pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. சூரிய மின்சக்திக்கு முதலீடு தாருங்கள்: அமெரிக்காவுக்கு முதல்வர் அழைப்பு
பதில்: இது ஆரம்பம் மட்டுமே. மேற்கொண்டு பல விஷயங்கள் நடக்க வேண்டும். அப்போதுதான் பலன் இருக்கும். இல்லாவிட்டால் பல யோசனைகள் போல இதுவும் ஏட்டளவிலேயே நின்றுவிடும் வாய்ப்பும் உண்டு.
கேள்வி-2. அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதே நிலப் பறிப்பு புகார்
பதில்: நேற்றைய கட்டைப் பஞ்சாயத்தார் இன்றைய மந்திரி என்றிருப்பது இரு திராவிட கட்சிகளிலும் நிலை பெற்றிருப்பது விசனத்துக்குரியதே.
கேள்வி-3. உலகுக்கே வழிகாட்டுகிறது இந்து தர்மம்: சுவாமி தயானந்த சரஸ்வதி
பதில்: இது உலகுக்குத் தெரியுமா? சற்றே சீரியசாக, நாமே நம் மதத்தை உயர்த்திப் பேசுவதில் பயன் இல்லை. மற்றவர்கள் அதைச் சொன்னால் நல்லது.
கேள்வி-4. கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகள் விஸ்வநாதன் எம்.பி. ஆய்வு
பதில்: அதே சமயம் அப்பகுதி மக்களின் அச்சத்தையும் போக்க வேண்டியது அவசியம். (அப்பகுதியில் வசிக்கும் மக்கள், "கடல் நீரை குடிநீராக்கும் பணியால் கடல்நீர் சுத்திகரிக்கப்பட்ட பின்னர் மீதமுள்ள உப்பு நீரை மீண்டும் கடலுக்குள் விடும் பட்சத்தில் கடல் மேலும் அதிக உவர்ப்பு தன்மை அடையும். அதனால் மீன்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். எங்கள் தொழில் பாதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர்).
கேள்வி-5. சுயநிதி எம்.பி.பி.எஸ்.: 182 முதல் தலைமுறை மாணவர்களுக்கு தலா ரூ. 1.25 லட்சம் சலுகை
பதில்: அப்பணத்தை பட்டுவாடா செய்யும்போது மாணவர்களிடம் கமிஷன் கேட்காமல் இருப்பது முக்கியம்.
கேள்வி-6. தி.மு.க.,வை அசைக்க முடியாது: கருணாநிதி
பதில்: அதைச் செய்யவும் கருணாநிதிதான் வரவேண்டும் என்கிறாரோ அவர்?
கேள்வி-7. கலைமாமணி' கேட்கும் தவில் கலைஞர் கட்டைக்காலில் 61 கி.மீ. நடைபயணம்
பதில்: சம்பந்தப்பட்டக் கலைஞரின் ஆதங்கம் புரிந்தாலும், அதற்காக கட்டைக் காலில் ஊர்வலமாக வருவது ரொம்பவுமே ஓவர்.
கேள்வி-8. அரசு கேபிளுக்கு கட்டுப்பாட்டு அறைகள்
பதில்: சுமங்கலி கேபிள் விஷனுக்கு ஆப்பு வைக்கும் எந்த முயற்சியும் பாராட்டத் தக்கதே.
கேள்வி-9. வேலு நாச்சியார் போன்ற வீர பெண்மணிகள் தேவை: வைகோ பேச்சு
பதில்: அவசியமான பேச்சு பேச வேண்டிய இடத்தில் பேசிய வைகோ பாராட்டுக்குரியவர்.
கேள்வி-10. டெலிவரி செய்யாத தபால்கள் மூட்டை மூட்டையாக கண்டுபிடிப்பு: பொதுமக்கள் புகாரில் எம்.எல்.ஏ. அதிரடி
பதில்: கேட்டால் தபால்காரருக்கு சம்பளம் போதவில்லை என்பார்கள். அது உண்மை என்றாலும் இவ்வாறு செய்த தபால்காரர் கண்டிக்கப்பட வேண்டியவரே. மேற்கொண்டு என்ன செய்வார்கள்? வேலையை விட்டு நீக்குவார்கள்? அதனால் என்ன பயன்? அதுதான் ஏற்கனவேயே சிறையில் இருக்கிறாரே?
ஊர் மக்களின் பாசத்துக்கு பாத்திரமாகி சேவை செய்த பல தபால்காரர்கள் இருக்க இம்மாதிரி புல்லுருவிகளும் இருப்பது கொடுமையே.
ரமணா
கேள்வி-11. அதிமுக அரசு அவசர அவசரமாய்அச்சடித்த பழைய முறை பாடப்பத்தகங்கள் இனி ?
பதில்: வேறென்ன, எள்ளுதான். அதிமுகாவுக்கு இது சருக்கலே.
கேள்வி-12. அழகிரி வராத திமுக மாநாடு கோவையில்?
பதில்: திமுகவின் முடிவு ஆரம்பமாகி விட்டதாகவே தோன்றுகிறது.
கேள்வி-13.சமச்சீர் கல்வியை மெட்ரிக் பள்ளிகள் எப்படி ஏற்றுக் கொள்ளும்?
பதில்: இப்போதைக்கு நிச்சயமற்ற நிலை முடிந்ததே என்ற நிம்மதி -பெருமூச்சுடன்.
கேள்வி-14. ஆங்கில பள்ளிகளெல்லாம் சிபிஎஸ்இ முறைக்கு மாறிவிட்டால்?
பதில்: அதனால் என்ன பலன் வரும் என நினைக்கிறீர்கள்?
கேள்வி-15. அதிமுகவின் தலைவி என்ன செய்வார் சமச்சீர்கல்வி அமுல்படுத்த உச்ச நீதி மன்றமும் சொல்லிவிட்டதே?
பதில்: தடை உத்தரவு பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புக் கொள்ளாததன் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தின் நிச்சயமற்றத் தன்மையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது மகிழ்ச்சிக்குரியதே.
கேள்வி-16. அமெரிக்காவில் மீண்டும் பொருளாதார வீழ்ச்சியாமே?
பதில்: பிரச்சினையை தீர்க்காமல் சொதப்பலாகக் காரியம் செய்தால் வீழ்ச்சிதானே.
கேள்வி-17. 2ஜி விவாகரத்தில் அடுத்து யார்?
பதில்: இதில் பெரிய பெட்டிங் நடந்தால் வியப்படைவதற்கில்லை.
கேள்வி-18. சூரிய சக்தி மின்சாரம் சாத்யமா?
பதில்: மற்றவகை மின்சக்திகளைப் போல பலமடங்கு விலை தரவேண்டிய நிலை இன்னும் உள்ளது. இப்போதைக்கு அதன் பரவலான உபயோகத்துக்கு இன்னும் நாள் இருக்கிறது.
கேள்வி-19.கேஸ் விலை ரூபாய் 800 ஆகப்போகிறதாமே?
பதில்: இது பற்றி நான் இட்டப் பதிவுகள் 1 மற்றும் 2-ஐ பார்க்கவும். மிகவும் தவறான பயன்பாடுகளை ஊக்குவிக்கும் இந்த சப்சிடி ஒழிவது அவசியமே.
கேள்வி-20. தமிழக முதல்வரின் ஆட்சி இது வரை எப்படி?
பதில்: சமச்சீர் கல்வி விஷயத்தில் சொதப்பியதை ரிபீட் செய்யாமல் இருந்தால் தேவலையான ஆட்சிதான்.
BalHanuman
கேள்வி-21. டோண்டு ஸார், ஒரு சிறிய சந்தேகம்.
>>காகித ஓடம் கடலலை மீது
>>போவது போலே மூவரும் போவோம்
யார் அந்த மூவர் ?
1. கருணாநிதி - தயாளு - ராஜாத்தி2. கருணாநிதி - அஞ்சாநெஞ்சன் - தளபதி
3. கருணாநிதி - கனிமொழி - ஆ.ராசா
4. கருணாநிதி - தயாநிதி - கலாநிதி
5. கனிமொழி - ஆ.ராசா - சரத்குமார் ரெட்டி
பதில்: எல்லோருமே மாட்டட்டுமே, சந்தோஷம்தானே.
மேலும் கேள்விகள் வந்தால் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஷார்ஜா புத்தகவிழாவில்…
-
ஷார்ஜா புத்தகவிழாவில் மலையாள- ஆங்கில எழுத்தாளராக டி.சி.புக்ஸ் (மலையாளம்)
சார்பில் கலந்துகொள்கிறேன். எட்டாம்தேதி காலையில் ஷார்ஜா. பத்தாம்தேதி
மாலையில் ஒரு ச...
6 hours ago