டாட்டா இண்டிகாம் அகலப்பட்டை சேவை அளிப்பவர்களுக்கு என்ன ஆயிற்றென்றே தெரியவில்லை. அரை வேக்காட்டுத்தனமாக வந்த அரசு ஆணையை அதற்கு மேல் அரை வேக்காட்டுத்தனமாகப் புரிந்து கொண்டு ஒட்டு மொத்தமாக பிளாக்ஸ்பாட் பதிவுகளுக்கு தடா போட்ட சேவை அளிப்பாளர்களில் டாட்டா இண்டிகாமும் ஒன்று.
அரசே தன் கோமாளித்தனத்தை உணர்ந்து ஆணையை வாபஸ் பெற்றாலும், ஏர்டெல், பி.எஸ்.என்.எல் ஆகியோர் இந்தத் தடையை நீக்கினாலும் டாட்டா இண்டிகாம் மட்டும் அடம் பிடிக்கிறது. இன்னும் பிகே தயவுடனேயே பதிவுகளைப் பார்க்க வேண்டியுள்ளது. இது இப்போதைய நிலை (25 ஜூலை, இரவு மணி 11.42).
என்ன செய்வது என்று புரியவில்லை. டாட்டா இண்டிகாம் கால் செண்டரில் கேட்டால் அவர்கள் கிளிப்பிள்ளை மாதிரி பழைய ஆணையைப் பற்றியே பேசுகிறார்கள். இன்னும் அரசின் திருத்தப்பட்ட ஆணை வரவில்லையாம். தடை செய்யும்போது மட்டும் வாய் மொழி உத்தரவை ஏற்று நடத்தியவர்கள் இப்போது மட்டும் ஏன் இவ்வளவு அழும்பு செய்ய வேண்டும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆலயக்கலைப் பயிற்சி
-
இந்திய சிற்பக்கலை – ஆலயக்கட்டுமானக்கலை ஆகியவற்றைப் பற்றி ஜெயக்குமார்
நடத்திவரும் வகுப்புகள் இன்று தமிழகத்தில் நிகழும் முதன்மையான
கலாச்சாரநிகழ்வுகள். பெருவர...
3 hours ago
17 comments:
டாடா நிறுவனங்கள் கிட்டத்தட்ட அரசு நிறுவனங்கள் போலத்தான். எல்லாமே மெதுவாகத்தான் நகரும். அரசு ஆணை சம்பந்தப்பட்டிருந்தால் இன்னும் கவனம் அதிகம். யாரும் வம்பில் மாட்டிக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.
இது என்னுடைய அனுபவங்களின் புரிதல்.
அன்புடன்,
மா சிவகுமார்
கவலைப் படாதீர்கள், பிகே உதவியுடன் சமாளியுங்கள்..
உங்களது புகாரை பதிவு செய்யுங்கள், டாடா இண்டிகாமுடன்..
நீங்கள் பி.எஸ்.என்.எல் போன் வைத்துக்கொள்ளாமல் டாடா போன் (பிராட்பேண்ட்) வைத்திருப்பது ஏன்?
நான் டாடா ஃபோன் ஒரு இரண்டு மாதம் வைத்திருந்தேன். (அவர்களின் WLL போன் என் அப்போதைய வாடகை வீட்டிற்கு ரொம்ப பிரயோஜனமாக இருந்தது. ஆனால், அவர்கள் சர்வீஸ் படு மட்டமாக இருந்ததால் அதை தூக்கி கடாசி விட்டேன். வீட்டில் நிலையான போன் எப்போதும் பி.எஸ்.என்.எல் தான். அவர்களின் ப்ராட்பேண்ட் தான் இன்று இருப்பதிலேயே ஸ்பீடானது (மினிமம் ஸ்பீடு காரண்டி...)
இது தங்கள் தகவலுக்காக சொன்னேன். மேலும், தங்களின் மாற்று அபிப்ராயம் ஏதாவது இருந்தாலும் அதையும் தெரிந்து கொள்ளலாமே என்று
நன்றி
நன்றி சிவகுமார் அவர்களே. இதில் என்ன வயிற்றெரிச்சல் என்றால், தடை செய்வதற்கு மட்டும் வாய்மொழி உத்திரவே போதும். ஆனால் தடை எடுக்க? அரசு ஆணை 12 காப்பிகளில் கெஜட்டட் ஆஃபீஸர் அட்டஸ்டேஷனுடன் தேவை!
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி சோம்பேறி பையன் அவர்களே. பாகிஸ்தானிய சகோதரர்கள் துணையுடன் (பிகே) பிளாக்கர் பதிவுகளை பார்க்க வேண்டியதுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஜயராமன் அவர்களே,
நான் முதலில் 2002-ல் அப்போதைய டிஷ்னெட்டில் அகலப்பட்டை எடுத்தவன். டிஷ்னெட்டை வி எஸ் என் எல் எடுத்துக் கொண்டு சேவையின் தரத்தை குறைத்தது. இப்போது டாட்டா நிறுவனம் வி எஸ் என் எல்லை எடுத்துக் கொண்டு இன்னும் அதிக கூத்தடிக்கிறது.
பி எஸ் என் எல்-உம் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளுவதாக என் நண்பன் கூறுகிறான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டாட்டா புகழ் பெற்ற கம்பனியாக இருந்தும் ஏன் இப்படி செய்கிறார்கள்?பதிவு இடுவதில் பிரச்சினை ஒன்றும் இல்லையா?அதுவும் பிகே மூலம் தான் செய்கிறீர்களா?
பதிவு இடுவதில் ஒரு பிரச்சினையும் இல்லை. இட்ட பிறகு எனது உரலை தமிழ்மணத்தின் அதற்கானப் பெட்டியில் இட்டால் அதன் திரட்டி மேற்கொண்டு பார்த்து கொள்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அரசு ஆணைப்படி xxx.blogspot.com மட்டும்தானே தடை செய்யச் சொல்லியிருக்கிறார்கள், நீங்கள் என் பதிவைக் காண ஏன் தடை ஏற்படுத்தியுள்ளீர்கள் என்று சேவைகுறைவு (Deficiency of service) புகார் பயனர் மன்றத்தில் கொடுக்கப் போவதாக எழுதுங்கள். நிச்சயம் பலன் இருக்கும். புகார் மனு எப்படிக் கொடுப்பது என்று பதிவே போட்டவராயிற்றே!
இந்திரா காந்தி எமர்ஜென்சின் போது பத்திரிக்கைகளில் செய்தி filter செய்யப்பட்டதாக படித்திருக்கிறேன்...அப்போது, ஆளும் "அதிகார வர்க்கத்தின்" ஆசி பெற செய்தித் தாள்கள் செய்தியை filter மட்டும் செய்யாமல், ஒரு படி மேலே போய் அந்த சர்வாதிகார ஆட்சிக்கு "ஜிஞ்சா" கூட அடித்ததாகவும் படித்தேன்...
அதே போல் தான் இப்பவும் நடக்கிறது...ஒரு சில ப்ளாக்குகளை தடை செய்யச் சொன்னால் மொத்த ப்ளாக்ஸ்பாட்டையும் தடை செய்து தம் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டனர்...:D
தடை செய்யப்பட்ட வலைத்தளங்கள் என்ன என்று BBC ல் சொல்லியிருந்தார்கள்..
(உங்களிடமிருந்து நிறய பதிவுகள் வரவே இல்லையே...சில நாட்களாக என்று எண்ணியிருந்தேன்...)
மணியன் அவர்களே,
புகார் போடுவது நல்ல ஐடியாதான். ஆனால் பிகே உதவியுடன் எல்லா வேலையும் நடக்கும்போது எதற்கு மெனக்கெட வேண்டும்? கைவசம் பயங்கரமான அளவுக்கு வேலை. ஒரு நாளுக்கு 24 மணி நேரம் கூட போதவில்லை.
ஆனால் இதில் ஒரு தமாஷ் என்னவென்றால், கணினியில் வேலை செய்யும்போது இணையத் தொடர்பு ஆன் இல் உள்ளதால், பின்னூட்டங்கள் வருவது உடனே கூகள் டாக் மூலம் தெரியவர, தமிழ்மண பதிவு வேலைகளுக்கு மட்டும் எப்படியோ நேரம் கிடைத்து விடுகிறது.
பார்க்கலாம், நீங்கள் கூறியதும் கருத்தில் கொள்ள வேண்டியதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நெருக்கடி நிலை போது நீங்கள் கூறியதற்கு மேலேயே நடந்தது. என்னுடைய சோ அவர்கள் பற்றிய பதிவுகளில் அது பற்றி நிறையவே எழுதியுள்ளேன்.
துக்ளக், இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் சில பத்திரிகைகள் (விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்) தவிர்த்து, மீதி எல்லாம் அரசு முட்டி போடு என்றால் தவழ்ந்தன.
அதுவே இந்திரா காந்திக்கும் கெடுதலாக முடிந்தது. தணிக்கை முறையால் நாட்டில் நடப்பது அவருக்கே சரியாகத் தெரியாமல் போய், 1977-ல் தான் வெற்றியடையப் போவதான நினைப்பில் தேர்தலுக்கு ஏற்பாடு செய்து... தன் சொந்த செலவிலேயே சூன்யம் வைத்துக் கொண்டார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
/1977-ல் தான் வெற்றியடையப் போவதான நினைப்பில் தேர்தலுக்கு ஏற்பாடு செய்து... தன் சொந்த செலவிலேயே சூன்யம் வைத்துக் கொண்டார்./
அவர் எங்கே சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டார்?மக்கள் காசில் தானே சூனியம்(தேர்தல்) நடத்தினார்?:-D
இந்த இடத்தில் சொந்தச் செலவு என்பதை சொந்தச் செயல்பாடு என்றே வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் அவர் தேர்தலை அறிவித்த நேரத்தில் யாருமே அதை எதிர்பார்க்கவில்லை. அவர் இன்னும் ஒரு வருடம் கூட தாக்கு பிடித்திருக்கலாம். இந்தியாவின் நல்ல வேளை அவர் தன் நிலை சீர்தூக்கிப் பார்க்கும் திறனை இழந்தது. அவர் சூன்யம் தனக்குத்தான் வைத்துக் கொண்டார். மக்களை பீடித்த சூன்யம் நீங்கியதால் தேர்தல் செலவு துன்பம் தரக்கூடியதில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மதிப்பிற்குரிய டோண்டு அவர்களே,
எங்கள் கம்பனியின் மூலம் டாட்டா இண்டிகாம் அகலப்பட்டை சேவை கிடைக்கும் என்றார்கள். உடன் வேலை செய்யும் நண்பர் வாங்கிக்கொண்டார். இன்ஸ்டலேஷன் சார்ஜ் இல்லை. ஃப்ரீ. அன்லிமிட்டட் கனெக்ஷன். மாதம் 650 ரூபாய் மட்டுமே. அவருக்கு எப்படி ஓடுகிறது என்று தெரிந்து பின்னால் நானும் வேலி தாண்டலாம் என்றிருந்தேன். முதல் மாதம் நன்றாக இருந்தது என்றார். இரண்டாவது மாதம் ஸர்வீஸ் சரியில்லை, கனெக்ஷன் வேண்டாம், கட் செய்துவிடப் போகிறேன் என்றார். ரொம்ப கோபம்.
சரி, இது ஒத்துவராது என்று முடிவு செய்து லோக்கல் கேபிள் ஆப்பரேட்டரிடம் சொல்லியனுப்ப, ஸாயங்காலமே கனெக்ஷன் வந்துவிட்டது. அன்லிமிட்டெட் கனெக்ஷன் 675 ரூபாய் என்றார். முதலில் லிமிட்டட் கனெக்ஷன் பெற்றுக் கொண்டு பின்னால் சரியாகவிருந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவில் 250 எம் பி கனெக்ஷன் பெற்றேன். இன்ஸ்டலேஷனுக்கு 1500 ரூபாய் செலவழிந்தது. ஒரே வாரத்தில் 250 எம் பி காலியாகிவிட்டது. இந்த மாதத்திலிருந்து அன்லிமிட்டட் வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். கிடைத்தவுடன் இரவுகளில் தூக்கம் தொலைத்து வலைப்பதிவேன்.
பி.கு: இப்போது அந்த நண்பரிடம்போய் டாட்டா இண்டிகாம் சரியில்லையென்று சொன்னீரே, இப்போது எந்த இன்டர்னெட் கனெக்ஷன் கொடுத்துள்ளீர் என்றேன். இல்லை. எடுக்கவில்லை. டாட்டா இண்டிகாம் இப்போது நன்றாக வேலை செய்கிறது என்று சொல்லிவிட்டு, இன்ஸ்டலேஷனுக்கு நான் பணம் செலவு செய்ததை கேலி செய்கிறார். பாத்ரூமுக்குள் புகுந்து, கதவை தாழிட்டுக்கொண்டு முட்டு, முட்டென்று சுவரில் முட்டிக்கொண்டேன். வேறென்ன செய்வது?
நீங்கள் தேவலை ம்யூஸ் அவர்களே. நான் நவம்பர் மாதம் 2002-ல் டிஷ்னெட் இணைப்புக்கு 30000-க்கு மேல் செலவு செய்ய வேண்டியதாயிற்று. ஆனால் பரவாயில்லை, அப்பணத்தை பல முறை என் இரண்டே மாத வருமானம் மூலம் 2002-லேயே ஈடு கட்டியாகி விட்டது. வருமான வரியில் மிச்சமும் பிடிக்க முடிந்தது.
மற்ற சேவை அளிப்பாளர்கள் எங்கள் ஏரியாவுக்கு பல மாதங்கள் கழித்தே வந்தனர். ஆகவே நோ ரிக்ரெட்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இப்போதுதான் தடை விலகியது. காலையிலிருந்து மின் இணைப்பு இல்லாது இப்போதுதான் பார்த்தேன்.
பி கே ப்ளாக் மூலம் எல்லோருக்கும் உதவி செய்த பாகிஸ்தானிய சகோதரருக்கு ஒரு சலாம். அல்லோருமாகச் சேர்ந்து அவருக்கு ஓ போடுவோம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment