11/30/2010

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல் பெண்ணுக்குத்தான் அதிகக் கெடுதலைத் தரும்

கிட்டத்தட்ட எல்லா பதிவர்களும் இது பற்றி பதிவு போட்டு விட்டபடியாலும், எனக்கும் இது சம்பந்தமாக சொல்ல வேண்டிய விஷயங்கள் இருப்பதாலும் நானும் இந்த விஷயத்துக்காக ஒரு பதிவு போட்டு விடுகிறேன்.

முதலிலேயே ஒன்றை தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் இந்த திருமணமின்றி சேர்ந்து வாழும் கான்சப்டை ஒத்துக் கொள்ளவில்லை. ஏன் ஒத்துக் கொள்ளவில்லை என்பதற்குத்தான் கீழே வரும் வரிகளை தருகிறேன்.

என்னதான் நாம் வாய்கிழிய பென்ணியம் எனப் பேசினால் நமது இந்திய சமூகத்தின் செட்டிங்ஸ் ஆண்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றன. ஆகவே சேர்ந்து வாழலாம், மன வேற்றுமை வந்தால் நண்பர்களாக் பாதிப்பு ஏதும் இன்றி பிரிந்து விடலாம் என்பதெல்லாம் கேட்க நன்றாகத்தான் உள்ளன. ஆனால் நடைமுறையில்? பாதிப்பு ஆணுக்கு அதிகம் இல்லை. சம்ப்ந்தப்பட்ட பெண்ணுக்குத்தான் அதிகம். அம்மாதிரி சேர்ந்து வாழும் ஜோடிகளுக்கு வரும் எதிர்ப்பு சுற்றிலும் உள்ள மனிதர்களால் அந்த ஜோடியில் உள்ள பெண்ணுக்கு எதிராகத்தான் காட்டப்படுகிறது.

இன்னும் ஒரு விஷயம் உடற்கூறு. ஆண் கர்ப்பம் அடைவதில்லை, பெண் கருவுறுகிறாள். இரண்டு மூன்று பிரசவங்களுக்கு பிறகு அவள் உடற்கட்டு குலைகிறது. ஆகவே அவளுடன் சேர்ந்து வாழும் ஆணுக்கு அவள் மேல் ஈர்ப்பு குறைந்தால், பேசாமல் கழண்டு கொள்ள முடிகிறது. இதுவே சட்டபூர்வமான திருமணமாக இருந்தால் பெண்ணுக்கு எல்லா சட்டப் பாதுகாப்புகளும் உண்டு. ஆகவே கனம் இல்லாத விஷயங்களுக்கெல்லாம் சட்டபூர்வமான திருமண பந்தம் உடைக்கப்படுவதில்லை.

சேர்ந்து வாழும் ஜோடியில், பெண்ணுக்கு ஏற்படும் மேலே குறிப்பிட்ட பலவீனங்களால் காலப்போக்கில் அவள் எங்கே ஆண் தன்னை விட்டு பிரிந்து விடுவானோ என்னும் பயத்திலேயே அவன் எள் என்பதற்குள் என்ணையாக நிற்கும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதில் இருக்கும் விதிவிலக்குகளில் பார்த்தால் ஒன்று அப்பெண் மிகுந்த புத்திசாலியாக இருந்து தன் பலவீனங்களை மறைத்து நடிக்க வேண்டும், அல்லது ஆணுக்கும் சில உடல்நலக்குறைவு ஏதேனும் வந்திருக்கலாம், அல்லது வேறு ஏதாவது தனிப்பட்ட காரணங்களாக இருக்கலாம்.

நான் கூற வந்ததே சேர்ந்து வாழ்வதில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம், அவற்றால் பென்ணுக்குத்தான் பாதிப்பு அதிகம் என்பதுதான். அவை எல்லாம் முதலில் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அவற்றை கவனத்தில் கொள்வதே புத்திசாலித்தனம்.

சேர்ந்து வாழ்வது, பிரிவது, அந்த உறவில் பெற்ற குழந்தைகளை பங்கிடுவது, பிறகு வேறு துணையை நாடுவது ஆகிய விஷயங்கள் இந்தியாவில் இன்னும் சகஜமாக வரவில்லை. அவ்வளவுதான். ஆகையால், பெண்ணே! ஜாக்கிரதையாக இரு. இப்போதைக்கு திருமணம் இன்றி சேர்ந்து வாழ ஒத்துக் கொள்ளாதே. பாதிப்பு உனக்குத்தான் அதிகம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/29/2010

மோதிக்கு அவார்ட் கிடைத்தால் பொறுக்காதே இந்திய ஊடகங்களுக்கு

நண்பர் எம்.வி. சீதாராமன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சல் மூலம்தான் மோதியின் குஜராத் மாநிலத்துக்கு கிடைத்த மிகப் பெரிய விருது பற்றி அறிந்து கொண்டேன்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சேவைக்காக 2010-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அளிக்கும் நிகழ்வில் மோதியின் குஜராத் மாநிலத்துக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.

அந்த விருது உங்கள் பார்வைக்கு:

அதன் மேல் விவரங்கள் (ஆங்கிலத்தில். மொழிபெயர்ப்பதாக இல்லை. சற்றே சிரமம் எடுத்துக் கொண்டு படிக்கவும்)

India - 2ND Place Winner
Initiative : 817 - State-Wide Attention on Grievances by Application of Technology
Institution Chief Minister's Office, Government of Gujarat
2
The SWAGAT initiative was established as a transparent system through which citizens can air
their grievances regarding government’s provision of public services. It gives citizens direct
access to meet the Chief Minister personally to present their case. Senior administration officers responsible for the case are also present to provide case details and to advise on actions to be taken to resolve each case. Administrators are held accountable for responding to both the citizen and Chief Minister. This open and transparent system allows citizens to derive satisfaction from the fairness of the process, even if the decision is not in their favor. Status tracking of applications may also be viewed online and the updated status can be seen at any time.

ஏம்பா நீங்க யாராவது இது பற்றி படிச்சீங்களா? நான் படிக்கவில்லை. நன்றி சீதாராமனுக்கு, இது சம்பந்தமான மின்னஞ்சலுக்காக. மேலே உள்ள படமும் அந்த மின்னஞ்சலிலிருந்து வந்ததுதான்.

அது என்னவோ நல்லது ஏதேனும் நடந்தா மீடியாக்களுக்கு பிடிக்காதுதான். எவனாவது இன்னொருத்தன் மனைவியின் கையை பிடிச்சு இழுத்தா மட்டும் சுவாரசியமா அது பற்றி படிப்பாங்க (என்ன கையை பிடிச்சி இழுத்தியா?)

அதிலும் மோதிக்கு பெருமை தரும் விஷயம் ஏதேனும் நடந்தா அவனவன் வயிற்றுவலிக்கு ஜெலூசில் போட்டு குப்புற அடித்து படுக்கிறான்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஸ்பெட்ரம் ஊழல் சம்பந்தமாக சோவின் பேட்டி ஜெயா டிவியில்

இட்லி வடையின் இப்பதிவில் வந்த சோவின் பேட்டியின் வீடியோக்கள் யூட்யூப்பில் வந்தன. அங்கிருந்தே நானும் அவற்றை எம்பெட் செய்து இங்கும் போடுகிறேன். இது பரவலாக எல்லோரையும் போய்ச் சேர வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம். யூ ட்யூபின் வீடியோக்களின் சுட்டிகளை காட்டித் தந்த இட்லி வடைக்கு நன்றி. இப்போது வீடியோக்களுக்கு போகலாமா:

வீடியோ-1


வீடியோ-2


வீடியோ-3


வீடியோ-4


வீடியோ-5


வீடியோ-6


வீடியோ-7


வீடியோ-8


இப்போது டோண்டு ராகவன். சி.பி.ஐ., பிரதம மந்திரி, கருணாநிதி, கனிமொழி ஆகிய யாவரும் சோவின் பார்வையிலிருந்து தப்பவில்லை. ராசா சின்ன ராசா கைய வச்சான்னு ஏற்கனவேயே பாடிவிட்டதால், அவரை ஏற்கனவேயே சேர்த்தாகி விட்டது.

ஆனால் மேலே சொன்ன பேட்டிக்கு பிறகு நேற்று சுப்பிரமணியன் சுவாமியின் பேட்டி ஜெயா டிவியில் வந்தது. அதில் அவர் தெளிவாகவே கூறிவிட்டார், ராசாவுக்கு 10%, கருணாநிதிக்கு 30% மற்றும் சோனியா & அவர் சகோதரிக்கு 60% என பணப்பங்கீடு என்று. பிறகு ஏன் சர்தார்ஜி ரியேக்ட் செய்யப் போகிறார்? அவர் தனிப்பட்ட முறையில் பெரிய பதவிகளில் இருந்தவர். உலக வங்கிக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்தானே. இங்கிருந்து கொண்டு சீப்பட வேண்டுமா என எனக்குத் தோன்றுகிறது.

சுப்பிரமணியன் சுவாமி வீடியோ கிடைத்தால் எனது வலைப்பூவில் எம்பெட் செய்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நண்பர்களுக்கு நன்றி - 8

நண்பர்களுக்கு நன்றி - 1
நண்பர்களுக்கு நன்றி - 2
நண்பர்களுக்கு நன்றி - 3
நண்பர்களுக்கு நன்றி - 4
நண்பர்களுக்கு நன்றி - 5
நண்பர்களுக்கு நன்றி - 6
நண்பர்களுக்கு நன்றி - 7

இந்த வரிசையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி இதற்கு முந்தையப் பதிவை போட்டபோது இவ்வளவு சீக்கிரம் இந்த எட்டு லட்சம் கவுண்டர் எண்ணிக்கைக்கான பதிவு போடுவேன் என சத்தியமாக நினைக்கவில்லை.

ஒரு லட்சம் வந்த நேரம் 19.12.2006, 20.45 hrs. IST. இரண்டு லட்சம் வந்த நேரம் 14.02.2008, 19.58 hrs IST. மூன்று லட்சம் வந்த நேரம் 07.11.2008, 12.54 hrs. நான்கு லட்சம் வந்த நேரம் 14.05.2009 காலை 10.45. ஐந்து லட்சம் வந்த நேரம் 11.11.2009, 23.13 hrs. ஆறு லட்சம் வந்த நேரம் 03.05.2010 காலை 10.26 மணி. ஏழு லட்சம் வந்த நேரம் ஆகஸ்ட் 26, இரவு 08.54. இப்போது எட்டு லட்சம் வரும் தருவாயில் அதற்கும் ஏழு லட்சத்துக்கும் இடையில் 3 காலண்டர் மாதங்களும், நான்கு தினங்களுக்கும் குறைவாகவே (96 நாட்கள்?) எடுத்து கொள்ளப்படும் என எண்ணுகிறேன்.

இந்த கவுண்டரின் விசேஷம் என்னவென்றால், நான் லாக்-இன் செய்து பார்ப்பதெல்லாம் கணக்கில் ஏற்றப்படாது. இந்த ஆதரவுக்காக நான் எனது நலம் விரும்பிகளுக்கும் மற்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

இந்த முறை டோண்டு முக்கியமாகக் கருதுவது அனானி ஆப்ஷனை மீண்டும் தூக்கியதுதான். அப்பதிவிலிருந்து சில வரிகள் மீண்டும் இங்கே.

ஜூலை 2008-ல் போலி கடைசியாக கண்டுபிடிக்கப்பட்டு குப்பைத் தொட்டியில் போடப்பட்டதுமே அனானி மற்றும் அதர் ஆப்ஷன்களை நீக்கியிருக்கலாம். இருந்தாலும் சோம்பல் (lethargy or inertia) காரணமாக நிலைமையை மாற்றவில்லை.

இப்போது என்ன விஷயம் என்றால் அனானி ரூபத்தில் வந்து மற்ற பதிவர்களை திட்டுகிறார்கள். அது ரொம்பவும் அசிங்கமாக போனால் நான் சாதாரணமாக அசிங்க வார்த்தைகளை நீக்கிவிட்டு கருத்தை மட்டும் அலவ் செய்வேன் (டோண்டுவால் மாடிஃபை செய்யப்பட்டது அல்லது அதுபோன்ற சொற்களுடன் அவை வரும்).

இப்போது அதற்கெல்லாம் நேரமில்லை. மேலும் அதர் ஆப்ஷனில் வரும் பின்னூட்டங்கள் இல்லவே இல்லை, அவ்வளவு விஜிலண்டாக அவை சாதாரணமாக எழுதப்பட்டிருந்தாலும் அதர் ஆப்ஷன் என்பதற்காகவே அவற்றை நீக்கினேன். ஆக, இப்போது கொசுத் தொல்லையாக மிஞ்சியிருந்தது அனானி ஆப்ஷன் மட்டுமே. அதையும் தூக்கியாயிற்று.


இந்த எட்டு லட்சத்துக்கான பதிவுக்கும் ஏழு லட்சத்துக்கான முந்தையப் பதிவுக்கும் இடையே இருப்பவை மொத்தம் 77 பதிவுகளே. அவற்றில் நான் முக்கியமாக கருதுபவற்றில் சில இங்கே.

என் தந்தை அமரர் நரசிம்மன் அவர்கள் அற்புதமாக எனக்கும் என் அத்தை பிள்ளைக்கும் அற்புதமாக ரன்னிங் மொழிபெயர்ப்புடன் விளக்கிய பத்துக்கட்டளைகள் பற்றி நான் இட்ட இடுகை, அவர் தான் மறைவதற்கு சில நாட்கள் முன்னால் அவர் எழுதி வைத்த கொட்டும் மழையில் என்னும் கதை பற்றிய பதிவு, என் மாமாவின் மாப்பிள்ளை அமரர் வி.எஸ். திருமலை அவர்கள் எழுதிய சிறுகதைகளை தட்டச்சு செய்து வெளியிட்ட ஆறு பதிவுகள் (மேலும் வெளிவர உள்ளன), ஒரு சராசரி ஆணின் கவனத்தைக் கவரும் ஒரு பெண்ணின் மார்பகங்கள் சம்பந்தப்பட்டப் பெண்ணால் எவ்வாறு பார்க்கப்படுகின்றன, அது வந்த வேளையோ என்னவோ நான் மார்க்கச்சு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ஜெர்மன் துபாஷியாக சென்றது பற்றியப் பதிவு, ஸ்பெக்ட்ரம் 2 ஜி ஊழல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கே “என்ன கையைப் ப்டிச்சு இழுத்தீங்களா” என்னும் ரேஞ்சில் பதிலளித்து தண்ணி காட்ட முயன்ற சி.பி.ஐ. பற்றிய பதிவு, வலைப்பதிவர் சந்திப்பு பற்றி எழுதப்பட்ட அந்த ஒரு சாதாரண பதிவு பல திடுக்கிடும் திருப்பங்களை உருவாக்கும் என நான் சத்தியமாக நினைக்கவேயில்லை (முக்கியமாக அந்தத் திருப்பங்களில் காணப்பட்ட கொசுத்தொல்லைகள்) ஆகியவையாகும்.

நூறுக்கும் மேல் பின்னூட்டங்கள் பெற்ற பதிவுகள் சில. பதிவுலகை விட்டு டோண்டு ராகவன் விலகுவானா என்னும் பதிவு, ராஜன் திருமணம் பற்றிய விவாதம், லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்த நியாயமான தீர்ப்பு ஆகியவை.

இன்னொரு புது டெவலப்மெண்ட் டோண்டு பதில்கள் மீண்டும் வந்ததே. நடுவில் ஆர்.எஸ்.எஸ். ஃபீட் சம்பந்தமாக எனது செட்டிங்ஸில் நான் செய்த சில விஷமங்களால் என் பதிவுக்கான சுட்டிகளே தமிழ்மணத்திலிருந்து முழுக்கவே மறைந்ததும் நடந்தது.

போன தடவை போலவே இம்முறையும் சற்று முன்பே இப்பதிவை போட்டு விட்டேன். இன்று அல்லது நாளை 8 லட்சம் தாண்டும் என நினைக்கிறேன். ஆகவே இப்பதிவையும் இப்போதே வெளியிடுகிறேன். இப்போது தேதி 29.11.2010, நேரம் காலை 07.34 மணி (இந்திய நேரம்), ஹிட்கள் 7,98,472.

தலைகீழ் எண்ணிக்கை ஆரம்பமாகிறது: 1528, 1527, 1526, 1524, 1523 .......

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/28/2010

ஊரே சிரிச்சா கல்யாணம்னு சொல்லுவாங்க

இப்போது அமெரிக்காவின் முறை. சம்பந்தப்படாத மற்றவர்கள் சந்தோஷப்படலாம். ஆனால் மற்றவர்களது முறை வரும்போது சந்தோஷப்படுவார்களா கேள்விக்கு மாட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

எல்லா மேற்பூச்சுகளையும் எடுத்துப் பார்த்தல் இந்த விக்கிலீக்ஸ் அமைப்பு உண்மையை காப்பாற்றவே அவதாரம் எடுத்திருப்பதாக நான் நம்பவில்ல்லை. அதற்கும் ஒரு மறைக்கப்பட்ட அஜெண்டா உண்டு என்றே நான் உறுதியாகவே நினைக்கிறேன். ஆகவே இன்று நான் நாளை நீ என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

ஆகவே அதன் பொறுப்பாளர்கள் ஒன்று மௌனமாக்கப்படுவார்கள் அல்லது அப்புறப்படுத்தப்படுவார்கள். நான் இட்ட ஊழல் பற்றிய மேக்ரோ பார்வை தேவை, மனச்சோர்வுகளைத் தவிர்க்க பதிவில் கூறப்பட்ட சில வரிகள் இங்கும் பொருந்தும்.

ஓர் அரசு என்பது இடைவிடாத அதிகாரப் போட்டிகளாலும், பேரம் பேசல்களாலும், பேச்சு வார்த்தைகளாலும், சமரசங்களாலும் ஆனதாகவே இருக்க முடியும். அதிகாரத் தரகர்கள், அதிகாரத் தூதர்கள், அதிகாரப் பிரதிநிதிகள் எப்போதும் அந்த மையத்தில் செயல்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அதிகாரத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு வன்முறை பலத்தாலும் பணபலத்தாலும் ஆனது. ஜனநாயகத்தில் எண்ணிக்கை பலத்தாலும்.

அந்த அதிகாரச் சமநிலை குலையும்போது, சமரசம் மூலம் அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லாமல் ஆகும்போது, அதிக அதிகாரம் கொண்ட தரப்புகள் குறைவான அதிகாரம் கொண்ட தரப்புகளை வன்முறை மூலம் அடக்குகின்றன. முன்பெல்லாம் நேரடி ஆயுத வன்முறை. இப்போது பொருளியல் வன்முறை. சமரசத்துக்கான நிபந்தனையாக வன்முறை எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது.


உள்ளூர் விஷயங்களுக்கே இது பொருந்தும்போது வெளிவிவகார விஷயங்களில் அது இன்னும் அதிகமாகவே பொருந்தும். எழுபதுக்ளில் அப்போதைய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஃபோர்ட் கிஸிங்கருடன் இந்தியா வ்ந்தபோது தாங்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்கா திரும்பியதும் அதற்கு கண்டிப்பான, கடுமையான தொனியில் கடிதம் அனுப்ப வேண்டியதுதான் என கிசிங்கரிடம் கூறினார். அவரது மைக்ரோஃபோன் ஆன் செய்யப்பட்டிருப்பதை அவர் கவனிக்கத் தவறியதால் அது தெளிவாக வெளியில் கேட்டுவிட்டது. அமெரிக்காவுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது.ஆனால் அதையெல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்ளலாகாது என்றும், அவ்வாறு செய்தால் அமெரிக்க உதவிக்கு சங்குதான் என்பதை உணர்ந்த இந்தியா அதை பூசி மெழுகிவிட்டது.

இன்று ஹிந்துவில் வெளியான விக்கிலீக்ஸ் பற்றிய செய்தியே இப்பதிவுக்கு தூண்டுதல். அதிலிருந்து சில வரிகள்.

Indian embassy in Washington alerted
NEW DELHI: American diplomats have warned India to prepare itself for potential embarrassment from the expected release by WikiLeaks of three million confidential U.S. diplomatic cables. The message was conveyed to the Indian embassy in Washington after a senior State Department official tried unsuccessfully to reach Foreign Secretary Nirupama Rao, who is travelling in Sri Lanka.

India is not the only country the U.S. has alerted. The documents, which will go live on the Internet beginning in the next 24 to 48 hours, consist of cables sent by American embassies around the world — especially in India, Israel, Russia, Turkey, Canada and Britain — to the State Department in Washington. Since such cables are meant to be confidential, it is a standard practice for the diplomats writing them to be candid and blunt in their assessments and sometimes even disrespectful to officials and leaders in their host countries. It is this aspect of the forthcoming leak which is particularly worrying U.S. diplomats. Some cables could also contain information about surreptitious activity by U.S. missions.

It is not clear what time period the cables cover but previous WikiLeaks disclosures tended to range over the past five or six years. This is a period when the U.S. and India were locked in detailed and sometimes testy negotiations over nuclear commerce and defence cooperation.

அதாகப்பட்டது, இப்போ அமெரிக்கா என்ன சொல்லறதுன்னா, “அய்யா சாமியோவ், எங்க ஆளுங்க தங்களோட ரிப்போர்ட்டுகளிலே உங்களைப் பத்தியெல்லாம் வண்டை வண்டையாக திட்டியிருக்காங்க (உதாரணத்துக்கு பலரைக் குறித்த உறவுமுறை சந்தேகங்கள்). அதையெல்லாம் கண்டுக்காதீங்கோ, தந்தானா, தந்தானா” இந்தத் தோரணையில் சில சொற்களே.

கூடவே இந்தியத் தரப்பில் ஏதாவது மேல் வருமானம் பற்றி பேச்சு வந்து, அதுவும் அந்தரங்க ரிப்போர்ட்டில் இடம் பெற்றிருந்தால் உங்களுக்கும் சங்குதாண்டீன்னும் சொல்லாம சொல்லறாங்க.

ஆனால் எந்த தேசமுமே இம்மாதிரி பல ரிப்போர்ட்டுகளை அவ்வப்போது தயாரித்து உள்ளுக்குள் சர்குலேட் பண்ணிக் கொள்ளாமல் இருந்திருக்காது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருக்கும் அமெரிக்க அரசு தளங்களையே பிளந்தவர்கள், மற்ற அரசு தளங்களையும் விட்டு வைப்பார்களா என்ன?

உதாரணத்துக்கு நம்மிடமே பாகிஸ்தான், சீனா, ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளைத் தாக்கும் சினோரியோக்கள் டெவலப் செய்யப்பட்டு ஆர்கைவ்சில் உறங்கிக் கொண்டிருக்கும். அதே போல இந்தியாவைத் தாக்குவது பற்றியும் அந்தந்த நாடுகள் சினேரியோ தயார் செய்து வைத்திருக்கும். இதில் எல்லாமே எல்லோருக்கும் தெரிஞ்சால் என்ன ஆகும்? யாரும் யாரையும் விரல் நீட்டிப் பேச முடியாது. இதைத்தான் ஊரே சிரிச்சா கல்யாணம்ங்கறாங்க.

எனது ஷ்டாஸி பற்றிய பதிவில் இது பற்றி நான் எழுதிய வரிகள்:

கிழக்கு ஜெர்மனியின் ஷ்டாஸிதான் இப்பதிவுக்கான விஷயம். அதிலும் முக்கியமாக அதன் ஆவணங்களில் வெளியான பல ரகசியங்கள். இவ்வமைப்பு ஒரு பெரிய தகவல் மையத்தையே தன்னுள் வைத்துக் கொண்டிருந்திருக்கிறது. அதற்கு செய்தி அளித்தவர்கள் நாட்டின் குடிமக்களில் கணிசமான பகுதியினர். பெற்றோரைப் பற்றி பிள்ளைகள் தத்தம் வீடுகளில் பெற்றோர் எந்த டிவி சேனலை பார்க்கின்றனர், என்னென்ன ரேடியோ நிகழ்ச்சிகள் கேட்கின்றனர். வீட்டில் தங்களுக்குள் என்ன பேசிக் கொள்கின்றனர், இத்யாதி, இத்யாதி என்றெல்லாம் கூறினர். அதே போல பக்கத்து வீட்டு மாமா, எதிர்வீட்டு சித்தப்பா என்ன செய்தார் என்பதும் கூறப்பட்டன. நண்பன் மேற்கு ஜெர்மனி பேப்பர்களுக்கு தனது பின்னூட்டத்தை மாற்றுப் பெயரில் கடிதங்களாகப் போட்டதும் இந்த உளவு விஷயங்களிலிருந்து தப்பவில்லை. வெளிநாட்டுகாரர்கள் கிழக்கு ஜெர்மனிக்காக உளவு செய்ததும் வெளிவந்தன.

சோவியத் யூனியன் மறைந்து கே.ஜி.பி. கலைக்கப்பட்ட போது கூட கேரள கம்யூனிஸ்டு தலைவர்கள் சோவியத் யூனியனிடமிருந்து பணம் பெற்றதும் வெளியில் வந்ததையும், அதை அக்காலக் கட்டங்களில் ஹிந்துஸ்தான் டைம்ஸில் படித்ததையும் இங்கு போகிறபோக்கில் குறிப்பிட்டு விட்டுப் போகிறேன்.

இப்பதிவின் முக்கியக் கருப்பொருளுக்கு வருகிறேன். ஷ்டாஸி ரகசியங்கள் வெளியானதும் பல குடும்பங்கள், நண்பர்கள் வட்டாரங்களில் பூகம்பங்கள் ஏற்பட்டன. யாரைத்தான் நம்புவதோ எனத்துவண்டான் ஒருவன், அவன் பெயரும் இன்னொரு ஷ்டாஸி ஆவணத்திலிருந்து வெளிவரும் வரை. பிறகு அசடு வழிந்தான். ஓரளவுக்கு மேல் எதுவும் பழகிப் போகும், ஊரே சிரித்தால் கல்யாணம் என்ற கோட்பாட்டில் மறப்போம் (ரொம்ப கஷ்டம்) மன்னிப்போம் (சற்றே சுலபம்) என மனதைத் தேற்றிக் கொண்டனர்.


நாசர் பதவிக்கு வந்ததும் தனது நாட்டில் இருந்த முந்தைய அரசின் தலைவர்களது ஸ்விஸ் வங்கிக் கணக்கின் விவரங்களை தருமாறு நெருக்கினார். ஆனால் அவையோ தாங்கள் அவற்றைத் தருவதற்கு தயார் ஆனால் எகிப்து பற்றிய முழுவிவரங்களையும் பகிரங்கமாக வெளியிடுவதாகக் கூற எகிப்து தனது கோரிக்கையை அவசரம் அவசரமாக வாபஸ் வாங்கியது. ஏன் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.

ஊரே சிரிச்சா கல்யாணங்கறதை ஒத்துக்கிறீங்களா?

சில விஷயங்களைத் தெளியப்படுத்துகிறேன்.

1. அமெரிக்கர்களுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. அவர்களுக்கு அது தேவை இல்லை.

2. விக்கிலீக்ஸ் அமைப்பிலும் பல ரகசியங்கள் இருக்கும். அவர்கள அடிப்படையில் ஹாக்கர்கள். அவர்கள் எவ்வாறு ஹாக் செய்கிறார்கள் என்பதும் பலரால் அறிய விரும்பப்படும் ரகசியமே. அவ்வாறு பெறப்படும் போது அந்த அமைப்பின் சமரசங்களும் வெளியில் வரும் வாய்ப்பு உண்டு. அப்போது அந்த அமைப்பின் பொறுப்பாளர்களும் தாங்கள் முதுகில் குத்தப்பட்டதாக ஊளையிடுவார்கள்.

3. இன்று நீ, நாளை நான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/27/2010

பள்ளிகளில் தர்ம ஹிந்தி வகுப்புகள்

நான் சமீபத்தில் 1954 முதல் 1962 வரை திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளியில் படித்தபோது, ஹிந்தி வகுப்புகள் ஒரு ஜோக்காகவே பார்க்கப்பட்டு வந்தன.

ஆறாம் வகுப்பிலிருந்து ஹிந்தி மற்றும் ஆங்கிலப் பாடங்கள் ஆரம்பிக்கும். அதற்கு ஈராண்டுகளுக்கு முந்தியிலுருந்தே என் அன்னை எனக்கு இரு மொழிகளையும் கற்பித்து வந்தார். ஆகவே டீச்சர் எழுத்துக்களை வேகமாக போர்டில் எழுத நான் சுலபமாக அவற்றை எழுத முடிந்தது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை என் அன்னை இலக்கணத்துடன் கற்றுத் தந்ததால் அம்மொழிக்கான தேர்வுகள் எனக்கு எப்போதுமே கஷ்டமாக இருந்ததில்லை.

ஆனால் ஹிந்தியை பொருத்தவரை இன்னொரு கூத்தும் நடந்தது. அதன் தேர்வில் பாஸ் செய்ய வேண்டியதில்லை. ஆகவே அதன் மதிப்பெண்கள் ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்புக்கு செல்லும் விஷயத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அதனாலேயே அவ்வகுப்புகள் தர்ம ஹிந்தி வகுப்புகள் என அன்புடன் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டன.

தேர்வுகளில் ஒரு விதி கண்டிப்பாக அமுலாக்கப்பட்டது. அதாவது அரை மணி வரை ஹாலில் இருந்தாக வேண்டும். அரை மணி பெல் அடித்ததும் பேப்பரை மடித்துக் கொடுத்து விட்டு வெளியேறலாம். இதற்கு பிராக்டிகலாக ஒரு காரணம் இருந்தது. அதாவது லேட்டாக வரும் மாணவர்கள் அரை மணிக்குள் வந்தாக வேண்டும். ஆகவே வெளியே செல்லும் மாணவர்கள் உள்ளே வருபவர்களுக்கு பேப்பரை லீக் செய்யக் கூடாது என்ற எண்ணமே இந்த ஆணைக்குக் காரணம்.

சாதாரணமாக தேர்வுகளிலிருந்து அரை மணிக்கு பிறகு உடனே யாரும் செல்ல மாட்டார்கள்தான். பெரும்பான்மையினர் கடைசி நிமிடம் வரை எழுதுவார்கள் அல்லது எழுதியதை ரிவைஸ் செய்வார்கள். பல முறை கடைசி மணி அடித்ததும் “எழுதுவதை நிறுத்துங்கள்” என்ற அறிவிப்புடன் மேற்பார்வையாளர்கள் ஒவ்வொரு பெஞ்சாக சென்று பேப்பர் கலெக்ட் செய்வார்கள். அதற்கு ஒரு நிமிடம் முன்வரைக்கும் எழுதியவர்களும் உண்டு.

ஆனால் ஹிந்தி தேர்வு மட்டும் அதற்கு விதிவிலக்கு. சாதாரணமாக மாணவர்கள் தங்கள் பெயர் வகுப்பு விவரங்களை எழுதியதும் மோட்டுவளையைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருப்பார்கள். சிலர் பெரிய மனது பண்ணி வினாத்தாளையே நகல் எடுப்பார்கள். அதிலும் ஸ்பெல்லிங் பிழைகள் இருக்கும் என்பது வேறு விஷயம். ஆனால் உண்மை என்னவென்றால் அவ்வாறு நகல் எடுப்பதற்கும் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண் கொடுக்கப்பட்டது.

அரை மணி நேர பெல் அடிக்கப்பட்டதுமே அவரவர் அவசரம் அவசரமாக வெளியேறுவார்கள். தாழ்வாரங்கள் மாணவர்களின் சலசலப்புகளால் நிரம்பியிருக்கும். ஐந்து நிமிடங்களுக்குள் அமைதி நிலவும். மேற்பார்வையாளர்களும் பேப்பர்களை கட்டி வைத்துவிட்டு அவற்றை உரிய இடத்தில் ஒப்படைத்து விட்டு காப்பி குடிக்க செல்வார்கள்.

இதுதான் நான் படித்தபோது ஹிந்தி தேர்வுகளில் பொதுவான நிலை. ஆனால் ஒரே ஒரு மேற்பார்வையாளர்தான் மாட்டிக் கொள்வார். அவர்தான் டோண்டு ராகவன் தேர்வு எழுதும் ஹாலில் பணி புரிபவர். எல்லோரும் வெளியே சென்று விட்ட நிலையில் நான் மட்டும் அமர்ந்து சீரியசாக எழுதிக் கொண்டிருப்பேன்.

நான் ஏழாம் வகுப்பு படித்தபோது ஒரு முறை தோசி என மாணவர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட பாஷ்யம் ஐயங்கார் என்னும் ஆசிரியர்தான் அவ்வேலைக்கு நியமிக்கப் பட்டிருந்தார். அவருக்க்கு தானும் காப்பி சாப்பிடப் போக முடியவில்லையே எனக் கவலை. அதனால் எரிச்சல். “சீக்கிரம் எழுதி முடியேண்டா கடன்காரா” என்று அலுப்புடன் பலமுறை கூறிப் பார்த்து விட்டார். அதற்குள் டிகிரி காப்பியை குடித்து விட்டு காப்பி நெடி மூச்சுடன் எவரெஸ்ட் என்னும் ஆசிரியர் (ஆறடிக்கும் மேல் உயரம், பெயர் ஸ்ரீனிவாசாசார்லு) அவரிடம் வந்து “என்ன பாஷ்யம் ஸ்வாமி என்ன இன்னும் காப்பி குடிக்கவில்லையா” என வெறுப்பேர்ற, “இந்த கடன்காரன் என்னை விடமாட்டேன் என்கிறான்” என அவர் அழாக்குறையாகக் கூற, அவர் மேல் பரிதாபப்பட்டு அவரை காப்பி குடிக்க அனுப்பி விட்டு இவர் இங்கு மேற்பார்வையாளராக அமர்ந்தார்.

அதற்குள் எங்கள் ஹிந்தி ஆசிரியர் வி.ஜி. சேஷாத்ரி ஐயங்கார் நான் பரீட்சை எழுதும் கண்கொள்ளாக் காட்சியை பார்க்க வந்தார். அவர் மிகவும் கோபக்காரர், தவறு செய்தால் அடிபின்னிவிடுவார். இருப்பினும் அவர் பாடத்தில் நான் சின்சியராக எழுதுவதை அவர் மகிழ்ச்சியுடன் பார்த்தார். எனக்கும் மகிழ்ச்சிதான்.

கேள்வித்தாளில் ஒரு வினா தவறாக அச்சடிக்கப்பட்டதைக் காட்டி என் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டேன். எவெரெஸ்டின் முறை இப்போது டென்ஷன் ஆவதற்கு. அவரை சேஷாத்ரி ஐயங்கார் அனுப்பிவிட்டு ரிலாக்ஸ்டாக தானே அமர்ந்து கொண்டார்.

இந்த தர்ம ஹிந்தி கூத்து பள்ளியிறுதி வகுப்பு வரை நடந்தது. கடைசி ஆண்டு பரீட்சைகளின் போது (சமீபத்தில் 1962-ல்) தலைமை ஆசிரியர் ராஜகோபால ஐயங்கார் ப்ரேயர் ஹாலில் வைத்து ஹிந்தி பரீட்சைக்கு தவறாமல் வருமாறு மாணவர்களைக் கேட்டுக் கொண்டார். பேப்பர் காலியாகத்தான் இருக்கும், ஆனால் அதை திருத்தும் ஆசிரியருக்கு உரிய ஃபீஸ் சென்றுவிடுமே என நகைச்சுவையாகக் கூறினார்.

நான் பள்ளியில் ஹிந்தி படிக்கும்போதே தட்சிண் பாரத் ஹிந்தி பிரச்சார் சபையிலும் ஹ்ந்தி கற்றதாலும், என் அன்னையின் தயவாலும் அம்மொழியில் ஆளுமை பெற முடிந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/25/2010

ஊழல் பற்றிய மேக்ரோ பார்வை தேவை, மனச்சோர்வுகளைத் தவிர்க்க

நான் ரொம்ப நாளா தொட நினைத்த விஷயத்தை இப்போ எழுவதற்கான உந்துதல் ஜெயமோகன் எழுதிய “அலைவரிசை ஊழல்” பதிவுதான் தந்தது. முதலில் அதிலிருந்து எனது பதிவின் விஷயத்துக்கு சம்பந்தமுடையது என நான் கருதும் வரிகளை கோட் செய்து விடுகிறேன்.

ஓர் அரசாங்கம் என்பது என்ன? ஒரு குறிப்பிட்ட அரசியல்கட்டமைப்புக்குள் செயல்படும் பல்வேறு அதிகாரச் சக்திகள் நடுவே இயல்பாக உருவாகி வரக்கூடிய ஒரு சமரசப்புள்ளி அது . தராசின் முள் போல. அந்த அதிகார சக்திகள் நடுவே தொடர்ச்சியான ஒரு சமரசத்தை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. அந்த சமரசம் வழியாகத்தான் அது நிலையான அரசமைப்புகளை உருவாக்கி நீடிக்கச்செய்கிறது.

ஆகவே ஓர் அரசு என்பது இடைவிடாத அதிகாரப்போட்டிகளாலும், பேரம் பேசல்களாலும், பேச்சு வார்த்தைகளாலும், சமரசங்களாலும் ஆனதாகவே இருக்க முடியும். அதிகாரத்தரகர்கள், அதிகாரத்தூதர்கள், அதிகாரப்பிரதிநிதிகள் எப்போதும் அந்த மையத்தில் செயல்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அதிகாரத்தில் உள்ள ஏற்றதாழ்வு வன்முறை பலத்தாலும் பணபலத்தாலும் ஆனது. ஜனநாயகத்தில் எண்ணிக்கை பலத்தாலும்.

அந்த அதிகாரச்சமநிலை குலையும்போது, சமரசம் மூலம் அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லாமல் ஆகும்போது, அதிக அதிகாரம் கொண்ட தரப்புகள் குறைவான அதிகாரம் கொண்ட தரப்புகளை வன்முறை மூலம் அடக்குகின்றன. முன்பெல்லாம் நேரடி ஆயுத வன்முறை. இப்போது பொருளியல் வன்முறை. சமரசத்துக்கான நிபந்தனையாக வன்முறை எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது.

ஓர் அரசாங்கம் என்பது கொள்கையளவில் எப்போதும் வன்முறையை தவிர்க்க முயலக்கூடியதுதான். அதற்காகவே சமரசத்தை அது செய்கிறது. அரசு இல்லையேல் வன்முறை மட்டுமே இருக்கும். அதையே அராஜகம் என்கிறோம். ஆனால் அரசின் பின்னணியில் எப்போதும் வன்முறை இருந்துகொண்டிருக்கிறது.

இதுவே அரசு செயல்படும் முறை. இப்போது மட்டும் அல்ல. அசோகச் சக்ரவர்த்தி காலம் முதல், அக்பர் காலம் முதல், ராஜராஜ சோழன் காலம் முதல் எப்போதும் இப்படித்தான். அரசாங்கத்தின் இயல்பும் செயல்பாடும் முழுக்கமுழுக்க அந்த அதிகாரச்சமநிலையால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. அதில் இலட்சியவாதங்களுக்கு பெரிய இடம் ஏதும் இல்லை. தனிநபர் ஆளுமைகள் பெரிய விளைவுகளை உருவாக்குவதும் இல்லை.


============================================================================================

லஞ்சம் மற்றும் ஊழல் என்று நாம் இன்று சொல்லும் நிதிப்பங்கீடுகள் மூலமே முழுக்க முழுக்க அதிகாரச் சமநிலை பேணப்பட்டிருக்கிறது என்பதுதான். அவை நிதிமுறைகேடுகள் என்ற கோணமே இப்போது உருவானதுதான். மையத்துக்கு கொண்டுசேர்க்கபப்ட்ட நிதி பல்வேறு அதிகாரசக்திகளாலும் அவர்களைச் சேர்ந்தவர்களாலும் பங்குவைக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான்.

இதில் நிதிவசூலித்தவர்கள் அவர்களால் முடிந்தவரை எடுத்துக்கொள்வது, தலைமை தனக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்குவது எல்லாமே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இடைத்தரகர்கள் , ரகசியபேரங்கள் எல்லாமே இருந்திருக்கின்றன. இன்றுபோலவே அன்றும் ஆயுதக்கொள்முதலில்தான் அதிகபட்சமாக ‘கமிஷன்’ அடிக்கப்பட்டிருக்கிறது. திருவிதாங்கூர் அரசில் ஒல்லாந்துக்காரர்களிடம் துப்பாக்கி வாங்குவதென்பது ஒரு பெரிய அரசியல் கொண்டாட்டமாக இருந்திருக்கிறது.

அன்று அவை எவருக்கும் பிழையெனவே தோன்றியிருக்காது. அவை பிழை என தோன்ற ஆரம்பித்தது பிரிட்டிஷ் ஆட்சியின் கடைசிக்காலத்தில் ஜனநாயகம் உருவாக ஆரம்பித்தபோதுதான். இந்தியாவில் வெளிவந்த ஆங்கிலசெய்தியிதழ்கள் ஆரம்பத்தில் வெளியிட்ட செய்திகள் பெரும்பாலும் ஊழல்கள் மற்றும் உயர்மட்ட பேரங்களைப்பற்றியவையே. அவை பிரிட்டிஷ் இந்திய அரசில் நிதிப்பங்கீடுகளில் அதிருப்தி அடைந்த அதிகாரத் தரப்புகள்தான் அவற்றை செய்தியாக்கியிருக்கின்றன.


==============================================================================================

திருவிதாங்கூரில் 1910 முதல் ’தேசாபிமானி’ என்ற செய்தியிதழ்மூலம் ராமகிருஷ்ணபிள்ளை என்பவர் மன்னரின் ‘ஊழல்களை’ செய்தியாக்கி கண்டித்தபோது மன்னருக்கும் அவரது சுற்றத்துக்கும் உண்மையிலேயே அவர்கள் செய்யும் பிழை என்ன என்று புரியவில்லை. மக்களுக்கும்தான். அரசாங்கப்பணத்தை மன்னர் பிடித்தமானவர்களுக்கு கொடுப்பது என்றும் உள்ள நடைமுறைதானே?

மெல்ல மெல்ல ஜனநாயகம் உருவாகி வந்தபோதுதான் மன்னர் கையாள்வது மக்களின் வரிப்பணம் என்றும், அது மக்களுக்கு நலப்பணிகள் ஆற்றுவதற்குரியது என்றும், அதை பிறர் அனுபவிப்பது பிழை என்றும் எண்ணம் உருவாகியது. அதன்பின்னரே அந்த ’பொருளாதார நடவடிக்கை’களுக்கு ரகசியத்தன்மை தேவைப்பட்டது. அதன்பின்னரே ஊழல் என்ற சொல்லாட்சி உருவானது.

ஆம் ’மக்கள் பணம்’ என்ற எண்ணம்தான் ஊழல் என்ற கருத்தை உருவாக்குகிறது. நாம் ஊழல் என்று நினைப்பதை கோடானுகோடி மக்கள் அப்படி நினைப்பதில்லை என்று கவனித்திருக்கிறேன். காரணம் அவர்கள் இன்னமும் ஜனநாயக அமைப்புக்குள் மன அளவில் வந்து சேரவில்லை. அவர்களுக்கு அது சர்க்கார் பணம்தான். அதை சர்க்காருடன் சம்பந்தப்பட்ட சக்திகள் பங்கிடுவதை அவர்கள் தவறாக எண்ணுவதில்லை. ஆகவேதான் ஊழல்வாதிகளை அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள்.


===============================================================================================

இந்திய சுதந்திரப்போராட்ட காலகட்டத்திலும் சுதந்திரத்துக்குப் பின் சிறிதுகாலமும் இங்கே ஒரு இலட்சியவாதம் ஓங்கி நின்றிருந்தது. அப்போது ஊழல் எனப்படும் நிதிப்பங்கீடுகள் சம்பந்தமான சில மனத்தடைகள் தலைவர்கள் மட்டத்தில் இருந்தது. நேரு, படேல், ராஜாஜி, காமராஜ் போன்ற தலைவர்கள் தங்கள் அளவில் அந்த நிதியில் பங்குபெறாதவர்களாக இருந்தார்கள் என்றுவேண்டுமானால் சொல்லலாம்.
==============================================================================================

ஆனால் தேசம் என்ற அமைப்பின் பல்வேறு அதிகார சக்திகள் நடுவே சமரசம் செய்துகொண்டுதான் ஆட்சியை நிகழ்த்த முடியும். சுதந்திரம் கிடைத்த கொஞ்சநாட்களிலேயே இந்த யதார்த்தம் தலைவர்களுக்கு தெரிந்தது. எம்.ஓ.மத்தாய் போன்றவர்களின் சுயசரிதையில் இந்த யதார்த்தம் நோக்கி நேருவும் பட்டேலும் வந்து சேர்ந்த சித்திரம் உள்ளது. மும்பை தொழிலதிபர்களும் பெருநிலக்கிழார்களும் கடல்வணிகர்களும் அரசை பலதிசைகளுக்கு இழுக்கும் சித்திரத்தை நாம் அவற்றில் காண்கிறோம்.

==============================================================================================

என் இருபத்தாறு வயதில் ஒருநாள் மட்டும் டெல்லியின் இந்தியா இண்டர்நேஷனல் அமைப்பின் புல்வெளியில் அமர்ந்து உரையாடல்களைக் கேட்டபோது நான் அப்பட்டமாக உணர்ந்து அதிர்ந்த உண்மை இது. ஆகவே வெளிவந்த ஒரு ஊழலை வைத்து அதிர்ச்சியும் கொந்தளிப்பும் அடைவதற்கு ஏதுமில்லை.

ஜனநாயகத்தில் அரசின் அதிகாரம் மக்களின் அதிகாரம் என ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே அரசின் பணம் மக்களின் பணம். ஆகவே அரசு செய்யும் செலவுகள் மக்களுக்காக மட்டுமே இருக்கவேண்டும். இது அரசு முன்வைக்கும் அதிகாரபூர்வ நிலைபாடு. அத்தனை அரசியல் கட்சிகளும் இதை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. அதை நடுத்தரவர்க்க மனிதர்களாகிய நாம் பள்ளிக்கூடத்தில் படித்து அப்படியே நம்புகிறோம்.

ஆகவே இந்தப்பங்குவைத்தல் ஒரு குற்றமாக நமக்குப் படுகிறது. அதை திருட்டு என்று எண்ணுகிறோம். அதைக்கொண்டு மக்கள் நலப்பணிகளை செய்திருக்கலமே என்று நினைக்கிறோம். இந்த ஊழல்களுக்கு அப்பாற்பட்ட தலைவர்களுக்காக ஏங்குகிறோம். இந்த அமைப்பில் எந்த தலைவர் வந்தாலும் செய்யக்கூடுவது ஒன்றையே என அரச நிர்வாகத்தை அறிந்த எவரும் சொல்லிவிட முடியும். காங்கிரஸும் பாரதிய ஜனதாவும் இதில் ஒன்றே. மன்மோகனும் அத்வானியும் புத்ததேவ் பட்டாச்சாரியாவும் ஒன்றே.

இந்தச்சித்திரத்தை முதலாளித்துவ அரசைப்பற்றியது மட்டும் என்று சிலர் சொல்லக்கூடும். நான் மேலே சொன்னபடி அரசாங்கத்தை சமரசப்புள்ளியாக காணும் கோணம் அந்தோனியோ கிராம்ஷியால் முன்வைக்கப்பட்டது. ஆனால் உலகம் முழுக்க இன்றுவரை உருவான எல்லா ‘புரட்சிகர’ அரசுகளும் இப்படித்தான் செயல்பட்டிருக்கின்றன. விதிவிலக்கே இல்லை.

சோவியத் ருஷ்ய அரசு என்பது முழுக்கமுழுக்க உயர்மட்ட ஊழலின் விசையால் முன்னகர்ந்த ஒன்று. இன்றைய சீன அரசு என்பது ஊழலையே அடிப்படை விதியாக கொண்டு செயல்படுவது. மக்கள் என்று ஒரு தரப்பே இல்லாதபோது அரசு செய்வது எல்லாமே சரிதானே? இந்திய ஊழல் எனபது சீன ஊழல்களுடன் ஒப்பிட்டால் சிறு துளிதான். ஒரு சர்வாதிகார அரசில் ராணுவத்தின் பங்கு பலமடங்கு அதிகரிக்கிறதென்பதே வேறுபாடு.


===============================================================================================

அப்படியானால் ஊழல் ஒரு விஷயமே இல்லையா? அதைப்பற்றி பேசவே கூடாதா? அப்படி இல்லை. ஊழலைப்பற்றிய எல்லா வெளிப்படுத்தல்களும் விவாதங்களும் அதற்கு எதிரான கோபங்களும் ஜனநாயகத்தில் மிகமிக முக்கியமானவையே.

ஏனென்றால் இங்கே மக்கள் என்று ஒரு தரப்பு உள்ளது. அதை குடிமைச் சமூகம் எனலாம். அதுவும் ஒரு முக்கியமான அதிகாரத்தரப்பே. எந்த அளவுக்கு அது தன்னுணர்வுகொண்டு, எந்த அளவுக்கு ஒன்றுபட்டு போராடுகிறதோ அந்த அளவுக்கு அது வலிமையானதாக ஆகிறது. தனக்கான பங்கை அது அது அவ்வாறுதான் பெற்றுக்கொள்ளமுடியும். அவ்வாறு அது தன் உரிமையை உணர்வதற்கும், போராட்ட உனர்வு கொள்வதற்கும் இந்த வெளிப்படுத்தல்களும் விவாதங்களும் உதவியானவை.

==============================================================================================

ஆக, ஊழல் என்பது அரசுகளில் - அவை எவ்வகையான அரசுகள் என்றாலும் - built-in என்று ஜெயமோகன் கூற வருகிறார் என நினைக்கிறேன். அதற்காக அவர் வைக்கும் வாதங்கள், காடும் மேற்கோள்கள் வலிமையானவை. அலட்சியம் செய்ய இயலாது.

ஆகவேதான் குஜராத்தில் மோதி அரசு நற்பணிகள் பல சக அரசியல்வாதிகளுக்கு சவாலாகவே உள்ளன. மோதியின் சக பிஜேபியினரும் இவர்களில் அடங்குவர். ஆகவே அவரை எப்படியாவது தங்கள் லெவலுக்கு இழுக்கவே முயலுகின்றனர். ஊழல் குற்றச்சாட்டு கூற முடியவில்லையா? இருக்கவே இருக்கின்றன 2002-ல் நடந்த கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு, அதன் விளைவான கலவரங்கள். அவற்றை பிரசாரம் செய்தும் அவை எடுபடாது போய் அவர் இரு சட்டசபை தேர்தல்கள், ஊராட்சி மன்றத் தேர்தல்கள் ஆகியவற்றில் தொடர்ந்து வெற்றி பெறுவதைப் பார்த்து ஆங்கில ஊடகங்களும் சரி, சீக்கியக் கொலை புகழ் காங்கிரஸ் கட்சியினரும் சரி வயிறெரிகின்றனர். நமது தமிழ் பதிவர்களும் விதிவிலக்கல்ல என்பதை இப்பதிவுக்கு வந்து சாமியாடப் போகும் பின்னூட்டங்கள் நிரூபிக்கும் என அஞ்சுகிறேன்.

இந்த நிலைமை எத்தனை காலம் நீடிக்கும் எனத் தெரியவில்லை. மோதியின் அரசால் தடுக்கப்படும் ஊழல்களால் பணம் சரியான முறையில் பல திட்டங்கள் மூலம் பொது மக்களையே சேருகிறது. அதுவே போதாதா சக அரசியல்வாதிகள் வயிற்றெரிச்சல்பட? அதுவும் மோதி மட்டுமே கண்ணில் தென்படுவதால், அவருக்குப் பிறகு குஜராத்தில் யார் என்ற மயக்கமும் ஏற்படுகிறது.

1977-ல் பதவிக்கு வந்த எம்ஜிஆரும் மோதி மாதிரியே ஊழலற்ற ஆட்சியையே தர முயன்றார். ஆனால் அவர் அரசை கருணாநிதியும் இந்திரா காந்தியுமாக சேர்ந்து அவர் ஆட்சியை கலைக்க மீண்டும் 1980 எலெக்‌ஷனில் அமோகமாக ஜெயித்த அவர் பிறகு ஊழலில் கருணாநிதியே அஞ்சும் அளவுக்கு ஈடுபட்டு, அவரை அரசியல் ரீதியாக பயங்கரமாகப் பழிவாங்கி செயல்பட்டார். எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரை கருணாநிதியால் ஆட்சியில் அமரும் கனவு கூடக் காணமுடியவில்லை என்பதெல்லாம் ஓக்கே. ஆனால் ஊழலற்ற முதல்வரை ஊழல் சக்கரவர்த்தியாக மாற்றிய கருணாநிதி இன்னும் கொழிப்பதுதான் வருத்தம் அளிக்கிறது.

ஒரு வேளை ஜெயமோகன் சொல்லும் மக்களுக்கான பங்கீடு என்பது இலவச டிவி, கேஸ் கனெக்‌ஷன் என நினைத்து மக்கள் திருப்தியடைந்து விட்டனரோ என்ற அச்சமும் எழுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு பதில்கள் 25.11.2010

பார்வையாளன்
கேள்வி-1: ஃபிரான்சில் குற்றங்களே நடப்பதில்லை என் சாரு நிவேதிதா சொல்வது உண்மையா?
பதில்: அப்பட்டமான உளறல். குற்றங்கள் எங்குதான் நடக்கவில்லை? பிரெஞ்சு குற்றவியல் சட்டத்தில் பட்டியலிடப்படும் குற்றங்கள் வேறு எந்த நாட்டின் குற்றச் சட்டத்துக்கும் சளைத்தவை அல்ல.

இவ்வளவு நாட்கள் பிரஞ்சு தொடர்பு இருந்தும் அம்மொழியை கற்க இயலாதவரின் புரிதல்தான் இதெல்லாம் என விட்டுவிட வேண்டியதுதான். சரியான காமெடி பீஸ் அவர்.

கேள்வி-2: ஃபிரெஞ்ச்- ஜெர்மனி , ஒப்பிடுக... (மொழி வளத்தில் , கலாச்சாரத்தில்)
பதில்: நீங்கள் குறிப்பிட்ட இரு விஷயங்களிலும் அவை ஒவ்வொன்றுமே தம் மட்டில் சிறப்பானவை.

கேள்வி-3: பல மொழிகளை அறிந்தவர் என்ற முறையில் அவற்றுடன் ஒப்பிட்டு இதற்கு பதிலளிக்கவும்.
தமிழின் வளர்ச்சிக்கு அதன் எழுத்துக்களை குறைத்தால் நல்லதா.. அதிகரித்தால் நல்லதா? அல்லது இப்போது சரியாகத்தான் இருக்கிறதா!
அதாவது , இப்போது தமிழில் தேவைக்கு அதிகமான எழுத்துக்கள் (உதாரணமாக “ங்” ஙி,ஙு,ஙூ ஙீ ஞீ ஞி போன்றவை தேவை இல்லை .. ஐ போன்றவையும் தேவையில்லை அய் என எழுதலாம் ) இருக்கிறதா.. அல்லது தேவையை விட குறைவான எழுத்துகள் இருக்கிறதா (ga, fa, kha , போன்றவற்றுக்கு எழுத்துக்கள் இல்லை) அல்லது போதுமான எழுத்துக்கள் இருக்கிறதா?

பதில்: ஙே-யின் தேவையை ராஜேந்திர குமார் அறிந்திருந்தார் (ஙே என விழித்தான்). ஐ-க்கும் ஐ-க்கும் மாத்திரை வேறுபாடு உச்சரிப்பில் வரும். அதே போலத்தான் ஔ-வும் (அவ்வ்வ்வ்). ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்னும்போது ங் வேண்டும்தானே. ஙப்போல் வளையென்றும் எழுதுவார்கள். மற்றப்படி ஙி,ஙு,ஙூ ஙீ ஞீ ஞிஆகியவை தேவையில்லைதான். ஆனால் இருப்பதை ஏன் எடுக்க வேண்டும்?

ga, fa, kha , போன்றவற்றுக்கு எழுத்துக்கள் இல்லைதான். ஆனால் உச்சரிப்பில் தேவை. ஆகவே அவை வரட்டுமே.

கேள்வி-4: சத்திய மூர்த்தி குறித்து கலைஞர் சொன்ன தகவல் உண்மையா? காமராஜரின் குருவான சத்தியமூர்த்தி பற்றிய இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும்?
பதில்: பதில்: சத்தியமூர்த்தி அம்மாதிரி பேசி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் அவருக்கு அம்மாதிரி பதிலடி கொடுத்தது பற்றியும் நான் ஏற்கனவேயே பல இடங்களில் படித்துள்ளேன்.

நிகழ்காலத்தில் பின்னோக்கிப் பார்க்கும்போது பல விஷயங்கள் இப்படித்தான் விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கும். அவ்ற்றில் இதுவும் ஒன்று.

அக்கால கட்டங்களில் குழந்தை திருமணங்களை தடுத்து சாரதா சட்டம் வந்த போதும் அவ்வாறே எதிர்ப்புகள் எழுந்தன. அதற்கும் முன்னால் சதி தடுப்பு சட்டத்துக்கும்தான் எதிர்ப்பு வந்தது.

சமூக ரீதியாக எந்த மாற்றம் வந்தாலும் இவ்வாறு எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அவற்றையெல்லாம் மீறித்தான் மாற்றங்கள் வரவேண்டும்.

இது ஒரு உலகளாவிய உண்மை. இயற்பியலில் இனெர்ஷியா என்று கூறுவார்கள். அதே போலத்தன் இதுவும்.

சத்தியமூர்த்தி மற்றப்படி அப்பழுக்கர்றவர். இம்மாதிரி நடந்து கொண்டது அவரது அக்கால சமூக நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே புத்திசாலிகளாக காங்கிரசார் இருந்தால் இதற்கு ரியேக்ட் செய்யாமல் இருப்பதே நலம்.

கேள்வி-5: தொடர்புடைய இன்னொரு கேள்வி. காமராஜரின் தலைவரையே கலைஞர் இப்படி தைரியமாக விமர்சிக்கிறார் என்றால், இனியும் காங்கிரசுக்கு பணிந்து போக தேவையில்லை... தேர்தலை தனித்து நின்றும் சந்திக்கலாம் என்ற நிலைக்கு அவர் வந்து விட்டதாக கருதலாமா ?
பதில்: கண்டிப்பாக இல்லை. இருப்பினும் காங்கிரசே இவரைக் கழற்றிவிட்டால் என்ன செய்வது என்பதற்கான முன்சாக்கிரதையாகவேனும் இதை எடுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

கேள்வி-6: qwerty , dvorak என ஆங்கிலத்தில் தட்டச்சு ப்லகை ஸ்டாண்டர்டாக உள்ளன . மற்ற மொழிகளில் இப்படி ஸ்டாண்டர்டைஸ் செய்து இருக்கிறார்களா..
பதில்: கண்டிப்பாக உண்டு. முதலில் qwerty என்பது ஜெர்மன் தட்டச்சுப் பலகையில் qwertz என்று இருக்கும். தமிழில் யளனகபக என்று வரும். மீதி மொழிகளிலும் இருக்குமாகத்தான் இருக்கும். ஆனால் தனிப்பட்ட முறையில் உதாரணங்கள் தர என்னால் இயலாது.

கேள்வி-7: எல்லா கட்சிகளும் கூட்டணி மாறத்தான் செய்கின்றன.. ஆனால் பா. ம.க மட்டும் அதிகமாக கிண்டல் செய்யப்படுவது ஏன்?
பதில்: அது அவர்களது அளவுக்கு மீறிய அலட்டலால் வருகிறது. யாரையும் அவர்கள் இதற்காக குறை கூற இயலாது.

கேள்வி-8: ஜெர்மன் பிரதமர் angela merkel அவர்களின் பெயரை தமிழில் எப்படி உச்சரிக்க வேண்டும்?
பதில்: ஆங்கெலா மெற்கெல்

ரிஷபன்Meena
கேள்வி-9: Europe - ஈரோப் Egypt-ஈஜிப்ட் France-ப்ரான்ஸ் palastine-பாலஸ்டீன் Africa-ஆப்ரிக்கா China-சைனா என்று எழுதாமல் ஏன் ஐரோப்பா, எகிப்து, பிரான்சு, பாலஸ்தீனம், ஆப்பிரிக்கா, சீனா என்று தமிழில் எழுதுகிறார்கள். பெயர்ச்சொல்லை அப்படியே தானே தமிழ் எழுத்துக்களில் எழுதவேண்டும் எதற்காக இப்படி குழப்படி செய்கிறோம்.
அதென்ன இஸ்ரவேலர்கள் நீங்கள் இப்படி குறிப்பிடுவது அவர்களுக்கு தெரிந்தால் என்ன செய்வார்கள்?
ஏதேனும் வலுவான காரணமிருக்கிறதா எனக்கு தெரியாது.

பதில்: அப்படியானால் ஜெர்மனை டாய்ட்ச் என்றும் பிரெஞ்சை ஃப்ரான்ஸே என்றும்தான் கூற வேண்டும். நடக்கிற காரியமா? மேலும் எகிப்தை அரேபியர்கள் மிஷ்ர என குறிப்பிடுகிறார்கள். நாம் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்ததால் அவ்வாறு நினைக்கிறோம். சீனாவின் தலைநகர் பீக்கிங் என்றுதான் நான் பள்ளியில் படித்துள்ளேன். ஆனால் இப்போதோ சீன அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் பெய்ஜிங் என்கிறோம்.

ஆக, ஒரு மொழியின் பெயர்ச்சொல்லை மற்றொரு மொழியின் அடிப்படை அமைப்புக்கேற்ப மாற்றிக்கொள்வது இயல்பானதுதான்.

தமிழ் என்பதை மற்ற மொழிகளில் Thamizh என்று எழுதவில்லை, Tamil என்றுதான் எழுதுகிறார்கள். அதுபோலத்தான் இங்லீஷை - ஆங்கிலம் என்றும் ஹிந்தியை - இந்தி என்றும் தமிழில் எழுதுகிறோம்.

இராமாயணத்தை மொழிபெயர்த்த கம்பர் லக்ஷ்மணனை - இலக்குவன் என்றும், விபீஷணனை - வீடணன் என்றும்தான் அழைத்தார்.

எனவே, இதில் குழப்படி எதுவும் இல்லை (நன்றி அருள்).


வஜ்ரா
கேள்வி-10: இந்தியாவின் ஸ்டார் பத்திரிக்கையாளர் பர்கா தத் பற்றி உங்கள் கருத்து?
பதில்: ஒட்டுமொத்த குஜராத்தையே எடுபட்ட பயல்களின் மாநிலம் என அவதூறாகப் பேசும் அப்பெண்மணி திட்டப்படும் அளவுக்குக் கூட லாயக்கில்லாதவர் அவர்.


hayyram
கேள்வி-11 தமிழ் சினிமாவில் பிராமணக் காட்சிப்படுத்தல் பற்றி தங்கள் அபிப்பிராயம் என்ன? தொடர்புடைய சில சுட்டிகள்:
http://www.jeyamohan.in/?p=9352
http://www.jeyamohan.in/?p=7499
http://hayyram.blogspot.com/2009/05/blog-post_5138.html

பதில்: உங்களுடன் முழுக்கவும் ஒத்துப் போகிறேன் என்பதை முதற்கண் கூறிவிடுகிறேன். எனது தரப்பிலிருந்தும் ஒரு உதாரணம் தருவேன்.

ஒரு பதிவர் சந்திப்புக்கு கோலங்கள் சீரியலுடன் தொடர்பு கொண்ட பாஸ்கர் சக்தி வந்திருந்தார். அவரிடம் கோலங்கள் பற்றி நான் சில கேள்விகள் இட்டேன். போன ஆண்டு மே மாதமே முடிந்திருக்க வேண்டியது இன்னும் இழுக்கப்படுவதற்கு அதற்கு பல முறை தரப்பட்ட எக்ஸ்டென்ஷன்கள்தான் காரணம் என அவர் தெரிவித்தார். மிக நல்ல தொழில்நுட்ப முறையில் சீரியல் எடுக்கப்படுதால் அது பலராலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது. ஆகவே அதன் இயக்குனரின் சமூகப் பொறுப்பு மிகவும் அதிகமாகிறது எனக் கூறிய நான் திருச்செல்வனிடம் ஒரு லைவ் டி.வி. ஷோவில் நான் கேட்ட கேள்வி பற்றியும் கூறினேன்.

அவரை அச்சமயம் கேட்க நினைத்து, கேட்காமல் விட்ட கேள்வியை இப்போது பாஸ்கர் சக்தியிடம் கேட்டேன். அதாவது எந்த கேரக்டர்களுக்குமே சாதியை கூறாது விட்டுவிட்டு, கங்கா என்னும் நெகடிவ் பாத்திரத்தை மட்டும் ஐயங்கார் பெண் என குறிப்பிட வேண்டியதன் அவசியம் என்ன என்பதுதான் அது.

அதில் என்ன இழிவான விஷயம் கூறப்பட்டது என கேட்க, அந்த ஐயங்கார் குடும்பத்தின் மாப்பிள்ளை தன் மனைவியையே கூட்டிக் கொடுப்பதாகவெல்லாம் சீன் வைக்கப்பட்டதை கோபத்துடனேயே நான் குறிப்பிட்டேன். பல எபிசோடுகள் இக்குடும்பத்தினர் செய்வதாகக் கூறப்படும் எதிர்மறை காட்சிகள் வந்தன.

அதே சமயம் அபி குடும்பத்துக்கு சூனியம் வைப்பது, காசு வெட்டிப் போடுவது போன்ற உத்தமமான காரியங்கள் செய்த பாஸ்கரின் அன்னை, கொலை கொலையாய் முந்திரிக்காய் என செயல்பட்ட பாஸ்கர் ஆகியோரின் சாதி பற்றி பேச்சில்லை. ஆகவே கதை ஓட்டத்துக்கு சற்றும் தேவைப்படாத சாதி விஷயத்தை ஒரு க்ரூப்புக்கு மட்டும் ஐயங்கார் என அடையாளம் ஏன் காண்பிக்க வேண்டும் என கேட்டு, அக்கேள்வியை திருச்செல்வத்துக்கு பாஸ் செய்யும்படி கேட்டு கொண்டேன். பாஸ்கர் சக்தியும் அவ்வாறே செய்வதாகக் கூறினார்.

என் கருத்து என்னவென்றால் இம்மாதிரி பார்ப்பன சாதியை சீண்டும்படி கதை வைத்து சினிமா, டி.வி. சீரியல்கள் ஆகியவற்றை இயக்குபவர்களை செருப்பால் அடிக்க வேண்டும். அத்தவறை செய்பவரே பார்ப்பனராகவும் இருந்தால் அவருக்கு இரட்டிப்பு அளவில் செருப்படி தரவேண்டும்.

உத்தம புத்திரன் படம் சம்பந்தப்பட்ட சண்டையில் கொங்கு வேளாளர்கள் செய்ததுதான் சரி. அப்போதுதான் சற்றே யோசிக்க ஆரம்பிப்பார்கள். நான்கைந்து முறை அவ்வாறு நடந்தாலே போதும், எதற்கு வம்பு என விட்டுவிடுவார்கள்.

இந்த விஷயத்தில் பல பார்ப்பன பதிவர்கள் bending backwards என்னும் ரீதியில் அம்மாதிரி செய்பவர்களுக்கு சப்பைக்கட்டு கட்டி தங்களை முற்போக்கு பதிவர் எனக்காட்டிக் கொண்டு, எடுபட்ட பயல்களாகச் செயல்படும் இணைய தாசில்தார்களிடம் நல்ல பெயரை வாங்க முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு தண்டனை அவ்வப்போது அதே எடுபட்ட ஜாட்டான்களிடமிருந்தே கிடைத்து விடுகிறது. இருப்பினும் வலிக்காதது போல நடிக்கின்றனர்.

I have got nothing but contempt for them.

கேள்விகள் ஏதேனும் இருந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/24/2010

ஆ. ராசாவின் உயிருக்கு ஆபத்து - ஆகவே அவரை வீட்டுச் சிறையில் வைக்கவும் - சுப்பிரமணியன் சுவாமி

ஜூனியர் விகடன் சார்பாக ஆர்.பி. என்பவர் சுப்ப்ரமணியன் சுவாமியை ஸ்பெக்ட்ரம் விவகாரம் சம்பந்தமாக பேட்டி எடுத்துள்ளார். அப்பேட்டி இன்று சென்னையில் கடைகளில் வெளியான, 28.11.2010 தேதியிட்ட ஜூவி இதழில் பக்கங்கள் 4, 5, 6-ல் வந்துள்ளது. முழு பேட்டியை படிக்க ஆவல் உள்ளவர்கள் கடைக்கு சென்று வாங்கவும். இப்பதிவு அதன் சுருக்கம், கூடவே டோண்டு ராகவனது சொந்தக் கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது.

அந்தப் பேட்டியில்தான் சுப்பிரமணியன் சுவாமி இப்பதிவின் தலைப்பில் கூறியதை சொன்னார். அது பேட்டியின் போக்கிலே வரும். முதலிலே பேட்டியின் சுருக்கத்தைப் பார்ப்போம்.

சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு இப்போது ராசா அம்பலப்பட்டு நிற்பதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்றாகும். தனது கட்டுரைகள் மூலம் ராஜாவை வீழ்த்திய சாமான்யன் கோபி கிருஷ்ணா பற்றி நான் ஏற்கனவேயே குறிப்பிட்டுள்ளேன். இப்போது சுவாமியை கவனிப்போம்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை நினைத்தாலே தனக்கு “அலிபாபாவும் 40 திருடர்களும்” கதைதான் நினைவுக்கு வருகிறது என சுவாமி நகைச்சுவையாக பேட்டியின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டு விடுகிறார்.

1. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் காசு பார்த்ததாக தான் நினைக்கவில்லை, ஆகவே அவர் பதவி விலகத் தேவையில்லை என சுவாமி கருதுகிறார்.

2. அவர் பல மாதங்கள் தன் கடிதங்களுக்கு பதில் போடாததில் அவருக்கு கூட்டணி சம்பந்தமான நிர்ப்பந்தங்கள் ஏதேனும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பலனை அவருக்கு அளிக்கிறார்.

3. மத்திய அமைச்சர்களிடம் சொத்துக்கணக்கைத் தருமாறு பிரதமர் கேட்பது சரிதான், அதே சமயம் அந்த விவரங்கள் உண்மையா என்பதையும் அவர் பார்க்க வேண்டும்.

4. ராசா ராஜினாமா செய்தது ஆரம்பமே. இனிமேல்தான் மேலும் பல விஷயங்கள் நடக்க வேண்டும்.

5. இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளிலும் விசாரணை நடக்க வேண்டும். பணப்பரிமாறல்களை பர்றிய ரகசிய விஷயங்களை கண்டறிய அமெரிக்காவின் உதவியை நாடலாம். தான் அதற்கு பாலமாக இருக்கத் தயார் என அவர் கூறுகிறார்.

6. 1.76 லட்சம் கோடி என்பது வருவாய் இழ்ப்பே. ஆக்சுவலாக கைமாறிய தொகை 60 ஆயிரம் கோடிகள் என்பது அவர் கருத்து. விரிவான கணக்குகளை அவர் நீதிமன்றத்தில் சொல்லவியலும் என்றும் அவர் கூறினார்.

7. பாராளுமன்ற மைய மண்டபத்தில் ராசா தன்னிடம் தானும் சுவாமியும் தமிழரே என்ற விஷயத்தைக் கூற, சுவாமியோ ராசா போன்றவர்கள் தன்னை கைபர் போலன் கணவய்க்கு அப்புறத்திலிருந்து வந்தவர்கள் எனக் கூறுவதாகக் கூறி, ராசா பதில் பேசாமல் அப்பால் சென்றார்.

8. இப்போதே யார் யாருக்கெல்லாம் பணம் போயிற்று என ராசா கூறிவிட்டால் அவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு உண்டு.

9. ஆகவே ஆ. ராசாவின் உயிருக்கு ஆபத்து. அதனால் அவரை வீட்டுச் சிறையில் வைக்கவும் என்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.

அதே ஜூவி இதழில் கருணாநிதி தன் குடும்பத்தினர் தன்னை நம்பாது நீரா ராடியா என்னும் பெண்மணியையே தமது பதவிகளுக்காக நம்பியுள்ளனர் எனப் பொதுவாகச் சொல்லிக் கண் கலங்கி விட்டாராம். என்ன செய்வது, உப்பைத் தின்னவன் தண்ணி குடிச்சுத்தானே ஆகணும்னு இருக்கே.

இப்படி பூதாகாரமாக வெளிவந்துள்ள ஸ்பெக்ட்ரம் ஊழலை மாறன் சகோதரர்களுடன் சமாதானமாகப் போய், இதயம் உருகியது, கண்கள் பனித்தன என்ற ரேஞ்சுக்கெல்லாம் பேசுவது கோமணத்தால் மலத்தை அடக்க நினைத்தக் கதைதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/22/2010

எனது அபிமான நடிகர் ஜெமினி கணேசன் பற்றி நான் இன்றுதான் முதல்முறையாக அறியும் தகவல்

எனது அபிமான நடிகர் ஜெமினி கணேசன் பற்றி நான் இன்றுதான் முதல்முறையாக அறியும் தகவல் எனக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தது. நன்றி: அந்திமழை. முதலில் கட்டுரைக்கு செல்வோம்.

ஜெமினிகணேசன் எனக்கு உறவினர்: கருணாநிதி
Created On 22-Nov-10 09:28:03 AM
நடிகர் ஜெமினி கணேசனின் 90-வது பிறந்தநாள் விழா, சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாறு குறித்த குறுந்தகடை இயக்குனர் கே.பாலசந்தரும், வரலாற்று புத்தகத்தின் முதல் பிரதியினை கவிஞர் வாலி, வைரமுத்து ஆகியோரும் முதலமைச்சர் கருணாநிதியிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் அவர் பேசியது:

ஜெமினியை எல்லோரும் நேசிக்கக் கூடியவர்கள். அத்தகைய அருமை நண்பர், மறைந்தும் மறையாத மாணிக்கம். நம்முடைய கவிப்பேரரசு, மகன் தந்தைக்கு ஆற்றுகின்ற உதவி அல்லது காட்டுகின்ற நன்றி என்ற திருக்குறளின் பொருளை எடுத்துரைத்து, மகன் என்று இல்லாவிட்டாலும் மகள் என்ற முறையிலே கமலா செல்வராஜ் இந்த விழாவை அற்புதமாக இன்றைக்கு நடத்தியிருக்கிறார் என்று கூறினார். விழாவை சிறப்பாக நடத்திய கமலா செல்வராஜ், ஆண்கள் கூடி, ஏன் மகன்கள் இருந்து நடத்தினால் கூட, இவ்வளவு சிறப்பாக இந்த விழாவை நடத்தியிருக்க முடியுமா என்று எண்ணுகின்ற வகையில் இந்த விழாவை நடத்தியிருப்பது பாராட்டத்தக்கது. அவருக்கு ஜெமினி சார்பில் என் வாழ்த்துகள்.

ஜெமினி கணேசன், 17.11.1920-ல் புதுக்கோட்டையில் பிறந்தவர். அவருடைய தாயார் கங்கம்மா. தந்தையார் ராமு. ஜெமினியின் அத்தை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. ஜெமினியின் சின்ன தாத்தா நாராயணசாமி. அவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டன. எனவே அவர் குழந்தைக்காக இரண்டாம் தாரமாக எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த "சந்திரம்மா'' என்ற பெண்ணை மணந்தார். அந்த மணம் கலப்பு திருமணம். இதை ஜெமினி கணேசன் பிறந்த பிராமண சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரைச் சாதியிலிருந்தே தள்ளி வைத்தது. ஆகவே, ஜெமினி பிறந்தபோதே ஒரு புரட்சி முழக்கத்தோடு பிறந்திருக்கிறார் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.

முத்துலட்சுமி ரெட்டியை பெருமைப்படுத்தியது கழக அரசு. இந்த கலப்பு திருமணத்திற்கு பிறகு, சந்திரம்மா மூலம் நான்கு குழந்தைகள் பிறந்தன. அவற்றுள் முதல் குழந்தைதான் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி என்று சொன்னால் உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்.

ஆக, முத்துலெட்சுமி ரெட்டி இசை வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். புதுக்கோட்டை மருத்துவமனையில் டாக்டராகப் பணிபுரிந்த சுந்தர ரெட்டி என்பவரைக் காதலித்து மணந்தார். சாதி, மொழி வேறுபாடு கடந்து அவர்களின் திருமணம் நடைபெற்றது. ஆகவே, அந்த கலப்பு திருமணத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் சமுதாய சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டார்கள்.

இன்னும் சொல்லப் போனால், சென்னை மருத்துவ கல்லூரியில் முதல் முதலாக டாக்டராகப் படித்த ஒரு பெண்மணி முத்துலெட்சுமி ரெட்டி. அதனால்தான், மேலவை உறுப்பினராக இருந்து அவர் ஆற்றிய பணியை எடுத்துக்காட்ட, விளக்கிக் காட்ட மேலவையிலும், பேரவையிலும் அவருடைய திருவுருவப்படத்தை இந்த அரசு வைத்து பெருமைப்படுத்தியிருக்கிறது என்பதை நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

சென்னை மாகாண சட்டசபையில் 1929-ல் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துலெட்சுமி ரெட்டி, ``பொட்டுக் கட்டும்'' வழக்கத்தை - அதாவது தேவதாசி முறையை அகற்ற வேண்டும், ஒழிக்க வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தினார். இது காமராஜர் அரங்கம். இந்த அரங்கத்தில் அவருடைய குருநாதர் சத்தியமூர்த்தியைப் பற்றி நினைவூட்டுவதைப் பற்றி தவறில்லை.

தீரர் சத்திய மூர்த்தி, என்னதான் காங்கிரஸ் தியாகி ஆக இருந்தாலும்கூட, அவர் சனாதன கொடுமைக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டவர்தான். ஒரு சட்டத்தை தமிழக சட்டசபையிலே கொண்டு வந்தபோது - தேவதாசிகளை ஒழிக்க வேண்டும். பெண்களுக்கு பொட்டுக்கட்டி அவர்களை கேவலப்படுத்துவது என்பது முறையல்ல, ஆகவே, அந்தப் பொட்டுக்கட்டும் வழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று சட்டம் வந்தபோது - ஒருவர் எழுந்து ``இல்லை, இல்லை. அந்த வழக்கம் இருப்பது நல்லது, அது தொடர வேண்டும், ஏனென்றால் காளைகள் வெறித்தால் சாந்தப்படுத்தும் சமுதாயம் அந்தப் பெண்கள் சமுதாயம்தான், எனவே, பொட்டுக்கட்டும் வழக்கம், தேவதாசி முறை தொடர்ந்து அனுமதிக்கப்பட வேண்டும்'' என்று சொன்னார். அவர்தான் தீரர் சத்தியமூர்த்தி என்று கூறுவார்கள்.

அதை எதிர்த்து ஒரு பெண் குரல் கிளம்பியது. அந்தப் பெண் குரல்தான் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் குரல். பெண்கள் சமுதாயம் காளைகள் வெறித்தால் சாந்தப்படுத்துகின்ற சமுதாயம் என்றால், அப்படிப்பட்ட பெண்களை உங்களுடைய வீட்டிலிருந்து அனுப்புங்கள் பார்க்கலாம் என்று முத்துலெட்சுமி ரெட்டி சிம்மக்குரல் கொடுத்து முழங்கினார் - முழங்கினார். மன்னிக்க வேண்டும் - ஒரு வரலாற்று உண்மையை எடுத்துச் சொல்லும்போது, அதிலே பிசிறு வரக்கூடாது. அதிலே குறைபாடு வரக்கூடாது என்பதற்காக உண்மையை அப்பட்டமாக அப்படியே சொல்கிறேன். அந்த முத்துலெட்சுமி ரெட்டிதான் இந்தியப் பூபாகத்தில் அன்றைக்கு புரட்சிகரமான மங்கையாக விளங்கி - அப்படி விளங்கிய காரணத்தால் இந்த இயக்கத்தின் ஆட்சி நடைபெறும்போது, அவருடைய திருவுருவப்படத்தை நாங்கள் சட்டமன்ற மேலவை யிலும், பேரவையிலும் வைத்து கௌரவப்படுத்தி யிருக்கிறோம்.

இதை இந்த விழாவில் ஏன் சொல்ல வேண்டு மென்றால், இந்த விழாவிற்கு சம்பந்தம் இருக்கிறது. ஜெமினி கணேசனுடைய அத்தை முத்துலெட்சுமி ரெட்டி. ஆகவே, எனக்கும், ஜெமினி கணேசனுக்கும் சொந்தம் இருக்கிறதா, இல்லையா? என்னை வாலியோ அல்லது நம்முடைய இயக்குநர் சிகரம் அவர்களோ பிரித்துப் பார்த்து ``உனக்கு சொந்தம் இல்லை'' என்று சொல்ல முடியாது. சொந்தக்காரர் அவர்கள். அதனால்தான் இந்த விழாவை அவர்கள் வற்புறுத்தினாலும், வற்புறுத்தாவிட்டாலும் வந்திருந்து நடத்திக் கொடுத்திருப்பேன். காரணம், எங்கள் சொந்தக்காரர்கள் வீட்டு விழா இது.

அவருடைய படத்தை வைத்திருப்பது மாத்திரம் இல்லை; அந்த அம்மையார் பெயரால் இன்றைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், கர்ப்பிணிப் பெண்களின் நலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக "டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம்'' என்ற பெயர் சூட்டி கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம்.

அத்திட்டத்தின்கீழ் 2006-க்குப்பின் கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச் சத்து உட்கொள்ள 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. குழந்தை பிறப்பதற்கு முன்பு 3 ஆயிரம் ரூபாய், குழந்தை பிறந்த பிறகு 3 ஆயிரம் ரூபாய் - ஆக, 6 ஆயிரம் ரூபாய் அந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுக்கிறோம் என்றால், அந்தத் திட்டத்திற்குப் பெயரே "டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம்'' என்றுதான் அந்தப் பெயரை வைத்திருக்கிறோம்.

அந்த முத்துலெட்சுமி ரெட்டியின் குடும்பத்துப் பிள்ளை - அவரால் வளர்க்கப்பட்ட பிள்ளை, ஜெமினி கணேசன். அந்த ஜெமினி கணேசன் பள்ளிப் பருவத்திலேயே எந்த அளவுக்கு புரட்சிகரமாக விளங்கினார் என்பதற்கு ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

அவர் படித்த பள்ளிக்கூடத்திலே - ஒரு சமஸ்கிருத ஆசிரியர் பற்றிய விவரம் (இதெல்லாம் நான் சொல்வதல்ல, ஜெமினி அவர்களே எழுதி, கமலா செல்வராஜ் வெளியிட்ட புத்தகத்தில் வந்திருக்கின்ற உண்மை விவரங்கள்). ஜெமினி, ராஜா முத்தையாச் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பிலே படித்த போது, அப்பள்ளியில் இருந்த சமஸ்கிருத ஆசிரியர் பற்றி இந்நூலில் குறிப்பிடும் ஜெமினி கணேசன், "இருபது பிராமண மாணவர்கள் மத்தியில் பிராமணர் அல்லாத ஒரே மாணவன் கோவிந்தராஜீலு. ஆனால், அவனுடைய சமஸ்கிருத உச்சரிப்புதான் மிக நன்றாக இருக்கும். அப்படியும் ஆசிரியர், `பிராமணனே இல்லாத நீயெல்லாம் ஏன் சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள வருகிறாய்?' - என்று கேட்கும்போது, எனக்கு கோபம் வரும். ஒரு பிராமணர் அல்லாத சூத்திரனைப் பார்த்து சமஸ்கிருத ஆசிரியர் ``நீ பிராமணன் இல்லையே, ஏன் சமஸ்கிருதம் படிக்க வேண்டும்?'' என்று கேட்டவுடன், கோபத்தால் கொதித்து, இனம், குலம், மதம் என்ற சின்ன வட்டத்துக்குள் சிக்கி வாழ்வது தவறு. பரந்த உலகத்தில் பரந்த மனதுடையவனாக, இந்தியன் என்ற உணர்வோடு வாழ வேண்டுமென்பது பிறப்பில், வளர்ப்பில், எனக்குள் ஊறிப்போன ஒன்று'' -என்று முழங்கியவர் ஜெமினி கணேசன். எங்கள் சுயமரியாதை இயக்கத்திற்கும், அவருக்கும் இதுபோன்ற பிரச்சினைகளில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை என்றே கருதுகின்றேன்.

ஜெமினி கணேசன் அவர்கள் அவருடைய வாழ்க்கையில் சீர்திருத்தவாதியாக, சாதி, மதம் இவைகளையெல்லாம் மறுப்பவராக, ``ஒன்றே குலம், ஒருவனே தேவன்'' என்ற கருத்து கொண்டவராக, எல்லோரையும் நண்பர்களாகப் பெறுகிற அந்த பரந்த மனப்பான்மை உள்ளவராக வாழ்ந்து காட்டினார் - அவருடைய வாழ்க்கைப் பாதை, நடந்து பார்த்து, உணர்ந்து பார்த்து, அவர் வழியிலே நாமும் புகழொளியைப் பரப்ப வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழின்பால் அவருக்குள்ள ஆர்வத்தை நான் பல நேரங்களில் பார்த்திருக்கிறேன். ஒருமுறை நான் கோலாலம்பூரில் தமிழ் மாநாட்டிற்குச் சென்றிருக்கி றேன். அந்த மாநாட்டிலே திரும்பிப் பார்த்தால், ``வணக்கம்'' என்ற ஒலி கேட்கிறது. யாரென்று பார்த்தால், ஜெமினி கணேசன். அந்த மாநாட்டிற்கு வந்து எங்களோடு இரண்டொரு நாட்கள் தங்கி பொழுதைப் போக்காமல், தமிழைப் பருகி, கருத்துக்களை ஏற்றுச் சென்றவர் அருமை நண்பர் மறைந்த ஜெமினி கணேசன் என்று கருணாநிதி பேசினார்.


இப்போது டோண்டு ராகவன்.

சும்மா சொல்லப்படாது பலரால் “சாம்பார்” என அன்புடனும், சிலரால் இளப்பமாகவும் அழைக்கப்பட்ட ஜெமினியின் பின்னால் இத்தனை விவரங்களா?

ஒரு காலகட்டத்தில் மும்மூர்த்திகளாக அறியப்பட்ட சிவாஜி, எம்ஜிஆர் மற்றும் ஜெமினி ஆகிய மூவரில் எனக்கு ஃபேஃபரைட் ஜெமினியே. அதுவும் சாவித்திரியுடன் நடித்தால் டபுள் ஓக்கே.

பல கோடிகள் சம்பாதித்தும் ஊதாரித்தனமாக செலவழித்து கடைசி நாட்களில் பஞ்சப் பரதேசியாக மறைந்த நட்சத்திரங்கள் மெஜாரிட்டியாக இருந்தபோது ஜெமினி போன்ற சிலர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு பலருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்திருக்கிறார்கள்.

மகிழ்ச்சியுடன்,
டோண்டு ராகவன்

அடிமாட்டு விலைக்கு கறவை மாட்டை எதிர்ப்பார்க்கலாமா?

இது ஒரு மீள்பதிவு. எனக்கு சில நாட்களுக்கு முன்னால் கிடைத்த இன்னொரு அனுபவத்தின் காரணமாக இதை மறுபடியும் வெளியிடுகிறேன். முதலில் பதிவு.

இன்று (19.11.2007) எதேச்சையாக திண்ணை பத்திரிகையை பார்க்க நேர்ந்தது. அதில் எழுதியிருந்தார்கள், "திண்ணை ஒரு லாபநோக்கற்ற வார பத்திரிக்கை. அதனால், இதற்கு எழுதுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுவதில்லை". இது அவர்கள் கொள்கை. அதைப் பற்றி பிரச்சினையில்லை. இருப்பினும் ஒரு எண்ணம். அப்படியிருந்தும் ஏன் பலர் அதற்கு கட்டுரைகள் அனுப்புகின்றனர்? ஏனெனில் அதில் எழுதுபவர்களுக்கு ஒரு கௌரவம் கிடைக்கிறது. ஆக, பணமாக இல்லாவிட்டாலும் வேறு ஏதோ வகையில் அனுகூலம் கிடைக்கிறது.

இது கணையாழிக்கும் பொருந்தும். சுஜாதாவின் தொடர்கதை நிர்வாண நகரத்தில் (நன்றி சுரேஷ்பாபு அவர்களே) கணையாழி பத்திரிகையின் நிர்வாகி வருவார். கணேஷ் வசந்துடன் பேசுவார். அதில் கணையாழியில் வந்த கவிதையை எழுதினவரைப் பற்றிய விசாரணை. "அதை எழுதியவருக்கு சன்மானம் அனுப்பியிருப்பீர்களே, அந்த விலாசம் வேண்டும்" என்று கேட்டதற்கு தயக்கம் மற்றும் பாசாங்கு இல்லாமல் பதில் வரும் கணையாழியிடமிருந்து. "அப்படியெல்லாம் சன்மானம் அனுப்பினால் கணையாழி போண்டியாகி விடும்"

ஆனால் இப்பதிவு அதைப் பற்றியல்ல.

சேவை உபயோகிப்பாளர் பலருக்கு சேவையின் தேவையான தரம் பற்றி ஐயமே இல்லை. மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும். ஆனால் அதற்கான விலை என்று வரும்போது மட்டும் மூக்கால் அழுவார்கள். உதாரணம் எனக்கு மிகப் பரிச்சயமான துறையிலிருதே எடுக்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் இன்ஸ்டாக் மொழி பெயர்ப்பு சேவை பற்றி ஓர் ஆய்வு நடத்தினார்கள். சேவை பெறுபவர்களிடமிருந்து பல விவரங்கள் கேட்கப்பட்டன. அவர்களது தேவைகள் பற்றியும் கேட்கப்பட்டது. அதில் ஐ.டி.பி.எல்.லில் இருந்து வந்த பதில்கள் அளிக்கும் பார்வை பொதுவாகவே வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்ப்பதையே பிரதிபலித்தன.

தரம்: மிகச் சிறந்த தரத்தில் எந்த சமரசத்துக்கும் இடமே இல்லை.
விலை: ஒரு பக்கத்துக்கு பத்து ரூபாய் மேல் தர இயலாது (அடிமாட்டு விலை எனக் கருதப்படும் இன்ஸ்டாக்கின் ரேட்டே இருபது ரூபாய், அப்போதைய சந்தை விலை 50 ரூபாய்).

நான் வேறு இடத்தில் படித்த ஒரு விஷயம் இங்கு ஞாபகத்துக்கு வருகிறது. இது ப்ளாண்டி என்னும் காமிக்ஸில் படித்தது. ப்ளாண்டி என்னும் பெண்மணியும் அவரது சினேகிதியும் கேட்டரிங் தொழில் நடத்துகிறார்கள். அவர்களிடம் ஒரு வாடிக்கையாளர் வருகிறார். கேட்டரிங் செய்ய கொட்டேஷன் கேட்கிறார். அவரது எதிர்ப்பார்ப்புகள் அபரிதமான அளவில். போட வேண்டிய ஐட்டங்கள் அதிகம். அதுவும் சுடச்சுட இன்முகத்துடன் பரிமாற வேண்டும். இவர்கள் கொடுத்த கொட்டேஷனைக் கேட்டு தன்னால் அவ்வளவு பணம் தர இயலாது என்று கூறிவிடுகிறார். பின் ஏன் இவ்வளவு ஸ்பெசிஃபிக்கேஷன் தந்தாராம் எனக் கேட்டால் நல்ல தரம் பெற பணம் பிரச்சினையாக இருக்கக் கூடாது என்று சிரிக்காமல் கூறுகிறார்.

நான் மேலே குறிப்பிட்ட இன்ஸ்டாக் இப்போது கிட்டத்தட்ட இல்லாமலேயே போய் விட்டது. அதற்கு காரணம் பல. அரசுக்கே அதை மூட வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது. இன்னும் காரணங்களும் உண்டு. அவற்றில் நான் பார்த்த முக்கியமானது என்னவென்றால் அவர்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களை நடத்திய விதமே.

இன்ஸ்டாக்கில் ஒவ்வொரு வேலைக்கும் இரண்டு விலைகள் உண்டு. அர்ஜண்ட் ஆர்டினரி போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். அர்ஜண்டுக்கு 300 சொற்கள் கொண்ட ஒரு பக்கத்துக்கு 30 ரூபாய் தருவார்கள். வேலை துரிதமாக முடிக்க வேண்டும் (அதைவிட துரிதமாக நான் வேலை செய்ததால் எனக்கு இது பிரச்சினையே இல்லை என்பது வேறு விஷயம்). ஆர்டினரி வேலைக்கு பக்கத்துக்கு 20 ரூபாய்தான் தருவார்கள். ஆனால் அவகாசம் அதிகம் தருவார்கள். இது ஏற்று கொள்ளக்கூடிய ஏற்பாடே. ஆனால் திடீரென ஒரு குளறுபடி நடந்தது. தில்லியிலேயே உள்ள வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்து நயமாகப் பேசி ஆர்டினரி வேலையை சீக்கிரம் முடித்து கொடுக்கச் சொல்வார்கள். வெளியூரில் இருப்பவர்களால் அவ்வாறு செய்ய இயலாது. ஆகவே பல முறை ஆர்டினரி வேலை அர்ஜண்ட் வேலையின் நேரத்துக்குள் முடிக்க வேண்டியிருந்தது. பணம் என்னவோ அதே 20 ரூபாய்தான். இது வாடிக்கையாளர்களது சமன்பாட்டை பாதித்தது. இம்மாதிரி வேலைகளுக்கு முக்கியமாக என்னைத்தான் நாடுவார்கள். நானும் வேறு வேலை இல்லாதிருந்தால் அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவேன். ஆனால் ஒரு நிலைக்கு அப்புறம் நான் மறுக்க ஆரம்பித்தேன். ஒன்று அர்ஜண்ட் வேலைக்கான சம்பளம் தரவேண்டும் இல்லையெனில் ஆர்டினரி வேலைக்கான கால அவகாசம் தர வேண்டும் என்று கொடி பிடித்ததில், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்புகளில் இது முடிவுக்கு வந்தது. இன்ஸ்டாக்குக்காக நான் வேலை செய்த காலக்கட்டத்தில் (1981-1995) பக்கத்துக்கான விலையும் மெதுவாக படிப்படியாக உயர்ந்து ஆர்டினரி வேலைக்கான விலை 70 ரூபாயை எட்டியது நிஜமே. ஆனால் அதற்குள் எனது சந்தை ரேட் 200 ஆயிற்று. ஆகவே நான் வேறு வழியின்றி இன்ஸ்டாக் வேலைகளை மறுக்க ஆரம்பித்தேன். (இப்போது ரேட் 500 ரூபாய்க்கும் மேல், 200 சொற்கள் கொண்ட பக்கத்துக்கு).

நல்ல சேவை வேண்டுமானால் நல்ல விலையும் தரத் தயாராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கஷ்டம்தான். ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. "If you want to pay peanuts, you will get only monkeys".

இன்னும் ஒரு விஷயம். இவ்வளவு பேசும் டோண்டு ராகவன் ஏன் இன்ஸ்டாக்குக்கு வேலை செய்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக கூறுகிறேன்.

1. அக்காலக் கட்டத்தில் சோஷலிச பொருளாதாரத்தில் அன்னிய நாடுகளுடன் செய்து கொள்ளும் தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் வெகு குறைவு. ஆகவே மொழிபெயர்ப்பு வேலைகளும் குறைவே.
2. அரசு துறைகள் தங்களுக்கு தேவையான மொழிபெயர்ப்புகளை இன்ஸ்டாக் மூலம்தான் செய்வித்து கொள்ள வேண்டும் என்பது அப்போதைய அரசின் கொள்கை. ஆகவே வேலைகள் இன்ஸ்டாக்கில்தான் அதிகம் கிடைத்தன.
3. எவ்வளவுக்கெவ்வளவு வேலை செய்கிறேனோ அவ்வளவுக்கவ்வளவு எனது மொழியின் தரம் கூடுமல்லவா. (இப்போதைக்கு நான் பதிவுகள் போடுவதற்கும் எனது தமிழின் தரத்தை உயர்த்திக் கொள்வது எனது நோக்கங்களில் ஒன்றே என்று இந்த இடத்தில் கூறிவிடுகிறேன்).
4. எல்லாவற்றையும் விட முக்கியமாக இன்ஸ்டாகின் உதவியால் என்னால் ஒரு வெற்றிகரமான மொழிப் பெயர்ப்பாளனாக மாற முடிந்தது. அதாவது டில்லியில் கால் ஊன்றிக் கொள்ள ஒரு இடம் கிடைத்து, ஐ.டி.பி.எல்லில் நல்ல வேலை கிடைத்து, அனுபவம் பல பெற்று, என்றெல்லாம் கூறிக் கொண்டே போகலாம்.


இப்பதிவை இற்றைப்படுத்த தூண்டுதலாக இப்போது கிடைத்த அனுபவமும் அதேதான். முதலில் பல கேள்விகள் கேட்டனர், எனது சேவையின் தரம் பற்றி. அதாவது பிராஜக்டுகளை குறித்த நேரத்துக்குள் மிகத்தரமான முறையில் தரவியலுமா என்று.

தாராளமாகச் செய்யலாம், சரியான விலை அதற்கெல்லாம் கிடைத்தால் என்று நான் பதிலளிக்க, வந்ததையா ஆஃபர்.

The work is for a semi private publication
we have got 3 other Translators for various parts and we pay Rs 40 per page
Will this work for you?

if possible please look into the baraha font as the others are doing it in that
Thanks

எனது பதில்:
How many words are there in your page? Even assuming a modest figure 200 words in a page, Rs. 40 represents just 20 paise per word.

This is a ridiculously low rate as far as I am concerned. I charge Rs. 3 per word and this works out to Rs. 600 per page of 200 words.

I am not interested to accept your work at the very low rate of Rs. 40 per page.

இதற்கு வந்த பதில்:
This is not technical writing.
Linguistic companies charge rs 50 per page for non profit religious translations.
like kumbabhishekam newsletters sthala puranas etc

எனது பதில்:
It is immaterial as to the purpose of the translation. As far as I am concerned, time is money and your pages will take up the same time as in the case of my regular translation assignments.

My time in a day is limited to just 16 hours at the computer and I cannot afford to waste my time in so called non profit translations. Please see my blog post on the subject of non-profit organizations

அவர்கள் விடவில்லை. [They have to prove a point. Money was no object (they have none)].
We had send the message to xxx groups - for vaideekas & house wife's who are good at this and may want to do a noble service & also get paid & we have found about 19 responses & they had already started work. The message was forwarded. very very sorry to have taken up your time.

எனது முடிவான பதில்:
It is good that this has happened.

There are housewives and Vaithikas with oodles of time at their disposal and can welcome a few pocket money. Their livelihood needs are met otherwise. but in my case, my sole source of income is translation.

Trouble is, you want a serious professional delivering jobs in right time and in the bargain delivering perfect work as well. Quite laudable objectives. But then you are not ready to shell out the extra money for these enhanced requirements.

Please read my post on this sort of demands by the client at http://dondu.blogspot.com/2007/11/blog-post_19.html

மீண்டும் டோண்டு ராகவன். ஒரு மொழிபெயர்ப்பு என்றால் எவ்வளவு வேலை அது பிடிக்கும் என்பதையே புரிந்து கொள்ள முடியாதவர்களிடம்/விரும்பாதவர்களிடம் இப்படித்தான் கடுமையாகப் பேச வேண்டியிருக்கிறது. இதில் நான் இழக்கப்போவது ஒரு கொத்தடிமையின் நிலையையே. யாருக்கு வேண்டும் அது?

எனது துபாஷி வேலையில் இன்னிக்கு தமாஷ் என்ற தலைப்பில் இட்ட பதிவில் அவதூறு ஆறுமுகம் போன்றவர்கள் என்னவெல்லாம் ஃபிலிம் காட்டினர் என்பதைப் பாருங்களேன் (உழைக்காமல் ஆயிரத்தி இருநூறு ரூபாயை கொண்டுவந்தது திருட்டுக்கு சமம் அல்லவா டோண்டு ராகவன் அவர்களே?). ஆனால் இதே விஷயத்தை நான் மொழிபெயர்ப்பாளர் தலைவாசலாம் ப்ரோஸ்.காம்-ல் பதிவிட்டபோது சக மொழிபெயர்ப்பாளர்களிடமிருந்து அமோக ஆதரவே கிடைத்தது.

இதைத்தான் “எருதின் நோய் காக்கைக்குத் தெரியுமா” என்று கூறுகிறார்களோ? :)))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/21/2010

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் 21.11.2010

தமிழ்மணத்துக்கு என்னாயிற்று? தன்னிச்சையான இற்றைப்படுத்தல் இல்லை. இது சம்பந்தமாக நான் அளித்த ட்வீட்டுகள்
மாயவரத்தானைத் தவிர வேறு யாருமே கண்டுகொள்ளவில்லை. எல்லோருக்கும் இப்பிரச்சினை பற்றி ஏற்கனவேயே தெரியும், ஆகவே யாரும் இது ஓல்ட் நியூஸ் எனக்கண்டு கொள்ளவில்லை என நினைக்கிறேன். இப்போது ட்வீட்டுகளைப் பார்ப்போம்.

டோண்டு
தமிழ்மணத்துக்கு என்னாயிற்று? தன்னிச்சையான இற்றைப்படுத்தல் இல்லை. தேவையானால் நாம்தான் அதை செய்ய வேண்டியிருக்கிறது.

மாயவரத்தான்
@dondu1946 இம்மாம் பெரிய பதிவு போடுற நீங்க இன்னும் ஒரு நிமிஷத்திலே அதையும் செஞ்சா என்னவாம்?! ;)

டோண்டு
@mayavarathaan செய்யலாம்தான், செய்யவும் செய்கிறேன். ஆனால் என்ன ஆச்சு என்கிற தகவலும் முக்கியம்தானே.

டோண்டு
கூடவே தமிழ்மணத்தில் பதிவுகளை இணைக்க முடியவில்லை. என்ன நடக்கிறது இங்கே?

டோண்டு
பின்னூட்டங்களை இற்றைப்படுத்துவதிலும் சில முடிச்சுகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்னால் இட்டப் பின்னூட்டம் திடீரென இற்றைப்படுத்தப்படுகிறது.


மோடி - மகத்தான மன்னன்! முன்னேறும் முதல்வன்! by B.R.ஹரன்
தமிழ் ஹிந்துவில் வந்த இப்பதிவிலிருந்து நான் கோட் செய்வேன்.
உலக அளவில் வேகமாக முன்னேறும் மிகவும் சக்தி வாய்ந்த நகரங்களுள் ஒன்றாக, இந்தியாவில் முதலாவதாக, அகமதாபாத் நகரைத் தேர்ந்தெடுத்துள்ளது ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை.

உணவு உற்பத்தி, கல்வி, சுகாதாரம், நீர் ஆதாரம், மின்சாரம், விவசாயம், தொழில்துறை, மகளிர் மேம்பாடு, சமூகநலம், சாலை வசதி, அனைத்திற்கும் தேவையான கட்டுமானங்கள் என்று எல்லா துறைகளிலும் முதன்மை மாநிலமாக குஜராத் திகழ்கிறது.

கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து முதலமைச்சராக இருந்துவரும் பா.ஜ.க. தலைவர் நரேந்திர மோடி மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வது ஒன்றையே கடமையாகக்கொண்டு செயல்பட்டு வருகிறார். நாட்டில் உள்ள கல்வி, சுகாதார மற்றும் தொழில் வல்லுனர்கள் அனைவரும் அவரின் ஊழலற்ற சிறப்பான ஆட்சிமுறையைப் பெரிதும் பாராட்டுகின்றனர்.

இத்தனைக்கும் மற்ற மாநிலங்கள் போல் வருமானத்திற்காக, மக்களின் ஆரோக்கியத்தையும் ஏழைக் குடும்பங்களின் குடியையும் கெடுக்கும் மதுபான வியாபாரத்தை மேற்கொள்ளாமல், பூரண மதுவிலக்கு அமலில் இருக்கின்றபோதும் திறமையாக ஆட்சிபுரிந்து நிதிநிலையை அதிக இருப்புடன் வைத்துள்ளார் மோடி.

ஐநா சபையின் பொருளாதார மற்றும் சமூக சங்கதிகளுக்கான துறை (Economic & Social Affairs), ஒளிவு மறைவு அற்ற, பொறுப்புமிக்க நிர்வாகமும் பொதுமக்கள் சேவையும் (Better Management; Better Public Service- Improving Transparency, Accountability and Responsiveness in the Public Service Category) தந்ததற்காக உலக அளவில் இரண்டாம் பரிசைத் தந்து, மோடி அரசைப் பெருமைப்படுத்தியுள்ளது. இது இரண்டாவது முறை. முதல் முறை சென்ற ஆண்டும் ஐ.நா. பரிசு பெற்றது குஜராத் அரசு. அந்த நற்சான்றிதழைத் தன்னுடைய அலுவலகத்தில்- தன் அறையில்- மாட்டி வைத்துவிட்டு, ஆரவாரமின்றி, அமைதியாகத் தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் முதல்வர் மோடி.

இந்தியா டுடே பத்திரிகை நாடு முழுவதும் எடுத்த கருத்துக் கணிப்பின்படி, சிறந்த முதல்வர் விருதை மூன்றுமுறை வென்றுள்ளார் மோடி.

மத்திய அரசு, தனியார் ஆராய்ச்சி மையங்கள், வெளிநாட்டு அமைப்புகள், பத்திரிகைகள் என ஒட்டு மொத்தமாக மோடி 90 விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார். அனைத்து விருதுகளும் அவரின் தன்னலமற்ற மக்கள் சேவைக்காகவும் மாநிலத்தின் அனைத்துத் துறை முன்னேற்றத்திற்காகவும் கொடுக்கப்பட்ட விருதுகள் என்பது குறிப்பிடத்தக்கது. (Ref:- http://gujaratindia.com/state-profile/awards.htm )

இவற்றின் எதிரொலியாகத்தானோ என்னவோ சமீபத்தில் குஜராத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில் மொத்தமுள்ள ஆறு மாநகராட்சிகளிலும் மற்றும் நகராட்சிகள், மாவட்ட பஞ்சாயத்துகள், தாலுக்கா பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கான தேர்தல்களிலும் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸை இருக்கின்ற இடம் தெரியாமல் செய்து விட்டனர் குஜராத் மக்கள்.

குஜராத்தில் நடந்து முடிந்துள்ள உள்ளாட்சி தேர்தலிகளில் மோடியின் பிரம்மாண்ட வெற்றி எதிர்க்கட்சியான காங்கிரஸை ஒட்டு மொத்தமாக ஆட்டம் கொள்ள வைத்திருக்கிறது. மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளையும் 53 நகராட்சிகளில் 42 நகராட்சிகளையும் 24 மாவட்டப் பஞ்சாயத்துகளில் 21-ஐயும், 208 தாலுக்கா பஞ்சாயத்துகளில் 155-ஐயும் கைப்பற்றியுள்ளது பா.ஜ.க. இந்தத் தேர்தலில் பா.ஜ.கட்சிக்கு 80 சதவீத வெற்றியும் காங்கிரஸ் கட்சிக்கு 18 சதவீத வெற்றியும் மற்ற கட்சிகளுக்கு 2 சதவீத வெற்றியும் கிடைத்துள்ளன.

மோடியின் நல்லாட்சிக்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.

- பத்து வருடத்திற்கு முன்னால் 6700 கோடி ரூபாய் பற்றாக்குறையுடன் இருந்த குஜராத்தின் நிதிநிலைமை, தற்போது 500 கோடி ரூபாய் அதிக இருப்புடன் இருக்கிறது.
- அரசின் அனைத்துத் துறைகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, ஊழலற்ற சிறப்பான பணிபுரிதலால், எல்லாத் துறைகளிலும், தேசிய சராசரியை விட பல மடங்கு அதிகமான வளர்ச்சி காட்டி சாதனை செய்து வருகிறது மோடி அரசு.
- மற்ற மாநில அரசுகள் “நலத்திட்டம்” என்ற பெயரில் இலவசங்களை அள்ளி வீசும்போது, எதையுமே இலவசமாகக் கொடுக்காமல் ஏழை மக்களுக்குத் தேவையான பொருள்களை, தரமான நிலையில் நியாயமான விலையில் தடங்கல் இன்றி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் கிடைக்குமாறு செய்கிறது மோடியின் அரசு.
- குஜராத்தில் 185 சிற்றாறுகளும் 8 அழியாத ஆறுகளும் உள்ளன. இவற்றை இணைத்ததன் மூலம் நிலத்தடி நீர் பெருமளவில் அதிகரித்துள்ளது. மோடி தலைமையேற்று கடந்த 10 ஆண்டுகளில் விவசாயப் பொருளாதார வளர்ச்சி 9% ஆக (தேசிய சராசரி 2% தான்) உயர்ந்துள்ளது.
- பத்து வருடங்களுக்கு முன்னால் 2500 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்த குஜராத் மின்சார வாரியம் தற்போது 500 கோடி ரூபாய் லாபத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் மின்சாரக் கட்டணம் கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை.
- “ஜோதிக்ராம் யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் குஜராத்தில் உள்ள 18000 கிராமங்களுக்கும் 24 மணிநேரமும் 3 பகுதி (3 Phase) மின்சாரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை அமல்படுத்தச் சொல்லி இந்திய அரசு மற்ற மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்திருக்கிறது.
- மேலும், பெரும்பான்மையான மாநில அரசுகள் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் தருவதாகச் சொல்லிக்கொண்டு, பல நேரங்களில் மின்தடை மூலம் விவசாய உற்பத்தியைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கும்போது, மோடி அரசு 24 மணிநேரம் மின்சாரமும் பாசனத்திற்குத் தங்குதடையின்றி நீரும் கொடுத்து, மின்கட்டணம் கட்டாத விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கிறது. 24 மணிநேரமும் மின்சாரமும், தண்ணீரும் கிடைக்கப் பெற்று உற்பத்தியைப் பெருக்கிக்கொள்ளும் விவசாயிகள் - சந்தோஷமாக, கட்டணங்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டிச் செல்கின்றனர்.
பொதுமக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், தேங்கியுள்ள வழக்குகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், 810 புதிய நீதிமன்றங்கள் (700 தற்காலிக நீதிமன்றங்களையும் சேர்த்து) அமைத்துள்ளார். ஒவ்வொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு ஒரே வருடத்தில் தீர்க்கப்படவேண்டும் என்கிற கட்டாயமும் பின்பற்றப்படுகிறது. மாலை நேர நீதிமன்றங்களும் நடத்தி, வழக்குகளை விரைவாக முடிக்கிறது குஜராத் அரசு. உச்ச நீதிமன்றம் மாலை நேர கோர்ட்டுகளை நடத்தச்சொல்லி மற்ற மாநிலங்களுக்கும் பரிந்துரை செய்திருக்கிறது.
அரசு, தொழிலாளர் நலனைப் பாதுகாப்பதாலும் தொழிலாளர்களுடன் நல்ல உறவு முறை பராமரிப்பதாலும் வேலைநிறுத்தங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல், ஒரு வேலைநாள் கூட வீணாகாமல் மாநிலம் நடக்கிறது.
- ”சிரஞ்சீவி” திட்டத்தின் மூலம் சிசுக்கொலைகள் முழுவதுமாகத் தடுக்கப்பட்டுவிட்டது. இத்திட்டத்தை மற்ற மாநிலங்களும், உலக வங்கியும் ஆராய்ந்து வருகின்றன.
குழந்தைகள் ஆரம்பக் கல்வி பெற அனைத்துக் கிராமங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு, அனைத்துக் குழந்தைகளும் நாள் தவறாமல் வகுப்புகளுக்கு ஆஜராவதற்கான அனைத்து வழிகளும் மேற்கொள்ளப் படுகின்றன. குழந்தைகளுக்கு சீரான சுகாதாரம், சிறப்பான கல்வி ஆகியவை கிடைக்க புதிய வழிமுறையைக் (ஒவ்வொரு குழந்தையையும் கண்காணிக்கும் விதமாக- Child Tracking System) கையாள்கிறது அரசாங்கம்.
- மகளிர் கல்வியில் 100% பெண் குழந்தைகள் பள்ளியில் படிக்கின்றன. ஆரம்பக் கல்வி முடித்தவுடன் மாணவர்கள் படிப்பை நிறுத்துவது (Drop-out rate) 40%-லிருந்து 2%-மாக குறைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 14 பல்கலைக் கழகங்கள் துவக்கப்பட்டுள்ளன. தொழிற் கல்விக்கான இடங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. கப்பல் பொறியியல் (Marine Engineering), தடயவியல் விஞ்ஞானம் (Forensic Science) போன்றவற்றிற்கான பிரத்தியேகக் கல்வி நிறுவனங்களும், மிகவும் புதிய திட்டமாக “பாதுகாப்பு-சக்தி” (Raksha Shakti) பல்கலைக் கழகம் ஒன்றும் துவங்கப்பட்டுள்ளன. தேசப்பாதுகாப்புக்கென்றே பாடத்திட்டம் அமைத்து அதற்கு ஒரு பல்கலையும் துவங்கியள்ளது மோடி அரசின் ஒப்பற்ற சாதனை. அதே போல் குழந்தைகளுக்கென்று ஒரு பிரத்தியேகமன பல்கலையும திட்டமிடப் படுகின்றது.
- இவ்வளவு நலத்திட்டங்கள் மட்டுமில்லை; வருவாய்க்காக மற்ற மாநிலங்களில் ஆறென ஓடும் குடும்பங்களைக் குலைக்கும் மதுபானம் அறவே இல்லை. மதுபானத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் இல்லாமலே இத்தனை நலத்திட்டங்களும் செயல்படுத்தியுள்ளார் மோடி.
- நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5% மட்டுமே உள்ள குஜராத் மாநிலம், தொழில்துறையில் 16% உற்பத்தியும், 16% முதலீடும், 15% ஏற்றுமதியும், 30% சந்தை ஆக்கிரமிப்பும் செய்கிறது.
ஊழலற்ற திறமையான அரசாட்சி நடப்பதால், தொழிலதிபர்கள் பலரும் குஜராத் மாநிலத்தில் முதலீடு செய்வதை விரும்புகின்றனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் கட்டுமானங்களையும் வேகமாகவும் சிறப்பாகவும் செய்து கொடுப்பதால், அவர்கள் மோடியின் குஜராத் மாநிலத்தில் விரும்பி முதலீடு செய்கின்றனர். டாடா நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலை துவங்குவதற்குத் தேவையான அனைத்து வேலைகளையும் இரண்டே நாள்களில் குஜராத் அரசு முடித்து கொடுத்ததே ஒரு சிறந்த உதாரணம்.
நன்றி: தமிழ் ஹிந்து


மீதி விஷயங்கள் மற்றும் பின்னூட்டங்களை அங்கு சென்று பார்த்துக் கொள்ளலாம்.

மீண்டும் மார்க்கச்சுகள் தொழிற்சாலையில் ஜெர்மன் துபாஷியாக அசைன்மெண்ட்
இது பற்றி நான் இட்ட முந்தையப் பதிவு தையல் மெஷினை இயக்கி தைப்பவர்களுக்கு அளிக்கும் பயிறசிக்காக வந்த இரு ஆஸ்திரிய தொழில்நுட்ப நிபுணிகளுக்காக ஜெர்மன் துபாஷியாகச் சென்றதைக் குறிக்கிறது.

திடீரென 17-ஆம் தேதி டெலிஃபோன் அழைப்பு வந்தது. 18, 19 மற்றும் 20-ஆம் தேதிகளுக்காக மீண்டும் கூப்பிட்டனர். நானும் சென்றேன். ஆனால் இம்முறை மெஷிகளை பரமாரிக்க வேண்டிய மெக்கானிக்குகளுக்கான பயிற்சி. இப்போது வந்தது இரு ஆண்கள். மெக்கானிக்குகள் அத்தனைப் பேரும் ஆண்களே. போன முறையோ தைப்பவர்கள் அனைவருமே பெண்களே. இந்த வேலை பங்கீடு இயற்கையாகவே அமைந்து விட்டது. ஏன், பெண்கள் உடையைத் தைக்கும் ஆண் தையற்காரர்கள் பிரபலம் ஆயிறே. அதே போல பெண் மெக்கானிக்குகளும் உண்டுதானே. ஆனால் இங்கே அம்மாதிரி இல்லைதான்.

சும்மா சொல்லக்கூடாது, நம்மூர் மெக்கானிக்குகள் கற்பூரம் மாதிரி எல்ல விவரங்களையும் பிடித்துக் கொள்கிறார்கள். அவர்கள் பிறகு கேட்கும் கேள்விகளில் ஜெர்மானியர் சற்றே திக்குமுக்காடினர். சிலவற்றுக்கு வெகு நேரம் யோசனை செய்ய வேண்டியிருந்தது. இங்குதான் ஒரு சராசரி ஐரோப்பிய தொழிலாளியும் இந்தியத் தொழிலாளியும் மாறுபடுகின்றனர் எனத் தோன்றுகிறது. நம்மவர்கள் கொடுத்த வேலையுடன் நின்று விடாது சம்பந்தப்பட்ட பிற விஷயங்களையும் கவனிக்கின்றனர். ஆனால் ஐரோப்பாவிலோ சொன்ன வேலையை சொன்னபடியே முடித்தாக வேண்டும் என்ற கட்டாயம் என்று எனக்குப் படுகிறது.

நம்மவர்கள் பலாபட்டறை வேலை செய்வதென்னவோ உண்மைதான். இது பற்றி மணியன் அவர்களும் தனது “இதயம் பேசுகிறது-ஜப்பான் பயணம்” என்னும் புத்தகத்தில் ஒரு ஜப்பானிய நிபுணரின் உதாரணத்துடன் விளக்கியுள்ளார். அதாவது நகர லே-அவுட் தயாரிப்பதில் நிபுணரான அவரிடம், சற்றே வேறுபட்ட விஷயம் பற்றிக் கேட்க அவர் குழம்பி விட்டார்.

அதே சமயம் இந்தியாவில் ஒருவர் காலையில் வக்கீலாக வேலைக்கு செல்கிறார். அதை வெற்றிகரமாக செய்கிறார். மாலையில் நாடகங்கள் போடுகிறார், அனைத்தும் வெற்றி நாடகங்கள். கூடவே ஒரு பத்திரிகையையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என அவர் கொடுத்த உதாரணங்கள் சோ அவர்களை குறித்துத்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/18/2010

டோண்டு பதில்கள் 18.11.2010

சுமார் 20 கேள்விகள் அல்லது ஒரு வாரத்துக்கு ஒரு முறை (வழக்கம்போல வியாழன் விடியற்காலை 5 மணிக்கு), எது முதலில் வருகிறதோ, அப்போது டோண்டு பதில்களை வெளியிடலாம் என நினைக்கிறேன். இப்போது நேரடியாகவே கேள்விகளுக்குச் செல்வோம்.

LK
கேள்வி-1. ராசா பதவி விலகத் தேவை இல்லை என்று சிதம்பரம் கூறி இருக்கிறார். மேலும் நேற்றைய செய்திப்படி பதவி பறி போகும் நிலை இன்று அவ்வாறு இல்லை என்று ஒரு தகவல். இடையில் முதல்வர் குடும்ப உறுப்பினர் சோனியாவிடம் பேசியதாக ஒரு செய்தி.
CAG ரிப்போர்ட் படி ஒருத்தர் பதவி விலகத் தேவை இல்லை. அந்த ரிப்போர்ட் மதிப்பற்றது என்று சொன்னால் அப்படிப்பட்ட துறை எதற்கு? இதில் உங்கள் கருத்து என்ன

பதில்: இதில் வெறுமனே இரட்டைப் பரிமாணத்தில் பார்க்கலாகாது. முப்பரிமாணம், தேவைப்பட்டால் அதற்கு மேலும் எண்ணிக்கையில் அதிகமான பரிமாணங்களில் (கணிதவியலில் அம்மாதிரி பரிமாணங்கள் சாத்தியமே). அரசியலில் எந்த ரிப்போர்ட் எப்போது உபயோகத்துக்கு வரும் என யார் சொல்ல முடியும்? பின்னால் ராசா பாதுகாப்பு வளையத்திலிருந்து விலகினால் அவரை பின்னோக்கி இழுக்க அவை பயன்படுத்தப்படும்.

இதற்கு முன்னுதாரணம் எனப் பார்த்தால் 1972- வாக்கில் எம்.ஜி.ஆர். அப்போதைய திமுக அரசை எதிர்த்து புகார்களை கவர்னரிடம் தர அவை கிடப்பில் அச்சமயத்துக்கு போடப்பட்டன. ஆனால் 1976-ல் திமுக மந்திரிசபை டிஸ்மிஸ் ஆனதும் தூசு தட்டி எடுக்கப்பட்டன. சர்காரியா கமிஷன் உருவாயிற்று.

பின்சேர்க்கை: இக்கேள்வி வந்த உடனேயே பதிலை எழுதி வைத்து விட்டேன். அப்போது ராஜா பதவியிலிருந்து இன்னும் விலகவில்லை. ஆனால் இப்போதைய நிலை வேறு. ராஜாவை ஒரு சாமானியன் வீழ்த்தி விட்டார்.

மதுரை சரவணன்
கேள்வி-2: மேற்கண்ட கேள்வியின் தொடர்சியாக அப்படி ராசா பதவி விலகினால் அ.தி.மு.க காங்கிரஸ் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உண்டா...?
பதில்: அது ராசாவின் பிரயோசனத்தைப் பொருத்துள்ளது. ராசா மட்டுமே சம்பாதித்திருப்பார் என நம்புவதற்கில்லை. பலருக்கு பங்குகளும் சென்றிருக்கும். காங்கிரசும் இதில் அப்பாவி அல்ல. எல்லாமே கூட்டுக் களவாணிகள்தான்.

ஆனால் ஒன்று அப்படி அதனால் திமுகவுடன் பிரிவு வந்தால் காங்கிரசுக்கு அதிமுகாவை விட்டால் வேறு போக்கிடம் தமிழகத்தில் இல்லை.

முதல் கேள்வியின் பின் சேர்க்கைதான் இங்கும்.

ரிஷபன்Meena
கேள்வி-3: என் வீட்டில் இது போல நடந்து, அப்போ குற்றவாளியை போலீஸ் என்கவுண்டர் செய்தாலும் அதை எதிர்பேன் என்று உதார்விடுபவர்கள், பின்னூட்டத்தில் ஒருவர் சங்கடமான கேள்வி கேட்டால் அவரைக் கடித்துக் குதறிவிடுவது ஏன்?
பதில்: இதை ஒரு சிறு உதாரணத்துடனேயே விளக்குகிறேனே.
ஒரு கம்யூனிஸ்டை கேட்ட கேள்விகளும் அவனது பதில்களும்:
கே. எல்லாவற்றையும் பங்கு போடணும்கறயே, உன்னிடம் இரண்டு வீடுகள் இருந்தால் ஒரு வீட்டை சமூகத்துக்கென தருவாயா?
ப: தருவேன்.
கே: இரண்டு கார்கள் இருந்தால்?
ப: தருவேன்.
கே: இரண்டு மாடுகள் இருந்தால்?
ப: கண்டிப்பாக தருவேன்.
கே: இரண்டு சொக்காய்கள் இருந்தால்?
ப: தர மாட்டேன்.
கே: ஏன்?
ப: ஏன்னாக்க என்னிடம் நிஜமாகவே இரண்டு சட்டைகள் இருக்கே.
புரியுதா?

பார்வையாளன்
கேள்வி-4: ஆங்கில மொழியைப் பள்ளியிலிலிருந்தே படிக்கிறோம்.. பல கோச்சிங் வகுப்புகளுக்கும் சென்று அந்த மொழி அறிவை வளர்க்கிறோம். இது போன்ற வசதிகள் இல்லாமல், ஜெர்மன் ஃபிரென்ச் போன்ற மொழிகளை, குறுகிய கால பயிற்சியில் மட்டும் கற்க முடியுமா?
அப்படியே கற்றாலும், ஆங்கிலத்தில் கிடைக்கும் நிபுணத்துவம் அதில் கிடைக்குமா?

பதில்: என்ன அப்படி கேட்டு விட்டீர்கள்? அதுவும் என்னிடமேயா?

ஜெர்மனுக்கு மேக்ஸ் ம்யுல்லர் பவன், பிரெஞ்சுக்கு அல்லியான்ஸ் பிரான்ஸேஸ் ஆகிய நிறுவனங்கள் இருக்கும்போது அந்த மொழிகளை அமோகமாகக் கற்கவியலுமே.

நானாவது ஜெர்மனில் எனது இந்த நிலைக்கு வர இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொண்டேன். அதையே மேக்ஸ் ம்யுல்லர் பவன் பூனாவில் ஓராண்டிலேயே பெற முடியுமே. என்ன, அங்கேயே இருந்து ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டும். டே ஸ்காலராக பூனாவில் வசித்த வண்ணம் படிக்க முடிந்தாலும், ஹாஸ்டலில் தங்குவதே உத்தமம்.

இரு மொழி மையங்களிலுமே அந்தந்த மொழி மிக நூதனமான முறையில் கற்பிக்கப்படுகிறதே. இது பற்றி நான் இட்டப் பதிவை பாருங்களேன். எனது சொந்த அனுபவங்களை (இன்றும் நினைவு கூர்ந்தால் அவை இன்பமே அளிக்கின்றன) குறிப்பிட்டுள்ளேன்.

கேள்வி-5: பல போராளிகள், நல்லவர்கள், அப்பாவிகள் கொல்லப்படும்போது அதை கண்டு கொள்ளாத அறிவு ஜீவிகள், சமூக விரோதிகள் கொல்லப்படும்போது அதீதமாக உணர்ச்சி வசப்படுவதற்கான உளவியல் காரணங்கள் என்ன ?
பதில்: விவிலியத்தில் வரும் பிராடிகல் சன் கதையில் தந்தை பாவங்கள் செய்த மகனையே அதிகம் ஆதரிக்கிறார். நல்ல மகனை அவ்வளவாகக் கண்டுக் கொள்வதில்லை. அதற்கு அவர் கூறும் காரணங்கள் என்னவோ வலுவானவையே.

ஆனால் அந்த தகப்பனின் ரேஞ்சுக்கு இந்த அறிவுசீவிகள் தங்களைக் கற்பனை செய்து கொள்கின்றனர் என்றுதான் எனக்குப் படுகிறது. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதை.

எனக்கென்னவோ கவுண்டமணி ஒரு படத்தில் பம்ப் ரிப்பேர் செய்யும் தன் மேல் பெயிண்ட் டப்பாவை போட்டு சட்டையை சிவப்பாக்கிய செந்திலை கிணற்றில் தள்ளிவிட்டு “ஒரு சொட்டை நாய் செத்துப் போச்சு டோய்” எனக் கத்துவதே அதிகப் பாந்தமாக இருக்கிறது. பை தி வே, படத்தின் பெயரை யாராவது சொல்லுங்கப்பூ!

கேள்வி-6: எந்திரனில் ரஜினியின் நெகடிவ் கேரகர்தான் அதிகம் ரசிக்கப்பட்டது.. இப்படி நெகடிவ் கேரக்டர்களை ரசிக்கும் மனோபாவம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானதா, அல்லது உலகம் முழுதும் இப்படித்தானா?
அறிவு ஜீவிகள் என தம்மை கருதிகொள்ளுவோர் இதே சினிமா மனோபாவத்தில்தானே இருக்கிறார்கள்..

பதில்: நல்லவர்கள் பலசமயங்களில் போர் அடிப்பார்கள். யுதிஷ்டிரரை பலருக்கு பிடிக்காது, ஆனால் துரியனைப் புகழவார்கள். அது அப்படித்தான், தமிழர்களுக்கு மட்டுமே உரித்தான குணம் இல்லை.

கேள்வி-7: இலங்கையில் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டபோது ஏற்படாத அதிர்ச்சி , பாலியல் போராளி திரு. மோகன்ராஜ் கொல்லப்பட்டபோது ஏற்பட்டதற்கு தமிழர்களின் நெகடிவ் வொர்ஷிப் தான் காரணம் என நினைக்கிறேன்.. (அவருக்கு சட்டப்படி தூக்கு தண்டனை விதிதாலும், நம் மக்கள் உணர்ச்சியில் கொந்தளித்து இருப்பார்கள்) இந்த நெகடிவ் வொர்ஷிப் பற்றி உங்கள் கருத்து?
பதில்: மோகன்ராஜ் விஷயத்தில் கோவை மக்கள் பட்டாசுகள் கொளுத்தி கொண்டாடினார்கள் இந்தச் சாவை என்றுதானே படித்தேன்.

கேள்வி-8: 1. சாதாரண நிலையில் இருக்கும்போது பொதுஜனத்தோடு இணைந்து இருக்கும் நாம், சற்று வசதி வந்ததும், மக்களுக்கு அப்பாற்பட்ட அறிவு ஜீவிகளாக நம்மை நினைத்து கொள்ள ஆரம்பிப்பது ஏன்?
பதில்: இதில் பல நீரோட்டங்கள் உள்ளன. உயர்ந்த நிலைக்கு சென்ற பலர் தங்கள் பழையவாழ்க்கையை ஓர் அவமானமாகவே நோக்குகின்றனர். ஆகவே அதை நினைவுபடுத்தும் சாதாரண மக்களை மறக்கின்றனர்.

கேள்வி-9: ழ என்ற எழுத்து தமிழின் சிறப்பு எழுத்து என்பது போல, நீங்கள் அறிந்த மொழிகளின் தனிப்பட்ட எழுத்து அல்லது தனிப்பட்ட தன்மை என்ன?
பதில்: உச்சரிக்கும் எல்லா சொற்களுக்கும் எழுத்துவடிவம் இருந்தால், எழுதியதை உச்சரிப்பது எளிது. ஆனால் ஆங்கிலம் போன்ற மொழிகளில் வெறுமனே 26 எழுத்துக்கள் உள்ளன. ஆகவே அம்மொழிச் சொற்களை சரியாக உச்சரிக்க பல காலம் பயிற்சி தேவைப்படுகிறது. அந்த வகையில் தமிழில் ழ இருக்கிறது. ஆங்கிலத்தில் அதற்கு la அல்லது za இருக்கிறது. ஆனால், தேவநாகரியில் இருக்கும் ga, gha, ka & kha போல தமிழில் இல்லையே. வெறும் க தானே இருக்கிறது? Gopal என்பதை தமிழில் கோபால் என எழுதி, Kobal என்று கூப்பிடுபவர்களும் உண்டு.

கேள்வி-10: கடவுள் இருக்கிறார் என சிலர் நம்புகிறார்கள்.. இல்லையென சிலர் நம்புகிறார்கள்...
கடவுளைப்பற்றி எந்த கருத்தும் இல்லாமல் இருக்க மனிதனால் ஏன் முடியவில்லை?

பதில்: எப்படிப்பட்ட நாத்திகனும் ஓர் தினம் கடவுளை நம்ப முற்படுவான், அல்லது கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும் என தசாவதாரக் கமல் போலவும் பேசுவான்.

அதே போல ஊரறிந்த ஆத்திகனும் ஒரு நாள் சாமியாவது பூதமாவது என்றுக் கூட கூறியதும் நடந்துள்ளது. எல்லாம் அவன் செயல்.


அருண் குமார்
கேள்வி-11: 1. +2 க்கு ஒரு வருடம் நீடிப்பு என்று சொன்னால் எப்படி சொல்லாம்? ஒரே கண்டிசன் +3 ன்னு சொல்ல கூடாது...
பதில்: இதில் என்னக் குழப்பம்? அப்போதும் பிளஸ் 2-தான். ஏனெனில், பிளஸ் 2-ல் பெயில் ஆகிவிட்டால், கம்பார்ட்மெண்டாகவோ, அல்லது முழுசாகவோ மீண்டும் பரீட்சை எழுத வேண்டியிருக்கும் அல்லவா? அதுவும் பிளஸ் 2-தானே, ஓராண்டுக்கு மேலும் நீட்டிக்கப்படுகிறதே?

கேள்வி-12: ஏன் newton third lawக்கு அப்புறம் வேறு எந்த lawவும் வரவில்லை..நியூட்டன் போடா ஜாட்டான் என்று சொல்லிவிட்டாரா?
பதில்: அப்படியெல்லாம் சொல்ல அவர் என்ன டோண்டு ராகவன் மாதிரி ப்ரொஃபஷனலா, ஃபீஸ் வாங்கிக் கொண்டு மட்டும் விதிகளைக் கண்டுபிடிக்க?:)

மேலும், மூன்று விதிகளிலேயே தாவு தீர்ந்து, பல ஆண்டுகள் பிடித்திருக்குமாக இருந்திருக்கும். அதிலும் இந்த விதிகளை முன்முடிவாகக் கொண்டு அவர் செயலாற்றவில்லை. அவரது ஆண்டுக்கணக்கான ஆராய்ச்சிகளில் கண்டறிந்ததை தொகுத்தே அவை வந்தவை.

நியூட்டனின் நான்காவது விதி புவியீர்ப்புவிசை சம்பந்தமானது என்று கூறுகின்றனர். ஆனால் அதற்கு எண் தரப்படவில்லை என்றும் அறிகிறேன்.

ஆனால், சமீபத்தில், நியூட்டன் மூன்று விதிகளுக்கு அப்பால் நான்கு என்ன, அதற்கு மேலும் விதிகளைக் கண்டுகொண்டதாக ஆராய்ச்சியாளர்களில் ஒரு கோஷ்டி சொல்லித் திரிகிறது. ஏதோ ஒரு காரணத்தால் அது ஆவணங்களிலிருந்து நீக்கப்பட்டது என்றும் பலர் கூறுகின்றனர். அதை அப்புறம் பார்ப்போம். முதலில் நியூட்டனின் நான்காவது விதி என்னவாக இருக்கும்? பல கிண்டலான விடைகள் உண்டு.

அவற்றில் ஒரு விடை (being implied):
ஏதாவது தவறாக நடக்க வேண்டும் என்றால் அது நடந்தே தீரும். (ஆனால் இதை Fetridge's law என்றல்லவா கூறுவார்கள்)? இதற்கான வீடியோ இங்கே உள்ளது.

ஒரு தருணத்தில் அயல்கிரகவாசிகள் அதை நீக்கின என ஒரு குழுவினரும், அரசே அதை செய்தது என இன்னொரு குழுவும் கூறுகிறது. நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இதை நம்புவர்களும் உண்டு. ஏன் அரசு அவ்வாறு செய்ய வேண்டும் என்றால், அதற்கான காரணம் இன்னும் அபத்தமாக உள்ளது.

சதுரங்க ஆட்டத்துகான இணைய பக்கங்கள் ஒத்துக் கொள்ளாத இன்னொரு விடை என்னவென்றால், செஸ் ஆடுபவர் கோபமாக இருந்தால் எதிராளியின் காய்களை வெட்டுவதற்கான மூவ்ஸ்களை ஆராய்ந்து தேர்வு செய்த பின்னால், ஆக்சுவலாக வெட்டும்போது காய்களை அதிக வேகத்தில் நகர்த்துவார்கள் என்றும் கூறப்ப்படுகிறது.

இன்னும் ஒரு வெர்ஷன்: "Loose motion cannot be done in slow moton".

நான் ஓரிடத்தில் படித்தது, இதையும் நியூட்டனின் நான்காவது விதிக்கு உதாரணமாகத் தந்தார்கள்: “மிக வேகமாகச் செல்லும் ஒரு பெண் வழியில் நிலைக்கண்ணாடி ஏதும் வந்தால் நிச்சயம் நின்று பார்த்து லிப்ஸ்டிக்கை சரிசெய்து விட்டுத்தான் மேலே நகர்வார்”.

கேள்வி-13: Krishnakumar
In reading all the replies of Shri.Raja to Honurable PM Manmohan singhji, Raja always refers FCFS ie First come first serve as First Cum First Serve. Who cummed on whom? Or is he trying to make Manmohan rememeber something that cum-med before?

பதில்: நீங்கள் கேட்டதைப் பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டது. சட்டென வெரிஃபை செய்து பார்த்ததில் First Cum First Serve என்னும் சொலவடை நியூஸ் ரிப்போர்டுகளில்தான் அதிகம் வந்திருக்கிறது. அதை ராஜா எங்கும் எழுத்து ரூபத்தில் தரவில்லை என்றுதான் நினைக்கிறேன். அப்படி அவரே தந்திருந்தால் அதற்கான சுட்டியை யாராவது தாருங்கள் அப்பூ.

இதற்கு காரணங்களாக நான் கருதுவது பின்வருமாறு, அதாவது அவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவை ஒன்றாக இயங்கலாம்.
1. எழுதியது யாராக இருந்தாலும் அவர்களுக்கு Cum என்பதற்கான கெட்ட வார்த்தை அர்த்தம் தெரிந்திருக்காது.
2. ஆனால் சிலருக்கு அது தெரிந்தும் இருக்கலாம்.
3. ஒரு வேளை அந்த கண்ணறாவியும் எங்காவது ஏதேனும் ஒரு காண்டக்ஸ்டில் நிகழ்ந்தும் தொலைத்திருக்கலாம். அது மட்டும் உண்மையானால் அது ரொம்பவும் காஸ்ட்லி Cum! :))))))

ஒரு சிறு டைவர்ஷன்: CPWD-ல் நான் இருந்தபோது நடந்தது.

ஒப்பந்தக்காரருக்கான பில்கள் அனுப்பும்போது கவரிங் லெட்டர் என்பதன் வாசகங்கள் ஒரு டெம்பிளேட் போல மனதில் அமைந்து விட்டன. உதாரணத்துக்கு:

Please find herewith in triplicate, the cc3 and final bill for the work of .... (cc --> contractor current) என்று வாசகம் ஆரம்பிக்கும். பிறகு என்னென்ன இணைத்துள்ளோம் என்றெல்லாம் எழுதி அனுப்ப வேண்டும்.

இதிலும் ஒரு குறும்பு செய்தேன். அதாவது, மேலே கூறிய வாசகத்தை இவ்வாறு மாற்றினேன்: Please find herewith in triplicane, the cc3 and final bill for the work of .... என்று மாற்றினேன். அவ்வாறு பல பில்கள் சென்றிருக்கின்றன. ஒரு தடவை கூட என்னை ஏண்டா பாவி இப்படியெல்லாம் படுத்துகிறாய் என்று யாரும் கேட்கவில்லை.

பிறகு பல ஆண்டுகள் கழித்து சம்பந்தப்பட்ட க்ளெர்க்கிடம் இதை கேட்க, அவர் கூறினார், "சார் எனக்கு இது முதலிலேயே கண்ணில் பட்டது, ஆனால் ராகவன் சார் தப்பாக எழுத மாட்டார், ஆகவே எனக்குத்தான் தெரியவில்லை என விட்டு விட்டேன்" என்று கூற. நான் கொஞ்சம் ஃபீலிங்ஸாகி விட்டேன்.

அது ஒரு தமாஷ் காலம்.


Gopi Ramamoorthy
கேள்வி - 14: Paul Gauguin என்ற ஓவியரைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். இதில் Gauguin என்ற வார்த்தைக்குத் தமிழ் transliteration கொடுங்கள். மிக்க நன்றி.
பீஸ் எல்லாம் கிடையாது! Paul Gauguin பற்றி எழுதும் பதிவில் உங்களுக்குப் பெரிய கிரெடிட் உண்டு (தம்பிடி பிரயோஜனம் கிடையாது அதனால் உங்களுக்கு என்ற போதிலும்!)

பதில்: Eugène Henri Paul Gauguin என்பவர் பெயரை தமிழில் எழுத வேண்டுமானால், யூஜேன் ஆன்ரி போல் கோகங் என்று எழுத வேண்டும். அதுவும் யூஜேன் மற்றும் கோகங் என்பவை முற்றிலும் சரியான உச்சரிப்பு இல்லைதான், இருப்பினும் இவற்றை விட்டால் வேறு வழி இல்லை. ஆகவே ஒரே ஒரு முறை மட்டும் தமிழ் எழுத்துக்களில் பெயரை தந்து விட்டு மீதி இடங்களில் மரியாதையாக Eugène Henri Paul Gauguin என்று குறிப்பிடுவதே பத்திரமானது. உங்கள் பதிவு எழுதி பப்ளிஷ் ஆனதும் சுட்டியை அனுப்பவும்.

மீண்டும் பிறகு சந்திப்போமா, கேள்விகள் வந்தால்?

அன்புடன்,
டோண்டு ராகவன்
முக்கிய அறிவிப்பு: வாடிக்கையாளர் இடத்துக்கு துபாஷி வேலையாக செய்வதால் காலை 0545 முதல் மாலை 7 மணி வரை கணினி அருகில் வரமாட்டேன். ஆகவே பின்னூட்டங்கள் மட்டுறுத்துவது தாமதமாகும்.

11/17/2010

எல்லாம் சரிதான் இனி நடக்க வேண்டியவை என்ன என்பதைப் பார்ப்போமே!

2-ஜி ஊழல் எல்லாம் நடந்து முடிந்துபோன கதை, அதை இனிமேல் மாற்றமுடியாது என்றா கூறப்போகிறார்கள்? தவறான தகவல் அளித்து பெறும் சலுகைகள் விஷயம் தெரிந்த பின்னால் சர்வசாதாரணமாக ரத்து ஆகின்றனவே.

இங்கு மட்டும் ஏன் இப்படி? இப்போது ராசா அளித்த லைசன்ஸ்கள் செல்லாது என அறிவித்தால் என்ன ஆகும்? யாருக்கு என்ன காம்ப்ளிகேஷன் வரும்? லைசன்ஸ் எடுத்த பினாமி கம்பெனிகள் பாதிக்கப்படும் என நினைக்கிறேன், அவ்வளவுதான்.

இதையெல்லாம் பொருளாதாரம், சட்டம் ஆகிய விஷயங்களில் அவ்வளவாக பரிச்சயமில்லாத டோண்டு ராகவனே நினைக்கும்போது நினைக்க வேண்டியவர்கள் நினைக்காமலா இருந்திருப்பார்கள், என என்னையே நான் கேட்டுக் கொண்டு கூகளிட்டால் கிடைத்தது இந்தச் சுட்டி; ட்ராய் அமைப்பு 2-ஜி லைசன்ஸை கேன்சல் செய்வது பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, வயிற்றில் பாலை வார்த்தாற்போல உள்ளது.

பயனியர் டைம்ஸின் போர் வீணாகவில்லை. சண்டையை கோர்ட்டுக்கு எடுத்துச் சென்ற சுப்பிரமணியன் சுவாமி பாராட்டுக்கு உரியவர். 16 மாதங்களாக கேள்விகளுக்கு பதிலேதும் சொல்லாமல் கல்லுளிமங்கத்தனமாய் செயல்பட்ட பிரதம மந்திரி கண்டனத்துக்குரியவர். அது சரி எல்லோருமே நரேந்திர மோடியைப் போல ஊழலன்றி இருக்க முடியுமா? குஜராத்தியர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

இந்த லைசன்ஸை நம்பி ராசாவின் பினாமி கம்பெனி ஷேர்களை வாங்கிய பணமுதலைகள் ராசாவை “கவனித்துக்” கொள்வார்க்ள் என மனப்பூர்வமாக நம்புகிறேன். குருவி படத்தில் விஜய் ஏமாற்றுப் பேர்வழி வீட்டு கதவை பொது மக்களுக்குத் திறந்து விட்டு “சரோஜா சாமான் நிக்காலோ” என்று கூறி ஏமாற்றுப் பேர்வழிக்கு தர்ம அடி வாங்கிக் கொடுக்கும் காட்சி ஏனோ நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

யாராவது அந்த சீனுக்கு வீடியோ சுட்டி இருந்தால் கொடுங்கப்பூ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நம்மை உண்மையில் ஆள்வது யார்? - பகுதி 03

கீழே உள்ள கட்டுரை தமிழ் ஹிந்துவில் வந்தத் தொடரின் மூன்றாம் பகுதி. பலர் இதைப் பார்க்க வேண்டும் என எண்ணுகிறேன். ஆகவே இங்கும் அதை போடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி: TamilHindu.com

நண்பர் விஸ்வாமித்ரா அவர்களும் அனுமதி தந்து விட்டார். அவருக்கும் என் நன்றி.

இப்போது தொடருக்கு போவோம்.

நம்மை உண்மையில் ஆள்வது யார்? - 03
விஸ்வாமித்ரா

இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை இந்தியா எதிர் கொண்டிருக்கும் விதம் இந்தியாவின் எதிர்காலம் குறித்த பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. நாட்டின் பிரதமரிடம் தொடங்கி கடைத்தட்டு குடிமகன் வரை குடிகொண்டுள்ள அலட்சியமும், நேர்மையின்மையும், பொறுப்பற்ற தன்மையும், பேராசையும் இந்தியாவின் ஒட்டு மொத்த எதிர்காலம் குறித்து பெரும் அச்சத்தையே தோற்றுவிக்கிறது.

பிரதமர், ஆளும் கட்சி மற்றும் மத்திய அரசாங்கம்:

ஒரு சில பத்திரிக்கைகள் சொல்லுவது உண்மையானால்:

இந்தியாவை ஆளும் மந்திரிசபையில் ஒரு முக்கியமான துறையின் ஒரு முக்கியமான மந்திரி இந்தியாவின் முக்கியமான வளங்களில் ஒன்றை தனக்கும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கும், தன் கட்சித் தலைவரின் குடும்பத்தாருக்கும் பகிர்ந்து கொடுத்து விடுகிறார். எதுவுமே நடவாதது மாதிரி நான் எல்லாமே பிரதமருக்குத் தெரிவித்தே நடந்து கொண்டேன் என்றும், தான் எந்தத் தவறுமே செய்யவில்லை என்றும், தான் பதவி விலகப் போவதில்லை என்றும், பிரதமருக்குத் தெரியாமல் எதுவுமே நடந்து விடவில்லை என்றும் ஆணவத்துடனும், திமிருடனும், அலட்சியத்துடனும் யாரும் தன்னை அசைத்து விட முடியாது என்ற நம்பிக்கையுடனும் தொடர்ந்து ஊழல் செய்து வருகிறார்.

இந்தியாவின் பாதுகாப்புக்கே குந்தகம் விளைவிக்கும் ஊழல்களை இந்த மந்திரி இன்று வரை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் என்றே பத்திரிக்கை தகவல்களில் இருந்து நாம் தெரிந்து கொள்கிறோம்.

மந்திரிசபையில் உள்ள மந்திரிகளின் செயல்பாடுகள் அனைத்துக்கும் பொறுப்பேற்று அவர்களை வழி நடத்த வேண்டிய பிரதமரோ இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருந்த பொழுதிலும், அன்றாடம் பத்திரிகைகளும், எதிர்கட்சியினரும் அவரிடம் மீண்டும் மீண்டும் மீண்டும் விளக்கம் கேட்டுக் கொண்ட போதும், அவற்றையெல்லாம் காணாதவர் போல கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டு செயல் படுகிறார் என்று ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.

தனக்குக் கீழே செயல் படும் மந்திரிகளின் ஊழல்களை கண் கொண்டு பார்க்க மாட்டேன், காது கொண்டு கேட்க்க மாட்டேன், வாய் கொண்டு பேச மாட்டேன் என்று காந்தியின் மூன்று குரங்குகள் போல அமைதி காக்கிறார் பிரதம மந்திரி. அதைவிடப் பெரிய தவறாக ஊடகங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு இது: எல்லாவற்றிற்கும் மேலாக அந்த ஊழல் மந்திரி தவறு செய்யும் பொழுதெல்லாம் தனக்குக் கீழேயுள்ள புலனாய்வு அமைப்பு தன் கடமையைச் செய்ய விடாமலும் அதே பிரதமர் தடுத்து வருகிறார்.

பிரதம மந்திரியின் ஆளும் கட்சியோ தன் கட்சி உறுப்பினர்கள் தவறு செய்து மாட்டிக் கொள்ளும் பொழுது மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதுமானது, கூட்டணிக் கட்சி உறுப்பினர்களுக்கு அது பொருந்தாது என்று நினைக்கிறது. எப்படியாவது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது ஒன்றே அதன் குறியாக இருக்கிறது. அதற்காக என்ன விலையையும் கொடுக்கத் தயாராக உள்ளது.

காங்கிரஸின் அதிகாரபூர்வ பேச்சாளர் சிங்வி, ராஜா மீது எவ்வித குற்றசாட்டுக்கும் ஆதாரமே இல்லையே, எதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழுப்பூசணிக்காயையும் கொஞ்சம் கூட மனசாட்சியும் நேர்மையும் இன்றி சோற்றில் மறைக்கிறார்.

நாடு முழுவதும் தீவீரவாதமும், நக்சல் பயங்கரமும் நடந்தாலும் அவற்றையெல்லாம் அடக்க எவ்வித முயற்சியும் எடுக்காமல், தீவீரவாதிகளிடமும், பயங்கரவாதிகளிடமும் மென்மையாக நடந்து கொள்வதன் மூலம் அடுத்த தேர்தலில் தன் ஓட்டு வங்கியைத் தக்க வைப்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக தன் ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதற்காக அதன் மந்திரிசபையின் முக்கிய மந்திரி ஒருவர் அடிக்கும் கொள்ளையையும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றது.

ஆக பயங்கரவாதிகளிடம் மட்டும் இன்றி கொள்ளைக்காரர்களிடமும் காங்கிரஸ் கட்சி அனுசரணையாக இருக்கவே விரும்புகிறது. இப்படியாகப் பட்ட ஒரு கட்சியையும், பிரதமரையும் நம்பி ஓட்டுப் போடும் மக்களும் இருக்கும் வரை இந்த தேசத்திற்கு விமோசனமே கிடையாது.

அரசு இயந்திரங்கள்:

ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் எரியும் வீட்டில் பிடுங்குவது லாபம் என்ற ரீதியில் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர் கட்சிகளைப் பழிவாங்க மட்டுமே அரசு இயந்திரத்தை இந்த காங்கிரஸ் அரசால் பயன் படுத்தி வருகிறது. ஆ.ராஜாவை சிபிஐ விசாரிக்கக் கூடாது என்று தடுக்கும் அதே பிரதமரே, குஜராத்தில் மோடியின் அரசாங்கம் மீது அதே சிபிஐ அமைப்பை ஏவி விட்டுப் பழிவாங்கிக் கொண்டிருக்கிறார்.

தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள்: corruption2

ஊடகங்கள் சொல்லுவதைப் பார்த்தால், பொதுத்துறை நிறுவனங்களான டாடா போன்ற மக்கள் நம்பிக்கை பெற்ற பெரு நிறுவனங்கள் கூட நீரா ராடியா போன்ற இடைத்தரகர்களை வைத்துச் செயல் பட்டது அவர்கள் பெற்ற நன் மதிப்பை குலைத்து விட்டது என்று தெரிகிறது.

ஆளும் கட்சியிடம் தங்கள் நிறுவனங்களுக்கான சலுகைகளைப் பெற இடைத் தரகர்களைப் பயன் படுத்துவது சகஜமான ஒரு காரியம். என்றாலும் கூட பிரதமரின் உரிமையில் கூடத் தலையிடும் கீழ்த்தரமான வேலைகளை அத்தனை பெரு நிறுவனங்களும் செய்து வருகின்றன என்பது இந்த ஊழல் விசாரணை மூலமாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

ராஜாவின் அராஜகங்களை எதிர்த்து எஸ்டெல் என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டும் சுப்ரீம் கோர்ட் வரை சென்று 2ஜி ஸ்பெக்ட்ரம் வழங்கல் முறைகேடானது என்று வழக்குத் தொடர்ந்தது.

ஆனால் அந்த நிறுவனத்தையும் மிரட்டி வழக்கு வாபஸ் வாங்க வைக்கப் பட்டது. அந்த நிறுவனத்தின் பிற லைசென்சுகளை ரத்து செய்யப் போகிறோம் என்று ராஜா நோட்டீஸ் அனுப்பியதால் வேறு வழியின்றி அந்த நிறுவனமும் வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டது. இருந்தாலும், ராஜா மிரட்டியதால் மட்டுமே வாபஸ் வாங்க நேர்ந்தது என்ற உண்மையை அந்த நிறுவனம் சொல்லியிருக்கிறது.

எதிர்க்கட்சிகள்:

எதிர்க்கட்சிகளின் நிலையோ இன்னும் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. 1 லட்சம் கோடி ரூபாய் என்பது பிரமாண்டமான ஒரு ஊழல். இந்த ஊழலை பிரதான எதிர்க்கட்சியான பாஜக எப்படி கையாண்டிருக்க வேண்டும்? அது நினைத்திருந்தால் பாராளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்து இந்த 2ஜி ஏலமே நடக்க விடாமல் செய்திருக்கலாம். அத்வானி சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்திருக்கலாம். ஆனால் அதை எதையுமே செய்யாமல் சம்பிரதாயமான பலவீனமான ஒரு எதிர்ப்பையே இன்று வரை காட்டி வருகிறது.

60 கோடி ரூபாய் போஃபோர்ஸ் ஊழலின் பொழுது வானமே இடிந்து விழுந்து விட்டது போல ருத்ரதாண்டவம் ஆடிய இடதுகளும் இன்ன பிற கட்சிகளும் அதை விட ஆயிரம் மடங்குக்கும் மேலான இந்த ஊழலில் லேசாக முனகுவதும் அவ்வப்பொழுது பிரதமருக்கு லெட்டர் போடுவதும் மட்டுமே தங்கள் கடமை என்று ஒதுங்கிக் கொள்கின்றன.

நாடு தழுவிய போராட்டம் எல்லாம் கிடையாது. நாளைக்கு தமிழ் நாட்டில் பிச்சையாகக் கிடைக்கும் நான்கு எம் எல் ஏ சீட்டுக்களும் இரண்டும் எம் பி சீட்டுக்களும் பஞ்சம் வந்து விடுமோ என்ற அச்சம்தான் காரணம் என்று பொதுமக்கள் எண்ணுகிறார்கள்.

தமிழ் நாட்டில் திமுக வின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் அதிமுக மட்டுமே இந்த ஊழலை தன் வாழ்க்கைப் பிரச்சினையாகக் கருதி பாராளுமன்றத்திலும் வெளியிலும் போராடி வருகிறது. அதுவும் ஊழல் செய்தது திமுக என்பதினால் மட்டுமே இந்த எதிர்ப்பு.

இதே ஊழலை லல்லுவோ, முலாயமோ செய்திருந்தால் அதிமுக கவலைப் பட்டிருக்காது.

ஜெயலலிதா இந்த ஊழலை கடுமையாக எதிர்த்து வருகிறார். அறிக்கைப் போர் நடத்தி வருகிறார். இருந்தாலும் அவரது முந்தைய ஊழல்கள் காரணமாக அவர் மீது யாருக்கும் நம்பிக்கை வருவதில்லை. இவர் மட்டும் என்ன யோக்கியமா என்ற கேள்வி உடனே எழுந்து விடுகிறது. ஜெயலலிதா தனது கூடா நட்பு மற்றும் அழுத்தங்கள் காரணமாகச் செய்ய நேர்ந்த ஒரு சில ஊழல்கள் இந்த மாபெரும் ஊழலுடன் ஒப்பிடும் பொழுது வங்கிக் கொள்ளையின் முன்னால் ஒரு சிறிய பிக்பாக்கெட் திருட்டுப் போன்றது. ஆனால் அவரது பெயர் கெட்டதும், அவர் மீதான நம்பிக்கை போனதும் போனதுதான்.

அரசியலில் செய்யும் சிறு தவறுகள் கூட ஒருவரது அரசியல் எதிர்காலத்தையே அழித்து விடும் என்பதை ஜெயலலிதா இன்று வரை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

ஊடகங்கள் தரும் இந்தச் செய்திகளின் காரணமாக கீழ்க்கண்ட கருத்து பொது மக்களின் மத்தியில் ஏற்பட்டுள்ளது:

“சுயநல காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் எதிர்க்கும் அதே நேரத்தில் ஆட்சியில் இருக்கும் திமிர் காரணமாக தாங்கள் எந்த ஊழலையும் செய்யலாம், எந்தக் கொலை பாதகங்களையும் செய்யலாம், யாரும் இந்தியாவில் இவர்களைத் தட்டிக் கேட்க உரிமையில்லை என்ற ஆணவத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியும் அவரது கட்சியினரும் அவரது குடும்பத்தாரும் செயல் பட்டு வருகிறார்கள்.”

தனது கொள்ளையை மறைக்க, தன் குடும்பத்தைப் பாதுகாக்க எவ்வளவு கீழ்த்தரமாகவும் தான் நடந்து கொள்ளலாம் என்பதை மீண்டும் மீண்டும் கருணாநிதி நிரூபித்தே வருகிறார் என்று ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.

அவரிடமிருந்து நேர்மையையும், கண்ணியத்தையும், நாட்டுப் பற்றையும், உண்மையையும் இந்த வயதில் கூட எதிர்பார்க்க முடியவில்லை என்றால் இவை என்றுமே அவரிடம் இருந்ததில்லை என்பது மேலும் உறுதியாகிறது. இனிமேலும் இவற்றை நாம் இவரிடம் எதிர்பார்க்க முடியாது.

ஒரு காலத்தில் மாநில சுயாட்சி கேட்டுப் போராடிய அதே கருணாநிதி, ஒன்றிணைந்த இந்தியாவை எதிர்த்த அதே கருணாநிதி, இன்று அதே ஒருங்கிணைந்த இந்தியாவின் மூலமாக ஒரு லட்சம் கோடி ரூபாய்களைக் கொள்ளை அடிக்க முடிந்திருப்பது இந்திய தேசிய உணர்விற்குக் கிடைத்த மாபெரும் அடி. இந்தக் கொள்ளையின் முழுப் பயனும் இவரது குடும்பத்திற்கும் கட்சிக்குமே சென்றிருக்கிறது என்பது வெள்ளிடைமலை. ராஜா ஒரு கருவி மட்டுமே என்பதை விபரம் தெரிந்த அனைவரும் நன்கு அறிவர்.

கருணாநிதி ஊழல் செய்வது இது முதல் முறையும் அல்ல, கடைசி முறையும் அல்ல. சர்க்காரியா விசாரணையின் பொழுது கருணாநிதி செய்த ஊழல்கள் எல்லாம் நிரூபிக்கப் பட்டன. பின்னர் இதே காங்கிரஸ் கூட்டணியால் அவை மன்னிக்கவும் பட்டன.

அப்பொழுது கருணாநிதி கேட்டார் “தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?” என்று. புறங்கையை நக்கி, முழங்கை வரை நக்கி, முழுக்கையையும் நக்கி இன்று ஒட்டு மொத்த தேனையும் குடித்து விட்டு வெறும் புறங்கையில் வழியும் தேனை மட்டும் மக்களுக்கு எச்சில் காசாக, பிச்சைக் காசாக, ஓட்டுப் போட லஞ்சப் பணமாக எறிந்து கொண்டிருக்கிறார். புறங்கையை நக்கியதெல்லாம் அந்தக் காலம்; இப்பொழுது முழுத் தேனையுமே கடத்தி விடுகிறார்கள்.

இப்படிக் கொள்ளையடிக்கப் பட்ட பணத்தைக் கொண்டுதான் கருணாநிதியால் தமிழ் நாட்டில் ஒரு நாலு கோடி வாக்காளர்களுக்கு தலைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்க முடிகிறது. இந்த ஊழல் மூலம் கிட்டிய ஆயிரக்கணக்கான கோடிகளில் வெறும் ஒரு 4000 கோடி ரூபாய்களை மட்டுமே தமிழ் நாட்டு மக்களுக்கு வாக்கரிசியாக அளித்து அவர்களின் ஓட்டுக்களை இவர் எளிதாகப் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட முடியும். மீண்டும்.

இந்த ஊழலில் கிடைத்த வருவாயில் இருந்து ஒரு சிறிய தொகையை எடுத்து மீண்டும் மக்களுக்குக் கொடுக்கும் லஞ்சமாக முதலீடு செய்து இதை விட பெரிய ஊழலில் இதை விட பெரிய தொகையை அறுவடை செய்து விடுவார்கள். இதை விட பெரிய ஊழலைச் செய்து இதை விட அதிகமாகக் கொள்ளையடிக்கலாம். இது ஒரு விபரீத சுழற்சி. இது போன்ற பெரும் ஊழல்கள் மாபெரும் ஜனநாயகப் படுகொலையில் முடிந்து தேர்தலைக் கேலிக் கூத்தாகச் செய்து விடும்.

இன்று இதை ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சிக்கே இந்த ஊழல்கள் எமனாக முடியும்.

தலித்துகள்:

தங்களது சுயநலக் கொள்ளைகளுக்கு அரசியல்வாதிகள் தலித்துகளை கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர். தங்களுக்குக் கிடைக்கும் தண்டனைகளையும், தாங்கள் பெற வேண்டிய தாக்குதல்களையும் இந்தக் கேடயங்கள் அனுபவிக்கும்படி செய்து விடுகின்றனர். கிள்ளுக் கீரை போல தலித்துகளை எப்படி வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம் என்பது அவர்களின் எண்ணம்.

அதனால்தான் இந்த ஊழலில் ராஜாவைக் காக்கும் பொருட்டு மிகக் கேவலமான, அசிங்கமான ஒரு காரியத்தையும் இந்தக் கருணாநிதி செய்துள்ளார். அதுதான் “தலித் என்பதினால் ஆதிக்கச் சக்திகள் ராஜாவை குற்றம் சாட்டுகிறார்கள்” என்று மீண்டும் மீண்டும் பிரச்சாரம் செய்வது.

கருணாநிதி சொல்வது உண்மையானால் ஏன் ஜெயலலிதாவின் மீது டான்சி முறைகேட்டில் வழக்குப் போட்டார்கள்? ஏன் நரசிம்ம ராவை குற்றம் சாட்டினார்கள்? எதனால் ராஜீவ் காந்தியை போபர்ஸ் ஊழலில் துரத்தித் துரத்தி அடித்தார்கள்? சசி தரூர் ஏன் பதவி விலகினார்? இவர்கள் எல்லாம் உயர் ஜாதி அரசியல்வாதிகள் அல்லவா? இவர்கள் எல்லோரும் தலித் அல்லவே? தலித் என்பதற்காக பாலகிருஷ்ணனுக்கு தலைமை நீதிபதி பதவி கிட்டாமல் போனதா? மீரா குமாருக்கு சபாநாயகர் பதவியை யாராவது எதிர்த்தார்களா?

கருணாநிதி பரப்பும் இந்த அவதூறை முதலில் தலித்துக்கள் எதிர்த்துப் போராட வேண்டும். அவர்களுக்கு இழைக்கப் பட்ட பெருத்த அவமானம் இந்தக் குற்றச்சாட்டு.

பத்திரிக்கைகள்/தொலைக்காட்சிகள்:

இந்த விஷயத்தில் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் நடந்து வரும் விதம் அரசியல்வாதிகளின் செயலை விடக் கேவலமாக இருக்கின்றது. முக்கியமாகத் தமிழகப் பத்திரிகைகள் இந்த ஊழலைக் கண்டு கொள்ளவேயில்லை. எந்த தினசரிகளிலும் இது குறித்த முழு விபரமோ செய்தியோ வெளியிடப் படுவதில்லை. censorship-791503

தமிழ் பத்திரிகைகளையும், டிவிக்களையுமே நம்பி தங்கள் பொதுப் புத்தியை வளர்த்துக் கொள்ளுபவர்களாகத்தான் தமிழக மக்கள் இருக்கிறார்கள். இவர்களை அறியாமையில் இருந்து மீட்க வேண்டிய ஜனநாயகத்தின் நான்காவது தூணோ இந்தக் கொள்ளையை மூடி மறைப்பதன் மூலம் இந்தக் கொள்ளைக்குத் துணை போய்க் கொண்டிருக்கின்றது.

சென்னை விமான நிலையத்தில் ராஜாவைக் கேள்வி கேட்ட பெண் நிருபர்களை ராஜாவும் அவரது அடியாட்களும் பிடித்துத் தள்ளி தாக்கியிருக்கிறார்கள்.

இருந்தாலும், தமிழக அரசின் அச்சுறுத்தல்களுக்கும் அராஜகங்களும் பயந்து நடுங்கிக் கொண்டும், அரசு வீசும் எலும்புத் துண்டுகளான அரசு விளம்பரங்களுக்கும் ஆசைப் பட்டுக் கொண்டும் நம் பத்திரிகைகள் இந்த ஊழலை ஒட்டு மொத்தமாக மூடி மறைத்து விட்டன என்பதே உண்மை.

தமிழ் மக்களின் இதயத் துடிப்பு என்று தன்னை அழைத்துக் கொள்ளும் விகடன் குழுமத்தின் ஜீனியர் விகடன் பத்திரிகையில் இந்த ஒட்டு மொத்த ஊழலின் முழுப் பரிமாணத்தையும் வெளியிடாமல் இதில் சம்பந்தப் பட்டுள்ள கனிமொழி, ராஜாத்தி அம்மையார் ஆகியோரின் பெயர்களை மறைத்து விட்டு மலிவான ஒரு கட்டுரையை மட்டும் வெளியிட்டு தன் தாழ்ந்த தரத்தை மேலும் தாழ்த்திக் கொண்டிருக்கிறது என்று மற்ற ஊடகங்களோடு ஒப்பிடுபவர்கள் எண்ணுகிறார்கள்.

ஒரு நரசிம்மராவுக்கு இரண்டு கோடி ரூபாய்கள் கொடுக்கப் பட்டது என்ற விவகாரத்திலும், ராஜீவ் காந்திக்கு 60 கோடி லஞ்சம் கொடுக்கப் பட்டது என்ற ஊழலிலும், ஜெயலலிதாவுக்கு நூறு செருப்புக்கள் இருந்தன என்பதைக் காட்டுவதிலும், நித்யானந்தாவின் அந்தரங்கங்களையும் காட்டுவதில் பேரார்வம் காட்டிய நம் தமிழகப் பத்திரிகைகள் ஊழல்களுக்கு எல்லாம் தாயான இந்த 1 லட்சம் கோடி ரூபாய் ஊழலைப் பொருத்தவரை தங்களது சகல அங்கங்கங்களையும் பொத்திக் கொண்டு இருக்கின்றன. இது இந்த ஊழலுக்கு நம் பத்திரிகைகளும் விலை போன கொடுமையைத்தான் காட்டுகின்றன.

இந்திய அளவில் இந்துத்துவ தீவீரவாதத்தை (?!) அழிக்க அவதாரம் எடுத்துள்ள செக்யூலரிஸ்டுகளான பரக்கா தத் என்ற டெலிவிஷன் பத்திரிகையாளரும், வீர் சங்வி என்ற பத்திரிகையாளரும் இந்த ஊழலில் ராஜாவை மந்திரியாக நியமிக்கும் பொருட்டு கனிமொழியின் சார்பாக தரகு வேலை செய்திருப்பதாக சிபிஐ விசாரணை உறுதிப் படுத்துகிறது. நரேந்திர மோடியைத் தூக்கில் போட வேண்டும் என்று டெலிவிஷனில் காட்டுக் கூச்சல் போடும் பரக்கா தத்தின் நேர்மை இப்பொழுது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

கேவலம் காசு வாங்கிக் கொண்டு தரகு வேலை செய்யும் ஒரு நான்காம் தர பெண்மணிதான் இவ்வளவு நாட்களும் செக்குலார் வேடம் போட்ட இந்த பரக்கா தத் என்பது இன்று அம்பலத்திற்கு வந்துள்ளது. இருந்தாலும் எந்தவித வெட்கமோ அவமான உணர்வோ தார்மீகப் பொறுப்போ இல்லாமல் ஒரு கேவலமான ப்ரோக்கர்களாக, காசு வாங்கிக் கொண்டு ஆளை அமர்த்தித் தரும் தரகர்களான பரக்கா தத்துகளும், வீர் சங்விகளும் இன்னமும் தங்களை இந்து வெறியில் இருந்து பாரதத்தைக் காக்க வந்த பரமாத்மாக்களாகக் காட்டிக் கொண்டு டெலிவிஷனில் நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதையும் இந்திய மக்கள் பார்த்து கை தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இணைய ஊடகங்கள்:

தமிழ் நாட்டின் பத்திரிகைகளும், டிவிக்களும் தான் கடும் மொளன விரதம் அனுஷ்டிக்கின்றன என்றில்லை; தமிழ் மக்களின் அறிவு ஜீவிக் குரலாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் பெரும்பாலான வலைப்பதிவர்கள் கூட இந்த விஷயத்தைப் பற்றி வாய் திறப்பதில்லை.

நித்யானந்தாவைத் தூக்கில் போட வேண்டும் என்று கதறிய தமிழ் வலைப்பதிவர்கள், பார்வதியை சிகிச்சைக்கு அனுமதிக்காததற்குக் கூச்சல் போட்ட தமிழ் வலைப்பதிவர்கள், ஒரு சினிமா வெளிவந்தால் அடித்துப் பிடித்துக் கொண்டு விமர்சனம் என்ற பெயரில் படத்தின் கதையைப் போய் எழுதித் தொலையும் தமிழ் ப்ளாகர்கள், அறிவு ஜீவித் தனம் என்ற போர்வையில் இனவெறியைப் பரப்பும் வலைப் பதிவர்கள், தமிழ் நாட்டின் முதல்வரும் அவர் குடும்பமும் ஒரு தமிழ் நாட்டு மந்திரி மூலமாக 1 லட்சம் கோடி கொள்ளையடித்தது பற்றி வசதியாகக் கண்டு கொள்ளவேயில்லை.

இதை விடக் கொடுமை தமிழில் கொஞ்சம் சிந்தித்து எழுதக் கூடிய ஒன்றிரண்டு வலைப்பதிவர்கள்கூட இதில் ராஜா ஊழல் செய்திருக்க எந்த வித முகாந்திரமுமே இல்லை என்று ஊருக்கு முன்னால் ராஜாவுக்கு நற்சாட்சிப் பத்திரம் வழங்கி விட்டிருந்தார்கள்! இன்று இவ்வளவு விஷயங்கள் வெளி வந்த பின்னால் முகத்தை எங்கே வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இட்லி வடை என்ற பதிவர் ஒருவர் மட்டும் செஸ் போட்டிகளுக்கு நடுவே இந்த ஊழல் சம்பந்தமான ஏதோ நாலு பத்திரிகைச் செய்திகளைப் போட்டு ஒப்பேத்தியிருக்கிறார். மற்றவர்களுக்கு எல்லாம் இப்படி ஒரு ஊழல் நாட்டில் நடக்கவேயில்லை.

தமிழ் ப்ளாகர்களுக்கு எல்லாம் இன்னும் நித்யானந்தாவைத் தூக்கில் போட வேண்டுமா அல்லது கழுவில் ஏற்ற வேண்டுமா என்றே இன்னும் தீர்மானம் செய்து முடியவில்லை! இதுவே ஒரு ஜெயலலிதா ஒரு லட்சம் வாங்கியிருந்தால் இன்று தமிழ் இணைய உலகமே பற்றி எரிந்திருக்கும்.

இந்திய பொது மக்கள்: 9973tressduncecap2

இறுதியாக இந்திய பொது மக்களையே நான் இந்த ஊழல்கள் அனைத்திற்கும் காரணமான குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டுவேன். கொள்ளை போவது தங்கள் சொத்து என்பதை அறியாமலேயே இந்தக் கயவர்களுக்குப் போய் மீண்டும் மீண்டும் தங்களது ஓட்டுக்களைப் போட்டு தங்களுக்குத் தாங்களே மக்களும் கொள்ளி வைத்துக் கொள்கிறார்கள். கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிந்து கொள்கிறார்கள். ஜனநாயகம் என்னும் யானை தன் தலையில் தானே சகதியை அள்ளிக் கொட்டிக் கொள்கிறது.

ஆக மத்தியிலும் மாநிலத்திலும் தங்களை ஆளும் கட்சிகள் தங்களது பணத்தை, அதுவும் 1 லட்சம் கோடிகளைக் கொள்ளையடித்து விட்டு தங்களை வளப்படுத்திக் கொண்ட அடிப்படை உண்மை கூடத் தெரியாமல் மீண்டும் அதே கொள்ளைக்காரர்களிடம் காசு வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு ஓட்டுப் போடத் தயாராகி வருகிறார்கள். ஒரு ஓட்டுக்காகக் இவர்களுக்கு கொடுக்கப் படும் பிச்சைக்காசு இவர்களிடமிருந்தே திருடப் பட்ட பணம் என்பதே தெரியாமல் அற்பப் பணத்திற்காகவும், பிரியாணி பொட்டலத்திற்காகவும் தங்கள் எதிர்காலத்தையும் தன்மானத்தையும், பாதுகாப்பையுமே அடகு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் ராஜா தன் சொந்த ஊரான பெரம்பலூருக்குச் சென்றிருந்த பொழுது கிராம மக்கள் எல்லாரும் குடிக்க தண்ணீர் இல்லை, மின்சாரம் நாள் முழுவதும் இல்லை என்று அவர் காரை மறித்துப் போராடியிருக்கிறார்கள். கோடிக் கோடியாகக் கொள்ளையடிப்பவரின் சொந்த மக்களுக்குக் குடிக்க நீரில்லை, மின்சாரம் இல்லை. கடும் கோடை வெப்பத்தில் நீரில்லாமல் மின்சாரம் இல்லாமல் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ராஜா தனது ஏ சி சொகுசுக் காரில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்க, போராடிய மக்களை போலீசார் அடித்து விரட்டியிருக்கிறார்கள். தகுதியில்லாத கயவர்களுக்கு ஓட்டுப் போட்டால் இதுதான் நடக்கும் என்பதை மக்கள் இனியாவது உணர வேண்டும். இனியாவது மக்கள் திருந்த வேண்டும்.

ஊழல் செய்யும் அரசியல்வாதிகளையே எந்தவித பொது அறிவும் இன்றி விழிப்புணர்வும் இன்றி, சமூக அக்கறையும் இன்றி, தங்கள் எதிர்காலம் குறித்த உணர்வு இன்றி, தங்கள் சந்ததியினர் குறித்த எதிர்கால பொறுப்பு இன்றி, தேசத்தின் மீது அக்கறையின்றி, சுயநலமும் அறிவின்மையும் மேலிட மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்து தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் இந்த போக்கு ஒன்றே இது போன்ற ஊழல்களின் ஊற்றுக் கண், அடிப்படை. அவர்கள் விழித்துக் கொள்ளாத வரை ராஜாக்கள் இந்தியாவைச் சுரண்டுவது நிற்கப் போவதில்லை.

பாராட்டுதலுக்கு உரிய சிலர்:

இந்த விஷயத்தில் ஆரம்பம் முதலாகவே மிகுந்த பொறுப்புணர்வுடனும், பத்திரிகையாளருக்குரிய கடமையுணர்வுடனும், தேசத்தின் மீது உண்மையான அக்கறையுடனும் இந்த ஊழலின் முழுப் பரிமாணத்தையும் புலனாய்வு செய்து நாட்டு மக்களுக்கு உண்மையை அறிவித்த ஒரே பத்திரிகை கல்கத்தா மற்றும் டெல்லியில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழான “தி டெய்லி பயனீர்” மட்டுமே.

அதன் புலனாய்வுப் பிரிவு பத்திரிகையாளரான கோபிகிருஷ்ணன் தான் இந்த ஊழலை உலகத்திற்கு அம்பலப் படுத்தியவர். இதுதான் உண்மையான புலனாய்வு முயற்சி.

பயனீர் பத்திரிகை உடனடியாக இந்த ஊழல் குறித்தான பதிவுகளை நீக்கா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக நீரா ராடியாவின் வக்கீல் நோட்டீஸ் விட்டுள்ளார். பயனீர் ஆசிரியர், “நாங்கள் சொல்வது சத்தியம், கோர்ட்டில் சந்திக்கத் தயார், மிரட்டலுக்குப் பணிய முடியாது” என்று அறிவித்து விட்டார்.

ஆட்சி தந்த ஆணவமும், செல்வாக்கும், ரவுடிகளின் துணையும், அரசு இயந்திரங்களும், பணமும் கொண்ட மாபெரும் ஆதிக்க சக்தியான ஒரு ஆ.ராஜாவை ஒரு சிறிய பத்திரிகையாளரான கோபிகிருஷ்ணன் அச்சமின்றி துணிவுடன் இந்த அளவு எதிர்த்துப் போராடி உண்மையை வெளிக் கொணர்ந்தது இன்றைய சூழ்நிலையில் மாபெரும் ஒரு சாதனையே. பயனீர் நாளிதழ் வெகுவாகப் பாராட்டப் பட வேண்டிய சேவையை இந்தியாவுக்குச் செய்துள்ளார்கள். அவர்களது துணிவுக்கும், கடமையுணர்வுக்கும் ஒட்டு மொத்த தேசமும் கடன் பட்டுள்ளது. இவர்களைப் போன்றவர்கள் இருப்பதினால்தான் இந்திய ஜனநாயகத்தின் மீது நமக்கு இன்னமும் ஒரு நம்பிக்கை இழை மிச்சம் இருக்கின்றது. வாழ்க அவர்கள் பணி.

(இந்தக் கட்டுரையும்கூட பெரும்பாலும் பயனீர் பத்திரிகையின் கட்டுரைகளின் அடிப்படையிலேயே எழுதப் பட்டுள்ளது. பயனீர் பத்திரிகையைப் பாராட்டி உங்கள் கருத்துக்களை அனுப்பி அவர்களை இந்தக் கட்டுரையைப் படிக்கும் அனைவரும் ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பயனீர் பத்திரிகையின் இணைய முகவரி: http://www.dailypioneer.com.

திரு. ஜே. கோபிகிருஷ்ணன் அவர்களின் வலைப் பக்கத்தில் இந்த ஊழல் சம்பந்தமான அனைத்து கட்டுரைகளையும் விரிவாகப் படித்தறியலாம். அவருடைய வலைப்பதிவு இங்கே. ராஜாவின் ஊழலைத் தவிர அன்புமணி ராமதாஸின் ஊழல், இந்திய ராணுவ ஊழல்கள் போன்ற பல்வேறு ஊழல்களை அம்பலப் படுத்திய அவரது புலனாய்வு கட்டுரைகள் பல அவரது வலைத் தளத்தில் படிக்கக் கிட்டுகின்றன.)

ஹெட்லைன்ஸ் டுடே டி வி, நாட்டை விலை பேசும் தரகியான நீரா ராடியாவோடு ராஜாவும் கனிமொழியும் தனித்தனியாக நடத்திய உரையாடல்களை வெளியிட்டுள்ளது. அவற்றை பதிவு செய்தது மத்திய அரசின் பொருளாதார உளவுப் பிரிவு.

இவர்களது தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுப் பதிவு செய்த டேப்புக்களை இந்த டி வி எப்படியோ பெற்று வெளியிட்டு விட்டது. இந்த உரையாடல்களை வெளியிடக் கூடாது என்று நீரா ராடியா கோர்ட்டுக்குப் போய் அவரது மனு தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. ராஜா அப்படிப் பேசவேயில்லை என்று மறுக்கிறார்; ஆனால் ராடியாவோ நாங்கள் பேசியதை எப்படி வெளியிடலாம் என்று கேட்டு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிறார்!

சுயநலக் காரணங்களுக்காகவே இருந்தாலும் கூட, அதிமுக மட்டும் எதிர்க்காமல் போயிருந்தால் இந்த ஊழல் நடந்தது கூட எவருக்கும் தெரியாமல் போயிருந்திருக்கும். அந்த வகையில், அதிமுகவின் எதிர்ப்பு செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை.

இந்த ஊழலை எதிர்த்து நீதி மன்றங்களில் போராடிக் கொண்டிருக்கும் ஒரே அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி. எதிர்க்கட்சியான பாஜக செய்ய வேண்டிய வேலையை தனி நபராக ஒரு சுவாமி செய்திருக்கிறார். அவரது கடந்த கால தவறுகளினால் அவர் மீதும் பலருக்கும் இன்று நம்பிக்கை ஏற்படாவிட்டாலும் கூட, அவரது போராட்டங்களுக்கு இந்திய மக்கள் அனைவரும் கடமைப் பட்டிருக்கிறார்கள்.

எனது நோக்கம் என்ன?

எனது இந்தக் கட்டுரையின் நோக்கமே இந்திய மக்களிடம் ஒரு சிறிய விழிப்புணர்வை ஒரு மிகச் சிறிய அளவில் ஒரு சிலரிடமாவது உருவாக்குவது மட்டுமே.

சங்கை ஊதிக் கொண்டேயிருந்தால் என்றைக்காவது ஒரு நாள் இவர்கள் காதும் கேட்காமலா போய் விடும் என்ற ஒரே நம்பிக்கையினால் மட்டுமே கோபிகிருஷ்ணன்களும், பயனீர்களும், தமிழ் ஹிந்துக்களும் இன்றும் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

என்ன செய்யப் பட வேண்டும்?

மன்மோகன் சிங்கை பிரதமராகக் கொண்டு சோனியாவால் ஆட்டுவிக்கப் படும் இந்த ஆட்சி இருக்கும் வரை ராஜா தண்டிக்கப் படப் போவதில்லை. அவர் இந்திய மக்களின் வரிப்பணத்தில் இருந்து கொள்ளையடித்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மீட்கப் படப் போவதும் இல்லை.

barsஆனால் என்றாவது ஒரு நாள் மக்கள் நலனில் அக்கறை கொண்ட, இந்த தேசத்தின் மீது உண்மையான பற்று கொண்ட ஒரு அரசு வருமானால், இந்த ஊழலுக்கு முதல் காரணமான தரகர் நீரா ராடியா, ஆ.ராஜா, அவர் கொள்ளையடித்து கப்பம் கட்டிய அவரது கட்சித் தலைவர், அவரது துணைவி, மகள், பிற குடும்பத்தினர், ராஜாவுக்கு உதவிய மற்ற தரகர்கள், பத்திரிகையாளர்கள் பரக்காதத், சங்வி, ராஜாவுக்கு உதவிய அரசு அதிகாரிகள், இவர்கள் அனைவரையும் விட இந்த ஊழலைக் கண்டு கொள்ளாமல் இருந்த அரசியல்வாதிகள் அனைவரும் விசாரிக்கப் பட்டு அவர்களது உடந்தைகள், ஊழல்கள் இந்த நாட்டு மக்களுக்கு அறிவிக்கப் பட்டு, மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப் பட வேண்டும்.

அமெரிக்கா போன்ற தேசங்களில் இவை போன்ற ஊழல்கள் வெளியில் வந்து விசாரிக்கப் பட்டு குற்றம் நிரூபிக்கப் படும் பொழுது சம்பந்தப் பட்ட குற்றவாளிகளுக்கு நூறு ஆண்டுகளுக்கும் மேலான கடும் தண்டனை அளிக்கப் படுகிறது. அதே போன்ற தண்டனைகள் இந்தியாவிலும் நடைமுறைக்கு வரவேண்டும். அதற்கான அரசியல் மாற்றத்தை மக்கள் உருவாக்க வேண்டும். இந்தக் குற்றவாளிகளுக்கு மக்களின் சக்தியினால் மட்டுமே தண்டனை அளிக்க முடியும். அதைச் செய்வது மக்களின் கைகளில் மட்டுமே உள்ளது.

ஒரு வேளை எதிர்கட்சிகளின், கோர்ட்டின் வற்புறுத்தலுக்கு இணங்கி வேறு வழியின்றி ராஜா பதவியிறங்கினாலோ அல்லது வேறு துறைக்கு மாற்றப் பட்டாலோ கூட அடுத்த ஆட்சி இவரது குற்றத்தை நிரூபித்து இவருக்கும் கூட்டாளிகளுக்கும் தக்க தண்டனை வழங்க வேண்டும். இவர் கொள்ளையடித்த பணத்தை உலகின் எந்த மூலையில் ஒளித்து வைத்திருந்தாலும் மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வந்து இந்தியாவின் அடிப்படை வசதிகளை, கல்வியை, கட்டுமானங்களை வலுப்படுத்தப் பயன் படுத்த வேண்டும்.

இதை வாசிக்கும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

நம் அனைவரிடமும் ஓட்டுரிமை என்னும் சக்திவாய்ந்த ஒரு ஆயுதம் இருக்கிறது, அதைப் பயன்படுத்தி இந்தக் கொள்ளைக்காரர்களைப் பூண்டோடு ஒழிக்க உறுதி பூணுவோம். இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் அதற்கு ஒரு ஊக்கியாக விழிப்பூட்டும் நிகழ்வாக இருக்கட்டும். இந்தக் கெடுதியில் இருந்தும் கூட ஒரு நன்மை மலரட்டும்.

இன்று இந்தியாவுக்கு ஆண்டிமுத்து ராஜா ஏற்படுத்தியுள்ள இழப்பு 1 லட்சம் கோடி ரூபாய்கள். இந்தப் பணம் “நம் ஒவ்வொருவரது உழைப்பின் பயன்” என்பதை அறிவோம். நம் வீட்டுச் சொத்து கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவது அவசியம். கொள்ளையர்களை இனம் கண்டு தண்டிப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.

பாடுபட்டு வெள்ளையர்களிடமிருந்து நாம் பெற்ற சுதந்திரம் இன்று கொள்ளையர்கள் கைகளில் சிக்கிச் சீரழிகின்றது. நம் தேசத்தின் வளங்கள் அனைத்தும் சூறையாடப்படுகின்றன. இயற்கை வளங்களிலும், பொருளாதாரத்திலும், தார்மீக கோட்பாடுகளிலும், நேர்மை நீதி நியாயங்களிலும், அறவுணர்வுகளிலும் திவாலாகிப் போன ஒரு தேசத்தையா உங்களது குழந்தைகளுக்கு விட்டு விட்டுப் போகப் போகிறீர்கள்?

சிந்தியுங்கள்.

(முற்றும்)


மீண்டும் டோண்டு ராகவன்.

இந்தக் கட்டுரையை இங்கும் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது