9/25/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 25.09.2009

எல்லோருமே சுதாரிப்பாகத்தான் இருக்காங்கடீ!
எங்கள் உள்ளூர் கடை பார்வதி ஸ்டோர்ஸிலிருந்து அரசன் பிராண்ட் திருநெல்வேலி அல்வா பாக்கெட் ஒன்று வாங்கினேன். அழகாக pack செய்யப்பட்ட அட்டைப் பெட்டியின் முகப்பில் ஒரு படம். ஒரு அழகான கிண்ணத்தில் அல்வா பரத்தி வைக்கப்பட்டிருந்தது. அக்கிண்ணம் வைக்கப்பட்டிருந்த தட்டில் கிண்ணத்தைச் சுற்றி முந்திரிப் பருப்புகள், சில வாசனை விஷயங்கள் ஆகியவை பரப்பப் பட்டிருந்தன. அப்படத்தைப் பார்ப்பவர்கள் ஆவலுடன் அந்த அல்வா பேக்கட்டை வாங்க அப்படமும் ஒரு தூண்டுகோலாகத்தான் இருக்கும். ஆனால் இங்கே அது பற்றிக் கூற வரவில்லை.

பேக்கட்டின் மேல் ஒரு டிஸ்கி இருக்கிறது. அது பற்றித்தான் கூறப் புகுந்தேன். இவ்வாறு எழுதியுள்ளனர்: "Picture shown on the pack is only serving suggestion. Not the contents of the packet". இதை சிரித்துக் கொண்டே கடை முதலாளியிடம் காட்ட, அண்ணாச்சி சீரியசாகவே கூறியதாவது என்னவென்றால் சில மாதங்களுக்கு முன்னால் ஒரு வாடிக்கையாளர் வீட்டுக்குப் போய் பேக்கட்டைத் திறந்து பார்த்துவிட்டு கடைக்கு வந்து கிண்ணம் இல்லையே என சண்டை போட்டாராம். இவரும் கம்பெனிக்கு அதை எழுத இப்போது இந்த வார்ணிங் வந்திருக்கறது என்றார்.

அதான் சொல்றேன், “எல்லோருமே சுதாரிப்பாகத்தான் இருக்காங்கடீ”!

அட்டெஸ்டட் உண்மை நகல்
மேலே குறிப்பிட்டுள்ள இன்று நடந்த நிகழ்ச்சி என் நினைவுகளை சமீபத்தில் 1970-க்கு கொண்டு சென்றது. அப்போதெல்லாம் இந்த ஜெரோக்ஸ் காப்பிகள் புழக்கத்தில் இல்லை. பல ஆவணங்களை தட்டச்சு செய்து நகலெடுக்க வேண்டும். பிறகு அதையும் ஒரிஜினலையும் ஒரு கெஜட்டட் அதிகாரியிடம் கொண்டு சென்று இது உண்மையான நகல் எனச் சான்றை பதிப்பித்து அவரது கையெழுத்தைப் பெற வேண்டும். இதைத்தான் அட்டெஸ்டட் உண்மை நகல் என்பார்கள். பல விஷயங்களுக்கு மனுபோடும்போது தேவையான ஆவணங்களை ஒரிஜினலாக அனுப்பக் கூடாது எனக் கூறப்பட்டிருக்கும். அது நமக்கும் நல்லதுதானே. பல இடங்களுக்கு வேலைக்காக மனுபோடும்போது எல்லோருக்கும் ஒரிஜினலை அனுப்பவியலாதுதானே.

1970-ல் நான் மின்வாரியத்தில் ஜூனியர் இஞ்சினியர் வேலைக்கு மனு போட்டேன். அதில் இவ்வாறு இன்ஸ்ட்ரக்‌ஷன் தரப்பட்டது. “கீழ்க்கண்ட ஆவணங்களின் அட்டெஸ்டட் உண்மை நகல்களை மட்டும் அனுப்பவும். 1) எஸ்.எஸ்.எல்.சி. (வயதுக்கான நிரூபணம்), 2) பொறியியல் டிகிரி சான்றிதழ், 3) அனுபவச் சான்றிதழ்(கள்) 4) விளையாட்டுகளில் பஙேற்றமைக்கான சான்றிதழ்கள், 5) நன்னடத்தைச் சான்றிதழகள் மற்றும் 6) 10 ரூபாய்க்கான போஸ்டல் ஆர்டர் (ஒரிஜினல்)”.

விஷயம் என்னவேன்றால் 1962 வரை இந்த (ஒரிஜினல்) என்ற சேர்க்கை இல்லையாம். அந்த ஆண்டு P.R.V.G. கிருஷ்ணமாச்சாரி என்னும் விண்ணப்பதாரர் போஸ்டல் ஆர்டருக்கும் அட்டெஸ்டட் உண்மை நகலை வைத்து லொள்ளு செய்தாராம். அதிலிருந்து (ஒரிஜினல்) என்பதையும் சேர்த்தார்கள்.

இதை எனக்கு அந்த P.R.V.G. கிருஷ்ணமாச்சாரியே பிற்பாடு கூறினார். அவர் எனது மாமா தாத்தாவின் பிள்ளை (என் அம்மாவின் அல்லது அப்பாவின் மாமா எனக்கு மாமா தாத்தா).

குட்னைட் காயில் விவகாரம்
புகார் கடிதங்கள் எழுதுவது எப்படி -2 என்னும் தலைப்பில் நான் இட்ட இந்த இடுகையில் குறிப்பிட்டுள்ளதை பார்க்கவும். சில நாட்களுக்கு முன்னால் நான் குட்நைட் காயில் தயாரிப்பாளருக்கு அனுப்பிய மின்னஞ்சல் இதோ:
from Narasimhan Raghavan
to customercare@godrejsaralee.com
date Wed, Sep 23, 2009 at 10:40 PM

Sub: Manufacturing defect in Batch No. 002 , manufacturing date 05/2009, Reg. No CIR-29,047/98/Prallethrin(HH)-7 of GoodKnight Advanced low smoke coil
Dear Sir,

All the ten coils of the above batch had a manufacturing defect. The hole for inserting on the stand was not properly done and was also incomplete. In spite of our careful effort to complete the hole with some sharp instrument, five of them broke exactly around the hole and the whole coil became unusable.

By the way this is another unsatisfactory design of the coil, where the fixing hole is in only one place. If there is a breakage around that place, the entire coil becomes useless.

Kindly get this investigated please. This detracts from an otherwise good product.

Regards,
N. Raghavan

மேலே குறிப்பிட்டுள்ள அந்த மின்னஞ்சலில் எனது முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் தந்திருந்தேன். அடுத்த நாளே, அதாவது நேற்று (24.09.2009) எனக்கு மும்பையிலிருந்து காலை 11 மணிக்கு போன் வந்தது. கஸ்டமர் கேர் அதிகாரி ஒருவர்தான் ஃபோன் செய்தார். ஃபோனிலும் அவரிடம் நான் நடந்ததைக் கூற, அவர் அந்த batch-ன் சரியான எண் அட்டைப் பெட்டியின் மூடியின் உட்புறம் இருக்கும், அதைத் தரவியலுமா எனக் கேட்க, தனியாக எடுத்து வைத்திருந்த அப்பெட்டியின் உள்மூடியிலிருந்து அந்த எண்ணையும் பார்த்துக் கூறினேன்.

அவர் என்ன சென்னார் என்றால், அப்படியே அந்த பொருத்தும் ஓட்டை உடைந்தாலும் அதே ஸ்டேண்டில் வேறு விதமாக பொருத்தலாம் என்றும், ஸ்டேண்டில் அதற்கான ஓட்டை இருக்கிறது என்றும் கூற, உடனே முயற்சித்துப் பார்த்து விட்டு அந்த ஓட்டை போதுமான அளவுக்கு இல்லை எனக் கண்டறிந்து அவரிடம் கூறினேன். அதையும் பார்ப்பதாக உறுதி கூறினார். காயிலில் இன்னும் சில இடங்களில் ஓட்டை வைக்கும் சாத்தியக் கூறையும் விவாதித்தோம் கடைசியாக எனது முகவரிக்கு இரண்டு பேக்கெட்டுகள் இலவசமாக அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.

இம்மாதிரி புகார் செய்யும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உண்டு. அவற்றை இங்கு பார்ப்போம்.

நாம் எங்காவது சேவை குறைபாடுகளைக் கண்டால் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவேண்டும் என்பதே. புகார் கடிதங்களுக்கு வலு உள்ளன. முறையாக, காழ்ப்பில்லாமல் எழுதப்பட்ட புகார் கடிதங்கள் மேல் நிச்சயம் நடவடிக்கை எடுக்கின்றனர். அவற்றை எழுதுவதும் ஒரு கலையே.

1. புகார் செய்யும்போது ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைக் குறித்தே இருக்க வேண்டும். அப்படியின்றி பொதுவாக எழுதினால் யாரும் கவனிப்பதில்லை. இடம், பொருள், காலம் எல்லாவற்றிலும் தெளிவாக இருத்தல் வேண்டும்.
2. எவ்வளவு கோபம் இருந்தாலும் அதை கடிதத்தில் வெளியே காட்டலாகாது. மரியாதையான தொனியில் எழுதவேண்டும். திட்டினால் நம் காரியம்தான் கெடும்.
3. சம்பந்தப்பட்டவர் பெயர், பதவியின் பெயர் எல்லாம் தெளிவாக குறிக்கவேண்டும். புகார் கடிதம் பெறுபவர் அம்மாதிரி பல கடிதங்களைப் பார்த்திருப்பார். ஆகவே ரத்தினசுருக்கமாக எழுத வேண்டும்.
4. நாம் எழுதுவதால் என்ன நடந்துவிடப் போகிறது என்னும் தாழ்வு மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும்.
5. சில சமயங்களில் பொதுவாகவும் எழுத வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு பம்பாயில் வி.டி.ஸ்டேஷன் எதிரில் காபிடல் என்னும் சினிமா தியேட்டர் இருந்தது. அதன் அருகில் வண்டிகளுக்கு இடது பக்கம் திரும்பும் சிக்னல் பச்சை நிறத்தில் இருக்கும்போது தெரு நடுவில் உள்ள பாதசாரிகள் சிக்னலும் பச்சை நிறத்தில் வந்தது. இதை பற்றி நான் போக்குவரத்துக்கு பொறுப்பான போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதுகையில் இடத்தைத் தெளிவாகக் குறிப்பிட்டு அவரே நான் சொன்னதை சோதித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொண்டேன். இரண்டே நாட்களில் பதில் வந்தது. அந்தத் திருப்பத்தில் இடது பக்கம் திரும்புவதையே ரத்து செய்திருந்தனர். அதுதான் நானும் வேண்டியது. இந்த இடத்தில் புகார் தெளிவாக இருப்பது முக்கியம்.
6. ஒரு புகாரில் ஒரு விஷயம்தான் இருக்கவேண்டும். வசவசவென்று பல புகார்களை அடுக்கலாகாது. தேவையானால் ஒவ்வொரு புகாருக்கும் ஒரு தனிக் கடிதம் எழுத வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு புகாரும் தனிப்பட்ட அலுவலகரிடம் செல்லும். தனித்தனி கடிதங்கள் இருப்பதுதான் சம்பந்தப்பட்ட கோப்புகளில் இடுவதற்கு தோதாக இருக்கும். இல்லாவிட்டால் ஒரு புகார் மட்டும் கவனிக்கப்பட்டு கடிதம் அதற்கான கோப்பில் சென்றுவிடும். நாமே தனித்தனியாகக் கொடுத்தால் மேற்பார்வை அதிகாரி சம்பந்தப்ப்ட்ட அலுவலகர்களுக்கு அல்லாட் செய்ய சௌகரியமாக இருக்கும்.

இப்படித்தான் சமீபத்தில் 1971-ல் பம்பாயில் இருந்தபோது மேக்ஸ் ம்யுல்லர் பவனில் சிலரால் மட்டும் உபயோகிக்க முடிந்த நூலகத்தை பொது மக்களுக்குத் திறந்து வைக்க முடிந்ததை பற்றி ஒரு பதிவு போட்டுள்ளேன். அதில் கூறியதுபோல எதுவும் முயற்சி செய்தால் நடக்கக் கூடியதே. கேட்டால் கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம் ஆனால் கேட்காவிட்டால் நிச்சயமாகக் கிடைக்காது என்றுதான் கூற வேண்டும். இதைத்தான் கேளுங்கள் தரப்படும் என்று கூறுகிறார்கள் போலும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/24/2009

டோண்டு பதில்கள் - 24.09.2009

கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?

எம். அருணாச்சலம்
1. அன்பழகன் or நெடுஞ்செழியன் - இவர்களில் யார் சிறந்த இளிச்சவாயர்?
பதில்: அன்பழகன் கருணாநிதியிடம் மட்டுமே இளிச்சவாயராக இருந்தார். ஆனால் நெடுஞ்செழியனோ கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய மூவரிடமும் இளிச்சவாயராக இருந்தார். அதில் இந்த அழகுக்கு கருணாநிதியை விட்டுப் பிரிந்து போய் பிறகு அவரிடமே திரும்பி வந்த கதை வேறு இருக்கிறது. ஆகவே நெடுஞ்செழியனே வெற்றி பெற்று உலக மகா இளிச்சவாயர் பட்டத்தைத் தட்டி செல்கிறார். அன்பழகன் ஸ்டாலினுக்கும் இளித்தால், தோல்வியின் அளவை சற்றே குறைக்கலாம். அவ்வளவே, அவ்வ்வ்வ்வ்.

2. நிகழ்வு 1: ஹெலிகாப்டர் விபத்தில், ஆந்திர மாநில முதல்வர் Y.S.ராஜசேகர ரெட்டி திடீர் மறைவு. நிகழ்வு 2: மேற்படி நிகழ்வு நடந்து சில நாட்களிலேயே, 'அசத்யம்' நிறுவனர் B.ராமலிங்க ராஜு, தான் வாழ்க்கையை "நிம்மதியாகவும், ஹாய்யாகவும்" கழித்துவரும் ஹைதராபாத் சிறையில் இருந்து, 'நெஞ்சு வலி' மற்றும் 'மாரடைப்பு' காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சில நாட்களிலேயே அவருக்கு angioplasty சிகிச்சை பெற்றார். இந்த இரு நிகழ்வுகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா - Butterfly Effect - போல?
பதில்: எதுக்குத்தான் பட்டாம்பூச்சி விளைவைச் சொல்வது என்ற தராதரமே இல்லையா? கமல் கோபித்து கொள்ளப் போகிறார்.

எம். கண்ணன்
1. கமல்ஹாசனின் ஒவ்வொரு படத்தின் ரீலீசும் ஏன் ஏதாவது வழக்கு அல்லது பிரச்னைகளில் சிக்குகிறது ? இதில் இண்டஸ்ட்ரீகாரர்களின் உள்குத்து இருக்குமோ?
பதில்: இம்மாதிரி பிரச்சினைகளை ஒவ்வொரு படத்துக்கும் கொண்டுவருவது அவருக்கு செண்டிமெண்டலாக ஒத்துக் கொள்கிறதோ என்னவோ.

2. ஜெயா டிவியின் காலைமலர் நிகழ்ச்சிகளை மாற்றி "குட் மார்னிங் தமிழா" என வேறு விதமான நிகழ்ச்சிகளோடு வருகிறதே? பார்க்கிறீரா?

பதில்: ஜெயா டிவி பார்ப்பதேயில்லை.

3. மு.க. ஸ்டாலினின் உடல்நிலை பற்றிக் கேட்டால் - ரஷ்ய ஸ்டாலினைப் பற்றி பதிலெழுதி வெறுப்பேற்றுகிறேன் என சொல்கிறீர்களே? யாரிடமாவது கேட்டாவது சொல்லும்மையா - மு.க ஸ்டாலினுக்கு என்ன உடம்பு என? (இல்லை லண்டனிலிருந்து ஸ்விஸ் சென்று பண விவகாரங்களை பைசல் பண்ண பயணமா)
பதில்: அதெல்லாம் பெரிய இடத்து விஷயம். ரஷ்ய ஸ்டாலின் பற்றி எழுதினால் கேட்பார் இல்லை. இந்த ஸ்டாலின் பற்றி ஏதேனும் எழுதப்போக ஆட்டோ வேறு வரவேண்டுமா?

4. தினமும் கள்ளக்காதல், கற்பழிப்பு என தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி செக்ஸ் குற்றங்கள் அதிகரித்துள்ளனவா? எங்கு போகிறது தமிழ்ச் சமூகம்?
பதில்: மனித சரித்திரத்தில் கள்ளக்காதல், கற்பழிப்பு ஆகியவை இல்லாத தருணங்களே கிடையாது. அப்படியிருக்க தமிழ் சமூகம் மட்டும் என்ன ஸ்பெஷல்?

5. கொலு வைப்பதுண்டா? எந்த சுண்டல்கள் பிடிக்கும்? கொலுவுக்கு வரும் பெண்டிரை சைட் அடிப்பதுண்டா?
பதில்: தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டலுக்கு ஈடாகுமா? சைட் அடிக்கும் காலம் எல்லாம் போய் விட்டது. ஃபிகர்களின் வணக்கம் மாமா, வணக்கம் தாத்தா ஆகிய முகமன்களைக் கேட்ட பிறகும் அவை எல்லாம் தோன்றுமா என்ன? மற்றப்படி ஒரு முறை கொலுவுக்கு ஆள் வந்ததை கவனிக்காமல் நடுஹாலில் டப்பாங்குத்து டான்ஸ் போட்டது பற்றி இப்பதிவில் எழுதியுள்ளேன்.

6. கமல்ஹாசன் திருமணமே வேண்டாம் என சொன்னதற்கு குமுதம் ஸ்நேகிதி, கல்கி தராசு தவிர பெரிய கண்டனங்கள் எழவில்லையே? உங்கள் கருத்து என்ன? கமல் தற்போது கவுதமியுடன் வாழும் முறை பற்றி உங்கள் கருத்து என்ன? நாளை கவுதமியுடன் வெளியூர் செல்லும் போது ஓட்டல் அறை புக் செய்ய - கவுதமி யார் எனக் கேட்டால் என்ன பதில் சொல்லுவார்?
பதில்: ஏன் கண்டனங்கள் எழ வேண்டும்? கவுதமியுடன் அவர் வாழ்வது அவர் சொந்த விஷயம். அவரது நடிப்பை நாம் சினிமா டிக்கெட் காசு கொடுத்து வாங்கியோ அல்லது திருட்டு விசிடியிலோ பார்த்து விட்டுப் போகிறோம். அவரைப் பொருத்தவரை நாம் போகிற போக்கில் போகிறவர்கள். நாம் யார் அவர் பற்றி கருத்து சொல்ல?

7. விகடன், குமுதம், குங்குமம், ஏனைய மகளிர், பக்தி, ஜோதிடம் பத்திரிக்கைகள் எல்லாம் தாண்டி மாலனின் 'புதிய தலைமுறை' விற்குமா? எதை நம்பி அச்சுப் பத்திரிக்கை துவங்கியுள்ளார்? இணையத்திலேயே துவங்கியிருக்கலாமே?
பதில்: அவர் நம்புகிறார். அதுதானே முக்கியம்? நான் இன்னும் இதழைப் பார்க்கவில்லை.

8. வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்னோரு சிவராஜ் பாடீல் என எதிர்கட்சிகள் சொல்ல ஆரம்பித்துவிட்டனரே? ஆஸ்திரேலியா, சீனா, பாகிஸ்தான் என சொதப்பல்கள்?
பதில்: வெளியுறவுக்கென மந்திரி இருந்தாலும் அதிகாரம் எல்லாம் பிரதமர் - இல்லையில்லை - சோனியா காந்தியின் வசம் மட்டுமே. இதில் சிவராஜ் பாடீலாக இருந்தால் என்ன, வேறு யாரேனும் இருந்தால் என்ன?

9. கொடநாடு போன்ற மலைகாட்டு பங்களாவில் 108 நாட்கள் இருக்கவேண்டும் என உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அங்கு சென்று என்ன செய்வீர்கள்? (மொழிபெயர்ப்பு, பதிவுகள் தவிர)
பதில்: யார் கண்டார்கள்? ஏதேனும் ரகசிய கோப்புகள் பிரெஞ்சு/ஜெர்மனில் உள்ளன. அவற்றை அங்கு சென்றுதான் மொழிபெயர்க்க வேண்டும், அதற்கான எனது விலையைக் கொடுத்தால் என்றால் மாட்டேன் என்றா சொல்லுவேன்? 108 நாட்களுக்கு 8 லட்சத்துக்கு மேல் பணம் பார்க்கலாமே. சாப்பாடு, தங்கும் செலவு என்று ஒன்றும் கிடையாது. போகவர இலவச ஏசி கார் சவாரி. என்ன, ஒரு மடிக்கணினி மற்றும் வைர்லஸ் இண்டெர்னெட் இணைப்பு எடுத்துக் கொண்டு போக வேண்டும் அவ்வளவே. ஏனெனில் மீதி வாடிக்கையாளர்களை ஒதுக்க இயலாது அல்லவா?

10. நங்கநல்லூரில் சமீபத்தில் நடந்த 4 நல்ல விஷயங்கள் பகிரவும்.
பதில்: 1. சமீபத்தில் 1969-ல் நான் நங்கநல்லூருக்கு குடி புகுந்தேன் 2. சமீபத்தில் 1972-ல் நங்கநல்லூருக்கு சினிமா தியேட்டர் வந்தது. 3. சமீபத்தில் 2001-ல் நான் மீண்டும் நங்கநல்லூருக்கு வந்தேன். 4. சமீபத்தில் 2004-ல் நங்கநல்லூருக்கு பஸ் டெர்மினஸ் என் வீட்டுக்கு எதிரேயே வந்தது.


கேள்விகள் இருந்தால் (இப்போதைக்கு இல்லை), மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/22/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 22.09.2009

செந்தழல் ரவியின் பல்டிகள்
மோகன் கந்தாமி அவர்களது இப்பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ:
அதற்கு முன்னால் கோவி கண்ணன் அப்பதிவில் எழுதியதையும் முதலில் காட்டுகிறேன்.

//டோண்டுவுக்கும் போலி டோண்டுவுக்கும் தொடர்பு இருந்தது - என்று இவர் (செந்தழல் ரவி) சொல்வது போல் வேறு யாருமே சொன்னது கிடையாது.
டோண்டு சார் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார் என்று அறிய ஆவலாக இருக்கிறேன்//.
இப்போது பின்னூட்டம்:

@கோவி கண்ணன்
அவற்றை முதலில் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம் என்றுதான் நினைத்தேன். இருந்தாலும் சில மாதங்கள் கழித்து “நான் சொன்னதை டோண்டு ராகவன் மறுக்கவேயில்லை, ஆகவே அவர் அதை ஒப்புக் கொண்டுவிட்டார்” என்று இவரே ஜல்லியடிக்கலாம் என்பதால் சில விஷயங்களை சந்தேகத்துக்கிடமின்றி கூறிவிடுகிறேன். இவர் போலி டோண்டு மூர்த்தியுடன் உறவாடி அவன் ரகசியங்களை கறப்பதாக என்னிடம் கூறியது உண்மைதான். ஆனால் மேற்கொண்டு விவரங்கள் நான் கேட்கவில்லை. அவ்வப்போது இவராகவே பிராக்ரஸ் ரிப்போர்ட் ஃபோன் மூலமோ அல்லது வேறு வகையிலோ தருவார். மற்றப்படி ஏப்ரல் 2008-ல் இவர், உண்மைத் தமிழன், ஓசை செல்லா ஆகியோர் போலீசுக்கு போய் மூர்த்தி மேல் புகார் தந்தது, பத்திரிகைகளிலும் அது பற்றி செய்தி தந்தது ஆகிய விஷயங்கள் மனதுக்கு நிறைவையே தந்தன. பிறகு நானும் என் தரப்புக்கு போய் மூர்த்தி மேல் புகார் கொடுத்தது எல்லாம் ஏற்கனவே எழுதிவிட்டேன். அவை இப்போது இங்கு வேண்டாம். மொத்தத்தில் மூர்த்தி போலீசில் நின்று தலைகுனிந்து நின்றது, அவன் பல் பிடுங்கப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது என்பதே போதும்.

செந்தழல் ரவி பற்றி என்னைக் கேள்வி கேட்டு கோவிகண்ணன் இட்ட பதிவுக்கு நான் இட்ட எதிர்ப்பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்.
“செந்தழல் ரவி என் மகளைப் பற்றி அசிங்கமாக எழுதவில்லை. அப்படியே அவர் எழுதினார் என நிரூபணமானாலும் அவரை மன்னிக்கிறேன். ஹாரி பாட்டர் கதைகளில் வரும் ஸ்னேப் போல அவர் செயல்பட்டார். அதற்கு மிகுந்த மனவுறுதி வேண்டும். அது அவரிடம் இருந்தது. அவ்வளவுதான் விஷயம்”.

இன்னொன்றும் கூறுகிறேன். ரவியை நான் அப்போது விட்டுக்கொடுக்காமல் இருந்தது ஜயராமனைக் காப்பாற்றவே என்று கோவி கண்ணன் ஓரிடத்தில் அபிப்பிராயப்பட்டிருக்கிறார். அது தவறு. ஏனெனில் ஜயராமன் அப்பாவி என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. போலி டோண்டுதான் இங்கும் குற்றவாளி எனபதை நான் பல இடங்களில் கூறிவிட்டேன். எனது இலக்கு மூர்த்திதான். அச்சமயம் அவன் மேல் உள்ள குற்றச்சாட்டு திசைதிருப்பப்படக்கூடாது என்பதுதான் எனது நோக்கம். ஆகவே நான் அவ்வாறு எழுதியது எழுதியதுதான்.

ஆனால் கடந்த சில நாட்களாக அவர் போலி டோண்டுவுக்கு பலதகவல்கள் கொடுத்து வந்தது உண்மை டோண்டுவாகிய நான்தான் என அவதூறாக எழுதி வருகிறார். அது ஏன் எனத் தெரிய ஒன்றும் பெரிய அறிவு எல்லாம் தேவையில்லை. லக்கிலுக்கைக் காப்பாற்றும் முயற்சியே அது என்பது புரிகிறது. ரவி எனக்கனுப்பிய மின்னஞ்சல்களையெல்லாம் தேடிப் பார்த்து விட்டேன். அவர் சொன்னது போல அவர் மனைவிக்கு ஜெர்மன் படிப்பது சம்பந்தமாக எனக்கு எந்த மின்னஞ்சலும் கிடைக்கவில்லை. பிறகு நான் ஃபோனில் பேசி அவரது மனைவியின் விவரங்களைக் கேட்டதாகவும் அவை பிறகு மூர்த்திக்கு சென்றதாகவும் கூறுகிறார். அவர் வேறு இடத்தில் குறிப்பிட்டுள்ள தோரணையில் “போலி டோண்டுவுக்கு தகவல் கொடுக்குமளவுக்கு டோண்டுவுக்கு மோட்டிவேஷன் என்ன”? என்னும் கேள்விதான் நிற்கிறது. அவர் மனைவி பற்றி அவரிடம் நான் ஒருவிவரமும் கேட்கவில்லை, அவரைப் பற்றி பேச்சே எங்கும் டெலிஃபோனில் பேசியதாக நினைவில்லை.

அதேபோல தான் போலியின் தளத்தை brute force கொண்டு உடைக்க முயற்சித்ததாகவும், அது எனக்குத் தெரியுமென்றும் பிறகு மூர்த்தியிடம் அச்செய்தி போனதாகவும் வேறு கூறுகிறார். நான் ஏற்கனவே பல இடங்களில் சொன்னது போல முழுவிவரம் ஒன்றையும் நான் கேட்கவில்லை. போலிக்கு எதிராக வேலை செய்கிறார் என்பதே எனக்கு போடுமானதாக இருந்தது. ஆகவே இங்கும் ரவி பொய் சொல்கிறார். அதற்கும் மோட்டிவேஷன் லக்கிலுக்கைக் காப்பாற்றுவதற்கே என்று தோன்றுகிறது. அவரைப் பார்த்து பரிதாபப்படத்தான் முடியும்.

என்னைப் பொருத்தவரை நான் தெளிவாகவே உள்ளேன். இப்போது நடக்கும் விஷயங்களைப் பார்ப்பதில் ஒன்று தோன்றுகிறது. செந்தழல் ரவி வெறும் அப்ரூவராகச் செயல்பட்டுள்ளார் என வைத்துக் கொண்டாலும் மூர்த்தியை பிடிக்க அவரது உதவி இன்றியமையாததாக ஆகியிருக்கிறது. மூர்த்தி நீக்கப்பட்டுவிட்டான். அது போதும். இனிமேல் செந்தழல் ரவி வேறு பல்டிகள் அடித்தாலும் எனக்குக் கவலையில்லை. ஆனால் அவரும் உண்மைத் தமிழனும் போலியை பிடிப்பதில் ஆற்றிய பங்கு விலைமதிப்பற்றது. அதற்காக என் நன்றி எப்போதுமே அவர்களுக்குண்டு.

நடிகர் விஜயின் செலெக்டிவ் நினைவுகள்
நடிகர் விஜயின் இளமை நினைவுகள் பற்றிய ஒரு தொடர் வாராந்தரி ராணி வார இதழில் வந்து கொண்டிருக்கிறது. லேட்டஸ்ட் இதழில் (27.09.2009) விஜய் தனது திரைவளர்ச்சி பற்றி குறிப்பிடுகையில் அது திட்டமிட்டு நடந்ததாகவே கூறுகிறேன். தனது சிறுவயது பாத்திரங்களையும் குறிப்பிட்டு, “சட்டம் ஒரு விளையாட்டு” மற்றும் இது எங்க நீதி” ஆகிய படங்களுக்கு முக அவர்களின் வசனம் என பெருமை பட்டுக்கொள்கிறார். நியாயமே. ஆனால் அதே சமயம் தான் ஏற்ற சிறுவயது பாத்திரங்களில் சில விஜயகாந்தின் கேரக்டருக்கானதே அவை என கூறாமல் விட்டுவிட்டார். ஆனால் வேறொரு சந்தர்ப்பத்தில் ஒரு டிவி பேட்டியில் இதை பெருமையாகக் குறிப்பிட்டு க்ளிப்பிங்ஸ் வேறு காட்டினார்.

இப்போது இதை இங்கு கூறாமல் விடுவதன் நோக்கம் என்னவாக இருக்கும்? ஒரு வேளை அடுத்த இதழில் கூறுவாரோ? அல்லது ஏதேனும் திட்டமிட்ட அரசியல் நோக்கங்கள்?

காந்தியும் சாதியும்
இது பற்றி நண்பர் ஜயமோகன் எழுதியுள்ள்ளவை ஒத்துக் கொள்ளும்படியாகவே உள்ளன.

அவற்றிலிருந்து சில வரிகள்:
“சாதி என்ற அமைப்பு இந்திய சமூகத்தின் முக்கியமான ஒரு கூறு. அதன் வரலாற்றுப் பரிணாமம், சென்றகாலத்தில் அதன் சமூகப்பயன்பாடு, அதன் நிகழ்காலப்பணி எதைப்பற்றியும் எந்த ஆய்வும் இந்தியாவில் நடக்கவில்லை. இந்தியாவை நோக்கிய ஆங்கிலேயர் அதை இந்திய சமூகத்தைப் பீடித்திருக்கும் ஒரு நோய் என்று சொன்னார்கள். இந்திய படித்த வர்க்கம் அப்படியே ஏற்றுக்கொண்டு சொல்ல ஆரம்பித்தது. வெள்ளையனே சொல்லிவிட்டான் என்ற தாழ்வுமனப்பான்மையே காரணம்.

ஆனால் உண்மையில் இந்த நிராகரிப்பு என்பது நம் படித்தவற்கத்தின் நாக்குகளில் மட்டுமே இருந்தது. நெஞ்சில் நிகழவில்லை. இக்கணம் வரை அப்படித்தான். ஏன் என்றால் அவனுக்குள் சாதியைப்பற்றிய எந்த விவாதமும் நிகழவில்லை. அவ்வாறு விவாதம் நிகழ்ந்திருந்தால் சாதியின் சமூகப்பங்களிப்பு குறித்து அவன் சிந்தனை செய்திருப்பான். இப்போதும் சாதியைச் சுமக்க அவனுக்கு என்ன காரணங்கள், கட்டாயங்கள் உள்ளனவோ அந்தக் காரணங்கள் எல்லாமே விவாதத்துக்கு வந்திருக்கும். அவற்றை வேறு எவ்வகையில் தாண்டிச்செல்ல முடியும் என்று பார்த்திருப்பான். அந்த வழிமுறைகள் அவனுக்கு உதவியிருக்கும்.

காந்தியைப் பொறுத்தவரை அவர் அந்த தாழ்வுணர்ச்சி முற்றிலும் இல்லாதவர். இந்தியாவைப்பற்றிய மேலைநாட்டு நோக்கை அவர் எவ்வகையிலும் கடன் பெற்றவர் அல்ல. மேலைநாட்டின் தத்துவஞான மரபில் அன்று மிகுந்த படைப்பூக்கத்துடன் உருவாகிவந்த ஒரு தரப்புடன் அவருக்கு தீவிரமான உறவிருந்தது — தோரோ, ரஸ்கின், டல்ஸ்தோய் மரபில். ஆனால் அவர் சிந்தனைகளைக் கடன்கொண்டவரல்ல.

காந்தியின் தனித்தன்மை அவர் தன் சிந்தனைகளை நூல்களில் இருந்து பெறவில்லை என்பதே. அவர் தன் சொந்தச் சிந்தனைகளுக்கு தேவையான அளவுக்கு மட்டும் நூல்களை பயன்படுத்திக்கொண்டார். அவர் நடைமுறைவாதி. சமூகம் குறித்த தன் தரவுகளை தன் சொந்த அவதானிப்புகளில் இருந்தே அவர் பெற்றுக்கொண்டார். தன் பகுத்தறிவுக்கு ஒரு விஷயம் உண்மையிலேயே திருப்தி அளிக்காத வரை அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை”.

“காந்தி சாதியைப் பற்றி என்ன நினைத்திருந்தார் என்று பார்க்க வேண்டும். காந்தி அக்காலத்தில் ஒரு இந்து சாதியைப்பற்றி இயல்பாக என்ன நம்பிக்கை கொண்டிருந்தாரோ அந்த நம்பிக்கையையே தானும் கொண்டிருந்தார். அவர் காலத்தில் ஐரோப்பியரை வழிமொழிந்து சாதிக்கு எதிராகப் பேசியவர்கள் அந்தரங்கத்தில் கொண்டிருந்த நம்பிக்கைதான் அது. காந்தியின் உண்மையுணர்ச்சியே அவரை அதை நேர்மையாக பதிவுசெய்ய வைத்தது.

காந்தியின் ஆரம்பகால எண்ணங்கள் இவை. வருணப்பிரிவு என்பது சமூகத்தில் ஓர் ஒழுங்கை உருவாக்கும்பொருட்டு இயல்பாக பரிணாமம் அடைந்துவந்த ஒன்று. அது சமூகத்தின் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது. தந்தையரின் தொழிலை மகன் செய்யும்போது இயல்பாகவே அவனுக்கு அதில் திறமை உருவாகி வருகிறது. இந்திய சமூகம் உள்மோதல்களினால் அழியாமல் ஆக்கபூர்வமாகச் செயல்பட அது பலநூற்றாண்டுகளாக உதவி வந்திருக்கிறது”.

“காந்தி சாதியைப்பற்றி பேசிய அந்நாட்களில் இந்திய சமூகத்தில் சாதி உருவாகி வந்த விதத்தைப் பற்றிய ஓர் அறிவியல்பூர்வமான ஆய்வே நடக்கவில்லை. இந்தியாவை மதவிழிப்பற்ற காட்டுமிராண்டி நாடாகச் சித்தரித்த கிறித்தவ மதப்பரப்புநர்கள் உருவாக்கிய சித்திரமே பிரபலமாக இருந்தது. அதன்படி, சாதி என்பது இந்திய சமூகத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான கொடிய வழக்கங்களில் ஒன்று. அது இந்து மதத்தாலும் பிராமணர்களாலும் அவர்களின் ஆதிக்கத்துக்காக ஒரு சதிவேலையாக உருவாக்கப்பட்டது. ஆகவே வேருடன் கெல்லி எறியப்பட வேண்டியது…

இன்றுவரை தமிழ்நாட்டில் அறிவுஜீவிகள் என்பவர்களிடையே பிரபலமாக இருப்பது இந்த ஒற்றைவரிப் புரிதல் மட்டுமே. இந்த மேலோட்டமான புரிதலை மக்களிடையே கொண்டுசெல்ல முடியாது, ஏனென்றால் அடிப்படையான ஒரு பயன்பாடு இருப்பதனால்தான் அவர்கள் சாதியை ஆரத்தழுவிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே சாதிநிராகரிப்பு என்பது மேடையில் செய்யப்படும் வெற்றுபாவனையாக நின்றுவிடுகிறது. நடைமுறை யதார்த்தத்துக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதில்லை.

தமிழ்நாட்டு யதார்த்ததையே பார்ப்போம். இங்கே கொஞ்சமாவது சாதியை விட்டு வெளியே வந்தவர்கள் ‘உயர்மட்ட’ சாதியினரே. இன்றும் ‘கீழ்மட்ட’ சாதியினரிடம் சாதிப்பற்று என்பது ஆழமாக வேரோடி இருக்கிறது. சாதிமறுப்பை மேடையில் கக்குபவர்கள், சாதியை உருவாக்கிய உயர்சாதிச்சதியை எதிர்த்து பொங்குகிறவர்கள் அனைவருமே சாதிக்குள்தான் வசதியாக இருந்துகொண்டிருக்கிறார்கள்”.


எழுத்தாளர் நாடோடி அவர்கள் சமீபத்தில் 1957-ல் எழுதியதைப் பார்ப்போமா?
“நாடோடி தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள இன்னொரு எழுத்தாளர் அப்போதைய (2057-ஆம் ஆண்டில்) ஜாதிக் கட்டுப்பாடு பற்றி விளக்குகிறார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் வர்ணாசிரமம் வந்து அதிலிருந்து ஜாதிகள் வந்ததை விளக்குகிறார். பிறகு அவற்றின் கட்டுக்கோப்பு குலைந்து போனதால் யார் வேண்டுமானாலும் எந்தக் குலத்தொழிலையும் செய்யலாம் என நிலை ஏற்பட, சம்பளம் அதிகம் வராத தொழில்களுக்கு ஆட்கள் கிடைக்காது, சம்பளம் அதிகம் கிடைக்கும் வேலைகளுக்கு ஒட்டுமொத்தமாக ஜனங்கள் போய் விழ அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் வந்தது. ஆகவே 500 ஆண்டுகளுக்கு முன்னால் அப்போது நிலவிய தொழில்களின் அடிப்படையில் மீண்டும் ஜாதிகளை வகுத்து ஒரு ஜாதிக்காரர் இன்னொரு ஜாதிக்காரரின் வேலையை செய்யக்கூடாது என்ற நிலை நிறுவப்பட்டது.

ஜாதிப் பிரிவுகள் இருந்தனவே தவிர இந்த ஜாதிதான் உயர்ந்தது இன்னொரு ஜாதி தாழ்ந்தது என்ற எண்ணங்களும் வராமல் பார்த்து கொள்ளப்பட்டன. தலைமுறை தலைமுறையாக ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் ஒரு தொழிலை மட்டும் செய்ததால் அத்தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆகவேதான் ஒரு ஜாதியினர் இன்னொரு ஜாதியினரைத் தொடுவது கூட குற்றமாகக் கருதப்பட்டது. போலீஸ் ஜாதியைச் சார்ந்தவர்கள் திருடர்களை பிடிக்கும்போது மட்டும் தங்கள் தொழில் தர்மப்படி அவர்களைத் தொடலாம். பிறகு தீட்டு கழிய அவர்கள் குளிப்பதற்கு சோப்பு டவல் எல்லாம் வழங்கப்படும். திருடர்களும் போலீஸ் ஜாதியினர தங்களைத் தொட்டு விட்டதால் அவர்களும் குளிப்பார்கள்.

இதையெல்லாம் கேட்ட நாடோடிக்கு தலை சுற்றி தெரியாத்தனமாக தான் 1957-லிருந்து வருவதாகக் கூற, “பைத்தியம் டோய்” எனக் கூறி எல்லோரும் அவரை அடிக்க வருகின்றனர். திடீரென விழித்துக் கொள்ளும் நாடோடி தான் 1957-லேயே இருப்பதை உணர்ந்த் நிம்மதி அடைகிறார்”.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/17/2009

டோண்டு பதில்கள் - 17.09.2009

கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?

ரமணா
1. அண்ணா புற்று நோயால் சிரமப்படும் நாளில் பெருந்தலைவர் காமராஜை தோற்கடிக்கவேன்டும் என காரணம் கூறி அதிக ஒளி வீசும் கேமிரா முன்னால் நீண்ட் நேரம் நிற்க வைத்ததால்தான் அவருக்கு மரணம் நேர்ந்தது;அதற்கு இன்றைய அரசியல் பெரும்புள்ளி சதி செய்தார் என்று சொல்லபட்டதே உண்மையென்ன?
பதில்: அம்மாதிரி ஒரு வதந்தியும் அக்காலகட்டத்தில் நான் கேள்விப்படவில்லையே? மேலும், இது உண்மையாக இருக்கவும் வாய்ப்பில்லை. ஏனெனில் 1962-ல் அண்ணா தோற்க வேண்டுமென காமராஜ் வேண்டுமானால் வன்மத்துடன் காரியம் செய்தார். அதனால் அண்ணா அவர்கள் ராஜ்ய சபாவுக்கு சென்று தன்னை வளப்படுத்திக் கொண்டதற்கு காமராஜ் தன்னைத் தானே பின்னால் நொந்து கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைதான்.

ஆனால் 1967-ல் அண்ணா அவ்வாறு ஒன்றும் செய்யவில்லை. காமராஜரை எதிர்த்து அதிகம் பிரபலமாகாத ஒரு மாணவர் தலைவரை நிற்க வைத்தார். காமராஜ் தோற்றதற்கு நிஜமாகவே வருத்தப்பட்டார். அந்த மாணவர் தலைவர் செருக்குடன் அலைந்த காலத்தில் மண்டையில் தட்டி ஓரமாக உட்கார வைத்தார் அவர்.

2. 1967 ல் எம்ஜிஆர் ராதாவால் சுடப்படார் என்பது செய்தி. பின் வழக்கு நடந்தது. ஒரு சில தகவல்கள் அரசியல் செல்வாக்கு இதில் தலை நுழைத்து சாதகமாய் காரியங்கள் நடந்தன என்று சொல்லபட்டதே.இதில் எது உண்மை?
பதில்: யாருக்கு சாதகமாய்? எதற்கும் சுதாங்கன் எழுதிய புத்தகத்தைப் பாருங்கள். மற்றப்படி கேஸ் நடந்து முடிந்து எம்.ஆர். ராதா தண்டனையும் பெற்று வெளியில் வந்தாயிற்று. அவரும் இல்லை, எம்ஜிஆரும் இப்போது இல்லை. எல்லாம் பழங்கதை ஆகிவிட்டது.

அந்த வழக்கில் சாட்சியளித்த தடவியல் நிபுணர் ஒரு சுவாரசியமான விஷயம் சொன்னார். அவ்வளவு கிட்டத்திலிருந்து எம்.ஜி.ஆரை சுட்டபோதும் அவர் இறக்க்வில்லை. காரணம் என்னவென்றால் தோட்டா பழையதாக ஆனதால் அதன் வீர்யம் குறைந்திருந்தது என்பதே. எது எப்படியானாலும் எம்.ஜி.ஆர். செய்த தருமமே அவரைக் காப்பாறியது என்றுதான் நான் கூறுவேன்.

3. இதற்கு பிரதி உபகாரமாய் 1972ல் திமுகவை இரண்டாய் உடைப்பதற்கு சதி செய்தார் எனும் திமுக தலைவரின் குற்றச்சாட்டு சொல்லபட்டதே அது உண்மையா?
பதில்: யார், எம்ஜிஆரா? எம்ஜிஆரை வெளியில் அனுப்பி முட்டாள்தனம் செய்தவர் கருணாநிதி. கட்சியின் பிளவுக்கும் அவரே பொறுப்பு.

4. ரஜினி காதலிக்கும் பெண் பெயர் லதா எனகேள்வி பட்டதும் அது தனது கதாநாயகி லதா எனத் தவறாய் புரிந்து,வசூல் சக்ரவர்த்தி கொடுத்த சித்திரவதையின் காரணமாய் ரஜினி மனநலம் பாதிக்க பட்டார் என்று சொல்லபட்டதே, அது உண்மையா?
பதில்: அதுவும் கேள்விப்பட்டதில்லை. ஆனால் எம்ஜிஆர் நாயகி லதாவுடன் ரஜினி ஜோடியாக நடித்துள்ள படம் சங்கர், சலீம், சைமன். ஆனால் அப்போதுதான் எம்ஜிஆர் படவுலகிலேயே இல்லையே.

5. நாகேஷ் வேடிக்கையாய் சின்னவரை கிழவன் என கேலி பேசயதால் கோபப் பட்டு அவரது நகைச்சுவை நடிகர் வாழ்வுக்கு மங்களம் பாடினார் சின்னவர் என்று சொல்லபட்டதே, உண்மையா?
பதில்: இந்தச் செய்தியை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எம்ஜிஆர் இல்லாவிட்டால் என்ன சிவாஜிதான் ஃபீல்டில் இருந்தாரே. மொத்தத்தில் நாகேஷ் எம்ஜிஆர் பிரிந்ததில் சோவுக்கு வாழ்வு.


ராம்
1. ஜீவாத்மா பரமாத்மா பற்றி உங்களுக்கு என்றைக்காவது புரிந்திருக்கிறதா?
பதில்: ஜீவாத்மா என்பது ஆதாம் ஏவாள் என கிறித்துவர்கள் கூறுவதற்கு ஒப்பானது என ஒரு முறை காஞ்சி பெரியவர் எழுதி படித்ததாக ஞாபகம்.


எம். கண்ணன்
1. சுஜாதா ஒரு முறை 'கற்றதும் பெற்றதும்'ல் எழுதியிருந்த ' நெக்ரபொண்டே ஸ்விட்ச்' -http://en.wikipedia.org/wiki/Negroponte_switch - மீண்டும் ஒரு சுற்று வந்துவிட்டது போலிருக்கே ? டிவி தற்போது டிஷ் மூலமும், பிராட்பேண்ட் கம்பி மூலமும் ? (முதலில் டிவி - ஆண்டெனா (வயர்லெஸ்) - பின் கேபிள் வழி தற்போது மீண்டும் டிஷ்) (டெலிபோன் - முதலில் கம்பி, பின்னர் வயர்லெஸ், தற்போது பிராட்பேண்ட் - டிஎஸெல் - கம்பி மூலம் அல்லது கேபிள் மூலம்)
பதில்: சில தொழில்நுட்பங்கள் சில இடைஞ்சல்களால் தற்காலிகமாக தடைபெறுகின்றன. பிற்காலத்தில் வேறு துறைகளில் வரும் முன்னேற்றங்களால் அத்தடைகள் நீங்க பழைய தொழில்நுட்பம் புதிய சக்தியுடன் முன்னுக்கு வருவது விஞ்ஞான உலகில் பலமுறை நடந்துள்ளதே. அதில்தான் நீங்கள் சொன்ன விஷயமும் வருகிறது.

2. விகடனில் ஸ்னேகாவின் பிகினி டிரஸ் பார்த்து ஜொள்ளுவிட்டீர் தானே? (அது கட் அன் பேஸ்ட் என்றபோதும்)
பதில்: பிகினி ட்ரெஸ் இருந்தால்தான் ஜொள்ளு விடுவோமா? அது இல்லவே இல்லாவிட்டாலும்தான்.

3. ராக்கி சாவந்த் போல (ராகி கா ஸ்வயம்வர் - ஸ்டார் பிளஸ்) ரம்பாவின் சுயம்வரம் கலைஞர் டிவியில் வந்தால் அப்ளிகேஷன் போடுவீரா? ரம்பாவின் டெஸ்டில் பாஸ் செய்வீரா?
பதில்: ஆக, என் வீட்டம்மாவிடம் போட்டுக் கொடுத்து எனக்கு சமாதி கட்டாமல் ஓய மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

4. பெண்கள் பத்திரிக்கைகள் பற்றி ஆர்.வெங்கடேஷ் ஒரு பதிவு இட்டிருக்கிறார். உங்கள் வீட்டில் மங்கையர் மலரா? அவள் விகடனா? குமுதம் சிநேகிதியா?
பதில்: எங்கள் வீட்டில் மூன்றையுமே வாங்குகிறோமே. குமுதம் சினேகிதியில் ரங்கநதி என்னும் தலைப்பில் இந்திரா சௌந்திரராஜன் எழுதும் தொடர்கதையை படித்து விட்டுத்தான் மீதி பக்கங்களைப் பார்ப்பேன். அது போல அவள் விகடனில் தொடர்கதை இல்லை என்பது குறையாக உள்ளது. மங்கையர் மலர்? அதிலிருந்துதான் ஒரு கதையை எடுத்துப் போட்டுள்ளேனே?

5. தமிழ் படிக்கும் வழக்கமே குறைந்துவரும் நிலையில் - அதுவும் தற்கால பெண்கள் மேற்சொன்ன புத்தகம் எல்லாம் வாங்கி படிப்பார்களா?
பதில்: எழுதும் விதமாக எழுதினால் ஏன் படிக்க மாட்டார்கள்?

7. ஆபாசம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு ஏன் இந்த நிறங்கள் ? யார் கொடுத்தனர்? சிகப்பு விளக்கு, நீலப் படம், மஞ்சள் பத்திரிகைகள், பச்சை மொழி..... தமிழில் மட்டும்தானா இல்லை ஆங்கிலத்திலிருந்து எல்லா மொழிகளிலும் (பிரெஞ்சு, ஜெர்மன், இந்தி..) இப்படித்தான் சொல்கிறார்களா?
பதில்: முக்கியமாக ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவையே சிகப்பு விளக்கு, நீலப் படம், மஞ்சள் பத்திரிக்கைகள் ஆகிய சொற்கள்.

8. விஜய் டிவியின் நீயா நானாவுக்குப் போட்டியாக கலைஞர் டிவியிலும் 'கருத்து யுத்தம்' என ஒரு விவாத அரங்கம் (புதன் இரவு 10மணி) நடைபெறுகிறதே? விஜய்டிவி கோபிநாத் அளவு இல்லாவிட்டாலும், கலைஞர் டிவி ஷண்முகசுந்தரமும் நன்றாகவே நடத்துகிறார். ஓரினச் சேர்க்கை பற்றிய விவாதத்தில் பலரும் (பெண்கள் உட்பட) வெளுத்துக் கட்டினரே ? பார்த்தீர்களா? (ஒரு கட்டத்தில் அடிதடியே வந்துவிட்டது - சிவன் விஷ்ணு என ஒருவர் பேசப் போக) - சிறப்பு விருந்தினர்களில் சாருவும் ஒருவர்.
பதில்: விஜய் டிவி, கலைஞர் டிவி ஆகியவற்றை நான் பார்ப்பதில்லை என்றாலும். நிங்கள் கூறுவது சுவாரசியமாகவே உள்ளது. சிவன் விஷ்ணு உதாரணம் சரியில்லை. அவர்கள் சேர்க்கை நடந்தபோது விஷ்ணு மோகினி அவதாரத்தில் இருந்தார். இதில் ஒரு தத்துவமே உள்ளது. கருவில் உள்ள முட்டை உயிரணு ஜோடி ஆணாகவோ பண்ணாகவோ பிறக்க சாதாரணமாக சமவாய்ப்புகள் உள்ளன. வெறும் குரோமோசோம் விளையாட்டுதான். ஆகவே ஒரு செமக்கட்டை ஃபிகர் ஆணாகக் கூட பிறந்திருக்கும் வாய்ப்பு இருந்திருக்கிறது. அப்போது அந்த ஆண் மற்ற செமக்கட்டை ஃபிகர்களைப் பார்த்து ஜொள்ளு விட்டிருக்கும்.

9. தமிழ் சினிமா நடிகர்களில் சிலர் ஓரினச் சேக்கை விருப்பம் உள்ளவர்கள் எனவும் சமீப காலங்களில் சில பெண் ஓரினச் சேக்கையாளர்கள் பற்றிய செய்திகளும் வந்தது. நம்பக்கூடியதா இந்த செய்தி?
பதில்: பொது புத்தி என்ன கூறினாலும் ஓரினச்சேர்க்கைக்கு கணிசமான அளவில் ஆதரவு இருக்கிறது. ஆகவே இதில் நம்பிக்கையின்மைக்கு இடமில்லை.

10. ஞாநியின் கேணி என்ற ஞாயிறு மாலை (ஞாநியின் வீட்டில்) நிகழ்ச்சியை ஆனந்த விகடன் ஏன் “பாஸ்கர் சக்தி (ஞாநியுடன்) நடத்தும்” என ஞாநியை இருட்டடிப்புச் செய்கிறது? ஓ பக்கங்கள் குறித்தான மோதல் இன்னும் முடியவில்லையோ? (அதுவும் விகடன் பொறுப்பாசிரியர் ரவிபிரகாஷே கலந்து கொண்டபோது)
பதில்: கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் இதுவரை போனதில்லை.


அனானி (07.09.2009 பிற்பகல் 12.05-க்கு கேட்டவர்)
1) What is your opinion on this?
பதில்: ஜாதி விட்டு ஜாதியில் திருமணம் செய்வது, வெளிமாநிலத்தவரை மணப்பது ஆகிய விஷயங்கள் கேட்க வேண்டுமானால் நன்றாக் ஐருக்கலாம். ஆனால் நடைமுறையில் பல கஷ்டங்கள் உள்ளன. முக்கியத் தடையே சாப்பாட்டு முறைகளில் உள்ள வேறுபாடுகள்தான். ஆகவே இம்மாதிரி திருமணங்கள் காதல் திருமணமாகத்தான் நடக்கும் வாய்ப்பு அதிகம். அரேஞ்ச்டு திருமணங்களில் அது மிகக்குறைவு.

2) Why Stalin has gone to England? for what treatment? what is the health problem he has which cannot be treated in India but only in London?
பதில்: அப்படியா? ஸ்டாலினா லண்டனுக்கு வைத்தியத்துக்காக சென்றார்? ரஷ்யாவில் இல்லாத மருத்துவர்களா? ஆனால் அப்படியெல்லாம் ஸ்டாலின் லண்டனுக்கு சென்றதாக நான் எங்குமே படிக்கவில்லையே? ஏதாவது ரஷ்யாவிலிருந்து புது ஆவணங்கள் கிடைத்தனவா? எது எப்படியிருந்தாலும் அவர் இறந்து 56 ஆண்டுகளுக்கும் மேலாயின. இப்போது எதற்கு பழைய கதை? அப்படியே இருந்தாலும் அவர் ஏன் இந்தியாவுக்கெல்லாம் வந்திருக்க வேண்டும்?


சேதுராமன்
1. ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் மாதிரி ப்ளேன் டிரைவர்கள் வேலை நிறுத்தம் செய்யலாமா?
பதில்: தொழிற்சங்கம் அமைக்கும் உருமை பெற்ற எல்லா தொழில்களிலும் வேலை நிறுத்தம் ஒரு பிறப்புரிமை. பைலட்கள் செய்யலாம், செய்தார்கள். சமீபத்தில் 1996 ஜூன் 16-ஆம் தேதி நான் தில்லியிலிருந்து சென்னைக்கு ஃப்ளைட் பிடித்தபோது பைலட் வேலை நிறுத்தத்தால் பயணம் 6 மணி நேரம் லேட்.

2. ஆந்திராவில் முதல்வர் பதவிக்கு ஜகன் ரெட்டி தகுதியானவரா? ஆந்திரா அன்பழகன் ரோசையாவுக்கு ஒரு சான்ஸ் கொடுக்க வேண்டாமா?
பதில்: அன்பழகன்கள் எல்லா ஊர்களிலுமே இளிச்சவாயர்கள்தானே. இதில் என்ன ஆச்சரியம் இருக்கவியலும்?

3. வாரப் பத்திரிகைகளுக்கு, கதைகள் அவசியமா - ஸ்ரேயா முதல் ஸ்ருதி வரை 'திறந்த வெளி' போஸ் கொடுத்து விற்பனையைப் பெருக்கும்போது?
பதில்: ஒரு கையால் எத்தனை நேரம்தான் கை தட்டவியலும்? களைப்பாகி விடுமே. ஓய்வு வேண்டாமா. ரிலேக்ஸ் செய்யவே கதைகள்.

4. தி.மு.க. எப்போதுமே ஜனநாயகப் பண்புகளை மதிக்கும் என்ற மு.க. வின் பேச்சு பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
பதில்: முதல்வர் இதையேல்லாம் பத்திரிகைகளில் எழுதினால் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் எனப் பெயர் பெறுவார்.


அனானி (12.09.2009 இரவு 08.18-க்கு கேட்டவர்)
1. மூர்த்தியை மேலும் மேலும் வளர்த்து விட்டு ஆதாயம் தேடினீர்கள் என்ற குற்றசாட்டு உண்மையா?
பதில்: நானாவது என்னைக் காத்துக் கொள்ள போராடி வெற்றி பெற்றேன். ஆனால் அவனோ என்னைத்தான் நன்றாக வளர்த்தான். போராடினான் அதற்காக மிகப்பெரிய அளவில். அதே பெரிய அளவிலேயே உதையும் வாங்கினான். உப்பைத் தின்னவன் தண்ணி குடிச்சுத்தான் தீர வேண்டும்.

போலி விவகாரத்தில் பலர் பலவிதமாகக் கூறிவிட்டார்கள். அவனால் எல்லோரையும்விட மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவன் நான். நான் அவனை எதிர்த்து போராடியபோது ஒத்துழைக்காவிட்டாலும் பரவாயில்லை, அதைரியப்படுத்தியவர்களே அதிகம். போலியின் செயல்பாடு என்னவென்றால் அவன் ஒருவரை மோசமாக அட்டாக் செய்வான். அவ்வாறு தாக்கப்பட்டவர் பேசாமல் நகர்ந்து விடுவார். இவன் கொக்கரித்துவிட்டு அடுத்த ஆளைத் தேடுவான். அவ்வாறு எனக்குத் தெரிந்து போனவர்கள் கிட்டத்தட்ட 10 பேர். பெரும்பான்மையினர் பார்ப்பனர்.

அவனுடைய துரதிர்ஷ்டம் டோண்டு ராகவன் என்னும் சண்டைக்கார பாப்பானை தேர்ந்தெடுத்தான். நான் விலகுவதாக இல்லை. உனக்காச்சு எனக்காச்சு என போராடினேன். இத்தனைக்கும் என்னைப் போல போலியாக உருவெடுத்து மற்றவர்களை நான் திட்டுவது போல தோற்றத்தை வரவழைத்தது அதுவரைக்கும் யாருமே செய்யாதது. கையாலாகாது வேடிக்கை பார்த்தவர்கள் எனக்கு மட்டும் புத்தி சொன்னார்கள். ஒன்று சண்டை போடுபவர்கள் இருவரையும் தடு, அதற்கு வக்கில்லாமல் ஒருவனை மட்டும் தடுக்காதே எனக் கூறிவிட்டு நான் எனது சண்டையைத் தொடர்ந்தேன்.

என் பெண்ணின் போட்டோவை போட்டபோது சதயம் போன்ற சில பதிவர்கள் ஆஷாடப்பூதித்தனமாக வருத்தம் தெரிவித்து விட்டு டோண்டுவுக்கு நன்றாக வேண்டுமென கெக்கலி கொட்டினர். இது பற்றி நான் இப்பதிவில் எழுதிய சில வரிகள் இதோ.

“அதற்கு முன்னால் சதயம் அவர்கள் அவர் பதிவில் போட்டதை இங்கே எடுத்து எழுதுகிறேன்.

//தனிப்பட்ட முறையில் பெரியவர் டோண்டுவிற்காக வருந்தினாலும் இத்தகைய ஆப்புகளை வாங்குவதற்காக அவர் மெனக்கெட்டு உழைத்தார் அல்லது அவரின் நலம்விரும்பிகளை உழைக்க வைத்தார் என்றே நிணைக்கிறேன்.அந்தச் சகோதரியைப் பற்றிய சில பின்னூட்டங்கள் நிச்சயமாய் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.//
ஏன் சார் ஆஷாடபூதித்தனமாக வருத்தமெல்லாம் தெரிவிக்கிறீர்? அதற்கு உங்களுக்கு அனானியில் பின்னூட்டம் இட்டவரே மேல். வெளிப்படையாகவே எழுதுகிறார்.

//ஜாக்கிரதை சதயம். நீங்கள் கூறியது போல ஒரு டோண்டு சந்திக்கும் பிரச்சினைகள் போதாதா. நீங்கள் வேறு சனியனை ஏன் விலைக்கு வாங்குகிறீர்கள்? டோண்டு நாசமாய் போகட்டும். அவனால்தானே மட்டுறுத்தல் வந்து தமிழ்மணத்தின் சுதந்திரமே பறிபோனது. நன்றாக வேண்டும் அவனுக்கு.//
அதானே, அந்த மட்டுறுத்தலால்தானே உங்கள் பதிவுகள் இற்றைப்படாமல் இருக்கின்றன. போய் ஸ்வீட் சாப்பிடுங்கள் சார்.

//இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் டோண்டு அவர்கள் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பார் என நான் எண்ணவில்லை.//
இல்லையே, நன்றாகத் தூங்கிக் கொண்டுதான் இருந்தேன்.

//மற்றபடி தொழில்நுட்ப யுத்தத்தில் உங்கள் கை ஓங்கியிருப்பது உண்மைதான்....உங்களின் திறமையையும், உழைப்பையும், துல்லியத்தையும் பார்த்து என் போன்ற அரைட்ரவுசர்கள் அசந்து போயிருக்கிறோம். உங்களின் பின்னூட்டத்தை நீக்கவே படாதபாடு பட்டேன்...ஹி..ஹி...என்னுடைய தொழில்நுட்ப அறிவு அத்தகையது.//
போய் போலி டோண்டு ரசிகர் மன்றம் வைப்பதே நலம், அல்லது சிம்ரன் ஆப்பக்கடையிலிருக்கும் ரசிகர் மன்றத்தின் தலைமைப் பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி, கருத்துச் சுதந்திரம் பறிபோகிறதென்று ஒரு ஹை மாரல் ரீசனுக்காக மட்டுறுத்தலையே செயல்படுத்தாது இருப்பவர் போலியின் தரப்பிலிருந்து வரும் கருத்து சுதந்திர கொலைக்கு இப்படி ஏன் ஜிஞ்சா அடிக்கிறீர்கள்? உங்களுக்கும் ஆப்பு வைப்பான் என்ற பயம்தானே காரணம்”?


போலியுடன் நான் போடும் சண்டை எனக்காக மட்டும் இல்லை, பதிவர் சுதந்திரத்துக்காக என்ற அடிப்படை அறிவு கூட இல்லாது குருட்டுத்தனமாக பலர் இருந்தனர்.

2. மூர்த்தி உங்களின் குடும்ப பெண்களை புகைப்படம் போட்டு மோசமாக எழுதியும் நீங்கள் ஏன் காவல்துறையில் புகார் கொடுக்கவில்லை?
பதில்: யார் சொன்னது கொடுக்கவில்லை என்று? 2006-லேயே சிபிசிஐடியில் புகார் தந்தேன். அங்கு டிஜிபி ஆக ஒரு பெண்மணி இருந்தார். பலமுறை அந்த அலுவலகம் சென்றேன். என்னிடமிருந்து விவரங்கள் வாங்கிக் கொண்டு காசி, திருமலை ஆகியோரும் புகார் தந்தனர். ஆனால் 2006-ல் சைபர் கிரைம் துறையிடம் இப்போது இருப்பது போன்று வசதிகள் இல்லை. அவை வர சில காலம் பிடித்தது.

மூர்த்தியின் கெட்ட காலம் 2008-ல் செந்தழல் ரவியின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அவரது பெயரை ஆர்க்குட்டில் கெடுத்து வைத்தான். அவர் சிறிது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஒரு மந்திரியின் பி.ஏ. மூலம் நேராக சிடி போலீஸ் கமிஷனரிடம் சென்றார்.

இது சம்பந்தமாக ஜூலை 2008-ல் நான் போலி டோண்டுவுடன் நேரடி சந்திப்பு என்னும் பதிவில் எழுதிய வரிகள் இதோ:
செந்தழல் ரவி, உண்மைத் தமிழன், ஓசை செல்லா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் மூர்த்தியின் மேல் புகார் அளித்து அது பத்திரிகைகளிலும் வந்தது தெரிந்ததே. அதற்கு ஒரு வாரம் கழித்து நானும் சென்றேன். எனது புகார் சைபர் கிரைமில் ஒரு உதவி ஆய்வாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவரிடம் என் பெயரில் மூர்த்தி தயாரித்த ஆர்க்குட் ஆபாச பக்கங்களை காண்பித்தேன். மொத்தம் 23 ப்ரொஃபைல்கள். எல்லாவற்றையும் பொறுமையாக அவர் ஸ்க்ரீன் ஷாட்டுகள் எடுத்தார். நேரம் ஆக ஆக மூர்த்தியின் மேல் அவரது கோபம் அதிகரிக்க ஆரம்பித்தது. போலி டோண்டு பற்றி நான் இட்ட பதிவுகள் எல்லாவற்றையும் பார்த்தார் அவர்.

முதல் காரியமாக ஆர்க்குட் பக்கங்களை அவர் கூகளுக்கு எழுதி அழிக்கச் செய்தார். டுண்டூ பதிவர் எண்ணில் போடப்பட்டிருந்த மூன்று வலைப்பூக்கள் அழிக்கப்பட்டன. வெளியில் சொல்லாமல் கமுக்கமாக விசாரணை நடத்தப்பட்டது. கூகள் நிறுவனம் ஒத்துழைத்தது. மலேஷியாவுக்கும் செய்திகள் பறந்தன. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக நேற்று ஒரு விஷயம் நடந்தது.

நேற்று சைபர் க்ரைமில் வைத்து போலி டோண்டு மூர்த்தியை நேருக்கு நேர் சந்தித்தேன். கேசை விசாரித்து வரும் அதிகாரிகளே மூர்த்தியின் செயல்பாடுகளைப் பார்த்து நொந்து போயினர். புகார் அளித்தவன் என்ற ஹோதாவில் என்னையும் அங்கு அழைத்ததால் நான் அங்கு சென்றிருந்தேன்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேர விசாரணை. மூர்த்தி இட்டிருந்த பதிவுகளின் அச்சடிக்கப்பட்ட காகிதங்களுடன் பதிவர் உண்மைத் தமிழனும் ஆஜரானார். என் தரப்புக்கு நானும் சைபர் கிரைம் அதிகாரியிடம் மூர்த்தியால் உருவாக்கப்பட்ட உரல்களை எடுத்து தந்தேன்.

மூர்த்தியுடன் அவரது வக்கீல் மற்றும் மைத்துனர் வந்திருந்தனர். தன் சகோதரியின் கணவன் இவ்வளவு கீழ்த்தரமாக செயல்பட்டதைப் பார்த்து அந்த இளைஞருக்கு பேச்சே வரவில்லை. அவமானத்தால் குனிந்த தலை நிமிரவே இல்லை.

மூர்த்திக்கு மலேஷியாவில் பார்த்த வேலை பறிபோயிற்று. பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. (அப்படியில்லை என செந்தழல் ரவி கூறுகிறார். இந்த வரியை சேர்த்த நேரம் 14.38 மணி, 25.07.2008)

இப்படியாக மூன்றாண்டுகளாக நடத்திய யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த மூன்றாண்டுகளாக என்னென்னவெல்லாம் நடந்து விட்டன! மூர்த்திக்கு சப்பைக்கட்டு கட்டியவர்கள் எத்தனை பேர்?


இப்போதும் போலியின் அல்லக்கைகள் சப்பைக்கட்டு கட்டுகிறார்களே? நடந்ததிலிருந்து பாடம் கற்காதவர்கள் பின்னால் வருந்துதலைத் தவிர்க்கவியலாது.

இன்னொருவர் இப்போது நடந்ததைக் கூறுகிறேன் பேர்வழி எனக் கிளம்பி என்னமோ மூர்த்தி மகாத்மா ரேஞ்சுக்கு இருந்ததுபோலவும் நான் அவனை சீண்டிச் சீண்டி போலியாக்கியதாகவும் அழுவாச்சி பதிவுகள் போட்டு வருகிறார். அவற்றை எல்லாம் ஒரு சிரிப்புடன் பார்த்து வருகிறேன்


வஜ்ரா
1. அண்ணாதுரை பிறந்தநாளன்று கோவை குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட சில குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளார் கருணாநிதி. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: முற்றிலும் பொறுப்பற்றச் செயல்.


கேள்விகள் ஏதும் இப்போதைக்கு கைவசம் இல்லை. ஆகவே மேலும் கேள்விகள் வந்தால் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/12/2009

சப்பைக்கட்டு கட்டும் போலியின் அல்லக்கைகள்

முத்துக்குமரன் என்னும் நபர் உண்மைத்தமிழனது இப்பதிவில் பின்னூட்டமிட்டுள்ளார். முதலில் அதை பார்ப்போம்.

“//மற்றபடி உங்களை கோவை மீட்டிங்கிக் எச்சரித்தது, போலி அனுப்பும் மின்னஞ்சல் லிஸ்டில் இருந்த அனைவரையும் சொல்லியே. அதன் பிறகு அது ஒரு பார்வேர்ட், அதில் இருக்கும் அனைவரும் அவனுடைய ஆட்கள் அல்ல என்று கண்டுகொண்டேன். மகேந்திரன் முத்துக்குமரன் கோவி கண்ணன் தவிர.//

செந்தழல் ரவி எனது பெயரை குறிப்பிட்டு இருப்பதாலும், போலியின் ஆள் என்ற தொனி இருப்பதால் மட்டுமே இந்த பின்னூட்டம். விடாது கருப்பு என்ற மூர்த்தி தன்னை பெரியார் தொண்டராக காட்டிக்கொண்டிருந்த போதிலும் அவரின் அநாகரீகமான மொழியை ஏற்றுக் கொண்டதோ அல்லது எந்த ஒரு இடத்திலும் உயர்த்திப் பிடித்ததும் கிடையாது. திராவிடர் தமிழர் குழுமத்தில் நடைபெற்ற விவாதத்திலும் இதைத் தெளிவாகவே பதிவு செய்திருக்கிறேன். தேவைப்படுபவர்கள் அதை வாசித்து தெரிந்து கொள்ளலாம். 2006ல் ஒருமுறை செந்தழல் ரவி ஐரோப்பியநாடுகளுக்கு சென்ற போது ஒரு பதிவிட்டிருந்தார். நான் ஓய்வாக இருக்கிறேன் தொலைபேசி எண்கள் கொடுங்கள் பேசுகிறேன் என்று. வலைப்பதிவர்கள் பலரோடும் பேசினார். அப்போது நானும் என் எண் கொடுத்தேன், பேசினோம், அந்தப் பேச்சிலும் குறிப்பிட்டது விடாது கருப்பு நம்பத் தகுந்தவர் அல்ல, பெரியார் பெயரை அவர் தவறாகவே பயன்படுத்துகிறார் என்பது. இன்னொரு முறை பேசியது தம்பிக்காக வேலை வாய்ப்பு தொடர்பாக சில ஆலோசனைகள் பெற. போலிக்கு எதிராக போராடியவர்கள் ஒருபுறம், அவனை நிராகரித்துவிட்டு போனவர்கள் ஒருபுறம், ஆதரித்தவர்கள் ஒருபுறம் என்று இருந்ததில் இரண்டாவதை நான் தேர்ந்தெடுத்தேன். அதனாலேயே எனக்கு வந்த ஆபாச அர்ச்சனைகளை பொதுவெளியில் வெளிப்படுத்திக்கொண்டது கிடையாது. விடாது கருப்பில் என்னை அர்ச்சித்து சூத்துகுமரன் என்றும் ஓசி பிரியாணி வாங்கி தின்கிறேன் என்றெல்லாம் சொன்னபோது கூட அவனுடைய தூண்டுதலுக்கு பலியாகி எதிர்வினை புரிவதை விட நிராகரித்தோமேயானால் காலப்போக்கில் தனிமைப்பட்டு விடுவான் என்றும் அவன் எழுத்துக்களே அவனை அம்பலப்படுத்திவிடும் என்பதையும் உறுதியாக நம்பினேன். மற்றபடி என் நேர்மையை யாரிடம் விளக்கி பட்டயம் பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை.

குழுமத்தில் விவாதித்திருப்பதை குறிப்பிட்டிருப்பதால் அதை இங்கே தருகிறேன். அதற்கான கூடுதல் காரணம் போலி விசயத்தை பயன்படுத்தி திராவிடத் தமிழர்கள் எல்லோரையும் போலியின் அல்லக்கை என்று நிறுவ முனைவது இன்றும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தது. அன்றைய சூழலில் திராவிடத் தமிழர் குழுமத்தில் நானும் ஒரு மட்டுறுத்தினராக இருந்ததும் இது தொடர்பான நிகழ்வுகளில் எங்களில் இருந்த வெளிப்படைத் தன்மையையும் அது உணர்த்தும் என்பதாலேயே!
டிசம்பர் 8 2006 அன்று குழுமத்தில் கருப்பு தொடர்பாக எழுதிய பதிவு
Friday, September 11, 2009 3:52:00 PM

முத்துகுமரன் said...
அதிகரித்துவிட்ட பணிசூழலினால் கடந்த சிலநாட்களாக இணையத்தில் செலவிடும் நேரம்
குறைந்துவிட்டது. தமிழ்மணத்திலிருந்து விடாது கருப்பு நீக்கம், அதைத்தொடர்ந்து
குழுமத்தில் நடைபெற்ற விவாதங்களை வாசித்திருந்தேன். இந்த நேரத்தில் சில
தெளிவுகளை முன்வைக்கவேண்டும் என்பதாலே இந்த விளக்கம்.
தமிழ்மணத்திலிருந்து கருப்புவின் நீக்கம் ஒரு வருத்தமளிக்கும் செய்தி.
ஆனால் அத்தகையதொரு சூழலை அவரின் எழுத்துகள் ஏற்படுத்திவிட்டன என்பதையும்
மறுக்கமுடியாது. இது தொடர்பாக குழுமத்தில் அவரின் கருத்துகளை அறிந்த போது சில
விசயங்களை சொல்ல வேண்டும் என்ற கட்டாயமும் வந்திருக்கிறது.
திராவிட, மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியலை முன்னெடுப்பவர்கள் மிகவும்
கவனமாக இயங்க வேண்டியதருணம் இது. இந்த அரசியலின் தேவைகளை முக்கியத்துவத்தை
திரிப்பதில் தொடர்ந்து ஆதிக்க சக்திகள் வெற்றி பெற்று வருகின்றன. அதனால் மிக
அதிகப்படியான கவனத்தோடு இயங்க வேண்டி இருக்கிறது. நாம் சொல்லும் செய்திகளை விட
சொல்லபட்ட விதம் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. செய்தியின் கணத்தைவிட
இந்த வெளிப்பாட்டிற்கு மிகுந்த முக்கியதுவம் அளிக்கப்படுகிறது. ஆகையால் வேகமாக
வார்த்தைகளை வாரியிறைப்பது என்பது விழலுக்கு இழைத்த நீராகுமே தவிர நமக்கு
எந்தவிதமான முன்னேற்றத்தையும் தாராது. நாம் போராட வேண்டியது, பயணிக்க வேண்டியது மிக நெடிய தூரம். அதில் முன்னேறி செல்வதை தடுக்க நமது சக்தியை வீணடிக்க
திசைதிருப்ப, சோர்வடையச்செய்ய எல்லாவகையான தந்தரங்களையும் நம் எதிராளிகள்
பிரயோகிக்கிறார்கள் என்பதையும் நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.
விடாது கருப்பு விடயத்திற்கு வருகிறேன். எவ்வளவு சீரிய கருத்தாயினும் அது
முறையாக சொல்லப்படல் வேண்டும். தங்களது சமீபத்திய சில பதிவுகளின் தரம்
எப்படியிருந்தது என்பதை அமைதியாக வாசித்தீர்களாயேயானால் உணர்வீர்கள். நீங்கள்
பெரியாரின் வழி நடப்பவர் என்று சொல்லுவதால் பெரியாரைக்கொண்டே உங்களிடம்
பேசுகிறேன்.
பெரியாரின் முக்கியமான பொன்மொழி.* ''மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு'' *
பெரியார் நம் சமூக மக்கள் மான உணர்வோடும், அறிவு உணர்வோடும் வாழ
வேண்டுமென்பதற்காகவே தன்வாழ்வு முழுதும் உழைத்தவர். சுயமரியாதை, சமதர்மம்
என்பனவற்றை உயிர்மூச்சாக கொண்டிருந்தவர். அறிவுக்குப் புறம்பபன எந்த ஒரு
செயலையும் அவர் அனுமதித்ததில்லை.
மனிதர்க்கு மரியாதை தரப்பட வேண்டும் என்பதுதான் சுயமரியாதையின் அடிப்படைத்
தத்துவம். ஒரு பதிவரின் தாயை வேசி என்று குறீப்பிட்டு உங்கள் பதிவில்
எழுதியிருந்தீர்களே, இது எந்த வகை அறிவுணர்ச்சியில் வருகிறது???
அந்த தாயின் பெண்மையை விமர்சிக்க நீங்கள் யார்?? அந்த பெண்ணின் சுயமரியாதைக்கு
நீங்கள் தரும் மரியாதை என்ன? இந்த மாதிரி பேசமாறு எந்த இடத்தில் பெரியார்
கூறீயிருக்கிறார். சொல்ல முடியுமா?. சகமனிதனை மதிக்காதவன் எங்கனம்
சுயமரியாதைக்காரனாக இருக்க முடியும்???.
அடுத்ததாக, தீண்டாமை என்பதற்கு உங்கள் விளக்கம் என்ன? மனிதனை மனிதன் விலக்குவதுதான் தீண்டாமை. இது எல்லோர்க்கும் பொருந்தும். பார்ப்பனரை விலக்குவதும்
தீண்டாமைதான். பார்ப்பனர் என்பதால் அவர்கள் குறைந்த பட்ச மனிதத்தன்மையிலிருந்து
விலகிவிடுவதில்லை. குழலி அவர்கள் மாயவரத்தான் அவர்களோடு பேசுவது நட்பு கொள்வது
பற்றீ விமர்சித்து இருந்தீர்கள். பெரியாரை படித்திருப்பவன், வழிநடப்பவன்
எவனும் இதை விமர்சிக்க மாட்டான். ராஜாஜிக்கும் பெரியாருக்கும் இருந்த கருத்து
முரண்கள் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் அவர்களுக்குள் ஆழமான நட்பு இருந்தது.
எப்படி சாத்தியாமானது. இருவருக்கும் அவரவர் கொள்கையின் பாலலிருந்த நம்பிக்கை.
இங்கு ஒரு பார்ப்பனிரிடம் பேசுவதாலோ, பழகுவதாலோ தன் கொள்கைகளை விட்டுக்கொடுக்க
கூடிய அளவிற்கு பலவீனமானவர்கள் கிடையாது. குறிப்பாக நானோ, முத்து தமிழினியோ,
குழலியோ பலவீனமானவர்கள் கிடையாது. கொள்கை என்பதும் நட்பு என்பதும் வேறு வேறு
என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
இன்னொன்று குழலியின் திராவிடத்தன்மையை பற்றி கேள்வி எழுப்பி இருந்தீர்கள்.
உங்களிடம்தான் எங்களின் திராவிட தன்மையை நீருபித்தாக வேண்டும் என்ற அவசியம்
இல்லை. தேவையும் இல்லை. யார் திராவிடத்தன்மையோடு இயங்குகிறார்கள் என்பதை
தீர்மானிக்கும் அதிகாரமையம் நீங்கள் அல்ல என்பதை உணர்ந்து கொள்ளவும்.
Friday, September 11, 2009 3:57:00 PM

முத்துகுமரன் said...
பெரியார் விரும்பியது இந்த சமூகம் நாகரீகமடைந்த சமூகமாக வளரவேண்டும்,
அறிவுணர்ச்சியோடு வளர வேண்டும். சுயமரியாதையோடு வளரவேண்டும். அடுத்தவர்
குடும்மத்ததை விமர்சிப்பது என்பதுதான் நீங்கள் காணும் நாகரீக வளர்ச்சியோ?? மனித
நாகரீகத்திற்கு அப்பாற்பட்டது நீங்கள் செய்தது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
இவ்வளவும் உங்களுக்கு சொல்வதன் காரணம் நீங்கள் பெரியாரைப் பின்பற்றுபவர்
என்பதால்தான். தான் வாழ்ந்த காலத்திலே தன்னைப்பற்றிய விமர்சனத்தை
ஏற்றுக்கொண்டவர், அனுமதித்தவர் பெரியார் என்பதால்தான்.அவரைப் பின்பற்ற
முயலுங்கள்.
திராவிட தமிழர் அமைப்பில் தொடர்வதும் தொடராததும் உங்கள் விருப்பம். ஆனால்
நாகரீகமற்ற செயல்களை குழுமம் ஒரு போதும் ஆதரிக்காது. அதுயாராக இருந்தாலும் சரி.
கருப்புவாக இருந்தாலும் சரி முத்துகுமரனாக இருந்தாலும் சரி.
மற்றபடிக்கு உங்கள் செய்கைகளுக்கு எல்லாம் பெரியாரை கேடயமாக பயன்படுத்தினால்
அதை அறிந்து கொள்ளமுடியாத அளவிற்கு இங்கு பகுத்தறிவற்றுப் போய்விடவில்லை.
சொல்லில் இல்லாமல் செயலில் நீங்கள் பெரியாரைப் பின்பற்றுபவராக வாழ முயற்சி
செய்யுங்கள்..
குறைகளை களைந்து மீண்டும் இயங்குவீர்கள் என்ற நம்பிக்கையோடும்,
எதிர்பார்ப்போடும் விருப்பத்தோடும் இப்போது விடைபெற்றூக்கொள்கிறேன்.
அன்புடன்
முத்துகும்ரன்
Friday, September 11, 2009 3:58:00 PM

முத்துகுமரன் said...
ஒரே பின்னூட்டமாக போட இயலாததால் மூன்றாக பிரித்து போட்டிருக்கிறேன்.
நன்றி
Friday, September 11, 2009 3:59:00 PM”


சரி மனிதர் தன் நிலையைத்தானே கூறியிருக்கிறார் இதில் என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்கும் முன்னால் முரளி மனோகர் விவகாரத்தில் அதே முத்துக் குமரன் தந்த எதிர்வினைக்கு அவரது போலி டோண்டு என்னும் பதிவையே பார்க்கலாமா?

“இரண்டு நாட்களாக சூடு பறக்க விற்பனையாகிக் கொண்டிருக்கும் போண்டா மஹா உற்சவத்தில் நானும் கலந்துகிறேன். இரண்டு ஆண்டுகளாக போலிப் புராணம் பாடியவர் இன்று போலியாய் அம்பலப்பட்டு நிற்கிறார். இது எதிர்பாராதது மற்றும் அல்ல பெரும் ஏமாற்றத்தை தருகிறது. ஆனால் ஒன்று மட்டும் உறுதிப்பட்டு நிற்கிறது.

தமிழ்மணம் பின்னூட்ட மட்டுறுத்தலை கட்டாயமாக்கிய போது அதை தனது வெற்றியாக அறிவித்து கொண்ட திருவாளர் டோண்டு அவர்களே, உங்கள் யுத்தத்தை உங்களிடமே வைத்துக்கொள்ளலாமே, ஏன் பொதுவில் கொண்டு வந்தீர்கள். என்ன யோக்கியதை இருக்கிறது போலிகளைப் பற்றி பேச உங்களுக்கு. பதிவு பதிவாய் போய் எலிக்குட்டியையும், அனானி அதர் ஆப்சன்களை பற்றி நீட்டி முழக்கியது எதற்கு.

உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டதற்காக ஆபாச அர்ச்சனைகளை பெற்றார்களே, அவர்கள் எல்லாம் எதற்காக உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டார்கள்? நீங்கள் போலித்தன்மை இல்லாது இருப்பீர்கள் என்றூ நம்பித்தானே. ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என உங்க அரிப்புக்கு ஏன் தமிழ்மணம் போன்ற பொதுத்தளத்தை பயன்படுத்திக் கொண்டீர்கள்.

நான் என்ன ஆபாசமாவா பேசினேன் என்று கேட்டீர்களானால் ஆபாசத்தை விட அற்பத்தனம் என்பது குரூரமானது. உங்களது நடவடிக்கைகள் எல்லாம் கடைந்தெடுத்த அற்பத்தனம். நீங்கள் போலித்தன்மையற்றவராக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களுக்கு ஆதரவளித்த எல்லா பதிவர்களுக்கும் பந்தி போட்டு மலத்தை பறிமாரிவிட்டீர்கள். பிறர் உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையையும், மதிப்பையும் உங்களுடைய தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டு, செய்தவந்த போலித்தனம் அம்பலப்பட்டு நிற்க போர்யுத்தி என்று சொல்லும் போது அருவருப்பாய் இருக்கிறது.
அம்பலப்பட்டவுடன் ஆங்கிலத்திற்கு தாவி தப்பிக்கும் உங்களுக்கு சுத்தத்தமிழில் ஒரு வாக்கியம்.
ஈரத்துணி போட்டு கழுத்தறுக்கும் வழக்கத்தை இந்த வயதிற்கு மேலாவாது விடுங்கள்.
போலி- டோண்டு என்று மிகச்சரியாக கணித்த உங்கள் புத்திக்கூர்மைக்கு என் வணக்கங்கள்”.


அவருக்கு நான் இட்ட்ப் பின்னூட்டங்களும் அவரது பதில்களும் இப்போது பார்ப்போம்.

“dondu(#11168674346665545885) said...
இந்த உதாரெல்லாம் என்னிடம் காட்டவேண்டாம் முத்துக் குமரன். நாம் மூவரும் சந்தித்ததை பதிவாகப் போட்டபோது போலி ஏதாவது திட்டுவானோ என்று பயந்துதானே நீங்கள் பின்னூட்டமிடாமல் தவிர்த்தீர்கள்?

இந்த அழகுக்கு நீங்கள் போலிக்கு பயப்படவேயில்லை என்று உதார் வேறு கடற்கரையில் கடல் சாட்சியாக விட்டீர்கள்.

//நான் என்ன ஆபாசமாவா பேசினேன் என்று கேட்டீர்களானால் ஆபாசத்தை விட அற்பத்தனம் என்பது குரூரமானது. உங்களது நடவடிக்கைகள் எல்லாம்
கடைந்தெடுத்த அற்பத்தனம்.//
இதில் என்ன அற்பத்தனம் கண்டீர்கள் முத்துக் குமரன்? வேறு பெயரில் எழுதுவது அற்பத்தனமா? யார் சொன்னது? அப்படியானால் அண்ணா, கலைஞர், கல்கி, ஸ்ரீவேணுகோபாலன் போன்ற எழுத்தாளர்களெல்லாம் அற்பர்களா? அப்படி நான் அற்பன் என்றால் நீங்கள் கோழை, கடைந்தெடுத்த கோழை.
ஒரு கேடு கெட்ட பிளாக்மெயிலருக்கு பயந்து பேடியைப் போல ஒடுங்கியவர்கள்தான் வெட்கத்தால் தலைகுனிய வேண்டும்.
ஆயினும் பலர் எனக்கு பின்னூட்டமிட வேண்டும் என்பதற்காகவே புது ஐடிக்கள் தேடிக் கொண்டனர். இதற்காகவும், சில பின்னூட்டங்களை என் சொந்தப் பெயரில் போட்டால் திசை திருப்பப்படும் என்பதாலுமே நான் ஒரு ஐ.டி. உருவாக்கிக் கொண்டேன். அது யாரையும் நகல் செய்யவில்லை. தரமான பின்னூட்டங்களையே இட்டது.
இதுவும், நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஒரு போர் யுக்தியே. எனது பதிவுகளை நிலைநிறுத்த உதவி செய்தன.
இனிமேல் தேவை இல்லை என்று நான் தீர்மானம் செய்து அனானி/அதர் ஆப்ஷனை போட்டேன். நல்ல வேளையாக இதை நான் ஒரு நாள் முன்னாலேயே செய்தேன். இல்லாவிட்டால் இதற்கு கூட உங்களைப் போன்றவர்கள் ஜல்லியடித்திருப்பீர்கள்.

இதற்கு முத்துக்குமரனின் பதில்:
“நம் சந்திப்பு குறித்தான உங்கள் பதிவிற்கு பின்னூட்டம் போடாதது போலிக்கு பயந்து என்று சொன்னால் சிரிப்புத்தான் வருகிறது. அப்படி போலிக்கு பயந்தவனாக இருந்தால் தேடி அழைத்து உங்களை சந்தித்திருக்க மாட்டேன். துபாய் திரும்பியதும் இகலப்பை இல்லாது இருந்தது. இதை நம் ஜிடாக் உரையாடலின் போது கூட தெரிவித்து இருந்தேன்.
இந்தியா சென்று வந்தது தொடர்பான விரிவான பதிவை நான் எழுதவில்லை. அதற்கும் காரணம் போலிக்குப் பயந்தா?
உங்கள் பதிவை பார்த்தேன். அப்போதே ஜிடாக்கில் பேசி இருக்கிறோம். அதனால் அங்கு பின்னூட்டம் போடாதது மட்டுமே என் வீரம் பற்றிய முடிவை உங்களுக்குத் தந்திருக்கிறது என்றால் கோழை என்ற உங்கள் பாராட்டுப் பத்திரத்திற்கு நன்றி.
பொதுவாக தனி உரையாடலில் பேசுபவைகளை நான் வெளியே சொல்லுவதில்லை. இன்று குறீப்பிட நேர்ந்தது எனக்கு வருத்தமே.
போலிக்கெதிரான போரில் மற்றவர்கள் உங்களளோடிருந்தவர்கள் உங்கள் மீது கொண்ட நம்பிக்கை என்ன? எந்த கருத்தானாலும் டோண்டு அவர் பெயரில் சொல்பவர் என்றுதானே...
இந்த நம்பிக்கை துரோகம்தான் உங்கள் பார்வையில் யுத்தியென்றால் அது அற்பத்தனமானது என்பதில் மாற்றுகருத்து இல்லை”.

எனது பதில்:
“போலிக்கெதிரான போரில் மற்றவர்கள் உங்களளோடிருந்தவர்கள் உங்கள் மீது கொண்ட நம்பிக்கை என்ன?
எந்த கருத்தானாலும் டோண்டு அவர் பெயரில் சொல்பவர் என்றுதானே..."
இது என்னப்பா வாதம்? என்னுடனிருந்தவர்களில் பலர் நான் ஒன்றுமே செய்யாமல் உதை வாங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்தார்கள். இன்னும் சிலர் பதிவிடுவதையே நிறுத்துமாறும் ஆலோசனை கூறினர். எல்லாரின் நினைப்பையும் நான் நிறைவேற்ற வேண்டுமென்றால் வண்ணான், அவன் மகன், கழுதை கதைதான் நடந்திருக்கும்.
"துபாய் திரும்பியதும் இகலப்பை இல்லாது இருந்தது".
என்ன ஸ்வாமி கதையடிக்கிறீர்கள்? சுரதாப் பெட்டி என்று கேள்விப்பட்டதேயில்லையா. இல்லாவிட்டால் ஆங்கிலம் தெரியாதா? என்ன இதெல்லாம் சாக்குப் போக்கு.

//அதில் நானும் கூட வாழ்த்து தெரிவித்திருந்தேனே..//
உங்களை நான் குறைகூறவேயில்லை குழலி அவர்களே. ஒரு பதிவில் வாழ்த்து தெரிவித்ததற்குத்தான் தன்னை போலி தாக்கியதாகக் கூறினார். அப்போது கூட நான் கேட்டேன், அவரிடம் எதிர்க்கருத்தாயிருந்தாலும் பின்னூட்டமிடுங்கள் என்று. தலையை ஆட்டி விட்டுபோனவர் அப்புறம் வரவேயில்லை. ஓக்கே, அவரை நம்பியெல்லாம் நான் இல்லைதான்.
இங்கு என்னை அற்பன் என்று கூறியவரின் யோக்கியதையைத்தான் கிழிக்கிறேன். அவர் ஒரு ஆஷாடபூதி, கோழை என்று. அண்ணா, கலைஞர், கல்கி, பற்றிய குறிப்புக்கு பதில்?
இப்போது கூட பாருங்கள் குழலி அவர்களே, நான் இன்னொரு பெயரில் வந்ததைத்தான் கூறுகிறார்களே தவிர, அதற்கு ஆணிவேரான காரணம், ஒதுங்கியிருந்தவர் கோழைத்தனம் எல்லாம் பற்றி பேச வாயில்லை.
இந்த சந்திப்புக்கு பிறகு என் வீட்டுக்கு வந்த இன்னொரு பதிவர் தான் என் வீட்டுக்கு வந்ததை பதிவாகப் போட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். அவ்வளவு ஆம்பிள்ளை சிங்கங்கள் இங்கு”.

நடுவில் என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு அதே பதிவில் நான் தந்த பதில்:
“//இந்த சந்திப்புக்கு பிறகு என் வீட்டுக்கு வந்த இன்னொரு பதிவர் தான் என் வீட்டுக்கு வந்ததை பதிவாகப் போட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். அவ்வளவு ஆம்பிள்ளை சிங்கங்கள் இங்கு//. "ஒதுங்கியிருந்தால் கோழைத்தனம் என்று ஜெனரலைஸ் செய்வது சரியானதாகப் படவில்லை"

மன்னிக்க வேண்டும் பாலா அவர்களே. அந்த சம்பந்தப்பட்ட பதிவர் என்னை இவ்வாறு கேட்டு கொண்டதும், நான் அவரை காரணம் கேட்டதும் தான் போலியின் மீதுள்ள பயத்தால் அவ்வாறு கூறுவதாக ஒப்பு கொண்டார். அவர் மேல் எனக்கு கோபம் இல்லை. (பை தி வே, என்னை வீட்டுக்கு வந்து சந்தித்து விட்டு அதை பதிவாக்க வேண்டாம் என கேட்டுக் கொண்ட சிங்கக் குட்டி யார் என்று விழிப்பவர்களுக்கு, அவர் பெயர் முத்து தமிழினி).
இப்போது கூட 3-ஆம் தேதி நடந்த வலைப்பதிவு சந்திப்புக்கு அவரும் வந்திருந்தார். அப்பதிவைப் பற்றி ஒரு பின்னூட்டம்கூட இல்லை. இதற்கு என்ன சொல்லுவீர்கள்?
முத்துக்குமரன் மேலும் கோபம் இல்லை. ஆனால் இப்போது வந்து என்னமோ நான் கொலை செய்து விட்டது போல பதிவு போடுவதற்கு நான் சரியான எதிர்வினை தர வேண்டும்.
//நான் என்ன ஆபாசமாவா பேசினேன் என்று கேட்டீர்களானால் ஆபாசத்தை விட அற்பத்தனம் என்பது குரூரமானது. உங்களது நடவடிக்கைகள் எல்லாம்
கடைந்தெடுத்த அற்பத்தனம்.//
இப்படி அவர் உதார் விட்டதால்தான் அவர் கோழை என்பதை அழுத்தம் திருத்தமாக வெளியிட வேண்டியதாயிற்று.
முரளி மனோகர் என்ன ஆபாசமாக எழுதினார்? அப்படி அவர் மற்றவர்கள் பதிவில் எத்தனை பின்னூட்டம் இட்டு விட்டார்? இன்னொருவர் மின்னஞ்சல் போல ஐடி போல தயார் செய்து கல்யாண போட்டோக்கள், என் பெண் போட்டோக்கள் வாங்கினாரா?
டோண்டு சார் இப்படி செய்யலாமா என்று கேட்பவர்களை அவரை இவ்வாறான நிலைக்கு துரத்தியது பற்றி ஒரு வார்த்தையும் கேட்கக்கூடாதா?

//ஏன் பொதுவில் கொண்டு வந்தீர்கள். என்ன யோக்கியதை இருக்கிறது போலிகளைப் பற்றி பேச உங்களுக்கு. பதிவு பதிவாய் போய் எலிக்குட்டியையும், அனானி அதர் ஆப்சன்களை பற்றி நீட்டி முழக்கியது எதற்கு.//
உங்களிடம் அனானி மற்றும் அதர் ஆப்ஷன் இல்லை அல்லவா? மற்றப்படி தமிழ்மணம் மட்டுறுத்தலை கட்டாயமாக்கியது அல்லவா, அதனால் தமிழ்மணத்தில் ஆபாசங்கள் கட்டுப்பட்டன அல்லவா. போலிகளை பற்றி பேச எனக்கு யோக்கியதை இருப்பதால்தான் இதெல்லாம் நடந்தது.
மற்றப்படி ஒரு புனைப்பெயரை வைத்து கொண்டதற்காக அற்பம் என்று எல்லாம் திட்டினால் கோழை நீங்கள் என்ற எதிர்வினைதான் வரும். இந்த அழகில் சீப்பு இல்லை ஆகவே கல்யாணம் நின்றது என்ற ரேஞ்சில் இகலப்பை இல்லை என்ற அபத்ததமான சால்ஜாப்பை வைத்ததும் இதே பயம்தானே”.

ஆக டோண்டு விஷயத்தில் கோபக்கார இளைஞராக வந்த முத்துக்குமரன் போலி டோண்டு கருப்பு மூர்த்தி விஷயத்தில் எவ்வளவு அடக்கி வாசிக்கிறார் பாருங்கள்.

அதிலும் ஆச்சரியம் இல்லைதானே. ஏனெனில் அவரே கூறிவிட்டாரே ஆபாசமாக எழுதுவதை விட புனைப்பெயர் வைத்துக் கொண்டது அற்பமானது என்று.

அது சரி, மூர்த்திதான் போலி டோண்டு என்பது ஆகஸ்ட் 2007-லேயே தெளிவானது. அவனை 2008 ஜூலை மாதம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து சந்தித்ததையும் போலி டோண்டுவுடன் நேரடி சந்திப்பு என்ற பதிவிலாவது மூர்த்தியை கண்டித்து ஒரு சிறு பின்னூட்டம் இட்டாரா என பார்த்தால் பெரிய ஏமாற்றம். முரளி மனோகர் விஷயத்தில் பெரிய கொம்பன் மாதிரி எகிறிக்குதித்த இவர் இங்கு காட்டியது இடிபோன்ற மௌனம். அதுவே பல புனை பெயர்கள் வைத்துக் கொண்ட மூர்த்தி விஷயத்தில் அடக்கி வாசிப்பு.

அது பற்றி அவர் சொந்தப் பதிவு போட்டதாகவும் தெரியவில்லை. வேறு எங்கும் எழுதியதாகவும் தெரியவில்லை.

இப்போதுதான் புரிகிறது அம்மாதிரி அவர் கண்டித்திருந்தால் அவரது அல்லக்கை செயல்பாடுகள் பற்றி மூர்த்தி எழுதி அவரை நார் நாராக கிழித்துவிடுவானே என்ற பயம்தான் காரணம் என்று.

முத்துக்குமரரே நீங்கள் வேறும் கோழை ஆகவே நமது மெரினா சந்திப்பு பற்றிய எனது பதிவில் பின்னூட்டமிட தயங்கினீர்கள் என. அதையே சாடியவன் நான். இப்போது அந்த குற்றச்சாட்டை மாடிஃபை செய்கிறேன். நீங்கள் முதலில் அல்லக்கை பிறகுதான் கோழை. போதுமா?

இந்தத் தருணத்தில் மூர்த்தியின் இன்னொரு அல்லக்கை பெ. மகேந்திரன் 3-4 முறை என்னுடன் கூகள் டாக் மூலம் நட்பு கேட்டு வந்தார். அப்போதே அவரை மூர்த்தியின் அல்லக்கையாக அடையாளம் கண்டு கொண்ட நான் பெ. மகேந்திரன் என்னும் பெயர் இம்மாதிரி கோரிக்கை வைத்து வரும்போதெல்லாம் ரிஜெக்ட் செய்தேன்.

லக்கிலுக்கின் சைபர் கிரைம் பற்றிய தொடர் குமுதம் ரிப்போர்டரில் முடிவடைந்தது. பாலபாரதி கூறியது போல தொடர் முடியும் வரை காத்திருந்து பார்த்தாயிற்று. போலி டோண்டு மூர்த்தி பற்றி ஒருவார்த்தையும் இல்லை. அவன் சைபர் கிரிமினல் இல்லையென இவர் தீர்மானித்து விட்டாரா அல்லது முத்துக்குமரன் போன்று இவருக்கும் அதே பயமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/11/2009

குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும் கம்பெனிகள்

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஜோக் படித்திருக்கிறேன். வேலைக்கான நேர்காணல். அதற்கு வந்திருக்கும் நபர் தான் வேலை செய்த முந்தைய கம்பெனியில் தனக்கு கார், க்வார்டர்ஸ், ஓவர்டைம் அலவன்ஸ், மெடிசல் அலவன்ஸ், ஒரு ரூபாய்க்கு 5 நட்சத்திர ஹோட்டல் ரேஞ்சுக்கு கேண்டீன் சாப்பாடு, வருடத்துக்கு மூன்று மாதம் முழு சம்பளத்துடன் விடுமுறை என்றெல்லாம் கொடுத்ததாக கூறினார். அப்படிப்பட்ட கம்பெனியை விட்டு ஏன் இங்கு வருகிறார் என அவரிடம் கேட்க, அதற்கு அவர் “ஏனோ தெரியவில்லை, கம்பெனி திவாலாகி விட்டது” என்றாரே பார்க்கலாம்.

அப்போது நான் அதை ஜோக்காக பார்த்து, சிரித்துவிட்டுச் சென்றேன். ஆனால் நேற்று நான் இடைவெளிகள் வலைப்பூவில் “வேலை இல்லாமல் ஒரு வேலை” என்னும் பதிவை படித்ததும் அவ்வாறு சிரிக்கத் தோன்றவில்லை. அதில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. முதலில் அப்பதிவில் சில வரிகளைப் பார்ப்போம்.

“குஜராத்தில் ஒரு தனியார் நிறுவனமொன்றில் வேலைக்கு ஆள் எடுத்துவிட்டு அவருக்கு எந்த வேலை கொடுப்பது என்று தெரியாமல் தடுமாறி ஏதாவது ஒருமணி நேரம் பார்க்கும் அளவுக்கு ஒரு வேலையைத் தந்துவிட்டு மீதி நேரம் முழுவதும் அவர் அரட்டை அடித்தாலென்ன, இணையதளத்தில் புகுந்து மேய்ந்தாலென்ன நிர்வாகம் அதைப்பற்றி துளியளவும் கவலைப்படுவதில்லை. ஆறு மாதங்கள் வரை அவருக்கு எந்த கவலையுமின்றி ஊதியத்தை வாங்கிக்கொண்டு ஜாலியாக சுத்துவார்கள், அதன் பிறகுதான் அவருக்கு தலைவலியே ஆரம்பிக்கும்.

வேலை கொடுக்கப்படாமலேயே அவரது பெர்மாமென்ஸ் மேலதிகாரியால் சரிபார்க்கப்பட்டு இவர் லாயக்கில்லை என்று ஒரு முடிவுக்கு வந்து பிறகு கொடுத்த ஒருமணி நேர வேலையையும் தருவதில்லை. காலையில் அலுவலகம் வருவதும் மதியம் சாப்பிட்டுவிட்டு மாலை வீடு கிளம்பிப்போவதும் தான் அவரது வேலையாக இருக்கும். கிட்டத்தட்ட இருபது நாள் அல்லது ஒரு மாதம் வரை இதே நிலைதான். அதன்பிறகு அவரே மனசொடிந்து வேலையை ராஜினாமா செய்துவிட்டு கிளம்பி போய்விடுவார்.

மீண்டும் தினசரியில் வேலைக்கான விளம்பரம் வரத்தொடங்கும். சலித்துப்போன குஜராத்வாசிகள் ஒரு கட்டத்தில் அந்த கம்பெனிக்கு வேலைக்கு விண்ணப்பிப்பதே இல்லாமல் போக, புது டெக்னிக் கண்டுபிடித்தது நிர்வாகம். கம்பெனியில் நிறைய தமிழ்பேசும் ஆட்கள் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் வேலையை தேடிப்பிடித்து செய்வார்கள், இதை கருத்தில்கொண்டு தமிழ்நாட்டிலிருந்து ஆட்களை கொண்டு வந்து வேலைக்கு அமர்த்தலாம் என முடிவெடுத்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழில் விளம்பரம் கொடுத்து குஜராத்துக்கு நேர்காணலுக்கு வர விமான டிக்கெட் எடுத்து கொடுத்து வரவழைத்தார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நல்ல ஊதியம், தங்குவதற்க்கு கெஸ்ட்ஹவுஸ், சமைத்துப்போட தனி ஆட்கள், கெஸ்ட்ஹவுஸ்சிலிருந்து அலுவலகம் வந்து போக கார், இருசக்கர வாகனம் என எல்லா வசதிகளையும் செய்து தந்தது அந்த நிறுவனம். ஆனால் அவர்களும் ஆறு மாதம் தாக்குப்பிடிக்கவில்லை காரணம் சரியான திட்டமிடுதல் இல்லாமல் வேலையில் பகிர்தல் இல்லாமல் வந்த வழியே திரும்பி போய்விட்டார்கள்.

அஸ்திவாரம் கட்டுவதற்கு முன்பு ஜன்னலுக்கு வர்ணம் பூசும் கொள்கை உடையவர்கள் இந்த நிறுவனத்தினர். விற்பனைத்துறையில் அடித்தள வேலையாட்களை தேர்வு செய்யாமல் உயர்ந்த பதவிக்கு ஆட்களை அதிக சம்பளத்துக்கு எடுத்துவிட்டு மேல் மட்டமாக வேலை செய்தால் விற்பனை எப்படி உயரும். லாபம் குறைந்துவிட்டால் உடனடியாக ஆட்குறைப்பு என்ற மந்திரத்தை ஏவி நாலைந்து விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவார்கள்.

இங்கு வேலைக்கு ஆள் எடுப்பதே ஒரு வேலையாக வைத்துக்கொண்டு காலம் கடத்துபவர்கள் உண்டு. ஒருபுறம் வேலைக்கு ஆள் எடுப்பதும் மறுபுறம் வேலையை ராஜினாமா செய்வதும் வாடிக்கையாகிப்போன ஒன்று. வேலையை விட்டு செல்லும் பொழுது யாருக்கும் எந்த மன வருத்தமும் இருப்பதில்லை.

ஒவ்வொரு உயர் அதிகாரிகளுக்கும் தனி கேபின், ஒவ்வொரு கேபினுக்கும் ஒரு பீயுண், ஒவ்வொரு துறைக்கும் ஒரு ஜெராக்ஸ் மெசின், அந்த ஜெராக்ஸ் மெசினிலிருந்து ஜெராக்ஸ் எடுத்து தர தனிப் பியூன் ஆக மொத்தம் பியூன்களின் எண்ணிக்கையே 35 க்கு மேல்.

இத்தனை வசதிகள் நிறைந்த கம்பெனியில் பணியில் அமர்ந்து நிறுவனத்துக்கு போட்டு கொடுக்கும் ஊழியர்கள் மட்டும் தொடர்ந்து பணியில் வேலை செய்யாமலேயே காலத்தை ஓட்டலாம். நிறுவனத்தின் முட்டாள்தனமான முடிவுகளுக்கு தலை ஆட்டினால் வேலை தொடரும், எதிர்த்து பதில் பேசினால் வேலை காலி.

இங்கு நிர்வாகத்துக்கு பிடிக்காத நபர்களுக்கு சம்பளத்தை குறைத்துவிட்டு இடமாற்றம் கொடுப்பார்கள். பொருளாதார சரிவின் காரணமாக அதையும் ஏற்றுக்கொண்டு வேலை செய்பவர்களும் உண்டு. அங்கிருந்து வேறு ஊருக்கு இடமாற்றம் சொல்லி மறுபடியும் சம்பளத்தை குறைத்து அனுப்ப முடிவு செய்வார்கள்.முடியாது என்று மறுத்தால் இங்கு வேலை இல்லை, வேண்டுமானால் நீங்களே ஒவ்வொரு துறைக்கும் சென்று எங்காவது வேலை இருக்கிறதா என்று பார்த்து நீங்களே என்ன வேலை இருக்கிறது என்று தெரிந்து கொண்டு வாருங்கள் என்று முட்டாள்தனமாக சொல்வார்கள்.

தொடர்ந்து 20 நாட்கள் எந்த வேலையும் தரப்படாமல் போகவே போங்கடா நீங்களும் உங்க வேலையும் என்று ராஜினாமா கடிதம் எழுதி தந்து விட்டு போய்விடவேண்டும். இதைத்தான் அவர்கள் எதிர்பார்ப்பது.

இவ்வளவும் எழுதியிருக்கிறீர்களே நீங்க எங்கே வேலை பார்க்கிறீர்கள் என்றுதானே கேட்கிறீர்கள்? மேலே சொன்ன நிறுவனத்தில்தான் நான் கடந்த இரண்டு வருடங்களாக வேலை பார்த்து வந்தேன். முதலில் 3000/= சம்பளம் குறைத்து ஜெய்ப்பூர்க்கு இடமாற்றம் பெற்று மறுபடியும் 6000/= குறைத்து பெங்களூர் செல்லச் சொன்னபோது வெகுண்டெழுந்து முடியாது என்று மறுக்கவே 20 நாட்கள் வேலை எதுவும் தராமல் இழுத்தடித்து அய்யோ ஆள விடுங்கடா சாமி என்று ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பியவன் வேறுயாருமல்ல சாட்சாத் நானே தான்.

என்ன கொடுமை சார் இது. எனக்கு வயது 42 இன்னமும் 25 வயது இளைஞனைப்போல் வேலை தேடிக்கொண்டிருக்கிறேன்”.


அதற்கு நான் இட்டப் பின்னூட்டம் இதோ.

இம்மாதிரி தனியார் துறையில் நிறுவனமா? அதுவும் குஜராத்திலா? ஆச்சரியமாக இருக்கிறதே.

சமீபத்தில் 1970-களில் திரையிடப்பட்ட “புன்னகை” படத்தில் ஜெமினி கணேசனுக்கு கிடைக்கும் முதல் வேலை நீங்கள் சொல்வது போலத்தான் இருந்தது. அவர் உடனே ராஜினாமா செய்து விட்டு போய் விடுவார்.

அதில் என்ன சொன்னார்கள் என்றால், வெறுமனே ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் இடத்தை வளைத்து போட வேண்டியது, பிறகு ஒரு தொழிலுக்கான லைசன்ஸையும் வாங்கி வைத்து கொள்ள வேண்டியது. பிறகு குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவது, பிறகு வேறு யாருக்காவது கணிசமான தொகைக்கு அந்த இடத்தையும் லைசன்சையும் மாற்றுவது என்றுதான்.

ஆனால் இன்னுமா அம்மாதிரி கம்பெனிகள் உள்ளன? கம்பெனியின் பெயரையாவது எழுதுங்கள் ஐயா, புண்ணியமாகப் போகும். வேறு சிலராவது ஏமாறாமல் இருக்கலாம் அல்லவா?


வேலை இடமாற்றம் சரிதான், ஆனால் நீங்கள் சொல்வது போல சம்பளத்தை குறைக்க இயலாதே? அவ்வாறு செய்ய முயல்வது சட்ட விரோதம் ஆயிற்றே? மேலும் கம்பெனியே இடமாறுதல் உத்திரவு பிறப்பித்தால் அவ்வாறு மாறுவதற்கான எல்லா செலவுகளையும் வேறு அல்லவா ஏற்றுக் கொள்ள வேண்டும்?

பதிவர் இடைவெளிகள் இடத்தில் நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன்? செய்திருப்பேன் என்ன, செய்திருக்கிறேனே?

முதலில் எனது இப்பதிவைப் பாருங்கள்.

வருடம் 1986. சற்றும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் எனக்கு கார்ப்பரேட் அலுவலகத்திலிருந்து பக்கத்து வளாகத்தில் இருந்த குர்கான் தொழிற்சாலைக்கு மாற்றம் வந்தது. அப்போது நான் உதவி மின் பொறியாளர் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராகப் பணி புரிந்து வந்தேன். அதே நேரத்தில் தொழிற்சாலையில் என்னுடைய ரேங்கிலேயே இன்னொரு உதவி மின்பொறியாளர் இருந்தார். ஆனால் என் சீனியாரிட்டி அவருடையதை விட அதிகம். ஆகவே அவர் என் கீழ் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம்.

அதுவும் அது வரை நான் வெறும் மொழிபெயர்ப்பு வேலைகள்தான் பார்த்து வந்தேன். ஜெனெரேட்டருக்கான வேலைகளை துவக்கி, நடாத்தி, முடித்துக் கொடுத்தது ஒரு விதிவிலக்காகவே பார்க்கப்பட்டது. அது வேறு அவருக்கு கடுப்பு. எங்கள் மேலதிகாரியிடம் போய் தன் செல்வாக்கைப் பயன்படுத்தியிருக்கிறார்.

விளைவு நான் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்த உடனேயே என்னைத் தலைமையகத்தில் உள்ள விளக்குகள், மின் விசிறிகள் முதலியவற்றைப் பார்த்துக் கொள்ளுமாறும் நான் இருக்க வேண்டிய இடமும் அதுதான் என்றும் கூறி திருப்பி அனுப்பிவிட்டார்கள். சம்பளம் மட்டும் தொழிற்சாலை கொடுத்து விடும். இப்படியாக மின் பிரிவில் மிக அதிக சீனியாரிட்டி உள்ள நான் ஒரு சாதாரண மேற்பார்வையாளன் செய்யக் கூடிய வேலையைச் செய்ய வேண்டியதாயிற்று. நான் என்ன செய்தேன்? பேசாமல் திரும்பி வந்தேன். என்னுடைய பழைய மேஜை நாற்காலிகள் எனக்கு கொடுக்கப்பட்டன. உதவிக்கு ஒரு எலெக்ட்ரீஷியன், ஒரு ஹெல்பர் மட்டுமே. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு நாள் வேலை பத்து நிமிடங்களில் முடிந்து விடும். சந்தோஷமாக மீதி நேரங்களில் என் வெளி மொழிபேயர்ப்பு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தேன். தில்லி முழுக்க எனக்கு வாடிக்கையாளர்கள். அவர்கள் கொடுக்கும் வேலைகளை ஹாய்யாகச் செய்து கொண்டிருந்தேன். நல்ல பிராக்டீஸ், நல்ல அனுபவமும் கூடக் கிடைத்தன. என்னைக் கண்காணிக்க வேண்டியவர்கள் தொழிற்சாலையில், நான் இருப்பதோ தலைமை அலுவலகத்தில். அங்கு இல்லையென்றால் தொழிற்சாலையில் இருப்பதாக இவர்கள் நினைத்துக் கொள்ள ஒரே தமாஷ்தான் போங்கள். இந்தக் கண்ணாமூச்சி 6 வருடம் நீடித்தது.

ஐ.டி.பி.எல் அப்போது தன் வீழ்ச்சியை நோக்கிப் போய்கொண்டிருந்தது. கைவசம் ஆர்டர்கள் ரொம்ப இல்லை. பலரும் வேலை நேரத்தில் பொழுதுபோகாமல் வம்பு பேசிக் கொண்டிருந்தனர். தன் இடத்தில் அமர்ந்து வம்பு பேசாமல் வேலை செய்பவர்கள் மிகச்சிலரே. அவர்களில் நானும் ஒருவனாக இனம் காணப்பட்டதுதான் பெரிய தமாஷ். எப்போதும் உட்கார்ந்து எதையோ பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருந்தது பலரை இம்ப்ரெஸ் செய்தது.

திடீரென 1990-ல் ஒரு பிரெஞ்சுக்காரர் ரிஷிகேஷில் உள்ள தொழிற்சாலைக்கு வந்து 21 நாட்கள் டேரா போட, அவருக்காக துபாஷி வேலை செய்தேன். என்னுடைய மொழிபெயர்ப்பு வேலைகளை விடாமல் செய்து வந்ததால் அந்த வேலையை இடது கை விளையாட்டாகச் செய்தேன். எங்கள் தலைமை நிர்வாகிக்கு ஒரே ஆச்சரியம். அவர் என்னிடம் "ராகவன், இங்கு கிட்டத்ததட்ட 8 வருடங்களாக பெரிய அளவில் பிரெஞ்சுவேலை எதுவும் வரவில்லை, இருப்பினும் நீங்கள் நேற்றுத்தான் விட்டது போல எப்படி சமாளித்தீர்கள்?" எனக்கேட்டார். அவரிடம் உண்மையையா கூற முடியும்? வேறு மாதிரி சமாளித்தேன். "ஐயா இது சைக்கிள் விடுவதைப் போலத்தான். பல ஆண்டுகள் சைக்கிளையே தொடாவிட்டாலும் பேலன்ஸ் செய்வது எப்படி மறந்துப் போகும்?"


மேலே சொன்னது போல கொட்டம் அடித்துக் கொண்டிருந்த நான் எழுதிய இந்தப் பதிவையும் பாருங்கள்.

எங்கள் மேனேஜருக்கு மட்டும் என் மேல சிறிது சம்சயம் என்று நினைக்கிறேன். வேறு ஒன்றும் இல்லை, நான் ஆஃபீசுக்கு வராமல் எங்காவது மட்டம் அடித்து விடுகிறேனா என்றுதான். ஆகவே தினமும் தான் காலையில் வேலைக்கு வந்ததும் என்னை இண்டர்காமில் கூப்பிட்டு ஏதாவது பேசி அறுப்பார். நானும் சமயம் கிடைத்தது என்று அவரைப் போட்டு எதிர்மரியாதையாக அறுத்து விடுவது உண்டு.

வருடம் 1987. எம்.ஜி.ஆர். அவர்களது இறுதிச் சடங்குகள் நடந்த தினத்தன்று ஐ.டி.பி.எல். கார்ப்பரேட் ஆஃபீஸில் திடீரென காலை 10 மணிக்கு அமைச்சகத்திலிருந்து வந்த தகவல்களின்படி விடுமுறை அறிவிக்கப்பட்டது. மொத்தம் 5 பஸ்கள் ஸ்டாஃபுகளுக்காக. அடுத்த 5 நிமிடத்தில் எல்லோரும் பஸ்களில் ஏறிக் கொள்ள, கட்டிடமே காலியானது. நான் மட்டும் என் சீட்டில் இருந்து கொண்டு எனது மொழிபெயர்ப்பு வேலைகளைத் தொடர்ந்தேன். அடுத்த நாளிலிருந்து நான் பத்து நாட்கள் லீவில் போகவிருந்தேன். ஆகவே கையில் இருக்கும் வேலையை முடிக்க வேண்டுமே என்ற அவசரம் வேறு.

எண்ணி ஐந்தாவது நிமிடம் இண்டர்காம் ஒலித்தது. எடுத்துப் பேசினால் மேனேஜர். அவர் நான் இன்னும் என்னிடத்தில் இருப்பதைப் பார்த்து வியப்படைந்தது போல இருந்தது. சாதாரணமாகப் பேசுவது போல நினைத்துக் கொண்டு என்னெனாவோ சம்பந்தம் இல்லாத கேள்விகள். பிறகு கார்ப்பரேட் ஆஃபீஸ் நிலவரம் பற்றிக் கேட்க எல்லோரும் வீட்டுக்குப் போய் விட்டதைக் கூறினேன். நான் ஏன் இன்னும் அங்கேயே இருக்கிறேன் என்பதை கடைசியில் கேட்க, பிளாண்டுக்கும் லீவா என்று "ஆச்சரியத்துடன்" நானும் கேட்டேன். சிறிது நேர மௌனம். அவருக்கு பின்னால் லாம்பா என்னும் ஆஃபீஸர் "ராகவன் போயிருக்க மாட்டான் என்று நான் கூறியது சரியாகப் போய் விட்டது பார்த்தீர்களா" என்று கேட்டது மேனேஜர் டெலிபோன் மவுத் பீசை சரியாக மூடாததால் எனக்குத் தெளிவாகக் கேட்டது.

"உங்களைப்போல் எத்தனைப் பேரை நான் பார்த்திருக்கிறேன்" என்று நான் நினைத்தேன், ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. இன்னும் சற்று நேரம் அறுத்து விட்டு, பேச்சை முடித்து கொண்டார் மேனேஜர். நானும் விறுவென்று மூட்டை கட்டிக் கொண்டு, கீழே வந்து, என் சைக்கிளில் ஏறி வீடு நோக்கி விரைந்தேன்.


நான் சொல்ல வருவது இதுதான். நிலைமையை எப்போதுமே நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்வது நல்லது. ஐ.டி.பி.எல்.-லில் வேலை செய்தபோது முதல் இரண்டாண்டுகளுக்கு மொழிபெயர்ப்பு வேலை நெட்டி முறித்த போதும் எனது மற்ற மொழிபெயர்ப்பு வேலைகளை வீட்டிலிருந்த போது செய்து முடித்தேன். ஐ.டி.பி.எல்.-ல் வேலையே இல்லை என்றபோதும் அதற்காக அசராமல் என் போக்கை மாற்றிக் கொள்ளவும் செய்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/10/2009

டோண்டு பதில்கள் - 10.09.2009

கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்துக் கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே அவரவர் தத்தம் கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?

அனானி (12 கேள்விகள் கேட்பவர்)
1. தென்னக நதிகள் இணையும் திட்டம் எந்த நிலையில்? நெல்லையில் தொடங்கும் என்றார்களே?
பதில்: நெல்லையில் தொடங்குமா? எப்படியாம்? ஒரு படத்தில் கஞ்சா கருப்பு எல்லா நதிகளையும் இணைக்கிறேன் எனச்சொல்லி விட்டு எல்லா நதிகளின் தண்ணீரையும் சில குடங்களில் தனித்தனியே அடைத்து வைத்து அவ்ற்றை ஒவ்வொன்றாக தாமிரபரணி நதியில் விடுவார். அடுத்த சீன் அவருக்கு தர்ம அடி என்று நினைக்கிறேன். யாராவது படத்தின் பெயரை சொல்லுங்கப்பு.

2. மனசாட்சிக்கும் தன் மனதுக்கும் விரோதமாக நடக்கும் மனிதர்கள்?
பதில்: அதாவது, மனமும் மனசாட்சியும் வேறுவேறு அப்படீங்கறீங்க?

3. கர்நாடக இசைக்கச்சேரிகளில் உங்களை கவர்ந்தவர் யார்? என்ன ராகம் பிடிக்கும்?
பதில்: கர்நாடக சங்கீதத்தை ரசிக்கவும் ஓரளவு சங்கீத ஞானம் வேண்டும். அது எனக்கு சுத்தமாக லேது. சில பாடல்கள் இனிமையாக இருக்கும், கேட்பேன்.

பிடித்த ராகம்? பூபாளம். ஏனெனில் எங்கம்மா எனக்கு திருப்பாவை பாடல்களை இசையாக சொல்லிக் கொடுக்க முயற்சித்தார். மார்கழித் திங்கள் என்னும் முதல் திருப்பாவையை அவர் பூபாளத்தில் பாடுவார். வையத்து வாழ்வீர்காள் என்னும் அடுத்தப் பாட்டு பிலஹரி என்றெல்லாம் போகும். ஆனால் என்ன ஆச்சரியம் நான் எந்தத் திருப்பாவை பாடலை பாட முயன்றாலும் அது தானாகவே பூபாளத்தில் முடிந்து படுத்தும். என் அம்மா “சனியனே உனக்கு இதெல்லாம் வேண்டாம்” எனக் கூறி விசிறிக் கட்டையால் அடித்து விரட்டி விட்டார்.

4. செக்ஸ் கல்வி பள்ளிகளில் என்ற திட்டம் எந்த நிலையில்? ஆதரிக்கிறீர்களா?
பதில்: அதை எவ்வாறு சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள் என்பதை பொருத்துத்தான் பதிலும் இருக்கவியலும்.

5. தமிழக அரசியல் வாதிகள்/ஆந்திர அரசியல் வாதிகள்/கேரள அரசியல் வாதிகள்/ஆந்திர‌ அரசியல் வாதிகள் ஒப்பிடுக?
பதில்: ஊழலைப் பொருத்தவரை எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்றாலும், தமிழக அரசியல்வாதிகள் தற்சமயம் அரசியல் விரோதத்தை தனிப்பட்ட விரோதமாகப் பார்க்கின்றனர். மற்ற மாநிலத்து அரசியல்வாதிகள் இந்தளவுக்கு மோசமில்லை என்றுதான் கூற வேண்டும். அதுவும் இந்த ஜெயலலிதாவும் கருணாநிதியும் செய்யும் கூத்துக்கள் பார்க்கச் சகிக்கவில்லை.

6. அரசின் செயல்களால் விலைவாசி எதுவும் குறைய வாய்ப்புண்டா?
பதில்: எனக்குத் தெரிந்து அப்படி ஏதும் இல்லைதான்.

7. தமிழ் நாட்டில் இன்று ஒரு வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
பதில்: வேலை தேட ஆரம்பிக்க வேண்டும்.

8. அஞ்சல்துறையில் நல்ல மாற்றம் தெரிகிறதே?
பதில்: எப்படிச் சொல்கிறீர்கள்?

9. சினிமா கவிஞர்கள் இப்போது அரசியலுக்குள் பிரவேசம் ?
பதில்: அவர்களும் சம்பாதிக்க வேண்டாமா?

10. அ.தி.மு.க.வின் பலமும் பலவீனமும்?
பதில்: ஜெயலலிதா

11. தா.பாண்டியன் தேர்தல் முடிவுக்கு பிறகு?
பதில்: ஐயோ பாவம்.

12. சினிமா, அரசியல் ஒற்றுமை/வேற்றுமை
பதில்: சினிமாக்காரர்கள் அரசியல்வாதிகளாக ஆன அளவுக்கு அரசியல்வாதிகள் சினிமாவுக்கு வந்ததாகத் தெரியவில்லை.

கந்தசாமி
1. வட இந்தியாவில் வெகுவிமரிசையாய் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி அதன் தொடர்ச்சியாய் விநாயகர் ஊர்வலம், பின் கடலில் சிலை கரைப்பு வைபோவங்கள் இப்போது தமிழ் நாட்டிலும் சில வருடங்களாய் அமைதியாய் நடை பெற்று வரும் சமயத்தில் இந்தத் தடவை ஒரு சில அதிகாரிகள் அனுமதி மறுத்து சண்டித்தனம் செய்வதாயும், முதல்வர், துணை முதல்வர் தலையிட்டு கைகொடுக்க வேண்டும் எனும் ராம. கோபாலன் கோரிக்கை நிறைவேறுமா?
பதில்: நல்லபடியாகத்தான் எல்லாம் முடிந்து விட்டதே. அடுத்த ஆண்டில் பார்ப்போம்.

2. கலைஞர் வீட்டுப் பெண்கள் ச‌மீபகலாமாய் பூஜை புனஸ்காரம் என தூள் கிளப்புவதாய் வரும் செய்திகளை பார்த்த பிறகு என்ன சொல்லத் (அரசின் கொள்கை) தோணுகிறது?
பதில்: கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்று சொன்னவரின் தாய் தந்தையரே கடவுள் பக்தி உடையவர்களாக இருந்து, சொன்னவர் அவரது “பகுத்தறிவின்படியே” காட்டுமிராண்டிகளின் புதல்வர் ஆனார். தலைக்கே அக்கதி என்றால் வால்கள் பற்றி என்ன சொல்வது?

3. சாதி நல்லிண‌க்கம் ஏற்படுத்தும் இந்த விழாவுக்கு துணை போகாமல் இடையூறு செய்வோரை அரசு கண்டிக்குமா?
பதில்: விநாயகர் ஊர்வலத்தைத்தானே சொல்கிறீர்கள்? நீங்கள் சொல்வது போல அரசு செய்ய அது என்ன இசுலாமியர்/கிறித்துவர் ஊர்வலமா?

4. கடலில் சிலை கரைப்பதால் சுற்றுச் சூழல் பாதிப்பு எனும் பெரியார் பக்தர்களின் குற்றச்சாட்டு எடுபடுகிறதா?
பதில்: மண் பிள்ளையாரால் பாதிப்பு இல்லை. பிளாஸ்டர் ஆஃப் பாரிசில் செய்வது கண்டிக்கத் தக்கது.

5. முன்பு பிள்ளையார் சிலை உடைப்பு நடத்திய பகுத்தறிவுச் சிங்கங்கள், இன்று பிரணவ மந்திரத்தின் அம்சமாய் விளங்கும் ஆதிமுல கணபதியின் சீர்மிகு விழா கண்டு என்ன சொல்வார்கள்/செய்வார்கள்?
பதில்: தமிழ் ஓவியாவுக்கு போக வேண்டிய கேள்வி இது. அவரும் கண்டிப்பாக 1921-ல் பெரியார் எங்காவது எழுதியதை தேடி கண்டுபிடித்து நகலிடுவார். பார்த்துக் கொள்ளுங்கள்.


கிருஷ்ணகுமார்
1. Difference between motivation and habit?
பதில்: Habit is already there. If something is done to favor the habit in a person, the concerned fellow is motivated to achieve more.

2. Name the Indian chief minister served for the longest tenure? reason for that?
பதில்: எனக்குத் தெரிந்து அது மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசுதான். அவரது தனிமனித ஒழுக்கம், உள்ளூர் காங்கிரசாரின் கையாலாகத்தனம் ஆகியவையே அவரது வெற்றிக்கு முக்கியக் காரணங்கள்.

3. Will Jaswant Singh form a new party?
பதில்: அவர் இன்னொரு மன்மோகன் சிங், நெடுஞ்செழியன். அடிமட்ட ஆதரவு அவருக்கு இல்லை என நினைக்கிறேன்.

4. Tell whether bluetooth option in cars is a dangerous idea?
பதில்: ஏம்பா காரை ஓட்டப் போறீங்களா இல்லை டெலிஃபோனில் பேசணுமா? ஏதேனும் ஒண்ணைப் பண்ணுங்கப்புகளா.

5. Tell ways to overcome shyness and have good conversational skills to the younger generation?
பதில்: சமீபத்தில் 1963-ல் வந்த ரத்ததிலகம் என்னும் படத்தில் “புத்தன் வந்த திசையிலே போர், புனித காந்தி மண்ணிலே” போர் எனத் துவங்கும் பாடலில் “பகைவனுக்கும் ஓர் உயிர்தான் வா, வா” என்னும் வரி வரும். அதே போல சங்கோஜம் என்பது எல்லோருக்குமே உண்டு. அதை வெல்வதுதான் முக்கியம். அதை வெல்வதற்கான முக்கிய உபாயமே அதை வெல்ல மனம் வைப்பதுதான். குருதிப் புனல் படத்தில் கமல் சொல்வது போல தைரியம் என்பது உள்ளே உருவாகும் பயம் வெளியில் தெரியாவண்ணம் பாதுகாத்துக் கொள்வதுதானே.

6. Methods to gauge a person's Intelligence quotient?
பதில்: எனக்கு இந்த ஐ.க்யூ. சோதனைகளில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. ஒரு குழந்தைக்கு சோதனை வைத்தார்கள். ஒரு நாணயத்தைக் காட்டி அது என்ன நாணயம் - ஒரு ரூபாயா, அரை ரூபாயா - எனக் கேட்க, குழந்தை அதை வாங்கி திருப்பிப் பார்த்து ஐம்பது பைசா என்றது. அதை ஒத்துக் கொள்ள இயலாதாம். நாணயத்தின் ஷேப்பைப் பார்த்து கூற வேண்டுமாம். ஆனால் நாணயத்தை அம்மாதிரி திருப்பிப் பார்த்தால் அதன் வால்யூ தெரிந்து கொள்ளலாம் என தெரிந்திருப்பதே ஒரு அறிவுள்ள செயல் என நான் நினைக்கிறேன். இன்னொரு குழந்தை மூன்று மொழிகள் பேசும். ஆனால் அதெல்லாம் அறிவில் கணக்கில் வராது என அந்த டெஸ்டுகள் எடுக்கும் அறிவுக் கொழுந்துகள் கூறுகிறார்கள்.

7. News T.V. Channels. will do away the News Papers from elite public in the coming days?
பதில்: அமெரிக்காவிலேயே பத்திரிகைகள் காணாமல் போகவில்லை. இங்கு நம்மூரில் போய் விடுமா என்ன?

8. Say something remarkable from your oldest memory?
பதில்: மாலை போட்டு என்னை மணையில் உட்கார வைத்திருக்கிறார்கள். நெல்லில் என் விரலை பிடித்து வாத்தியார் அ, ஆ எழுத வைக்கிறார். சமீபத்தில் 1950 விஜயதசமியன்று நடந்த இந்த நிகழ்ச்சியின் போது எனக்கு நாலரை வயது. அடுத்த ஞாபகம் சர்தார் வல்லபாய் படேல் இறந்த செய்தி.

9. The actors in comedy serials are becoming more vulgar in their acts. why?
பதில்: உதாரணம் கூறவும். எனக்கு அவ்வாறு தோன்றவில்லையே.

10. what is your comfortable grade with strangers?
பதில்: அவர்கள் எனக்கு அயலார் என்றாலும், நானும் அவர்களுக்கு அயலார்தானே.

அனானி (25.08.2009 இரவு 09.12-க்கு கேட்டவர்)
டோண்டுவின் புதுமொழிகள்?
1. எதுவும் தெரியாதவனுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

பதில்: எல்லாம் தெரிந்தவனுக்கும் கூடத்தான் சந்தேகம் இல்லை.

2. பற்களுக்கிடையில் மனிதன் மறைந்துள்ளான்.
பதில்: சொற்களினூடே தன்னைப் பற்றிய உண்மையை அவன் மறைக்கிறார்ன்.

3. ஆலயத்திற்கு அருகில் இருப்பவன்தான் தொழுகைக்குக் கடைசியாக வருவான்.
பதில்: புதிய முசல்மான் ஒரு நாளைக்கு பத்து முறை தொழுவான் என்பதும் உருதுவில பழமொழிதான்.

4. உன்னிடம் வம்பளப்பவன் உன்னைப்ப்ற்றியும் வம்பு அளப்பான்
பதில்: சாவு எல்லோருக்கும் ஒரு நாள் வந்தே தீரும்.

5. ஓர் ஆண்டின் களையெடுப்பு ஏழாண்டுகளின் விதை.
பதில்: அப்படியானால் ஏழாண்டுகள் விதைத்த பிறகு ஓராண்டு களைபிடுங்க வேண்டுமா? அறுவடை எப்போ செய்யணும்? இல்லே அதுக்காக தனியே ஆட்டோவில் ஆக்கள் வருவாகளா.

6. அவர்கள் அவனைப் பிடிக்கும் நாள் வரை ஒவ்வொருவரும் நேர்மையானவரே
பதில்: தங்கை தன்னைப் பற்றி அப்பாவிடம் கோள்மூட்டப் போகிறாள் என்பது அறிந்தவுடன் தானே சொல்பவனே மனசாட்சியுடையவன், நேர்மையானவன்.

7. விரும்பியதைப் பெறமுடிவில்லையானால் பெற்றதையே விரும்புவோமாக.
பதில்: துப்பாக்கி சுடும் போட்டியில் பலகையில் சுட்ட பிறகு ஓட்டையை சுற்றி காம்பஸால் வட்டம் வரைந்து கொள் என்பது போல இருப்பதாக எனக்கு தோன்றுகிறதே.

8. ஆயிரம் எதிரிகளைவிட ஒரு போலி நண்பனால்தான் அதிகத் தீமை.
பதில்: அம்மாதிரி நண்பர்கள் இருக்கும்போது எதிரி என்று யாரும் தேவையா என்ன?

9. ஆயிரம் நூல்களைக் கற்பதைவிட அறிஞர்கள் கூறும் பழமொழிகளே அதிக அறிவைத் தரும்.
பதில்: பாலைவிட பாலேட்டில்தானே சத்து அதிகம்?

10. உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு
பதில்: சின்ன வீடு பற்றி நண்பனுக்கும் கூறாதே, அவன் தள்ளிக் கொண்டு போனாலும் போவான்.

ரமணா
1. சேமிப்புக் குணம், சிக்கனம், மனநிறைவு ஆகியவை பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: நான் இட்ட 1. சேமிப்பது சரியா, தவறா? 2. நினைக்கத் தெரிந்த மனமே ஆகிய பதிவுகளைப் பாருங்களேன் சிக்கனம் பற்றி எனது எண்ணங்களை அறிய.

2. அலுவலகத்தில் பிறரின் தவறுகளுக்காய் கண்டிப்பு காட்டும் போது எதிர் விளைவுகள் ஏற்படாமல் தடுப்பது எப்படி?
பதில்: கண்டிப்பு காட்ட வேண்டிய மேலதிகாரியாக நீங்கள் இருந்தால் எதிர்வினைக்கெல்லாம் பயப்படக்கூடாது. ஆனால் ஒன்று, நீங்கள் நடவடிக்கை எடுத்தால் மேனெஜ்மெண்ட் உங்களை சப்போர்ட் செய்ய வேண்டும். பல சமயங்களில் உங்களை அவர்கள் திரிசங்கு சொர்க்கத்தில் விட்டு விடுவார்கள். அது நடந்தால்தான் கஷ்டம். அது எனக்குத்தான் தேரியும். ஐ.டி.பி.எல். நாசமாகப் போனதற்கே இம்மாதிரி தொழிலாள்ர்களது ஒழுங்கீன நடவடிக்கைகளை யூனியன் ஆர்ப்பாட்டத்துக்கு பயந்து பூசிமொழுகியதும் ஒரு முக்கியக் காரணம்.

3. ந‌ண்பர்கள் சந்திப்பின் போது பொருளாதாரத்தில் நலிந்தவர்களின் வறுமை சுட்டிக் காட்டப்பட்டு கேலி பேசும் போக்கு சரியா?
பதில்: அவ்வாறு நடந்தால் நண்பர்கள் யாரும் மிஞ்ச மாட்டார்கள். ஆனால் அதே சமயம் உனக்கென்னப்பா நீயெல்லாம் பணக்காரன் என மூக்கால் அழும் நண்பர்களும் தவிர்க்கப்பட வேண்டியவர்களே.

4. இந்தப் பணியை முடித்து தருகிறேன் என வாக்கு அளித்துவிட்டு பின்னாளில் நம் முகம் பார்த்து பேச அஞ்சும் மனிதர்கள் பற்றி என்ன சொல்வது?
பதில்: அந்தப் பணி இலவசமானதா அல்லது காசு கொடுத்தீர்களா என்ற கேள்விக்கு நீங்கள் அளிக்கும் பதிலை முதலில் பார்க்க வேண்டியிருக்கிறது. பிறகுதான் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியும். பலர் முகதாட்சண்யத்துக்காக காலணாகூட கிடைக்காத வேலையை ஒத்துக் கொண்டு நீங்கள் சொல்வது போல நடந்து கொள்வார்கள். எல்லோருமே என்னைப் போல ஓசி வேலைகளை தாட்சண்யமே இல்லாமல் மறுத்துவிட்ட்டால் தொல்லையே இல்லையே.

5. சமீபகாலமாய் ஆன்மிக நெறியைப் போற்றுகிறவர்கள், ஆன்மிகத்தைப் பின்பற்றுகிறவர்கள் எண்ணிக்கையில் கூடுவதை பார்க்கும் போது என்ன எண்ணம் தோன்றுகிறது.
பதில்: அப்படியெல்லாம் கூடுவது போலவோ அல்லது குறைவது போலவோ எல்லாம் தெரியவில்லையே?

கோபால்
1. கேரளாவில் துஷ்ட தெய்வங்களின் துணை கொண்டு செய்யப்படும் பில்லி சூனியம் உண்மையா?
பதில்: கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் நிச்சயமாகத் தெரியாது.

2. அங்கு பெரிய கோவில்களின் பிரசன்னம் பார்த்து நடந்தவை நடப்பவைகளை துல்லியமாய் சொல்வதாய் பல பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன்.இது எப்படி சாத்தியமாகிறது?
பதில்: இம்மாதிரி அசாதாரண நிகழ்வுகள் பற்றி எனக்கு நேரடி அறிவு இல்லை.

3. கேரள மாந்திரீகர்கள் சிலர் பெரிய கோவிலில் உள்ள தெயவத்தின் அனுக்கிர‌கத்தையே கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது என்று சொல்லப்படுவதில் உண்மை உண்டா?
பதில்: பல மெகாசீரியல்களில் பார்த்துள்ளேன். ஆனால் உண்மையை யாரறிவார்? ஆனால் ஒரு விஷயம் பார்த்துள்ளேன். அரக்கர்கள் தாங்கள் செய்யும் தவத்துக்கான பல வரங்களைப் பெறுவது, அதனால் எல்லோரும் அவதிப்படுவது என்றெல்லாம் ஏன் நடக்க வேண்டும்? முதலில் வரம் ஏன் தரவேண்டும்? என்றெல்லாம் நான் சிறிய வயதில் யோசித்திருக்கிறேன். பிறகுதான் ராமானந்த் சாகரின் ராமாயணம் சீரியலில் அதற்கு பதில் கிடைத்தது. சிவனை கடசி முறையாக வணங்கும் ராவணன் கூறுவான், “நீங்கள் எனக்களித்த வரங்களை உங்களால் தந்திராமல் இருக்கவியலாது. ஏனெனில் நான் செயுத தவத்தின் வலிமை அப்படிப்பட்டது. அதை வைத்து நான் கர்வத்தால் எனது அழிவை நானே தேடிக் கொண்டது வேறுவிஷயம்”

4. தெருக்களில் குறளி வித்தை காட்டுபவன் செயல்களும் இந்த மந்திர வகை சார்ந்ததா?
பதில்: பொய்த்தோற்றம் காட்டி அதை செய்வதுபோல நம்மை நம்பவைக்கிறார்கள். மனித இனம் உருவாகியதிலிருந்து இப்போதுள்ள நிலை வரையிலுள்ள காலத்தை பார்த்தால் நாம் பகுத்தறிவோடு இருந்து செயல்பட்ட ரொம்பவுமே சமீபத்திலிருந்துதான். இந்த சமீபம் டோண்டு ராகவன் சொல்லும் சமீபம் மாதிரித்தான்.

5. சில மாஜிக் காட்சிகளில் ஆளை ரத்தம் சிந்தாமல் இரண்டாய் வெட்டி பின் ஒட்டுகிறார்களே இது எப்படி சாத்யமாகிறது? இதுவும் மந்திரமா? தந்திரமா?
பதில்: பொய்த் தோற்றம்


ஸ்வாமிநாதன்
1. மகாகவி பாரதிக்கும் இன்றைய கவிஞர்களுக்கும் உள்ள வேற்றுமை என்ன?
பதில்: மகாகவி பாரதியார் உயிருடன் இருந்த காலகட்டத்தில் அவரை அறிந்தவர்கள் மிகவும் குறைவே. அவர் இறப்பிற்கு வந்தவர்கள் எண்ணிக்கை மிககுறைவே. அதேபோல இப்போதுள்ள ஏதேனும் அடையாளம் காணமுடியாதவர்கள் பிற்காலத்தில் வரலாம் அல்லவா? ஆக, இம்மாதிரி ஒப்பிடல்கள் செய்யத்தான் வேண்டுமா?

2. மன அமைதி தரும் தியானம் செய்யும் பழக்கம் உண்டா?
பதில்: முயற்சித்தது இல்லை.

3. மன நிம்மதியுடன் வாழ வழிகள் உண்டா?
பதில்: வாழ நினைத்க்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக்கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா

4. மனிதன் பந்தத்திற்கு ஆளாகுவது ஏன்?
பதில்: அதைத்தான் மாயை என்னும் பெயரில் அழைக்கிறார்கள். அது மனிதகுலம் தழைக்கத் தேவையான ஒன்றாகும். பின்னால் நடக்கப் போகும் விபரீதங்களை அறிந்தால் ஒருவன் ஒரு செயலையும் செய்ய இயலாது. ஆகவேதான் அறியாமையால் கடவுள் அவன் மனதை மூடுகிறான் என்று பெரியவர்கள் கூறுவர்.

5. ஒரு சிலர் அகங்காரத்துடன் இருப்பது ஏன்?
பதில்: எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம், தலைகுப்புற விழலாம் என்னும் எண்ணமே இல்லாது இருப்பவர்கள் அகங்காரத்தால்தான் அழிகிறார்கள்.

6. நாகாக்க என்ற வள்ளுவரின் கருத்துக்கு விளக்கம் சொல்லவும்?
பதில்: வாய்க்கொழுப்பால் பல வாய்ப்புகளை இழந்தவர்கள் என்னைவிட இதற்கு நன்றாக விளக்கமளிப்பார்களே.

7. இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள இடைவெளி கூடுகிறதா இல்லை குறைகிறதா?
பதில்: கூடுவதோ குறைவதோ நம் கையில் இருப்பதாக எண்ணுவது மாயையே. எல்லாம் அவன் செயல்.

8. இந்தியா எல்லாத் துறைகளிலும் முன்னேற வழி?
பதில்: ஒருமித்த செயல்பாடுகள். தேசபக்தி. கடின உழைப்பு. இவற்றை தவிர்க்க ஏதும் குறுக்கு வழிகள் இல்லை என்பதில் தெளிவாக இருத்தல்.

9. மனசாட்சி பற்றி கூறவும்?
பதில்: மேலே ஒரு கேள்விக்கு சொன்னதை சற்றே மாற்றிச் சொல்வோமா? தங்கை என்னைப் பற்றி கோள்மூட்டப் போகிறாள் என்பது அறிந்தவுடன் தானே சொல்வதே மனசாட்சியாகும்.

10. ஆன்மீகத்திற்கும் இன்றைய நவீன விஞ்ஞானத்திற்கும் என்ன தொடர்பு?
பதில்: உபநிஷத்துகள் சொன்ன பலவிஷயங்கள் விஞ்ஞானத்தால் உண்மை என கண்டறியப்பட்டுள்ளன.

11. ஆத்ம சுத்தியுடன் எழுதும் எழுத்தாளர் யாரேனும் உளரோ?
பதில்: ஆத்ம சுத்தியுடன் எழுதுகிறார்களோ இல்லையோ கைசுத்தியுடன் எழுதுகிறார்களா என்பதை முதலில் பார்ப்போமே.

12. பக்திக்கும் தன்னம்பிக்கைக்கும் உள்ள தொடர்பு?
பதில்: ஒன்றுக்கொன்று உதவி செய்யும். நாம் செய்வதை செய்வோம், மீதியை ஆண்டவன் பார்த்துப்பான் என்று இருந்தால் நலம். அதற்காக எல்லாவற்றையும் அவனே பாத்துப்பான் என்று இருத்தல் சரியில்லை.

13. கல்விக்கும் நல்ல ஒழுக்கத்திற்கும் உள்ள தொடர்பு?
பதில்: கல்வி நல்லொழுக்கத்தை அடையாளம் காண உதவுகிறது. ஆனால் அதை எடுத்து கொள்ள அடிப்படையிலேயே நல்லொழுக்கம் இருக்க வேண்டுமே. புரியவில்லை? ஒரு லார்ஜ் அடித்து பாருங்கள்.

14. பிறவிகளிலிருந்து விடுபட பக்திதான் சரியான வழியா?
பதில்: அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் நான் நினைக்கிறேன் அம்மாதிரி விடுதலையும் சில நாட்களிலேயே போரடிக்கும் என.

15. உலகப்பற்று இல்லாமல் வாழ்வதற்கு என்ன வழி?
பதில்: தாமரை இலை தண்ணீர் போல வாழ வேண்டும். பலனை எதிர்ப்பார்க்காது செயலாற்ற வேண்டும். என்னால் அது ஏலாது.

16. சுவாமி விவேகானந்தர் அருளிய செய்திகளில் முதன்மையானது எது?
பதில்: உன்னையே அறிந்து கொள். உன்னையே நம்பு.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/08/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 08.09.2009

கதைகள் மிஸ்ஸிங் பத்திரிகைகளில்
முன்பெல்லாம் பத்திரிகைகளில் பல சிறுகதைகள் வரும். தொடர்கதைகள் வரும். அவற்றுக்காகவே பத்திரிகைகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்குவார்கள். ஆனால் இப்போதெல்லாம் பார்த்தால் கிட்டத்தட்ட எல்லா பத்திரிகைகளுமே சினிமா துணுக்குகளாகவே பக்கங்களை நிரப்புகின்றன. விகடன், குமுதம், குங்குமம் என்று எதை பார்த்தாலும் ஒரே மாதிரித்தான் இருக்கின்றன. இதில் என்ன சோகம் என்றால் கதைகளை ரொம்பவுமே பின்னால் தள்ளி விட்டார்கள். தொடர்கதைகள் கிட்டத்தட்ட இல்லை என்னும் அளவுக்கே போய் விட்டன.

இன்னும் கதைகளை போட்டு வரும் கல்கி, மங்கையர் மலர் ஆகிய பத்திரிகைகள் சற்றே நம்பிக்கை அளிக்கின்றன. உதாரணத்துக்கு சில கதைகளைப் பார்ப்போம்.

மங்கையர் மலர் செப்டம்பர் 2009 இதழ் பக்கம் 44-ஆம் பக்கத்தில் வருகிறது “வேம்பு மாமியும் வேப்பமரமும்” என்னும் கதை. பத்மா என்பவரால் ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதை போட்டியில் அளிக்கப்பட்டு, இரண்டாம் பரிசு பெற்ற கதை இது. ஒரு குடியிருப்பு காலனியில் கப்பும் கிளையுமாக நின்று கொண்டிருக்கும் வேப்ப மரத்தை அது இடைஞ்சலாக இருப்பதாகக் கூறி காலனி மேனேஜ்மெண்ட் அதை வெட்ட ஏற்பாடு செய்கிறது. அம்மரம் வேம்பு அம்மாள் முதலில் அந்த காலனி இருந்த இடத்தில் இருந்த தோப்பு வீட்டை சேர்ந்தது. பிற்காலத்தில் பில்டருக்கு இடத்தைக் கொடுத்து தோப்பு காலனியாக உருவாகியுள்ளது. வேம்பு அம்மாளுக்கு அந்த மரம் என்றால் உயிர். காலனி குழந்தைகளுக்க்ம் மற்ற பெண்களுக்கும்தான்.

ஆனாலும் வணிக நோக்கங்கள் காலனி அசோசியேஷனில் மேலோங்கி அம்மரம் இடைஞ்சலாக இருப்பதாகக் கூறி நல்ல விலைக்கு விற்க ஏற்பாடு செய்யப்படுகிறது. கதை அம்மரம் வெட்டப்படும் நாளிலிருந்து ஆரம்பிக்கிறது. மரத்தின் கீழ் கிளாசுக்காக கூடும் குழந்தைகள் முகத்தில் உற்சாகம் இல்லை. திடீரென காlaனி செக்ரட்டரியின் மனைவி தன் குழந்தையை அழைத்து கொண்டு மாமியிடம் வருகிறார். குழந்தைக்கு அம்மை வார்த்திருக்கிறது என மாமி டயாக்னெஸ் செய்கிறார். இச்செய்தி காலனி முழுக்கப் பரவி வேப்ப மரத்தை வெட்டுவது தெய்வக் குற்றமாகப் பார்க்கப்படுகிறது. குழந்தைகள் மரத்தை சுற்றி அணைத்து நிற்கிறார்கள். பெண்கள் அவர்களை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கின்றனர். காலனி வேப்ப மரத்தை வெட்ட வேண்டிய கம்பெனியின் மின்சார அரம் பழுதுபடுகிறது. இப்போது காலனி அசோசியேஷனும் யோசிக்க ஆரம்பிக்கிறது. அவரவர் வீட்டிலேயே அசோசியேஷன் உறுப்பினர்களுக்கு பிரஷர் வருகிறது. கடைசியில் மரத்தை வெட்ட வேண்டாமென தீர்மானிக்கின்றனர்.

கதையின் கிளைமாக்ஸாக குழந்தையின் முகத்தில் அதன் அன்னையே ஊதுவத்தியால் சூடுவைத்திருக்கிறாள் என வாசகருக்கு மட்டும் சொல்லப்படுகிறது. நல்ல விஷயம் நடக்க இம்மாதிரியும் செய்ய வேண்டியிருக்கிறது. மனதுக்கு நிறைவை அளித்த கதை இது. இம்மாதிரி யுக்தி பற்றி ஏற்கனவேயே நான் ஒரு கதை படித்துள்ளேன். அதையே சற்று மாற்றி இக்கதையிலும் கடைசியில் சொல்கிறார்கள். ஊமைத்துரையை கும்பினியாரிடமிருந்து இவ்வாறுதான் காப்பாற்றியதாக கதையில் அதிகப்படியாக செய்தி வருகிறது.

அறுபதுகளில் இன்னொரு கதை வந்தது. முருகன் கோவில் குளத்தை தூர்க்க சில சதி நடக்க, தர்மகர்த்தா தன் கோவில் குளத்தை முருகனே காப்பான் என சூளுரைக்கிறார். அதற்கேற்ப ஊரில் பெரிய தீவிபத்து ஏற்பட குளத்து நீர் இருந்ததால்தான் தீயை அணைக்க முடிந்தது என கதை போகிறது.

இதெல்லாம் மூட நம்பிக்கை என சில அறிவாளிகள் கூறட்டும். நான் அந்த அறிவாளிகளுள் ஒருவனாக இருக்க விரும்பவில்லை என்பதை மட்டும் மனச்சந்துஷ்டியுடன் கூறி வைக்கிறேன்.

ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் சொல்தல்
என் அத்தையின் கணவர் திடீரென இறக்க அத்தையும் அவரது ஐந்து குழந்தைகளும் சென்னையில் இருந்த எங்கள் பெரியப்பா வீட்டுக்கும் எங்கள் வீட்டுக்கும் குடிபுகுந்தனர். என் வயதுடைய ஸ்ரீதர் மற்றும் என் அக்காவின் வயதுக்கு ஈடான அவன் அக்காவும் எங்கள் வீட்டுக்கு வந்தனர். ஸ்ரீதர் என்னுடமன் 4 மாதம் சிறியவன். ஆனால் ஒரு வகுப்பு அதிகமாக படித்தான் (நான்காம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்புக்குத் தாவியிருக்கிறான்). அவனை என் பள்ளியில்தான் தெலுங்கு மீடியம் கிளாசில் சேர்த்தார்கள். (அவன் தந்தை இறந்த சமயம் அவர் ஆந்திராவில் பத்தாண்டுகளாக போஸ்டிங்கில் இருந்தார்).

எல்லோரிடமும் அவன் எனது சொந்த தம்பி என சும்மா கூறிவைத்தேன். அது பிறகு பல சங்கடங்களை வரவழைத்தது. முதலில் என் எட்டாம் வகுப்பு உபாத்தியாயர் ஜயராம ஐயங்காரிடம் மாட்டிக் கொண்டேன். அவர் ஸ்ரீதரிடம் “உனக்கும் ராகவனுக்கும் எவ்வளவு வயசு வித்தியாசம்” என எதார்த்தமாகக் கேட்டு வைக்க, அந்த உண்மை விளம்பி 4 மாதம் என்றான். வாத்தியார் தான் குடித்துக் கொண்டிருந்த காப்பியை துப்பி அவருக்கு புரைக்கேறிவிட்டது. பிறகு நான் ஒருவாறு சமாளித்து “இல்லை, சார், ஒரு வயது 4 மாதங்கள்” எனக் கூறி சமாளித்தேன்.

ஸ்ரீதரின் வகுப்பாசிரியர் எவெரெஸ்ட் அவர்கள் (அவரது உண்மைப் பெயர் தெரியாது, விசு அவர்கள் மன்னிப்பார் என நினைக்கிறேன்) இன்னும் டீப்பாக சென்றார். “ஆக உன் தந்தை ஆர். நரசிம்மன் இவனுக்கு தந்தை அல்லவா”? எனக்கேட்டார். நான் ஆமாம் எனச் சொல்லி வைக்க, பிறகு அவன் என்ன் அவரை தனது கார்டியனாக ஃபார்மில் குறிப்பிட்டுல்ளான் என ஒரு கூக்ளியை வீசினார். அசருவேனா நான், என் அத்தைக்கு பிள்ளைக் குழந்தை இல்லாததால் அவன் குழந்தையாக இருக்கும்போதே ஸ்வீகாரம் கொடுத்து விட்டார்கள் என ஒரு சிக்ஸர் அடித்தேன். நல்ல வேளையாக மேலே கேள்விகள் வரவில்லை. நான் பள்ளியிறுதி வகுப்பைத் தாண்டும்வரை மனதில் லேசாக உதறல்தான்.

மொழி பெயர்ப்பாளர் தேவைப்படும் இடம்
சமீபத்தில் 1975-ஆம் ஆண்டு முதன்முறையாக ஜெர்மன் துபாஷியாக சென்றேன். ஒரு லெதர் கம்பெனிக்கு ஜெர்மானியர் ஒருவர் வந்திருந்தார். அவர் வந்தவுடனேயே கூறிவிட்டார். அதாகப்பட்டது தான் ஆங்கிலத்தில் பயிற்சி செய்து கொண்டிருப்பதாகவும், ஆகவே நான் அவருக்கு பக்கத்தில் இருந்தால் போதும், தேவையானால் என் சேவையைப் பெறுவேன் என்றார்.

கடைசியில் எல்லாவற்றையும் பார்த்தபிறகு தனது வணிக ப்ரபோசலை வைத்தார். முழுக்க ஜெர்மனில் பேசிவிட்டு, என்னிடம் அதை கவனமாக மொழிபெயர்க்குமாறு கூறினார். நான் செய்வதை கூர்ந்து கவனிக்கவும் செய்தார். பிறகு அவர் என்னிடம் ஜெர்மனில் பேசும்போது, பண விஷயத்தில் தாய் மொழிதான் பத்திரமானது என்றார்.

பணவிஷயம் மட்டும்தானா, வேறு சந்தர்ப்பங்களிலும் தெரியாத மொழியை பிடித்துக் கொண்டு தொங்கக் கூடாது. இப்படித்தான் கீழே உள்ள படத்தில் பாருங்கள் ஒருவன் ஒரு பெண்ணுக்கு தனது காதலை தெரிவிக்கிறார். அப்பெண் ஜாக்கிரதையாக மொழிபெயர்ப்பாளர் இல்லாமல் அவனோடு பேசத் தயாரில்லை என்கிறாள்.பிரசித்தி பெற்ற ஆங்கில இதழ் Punch பலரும் படித்திருக்கலாம். அதில் ஒரு கார்ட்டூன். பாரிசில் ஒரு ஹோட்டலில் ஆங்கிலேய தம்பதியினர் உட்கார்ந்திருக்கின்றனர். “உனக்கு எத்தனை முறை சொல்லியிருக்கிறேன், பிரெஞ்சில் சாப்பாடு ஆர்டர் செய்யக்கூடாதுன்னு” என்று கூறி மனைவி கணவன் குமட்டில் குத்துகிறாள். அவர்களை நோக்கி ஒரு டிராலியில் அப்போதுதான் சமைத்த யானையின் தலையை வைத்து சர்வர் அவர்களை நோக்கி டிராலியைத் தள்ளிக்கொண்டு வருகிறான்.

அதே போல ஒரு ஜோக் அறுபதுகளில் ஆனந்த விகடன் அட்டைப்பட ஜோக்காக வந்தது. தமிழ்த் தம்பதியர் ஹோட்டலில் தலையில் கைவைத்தபடி இருக்க, டேபிளில் அலார்ம் கடிகாரம், அரிக்கன் லைட், சோப் பெட்டி ஆகியவை இருக்கின்றன. “அடப்பாவி மனுஷா எத்தனை முறை சொன்னேன் ஹிந்தியில் ஆர்டர் செய்யாதீங்கன்னு” என்று என மனைவி கோபிக்கிறாள்.

தேன்நிலவு படம் ஷூட்டிங்கிற்கு போன டைரக்டர் ஸ்ரீதரின் அசிஸ்டண்ட் ஒருத்தார் ஐந்தடி உயரத்துக்கு ஒரு மரக்கட்டை வாங்கப் போய் கிட்டத்தத்தட்ட உதை வாங்கிய கதையை ஸ்ரீதர் எழுதியுள்ளார். கட்டை என்றால் லக்கடி என்பர்கள். பாஞ்ச் ஃபுட் லக்கடி (ஐந்தடி நீளக் கட்டை) என்பதற்கு அந்த அசிஸ்டண்ட் “பாஞ்ச் ஃபுட் லட்கி (ஐந்தடி உயரம் உள்ள பெண்) எனக் கேட்டுத் தொலைத்திருக்கிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது