8/30/2010

என்ன நடக்கிறது இங்கு? மெல்லத் தமிழினி சாகும்?

இன்று ஒரு ஃபோன்கால் வந்தது. எம்.எஸ்.சி படித்த ஒருவர் பேசினார். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு தேவை என்றார். நான் விஷயம் என்ன எனக்கேட்டதற்கு அவரது பிறப்புச் சான்றிதழாம், அதை ஸ்பானிய மொழியில் மொழி பெயர்க்க வேண்டுமாம். அதற்கு முன்னோடியாக அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்தால் பிறகு ஸ்பானிய மொழிபெயர்ப்புக்காகும் என்பது அவரது கூற்று.

எனக்கு ஒரே ஆச்சரியம். பிறப்புச் சான்றிதழ் என்பது சில வரிகளே உள்ள ஒரு ஆவணம். அதை தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்க இந்த எம்.எஸ்.சி. படித்தவருக்கு தெரியாதாம். இந்த அழகுக்கு ஸ்கூலில் தமிழில்தான் படித்திருக்கிறார். காலேஜில் பாடங்கள் ஆங்கிலத்தில். இவரால் இது முடியாது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.

மேலே ஸ்பெயினில் எப்படி படிக்கப் போகிறார் எனக் கேட்டதற்கு அவர் போகுமிடத்தில் ஆங்கிலத்திலேயே சொல்லித் தருவார்களாம். இருக்கட்டும் ஸ்வாமி. ஆனால் இந்த சிறு காகிதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க துப்பில்லாதவர் என்னத்த படிச்சு, கிழிச்சுன்னுதான் சொல்லத் தோன்றுகிறது.

பலர் என்னிடம் இம்மாதிரி பிறப்புச் சான்றிதழ்களின் மொழிபெயர்ப்பை வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள்தான். ஆனால் அவை தமிழிலிருந்து நேரடியாக ஜெர்மன் அல்லது ஃபிரெஞ்சுக்கு மாற்றப்பட்டவை. அவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறது.

அதே சமயம் தமிழிலிருந்து ஆங்கிலம் அல்லது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்புக்காக என்னைக் கேட்பது பெரும்பாலும் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்துதான். அங்கு இருக்கும் ஸ்ரீலங்கா அகதிகளுக்காக அந்தந்த நாட்டின் படிவங்கள் தமிழுக்கு மார்றப்பட வேண்டியுள்ளன. ஃபிரான்ஸ் ஜெர்மனியிலிருந்து வருபவை தனி.

வேறு சில விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கட்டுரைகளுக்கு தொழில்முறை பெயர்ப்பாளர் தேவை என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

இப்பதிவை நான் இட்டதன் நோக்கமே தமிழகத்தின் இதயத்தில் ஒரு புது தலைமுறை தமிழும் காலி ஆங்கிலமும் காலி என்ற நிலைக்கு வந்துள்ளது. அவர்கள் பிளஸ் டூவில் அதிக மதிப்பெண்கள் பெற எடுத்துக் கொண்ட ஜெர்மன் மற்றும் ஃபிரெஞ்சு பற்றி கேட்கவே வேண்டாம்.ஒரேயடியாக வாஷ் அவுட்தான்.

நான் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளியில் சமீபத்தில் 1954-லிருந்து 1962 வரை படித்த காலத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் தலா 48 மாணாக்கர்களை கொண்ட மொத்தம் 10 செக்‌ஷன்களில் ஒன்றில் மட்டும் ஆங்கில மீடியம், மீதி எல்லாவற்றிலும் தமிழ் மீடியம். இப்போது அதே ஹிந்து உயர்நிலை பள்ளீயில் நிலைமை கிட்டத்தட்ட தலைகீழ் என கேள்விப்படுகிறேன்.

என்னைப் போன்றவர்களுக்கு இதனால் நல்ல மொழிபெயர்ப்பு வாய்ப்புகள் கிட்டும் என்றாலும் தமிழக இளைஞர்கள் தற்கால நிலை என் மனதை உறுத்துகிறது.

இத்தருணத்தில் தமிழகப் பள்ளிகளில் தமிழின் நிலை என்னும் எனது பதிவிலிருந்து சிலவரிகளை இங்கு தருவேன்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழுக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை என்பது ஒரு கசப்பான ஆனால் ஒத்துக் கொள்ளவேண்டிய உண்மையே. இந்த நிலை ஏன் என்பதை பார்ப்போம்.

முதல் காரணம் தமிழில் நல்ல பாடநூல்கள் வெளிவராததே. நான் 1962-ல் பள்ளியிறுதித் தேர்வு எழுதியபோது இருந்த நிலையைக் கூறுவேன். ஒன்பதாம் வகுப்புவரை தமிழிலேயே படித்து வந்த நான் பத்தாம் வகுப்பில் பொறியியலை விருப்பப் பாடமாக எடுத்துக்கொண்டபோது ஆங்கில மீடியத்துக்கே செல்ல வேண்டியிருந்தது. பொறியியல் பாடங்களுக்கேற்ற தமிழ் பாட நூல்கள் இல்லை என்பதுதான் காரணம். பொறியியல் எடுத்துக் கொள்ளாதவர்கள் கூட காம்போசிட் கணிதத்தை ஆங்கிலத்திலேயே கற்க வேண்டியிருந்தது. இதற்கும் அதுவே காரணம்.

இன்னுமொரு காரணம் மதிப்பெண்கள் அளிக்கும் முறை. என்னதான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழில் 60 மதிப்பெண்கள் போட்டாலே விசேஷம் என்ற நிலை. ஆனால் வடமொழி எடுத்துக்கொண்டால் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் சுலபம். பிற்காலத்தில் இந்த சாதகமான தன்மை ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு பாடங்களுக்கும் வந்தது. ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் பள்ளிகளில் கண்ராவியான முறையில் பிரெஞ்சு அல்லது ஜெர்மன் கற்பவர்கள் அவற்றை பிற்காலத்தில் சுலபமாக மறந்து விட்டனர். அதற்காக அவர்கள் கவலைப்படவுமில்லை. அவர்களுக்கு வேண்டியது நல்ல மதிப்பெண்கள். அவற்றின் மூலம் நல்ல கோர்ஸுகளில் இடம் கிடைத்தால் போதும். இது பற்றி பிறகு. ஆனால் தமிழில் இம்மாதிரி ஆகாது, ஏனெனில் அது நமது தாய்மொழி.

இப்போது நாம் தமிழைப் பார்ப்போம். யுத்தகால அடிப்படையில் வேலை செய்ய வேண்டும். அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் தமிழ் கட்டாயமாக சாய்சில் இருக்க வேண்டும். தமிழில் மதிப்பெண்கள் வழங்குவதில் தாராளம் காட்டப்பட வேண்டும். தமிழாசிரியர்கள் தங்களை நக்கீரன் ரேஞ்சுக்கு நினைத்துக் கொள்வது நிற்க வேண்டும்.

தமிழாசிரியர்களும் சீனியாரிட்டி அடிப்படையில் தலைமை ஆசிரியர்களாக வரவேண்டும். இது முக்கியம். பதவி வந்தாலே மரியாதையும் வரும்.

மற்றப்படி தமிழ் மீடியத்தை கட்டாயமாக்கவேண்டும் என்பது இப்போதுள்ள நிலையில் ப்ராக்டிகல் இல்லைதான். படிப்பதற்கு தேவையான அளவில் மாணாக்கர்கள் வர வேண்டும், பாட நூல்கள் பல தமிழில் வேண்டும், இத்யாதி, இத்யாதி.


அன்புடன்,
டோண்டு ராகவன்

8/29/2010

வடுவூர் துரைசாமி ஐயங்கார்

சமீபத்தில் 1962-ல் மிட்லண்ட் தியேட்டரில் ஞாயிறு காலைக்காட்சியாக சர் ஆர்தர் கானன் டாயில் எழுதிய The Hound of Baskervilles என்னும் நாவலின் திரையாக்கம் போட்டிருந்தார்கள். நானும் என் அத்தைப் பிள்ளையும் போயிருந்தோம். முதல் சீன் முடிந்ததுமே கூவினேன், “அடடா இது மருங்காபுரி மாயக்கொலை” கதையல்லவா” என்று. அப்படம் பார்ப்பதற்கு முந்தைய நாள்தான் வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய அப்புத்தகத்தைப் படித்திருந்தேன்.

போன நூற்றாண்டு இருபது முப்பதுகளில் இவர் ரொம்பவும் பிரசித்தி பெற்ற எழுத்தாளர். எனது எட்டாம் வகுப்பு ஆசிரியர் ஜயராம ஐயங்காருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். ஆனால் அதே ஜெயராம ஐயங்கார் சின்னப் பசங்கள் அவரது புத்தகங்களை படிக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு செய்தார் என்பது இப்பதிவுக்கு சம்பந்தமில்லாத விஷயம்.

திடீரென அவர் ஏன் நினைவுக்கு வந்தார்? இப்போதுதான் அவரது நாவலான “துரைக்கண்ணம்மாள் அல்லது திரிசங்கு சாஸ்திரியார்” புத்தகம் படித்து முடித்தேன். பல திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்ட நாவல். வழக்கம்போல கடைசி காட்சியில் நல்லவர்கள் சிறப்பாக வாழ, தீயவர்கள் தண்டனை பெறும் அதே ஃபார்முலா உள்ளக் கதை. அவரைப் பற்றி பதிவு எழுத கூகளிட்டு தேடியதில் சொல்வனம் இதழில் வெளியான, நண்பர் ச. திருமலைராஜன் எழுதிய இந்தக் கட்டுரை கிடைத்தது. நான் சொல்ல நினைத்த பல விஷயங்களை அக்கட்டுரை கூறுவதால் முதலில் அதிலிருந்து சில வரிகள்:

1900களின் ஆரம்பத்தில், ஆரணி குப்புசாமி முதலியாரின் நாவல்கள் மக்களிடம் புஸ்தகம் படிக்கும் ஆவலைத் தூண்ட, தொடர்ந்து ஜெ ஆர் ரெங்கராஜு என்பவரின் நாவல்கள் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. அச்சக உரிமையாளரான ரெங்கராஜூ தன் ஒவ்வொரு நாவலையும் பத்தாயிரம் காப்பிகள் அச்சடித்து விற்று தமிழ் நாவல்களுக்குப் பெரும் வாசகக் கூட்டத்தை உருவாக்கினார். ரெங்கராஜுவின் நாவல்கள் காப்பியடிக்கப்பட்ட நாவல்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவருக்குச் சிறைத் தண்டனை கிடைக்கும் வரை ரெங்கராஜு பெரும் வணிக எழுத்தாளராக இருந்து வந்திருக்கிறார். முதன் முதலில் தமிழ் நாவல்களை பெரும் அளவில் அச்சடித்து, பதிப்புத்துறை என்றொரு தொழிலை இவர் உருவாக்கினார்.

ரெங்கராஜுவைத் தொடர்ந்து அதே பாணியில் நிறைய எழுத்தாளர்கள் உருவாகி மக்களின் வாசிப்புப் பழக்கத்திற்குத் தீனி போட ஆரம்பித்தனர். அவர்களில் பெரும் புகழ் பெற்று பல்லாயிரக்கணக்கான வாசகர்களைப் பெற்றவர் வடுவூர் துரைசாமி ஐயங்கார். ரெங்கராஜு, வடுவூரார், வை.மு.கோதைநாயகி அம்மாள் ஆகியோர் பிரபலமான எழுத்தாளர்களாக அடையாளம் காணப்பட்டு கதைகளை எழுதிக் குவித்து தமிழ் வாசகக் கூட்டத்தை உருவாக்கினர். இவர்கள் எழுதிய கதைகள் பெரும்பாலும் ஆங்கில பரபரப்பு இலக்கியக் கதைகளைத் தழுவியவையே. மேலைப் பழக்க வழக்கங்களையும் மனோபாவங்களையும் தமிழ் நாட்டில் பரப்பி தமிழ் வாசகர்களை அநாச்சாரப் படுகுழியில் தள்ளுவதாக இந்த வகை எழுத்துக்கள் அன்றே கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின.

”என்ன வேலை செய்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “நான் ஒரு எழுத்தாளர்” என்று ஒருவர் பதில் சொன்னாராம். “அது சரி, சாப்பாட்டுக்கு என்ன செய்கிறீர்கள்?” என்று மீண்டும் கேள்வி எழுந்ததாம். அதுதான் என்றும் தமிழ் எழுத்தாளர்களின் பொருளாதார நிலை. புதுமைப்பித்தன் முதல் ஸ்டெல்லா ப்ரூஸ் வரையில் தமிழில் வறுமையில் வாடிய எழுத்தாளர்களே அதிகம். தமிழில் முழுநேர எழுத்தாளராக மட்டும் இருந்தால் இரண்டு வேளைச் சாப்பாட்டுக்குக்கூட வழி பிறக்காது என்பது நிதர்சனம். ஆக, ஏதாவது வேலை பார்த்துக் கொண்டு, கூடவே எழுதவும் செய்யலாம் என்பதுதான் தமிழ் எழுத்தாளர்களுக்கு விதிக்கப்பட்ட விதி. தமிழில் எழுதிப் பிழைத்த்வர்களே குறைவு; பணம் பார்த்தவர்களோ வெகு அரிது. ஆனால் அன்றே, எழுத்தை மட்டுமே முழு நேரத் தொழிலாகத் தேர்ந்தெடுத்து, தன் எழுத்து வருமானத்தை மட்டுமே வைத்து, வீடும் கட்டிச் செல்வாக்காக வாழ்ந்தவர் வடுவூர் துரைசாமி ஐயங்கார். தமிழில் கேளிக்கை எழுத்துக்களைப் பிரபலமாக்கி, அச்சகங்களை, நூல் பதிப்பை ஒரு தொழிலாக முன்வைத்ததில் வடுவூராருக்குப் பெரும் பங்குண்டு.

1880ல் மன்னார்குடி வட்டத்தில் உள்ள வடுவூர் கிராமத்தில் பிறந்த துரைசாமி ஐயங்கார், பி.ஏ பட்டம் படித்துவிட்டு அரசு வேலையில் சேர்ந்தவர். தான் பார்த்து வந்த தாசில்தார் வேலையை உதறி விட்டு, எழுத்து ஆர்வத்தில் முழுநேர எழுத்தாளராகத் துணிந்தார் வடுவூரார். எழுத்து அவரைக் கைவிடவில்லை. புகழையும், செல்வத்தையும் பெற்றுத் தந்தது. பிற்காலத்தில் வந்த மாத நாவல்கள், பாக்கெட் நாவல்களின் முன்னோடியாகத் தனது மனோரஞ்சிதம் என்ற மாதப் பத்திரிகை வாயிலாக, மாதம் ஒரு நாவல் எழுதியுள்ளார். அவற்றைத் தனது கலைமகள் கம்பெனி என்ற நிறுவனம் மூலம் விற்பனை செய்து, எழுத்து, அச்சு, பதிப்பு என்று நாவல் வெளியிடுவதை ஒரு லாபகரமான தொழிலாக நிறுவினார்.

தன் எழுத்து வருமானத்தில் தங்க பித்தான் கோட்டு, அங்கவஸ்திரம், தலைப்பாகை, ஷூ, கைத்தடி, பட்டுக்கரை வைத்த பஞ்ச கச்சம், டாலடிக்கும் வைரக் கடுக்கன், தங்க பஸ்பம், நண்பர்கள், இலக்கிய உரையாடல், வரலாற்று ஆராய்ச்சி என்று வாழ்க்கையை உல்லாசமாகவே கழித்திருக்கிறார். அவருக்குப் பின்னால் தன் எழுத்தால் மட்டும் செல்வாக்காக போக-வாழ்க்கை வாழ்ந்த தமிழ் எழுத்தாளர்கள் அனேகமாக எவருமே இல்லை. பின்னாட்களில் கல்கி, சுஜாதா, ராஜேஷ்குமார், சாண்டில்யன், ரமணிச்சந்திரன் போன்ற ஒரு சில வணிக எழுத்தாளர்கள் எழுத்தின் மூலமாகக் கணிசமாகச் சம்பாதித்தாலும் கூட பொழுதுபோக்கு வாசிப்பு என்ற ஒரு வழக்கமே இல்லாதிருந்த கால கட்டத்தில் அப்படி ஒரு வாசிப்பை உருவாக்கி வெற்றி பெற்றவர் என்ற வகையில் வடுவூரார் பொழுதுபோக்கு எழுத்தாளர்களின் முன்னோடியாகிறார்.


இந்த இடத்தில் டோண்டு ராகவனின் சில வார்த்தைகள். மேலே உள்ள லிஸ்டில் ரமணி சந்திரனை சேர்ப்பதில் எனக்கு சம்மதம் இல்லை. பாசிடிவாக எழுதும் மிகச்சில எழுத்தாளர்களில் அவர் ஒருவர் என்பதே எனது எண்ணம். இருக்கட்டும், இப்பதிவு வடுவூர் துரைசாமி ஐயங்கார் பற்றியதல்லவா, அவரைக் குறித்து மேலே பார்ப்போம்.

திருலைராஜன் மேலே எழுதுகிறார்.

‘கனகாம்புஜம் அல்லது கள்வனும் விலைமகளும்’, ’வசந்த கோகிலம் அல்லது பூரண சந்திரோதயம்’, ’விலாசவதி’, ’திகம்பர சாமியார்’, ’மேனகா’, ’கும்பகோண வக்கீல்’, ’மாயா விநோதப் பரதேசி’, ’மதன கல்யாணி’, ’பாலாமணி அல்லது பக்காத் திருடன்’, ’சௌந்திரா கோகிலம்’ போன்ற தலைப்புகளில் நாவல்களை எழுதிக் குவித்து இருக்கிறார். இவரது ’மேனகா’, ’திகம்பர சாமியார்’ போன்ற கதைகள் சினிமாவாகவும் எடுக்கப்பட்டு வெற்றி பெற்ற்ன. தன் பெரும் செல்வத்தை வைத்து, சென்னையில் பைஃகிராஃப்ட்ஸ் சாலையில் ஒரு வீட்டை வாங்கி மாற்றிக் கட்டி வடுவூர் ஹவுஸ் என்று பெயரிட்டு வாழ்ந்திருக்கிறார்.

வடுவூரார் ஒரு வினோதமான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்திருக்கிறார். ஃபேரோக்கள் என்ற எகிப்திய மன்னர்கள் தமிழ் நாட்டில் இருந்து எகிப்து என்ற மிசிர தேசத்திற்குச் சென்ற வடகலை ஐயங்கார்கள்தான் என்பதை ஆதாரங்களுடன் நிறுவி, தி லாங் மிஸ்ஸிங் லிங்க் என்றொரு 900 பக்க ஆராய்ச்சி நூலை எழுதி அவரே பதிப்பித்து வெளியிட்டதாகவும், அந்த நூல் விலைபோகாதபடியால் தன் சென்னை வீட்டை விற்று விட்டு கிராமத்துக்கே திரும்பி விட்டதாகவும் க. நா. சு நினைவு கூறுகிறார்.

வாழ்க்கை முழுவதையும் எழுத்துடனே செலவிட்ட இவருடைய சாவும் எழுத்துடன் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. இவருடைய ‘மைனர் ராஜாமணி’ என்ற நாவல் திரைப்படமானபோது ஒரு சமூகத்தாரை கீழ்த்தரமாகச் சித்தரிக்கிறது எனக் கடுமையான எதிர்ப்பு வந்ததைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அதிர்ச்சியிலும் அவமானத்திலும் இறந்திருக்கிறார் வடுவூர் துரைசாமி ஐயங்கார்.


வடகலை ஐயங்கார்கள் ஃபரோக்களா, ஹாஹாஹா நல்ல ஜோக் எனக்கூறுவது முரளிமனோகர். அந்த நூல் விலை போகாதது மட்டுமல்ல, ஆங்கில அரசால் தடையும் செய்யப்பட்டது என்பது கூடுதல் விஷயம். இவருக்கு ஏன் இந்தத் தேவையில்லாத ஆராய்ச்சி என்றுதான் எனக்கு தோன்றுகிறது.

அது இருக்கட்டும், அவரது உண்மையான தோற்றத்தை இந்த உரலில் பார்க்கலாம்:
நடுத்தர உயரம், ஒல்லியான உடல், கருத்தமேனி, கழுத்து வரை பொத்தான் போட்ட கோட்டு, அங்கவஸ்திரம், பஞ்சகச்சம், தலையில் குல்லா, காலில் கட் ஷூ,கையில் தடி, நெற்றியில் எப்போதும் திருமண், வாய் நிறைய வெற்றிலை, புகையிலை, தினமும் தங்க பஸ்பம் சாப்பிடுவார் இளமையோடிருக்க.மொத்தத்தில் கைநிறைய சம்பாதித்த கவலையில்லாத உல்லாச மனிதர்.


அவரது வடுவூர் ஹவுஸ் திருவல்லிக்கேணியில் பைக்ராஃப்ட்ஸ் சாலையில் இருந்ததாக அறிந்ததிலிருந்து நானும் என் மண்டையை போட்டு குடைந்து கொண்டேன். நண்பர் என்றென்றும் அன்புடன் பாலாவைக் கேட்டால் அவருக்கு தெரியவில்லை. என் பால்ய நண்பர்கள் குலசேகரன், பாபு, ஸ்ரீனிவாச தேசிகன் ஆகியோருக்கு ஃபோன் போட்டு கேட்டதில் தேசிகன் மட்டும் குன்சாக அந்த வீட்டை பைக்ராஃப்ட்ஸ் சாலையில் லொகேட் செய்தான். (பெரிய தெருவை தாண்டி பழைய ட்ரிப்ளிகேன் கஃபேக்கு எதிரில்). இதை வேறு பலரிடமும் கேட்டு ஊர்ஜிதம் செய்து கொள்ள வேண்டும்.

இவரது துரைக்கண்ணம்மாள் என்னும் நாவலில் ஓரிரு பக்கங்களுக்கு சுய எள்ளலும் செய்திருக்கிறார். அந்த வரிகளின் சாரம்:

அவன் (துரையப்பன்) சென்னையில் தங்கியிருந்த காலத்தில் திருவல்லிக்கேணி சமுத்திரக் கரைக்கு காற்று வாங்கப் போவதாக வைத்துக் கொள்வோம். நடந்தபடி இரஸ்தாவிலுள்ள கட்டிடங்களை இஞ்சினீர் தணிக்கை செய்வது போல மேலும் கீழும் பார்த்து ஏதேனும் ஷராக் கூறிக் கொண்டும், அவற்றின் சொந்தக்காரர் யார் என அறிந்து கொண்டு அவரைப்பற்றி ஏதேனும் புரளி வார்த்தைகள் சொல்லிக் கொண்டு போவான். அவன் பார்வையில் ‘வடுவூர் ஹவுஸ்’ பட்டது என வைத்துக் கொள்வோம்.

யாரதுப்பா இந்த வீடு என்று கேட்பான். வடுவூர் துரைசாமி ஐயங்கார் எனத் தெரிந்து கொண்டு உதிர்க்கும் சில மொழிகள் தமாஷாக இருக்கும். இந்த வீட்டைப் பார்த்தால் பத்தாயிரமாவது செலவழிஞ்சிருக்கும் போலிருக்கே, இந்தப் புளியோதரைக்கு இத்தனைப் பணம் ஏது என்பான். ஐயங்கார்கள் வளைச்சு வளைச்சு தம் உடம்பில் இட்டுக் கொள்ளும் நாமங்கள், ஐயங்கார் பெண்டுகளின் கவர்ச்சியான மடிசார் உடை ஆகியவையும் அவன் வாக்கில் சரளமாகப் புரளும். மேலே சொன்ன ஃபரோக்கள் பற்றிய புத்தகமும் பிரஸ்தாபத்துக்கு வரும்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் வடுவூராருக்கு சுய எள்ளல்கூட செய்யும் தன்னம்பிக்கை இருந்தது என்பதே.

சீரியஸ் எழுத்தாளர்கள் வணிக எழுத்தாளர்கள் என்னும் பிரிவினை அக்காலத்திலும் இருந்திருக்கிறது. இவர் வணிக எழுத்தாளர்தான் என்பதில் அவருக்கே சந்தேகம் இருந்ததில்லை. அவர் காலத்தில் அவரது புத்தகங்கள் கன்னாபின்னாவென்று விற்பனையாயின, இப்போது இல்லை அதனால் என்ன? அவரும்தான் உயிருடன் இல்லை. ஆகவே இப்போதைய நிலைமை அவரை எந்த விதத்திலும் பாதிக்கப் போவதில்லை. அதுவே காலத்தை வென்றவர்கள் என இருக்கும் பல இலக்கியவாதிகள் தங்கள் சமகாலத்தில் கடுமையான வறுமையால் பீடிக்கப்பட்டனர். இப்போது அவர்கள் பெயர் நிலைத்து நிற்கிறது. அதனால் அவர்களுக்கோ அவர்கள் சந்ததியினருக்கோ என்ன பலன்? பேர் இருக்கு பெத்தப் பேர், அதை வைத்து நாக்கைத்தான் வழிக்க வேண்டும்.

அக்கால அமர இலக்கியவாதிகளின் மனைவியரை காலயந்திரம் கொண்டு இங்கு அழைத்துக் கேட்டால் கண்ணால் ஜலம் விடுவார்கள்.

உதாரணத்துக்கு 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்" என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரையிலிருந்து சில வரிகள்:
ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்... விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.
கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் கூட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?


அமர இலக்கியமோ வேறு எதுவோ முக்கியமாக குடும்பத்தாரின் நலனையும் பேண வேண்டும். அது முடியவில்லை என்றால் கல்யாணம் செய்து கொண்டு ஒரு பெண்ணையும் அவள் குழந்தைகளையும் துன்புறுத்தாமலாவது இருக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/28/2010

மனம்போன போக்கில் சிந்தனைகள்

விஜயநகர மன்னர் எதையோ பார்த்து எதையோ நினைத்து அப்பாஜியிடம் ஒருவார்த்தை கூற, அதை தானும் பார்த்து சரியானபடி முடிவு எடுத்த அப்பாஜியின் கதையை நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.

இப்படித்தான் நம் மனம்போகும் போக்கை ஆராய்ந்தால் நாமே ஆச்சரியப்படுவோம். நாட்டிய பேர்வழி பற்றி ஜெயமோகன் எழுதிய பதிவின் சுட்டியை என் தளத்தில் பிடித்து மீண்டும் படித்து ரசித்தபோது என் மனம் என்னையறியாமலேயே எனக்குத் தெரிந்த மற்றும் நான் கேள்விப்பட்ட பத்மினிகள் பற்றி நினைக்க ஆரம்பித்தது. திடீரென சிதம்பரம் பத்மினியும் நினைவுக்கு வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் சிதம்பரம் அண்ணாமலை நகரில் பத்மினி என்னும் பெண்ணுக்கு நடந்த கொடுமை பற்றியும், அதன் விளைவாக சில போலீஸ்காரர்கள் தண்டிக்கப்பட்டது பற்றியும் படித்துள்ளேன். திடீரென நேற்று அது நினைவுக்கு வந்தது. அது ஏன் என்பதற்குள் போகும் முன்னால் பத்மினியின் கதையையும் பார்த்து விடுவோமே.

இது பற்றி தேடியபோது இந்த பழைய உரல் கிடைத்தது.

சிதம்பரம் பத்மினி கற்பழிப்பு வழக்கு : போலீசாருக்கு சிறைத்தண்டனை ஊர்ஜிதம்
சென்னை, நவ.29.

1992 - ம் ஆண்டு மே 29 - ம் தேதி திருட்டு வழக்கு குறித்து விசாரிப்பதற்காக நந்தகோபால் என்பவரை சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் அழைத்துச் சென்றனர். பலவந்தமாக அடித்து அவரிடம் வாக்குமூலம் பெற்றனர்.

மே 31 - ம் தேதி போலீஸ் காவலில் இருந்த அவருக்கு சாப்பாடு எடுத்துச் சென்றார் அவரது மனைவி பத்மினி. அப்போது சேலையைக் களைத்து அவரைப் போலீசார் அவமானப்படுத்தினர்.

அதையடுத்து விசாரணைக்காக மீண்டும் போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்ட பத்மினியை ஜூன் 2 - ம் தேதி அதிகாலை பல போலீஸ்காரர்கள் கற்பழித்தனர். நந்தகோபால் முன்பே இச்சம்பவம் நடந்தது. இதனால் மிகுந்த வேதனையில் இருந்த நந்தகோபால் போலீஸ் லாக்கப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் ஜூன் 3 - ம் தேதி இறந்து கிடந்தார்.

இவ்வழக்கை மாற்றி எழுத போலீசார் முயற்சித்தனர். பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து பத்மினி கற்பழிப்புச் சம்பவம் தொடர்பாக 11 போலீஸ்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி விசாரித்துத் தீர்ப்புக் கூறினார்.

இரண்டு சப் - இன்ஸ்பெக்டர்கள் உள்பட 6 போலீசாருக்கு கீழ்க்கோர்ட் வழங்கிய தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

பத்மினியின் மன்வுறுதி பாராட்டுக்குரியது. ஆனால் வேறு ஒரு விஷயமும் நடந்தது. கணவனை இழந்த இந்தப் பெண்மணி மறுமணமும் செய்து கொண்டார். அவர் அவ்வாறு செய்து கொண்டதும் அவருக்கு ஆதரவாக இருந்த ஒரு பெண்மணி தனது ஆதரவு நிலையை மாற்றிக் கொண்டதாகவும் படித்தேன். அதாவது இவர் விதவையாகவே இருந்தால் ஆதரவு தெரிவிக்கலாம், இனிமேல் தேவையில்லை என நினைத்து கொண்டார் போலும்.

அதென்னவோ தெரியவில்லை, பல தருணங்களில் கஷ்டப்படும் ஒருவருக்கு உதவி செய்பவர்கள் அந்த ஒருவர் கஷ்டம் நீங்கி நல்ல நிலைக்கு வரும்போது ஒருவித காழ்ப்புணர்ச்சியுடன் அவரை நோக்குகின்றனர். அந்த ஒருவர் கஷ்டம் அனுபவிப்பது அப்படியே தொடர வேண்டும், தாம் அவருக்கு உதவி செய்யும்போது தாம் எத்தனை பெரிய மாமனிதர்கள் என தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளலாம் என்றெல்லாம் கருதுகிறார்களோ?

வேறு ஒரு தருணத்தில் விஸ்வநாதன் ஆனந்த் பற்றி எண்ணும்போது அவர் இந்தியரா என கொக்கிபோட்டு நிறுத்திய அதிகாரியின் மோட்டிவ் என்னவாக இருக்கும்? தங்கள் அமைச்சகத்தை ஆனந்தும் அணுகி வேண்டிக் கொண்டிருக்க வேண்டும் என நினைப்பவராக அவர் இருந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதுவும் மனித இயல்புதான். ஆனால் என்ன ஆயிற்று, அவர் டாக்டர் பட்டமே தேவையில்லை என ஒரேயடியாக புறக்கணிப்பார் என அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் போல. இப்போது கபில் சிபல் அசடு வழிவதைவிட வேறு மார்க்கமே இல்லை.

இன்றைய கல்கியில் (05.09.2010 தேதியிட்ட இதழ்) ஞாநி கருணாநிதிக்கு பதில் அளித்ததை படித்தபோது என் மனம் போன போக்கில் விட்டேன். கலைஞர் டோண்டு ராகவனின் பதிவுகளை படிக்கிறார் என்ற எண்ணம் வந்த கதையை இங்கு வர்ணிக்கிறேன்.

தன் வாரிசுகள் எல்லாம் திரையுலகுக்கு வருவதை எதிர்த்து தினமணியில் கார்ட்டூன் போட்ட மதி என்பவருக்கு பதிலளிக்கும்போது பிருத்விராஜ் கபூர் குடும்பத்தை இழுத்துள்ளார். கூடவே தன் குடும்பத்தினர் முன்னுக்கு வருவது பூணூல் போட்டவர்களுக்கு பிடிக்காது என்றும் பொரிந்துள்ளார்.

ஞாநி அவருக்கு இந்த பாயிண்டுகளை வைத்து பதில்ளித்துள்ளார்.

1. மதி பூணூல் போட்டவரல்ல.
2. பிருத்விராஜ் கபூர் குடும்பம் தன் சொந்த முயற்சியால்தான் முன்னுக்கு வந்தது. முதன் மந்திரியாகவெல்லாம் இருந்து அந்த பதவியின் துர் உபயோகத்தால்இதுவரை எந்த வசனகர்த்தாவும் வாங்கியறியாத 50 லட்சம் ரூபாய் லெவலுக்கெல்லாம் அக்குடும்பம் வாங்கவில்லை. அவர்கள் வாங்கியது முழுக்க முழுக்க அவரது திறமைக்குத்தான்.
3. திரையுலக சங்கத் தேர்வுகளில் தில்லுமுல்லு செய்ததில்லை கபூர் குடும்பத்தினர்.
4. குறுக்கே நூல் போட்ட சாவியைத்தான் தனது பத்திரிகையான குங்குமத்துக்கு கலைஞர் ஆசிரியராக நியமித்தார். முதல் அட்டைப்படத்தில் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரர் படத்தைத்தான் போட்டார்.
5. இன்னும் பல உதாரணங்கள் தந்துள்ளார், வேண்டியவர்கள் கல்கி வாங்கி படித்துக் கொள்ளட்டுமே.

அது சரி அதற்காக கலைஞர் உன் பதிவை படித்தார் என எப்படிச் சொல்லறே பெரிசு என கேட்கிறான் முரளி மனோகர். அதாவது நான் எந்தப் பதிவு போட்டாலும், அது எப்பொருளையுடையதாக இருந்தாலும் அருள் என்பவர் வந்து எல்லாவற்றுக்கும் பார்ப்பனரே - அதுவும் பூணூல் போட்டவர்களே- காரணம் எனக் கூறிவைப்பார். அவரது பின்னூட்டங்களைத்தான் கலைஞர் பார்த்திருக்கிறார் என நினைக்கிறேன், அதாவது என் மனம் அவ்வாறு எண்ணியதையும் கூறுவது இப்பதிவின் பொருளுட்குட்பட்டதே.

ஆக, கலைஞருக்கே ரோல்மாடலாகத் திகழும் அருள் என அழைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/26/2010

நண்பர்களுக்கு நன்றி - 7

நண்பர்களுக்கு நன்றி - 1

நண்பர்களுக்கு நன்றி - 2
நண்பர்களுக்கு நன்றி - 3
நண்பர்களுக்கு நன்றி - 4
நண்பர்களுக்கு நன்றி - 5

நண்பர்களுக்கு நன்றி - 6


இந்த வரிசையில் மே மாதம் 2-ஆம் தேதி இதற்கு முந்தையப் பதிவை போட்டபோது இவ்வளவு சீக்கிரம் இந்த ஏழு லட்ச கவுண்டர் எண்ணிக்கைக்கான பதிவு போடுவேன் என சத்தியமாக நினைக்கவில்லை.

ஒரு லட்சம் வந்த நேரம் 19.12.2006, 20.45 hrs. IST. இரண்டு லட்சம் வந்த நேரம் 14.02.2008, 19.58 hrs IST. மூன்று லட்சம் வந்த நேரம் 07.11.2008, 12.54 hrs. நான்கு லட்சம் வந்த நேரம் 14.05.2009 காலை 10.45. ஐந்து லட்சம் வந்த நேரம் 11.11.2009, 23.13 hrs. ஆறு லட்சம் வந்த நேரம் 03.05.2010 காலை 10.26 மணி. இப்போது ஏழு லட்சம் வரும் தருவாயில் அதற்கும் ஆறு லட்சத்துக்கும் இடையில் 4 காலண்டர் மாதங்களுக்கு குறைவாகவே (117 நாட்கள்?) எடுத்து கொள்ளப்படும் என எண்ணுகிறேன்.

இந்த கவுண்டரின் விசேஷம் என்னவென்றால், நான் லாக்-இன் செய்து பார்ப்பதெல்லாம் கணக்கில் ஏற்றப்படாது. இந்த ஆதரவுக்காக நான் எனது நலம் விரும்பிகளுக்கும் மற்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

இந்த முறை டோண்டு முக்கியமாகக் கருதுவது சோ அவர்களையே கண்டித்து பதிவு போட்டதுதான் என முரளி மனோகர் கூறுகிறான். பின்னே என்ன, இவ்வளவு அற்புதமான மெகா சீரியலான எங்கே பிராமணனை இப்படியா சொதப்பலாக முடிப்பது? அப்பதிவிலிருந்து சில வரிகள் மீண்டும் இங்கே.

எங்கே பிராமணன் முதல் பகுதியில் கடைசி எபிசோட் என்பதை நான் முதலிலிருந்தே கண்டு கொள்ள முடிந்தது. ஆனால் இம்முறை நான் அவ்வாறு காண இயலவில்லை. ஆகவே இந்த சீரியல் இம்மாதிரி முடிந்தது என்னையும் ஆச்சரியத்திலும் ஏமாற்றத்திலும் ஆழ்த்தி விட்டது. காரணம் கதையில் இன்னும் பல முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் உள்ளன.

எல்லாவற்றையும் விடுங்கள். காதம்பரி என்னும் அப்பெண்ணை இப்படி அம்போ என விட்டுப்போனது எந்த விதத்தில் நியாயம் என்பதே புரியவில்லை. மெனக்கெட்டு அவளை அசோக்கின் தர்மபத்தினியாக்கினார்கள். இப்போது அவள் கதி? அசோக் திடீரென மறைந்து போனதால் அவனது பெற்றோருக்கு வரும் மன உளைச்சல்கள், சட்ட சிக்கல்கள், போலீஸ் கெடுபிடிகள் ஆகியவற்றையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எனக்கு வரும் கோபத்துக்கு பார்ட் -2 ஆரம்ப எபிசோடில் வந்தது போல நாதன், வசுமதி, நீலகண்டன், சாம்பு ஆகிய பாத்திரங்கள் காதம்பரியுடன் கூட வந்து சோ அவர்களை ஒரு மொத்து மொத்தினால்தான் என் மனம் ஆறும். சிங்காரம் ஒருவன் போதாதா, வந்து வீடுகட்டி உதைக்க?

அது சரி நீ எப்படி பெரிசு இந்தக் கதையை முடிச்சுருப்பே என முரளி மனோகர் நக்கலாகக் கேட்கிறான். அதையும் சொல்லிவிடுகிறேன்.

நாரதர் அசோக்கிடம் சொன்னதெல்லாம் சரிதான். ஆனால் அவன் தனது பூலோகக் கடமையையும் முடித்தாக வேண்டும், பீஷ்மரைப் போல. வக்கீலின் உதவியோடு உண்மை குற்றவாளியை பிடிப்பது பெரிய காரியமாக இருக்க முடியாது. பிறகு முழுவர்ண ரீதியான பிராமணனாக வாழமுடியவில்லை என்றாலும், கலியுக தர்மங்கள் மற்றும் சாத்தியக்கூறுகளுக்கும் ஏற்ப ஒருவன் எவ்வாறு பிராமணனாக வாழமுடியும் என்பதையும் அசோக் எடுத்துக் காட்டியதாக நான் கதையை கொண்டு சென்றிருப்பேன்.

அத்தனைக் காட்சிகளையுக் காண்பிக்க முடியாவிட்டால், காதம்பரி உண்மையிலேயே வசிஷ்டரின் மனைவி அருந்ததியே என கதையின் போக்கை மாற்றி அவளும் அதை உணர்ந்து அசோக்குடன் வாழ்வதையே சூசகமாக ஒரு எபிசோடில் காட்டியிருப்பேன். இத்தனை விஷயங்களையும் மேலும் ஒரே ஒரு எபிசோடில் காட்டியிருக்க இயலும்.

எது எப்படியோ நான் இம்மாதிரி சோ அவர்களை இம்மாதிரி முழுமையாகக் கண்டித்து இப்பதிவை போடுவேன் எனக்கனவிலும் நினைக்கவில்லை.


இந்த ஏழு லட்சத்துக்கன பதிவுக்கும் ஆறு லட்சத்துக்கான முந்தையப் பதிவுக்கும் இடையே இருப்பவை மொத்தம் 81 பதிவுகளே. அவற்றில் எங்கே பிராமணன் சம்பந்தப்பட்ட பதிவுகள் 20. மீதி அறுபதில் நான் முக்கியமாகக் கருதுவது அவதூறு ஆறுமுகம் மீது நேரடியாகத் தாக்கிய பதிவு முதலில் வருகிறது. போலி டோண்டு விவகாரத்தின் கடைசி தொக்குகளில் ஒன்றாக இது வருகிறது. இனியாவது போலி டோண்டு பற்றி மேலும் எழுத வேண்டிய அவசியம் இல்லாது இருக்கும் என நம்புகிறேன்.

நூறுக்கும் மேல் பின்னூட்டங்கள் பெற்ற பதிவு எல்லாவற்றுக்குமே இட ஒதுக்கீடு தந்து விடலாமா என்னும் பதிவு, இரண்டாம் உலக மகாயுத்தத்தில் சோவியத் யூனியனின் பங்கு, ஒட்டகத்துக்கு நடந்தது என்ன?, சாதியே கூடாது என கூத்தடிக்கும் பதிவர்களை பற்றிச் சாடிய பதிவு, பாப்பானைத் திட்டணும்னா பகுத்தறிவையே மறக்கலாம் என செயல்படுபவர்கள் பற்றிய பதிவு, பார்ப்பான் பூணல் போட்டால் என்ன போடாவிட்டால் என்ன என நான் கேள்வி கேட்ட பதிவு, ரொம்ப நாளுக்கப்புறம் புதிர்கள் பதிவு, பெரியாரை வீரமணி வகையறாக்கள் கேவலப்படுத்தியது பற்றிய பதிவு ஆகியவை இந்த 81 பதிவுகளில் குறிப்பிடத் தக்கவை.

போன தடவை போலவே இம்முறையும் சற்று முன்பே இப்பதிவை போட்டு விட்டேன். நாளை அல்லது நாளை மறுநாள்தான் 7 லட்சம் தாண்டும் என நினைக்கிறேன். ஆகவே இப்பதிவையும் இப்போதே வெளியிடுகிறேன். இப்போது தேதி 26.08.2010, நேரம் பிற்பகல் 12.14 மணி (இந்திய நேரம்), ஹிட்கள் 6,98,914.

தலைகீழ் எண்ணிக்கை ஆரம்பமாகிறது: 1086, 1085, 1084, 1083, 1082 .......

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/25/2010

விஸ்வநாதன் ஆனந்துக்கு இழைக்கப்பட்ட அவமானம்

தினகரனில் வந்த செய்தி

ஐதராபாத்: உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இந்திய குடிமகனா? என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கிளப்பிய சந்தேகத்தால், ஆனந்துக்கு ஐதராபாத் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. ஆனந்திடம் மத்திய அமைச்சர் கபில்சிபல் பேசியதை தொடர்ந்து இந்த பிரச்னை தீர்ந்தது.
தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், உலக செஸ் சாம்பியனாக உள்ளார். இதை பாராட்டி ஐதராபாத் பல்கலைக் கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தது. இந்த பல்கலைக் கழகத்தில் இப்போது சர்வதேச கணித மாநாடு நடைபெற்று வருகிறது. அப்போது, விஸ்நாதன் ஆனந்துக்கும் ஹார்வர்டு பல்கலைக் கழக கணித பேராசிரியர் டேவிட் மும்போர்டுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டது. அதற்கான விழா நேற்று முன்தினம் நடைபெற இருந்தது.

பல்கலைக் கழகங்கள் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், டாக்டர் பட்டம் வழங்குவதற்கு அதனிடம் அனுமதி பெற வேண்டும். அதன்படி, விஸ்வநாதன் ஆனந்துக்கும், மும்போர்டுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க அனுமதி கேட்டு, பல்கலைக்கழக நிர்வாகம் கடிதம் எழுதியது. சர்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்பதற்கு வசதியாக, விஸ்நாதன் ஆனந்த் தனது குடும்பத்துடன் ஸ்பெயின் நாட்டில் தங்கி இருக்கிறார். அங்கு அவருக்கு சொந்தமாக வீடும் உள்ளது.

இதனால், ஸ்பெயின் குடியுரிமையை அவர் பெற்றுக் இருக்கக் கூடும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக பல்கலைக் கழகத்துக்கும், ஆனந்துக்கும் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியது. அவர் இந்திய குடிமகன்தான் என்பதை நிருபிப்பதற்காக, ஆனந்த்தின் இந்திய பாஸ்போர்ட் நகல் கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த பிரச்னையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வேகமாக முடிவு எடுக்காமல் கடிதத்தை கிடப்பில் போட்டுள்ளது. இதனால், நேற்று முன்தினம் நடைபெற வேண்டிய பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை.

பட்டமளிப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்து வரும் பல்கலைக் கழகத்தின் கணிதத் துறை தலைவர் ரஜத் தாண்டன் அளித்த பேட்டியில், “விஸ்வநாதன் ஆனந்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது நிறுத்தவோ, மறுக்கவோ படவில்லை. தாமதம் ஆகிறது அவ்வளவுதான். அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்கு அனுமதி கேட்டு நாங்கள் அனுப்பிய கடிதம், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிசீலனையில்தான் இன்னும் இருக்கிறது’. இந்த விவகாரத்தால் நாங்கள் மிகவும் தர்மசங்கடத்துக்கு ஆளாகி இருக்கிறோம்’ என்றார். பல்கலைக் கழகத்தின் பார்வையாளராக ஜனாதிபதி இருப்பதால், அவருடைய கவனத்துக்கும் இந்த பிரச்னையை பல்கலைக் கழகம் எடுத்துச் சென்றது.
அமைச்சர் மன்னிப்பு:

இந்த நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் நேற்று காலை விஸ்வநாதன் ஆனந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொள்ளும்படி வலியுறுத்தினார். நடைமுறை தவறால் இந்த குழப்பம் ஏற்பட்டு இருப்பதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் ஆனந்திடம் கபில் சிபல் கூறினார்.
இதைத் தொடர்ந்து, பிரச்னை முடிவுக்கு வந்தது. ‘பட்டம் வேண்டாம்’ என்று கூறிய ஆனந்த், கபில்சிபல் பேசியதைத் தொடர்ந்து அதை பெற்றுக் கொள்ள சம்மதித்தார். முன்னதாக, கணித மாநாட்டில் ஆனந்த் நேற்று கலந்து கொண்டார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கபில்சிபல் மன்னிப்பு கேட்டதால் திருப்பம்.

(நன்றி தினகரன்).

ஒரு திருப்பமும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை. ஆனந்த் டாக்டர் பட்டம் வேண்டாம் எனக்கூறிவிட்டதாக ஹிந்துவில் வந்த செய்தி கூறுகிறது.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில் இருக்கும் அறிவுக் கொழுந்துகள் வேண்டுமென்றே இவ்வாறு செய்திருக்க வேண்டும். கபில் சிபல் வேண்டாவெறுப்பாக மன்னிப்பு கேட்டுக் கொண்டால் ஆயிற்றா?

அன்னை தெரசாவுக்கு சமாதான நோபல் பரிசு கிடைத்தபோது அவர் வாங்கிய பரிசு பணத்துக்கு வருமான வரி போடாமல் விலக்கு அளிக்கலாம் என ஒரு நோட் போடப்பட்டு அது நிறைவேறியதாம். அச்சமயம் ஒரு கார்ட்டூனிஸ்ட் இத்தருணத்தில் ஒரு சிவப்பு நாடா அதிகாரி போடக்கூடிய ஆட்சேபணை நோட்டை இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “இப்போது தெரசாவுக்கு விதிவிலக்கு கொடுத்தால், பல இந்தியர்கள் நோபல் பரிசு பெற்று, வரிகொடாது அதனால் அரசுக்கு வரி நஷ்டமாகிவிடும்”. இது கிண்டலுக்குத்தான் என்றாலும் இப்போது நடந்ததைப் பார்க்கும்போது அதிலும் உண்மை இருக்கத்தான் வேண்டும்.

சிவப்புநாடா பிரச்சினைகள் பற்றி நான் இட்ட இந்தப் பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்.

இப்போதிருப்பது போல முன்பெல்லாம் ஓய்வூதியம் தொகை வங்கிக்கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படவில்லை. பென்ஷன் வாங்கும் தினத்தன்று அரசு கருவூலங்களில் ஓய்வு பெற்றவர்களால் சூழப்பட்டிருக்கும். அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் இருக்க வேண்டும். அப்போதுதான் போனால் போகிறதென்று சில மணிநேரத் தாமதங்களில் பென்ஷன் தொகையை கடனே என்று பட்டுவாடா செய்வார்கள். இது சம்பந்தமாக உண்மையாக நடந்த ஒரு விஷயம் இதோ.

பிரணதார்த்தி ஹரன் (கற்பனை பெயர்) ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் தன் மகள் இருக்கும் இன்னொரு ஊருக்கு சென்றிருந்ததால் அவ்விரு மாதங்களும் ஓய்வூதியம் வாங்க வரவில்லை. மார்ச் மாதம்தான் வந்தார். மூன்று மாதங்களுக்கும் சேர்த்து பணம் பெறும் விண்ணப்பத்துடன் தான் உயிருடன் இருக்கும் சான்றிதழையும் எடுத்து வந்திருந்தார். ஆனாலும் பென்ஷன் மறுக்கப்பட்டது. காரணம்? அவர் மார்ச் மாதத்துக்கு மட்டும் உயிருடன் இருக்கும் சான்றிதழை எடுத்து வந்திருந்தார். அதற்கு முந்தைய மாதங்களான பிப்ரவரி மற்றும் ஜனவரி மாதங்களுக்கு எடுத்து வரவில்லையாம்! இது எப்படி இருக்கு?


ஸ்பெயினில் வீடு எடுத்திருக்கிறாராமா? அவரால் எடுக்க முடிகிறது எடுக்கிறார். அரசு அனுமதிகள் வாங்கியிருப்பாராக இருக்கும். இவன்களுக்கு ஏன் இந்த காண்டு? அவர் இந்தியரா இல்லையா என்பதில் என்ன சந்தேகமாம் இவன்களுக்கு?

ஆனந்த் அவர்களே, உங்கள் மறுப்பில் உறுதியாக இருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பெண்மையின் பலத்தை இப்படியும் நிரூபிக்கலாமோ - மொக்கையிலும் மொக்கையான பதிவு இது

சமீபத்தில் 1972-ல் டேவிட் ரூபன் எழுதிய Everything You Always Wanted to Know About Sex* (*But Were Afraid to Ask) என்னும் ஒரு ஒரு புத்தகத்தில்தான் நான் இதைப் படித்தேன் என நினைக்கிறேன்.

அதாகப்பட்டது, ஒரு ஆணால் உச்ச நிலையை அடைந்து அடுத்த் உச்ச நிலையை சில மணி நேரம் ஓய்வுக்குப் பிறகுதான் மறுபடியும் உச்சநிலையை அடைவதற்கான பற்றிய இச்சையே வருமாம். அவ்வளவு நேரத்துக்கு டிபாசிட் காலி என சொல்கிறார்கள். அதை அடிப்படையாக வைத்துத்தான் எனது இந்த நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் பதிவிலும் இந்த ஜோக்கை எழுதியிருந்தேன்.

அவன் கட்டிளங்காளை, அவள் திமிறும் பருவஎழிலுடன் கூடிய மங்கை. இருவருக்கும் திருமணம் நடக்கிறது. தேன் நிலவுக்கு ஊட்டிக்கு செல்கின்றனர். முதலிரவும் அங்கேதான். இதற்கெனவே பல புத்தகங்கள் படித்து, நண்பர்களுடன் கலந்துரையாடியிருக்கிறான் காளை. கன்னியின் படிப்பும் இந்த விஷயத்தில் சோடை போகவில்லை.

ஆயிற்று, திருப்தியுடன் ஒரு முறை உறவு. பிறகு ஒரு மணி நேரம் இளைப்பாறலுக்கு பின்னால் இன்னொரு முறை, அதன் பிறகு மூன்று மணி நேர இடைவெளிக்கு பின்னால் மூன்றாம் முறை உறவு கொள்கின்றனர். அதற்கு மேல் அவனால் முடியவில்லை. இருவரும் தூங்க ஆரம்பிக்கும்போதுதான் கவனிக்கின்றனர், பக்கத்து அறையில் இருக்கும் ஆணும் பெண்ணும் விடாது கும்மாளம் போடுவதை. “இந்த முறை வலது பக்கம்” என ஆண்குரல் கூற, “இல்லை இடது பக்கம்தான்” என பெண்ணின் குரல் எதிர்க்க, சில நொடிகளுக்கு பிறகு ஒரே சிரிப்பு, கைத்தட்டல் ஆகிய கலாட்டாக்கள். இம்மாதிரியே இரவு முழுவதும் வலது, இடது என மாறிமாறி கலாய்ப்பு நடக்கிறது.

இளைஞனுக்கு ஒரே திகைப்பு. “சே நாமும் இருக்கிறோமே, அத்லெட்டிக்கான உடம்பு என்றுதான் பெயர், ஆனால் மூன்று முறையிலேயே ஆட்டம் க்ளோஸ். ஆனால் இங்கே பாருடா, ராத்திரி முழுக்க வலது இடது என மாறி மாறி போடறாங்க” என்று வியக்கிறான்.

அடுத்த நாள் காலையில் இளைஞனும் இளைஞியும் அறைக்கு வெளியே வருகின்றனர். பக்கத்து அறையிலிருந்து ஒரு எண்பது வயது வயது கிழவனும், எழுபத்தைந்து வயது கிழவியும் வெளியே வருகின்றனர். இளையவயதினர் இருவருக்கும் மூச்சே நின்றுவிட்டது. இளைஞன் கிழவனாரை தன்னுடன் அழைத்து சென்று காப்பி வாங்கிக் கொடுத்து பேச்சு கொடுக்கிறான். பல விஷயங்கள் பேசிய பிறகு அவரிடம் கூறுகிறான், “ சார் நான் இளைஞன், என்னாலேயே மூன்று முறைக்குமேல் உறவு கொள்ள இயலவில்லை. அதெப்படி நீங்கள் இரண்டு பேரும் ராத்திரி முழுக்க பஜனை செய்ய முடிந்தது”?

கெக்கே கெக்கே என சிரித்த கிழவர், “அடே பையா, நீ நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லை. நான் என்ன பண்ணுவேன் என்றால் மல்லாக்க படுத்து கொள்வேன். கிழவி என்னுடையதை பிடித்து மத்து கடைவது போலக் கடைவாள். விறைப்பு வந்ததும் அதை விட்டுவிடுவாள். ஒரு நொடி நின்று விட்டு அது தொப்பென்று கீழே விழும். அப்போது இடதுப் பக்கம் விழுமா, வலதுப் பக்கம் விழுமா என்பதில் நாங்கள் பந்தயம் வைப்போம் அவ்வளவுதான்” என்றார்.


ஆனால் பெண்ணுக்கு அந்த பிரச்சினையெல்லாம் இல்லை என்பதே நிஜம். அதைத்தான் மேலே சொன்ன புத்தகத்திலும் ஒரு பரிசோதனையுடன் நிரூபித்தனர். ஒரு அலுவலகத்தில் இரு பெண் வாலண்டியர்களை வைத்து அவர்களுடன் இரவு முழுக்க பல ஆண்களை உறவு கொள்ளச் செய்தனராம். கடசியில் பார்த்தால் அப்பெண்கள் களைப்புடன் இருப்பினும் மிக சந்தோஷமாகவும் இருந்தனராம். மேலும் பரிசோதனைக்கு ரெடி என்றே இருந்தனராம். சம்பந்தப்பட்ட ஆண் வாலண்டியர்களின் வீடுகளிலிருந்து அவர்களை இன்னும் காணோமே என்னும் ஃபோன்கால்கள் கவலையுடன் வர ஆரம்பித்ததால் பரிசோதனையை நிறுத்த வேண்டியிருந்ததாம்.

இதைத்தான் நான் ஆண் பெண் கற்பு நிலை பற்றிய எனது இப்பதிவிலும் எழுதியுள்ளேன்.

ஒரு ஆண் ஏன் உடலுறவின் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கிறான்? அவன் கருவுருவதில்லை அதனால்தானே? பெண் என்ன செய்வாள்? அறுபதுகளில் கருத்தடை மாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கருவுராமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலை வந்ததும் பெண்கள் பொங்கி எழுந்தனர். அமெரிக்க ஆண்களே அஞ்சும் அளவில் உடல் உறவில் ஈடுபட்டனர். செயல்பட இயலாத ஆண்துணையை விடுத்து வேறு துணை தேடினர். இது நல்லதுக்கா கெட்டதுக்கா என்று இன்றும் விவாதங்கள் தொடர்கின்றன. அதில் நான் போக விரும்பவில்லை. கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்று மட்டும் கூறுவேன்.

இதெல்லாம் இப்போ ஏன் என கேட்கிறான் முரளி மனோகர். ஒன்றுமில்லை இன்று கடைகளில் விற்பனைக்கு வந்த 29.08.2010 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் 23-ஆம் பக்கத்தில் வெளியான அடேங்கப்பா லேடியான நிக்கி லீ பற்றிய செய்திதான் எனது இப்பதிவுக்கு தூண்டுகோலாக இருந்தது என்றால் மிகையாகாது. 25 வயதுக்குள் 2500 பேருடன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக கணக்கு வைத்துள்ளார். இற்றைப்படுத்தப்பட்ட அவரது ஸ்கோர் தற்சமயம் 5000 பேர் என நிற்கிறது. இன்னும் அதிகரிக்கும் என்று வேறு கூறிவிட்டார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/23/2010

நேர்மறை எண்ணங்கள் கொண்ட பதிவர் Anthony Muthu அவர்கள் திடீர் மறைவு


பதிவர் அந்தோனி முத்து அவர்கள் மாற்றுத் திறன் கொண்டவர். இயற்கையால் மிக வஞ்சிக்கப்பட்ட நிலையிலும் தன்னம்பிக்கை தளராது உழைத்தவர். ‘அழகி’ தமிழ் எழுதி மென்பொருளை விரிவாக்குவதில் பங்கு பெற்றவர்.

அவர் இப்போது நம்மிடையே இல்லை. சில மணி நேரங்களுக்கு முன்னால் காலன் அவரை அழைத்துச் சென்று விட்டான். அவருக்கு உதவி கோரி பதிவர் என்றென்றும் அன்புடன் பாலா பதிவர்களிடம் வேண்டுகோள் விடுத்து அவருக்கு மடிக்கணினியும் சக்கர நாற்காலியும் பெற்றுத் தந்தது உங்களில் பலருக்கு நினைவிலிருக்கும் என நம்புகிறேன். நான் அவருக்காக பாலாஜி அவர்களிடம் அளித்த சிறு தொகைக்காக எனக்கும் ஃபோன் செய்து பேசியிருக்கிறார். அழகி மென்பொருளை நான் எனது விட்ஜெட்டில் போட்டதற்கும் நன்றி கூறினார். தொலை பேசியில் அவருடன் பேசும் புதியவர் யாருக்குமே அவருக்கு ஏதும் பிரச்சினை இருப்பதாகக் கூறவே இயலாத அளவுக்கு உற்சாகத்துடன் பேசுபவர் அவர்.

சில நிமிடங்களுக்கு முன்னால்தான் பாலா அவர்கள் என்னுடன் தொலைபேசினார். இந்த துக்ககரமான விஷயத்தையும் கூறினார். அந்தோனிக்கு மூச்சுத் திணறல் இருந்திருக்கிறது. பாலா இது சம்பந்தமாக மருத்துவர் ப்ரூனோவுடனும் பேசியிருக்கிறார். அவரும் அந்தோனியை மருத்துவ மனையில் இயன்ற அளவு கவனித்திருக்கிறார். இருப்பினும் அந்தோனியின் முதுகு தண்டுவட பிரச்சினை காரணமாக அவரது நுரையீரல் அழுத்தப் பெற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. இந்த பிரச்சினை அவருக்கு பல ஆண்டுகளாகவே இருந்து வந்திருக்கிறது. ஆகவே ஓரளவுக்கு மேல் ஒருவராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை.

நேற்றும் பாலாஜி எனக்கு ஃபோன் செய்து பேசினார்தான். ஆனால் அது மகிழ்ச்சிகரமான செய்தியுடன் வந்தது. அவர் உதவி செய்த இன்னொருவர் மருத்துவ மாணவி கௌசல்யா படிப்பு முடிந்து ஹவுஸ் சர்ஜன்சி செய்து வருபவர் அவர் வீட்டுக்கு நேற்று அவரைப் பார்க்க வந்திருக்கிறார். தனக்கு அவர் செய்த உதவியால் தான் முன்னுக்கு வந்ததாகவும், ஆகவே அவரது இம்மாதிரியான சேவைகள் தொடர தன்னால் இயன்ற அளவு பண உதவி செய்ய ஆசைப்படுவதாகவும் கூறி அவர் கையில் கணிசமான பணம் தந்திருக்கிறார். பாலா அப்பெண்ணை என்னுடனும் பேச வைத்தார். அவருக்கு நான் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் கூறினேன்.

அவருக்கு முதலில் பணம் தந்த போது நானும் சென்றிருந்தேன். அது சம்பந்தமாக நான் இட்டப் பதிவு இதோ. பாலா அவர்கள் இட்டது இங்கே.

ஆனால் இன்று இம்மாதிரியான துயரச் செய்தி. என்ன செய்வது. அதுதான் வாழ்க்கை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின்குறிப்பு: பாலாஜி அவர்கள் பதிவு போடும் சூழ்நிலையில் இல்லாததால் என்னைப் போடச் சொல்லி கேட்டுக் கொண்டார். ஆகவே இப்பதிவு.

8/22/2010

பதிவுகள் போட காசு கொடுத்து தளம் பெறுவது, ஏன் இந்த இம்சை

சுஜாதாவின் இரண்டாம் நினைவுநாள் நிகழ்வுக்கான கூட்டத்தில் சாரு நிவேதிதாவிடம் ஒரே ஒரு கேள்விதான் வைத்தேன். அப்போது அவர் தனது கட்டண இணையதளம் காசு தராததால் முடக்கப்பட்டதாக எழுதியிருந்தார். அப்படியேனும் காசு கொடுத்து ஏன் தளம் வாங்க வேண்டும்? பிளக்கர் வேர்ட்ப்ரெஸ் ஆகியவை இலவசமாகவே இடம் தரும்போது இதெல்லாம் தேவையா என்பதுதான் அக்கேள்வி.

தங்கள் காசு கொடுத்து இணையதளம் பெறுபவர்களாவது பரவாயில்லை. ஆனால் சாரு அதற்கான விலையை நண்பர்களிடமிருந்தே பெற்று தருகிறார். ஏன் ஐயா இப்படியாவது ஓசியில் பணம் பெற்று இந்த ஒய்யாரம் தேவைதானா என்று அவரிடம் அதிகப்படியாக ஒரு கேள்வியை இத்தருணத்தில் வைக்கிறேன்.

நான் நிஜமாகவே கேட்கிறேன், பிளாக்கரில் என்ன குறை கண்டீர்கள்? கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நான் பாவித்து வருகிறேனே, ஒரு தொல்லையும் இன்றி. பதிவுகள் எல்லாம் அவ்வாறே பத்திரமாக உள்ளனவே. அப்படியே உங்களுக்கு அவை காணாமல் போகும் அபாயம் உள்ளது எனத் தோன்றினால் ஒவ்வொரு பதிவையும் அதன் பின்னூட்டங்களுடன் சேர்த்து வேர்ட் கோப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலாமே.

நானும் முதலில் அவ்வாறு செய்தேன், ஆனால் போர் அடித்தது ஆகவே விட்டுவிட்டேன் என்பது வேறு விஷயம். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. நான் எழுதுவது ஒன்றும் காலத்தால் அழியாத இலக்கியங்கள் அல்ல, பெரும்பாலும் மொக்கைப் பதிவுகளே. ஆகவே அவை தொலைந்தாலும் அவற்றை விட அதிக மொக்கைகளை நான் உருவாக்கும் சக்தி பெற்றவன் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்பதையும் இங்கு இப்போது சொல்லிவைத்து விடுகிறேன்.

எவ்வளவு யோசித்தும் கட்டண இணையதளங்களின் பயன் புரியவே இல்லை. நான் எனது மொழிபெயர்ப்புக்கான இணைய தளம் வைத்திருக்கிறேன் என்றால் அது எனது தொழிலுக்கானது. காசும் குறைவுதான் (ஆண்டுக்கு 2500 ரூபாய்கள்). அதையும் வருவாயில் இருந்து கழித்து வருமான வரியையும் குறைத்து கொள்ளலாம். ஆக 20 அல்லது 30% வரி பிராக்கெட்டில் இருக்கும் நான் இங்கு மிச்சம் பிடிப்பது 500 அல்லது 750 ரூபாய். அதே சமயம் ப்ரோஸ்.காம்-ல் இருக்கும் எனது ப்ரொஃபைல் அதிக பயனுடையது, கூடவே இலவசம் வேறு. நான் அதில் பிளாட்டினம் மெம்பராக இருப்பதே இலவசமாகத்தான் (அது என் சேவையை அங்கீகரித்து தரப்பட்டது) என்பது இன்னொரு விஷயம், ஆனால் அது என் ஒருவனுக்கு மட்டுமே பொருந்தும்.

இங்கு பல பதிவர்கள் காசு கொடுத்து இணையதளம் பெற்று பதிவிடுகிறார்கள். அவர்கள் பின்னூட்டங்களில் அதன் அனுகூலங்களைக் கூறலாமே.

இன்னொரு எரிச்சல் தரும் விவகாரம் கட்டண மின்னஞ்சல் முகவரிகள். நான் டாட்டா இண்டிகாம் இணைய சேவையை பாவிப்பதால் எனக்கு ஒரு eth.net முகவரி உண்டு. அதை பெற்ற புதிதில் அதை உபயோகித்து எனது வாடிக்கையாளர்களுக்கு கோப்புகளை அனுப்பிப் பார்த்தேன். அவை உடனடியாக போய் சேராமல் அழும்பு செய்தன. பிறகு அதே கோப்புகளை யாஹூ அல்லது ஜிமெயில் மூலம் அனுப்பினாலோ அவை உடனடியாக இலக்கை அடைந்தன.

டாட்டா இண்டிகாமுக்கு ஃபோன் செய்து கேட்டால் அவர்கள் எப்படியும் மின்னஞ்சல்கள் 24 மணி நேரத்துக்குள் போய் சேரும் என பெருமையுடன் கூறுகின்றனர். அட நாய்களா, உங்கள் பெருமையில் இடி விழ. இன்னொன்றையும் கவனித்தேன். பல கம்பெனிகளுக்கு அவற்றின் கார்பரேட் மின்னஞ்சல் முகவரிக்கு கோப்புகள் அனுப்பினால் அவையும் உடனடியாக போய் சேர்வதில்லை. அவற்றின் பல அதிகாரிகள் எனக்கு தத்தம் யாஹூ அல்லது ஜீமெயில் முகவரிகளையும் கொடுத்து பீ.சி.சி. யில் கோப்புகளை பெற்றுக் கொள்கின்றனர். எனது கேள்வி இதுதான். காசு பெற்று மின்னஞ்சல் சேவை தருபவர்களது சேவையில் ஏன் இந்த குறைபாடு? இக்கேள்வியும் என் மனதைக் குடைகிறது.

ஆனால் ஒன்று. proz.com போன்ற மொழிபெயர்ப்பு தலைவாசல்களில் திரும்பத் திரும்ப ஒன்றையே கூறுகிறார்கள். அதாகப்பட்டது இலவச மின்னஞ்சல் சேவை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் விஷயத்தில் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று. கார்ப்பரேட் ஐ.டி. என்பது காசு கொடுத்துத்தான் பெறவியலும் என்பதால் அதை வைத்திருப்பவர்கள் நம்பத் தகுந்தவர்கள் என்பதே அதன் காரணம். இதிலும் உண்மை இல்லாமல் இல்லை. அதற்கு ப்ரோஸின் இந்த மன்ற விவாதத் திரியே சாட்சி. அதே சமயம் மின்னஞ்சல்கள் செல்வதில் தாமதம் ஏற்படுகின்றனவே. ஆகவே நான் என்ன சொல்கிறேனென்றால் இருவகைகளிலும் மெயில் அனுப்பலாம். கட்டண மின்னஞ்சல் சேவை நம்பிக்கைத்தன்மைக்காகவும், இலவச மின்னஞ்சல் சேவை துரித சேவைக்காகவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/21/2010

உமாசங்கர் ஐ.ஏ.எஸ். விவகாரம்

உமாசங்கர் நேர்மையான அதிகாரி என டோண்டு ராகவன் சொல்லித்தான் மற்றவர்கள் தெரிந்து கொள்ளவேண்டியதில்லை. அது வெள்ளிடைமலை.

அப்படிப்பட்டவரை, “தலித் கிறித்தவரான உமாசங்கர், தலித் இந்து என்று போலிச்சான்றிதழ் கொடுத்து பதவிக்கு வந்துவிட்டார்” எனக்கூறி அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறார் கருணாநிதி.

ஒரு விஜயகாந்த் படத்தில் அவர் ஐ.ஏ.எஸ். ஆக வருவார், நேர்மையான அதிகாரியாக இருப்பார். படத்தின் பெயர் மறந்து விட்டது, யாராவது சொல்லுங்கப்பூ. நிற்க.

விஜயகாந்த்துக்கு அப்படத்தில் நடந்தவைக்குக் குறையாத அளவுக்கு உமாசங்கருக்கு நடந்திருக்கிறது என்பதிலும் ஐயமில்லை.

ஆனால் அரசு அவர் மேல் எழுப்பிய குற்றச்சாட்டும் சீரியசானதே. அது உண்மை என கோர்ட் ஏற்றுக் கொண்டால், உமாசங்கர் அவர்களின் அடிப்படையே ஆட்டம் கண்டுவிடுமே. இது பற்றி யோசித்ததில் எனக்கு சில எண்ணங்கள் தோன்றுகின்றன.

குறிப்பிட்ட அந்தச் சான்றிதழை எப்போது கொடுத்தாராம்? கண்டிப்பாக 20 ஆண்டுகளுக்கும் முன்னால்தான் இருக்க வேண்டும். அப்போதே அதை ஏன் பார்க்கவில்லையாம்? இன்னொரு விஷயமும் உண்டு. இம்மாதிரி விஷயங்களைக் கையில் எடுக்க காலவரம்பு என ஒன்று இருக்க வேண்டுமே. அது இந்தக் கேசில் கண்டிப்பாக தாண்டப்பட்டிருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஆகவே இந்தக் குற்றச்சாட்டே காலாவதியானது எனவும் நினைக்கிறேன்.

எதற்கும் இருக்கட்டும் என வழக்கறிஞர் பதிவர் நண்பர் சுந்தரராஜனுக்கு ஃபோன் போட்டு கேட்டேன். அவரால் சட்டென பதில் கூற முடியவில்லை. இம்மாதிரியான மத்திய அரசு சேவை விதிகளையே கையாளும் எக்ஸ்பர்ட் வழக்கறிஞர்கள் பலர் உள்ளனர். அவர்களிடமிருந்து கேட்டுச் சொல்வதாக அவர் கூறியுள்ளார்.

ஒரு பாரதிராஜா படத்தில் சரிதா லட்சுமி பொய் சர்டிஃபிகேட் கொடுத்து கோட்டாவில் பதவி பெறுவார். அப்படத்தைப் பார்த்ததில்லை. பெயரும் மறந்து விட்டது. (கதாநாயகி நடிகையின் சரியான பெயரைக் குறிப்பிட்டு, படத்தின் பெயரையும் ‘ஒரே ஒரு கிராமத்திலே” எனக்கூறிய கோபிக்கு நன்றி) 

சட்டம் என்ன சொல்கிறதோ தெரியவில்லை. ஆனால் என்னைப் பொருத்தவரை உமாசங்கரின் கேஸ் தோற்றது என்றால் நீதிக்குத்தான் அவமானம். அரசியல் ஊழலுக்கு ஏற்றமாகிவிடும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

எம் ஆர் ராதா வாழ்வில் பிராமணர்கள்

முதற்கண் ராஜநாயஹம் அவர்களுக்கு நான் இட்ட இந்தப் பின்னூட்டத்தைப் பார்க்க இந்தப் பதிவுக்குப் போகவும்:

இந்தப் பதிவை அப்படியே நகலெடுத்து என் பதிவில் போடுகிறேன்.

முழுகிரெடிட்டையும் உங்களுக்கு அதில் தந்திருக்கிறேன். இதன் விஷயம் பலருக்கும் சுவாரசியமாக இருக்கும் என்பதாலேயே எனது இந்த செய்கை.

இப்போது “எம் ஆர் ராதா வாழ்வில் பிராமணர்கள்” என்னும் தலைப்பில் வந்துள்ள அவரது பதிவு:

சங்கரதாஸ் சுவாமிகளை "நாடக உலகத்தந்தை" என எல்லோரும் சொல்வதை
எம்.ஆர் .ராதா ஏற்றவரல்ல. 'நாடக உலகின் தந்தை ஜெகந்நாதய்யர்தான்' என எப்போதும் உறுதியாக ராதா சொல்வார்.

"மதுரை ஸ்ரீ பால மீன ரஞ்சனி சபா" முதலாளி ஜெகந்நாத அய்யர்.

ஜகன்னாத அய்யர் நூறு வருடங்களுக்கு முன் தன் நாடகக் கம்பெனியில் நடிகர்களிடம் 'சம பந்தி போஜனம்' கொண்டு வந்து புரட்சி செய்தவர்.

கிட்டப்பா இந்த நாடக கம்பெனியில் சேர தன் அண்ணன் தம்பிகள் ஐந்து பேரோடு வந்தார். "கிட்டப்பா ஒருத்தனுக்காக இத்தனை பேரை வெச்சி என்னாலே சமாளிக்க முடியாது''ன்னு சொல்லி ஜகன்னாத அய்யர் திருப்பி அனுப்பி விட்டார்.

ஜகன்னாத அய்யர் கம்பெனியிலிருந்து என் . எஸ் . கே சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி கொல்லம் போய் டி .கே .எஸ் . கம்பெனியில் சேர்ந்து விட்டார். ஜகன்னாத அய்யர் உடனே போலீசில் 'கம்பெனி நகையை திருடி விட்டான்' என்று என் .எஸ் .கே மீது புகார் கொடுத்து விட்டார். போலிஸ் என் .எஸ் . கே யை விலங்கிட்டு அவரை ஜகன்னாதய்யரிடம் அழைத்து வந்தார்களாம். மீண்டும் கம்பெனியில் சேர்ந்தார் என் .எஸ் .கே .

எம் . ஆர் .ராதாவின் நடிப்பு வாழ்க்கைக்கு அஸ்திவாரம் பலமாகப் போட்டவர் ஜகன்னாத அய்யர் தான். இவர் மீது ராதாவுக்கு மிகுந்த மரியாதை.

ராதா தன் வாழ்க்கையில் ரொம்ப உயர்ந்த இடத்தில் வைத்து தொழுகையே நடத்திய உத்தமர் ஒருவர் உண்டு . அவர் ஜட்ஜ் கணேசய்யர் ."கண் கண்ட தெய்வம் கணேசய்யர் " என்று நெகிழ்ந்து குறிப்பிடுகிறார்.

"விமலா அல்லது விதவையின் கண்ணீர் " என்ற நாடகத்திற்கு நாகையில் சனாதனிகள் தடை செய்யவேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த போது அந்த நாடகத்தை ஜட்ஜ் கணேசய்யர் பார்த்து விட்டு ராதாவை வானளாவ புகழ்ந்து நாடகம் நடப்பதற்கு தடையேதும் இல்லை என தீர்ப்பு வழங்கினார் .

தான் காதலித்த ஒரு பெண்ணை சக நடிகர் சைட் அடித்தார் என்பதற்காக ராதா கோபமாகி அந்த நடிகர் மீது திராவகத்தை ஊற்றிய போதும் கணேசய்யர் அந்த கேசில் இருந்து காப்பாற்றினார்.

இந்த திராவகம் வீசப்பட்ட நடிகர் பின்னாளில் ராதா எம்ஜியாரை சுட்ட கேசில் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டார் .ஆனால் அவர் ராதாவுக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்துவிட்டார் . ஏனென்றால் அந்த நடிகர் அந்த நேரத்தில் ராதாவின் நண்பர் ஆகியிருந்தார் . நண்பரானது எப்படி என்பது புரியாத புதிர் என்கிறார் ராதா .

திராவிட கழக மாநாடு ஒன்றில் கொடி பிடித்து குதிரையில் ராதா வந்த போது அந்த குதிரையை ஒரு காங்கிரஸ்காரர் சீண்டி அதன் பின்னங்கால்களால் உதை வாங்கி இறந்து போனார் . அவரை எச்சரித்தும் அந்த ஆள் மீண்டும் குதிரையை சீண்டியதை தொடர்ந்ததால், ராதா தான் டெக்னிக் ஆக குதிரை கடிவாளத்தை பிடித்து உதைக்கும்படி செய்திருக்கிறார் . அந்த கேசில் இவருக்கு தூக்கு கூட கிடைத்திருக்க வேண்டியது. அப்போதும் ராதாவுக்கு ஆபத் பாந்தவராக கணேசய்யர் தான் காப்பாற்றியிருக்கிறார்.

இந்த தன் குற்றங்களை சொல்லும்போது ராதா இந்த விஷயங்கள் பத்திரிகையில் வெளிவரும்போது ஜட்ஜ் கணேசய்யர் கெளரவம் பாதிக்கப்படக்கூடாதே என்ற பதற்றத்தையும் வெளிப்படுத்துகிறார் .

இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரிட்டீசாருக்காக யுத்த எதிர்ப்பு நாடகங்கள் நடத்துவதற்கு ராதாவுக்கு மிகப்பெரிய தொகையை ஏற்பாடு செய்து கணேசய்யர் உதவி செய்தார். அவர் வாழ்வில் மகத்தான திருப்பம் இந்த உதவி . அப்போது எம்.ஆர்.ராதா தளுதளுத்து கண்ணில் நீர் பொங்க கணேசய்யரை கையெடுத்து கும்பிட்டு சொன்னார் " தெய்வம் வெளியே இல்லே. நமக்குள்ளேதான் இருக்குன்னு பெரியவங்க சொல்லக் கேட்டிருக்கிறேன் . இன்னிக்குத்தான் அந்த தெய்வத்தை நேருக்கு நேராப் பார்க்கிறேன்."

ராதா வாழ்விலிருந்து முழுவதுமாக வறுமையை அகற்றியவர் ஜட்ஜ் கணேசய்யர் தான். புகழ், பணம், செல்வாக்கு எல்லாமே அப்புறம் ராதாவைத்தேடி ஓடி வந்து குவிந்தது .

ராதா மதித்த இன்னொரு பிராமணர் திருவாரூர் சர் ஆர் . எஸ் . சர்மா. அவரைப் பற்றி ராதா பூரிப்புடன் சொன்னது " அவர் ஆரியர்களுக்கு கொடுத்ததை விட திராவிடர்களுக்குக் கொடுத்தது தான் அதிகம்."

பரத நாட்டிய கலைக்கு பிராமணர்களால் தான் உன்னதப் பெருமை கிடைத்தது என ராதா அழுத்தமாக நம்பினார்." ஒரு காலத்தில் தாசிகளுக்கே உரிய கலையாயிருந்த பரதக்கலை பிராமணர்களால் புனிதமான கலையாயிடிச்சி. அந்தக் கலைக்காக பிராமணர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை அர்ப்பணம் செய்றாங்களே!" பரவசமாக சொல்கிறார் .

'சிறைச்சாலை சிந்தனைகள் ' என்ற நூல் ராதா அப்போது எம்ஜியார் கேசில் சிறையிலிருந்து வெளி வந்தவுடன் விந்தன் அவரை பேட்டியாக எடுத்தது.
ராதாவின் ஒவ்வொரு அமர்க்களமான,அடாவடியான கருத்துகளுக்கும் (அவருடைய அபிப்பராயங்கள் பல பாமரத்தனமானவை) விந்தன் comments தான் நூலில் ஒரு செயற்கையான குறை. ஏனென்றால் ப்ளாகில் வருகின்ற பல அபத்த பின்னூட்டங்கள் போலவே இருக்கின்றன விந்தன் தன் பேட்டியில் எம் ஆர் ராதாவின் பேச்சில் பிரமித்து ஏதேதோ சொல்வது .

கதிரில் வெளிவந்த தொடரை முழுவதும் பைண்ட் செய்து ஒரு நண்பர் வைத்திருந்ததை 25 வருடங்களுக்கு முன் படித்திருக்கிறேன் . ஆனால் இப்போது வெளி வந்துள்ள நூலில் பல விஷயங்கள் எடிட் செய்யப்பட்டுள்ளன என தெரிகிறது .

அவர் காலத்து மற்ற நடிகர்களைப் போலவே ராதா நிறைய..நிறைய்ய பலவீனங்கள் கொண்ட மனிதர். ஆனால் அவரிடம் ஏனைய நடிகர்களிடம் இருந்த hypocrisy கிடையாது என்பதுதான் அவரின் குண விஷேசம். தான் செய்த மோசமான தவறுகளைக்களைக்கூட வெளிப்படையாக பேசிய ஒரே தமிழ் நடிகர் ராதா மட்டுமே. ராதா அவருடைய அபூர்வமான தனித்துவமான நடிப்புக்காக மிகுந்த கவனத்துக்குரியவர்.


மீண்டும் டோண்டு ராகவன். ஒரு முறை திருமலை தர்மதரிசனத்தில் கோளாறு ஏற்பட்டதை கண்டு வெகுண்டு அந்தக் கோவிலையே வெடி வைத்துத் தகர்க்க தான் ஏற்பாடு செய்ததையும், எதிர்பாராத விதமாக அந்த குண்டு முன்னமேயே வெடித்து தனக்கும் காயம் ஏற்பட்டதையும் ராதா அவர்கள் வெளிப்படையாக குமுதத்தில் எழுதியதை நானே படித்திருக்கிறேன்.

யாரையுமே கருப்பு வெள்ளை நோக்கில் பார்க்கக் கூடாது என்பதை ராதா அவர்களது வாழ்விலிருந்தே நான் அறிந்து கொண்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/20/2010

எல்லாமே மாயை

நேற்று இரவு டிவியில் ரஜனி நடித்த “அதிசயப் பிறவி” படம் போட்டார்கள். தவறுதலாக எமலோகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரஜனி தூள் கிளப்புவார். அவருக்கு துணையாக உபகுப்தன் என்னும் பெயரில் வரும் சோ அவர்களும் பட்டை கிளப்புவார். ஆனால் இப்பதிவு அப்படம் பற்றி இல்லை.

அதில் நாகேஷின் வேலையாளாக வரும் ஓமக்குச்சி நரசிம்மன் அடிக்கடி உணர்ச்சியின்றி முகத்தை வைத்துக் கொண்டு எல்லாமே மாயை என்பார். அது என்ன மாயை? பார்ப்பவை எல்லாமே உண்மை எனக் கொள்ளக்கூடாது. உதாரணத்துக்கு இருட்டில் வரும் வழியில் ஒரு தாம்புக் கயிறு கிடக்க, அதை பாம்பு என மருளுபவர்கள் உண்டல்லவா. அது கயிறே எனத் தெரியும் வரை இந்த பய உணர்வு என்னவோ உண்மையானதே. ஆனால் அதன் காரணம் உண்மையானதல்ல.இதுவும் மாயையே.

தில்லியிலிருந்து சென்னைக்கு நிரந்தரமாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் வரும் வரை நான் எனது வீட்டை விட்டு விலகி இருந்த அந்த இருபது பிளஸ் ஆண்டுகளில் பலமுறை என்னைப் பின்தொடர்ந்த கனவு பற்றி நான் எழுதிய சில வரிகள்:

“இப்போது நங்கநல்லூரில் நான் வசிக்கும் வீட்டிற்கு 1969-ல் குடிவந்தோம். சொந்த வீடுதான். 1979-ல் குடும்பச் சூழ்நிலை காரணமாக வீட்டை வாடகைக்கு விட்டு மாம்பலத்தில் குடி புகுந்தோம். பிறகு 1981-ல் ஐ.டி.பி.எல்லில் வேலை கிடைத்து தில்லி சென்றோம். தில்லியில் 20 வருடங்கள் வாசம். அந்தக் காலக் கட்டத்தில் அடிக்கடி எனக்கு ஒரு கனவு வரும்.

கனவில் நான் திரும்பவும் நங்கநல்லூர் வீட்டிற்கே குடி வருகிறேன். எல்லா அறைகளிலும் சுற்றுகிறேன். என் தந்தையுடன் பேசிய, விவாதித்தத் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன. நீண்ட கனவுதான். திடீரென்று விழிப்பு வரும். தில்லியில்தான் இருக்கிறோம் என்பது புரிய சில நிமிடங்கள் ஆகும். அப்போது தீராத சோகம் என்னைக் கவ்வும். அடுத்த நாள் முழுக்க ஒரு வித மயக்கத்தில் கழியும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், சில சமயம் கனவில் எனக்கு நானே கூறிக் கொள்வேன். "இது வரை கனவாக இருந்தது, நிஜத்திலேயே நடக்கிறது" என்று. அதுவும் கனவுதான் என்றுத் தெரிய, இரட்டிப்பு ஏமாற்றம்தான்”.

எப்படியோ நிஜமாகவே எனது வீட்டுக்கே திரும்பவும் குடி “வந்தப் புதிதில் சிறிது கலக்கம்தான், திடீரென்று விழித்துக் கொள்வேனோ தூக்கத்திலிருந்து என்று. அதிலிருந்து மீள மேலும் சில காலம் பிடித்தது. அக்கனவும் வருவதில்லை இப்போது”.


ஆக மேலே சொன்ன கனவும் மாயைதான் என்றாலும் அதுவும் வரும்போது உண்மையே. அதே போலத்தான் பறக்கும் கனவுகளும்.

இதையே வேதாந்திகள் விரிவுபடுத்தி வாழ்வே மாயம் என்று கூறுகின்றனர்.

ஜெயமோகனின் இப்பதிவைப் பார்த்ததும் எனக்குள் பல எண்ணங்கள் எழுந்தன. அதிலிருந்து சில வரிகள்:
“விஷ்ணுபுரத்தில் உள்ள கனவுகளில் இருந்து கனவுக்கு என்ற விஷயம் எளிமையாக காடு நாவலிலும் வருகிறது. அய்யர் சிவஞானபோதத்தில் இருந்து ஒரு பாடல் சொல்கிறார்

நோக்காது நோக்கி நொடித்தன்றே காலத்திற்
தாக்காது நின்றுளத்தில் கண்டு இறைவன் ஆக்கத்தே
கண்ட நனவுணர்வில் கண்ட கனவுணர
கண்டவனில் இன்றாம் கட்டு

மொத்த காடு நாவலுக்கும் சாரம் அது. ‘நனவுணர்வில் கண்ட கனவுணர’ க்கூடிய ஒரு சில மாதங்கள், அதுதான் காட்டின் பேசுபொருள்.

சமீபத்தில் என்னைபபர்க்கவந்த என் வாசகரான குமார்பாபு, முன்பு சென்னை கீழ்ப்பாக்கம் உளமருத்துவமனையில் மருத்துவப்பேராசிரியராக இருந்தவர், இந்த வரியைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார்.காடு நாவலை பலமுறை வாசித்த அவருக்கு அதன் தத்துவச் சாரமாகவே ’நனவுணர்வில் கண்ட கனவுணர’ என்றவரி தென்பட்டதாகச் சொன்னார்.

நனவுக்குள் கனவும் கனவுக்குள் நனவும் என்பது இந்திய சிந்தனை மரபில் வேதாந்தம், மகாயான பௌத்தம், சைவசித்தாந்தம் மூன்றுக்கும் பொதுவான அகத்தரிசனம். பலபல கோணங்களில் இந்திய நூல்கள் அதை விவாதித்திருக்கின்றன. இந்த வாழ்வெனும் கனவுக்குள் இருந்து நாம் இன்னொரு கனவுக்குள் விழித்தெழுகிறோம், கனவுகளுக்குள் கனவாகச் சென்று உள்ளே இருக்கும் இன்மை வடிவம் கொண்ட பிரம்மத்தை அறிகிறோம் என்பதே அத்வைதம்”.


ஜெயமோகனது அப்பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ:
“தான் பட்டாம்பூச்சியாக இருப்பது போன்ற கனவை அடிக்கடி காணும் அரசன் ஒருவனுக்கு ஒரே குழப்பமாம், “தான் பட்டாம்பூச்சியாக இருப்பதாக கனவு காணும் அரசனா அல்லது அரசனாக இருப்பது போன்ற பட்டாம்பூச்சியா என்று.

அவன் குழப்பம் மேலே எவ்வாறு விரிவடைந்தது, அது தீர்ந்ததா இல்லையா என்பதெல்லாம் எனக்கு தெரியாது.

கனவு முடியும் வரைக்கும் அது யதார்த்தமே என்றும் ஓரிடத்தில் படித்துள்ளேன். திருமாலுக்காக நீர் சேந்தி வரச்சென்ற நாரதர் மாயையில் சிக்கி, பெண்ணாக மாறி குழந்தைகள் பெற்று என்றெல்லாம் போகும் கதையும் படித்துள்ளேன்”.


ஆனால் இம்மாதிரி எண்ணங்களில் ஈடுபட்டால் என்னடா இந்த வாழ்க்கை என விரக்தி தோன்றலாம். அப்படி எல்லோருமே செய்தால் காரியத்துக்காகுமா? ஆகவே அம்மாதிரி எண்ணங்கள் மற்றும் கவித்துவமான கருத்துகள் வருபவர்களுக்கு ஹாரிஸ்தான் சரி. அவன் என்ன செய்தான் என்பதை “படகில் மூவர், அதில் நாயை மறக்கலாமா” என்னும் உலகபிரசித்தி பெற்ற நாவலில் பார்க்கலாம்:

“You can never rouse Harris. There is no poetry about Harris - no wild yearning for the unattainable. Harris never "weeps, he knows not why." If Harris's eyes fill with tears, you can bet it is because Harris has been eating raw onions, or has put too much Worcester over his chop.

If you were to stand at night by the sea-shore with Harris, and say:
"Hark! do you not hear? Is it but the mermaids singing deep below the waving waters; or sad spirits, chanting dirges for white corpses, held by seaweed?" Harris would take you by the arm, and say:
"I know what it is, old man; you've got a chill. Now, you come along with me. I know a place round the corner here, where you can get a drop of the finest Scotch whisky you ever tasted - put you right in less than no time."

Harris always does know a place round the corner where you can get something brilliant in the drinking line. I believe that if you met Harris up in Paradise (supposing such a thing likely), he would immediately greet you with:
"So glad you've come, old fellow; I've found a nice place round the corner here, where you can get some really first-class nectar."

என்னுடைய பம்பாய் நண்பன் ரங்கராஜுவும் ஹாரிஸ் போலத்தான். அவனுடன் சமீபத்தில் 1973-ல் பேசிக் கொண்டிருந்தேன். ஹிட்லர் அறுபது லட்சம் யூதர்களைக் கொலை செய்வித்தான் என்பதை அரை மணிநேரம் உணர்ச்சி பூர்வமாக சித்தரித்தேன். சிறிது நேரம் பிரமிப்புடன் நின்றான். “நிஜமாகவே அறுபது லட்சம் பேரா” எனக் கேட்டான். ஆமாம் என்றேன். இன்னும் சில நிமிடங்கள் கழித்து தீவிரமாக “பக்கத்தில் இருக்கும் பஞ்சாபி டாபாவில் லஸ்ஸி நல்லாருக்கும், வா போவோம்” என்றான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/19/2010

ஜாபாலி, சார்வாகரை விடவா இப்போதைய நாத்திகர்கள் அதிகம் பேசிவிட்டனர்?

நாத்திகமும் ஆத்திகமும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள். வாழ்நாள் முழுக்க ஒரு சராசரி மனித ஆத்திகனாகவோ நாத்திகனாகவோ இருந்தது மிக மிக அரிதே. நாத்திகர்கள் கடவுளை திட்டிக் கொண்டே இருப்பதாலேயே அவர்கள் கடவுளை அதிகம் நினைப்பதாகவும் அவர்களுக்கே மோட்சம் நிச்சயம் என்றும் கூட சில கோஷ்டிகள் கூறிவருகின்றன.

அப்படியானால் நம்ம ஈ.வே.ராமசாமி நாயக்கர் அவர்கள் சொர்க்கத்தில்தான் இருக்க வேண்டும். இப்போது அவரது சிலை வேறு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அருகேயே பெருமாளின் நிலையான பார்வையின் கீழேயே வந்து விட்டது. நிச்சயம் அவரை இப்போது ராமசாமி ஆழ்வார் என்று கூட கூறலாம்.

முரளி மனோஹரின் கேள்வி, அது என்ன ஆழ்வார் என்று? அதாகப்பட்டது பெருமாளுக்கு பின்புறம் காட்டியபடி சிலை இருந்தால் அது துவாரபாலகாளை குறிக்குமாம். பெருமாளை நோக்கிய வண்ணம் இருந்தால் அது ஆழ்வாராம், ஆகவேதான் ராமசாமி ஆழ்வார் என்றேன்.

இப்போதைக்கு ராமசாமி ஆழ்வாரை விட்டுவிடுவோம். ஜாபாலி பற்றி பேசுவோம். அவரைப் பற்றி இந்தப் பதிவிலிருந்து சில வரிகள்: (சமயம், ராமரை அயோத்திக்கு அழைத்துச் செல்ல பரதன் காட்டுக்கே வந்துள்ளான்).

“அங்கே அயோத்தியில் இருந்து வந்திருந்த பல முனிவர்களில் ஒருவரான ஜாபாலி என்பவர் ராமரைப் பார்த்துக் கூறுகின்றார். ஜாபாலி பேசுவது நாத்திக வாதம். முன் காலத்தில் நாத்திகமே இல்லை, என்றும், வேதங்களில் கூடச் சொல்லப் படவில்லை என்றும் பலரும் நினைக்கலாம். இறைவன் என்ற தத்துவம் ஏற்பட்ட நாளில் இருந்தே நாத்திகம் என்ற தத்துவமும் இருந்தே வருகின்றது. எவ்வாறு இறை ஏற்பு இருக்கின்றதோ, அவ்வாறே இறை மறுப்பும் இருந்தே வந்திருக்கின்றது. இன்று புதியதாய் எதுவும் வரவில்லை.

ஜாபாலி ஸ்ரீராமனிடம் சொல்கின்றார்: “ஏ, ராமா, நீ என்ன பாமரத்தனமாய்ப் பேசுகின்றாய்? சிந்திக்கின்றாய்? யார் யாருக்கு உறவு? ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு என்ன செய்ய முடியும்? அனைவருமே தனித்தனியாய்த் தானே பிறக்கின்றார்கள். பயணம் செய்யும் மனிதன் ஒரு நாள் ஒரு ஊரைக் கடப்பது போலவும், இரவு தங்குவது போலவும் உள்ள இந்த வாழ்க்கையில் யார் தந்தை? யார் மகன்? தசரதன் உனக்குத் தந்தை என்பதற்கு அவன் ஒரு கருவி மட்டுமே!

நீ கற்பனையாக உணர்வுகளை வளர்த்துக் கொண்டு வீணில் வருந்தாதே! நீ இப்போது உன் தந்தைக்குச் செய்த ஈமக் கடன்களினால் என்ன பயன்? உன் தந்தையோ இறந்துவிட்டான். அவனால் எதை உண்ண முடியும்? இந்த உணவை இப்போது நீ இங்கே படைத்தது வெறும் வீணே! பயணம் செய்யும் நமக்குக் கையில் தானே உணவு எடுத்துச் செல்கின்றோம்? அப்படி இருக்க இறந்தவனுக்கு இங்கே உணவு படைத்தால் அது அவனுக்குப் போய்ச் சேருமா என்ன? இவை எல்லாம் தான, தர்மங்களை எதிர்பார்ப்பவர்களால் சாமர்த்தியமாக விதிக்கப் பட்ட வழிமுறைகள். நீ இப்போது ராஜ்யத்தைத் துறப்பது என்பதும் உன் குலத்தில் யாரும் செய்யாத ஒரு காரியம். ராஜ்யத்தை ஏற்று அதனுடன் கூடி வரும் சுகங்களை அனுபவிப்பாயாக!” என்று கூற...”


மேலே குறிப்பிட்ட அப்பதிவில் இந்த இரு மனமுருக்கும் பாடல்களையும் எதுக்கும் இருக்கட்டும்னு போட்டுக் கொள்கிறேனே. பதிவர் கீதா சாம்பசிவத்துக்கு நன்றி.

““விம்மினன் பரதனும் வேறு செய்வது ஒன்று
இன்மையின் அரிது என எண்ணி ஏங்குவான்
செம்மையின் திருவடித் தலம் தந்தீக என
எம்மையும் தருவன இரண்டும் நல்கினான்.

அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான்
முடித்தலம் இவை என முறையின் சூடினான்
படித்தலத்து இறைஞ்சினான் பரதன் போயினான்
பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான்.

வால் பையன் ராஜன் வகையறாக்களுக்கு ஜாபாலியை பிடிக்கும் நிச்சயமாக என்கிறான் முரளி மனோகர். இருக்கட்டுமே, சார்வாகரையும் அவர்களுக்கு பிடிக்க வேண்டுமே.

இப்போது சார்வாகர் முறை. அவர் கூறுகிறார்:
''உடலானது இந்திரியங்கள் மூலமாக இயங்குகிறது.உலகும் அதில் உள்ள அனைத்தும் இயற்கையாய்த் தோன்றுகின்றன.அவற்றைப் படைக்க ஒரு இறைவன் தேவையில்லை.நன்றாக சாப்பிட்டு,தூங்கி முடிந்த வரை வாழ்வின் அத்தனை இன்பங்களையும் அடைந்து விடவேண்டும்.கடவுள் வழிபாடு, சடங்குகள்,ஒழுக்கங்கள் அவசியம் இல்லாதவை. தீ சுடுவதும்,நீர் குளிர்ந்திருப்பதும் இயற்கைத் தன்மையால்;கடவுளால் அல்ல.மோட்சம், சொர்க்கம், ஆன்மா, பரலோகம் என்பவை கட்டுக் கதைகள்.வேதங்கள் வேள்வி கற்றவரின் வயிற்றுப்பாட்டிற்காக ஏற்பட்டவை.''

பதிவர் ஹரிஹரனின் ஒரு வலைப்பதிவிலிருந்து மேலும் சில வரிகள்:
“"Runam Krithva Ghritham piba"
ருணம் கிரித்வா கிரிதம் பிபா
"கடன் வாங்கியாவது நெய் குடி"

இது சார்வாக வாழ்வியலில் ஒரு சுலோகம். உடலை மட்டுமே பிரதானமாகக் கொண்டாடும் வாழ்வியல் தத்துவம் சார்வாக தத்துவம். கடனை வாங்கியாவது நெய் பருகி உடலைப் பேணச்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம் என்பது மாதிரி மனிதன் பிறந்ததே புலன் இன்பங்களை அனுபவிப்பதற்கே என்கிற ஆரம்பநிலை வாழ்வியல் தத்துவம்.

இப்படி உடலை மட்டுமே பிரதானம் என்கிற புள்ளியினும் சிறிய சிந்தனையாகிய சார்வாக தத்துவம் எப்படி எதனால் என்பது மாதிரியான கேள்விகளை கேட்கச் சொல்வதில்லை. சார்வாகத்தில் எல்லாமே ஏன் கேள்விகள்தான். ஏன் என்பது இருப்பதிலேயே எளிதாக எந்தப் புரிதலும் இல்லாத அளவிலேயே எவராலும் ஏராளமாக எழுப்ப முடிகிற எளிதான கேள்வி!

ஆக உடலை மட்டும் பேணும், ஏன் என்று மட்டும் கேள்வி கேட்பது இருப்பதிலேயே எளிதான ஆரம்ப நிலை வாழ்வியல் முறை. இதில் சிந்தனைக்கு இடம் எங்கே இருக்கிறது? "ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை" என்பது மாதிரி சார்வாக வாழ்வியல் இருந்தது.

மனிதனுக்கு வேதநெறி வாழ்வியல் என்கிற சர்க்கரை கிடைத்தால் இனிப்புச் சுவைக்கு இலுப்பைப் பூவுக்கு ஏன் செல்லப்போகிறான். எனவே சார்வாக வாழ்வியல் முறை காலஓட்டத்தில் மனித நாகரீகத்தின் பரிணாம வளர்ச்சி என்கிற மியூஸியப் பொருளாக ஆனது. புள்ளி அளவில் சிந்தனை, உடலே அல்டிமேட் என்கிற வாழ்வியல் முறையின் அருகே பெரிய ஹைவேஸ் மாதிரி வேதநெறி வாழ்வியல் பல்விதமான எதனால், எப்படி என்கிற subjective inquiry களுக்கு அறிவியல் விளக்கங்கள் தந்தபடி நான்கு வேதங்கள்,கல்வி, கலைகள்,மருத்துவம், போர்கருவிகள், ஆன்மீக உயர்தத்துவ உபநிடங்கள், வழிபாட்டுமுறைகள், என்று பரிணாம வளர்ச்சி அடைந்தது கடந்த 10,000 ஆண்டுகளில்.

எது நேர்மையானதோ எது மனிதனின் பரிணாம வளர்ச்சியோடு சிந்தனைகளுக்கு வழிகாட்டுகிறதோ அதுவே மனிதனின் வாழ்வியல் முறையாக தினசரி வாழ்வில் நீடிக்கும். வலிந்து திணிப்பதால் தத்துவங்கள், வாழ்வியல் நெறி என எதுவும் காலத்தினை வென்று நெடுங்காலம் நீடித்து நின்றிடாது.

Anything and everything is subjected to evolution. Time changes anything and everything. The one that fails to cope up to face the challenges and upgrade / evolve to the legitimate requirements will diminish because of the builtin deficiency.

சார்வாக வாழ்வியல் தத்துவத்தினை இந்து வேதநெறி தின்று உள்வாங்கியதாகச் சொல்வதெல்லாம் பரிணாம வளர்ச்சியினை முன்னேற்றத்தினை இல்லை என்று மறுப்பதற்கொப்பானது”.


பை தி வே சார்வாகர் என தட்டச்சிட்டு எனது வலைப்பூவிலேயே தேடிய போது எனது இந்த நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் பதிவில் கிடைத்த வரிகள்:

“hayyram said...
///வால்பையன் has left a new comment on your post "சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்":

மற்ற மதத்துகாரர்கள் இதை கொண்டாட மாட்டாங்களே, அவுங்களுக்கு அம்பா அருள் புரிய மாட்டாளா?
அதென்ன வருஷத்துக்கு ஒருக்கா மட்டும் அம்பாளுக்கு சொறிஞ்சி கொடுக்குறது?!
Posted by வால்பையன் to பகுத்தறிவு at September 25, 2009 9:47:00 PM IST ///
சார், இந்துக் கடவுளை அவமதிக்கும் விதமான வால்பையனின் இந்த கேள்விக்கு நீங்கள் பதில் சொன்னால் என்ன சொல்வீர்கள்?

September 26, 2009 11:03 AM
dondu(#11168674346665545885) said...
@ hayyram
வால்பையன் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவர் ஒரு ஹிந்துதான். இம்மதத்தில்தான் நாத்திகர்களும் இருக்கவியலும். சார்வாக மகரிஷி, ஜாபாலி ஆகியோர் பேசியதை/எழுதியதைக் கருதும்போது வால்பையன் ஜுஜூபி.

இதே மாதிரி பேசிய கண்ணதாசன் பிறகு இரட்டிப்பு வேகத்தோடு கண்ணன் காட்டிய வழியினுள் வந்தார், அர்த்தமுள்ள இந்து மதம் எழுதினார். அதே போல வால்பையனுக்கும் பிராப்தம் இருந்தால் அப்படியே நடக்கட்டுமே, என்ன போச்சு”?


கடைசியாக ஒரு வார்த்தை. நாத்திகர்களும் ஹிந்துக்கள்தான்.

மேலும் அரசு தரும் இட ஒதுக்கீட்டை அனுபவிப்பவர்களில் பல தலித்துகள் மதம் மாறினால் பிசி-ஆகி விடுவதைத் தவிர்க்கவே ஹிந்து மதத்திலேயே இருப்பவர்களும், மற்ற ஓபிசி/எம்பிசி-க்களும் ஹிந்துக்கள்தான். அவர்கள் அனுபவிக்கும் சலுகைகள் அவர்கள் ஹிந்து மதத்தின் சாதிகள் என்பதாலேயே வருகிறது. ஆக நாங்கள் விரும்பாமலேயே எங்களை ஹிந்துக்களாக்குகிறார்கள் என யாரும் மருள் வந்து சாமியாடவெல்லாம் வேண்டாம். தாராளமாக வேறு மதம் என கோஷித்துக் கொள்ளுங்கள் இட ஒதுக்கீட்டை விட்டுக் கொடுத்து விட்டு. ஹிந்து என்றால் திருடன் என பாரசீக அகராதி கூறியதாகக் கூறிக்கொள்பவரும் அதை செய்ய மாட்டாரே. ஏனெனில் அவர் குடும்பத்தாருக்கு சலுகை போய் விடுமே. புரிகிறதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/17/2010

தொலைந்து போன திறமைகள்

இப்பதிவில் நான் குறிப்பிடப்போகும் திறமைகள் என்னிடம் மெதுவாக ஒட்டிக் கொண்டத் திறமையோ, என்னையறியாமலே வந்த திறமையோ, எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே இருந்த திறமையோ அல்ல.

எங்கள் வீட்டுக்கருகில் இருக்கும் மளிகைக் கடையில் பெரிய லிஸ்டைக் கொடுத்து சாமான்களை எடுத்து, அவற்றுக்கு பில் போடும்போது கடைக்காரர் ஒவ்வொரு பொருளுக்குமான தொகைகளை எழுதும்போதே நான் அவற்றை மனதிலேயே ஒன்றன் பின் ஒன்றாகக் கூட்டி விடுவேன். நான்கு/மூன்றிலக்கத் தொகைகளை சுலபமாகவே கூட்டிட இயலும். எல்லாவற்றையும் எடுத்து எழுதி அவர் கால்குலேட்டரை எடுக்கும்போது மொத்தத் தொகையையும் முதலிலேயே கூறி விடுவேன். அவர் கூட்டி முடித்துப் பார்த்தால் கிட்டத்தட்ட 100% சதவிகிதம் நான் சொன்னதுதான் வந்திருக்கும். சில சமயம் சரியாக வராமல் போவது அவர் எழுதும் எண்களை மாற்றிப் படிப்பதால் வரும். உதாரணத்துக்கு சிலர் 4 என எழுதுவது 9 போலத் தோன்றும் அபாயம் உண்டு.

நான் கடைக்கு சென்றால் இதை நாங்கள் எல்லோருமே ஒரு விளையாட்டாகவே பாவிப்போம். இதில் என்ன திறமை வந்தது என்றால், மனதுக்குள்ளேயே கணக்கு போடும் திறமைதான். நாங்கள் பள்ளீயில் படிக்கும்போது 4 மற்றும் ஐந்தாம் வகுப்பில் மனக்கணக்குகளை அதிகம் போடச் சொல்வார்கள். பிறகு நான் மேல் வகுப்புகளுக்கு சென்றபோது அந்த பழக்கமே கிட்டத்தட்ட அழிந்தது எனக் கொள்ளலாம்.

இப்போதெல்லாம் எல்லாவர்றுக்கும் கால்குலேட்டரையே எடுக்கிறார்கள். நான் பார்த்த ஒரு பிரெஞ்சு பிரகஸ்பதி 10 + 2 = 12 என்பதற்கும் கால்குலேட்டரைத் தேடியதை என்னால் இன்னும் மறக்கவியலவில்லை. சிலர் கூறலாம் கால்குலேட்டர்கள் இருக்கும்போது ஏன் மண்டையை உடைத்துக் கொள்ளவேண்டும் என. அவர்கள் இந்தத் திறமையின் மிகச்சிறந்த அனுபவத்தையே இழக்கிறார்கள் என்பேன். நாங்கள் அக்காலத்தில் லாகரிதம் எல்லாம் கற்றோம். இப்போதும் அதைக் கற்பிக்கிறார்கள் என நினைக்கிறேன். சமீபத்தில் 1990-91 கல்வியாண்டில் இரு ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு நான் கணக்கு சொல்லிக் கொடுத்த போதும் அது இருந்தது, இன்று இன்னும் இருக்கிறது என நம்ப விரும்புகிறேன்.

பொருளாதார நிர்ப்பந்தங்களால் பல திறமைகள் தேவையின்றியும் போயுள்ளன. அவற்றில் முக்கியமானது நல்ல கையெழுத்துடன் எழுதுவது. அக்காலங்களில் பத்திரங்கள் எழுத நல்ல காப்பி ரைட்டர்கள் தேவைப்பட்டனர். ஆனால் இப்போது அவர்களுக்கு தேவையின்றி கணினி ஃபாண்டுகள் வந்து விட்டன. பாட்டுகளை கம்போசிங் செய்வதிலும் கணினியின் உபயோகம் வந்துள்ளதக அறிகிறேன்.

இவை எல்லாம் நல்லதுக்கா இல்லையா என்பதை எளிதாகக் கூறிவிட முடியாது. பொருளாதார மாறுதல்கள் சில திறமைகளைத் தேவையில்லாமல் ஆக்கினாலும் நான் முதலில் கூறிய மனக்கணக்கு திரமைகள் மாணவர்களிடம் இல்லாமல் போவது நல்லதுக்கல்ல என்றே கூறுவேன். ஆகவே மாணவர்களிடம் எடுத்த எடுப்பிலேயே கால்குலேட்டர்கள தராது பார்த்துக் கொள்ள வேண்டும்.

நான் வழக்கமாக பத்திரிகைகள் வாங்கும் கடை முதலாளிக்கு பத்தாம் வகுப்பில் படிக்கும் ஒரு சுட்டிப் பெண் இருக்கிறாள். அக்குழந்தையை நான் அவளது ஐந்தாம் வகுப்ப்லிருந்தே கவனித்து வருகிறேன். நான் 100 ரூபாயைக் கொடுத்து 34.50 க்கு பத்திரிகைகள் எடுத்திருப்பதாகக் கூறினால், அந்த சுட்டிப் பெண் மீதி 65.50 என்பதை ஆங்கிலத்தில் உரக்கக் கூறிவண்ணம் சரியான சில்லறை தருவாள். அவள் பெற்றோகளோ முதலில் ஐம்பது பைசாவை எடுத்து 35 எனக்கூறிவிட்டு, 5 ரூபாயை எடுத்து 40 எனக்கூறி, பிறகு முறையே 10 மற்றும் ஐம்பது ரூபாய் நோட்டுக்களை சேர்த்து 100 எனக் கூட்டி நம்மிடம் தருவார்கள். சில்லறை நோட்டுகள் கைவசம் ரெடியாக இல்லாவிட்டால் கால்குலேட்டரே துணை. தென்றல் என்னும் பெயருடைய அந்தச் சுட்டிப் பெண் ஆறாம் வகுப்பிலேயே கணக்குக்கான ஒலிம்பியாட்டில் கலந்து கொண்டு மூன்றாம் பரிசு பெற்றவள். சகபோட்டியாளர்கள் பலர் அச்சமயம் அவளை விட 4 அல்லது 5 வயது பெரியவர்கள்.

இந்தச் சுட்டிப் பெண் போல குழந்தைகள் இருக்கும்வரை நமது இளைய சமுதாயத்தின் மேல் உள்ள எனது நம்பிக்கை குறையாதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

முரளி மனோகர் நெட்டில் பார்த்த சில விஜய் ஜோக்ஸ்

இன்னிக்கு டோண்டு பெரிசை தாஜா செய்து இப்பதிவைப் போட அவரிடம் அனுமதி வாங்கியது முரளி மனோகர். நெட்டிலிருந்து சுட்ட இந்த ஜோக்குகள் அரதப் பழசுதான், ஆனால் நான் முதன் முறையா பார்க்கறேன், ஆகவே என்னைப் பொருத்த வரைக்கும் அவை புதுசுதான்.

ஜோக் 1:
அம்மா : பவித்ரா.... டிவிடி வாங்கிட்டு வர்றியாம்மா.......?
பவித்ரா : OKம்மா....
அம்மா : அய்யோ.... என்ன படம்னு சொல்லலையே, ஒருவேளை விஜய் படம் வாங்கிட்டு வந்துட்டா.... வாந்தி வருமே.... தலை சுத்துமே.... சூசைட் பண்ணிக்கலாம்-னு தோனுமே.... என் பொண்ணுக்கு பைத்தியமே பிடிச்சுடுமே.... அய்யோ.... பவித்ரா... பவித்ரா... !!!!

பவித்ரா : அம்மா.... டிவிடி வாங்கிட்டேன்.... (கையில் “வரலாறு” பட டிவிடி)
அம்மா : அஜித் இருக்க.....
பவித்ரா : பயம் ஏன்...

ஜோக் 2:
போலீஸ் : இன்னைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை என்ன?
கைதி : படம் பார்க்கணும்...
போலீஸ் : சரி வேட்டைக்காரன் போகலாமா ?
கைதி :அதுக்கு என்ன நீங்க தூக்குலயே போட்டுடலாம்...

ஜோக் 3:
விஜய் : சன் டிவி மேல கேஸ் போடனும்
எஸ் ஏ சி : ஏன் என்னாச்சி
விஜய்: என் அடுத்த படம் வெற்றி பெறும்னு சொன்னதை விளையாட்டு செய்திகளில் காமிச்சிட்டாங்க

ஜோக் 4:
டாக்டர் என் பிள்ளை பிழைச்சுக்குவானா?
விஷம் குடிச்சாக்கூட பிழைக்க வைச்சிருக்கலாம்...பையன் ரொம்ப தெளிவா வேட்டைக்காரன் டிரெய்லர் தொடர்ந்து 100 தடவை பார்த்து இருக்கான்.

ஜோக் 5:
நண்பர் : நான் elevator ல போகும் போது கரண்ட் கட் ஆகி இரண்டு மணி நேரம் உள்ளேயே நிக்க வேண்டியதாயிடுச்சு....
விஜய் : நீங்களாவது பரவாஇல்லை,நான் மூன்று மணி நேரம் escalator ல நிக்க வேண்டியதாயிடுச்சு...

ஜோக் 6:
விஜய் fan: தளபதி வாங்க செஸ் விளையாடலாம்....
இளயதளபதி: நீங்க போங்க நான் ஸ்போர்ட்ஸ் shoe போட்டுட்டு வந்துடறேன்....

ஜோக் 7:
கின்னஸ் புக்கில் தான் தான் இன்னும் மிக பெரிய காமெடியனா என பார்க்க போன சர்தார் திரும்பி வரும் போது ஆவேசமாக, "யார் அந்த குருவி விஜய்"

ஜோக் 8:
ஒருவர்:அங்கே என்ன அவ்வளவு கூட்டம் ?

மற்றொருவர்:யாரோ வில்லு படத்த ரிசர்வ் பண்ணி பாக்க வந்து இருக்காங்களாம்...

ஜோக் 9:
ரசிகர் : ஹலோ பெப்சி உமாவா?எனக்கு வில்லு படத்துல இருந்து ஏதாவது பாட்டு போடுங்க.....
உமா : கொஞ்சம் பொறுங்க இன்னும் ரெண்டு நாள்ல படத்தையே போடுறோம்...

ஜோக் 10: (சற்றே பெரிய ஜோக்)
ஒரு அழகான கிராமம். அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்..அவளைப் போல்
ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.
அந்தப் பெண் பக்கத்து சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள்.
இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது. இதனால் வேறு வழி
தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல்
காணாமலும் போய்விட்டனர்.
உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.
அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப்பட்ட ஊர் மக்கள் அந்தக்
காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர்.அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான்.
உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள்.
ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து
வந்தாள். திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள்.
அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்தக் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது, இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது.
அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்ணின்
தந்தையிடமும் கனவில் எச்சரித்தது. ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவே இல்லை.
அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது. அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள்.
உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள்.
இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது.
மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள். இருந்தும் கறை போகவில்லை.
அடுத்த நாள் காலையில் அழைப்பு மணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள். அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது.
உடனே இவள் பயத்தினால் அலறினாள்.
அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது,”லூசாடி நீ!,ஸர்ப் எக்ஸல் போடு கறை போயிடும்” என்றது.

“அது சரி, என் காதலன் ஏன், யாரால் லாரி ஏறி மாண்டான் என அப்பெண் கேட்க, “ஓ, அதுவா, லாரி டிரைவர் வில்லு படம் பார்த்து விட்டு லாரி விட்டிருக்கான். மன உளைச்சலே இந்த விபத்துக்குக் காரணம் என்றதாம் அந்த தேவதை.

அன்புடன்,
முரளி மனோகர்

8/16/2010

பேராண்மை - என்னைக் கவர்ந்த படம்

இப்படத்தின் பிளாட்டை முன்பு படித்த நினைவிருக்கிறது. ஆனால் படம் வெளியானபோது பார்க்கவில்லை. நேற்று கூட எதேச்சையாக சன் டிவியில் இப்படத்தைப் பாதியிலிருந்துதான் பார்த்தேன். அச்சமயம் நிறைய காட்சிகள் போயிருந்திருக்கும்.

ஜெயம் ரவியை மதர் சுப்பீரியரிடம் மாட்டிவிட ஐந்து பெண்கள் முயற்சி செய்தபோதுதான் படம் பார்த்தேன். ஆனால் பார்த்தவுடனேயே என்னக் கதை என்பது புரிந்ததாலும், வேறு உருப்படியான வே;லைகள் கைவசம் இல்லாதிருந்ததாலும் படத்தைத் தொடர்ந்து பார்க்க முடிவு செய்தேன். அதற்காக மகிழ்ச்சியடைகிறேன்.

பிறகு இப்படம் பற்றி இணையத்தில் என்ன கூறினார்கள் என்பதைப் பார்த்ததில் இது The dawns here are quiet" என்ற ரஷ்ய படத்தின் காப்பி என்பதை அறிந்தேன்.

இப்படத்தின் விஸ்தாரமான விமரிசனத்தை கேபிளார் கொடுத்து விட்டார். வேறு பலரும் கொடுத்து விட்டனர். ஆகவே எனது எண்ணங்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். கவனிக்க, இது விமரிசனம் அல்ல.

ஏற்கனவேயே சொன்னது போல பாதியிலிருந்துதான் படம் பார்த்ததால், விட்டுப் போனதை இணையத்தின் மூலம் பார்க்கலாம் என நினைத்தால் முடியவில்லை. சிறப்பான காட்சிகள் என தொகுத்து போட்டிருந்தாலும் அவை ஓப்பன் ஆவதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொண்டன. அதுவும் நல்லதுக்குத்தான். இப்படத்தின் மூலக்கருவே இனிமேல்தான் வர வேண்டும் என்னும் நிலையில் படம் பார்க்க ஆரம்பித்ததால் இழப்பு அதிகம் இல்லை.

ரஷ்யன் படமும் அப்படித்தான் ஆரம்பமாகியிருக்கும். தமிழில்தான் மசாலா சேர்த்திருப்பார்கள். அவற்றை பார்க்காததால் ஒன்றும் குடி முழுகிவிடாது. இதில் ஜெயம் ரவியின் மேலதிகாரியாக வரும் பொன்வண்ணனை கிட்டத்தட்ட ஒரு சாடிஸ்டாகவே காட்டியுள்ளனர். கடைசி வரை அவர் கொழித்து, மெடலையும் தட்டிச் செல்வது போல அமைந்த கதையமைப்பு மனதுக்கு நிறைவைத் தரவில்லை. அதுதானே ரியலிசம் என ஜனநாதன் கூறினாலும், தீமை வெற்றி பெறுவது போல காட்டியது ஆரோக்கியமாக இல்லை. கடைசியில் ஏதோ டாகுமெண்டரி பார்ப்பது போன்ற உணர்வு. அது சரி, கடைசியில் மிஞ்சிய மூன்று பெண்கள் உண்மையைக் கூறாமலேயாவா கேம்பிலிருந்து சென்றிருப்பார்கள்? நம்பும்படியாக இல்லையே.

காட்டில் ஒரு பெண் ஜெயம் ரவியிடம் அவரை பெண்சபலக்காரராக காட்டி மாட்டி விட்டதற்காக மன்னிப்பு கேட்கும்போது, தன்னை நம்பி தனது கிராமத்தில் பெண்களுக்கு பிரசவம் பார்க்க விடுவார்கள் என்ற செய்தியை சர்வசாதாரணமாகக் கூறுவார்.

அதே போல வெள்ளைக்கார கொலைஞனிடம் ஆங்கிலத்தில் அவர் பேசுவதை அதிசயத்துடன் பார்க்கும் ஒரு பெண் தங்கள் எதிரில் அவ்வளவு அதிகமாக ஆங்கிலம் பேசவில்லையே எனக்கேட்க, ஜெயம் ரவி ரிசர்வேஷன் கோட்டாவில் வந்த தான் அவ்வாறு பேசுவதை அவர் போன்ற மேட்டுக்குடி பெண்கள் விரும்ப மாட்டார்கள் என அனாயாசமாகக் கூறிவிட்டுச் செல்லும் காட்சியும் நன்றாக இருந்தது.

சந்தடி சாக்கில் ஜனநாதன் கம்யூனிச பிரச்சாரமும் செய்கிறார். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வதை குற்றமாகக் கொள்ளமுடியாதுதான்.

காட்டுவாசிகளின் குழந்தை படித்துக் கொண்டிருக்கும்போது பொன்வண்ணன் அதன் முதுகில் கட்டையால் அடிக்க குழந்தை வீறிட்டு அழும் காட்சி ரத்தத்தை உறையச் செய்தது. சர்வ சாதாரணமாக வனவாசிகளை அதிகார வர்க்கம் எவ்வாறு விரோதித்துக் கொள்கிறது என்பது அழுத்தந்திருத்தமாகவே காட்டப்பட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/15/2010

தாலிபானியத்துக்கு ஜால்ரா போடும் மேற்கு வங்க கம்யூனிச அரசு

திண்ணை வார இதழில் சின்னக் கருப்பன் எழுதிய கட்டுரையை எல்லோரும் படிப்பது நல்லது. அதிலிருந்து சில வரிகள்:

“மேற்குவங்காளத்தின் முதல் இஸ்லாமிய பல்கலைக்கழகமான ஆலியா முஸ்லீம் யுனிவர்சிட்டியில் வங்காள மொழி விரிவுரையாளராக வேலை பெற்ற சிரின் மிட்டியா (Sirin Middya) கடந்த மார்ச்சிலிருந்து நூலகத்தில்தான் வேலை செய்கிறார். காரணம் அவர் புர்கா போட மறுத்ததுதான்.

மதரஸா மாணவர் சங்கம் எல்லா பெண் விரிவுரையாளர்களும் புர்கா போட்டுத்தான் கல்லூரிக்கு வந்து பாடம் நடத்தவேண்டும் என்று வற்புறுத்துகிறது. இதனால், மற்ற விரிவுரையாளர்கள் புர்கா போட்டாலும் நான் போடமாட்டேன் என்று இவர் மறுத்துவிட்டார். அதனால் நூலகத்தில் வேலை. பல்கலைக்கழக துணைவேந்தர் இவருக்காக வாதாடவில்லை. மேற்கு வங்காள கம்யூனிஸ்டு அரசும் கண்டுகொள்ளவில்லை. இந்த செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டது. வெளியிட்டு எட்டு நாட்கள் கழித்து பல்கலைக்கழக நிர்வாகம் இவரை புர்கா இல்லாமலேயே விரிவுரையாளர் வேலையை செய்யலாம் என்று கேட்டுகொண்டிருக்கிறது. பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, இவர் “டீஸண்டாக” உடை உடுத்திக்கொண்டு விரிவுரையாற்றலாம் என்று அனுமதித்திருக்கிறது. மேற்குவங்காள மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹசானுர் ஜமான் ஒரு பிரச்னையும் இல்லாதபோது பத்திரிக்கைகளுக்கு சென்று பிரச்னையை கிளப்பியுள்ளார் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். தான் மீண்டும் வேலைக்கு போகும்போது எப்படிப்பட்ட வரவேற்பை பெறுவோம் என்பதை பற்றி பயப்படுவதாக சிரின் கூறியிருக்கிறார்”.


சம்பந்தப்பட்ட இசுலாமிய ஆண்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? புர்க்கா போட்டுக் கொள்வதோ போட மறுப்பதோ சம்பந்தப்பட்ட பெண்ணின் தனிவிருப்பத்தில் வரும்.

அது இருக்கட்டும், இம்மாதிரி தனிமனித உரிமையை பாதிக்கும் செயல்பாடுகளுக்கு அரசு எவ்வாறு ஒத்துப் போகலாம்? அவர்கள் ஆட்சி செய்கிறார்களா அல்லது ஜால்ரா அடிக்கிறார்களா? நாம் இருப்பது இந்தியாவா அல்லது பாகிஸ்தான்/ஆஃப்கானிஸ்தான்/சவுதி அரேபியா போன்ற மனித உரிமையை மதிக்காத நாடுகளா? இவன்களுக்கு இந்தியாவில் உள்ள சுதந்திர நிலை பிடிக்கவில்லையென்றால், மேலே குறிப்பிட்ட நாடுகளுக்கு போய் தொலைவதுதானே?

“ஒரு இந்துத்துவ சார்புடைய குழு , பாரில் குடிக்கும் பெண்களை அவமானப்படுத்துவது எவ்வளவு கண்டிக்கத்தக்கதோ அதே போல கண்டிக்கத்தக்கதுதான் புர்க்கா போடவேண்டும் என்று பெண்களை வற்புறுத்துவதும். பாரில் குடித்த பெண்களை அவமானப்படுத்திய இந்துத்துவ அமைப்பு மீது கரித்து கொட்டியதில் ஒரு துளி அளவு, இந்த பெண்ணின் உரிமைக்கும் பேசியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! இது காஷ்மீரிலும் பாகிஸ்தானிலும் கடுமையான பரிணாமத்தை அடைந்ததை நமது அறிவுஜீவிகள் அறிந்தே இருப்பார்கள். புர்கா போடாததால் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டும், கால்களில் ஆசிட் ஊற்றப்பட்டும் பெண்கள் அச்சுறுத்தப்பட்ட பின்னால் முஸ்லீம் பெண்கள் புர்கா போடுவதை வழக்கமாகவே ஆக்கிகொண்டுவிட்டார்கள். ஆண்கள் புர்கா போட வேண்டும் என்று அச்சுருத்தி பத்து பேர் மீது ஆசிட் ஊற்றினால் நான் கூட புர்கா போடுவேன். ஆண்கள் விரும்பித்தான் புர்கா போடுகிறார்கள்; நான் விரும்பித்தான் புர்கா போடுகிறேன் என்று சத்திய வாக்குமூலம் கொடுக்கவும் தயார். இதுதான் இந்திய அறிவுஜீவிகள் விரும்பும் சுதந்திரமா”?

“இந்த கேள்விகளை நாம் கேட்காமல் இருந்தால் இவர்கள் தானாக எடுத்துகொண்ட அதிகாரத்தை நாமும் அங்கீகரித்தால் போல் ஆகிவிடும். அது மட்டுமல்ல, நான் முன்னரே பலமுறை எழுதியிருப்பதுபோல, இந்தியாவின் ஒழுக்கவிதிகளை நிர்ணயிப்பவர்கள் இவர்களைப் போன்றவர்களே. புடவை உடுத்துவது காட்டிமிராண்டித்தனம், பிகினி போடுவது ஒருவகை நாகரிகம், புர்கா போடுவது மற்றொரு வகை நாகரிகம் என்று நாகரிகத்துக்காக இந்தியர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள். ஆனால் இருவரும் புடவை கட்டுவது காட்டிமிராண்டித்தனம் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

சிறுபான்மை மத உரிமைகள் என்ற பெயரில் இந்தியாவில் அரசாங்கம் வளர்ப்பது தாலிபானியம்தான். அதனை எவ்வளவு வார்த்தைகளிலும் “சொல்லாடல்களிலும்” மறைத்தாலும் அதுதான் வெளிப்படையாக சாதாரண பாமரனான எனக்கு தெரிகிறது”.


இப்பதிவு புர்க்கா போடுவது சரியா தவறா என்ற கேள்விக்குள் போகவில்லை. அதுதான் டீச்ண்டான உடை என்பதை மொண்டித்தனமாகக் கூறுவதைத்தான் எதிர்க்கிறது. அதை சம்பந்தப்பட்ட பெண்ணே நிர்ணயிக்கட்டும் என்றுதான் கூறுகிறது. அப்படி பெண்களுக்கு புர்க்காவை கட்டாயமாக்க நினைக்கும் இசுலாமிய ஆண்கள் அந்த உடையை அரை மணிநேரமாவது அணிந்து பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இசுலாமிய ஆண்கள் என்று மட்டுமில்லை, பொதுவாகவே பெண்கள் எந்த உடையை அணிய வேண்டும் என பேசும் எல்லா ஆண்களையுமே இந்தப் பதிவு சாடுகிறது. அதன் கீழ் “இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளை”ன்னு விவசாயி படத்தில் பாடும் எம்.ஜி.ஆர். ஏற்று நடித்த அப்பாத்திரமுமே இந்தக் குற்றச்சாட்டுக்கு இலக்காகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

செம்மொழி மாநாட்டில் பட்டை கிளப்பிய வேளுக்குடி கிருஷ்ணன்

நடந்து முடிந்த செம்மொழி மகாநாட்டை நான் கண்டு கொள்ளவில்லை. வழக்கமான முதல்வருக்கான ஜால்ரா சப்தமே கேட்கும் என்பதாலேயே எனக்கு அதன் நிகழ்ச்சிகளை டெலிவிஷனில் காணகூட ஆவல் கொள்ளவேயில்லை.

இந்த அழகில் வேளுக்குடி கிருஷ்ணன் வேறு வர வேண்டுமா? அவர் என்ன பேச முடியும்? அவரையும் கலைஞரின் ஜால்ரா அடிக்க வைத்து விடுவார்களோ என்றென்ணியே மனக்கிலேசம் அடைந்தேன்.

ஆனால் பிறகு கேள்விப்பட்டதெல்லாம் பிரமிப்பையே ஊட்டியது. கருணாநிதி என்னும் ஆத்மா பற்றி ஒரு ஜால்ராவும் இன்றி மனிதர் பேசினாராம். கருணாநிதிக்கே அது பொறுக்கவில்லை என்றும் கேள்விப்பட்டேன்.

பிறகு இப்போதுதான் வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் அந்தப் பேச்சின் வீடியோவைக் கண்டேன். அதில் கருணாநிதியின் முகபாவம் பார்க்கப் பார்க்க தமாஷாக இருக்கிறது. அவ்வளவு திகைப்பைக் காட்டியுள்ளார்.

பேசிய மற்ற எல்லோருமே கலைஞர் ஜால்ராவை அடிக்க, வேளுக்குடியோ மறந்தும்கூட அதைச் செய்யாது, "ஆழ்வார்கள் தமிழ்" என்னும் தலைப்பில் தமிழின் பெருமையை மட்டும் பேசி அமர்ந்தது பாராட்டுக்குரியது. வழக்கமான ஜால்ரா சொற்கள் இல்லாதிருந்ததை உணர்ந்த கலைஞரின் முகபாவமும் பார்க்கத் தகுந்ததே. பிறகு கலைஞர் அது பற்றிப் பேசுகையில் இவ்வாறும் கூறினார்.

“வேளுக்குடி கிருஷ்ணன் மிகுந்த தமிழ் ஆர்வத்தோடு, தமிழ் இனிமை சொட்டச் சொட்ட, இங்கே தன்னுடைய உரையை நிகழ்த்தியிருக்கின்றார். இந்த மேடையிலே எவ்வளவு கட்டுப்பாட்டோடு, நாளைக்கு வெளியிலே சென்றால், யார் யாரைச் சந்திக்க நேரிடும் என்கின்ற அந்த உணர்வோடு, இங்கே எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவு பேசி, எங்களையெல்லாம் மகிழ்வித்திருக்கின்றார்”.

நாமெல்லாம் வரிகளுக்குப் பின்னே கூறப்படுபவை, கூறப்படாதவை என்ன சொல்ல நினைத்தவை என்பதையெல்லாம் பார்த்திருக்கோமில்லை?

அது இருக்கட்டும். வேளுக்குடியின் பேச்சு பற்றி இந்தத் தளத்தில் படித்தேன்.

அதிலிருந்து சிலவரிகள்:

“வேளுக்குடி கிருஷ்ணன், தனிமனித புகழ்ச்சி, அரசியல் கலப்பின்றி வைணவம் தமிழுக்கு செய்த தொண்டை மட்டும் ஆழ்ந்த கருத்துக்களுடன் அழகாக பேசி முடித்தார். இது ஒரு ஆன்மிக பேச்சாளர், எப்படி பேச வேண்டும் என மற்றவர்களுக்கு பாடம் எடுப்பது போல் இருந்தது. அவரின் பேச்சை, அரங்கில் இருந்த தீவிர நாத்திகவாதிகள், தமிழக அமைச்சர்கள் என அத்தனை பேரும் ரசித்து கேட்டனர். பல்வேறு அரசியல் மேடைகளைக் கண்ட தி.மு.க., முன்னணிப் பிரமுகர்களும், வேளுக்குடியின் பேச்சில் சொக்கியிருந்ததை, அவையில் நிலவிய நிசப்தமும், அவர் பேசி முடித்ததும் எழுந்த கரகோஷமும் உணர்த்தியது”.

சப்தம் என்றதும் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. வேளுக்குடியின் பேச்சின் மத்தியில் ஒரு நாதாறி தனது செல்ஃபோனில் உரக்கப் பேசியது வேறு பதிவாகியிருந்தது திருஷ்டிப் பரிகாரமே.

மற்றப்படி வேளுக்குடியை போல நான்கு பேர் வந்தாலே போதும், பல புகழ் போதைகள் இறங்கி விடும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/13/2010

சமுதாயத்தின் கண்ணாடியே திரைப்படங்கள், சீரியல்கள் முதலியன

இந்த இடுகையை போன பதிவின் தொடர்ச்சியாகக் கூட பார்க்கலாம்.

நான் அதில் கூறியது போல நம் வாழ்க்கையில் வரும் பல மாறுதல்களை சீரியல்கள், திரைப்படங்கள் ஆகியவற்றில் எதிரொலிப்பதைப் பார்க்கலாம். இதை உல்டாவாக நோக்கினால் பழைய படங்கள் பார்க்கும்போது அக்காலகட்டத்தில் மக்கள் வாழ்க்கை பற்றி குன்சாக அறிந்து கொள்ளலாம். அதுவும் அவுட்டோர் ஷூட்டிங்களில் இதை நன்றாகவே பார்க்கலாம். ஆனால் இக்கருத்து சமூகப் படங்களுக்கே பொருந்தும், சரித்திரப் படங்களுக்கல்ல.

(வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் (ராஜா ராணிக் கதை) சுப்பையா குதிரையில் விரைந்து செல்ல தூரத்தில் ரோடில் ஒரு கார் விரைந்து செல்வது சில நொடிகளுக்கு ஃபிரேமில் வரும். மகாபாரதம் சீரியலிலும் பீஷ்மர் தன் அன்னை கங்கையைக் காண நதிக்கரைக்கு வரும்போது தூரத்தில் கார் செல்லும். ஆனால் இதெல்லாம் ஷூட்டிங்கின் குறைபாடுகள். ஆகவே அக்காலத்திலேயே கார்கள் இருந்தன என்றெல்லாம் கூறிப் படுத்தக் கூடாது).

சமீபத்தில் 1969-ல் வெளியான சிவந்தமண் படத்தையே எடுத்து கொள்வோமே. ஸ்விட்சர்லாந்திலிருந்து கதாநாயகி இந்தியாவில் இருக்கும் தன் அப்பாவுக்கு டிரங்க் கால் போடுவாள். அப்பா மகள் இருவருமே தொண்டை கிழியும் அளவுக்குக் கத்துவார்கள். அதுதான் யதார்த்தம். ஆனால் இப்போது? அம்மாதிரி காட்சிகளே வராதல்லவா? ஐ.எஸ்.டி. கால்கள் அடுத்தடுத்து அமர்ந்திருக்கும் ரேஞ்சில் அல்லவா கேட்கின்றன?

பல படங்களில் அக்காலத்தில் ஒரு காட்சி கிட்டத்தட்ட எப்போதுமே இருக்கும். தொழிற்சாலைகளின் கதவில் “வேலை காலி இல்லை” என்ற போர்டு தொங்கும். கதாநாயகன் எப்போதுமே எம்.ஏ. ஃபர்ஸ்ட் கிளாஸ் ஃபர்ஸ்டாகத்தான் இருப்பான். ஆனால், சில சோகப்பாடல்கள் பாடும் வரைக்குமாவது வேலை லேது.

ஆனால் உலகமயமாக்கம் வந்த சில ஆண்டுகளிலேயே தில்லிக்கருகே இருந்த நோய்டா தொழில் நகரில் பல தொழிற்சாலைகளின் கேட்டில் எந்தெந்த வேலைகள் காலியாக இருக்கின்றன என்ற லிஸ்டுகள் தெரிய ஆரம்பித்தன. அவை அப்படியே திரைப்படங்களில் வந்ததா என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும் பழைய “வேலை காலி இல்லை” போர்டுகள் கிடையாது என்பது மட்டும் நிஜமே. அப்படியே காட்டப்பட்டாலும் அக்காட்சி கடந்த காலத்தைக் குறிப்பதாகவே இருக்கும்.

முன்பெல்லாம் கதாநாயகன் ஒன்று இஞ்சினியராக இருப்பான் அல்லது டாக்டராக இருப்பான். ஆனால் இப்போதோ பல தொழில்களை அவற்றின் சங்கடங்கள் அனுகூலங்களுடனேயே காட்டுகிறார்கள்.

நான் முதலில் சொன்ன அவுட்டோர் ஷூட்டிங்கில் சென்னை போன்ற நகரங்களின் பழைய தோற்றத்தைக் காணலாம். உதாரணத்துக்கு நெஞ்சிருக்கும் வரை என்னும் படம், அறுபதுகளில் வந்தது. ஆனால் அதில் ஒரு சங்கடமும் இருந்தது. அக்கதையில் உழைப்பவர் வெற்றி என்னும் சிலை சென்னை பல்கலைக் கழகத்துக்கு எதிரே காட்டப்பட்டது. அச்சிலையோ 1959-ல்தான் நிறுவப்பட்டது. ஆனால் கதையோ அதற்கு முன்னால் நடப்பதாகத்தான் காட்டுவார்கள். அதை எப்படிக் கூறுகிறேன் என முரளி மனோகர் என்னைக் கேட்கிறான். சொல்கிறேன்.

“பூ முடித்தாள் பூங்குழலி” என்னும் பாட்டைக் கேட்டிருப்பீர்கள்தானே. அதில் நடுவில் இந்த வரிகள் வரும்:

“நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் இருபதாம் நாள்...
திருவளர் செல்வன் சிவராமனுக்கும், திருவளர் செல்வி ராஜேஷ்வரிக்கும்,
நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து
வாழ்த்தியருள வேண்டுகிறேன்

தங்கள் நல்வரவை விரும்பும்
ரகுராமன், ரகுராமன், ரகுரா..ரா..ரா...மன்”.


அதில் என்ன பிரச்சினை என்கிறீர்களா? பார்த்திப ஆண்டு 1945 ஏப்ரலில் தொடங்கி 1946 ஏப்ரலில் முடிவடைந்தது. ஆக, அக்காலத்தில் உழைப்பவர் சிலை எப்படி வரலாம்? இந்தக் கேள்வியை அக்காலத்தில் பலரிடம் நான் எழுப்பினேன். எனக்கு எப்படித் தெரியும் என்கிறர்களா? நானே பார்த்திப ஆண்டு பங்குனித் திங்களில்தான் பிறந்தேன் (ஏப்ரல் 4, 1946). பதில் கூறத் தெரியாது பலரும் ஆளைவிடப்பா எனச்சொல்லி எஸ்ஸானது வேறு விஷயம்.

அதே மாதிரி சமீபத்தில் 1961-ல் வெளியான “பார்த்தால் பசிதீரும்” ப்டத்தில் கதை 1946-47-ல் நடக்க, அதில் புத்தம் புதிய ஸ்டாண்டார்ட் ஹெரால்ட் காரைக் காட்டுவார்கள். இவை எல்லாமே தவறுகள்தான். சுப்பிரமணியபுரம் படத்தில் 1980/களை காட்ட மெனக்கெட்டது போலெல்லாம் அக்காலத்தில் படவில்லைஎன்றே கொள்ள வேண்டும்.

ஆனால் இப்போதெல்லாம் மேலே கூறிய குறைகளையும் கண்டுகொள்ள என்னைப் போன்ற பெரிசுகள் தவிர வேறு யாரும் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

சமீபத்தில் 1959-ல் தமிழ்நாடு போலீசாரின் நூறாம் ஆண்டுநிறைவுக்காக அப்போதைய போலீஸ் கம்கிஷனர் பொன் பரமகுரு இயக்கி வெளியிட்ட “உங்கள் நண்பன்” என்னும் படம் காட்டப்பட்டது. அண்ணா மேம்பாலம் இப்போது இருக்கும் இடத்தில் ஜெமினி ரவுண்ட்டாணாவை காட்டுவது கண்கொள்ளாக் காட்சி. சென்னை எக்மோர் ரயில் நிலையம், தி.நகர் பனகல் பூங்கா பஸ் ஸ்டாப், அக்காலத்து லேலேண்ட் பஸ் ராயல் டைகர் என படம் முழுக்க அமர்க்களப்படுமே.

இதில் ஒரே ஒரு லிமிட்டேஷன் உண்டு. அதாவது அக்காலகட்டத்தில் பல ஷூட்டிங்குகள் ஸ்டூடியோவுக்குள்ளேயே எடுக்கப்பட்டன. ஆகவே அந்த வகையில் சமூக நிலையைக் கண்டறிவதும் சற்றே கடினமே.

பல கிராமப்புறக் காட்சிகள் போரூரில் எடுக்கப்பட்டவையாம். உதாரணத்துக்கு சமீபத்தில் 1978-ல் வெளியான “மனிதரில் இத்தனை நிறங்களா” என்னும் படம். இப்போது அக்காட்சிகளை போரூரில் காணவியலுமா?

ஆனால் சிலகாட்சிகள் மட்டும் எப்போதும் மாறவே மாறாது. எழுபதுகளில் வந்த அண்ணன் ஒருகோவில் படத்தில் ஒரு காட்சி. சிவாஜி ரயில்வே ஸ்டேஷன் வெயிட்டிங் ரூமில் டாய்லட்டுக்கு அருகே உள்ள பெஞ்சில் படுத்திருப்பார், கர்சீப்பால் மூக்கை மூடிக் கொண்டு. இப்போது முப்பது ஆண்டுகள் கழித்து அதே காட்சியை எடுத்தாலும் அதே மாதிரி மூக்கை மூடிக்கொள்ள வேண்டியதுதான். ஆக, சில விஷயங்கள் என்னவோ மாறவே மாறாதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/12/2010

கலர் டிவி, செல்பேசி மற்றும் பல உபகரணங்கள்

சமீபத்தில் ஏஷியாட் 1982 சமயத்தில் நாட்டில் முதன்முறையாக கலர் டிவிக்கள் புழக்கத்துக்கு வந்தன. அப்போது மத்தியத் தகவல் & ஒலிபரப்பு மந்திரி திரு. வசந்த் சாத்தே அவர்கள். கலர் டெலிவிஷனுக்காக மிகவும் பாடுபட்டவர். பல இடங்களில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று, “ஏழைகள் மிகுந்த நம் நாட்டில் கலர் டிவிக்கு என்ன முக்கியத்துவம்”? இப்போது குழந்தைத்தனமாகப் படும் அக்கேள்வியை அவர் பொறுமையுடன் கையாண்டார்.

முன்னேற்றம் என்பது இம்மாதிரியான எண்ணங்களால் தடைபடக்கூடாது என்பதை அவர் பல முறை பல விதமாக எடுத்துக் காட்டிய வண்ணம் இருந்தார். கடைசியில் அவர் சொன்னதுதான் நடந்தது. கலர் டிவி இப்போது இரண்டாவது அல்லது மூன்றாவது தலைமுறைக்கு வந்து விட்டது. அதனால் பல வேலை வாய்ப்புக்கள் (வன்பொருள் மற்றும் மென்பொருள்) வந்தது ஒரு பைபிராடக்டாக இப்போது பார்க்கலாம்.

எங்கள் வீட்டில் வழக்கம்போல அது லேட்டாகத்தான் மூன்றாண்டுகள் கழித்து 1985-ல்தான் வந்தது. கூடவே வி.சி.ஆரும் வந்தது. இப்போது அது சிடி மற்றும் டிவிடிக்களின் உபயத்தால் இல்லை என்பது வேறு விஷயம்.

இன்னொரு விஷயம் டெலிஃபோன். 1987-ல் 8000 ரூபாய் கட்டி OYT திட்டத்தில் புக் செய்த நான் 1990 நவம்பர் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அரசின் ஏகபோக ஆதிக்கத்தில் இருந்ததால் டெலிஃபோன் இணைப்பு பெற மிகவும் தொங்க வேண்டியிருந்தது. எல்லாமே சோஷலிசம் என்ற மனித இயற்கைக்கு புறம்பான அரசு கொள்கையால் கட்டுண்டிருந்தன. டெலிஃபோன் என்பது பணக்காரர்களுக்கே கட்டுப்படியாகும் என்ற மனப்பான்மை ஆழ்ந்திருந்த காலம்.

இந்த நிலையால்தான் 1997-ல் நிதிமந்திரி சிதம்பரம் வருமானவரி ரிட்டர்ன்ஸைத் தரவேண்டிய கட்டாயத்தை உருவாக்கியபோது ஆறுவகையான மக்கள் அதற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் சில வகையினர், டெலிஃபோன் வைத்திருப்பவர்கள், செல்ஃபோன் வைத்திருப்பவர்கள், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், சொந்தவீடு வைத்திருப்பவர்கள், வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருப்பவர்கள், கிளப் அங்கத்தினர்கள் ஆகியோர் அடங்குவர்.

இப்போது? செல்ஃபோன் யாரிடம்தான் இல்லை? எல்லோரும் ரிட்டர்ன் சப்மிட் செய்ய வேண்டுமென்றால் வருமான வரி அலுவலகத்தினர் விக்கி விக்கி அழுவார்களே. ஏற்கனவேயே இப்போதெல்லாம் வரிகட்டும் அளவுக்கு வருமானம் இல்லையென்றால் ரிட்டர்னே தராதீர்கள், புண்ணியமாகப் போகட்டும் என கை கூப்பி விட்டார்களே (ஜூலை 2005 முதல்).

“அதெல்லாம் சரி, இதெல்லாம் இப்போ இங்கே வந்து ஏன் சொல்லறே பெரிசு”? என மிரட்டுகிறான் முரளி மனோகர்.

காரணம் இன்று மாலை “நாதஸ்வரம்” சீரியலில் வந்த ஒரு காட்சி. அதில் வரும் அந்தப் பெண் மகா, தனது அத்தானுடன் சேர்ந்து ஃபோட்டோ எடுக்கும்படி கூறி, தன் கையிலிருந்த காமெரா செல்ஃபோனை இன்னொரு பெண்ணிடம் தருகிறாள். இந்தக் காட்சியில் வரும் அப்பெண் சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவளாகவே காட்டப்படுகிறாள். இம்மாதிரியான பாத்திரத்தின் வீட்டில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் சாதாரண டெலிஃபோன் கூட இருந்திராது. இப்போது என்னவென்றால் கேமரா செல்ஃபோன். (இப்போது கூட “மெட்டி ஒலி” சீரியல் மறு ஒளிபரப்பில் சிதம்பரம் வீட்டில் ஃபோன் கிடையாது, பக்கத்து வீட்டுக்குத்தான் போன் வரும், அங்கிருந்து கூப்பிடுவதாக காட்சி அமைந்திருக்கும். இத்தனைக்கும் அந்த சீரியல் 2002-ல் வந்தது).

அதற்குப் பிறகு வந்த சீரியல்களிலேயே முன்னேற்றம் தெரிய ஆரம்பித்து விட்டது. மலர்கள் சீரியலில் எல்லார் வீட்டிலும் டெலிஃபோன், இப்போது வரும் சீரியல்களிலோ அவரவர் கைகளில் செல்பேசிகள். ஏழை பணக்காரன் என்றெல்லாம் பாகுபாடே இல்லை. ரொம்பக் கேஷுவலாக சிம் கார்ட் வேறு மாற்றுகிறார்கள் (எனக்கு அது இன்னும் செய்யத் தெரியாது).

இதில் என்ன தமாஷ் என்றால் கேமரா செல்ஃபோன் என்னிடம் கிடையாது. வாங்க முடியாது என்றில்லை, தேவையில்லை என்பதாலேயே அதை நான் வைத்துக் கொள்ளவில்லை. இன்னும் ஒரு படி மேலே சென்று கூறுவேன், எனக்கு அது கட்டாது என. அதாகப்பட்டது, வாடிக்கையாளர் அலுவலகங்கள், தொழிற்சாலைக்கு மொழிபெயர்ப்பு வேலைக்காகச் செல்லும்போது கேமரா செல்பேசி ஏதேனும் இருந்தால் அதை செக்யூரிடி டெஸ்கில் வைத்து விட்டுச் செல்ல வேண்டும். அதற்காகவே நான் அதை வாங்காமல் விட்டேன். ஆகவே விடுங்கள், அது இங்கு முக்கியம் இல்லை.

என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? ஆங், மக்கள் உபயோகத்துக்காக கிடைக்கும் உபகரணங்களின் எண்ணிக்கை மிக வேகமாகப் பரவுவதுதான்.

ஆனால் என்னைப் பொருத்தவரைக்கும் ஏனோ பல உபகரணங்கள் மிக அத்திவாசியத் தேவை என பலமுறை உணர்ந்த பிறக்கே வாங்குவது வழக்கமாகி விட்டது. இந்தப் பழக்கம் டிவி செட் வைத்துக் கொள்வதில் இருந்தே ஆரம்பித்து விட்டது. ஸ்கூட்டர்/பைக்? நோ சான்ஸ், அவற்றை இயக்கவே இன்னும் தெரியாது. காரா? அதுவும்தான் தேவையேயில்லையே!

அதே போலத்தானே இந்தக் கேமரா செல்பேசியும், விடுங்கள். இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் முக்கியக் காரணமே சோஷலிசம் என்னும் வறட்டுக் கொள்கைக்கு குட்பை சொன்னதுவே காரணம் என்பதை மகிழ்ச்சியுடன் பார்க்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/11/2010

பெரியாரை வீரமணி & குழுவினர் கேவலப்படுத்தினரா???

தமிழச்சியின் இப்பதிவு சிந்தனைக்கு உரியது. அதை இங்கே எல்லோரும் அறிய தருவேன்.

பெரியாரை கேவலப்படுத்தும் வீரமணி&கோ

“3- வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளியான பெரியார் திரைப்படம் தற்போது இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளீட்ட மூன்று மொழிகளிலும் மீண்டும் திரையிடப்பட்டிருக்கிறது. நேற்று ஆந்திராவில் விசேஷ காட்சியை ஸ்டாலீன் தொடங்கி வைத்ததாக பல தமிழ் பத்திரிகைகளில் படங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தன.

தினதந்தி நாளிதழில் மட்டும் ஆந்திராவில் வெளியிடப்பட்ட பெரியார் படத்திற்கு, "ஈ.வெ.இராமசாமி நாயக்கர்" என்று பெயர் மாற்றி வைத்திருப்பதை குறிப்பிட்டிருக்கிறது.

வாழ்நாள் முழுவதும் சாதிக்கு எதிராக போராடிய போராளியின் படத்திற்கு சாதிப் பெயரா?

"பிராமணாள்" காஃபி கிளப் என்று பெயர்பலகை இருக்கிறதே அதில் சாதிப் பெயரை அழிக்க வேண்டும்; எல்லோரும் தின்கிற இடத்தில் "பிராமணாள்" என்று இருந்தால் அந்த இடத்தில் ஜாதி இருப்பதாகத் தானே அர்த்தம்? 1956-இலும் இருக்கிறது என்றால் குறும்பு தானே?

என்று ஆவேசப்பட்ட பெரியாருக்கு....

´நாயக்கர்´ பட்டம் கொடுத்து ஊமைக் குசும்பு வேலை பார்க்கிறாரா வீரமணி”?


இப்போது டோண்டு ராகவன். இதிலிருந்து எனக்குள் எழும் கேள்விகள்:
1. உண்மையிலேயே தெலுங்கு வெர்ஷனுக்கு அத்தலைப்பா? (ஆமாம்)
2. இதில் வீரமணி எங்கிருந்து வந்தார்? இப்படம் அவராலா எடுக்கப்பட்டது? (யாராவது சொலூங்கப்பூ)

அன்புடன்,
டோண்டு ராகவன்

சராசரி ஆணின் கவனத்தைக் கவரும் ஒரு பெண்ணின் மார்பகங்கள் சம்பந்தப்பட்ட பெண்ணால் எவ்வாறு பார்க்கப்படுகின்றன?

டிஸ்கி: இது +18 களுக்கு மட்டுமே.

நல்ல வளர்த்தியான பெண்ணைப் பார்த்து “ஆகா என்ன ஐட்டம் மச்சா” என என ஒருவன் ஜொள்ளுவிட, அவன் நண்பனோ மனித உடல் 80%-க்கு மேல் நீரால் ஆனது என்ற விஞ்ஞான உண்மையை கூறி வைக்க, அவனோ “ஆகா என்ன பிரமாதமான 20% மச்சா” என்றானாம். அந்த 20%-ன் முக்கிய அங்கங்களும் ஒரு ஆணைப் பொருத்தவரை பெண்ணின் மார்பகங்களே என்றால் மிகையாகாது.

ஒரு பெண்ணின் மார்பகங்கள் ஆணுக்கு ஏன் போதை தருகின்றன என்பதை டாக்டர் ஷாலினி இவ்வாறு மற்ற பெண்களுக்கு விளக்குகிறார்.

“ஆண்களின் அடுத்த இயல்பை நீங்கள் இந்நேரம் கவனித்திருப்பீர்களே.

“அடி செருப்பால, ராஸ்கல், அங்கே என்னடா பார்வை. முகத்தை பார்த்து பேசத்தெரியாதா உனக்கு. அக்கா தங்கச்சியோட பிறந்தவனா நீ?!” என்று நீங்களே எத்தனை ஆண்களை இதுவரை சபித்திருக்கிறீர்களோ.

அது ஏன் அது ஆண்கள் எல்லாம் இப்படி இருந்து தொலைக்கிறார்கள்? துணிக்கடை பொம்மையை கூட விடுவதில்லையே! ஏன் தான் இந்த வக்கர புத்தியோ, என்று நீங்கள் எவ்வளவு தான் திட்டி தீர்த்தாலும், உண்மை என்ன தெரியுமா’’?


ஓக்கே, ஓக்கே, உண்மை என்னவென்பதையெல்லாம் ஷாலினி அவர்களது அக்கட்டுரையில் பார்த்துக் கொள்ளவும்.

இப்பதிவில் அதே மார்பகங்கள் சம்பந்தப்பட்ட பெண்ணால் எவ்வாறு நோக்கப்படுகின்றன என்பதைப் பார்ப்போம். இரு பெண்கள் தனிமையில் பேசிக் கொண்டிருந்ததை நான் சில ஆண்டுகளுக்கு முன்னால் எதேச்சையாக கேட்க நேர்ந்தது. நான் கேட்டுக் கொண்டிருந்தேன் என்பதை அவர்களும் எதேச்சையாகவே கவனிக்கவில்லை என ஊகிக்கிறேன்.

“அக்கா, என்ன சொல்றீங்க? அப்போ இதுங்கெல்லாம் முக்கியமா வியர்வைச் சுரப்பிகள்தானா”?
“ஆமாமாம், அது புரியாம இந்த பாய்ஸ் வெறிச்சுப் பாக்கறபோது எனக்கு ஒரேயடியா சிப்பு சிப்பா வரும்”.

மேலே கேட்க மனமின்றி அவ்விடத்திலிருந்து பைய நழுவினேன். ஒரு வாரத்துக்கு மனமே சரியில்லை.

பெண்கள் இது சம்பந்தமா என்னதான் நினைக்கிறாங்கன்னு அறிந்து கொள்ள கூகளிட்டதில் இக்கட்டுரை கிடைத்தது.



அதன் தலைப்பு “மார்பகங்கள், ஒரு காதல்கதை - குன்றுகளின் மறுபக்கத்திலிருந்து ஒரு பார்வை”

அதிலிருந்து சில வரிகள்:
“சுமார் 20 ஆண்டுகளாக நான் பெருத்த மார்பகங்களின் சொந்தக்காரி. இப்போது எனக்கு வயது 32. அவை கார்ட்டர் காலத்தில் தொடங்கி, ரீகன் காலத்தில் அதிகாரபூர்வமாகவே பிரமாதம் என்ற நிலையை அடைந்தன”.

“பெரிய மார்பகங்களை உடைய எனது அத்தையுடன் மீன்கடைக்கு செல்லும்போது, கடைக்காரர் அவளுக்கு கொடுத்த காசுக்கு மேல் மீனை தராசில் போடுவார், பார்வை தராசின் மேல் இருக்காது என்பதைக் கூறவும் வேண்டுமோ”?

“ எனக்கு 12 வயதாக இருந்த போது, இந்தப் பெண்ணுக்கும் எக்ஸ்ட்ராவாக மீனைத் தராசில் போட்டப் போதுதான், நானும் இந்த வரிசையில் வந்து விட்டேன் என்பது புரிந்தது”.

“பல சமயங்களில் போயும் போயும் இந்த மாமிச முண்டுகளுக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம் இந்த ஆண்கள் தரப்பிலிருந்து என எனக்கு பரிகாசமாகவே இருக்கும். ஆனால் அவற்றுக்கு பெண்கள் தரப்பிலிருந்து ஒன்றும் அதீத கவனமெல்லாம் இல்லை என்பதே பல ஆண்களுக்கு புரிவதில்லை என்பதும் நிஜமே”

“என்னைப் பொருத்தவரைக்கும் எனது மார்பகங்கள் என் உடலின் ஒரு பகுதியே, என் கைகள், கால்கள் போலத்தான் அவையும். ஆனால் இவையெல்லாம்ஆண்களின் பார்வைக்கு முன்னால் பொருளிழந்து போகின்றன”.

அவற்றை அவர்கள் உலகின் முக்கியமான விஷயங்களில் ஒன்றாகவே காண்கின்றனர். எனது தனித்துவத்தையெல்லாம் கண்டுகொள்ளாது அவர்களது பார்வை எனது மார்பகங்கள் மேலேயே நூல்பிடி கணக்ககச் சென்று நிலைக்கின்றன.

ஒரு விதத்தில் அதுவும் நல்லதுக்குத்தான். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே ஒரு கருப்பு உடையைத்தான் பார்ட்டிகளுக்கு அணிகிறேன், அதில் மார்புகளின் பிளவு நன்றாகத் தெரிவதால், ஆண்களுக்கு இது ஒரு பழைய உடை என்ற ஐடியாவே வருவதில்லை. அது சரி, தளதளவென் பழங்கள் இருக்கும்போது அவற்றை சுற்றியிருக்கும் இலைகளை யார் பார்க்கப் போகிறார்களாம்? ஆகவே புது டிரெஸ் வாங்கும் செலவு மிச்சம்”. (டோண்டு ராகவனின் சந்தேகம்: ஆண்களுக்கு ஓக்கே, ஆனால் சக பெண்களுக்கு? அவர்களுக்கு இப்பெண் ஒரே உடையை உடுத்துவது தெரியாமலா இருக்கும், அவர்கள் இவளைக் கிழித்துத் தோரணம் கட்டிவிடுவார்களே!!)”

“இதில் ஒரே கஷ்டம் என்னவென்றால், ஆண்களுடன் அமையக்கூடிய சுவாரசியமான பேச்சுகள் பல எனது மார்பு பிளவில் சிக்கி காணாமல் போகின்ற்ன என்பதுதான். நெக்லேஸ் அணிந்தால் ஆண்களின் பார்வை சற்றே மேல்நோக்கி நகரும் என ஒரு பெண்கள் பத்திரிகை எழுதியதை நம்பி அவ்வாறு செய்தால், நெக்லேஸ் எதன் மேல் சப்போர்ட் ஆகிறதோ அங்கேதான் அவர்களின் பார்வையும் போகிறதே”.

(இங்கு டோண்டு ராகவனுக்கு ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது. ஏரோப்ளேன் டாலர் இருந்த சங்கிலியை பெண்போட, ஒரு ஆண் அதைக் கூர்ந்து பார்க்க, அவன் ஏரோப்ளேனை அட்மைர் செய்கிறானா என அப்பெண் அவனைக் கேட்க, அவனோ இல்லை ஏரோப்ளேன் தரையிறங்கும் தளத்தை பார்ப்பதாகக் கூறினான்).

ஆகவே இப்பெண்மணி ஆண்களுக்கு கூறும் அட்வைஸ் இதுதான்:

“ஒரேயடியாக மார்களையே பார்க்காதீர்கள். அடக்கி வாசியுங்கள். கைதி நன்றாக நடந்து கொண்டால் அவனது தண்டனைக் காலம் சற்றே நீக்கப்படும். அதேபோல இங்கு நீங்கள் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டால், பெண்ணின் சட்டை நீங்கும் சாத்தியக்கூறு அதிகரிக்கும்”

“சட்டையை எடுத்ததும் நல்ல புகழ்ச்சியாக இருத்தல் நலம். ஆகா என்ன பிரமாதமான சொம்புடான்னு எல்லாம் கொச்சையா சொல்லக் கூடாது. அழகான மார்பகங்கள்னு சொன்னால் வேண்டாம்னா சொல்லப் போறோம்”.

“ஒரு பெண்ணின் புகார் என்னவென்றால் அவளது காதலன் இவளது மார்பகங்களை கண்டுகொள்வதில்லையாம். இன்னொருத்தியின் புகாரோ நேர் எதிர், அவளது காதலனோ அவற்றிலேயே மூழ்கிப் போகிறானாம். இவள்களுக்கு எனது ஆலோசனை, “காதலனை மாற்றிக் கொள்ளவும்”.

இந்த இடுகையை ஒரு ரீடர்ஸ் டைஜஸ்ட் துணுக்குடன் முடிக்கிறேன்.

மருத்துவக் கல்லூரி மகப்பேறு தேர்வுக்கான கேள்வி தாய்ப்பாலின் அனுகூலங்கள் பற்றி. அதற்கு விடையாக ஒரு மாணவர் எழுதியவை.
1. துரிதமானது, 2. சுத்தமானது, 3. பயணங்கள் போது கையாள லகுவானது, 4. பூனையால் அதைத் திருடமுடியாது, 5. மிகவும் கவர்ச்சியான பாத்திரங்களில் வருகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது