை ஜெயிக்க முடிந்தால் தொடங்குங்கள் பத்திரிகை.
27. கலைஞரின் சமீபத்திய பேச்சில் தங்களைக் கவாந்த பேச்சு? பதில்: அவரது அலட்டல் தமிழ் எனக்கு எப்போதுமே பிடிக்காது.
28. கலைஞரின் சமீபத்திய பேச்சில் தங்களைக் வெறுப்பேற்றிய பேச்சு? பதில்: சில நிமிடங்கள் உண்ணாவிரதத்திற்கு பிறகு ஈழத்தில் அமைதி திரும்ப எல்லாம் செய்து விட்ட தோரணையில் பேசியது.
29. மணல் வியாபாரத்தில் தி.மு.க.வின் நிலைப்பாடு பற்றி? பதில்: திமுக அதிமுக இரண்டுமே மணல் கொள்ளை அடிப்பவை. ஆளும் கட்சியில் இருந்தால் கொள்ளையை ஆதரிப்பது, எதிர்க்கட்சியில் இருந்தால் குய்யோ முறையோ என கதறுவது. சில மணல் கொள்ளையர்கள் வீட்டில் இரண்டு கட்சிகளிலும் உறுப்பினர்கள் இருப்பார்கள். அக்குடும்பத்தினர் நிரந்தர கொள்ளையர்கள்.
30. நடுத்தரவாசிகள் நிறைய செலவு செய்வதாய் வரும் செய்திகள் பற்றி? பதில்: இரண்டாம் நம்பர் அக்கவுண்ட் உள்ளவர்களாக இருக்கும்.
31. பெட்ரோல் விலை குறைக்கப்படுமா? பதில்: இப்போதைக்கு படாது. அடுத்த மத்திய தேர்தல் வர இன்னும் சமயம் உள்ளது.
32. திருவள்ளுவர் சிலை திறப்பு கர்நாடகத்தில் வெற்றி யாருக்கு? பதில்: வெற்றி யாருக்கென தெரியாது. ஆனால் இழப்பு திருவள்ளுவருக்கும் சர்வக்ஞருக்கும். கர்நாடகா மற்றும் த்மிழ்நாட்டுக்கிடையே பிரச்சினை வந்தால் இவர்கள் சிலைகள்தான் அவமதிப்பு பெறும். தேவையா இதெல்லாம்?
அனானி (25.07.2009 இரவு 08.35-க்கு கேட்டவர்)(இவரும் 32 கேள்விகள் கேட்டுள்ளார்!) 1. மண்ணாசை பிடித்தவனின் முடிவு? பதில்: ஆறடி மண்.
4. சுப்பிரமணிய சுவாமியின் லேட்டஸ்ட் மூவ் என்ன? பதில்: அது அவருக்கே தெரியாது? நான் மட்டும் எப்படி அதை அறியவியலும்?
5. இதில் எது சூப்பர் 20-20 ஓவர் போட்டி- ஒரு நாள் போட்டி பதில்: இப்பல்லாம் ரெண்டுமே பிடிக்கவில்லை. ஐபிஎல்லில் நடனம் ஆடும் பெண்களை பார்த்த பிறகு அது இன்றி வெறுமனே விளையாட்டை பார்ப்பதில் என்ன மஜா இருக்கிறது?
6. தி.மு.க. ஆட்சி -உங்கள் விமர்சனம்? பதில்: குடும்பக் கொள்ளை
7. ஸ்டாலின் சட்டமன்ற செயல்பாடு பற்றி? பதில்: திருப்தியாகவே உள்ளது
8. சேமிப்பதில் அக்கறை இல்லாதவ்ர் நிலை? பதில்: கஷ்ட காலங்களில் நண்பர்கள் அவரைக் கண்டாலே ஓடுவார்கள். கடன் கேட்டு தொல்லை செய்வாரே.
9. உங்கள் நிலையில் -மனைவி, அம்மா இவர்களில் யாருக்கு அதிகமாகப் பயப்பட வேண்டும்? பதில்: ஏன் பயப்பட வேண்டும்? இருவருமே உங்கள நலனுக்காகத்தானே செயல்படுகின்றனர்?
10. தமிழக அமைச்சர்களுக்குப் பிடிக்காத அரசு ஊழியர்கள்? பதில்: தேர்தல் டியூட்டி சமயங்களில் நேர்மையாக நடந்து கொள்பவர்கள். இது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் அரசுகளுக்கும் பொருந்தும்.
14. கண்ணப்பனுக்கு மட்டும் ஸ்பெசல் மரியாதை? பதில்: அவரால் ஏதேனும் ஆதாயம் என்றிருந்தால் மரியாதை தானே வருகிறது.
15. கொ.மு.கழகம் தொண்டமுத்தூரில் வெற்றி பெற்றால்? பதில்: அவர்களுக்கு ஒரு எம்.எல்.ஏ. கிடைப்பார். வரும் அசெம்பிளி தேர்தலில் அவர்களுடன் கூட்டணி அமைக்க இரு முகாம்களிலிருந்தும் போட்டி இருக்கும்.
16. வி.காந்த் 2-3 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு? பதில்: பிரகாசமாகவே இருக்கும், அதிமுக தனது முடிவிலிருந்து மாறாமல் இருந்தால்.
17. கம்யூனிஸ்டுகளின் இரட்டை வேடம் இடைதேர்தலில்? பதில்: இரட்டை வேடம் போடுவது அவர்கள் மட்டுமில்லையே.
18. திரை நட்சத்திரங்களின் அரசியலில் திடீர் பிரவேசம்? பதில்: தாங்களும் ஒரு எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., விஜயகாந்த ஆகலாமோ என்ற நப்பாசை. சிவஜி, அமிதாப் பச்சன், பாக்கியராஜ், சரத்குமார் ஆகியோரின் கதி நேராமலிருந்தால் சரி.
19. கனிமொழிக்கு மத்திய அமைச்சர் ஆகும் யோகம் அடிக்குமா? பதில்: இப்போதைக்கு அவ்வாறு நடக்கும் எனத் தோன்றவில்லை.
20. தற்சமயம் அமெரிக்காவில் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்பு எப்படி? பதில்: ஒரு நாட்டில் பொருளாதார நிலை மோசமானால் அங்குள்ள வெளிநாட்டவருக்குத்தான் முதலில் சங்கு ஊதப்படும். ஆகவே அமெரிக்காவின் பொருளாதார நிலை நல்லபடியாக வேண்டும் என்பதே அங்கு வாழும் இந்தியரது பிரார்த்தனையாக இருக்க வேண்டும்.
21. அகில இந்திய அரசியல் - தமிழக அரசியல் ஒரு ஒப்பீடு? பதில்: முக்கிய வேற்றுமை மாற்று கட்சியினரை பார்க்கும்போது முகம் மலர பேசுவதுதான். அந்த விஷயத்தில் தமிழக அரசியலில் நாகரிகம் சுத்தமாகவே கிடையாது.
22. சோனியா-கலைஞர் நட்பால் மிகுதியாய் சிரமப்படும் நபர் யார்? பதில்: தமிழக காங்கிரசார்.
23. ஆண்/பெண் இவர்களின் குரலை வைத்து என்ன சொல்ல முடியும்? பதில்: அந்தந்த பாலினருக்கு அந்தந்த குரல் என இருப்பதே கேட்க நன்றாக இருக்கும். மாறி இருந்தால் காமெடிதான்.
24. பொதுவாய் நேர்மை, நாணயம்-இருக்கிறதா? பதில்: இருக்கிறது. ஏமாற்று பேர்வழிகள் தமது செயல்பாடுகளை மற்றவர் நேர்மை மற்றும் நாணயத்தை நம்பித்தான் வைத்து கொள்கின்றனர் என்பதை நான் இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.
26. வர்த்தக சூதாடிகளின் கைவரிசையினால் இனி என்னவாகும்? பதில்: ஏற்கனவே சப்ளை டிமாண்ட் நிலையில் தெளிவு இல்லாதிருந்தால் சூதாடிகளின் செயல்பாட்டால் தீமைதான் விளையும்.
27. உலகின் மிகப் பெரிய பணக்காரர் இப்போது யார்?-உங்கள் விமர்சனம்? பதில்: எனக்கு தெரிந்து பில்கேட்ஸ். அவர் அந்த நிலைக்கு வந்தது தனது சொந்த முயற்சியால்தான். அப்பன் சேர்த்து வச்ச சொத்து மூலம் அல்ல. இது மன நிறைவை அளிக்கிறது.
28. வரும் கொலை, கொள்ளைச் செய்திகளை பார்த்தால்? பதில்: எப்போதும் போலத்தான் கொலை, கொள்ளை நடக்கின்றன. அவை உடனுக்குடன் செய்திகளில் வருவதாலேயே நமக்கு அவை அதிகரித்துள்ளது போன்ற தோற்றம் வருகிறது.
29. வரதட்சணை ஒழிப்பின் தற்போதைய நிலை என்ன? பதில்: பிரான்சில் வரதட்சிணை என்பது சட்டபூர்வமாகவே அங்கீகரிக்கப்பட்ட காலம் இருந்தது. அதற்காக பெண்வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் ஒப்பந்தமே போடுவார்கள். பெண்களுக்கு சொத்துரிமை இல்லாதபோது வேண்டுமானால் இது சரிப்பட்டிருக்கலாம். முள்ளின் மேல் துணியை போட்ட நிலையில் 498ஏ செக்ஷன்கள் முரட்டுத்தனமாக அப்ளை செய்யப்பட்டு பல குடும்பங்கள் நாசமாகின்றன. வச்சா குடுமி செரச்சா மொட்டை என்ற நிலையிலிருந்து அரசு மாற வேண்டும்.
30. எய்ட்ஸ் பற்றிய பிரச்சாரம்? பதில்: இந்த உரலுக்கு சென்று பார்க்கவும்.
31. சாலை விபத்துகள் அதிகமாவது பற்றி? பதில்: ஒவ்வோர் ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்காகிறது. சாலைகள் அதே அளவில் இருக்கின்றன. வேறென்ன நடக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?
32. கடவுள் (தென்திருப்பேரை பெருமாள்) உங்கள் முன் தோன்றினால்? பதில்: அப்பய்ய தீட்சிதர் பற்றி ஒரு நிகழ்வை கூறுவார்கள்.
ஒரு சமயம் தமது சிவபக்தி நிலைக்குமா என்று கவலை கொண்ட ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் தன்னையே பரீக்ஷை செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டார். அந்திய காலத்தில் தனது சிவபக்தி எப்படி இருக்குமோ என்று எண்ணி கனகபல ரஸத்தை (இது தமிழில் ஊமத்தங்காய் சாறு என்று சொல்லப்படும்) உட்கொள்ள எண்ணி, தனது மாணவர்களிடம் இந்த பல ரஸத்தைச் சாப்பிட்ட பிறகு தான் பேசுவதையெல்லாம் எழுதி வைக்க வேண்டுமென்றும், ஒரு குறிப்பிட்ட நேரம் கழிந்ததும் மாற்று மருந்தைத் தனக்குக் கொடுக்க வேண்டும் என்றும் ஏற்பாடு செய்து அந்த ஊமத்தங்காய்ச் சாற்றினை உட்கொண்டார்.
சிறிது நேரத்திற்கெல்லாம் அவருக்கு உன்மத்த நிலை (சித்தஸ்வாதீனமற்ற நிலை) ஏற்பட்டது. அந்த நிலையில் அவர் கூறியவற்றையெல்லாம் சீடர்கள் எழுதி வைத்தார்கள். குறிப்பிட்ட நேரம் கடந்ததும், மாற்று மருந்தைச் சீடர்கள் கொடுக்க, தமது பிரக்ஞை திரும்பப் பெற்றார். சித்தஸ்வாதீனமற்ற நிலையில் தாம் கூறியவற்றையெல்லாம் சீடர்கள் எழுதி வைத்திருந்ததைப் படித்துப் பார்த்து தனக்குச் சிவபக்தி நிலைத்தது என்று எண்ணி பரமானந்த நிலையை அடைந்தார். உன்மத்த நிலையில் அவர் பாடிய ஐம்பது சுலோகங்களும் ‘உன்மத்த பஞ்சாசத்’ அல்லது ‘ஆத்மார்ப்பணஸ்துதி’ என்று ஒரு தனி நூலாக விளங்குகின்றது. இதில் உள்ள ஒவ்வொரு சுலோகமும் உள்ளத்தை உருக்கும் சிவபக்திப் பிரவாஹமாகும்.
அந்த மகோன்னத பக்தருக்கு கிடைத்த அருளில் கோடியில் ஒரு பங்காவது எனக்கு அருளுமாறு என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை கேட்டு கொள்வேன்.
எம். கண்ணன் 1. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஓடும் ஆட்டோக்கள் பஜாஜ் கம்பெனியுடையதுதானாமே ? ஏன் வேறு எந்த கம்பெனியும் இந்த ஆட்டோ மார்க்கெட்டில் புகவில்லை அல்லது புகமுடியவில்லை? பதில்: அப்படியெல்லாம் இல்லையே. மூன்று கம்பெனிகள் களத்தில் உள்ளன. அவை பஜாஜ், மஹீந்திரா & மஹீந்திரா மற்றும் இத்தாலியின் பியாஜ்ஜோ. என்ன, பஜாஜின் மார்க்கெட் ஷேர் அதிகம்.
2. ஹமாரா பஜாஜ் என இந்தியா முழுவதும் பிரபலமான பஜாஜ் சேடக் ஸ்கூட்டர் எத்தனையோ குடும்பங்களுக்கு வாழ்வின் ஓர் அங்கம். ஆனால் தற்போது சேடக் ஸ்கூட்டர்கள் நிறுத்தப்பட்டுவிட்டன போலுள்ளதே? எல்லோரும் 100சிசி பைக்குகள் (மைலேஜ் மற்றும் ஸ்டைல்) வாங்க ஆரம்பித்து விட்டதாலா? பதில்: அதெல்லாம் பஜாஜின் மார்க்கெடிங் யுக்தியில் வருகிறது. இப்போதைய மாடல் Bajaj Kristal DTSi என அறிகிறேன். பை தி வே எனக்கும் டூவீலர்களுக்கும் ரொம்ப தூரம் (சைக்கிளை டூ வீலர் என ஒத்து கொள்ள மாட்டார்கள்தானே)
3. டாடா நாநோ ஹிட் ஆகிவிட்டால், பஜாஜ் ஆட்டோவும் மறைந்துவிடுமா? பதில்: எதுவும் எதையும் மறையச் செய்யாது. மக்களுக்கு தேவையானது நிற்கும், மற்றவை நிற்காது. ஆனால் உற்பத்தியாளரே உற்பத்தியை நிறுத்தினால் அது வேறு விஷயம்.
4. பாலகுமாரன் 'உடையார்' நாவலில் ராஜராஜ 'தேவர்' என்கிறாரே ? 'தேவர்' என்பது ராஜராஜனின் ஜாதியா இல்லை படித்து வாங்கின பட்டமா? (இல்லை தஞ்சை மாவட்டதில் அதிகமுள்ள 'கள்ளர்' 'அகமுடையர்' போன்ற (உபிச குடும்பத்து தேவர் ஜாதி) தேவர் ஜாதியைச் சேர்ந்தவரா? பதில்: ராஜராஜ சோழன் எந்த ஜாதியாக இருந்தால் என்ன? அவன் சிறந்த மன்னன் என்பது நிஜம்தானே. மேலும் இப்போது அதை அழுத்தந்திருத்தமாக கூறுதல் கடினமே. அமைதிப்படை சத்தியராஜ் மாதிரி இத்தனை ஆண்டுகளுக்கு பின்னே ஆட்சியில் அமர்ந்த சோழகுலத்தை சார்ந்த நாகராஜ சோழன் என்று வேண்டுமானால் யாராவது கூறிக் கொள்வார்கள். யார் கண்டார்கள்.
5. நமீதாவின் 'இந்திர விழா' பார்த்துவிட்டீரா? இல்லை வேலு பிரபாகரனின் காதல் கதை? எது சூப்பர்? இல்லை ரெண்டுமே மொக்கையா? பதில்: இரண்டையுமே பார்த்ததில்லைதான். ஆனால் நமீதாதான் பார்க்க சூப்பர். ஆனால் வேலு பிரபாகரனை அவ்வாறு யாராவது கூறவியலுமா?
6. கம்பராமாயணத்தில் உங்களுக்குப் பிடித்த பகுதிகள் எது? ஏன்? சில பாடல்களுடன் எடுத்துக் காட்டினால் நன்று. பதில்: இதானே வாணாங்கறது. மு.மு. இஸ்மாயிலுக்கு போக வேண்டிய கேள்விகளை அவர் இல்லை எனபதால் எனக்கு அனுப்பலாமா?
7. நடிகர் சிவகுமாரின் கம்பராமாயண பேச்சுரை கேட்டதுண்டா (ஆடியோவில்)? பதில்: கேட்டதில்லை.ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன். தூள் என்று கூறினார்கள்.
8. குறுவை சாகுபடி செய்ய இந்த முறை பருவ மழை கைகொடுக்கவில்லையே? வெறும் சம்பா சாகுபடி மட்டும் தானா? அதுவும் வடகிழக்குப் பருவமழையில் மூழ்காமல் இருக்கவேண்டுமே? தமிழக அரசும் மத்திய உர அமைச்சரும் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதாக தெரியவில்லையே ? பருப்பு கிலோ ரூ.100 போல அரிசியும் ரூ.100 ஆகிவிடுமா? பதில்: நமக்கே இது தெரிகிறபோது அவர்களுக்கு தெரியாமலா இருக்கும்? அவர்களும் கவலைப்ப்டுவார்களாக இருக்கும். ஏதாவது நல்லது செய்வார்களா என பார்க்க வேண்டியதுதான்.
9. ஈரானில் நடந்த தேர்தலில் அஹ்மதிநெஜாத் (உச்சரிப்பு சரியா?) வென்றதற்கும் திருமங்கலம், சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் வெற்றிகளுக்கும் வித்தியாசம் இல்லைதானே? பதில்: பெரிய வித்தியாசம் ஒன்று உண்டு. நம்மூரில் தேர்தல் தில்லுமுல்லு பற்றி எழுதலாம், பேசலாம். அதனால் எல்லாம் அவ்வாறு எழுதுபவர்களுக்கு பாதிப்பில்லை. ஆனால் இரானில் அவ்வாறு செய்தால், எழுதியவர் தலை தப்பிக்காது. அவ்வளவே.
10. தினமும் இரவில் என்டிடிவி, ஐபிஎன், டைம்ஸ்நவ் என ஓபி வேன்கள் மாறி மாறி பேட்டி எடுப்பதில் எந்த சானலில் யாரிடம் பேசுகிறோம் என்பதில் குழப்பத்தில் பிரணாய் ராயை அர்நாப் கோஸ்வாமி என்று பாஜகவின் ரவிஷங்கர் பிரசாத் அழைத்தாலும் பிரணாய் பெருந்தன்மையுடன் எடுத்துக்கொண்டுள்ளாரே? பதில்: பலருக்கு பல முறை அம்மாதிரி அமைந்து விடுகிறது. ராஜீவ் காந்தி அவர்களே 1985 ஜனவரி 26 அன்று பேசும்போது ஒருமுறை வாய் தவறி அதை சுதந்திர தினம் என குறிப்பிட்டார். எகிப்து அதிபர் நாசர் ஒரு நாட்டிற்கு சென்ற போது (நாட்டின் பெயர் மறந்து விட்டது) எகிப்து தேசீய கீதம் ஒலிக்கப்பட்டது. எல்லாம் சரிதான், ஆனால் அந்த தேசீய கீதம் எகிப்து மன்னர் ஃபரூக் காலத்தை சேர்ந்தது. ஃபரூக் பதவியிலிருந்து நீக்கப்பட்டதும் அந்த தேசீய கீதமும் ஒழிந்தது. அந்த தேசிய கீதத்தைத்தான் வாசித்தனர் அந்த நாட்டின் பேண்ட் குழுவினர். நாசர் வெறுமனே புன்முறுவல் பூத்தார். அவ்வளவே. இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகக்கூடாது.
ஒரு முக்கிய அறிவிப்பு. சாதாரணமாக கையிருப்பில் ஒரு கேள்வியையும் மிச்சம் வைக்காமல் பதிலளித்து விடுவதுதான் வழக்கம். இதை zero budgetting என்பதோடு சற்றே ஒப்பிட்டு கொள்ளலாம். அதாவது கேள்விகள் வந்தால்தான் பதிவு என்ற நிலை. கேள்விகளே வராவிட்டால் அந்த வாரத்துக்கான பதில்கள் பதிவு கிடையாது. ஒரே ஒரு முறை அம்மாதிரியும் ஆகிவிட்டிருக்கிறது. சில முறைகள் நான்கைந்து கேள்விகளே இருந்தன.
ஆனால் கடந்த சில பதிவுகளில் அவற்றின் நீளம் மிக அதிகமாக போயிற்று. சில கேள்விகள் செட் புதன் இரவுக்கெல்லாம் வர ஆரம்பித்தன. ஆகவே இம்முறை கேள்விகளை சுமார் 60-70-க்கு கட்டுப்படுத்தினேன். அடுத்த கேள்விகள் அடுத்த வாரத்தின் பதிவின் வரைவுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டன. இப்போது அங்கு 24 கேள்விகள் உள்ளன. இது உங்கள் தகவலுக்கு மட்டுமே.
ஆகவே பிழைத்து கிடந்தால் நிச்சயம் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
சவுதி அரேபியாவில் பன்றிக் காய்ச்சல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது கவலை அளிக்கும் விஷயம். ஆகவே இம்முறை ஹஜ் யாத்திரை இந்த காய்ச்சல் அபாயத்தால் பாதிக்கப்படாமல் இருக்க சவுதி அரசு எல்லா பாதுகாப்பு முயற்சிகளையும் எடுத்து வருகிறது. ஹஜ் மட்டுமல்ல, இம்மாதிரி மக்கள் கூட்டமாக வரக்கூடிய கும்பமேளா போன்ற எந்த நிகழ்வுகளுக்குமே இந்த எச்சரிக்கை பொருந்தும்.
அங்கு உண்மை நிலையறிய நான் காலையிலிருந்து நண்பர் சுவனப்பிரியனை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறேன். அவர் லைன் கிடைக்க மாட்டேன் என்கிறது.
ஹஜ் நல்லபடியாக நடந்து, அவரவர் தத்தம் நாட்டுக்கு பத்திரமாக திரும்பிச் செல்ல எல்லாம் வல்ல அல்லா அருள்புரியட்டும்.
நான் தில்லியில் இருந்தபோது புலவர் கீரன் அவர்களது விரிவுரைகளைக் கேட்டு மகிழ்ந்ததுண்டு. அவர் பாட்டுக்கு வருவார். சுருக்கமாக ஒரு பிரார்த்தனை ஸ்லோகம் சொல்வார். விறுவிறென கதையை ஆரம்பித்து விடுவார். பல பாடல்களை மூச்சுவிடாது பாடுவார். அவற்றின் பொருளை அருமையாகக் கூறுவார். அவ்வப்போது சமகால அரசியல் நிகழ்வுகளை இழுத்து விடுவார்.
உதாரணத்துக்கு திருமந்திரத்தின் இப்பாடலை அபிநயத்துடன் பாடி அப்ளாஸ் பெறுவார். அப்பாடலை நான் எனது இப்பதிவில் இட்டுள்ளேன்.
"இப்பதான் வந்தாரு, நல்லா சாப்பிட்டுவிட்டு எல்லாத்துக்கிட்டேயும் நல்லா பேசிக்கிட்டிருந்தாரு, இலேசா நெஞ்சை வலிக்குதுன்னாரு - படுத்தாரு அப்படியே போய்ட்டாரு" என்று நாம் அடிக்கடி கேள்விப்படுகிற நிகழ்வைச் சொல்கிற பாடல் இது. இப்போதெல்லாம் இதை massive heart attack எனச் சொல்கிறோம்”.
இது எல்லாவற்றையும் தூக்கி விழுங்கக்கூடிய ஒரு விஷயம்தான் அவர் குறிப்பிட்ட திவ்ய பிரபந்த பாசுர இராமாயணம். நாலாயிர திவ்யபிரபந்தங்களில் பல பாடல்களில் ராமாயணம் பற்றி ஓரிரு அடிகள் நடுநடுவே வரும். அவை எல்லாவாற்றையும் கோர்த்து, அழகாக வரிசைப்படுத்தினார் வியாக்கியான சக்ரவர்த்தி என்று பெயர் பெற்ற பெரியவாச்சான் பிள்ளை என்ற வைணவ ஆச்சார்யர். அந்த ராமாயணத்தைத்தான் “திவ்ய பிரபந்த பாசுர இராமாயணம்” என்று வைணவர்கள் கொண்டாடுகிறார்கள். இராமயண காவியம் தமிழரது வாழ்வோடு எத்தனை அளவுக்கு ஊடுருவியிருக்கிறது என்பது இதிலிருந்து புலனாகிறது. அந்தத் தொகுப்பை கீழே தந்துள்ளேன். ஒவ்வொரு வரியும் வெவ்வேறு ஆழ்வார்கள் அருளித் தந்த பாசுரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இக்காலத்தில் கூட கணினியில் இதற்கென அல்காரிதம் போட்டு அவற்றை எடுக்க முடிந்திருக்கலாம் என்றாலும், ராமாயண கதைப்போக்கின்படி அவற்றை அடுக்க எந்த அல்காரிதம் போடுவதாம். அதுவும் பெரியவாச்சான் பிள்ளை காலத்தில் கணினி எல்லாம் ஏது?
இப்போது திவ்ய பிரபந்த பாசுர இராமாயணத்தை பார்ப்போமா? வேர்ட் கோப்பில் நகலெடுத்து ஒட்டினால் 690 சொற்களே வருகின்றன. அற்புதம்!!
திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ நலம் அந்தம் இல்லதோர் நாட்டில் அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு ஏழுலகம் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும் அயர்வறும் அமரர்கள் அதிபதியான அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பன் அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல் ஆவார் யார் துணையென்று துளங்கும் நல்ல அமரர் துயர் தீர வல்லரக்கர் இலங்கை பாழ்படுக்க எண்ணி மண்ணுலகத்தோர் உய்ய அயோத்தி என்னும் அணி நகரத்து வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய் கௌசலை தன் குல மதலையாய் தயரதன் தன் மகனாய்த் தோன்றி குணம் திகழ் கொண்டலாய் மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காக்க நடந்து வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறி வல்லரக்கர் உயிருண்டு கல்லைப் பெண்ணாக்கி காரார் திண் சிலை இறுத்து மைதிலியை மணம் புணர்ந்து இருபத்தொருகால் அரசு களைகட்ட மழு வாளி வெவ்வரி நற்சிலை வாங்கி வென்றி கொண்டு அவன் தவத்தை முற்றும் செற்று அம்பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி அரியணை மேல் மன்னன் ஆவான் நிற்க கொங்கை வன் கூனி சொற்கொண்ட கொடிய கைகேயி வரம் வேண்ட அக்கடிய சொற்கேட்டு மலக்கிய மாமனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப இந்நிலத்தை வேண்டாது ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிந்து மைவாய களிறொழிந்து மாவொழிந்து தேரொழிந்து கலன் அணியாதே காமர் எழில் விழல் உடுத்து அங்கங்கள் அழகு மாறி மானமரு மென்னோக்கி வைதேவி இன் துணையா இளங்கோவும் வாளும் வில்லும் கொண்டு பின் செல்ல கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய் பத்தியுடை குகன் கடத்தக் கங்கை தன்னைக் கடந்து வனம் போய் புக்குக் காயொடு நீடு கனியுண்டு வியன் கான மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயின்று சித்திரகூடத்திருப்ப தயரதன் தான் நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள்வானில் போக்க என் பெற்றாய் கைகேசீ நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன் என்று வான் ஏற தேனமரும் பொழில் சாரல் சித்திரகூடத்து ஆனை புரவி தேரொடு காலாள் அணி கொண்ட சேனை சுமந்திரன் வசிட்டருடன் பரதநம்பி பணிய தம்பிக்கு மரவடியை வான் பணயம் வைத்துக் குவலய துங்கக் கரியும் பரியும் இராச்சியமும் எங்கும் பரதற்கு அருளி விடை கொடுத்து திருவுடைய திசைக்கருமம் திருத்தப் போய் தண்டகாரணியம் புகுந்து மறை முனிவர்க்கு அஞ்சேல்மின் என்று விடை கொடுத்து வெங்கண் விறல் விராதனுக வில் குனித்து வண்டமிழ் மாமுனி கொடுத்த வரிவில் வாங்கி புலர்ந்து எழுந்த காமத்தால் சீதைக்கு நேராவள் என்னப் பொன்னிறம் கொண்ட சுடு சினத்த சூர்ப்பனகாவை கொடி மூக்கும் காதிரண்டும் கூரார்ந்த வாளால் ஈரா விடுத்து கரனொடு தூடணன் தன்னுயிரை வாங்க அவள் கதறித் தலையில் அங்கை வைத்து மலை இலங்கை ஓடிப் புக கொடுமையில் கடுவிசை அரக்கன் அலை மலி வேற் கண்ணாளை அகல்விப்பான் ஓர் உருவாய் மானை அமைத்துச் சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து இலைக் குரம்பில் தனி இருப்பில் கனி வாய்த் திருவினைப் பிரித்து நீள் கடல் சூழ் இலங்கையில் அரக்கர் குடிக்கு நஞ்சாகக் கொடு போய் வம்புலாங் கடிகாவில் சிறையாய் வைக்க அயோத்தியர் கோன் மாயமான் மாயச் செற்று அலைமலி வேற்கண்ணாளை அகன்று தளர்வெய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி கங்குலும் பகலும் கண் துயிலின்றி கானகம் படி உலாவி உலாவி கணை ஒன்றினால் கவந்தனை மடித்து சவரி தந்த கனி உவந்து வனம் மருவு கவியரசன் தன்னோடு காதல் கொண்டு மரா மரம் ஏழு எய்து உருத்து எழு வாலி மார்பில் ஒரு கணை உருவ ஓட்டி கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடி அரசளித்து வானரக் கோனுடன் இருந்து வைதேகி தனைத் தேட விடுத்த திசைக் கருமம் திருத்து திறல் விளங்கு மாருதியும் மாயோன் தூது உரைத்தல் செப்ப சீர் ஆரும் அநுமன் மாக்கடலைக் கடந்தேறி மும்மதிள் நீள் இலங்கை புக்குக் கடிகாவில் வாராரு முலை மடவாள் வைதேகி தனைக் கண்டு நின் அடியேன் விண்ணப்பம் கேட்டருளாய் அயோத்தி தன்னில் ஓர் இடவகையில் எல்லியம் போதின் இருத்தல் மல்லிகை மாமலை கொண்டு அங்கார்த்ததும் கலக்கிய மா மனத்தளாய் கைகேயி வரம் வேண்ட மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும் கங்கை தன்னில் கூரணிந்த வேல் வலவன் குகனோடு சீரணிந்த தோழமை கொண்டதுவும் சித்திரக் கூடத்திருப்ப பரத நம்பி பணிந்ததுவும் சிறுகாக்கை முலை தீண்ட மூவுலகும் திரிந்து ஓடி வித்தகனே ராமா ஓ நின்னபயம் என்ன அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும் பொன்னொத்த மான் ஒன்று புகுந்து இனிது விளையாட நின்னன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும் அயோத்தியர் கோன் உரைத்த அடையாளம் ஈது அவன் கை மோதிரமே என்று அடையாளம் தெரிந்து உரைக்க மலர்குழலாள் சீதையும் வில் இறுத்தான் மோதிரம் கண்டு அனுமான் அடையாளம் ஒக்கும் என்று உச்சி மேல் வைத்து உகக்க திறல் விளங்கு மாருதியும் இலங்கையர் கோன் மாக்கடிகாவை இறுத்து காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி இலங்கை மலங்க எரித்து அரக்கர் கோன் சினம் அழித்து மீண்டு அன்பினால் அயோத்தியர் கோன் தளிர் புரையும் அடியிணை பணிய கான எண்கும் குரங்கும் முசுவும் படையாக் கொடியோன் இலங்கை புகல் உற்று அலையார் கடற்கரை வீற்று இருந்து செல்வ விபீடணற்கு நல்லானாய் விரிநீர் இலங்கை அருளி சரண் புக்க குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து கொல்லை விலங்கு பணி செய்ய மலையால் அணை கட்டி மறுகரை ஏறி இலங்கை பொடி பொடியாக சிலை மலி வெஞ்சரங்கள் செல உய்த்து கும்பனொடு நிகும்பனும் பட இந்திரசித்து அழியக் கும்பகர்ணன் பட அரக்கர் ஆவி மாள அரக்கர் கூத்தர் போலக் குழமணி தூரம் ஆட இலங்கை மன்னன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர சிலை வளைத்துச் சரமழை பொழிந்து மணி முடி பணி தர அடியிணை வணங்க கோலத் திருமாமகளோடு செல்வ வீடணன் வானரக் கோனுடன் இலகுமணி நெடுந்தேரேறி சீர் அணிந்த குகனோடு கூடி அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி எய்தி நன்னீராடி பொங்கிளவாடை அரையில் சாத்தி திருச்செய்ய முடியும் ஆரமும் குழையும் முதலா மேதகு பல்கலன் அணிந்து சூட்டு நன்மாலைகள் அணிந்து பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமணனும் இரவு நன்பகலும் ஆட்செய்ய வடிவிணை இல்லாச் சங்கு தங்கு முன்கை நங்கை மலர்க்குழலாள் சீதையும் தானும் கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல வாழ்வித்து அருளினார்
இந்த ராமாயணம் பற்றி எனது நண்பரும் சென்னை பல்கலைக்கழக வைணவத் துறையின் தலைவருமான டாக்டர் ராகவ்னிடம் சில கேள்விகள் கேட்டேன். இதைத் தவிர பெரியவாச்சான் பிள்ளை ஏதேனும் தனியாக எழுதியுள்ளாரா என்றதற்கு அவர் வால்மீகி ராமாயணம், வியாச மகாபாரதம், பாகவதம் ஆகிய காவியங்களிலிருந்து தெரிவு செய்தெடுத்த பல ஸ்லோகங்களுக்கு அருமையான உரைகள் எழுதியுள்ளதாகவும் கூறினார்.
நிஜமாகவே பெரியவாச்சான் பிள்ளை பிரமிப்புக்கு உரிய மனிதர்தான்.
பதிவர் இயற்கையால் காமெடி சேனல்களுக்கு ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதை நான் முழுமையாகவும், கன்னாபின்னாவென்றும் ஆதரிக்கிறேன்.
இந்த காண்டிட் கேமராக்காரர்கள் செய்யும் அலம்பல்கள் சகிக்கவில்லை.
இயற்கை கூறுகிறார்: “1.பேய் முகமூடியைப் போட்டுக் கொண்டு ரோடில் செல்லும் ஒருவர் முன் திடீரெனப் போய் குதிப்பது, அவர் பயந்து அலறுவதை அப்படியே ஒலிபரப்புவது.. கேள்வி: ரோடில் போனவர் இதயம் பலவீனமாக இருப்பவராக இருந்தால் என்ன ஆவது?
2.ரோடில் நடந்துவருபவரின் எதிர்திசையிலும், பின்தொடர்ந்தும் வரும் இருவர்,திடீரென ஒருவரை நோக்கி ஒருவர் ஓடி வந்து கட்டிப் பிடித்து அளவளாவிக் கொள்வது..அந்த மனிதர் தம்மை நோக்கி ஓடிவருவதாய் நினைத்து ஒரு நொடி புரியாமல் திகைப்பார்.சில சமயம் டக்கென ரோடின் மறுபக்கம் ஒதுங்குவார். கேள்வி: அப்படி ரோடின் பக்கம் பயந்து ஓடும்போது அவருக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு?
3.ரோடில் பெரிய பெட்டி ஒன்றைத் தூக்கமுடியாமல் தூக்கி கொண்டு இருப்பர்.அப்போது வழியில் செல்லும் யாரோ ஒருவரை உதவி செய்ய அழைப்பர்.அவர் வந்து பெட்டியைத் தூக்க உதவ முயல்கையில்,அப்பெட்டியில் மறைந்திருக்கும் ஒருவர்,திடீரென அவர் காலைச் சுரண்டுவார். 4.ரோடில் போகும் ஒருவர் பர்சைத் தவற விடுவார்.(அறியாமல் போடுவதைப் போல,வேண்டுமென்றே கீழே போடுவார்.) பின்னால் வரும் யாரோ ஒரு அப்பாவி, அதை எடுத்து அவரிடம் கொடுக்க கையில் எடுத்தால், எங்கிருந்தோ வரும் மற்றொருவர்(தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்) "உங்க பர்சை இவர் எடுத்துகிட்டு ஓடறார்" என்பது போல சீன் கிரியேட் பண்ணி அந்த அப்பாவியை டென்சனாக்கி ஓட ஓட விரட்டுவார் 5.கண் பார்வை இல்லாதவர் போல் நடித்து, ரோடில் போகும் ஒருவரிடம் ரோடை கடந்து போக உதவி கேட்பார் ஒருவர்.அந்த அப்பாவி மனிதர் இவரை ரோடை கடந்து கொண்டுபோய் விடும் நேரத்தில்,எதிர் திசையில் வருபவர்(தொலைக்காட்சியை சேர்ந்தவர்) ஏதோ ஒரு அட்ரஸ்க்கு வழி கேட்பார்.அவர் குனிந்து அட்ரஸைப் படிக்கும் வேளையில், கண் தெரியாதவரின் பாக்கெட்டில் இருந்து பணத்தை இவர் எடுத்து விடுவார். பின்னர் இருவரும் சேர்ந்து,அந்த அப்பாவி மனிதரிடம் பணத்தை குடுங்கள் என கலாட்டா செய்வார்கள்.
கேள்வி(3,4,5): உண்மையிலேயே உதவி தேவைப்படுபவர்களைக் கூட, இவர்கள் நடிக்கிறார்களோ என்ற சந்தேகக் கண் கொண்டு பார்க்க வழி இருக்கிறது அல்லவா?இவற்றால் மனிதனுக்கு மனிதன் சிறு உதவிகள் செய்யும் எண்ணம் தடைப்படாதா”?
துக்ளக் 29.07.2009 இதழ் கேள்வி பதிலிலிருந்து: மல்லிகா அன்பழகன், சென்னை-78 கே: ஜெயா டிவியில் நன்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த தங்களின் ‘எங்கே பிராமணன்’ - டி.வி. சீரியல், திடீரென முடிக்கப்பட்டது ஏன்? பலரும் பலவிதமாகப் பேசுகிறார்கள் என்பதால் கேட்கிறேன்.
ப: பலவிதமான பேச்சுக்களை நம்ப வேண்டாம். கதையை முடிக்கிற கட்டம் வந்தது என்று நாங்கள் (நான், டைரக்டர், தயாரிப்பாளர்) நினைத்ததால், முடித்தோம். ஜெயா டிவியினரே, தொடர், விரைவில் முடிவதை விரும்பவில்லை. அதனால்தான், இப்போது, அந்தத் தொடருக்கு ஒரு தொடர்ச்சியை - அல்லது இரண்டாம் பாகத்தை - உருவாக்க முடியுமா என்பது பற்றி நான், டைரக்டர் வெங்கட், தயாரிப்பாளர் சுந்தரம் - ஆகிய மூவரும் யோசித்துக் கொண்டிருக்கிறோம். தீவட்டிக் கொள்ளைக்காரன் மாதிரி, முன்கூட்டியே எச்சரித்து விட்டேன்; தொடர் மீண்டும் தொடர்கிறதே என்று நீங்கள் புகார் கூறினால், அதில் நியாயம் இருக்காது.
நான் இந்த சீரியலின் கடைசி பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தேன்: சோவின் நண்பர் அசோக் யாருமே பிராமணன் இல்லைன்னு சம்பந்தப்பட்டவாளையே சொல்ல வைத்தது பற்றி அங்கலாய்க்கிறார். சோவோ கண்களை உருட்டியபடி அதுதானே உண்மை என்பதுதான் இந்த சீரியலின் முக்கிய விஷயம்னு சொல்கிறார். அசோக் தேடுவது வர்ணரீதியான பிராமணனை. ஆனால் தறசமயம் இருப்பவர்களோ சாதி ரீதியான பிராமணர்கள் என்கிறார் அவர். பிறகு நான்கு வர்ணங்களையும் அவர் ஒரிஜினலாக கொடுத்த விளக்கங்கள் பிரகாரம் வர்ணிக்கிறார். அவற்றில் பிராமணன் என்பவன் பொது நலனுக்காக பிரும்ம ஞானத்தை நோக்கி செல்பவன். க்ஷத்திரியன் தனது வலிமையால் மற்றவர்களை காப்பவன். வைசியன் பொருள்களில் வணிகம் செய்து செயல் புரிபவன். சூத்திரன் என்பவன் பிறர் துன்பம் காண சகிக்காமல் அவர்களுக்கு சேவை செய்பவன். ஆக, பழைய முறையில் வகுக்கப்பட்ட வர்ணங்கள் ஒன்றும் அப்படியே நிற்கவில்லை. காலத்தின் கட்டாயத்தில் அவை மாறி விட்டன. ஒன்று வேண்டுமானால் கூறலாம். இப்போது இருக்கும் நிலையில் எல்லோருமே ஒரு விதத்தில் வைசியர்களே. பிராமணன் புரோகிதம் செய்து பொருள் ஈட்டுகிறான். போர் வீரர்களும் தங்கள் சேவைகளை விற்கிறார்கள். சூத்திரர்களும் அவ்வாறே. ஆக, எல்லோருமே வைசியர்கள் ஆகிவிட்டார்கள்.
சாதி என்பது பிறப்பால் மட்டுமே என ஆகிவிட்ட பிறகு. சாதியை மாற்றிக் கொள்ள இயலாதுதான். ஆனால் வர்ண ரீதியாக மாறவியலும் என்பது பல முறை பார்க்கப்பட்டு விட்டது. இருப்பினும் பிராமண சாதி மட்டும் அதே வர்ணப் பெயரில் அறியப்படுவதற்கான காரணமே அவர்களில் பலர் இன்னும் பழைய கொள்கைகளை ஓரளவுக்கு கடைபிடிப்பதே ஆகும்.
வர்ண ரீதியான பிராமணனை தேட அசோக்கால் முடியாமல் போன நிலையில், அம்மாதிரியான தேடலே அவசியமா என்பதுதான் எனது மனதில் எழுந்துள்ள இப்போதைய கேள்வி.
அதே சமயம், “அசோக் தேடிய ரேஞ்சுக்கு உண்மையான, வர்ணரீதியான பிராமணன் இப்போது இல்லை என்பது நிலைநிறுத்தப்பட்டாலும், அதை அடையும் பாதையில் இருப்பதாக நான் சாரியார், சாம்பு சாஸ்திரிகள், மற்றும் சிகாமணியை அடையாளம் காண்கிறேன்” என்றும் நான் சீரியலின் கடைசி பகுதிக்கான ரிவ்யூவில் எழுதியிருந்தேன். ஒரு வேளை இந்த சீரியலின் இரண்டாம் பகுதியில் இது சம்பந்தமாக ஏதேனும் சொல்லப் போகிறார்களா என்பதை அறிய நானும் ஆவலுடன் இருக்கிறேன்.
அதாவது, வர்ணரீதியான பிராமணன் என்னும் ஆதரிச நிலையை 100% அடைய முடியாவிடினும், அதை அடையும் முயற்சியில் யாராவது இருக்கிறார்களா என்பதையாவது பார்க்கலாம் அல்லவா? புத்தகமும் சரி சீரியலும் சரி நிறுத்தப்பட்ட இடம் முடிவான இடமா அல்லது வெறும் திருப்பு முனையா என்பதையும் இந்த எக்ஸ்டென்ஷன் - அது நிஜமாகவே வரும் பட்சத்தில் - ஆராயுமோ?
அசோக்கின் இந்த முயற்சியில் மாஜி நாத்திகர் நீலகண்டன் ஏதேனும் பங்கு வகிப்பாரா? சாம்பு சாஸ்திரிகள் முயற்சியில் வேத பாடசாலை நன்கு உருவானதா? இம்மாதிரி பல கேள்விகள் எனது மனதில் உள்ளன. மேலும் சாம்பு சாஸ்திரிகள், பிரியா, உமா, பாகவதர், சிகாமணி, சாரியார் ஆகியோரையும் பார்க்க மனம் விழைகிறது.
எது எப்படியாயினும் சோ அவர்கள் நினைப்பதுதான் நடக்கப் போகிறது.
ஏதோ நம்மால் ஆனது மீண்டும் ரிவ்யூக்கள் போடுவதே. அதுவும் முரளி மனோகர் முதல் பகுதிக்கு தான்தான் ரிவ்யூ போட வேண்டும் என அடம் பிடிக்கிறான். இது வால்பையனுக்கு நான் தரும் முன் தகவல் மட்டுமே.
கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?
எம்.கண்ணன் 1. ஜெயா செய்திகளில் (அல்லது பெரும்பாலான தமிழ் தனியார் சேனல் செய்திகளில்) 'பரபரப்பு' என்ற வார்த்தை ஒரு நாளைக்கு எத்தனை முறை உபயோகப்படுத்தப்படுகிறது ? எங்கு எது நடந்தாலும் இவர்களுக்கு அது பரபரப்புதானா? பதில்: எண்பதுகளில் மகாபாரதம் தொலைகாட்சி சீரியல் ஒளிபரப்பப்பட்டபோது, விதுரராக வரும் பாத்திரம் “கிந்து” அல்லது “பரந்து” என்று அடிக்கடி கூறுவார். இரு வார்த்தைகளுக்கும் ஒரே பொருள்: “ஆனால்”. அக்காலக் கட்டத்தில் சீரியல் நடக்கும்போது இரு கோஷ்டிகள் உருவாகும், அப்பாத்திரம் கிந்து என்னும் வார்த்தையை எத்தனை முறை கூறுகிறது? பரந்துவை எத்தனை முறை கூறுகிறது என்று ஸ்கோர்கள் வைத்து கொள்ளப்படும். இப்போதெல்லாம் அவற்றின் இடத்தை பரபரப்பு என்னும் சொல் பிடித்து கொண்டுள்ளது போலும்.
2. ஜெயேந்திரரின் சங்கரா டிவி பார்ப்பதுண்டா? நல்ல கோயில், ஹிந்து பண்பாட்டு நிகழ்ச்சிகள் வருகின்றனவே? பதில்: இல்லை, பார்ப்பதில்லை.
3. ஹேமா ஆனந்ததீர்த்தன் எழுதிய கிளுகிளு கதைகள் படித்ததுண்டா? பதில்: ஒன்றிரண்டு படித்துள்ளேன். கடைசியாக அவரும் கோவி மணிசேகரனும் சேர்ந்து ஒரு தொடர்கதை எழுதினார்கள். அது முடிவடையும் முன்னமேயே அவர் இறந்து விட்டார்.
4. ஒரு எடுத்துக்காட்டிற்கு, திருச்சியிலிருந்து மதுரை செல்ல (சுமார் 10 அல்லது 20 வருடங்களுக்கு) முன்பும் சுமார் 3 மணி நேரம் தான் ஆனது. தற்போது 4 வழி என்றெல்லாம் அகலப்படுத்தினாலும் எல்லா ஊர்களுக்கும் செல்ல முன்பைவிட அதிகநேரமே தேவைப்படுகிறது. புறப்படும் மற்றும் சென்றடையும் ஊரின் எல்லையிலிருந்து ஊர் நடுவில் இருக்கும் பஸ்ஸ்டாண்டை சென்றடைய ஒரே கசகசவென கூட்டம், ஊர்திகள் என பயணத்தையே வெறுப்படையச் செய்துவிடுகின்றனரே? பதில்: சமீபத்தில் 1961-ல் முதன் முறையாக சென்னையிலிருந்து திருச்சிக்கு அப்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் பஸ்சில் சென்றேன். காலை 06.50க்கு சென்னையிலிருந்து புறப்பட்ட பஸ் திருச்சி ஜங்ஷன் அருகே அசோகா ஹோட்டலுக்கு போய் சேர்ந்தபோது மணி பிற்பகல் 2.50. அதாவது எட்டு மணி நேரம். டிக்கெட் 9 ரூபாய்கள். இப்போதெல்லாம் அதே தூரம் 5 மணி நேரத்தில் கடந்து விடுகிறார்கள். முக்கியக் காரணமே பைபாஸ் ரோடுகள்தான். திருச்சியிலிருந்து மதுரை செல்ல கார் மூலம் எனக்கு இரண்டு மணி நேரம்தான் எடுத்தது. பஸ்சில் சென்று அனுபவம் இல்லை. மற்றப்படி போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாதுதானே. ஆண்டுக்கு பல மடங்கு அளவுக்கு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது, என்ன செய்ய. மக்கள் தொகை அதிகரிப்பு இன்னொரு பக்கத்தில். மேலும் தமிழகத்தின் பழைய ஊர்கள் எல்லாவற்றிலும் கட்டடங்கள் நெருக்கமாகவும், சாலைகள் அவ்வளவு அகலமாகவும் இல்லாத நிலை. சாலை ஆக்கிரமிப்புகள் வேறு. அவற்றில் வண்டியோட்டி செல்வது எப்போதுமே சள்ளையான காரியம்தான்.
5. பதிவர் சந்திப்புகளில் மீண்டும் போண்டா இடம் பெறவேண்டுமானால் அதற்கான சிறந்த இடம் எது (பதிவர் சந்திப்பு நடத்த)? பதில்: திநகர் நடேசன் பூங்காவில் மீட்டிங் நடத்தினால் அருகில் இருக்கவே இருக்கிறது ரத்னா கஃபே. ஆனால் இப்போதைய டிரெண்ட் தண்ணி பார்ட்டிகள்தான். அதற்கும் திவ்யமான ஹோட்டல் திநகரிலேயே உண்டு.
6. உபன்யாசங்கள் கேட்கும் பழக்கமுண்டா? சமீபத்தில் யாருடைய உபன்யாசத்தை மிகவும் ரசித்தீர்கள்? (ஜெயாடிவியில் எங்கே பிராமணனின் சோவின் உப்யன்யாசத்தைக் கேட்கவில்லை :-)) பதில்: சமீபத்தில் 1956-57-ல் திருவல்லிக்கேணி பாண்டுரங்க மடத்தில் ராமகிருஷ்ண சாஸ்திரிகள் அவர்கள் நிகழ்த்திய உபன்யாசங்களுக்கு அடியேன் தவறாது ஆஜர். என் அப்பாவுக்கு நான் அம்மாதிரி போவது பிடிக்காது கோபப்படுவார். உபன்யாசத்தை விரும்பும் வயது எனக்கில்லை என்பது அவர் ஆட்சேபணை. அவருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு, அம்மாவை தாஜா செய்து விட்டு அவற்றுக்கு செல்வது எனது வழக்கம்.
7. குலாம் நபி ஆசாத் கிராமங்களுக்கு மின்வசதி செய்து டிவிபார்க்க வைத்தால் குடும்பம் கட்டுப்பாட்டில் முன்னேற்றம் ஆகும் என கூறியுள்ளாரே? இவருக்கெல்லாம் எதற்கு மந்திரி பதவி? நல்ல உருப்படியான யோசனைகள் தோன்றாதா? உங்கள் யோசனை என்ன? (மக்கள் தொகைப் பெருக்கம் கட்டுப்படுத்த) பதில்: மந்திரி அவ்வாறு கூறியதை எங்காவது ஜஸ்டிஃபை செய்தாரா? எனக்கு புரியவில்லையே. ஒரு வேளை இப்படியிருக்கலாமோ? அதாவது, டிவியில் குடும்பக் கட்டுப்பாட்டு பிரசாரங்களை பார்த்து, கேட்டு மக்கள் நல்ல முடிவுக்கு வருவார்களாமா? டிவி கிடைத்தால் சீரியல்கள் பார்ப்பார்களா அல்லது இம்மாதிரியான பிரச்சார டிவி காட்சிகள் பார்ப்பார்களா? முதலில் இவரே அவற்றை பார்ப்பாராமா? மற்றப்படி மின்சார வசதி என்பது உடனடியாக நிறைவேற்ற வேண்டிய விஷயமே என்பதில் மாற்று கருத்து இருக்கக் கூடாது. சிறு குடும்பத்தின் பயன்கள், பெரிய குடும்பத்தில் தொந்திரவுகள் ஆகியவற்றை மக்களுக்கு புரிய வைக்க வேண்டியது முதலில் செய்ய வேண்டிய விஷயம்.
8. 108 திவ்யதேசங்களில் எவ்வளவு திவ்யதேசங்கள் தரிசித்துள்ளீர்கள் ? அனைத்து இடங்களுக்கும் செல்ல பிளான் உண்டா? பதில்: சுமார் 75 முதல் 80 வரைக்கும் சென்றிருப்பேன். கேரளா, கர்நாடகாவிலுள்ள திவ்ய தேசங்களுக்கு சென்றதில்லை. வைகுண்டமும் திருப்பாற்கடலும் வைகுண்ட பதவி பெற்றதும்தான் செல்லவியலும். மீதி இருப்பவை 106 திவ்யதேசங்கள். பார்ப்போம்.
9. அரசியல் அறியா தமிழனின் விகடன் கடிதத்திற்கும் குமுதத்தில் வாலுபிரசாதின் கற்பனைக்கும் வித்தியாசம் இல்லையென்றாலும் கருணாநிதிக்கு விகடன்மீது மட்டும் கோபம் வருவது ஏனோ? கடந்த 2 ஆண்டுகளில், கருணாநிதி காழ்ப்பு கட்டுரைகளே அதிகம் இல்லையா? பதில்: எரிச்சல் தரும் வகையில் கருணாநிதி குடும்ப அரசியல் நடத்தும்போது அவர்க்கு ஆதரவு கட்டுரைகளை எங்ஙனம் எதிர்பார்ப்பதாம்?
10. வருடம் முழுவதும் பாலாற்றில் (பெரும்பாலும்) தண்ணீரே ஓடாதபோது வெறும் மணல் திருட்டு மட்டுமே நடக்கும் ஒரு ஆற்றில் குறுக்கே ஆந்திரம் அணை கட்டினால் என்ன கட்டாவிட்டால் என்ன? பாலாற்றில் தண்ணீர் இருந்து யார் பார்த்திருக்கிறார்கள்? எதற்கு இத்தனை சலசலப்பு? பதில்: உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா என்று ஆகிவிட்டால் வேறு என்ன செய்வதாம்? மேலும் ஆந்திராவில் பாலாற்றில் தண்ணீர் உண்டு என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அனானி (20.07.2009 மாலை 05.37-க்கு கேட்டவர்) 1. மொழிபெயர்க்க எப்படிப்பட்ட பிரதிகள் அதிகம் வருகின்றன? டெக்னிகல் தவிர வேறு எந்த வகையானவை? பதில்: எல்லாமே டெக்னிகல் விஷயங்கள்தான். யாரும் இலக்கிய மொழிபெயர்ப்பு எல்லாம் கேட்பது இல்லை. அப்படியே கேட்டாலும் அடிமாட்டு விலைக்குத்தான் கேட்பார்கள். எழுத்தாளர் சமுத்திரம் ஒரு முறை என்னை அவரது ஒரு நாவலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்புக்கு அணுகினார். நான் கேட்ட தொகையில் கால் பங்கு கூட அவரால் தர இயலாத நிலை. ஆளை விடுங்கள் எனக் கூறிவிட்டேன்.
சில நேரங்களில் பேட்டண்ட்கள் வரும். மற்ற நேரங்களில் விஞ்ஞான கட்டுரைகள் வரும். இந்த வேலையில் அதுதான் சௌகரியம். காலை ஜெர்மனிலிருந்து ஆங்கிலம், மாலை ஆங்கிலத்திலிருந்து ஃபிரெஞ்சு என்ற ரேஞ்சுக்கு வேலைகள் மாறும். இன்று சட்ட சம்பந்தமான ஒரு கோப்பு, நாளை வங்கி சம்பந்தமான காகிதங்கள். நிரந்தரமான வேலை எனப் பார்த்தால் எனது வாடிக்கையாளருக்கு அவரது ஜெர்மானிய தொடர்புகளுடன் அவர் நடத்த வேண்டிய மின்னஞ்சல் மாற்றங்கள். விளையாட்டு போல ஒரு மின்னஞ்சல் ஜெர்மனில் வரும். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இவரிடம் தந்தால், அவர் பதிலை ஆங்கிலத்தில் தருவார். அதை ஜெர்மனுக்கு மாற்றி அவருக்கே திருப்பியனுப்பினால் அவர் அதை ஜெர்மனிக்கு மேலே அனுப்புவார். ஆக ஜெர்மன்காரரை பொருத்தவரை எல்லாமே ஜெர்மனில் நடக்கிறது. வாடிக்கையாளரது வியாபாரம் செழிக்கும். என்னதும்தான்.
2. ஆங்கிலத்திலிருந்து பிற மொழிகளுக்குப் பெயர்ப்பது அதிகமா அல்லது பிற மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்குப் பெயர்ப்பது அதிகமா? பதில்: பிற மொழிகளிலிருந்து ஆங்கிலம் மற்றும் தமிழுக்குத்தான் அதிகம்.
3. மொழிபெயர்ப்பு மூலம் வரும் வருமானத்திற்கு வரி கட்டுகிறீர்களா? இதை எப்படிக் கணக்கு வைத்துக் கொள்கிறீர்கள்? (சத்தியமா நான் வருமான வரி அதிகாரி அல்ல!) பதில்: அது இல்லாமலா. இது பற்றி நான் இட்ட நபியில்லாமல் டோண்டு இல்லை என்னும் பதிவை பார்க்கவும்.
4. ஹோமியோபதி அனுபவம் உண்டா? பதில்: அந்த வைத்திய முறையில் நம்பிக்கையில்லை. ஒரே ஒரு முறை Sharada Boiron என்ற கம்பெனிக்காக ஹோமியோபதி பேப்பர் ஒன்றை மொழிபெயர்த்து துட்டு சம்பாதித்தேன்.
5. சில அனானி கேள்விகள் நீங்களே எழுதிக்கொள்வது போலத் தோன்றுகிறதே! பதில்: இந்த ஆறு கேள்விகளைக் கூடத்தான் அம்மாதிரி சிலர் சந்தேகிப்பார்கள். அதற்காகவெல்லாம் கவலைப்பட்டால் கட்டுமா?
6. போலி டோண்டு அப்படி என்னதான் செய்தார்?! பதில்: எனது வலைப்பூவில் போலி டோண்டு என்னும் லேபலை அமுக்கி பார்க்கவும்.
அனானி (22.07.2009 பிற்பகல் 01.59-க்கு கேட்டது) 1) பலரும் தற்போதெல்லாம் உலக சினிமா என ஈரானிய, கொரிய, இஸ்ரேலிய (எஸ்.ரா - லெமன் ட்ரீ) சினிமா என பதிவுகள் எழுத ஆரம்பித்துவிட்டனரே ? பிரபல, மூத்த, இளைய பதிவர்கள் கூட இந்த உலக சினிமா விமர்சன மாயையில் விழுந்துகொண்டிருக்கின்றனரே? சொர்க்கமே என்றாலும் நம்மூரு சினிமா போல வருமா? வடிவேலின் வின்னர் படக் காமெடிக்கு ஈடாகுமா? உங்களுக்கு உலக சினிமா எல்லாம் பார்க்க ஆசையில்லையா? பதில்: அதான் சொல்லிட்டீங்களே. நம்மூரு சினிமா மாதிரி ஆகுமா?
2) ஜெர்மனி/ஹிட்லர் யூதர்களிடம் நடந்துகொண்டதற்கும் இலங்கையில் ராஜபக்ஷே/கோத்தபாய தமிழர்களுக்கு செய்வதற்கும் என்ன வித்தியாசம் காண்கிறீர்கள்? பதில்: இலங்கையில் நடந்தது உள்நாட்டு போர். அதில் ஒரு கட்சி ராணுவரீதியாக பின்னடைவை சந்தித்தது. இது எவ்வகையிலும் யூதர்களுக்கு நடந்ததுடன் ஒப்பீடு செய்ய முடியாதது.
3) தமிழ்498ஏ நடத்தும் வலைப்பதிவர் யார்? ஏன் அவருக்கு பெண்கள் மீது இந்த காண்டு? பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவியோ? உங்களையும் அடிக்கடி இழுக்கிறாரே? உங்களுக்குத் தெரிந்த நண்பரா? அவர் போடும் செய்திப் பதிவுகளில் உண்மை இருந்தாலும், இதையே தேடித்தேடி பதிவுகள் போடுவது விழிப்புணர்வுக்காகவா இல்லை ஆற்றாமையா? பதில்: அவருடன் எனக்கென்ன வாய்க்கால் வரப்பு தகராறா என்ன? செக்ஷன் 498-ஏ தவறாக உபயோகம் ஆகிறது என்கிற ஆதங்கம் அவருக்கு. நியாயமான ஆதங்கமே என்பதை நான் முதற்கண் ஒத்து கொள்கிறேன். ஆனால் அதற்காக அவர் செய்யும் அலம்பல்களால் அவர் சொல்ல வருவது எல்லாமே நீர்த்து போகின்றன என்பதுதான் எனது வாதம்.
செக்சன் 498-A சம்பந்தமாக வரும் வழக்குகளில் பல அந்தப் பிரிவை துர் உபயோகம் செய்தே போடப்படுகின்றன என்ற கான்சப்டில் போடப்பட்ட இப்பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை இங்கு இடுவதற்கு முன்னால் அப்பதிவைப் பற்றி ஒரு அறிமுகம்.
முக்கியமாக வரதட்சணைக் கொடுமை மற்றும் பெண்கள் படும் மன உளைச்சலுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இப்பிரிவை பலர் துர் உபயோகம் செய்வதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அதை பற்றி எல்லோருக்கும் சரியான பிரக்ஞையையும் உருவாக்கல் வேண்டும்தான். அதிலும் மாற்று கருத்துக்கு இடம் இல்லை. ஆனால் நான் மேலே குறிப்பிட்டப் பதிவில் அந்த காரியத்தை முரட்டுத்தனமாக செய்ய நினைப்பதுதான் வெளியே தெரிகிறது.
இப்போது அப்பதிவில் கூறப்பட்ட செய்தியையும் எனது பின்னூட்டத்தையும் பார்ப்போம்.
முதலில் பதிவின் சில பகுதிகள்: “திருநெல்வேலியைச் சேர்ந்த பவானி என்னும் 38 வயதுள்ள இந்து, தமிழ், பிராமின், ஐயர் பெண்மணிக்கு, ஜெண்டிலான, ஒத்துப் போகக்கூடிய, கடவுள் பக்தியுள்ள, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய, குடும்பப் பாங்கான கணவன் வேண்டுமாம். “மேரே ஜீவன் சாத்தி" என்னும் வலைத்தளத்தில் தன் ஃபோட்டோவையும் போட்டு விளம்பரம் கொடுத்துள்ளாள். அவளைப் பற்றி அந்த விளம்பரத்தில் கொடுத்துள்ள விவரத்தைக் காணுங்கள்:-
“அவளுடைய சொந்த பிசினஸ் நன்கு நடந்து வந்த வேளையில் திருமணம் நடந்தது. பிறகு மணவாழ்விலிருந்த பிரச்னையால் பிசினசைக் கவனிக்க முடியவில்லை.
விவாகரத்து பெற்ற அவள் இனி பிசினசை பெருக்கி நடத்தவோ, அல்லது வேறு வேலை பார்க்கவோ, அல்லது வீட்டு வேலை பார்த்துக்கொண்டு வீட்டோடு இருக்கவோ ரெடி. இயல்பில் அவள் மிகவும் ஒத்துப் போகக்கூடிய, புரிந்து கொண்டு அனுசரிக்கக் கூடிய,அக்கரையுடன் நலம் பேணக்கூடிய, குடும்பப் பாங்கான, கடவுள் பக்தியுள்ள, அனைத்து குடும வேலைகளும் தெரிந்த நல்ல பெண்."
சரி. அடுத்து அவள் கொடுத்திருக்கும் தன் "நல்ல குணங்களை"ப் பற்றிய சான்றுகளைப் பாருங்கள்:-
"அவளுடைய முந்தைய திருமணம் முறிந்ததற்குக் காரணம் அவளுடைய பொறுப்பற்ற, அக்கறையற்ற கணவன்தான். அவனும் அவனுடைய குடும்பத்தினரும் மிகவும் கொடுமைப் படுத்தினார்கள்.
மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு "இருவரும் ஒப்புதலளித்த" (Mutual consent) விவாகரத்து நிகழ்ந்தது. 2002-ல் கணவனிடமிருந்து பிரிந்தவள் 2004-ல் விவாகரத்து பெற்றாள்.
முந்தைய கணவனுக்குப் பிறந்த குழந்தையைப் பார்க்க அதன் தந்தைக்கு எந்த உரிமையும் இல்லை. அவனுடன் எந்த தொடர்பும் என் குழந்தைக்கு நான் அனுமதிக்கவில்லை. அந்தக் குழந்தையைப் பொறுத்தவரை தன் தந்தை யார் என்பதே அவளுக்குத் தெரியாது. தந்தை என்று ஒரு உறவு உள்ளது என்பதே அவளுக்குத் தெரியாமல் அவள் வளர்க்கப்பட்டுள்ளாள். ("As far as the child is concerned, she has no idea who her father is, and has never been made aware of fatherhood.")"
எப்படிப் போகிறது கதை! நிசசயம் அவள் Sec 498A of IPC, மற்றும் என்னென்ன சட்டங்கள் உண்டோ எல்லாவற்றைய்ம் அந்தக் கணவன் மற்றும் அவனுடைய பெற்றோர்கள் மேல் போட்டுத் தாக்கி, ஏராளமான பணத்தைய்ம் கறந்து கொண்டு விவாகரத்து பெறிருப்பாள்”.
பதிவர் வெறுமனே விளம்பரத்தைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார். ஒரு பெண்மணியை மரியாதையாகக் கூட குறிப்பிடாது அவள் என்று ஒருமையில் கூறியுள்ளார். இந்த காண்டக்ஸ்டில் அவர் என்று சொல்லக்கூட மனம் இல்லை. மேலும் அப்பதிவில் தரப்பட்டுள்ள சுட்டிக்கு போனால் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “The natural father of the child does not have any visiting rights at all, nor any other contact (maintenance, alimony, or any other right over the child)”. ஆக ஜீவனாம்சமோ, பராமரிப்புக்காகவோ முந்தைய கணவனிடமிருந்து ஒரு தொகையும் பெற்றதாகத் தெரியவில்லை.
அதைவிட மோசமான விஷயம் என்னவென்றால் அப்பெண்ணின் முழு அடையாளங்களையும் தரும் சுட்டியையும் தருகிறார். இதைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அப்பெண்மணியை பற்றி ஒருவிஷயமும் தெரியாது அனுமானங்களின் அடிப்படையில் இவர் எழுதியிருப்பது பொறுப்பற்ற அவதூறு என்பதைத் தவிர வேறு எதுவும் கூற இயலவில்லை. இப்போது எனது பின்னூட்டத்துக்கு வருவோம்:
“//நிசசயம் அவள் Sec 498A of IPC, மற்றும் என்னென்ன சட்டங்கள் உண்டோ எல்லாவற்றைய்ம் அந்தக் கணவன் மற்றும் அவனுடைய பெற்றோர்கள் மேல் போட்டுத் தாக்கி, ஏராள பனத்தைய்ம் கறந்து கொண்டு விவாகரத்து பெற்றிருப்பாள்//. இதுதான் உண்மையா அல்லது உங்கள் அனுமானமா? இந்த கேஸ் பற்றி ஏதேனும் தனிப்பட்ட முறையில் தகவல் தெரியுமா? தெரியாது என்றால் இவ்வாறு எழுதுவது என்ன நியாயம் என நினைக்கிறீர்கள்”?
அதற்கு அவர் தரும் சப்பைக்கட்டு பதில்: “ஒரு குழந்தைக்கு அதன் தகப்பனை கண்ணிலோ கருத்திலோ காண்பிக்காமல் தந்தை என்று ஒருவன் இருக்கிறான் என்பதே தெரியாமல் அவளை வளர்த்துள்ளேன் என்று ஒரு தாய் பெருமையாக அறைகூவுவது உங்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. ஆனால் அந்தப் பெண் தந்துள்ள விவரங்களின் அடிப்படையிலும், அன்றாடம் ஆயிரக்கணக்காக இது போன்று பொய் வழக்குகளைப் போட்டு காசு பிடுங்கி mutual consent divorce பெறும் நிகழ்வுகளாலும் இது ஒரு steriotype என்று உரைத்தால் "ஆதாரம் எங்கே" என்று கேட்கிறீர்கள். இதுதான் typical faminiazi attitude. இது போன்ற அணுகுமுறைதான் இப்போது நம் நாட்டு இளைஞரிடையே திருமணம் என்றாலே ஒரு வெறுப்பைத் தோற்றுவிக்கும் நிலைக்குக் கொணர்ந்துவிட்டது.
உங்களுக்கு நான் சொல்வது முழுதும் புரிய வேண்டுமெனில் ஒரு நாள் சென்னையிலுள்ள family court-க்கு சென்று பாருங்கள் அல்லது http://mynation.net/ , http://saviindianfamily.org/ போன்ற வலைத்தளங்களுக்குச் சென்று பாதிக்கப்பட் கணவர்கள் மற்றும் அவர்களுடைய வயதான தாயார் ஆகியோரது புலம்பல்களைக் கேளுங்கள்”. அதற்கு எனது பதிலை இங்கே தருகிறேன். “நீங்கள் ஆயிரம்தான் சொன்னாலும் இந்த கேஸை பொருத்தவரை உங்களுக்கு உண்மை விவரம் ஏதும் தெரியாமல் இப்படித்தான் நடந்திருக்கும் என்று எழுதுவது கண்டிப்பாக தவறுதான். பல தவறான உதாரணங்களை எவ்வளவு நீங்கள் பார்த்திருந்தாலும் இந்த ஒரு விஷயத்தில் நீங்கள் தவறியது தவறியதுதான்.
அதிலும் அவருக்கு பார்ப்பனர்களை கண்டாலே உடலில் எல்லா இடங்களிலும் எரிகின்றது. ஆனால் சம்பந்தப்பட்ட பெண் கிறித்துவராகவோ அல்லது வேறு மதத்தவராக இருந்தாலோ, அல்லது பார்ப்பனர் இல்லாத வேறு ஏதாவது சாதியாக இருந்தாலோ அப்போது மட்டும் ஒன்றுமே கண்டு கொள்ளாது கமுக்கமாக வெறுமனே பெயரை மட்டும் கூறுவார். நான்கைந்து பதிவுகளில் அவருக்கு இதை நான் சுட்டிக் காட்டிய பிறகு, மற்றவரும் என்னுடன் சேர்ந்து எழுதிய பிறகு இப்போதெல்லாம் அடக்கி வாசிக்கிறார்.
எனது ஆட்சேபணை எல்லாம் இதுதான். இந்த செக்ஷன் 498ஏ துர் உபயோகம் ஆவதை மட்டும் காட்டினாலே போதும். தேவையின்றி தனது சொந்த விருப்பு வெறுப்பையெல்லாம் திணிக்க ஆரம்பித்தால், “இது ரத்த கொதிப்பு கேஸ்” என்று எல்லோருமே அலட்சியப்படுத்துவதுதான் பலன் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். சகட்டுமேனிக்கு மனைவியின் தரப்புதான் தவறு செய்கிறது என அடிப்படையே இல்லாமல் பேசக் கூடாது.
பூனைக்கு யார் மணி கட்டுவது எனத் தெரியவில்லை. அதிருக்கட்டும், அவருக்கு நான் லேட்டஸ்டாக இப்பதிவில் பின்னூட்டமிட்டுள்ளேன். அவரது எதிர்வினை சுவாரசியமானது. நீங்களே பாருங்களேன்.
திரைப்படங்களுக்கு தமிழ்ப்பெயர் வைத்தால் வரிவிலக்கு இந்த கூத்தை நினைத்து என்ன செய்வது என்றே புரியவில்லை. வரி விலக்கு என்றால் சினிமா டிக்கெட்டுகளின் விலைகள் அல்லவா குறைய வேண்டும்? எனக்கு நன்கு நினைவிருக்கிறது. தில்லியில் நான் இருந்த காலகட்டத்தில் காந்தி திரைப்படம் வந்தது. அதற்கு வரிவிலக்கு தந்தனர். பத்து ரூபாய் டிக்கெட்டின் விலை 95 பைசா என்றானது. அப்போதுதான் இந்த தமாஷா வரிகளின் சுமை தெரிந்தது. இவ்வாறு விலை குறைந்தால் அப்படம் பலரால் பார்க்கப்படும் என்பதே அதன் லாஜிக்.
ஆனால் இப்போது என்ன நடக்கிறது? பொது மக்கள் கட்ட வேண்டிய வரிகள் இல்லை, ஆனால் டிக்கெட் விலை மட்டும் அப்படியே இருக்கிறது. சினிமா தயாரிப்பாளருக்கு கொள்ளை லாபம். இது எப்படி சரியாகும்? யாராவது விளக்குங்கப்பூ!
பொன்னர் சங்கர் படத்தில் நெப்போலியன் என்ன ரோலில் நடிக்கிறாராம்? பொன்னராகவா, சங்கராகவா, மாந்தியப்பனாகவா, குன்றுடையான் ஆகவா? என்ன ரோல், சொல்லு, சொல்லு, சொல்லு என அலைந்து திரிந்து இப்பக்கத்தை கண்டுபிடித்தேன். நெப்போலியன் தலையூர் காளியாக வில்லத்தனமான ரோல் செய்கிறாராம். நல்ல சாய்ஸ்தான்.
கலைஞர் கதையின் முடிவில் பொன்னர் சங்கரை தெய்வமாக வழிபடுவதையும் ஒரு மாதிரி குன்சாக கோடி காட்டியிருப்பார். இம்மாதிரி கதைகள் இந்தியாவில் அனேகம். நைனிதால் ஏரியாவில் கோலு தேவதா என்னும் உள்ளூர் வீரன் அம்மாதிரி தெய்வமாக வழிபடப்படுவதை நான் எனது இப்பதிவில் கூறியுள்ளேன்.
அது சரி, நெப்போலியன் படத்தில் நடிக்க பிரச்சினை ஏதும் இருக்கிறதா என்ன?
எனது ஆங்கில வலைப்பூவில் உள்ள ப்ளாக் ரோலில் காட்டப்படும் பதிவுகளில் முக்கியமானவற்றில் ஒன்று get rich slowly என்னும் வலைப்பூ. அதில் இன்று நான் கண்ட இணையம் மூலம் பணமாற்றல் மோசடிகள் என்னும் இடுகை பற்றி இங்கு பேச ஆசைப்படுகிறேன். அது ஒரு பெரிய பதிவு, ஏராளமான ஹைப்பர் லிங்குகள் அதில் உண்டு. ஒவ்வொரு ஹைப்பர் லிங்கிலும் கிளை லிங்குகள் வேறு. எல்லாவற்றையும் படித்து முடிக்க பல மணி நேரங்கள் ஆகும்.
சுருக்கமாக பார்ப்போம். மீதியை சம்பந்தப்பட்ட பதிவுகளில் பார்க்கவும். இணையத்தின் மூலம் விற்பனை செய்யும் ஒரு தளத்தில் ஒவ்வொரு பொருளுக்குமான விளம்பர பக்கத்திலும் இம்மாதிரியான எச்சரிக்கை வருகிறது.
ஏமாற்று மற்றும் மொள்ளமாறி வேலைகளை தவிர்க்கவும். அதற்கு உள்ளூரிலேயே உங்கள் வணிகம் இருக்கட்டும்! Western Union, Moneygram, தந்தி பணமாற்று, வங்கியாளர் காசோலை, மணியார்டர், கப்பலில் அனுப்புவதாக, escrow, அல்லது வேறுவிதமான வாக்குறுதிகள் ஆகிய விஷயங்களில் கவனமாக இருக்கவும்.
இணையம் இவ்வளவு விரிந்து கிடக்கும் காலத்தில் இம்மாதிரியான அறிக்கை? காலம் கெட்டுப் போச்சு அப்பூ என்ற ரேஞ்சில் பலர் குரல் கொடுக்கின்றனர்.
இன்னொரு சினோரியோ தருவேன். எனக்கு ஒரு மின்னஞ்சல் ஒருவரிடமிருந்து வருகிறது மொழிபெயர்ப்பு செய்யக் கோரி. அவர் அனுப்பும் கோப்பை நான் எனது கணினியில் இறக்கி மொழி பெயர்க்க வேண்டுமாம். முன்னே பின்னே தெரியாதவர்கள் என்றால், பணத்தை முதலிலேயே தந்து விடுமாறு கேட்டு, அது வந்த பிறகே வேலை செய்வது உத்தமம். ஆனால் அதிலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என பல அனுபவஸ்தர்கள் கூறுகின்றனர்.
எனது வேலைக்கு 1000 ரூபாய் தேவை என வைத்து கொள்வோம். திடீரென 10000 ரூபாய்க்கான டிமாண்ட் ட்ராஃப்ட் வரும். அது சென்னையிலேயே லோகல் க்ளியரன்சில் க்ளியர் ஆகும்படி அமைவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் அந்தோ, தவறுதலாக அதிக தொகைக்கு செக் வெட்டி விட்டதாகவும், தயவு செய்து உபரி 9000 ரூபாயை உடனே தான் குறிப்பிடும் முகவரிக்கு அனுப்புமாறு வேண்டுகோளும் வரும். நானும் சரி என, அந்த செக்கை எனது அக்கவுண்டில் போடுகிறேன். டிமாண்ட் ட்ராஃப்ட் ஆனதால் அடுத்த நாளே எனது அக்கவுண்டில் பணம் ஏறி விடும். நானும் 9000 ரூபாயை அனுப்பி விட்டு எனது மொழி பெயர்ப்பு வேலையை செய்து அதை அனுப்பியும் விடுகிறேன்.
பிறகு சில நாட்கள் கழித்து ஆப்பு வரும். அதாகப்பட்டது அந்த டிமாண்ட் டிராஃப்டே போலி என தரிய வரும். எனது வங்கி என் மேல் உள்ள நம்பிக்கையில் அக்கவுண்டில் பணம் ஏற்றியிருந்திருக்கும். என அக்கவுண்டில் பணம் இருந்தால் முழு 10000 ரூபாயும் டெபிட் செய்யப்படும். அது போதாது என செக் பவுன்ஸ் ஆனதற்கான அபராதத் தொகை வேறு அழ வேண்டியிருக்கும்.
மேலே சொன்ன விஷயத்தை எனது ப்ரோஸ் மொழிபெயர்ப்பாளர் தலைவாசலில் சித்தரித்திருந்தார்கள். அதில் ஒரு விஷயம் சொன்னார்கள். அதாகப்பட்டது, மோசடி பேர்வழிகள் தங்களால் ஏமாற்றப்படுபவரது நாணயத்தை நம்பியே செயல்படுகின்றனர் என்று. நான் பேசாமல் அந்த செக்கை அக்கவுண்டில் செலுத்தி கம்மென்றிருந்தால் என்ன நடக்கும் என கேட்டதற்கு, செக் பவுன்ஸ் ஆனதும் அதற்கான அபராதத் தொகை செலுத்த வேண்டியிருக்கும் என சுட்டிக் காட்டப்பட்டது. ஆக கதை கந்தல்தான். ஒன்றுமே செய்யாது கம்மென நமது வேலையை பார்த்து கொண்டு போவதுதான் இம்மாதிரி விஷயங்களில் நல்லது. ஆனால் நீங்கள் அவ்வாறு செய்யத் துணிவீர்களா?
எங்கள் ப்ரோஸ் தலைவாசல் மன்றத்தில் இந்த விவாதத்தை பார்க்கவும். நானும் அதில் ஏமாந்திருக்க வேண்டியது. நல்ல வேளையாக தப்பித்தேன்.
மின்னஞ்சல் முகவரியில் ஓரெழுத்தை மாற்றியே அடையாள திருட்டையும் நடத்துகின்றனர். இம்மாதிரி தில்லாலங்கடி வேலையால் நானே மிக மோசமாகவே பாதிக்கப்பட்டேன். பண நஷ்டம் இல்லையென்றாலும் மன உளைச்சல் மிகவும் அதிகமாகவே இருந்தது. அது பற்றி நான் யோம் கிப்பூர் யுத்தம் டோண்டு ராகவனுடையது என்ற தலைப்பில் நான் இட்ட இடுகையில் விவரித்துள்ளேன்.
ஆகவே நான் கூறுவேன், “எப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறாங்கப்பு”! என்று.
சமீபத்தில் 1964 தீபாவளிக்கு வெளியான படம் படகோட்டி. எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி நடித்த வழக்கமான எம்ஜிஆர் பாணி கதை. ஸ்டீரியோடைப் நடிப்பு. அதெல்லாம் பற்றி இப்பதிவு இல்லை. ஆனால் அதில் வந்த பாடல்கள்? இன்னும் புது பாடலை கேட்பது போன்றே உணர்ச்சி உண்டாகிறது அவற்றை இப்போது கேட்கும்போதும். அதில் வந்த இந்த தொட்டால் பூ மலரும் எனத் துவங்கும் இந்த டூயட்டை முதலில் கேளுங்கள்.
அதே பாடலை ரீமிக்ஸ் செய்து ஒரு புதிய படத்தில் போட்டார்கள். படத்தின் பெயரை யாராவது சொல்லுங்கப்பு. போகட்டும் விடுங்கள். டியூனை கொலை செய்தார்கள்தான், ஆனால் ஒழிகிறது என விட்டு விடுவோம். ஆனால் அந்த ரீமிக்ஸை பழைய விஷுவலுடன் sync செய்து போட்டதை பார்த்துத்தான் புலம்ப வேண்டியிருக்கிறது, இப்படி கற்பழித்து விட்டார்களே பாவிகள்! என. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
பை தி வே இந்த ரசிக்கும் சீமானே ரீமிக்ஸையும் பாருங்களேன். ரிமிக்ஸாக இருந்தாலும் அதே டியூனை வைத்திருக்கிறார்கள் என்பதால் இது பரவாயில்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு?
இன்றைய ஹிந்துவில் (20.07.2009) 17-ஆம் பக்கத்தில் வந்த செய்திதான் எனது இப்பதிவுக்கு காரணம். Credit card users learn tough lessons என்னும் தலைப்பில் அந்த செய்தி வந்துள்ளது. அதிலிருந்து சில பாயிண்டுகளை பார்ப்போம்.
கிரெடிட் கார்ட் உபயோகிப்பவர்களில் பெரும்பாலோருக்கு திடீரென புது சங்கடம் முளைத்துள்ளது. கிரெடிட் கார்ட் அளிக்கும்போது சர்க்கரையாக பேசி குறைந்த பட்சமாக ஒரு தொகை செலுத்தினால் போதும், மற்றவற்றை பிறகு மெதுவாக செலுத்தலாம் என பூசுற்றுவார்கள். இதைத்தான் roll over option என கூறுவார்கள். அதை நம்பி செயல்படும் அசடுகள் பிறகு கந்து வட்டி ரேஞ்சுக்கு கடனுக்கு வட்டி செலுத்த வேண்டியிருக்கும். போதாக்குறைக்கு கடன் லிமிட்டுகளை சொல்லாமல் கொள்ளாமல் புதுக்கோட்டுக்கு ஜூட் விடும் தோரணையில் குறைத்து விடுவ்து. லிமிட்டுக்கு மேல் கடன் இருந்தல் உபரித் தொகையை உடனே செலுத்த வேண்டுமென்பது விதி. ஆனால் இம்மாதிரி திடீரென இவர்களாக நினைத்து கொண்டு லிமிட்டை குறைத்து விட்டு, திடீரென புது உபரித் தொகையை செலுத்து என்பது அடாவடியோ அடாவடித்தானே?
இதில் என்ன கொடுமை என்றால் இன்னமும் கிரெடிட் கார்டு தருவதற்கு ஆள் பிடிக்கிறார்கள். எல்லோரும் காதில் பெரிய பூ வைத்து கொண்டிருப்பதாக எண்ணம் அவர்களுக்கு.
நான் அறிந்த சில விஷயங்கள். கிரெடிட் கார்ட் தேசீயமயமாக்கப்பட்ட வங்கியுடையதாக இருத்தல் நலம். ஐசிஐசிஐ, எசெஃப்டிசி ஆகிய வங்கிகள் தீய சக்திகள். பின்னவர்கள் நீங்கள் ரொக்கம் தந்தால் வாங்க மாட்டார்கள். செக்காகத்தான் பணம் செலுத்த வேண்டும் என்பார்கள். அந்த செக்கையும் வேண்டுமென்றே தவணை தேதிக்கு அப்புறம் மாற்றி பெனால்டி போடவும் ஏற்பாடு செய்வார்கள்.
முக்கியமாக மறக்கக் கூடாத விஷயம், கிரெடிட் கார்டு என்பது மிகக் கூர்மையான கத்தி. அதை சரியாக உபயோகிக்க வக்கில்லாதவர்கள் அதை எடுக்காமல் இருப்பதே நலம். என்னிடம் கிரெடிட் கார்டும் இல்லை, ஏடிஎம் கார்டும் இல்லை. என்ன குறைந்து விட்டேன்?
இன்னொரு முக்கிய விஷயம், வரவுக்குள் செலவை செய் அல்லது அதிக செலவு வேண்டுமானால் வரவை அதிகமாக்கு. முன்னெல்லாம் செட்டியார் கடைக்கு சென்று கணக்கு எழுதுவார்கள். இப்போது எப்படியோ நிலைமை என்பது தெரியாது.
கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?
ராம்குமார் 1. அம்பானியை கொல்ல நடந்த ஹெலிகாப்டர் சதியின் சாட்சியை கொன்றுவிட்டனர், அந்த கொலையை இப்பொழுது ஊடகங்கள் கண்டுகொள்வதே இல்லையே. இந்த மூடி மறைக்கும் செயல் எதை காட்டுகிறது?
பதில்: இந்த செய்தியைத்தானே கூறுகிறீர்கள்? Possible witness-ஐ யாரோ கொலை செய்து ரயில்வே ட்ராக்கில் போட்டுள்ளனர். மொத்தம் மூன்று பேரை கைது செய்துள்ளனர். அதுக்கப்புறம் நீங்கள் குறிப்பிடுவது போலவே கேஸ் கிணற்றில் போட்ட கல்லாகவே கிடக்கிறது. எந்த புற்றில் எந்த பாம்போ யார் அறிவார்?
அனானி (09.08.2009 காலை 07.57-க்கு கேட்டவர்) 1. வரும் விளம்பரங்களை பார்த்தால்,அதற்கும் சென்சார் தேவை போலுள்ளதே?
பதில்: விளம்பரங்களுக்கு கோட் உண்டு என கேள்விப்பட்டிருக்கிறேன். சமீபத்தில் 1977-ல் ஷோலே புகழ் கப்பர்சிங் விரும்புவது பிரிட்டானியா பிஸ்கெட் என்னும் பொருள்பட விளம்பரம் வந்தது. அந்த விளம்பரம் இளைஞர்களுக்கு தவறான சமிக்ஞையையே அளிக்கிறது என நான் ஒரு கடிதம் அப்போதைய மத்தியத் தகவல் மற்றும் ஒலிபரப்பு மந்திரிக்கு எழுதிப்போட அங்கிருந்து எனக்கு இந்த விளம்பரத்தை நிறுத்த ஆணை பிறப்பித்ததாக செய்தி வந்தது. என் தந்தை என்னிடம் “உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை, யாரிடமோ உதை வாங்க போகிறாய்” என கோபித்து கொண்டார். 1979-ல் ஜனதா அரசு வீழ்ந்த சில நாட்களுக்குள்ளேயே இந்த விளம்பரம் மிண்டும் வந்தது. இம்முறை நான் ஒன்றும் செய்யவில்லை.
2. பள்ளியில் நன்றாய் படிப்பவர்களில் ஒரு பகுதியினர், கல்லூரிக் கல்விக்குப் போனதும், கல்வி ஆர்வம் குறைவது ஏன்?
பதில்: பள்ளி தேர்வுகளில் இன்னமும் நெட்டுரு போடும் பழக்கத்துக்கு நல்ல மார்க் கிடைக்கிறது. கல்லூரி தளத்திலோ பாட புத்தகம் தவிர வேறு புத்தகங்களையும் படிக்க வேண்டியுள்ளது. அதற்கு தங்களை ஏற்றவர்களாக மாற்றிக் கொள்ளாவிட்டால் சங்கடம்தான். மார்க்குகள் வரவில்லையெனில் ஆர்வம் தானே குறைகிறது.
3. வசூல் தோல்விகண்டு துவளாமல் மீண்டும் மீண்டும் திரைக்கதை வசனம் எழுதும் கலைஞரின்........?
பதில்: துவள வேண்டியது படத் தயாரிப்பாளர்தானே இவருக்கு என்ன? எப்படியும் இவர் வகிக்கும் பதவிக்கு என அழுத்தமான மரியாதை உண்டு. அதனால் இவர் ஏன் துவள வேண்டும்?
4. வைகோவின் இன்றைய பேச்சுக்கள் இனி எடுபடுமா?
பதில்: எடுபடும் என அவர் நம்பிக்கையாக பேட்டிகள் கொடுத்து வருகிறாரே.
5. திடீரென தமிழக டாஸ்மார்க் பார்களில் பெண்களைக் காணும்போது என்ன எண்ணுவீர்கள்?
பதில்: நான் ஒரே ஒரு முறைதான் டாஸ்மாக் பார் சென்றுள்ளேன். அங்கு அச்சமயம் பெண்கள் யாரையும் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் மட்டும் என்ன, ஒன்றும் நினைத்திருக்க மாட்டேன்.
அனானி (09.07.2009 காலை 11.50-க்கு கேட்டவர்)
1. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: தீர்ப்பு வரட்டும் பார்க்கலாம்.
அனானி (09.07.09 மாலை 06.49-க்கு கேட்டவர்) 1. will you buy things based and believing on ads?
பதில்: Never.
2. What is fringe benefit tax and why it is removed now?
பதில்: நிதி மந்திரி கூறுகிறார், “Announcing the decision of the government to do away with the FBT, he said, "This tax has been perceived as imposing considerable compliance burden. Empathising with these sentiments, I propose to abolish the fringe benefit tax." இந்த வரியை அனுசரித்து நடப்பது மிகுந்த சுமை என்கிறார். யாருக்கு? கம்பெனிகளுக்கா? எது எப்படியானாலும் சுமை தீர்ந்து யாராவது புன்முறுவல் பூக்கலாம் என நினைக்கிறேன். சந்தோஷம். பை தி வே ஃப்ரிஞ்ச் பெனிஃபிட் வரி என்றால் என்ன? “Fringe benefits as outlined in section 115WB of the Finance Bill, mean any privilege, service, facility or amenity directly or indirectly provided by an employer to his employees (including former employees) by reason of their employment.
They also include reimbursements, made by the employer either directly or indirectly to the employees for any purpose, contributions by the employer to an approved superannuation fund as well as any free or concessional tickets provided by the employer for private journeys undertaken by the employees or their family members”. ஓக்கேவா?
3. Not providing services properly under warranty period and the product is not working at all what should be done by the owner?
பதில்: எல்லா ரசீதுகளையும் பத்திரமாக வைத்திருந்தால் நுகர்வோர் நலன் நீதிமன்றத்தை அணுகலாம்.
4. Indians are not very serious in work -reason?
பதில்: அதே இந்தியர்கள் கல்ஃபிலோ, அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ வேலை செய்தால் சீரியசாகத்தான் இருக்கிறார்கள். காரணம், சரியாக வேலை செய்யாவிடில் கல்தாதான். இந்தியா மாதிரி இழுவை மற்றும் அழுவாச்சி வேலைகள் எல்லாம் அங்கே செல்லாது.
5. will you just laugh out loud or cry in times of deep stressfull anxieties?
பதில்: நிறைய முறை அவுட்டு சிரிப்பெல்லாம் விட்டிருக்கிறேன். என் தந்தையின் இறப்புக்கு பிறகு வேறு சமயங்களில் அழுததாக நினைவில்லை. கண் கலங்கியிருப்பேன்.
அனானி (09.07.09 மாலை 07.46-க்கு கேட்டவர்) இந்த பழமொழிகளுக்கு ஜெயா டீவி புகழ் டோண்டுவின் புதுமொழிகள்?
1. வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்
பதில்: வாளை எடுப்பவன் வாளாலேயே சாவான் (புது மொழி அல்ல என்பதை ஒப்பு கொண்டு விடுகிறேன்)
2. வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
பதில்: தனக்கு நன்கு தெரிந்த விஷயங்களை பிறருக்கு விளங்க சொல்லும் அதே வாயாலே தெரியாத விஷயங்களை பேசி உளறாது இருக்க வேண்டும் என பொருள் கொள்ளலாம்,
3. வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
பதில்: வாயில்லா பிள்ளை உதை வாங்கும்
4. வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
பதில்: நுணலும் தன் வாயால் கெடும்.
5. வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?
பதில்: வியாதியே விதியாக இருந்தாலும் அது குணமாக வேண்டும் என்றிருந்தால் மருந்துண்டு.
6. வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக
பதில்: தேவைக்கேற்ற உணவு
7. விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
பதில்: வீம்புதான் விருப்பம் என ஆகிவிட்டால்?
8. விதி எப்படியோ மதி அப்படி.
பதில்: விநாசகாலே விபரீத புத்தி
9. விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
பதில்: வாழ்வு வந்தால் விளக்குமாற்றுக்கும் பட்டுக் குஞ்சம் வரும்
10. விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது
பதில்: இரண்டும் ஒருவருக்கே என்றால் பிரச்சினையில்லைதான். ஆனால் ஒருவருக்கு விளையாட்டு இன்னொருவருக்கு வினை என முடியாமல் இருந்தால் சரிதான்.
வெங்கட்: 1. Have you seen N.Ram's interview in Junior Vikatan? What is your opinion on that interview ? Link to the interview "http://www.vikatan.com/jv/2009/jul/12072009/jv0301.asp"
பதில்: இல்லை, பார்க்கவில்லை. உங்கள் சுட்டி லாக் இன் செய்யச் சொல்கிறது. என்னால் இயலவில்லை. ஆகவே கருத்து ஏதுமில்லை.
2. Compare Cho Vs N.Ram
பதில்: இருவருமே துணிச்சலானவர்கள். ராம் கம்யூனிச சிந்தனையாளர். சோ கம்யூனிசத்துக்கு எதிரி. அவர்களை பிடிக்கிறதோ இல்லையோ அவர்களை புறக்கணிக்க இயலாது.
3. Prabhakaran's latest CD compares Tamils (i think srilankan Tamils) with Jews. Link "http://www.vikatan.com/jv/2009/jul/08072009/jv0301.asp"
பதில்: யூதர்கள் 2000 ஆண்டுகளாக பட்ட அளவுக்கு தமிழர்கள் நிலை மோசமில்லை. ஒப்பிட ஒன்றுமேயில்லை.
4. Compare MGR Vs Jayalalitha
பதில்: இருவருமே கட்சியில் சர்வாதிகாரியாகவே செயல்பட்டனர். ஆனால் எம்ஜிஆருக்கு இருந்த முகராசி ஜெயலலிதாவுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அனானி (32 கேள்விகள் கேட்பவர்) 1. தே.மு.தி.க.வின் வளர்ச்சி தொடருமா? கேப்டனின் முதல்வர் கனவு?
பதில்: ஜெயலலிதா மற்றும் கலைஞர் செய்யப் போகும் சொதப்பல்களை பொருத்தது.
2. அ.தி.மு.க.வுடன் கம்யூனிஸ்டுகள் தேனிலவு?
பதில்: மீசையில் மண் ஒட்டாது காங்கிரஸ் மற்றும் திமுகவுடன் சேர முடிந்தால் இந்த தேன் நிலவு நீடிக்காது.
3. சட்டங்களைக் கண்டு பயப்படாமல் உள்ள அரசியல்வாதிகள்?
பதில்: வேறு ஏதேனும் புதிதாக இல்லையா?
4. எழுத்தாளர்களுக்கு அரசு சலுகையை கூட்டலாமே?
பதில்: ஏன் கூட்ட வேண்டும்?
5. இன்றைய பிள்ளைகளிடம் எதற்கெடுத்தாலும் ஆர்க்குமெண்ட் செய்யும் ம்னோநிலை ஏன்?
பதில்: இந்தக் காலத்து பசங்க, ஹூம் என்னும் பதிவில் நான் இது பற்றி எழுதியுள்ளேன்.
6. அரிசி விலை கடுமையாக ஏறிவிட்டதே-ஒரு ரூபாய் திட்டம் காரணமா?
பதில்: அதுவும் ஒரு காரணமே.
8. வேலை கிடைக்கவில்லை என்று அவதிப்படும் இன்றைய இளஞர்களுக்கு டோண்டுவின் அட்வைஸ்?
பதில்: வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
9. ஒரு பெண்ணின் காதல் எதில் ஆரம்பிக்கிறது? எதில் முடிகிறது?
பதில்: பெண் என்று மட்டும் இல்லை, ஆணுக்கும் காதல் என்பது எதிர்பாலரிடம் ஏற்படும் கவர்ச்சியின் ஆரம்பத்தில் தொடங்குகிறது, அதே கவர்ச்சி மறைந்த பின்னால் காதலும் மறைகிறது.
10. எந்திரன் படம் ரஜினிக்கு கைகொடுக்குமா? இல்லை?
பதில்: நிரம்ப எதிர்பார்ப்பை கிளறாமல் இருந்தால், அதிக லாபம் பெறும் பேராசையோடு பொருள் விரயங்கள் செய்யாமல் இருந்தால் கைகொடுக்கும்.
11. உங்களுக்குப் மிகவும் பிடித்த பதிவு? (மிகுந்த மன நிறைவுடன்)
பதில்: தன்னம்பிக்கையை முன்னிறுத்தும் எல்லா பதிவுகளுமே மனதை நிறையச் செய்யும்.
12. இந்த வயதிலும் மன்மோகன் எதற்கும் அஞ்சாமல் அசர மாட்டேன்கிறாரே
பதில்: இந்திய அரசியலில் 77 எல்லாம் ஒரு வயதா?
13. தி.மு.க. இல்லாத காங்கிரஸ் கூட்டணி ?
பதில்: இதுவரை அம்மாதிரி நடக்கவேயில்லையா?
14. ஜெ இல்லாத அதிமுக?
பதில்: அடுத்தமட்ட தலைவர்கள் இல்லாத நிலையில் கஷ்டம்தான்.
15. கலைஞர் ஆங்கிலத்தில் பேசுவதிலும் வல்லவரா?
பதில்: சாதாரணமாக பேசி சமாளித்து கொள்ள இயலும் என்றுதான் நினைக்கிறேன். அப்படியே இல்லாவிட்டால்தான் என்ன, மொழிபெயர்ப்பாளர்கள் எதற்கு இருக்கிறார்கள்?
16. தீவிரவாத எதிர்ப்பு பலப்படுத்தபப்டும் என்று சொல்லி கொண்டிருக்கிறார்களே ஆனால்?
பதில்: தீவிரவாத எதிர்ப்பை இசுலாமியர்களுக்கு எதிரானதாக கற்பனை செய்வதை நிறுத்தாத வரை ஒன்றும் நடக்காது.
17. எல்லாத் திராவிடக் கட்சிகளை மூட்டை முடிச்சுகளோடு வழியனுப்பும் காலம் வருமா?
பதில்: அதற்கு தேசிய கட்சிகள் தங்கள் செயல்பாட்டை மாற்றிக் கொள்ளல் அவசியம்.
18. தந்திக் கட்டனங்கள் மினிமம் ரூ. 25 ஆக்கிவிட்டார்களே?
பதில்: செல்பேசி இணைப்புகள் விரிவாக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் தந்தியின் உபயோகம் குறைந்து வருகிறது. இருப்பினும் தந்திச் சேவை இன்னும் தேவையாகவே இருந்து வருகிறது. அதற்கான நிர்வாகச் செலவும் குறைவதில்லைதானே. ஆகவே மினிமம் 25 ரூபாய் ஆவது ஒன்றும் ஆச்சரியமில்லை.
19. விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் போரில் என்றால்? தமிழர் நிலை?
பதில்: மீண்டும் போரில் ஈடுபடும் நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லையே.
20. அரசியல் உலகில் வலிமை வாய்ந்தது மதமா, சாதியா?
பதில்: லோக்கல் அளவில் சாதி, பெரிய அளவில் மதம்.
21. அரசு கேபிள் டி.வி இருக்கிறதா?
பதில்: பேச்சளவில் இருக்கிறது. தேவையானால் தூசு தட்டி எடுத்து கொள்வார்கள்.
22. குழந்தைத் தொழிலாளார்கள் குறைந்து வருவதாய் வரும் தகவல்கள் உண்மையா?
பதில்: இல்லை.
23. பதவி கோரிக்கையுடன் உதார் விடும் தமிழகக் காங்கிரஸைக் கொஞ்சங்கூடக் கண்டு கொள்ளமாட்டேன்கிறாரே, கலைஞர்?
பதில்: பாவம் தமிழக காங்கிரசார்.
24. தமிழ்கத்தில் பத்திரிகைகள் பெருகுவதால் யாருக்கு இலாபம்?
பதில்: பலருக்கு வேலை கிடைக்கும்.
25. அரசியலில் கொடிகட்டி பறக்க என்ன தேவை?
பதில்: முதலில் ஒரு கொடி தேவை
26. மக்கள் தொலைக்காட்சி பார்பீர்களா?
பதில்: இல்லை
27. மேல்நாட்டு நாகரீக மோகத்தில் பெண்களைப் போல ஆண்களும் இப்போது முடி வளர்க்கிறார்கள். கம்மலை போட்டுக் கொள்கிறார்களே?
பதில்: பழங்காலத்தில் கடுக்கன்கள் போட்டு கொண்டார்கள், குடுமி வைத்து கொண்டார்கள். நாகரிகம் திரும்புகிறது.
28. கொங்கு மண்டலத்தில் கள் வேண்டுவோர் அமைப்பின் போராட்டம் பிசுபிசுத்துவிட்டதா?
பதில்: எல்லா மதுவகைகளும் தாராளமாக கிடைக்கும்போது கள்ளுக்கு மட்டும் ஏன் இன்னும் தடை விதிக்க வேண்டும் என்பது புரியவில்லை.
29. மசாஜ் கிளப்பு போன்ற விவகாரமான கிளப்புகளை அரசு அனுமதிப்பதை பார்த்தால்?
பதில்: Law of supply and demand நினைவுக்கு வருகிறது.
30. அரசியல்வாதிகள் ஏன் ‘பினாமி’களையே சார்ந்திருக்கிறார்களே?
பதில்: இந்த பினாமிகள் விஷயம் எனக்கு எப்போதுமே சரியாக புரிந்ததில்லை. சரி, பல விஷயங்கள் புரியத்தான் இல்லை. இதுவும் அவற்றில் ஒன்று என இருக்க வேண்டியதுதான்.
31. உங்களால் மறக்க முடியாத மேடைப்பேச்சு யாருடையது? எந்த நகரில்?
பதில்: மேடைப் பேச்சு எல்லாம் கேட்க பொறுமை இல்லை, நேரமும் இல்லை.
32. ஜெயாடீவியின் காலைமலர் நேர்முக ஒளிபபடக் காட்சியின் இணைப்பு ரெடியா?
பதில்: ஓ
அனானி (11.07.2009 பிற்பகல் 03.55-க்கு கேட்டவர்)
சந்திரகுபதர்கால்த்தில் அர்த்த சாஸ்திரம் தந்த சாணக்கியர் என்ற கெள்டில்யரின் இந்த வாசகங்களை பார்க்கும் போது இன்றைய காலகட்டத்தில் என்ன சொல்ல தோன்றுகிறது? 1. A person should not be too honest. Straight trees are cut first and Honest people are victimised first.
பதில்: இவன் நியாயவான் என்பதை வைத்தே எதிராளி இவனுக்கு விரோதமாக காய்களை நகர்த்துவான். அதற்காகவாவது இவன் எதிர்ப்பார்க்காத நேரங்களில் இயல்புக்கு மாறாக நடந்து கொள்தல் நலம்.
2. "Even if a snake is not poisonous, it should pretend to be venomous."
பதில்: டார்வினின் தத்துவமும் இதுவே.
3. "The biggest guru-mantra is: Never share your secrets with anybody.! It will destroy you."
பதில்: உங்களுக்கு மட்டுமே தெரிந்தால்தான் அது ரகசியம். அதை வெளியே விட்டால் அது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லைதானே.
4. "There is some self-interest behind every friendship. There is no Friendship without self-interests. This is a bitter truth."
பதில்: சுயநலன் பார்க்காத செயலே இருக்க முடியாது. தியாகி கூட தான் பெறப்போகும் நல்ல பெயருக்காகத்தான் தியாகமே செய்கிறான். ஆனால் இதை நினைத்து மனம் கசந்து கொள்ள வேண்டியதில்லை.
5."Before you start some work, always ask yourself three questions - Why am I doing it, What the results might be and Will I be successful. Only when you think deeply and find satisfactory answers to these questions, go ahead."
பதில்: நீச்சல் குளத்தில் டைவ் அடிக்கும் முன்னால் முதலில் அதில் போதுமான தண்ணீர் இருக்கிறதா என்பதை பார்த்து கொள். கனவில் செந்திலை பார்த்து தூக்கத்தில் நடந்து வந்து தன்ணீயில்லா குளத்துல கவுண்டமணி மாதிரி டைவ் எல்லாம் அடிக்கக் கூடாது.
6. "As soon as the fear approaches near, attack and destroy it."
பதில்: தைரியம் என்பது பயத்தை வெளிக்காட்டாது பிறரிடமிருந்து மறைப்பது - குருதிப்புனலில் கமல்
7. "Once you start a working on something, don't be afraid of failure and don't abandon it. People who work sincerely are the happiest
பதில்: எண்ணித் துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு
8. "The fragrance of flowers spreads only in the direction of the wind. But the goodness of a person spreads in all direction."
பதில்: கண்களில் பட்டை கட்டிய குதிரை, காட்டாறுச் சுழல்.
9. "A man is great by deeds, not by birth."
பதில்: செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்க லாதார்
10. "Treat your kid like a darling for the first five years. For the next five years, scold them.. By the time they turn sixteen, treat them like a friend. Your grown up children are your best friends."
பதில்: குழலினிது யாழினிது என்பர் தன் மக்கள் மழலை மொழி கேளாதவர், அடியாத மாடு படியாது, தோளுக்கு மிஞ்சினால் தோழன்.
11. "Books are as useful to a stupid person as a mirror is useful to a blind person.
பதில்: கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையவர் கல்லா தவர்
12. "Education is the best friend. An educated person is respected everywhere. Education beats the beauty and the youth..."
பதில்: மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ என்று கவலையின்றி போகக்கூடிய கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்புதானே.
எவனோ ஒருவன் 1. நண்பன் ஒருவன் கிண்டலுக்காக ‘அலங்கரிக்கப்பட்ட கோலம் அலங்கோலம், அழகான கோலம் அலங்கோலம்’ என்கிறான். இப்போது நான் அப்படியெல்லாம் அல்ல, அலங்கோலம்னா இதுதான்னு சொல்லணும். என்ன சொல்ல?
பதில்: இதுக்கு டாப்பிகலான பதில் வேண்டும் என்றால், அலங்கோலம் என்பது இப்போதைக்கு “கோலங்கள்” சீரியலின் கதைப் போக்குதான் எனக் கூறிவிடலாம்.
2. பார்க்கப்போனால், வெப்பமாக இருக்கும் நமது இடங்களில் உடல் வெளியே தெரியும்படி ஆடைகளும், குளிர் பிரதேசங்களில் முழுவதும் போத்திக்கொள்ளும் ஆடைகளும்தானே கலாச்சாரமாய் இருக்கவேண்டும். ஆனால், நிலைமை தலைகீழாய் இருப்பதெப்படி?
பதில்: எல்லாம் பழக்க தோஷம்தான். இன்னொரு விஷயம். வெப்ப நாடுகளில் உடல் - முக்கியமாக பெண் உடல் வெளியும்படி உடையணிந்தால் பத்திக்கிச்சு என்னும் நிலைமை வரும். ஆகவே அங்கெல்லாம் இழுத்து போர்த்திக் கொள்ள சொல்கிறார்கள். குளிர் தேசங்களில் உடல் வெளியே தெரிந்தால் அதே பத்திக்கிச்சு கேசால் உடல் வெப்பமாகும், ஹி ஹி ஹி.
3. சென்னையில் விதிப்படி ஆட்டோ, பைக் விட எங்குமே கட்டணம் கிடையாது என்று ஒரு ஆட்டோ டிரைவர் கூறினார். உண்மையா?
பதில்: எனது நண்பர் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரிடம் விசாரித்தேன். அப்படியெல்லாம் கிடையாது என மறுக்கிறார் அவர்.
4. நிறுவனங்கள், அலுவலகங்கள் இருக்கும் கட்டிடங்களில் பார்க்கிங் வசதி கட்டாயம் செய்து கொடுக்கவேண்டும் என்று வரைமுறை இருக்கிறதா? (கேபிள் சங்கர் சார் பதிவைப் பார்த்தவுடன் தோன்றியது)
பதில்: இந்தப் பதிவைத்தானே சொல்கிறீர்கள்? கட்டிடங்களில் செயல்படும் அலுவலகங்களுக்கு வரும் வண்டிகள் நிறுத்த ஏற்பாடு செய்வது கட்டிடம் கட்டுபவரின் பொறுப்பு. ஆனால் அதையெல்லாம் யார் பார்க்கிறார்கள்? இம்மாதிரி சட்டங்கள் இருப்பதே அவற்றை மீறும் செயல்களால்தான் தெரிய வருகிறது. அதற்காகவே நான் கார் வாங்கவில்லை.
5. பாலியல் குற்றங்களைத் தடுக்கும் அரசு, அதற்கு வடிகால் ஏதும் இல்லாததைப் பற்றி எண்ணாதது ஏன்? (புரியும் என்று நினைக்கிறேன்... பாலியல் தொழிலிக்கு அங்கீகாரம் குடுப்பது பற்றி)
பதில்: எப்படி ஆண்/பெண் இருபாலருக்கும் வடிகால் தேவை என்பீர்களா அல்லது வழமை போல ஆண்கள் பார்வை கோணத்திலிருந்துதான் பார்ப்பீர்களா? கணிகைகள் வந்தால் கணிகன்களும் வருவார்கள். பரவாயில்லையா?
ரமணா 1. பாதாள சாக்கடைதிட்டம் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சேவைக்கட்டணம் கொட்டப் போகிறாதா?
பதில்: உள்ளாட்சி அமைப்புகள் சேவைசார்ந்த துறையில் வருகின்றன. அவை வணிக நிறுவனங்கள் இல்லை.
2. டீசல் விலை ஏற்றியவுடன் ஆம்னி அதிபர்கள் ஏற்றும் கட்டணத்தை, அரசு விலைகுறைப்பு செய்த பின்னும்(பலதடவை) குறைக்க மனம் வருவதில்லையே ஏன்?
பதில்: ஆம்னி பஸ்களுக்கு முறையான பஸ் பெர்மிட்டுகள் தந்தால் அவற்றால் இஷ்டத்துக்கு விலையுடன் விளையாட இயலாது. கமெர்ஷியல் வரி பதிவு எண்களுடன் விலைகள் அச்சடித்த டிக்கெட்டுகள் தர வேண்டியிருக்கும். அதிலேயே பாதி போக்கிரித்தனங்கள் குறையும். அரசு போக்குவரத்துக்கும் நல்ல போட்டி இருக்கும். ஆனால் செய்ய மாட்டார்கள். கொள்ளையடிப்பதில் ருசி கண்டு விட்டார்கள் அல்லவா. நண்பர் அதியமான் இது பற்றி நிறைய எழுதியுள்ளார்.
4. தண்ணிர் விலை ஒரு லிட்டர் ரூபாய் 15, ஆனால் பால் விலை? அவர்களின் கோரிக்கை நியாயம்தானே?
பதில்: தண்ணீரை பாலில் கலக்கிறார்கள் என்ற அரதப்பழசு விஷயத்தைத் தவிர்த்து பால் விலைக்கும் தண்ணீர் விலைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. தேவை, அளிப்பு ஆகியவற்றின் கூட்டு விளைவுதான் ஒரு பொருளின் விலை.
5. தமிழ்மணத்தில் ஒட்டுப்போட ஓபன் ஐடி தேவை. ஓட்டுக்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதே - உங்கள் விமர்சனம்?
பதில்: இத்தனை நாட்கள் வந்த நூற்றுக்கணக்கான ஓட்டுகளுக்கு பின்னால் எத்தனை புருடாக்கள் உள்ளன என்பதை அறிந்து கொள்வோம்.
எம்.கண்ணன் 1. காய்கறிகள், பலசரக்குகள் வாங்குவது - ரிலையன்ஸ் ஃபிரஷ் போன்ற பெருங்கடைகளிலா / அங்காடிகளிலா, பக்கத்து தெருவில் இருக்கும் அண்ணாச்சி கடைகளிலா இல்லை தள்ளுவண்டி, ஸ்டேஷனோரம் கூடையில் விற்கும் தினசரி விற்பனையாளர்களிடமா? ஏன்? என்ன விதமான சாதக, பாதகங்களைப் பார்க்கிறீர்கள்?
பதில்: பெருங்கடைகள் மற்றும் அங்காடிகளில் சாய்ஸ் அதிகமாக இருக்கும். அதுவே சாதகம், அதுவே பாதகம். சில சமயம் தேவைக்கும் மேலே வாங்கி விடும் அபாயம் உண்டு. நாம் பேரம் பேச வேண்டிய நிர்ப்பந்தம் இல்லையென்பது ஆண்களுக்கு பாதகம், பேரத்தை விரும்பி செய்யும் பெண்களுக்கு பாதகம். எங்கள் வீட்டு வாசலுக்கே இரு வியாபாரிகள் தள்ளுவண்டிகளில் வருவார்கள். காலை/மாலை உலாவச் செல்லும்போது மீனம்பாக்கம் ரயிலடியில் புது காய்கறிகள், பழங்கள் கிடைக்கும். மாம்பலத்திலிருந்து மின்வண்டியில் வரும்போது ஓடும் ரயிலிலேயே வியாபாரிகள் வருவார்கள். ஆக என்னைப் பொருத்தவரை சமயத்திற்கேற்ப நடந்து கொள்வதே சரி.
2. மீண்டும் ஜெயமோகன், சாரு யுத்தங்கள் துவங்கிவிட்டனவே? பதிவர்களுக்குக் கொண்டாட்டம்தானே ? அதுவும் ஜெயமோகன் அமெரிக்கா ஐடினரரி எல்லாம் போட்டு தூள் கிளப்புவதில் புகை ஜாஸ்தியாகுமே?
பதில்: இல்லையா பின்னே? இங்கே பதிவர் வட்டத்திலேயே தீபா, சென்ஷி (அடங்குடா நாயே பதிவு போட்டவர்), அபி அப்பா, ஆதிஷா ஆகியோரது குடுமிப்பிடி சண்டையே இத்தனை தூள் கிளப்பியதே. ஜே சாரு சண்டை மட்டும் என்ன சளைத்ததா என்ன?
3. பிளேடு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? அதற்கு முன்பு வரை அந்தக் காலத்தில் (ராஜா காலங்களில்) எப்படி சவரம் செய்யப்பட்டது?
பதில்: ரேஸர் பிளேடுகளுக்கு இந்தப் பக்கத்துக்கு செல்லுங்கள். ஒட்டு மொத்தமான சவரம் பற்றிய தகவல்களுக்கு இங்கே பார்க்கலாம்.
4. பெண்கள் ஷேவ் செய்வதற்கென்றே பலப்பல புது ஐட்டங்கள் மார்க்கெட்டில் (பெரும்பாலும் சூப்பர் மார்க்கெட்டுகளில்) வந்துவிட்டனவே ? எனினும் நமது தென்னிந்திய நடிகைகள் கையில்லா உடைகள் அணிந்து நடிக்கும்போது அவ்வளவு க்ளீன் ஷேவாக இருப்பதில்லையே ? (ஹாலிவுட், பாலிவுட் நடிகைகள் ஸ்லீவ்லெஸ் படங்களைப் பார்த்தால் வித்தியாசம் தெரியும்). (எ.கா: சென்ற வார குமுதம் 6ஆம் மற்றும் 49ஆம் பக்க படங்கள்)
பதில்: ஒரு பெண்ணிடம் இத்தனை கவர்ச்சிகரமான முன்னணி மற்றும் பின்னணி அம்சங்கள் இருக்கையில் இதையா போய் பார்ப்பது? நான் அதற்கெல்லாம் ஆள் இல்லை.
5. (துக்ளக் தவிர) தற்போது பத்திரிக்கைகளில் வரும் கேள்வி பதில் பகுதி எந்த பத்திரிக்கையில் நன்றாக வருகிறது ? ஹாய் மதன், அரசு பதில்கள், தராசு பதில்கள் என எல்லாமே செம மொக்கையாக இருக்கிறதே?
பதில்: லோகோ பின்ன ருசி.
6. பாலகுமாரன் 'குரு' தேவை என்கிறார். உங்களுடைய 'குரு' என்று யாரைக் கூறுவீர்கள்? ஏன்?
பதில்: இதுவரை என்னுள் விசேஷமான தேடல்கள் ஏதும் இல்லை. ஆகவே குரு தேவைப்பட்டதில்லை. மற்றப்படி குரு தேவையா இல்லையா என்பது அவரவரே முடிவு செய்ய வேண்டியது.
7. கலைஞர் டிவியை இப்போது யார் நடத்திவருகிறார்கள்? இன்னும் ஏன் தினமும் சன் டிவீக்குப் போட்டியாக படங்களும், பாடல்களும்?
பதில்: இது பற்றி அதிக விஷயம் தெரிந்த லக்கிலுக்குக்கு ஃபோன் போட்டு கேட்டதில் ஆள் வைத்து நடத்தினாலும் கலைஞரின் நேரடி கண்ட்ரோல் அதுபாட்டுக்கு இருக்கிறது, ஏதேனும் தவறு நேர்ந்தால் அவரது போன்கால் உடனே சீறி வருகிறது என அறிந்தேன். சன் டிவியை காப்பியடிக்கும் காரணமே அவர்களது ஃபார்முலா வொர்க் அவுட் ஆகிறது என்பதாலேயே. சன் டிவி எந்த ஊரில் இருந்து ஆப்பரேட் செய்தாலும் உள்ளூர் ருசிக்கேற்ப செயல்படுகின்றனர். அதாவது பக்கா லோக்கலைசேஷன். அது இல்லாததாலேயே விஜய் சோபிக்க இயலவில்லை.
8. இந்த கேள்வியிக்கு பதில் சொல்லும் நீங்களும், இந்தப் பதிவை படிக்கும் பலரும் நன்கு படித்த நல்ல வேலையில் (இருந்த் அல்லது) இருப்பவர்கள். அப்படிப்பட்டவர்களாலேயே சில பல லட்சங்கள் தாண்டி தங்கள் வீட்டு மற்றும் சொந்தக் கணக்குகளை சரியாக வைத்துக்கொள்ள தடுமாறும் போது, பெரும்பாலும் அவ்வளவு படிக்காத அரசியல்வாதிகள் எப்படி பல்லாயிரம் கோடிக்கான பட்ஜெட்டுகள் போடுகிறார்கள் - சமாளிக்கிறார்கள்? என்னதான் அதிகாரிகள் துணை என்றாலும் இவ்வளவு ஆயிரம் கோடிகளை புரிந்துகொள்ளவும் ஒரு திறமை வேண்டுமே?
பதில்: எல்லோருமே எல்லா விஷயங்களையுமே தெரிந்து கொள்ள இயலாதுதானே. பட்ஜெட்டுகள் போடுவதற்கென்றே அந்தந்த துறைகளில் பழ்ம் தின்னு கொட்டை போட்டவர்கள் உள்ளனர். அவர்களுக்கு இதைத் தவிர வேறு வேலையில்லை. பிறகு புள்ளிக் கோடுகளுக்கு கீழ் கையொப்பமிடுவதுதான் பாக்கி. அந்தந்த அமைச்சருக்கு புரியும் அளவில் சுருக்கங்களும் தரப்படுகின்றன. அப்படியே ஒரு நிபுணர் தவறு செய்தாலும் அவரை மந்திரியிடம் போட்டுக் கொடுக்க ஒரு கோஷ்டியே கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு பார்த்து கொண்டிருக்கும். ஆகவே மந்திரிகள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை.
9. சென்னையிலிருந்து நெல்லைக்கு செல்கிறீர்கள் (உங்கள் உள்ளம் கவர் கள்வனைக் காணத்தான்!). தனியார் ஆம்னி பஸ் அல்லது அரசு பஸ்ஸில், விஜயின் அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு மூன்று படங்களையும் தொடர்ச்சியாகப் போடுகிறார்கள். என்ன செய்வீர்கள்? இது மாதிரியான படம் பார்க்கும் வாய்ப்பினை யாருக்கு அளிக்க விரும்புவீர்கள் :-)?
பதில்: நான் இம்மாதிரி யாத்திரைகளுக்கு “எனது காரில்தான்” செல்வேன். ஆகவே நீங்கள் கேட்கும் கேள்விக்கு வாய்ப்பேயில்லை. மற்றப்படி அழகிய தமிழ்மகன் படத்துக்கு என்ன குறைச்சல்?
10. தனியார் மற்றும் அரசு பஸ்களின் இந்த வீடியோ தொல்லை தாங்க முடிவதில்லையே ? இரவில் தூக்கம் கெடும் அளவிற்கு இந்தப் படங்களை ஓட்டுவதை எதிர்த்து டிராபிக் ராமசாமி போல் யாரும் வழக்குப் போடுவதில்லையா?
பதில்: சமீபத்தில் 1975 வாக்கில் வந்த ஷோலே படத்தில் குதிரை வண்டியோட்டியான ஹேமமாலினி வளவளவென பேச, தர்மேந்திரா ஹா என ஜொள் விட்டுக் கொண்டு கேட்க, அமிதாப் பச்சன் இரண்டு காதுகளுக்கும் பஞ்சடைத்து கொண்டு தூங்குவார். அந்த சீனை சிறிது நேரம் லாங் ஷாட்டிலும் காட்டுவார்கள். அப்போதும் ஹேமமாலினியின் குரல் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திலிருந்து கணீரென கேட்கும். நீங்கள் தர்மேந்திராவா அல்லது அமீதாப்பா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்களேன். அதையெல்லாம் விட்டுவிட்டு ட்ராஃபிக் ராமசாமி மாதிரி வழக்கெல்லாம் போடுவது வேண்டாத தலைவலியே. அப்படத்தை கீழே பார்க்கலாம்.
அனானி (14.07.2009 காலை 07.15-க்கு கேட்டவர்) 1. Define corruption and its types and explain with living examples?
பதில்: தேன் எடுப்பவன் புறங்கையை நக்குவதே ஊழல். உதாரணங்கள் எல்லா இடங்களிலும் எக்காலகட்டத்திலும் காணலாமே.
2. What is your opinion about the resignation of Metroman Mr E Sridharan ?
பதில்: அவர் தரப்பிலிருந்து அது ஒரு சமிக்ஞை. ஆனால் அதுதான் ஏற்றுக் கொள்ளப்படவில்லை போலிருக்கிறதே.
3. Offense is the best defense - your view and comment?
பதில்: சமீபத்தில் 1967-ல் ஆறு நாள் யுத்தத்தில் இஸ்ரேல் செய்ததுதான் அது.
4. Kerala CM V. S.Achuthanandan out of Polit Bureau -what next?
பதில்: இரா முருகன், ஜெயமோகன் போன்ற கேரள அரசியல் தெரிந்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி.
5. poverty makes ignorance or ignorance makes poverty - which is true?
பதில்: இரண்டுமே சரி. பல சந்தர்ப்பங்களில் ஒன்றுடன் இன்னொன்று சார்ந்து ஒரு விஷச்சூழலை உருவாக்குகின்றன.
6. Why number 13 is considered as unlucky.
பதில்: இந்தப் பக்கத்தில் சுவாரசியமான பதில் ஒன்று உள்ளது.
7. What do you think about Naxalism - Terrorism - Social revolt of the deprived?
பதில்: பணக்காரர்கள் எல்லோருமே கெட்டவர்கள், ஏழைகள் எல்லோருமே நல்லவர்கள் என்னும் ரொம்பவும் தட்டையான சிந்தனையின் விளைவுதான் அது. முதலுக்கே மோசம் விளைவிக்கும் செயல்பாடு.
8. What will happen if China attacks India?
பதில்: நீண்ட நாட்கள் இழுத்து கொண்டு போகும் யுத்தம் என்பது சீனாவுக்கும் சரி இந்தியாவுக்கும் சரி, கட்டி வராது. ஆகவே ஏதேனும் தாக்குதல் என வந்தாலும் லோக்கல் அளவில்தான் இருக்கும்.
9. What produces love?
பதில்: இந்த கேள்விக்கு விடையறியாது பலர் வேட்டியின்றி திரிவதாகக் கேள்வி.
10. What is the significance of dream-tell your personal experience?
பதில்: நமது ஆழ்மனத்தில் புதைந்திருக்கும் ஆசைகள் அல்லது பயங்கள் ஆகியவற்றையே கனவுகள் பிரதிபலிகின்றன.
11. Who is responsible for the delay of 26/11 probe? how to set it right?
பதில்: இதில் என்னென்ன உள்குத்து எழவுகள் இருக்கின்றனவோ, யாருக்கு தெரியும்?
12. Why blood pressure flactuates time to time for all?
பதில்: சூழ்நிலைக்கேற்ப உடலின் வெவ்வேறு பகுதிகளுக்கு சப்ளை ஆக வேண்டிய ரத்தத்தின் அளவு மாறுபடும். அதனால் பம்பிங் வேலையும் மாறுதல்களுக்கு உள்ளாகும்.
13. Why great people is called as star all over the world?
பதில்: அவர்களும் நட்சத்திரம் போலவே நம்மை விட மிக உயரத்தில் இருப்பவர்களாக நாம் நினைத்து கொள்வதலேயே.
14. What is the colour of knowledge?
பதில்: Indigo என்று கூறுகிறார்கள், இங்கே.
15. Why plastic carry bag is not hygenic to humanbeings?
பதில்: It is not biodegradable and takes thousands of years to degrade. It chokes up drains, water springs and other waterways.
16. Do u agree in splitting the states into two and tell the merits and demerits?
பதில்: அப்படி என பார்த்தால் உடைத்து கொண்டே போகலாமே. பலன் என பார்த்தால் பல புது போஸ்டுகள் உருவாகும். கெடுதல் என பார்த்தாலும் அதுவேதான்.
17. navratna company-explain the requirements?
பதில்: விடை இங்கு கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
18. Which state Police is functioning o.k?
பதில்: இந்த கேள்விக்கான விடை தெரியவில்லை.
19. will it be possible to forget our past and wholly concentrate on present for a common man?
பதில்: முடியுமா என்று கேள்வி கேட்டு கொண்டிருக்கக் கூடாது. முடிய வேண்டும் என்பதே நிஜம்.
20. Suggest simple ways to stay healthy at the age of 60?
பதில்: மனதின் வயது 25-ஐ தாண்டாமல் பார்த்து கொள்ளுங்கள். மீதி தானாகவே வரும்.
அனானி (15.07.2009 காலை 07.07-க்கு கேட்டவர்) 1. கவி அரசின் இந்த பாடல் வரிகளை கேட்கும்போது என்ன உணர்வு மேலோங்குகிறது?
பதில்: 1981-ல் அவர் மறைந்த பிறகு பிறந்தவர்கள் பலருக்கு கிடைக்க முடியாத பேற்றினை பெற்றவர்கள் என் போன்றவர்கள். கவியரசு செயலில் இருந்து எழுதும்போது நேரடியாகவே அனுபவித்தவர்கள் என்ற நன்றியுணர்வே மேலோங்குகிறது.
a. ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
பதில்: அவ்வாறு இல்லாதவர்கள் எப்போதுமே டென்ஷனில் இருப்பதைத்தான் பார்க்கிறோமே.
b. உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்...
பதில்: ஆம் அதுதான் ஆண்டவன் கட்டளை.
c. அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்
பதில்: ஆகவே காண்பதற்கு அரியவன்.
d. வந்தவரெல்லாம் தங்கி விட்டால் - இந்த மண்ணில் நமக்கெ இடமேது?
பதில்: ஆம், ரொம்ப போர் வேறு அடிக்குமே.
e. ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா?
பதில்: இதைத்தான் ஸ்மசான வைராக்கியம் என்பார்கள்.
f. பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெறுவார் - அதிசயம் காண்பார்
பதில்: மலராத பெண்மை மலரும், முன்பு தெரியாத உண்மை தெரியும் என்றும் கூறலாம்.
g. அன்புக்கோ இருவர் வேண்டும் அழுகைக்கோ ஒருவர் போதும் இன்பத்துக்கிருவர் வேண்டும் ஏக்கத்துக்கொருவர் போதும்.
பதில்: அந்தந்த தேவைக்கு அந்தந்த அளவுக்கு பங்கேற்பார்கள். அதே கண்ணதாசன் எழுதினார், “ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா, இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா”
h. சொத்து சுகம் நாடார், சொந்தந்தனை நாடார் பொன்னென்றும் நாடார், பொருள் நாடார், தான்பிறந்த அன்னையையும் நாடார், ஆசைதனை நாடார், நாடொன்றே நாடித்தன் நலமொன்றும் நாடாத நாடாரை நாடென்றார்.
பதில்: பள்ளிச்சாலை தந்த ஏழைத் தலைவனுக்கு இதைவிட அருமையாக அஞ்சலி செலுத்தவியலுமா?
i. ஒரு கோல மயில் என் துணையிருப்பு இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு
பதில்: பாரசீகக் கவிஞன் ஓமர்கய்யாமுக்கு தமிழ் தெரிந்திருந்தால் இதை தனது வரிகளின் சிறந்த மொழிபெயர்ப்பாக ஏற்றுக் கொண்டிருப்பார்.
j. உண்டென்றால் அது உண்டு இல்லையென்றால் அது இல்லை
பதில்: கலர் டிவி கிடைச்சாலும் கிடைக்கும், கிடைக்காமலும் போகலாம். ஆகவே உண்டென்றால் அது உண்டு இல்லையென்றால் அது இல்லை. :)))))))
அனானி (15.07.2009 காலை 09.53-க்கு கேட்டவர்) 1. திருமதி. மன்மோகன் சிங்கும் திருமதி சர்கோசி (கார்லா ப்ரூனி) யும் பிரெஞ்சு தேசியதினத்தில் என்ன பேசியிருப்பார்கள் என ஜூ.வி டயலாக் டைப்பில் உங்கள் கற்பனையை வெளிப்படுத்துங்களேன்? (பார்க்க இன்றைய ஹிண்டு கடைசி பக்க போட்டோ). -இந்தியில் இவரும் பிரெஞ்சில் அவரும் சொல்வதாக போட்டால் பேஷ்.
பதில்:
கார்லா: (ஃபிரெஞ்சில்) பரேடில் இந்தியர்கள் மார்ச் செய்யும் போது பேண்ட்காரர்கள் என்ன ட்யூன் வாசிக்கிறார்கள் என்பதை கூற இயலுமா?
திருமதி மன்மோகன் சிங் (ஹிந்தியில்): இது “சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா” என்று ஒலிக்கும் தமிழ்ப்பாட்டு. (அவர்கள் இருவருக்குமிடையே துபாஷியாக செயல்பட்ட டோண்டு ராகவன் இங்கே எல்லாவற்றையும் தமிழிலே தருகிறான் என்பதைக் கூறவும் வேண்டுமோ?).
2. இதுநாள் வரை இந்திய குடியரசு தினத்தில் நாம் தான் பல்வேறு நாட்டு தலைவர்களை அழைத்து 3 மணிநேரம் உட்காரவைத்து அணிவகுப்பை பார்க்க வைப்போம். ஒரு இந்தியப் பிரதமரை ஒரு வளர்ந்த நாடு தங்கள் தேசிய தினத்தில் கூப்பிடுவது இது தான் முதல் முறையா?
பதில்: அப்படியெல்லாம் இல்லையே. இந்த மாதிரி அயல் நாட்டினரை தத்தம் தேசீய தினத்துக்கு சிறப்பு விருந்தினராக அழைப்பது எல்லா நாடுகளிலும் உண்டு என்றுதான் நினைக்கிறேன்.
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
L’être humain et ses choix
-
L’être humain et ses choix – Krishna Nagarathinam
Le fait de naître et de mourir est commun aux êtres des espèces vivantes.
L’idéo...
பழமொழி
-
ஒரு பழமொழி என்பது, எளிமையானதும் மரபுவழி வழங்கி வருவதுமான கூற்றுமொழி ஆகும்.
அது ஏழை எளியோரிடத்திலே, இடம், பொருள், ஏவல் உள்ளிட்ட எந்தப் பாசாங்குகளுமற்ற
மக...
நிரந்தரமானவன் [தே. குமரன்]
-
ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது வானில் மிதக்கும் அனுபவமும், அது
துண்டிக்கப்பட்டு திடீரென்று கீழே விழுந்த அனுபவமும் ஒரே நேரத்தில் வாய்க்கும்
என எவரேனும் சொல்...
தமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்
-
சொன்னால் விரோதம். ஆயினும் சொல்லுவேன்.
இன்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஐராவதம் மகாதேவனின் தமிழ் பிராமிக்
கல்வெட்டுகள் தொகுப்பைப் பார்த்துக்கொண்டிருந்தேன்...
இரண்டு புள்ளி பூஜ்ஜியம் - ஒரு பார்வை
-
கதை என்ன என்றால் பெரிதாக ஏதுமில்லை. இந்தியன், அந்நியன் உள்ளிட்ட சங்கர்
படங்களின் அடிப்படை. தான் விரும்பும் நேசிக்கும் ஒரு விஷயத்தை சமூகம்
மதிக்காது போக கோ...
நைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்!
-
நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது
புரிந்துகொள்கிறார்? யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை
அனுபவிக்கும் போது அல்லத...
Einige Angela Merkel Witze
-
Eine beiäufige Erwähnung seitens Kevin Lossner hat mich auf die Witze
über die deutsche Bundeskanzerin Angela Merkel aufmerksam gemacht. Sehen
wir zuerst...
I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.