7/30/2010

தினசரி வாழ்க்கையில் நாம் செய்யும் தவறுகள்

சமீபத்தில் 1960-61 கல்வியாண்டில் நான் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பில் படிக்கும்போது எங்கள் வகுப்பாசிரியர் திரு சங்கரராமன் அவர்கள் ஒரு விஷயம் சொன்னார்.

என்னை போர்டில் ஒரு ஆங்கில வாக்கியம் எழுதச் சொன்னார். நான் எழுதினேன், “The XXth century has witnessed dramatic changes in the way people live". அந்த வாக்கியம் எந்த காண்டக்ஸ்டில் எழுதப்பட்டது என்பது இப்போது நினைவுக்கு வரவில்லை. அதனால் என்ன இப்பதிவு அதைப் பற்றி அல்ல.

உடனேயே ஆசிரியர் சொன்னார், “XXth century” என்று போடுவது தவறு, அது “XX century” என்றுதான் இருக்க வேண்டும். ஏனெனில் XX என ரோமன் எண்களில் குறிக்கும்போதே அது இருபது அல்ல, இருபதாம் என பொருள் வந்து விடுகிறது. அதாவது XX என்பது ஆர்டினல் எண், கார்டினல் எண் அல்ல.

இதை சொன்னபோதே இன்னொன்றும் சொன்னார், பலர் இதே தவற்றை செய்கின்றனர். ஆங்கிலம் எம்.ஏ. படித்தவர்களும் அவர்களில் அடங்குவர் என்று.

அதே போல Secondary School Leaving Certificate (SSLC) பற்றி பேசும்போது SSLC செர்டிஃபிகேட் என்கிறோம். Permanent Account Number (PAN) PAN நம்பர் ஆகிறது.

ஐடிபிஎல்-ல் நான் வேலை செய்தபோது எங்கள் பொது மேலாளர் ஜலானி அவர்கள் information என்பது ஆங்கிலத்தில் ஒருமை மற்றும் பன்மைக்கு ஒன்றே என்றார். அதாவது informations என்று சொல்வது தவறு என்றார். அதுவே ஃபிரெஞ்சு மொழியில் informations என்றும் ஜெர்மானிய மொழியில் informationen என்றும் பார்த்து பழக்கப்பட்ட எனக்கு இதை முதலில் புரிந்து கொள்வது கடினமாகவே இருந்தது.

அது சரி திடீரென ஏன் இந்தப்பதிவு எனக் கேட்கிறான் முரளி மனோகர். ஸ்வாமி ஓம்காரின் இப்பதிவே எனது இந்த இடுகைக்கு இன்ஸ்பிரேஷன். அதிலிருந்து சிலவரிகள் இங்கே.

“நம் மக்களிடையே ஒரு பழக்கம் உண்டு ஏதேனும் ஒரு வார்த்தை அவர்களிடம் சிக்கிவிட்டால் அதன் பொருள் தெரிந்துகொள்ளாமலேயே ஆழ்ந்து பயன்படுத்துவார்கள்.

காட்சு பிடிக்கிறது, க்யூ வரிசையில் வருவது என ஆங்கிலத்தில் கூறும் வார்த்தையே தமிழிலும் இணைத்து சொல்லுவார்கள். Catch என்றாலே பிடிப்பது தானே? இது இணைத்து சொல்லுகிறோம் என்ற பிரக்ஞையே இருக்காது நமக்கு. இது போல எத்தனையோ வார்த்தைகள்.

படிக்காதவர்கள் தான் இப்படி என்று இல்லை. நான் சந்தித்த ஒரு நகரின் ஆட்சியர் (கலெக்டர்) கூட என்னிடம் பேசும் பொழுது இப்படி பட்ட தவறுகளை செய்தார். உதாரணமாக, “நான் ஃபிரியாதான் இருக்கேன். நீங்க உங்க விஷயத்தை பிரீஃப்பா சொல்லுங்க” என்றார்.

நாம் கூட நண்பர்களிடம் “பிரீஃப்பா பேசனும் வா” என கூறி இருப்போம். உண்மையில் பிரீஃப் (brief) என்றால் குறுகிய , சுருக்கமான என பொருள். அதனால் தானே சிறிய அளவில் கோப்புகளை வைக்கும் பெட்டியை பிரீஃப் கேஸ் என கூறுகிறோம். பிரீஃபா பேசுவது என்றால் விரிவாக பேசுவது என்றே நாம் நினைத்திருக்கிறோம்”.


வாசலில் காலிங் பெல் மணி அடிக்கிறது. விண்டோ ஜன்னலைத் திறந்து பார்த்தால் வழக்கமாக வரும் நண்பர். அவரை வரவேற்று டோர் கதவைத் திறக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/27/2010

வாடிக்கையாளரை மூக்கில் குத்தத் தோன்றும் பத்து தருணங்கள்

1. அக்டோபர் 1981 முதல் ஜூலை 2001 வரை நான் தில்லியில் இருந்த காலகட்டத்தில் இணையம் எல்லாம் எனக்கு பரிச்சயம் இல்லை. நான் வாடிக்கையாளரை அடையாளம் காணும் முறையே தமாஷானது. ஒரு அக்கவுண்டண்ட் வேலைக்கு விண்ணப்பம் கோரி விளம்பரம் வந்திருக்கும். அது எனக்கு வேலைக்காகாது. ஆனால் அதில் சம்பந்தப்பட்ட கம்பெனி ஜெர்மானிய அல்லது ஃபிரெஞ்சு நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது என்ற ஒரு வாக்கியம் வந்தால் அதன் தலைமை நிர்வாகிக்கு நான் எனது மொழிபெயர்ப்பு சேவைகளை அவருக்கு கடிதம் எழுதி ஆஃபர் செய்வேன். அதில் நான் பொறியாளரும் கூட என்பதை குறிப்பிட்டு, ஆகவே நான் தொழில்நுட்ப சம்பந்தமான கட்டுரைகளை நன்கு மொழிபெயர்ப்பேன் என்றும் குறிப்பிட்டிருப்பேன். பல முறைகள் இதனால் பலன் ஏற்பட்டு மொழிபெயர்ப்பு வேலைகள் கிடைத்துள்ளன. அக்கடித்தத்தில் நான் ஃப்ரீலேன்சாகத்தான் வேலை செய்கிறேன் என்பதை தெளிவாகக் குறிப்பிட்டிருந்தாலும், சில பிரகஸ்பதிகள் எனக்கு இவ்வாறு கடிதம் அனுப்புவர்:

அ) பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் வேலைக்கு உங்கள் விண்ணப்பம் வந்து சேர்ந்தது. எங்களிடம் அம்மாதிரியான வேலை காலி இல்லை.

ஆ) மின்பொறியாளராக வேலை கேட்டு உங்கள் விண்ணப்பம் கிடைக்கப் பெற்றோம், உடனே நேர்காணலுக்கு வருக (இது எப்படியிருக்கு).

முதல் வகை கடிதமாவது பரவாயில்லை. ஆனால் இரண்டாம் வகை கடிதத்துக்கு? சான்சே இல்லை. அந்த நிறுவனத்துக்கு முதலில் நன்கு ஆங்கிலம் தெரிந்த ஒருவரே முதற்கண் தேவை. அதற்கு முன்னால் அவர் மூக்கில் குத்துவிட ஆசை. ஆனால் அவ்வாறு வெளிப்படையாக நடந்து கொள்ள முடியாதே!

2. நேர்காணலின்போது நான் முழுநேர வேலையாக எங்கே வேலை செய்கிறேன் என்பதை அறிவதில் பலர் அதீத ஆவலுடன் இருப்பர். அதற்காக அவர்கள் விடாது கேள்வி கேட்கும் போது மூக்கில் ஒரு குத்து விட ஓர் ஆசை!

3. கையில் ஒரே ஒரு வேலையை வைத்துக் கொண்டு ஆயிரக்கணக்கான பக்கங்கள் இருப்பதாக உதார் விடும்போது பசக்கென ஒரு குத்து மூக்கில்.

4. ஒரு பெண்மணி என்னிடம் வந்து ரொம்ப அலட்டினாள், அவளது அத்தை பிள்ளை மட்டும் இருந்திருந்தால் இலவசமாகவே மொழிபெயர்த்து கொடுத்திருப்பான் என. அவனோ வெளிநாட்டில். அப்புறம் இங்கு வந்து என்ன பந்தா? மூக்கில் பசக் என ஒரு குத்து (அத்தைப்பிள்ளைக்கு அவள் தரக்கூடிய ‘சலுகைகளை’ எனக்கும் தருவதாக இருந்திருந்தாலாவது ஏதாவது யோசிக்கலாம்).

5. வாடிக்கையாளர் தனது நிறுவனம் லாபநோக்கற்ற அமைப்பு என புருடா விடும்போது மூக்கில் பசக்கென ஒரு குத்து.

6. பில்லுக்கான பணம் கொடுக்காது காக்கா நரி கதைகளை வாடிக்கையாளர் கூறும்போது அவர் மூக்கில்....

7. கோப்புகளில் பல வாக்கியங்கள் திரும்பத் திரும்ப வரும் என்பதால் அவற்றுக்கு ஒரு முறைக்கு மேல் சார்ஜ் செய்யக்கூடாது என கருத்து கந்தசாமிகளாக வாடிக்கையாளர் மாறும்போது ஒரு குத்து பசக்கென மூக்கில்.

8. தேவையே இன்றி மிக அர்ஜண்ட் என்று சாதாரண வேலைகளுக்கும் பந்தா செய்பவர்கள் சில வாடிக்கையாளர்கள். அப்படியே அர்ஜண்டாக வேலை செய்து மின்னஞ்சலில் அனுப்பித்தால் அவரது செட் செய்யப்பட்ட ஆட்டமேட்டிக் பதில் வரும், அதில் அவர் வெளிநாடு சென்றுள்ளார் என்றும் பத்து நாள் கழித்துத்தான் வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். வேண்டுமென்றே டென்ஷன் செய்த அந்த மனிதரின் மூக்கு மேலே ஒரு கராட்டே அடி.

9. வேலைக்கு வரச்சொல்லிவிட்டு அங்கு சென்று காத்திருக்கும்போது திடீரென கேன்சல் செய்து காலணா கொடுக்காது அனுப்ப நிறுவனம் முயலும்போது, என்ன மூக்கில் குத்து விடவேண்டியதுதானே?

10. நமக்காக நிறுவனம் தெரிவு செய்துள்ள தொடர்புக்கான நபர் (contact person) தனது தவறுகளையும் நம் மேல் திசைதிருப்ப நினைக்கும்போது அந்தாளை சும்மா விட்டுவிட முடியுமா என்ன?

ஆனால் இமாதிரியான ஒரு தருணத்திலும் நான் அதை செயல்படுத்தியிருந்தால் இப்பதிவை போட்டுக் கொண்டிருக்க முடியாது. திகாரிலோ அல்லது புழலிலோதான் இருந்திருப்பேன். ஆகவே நான் அவற்றை சமாளிக்க வேண்டியிருந்தது. அவற்றை நான் கையாண்ட விஷயங்களே எனது வாடிக்கையாளரை அணுகும் முறையில் வருகின்றன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/26/2010

அ. முத்துலிங்கத்தின் அமர்க்களமான வலைப்பூ

பதினெட்டு மாதங்கள் முன்பாகவே அ.முத்துலிங்கம் பற்றி கேள்விப்paட்டாகி விட்டது, உபயம் எழுத்தாLaர் பாரா அவர்கள். அவர் எழுதியதிலிருந்து சில வரிகள் (அவர் குழந்தை மூன்று நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தாள்):

“மூன்று தினங்கள். ‘இந்த டாக்டர், நர்ஸ் எல்லாம் ரொம்ப கெட்டவங்கப்பா’ என்று அது நிமிடத்துக்கொரு தரம் புகார் சொல்லிக்கொண்டிருந்தது. புறங்கையில் ஊசி ஏற்றி சலைன் ஏறிக்கொண்டிருந்தது. கையில் லேசாக வீக்கம் கண்டிருந்தது. ஊசி குத்தும் டாக்டர்கள் அனைவரும் கெட்டவர்கள். அதுவும் கை வீங்குமளவுக்கு மாட்டு ஊசி குத்துகிறவர் ராட்சசன் அல்லாமல் வேறு யார்?

‘அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுடா கண்ணு. சரியாயிடும். டாக்டர் உனக்கு உடம்பு சரியாகணும்னுதானே செய்யறார்?’ என்று ஏதோ சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தபடிக்கு, கைவசம் எடுத்துச் சென்றிருந்த புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன்.

தொடங்கிய கணத்திலிருந்து சராசரியாக மூன்று நிமிடங்களுக்கொரு முறை நான் சிரித்துக்கொண்டிருந்தது என் குழந்தைக்கே வினோதமாகத்தான் பட்டிருக்கவேண்டும். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் என்னைப் பார்த்த பார்வை அத்தனை கௌரவமாக இல்லை. யாரும் அப்படி மனம் விட்டுச் சிரிக்கக்கூடிய இடம் இல்லை அது. விடிந்தால் தீபாவளி. இந்த தீபாவளிக்கு நாம் வீட்டில் இருக்கப் போவதில்லை என்கிற வருத்தம் எல்லா பெற்றோருக்கும் இருந்தது. எல்லா குழந்தைகளும் பட்டாசு வெடிக்க முடியாமல் போவது பற்றிய கவலையில்தான் இருந்தார்கள்.

எனக்கும் கவலைதான். குழந்தையைச் சாக்கிட்டு நானும் நாலு கம்பி மத்தாப்பு கொளுத்தலாம். புஸ்வாணம் விடலாம். பாம்பு மாத்திரை கொளுத்துவது எனக்கு ஏக ஆனந்தம் தரும் விஷயமாகும். அந்தப் புகையின் நெடி உடனடியாகத் தும்மல் வரவழைக்கும். ஆனாலும் இஷ்டம். வெடி ஒன்றுதான் ஆகாது. காதுக்குக் கேடு.

இப்படியா ஒரு தகப்பன் இருப்பான்? கழட்டி, சுருட்டி எறிந்த லுங்கி மாதிரி கட்டிலில் குழந்தை கிடக்கிறது. உள்ளுக்குள் என்ன செய்கிறதோ, எத்தனை வலிக்கிறதோ, என்ன வேதனையோ? இப்படிச் சிரித்துக்கொண்டிருக்கிறானே கட்டையில் போகிறவன்”?


பா.ராகவன் மட்டுமா டோண்டு ராகவனும் அந்தச் சூழ்நிலையில் அதே மாதிரித்தான் நடந்து கொண்டு திட்டு வாங்கியிருப்பான். அதை விடுங்கள்.

பாரா சொன்னதை வைத்து அடுத்து வந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் அவரது சில புத்தகங்கள் வாங்கி வந்தேன் (மகாராஜாவின் ரயில் வண்டி, இப்போ அங்கே என்ன நேரம்). சில கட்டுரைகளை படித்தேன், ஆனால் அந்தோ வழக்கம் போல கைமறதியாக என் வீட்டிலேயே எங்கோ வைத்து விட்டேன்.

இப்போதுதான் ஜெயமோகனின் அ. முத்துலிங்கத்துக்கு வயது ஆறு பதிவை பார்க்க நேரிட்டது. அவரது வலைப்பக்கத்துக்கும் அதில் சுட்டி கிடைத்தது. தில் உள்ள பக்கங்களை மேய்ந்த வண்ணம் வரும்போது கூகிள் பற்றிய இந்தப் பதிவு கிடைத்தது. அதிலிருந்து சில வரிகள்:

“முன்னெப்பொழுதும் இல்லாத மாதிரி பூமியை ஒரு பந்துபோல பார்க்கும் வசதியையும் கூகிள் செய்து கொடுத்திருக்கிறது. கனடாவில் இருந்தபடி அவுஸ்திரேலியாவில் இருக்கும் உங்கள் நண்பரின் வீட்டை அவர் அறியாமல் உங்களால் பார்க்க முடியும். அவர் வீட்டு எண், அவர் வீட்டு மரம், அவருடைய நாய் எல்லாவற்றையும் பார்க்கலாம். நான் ஒரு முறை அமெரிக்காவில் இருந்தபோது கனடாவில் இருக்கும் என் வீட்டைப் பார்த்தேன். என் வீட்டு கார்ப்பாதையில் யாரோவுடைய கார் தரித்து நின்றது. அதனுடைய நம்பரை என்னால் குறித்து வைக்க முடிந்தது. இதுவெல்லாம் கூகிள் நிறுவனம் இலவசமாக செய்து தந்திருக்கும் வசதி.

2010 பூமி தினத்தின்போது கூகிள் நிறுவனம், சூழலியல் விஞ்ஞானி சஞ்சயனை ஓர் உரை நிகழ்த்த அழைத்திருந்தது. அந்த உரையின் தொடுப்பு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

தன்சேனியாவில் லேரொலி என்ற இடத்தில் 3.6 மில்லியன் வருடங்கள் பழமையான மனித காலடிச் சுவடுகள் பதிவாகி இன்றுவரை பார்க்கக் கிடைத்திருக்கின்றன. இத்தனை மில்லியன் வருடங்கள் எரிமலைச் சாம்பலால் பழுதடையாமல் பாதுகாக்கப்பட்ட சுவடுகள். மனிதன் நிமிர்ந்து நடந்ததற்கான தடயம். பக்கத்தில் ஒரு பெண்ணின் காலடியும் உள்ளது. அது சரிந்து பள்ளம் கூடியிருந்ததால் அவள் ஒரு பிள்ளையை காவியிருக்கிறாள் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள். ஆக ஒரு குடும்பம் நடந்துபோன அடையாளம். குனிந்து பார்த்து நடந்த நிலைமாறி மனிதன் நிமிர்ந்து நடந்ததற்கான முதல் ஆதாரம்.

திறந்த வெளியில், ஒரு நல்ல நாளில் நிமிர்ந்த மனிதன் ஐந்து, ஆறு மைல்கள் தூரம் பார்க்கலாம். இன்று, எங்கள் தலைமுறையில் சாட்டிலைட் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் பூமி முழுவதையும் எங்களால் பார்க்க முடியும். இந்தப் பெரிய அறிவு எங்கள் முந்திய தலைமுறையினருக்கு கிடைக்கவில்லை. சுற்றுச்சூழல் கேடு பூமியில் உச்சத்தை தொட்டதும் எங்கள் தலைமுறையில்தான். பூமியை காப்பாற்றும் முழுப் பொறுப்பும் எங்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. புதிய அறிவையும் வைத்துக்கொண்டு பூமியை காப்பாற்ற நாங்கள் தவறினால் அடுத்த தலைமுறையினர் அதை நிவர்த்தி செய்வதற்கு அவகாசம் போதாது. எங்களுக்கு இன்னொரு வாய்ப்பும் கிடைக்காது, ஏனென்றால் காலம் கடந்துவிடும்.

நாங்கள்தான் சிந்திக்கவேண்டும். கூகிள் எங்களுக்காக சிந்திக்கமுடியாது.

சூழலியல் விஞ்ஞானி சஞ்சயனின் உரையின் தொடுப்பு:

இது முக்கியமான உரை. உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும், பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும் அவர்கள் மாணவர்களுக்கும் இதை அனுப்புங்கள்”.


மீண்டும் டோண்டு ராகவன். இப்போது சாவகாசமாக முத்துலிங்கத்தின் பக்கங்களை படிக்கலாம். அவையும் கைமறதியாகப் போய்விடக்கூடாது என்பதற்காகவே இப்பதிவிலும் அவரது பக்கத்தின் சுட்டியை எம்பெட் செய்து விட்டேன்.

பாராவுக்கும், ஜெயமோகனுக்கும் முத்துலிங்கத்துக்கும் chronological order-l நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/25/2010

பிஸ்மில்லாஹ்! - இன்ஸா அல்லாஹ்! - மாஷா அல்லாஹ்! - சுப்ஹான் அல்லாஹ்!

சென்னைக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் மெரீனா பீச்சுக்கு சென்ற தருணங்கள் கொஞ்சமே. அதிலும் அலைகளில் ஆசைதீர கால்களை நனைத்துக் கொண்ட தருணங்களை கைவிரல்களில் எண்ணி விடலாம்.

நேற்று குடும்பத்துடன் பீச்சுக்கு சென்றிருந்தோம். திடீரென என்ன தோன்றியதோ, பீச்சுக்கு போகலாம் என தீர்மானித்து எனது காரை வரவழைத்தேன். காந்தி சிலைக்கு அருகில் காரை நிறுத்திவிட்டு நான், என் வீட்டம்மா, என் மகள் ஆகிய மூவரும் கடலுக்கு சென்றோம். வெகு நாட்களுக்கு பிறகு மணலில் காலடிகள் அழுந்த சென்றது நன்றாகவே இருந்தது. சிறிது நேரம் கழித்து மனைவியும் மகளும் கரைக்கு சென்று மணலில் உட்கார நான் ஆசை தீர இன்னும் சிறிது நேரம் அலைகளில் நின்றேன். கடல் நீருடன் பளபளவென ஒரு அட்டை மிதப்பதை பார்த்து அதை பாய்ந்து எடுத்தேன். (என்ன இருந்தாலும் எனது சிறுவயது திறமைகள் மறையவில்லைதான். அவையாவன, அலை வந்து மூடும் முன்னமேயே மணலுக்குள் மறைய முயலும் சிப்பிகளை தாவித் தோண்டி எடுத்தல், நண்டுகளை துரத்தி உள்ளங்கையால் அவற்றை அறைந்து கொல்லுதல் ஆகியவை).

அந்த அட்டையில் பல இசுலாமிய வாசகங்கள் காணப்பட்டன. அதன் ஒருபக்கத்தில் ஆயத்துல் குர்ஸி வாசகங்கள்:


Allahu la ilaha illa huwa, Al Haiyul Qaiyum La ta'khudhuhu sinatun wa la
nawm lahu ma fi as samawati wa ma fil 'ard Man dhal ladhi yashfa'u 'indahu
illa bi idhnihi Ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhitunabi
shai'in min 'ilmihi illa bima sha'a Wasi'a kursiyuhus samawati wal ard wa la
ya'uduhu hifdhuhuma wa Hu wal 'Aliyul Adheem
Allah! There is no god but He - the Living, The Self-subsisting, Eternal. No slumber can seize
Him Nor Sleep.His are all things In the heavens and on earth. Who is there can intercede In
His presence except As he permitteth?He knoweth What (appeareth to His creatures As)
Before or After or Behind them. Nor shall they compass Aught of his knowledge Except as He
willeth. His throne doth extend Over the heavens And on earth, and He feeleth No fatigue in
guarding And preserving them, For He is the Most High. The Supreme (in glory).
(Al-Baqarah 2: 255)

அல்லாஹ்- அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன், அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை – அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். (அல்குர்ஆன்: 2:255)

இதன் ஆடியோவை இங்கே கேட்கலாம்.

இன்னொரு பக்கத்திலோ அனைத்து நேரமும் அல்லாஹ்வின் நற்சிந்தனைகள்:
எதையும் செய்ய ஆரம்பிக்கும்போது: பிஸ்மில்லாஹ்!
எதையும் செய்ய நினைக்கும்போது: இன்ஸா அல்லாஹ்!
நற்செய்தி கேள்விப்படும்போது: மாஷா அல்லாஹ்!
எதையும் ஆச்சரியத்துடன் புகழும்போது: சுப்ஹான் அல்லாஹ்!
இன்னும் பல. அட்டையை பத்திரமாக எடுத்து வந்துவிட்டேன். அதை வைத்துத்தான் இப்பதிவு. இதைப் போடுவதற்கென்றே எனக்கு அது கடலலையில் எதேச்சையாகக் கிடைத்தது போல தோன்றியது. ஆகவே இப்பதிவு.

தில்லியில் இருந்தபோது கேபிள் டிவி இணைப்பின் உபயத்தால் பாகிஸ்தான் டிவி நிகழ்ச்சிகள் பார்க்க முடிந்தது. அதில் வரும் உருது செய்திகளை தேனினும் இனிய உருது மொழியை கேட்பதற்காகவே அவதானிப்பேன். ஆரம்பத்திலேயே செய்தி வாசிப்பவர் BISMILLAH-IR-REHMAN-IR-RAHIM (In the Name of Allah, the Most Beneficent, the Most Merciful - அதீத கருணையும் ஆழ்ந்த இரக்கமும் கொண்ட அல்லாவின் பெயரால்) என கம்பீரமாக ஆரம்பிப்பதைக் கேட்கும்போது அரபு மொழியின் இனிமை புலப்படும் (கடவுள் விருப்பம் அதுவானால் அதையும் கற்க ஆசை).

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/24/2010

மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் டோண்டு ராகவன் குற்றவாளியாக நின்றபோது

சமீபத்தில் 1962 செப்டம்பர் 14-ஆம் தேதி இரவு ஏழரை மணியளவில் சென்னை டி-1 போலீஸ் ஸ்டேஷன் போலீசாரால் அப்பக்கம் சைக்கிளில் வந்த நான் வாலாஜா ரோடில் நிறுத்தப்பட்டேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை, சைக்கிள் லைட் எரிந்து கொண்டுதான் இருந்தது. அப்புறம் பார்த்தால் தெருநடுவில் ரேஷ் ட்ரைவிங் என பிடித்திருக்கிறார்கள். பெயரை கேட்டு வயதையும் கேட்டார்கள், எங்கே வேலை செய்கிறேன் என்றும் கேட்டார்கள்.

நான் மாணவன், புதுக்கல்லூரியில் பி.யு.சி. படிக்கிறேன், வயது 16 என்றதும் நம்பாமல் பொய் சொல்கிறேன் என்றார்கள். நல்ல வேளையாக கல்லூரி நூலக அட்டை எதேச்சையாக பையில் இருந்ததோ பிழைத்தேனோ (வீட்டில் அதை பத்திரமாக வைக்காது மறதியாக பாக்கெட்டிலேயே இருந்ததும் நல்லதற்கே). எது எப்படியானாலும் சைக்கிளை ஸ்டேஷனிலேயே விடவேண்டியிருந்தது. அடுத்த நாள் காலை எக்மோர் மேஜிஸ்டிரேட் கோர்ட்டுக்கு போக நானும் என் அத்தை பிள்ளையும் பஸ் ஏறினோம்.

கோர்ட்டில் நல்ல கும்பல். மேஜிஸ்டிரேட் பெண்மணி வந்தவுடனேயே கேஸ்களை கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். முதலில் டி ஸ்டேஷன் கேஸ்கள் கூப்பிட ஆரம்பித்தனர். முதலாமவ்ர் கூப்பிடப்பட்டு அவர் கேஸ் பைசல் செய்யப்பட்டதும் இரண்டாவதாக ராகவன், ராகவன் என டவாலி கத்த நான் முன்னேற, அந்தப் பாவியோ “நாராயணன் மகன் ராகவன்” என்றதும் திரும்பி வந்து விட்டேன். சற்று நேரம் கழித்துத்தான் அந்த மடையன் நரசிம்மன் என இருந்ததை நாராயணன் என படித்து தொலைத்திருக்கிறான் என புரிந்து கொண்டேன். டூ லேட். எனது முறை தவறியது தவறியதுதான். டி1 ஸ்டேஷன் போலீஸ்காரர் என்னிடம் ஓப்பனாக சொன்னார், பேப்பர் திரும்ப மேஜிஸ்ட்ரேட்டிடம் செல்ல வேண்டுமானால் சம்பந்தப்பட்ட கிளார்க் கையில் நான்கணா வைத்து அழுத்தும்படி. நான் பயம் காரணமாக அதை செய்யவில்லை.

சில நாட்கள் கழித்து சம்மன் வரும் என சொன்னார்கள். பிறகு என் தந்தை என்னுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து எனது சைக்கிளை போலீசில் பேசி வாங்கித் தந்தார். அவருக்கு தெரிந்த ஏ.சி. மூலம் கேஸையே தள்ளச் செய்தார். (சாதாரண நியூசன்ஸ் கேசானதாலோ, எனக்கு வயது குறைவு என்பதாலோ என்னவென்று தெரியாது. ஆனால் இதுதான் நடந்தது).

என்ன ஆச்சரியம்? 29 நாட்கள் கழித்து சம்மன் வேறு வந்தது. என் தந்தை போலீஸ் ஸ்டேஷனில் விசாரிக்க, அது தவறாக அனுப்பப்பட்டது என்றும், அதை கண்டு கொள்ள வேண்டாம் எனவும் கூறப்பட்டது. இருப்பினும் நான் போய் வைத்தேன் என வைத்துக் கொள்ளுங்கள். அதே போலீஸ்காரர் எனது பெயர் லிஸ்டில் இருப்பதை உறுதி செய்தார். ஆனால் 15 நிமிடம் கழித்து என்னிடம் நேரே வந்து பேசாமல் வீட்டுக்கு போகும்படி கூறிவிட்டார். ஆக, என்ன நிஜமாக நடந்தது என்பது இப்போதும் எனக்கு தெரியாது.

ஆனால் அச்சமயம் கூறப்பட்ட அபராதத் தொகைகள்தான் தமாஷ். நான் செய்த குற்றத்துக்கு அபராதம் ஒரு ரூபாய். அதே சமயம் ஜட்ஜ் குற்றம் செய்தாயா எனக் கேட்டால் இந்த ஒரு ரூபாயுடன் தப்பிக்கலாம், இல்லை என வாது புரிந்தால் அபராதம் சகட்டுமேனிக்கு ஏறிவிடும். ஆகவே எல்லோருமே குற்றத்தை ஒப்புக் கொண்டு விடுவார்கள், கோர்ட் நடவடிக்கைகளும் சீக்கிரம் முடியும்.

ஆனால் இம்மாதிரி ஒப்புக் கொண்டு தப்பிப்பது எல்லா குற்றங்களுக்குமே சாத்தியம் எனக் கூற முடியாது. இருவர் அல்லது பலர் தெருவில் சண்டை போட்டு போலீசாரல் கைது செய்யப்பட்டால், ஜட்ஜ் அவர்களை சண்டை போட்டீர்களா எனக் கேட்பார். ஆமாம் என்றால் அடுத்த கேள்வி ஏன் சண்டை போட்டீர்கள் என்பதேயாகும். அபராதமும் சற்றே ஹெவிதான் (15 ரூபாய்). அதாவது இது சீரியஸ் குற்றமாக கருதப்படுகிறது.

ஒரு 20 வயது வாலிபரை கேட்ட கேள்வி, அவர் தெருவில் காற்றாடி விட்டாரா என்பதாகும். அவர் ஆமாம் எனக் கூற அபராதம் 50 ரூபாய் எனக் கூறப்பட்டது. அக்காலக் கட்டத்தில் அது பெரிய தொகை. நான் கூட நினைத்தேன், இதற்கு ஏன் இவ்வளவு அபராதம் என்று. பிறகு மாஞ்சா நூலில் கழுத்து அறுபட்டு சில மரணங்கள் நிகழ்ந்த பிறகுதான் இது தேவையே என்பதை நான் உணர்ந்தேன்.

அதுவும் ஜூலை 24-27 தேதியிட்ட நக்கீரன் இதழில் அம்மாதிரி மாஞ்சா கயிற்றல் கழுத்து அறுபட்டு மரணமடைந்த திருப்பதி என்பவரின் கதையை படித்ததும் இது எவ்வளவு சீரியசான கிரைம் என்பது புரிகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/22/2010

தமிழனின் கெத்து

என் கணினி குரு முகுந்தன் அனுப்பிய மின்னஞ்சலின் தமிழாக்கம் இதோ.

மைக்ரோசாஃப்டின் ஐரோப்பிய தலைமையகத்துக்கு ஒரு தலைமை நிர்வாகி தேவைப்பட்டது. ஆகவே ஒரு பெரிய walk in நேர்காணலுக்கு ஏற்பாடு செய்தார். 5000 பேர் குழுமினர்.

அவர்களில் ஒருவன்தான் நம்ம ராமசாமி.

பில் கேட்ஸ்: இவ்வளவு பேர் வந்ததுக்கு மிக்க நன்றி. “ஜாவா தெரியாதவங்க எல்லாம் தயவு செய்து போயிடுங்க”
உடனே 2000 பேர் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.

ராமசாமி நினைக்கிறான், 'ஜாவாவா? அப்படீன்னா என்ன? அதனால என்ன இருந்துதான் பார்ப்போமே. கழுத்தையா சீவிடுவாங்க!'

பில் கேட்ஸ்: குறைந்த பட்சம் 100 பேரையாவது மேய்த்து வேலை வாங்கியவர்கள் மட்டும் இருக்கவும்.
அடுத்த 2000 பேர் உடனேயே போயிடறாங்க.

ராமசாமி நினைக்கிறான், 'யாரையும் நான் மேய்ச்சதில்லைதான். அதனால என்ன இருந்துதான் பார்ப்போமே. கழுத்தையா சீவிடுவாங்க!'

பில் கேட்ஸ்: மேலாண்மை டிப்ளமாக்கள் இல்லாதவர் எல்லாம் தயவு செய்து போயிடுங்க.
உடனே 500 பேர் இடத்தை காலி செய்யறாங்க.

ராமசாமி நினைக்கிறான், 'நான் பி.யு.சி.-யோட படிப்பை விட்டாச்சு. அதனால என்ன, இருந்துதான் பார்ப்போமே. கழுத்தையா சீவிடுவாங்க!

கடைசியா, பில் கேட்ஸ் சொல்லறாரு, ‘செர்போ-குரோஷிய மொழி பேசத் தெரியாதவங்க இங்கே வேண்டாம்’.

இப்போ 498 பேர் போயாச்சு.

ராமசாமி நினைக்கிறான், 'செர்போ-குரோஷிய மொழி பேசத் தெரியவே தெரியாதுதான். அதனால என்ன இருந்துதான் பார்ப்போமே. கழுத்தையா சீவிடுவாங்க!

கடைசியா ராமசாமியும் இன்னும் ஒரே ஒரு ஆளும்தான் இருக்காங்க; மீதி எல்லோரும் போயாச்சு.

இப்போ பில் கேட்ஸ் இவங்க கிட்டே வரார். “அப்போ ஒங்க ரெண்டு பேருக்குத்தான் 'செர்போ-குரோஷிய மொழி பேசத் தெரியும் அல்லவா. எங்கே ரெண்டு பேரும் அந்த பாஷையிலே ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கோங்க’.

அசால்ட்டா ராமசாமி அந்த இன்னோரு ஆளைப் பார்த்து பேசுகிறான், ‘நான் ராமசாமி, வத்தலகுண்டு சொந்த ஊரு. நீங்க எந்தப் பக்கம்’.

இன்னொரு ஆள் சொல்றான், ‘நான் கிருஷ்ணசாமி, கும்பகோணம் பக்கம்’

அன்புடன்,
டோண்டு ராகவன்

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 22.07.2010

வினவுக்கு உடல்நலம் சரியில்லை போலிருக்கிறதே
முரளி மனோகர் காலையிலிருந்தே ஏதோ யோசனையில் இருந்தான், ஜெண்டில்மேன் படத்தில் டீயை வைத்துக் கொண்டு திருட்டு முழியுடன் செந்தில் யோசனை செய்யும் பாவனையில். அம்மாதிரி அவன் இருந்தாலே சற்றே வில்லங்கம் வரும் என்பதை அறிந்தாலும் ஆவல் என்று ஒன்று இருக்கிறதே. ஆகவே என்னப்பா சமாச்சாரம் என கேட்டேன்.

அதற்கு அவன், “ஒன்றுமில்லை பெரிசு, நம்ப வினவுக்கு உடம்புக்கு முடியல்லியோன்னு ஒரு சம்சயம்” என்றான். “ஏண்டா பாவி அந்தாள்தான் உலகபிரச்சினையெல்லாம் தலைமேல் சுமந்து கொண்டு பதிவுகள் போட்டு வருகிறாரே என்றேன் நான். உடனே அவன் பேச ஆரம்பித்தான்.

வினவின் இந்தப் பதிவில் சச்சினை போட்டு இந்த சாத்து சாத்தியிருக்காரே அதை பார்த்ததும்தான் எனக்கு இந்த யோசனை வந்தது என்றான். நான் சொடேல் என அவனுக்கு கவுண்டமணி உதை அளித்துவிட்டு, “ஏண்டா நாயே இதனாலெல்லாம் அவருக்கு உடல்நலம் சரியில்லைன்னு சொல்லிடறதா. அவர் மனநலம் இல்லாதவர்னு வேணா சொல்லு, ஏற்கனவே தெரிந்த அந்த விஷயத்தை இந்தப் பதிவு இன்னும் ஊர்ஜிதப்படுத்தறது என்றேன்.

கவலையுடன் முரளிமனோகர் பேச ஆரம்பித்தான். அதில்லை பெரிசு, முக்கியமான விஷயத்தை கோட்டை விட்டாரே என்பதுதான் எனது யோசனை என்றான். மேலும் சொன்னான், சச்சின் பார்ப்பனர் ஆயிற்றே. பார்ப்பனீயம் பற்றி வினவு பேசவேயில்லையே, அதனால்தான் அவர் உடம்புக்கு கோளாறோ என தோன்றுகிறது என்றான்.

பயல் வில்லங்கமாத்தான் யோசிக்கிறான்.

ஞாநியியின் லேட்டஸ்ட் ஓ பக்க எண்ணங்கள் (குமுதம் 28.07.2010 தேதியிட்டது)
செங்கல்பட்டில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி மராமத்து வேலைகள் நகராட்சி கூட்டம் தனிமனித மனவேற்றுமைகளால் பல மாதங்கள் கூட்டப்படாமையால் நிதி ஒதுக்கீடு இல்லாது தவிக்கின்றன. மக்கள்தான் தம் சக்தியை காட்டி கூட்டத்தை நடத்தச் செய்ய வேண்டும் என்ற நியாயமான யோசனை.

ரூபாய்க்கான சின்னம் ஹிந்தி எழுத்தின் அடிப்படையில் வடிவமைத்தது மாஜி திமுக எம்.எல்.ஏ. யின் மகனாம். அது சரி கருணாநிதியின் பேரன் ஹிந்தியில் புலமை பெற்று மந்திரியாகும்போது இது என்ன பிரமாதம்?

கடற்கரை நிலத்தை மோசடி பார்ட்டியிடமிருந்து வாங்கியது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன். அதில் கணிசமான பகுதி கடல்தானாம். இச்செய்தியை பார்த்ததும் எனக்கு ஹிந்து உயர்நிலை பள்ளீயில் ஆசிரியராக வேலை பார்த்த எவரெஸ்ட் (உண்மைப் பெயர் ஸ்ரீனிவாசாசார்லு) நினைவுக்கு வருகிறார். பரீட்சை பேப்பரை திருத்திக் கொண்டிருந்தார். மேப் ரீடிங் கேள்விக்கு அந்த மாணவன் அளித்த பதில்களுக்கு பூஜ்ய மதிப்பெண்கள் தந்தார். கொஞ்சம் கருணைகாட்டக் கூடாதா என அவரிடம் கேட்டதற்கு, இமயமலையை வங்காள விரிகுடாவாக காட்டினால் என்ன செய்வது என பதில் கேள்வி கேட்டார். ஒருவேளை அந்த மாணவன்தான் இப்போது அம்மாதிரி வங்கக் கடலையே நிலமாக காண்பித்து விற்றிருப்பானோ. அல்லது அவன் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் உயர் பதவியில் இருக்கிறானா? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

தலித் மேம்பாட்டு துறையிலிருந்துதான் காமன்வெல்த் விளையாட்டுகளுக்காக செலவழித்து வந்திருக்கிறது மத்திய அரசு என்பது இப்போது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் என்ன வாழுகிறதாம்? கிராமப்புற வளர்ச்சிக்காக இருந்த நிதிதான் இலவச டிவியாக உருவெடுத்ததாம். அவர்கள் அப்பன் வீட்டுப் பணமா இம்மாதிரின் செலவு செய்ய?

கோவி கண்ணன் கேட்ட கேள்வி
போன பஞ்சாமிர்தத்தில் நான் துகள்க்கிலிருந்து ஜூவிக்கு ஏன் மாறினேன் என கோவி கண்ணன் கேட்டிருந்தார். ஏனெனில் நேற்று துக்ளக் வரவில்லை. இன்று வெளியான 28.07.2010 தேதியிட்ட துக்ளக்கிலிருந்து சில விஷயங்கள் இங்கே.

ஹெட்லைன்ஸ் டுடே பத்திரிகையை தாக்கிய ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு கண்டனம் முதல் பக்கத்திலேயே கட்டம் கட்டி வந்துள்ளது.

கர்நாடகாவில் குவாட்ரோக்கி பணத்தை ரிலீஸ் செய்து புகழடைந்த கவர்னர் கேவலமான முறையில் காங்கிரசுக்கு ஏஜெண்டாக செயல்படுவது குறித்து தலையங்கம். ரெட்டி சகோதரர்கள் விஷயத்தில் தெரிவது பனிப்பாறையின் வெளியே தெரியும் 10% பகுதிதான் (tip of the iceberg) என்பது மட்டும் புரிகிறது.

இட ஒதுக்கீடு விஷயத்தில் 17 ஆண்டுகளாக தீர்ப்பு தராது இழுக்கடித்து பிறகு மேட்டரை தமிழக அரசுக்கே திருப்பியனுப்பிய உச்சநீதி மன்றத்தின் செயலும் இந்த இதழில் வழக்குரைஞர் விஜயனின் கட்டுரையில் வெளிவந்துள்ளது. இது பொறுப்பை தட்டிக் கழிக்கும் வேலை என சோவும் தனது கேள்வி பதிலில் சுட்டிக் காட்டியுள்ளார்.

கேள்வி பதிலில் குஜராத் போலீசாரால் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டது பெண் தீவிரவாதியே, மனித வெடிகுண்டாக வர இருந்தவர் என அமெரிக்காவில் பிடிபட்ட ஹெட்லி இப்போது கூறிவிட, அது வரை மோடி அரசை கண்டனம் செய்த பத்திரிகைகள் இப்போது கள்ள மௌனம் சாதிப்பது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

சோ அவர்கள் எழுதிவரும் ஹிந்து மகாசமுத்திரத்தில் துளசிதாசர் பற்றி ஒரு அதிசய நிகழ்ச்சி பற்றி படித்தேன். அது பற்றிக் கூறும் முன்னால் அவரது பின்புலனையும் கூறுவேன்.

ராமாயணம் எழுதும் முன்னால் சாதாரணமானா ஆசாபாசங்களுடன் வாழ்ந்தவர் அவர். மனைவி மேல் அதிக அளவு பிரியம் வைத்திருந்த அவர் தன் மனைவி பிறந்த வீட்டுக்கு சென்றபோது அவளது பிரிவை சகியாது ஒரு இருண்ட இரவில் அவளைக் காண புறப்படுகிறார். வெள்ளத்தில் இருந்த ஒரு நதியை கடக்க படகு கிடைக்காது, நதியில் மிதந்த பல மரக்கட்டைகள் மீது ஒன்றன்மீது ஒன்றாகத் தாவி, அக்கரையை அடைந்து, மனைவியின் பிறந்தகத் தோட்டத்தில் இருந்த ஆலமர விழுதை பிடித்து மனைவி மாடியில் இருக்கும் அறைக்கு செல்கிறார். அடுத்த நாள்தான் அவருக்கு தெரிந்தது தான் ஏறிவந்த ஆலம் விழுது ஒரு பாம்பு என்றும், நதியில் இருந்த மரக்கட்டைகள் முதலைகள் என்றும். இதையறிந்த அவரது மனைவியும் பதட்டமும் கோபமும் அடைந்தாள். கேவலம் மனிதப் பிறவியான என் மேல் இவ்வளவு கண்மூடித்தனமான ஆசை வைத்ததற்கு ராமபிரான் மேல் பக்தி வைத்திருந்திருக்கலாமே என அவரை சாடுகிறாள்.

அவளது கோபத்தால் மாறினார் அவர், உலகுக்கு அற்புதமான ராமாயணம் கிடைத்தது. அவரது ஹனுமான் சாலிஸா (நாற்பது பாடல்கள்) அதற்கு சளைத்ததா என்ன?

இப்போது துக்ளக்கில் எழுதிய விஷயத்துக்கு வருவோம். பல மகான்கள் பர்றி பிரியதாசர் என்பவர் ஓர் அருமையான நூல் இயற்றினார். அவரே அதை பக்தர்களுக்கு படித்துக் காட்ட வேண்டும் என துளசிதாசர் அவரை வேண்ட, அப்போதுதான் மகான்கள் வரிசையில் தான் துளசிதாசரை சேர்க்காது விட்டதை உணர்ந்து வருந்துகிறார். இருப்பினும் மனதில் ராமரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தன் நூலை பிரித்து படிக்கத் துவங்குகிறார். என்ன அதிசயம், முதல் சரித்திரமே துளசிதாசர் பற்றித்தான். அப்போதுதான் அவருக்கு புரிகிறது, அதை ராமபிரானே எழுதியிருக்க வேண்டுமென.

ஜெய் ஸ்ரீராம். வந்ததுதான் வந்தீர்கள், அனுமனின் புகழ்பாடும் அம்ருத்வாணியையும் கேட்டுவிடுங்களேன்.

எங்கே பிராமணன்
இப்போதும் மனம் ஆறவில்லை, இந்த தொடர் முடிவு பெற்ற விதம் சரியேயில்லை. பாதிக் கதையில் பாத்திரங்களை தொங்க விட்டார் சோ அவர்கள். அவரை இதுவிஷயமாக சாடி நானே பதிவிடுவேன் என்பதை யாரேனும் முதலில் சொல்லியிருந்தால் நம்பியிருக்கக்கூட மாட்டேன். முதலில் அதிலிருந்து சில வரிகள்:

“எல்லாவற்றையும் விடுங்கள். காதம்பரி என்னும் அப்பெண்ணை இப்படி அம்போ என விட்டுப்போனது எந்த விதத்தில் நியாயம் என்பதே புரியவில்லை. மெனக்கெட்டு அவளை அசோக்கின் தர்மபத்தினியாக்கினார்கள். இப்போது அவள் கதி? அசோக் திடீரென மறைந்து போனதால் அவனது பெற்றோருக்கு வரும் மன உளைச்சல்கள், சட்ட சிக்கல்கள், போலீஸ் கெடுபிடிகள் ஆகியவற்றையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எனக்கு வரும் கோபத்துக்கு பார்ட் -2 ஆரம்ப எபிசோடில் வந்தது போல நாதன், வசுமதி, நீலகண்டன், சாம்பு ஆகிய பாத்திரங்கள் காதம்பரியுடன் கூட வந்து சோ அவர்களை ஒரு மொத்து மொத்தினால்தான் என் மனம் ஆறும். சிங்காரம் ஒருவன் போதாதா, வந்து வீடுகட்டி உதைக்க?

அது சரி நீ எப்படி பெரிசு இந்தக் கதையை முடிச்சுருப்பே என முரளி மனோகர் நக்கலாகக் கேட்கிறான். அதையும் சொல்லிவிடுகிறேன்.

நாரதர் அசோக்கிடம் சொன்னதெல்லாம் சரிதான். ஆனால் அவன் தனது பூலோகக் கடமையையும் முடித்தாக வேண்டும், பீஷ்மரைப் போல. வக்கீலின் உதவியோடு உண்மை குற்றவாளியை பிடிப்பது பெரிய காரியமாக இருக்க முடியாது. பிறகு முழுவர்ண ரீதியான பிராமணனாக வாழமுடியவில்லை என்றாலும், கலியுக தர்மங்கள் மற்றும் சாத்தியக்கூறுகளுக்கும் ஏற்ப ஒருவன் எவ்வாறு பிராமணனாக வாழமுடியும் என்பதையும் அசோக் எடுத்துக் காட்டியதாக நான் கதையை கொண்டு சென்றிருப்பேன்.

அத்தனைக் காட்சிகளையுக் காண்பிக்க முடியாவிட்டால், காதம்பரி உண்மையிலேயே வசிஷ்டரின் மனைவி அருந்ததியே என கதையின் போக்கை மாற்றி அவளும் அதை உணர்ந்து அசோக்குடன் வாழ்வதையே சூசகமாக ஒரு எபிசோடில் காட்டியிருப்பேன். இத்தனை விஷயங்களையும் மேலும் ஒரே ஒரு எபிசோடில் காட்டியிருக்க இயலும்”.


அது பற்றி இங்கு ஏன் எனக் கேட்கிறான் முரளி மனோகர். இந்த சீரியலில் எல்லா எபிசோடுகளிலும் சோ அவர்கள் தன் நண்பருடன் வந்து கதை போக்குக்கு ஏற்ப விளக்கங்கள் அளித்துள்ளார். இந்த சீரியலின் முக்கிய ஆகர்ஷணமே இதுதான். அவற்றை தொகுத்து இன்னொரு தொடர் எழுதப்போவதாக சோ கூறியுள்ளார். நல்ல செய்திதானே. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நங்கநல்லூர் பஞ்சாமிர்தத்துக்கான விஷயங்கள் கண்டிப்பாக கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறேன். கூடவே தமிழ் ஓவியா, சங்கமித்திரன், அருள், வால்பையன், வஜ்ரா ஆகியோரின் பின்னூட்டங்களும் வரும். ஜாலி.

உத்தபுரச்சுவர் (தலைப்புதான் ஹைப்பர் லிங்)
புரையோடிய புண்ணாகப் போய் விட்டது இப்பிரச்சினை. பிளைமார்களுக்கும் தலித்துகளுக்கும் நடக்கும் பிரச்சினையில் தலித்துகளுக்கு ஆதரவாகப் பேச கம்யூனிஸ்டுகள் மற்றும் பெரியார் தி.க. தவிர வேறு யாரும் சீரியசாக வருவதாகத் தெரியவில்லை. அரசு இயந்திரமோ பிள்ளைமார்களுக்குத்தான் சாதகமாகத்தான் நடந்து வருகிறது.

அதெல்லாம் விடுங்கள், இப்பிரச்சினை பற்றி பிள்ளைமார் சாதியைச் சேர்ந்த புகழ் பெற்ற அந்த இரு பதிவர்கள் கள்ள மௌனம் சாதிப்பதாக நான் ஓரிடத்தில் கருத்து கூற, அப்படியெல்லாம் இல்லை என அவர்களின் நண்பரான பார்ப்பன பதிவர் ஒருவர் கூறினார். பெயர்களை நான் இங்கே வேண்டுமென்றே தவிர்க்கிறேன். நான் சொன்னது தவறு என்றால் சுட்டிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் நிரூபிக்கட்டுமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/21/2010

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 21.07.2010

ராகவேந்திரன் அவர்களது இப்பதிவு
தனது வாதங்களை அழகாக அது முன்வைக்கிறது. அதிலிருந்து சிலவரிகள்:

“நேற்று எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் மிக அருமையாக சாதியுடன் புழங்குதல் என்ற தலைப்பில் மிக நேர்த்தியாக விஜய் என்பவருக்கு பதில் கூறும் வகையில் ஒரு அழகான கட்டுரை எழுதியிருந்தார். இது குறித்து எனது நெருங்கிய நண்பர் ஒருவருடன் காராசாரமாக விவாதமும் நடைபெற்றது. அந்த நண்பர் மட்டுமின்றி நான் உரையாடும் ஏனைய நண்பர்களும் சரி வர்ணாசிரமத்தை உருவாக்கியது பிராமணர்கள் தான் என்பது போலவும், பிராமணர்கள் மட்டுமே இப்போது உள்ள ஜாதிய கூறுகளுக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்கும் காரணம் என்பது போலவே பேசுகிறார்கள், பொதுவாக அவர்கள் கூறியுள்ளார்கள்,இவர்கள் கூறியுள்ளார்கள், என்று மேம்போக்காக பேசியே காலம் கழிக்கிறார்கள். நான்பேசிய பல நண்பர்களும் சற்று விரிவாக மனு தர்ம சாஸ்திரத்தினை முழுமையாக படித்து உள்ளீர்களா என்று கேட்டால் அதை மேற்கொள்காட்டி பெரியார் இந்த இதழில் பேசினார், அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் என்று கூறுகிறார்களே தவிர, இவர்கள் படித்து அதை அறிந்து உணர்ந்ததாக நான் அறிந்திலன்...”

“நீங்கள் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் தற்போது தான் பிராமணர்கள் அல்லாது இதர இனத்தவர்கள் படிப்படியாக அனைத்து துறைகளிலும் உயர் பதவிகளிலும் உயர் நிலைகளிலும் அலங்கரித்துக் கொண்டு உள்ளார்கள், அவர்கள் அனைவருமே இட ஒதுக்கீட்டின் மூலமோ அல்லது அவர்களின் சொந்த திறமையின் மூலமாகத் தானே வெளிச்சத்திற்கு உயர்நிலைக்கு வந்தார்கள், ஆனால் எந்த ஒரு இட ஒதுக்கீடும் இல்லாது இப்போதும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பிச்சை எடுத்தாவது உயர் கல்வி கற்று ஒரு நல்ல நிலைக்கு வந்துக் கொண்டு தான் உள்ளார்கள், ஏன் அவ்ர்களிடம் உள்ள ஒரு துடிப்பும் உத்வேகமும் இவ்வாறு துவேஷம் உள்ளவர்களிடத்தில் இல்லை,

பொதுவாக ஒரு குற்றச்சாட்டு, பிராமணர்கள் அடுத்தவர்களுக்கு உதவுவது கிடையாது, அவர்கள் சாராரருக்கு மட்டுமே உதவுகிறார்கள், அதனால் தான் இன்றளவும் வேலை வாய்ப்பு கல்வி நிலையில் முன்னேறுகிறார்கள் என்று, அய்யா இந்த குற்றச்சாட்டை சொல்பவர்கள் சற்றே மனசாட்சியுடன் சிந்தித்து பார்க்கட்டும், பிராமணர்களுக்கு எந்தவிதமான இட ஒதுக்கீடும் கிடையாது, அவர்களுக்கு உதவி செய்பவர்கள் யாரும் கிடையாது, கடுமையாக படித்து மதிப்பெண் பெற்றும் இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் கீழ் அவர்களின் இடங்கள் தட்டி பறிக்கப்படுகின்றன, அப்படி இருக்கையில் பிராமணர்கள் எந்த வகையில் அடுத்தவர்களுக்கு உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள், சற்றேனும் சிந்தித்து பாருங்கள், ஆனால் ஒரு கசப்பான உண்மை என்னவென்றால் நிச்சயமாக பிராமணருக்கு பிராமணர் நிச்சயமாக உதவுவது என்பது கிடையாது, அப்படியே இருப்பினும் அவர்கள் உறவினர்களாக மட்டுமே இருப்பார்கள், இது தான் உண்மை, மற்ற வகுப்பினருடன் ஒப்பிடுகையில்”.


நல்ல பதிவுக்கு பாராட்டுகள், ராகவேந்திரன்.

ஜூனியர் விகடன், 25.07.2010 தேதியிட்ட இதழ்
சாதாரணமாக ஜூவி, ரிப்போர்டர் குமுதம் ஆகிய இதழ்களை விடாது வாங்கினாலும் அவற்றை முழுமையாக படிக்கும் முன்னரே அவை பலமுறை என் வீட்டிலேயே கைமறதியாக எங்காவது வைக்க அவை காணாமல் போவது அடிக்கடி நிகழும் விஷயம்தான்.

இன்றும் அதுதான் நடந்தது. அது பற்றிப் பிறகு.

வாங்கின ஜூவியை உடனடியாகப் படித்ததில் பல ருசியான விஷயங்கள் கிடைத்தன. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.

அ) இன்னொரு டிராஃபிக் ராமசாமி (பக்கம் 28-29)
செந்தமிழ்க்கிழார் என்பவர் ஆதம்பாக்கம் ஏரியாவில் மிகப் பிரசித்தம். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இவர் மக்கள் நலனுக்காகப் போராடும் சமூக ஆர்வலராக “இந்தியா டுடே” இதழ் இவரை அடையாளம் கண்டுள்ளது. இது போக, வெகுகாலமாகவே தங்களுக்காக குரல் கொடுக்கும் நாயகனாக மக்கள் இவரை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர் செய்த ஒரே குற்றம் பல பெரிய மனிதர்கள் செய்த, செய்யும் அநியாயத்துக்கு துணை போன அதிகாரிகளை தட்டிக்கேட்டதேயாகும்.

ஆ) போலிச் சான்றிதழ் விவகாரம் (பக்கம் 30-31)
தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகளை வெளியாகின்றன. மேல் மட்ட அதிகாரிகளை இக்கட்டுரை சற்றே ரிலேக்ஸாக விட்டு விடுவது போல தோன்றுகிறது. என்னைக் கேட்டால் இம்மாதிரியான முன்முடிவுகள் கூடாது. All are guilty unless proven innocent என்ற அடிப்படையில்தான் பல விசாரணைகள் நடக்கின்றன, நடக்க வேண்டும். எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறதோ யார் கண்டது?

இ) வன்னிய இனமானக் காவலர் ராமதாஸ் நகர்த்தும் காய்கள் (பக்கம் 4, 5)
திமுகாவில் கனிமொழி, கயல்விழி என பலர் களமிறக்கப்பட, அந்த பொறுப்பை மருத்துவர் தனது மருமகள் சௌம்யாவுக்கும் பேத்க்தி சங்கமித்திராவுக்கும் தந்துள்ளார்.

சங்கமித்திரா என்றதும் அவருக்கும் அவரது சகோதரிக்கும் அவசரம் அவசரமாக தில்லியில் தமிழ் வகுப்புகளுக்கு அன்புமணி அவர்கள் ஏற்பாடு செய்த விவகாரம் பற்றி நான் இட்டப் பதிவுகள் இரண்டு செய்திகள், ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, மேலும், அன்புமணி அவர்கள் நல்ல தந்தை என் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இப்போது ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் சங்கமித்திரா அவர்கள் சிறப்பாக தமிழ் பேசி எழுதுவாரா என்பதை யாராவது விஷயம் அறிந்தவர்கள் கூறுங்கள் அப்பு.

ஈ) வனவாசம் முடிந்து திரும்பும் வளர்ப்பு மகன் சுதாகரன் (பக்கம் 6,7)
மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு சில அனுபவங்கள் வரும். அதாவது ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் பல ஆண்டுகள் என்னைத் தொடர்பு கொள்ளாமலேயே இருப்பார். அவர் இருக்கிறாரா இல்லையா என்று கூட என்ணும் அளவுக்கு போய் விடும். திடீரென one fine day அவரிடமிருந்து ஃபோன் வரும். அன்னேரத்தில் நான் கணினி முன்னால் இருந்தால் எனது ஆர்கைவ்சில் அவரது விவரங்களை தோண்டி எடுத்து வைதுக் கொண்டுதான் அவருடன் மேலே பிசினசே பேசுவேன். அம்மாதிரி வரும் ஃபோன் அழைப்புகள் அனேக தருணங்களில் மேலும் வேலைகளைத் தருவதால், அவை வந்தால் சந்தோஷமே.

ஆனால் சுதாகரன் 14 ஆண்டுகள் கழித்து (ஆகவே வனவாசம் என அதை அவர் அழைக்கிறார்) மீண்டும் பொதுப் பார்வைக்கு வருவது ஜெயலலிதாவுக்கு நல்லதா என்பதில்தான் எனக்கு சம்சயம். பார்ப்போம்.

ஜூவியை இப்போது வழக்கம் போலவே கைமறதியாக எங்கோ வைத்து விட்டேன், என்ன செய்வது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/18/2010

சாதியுடன் புழங்குதல் பற்றி ஜெயமோகன்

மேலே சொன்ன தலைப்பில் ஜெயமோகனின் இப்பதிவு என் மனதைக் கவர்ந்தது. முதலில் அதிலிருந்து சில வரிகள். இதில் நான் என வருவது ஜெயமோகனையே குறிக்கும்
----------------------------------------------------------------------------------------------
“சாதியைப்பற்றிய அக்கறையே இல்லாமல் வாழக்கூடிய வாழ்க்கை என்பது நல்லதுதான். அது ஓர் இலட்சிய வாழ்க்கையும்கூட. ஆனால் அது எந்த அளவுக்கு நடைமுறைச் சாத்தியம் என்றுதான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். ‘நான் யாருடைய சாதியையும் தெரிந்துகொள்ள முயல்வதே இல்லை’ என்று அப்பாவித்தனமாக அல்லது சுய ஏமாற்றாகச் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அது நம்முடைய ஊரில் சாத்தியமே அல்ல.

அப்பட்டமாக்ச் சொல்கிறேனே, குறைந்தபட்சம் நம் சூழலில் ஒருவர் தலித்தா என்று தெரிந்துகொள்ளாமல் பழகுவது என்பது சாத்தியமேயல்ல. சாத்தியமல்ல என்பதுடன் அது அபாயமும்கூட. தலித்துக்களில் தான் ஒரு தலித் என்ற சுய உணர்ச்சி இல்லாதவர்கள் அனேகமாக இல்லை. அந்த சுய உணர்ச்சி நம் மரபின் சென்றகால இழிமுறைகளில் இருந்து அவர்களிடம் ஏற்றப்பட்ட ஆழமான தாழ்வுணர்ச்சியால் ஆனது. இன்றைய பொதுச்சூழலில் சாதாரணமாகச் சொல்லப்படும் சொற்கள்கூட அவர்களின் உணர்ச்சிகளை தீவிரமாகப் புண்படுத்திவிடும். அப்படி அவர்களைப் புண்படுத்துவதென்பது அநீதியானது, நட்புகளை உடைக்கக்கூடியது, பொது அமைப்புகளில் பல சங்கடமான நிலைமைகளை உருவாக்கக்கூடியது. ஆகவே நம்சூழலில் அத்தனை பேரும் இந்தக் கவனத்துடன் தான் இருந்துகொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

என்னுடைய அனுபவம் ஒன்று. பலவருடங்களுக்கு முன் எனக்கு நெருக்கமான இலக்கிய நண்பர் ஒருவர் இருந்தார். பறையர் சாதியைச் சேர்ந்தவர். அது என்னுடைய பிரக்ஞையில் இருந்தது இல்லை. திடீரென என்னிடமிருந்து முற்றாக விலகிச் செல்ல ஆரம்பித்தார். நட்பை நீட்டிக்க நான் பலவேறு வழிகளில் முயன்றேன். அவரது மனக்குறை என்ன என்று விசாரித்தேன். நான் செய்த தவறு என்ன என்று அறிய முயன்றேன்.பலனில்லை. ஆழமான மனச்சோர்வுடன் நானும் விலகிக்கொண்டேன். தீவிர இலக்கியமறிந்த இரண்டே நண்பர்களில் ஒருவரை இழப்பது அந்தவயதில் பெரிய சோகம்.

நான் அந்த ஊரில் இருந்து மாற்றலாக வந்து சிலவருடங்களுக்கு முன் பழைய சங்கத்தோழர் ஒருவர் பேசும்போது நான் அந்த இலக்கிய நண்பரின் மனச்சிக்கலுக்குக் காரணத்தைச் சொன்னார். நான் அவரை வைத்துக்கொண்டே வேறு ஒருவரிடம் அவரது சாதியைச் சொல்லி இழிவாகப்பேசினேன் என்றும் அது அவரது மனதை புண்படுத்திவிட்டது என்றும் அநத இலக்கிய நண்பர் தோழரிடம் ஒரு குவளை மதுவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது சொல்லியிருக்கிறார்

நான் அந்த கடைசி உரையாடலை சொல்சொல்லாக நினைவுகூர்ந்தேன். ஏனென்றால் அத்தனைநாளும் அதை அத்தனை முறை மனதில் ஓட்டிக்கொண்டிருருந்தேன். என்ன பிழை நிகழ்ந்தது என்று துருவித்துருவி ஆராய்ந்துகொண்டிருந்தேன். நடந்தது இதுதான். நான் அன்றிரவு அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது என் அப்பாவின் குணநலன்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். அப்பா நிலப்பிரபுத்துவகால முரட்டுத்தனமும் நிலப்பிரபுத்துவகால அறமும் ஒருங்கே அமைந்த ஆத்மா. ஒருவன் வீட்டுக்குள் புகுந்து திருடிவிட்டான். அவனை கையும் களவுமாக பிடித்து தென்னையில் கட்டி வைத்திருந்தார்கள். ‘எந்தினுடா மோஷ்டிச்சு? பற நாயிண்டே மோனே’ என்று அப்பா சொன்னதாக நான் சொன்னேன். அவன் ‘பசிக்காக’ என்றதும் சோறுபோட்டு துரத்திவிட ஆணையிட்டார்.

நண்பரை புண்படுத்திய சொல் என்ன என்று சட்டென்று கண்டுகொண்டேன். அப்பா சொன்னதை நான் அப்படியே மலையாளத்தில் அவரது உச்சரிப்பு மற்றும் முகபாவனையுடன் சொன்னேன். மலையாளத்தில் ‘பற நாயிண்டேமோனே’ என்றால் ‘சொல்லுடா நாயின் மகனே’ என்று அர்த்தம். பறைதல் என்றால் சொல்லுதல் .[அது தூய பழந்தமிழ்ச் சொல். பறையர்கள் எட்டாம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் முரசு அறையக்கூடிய, விழாக்களிலும் கோயில்களிலும் மங்கலக் கௌரவம் கொண்ட உயர்சாதியினர். அதற்கு தொல்லாதாரங்கள் உள்ளன]

நான் சொன்னவற்றை விளக்கியதும் தோழர் ‘அடாடா,நான் அவனிடம் சொல்கிறேன்’ என்றார். அதன்பின் சிலநாட்கள் கழித்து அந்த இலக்கியநண்பர் என்னைக்கூப்பிட்டு மன்னிப்பு கோரினார். மீண்டும் உற்சாகமாக பேச முயன்றார். சில நாட்கள் பேசினோம். ஆனால் நட்புகளைப்பொறுத்தவரை ஒன்றுண்டு, ஒரு நட்பு உடைந்து கொஞ்ச காலம் ஆனால் இரு சாராருமே வாழ்க்கை போக்கில் வெகுதூரம் விலகிச் சென்றிருப்போம். மீண்டும் ஒட்ட முடியாது”.
--------------------------------------------------------------------------------------------

“ஆச்சரியம் என்னவென்றால் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களாக உணராத சாதிகளே இல்லை என்பதுதான். தலித் சாதிகள் அப்படி உணர்வதற்கு ஒரு வரலாற்றுப்பின்புலம் உள்ளது. தமிழ்நாட்டின் மொத்த அரசியல்-சமூக-பொருளியல் ஆதிக்கத்தை கையில் வைத்திருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தங்களை ஒடுக்கப்பட்டவர்களாகவே சொல்வார்கள். அதற்காக ஒரு பிராமண வெறுப்பை உருவாக்கி வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.

பிராமணர்கள் கிட்டத்தட்ட தலித்துக்கள் அளவுக்கே புண்பட்ட மனநிலையில் இருக்கிறார்கள் என்பது இன்னொரு ஆச்சரியம். மொத்த தமிழகமும் தங்களை வெறுப்பதாகவும் வேட்டையாடுவதாகவும் அவர்கள் நினைக்கிறார்கள். தாங்கள் அனைத்து ஊடகங்களிலும் வரலாறுகளிலும் அவமதிக்கப்படுவதாகவும் அதை தமிழகமே வேடிக்கைபார்ப்பதாகவும் சொல்கிறார்கள். தலித்துக்களைப்போலவே சிறு சொல்கூட பிராமணர்களை ஆழமாக புண்படுத்திவிடும்.

என் அனுபவத்தில் நான் இந்த புண்படுத்தல் சிக்கலுக்கு உள்ளானவர்களில் அனேகமாக பெரும்பான்மையினர் பிராமணர்களே. நம்ப மாட்டீர்கள் ஜைமினியின் மீமாம்ச சூத்திரங்களைப்பற்றி நான் சொன்ன ஒரு கருத்துக்காக என் நட்பையே முறித்துக் கொண்ட நெடுநாள் நண்பர் ஒருவர் உண்டு. சிலப்பதிகார மணமுறைகளைப்பற்றி பேசிக் கொண்டிருந்தபோது நான் ”சமணனாகிய கோவலன் எப்படி ‘மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட’ கண்ணகியை மணந்தான்?” என்று சொன்னதைக் கேட்டு பார்ப்பான் என்ற ‘வசை’ச்சொல்லை நான் வேண்டுமென்றே பயன்படுத்தினேன் என்று எண்ணி புண்பட்டு விலகிய நண்பரும் உண்டு”.
--------------------------------------------------------------------------------------------

“ஒருமுறை ஒரு நண்பர்வட்டத்தில் பேசும்போது நான் சொன்னேன் ”பேசிவரும்போது தமிழ்நாட்டில் ஒடுக்கப்படாத ஒரே சாதிதான் இருக்கிறது போல் தோன்றுகிறது — நாயர் சாதி !” டீக்கடை வைத்து சந்தோஷமாக இருக்கிறார்கள்.

ஆகவே சாதிபேசாமல் இருப்பது என்பது யாரிடமும் நெருக்கமாகப் பேசாமலே இருப்பது மட்டுமே. எல்லாருக்கும் அது சாத்தியமில்லை. ஆனால் தமிழகத்து மனச்சிக்கல் என்னவென்றால் சாதி சர்ந்த இத்தனை உளச்சிக்கல் இருந்தாலும் பொதுவெளியில்சாதி என்பது ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற பாவனையை அவர்கள் விரும்புகிறார்கள் என்பதுதான். ஆகவே சாதியைப்பற்றி பேசுவது பெரும்பாலானவர்களுக்கு பிடிப்பதில்லை. அது ஒரு பெரும்பான்மை நடைமுறை என்பதனால் அதைத்தான் கடைப்பிடித்தாகவேண்டும்.

ஆனால் சாதி என்ற அடையாளத்தை தொடர்ந்து அந்தரங்கமாகவேனும் பரிசீலனைசெய்துகொண்டிருப்போம், பரிகாசம் செய்துகொண்டிருப்போம். நெருக்கமான நண்பர்களிடமாவது அந்த பாவனைகளையும் இடக்கரடக்கல்களையும் கைவிட்டு பழக முடியுமா என்று முயல்வோம். நான் சொல்வது அவ்வளவே”.

---------------------------------------------------------------------------------------------

இப்போது டோண்டு ராகவன்.
இது, இது இதைத்தான் நானும் பலமுறை சொல்லி வருகிறேன். உதாரணத்துக்கு சாதியே கூடாது என்னும் பதிவர்கள் அடிக்கும் கூத்து என்னும் பதிவில் நான் சொன்னவை:
“எதற்கு இந்த ஆஷாடபூதித்தனம்? சாதி என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏதேனும் ஒரு முறையில் இருந்து வந்திருக்கிறது என்றால், அதற்கு பலமான சமூக காரணங்கள் இருந்திருக்க வேண்டும்தானே. அதையெல்லாம் மனதில் கொள்ளாது அதனால் விளையும் சில சங்கடங்களை மட்டும் மனதிலிருத்தி, அதை அப்படியே ஒழிக்க வேண்டும் எனக்கூறுவது தவறு என்பதை விட பிராக்டிகல் இல்லை என்றுதான் கூறவேண்டும்”.

“சாதி ஒழிப்புக்காக பாடுபடுவதாக பொய்யுரைக்கும் கட்சிகளும் கூட தேர்தல் சமயத்தில் தங்கள் வேட்பாளர்களின் சாதி அவர்கள் கேட்கும் தொகுதிக்கு மேட்ச் ஆகிறதா என்றுதான் பார்க்கின்றனர்”.

முகம்மது பின் துக்ளக் படத்தில் ஒரு காட்சி வரும். புரொபசர் ரங்காச்சாரியின் மனைவி துக்ளக் பிரதம மந்திரியாக வரவேண்டும் என வேண்டிக் கொள்வாள். அப்போது “பெருமாளே, துக்ளக் பிரதமராக வந்தால் எங்க பத்துவுக்கு மொட்டை போடுகிறேன்” என்பாள். அவள் பிள்ளையான பத்து என அழைக்கப்படும் பத்மநாபன் லபோ லபோ என கத்துவான். “எனக்கு ஏன் மொட்டை அடிக்கறே, வேணும்னா துக்ளக்குக்கு அடி” என கோபத்துடன் சொல்வான்.

அதை நினைவுபடுத்தும் விதமாக எம்.ஜி.ஆர். அரசு எழுபதுகளின் பிற்பகுதியில் கோமாளித்தனமான ஆர்டர் கொடுத்து தெருக்களிலிருந்து சாதிப் பெயர்களை நீக்கிய கூத்தைப் பற்றியும் நான் யார் சாதிப் பெயரை யார் எடுப்பது என்னும் தலைப்பில் பதிவிட்டுள்ளேன்.

சாதி ஒழிப்பு என கூறும் தமிழகத் தலைவர்கள் செய்ததெல்லாம் எல்லா குப்பைகளையும் ஜமக்காளத்தின் கீழே தள்ளி குப்பையே இல்லாதது போல தோற்றம் அளித்ததுதான் தவிர வேறு ஒன்றுமில்லை.

மனித சமூகம் இருக்கும் இடங்களிலெல்லாம் குழு மனப்பான்மைகள் கண்டிப்பாக இருக்கும். காலதேச வர்த்தமானங்களை பொருத்து அவர்றின் லேபல் மாறும். நம் நாட்டில் அவை சாதி ரூபத்தில் உள்ளன அவ்வளவே. அவை இங்கு வந்தது காலத்தின் கட்டாயம், அவை தவிர்க்கப்படமுடியாதவை என்பதையே நானும் எனது லேட்டஸ்ட் நங்கநல்லூர் பஞ்சாமிர்தத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/16/2010

பெரியாரின் எழுத்துக்கள் விடுபட்ட நிலையில் - 2

இதற்கு முந்தையப் பதிவு: பெரியாரின் எழுத்துக்கள் விடுபட்ட நிலையில்

பெரியாரின் எழுத்துக்கள் விடுபட உதவிய உச்ச நீதிமன்றத்தின் லேட்டஸ்ட் தீர்ப்பு இங்கு தரப்படுகிறது. நன்றி கீற்று தளத்துக்கு.

முதலில் கீற்று தளத்தில் வந்த செய்திக்கு செல்வோம். பிறகு வருவான் டோண்டு ராகவன்.

பெரியார் படைப்புகளுக்கு எந்த பதிப்புரிமையும் கிடையாது
பெரியார் முழக்கம் செய்தியாளர் செவ்வாய், 22 ஜூன் 2010 17:34
வீரமணி உரிமை கோர அவரிடம் எந்த சான்றும் இல்லை - உயர்நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு

‘குடிஅரசு’ உள்ளிட்ட பெரியார் ஏடுகளுக்கும் பெரியார் படைப்புகளுக்கும் கி.வீரமணி பதிப்புரிமை கோரும் உரிமை கிடையாது. அதற்கான ஆவணங்கள் அவரிடம் ஏதுமில்லை. பெரியார் நூல்கள் மக்கள் அரங்கிற்கு வந்துவிட்டது என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

பெரியார் திராவிடர் கழகம் ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிடுவதற்கு எதிராக, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பெரியார் நூலை வெளியிடும் பதிப்புரிமை தமக்கு மட்டுமே உண்டு என்றும், பெரியார் திராவிடர் கழகம் வெளியிடுவது தமது பதிப்புரிமையில் குறுக்கிடுவதாகும் என்றும் கூறி, பதிப்புரிமையில் குறிக்கிட்டதால் ரூ.15 லட்சம் தமக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் வழக்கில் கோரி இருந்தார்.

பெரியார் திராவிடர் கழகம் 2008 செப்டம்பர் 17 ஆம் தேதி குடிஅரசு தொகுப்புகளை வெளியிடத் திட்டமிட்டிருந்ததற்கு இடைக்காலத் தடை கோரியிருந்தார். வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, அப்போதுள்ள நிலையே நீடிக்க (Status Quo) உத்தரவிட்டார். தடைகோரிய மனு உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சந்துரு, குடிஅரசு தொகுப்புகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்றும், மனுதாரர் (வீரமணி) தமக்கு பதிப்புரிமை உண்டு என்பதை நிரூபிக்கவில்லை என்றும் கூறி 27.7.2009 இல் தீர்ப்பளித்தார். இத் தீர்ப்பை எதிர்த்து கி.வீரமணி, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. இரண்டு நீதிபதிகள் விசாரணையை தங்களால் நடத்த இயலாது என்று கூறி விட்டனர்.

வழக்கு முடிந்து விடாமல் இழுத்தடிக்கப்பட வேண்டும் என்பதிலேயே வீரமணியின் தரப்பினர் ஆர்வமாக இருந்தனர். மீண்டும் மீண்டும் வழக்கைத் தள்ளி வைக்கும் கோரிக்கையையே வீரமணி வழக்கறிஞர்கள் முன் வைத்தனர். இறுதியாக இந்த வழக்கை மேல்முறையீட்டு அமர்வு நீதிபதிகள் எப்.எம். இப்ராகிம் கலிஃபுல்லா, என். கிருபாகரன் ஆகியோர் விசாரணைக்கு தலைமை நீதிபதியே உத்தரவிட்டார். இந்த அமர்வு முன் முழுமையான விசாரணை நடந்தது. விசாரணை முடிந்து நீதிபதிகள் தீர்ப்பை தள்ளி வைத்த பிறகு, கோடைகால விடுமுறை வந்து விட்டது.

விடுமுறைக்குப் பிறகு கடந்த 9 ஆம் தேதி நீதிபதிகள், தங்கள் தீர்ப்புகளை வழங்கினர். நீதிபதிகள் அறையில் வழக்கறிஞர்கள் முன்பு நீதிபதிகள் தீர்ப்பினை அறிவித்தனர். நாடு முழுதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தீர்ப்பு பதிப்புரிமை வழக்கில் முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகிறது. கழக சார்பில் வழக்கறிஞர் எஸ். துரைசாமி, இளங்கோவன், மூத்த வழக்கறிஞர் ஆர். தியாகராஜன், கிளேடிஸ் டேனியல் ஆகியோர் வாதிட்டனர். நீதிபதிகள் - வீரமணி தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதங்கள் எல்லாவற்றுக்கும் விரிவான, சட்டப் பூர்வமான பதில்களை முன் வைத்து மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தனர். வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் முக்கிய பகுதிகள் :

‘குடிஅரசு’ தொகுப்புகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிடுவதற்கு தடை கோரி, மனுதாரர் (கி.வீரமணியும்) தொடர்ந்த இந்த மேல்முறையீட்டு மனு, தம்மையும் இணைத்துக் கொள்ள தஞ்சை இரத்தினகிரி தாக்கல் செய்த மனு இரண்டையும் சேர்த்தே, இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது. மனுதாரர்கள், எதிர் மனுதாரர்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்களின் கருத்துகளை இந்த நீதிமன்றம் உன்னிப்பாக பரிசீலித்தது. இரு தரப்பிலும், பல ஆவணங்கள் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டன. அவைகளையும், நீதிமன்றம் உன்னிப்பாகப் பரிசீலித்தது. இந்த வழக்கில் மனுதாரர் கோரிய இடைக்காலத் தடை மனுவை தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் (நீதிபதி சந்துரு) தீர்ப்பும் உன்னிப்பாக பரிசீலிக்கப்பட்டது.

பெரியாரின் சிந்தனைகளான குடிஅரசு தொகுப்புகளை வெளியிட தடைகோரும் மனுதாரர் சார்பில் (கி.வீரமணி) முதன்மையாக எடுத்து வைத்த வாதம், தங்களுக்கு மட்டுமே பதிப்புரிமை உள்ளது என்பதாகும். 1957 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டத்தின், சட்டப் பிரிவுகளின் கீழ், அவர் இந்த உரிமையை கோருகிறார். எதிர் மனுதாரர்களான கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் இந்தத் தொகுப்புகளை வெளியிடுவது, தமக்குரிய பதிப்புரிமையில் குறுக்கிடுவதாகும் என்றும், எனவே குடிஅரசு கட்டுரைகள், சுய மரியாதை இயக்க தொடர்பான எழுத்துகள், நூல்கள், வெளியீடுகள் எவற்றையும் வெளியிடும் உரிமை அவர்களுக்குக் கிடையாது என்றும், அவர்கள் வெளியிடுவதற்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் (கி.வீரமணி) கோருகிறார். அத்துடன், இதற்காக ரூ.15 லட்சம் தமக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதும் அவரது கோரிக்கையாகும். மனுவில் நீதிமன்றத்திடம் முதன்மை கோரிக்கையாக, தமக்குரிய பதிப்புரிமையை மனுதாரர் குறிப்பிடும் மனுதாரர், மனுவின் உள்ளடக்கத்தில், வேறு ஒன்றைக் குறிப்பிடுகிறார்.

அதாவது 1983 ஆம் ஆண்டில் தம்மால் நியமிக்கப்பட்ட புலவர் இமயவரம்பன் தலைமையிலான குழுவினர் ‘குடிஅரசு’இதழ்களிலிருந்து தொகுத்த பெரியாரின் கட்டுரைகள் தொகுப்பை, யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று, (Stealthily removed) அதே தொகுப்பையே அவர்கள், நூலாக அச்சிட்டு வெளியிட இருப்பதாகக் கூறுகிறார். பெரியார் நூல்களுக்கு தமக்கு மட்டுமே பதிப்புரிமை உண்டு. அதில் குறுக்கிடுவதை அனுமதிக்கக்கூடாது என்பதே வழக்கில் மனுதாரரின் முதன்மையான கோரிக்கை. ஆனால், திருச்சியில் தம்மால் நியமிக்கப்பட்ட குழுவினர் தொகுத்தவற்றை தெரியாமல் எடுத்துச் சென்று, வெளியிட்டுவிட்டதாக தனது வழக்கு மனுவில் கூறுகிறார். இதில், தனக்குரிய பதிப்புரிமையை, எந்தக் குறிப்பான ஆவணத்துக்குக் கோருகிறார் என்பதை திட்டவட்டமாகக் கூறவில்லை.

பதிப்புரிமை சட்டத்தின்படி (பிரிவு 17) ஒரு நூலின் பதிப்புரிமைக்கு உரியவர், அந்த நூலை எழுதியவர்தான். அதே நேரத்தில் வேறு ஒரு இதழிலோ செய்தித்தாளிலோ அதன் உரிமையாளர் கீழ், வேலை செய்யும் எழுத்தாளர், அந்த பத்திரிகையில் எழுதிய படைப்புகளுக்கான பதிப்புரிமை, அதன் உரிமையாளருக்கே உண்டு. அப்படித்தான் பதிப்புரிமை சட்டம் உட்பிரிவு (17(ய)) கூறுகிறது. எழுத்தாளர், தனது எழுத்துக்கு பதிப்புரிமை கோர வேண்டும் என்றால், அதற்காக தனியாக உடன்படிக்கை ஒன்றை உரிமையாளருக்கு எழுதிக் கொடுத்திருக்க வேண்டும். அத்தகைய உடன்படிக்கை ஏதும் இல்லாதபோது, உரிமையாளருக்குத்தான் பதிப்புரிமை போய்ச் சேரும். பதிப்புரிமை சட்டத்தின் அடுத்த பிரிவு (எண்.18), பதிப்புரிமைக்குரிய ஒருவர், எழுத்து மூலமாக, அந்த உரிமையை முழுமையாகவோ, பகுதியாகவோ, பதிப்புரிமையை வழங்க வேண்டும் என்று கூறுகிறது.

இந்த இரு சட்டப் பிரிவுகளின்படி, ஒருவர் பதிப்புரிமை கோருவதற்கு இரு நிபந்தனைகள் உள்ளன. ஒன்று - ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஆசிரியர், தனக்கான பதிப்புரிமையை கோருவதற்கு, அந்த நிறுவன உரிமையாளருடன் ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். மற்றொன்று பதிப்புரிமைக்கு உரிய ஒருவர், தனது பதிப்புரிமையை வேறு எவருக்காவது தர விரும்பினால், அத்தகைய உரிமையை அவருக்கு எழுத்து மூலம் வழங்கியிருக்க வேண்டும். இதுதான் சட்டத்தின் நிலை. இந்த சட்டப்படி பார்த்தால், மனுதாரர், தனக்கு ஆதரவான ஆவணம் எதையும் சமர்ப்பிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், இங்கே மனுதாரர் குறிப்பிட்டுள்ள குடிஅரசு தொகுப்பு - மனுதாரரின் (கி.வீரமணி) படைப்புகளோ, எழுத்துகளோ அல்ல. அவைகள், 1925 ஆம் ஆண்டிலிருந்து ‘குடிஅரசு’ பத்திரிகையில் தந்தை பெரியார் எழுதியவை. மனுதாரரின் எழுத்துகளாக இல்லாத ஒன்றுக்கு, அவர், பதிப்புரிமை கோர முடியாது. பெரியாருடைய எழுத்துகளுக்கான பதிப்புரிமை பெரியாருக்குத்தான் உண்டு. இதில், இரண்டு கருத்துகளுக்கு இடமே இல்லை. தொகுக்கப்பட்ட ‘குடிஅரசு’ கட்டுரைகள், பெரியாருக்கு உரியவை என்பதை மனுதாரர், எதிர் மனுதாரர் இருவருமே ஒப்புக் கொண்டுள்ளனர்.

இப்போது அடுத்தக் கேள்வி என்னவென்றால், எழுத்தாளர் என்ற முறையில் பதிப்புரிமை பெற்றிருந்த தந்தை பெரியார், தனது பதிப்புரிமையை பதிப்புரிமை சட்டத்தில் கூறியுள்ளபடி (பிரிவு 17, 18)வேறு எவருக்காவது, எழுதிக் கொடுத்திருக்கிறாரா என்பது தான்.

பதிப்புரிமை சட்டத்தின் 18 ஆவது பிரிவின் கீழ்தான், மனுதாரர் தமது உரிமையைக் கோரியிருக்கிறார். அதாவது, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின், அதன் விதிகளில் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறுகிறார். சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற பெயரில் தந்தை பெரியார் பதிவு செய்திருந்த சொசைட்டிக்கான விதிகளில், நூல்கள் வெளியீடு, துண்டுப் பிரசுரங்கள் வெளியீடு போன்ற ஆக்கபூர்வமான பணிகள் நிறுவனத்தின் செயல்பாடுகளாக இருக்கும் நிறுனத்தின் நோக்கத்துக்கு ஏற்ற வகையில், நூல்களை வெளியிடவும், விற்கவும், அச்சகம் நிறுவப்படும் என்று கூறப்பட்டுள்ளன. இந்த ‘சொசைட்டிக்கான’ பதிவில் கையெழுத்திட்டவர்களில் தந்தை பெரியாரும் ஒருவர். மேற்குறிப்பிட்ட விதிகளில், தந்தை பெரியாரின் குடிஅரசு பற்றியோ அல்லது அவரது மற்ற படைப்புகள் பற்றியோ குறிப்பிட்டு, எதையும் சுட்டவில்லை.

மேற்குறிப்பிட்ட நிறுவனத்தை பெரியார் சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ்தான் (Society Registration Act) அதுவும், 1952 ஆம் ஆண்டில் தான் (21.10.1952) பதிவு செய்துள்ளார். இதில் ஒன்றை கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது தொடரப்பட்டுள்ள வழக்கு 1952க்கு முன்பே 1925 முதல் 1949 வரை நடந்த ‘குடிஅரசு’வார ஏடு தொடர்பானதாகும். ‘குடி அரசு’ நிறுத்தப்பட்ட பிறகு, பெரியார் பதிவு செய்த நிறுவனத்தின் விதிகளில் குடிஅரசு பற்றியோ, அல்லது அது தொடர்பான பதிப்புரிமை பற்றியோ, தந்தை பெரியார் படைப்புகள் பற்றியோ, வெளியிட்ட நூல்கள் பற்றியோ, குறிப்பிட்டு எதையும் கூறவில்லை.

மனுதாரரின் வழக்கறிஞர் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் 22வது விதியை சுட்டிக்காட்டி வாதாடினார். இந்த நிறுவனத்தின் தலைவர் பெரியார், தனது பெயரிலும், நிறுவனத்தின் பெயரிலும்,ஏற்கனவே வாங்கிய சொத்துகளும், அதன் நிர்வாகக் குழு ஆயுள் உறுப்பினர்கள் நிறுவனத்துக்காக ஏற்கனவே வாங்கிய சொத்துக்களும், இந்த நிறுவனத்துக்கு உரிமையுடையதாகும் என்று அந்த பிரிவு கூறுகிறது. (இதன்படி ‘குடிஅரசு’ ஏற்கனவே பெரியாரால் வாங்கப்பட்ட சொத்து என்றும், எனவே அது நிறுவனத்துக்கு உரிமையாகிறது என்றும், வழக்கறிஞர் வாதிட்டார்). மேற்குறிப்பிட்ட பிரிவுகள், நிறுவனத்தில் உறுப்பினர்களுக்கான உரிமைகளைத் தான் (Status) வரையறுக்கின்றன. நாங்களும் விடா முயற்சியோடு துருவித் துருவி ஆராய்ந்து பார்த்த பிறகும்கூட, பெரியாரின் படைப்புகள், மனுதாரரின் நிறுவனத்துக்கு உரிமையுடையவை என்பதற்கு ஆதரவாக, எதையும், எங்களால் கண்டறியவே முடியவில்லை. (By any amount of Strenuous effort - we were not in a position to discern of any right in favour of the appellant - society)

1925 ஆம் ஆண்டிலிருந்து 1949 வரை ‘குடிஅரசு’ வெளிவந்த காலங்களில் அமுலில் இருந்தது 1914 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியில் வெளிவந்த பதிப்புரிமை சட்டமாகும். அதற்குப் பிறகு 1957 ஆம் ஆண்டில்தான் புதிய பதிப்புரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே ‘குடிஅரசு’க்கு 1914 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பதிப்புரிமை சட்டமே - சட்டப்படி பொருந்தக் கூடியதாகும்.

இரண்டு சட்டங்களில் உள்ள விதிகளும், பெரியாருக்கு வழங்கியுள்ள உரிமைகளை, இந்த வழக்கில் ஆராய வேண்டியிருக்கிறது. காரணம், மனுதாரரின் வழக்கறிஞர் திருச்சி வே. ஆனைமுத்து தொகுத்த “பெரியார் சிந்தனைகள்” நூல் தொகுதிக்கு பெரியார் அனுமதி வழங்கியதைக் குறிப்பிட்டுள்ளார். 1972 ஆம் ஆண்டில் பெரியார் அதற்கான அனுமதியை ஆனைமுத்து என்ற தனிமனிதருக்கு வழங்கியுள்ளார். இதை ஆனைமுத்து ‘பெரியார் சிந்தனைகள்’ தொகுதிக்காக தாம் எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார். இந்த ஆவணம், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதை கவனத்துடன் பரிசீலித்தோம். அதில், நாங்கள் அறியவருவது என்னவென்றால், தந்தை பெரியாரே ஆனைமுத்துவை அழைத்து, தனது பேச்சு எழுத்துகளைத் தொகுக்குமாறு கேட்டிருக்கிறார். அந்தத் தொகுப்பை உருவாக்க தனிப்பட்ட முறையில் தனது ஒப்புதலையும் வழங்கியிருக்கிறார்.

ஆக, திரு. ஆனைமுத்து என்ற தனி நபரிடம், தனது எழுத்து பேச்சுகளைத் தொகுக்கும் வேலையை தந்தை பெரியார் ஒப்படைத்திருக்கிறார். அதுபோல மனுதாரரும் (கி.வீரமணி) தன்னிடம் பெரியார் ஏதேனும் பணியை ஒப்படைத்திருக்கிறார் என்பதற்கான ஆவணம் எதையும் சமர்ப்பிக்கவில்லை. தனது பேச்சுகளும், எழுத்துகளும் தொகுக்கப்பட வேண்டும் என்று ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்த பெரியார், அந்த வேலையை ஒரு தனி மனிதரிடம் ஒப்படைக்க முன் வந்த நிலையில், அதே போன்ற உரிமை தனக்கும் மனுதாரர் கோரினால், அப்படி பெரியார் ஒப்படைத்ததற்கான ஆவணத்தைக் காட்டியிருக்க வேண்டும். 1957ஆம் ஆண்டு பதிப்புரிமைச் சட்டத்தின்படி (பிரிவு 8), இத்தகைய எழுத்துபூர்வமான உரிமையைப் பெற்றிருந்தால் மட்டுமே, அதற்கு உரிமை கோர முடியும். எனவே - சட்டமும், மனுதாரருக்கு ஆதரவாக இல்லை.

2003 ஆம் ஆண்டு நவம்பரில் எதிர் மனுதாரர் (கொளத்தூர் மணி) ‘குடிஅரசு’ முதல் தொகுதியை வெளியிட்டார். அதில் முன்னுரையில் 1983 ஆம் ஆண்டு திருச்சியில் புலவர் இமயவரம்பன் தலைமையில் பெரியார் பற்றாளர்கள் தொகுத்ததை அப்படியே எந்த மாற்றமும் இன்றி வெளியிட்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். மனுதாரர் சார்பில் இது ஒரு ஆவணமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்மனுதாரர்களே, புலவர் இமயவரம்பன் தலைமையிலான குழு தொகுத்ததையே வெளியிட்டுள்ளதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்று மனுதாரரின் வழக்கறிஞர் வாதிட்டார். நாங்கள் ஏற்கனவே கூறியது போல், இது பெரியாரின் எழுத்துகள் தானே தவிர, மனுதாரரின் (கி.வீரமணியின்) சிந்தனையில் உதித்த படைப்புகள் அல்ல. எனவே பெரியாரின் எழுத்து-பேச்சு தொகுப்புக்கான பதிப்புரிமை மனுதாரருக்கு உள்ளதா என்பதே முடிவு செய்யப்படாத நிலையில், அத்தொகுப்பு தன்னுடையது அல்ல; பெரியாருடையது என்று மனுதாரரே ஒப்புக் கொள்ளும்போது, மனுதாரருக்கு பதிப்புரிமை கோரும் உரிமை கிடையாது. மனுதாரர் தனக்கு சாதகமாக சமர்ப்பித்த ஆவணங்கள் எதிலும் அவர் பதிப்புரிமை கோரும் உரிமையை எந்த வகையிலும் உறுதிப்படுத்தவில்லை.

‘விடுதலை’யில் பெரியார் எழுதியதை (2.10.1952) மனுதாரர் ஒரு ஆவணமாக சமர்ப்பித்துள்ளார். அதில் இவ்வாறு பெரியார் எழுதியிருக்கிறார்:

“அப்போது ஸ்தாபனத்திற்கு உள்ள சொத்துக்கள் என்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது ஒரு லட்ச ரூபாய் தான். அதாவது சில கட்டிடங்கள், 2 அச்சு நிலையங்கள், 2 பத்திரிகைகள், புத்தகங்கள் உரிமைகள், ரொக்க நிதிகள் ஆகியவை. அன்றைய நிலவரப்படி” -என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில், பெரியார் குறிப்பிட்டுள்ள சொத்துக்கள் என்பதில் பெரியார் நூல்களின் பதிப்புரிமையும் அடங்கும் என்று மனுதாரர் கூறுகிறார். இதை ஏற்க முடியாது. பெரியாரின் பேச்சும், கட்டுரைகளும், சொத்துகள்தான் என்பதற்கான குறிப்பான சட்ட ஆவணம் இல்லாத வரை, மனுதாரரின் வாதத்தை ஏற்க இயலாது. நேரடி தொடர்பில்லாத ஒரு குறிப்பை (Remote References) மட்டும் அடிப்படையாகக் கொண்டு மனுதாரர் உரிமை கோருகிறார். இதை பொருத்தமான ஆவணமாக அங்கீகரிக்க முடியாது.

மற்றொரு எதிர்மனுதாரர் (கோவை இராம கிருட்டிணன்) ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ (21.08.2008) இதழுக்கு அளித்த பேட்டியில் திருச்சியில் புலவர் இமயவரம்பன் தலைமையிலான குழு தொகுப்பையே தாங்கள் வெளியிட்டிருந்ததாக கூறியதை, இங்கே மனுதாரர், தமக்கு சார்பாக சமர்ப்பித்துள்ளார். இந்த ஆவணமும் மனுதாரரின் (வீரமணியின்) பதிப்புரிமையை ஏற்பதற்கோ, அங்கீகரிப்பதற்கோ எந்த வகையிலும் உகந்தது அல்ல. அந்தப் பேட்டியில் கூறப்பட்டுள்ள செய்திகூட, மனுதாரர் (கி.வீரமணி) தந்தை பெரியார் பேச்சு எழுத்துகளை வெளியிடாமல் இருந்ததைத்தான் குறிப்பிடுகிறது.

1983 ஆம் ஆண்டு புலவர் இமயவரம்பன் தலைமையில் ‘குடிஅரசி’லிருந்து தொகுக்கப்பட்ட பெரியார் எழுத்து பேச்சுகளுக்கு மனுதாரர் தமக்கு பதிப்புரிமை கோருவதால் இப்போது அமுலிலுள்ள 1957 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டத்தின் பிரிவுகளை நாங்கள் பரிசீலித்தோம். அதில் 52(1)(எம்) பிரிவு - பதிப்புரிமை கோர முடியாத சில செயல்பாடுகளை பட்டியலிட்டுள்ளது. இதன்படி, ஒரு செய்திப் பத்திரிகை அல்லது இதழ் அல்லது பருவ இதழ்களில் வெளிவரும், அன்றாட பொருளாதாரம், அரசியல், சமூகம் அல்லது மதம் தொடர்பான கட்டுரைகளை மீண்டும் மறு வெளியீடாக வெளியிடுவது பதிப்புரிமையில் குறுக்கீடுவதாகாது என்று கூறுகிறது. அந்த கட்டுரைகளை ஆசிரியர், பதிப்புரிமைக்கு உட்பட்டது என்று வெளிப்படையாக அறிவிக்காதவரை, மறு வெளியீடு செய்யும் உரிமை உண்டு என்று, அந்த பிரிவு கூறுகிறது. ‘குடிஅரசு’ஒரு செய்திப் பத்திரிகை தான். இந்த சட்டப்படி அதில் வரும் கட்டுரைகளை மீண்டும் வெளியிடுவதற்கு பதிப்புரிமை கேட்க முடியாது. தனது எழுத்துப் பேச்சுகளுக்கு பதிப்புரிமை எதையும் தந்தை பெரியாரும் எழுதி வைக்கவில்லை.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சில விதிகளைக் காட்டி, மனுதாரர் தனது பதிப்புரிமைக்கு உரிமை கேட்டது பற்றி, ஏற்கனவே, விரிவாக விளக்கி இருக்கிறோம். எனவே ‘குடிஅரசு’செய்தித்தாள் என்றாலும் சரி அல்லது வார இதழ் என்றாலும் சரி,எப்படி அழைத்தாலும், அதில் வெளிவந்துள்ள தனது கட்டுரைகளை எவரும் வெளியிடக்கூடாது என்று பெரியார் உரிமை கோரியிருந்தார் என்பதற்கான ஆவணமோ, சட்டபூர்வமாக ஏற்கக் கூடிய சான்றுகளோ எதுவும் இல்லாத நிலையில் ‘குடிஅரசு’ இதழில் பெரியாரின் பேச்சு-எழுத்துகளை வெளியிட முன் வந்துள்ள எதிர் மனுதாரர்கள் மீது எந்த குற்றமும் காண முடியாது. (Therefore, there being no other document or legally acceptable material to show that Thanthai Periyar reserved his right of production of any of his articles published in the news paper or in the Weekly Magazine Kudiarasu, no fault can be found with the respondents when they want to publish the collection of the speeches and articles of Thanthai Periyar Published in the Weekly Kudiarasu) தந்தை பெரியாரின் படைப்புகளை எதிர்மனுதாரர்கள் (கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன்) வெளியிடுவதற்கான பாதுகாப்பை பதிப்புரிமை சட்டத்தின் 52(1)(எம்) பிரிவு தெளிவாக வழங்குகிறது.

சொல்லப் போனால், ஏற்கனவே 2003 நவம்பரில் 1925 ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ தொகுப்பையும், 2006 செப்டம்பரில் 1926 ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ தொகுப்புகளையும் எதிர்மனுதாரர்கள் வெளியிட்டுவிட்டதாக கூறியுள்ளனர். இந்த வெளியீடுகளின்போது, மனுதாரர் (கி.வீரமணி) எதிர்ப்பு எதையும் தெரிவிக்கவில்லை. இதே சட்டப் பிரிவின் அடிப்படையில் ஏற்கனவே வழக்கை விசாரித்த நீதிபதி (நீதிபதி சந்துரு) கூறியுள்ள அதே கருத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். குடிஅரசு தொகுப்புகளை வெளியிடுவதற்கு சட்டரீதியான தடைகள் ஏதும் இல்லை!

இரண்டாவது எதிர் மனுதாரர் (கு. இராமகிருட்டிணன்) சார்பில் வாதிட்டவர் (கிளாடிஸ் டேனியல்), மற்றொரு சட்டப் பிரிவைச் சுட்டிக் காட்டினார். 1914 ஆம் ஆண்டின் பதிப்புரிமை சட்டம், ஒரு நூலாசிரியருக்கு பதிப்புரிமையின் காலத்தை நிர்ணயித்துள்ளது. அதன்படி, அந்த எழுத்தாளர் தனது வாழ்நாள் முழுதும் பதிப்புரிமைக்கு உரியவர். அவர் இறந்து 25 ஆண்டுகள் வரையும் அவருக்கு பதிப்புரிமை உண்டு. இறந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு பதிப்புரிமை முடிவுக்கு வந்து விடுகிறது. இதுதான் 1914 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டத்தின் நிலை. இந்தப் பிரிவுக்கு 1957 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பதிப்புரிமை சட்டம் (79(5)) ஏற்பு வழங்கியுள்ளது. அதாவது 1957 ஆம் ஆண்டு புதிய பதிப்புரிமை சட்டம் வருவதற்கு முந்தைய காலத்தின் படைப்புகளுக்கு பதிப்பாளர் உரிமைகளுக்கான காலக்கெடு, ஏற்கனவே அமுலில் இருந்த சட்டத்திலுள்ளதே பொருந்தும் என்று வாதிட்டார். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது.

மேற்குறிப்பிட்ட இரு சட்டப் பிரிவுகளின்படி பெரியார் எழுத்து பேச்சுகளுக்கான பதிப்புரிமை, அப்படியே பெரியார் பதிப்புரிமை எழுதி தந்ததாக ஏற்றுக் கொண்டாலும் கூட அது முடிவுக்கு வந்துவிட்டது என்பதே சரி. பெரியார் முடிவெய்தியது 24.12.1973. அதற்குப் பிறகு, 25 ஆண்டுகள் பதிப்புரிமை உண்டு என்று எடுத்துக் கொண்டாலும், 24.12.1998 அன்றோடு பதிப்புரிமை முடிவுக்கு வந்துவிட்டது. எதிர்மனுதாரர் (கொளத்தூர் மணி) ‘குடிஅரசு’ முதல் தொகுதியை வெளியிட்டதே 2003 நவம்பரில்தான். எனவே, சட்டரீதியாக பதிப்புரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே 24.12.1998-க்குப் பிறகு தந்தை பெரியாரின் படைப்புகள் மக்கள் அரங்கிற்கு வந்து மக்கள் சொத்தாகி விட்டன. (Therefore, when after 24.12.1998, the literary works of Thanthai Periyar have come into Public domain, even if there were any restrictions, the same would have ceased to operate after 24.12.1998) - என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

27 தொகுதிகளையும் கணினியில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தவுடன் கழகம் வெளியிடும் ‘குடிஅரசு’ 27 தொகுதிகளும் கணினியில் ஏற்றப்பட்டுள்ளது. ‘பிடிஎஃப்’முறையில் கணினியில் பதிவாக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளையும் ‘periyardk.org என்ற இணையதளத்துக்குச் சென்று படிக்கலாம்.

இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .periyardk@gmail.com என்ற முகவரிக்கு கடிதம் எழுதுவோருக்கு இலவசமாக இணைய தளத்தின் மூலம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

- பெரியார் திராவிடர் கழகம்


இதற்கு எதிர்வினையாக வீரமணி ஒரு அறிக்கை வெளியுட்டுள்ளார். அது பின்வருமாறு:

பெரியாரின் "குடிஅரசு' தொகுதிகளின் எழுத்து, பேச்சுகளை தனி நபர்கள் லாபம் அடையும் நோக்கில் வெளியிடத் தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். அவ்வாறு விதிக்கப்பட்ட தடையை தனி நீதிபதி நீக்கினார்.

இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்ச் தள்ளுபடி செய்துள்ளது.

எனினும், குடிஅரசு தொகுதிகளை வெளியிடும் உரிமை பற்றிய பிரதான வழக்கு இனிமேல்தான் விசாரிக்கப்பட உள்ளது. திரிபுவாதம் மற்றும் திருட்டிலிருந்து பெரியார் எழுத்துகளை, கருத்துகளை பாதுகாக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். எனினும், பெரியாரின் எழுத்துகள், பேச்சுகளை பெரியார் அறக்கட்டளையின் அனுமதி பெற்று, எவரும் வெளியிடலாம். இதற்கு எப்போதும் தடை இல்லை என்று கி. வீரமணி தெரிவித்துள்ளார்.


இப்போது டோண்டு ராகவன். உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு தெளிவாகவே உள்ளது. ஆனால் வீரமணி என்ன கூறுகிறார்? அதாகப்பட்டது பெரியாரின் எழுத்துகள், பேச்சுகளை பெரியார் அறக்கட்டளையின் அனுமதி பெற்று எவரும் வெளியிடலாம். அதற்கு எந்த தடையும் இல்லை என்று. உச்சநீதி மன்ற திர்ர்ப்பில் அவ்வாறெல்லாம் அனுமதி கேட்க வேண்டிய அவசியமே இல்லை என்றுதான் எனக்கு படுகிறது. வழக்கறிஞர் பதிவர்கள் தமது கருத்துக்களை இங்கு கூறுவது நலமாக இருக்கும்.

இப்போது லேட்டஸ்டாக வை.கதிரவன் என்பவர் 22.07.2010 தேதியிட்ட இன்று விற்பனைக்கு வந்த குமுதம் ரிப்போர்டர் 18-19-ஆம் பக்கங்களில் எழுதியுள்ள இன்னொரு விஷயத்தைப் பார்த்தேன்.

இது பெரியாரின் அசையா சொத்துக்கள் சம்பந்தப்பட்டது. தனது மரணம் வரை பெரியார் தனது தனிப்பட்ட சொத்துக்களை யாருக்கும் எழுதி வைக்கவில்லை. மேலும் அவை யாவும் பெரியார் அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டதாகவும் எந்த ஆவணமும் இல்லை. ஆகவே அவை மக்கள் சொத்துக்களாகி விட்டன என்ற விவகாரத்தை இப்போது பெரியார் தி.க. கிளப்பியுள்ளது.

அம்மாதிரியான அசையா சொத்துக்கள் என்னென்ன என்பதையும் இக்கட்டுரை சுட்டிக் காட்டியுள்ளது. அவை: சென்னையிலுள்ள பெரியார் திடல், ஈரோட்டிலுள்ள பெரியார் மன்றம், அதனைச் சுற்றியுள்ள வணிக வளாகம், பத்தாயிரம் சதுர அடியிலான ஒரு மஞ்சள் மண்டி, பல வீடுகள், மணியம்மை ஸ்டோர் என்ற பெயரில் ஒரு கடை என பெரியாருக்கு சொந்தமான பல சொத்துக்கள் ஈரோட்டில் உள்ளன. திருச்சி நகரத்தில் 3 ஏக்கர் பரப்பில் பெரியார் மாளிகை, திருச்சி கே.கே. நகர் பகுதியில் 17 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியார் கல்வி வளாகம் ஆகியவை உள்ளன. சேலம் ஏற்காட்டில் ஏரிக்கருகே ஒரு வீடு மற்றும் சில கடைகள் பெரியாரின் சொத்துக்களாக உள்ளன. தஞ்சையில் பெரியார் இல்லம் உள்ளிட்ட பல சொத்துக்கள் உள்ளன.

இவை மேம்போக்காக தெரிந்தவை மட்டுமே. மேலும் இருக்கக் கூடிய சொத்துக்கள் விவரம் திரட்டி கோர்ட்டுக்கு செல்லப் போவதாக கொளத்தூர் மணி கூறியுள்ளார். இது பற்றி விவரம் கேட்க வீரமணி தரப்பை அணுகியதில் சரியான பதில் கிடைக்கவில்லை எனவும் ரிப்போர்டர் கட்டுரை கூறுகிறது.

சட்டம் தன் கடமையை செய்யட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/15/2010

புதிர்கள், கூடவே நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 15.07.2010

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் போட்டு ரொம்பநாளாச்சு பெரிசு, நீ போடறயா இல்லே நானே போடட்டுமா என முரளிமனோகர் சில நாட்களாக படுத்தி வருவதால் நானே போடறேண்டான்னு அவன்கிட்டே சொல்லிட்டு, இப்போ இப்பதிவை போடறேன்.

புதிர்களை அவ்வப்போது தோன்றும்போது எழுதி வரைவாக வைத்துக் கொள்வது வழக்கம். இது வரைக்கும் 4 தேறியுள்ளன, சரி அதையும் இங்கேயே கேட்டுடுவோம்னு போட்டுட்டேன்.

மேலும் சில புதிர்கள்
1. இரு ஷட்டகர்கள் (சகலைபாடிகள்) சடகோபாச்சாரியும் கண்ணன் ஐயங்காரும் காட்டில் வாக்கிங்கிற்கு சென்ற போது வழி தவறி விட்டனர். என்ன செய்வது எனப் புரியாது சடகோபாச்சாரி வடக்கு நோக்கி நகர, கண்ணன் ஐயங்காரோ தெற்கு நோக்கி நகர்கிறார். கால் மணி நேரம் அவ்வாறு நடந்த பின்னால் அவ்விருவருவரும் சந்திக்கின்றனர். எப்படி இது சாத்தியம்?

2. சீனக்கலாசாரம் 4500 ஆண்டுகளாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்தியக் கலாச்சாரமோ 5500 ஆண்டுகளாக இருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது என வாத்தியார் பாஷ்யம் ஐயங்கார் கேட்க மாணவன் கஸ்தூரிரங்கையங்கார் பதிலளிக்கிறான். ஆசிரியர் அவனை வகுப்பிலிருந்து வெளியேற்றுகிறார். அவன் என்ன பதில் சொல்லியிருப்பான்?

3. ஆசிரியர் ரங்காராவ் திருவள்ளுவர் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தார் என்றால், அதே கஸ்தூரிரங்கையங்கார் 2000 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் எனச் சொல்லி உதை வாங்குகிறான். அது எப்படி அவ்வளவு கரெக்டாக சொன்னானாம்? ஏதேனும் கார்பன் டேட்டிங் முறை புதிதாக வந்திருக்கிறதா என்ன?

4. தொட்டதெல்லாம் பொன்னாகும் என வரம் பெற்ற மைதாஸ் மன்னன் மிகத் துயருறுகிறான். அவன் சாப்பிட நினைத்த உணவு தங்கமாகிறது, அவனது அருமை மகளை கட்டி அணைக்க அவளும் தங்கப் பதுமையாகி விட்டாள். பாவம் அவன் என்னதான் செய்வான் இதில் எல்லாவற்றிலிருந்தும் விடிவு பெற என பத்தாம் வகுப்பு ஆசிரியர் சங்கரராமன் அழகான ஆங்கிலத்தில் அங்கலாய்க்க, மாணவன் வரதராஜன் மகரக்கட்டு உடைந்த தன் கழுதைக் குரலில் தமிழில் யதார்த்தமாக ஒரு தீர்வு சொல்ல ஆசிரியர் அவனை வகுப்பிலிருந்து வெளியேற்றுகிறார் (நான் சமீபத்தில் 1960-61 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படித்தபோது உண்மையாகவே நடந்த நிகழ்ச்சி இது). அப்படி என்ன வரதராஜன் தவறாகச் சொல்லியிருப்பான்?

சாதிகள் தவிர்க்கப்பட்டிருக்க முடியுமா?
ஆல்டஸ் ஹக்ஸ்லி என்னும் ஆங்கில எழுத்தாளர் எழுதிய “சாகசங்கள் நிறைந்த ஓர் புது உலகம்” (Aldous Huxley's Brave New World") என்னும் புத்தகம் போன நூற்றாண்டில் முப்பதுகளில் வந்தது. மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அது பற்றி மேலதிக விவரங்களுக்கு இங்கே செல்லலாம். நான் இப்பதிவில் கூறவந்த விஷயங்களுக்கு தேவையானவற்றை மட்டும் அதிலிருந்து எடுத்துக் கொள்கிறேன்.

குழந்தை பிறப்பையே ஆண் பெண் சேர்க்கையிலிருந்து விலக்கிவைத்து விஞ்ஞான பூர்வ முறையில் செயற்கை கருத்தரிப்பு, இன்குபேட்டரில் கருக்கள் ஆகிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குழந்தைகளை உருவாக்கும் ஒரு சமூகம் பற்றிய கதை இது என்றால் மிகையாகாது.

அதில் கருக்களை அவை குழந்தைகளாக உருவாகும் முன்னரே ஐந்து சாதிகளாக பிரிக்கின்றனர் (five castes என்றே வெளிப்படையாகக் கூறப்படுகிறது). அவற்றுக்கு ஆல்ஃபா, பீட்டா, காம்மா, டெல்டா மற்றும் இப்சிலான் என பெயரிடுகின்றனர். இப்பெயர்கள் கிரேக்க மொழியில் உள்ள முதல் ஐந்து எழுத்துக்களே, ஆங்கிலத்தில் A, B, C, D & E எனக்கூறலாம்.

ஆல்ஃபாவைச் சேர்ந்த குழந்தைகள் அறிவில் சிறந்தவர்கள், புதிய கண்டுபிடிப்புகளைக் கூறுபவர்கள், மனபலம் மிக்கவர்கள் இத்யாதி, இத்யாதி. மற்ற வகை கருக்கள் ஆரம்பத்திலிருந்தே அவரவர் அறிவு வளர்ச்சியில் வெவ்வேறு நிலைகளில் தடை செய்யப்பட்டு பல வேறு திறமைகளை வளர்க்கின்றனர். அவரவர் திறமைக்கேற்ப அவரவரிடமிருந்து பிறகு வேலைகள் பெறப்படுகின்றன. சிலர் அறிவு சம்பந்த வேலைகளில், சிலர் அரசாட்சி செய்து போர்த் தொழிலில் ஈடுபடுதல், சிலர் வியாபாரத்தில் செயலாற்றல், சிலர் மற்ற பிரிவினருக்கு சேவை அளித்தல் ஆகியவையும் அந்த நாவலில் விவரிக்கப்படுகின்றன. அதே சமயம் ஒவ்வொரு சாதிக் குழந்தையும் தத்தம் சாதியே சிறந்தது என மூளைச்சலவையும் செய்யப்படுகின்றனர். ஆகவே யாரும் சாதியை மாற்றிக் கொள்ளும் குழப்பமும் இல்லை.

இதெல்லாம் நான் சொல்லவில்லை அந்த நாவல் சொல்கிறது. தமாஷாக நாடோடி அவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் தமிழகத்தில் என்னென்ன சாதிகள் இருக்கும் என்பதை கற்பனை செய்து எழுதியதை நான் எனது ஒரு பதிவில் கூறியவற்றில் இருந்து சில வரிகள்:

“அன்றிரவு தங்குவதற்காக ஹோட்டலுக்கு பாகலாம் என்றால் ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி ஹோட்டலாக இருந்தது. ஆக வக்கீலும் எழுத்தாளரும் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்க வேண்டி வருகிறது. நாடோடி தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள இன்னொரு எழுத்தாளர் அப்போதைய ஜாதிக் கட்டுப்பாடு பற்றி விளக்குகிறார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் வர்ணாசிரமம் வந்து அதிலிருந்து ஜாதிகள் வந்ததை விளக்குகிறார். பிறகு அவற்றின் கட்டுக்கோப்பு குலைந்து போனதால் யார் வேண்டுமானாலும் எந்தக் குலத்தொழிலையும் செய்யலாம் என நிலை ஏற்பட, சம்பளம் அதிகம் வராத தொழில்களுக்கு ஆட்கள் கிடைக்காது, சம்பளம் அதிகம் கிடைக்கும் வேலைகளுக்கு ஒட்டுமொத்தமாக ஜனங்கள் போய் விழ அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் வந்தது. ஆகவே 500 ஆண்டுகளுக்கு முன்னால் அப்போது நிலவிய தொழில்களின் அடிப்படையில் மீண்டும் ஜாதிகளை வகுத்து ஒரு ஜாதிக்காரர் இன்னொரு ஜாதிக்காரரின் வேலையை செய்யக்கூடாது என்ற நிலை நிறுவப்பட்டது.

ஜாதிப் பிரிவுகள் இருந்தனவே தவிர இந்த ஜாதிதான் உயர்ந்தது இன்னொரு ஜாதி தாழ்ந்தது என்ற எண்ணங்களும் வராமல் பார்த்து கொள்ளப்பட்டன. தலைமுறை தலைமுறையாக ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் ஒரு தொழிலை மட்டும் செய்ததால் அத்தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆகவேதான் ஒரு ஜாதியினர் இன்னொரு ஜாதியினரைத் தொடுவது கூட குற்றமாகக் கருதப்பட்டது. போலீஸ் ஜாதியைச் சார்ந்தவர்கள் திருடர்களை பிடிக்கும்போது மட்டும் தங்கள் தொழில் தர்மப்படி அவர்களைத் தொடலாம். பிறகு தீட்டு கழிய அவர்கள் குளிப்பதற்கு சோப்பு டவல் எல்லாம் வழங்கப்படும். திருடர்களும் போலீஸ் ஜாதியினர தங்களைத் தொட்டு விட்டதால் அவர்களும் குளிப்பார்கள்”.


வேறு ஒன்றும் வேண்டாம், சாதாரண அரசு அலுவலகத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். Class 1, class 2, class 3 class 4 ஆகிய நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்தந்த கிளாசுகளுக்கான சம்பள விகிதங்கள், பொறுப்புகள் ஆகிய எல்லாமே வரையறுக்கப்படுகின்றன. கிளாஸ் மாறுவதற்கு படாத பாடும் பட வேண்டியிருக்கிறது. யூ.பி.எஸ்.சி. தேர்வுகள் எழுதி பெற்ற மதிப்பெண்களுக்கேற்ப கிளாஸ் 1 & 2 அதிகாரிகள் வேலையில் சேர்க்கப்படுகின்றனர். கிளாஸ் 3 சூப்பர்வைசர் மற்றும் கிளெரிக்கல் கேடர்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதைத் தாண்டினால் பிரமோஷன் மூலம் அபூர்வமாக கிளாஸ் 2 க்கு வேண்டுமானால் வரலாம், கிளாஸ் 1-க்கு வரவே இயலாது.

ஆனால் இங்கும் ஒரு தமாஷ். பல கிளாஸ் 3 ஊழியர்களுக்கு (வங்கி குமாஸ்தாக்கள்) டிரான்ஸ்ஃபர் இருக்காது. ஆகவே சௌகரியமாக ஒரே ஊரில் இருந்து கொண்டு சைட் பிசினஸ் பார்க்க ஏதுவாக அரும்பாடுபட்டு தவறிக்கூட கிளாஸ் 2-க்கு பதவி உயர்வு வராமல் பார்த்துக் கொள்கின்றனர். அவர்களைக் கேட்டால் கிளாஸ் 3-யே உத்தமம் எனக்கூறுவார்கள். பல கிளாஸ் 4-க்களின் நிலைப்பாடோ வேறு மாதிரி. வெறுமனே தண்ணீர் கொண்டு வந்து வைப்பது, கோப்புகளை ஒரு மேஜையிலிருந்து இன்னொரு மேஜைக்கு கொண்டு செல்வது போன்ற வேலை செய்பவர்களைக் கேட்டால் ஆளைவிடுங்கள், அரசு வேலை, நல்ல சம்பளம், பெரிய பொறுப்பும் இல்லை என்ற ரேஞ்சிலேயே பதில்கள் வரும்.

இதெல்லாவற்றையும் மீறி அடுத்த மேல் வகுப்புக்கு செல்பவர்களும் உண்டு. அவர்களிலும் பலர் பின்னால் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலாவது “நான் பாட்டுக்கு சிவனேன்னு இருந்தேன். இப்பப் பார் பொறுப்பு அதிகம், இடமாற்றம் வேற, சம்பளம் அப்படி ஒண்ணும் அதிகம் இல்லை. குடும்பம் குழந்தைகளுக்கான படிப்புக்காக ஓரிடத்தில், நாம் இன்னோரிடத்தில் இரட்டைச் செலவு, தேவையா இது தேவையா என வடிவேலு ரேஞ்சுக்கு தங்கள் முகத்துக்கு முன்னால் தம் விரலையே காட்டிக் காட்டிப் பேசுபவர்களும் உண்டு.

ரேண்டமாக எந்த சமூகமோ, மக்கள் சேர்ந்து வாழும் குழுக்களோ எல்லாவற்றிலும் தினசரி விஷயங்களை நடத்திச் செல்ல வேவ்வேறு திறமையுடையவர்கள் தேவைப்படுவார்கள். கால நேர வர்த்தமானத்தைப் பொருத்து இம்மாதிரி வேலை பங்கீடுகள் நடக்கும். அது காலத்தின் கட்டாயம். பிற்காலத்தில் தமிழ்மணத்தில் பலர் அது பற்றி திட்டுவார்கள் என்றெல்லாம் அவர்களுக்கு தெரிந்திராது, அவ்வாறே தெரிந்தாலும் போடா ஜாட்டன்களா என அந்தந்த சமூகம் தன் இயல்புக்கேற்றபடி சாதிகளை உருவாக்கிக் கொள்ளுமாய் இருந்திருக்கும்.

அரசியல் நாகரிகம்
நேற்றைய ஹிந்துவில் ஒரு போட்டோ பார்த்தேன். கர்நாடகா முதன் மந்திரியும் எதிர்க்கட்சித் தலைவரும் விவாதம் ஆரம்பிக்கும் முன்னால் ஒருவருக்கொருவர் சுமுகமாகப் பேசிக் கொள்வதை காட்டியிருந்தார்கள். எனக்கு அதை பார்த்து பெருமூச்சுதான் வந்தது. நம்மூரில் இம்மாதிரி காட்சிகளை இப்போது பார்க்கவியலுமா? ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இவ்வாறு நடந்து கொள்வார்களா? இம்மாதிரியான நாகரிகச் செயல்பாடுகள் நம்மூரிலும் நடந்துதான் வந்தன. நிலைமை மோசமானதே 1987-க்கு பிறகுதான் எனக்கூற வேண்டும். எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தவரை கருணாநிதியும் அவரும் அவ்வப்போது சந்தித்து சிரித்துப் பேசுவது நிற்கவில்லை.

ஆனால் அதன்பிறகு கவர்னர் ஆட்சி, அதற்கப்பால் 1989 எலெக்‌ஷனில் கருணாநிதி ஜெயித்து ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக வந்ததும் ஆரம்பித்தது சனியன். ஜெயும் சும்மா இல்லை கருணாநிதியும் சும்மா இல்லை. கடைசியில் ஜெயின் புடவையை பிடித்து இழுத்து அவிழ்க்கும் நிலை வரை வந்தது. அதன் பிறகு ஜெ சபைக்கே வரவில்லை. 1991-ல் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டு ஜெயின் ஆட்சி ஏற்பட்டபோது கருணாநிதியும் 1996 வரை சபைக்கே வரவில்லை. இந்த கண்ணாமூச்சி நாடகம் இன்னும் தொடருகிறது. ஜெயும் சரி கருணாநிதியும் சரி எதிர்க்கட்சித் தலைவருக்கான கடமையை செய்யவே இல்லை. இந்த அழகில் ஒருவருக்கொருவர் முகமன் கூறிக் கொள்வதெல்லாம் வேண்டாத ஆசையாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

எலிப்புழுக்கை எழுத்துக்கள்
ஆங்கிலத்தில் இதை small print என்பார்கள். பல படிவங்களில் முக்கிய ஷரத்துகள் இம்மாதிரி சிறு எழுத்துக்களில் வரும். அதை நான் எலிப்புழுக்கை எழுத்துக்கள் என்பேன். இதையே mouse print என அழைத்து ஒரு வலைப்பூ ஆங்கிலத்தில் ஒவ்வொரு திங்களன்றும் வருகிறது. கடந்த திங்களன்று வந்த அதன் பதிவில் நார்ட்டன் பிராடக்டுகளில் தரப்படும் கழிவுகளை குறித்து எழுதப்பட்டிருந்தது.

சகட்டுமேனிக்கு ரிபேட்டுகளை அறிவிப்பது, எப்படியாவது தங்கள் பொருட்களை வாங்கச் செய்வது. பிறகு அந்த வாக்குறுதிகள்? தேர்தல் வாக்குறுதிகள் ரேஞ்சுக்குத்தான் அவற்றின் மரியாதை இருக்கும். சாதாரணமாக பலர் ரிபேட்டுகளை பெற வேண்டியதற்கு செய்ய வேண்டிய காரியங்களை சோம்பேறித்தனம் காரணமாக அப்படியே திராட்டில் விட்டுவிடுவார்கள். அவர்களுக்கு தரவேண்டியது மிச்சம். அப்படியே அதற்கான பூர்வாங்க வேலைகளை செய்தாலும் கண்டு கொள்ளாமல் இருப்பது, அல்லது பேப்பர்கள் தங்களிடம் வரவே இல்லை என சாதிப்பது என்றெல்லாம் மாய்மாலம் செய்வார்கள்.

கல்வியறிவு மிகுந்த மேல்நாடுகளிலேயே அவ்வாறு செய்யும்போது நம்ம ஊர் மோசடி பேர்வழிகள் சும்மா இருப்பார்களா என்ன? சமீபத்தில் 1961-ல் வெளிவந்த படம் பாவ மன்னிப்பு. அதில் வந்த எல்லா பாடல்களுமே ஹிட். அவற்றை தரவரிசைப்படுத்தி கூப்பன்களை அனுப்ப வேண்டியது. ஒவ்வொரு பாட்டுக்கும் கிடைக்கும் வாக்குகளை பொருத்து அவர்றின் இடவரிசை, அந்த இடவரிசை நீங்கள் அனுப்பிய லிஸ்டுக்கு ஒத்துப்போனால் உங்களுக்கு பரிசு. ஒரு தவறுமில்லாம இருந்தால் முதல் பரிசு, ஒரு தவறு மட்டும் இருந்தால் இரண்டாம் பரிசு, இரு தவறுகள் இருந்தால் மூன்றாம் பரிசு என்றெல்லாம் அமர்க்களப்படுத்தினர். ஒருவர் எத்தனை கூப்பன்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம் என்றும் கூறப்பட்டது. என்ன, ஒவ்வொரு கூப்பனுக்கும் ஒரு இணைப்பு வைக்க வேண்டும், அது என்ன என்பது இப்போது மறந்து விட்டது, ஆனால் ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்கி அதன் ரசீதுதான் அது. அவை இலவசமாக கிடைக்காது, ஆகவே அதை விற்பவருக்கு அமோக சேல்.

அதெல்லாம் விடுங்கள். ரிசல்ட் அறிவிக்கும்போது ஒரு அதிரடி அறிவிப்பு. பாடல்களை வரிசைப்படுத்த வேண்டும் அல்லவா? அப்போது உதாரணத்துக்கு முதல் பாடல் (காலங்களில் அவள் வசந்தம்) இடத்தில் கடைசி பாடலை (சாய வேட்டி தலையிலே கட்டி) ஒருவர் மாற்றிப் போட்டால் அது ஒரு தவறு இல்லையாம், இரண்டு தவறுகளாம். ஒரு தவறு எப்போது வரும்? அது வரவே வராதாம், ஆகவே இரண்டாம் பரிசு கிடையவே கிடையாதாம். அட பிச்சைக்கார பசங்களா இப்படியா கொள்ளையடிப்பீர்கள் என நினைத்தேன். அப்புறம் எந்த மயித்துக்குடா இரண்டாம் பரிசு என்னவென அறிவித்தீர்கள் என கேட்டால் அது அப்படித்தானாம். இது எப்படி இருக்கு?

ஒரு அசைவ ஜோக்
ஃபிரெஞ்சில் படித்தது தமிழில் தருகிறேன்.

ஒருவன் நன்றாக ஏமாந்தால் அவனை ஓத்துவிட்டார்கள் என்பார்கள் எல்லா மொழிகளிலுமே (he has been fucked thoroughly, er ist gründlich gefickt worden). இதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

இரு 10 வயது சிறுமிகள் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஒருத்தி கையில் மரத்தில் செய்யப்பட்ட குழந்தை பொம்மை. இன்னொருத்தி கையில் பார்பி பொம்மை.

இன்னொருத்தி: உன் கையில் இருக்கும் பொம்மை எவ்வளவு செலவாயிற்று?
ஒருத்தி: 10 ரூபாய். உன்னுடையது?
இன்னொருத்தி: 100 ரூபாய்.

அப்போது ஒரு பெண்மணி தன் கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு அப்பக்கம் வருகிறாள். அக்குழந்தையை காட்டி இரு சிறுமிகளும் கேட்கின்றனர், “அதற்கு எவ்வளவு செலவாயிற்று”?

சிசேரியன் செய்து கொண்டு அக்குழந்தையை பெற்றெடுத்த அப்பெண்மணி கூறுகிறாள் “10000 ரூபாய்”.

அவள் அந்தண்டை போகும் வரை பேசாமல் அச்சிறுமிகள் இருக்கின்றனர், பிறகு ஒருத்தி இன்னொருத்தியிடம் கூறுகிறாள், “அடேங்கப்பா 10,000 ரூபாயா, யாரோ அந்தப் பெண்ணை நல்லா ஓத்துட்டாங்க”.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/12/2010

பெரியாரின் எழுத்துக்கள் விடுபட்ட நிலையில்

பெரியார் அவர்களை பற்றிய எனது விமரிசனங்கள் அப்படியே உள்ளன. ஆனாலும் வீரமணியின் ஏகாதிபத்தியத்திலிருந்து அவரது எழுத்துகள் விடுபட்டது மகிழ்ச்சியேயளிக்கிறது. சும்மா சொல்லக்கூடாது, மனிதர் புதையலை பூதம் காப்பது போல செயல்பட்டிருக்கிறார். தன் மூலமாகவே பெரியாரின் எழுத்துக்கள் வரவேண்டும் என பாடுபட்டிருக்கிறார். அப்படியாவது அத்தனை எழுத்துக்களையும் வெளியிட்டாரா என்றால் அதுவும் இல்லை. ஆகவேதான் பூதம் புதையல் ஒப்பீடு. மற்றப்படி பெரியாரின் எழுத்துக்கள் புதையல் என்றெல்லாம் நான் கூறியதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த பாயிண்டை நான் ஏற்கனவேயே பெரியாரின் பெயர் மேலும் ரிப்பேர் ஆகப்போவது பற்றி எழுதிய இடுகையில் கவர் செய்து விட்டேன்.

பெரியார் திடலுக்கு போய் அங்குள்ள நூலகத்திலிருந்து பழைய விடுதலை பத்திரிகைகளை அங்கேயே பார்த்து குறிப்பு எடுத்துக் கொள்ளக்கூட அவர் அனுமதிக்கத் தயாராக இல்லை என்பதை நானே அனுபவித்து அது பற்றி பெரியார் திடலில் டோண்டு ராகவன் என பதிவிட்டிருக்கிறேன்.

இப்போது பெரியார்.ஆர்க்-ல் வந்த இந்த விஷயங்களைப் பார்ப்போம்.

அண்ணா நடத்திய உலகத் தமிழ் மாநாடு பற்றி பெரியார்!

“உலகத் தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம். இது எதற்கு? கும்பகோணம் மாமாங்கத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது. காங்கிரசைவிட, இந்த மந்திரிசபை தேவலாம் என்கிறார்கள். இந்த நேரத்தில் ஏன் இந்த கூத்து? கனம் அண்ணாதுரை 1972 இல் பதவிக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிடட்டும்? உலகத் தமிழ்மாநாடு கூடிக் கலைந்த பின் சூத்திரன், சூத்திரனாகத் தானே இருக்கப் போகிறான்? இழிவு ஒழியப் போகிறதா? கண்ணகி சிலையும் கம்பன் சிலையும் எதற்கு? இவர்கள் நமது இனப் பெருமையை ஒழித்தவர்கள் அல்லவா?

- பெரியார் ‘விடுதலை’ 15.12.1967

இது அண்ணாவை ஆதரித்தபோதே உலகத் தமிழ் மாநாடு பற்றி பெரியார் கூறிய கருத்து. பெரியார் தனக்கு மட்டுமே சொந்தம் என்றும், மற்றவர்கள் பெரியார் கொள்கையைத் திரித்து விடுவார்கள் என்றும் கூறும் வீரமணி, இப்போது செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்துப் பாடிக் கொண்டிருக்கிறார். இவர்தான் பெரியார் கொள்கையை திரிபுவாதிகளிடமிருந்து காப்பவராம்!


ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு சில ஐயங்கள் உள்ளன. இப்போது பெரியார் செயலாக இருந்திருந்தால் செம்மொழி மகாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்திருப்பாரா இல்லையா என்பதை கடினமாகவே இருக்கும். அவரும் வீரமணியின் நிலையையே எடுத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அது இருக்கட்டும், வெறும் அனுமானங்களை வைத்துக் கொண்டு ஏன் பேச வேண்டும்?

இப்போது பார்க்கும்போது பெரியார் திகவினர் நடத்தும் போராட்டங்கள் நிஜமாகவே சமூக அக்கறையுடன் இருப்பதை காண்கிறேன். உதாரணத்துக்கு திருச்சியில் கிறித்துவ இடுகாட்டில் தீண்டாமை கொடுமை, இரட்டைக் குவளை எதிர்ப்பு போராட்டம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இம்மாதிரியான போராட்டங்களை நடத்த வீரமணி தரப்பினருக்கு மனமோ நேரமோ இல்லை என நினைக்கத் தோன்றுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/09/2010

ரொம்ப நாளுக்கப்புறம் மீண்டும் புதிர்கள்

புதிர்கள் போட்டு ரொம்ப நாளாச்சுன்னு சிலர் அபிப்பிராயப்படறதாலே இப்பதிவு. இரண்டு நாட்கள் டைம். அதற்குள் விடையளிக்கப்பட்டால் சரி, இல்லாவிட்டால் விடை கிடைக்காத புதிர்கள் அடுத்த புதிர்கள் செட்டிற்கு கேரி ஓவர் செய்யப்படும்.

1. தல அஜீத் கலந்துக்கிட்டார் கார் ரேசில். அவர் ஓட்டற காருல ஒரு வீல் பஞ்சர். இருந்தாலும் விடாம காரை ஓட்டி முதல் இடத்தைப் பிடிச்சு கப் வாங்கறாரு. ஆனாக்க யாருமே ஆச்சரியப்படல்ல. ஏன்?

2. புதை பொருள் ஆராய்ச்சி செய்திட்டிருக்கிறபோது பனிப் பிரதேசத்தில் இரண்டு பிணங்கள் கிடைத்தன. ஒன்று ஆண், இன்னொன்று பெண். அதைப் பாத்த உடனேயே ஆராய்ச்சியாளர் சொல்லிட்டாரு, அவங்கதாம் ஆதாம் ஏவாள்னு. எப்படி சொல்லியிருப்பார்?

3. தான் பிறந்து வளர்ந்த கிராமத்துக்கு 20 ஆண்டுகள் கழித்து வரும் பாதிரியார் தனக்கு தரப்பட்ட வரவேற்பில் பேச, பார்வையாளர்களில் ஒருவன் பாதிரியாரின் பக்கத்தில் அமர்ந்திருந்த நாட்டாமையை கத்தியால் குத்திக் கொல்கிறான்.

4. ராமகிருஷ்ணமாச்சாரியாரும் கோவிந்தராஜ ஐயங்காரும் இரட்டைச் சகோதரர்கள். ஆனால் ராமகிருஷ்ணமாச்சாரியார் தன் பிறந்த நாளை கொண்டாடி இரண்டு நாட்கள் கழித்துத்தான் கோவிந்தராஜ ஐயங்காரின் பிறந்த நாள் வருகிறது. இது என்ன கலாட்டா?

5. ரங்காச்சாரி புது இன்னோவா கார் வாங்கிய குஷியில் இருக்கிறான். அவன் மனைவியிடம் அதை காட்டி மகிழ்விக்க அவன் ஆவலுடன் வீட்டுக்கு விரைகிறான். ஒருவழிப்பாதையில் புகுந்து வேகமாகச் செல்கிறான். அதைப் பார்த்தாலும் கான்ஸ்டபிள் மணவாள நாயுடு அவனை கைது செய்யவில்லை. ஏன்?

6. கோபாலகிருஷ்ணுடு வீட்டில் இரண்டு தொட்டிகளில் நீர் இருக்கிறது. ஒன்றில் நீர் 20 டிகிரி வெப்பத்திலும் இன்னொன்றில் 30 டிகிரி வெப்பத்திலும் உள்ளது. அவன் எந்த தொட்டியை குளிப்பதற்காக தேர்ந்தெடுப்பான்?

7. தன்னிடம் இருக்கும் புத்தகத்தில் முடிவு முதலில் வரும், அதன் பிறகுதான் முன்னுரை வரும் என கிட்டு பெருந்தேவியிடம் கூற அவள் நம்பவில்லை. ஆனால் நான் நம்புகிறேன். ஏன்?

8. பேச்சிமுத்து தன் கையில் பச்சை குத்திக்க ஆசைப்படறான். ஊரிலே மாரிமுத்து, வீராச்சாமி ஆகிய இரண்டு பேர்தான் இந்தத் தொழிலில் இருக்காங்க. முதல்ல பேச்சிமுத்து வீராச்சாமி கிட்ட போறான். சுமாரான கடை. அவன் கையில ஒரு பாம்பு பச்சை குத்தப்பட்டிருக்கு. இதோ வரேன்னு சொல்லிட்டு மாரிமுத்து கடைக்குப் போறான் நம்ப பேச்சிமுத்து. அவன் கடை அமர்க்களமா ஏசி செஞ்சிருக்கு. அவன் கைய்லே தத்ரூபமா ஒரு கீரியோட பச்சை இருக்கு. கடைசீல பேச்சிமுத்து வீராச்சாமிகிட்டயே போறான். அவனுக்கு என்ன பைத்தியமா?

9. அப்துல் புகாரி சவுதிக்கு பயணம் போறான். அங்கே மெக்காவில் அவனுக்கு ஏதோ காரியம் ஆக வேண்டியிருக்கு. போன இடத்தில் ஒரு பப்ளிக் யூரினலுக்கு போறான். யூரின் போகும்போது பக்கத்துல யூரின் போறவனை பார்த்து நீங்க இந்தியாவில இருக்கிற அலிகார் பக்கத்துல இருக்கிற பைசலாபாத்திலேதானே பிறந்தீங்கன்னு கேக்கறான். உங்களுக்கு எப்படித் தெரியும், ஒங்களை நான் பாத்ததே இல்லையே என இன்னொருவன் ஆச்சரியப்படுகிறான். நானும்தான் உங்களை பார்த்ததில்லைன்னு புகாரி சொல்றான். ஆக, புகாரிக்கு இந்த விவரம் எப்படித் தெரிந்தது?

10. மனைவியுடன் பயங்கரமா சண்டை போட்ட ஸ்ரீஹரி ஒரு பெரிய கோபுரத்திலிருந்து தலைகீழா விழறான். அன்று மாலை டிபன் சாப்பிட வீட்டுக்கு வரான். எப்படி?

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/05/2010

அக்காவுக்கு முன்னால் தங்கைக்கு கல்யாணம் ஆன சிக்கல் போல ஆகிவிட்டது

இதென்ன புது கலாட்டா என்பவர்களுக்கு பதில் இதோ. ஜெயா டிவி நேர்காணல் ஜூன் 17-ஆம் தேதியே வந்து விட்டது. அதன் சிடியைப் பெற ஏற்பாடு செய்து வைத்திருந்தேன். ஆனால் கிடைத்ததோ டிவிடி. எனது மடிக்கணினி அதை போட மாட்டேன் எனக் கூறி விட்டது. மேஜைக்கணினியோ அதை அடையாளம் காணவே மறுத்து விட்டது. Video TS போல எதோ இருந்தது.

ஆகவே இதை எனக்கு கிடைக்க ஏற்பாடு செய்த எனது மச்சினியிடம் கூற, அவரோ சிடியாகவே (இம்முறை இரு சிடிக்களாக) வாங்கித் தந்தார். அது கிடைத்தது போன சனிக்கிழமை. அதற்குள் காரைக்கால் ஆல் இண்டியா ரேடியோ எஃப்.எம். நேர்காணல் நடந்து முடிந்து அதன் எடிட் செய்யப்படாத சிடியை வேறு நிலையத்தினரே கொடுத்து விட்டனர்.

ஆடியோ சிடி சிறியதுதானே அதை ஏற்றலாமே என முயன்று லோலுப்பட்டு பிறகு பத்ரி அவர்களது துணையோடு அதை வலையேற்றி எம்பெட் செய்ய முடிந்ததை ஏற்கனவேயே குறிப்பிட்டுள்ளேன். சரி வீடியோவை பார்க்கலாம் என முயன்றால் வழக்கம் போல ஃபார்மாட் பிரச்சினை. .dat file .mpeg ஆக மாற்ற வேண்டியிருந்தது. அதற்கான மென்பொருள் ஏற்கனவேயே இருந்ததால் அதையும் செய்து முடித்தேன் என வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் என்ன அக்கிரமம், அவ்வாறு கன்வெர்ட் செய்யப்பட்ட சிடிக்களை ப்ளே செய்ய மடிக்கணினி மறுத்து விட்டது. ஆனால் .dat fileகளை பிளே செய்வதில் சிக்கல் இல்லை.

என்னடா இது மதுரக்கு வந்த சோதனை என தலையை சொரிந்து கொண்டே யோசித்தேன். சரி எதற்கும் இருக்கட்டும் என இரண்டு சிடிக்களில் சிறியதை முதலில் அவர் சொன்ன தளத்தில் (archive.org) ஏற்றினேன். அதுவும் சமர்த்தாக ஏறிவிட்டது. எம்பெட்--ம் செய்து விட்டேன்.

இப்போது துணிந்து பெரிய சிடி யை ஏற்றுகிறேன். பார்க்கலாம் என்னதான் ஆகிறது என.

(இரண்டு மணி நேரம் கழித்து):

அடேடே அதுவும் சமர்த்தாக ஏறிவிட்டதே.

சில டிப்ஸ்: கீழே உள்ள ஹைப்பர்லிங்குகளை அழுத்தினால் தனி பக்கத்தில் பார்க்கலாம். அவற்றின் கீழே எம்பெட்டெட் வீடியோக்களும் உள்ளன, அவற்றிலும் பார்க்கலாம்.

இந்த ஜெயா டிவி நேர்காணலை போடுவதில் முதலில் ஏற்பட்ட தயக்கத்தை ஏற்கனவேயே பழைய பதிவில் கூறியுள்ளேன். அதிலும் ஏ.ஐ.ஆர். ஆடியோ டேப் கடைசியாக வந்து முதலில் ஏறியதில், மூத்த பெண்ணை விடுத்து இளைய பெண்ணுக்கு திருமணம் முதலில் செய்த கதையாகி விட்டது (என்ன பதிவின் தலைப்பை ஜஸ்டிஃபை செய்து விட்டேனல்லவா)? அக்காவுக்கு சற்றே மவுஸ் குறைந்து விட்டதோ.

எது எப்படியானாலும் இம்மாதிரியான அற்புத தளத்தைக் காண்பித்துக் கொடுத்த பத்ரிக்கு மீண்டும் நன்றி.


முதலில் ஹைப்பர் லிங்குகள்

Part 1
Part 2

இப்போது எம்பெட் செய்தவை

Part 1 embeding




Part 2 embedding

7/04/2010

காரைக்கால் AIR FM-ல் திடீர் நேர்காணல்

கடந்த வெள்ளியன்று (02.07.2010) திருநள்ளாறு சென்றிருந்தேன். அதற்கு முன்னால் புதனன்று திடீரென எடுத்த முடிவில் மதுராந்தகம், ஸ்ரீரங்கம் எனக்கிளம்பி, அடுத்த நாள் திருவிண்ணகரம் ஒப்பில்லா அப்பன், நாச்சியார் கோவில், திருச்சேரை ஆகிய தலங்களுக்கு விஜயம் என இருந்தேன்.

திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு செல்ல முடிவெடுத்து என் மச்சினிக்கு செல்பேசி மூலம் தெரியப்படுத்தினோம். அவரோ உடனே ஆல் இண்டியா ரேடியோ காரைக்கால் நிலையத்தில் பணிபுரியும் அவரது முன்னாள் சக ஊழியரான திரு குருமூர்த்தி அவர்களின் உதவியுடன் எங்களுக்கு கோவிலில் சுலபமாக தரிசனம் செய்து வைத்தார். அது போதாது என்பதுபோல என்னை காரைக்கால் எஃப்.எம். ஒலிபரப்புக்காக நேர்காணல் காண விரும்புவதாகவும் கூறினார். கரும்பு தின்னக் கூலியா வேண்டும், சரி எனக்கூறிவிட்டேன்.

பகல் சுமார் ஒருமணிக்கு துவங்கிய நேர்காணலின் ரிகார்டிங் கிட்டத்தட்ட அரைமணி நேரம் நடந்தது. அது காரைக்கால் பண்பலையில் திங்கள் (05.07.2010) அன்று ஒலிபரப்பப்படும் என எனக்கு கூறப்பட்டது.

நேர்காணலின் எடிட் செய்யப்படாத சிடி ஒன்றையும் எனக்கு தந்தனர். அதை இணையத்தில் ஏற்றும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. எதற்கும் இருக்கட்டும் என நேர்காணலின் சுருக்கத்தை இப்போது தந்து விடுகிறேன்.

நிலைய தலைமை நிர்வாகி துரைசாமி அவர்களே நேர்காணலை நடத்தினார்.

உலகில் ஆறாயிரம் மொழிகளுக்கு மேல் உள்ளன, அவற்றில் ஆறு செம்மொழி அந்தஸ்து பெற்றவை. ஐரோப்பிய மொழிகளில் ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலிய மொழிகள் சிறப்பு வாய்ந்தவை. உலகையே இங்கிலாந்து ஆண்டாலும் ஆரம்ப காலங்களில் ஃபிரெஞ்சுதான் அதன் ஆட்சிமொழி, இத்தாலிய மொழியோ கவிதைகளுக்கு முன்னுரிமை தரும் மொழி, ஜெர்மானியர் எந்த வேலை செய்தாலும் அதை துல்லியமாக செய்கின்றனர். இந்த மூன்று மொழிகளிலும் தக்க பாண்டியத்தியம் பெற்ற தமிழர் என். ராகவன் இங்கு வந்திருக்கிறார், நமது ஆல் இண்டியாவிலும் பணி புரிந்திருக்கிறார் (பிரெஞ்சு ஒலிபரப்பு) என்ற முத்தாய்ப்போடு அவர் நேர்காணலை துவங்கி வைத்தார்.verbatim

டிஸ்கி: கீழே வருபவை verbatim ஆக இருக்காது.

திரு. துரைசாமி: எவ்வாறு இத்தனை மொழிகளை கற்றுக் கொண்டீர்கள்?

நான்: மிகவும் தற்செயலான நிகழ்ச்சி. ஐந்தாண்டுகள் பொறியியல் கல்வியில் கடைசி ஆண்டு (1969) பரீட்சையில் மூன்று சப்ஜக்டுகளில் தேறவில்லை. மன உளைச்சலுடன் இருந்த என்னை எனது தந்தை ஆர். நரசிம்மன் (அப்போது ஹிந்து பத்திரிகையில் நிருபர்) என்னை Max Mueller Bhavan-ல் ஜெர்மன் வகுப்பில் சேர்ந்து மனதை சிறிது தேற்றிக் கொள்ளும் ஆலோசனை தந்தார். சேர்ந்ததும் நான் எதிர்பார்க்காத அளவில் அதில் ஆர்வம் செலுத்தி எல்லாவற்றையும் விரைவாகக் கற்றுக்கொண்டேன்.

பிறகு பம்பாயில் மத்தியப் பொதுப்பணித் துறையில் ஜூனியர் இஞ்சினியராக வேலைக்கு சேர்ந்து மூன்றரை ஆண்டுகள் கழித்து சென்னைக்கு வந்தேன். விட்டுப்போன ஜெர்மன் கோர்சை படிக்க சேர்ந்த எனக்கு சில மொழிபெயர்ப்பு/துபாஷி வேலைகளை MMB நிர்வாக அதிகாரி தேசிகன் வாங்கித் தந்தார். அப்போதுதான் மொழியை பயன்படுத்தி பொருள் ஈட்டலாம் என்பதை நேரடியாக உணர்ந்தேன். அதுவரை வெறுமனே ஜெர்மனில் புத்தகம் படிக்கவே அந்த அறிவை பயன்படுத்தினேன்.

பிறகு ஃபிரெஞ்சு கற்க ஆரம்பிக்கும் தருணம், புத்தகம் படிக்க மட்டுமில்லை, மொழிபெயர்ப்பு வேலைகளைப் பெறுவதும் எனது நோக்கமாயிற்று. இத்தருணத்தில் இந்தியாவில் ஜெர்மன் மற்றும் ஃபிரெஞ்சுன் கற்றுக் கொள்ள மிகச்சிறந்த முறை Max Mueller Bhavan & Alliance Francaise-ல் சேருவதுதான் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுவேன். ஜே.என்.யூ. கூட இரண்டாம் பட்சமே.

சென்னையில் ஃபிரெஞ்சு படித்து முடிந்ததும் IDPL-ல் பிரெஞ்சு துபாஷிக்கான வேலைக்கு அப்ப்ளை செய்ய அவர்களோ நீ இஞ்சினியர் இங்கு ஏன் வர எண்ணூகிறாய் எனக்கேட்க, எனது இஞ்சினியரிங் காப்பியில் கலந்த சர்க்கரை போல பத்திரமாக இருக்கும் எனக்கூற, எனக்கு பொறியாளர் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் என்னும் பெயரில் வேலை தந்தனர். அங்கு 12 ஆண்டுகள் கழிந்தபிறகு விருப்பம் ஓய்வு பெர்று மேலும் எட்டாண்டுகள் தில்லியில் இருந்து இப்போது கடந்த 9 ஆண்டுகளாக சிறந்த முறையில் மொழிபெயர்ப்பாளர் வேலை செய்து வருகிறேன்.

திரு. துரைசாமி: இத்தாலியன் எப்போது கற்றுக் கொண்டீர்கள்?

நான்: தில்லியில் இருக்கும்போது, ஆனால் அதை ஆங்கிலம் மூலம் சொல்லிக் கொடுத்த தவறான முறையால் எனது திறமை அங்கு சோபிக்கவில்லை. ஜெர்மனும் பிரெஞ்சும் அந்தந்த மொழி மூலமாகவே சொல்லிக் கொடுத்தனர். ஆனால் இத்தாலியனில் சொதப்பலே நடந்தது. ஆகவே அம்மொழியில் எனது திறமை பிரெஞ்சு ஜெர்மன் மொழி அளவுக்கு இல்லை என்பதே நிஜம். அப்படியிருந்து இத்தாலிய மொழிபெயர்ப்பு செய்வதன் முக்கிய காரணமே அம்மொழிக்கும் பிரெஞ்சு மொழிக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பேயாகும்.

திரு. துரைசாமி: உலகில் பிரெஞ்சு எந்த அளவுக்கு பரவலாக புழக்கத்தில் உள்ளது.

நான்: மிக அதிக அளவில் பேசப்படும் மொழி மேண்டரின் சீன மொழியே. ஆனால் அது முக்கியமாக சீனாவில் பேசப்படுவதாலேயே அவ்வளவாக பரவல் இல்லை. அம்முறையில் ஆங்கிலம், அரேபிய மொழி அவற்றுக்கெல்லாம் மிகப்பின்னால் பிரெஞ்சு ஆகிய மொழிகள் வருகின்றன.

ஓக்கே, ஓக்கே ஆடியோவை இஅணையத்தில் ஏற்றி இப்பதிவிலேயே எம்பெட் செய்ய முடிந்ததால் மீதியை ஆடியோவிலேயே கேட்பதே நலமாக இருக்கும். அதுவரை எழுதியதை அழிக்க மனம் இல்லை.

இது எடிட் செய்யப்படாத சிடி, நான் ஓரிரு முறை இருமியுள்ளேன். சற்றே ஏற்ற இறக்கங்களுடன் சவுண்ட் இருக்கும், மன்னித்தருள்க.

காரைக்கால் AIR தலைமை நிர்வாகி துரைசாமி அவர்கள், அவரது துணை அதிகாரி திரு குருமூர்த்தி அவர்கள், எனது மைத்துனி ஆகியோருக்கு என் நன்றி.

இந்த ஆடியோ சிடியை இணையத்தில் ஏற்றவும் மிக சிரமப்பட்டேன். இரண்டு தளங்களை கூகளில் கண்டு முயற்சி செய்தால் தேறவில்லை. பிறகு நண்பர் பத்ரி அவர்களது உதவியால் archive.org தளத்தில் வலையேற்றி அந்த ஆடியோவை எம்பெட் இங்கு செய்ய முடிந்தது. அவருக்கும் என் நன்றி உரித்தாகுக.

ஆடியோ லிங் கீழே உள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்


பார்ப்பனர்கள் பூணல் போடுகிறார்கள் அல்லது போடவில்லை இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை?

சிவராமன் பூணல் போட்டிருக்கிறார், ஜ்யோவ்ராம் சுந்தரின் சட்டைக்குள் பூணல் தெரிகிறது எனச் சிலர் கமெண்ட் அடிப்பது ஒரு கூத்து என்றால், அப்படியெல்லாம் இல்லவே இல்லை நான் பூணலை எப்போதோ அவிழ்த்துப் போட்டேன் என சம்பந்தப்பட்ட சிவராமன் மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தர் பதறுவது வெறும் கூத்து இல்லை, கேலிக்கூத்து.

தத்தம் சாதியினர் தலித்துகளுக்கு செய்யும் வன்கொடுமையை மறுக்க வக்கின்றி, அதையே பார்ப்பனீயம் என ஒட்டுமொத்தச் சாயம் பூசி மெழுகும் நாதாரிகளுக்குத்தான் வேறு வேலை இல்லை என்றால், அவர்களுடன் சமரசமாகப் போக வேண்டும் என சில பயந்தாங்குள்ளி பார்ப்பனர்களே அலைவது மகாகேவலமாக இருக்கிறது.

இப்பதிவைப் போடக் காரணம்? மங்களூர் சிவாவின் இப்பதிவில் வந்திருக்கும் இப்படமே.


அம்புக்குறியிட்டு பாகம் காட்டும் தோரணையில் சிவராமனின் பூணூல் அடையாளத்தைக் காட்டுகிறார்கள். அவர் பூணூல் போட்டால் என்ன, போடாவிட்டால் என்ன? அவர் செய்தது நம்பிக்கை துரோகம், நன்றி கெட்டச்செயல், உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்த செயல் என்றெல்லாம் சீரியசான குற்றச்சாட்டுகள் இருக்க, இது என்ன காலணா பெறாத விஷயத்தை பிடித்துக் கொண்டு தொங்குவது? அவர் நிஜமாகவே பூணூல் போடாமல் இருந்தால் அவர் நர்சிமிடம் இத்தனை உதவிகளைப் பெற்று அவரை இவ்வளவு மோசமாக முதுகில் குத்தியது இல்லை என ஆகிவிடுமா?

பாத்திரம் அறிந்து பிச்சையிடு எனப் பெரியவர்கள் கூறியது மிகப்பெரிய உண்மையே. என் தந்தை ஒருமுறை என்னிடம் கூறியிருக்கிறார், அதாவது உன்னிடம் ஒருவன் வந்து அரிசி பருப்பு மற்றும் தேவையான மளிகை சாமான்கள் வாங்கவே கடன் கேட்டான் என்றால் அந்தக்கடன் திரும்பாது என்று புரிந்து கொள்ள வேண்டும். அதை மீறி நீ கொடுத்தால் அது உன் தவறே. கடன் திரும்ப வராதது மட்டுமல்ல, அக்கடனை கொடுத்த உன்னையே கடன் வாங்கியவன் ஒரு சமயத்தில் கன்னாபின்னாவென திட்ட ஆரம்பிப்பான் என்பதுதான் நிஜம். இதற்குமேல் தான் தாழ்ந்துபோகமுடியாது என்னும் நிலையில் அவன் இருப்பதாலேயே அவன் இவ்வாறு செய்வான் என்பது மறுக்கவியலாத உண்மை என்றார் அவர்.

என்ன ஆச்சரியம் சிவராமனையோ நர்சிமையோ அவருக்குத் தெரியவே தெரியாது!!!

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது