2/04/2013

ஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((

திண்ணையில் வந்த இக்கட்டுரையைப் பார்த்ததிலிருந்து மனம் பதறுகின்றது. அதிலிருந்து சில வரிகள்:

5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த சவுதி இஸ்லாமிய பிரச்சாரகர் விடுதலை

லாமியா அல் காம்தி என்ற 5 வயது குழந்தை டிசம்பர் 25 ஆம் தேதி 2011இல் பலவிதமான காயங்களுடனும், நசுக்கப்பட்ட தலையுடனும், உடைக்கப்பட்ட நெஞ்செலும்பு, இடது கை, உடலெங்கும் காயங்களும் சூடுகளும் போன்ற பலவிதமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக்குழந்தை அக்டோபர் 22 ஆம் தேதி 2012இல் மரணமடைந்தது.

இந்த குழந்தையின் தந்தை பாயன் அல் காமிதி என்பவர் இஸ்லாமிய பிரச்சாரகர். இவர் முஸ்லீம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி வந்து இஸ்லாமை விளக்குபவர். இவர் கம்பிகளாலும், குச்சிகளாலும் இந்த குழந்தையை சித்ரவதை செய்ததை ஒப்புகொண்டிருக்கிறார் என்று Women to Drive என்ற சவுதி பெண்கள் குழு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த தந்தை லாமியாவின் கன்னித்தன்மையை சந்தேகித்தார் என்றும், அந்த குழந்தையை ஒரு மருத்துவர் மூலம் பரிசோதித்தார் என்றும் தெரிவித்திருக்கிறது இந்த குழு.

ராண்டா அல் கலீப் என்ற மருத்துவமனை சமூகசேவகி இந்த மருத்துவமனையில் வேலை செய்பவர். அந்த குழந்தையின் முதுகு உடைக்கப்பட்டிருக்கிறது என்றும் அந்த குழந்தை உடலெங்கும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்தது என்றும் கூறியிருக்கிறார்.

”அந்த குழந்தையின் மலத்துவாரம் கிழிக்கப்பட்டு பிறகு அதனை சூடு வைத்து மூட முயற்சிக்கப்பட்டிருக்கிறது” என்றும் அந்த குழந்தையின் தாயார் அந்த மருத்துவமனை ஊழியர்களிடம் குறிப்பிட்டிருக்கிறார்.

தந்தை இதுவரை சிறையில் இருந்த காலமே அவருக்கு தகுந்த தண்டனை என்றும், அவர் அந்த குழந்தைக்காக ரத்தப்பணத்தை அந்த குழந்தையின் தாயிடம் கொடுக்க வேண்டும் என்றும் அதுவே இஸ்லாமிய நீதி என்றும் நீதிபதி  தீர்ப்பு அளித்திருப்பதை பெண்கள் உரிமை குழு எதிர்க்கிறது.

மனல் அல் ஷரிப் உட்பட மூன்று சவுதி பெண்கள் உரிமை போராட்டக்காரர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்திருக்கிறார்கள்.  
ஒரு தந்தை தன் குழந்தைகளை கொன்றதற்கு மரண தண்டனை கொடுக்க முடியாது, ஒரு கணவன் தன் மனைவியை கொன்றதற்கு மரண தண்டனை கொடுக்கமுடியாது என்ற இஸ்லாமிய சட்டத்தை அடிப்படையாக வைத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று இந்த போராட்டக்காரர்கள் தெரிவிக்கிறார்கள்.
நன்றி: திண்ணை

இச்செய்திக்கு சுவனப்பிரியர்கள் என்ன சப்பைக் கட்டு கட்டப் போகிறார்கள்? இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதியும் இசுலாமிய மதச்சட்டத்தின்படித்தான் செய்ததாகக் கூறிக் கொள்வார்.

பதிவர் நந்தவனத்தான் அவர்களது பின்னூட்டம் இதே விஷயம் பற்றிய இன்னொரு பதிவில் இதோ. அது எனது கருத்துமாக இருப்பதாலேயே அதையும் இங்கே இடுகிறேன்.

குழந்தையை வன்கொடுமை செய்யபவர்களை கொன்றுவிட வேண்டும் என்பதுதான் எமது கருத்து. அல்லது குறைந்த பட்சம் ஆயுட்சிறை அளிக்கவேண்டும். ஏனெனில் இக்குற்றவாளிகள் மனநோயாளிகள். இவர்களை சில வருடம் சிறையில் வைத்துவிட்டால் வெளியில் வந்து அதையே திரும்ப செய்வார்கள். இவர்களை திருத்தவே இயலாது.

ஆனால் அப்படிப்பட்ட குற்றவாளி, அதிலும் சொந்த மகளை வன்புணர்வு செய்ததோடு மட்டுமல்லாது அவளை சித்திரவதை செய்த ஒருவனை தண்டிக்காமல் விட ஆண்டவன் ஒரு சட்டம் போட்டிருக்கிறான் என்றால் திருவள்ளுவர் மாதிரி 'கெடுக உலகு இயற்றியான்' எனத் தோன்றுகிறது (அவன் இருந்தால்).

இதை பீ மாதிரியான மதத்தலைவனுக ஆதரிப்பானுக அடத்தூ! பிறரின் அப்பா மகள் உறவை ஏன் கொச்சைப்படுத்துகிறார்கள், அந்த சிந்தனை எங்கிருந்து வருகிறது என்பது இப்போதுதானே புரிகிறது. இவனுகளுக்கு பிள்ளையாக பிறந்த பெண்களை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது
.

ஒரு 17 வயதுப் பெண் குழந்தைக்கு உணவளிக்கும் தவற்றைச் செய்ததற்காக அவள் தலையை வெட்டிய சவுதி அரசு இப்போது பல்லிளித்துக் க்ண்டு நிற்கிறது.

கொலைகாரப் பாவி


கொலையுண்ட மலர் பிணமாகவும் உயிரோடு இருந்த் போதும்


அதே திண்ணைக் கட்டுரையில் வந்த இன்னொரு செய்தி:

பெண்மகவைக் கொல்லும் தந்தைகளுக்கு எதிரான குரானின் போதனைக்கும் எதிராக இந்த தீர்ப்பு செல்கிறது. ஹதிஸ் “குழந்தையின் சாவுக்கு தந்தைக்கு  மரண தண்டனை கிடையாது” என்ற ஹதீஸின் அடிப்படையில் இந்த தீர்ப்பு சொல்லப்படுகிறது. இந்த தீர்ப்பின் நீண்டகால விளைவை கணக்கில் எடுத்துகொள்ளாமல், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுஹைலியா ஜைனுலபிதின் என்ற மனித உரிமை அமைப்பை சேர்ந்தவர் கூறுவதன் படி, தன் மகளை சித்ரவதை செய்து கொன்ற ஒரே ஒரு தந்தைக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். இதே போல, தன் மனைவியை கொன்ற கணவன்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது என்கிறார்.  இதற்கு இரண்டு உதாரணங்களை தருகிறார்.  தன் குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவனுக்கு ஐந்து ஆண்டு சிறைதண்டனை வழங்கப்பட்டது. இன்னொரு வழக்கில் தன் மனைவியை தன் காரின் பின்புறத்திக் கட்டி அவள் சாகும் வரை வண்டி யோட்டி கொன்ற கணவனுக்கு 12 வருட தண்டனை வழங்கப்பட்டது.

ஆண் கார்டியன்களுக்கு தங்கள் பாதுகாப்பில் உள்ளவர்களை கொல்வதற்கு இந்த தண்டனைகள்தான் கிடைத்தால், ஏன் இப்படிப்பட்ட தீச்செயல்கள் தொடராது? இந்த ஆண் கார்டியன்கள் தங்களது பாதுகாப்பில் உள்ள  பெண் குழந்தைகளை  சட்டப்பூர்வமாக விற்க அனுமதி பெறுகிறார்கள். குழந்தைகளை முக்கியமாக பெண் குழந்தைகளை காப்பாற்ற சட்டங்களே இல்லை.  ஷூரா கவுன்ஸிலில் குழந்தை பாதுகாப்பு சட்டம் என்று பிரேரணை செய்யப்பட்டபோது, குழந்தை என்று யாரை வரையறுப்பது என்று சிக்கல் வந்ததால், குழந்தை திருமணத்தை கூட தடை செய்யமுடியவில்லை.  தன் பெண் குழந்தைகளுக்கான கஸ்டடியை பெற முடியாததால், தந்தைகளால் அவலத்துக்கு உள்ளாக்கப்படும் பெண்குழந்தைகளின் கதைகள் ஏராளமாக இருக்கின்றன.

கணவனால் அடிக்கப்பட்ட பெண் போலீசுக்கு போனால் என்ன நடக்கும் என்று  ஒரு பெண் சமூக சேவகி விவரித்தார்.  அந்த போலீஸ் உடனே  Commission for the Promotion of Virtue and Prevention of Vice (CPVPV) அமைப்பையும், அந்த பெண்ணின் ஆண் கார்டியனையும் கூப்பிடும். பெரும்பாலான நேரங்களில் அந்த ஆண்கார்டியனே அந்த பெண்ணை அவலத்துக்கு ஆளாக்குபவர். ஆகவே அந்த பெண்ணை சுற்றி, மத குருக்களும், போலீஸும், அந்த பெண்ணை அடிப்பவரும் சுற்றி நிற்பார்கள். அந்த பெண்ணையும் அந்த ஆண்கார்டியனையும் சேர்த்து வைப்பதுதான் அங்கிருப்பவர்களின் பணி.  நான்கு மணி நேரம் அந்த பெண்ணை அந்த ஆணுக்கு அடங்கிப்போக வற்புறுத்துவார்கள். அதன் பின்னரும் அந்த பெண் பிடிவாதமாக இருந்தால்தான் பாதுகாப்பு வழங்கப்படும்.

தன் மகளையும் தன் மனைவியையும் வன்முறைக்குள்ளாக்கிய ஆணுக்கு தண்டனை வழங்கப்பட்ட வரலாறே இல்லை.  சில நேரங்களில் சிலமணிநேரம் சிறை தண்டனை, இல்லையென்றால், இனி செய்யமாட்டேன் என்று எழுதித்தர வேண்டும். அவ்வளவுதான்.

இந்த ஆண் கார்டியன் அமைப்பு பெண்களை ராணிகளாக வைத்திருக்கிறது என்று இதற்கு சப்பைக்கட்டு கட்டுபவர்கள் கூறுகிறார்கள். 
http://saudiwoman.me/2013/01/31/rest-in-peace-lama/

அடத்தூ, ஈனப்பிறவிகளா!

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

2/02/2013

சோ அவர்களும் விஸ்வரூபமும்

கோவி கண்ணன் அவர்களது இது பற்றிய இப்பதிவில் வந்த ஒரு பின்னூட்டம் கூறுவது:
”விஸ்வரூபம் குறித்த சோ வின் உணர்வுகளாக நீங்கள் எழுதியிருப்பவை பொறுப்பான, பண்பான விமர்சன ரகத்தில் சேரும். ஆனாலும் அதில் எனக்கு ஏற்பு இல்லை. படத்தில் தவறாக ஏதும் சொல்லப் படாவிட்டாலும் அதற்கு எதிர்ப்பு புறப்பட்டது உண்மை. அந்த எதிர்ப்பை மீடியா ஊதிவிட்டதும் உண்மை. அந்நிலையில் படம் வெளிவந்திருந்தால் கலவரங்கள் வந்திருக்கலாம். அப்போது சாதாரண மனிதர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அப்படியெல்லாம் நடக்காமல் படத்தை ஒத்தி வைக்கிற வேலையை அரசாங்கம் செய்தது. அது அவசியம். அதைச் செய்யத்தான் வேண்டும். அதனால்தான் சோ அதைச் சரியென்று சொல்லியிருக்கிறார்- இது என் புரிதல்”.

எனது புரிதலும் இதுதான். ஆனால் இந்த விஷயத்தில் நான் சோ சொன்னதுடன் ஒத்துப் போகவில்லை என்ப்தையும் எனது நங்கநல்லூர் பஞ்சாமிர்தத்தில் குறிப்பிட்டுள்ளேன். நான் சோ அவ்ர்களது கருத்துடன் ஒத்துப்போகாது இருக்கும் இடங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவற்றில் இதுவும் ஒன்று. ஆனால் சற்று மேலும் யோசித்ததில் இப்போது சோ கூறுவதை புரிந்து கொள்ள முடிகிறதுதான். இருந்தாலும் மனம் கேட்க மாட்டேன் என்கிறது. ஒரு அபூர்வ சினிமா கலைஞனை நோகடிக்கிறார்கள். தமிழகத்தில் இல்லாவிட்டாலும் வெளிநாடுகளில் காட்டப்படும் ஆதரவுகளால் அவருக்கு பொருள் நட்டம் ஏற்படாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

இதில் இசுலாமிய அவதூறு ஏதும் இல்லை என நான் புரிந்து கொண்டதும் உண்மைதான் என்பதை கோவி கன்ணன் அவர்களது மேலே சுட்டப்பட்ட பதிவு உறுதி செய்தது குறித்தும் சந்தோஷமே.

சீக்கிரம் தடைகளெல்லாம் நீங்கி இங்கும் விவரூபம் எழட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது