புதுக்கோட்டுக்கு ஜூட் - 2
எனது முதல் புதுக்கோட்டுக்கு ஜூட் பதிவுக்கு பெயர் தானம் செய்த என் பெரியப்பா பிள்ளை அம்பி ராகவன் ஜெயின் கல்லூரியில் பி.யூ.சி. மற்றும் பி.எஸ்.சி. படித்தான். என்.சி.சி.யில் மிகுந்த ஆர்வம் உடையவன் (நான் இதில் அவனுக்கு நேரெதிர், ஆனால் அது இப்பதிவுக்கு வேண்டாம்). Corporal ரேங்க் வரைக்கும் வந்தான். அவனை குவார்ட்டர் மாஸ்டராக போட்டார்கள். அதாவது மாணவர்களுக்கு இஷ்யூ செய்யும் எல்லா உருப்படிகளுக்கும் கணக்கு வைத்தல். ஒரு மாதிரி ஸ்டோர்கீப்பர் என வைத்து கொள்ளலாம். அப்போது அவன் என்னிடம் சொன்ன விஷயத்திலிருந்து இப்பதிவை ஆரம்பிக்கிறேன்.
அவனுக்கு முன்னால் இருந்த குவார்ட்டர் மாஸ்டர் ஒரு குசும்பு வேலை செய்தான். அதாவது ஒவ்வொருவருக்கும் இரண்டு செட்டுகள் யூனிஃபார்ம் கொடுப்பது வழக்கம். சில மாணவர்கள் ஆர்வக் கோளாறில் தாங்களாகவே அதிகப்படியாக ஒரு செட் தைத்து கொள்வார்கள். இதை தெரிந்து கொண்ட அந்த பழைய குவார்ட்டர் மாஸ்டர் ஓசைப்படாமல் யூனிஃபார்ம் அளித்த பட்டியலில் சம்பந்தப்பட்டவர்கள் பெயருக்கு நேராக 2 என்பதை 3 என திருத்தி விட்டான். எல்லாமே சும்மா ரவுசுக்குத்தான் செய்திருக்கிறான். இருந்தாலும் கடைசி ஆண்டை முடித்து விட்டு போய் விட்டான். அவன் எண்ணிக்கையை சரி செய்த மாணவர்கள் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு மாணவர்கள். அவர்கள் மூன்றாம் ஆண்டு வரும்போதுதான் யூனிஃபார்ம்களை திரும்பத் தரவேண்டும். அப்போதுதான் இம்மாதிரி மாற்றிய விஷயம் தெரிந்திருக்கிறது. அவர்கள் அம்பி ராகவனிடம் வந்து அழுதிருக்கிறார்கள். என்னதான் புதுக்கோட்டுக்கு ஜூட் எல்லாம் பம்பர விளையாட்டில் செய்திருந்தாலும் அவன் பொது வாழ்வில் நெருப்பு மாதிரி. அவர்கள் சொல்வது உண்மை என தெரிந்து ரொம்ப ஃபீலிங்ஸ் ஆனான். இருந்தாலும் பிரச்சினை வெடித்த சமயம் சற்றே நாசூக்காக நிலைமையை சமாளிக்க வேண்டியிருந்தது.
புத்திசாலித்தனமாக ஒன்று செய்தான். டோட்டலை செக் செய்தான். நல்ல வேளையாக முன்னால் திருத்திய பையன் டோட்டலில் கைவைக்கவில்லை. டோட்டல் டாலியாகாமல் போனதையும், சாதாரணமாக இரண்டு செட்டுகளுக்கு மேல் யாருக்கும் யூனிஃபார்ம் தருவதில்லை என்ற நடைமுறையை வைத்தும் என்.சி.சி.க்கு பொறுப்பு வகித்த கல்லூரி ஆசிரியரை கன்வின்ஸ் செய்தான். மாணவ்ர்களும் அவனிடம் நன்றியாக இருந்தனர்.
இந்த புதுக்கோட்டுக்கு ஜூட் விடும் விஷயம் மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்தே நடந்து வந்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்னால் கல்கியில் படித்த ஒரு நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வருகிறது. சாதி கட்டுப்பாடுகள் நிறைந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஒரு சமயம் ஒரு கிராமத்தில் பத்து நாட்கள் விடாமல் மழை பெய்து பெரிய வெள்ளம் வந்தது. ஊரை ஒட்டிச் சென்ற நதியில் ஒரு எருமையின் அழுகிய பிணம் இந்த ஊருக்கருகில் புதரில் மாட்டி கரையில் ஒதுங்கி விட்டது. ஊரே நாறிவிட்டது. எந்த சாதியினர் அதை எடுப்பது என்ற பிரச்சினை வந்தது. இம்மாதிரி விஷயம் இது வரை நடந்ததே இல்லை. ஊர் நாட்டாமை கணக்கப் பிள்ளையை அழைத்து பழைய ஓலைச்சுவடிகளில் இது மாதிரி ஏதாவது நிகழ்ச்சி நடந்ததாக கூறப்பட்டுள்ளத்தா, அவ்வாறு இருந்தால் அப்போது என்ன செய்தார்கள் என்பது அதில் சொல்லப்பட்டுள்ளதா என பார்க்க சொன்னார். கணக்கு பிள்ளைக்கும் உள்ளூர் குயவர்களுக்கும் மனத்தாங்கல் ரொம்ப நாட்களாகவே. இவர் ஒரு காரியம் செய்தார் ஓலைச்சுவடு கட்டுகளை புரட்டினார். அதில் சில பழைய எழுதப்படாத ஓலைகள் இருந்தன. அவற்றில் ஒன்றை எடுத்து பாட்டாக பின்வருமாறு எழுதினார்.
வானம் பிளந்து மாரிபொழிந்து
பல நாட்கள் மக்கள் அல்லலுற்று
துயரம் கொள்ள வெள்ளத்தில் செத்த எருமை
அழுகிக் கரை ஒதுங்க அதை எடுக்கும் கடன்
புத்தம்புது பானைகள் செய்யும் குயவருக்கே
அவருக்கு ஒரு கலம் நெல் அளிக்கும் கடன் ஊராருக்கே
பிறகு எழுதிய ஓலையை மண்ணில் புரட்டி வைத்தார். கூடவே மற்ற ஓலைகளையும் அவ்வாறே வைத்தார். நாட்டாமை ஊர்க்காரர்கள் புடைசூழ அவர் இருக்கும் இடத்துக்கு வந்து ஏதேனும் தகவல் கிடைத்ததா எனக்கேட்க, அவரும் அவர் எதிரிலேயே மேலே சொல்லப்பட்ட அத்தனை ஓலைகளயும் மண்ணைத் தட்டி எடுத்து நீரில் கழுவி ஒவ்வொன்றாக உரக்கப் படித்தார். பல ஓலைகளுக்கப்புறம் கடைசி ஓலையாக மேலே சொன்ன பாடலை எழுதி வைத்திருந்த ஓலையை படித்தார்.
பிறகென்ன, குயவர்கள் தம் தலைவிதியை நொந்து கொண்டு எருமையை அடக்கம் செய்ய வேண்டியதாயிற்று. “அது சரி, நெல்லாவது குடுத்தாங்களா”ன்னு கேட்கும் முரளி மனோஹருக்கு சீரியஸ்னெஸ்ஸே இல்லை என விசனப்பட வேண்டியிருக்கிறது.
அன்புடன்
டோண்டு ராகவன்
ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அக்காதமி
-
ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 என்னும்
நூலுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டுள்ளது. ஓர்
ஆய்வ...
2 hours ago
14 comments:
//ஊர் நாட்டாமை கணக்கப் பிள்ளையை அழைத்து பழைய ஓலைச்சுவடிகளில் இது மாதிரி ஏதாவது நிகழ்ச்சி நடந்ததாக கூறப்பட்டுள்ளத்தா, அவ்வாறு இருந்தால் அப்போது என்ன செய்தார்கள் என்பது அதில் சொல்லப்பட்டுள்ளதா என பார்க்க சொன்னார். கணக்கு பிள்ளைக்கும் உள்ளூர் குயவர்களுக்கும் மனத்தாங்கல் ரொம்ப நாட்களாகவே. இவர் ஒரு காரியம் செய்தார் ஓலைச்சுவடு கட்டுகளை புரட்டினார். அதில் சில பழைய எழுதப்படாத ஓலைகள் இருந்தன. அவற்றில் ஒன்றை எடுத்து பாட்டாக பின்வருமாறு எழுதினார்.//
அவர் திருநெல்வேலி சைவப் பிள்ளைமார் வகுப்பை சார்ந்தவரா?
பொதுவாய் மதுரை,ராமனாதபுரம்.நெல்லை மாவட்டங்களில்
கர்ணம்- சைவ முதலியார்
கணக்கப் பிள்ளை-சைவப் பிள்ளைமார்
நாட்டாமை-தேவர் சமுகம்
எம்.ஜி.ஆர் கோபத்தில் இந்தப் பதிவிகளை விட்டு இவர்களை விலக்கினார் என்பார்களே?
//அவர் திருநெல்வேலி சைவப் பிள்ளைமார் வகுப்பை சார்ந்தவரா?//
ரொம்ப முக்கியம். அனானி, முரளிமனோஹரே தேவலை போலிருக்கே. :))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
//dondu(#11168674346665545885) said...
//அவர் திருநெல்வேலி சைவப் பிள்ளைமார் வகுப்பை சார்ந்தவரா?//
ரொம்ப முக்கியம். அனானி, முரளிமனோஹரே தேவலை போலிருக்கே. :))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்//
சார் என்ன அப்படி சொல்லிவிட்டீர்கள்.
திருநெல்வேலி சைவப் பிள்ளை வகுப்பினர் ராஜ தந்திரதிலும் வல்லவர்கள் எனப் படித்துள்ளேன்.
இந்த யூக்தியைப் பார்த்ததும்
அப்படி ஒரு கேள்வி
http://sathirir.blogspot.com/2008/12/blog-post_305.html
அங்கே பதில் சொல்லாம எஸ்கேப்பா?
//அங்கே பதில் சொல்லாம எஸ்கேப்பா?//
பதில் சொல்லியிருக்கிறேனே? ஆனால் ஒன்று, அநாகரிகமாக எழுதும், அவ்வறு எழுதப்பட்டு வந்த பின்னூட்டங்களை அனுமதிக்கும் பதிவருடன் அதற்குமேல் விவாதிக்க இயலாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கேள்விகள்
எம். கண்ணன்.
1) எந்த எந்த பிராண்டு சரக்கு என்ன மாதிரி போதையையும், நறுமணத்தையும் (!) தரும் ? (காண்டு கஜேந்திரனுக்கான கேள்வி உங்களுக்கு ரீடைரக்ட் ஆகிவிட்டது :-) )
கிங் ஃபிஷர் முதல் ஓல்ட் மாங்க், ரெட் லேபல், ஷீவாஸ் ரீகல், வோட்கா, ரம், பிராந்தி, விஸ்கி, என்ன எல்லா வகைகளையும் தொட்டுக் காட்டினால் நன்று
2) கமல் நற்பணிமன்ற தலைவராக (பல ஆண்டுகள்) இருந்த ர.குணசீலனை கமல் தூக்கியது - சரிதானே ? கமலின் தனிப்பட்ட வாழ்க்கையை ர.கு வெளியே சொல்லலாம் என்ற பயம் கமலுக்கு இல்லையா ?
3) யாத்ராவுக்கே 2 வயசாகப்போகுது - இன்னும் ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க வேண்டும் என ரஜினி அடம்பிடிப்பது ஏன் ? அதுவும் ஐஸ்வர்யா ராய்க்கு நடிப்பு வராது + அழகும் தற்போது கெட்டுவிட்ட நிலையில் ?
4) சுஜாதா எழுதிய தொடர்கதைகளிலேயே (வார இதழ்களில் வந்த) உங்களுக்குப் பிடித்த தொடர்கதை எது ஏன் ? எந்தக் கதையை மீண்டும் மீண்டும் படித்ததுண்டு ? அதில் ஜெயராஜ்
ஓவியம் இருந்திருந்தால் எந்த ஓவியம் பெஸ்ட் ?
5. அன்புமணி ராமதாஸ் தமிழக முதலமைச்சரானால் தமிழகத்திலிருந்து சிகரெட்டையும் மதுவையும் ஒழித்துவிட ஆசைப் படுகிறார். முடியுமா ? உங்கள் நிலை என்ன ?
6. தற்போதைய பெண் திரைப்பாடல் பாடகிகளின் குரல்கள் பெரும்பாலும் ஆண் குரல் போன்றே இருக்கிறதே ? ஒரு சுசீலா, ஜானகி, சித்ரா, வாணி ஜெயராம், ஜென்சி, உமா ரமணன், சாதனா சர்கம், ஷ்ரேயா கோஷல் போன்ற இனிமை காணக் கிடைப்பது அரிதாகிவருகிறதே ? இதற்கு என்ன காரணம் ?
//Corporal ரேங்க் வரைக்கும் வந்தான். அவனை குவார்ட்டர் மாஸ்டராக போட்டார்கள்.//
ஸ்மார்டாக இருப்பவர்களுக்கு எப்பாதும் கிடைக்கும் தண்டனை அது.
எங்கேயும் மொக்கை பதவி தான் கிடைக்கும்
//அவனுக்கு முன்னால் இருந்த குவார்ட்டர் மாஸ்டர் ஒரு குசும்பு வேலை செய்தான்.//
அவன் என்னை போல குவாட்டர்(சரக்கு) மாஸ்டராய் இருந்திருப்பான்
//எந்த எந்த பிராண்டு சரக்கு என்ன மாதிரி போதையையும், நறுமணத்தையும் (!) தரும் ? (காண்டு கஜேந்திரனுக்கான கேள்வி உங்களுக்கு ரீடைரக்ட் ஆகிவிட்டது :-) )
கிங் ஃபிஷர் முதல் ஓல்ட் மாங்க், ரெட் லேபல், ஷீவாஸ் ரீகல், வோட்கா, ரம், பிராந்தி, விஸ்கி, என்ன எல்லா வகைகளையும் தொட்டுக் காட்டினால் நன்று
//
சில பிராண்டுகளை நான் தொட்டிருக்கிறேன்!? என்ற முறையில் என் பதில்கள்.
பீர்= இந்தியாவில் கிடைக்கும் பீர்கள் அனைத்தும் குறைந்த ஆல்ஹகால் கொண்டவை, புளிப்பும், கசப்பும் கலந்த சுவை, குளிராக இல்லையென்றால் கசப்பே பிரதானம்
ரம்= கசப்பு தன்மையுடையது, கருப்பு நிறத்தில் கசாயம் போல இருப்பதால், பெரும்பாலான தொழிலாலர்கள் இதை தான் விரும்புகிறார்கள். உடல் அலுப்பை தீர்க்கும் இதன் போதையே அதற்கு காரணம். ஜ்யோவ்ராம் சுந்தர் என்ன அடிப்பார்னு எனக்கு தெரியாது
பிராந்தி= லேசான இனிப்பும், தொண்டையை பிடிக்கும் அமில தன்மையும் உடையது, தங்க நிறத்தில் இருப்பதால் இது தான் எனது விருப்ப சரக்கு. அடிமையாக்கிவிடும் போதை கொண்டது. சில சரக்குகள் அலர்ஜியை கொடுக்கலாம். சுகர் இருப்பவர்கள் இதை தவிர்க்க வேண்டும்
விஸ்கி= அளவாக சாப்பிட்டால் மருந்து என்று பெயர் வாங்கியது, அதே தங்க நிறம் இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை. பெரிதாக வாசம் இருக்காது, அப்படியே இருந்தாலும் அது சரக்கு வாடை போலவே இருக்காது(காஸ்ட்லி சரக்கு மட்டும்) இந்தியாவில் கிடைப்பது மால்ட் விஸ்கி.
வோட்கா= தண்ணீர் போல இருந்தாலும் கசப்பு தன்மையுடயது, அதை போக்க ஆரஞ்ச், ஆப்பிள் என்று வாசம் சேர்த்திருப்பார்கள், இதில் எனக்கு அவ்வளவு பரிச்சியம் இல்லை
ஜின்= பார்ப்பதற்க்கு வோட்கா போலவே இருக்கும், ஆனால் கசப்புடன் புளிப்பு சுவையுடயது, இது பெண்களுக்கானது என்றும் சொல்வார்கள், காரணம் இது அதிக காட்டமில்லாதது, இதை குடித்தால் ஆண்மை குறைவு ஏற்படும் என்று சொல்வார்கள், அது தவறான தகவல் மேலுல்ல எந்த சரக்கை அடித்தாலும் ஆண்மை குறைவு ஏற்ப்படலாம்.
ரெட் லேபல், ஷீவாஸ் ரீகல், போன்றவை விஸ்கியிலேயே ஸ்காட்ச் வகையை சார்ந்தவை முறையே பதப்படுத்தி வைத்திருக்கும் வருடங்களை பொறுத்து அதன் தரம். மால்ட் விஸ்கியை விட காரம் குறைவாக இருக்கும், வாசம் தூக்கலாக இருக்கும்.
இது என் அனுபவம் மட்டுமே!
எனக்கு கசப்பாக தெரிவது உங்களுக்கு இனிப்பாக தெரியலாம்.
இனி டோண்டு சார் அவருடய அனுபவங்களை கூறுவார்
மிக்க நன்றி வால்பையன் அவர்களே. உங்கள் பதில் எனது பதிவின் வரைவில் ஏற்றப்பட்டு விட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பல நேரங்களில் பல மனிதர்கள்
திரு.டோண்டு ராகவன்: குழும நண்பர்களுக்கு ஒரு செய்தியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
கடந்த வருடத்தில், நான் உயிர்மையில் எழுதிய 13 கட்டுரைகள், தீராநதியில் எழுதிய ஒரு கட்டுரை, அமுத சுரபியில் எழுதிய 4கட்டுரைகள் – மொத்தம் 18 கட்டுரைகள் கொண்ட ஒரு தொகுப்பு பல நேரங்களில் பல மனிதர்கள் என்ற தலைப்பில் உயிர்மை பதிப்பகம் வெளியீடாக சென்னை புத்தகவிழாவுக்கு முன்பாக வெளிவர இருக்கிறது..
புத்தகத்தலைப்பு உபயம் என் நண்பர் வ.ஸ்ரீநிவாஸன். ஜெயகாந்தன் சண்டைக்கு வருவாரா என்று தெரியவில்லை. எனது முதலும் கடைசியுமான இந்த புத்தகத்துக்கு கனம் சேர்ப்பது பல துறைகளிலும் நான் சேர்த்த ஒரே சொத்தான என் நண்பர்களில் பலர் என்னைப்பற்றி உயர்வாக எழுதியிருக்கும் ‘பொய்கள்’. சுமார் 25 பிரபலங்கள் பொய் சொல்லியிருக்கிறார்கள். இதில் பாவண்ணன், அ. முத்துலிங்கம், ஜெயமோகன், நாஞ்சில் நாடன் அடக்கம். தவிர இலக்கியத்துறையிலிருந்து அசோக மித்திரன், இ.பா, ஆ. மாதவன், நீல. பத்மநாபன், கடுகு, வாஸந்தி, எஸ். ராமகிருஷ்ணன், நாடகத்துறையிலிருந்து கூத்துப்பட்டறை ந. முத்துசாமி, வெளி ரங்கராஜன், பேரா. எஸ். ராமானுஜம், வேலு சரவணன், இசைத்துறையிலிருந்து லால்குடி ஜெயராமன், T.V.G., சினிமாத்துறையிலிருந்து பி. லெனின், சத்யராஜ், டெல்லி கணேஷ், அம்ஷன் குமார் போன்றோர் என்னைப்பற்றிய உண்மைகளைத்தவிர்த்து நிறையவே புகழ்ந்திருக்கிறார்கள். நாஞ்சில் நாடன் முன்னுரை எழுதுகிறார். எத்தனை பொய்களை அள்ளி வீசுவாரென்று தெரியவில்லை!
இத்தனை பிரபலங்களை ஒன்றுசேர்த்து ஆயிரம் பொய்களை சொல்ல வைத்த என்னை எத்தனை பாராட்டினாலும் தகும்! நாஞ்சிலிடம் இந்த புகழாரங்களை உயிருடன் இருக்கும்போதே என் Obituary-யாகத்தான் பார்க்கிறேன் என்று தமாஷாக சொல்லப்போக, அவரிடமிருந்து செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டேன். நான் இருந்து அவருக்கு வழி நடத்தவேண்டுமாம்! செய்துட்டா போச்சு!
போனவருடம் யாராவது என்னிடம் என் புத்தகம் வெளிவரும் என்று சொல்லியிருந்தால், அவனை பரிதாபமாக பார்த்திருப்பேன். ஆக்ராவுக்கு இல்லை கீழ்ப்பாக்கத்துக்கு – திருவனந்தபுரமென்றால் ஊளம்பாறை – போகவேண்டியன் என்று தான் நினைத்திருப்பேன். விதி யாரை விட்டது?
இதைப்படித்து விட்டு, எல்லோரும், ‘வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்’ என்று எழுத வேண்டுகிறேன்.
பாரதி மணி
1.ஸ்பெக்டரம் ஊழல் அடுத்த தேர்தலில் வில்லனாய் பிரசன்னமாய் ஆளும் கூட்டணியை பாடாய் படுத்தும் போலுள்ளதே?
2.கலைஞர்-அவரது பிரதான உதவியாளர் சன்முகநாதன் பிரிவு-தலைவரின் குடும்ப ஓற்றுமை சந்தோஷத்தை சற்று குறைத்துவிடும் போலுள்ளதே?
3.பா.ஜ.க திருமங்கல தேர்தலில் மறைமுகமாய் அதிமுக பக்கம் சாயும் போலுள்ளதே?
4.பா.ம.க தி.மு.கவுக்கு பிடி கொடுக்காது போலுள்ளதே?
5.ஒருவேளை அரசின் மீது உள்ளதாய் சொல்லப்படும் கோபத்தால் மக்கள் அதிமுக வை வெற்றி பெறச் செய்து விட்டால் கங்கிரஸ் தி.மு.கவை கை கழுவிவிடும் போலுள்ளதே?
6.விஜயகாந்தும் திருமங்கலத் தொகுதியில் பெரும்பான்மை உள்ள சமுகத்தாரையே வேட்பாளாராக நிறுத்தி உள்ளதால் அவருக்கும் தன் கட்சியின் செல்வாக்கு மேல் முழு நம்பிக்கை இல்லாதது போலுள்ளதே?
7.சரத் குமார் அரசியல் சதுரங்கத்தில் பின் தங்குகிறார் போலுள்ளதே?
8.சன் குழுமம், குடும்ப ஓற்றுமைக்குப் பின் தொழிலில் விஸ்வரூபம் எடுக்கும் போலுள்ளதே?
9.மீண்டும் தளபதி ஸ்டாலினிக்கு முடிசூட்டும் முயற்சிகள் தொடங்கிவிடும் போலுள்ளதே?
10.மதுரை அழகிரியாரின் திடீர் சமதானம் திமுகவுக்கு போட்டியே இல்லை என்ற நிலயை உருவாக்கிவிடும் போலுள்ளதே?
Dondu Sir, questions yet again:
1. Can you enlighten me abut Satyam-Maytas aborted takeover ?
2. India cricket tour of Pakistan has been called off - comments please.
3. Mumbai, Delhi, Chennai - if you have to select only one city to live in, which one will you choose ?
4. Ananda Vikatan's standard is plummeting - agree or disagree ?
5. Hope you are following Badri Seshadri's posts on Pakistan. What is your opinion ? Do you agree with Badri when he says we have to economically help Pakistan ?
http://en.wikipedia.org/wiki/Rajaji
this is the excellent article from the wiki about rajaji. if your time permits please translate in tamil and publish in your blog.
this will clear about the illusions about rajaji
Post a Comment