Showing posts with label நங்கநல்லூர் பஞ்சாமிர்தம். Show all posts
Showing posts with label நங்கநல்லூர் பஞ்சாமிர்தம். Show all posts

1/28/2013

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 28.01.2013

பட்டுக்கோட்டைக்கு வழி என்றால் கொட்டைப்பாக்கு எட்டுப்பணம் என்பது
நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் தமிழ் இலக்கணத்தை சீர்யசாகவே சொல்லிக் கொடுப்பதுண்டு. அதில் “விடை வழு (பட்டுக்கோட்டைக்கு வழி எது என்றால் கொட்டைப்பாக்கு எட்டுப்பணம்) என்பது அடங்கும். அதற்கு சிறந்த உதாரணங்கள் நம்ம தமிழ் ஓவியாவின் கிட்டத்தட்ட எல்லா பதிவுகளுமே என்றால் அது மிகையாகாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அவரது லேட்டஸ்ட் பதிவையே நோக்கலாம்.

அப்பதிவிலிருந்து:
”ஒரு பார்ப்பனன் தன் பெண்ஜாதியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி அந்தம்மாளை விபசாரி, விபசாரி, என்று கூறிக்கொண்டே வந்தான். ஆனால், அந்தம்மாள் தன் புருஷனின் சந்தேகத்திற்கிடமான காரியங்களுக்கெல்லாம் அவ்வப்போது பல சாக்குப் போக்குகள் சொல்லி புருஷனை அடக்கிக் கொண்டே வந்தாள்.

இப்படி இருக்கையில், அந்தப் பார்ப்பான் தன் மனைவி அந்நிய புருஷனிடம் சம்பந்தப்பட்டுக் கொண்டிருக்கையில் ஒரு நாள் கைப்பிடியாய் பிடித்து விட்டான். அப்பொழுது அந்த அம்மாள் வேறு எவ்வித சாக்குப் போக்கும், சமா தானமும் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாமல் போய்விட்டதால் பிராமணா!, உன் வாக்குப் பலித்துவிட்டது. அதற்கு நான் என்ன செய்யட்டும்? என்று பதில் சொல்லி மறுபடியும் புருஷன் மீதே குற்றத்தைக் சுமத்தினாள்.

அதாவது, புருஷனைப் பார்த்து நீ அடிக்கடி என்னை விபசாரி, என்று உன் வாயால் சொல்லிக் கொண்டே வந்தால் அல்லவா (பிராமணன் வாக்கு பொய்க்காது அது எப்படியும் பலித்துவிடும் என்று சாஸ்திரங்களில் சொல்லி இருக்கின்றபடி) நீர் பரிசுத்தமான பிராமணரானதால் உமது வாக்குப் பலித்துவிட்டது”.

இதைத்தான் self fulfilling prophecy எனச் சொல்வார்கள். புலி வருது கதையைப்போல எனவும் கூறலாம். இப்பார்ப்பனனை விடுங்கள். எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் தன் புது மனைவி கோவிலுக்குச் செல்லும்போது தன் நண்பர்களிடம் அவள் ஊருக்கு புதிதாக வந்த தாசி எனக்கூறி அவளை கேலி செய்ய வைத்தாராம். பெரியவர் வாக்கு பலித்திருக்குமோ?

நிற்க. இதில் விடை வழு எங்கிருந்து வருகிறது எனக் கேட்கிறீர்களா? அப்ப்திவுக்கு 16 பின்னூட்டங்கள், ஒன்றுகூட பதிவுடன் சம்பந்தப்பட்டதில்லை என்பத்தான் விசேஷம். இந்த மனிதரது கிட்டத்தட்ட எல்லா பதிவுகளிலுமே இந்த நிலைதான், அதாவது காபி பேஸ்ட் விவகாரங்கள்..

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் இம்மாதிரி எல்லாம் கேனத்தனமான விடைகள் வருமா என வியந்ததுண்டு. இப்போது அவ்வியப்பு போயே போயிந்தி.

விஸ்வரூபம் விவகாரம்:
அப்படத்தைப் பார்த்த பலரும் கூறிவிட்டார்கள், அதில் இசுலாமிய அவதூறு இல்லையென. இருப்பினும் அரசு தடை விதிக்கிறது என்பது நாட்டில் ஓட்டு பொறுக்கும் அரசியல்தான் கோலோச்சுகிறது எனத் தெரிகிறது. தடையை உடனடியாக நீக்குவது அவசியம்.

மதுரா விஜயம்:.
வெள்ளீயன்று மதுரை வந்தேன், இன்று {திங்கட்கிழமை) சென்னைக்கு செல்கிறேன். நான் மதுரையில் இருந்தவரை குருட்டு  அதிர்ஷ்டம், பவர்கட் லேது.

சனியன்று தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனை தரிசிக்கச் சென்ற நேரத்தில் பவர் கட் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று காலை எட்டு மணிவாக்கில் கிளம்பும்வரை அது இல்லாமலிருந்தால் அதிர்ஷ்டம்தேன்.

அப்டேட் (18.06 மணி, 28.01.2013)
 சென்னை வந்தாகி விட்டது. காலை 10.30 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பினேன். நோ பவர்கட். சந்தோஷமாக இருந்தது.

தென்றலாக வந்த புதிர்:
மிருதுவாக இப்புதிர் தோன்றியது.
ஒரு பெண்ணுக்கு இரு சகோதரர்கள். ஆனால் அச்சகோதரர்களுக்குள் ஒரு உறவும் இல்லை. சினேரியோ கூறவும்.


அன்புடன்,
டோண்டு ராகவன்

1/03/2013

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 03.01.2013

சோ அவர்களது கேள்வி பதில்களில் சில 

சில கேள்வி பதில்களுடன் எனது சேர்க்கையும் சில சமயம் இருக்கும். கண்டுக்காதீங்க.

1. கே: குஜராத் தேர்தல் வெற்றி நரேந்திர மோதி என்ற தனிமனிதருடையதா? இல்லை பாரதீய ஜனதாக் கட்சியுடையதா?
ப: ஒரு தனி மனிதர் மாநில அளவில் இப்படிப்பட்ட வெற்றியை பெற்று விட முடியது.அதே போல ஒரு கட்சியும் கூட, மக்களிடையே நம்பிக்கையை பெற்ற ஒரு மனிதனின் தலைமயில் இயங்கும்போதுதான் இப்படிப்பட்ட வெற்றிகளைப் பெற முடிகிறது. இப்படி வேண்டுமானால் சொல்லலாம்: பாரதிய ஜனதா ஒரு மோட்டார் கார். அதை ஓட்டிச் சென்றவர் நரேந்திர மோதி. இரண்டுமே அபாரமாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும்.  

2. கே. குஜராத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற நரேந்திர மோதி தனது அரசியல் எதிரியான கேசுபாய் படேலை சந்தித்து ஆசி பெற்றுள்ள அரசியல் நாகரிகம் பற்றி?
ப: இதில் அரசியல் நகரிகமும் இருக்கிறது, அரசியல் விவேகமும் இருக்கிறது. கேசுபாய் படேலை நம்பி ஓட்டளித்த படேல் சமூகத்தினர் மீண்டும் அத்தவற்றைச் செய்யாமலிருக்க இந்தப் பெருந்தன்மையான நடவடிக்கை உதவும் அல்லவா?
டோண்டு ராகவன் சேர்ப்பது: பிறகு பத்திரிகையாளர்களுடன் பேசிய கேசுபாய் படேல் தான் அல்பத்திலும் அல்பம் என்பதை நிரூபித்துள்ளார். அதுவும் மோதிக்குத்தான் பலம் சேர்க்கிறது.

3. கே: குஜராத் ஒன்றும் இந்தியா அல்ல என நரேந்திர மோதியின் வெற்றி குறித்து காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளதே?
ப்: காங்கிரஸ்காரர்களுக்கு மோதி மேல் வரும் கோபத்தில் குஜராத் இந்தியாவிலேயே இல்லை என்று கூட சொல்லத் தயாராகி விடுவார்கள் போலிருக்கிறதே.
டோண்டு ராகவன் சேர்ப்பது: அப்படியாவது ஆறுதல் பெறட்டும் காங்கிரஸ்.

4. கே: எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது இப்போதைக்கு நடவடிக்கை இல்லை என பாரத் ஈய ஜனதா முடிவெடுத்திருப்பது பயத்தினால்தானே?
ப: இப்போதைக்கு சுயமரியாதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாலாட்சி கவிழ்ந்துவிடும். ஆகையால் அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு ஆட்சி தொடர வழி செய்வ்அது என்று பாஜக த்லை தீர்மானித்திருப்பது புரிகிறது
டோண்டு ராகவன் சேர்ப்பது: இது நிச்சயம் பாஜகவுக்கு இழிவுதான்.

ஆனந்த விகடன் செய்யும் கூத்து (இதழ் 09.01.13)
லேட்டஸ்ட் விகடன் முதல் கட்டுர்ஃபை ஆணாதிக்கத்தை எதிர்த்து முழக்கமிடுகிறது. அடுத்த கட்டுரையோ நயனதாரா யாருக்கு என சீப்பாக இரு சகோதர்களுக்கிடையே நடக்கும் போட்டியை பற்றி எழுதுகிறது. இக்கட்டுரையின் டைட்டில் ஆணாதிக்கத்துக்கு சரியான சான்று.

வட அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தென்றல் மாத இதழ்
அமெரிக்காவிலிருந்து திரும்பிய எனது மைத்துனி எனக்கு இதன் இரண்டு மாத இதழ்களைத் தந்தார். தூள் கிளப்புகிறது. அக்டோபர் 2012 இதழில் நம்ம பழமைபேசியின் கவிதை அமர்க்களம். அதை இங்கே பார்க்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்








8/13/2012

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 13.08.2012

கொடும்பாவி எரிக்கும்போது ஜாக்கிரதை!!!!!!!!!!
அது சரி இவர்கள் கண்டார்களாமா இம்மாதிரி ஆகும் என்று?



இனிமேலாவது ஜாக்கிரதையாக இருப்பார்கள் என நம்புவோமாக.

ரொம்பவும் சினிமா பார்த்தால் இம்மாதிரி ஆகிவிடுமோ?
கல்யாணப் பெண்ணை அழைத்து வரும் தோழியர் வாராய் என் தோழி வாராயோ பாடுவதைக் கண்டுள்ளோம். ஆனால் பெண்ணே அவ்வாறு பாடி நடனமாடினால்?



ஆனாலும் மணமகன் பாவந்தேன்!!!!!

இல்லை அப்படியில்லை என்கிறர் மகேஸ். அதே திருமணத்தில் மணமகன் அடிக்கும் லூட்டியைக் கீழே பார்க்கலாம். நன்றி மகேஸ்.



நான் என்ன நினைக்கிறேன் என்றால், பழங்காலத் திருமணங்களில் இரு தரப்பினரும் நையாண்டிப் பாடல்கள் பாடுவார்கள். அதன் இன்னொரு ரூபம்தான் இது என.

ஈவேரா பற்றிய கார்ட்டூன்களின் உண்மை உரைத்ததால் கள்ள மௌனமோ?
இதற்கு முந்தைய பதிவில் வந்த கார்ட்டூன்களை நான் போட்ட முக்கியக் காரணமே தலித்துகள் விஷயத்தில் அவரது உண்மை நிலையைக் காட்டவே. அதாவது condenscending மனப்பான்மை என்பார்கள். அதுதான் இது. உண்மையிலேயே அவருக்கு பார்ப்பனரல்லாத மற்ற உயர்சாதியினரின் முன்னேற்றம்தான் முக்கியம். இக்கருத்துக்கள் பற்றி நான் ஏற்கனவேயே கேள்விப்பட்டிருந்தாலும் அவற்றுக்கான சரியான சான்று கிடைக்காமல் இருந்தேன். இப்போது முரசொலி கார்ட்டூன் கிடைத்தது.

ஆனால் நான் எதிர்பார்த்தது போல எதிர்வினை ரொம்ப இல்லை. ஈவேரா ஆதரவாளர்களின் கள்ள மௌனம் நீடிக்கிறது.

மனதை நிறையச் செய்த ஒலிம்பிக்ஸ்
பரவாயில்லை. தங்கம் இல்லாவிட்டாலும் மற்ற பதக்கங்கள் கிடைத்தனவே என அல்ப திருப்தி பட்டு கொள்ள வேண்டியதுதான். அவை கூட இல்லாமல் சிங்கி அல்லவா அடித்துள்ளோம் இத்தனை ஆண்டுகளாக.

செய்ய வேண்டிய சுத்திகரிப்பு வேலைகள் இன்னும் பல உள்ளன. முக்கியமாக ஒலிம்பிக் டீமுடன் டூருக்கு வரும் அதிகாரிகளின் பிச்சைக்கார கும்பலை ஒழிக்க வேண்டும். செய்வார்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/08/2012

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 08.07.2012

சில விசித்திரமான விளையாட்டு விபத்துகள்
விளையாட்டில் காயம் படுவது சகஜமே. அதற்காக இப்படியா?



 அல்லது இம்மாதிரியா?



ஸ்லோ மோஷனில் ரீப்ளேயை பார்த்து ஒரு பாட்டியம்மாள் கூறினாராம், பரவாயில்லையே இம்மாதிரி மெதுவாகவெல்லாம் ஆடினால் அடிபடாது அப்படித்தானே என்று.

செய்திகள் நம்மை பாதிக்கும் தருணஙகள்
மதியம் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென ஃபோன் ஒலித்தது. எடுத்து ஹலோ சொன்னல் எதிர்தரப்பில் ஒரு சப் இன்ஸ்பெக்டர். போன மாதம் 27-ஆம் தேதி ஏதாவது டாக்சியில் சென்றீர்களா என என்னிடம் கேட்கப்பட்டது. ஆம் எனக் கூறி விட்டு டாக்சியில் எங்கிருந்து எங்கு சென்றேன் என்ற கேள்விக்கும் பதிலளித்தேன். பிறகு ஏன் என்னிடம் இக்கேள்விகளை கேட்டாகள் என்றால் அந்த டாக்சி டிரைவரை இம்மாதம் இரண்டாம் தேதி யாரோ கொலை செய்து விட்டார்கள் எனக் கூறப்பட்டது. அரவிந்த் என்னும் பெயருடைய அந்த டிரைவர் இளைய வயதினர்.

மனம் கனமாயிற்று. பிறகு பேப்பரில் தேடினால் மேல் விவரம் கிடைத்தது. சாதாரணமாக இம்மாதிரி பல செய்திகளைக் கேட்டு பழகிப் போனவர்களுக்கு இதுவும் ஒரு செய்தியே. ஆனால் சம்பந்தப்பட்டவரை பார்த்து முன்னால் பேசியுள்ளேன் என்னும் நிலையில் அச்செய்தி மிகவும் பாதிக்கிறது என்பதுதான் நிஜம்.

அது போலத்தான் எனது இப்பதிவில் நான் இவ்வாறு எழுதினேன், “ஈழம் பற்றிய எனது சிந்தனைகள் பல ஈழசகோதரர்களுக்கு பிடிக்காது என்பதை நான் அறிவேன். இருப்பினும் கீழே சித்தரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சியை பதிவு செய்தபோது எனது மனதில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் துயரம்தான் தெரிந்தது. நேரிடையாக பாதிக்கப்பட்டவரை கண்டதும் எனது தர்க்கங்கள் எங்கோ ஒளிந்தன. இப்போது பதிவுக்கு போகிறேன்”.


எதுவுமே தனக்கு வந்தால்தான் புரியும் என்பதும் சரிதான்.

டூம்ஸ்டே வைரஸ்
எதற்கும் இந்தத் தளத்தைச் சுட்டவும். பச்சை வந்தால் ஓக்கே. சிவப்பு வந்தால் சங்குதாண்டி.

எனக்கு பச்சை வந்து விட்டது. ஜாலி. ஆனாலும் ஜாக்கிரதை என்கிறது அத்தளம். பார்க்கலாம். இது உண்மையான எச்சரிக்கையா அல்லது urban legend-ஆ என்று தெரியவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்



5/17/2012

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 17.05.2012

கையில் ஒரு கோடி ஆர் யு ரெடி?
இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்காக கேள்வி கேட்கப்படும். விடையை குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும்.

சரியான விடை (மிகவுமே எளிமையான கேள்விகள்தான்)அனுப்பியவர்களில் நூறு பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும். அந்த வரிசையில் மார்ச் இறுதியில் நடந்த நிகழ்ச்சிக்கான பரிசு எனக்கும் கிடைத்தது. ஆனால் அந்தோ, அதை அறிவித்த பிறகு நிகழ்ச்சியின் பொறுப்பாளர்கள் கிணற்றில் கல் போட்ட நிலையில் இருக்கிறார்கள். எப்போது தருவார்கள், அல்லது தருவார்களா என்பதெல்லாம் புரிவதில்லை.பார்ப்போம்.

அப்ட்டேட்டட்: 1000 ரூபாய்க்கு செக் அனுப்பித்து விட்டார்கள். வாழ்க வளமுடன்.

தெனாவெட்டு காதெரின் பான்கோல் (தொடர்ச்சி)
காதெரின் அவர்களுக்கு நான் எழுதிய கடிதமும் அவருடைய பதிலும் இங்கே.

Madame,

Even though I would have loved to write to you in French, I am writing in English for two reasons. My keyboard is English and putting in the accents is a botheration. The second reason is I want to be free in expressing my thoughts and do not want to be spending time in drafting correct French and losing the thread.

The two books preceding the above book I have already read and was impatiently looking for the third of this triology.

I like Josephine as I too am a translator (cum engineer) (French, German,English, Tamil) and I was gratified to see that lady succeeding as one.

One question I want to pose. You have very frankly written about Shirley's mother and Father. Did you not get any trouble from England as implying something about their queen is just not tolerated, I think?

One suggestion. Please allow comments to your blog posts.

Regards,
Dondu N. Raghavan



காதரீனின் பதில் கீழே:
Hello !

Thank you for your message. It’s wonderful to know that you’ve loved reading what I’ve enjoyed so much writting !

Oups ! I’m sorry I should write in french !!

Pour ce qui est de la Reine d’Angleterre, je ne sais pas encore !

Je ne lui ai pas demandé la permission. Et peut-être sera t-elle choquée quand elle lire “The yellow eyes of the crocodiles” quand il sera traduit en anglais.

Pour le moment, il n’est pas encore sorti en langue anglaise et devrait être publié en 2013.

Nous verrons alors ce qu’en pensera sa Majesté mais j’espère qu’elle aura le sens de l’humour et qu’elle prendra cela comme un hommage. Car le personnage de la Reine est très aimable dans la trilogie...


Avec un grand sourire,
Katherine Pancol



கிழிஞ்சது கிருஷ்ணகிரி. எலிசபெத் ராணியின் அனுமதி ஒன்றும் பெறவில்லையாம். நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு இன்னும் வரவில்லையாம். எலிசபெத் ராணி ஹாஸ்ய உணர்ச்சி உள்ளவர் என தான் நம்புவதாக வேறு எதிர்பார்ப்பு. 


என்ன செய்ய? அவருக்கு நான் போட்ட பதில்:
Thanks a lot. I would advise you to consult with your English translator. I am worrying for you. :)))
Junior is really out of this world and I love him!

நிஜமாகவே தெனாவெட்டுதான் காதெரினுக்கு.

ஸ்பெக்ட்ரம் ராசா
ஜாமீனில்தானே வந்திருக்கிறார்? அதற்கு ஏன் இவ்வாறு சீன் போடுகிறார்களாம்? தன் உயிருக்கு பயந்து இத்தனை நாள் உள்ளே இருந்தவருக்கு இப்போது ஏதேனும் த்னிப்பட்ட முறையில் ஆசுவாசம் கிடைத்திருக்குமோ?

எதற்கும் அவர் வாக்கிங் எல்லாம் தனியாக போகாமல் இருத்தல் நலம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/14/2012

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 14.05.2012

அம்பேத்கர் நேரு கார்ட்டூனில் என்ன தவறு இருக்கிறது?
அதுதான் புரியவில்லை. அதுவும் அறுபது வருடங்களுக்கு முன்னால் இக்கார்ட்டூன் வந்தபோது யாரைய்ம் கோபப்படச் செய்ததாகத் தெரியவில்லை? இப்போது மட்டும் ஏன்? நேரு, அம்பேத்கர் ஆகியோரை அவரவர் சிஷ்யகோடிகள் தெய்வ நிலைக்கு உயர்த்திப் பார்ப்பதே காரணம் என நான் நினைக்கிறேன். அக்கார்ட்டூனைத்தான் கீழே பாருங்களேன்.

நேரு சாட்டையை நத்தை மீதுதான் குறிவைக்கிறார். அம்பேத்கர் மீதல்ல. உண்மை கூறப்போனால் அம்பேத்கரும்தான் சாட்டையை தன் கையில் வைத்துள்ளார். இரு சாட்டைகளுமே நத்தைக்காகத்தான். நேரு அம்பேத்கருக்கு உதவியாகத்தான் செயல்பட நினைக்கிறார் என்பது எனது புரிதல்.

தெனாவட்டு காதெரின் பான்கோல் (Katherine Pancol) இந்தப் பெண்மணி ஒரு பிரசித்தி பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர். அவர் ஒரு மூன்று நாவல்கள் வரிசையை (triology) உருவாக்கியுளார். அந்த நாவல்கள்:  
1. Les yeux jaunes des crocodiles (முதலைகளின் மஞ்சள் நிறக்கண்கள்)
2. La valse lente des tortues (ஆமைகளின் மெதுவான சுழல் நடனம்)
3. Les écureuils de Central Park sont tristes le lundi (மத்தியப் பூங்காவின் அணில்கள் திங்களன்று சோகம்)

முதல் நாவல் என் மூச்சையே நிறுத்தியது. அதன் கதாநாயகி ஜோசஃபின் தன்னம்பிக்கையற்ற, தன் திறன் அறியாத பெண்மணி. சந்தர்ப்பச் சூழலால் தனது அக்காவின் பெயரில் ஒரு நாவலை எழுத, அது உலகப்பிரசித்தி பெறுகிறது.

கூடவே பல பாத்திரங்கள், அவர்களிடையே எதிர்வினைகள் ஆகியவை ஒரு ரோலர் கோஸ்டரில் பயணம் செய்யும் மனநிலையை உருவாக்கின. முதல் நாவல் பிடித்துப் போனதில் மற்ற இரு நாவல்களையும் படித்து முடித்தேன் என வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அவ்விரு நாவல்களும் அவ்வளவாக சோபிக்கவில்லை என்றுதான் நான் கூறுவேன்.

ஆனால் அந்த மூன்று நாவல்கள் வரிசையில் குறிப்பிடப்படும் Shirly என்னும் பாத்திரம் என் கவனத்தை ஈர்த்தது. அப்பெண்மணியின் தாயாராக சித்தரிக்கப்படுபவர் இங்கிலாந்தின் எலிஸபெத் மகாராணி. அவருக்கும் அரண்மனையில் பணிபுரிபவருக்கும் தவறான வழியில் பிறப்பவர்தான் இப்பாத்திரம். இது திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது.

எனது கவலை எல்லாம் இதை பிரிட்டிஷ் அரண்மணை வட்டம் எவ்வாறு எடுத்துக் கொண்டிருக்கும் என்பதே. இக்கேவியை அந்த பிரெஞ்சு எழுத்தாளரிடமே வைத்துள்ளேன். இதுவரை பதில் வரவில்லை.

எனக்குத் தெரிந்து இங்கிலாந்து அரசு பரம்பரை பற்றி அவ்வாறு அவதூறு செய்வது பொறுத்துக் கொள்ளப்படாது என்பதே. பார்ப்போம்.

சென்னை சூபர் கிங்ஸுக்கு சான்ஸ் இன்னும் இருக்கிறதா?
ஆம் என்றுதான் நண்பர் என்றென்றும் அன்புடன் பாலா கூறுகிறார். அது உண்மையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமும்.

பை தி வே நம்ம காமெடி நடிகர் சந்தானத்தைப் பார்த்தால் டோனி ஞாபகத்துக்கு வருகிறார். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் இதுபற்றி இன்று ஓரிருவரிடம் பிரஸ்தாபிக்க அவர்களும் ஆமாம் என ஒத்துக் கொண்டனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/03/2012

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 03.03.2012

சு. வெங்கடேசனின் காவல் கோட்டம்
அதை இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். ராணி மங்கம்மாவின் மரணம் வரைக்கும் படித்து முடிந்தாகி விட்டது. இம்மாதிரியான தகவல்கள் அதிகம் நிறைந்த நாவல் படிக்கும்போது மனதுக்கு ஒரு வித களைப்பு வருவது தவிர்க்க இயலவில்லை. எல்லா தகவல்களையும் ஜீரணிக்க அவகாசம் தேவைப்படும். நாவலை எப்போது முடிப்பேன் எனத் தெரியவில்லை. எனது படிப்புக்கு குந்தகம் வரக்கூடாது என்ற எண்ணத்தினாலேயே அது பற்றிய மதிப்புரைகளை படிப்பதை தவிர்த்துள்ளேன். பார்ப்போம்.

“அன்புடன் டோண்டு ராகவன் அவர்களுக்கு” எனக் குறிப்பிட்டு வெங்கடேசன் அவர்களது கையொப்பத்துடன் புத்தகத்தைப் பெறமுடிந்தது. ஆனால் அவர் என்னைப் பார்த்ததில்லை. அவருக்கு தெரிந்தவர்கள் மூலமாக புத்தகத்தை வாங்கி அவர்கள் மூலமாகவே வெங்கடேசன் அவர்களிடம் எனது வேண்டுகோளையும் வைத்ததில் அவர் அன்புடன் கையொப்பமிட்டுத் தந்தார். அவருக்கு முதற்கண் என் நன்றிகள்.

பேபால் பணவினியோக சேவை
பேபால் பற்றி பல பயமுறுத்தும் கதைகளை படித்ததன் பலனாக அதை பாவிப்பதை இத்தனை நாட்களாக தவிர்த்து வந்துள்ளேன். இப்போதுதான் துணிந்து அதை பயன்படுத்தத் துவங்கியுள்ளேன். வெளி நாட்டில் இருந்து வரும் சிறு தொகைகளுக்கு அது மிகவும் லாபகரமானது என்று இப்போது தோன்றுகிறது. அதையும் பொறுத்திருந்துதான் பார்ப்போமே. எது எப்படியானாலும் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சிறு தொகைகள் இப்போது எனக்குக் கிடைக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அவை எனது பேபால் கணக்குக்கு வந்து விட்டன. இனிமேல் எனது வங்கிக் கணக்குக்கு வருவதுதான் பாக்கி. ஏதோ வந்த வரையில் லாபம்.

Those who cannot remember the past are condemned to repeat it
வரலாற்றை அலட்சியம் செய்யலாகாது. இல்லாவிடில் வரலாற்றின் பிழைகளை நாம் மறுபடியும் செய்ய வேண்டியிருக்கும்.

இப்போ நாம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம், சாதி பற்றி பேசவே மறுப்பதன் மூலம். பெரும்பான்மையானோர் இன்னமும் சாதியை பிடித்துக் கொண்டு ஏன் தொங்குகிறார்கள் என சிணுங்கும் “முற்போக்காளர்கள்” என தங்களை தவறாக புரிந்த் கொண்டிருப்பவர்கள் கோபப்படலாம். ஆனால் நான் சொன்னதில் உண்மை இல்லாமலில்லை. பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, நடந்தவற்றை நாம் மறுக்கவியலாது. நான் ஏற்கனவேயே இப்பதிவில் குறிப்பிட்டபடி எந்த மதத்தவராயினும் சாதி போன்ற குழுமனப்பான்மையை தவிர்க்க முடியாது. இது எல்லா நாடுகளிலும் ஏதேனும் ஒரு ரூபத்தில் பரவியுள்ளது. என்ன நம்ம ஊரில் சாதி, மர்ற ஊர்களில் இனக்குழுக்கள் அவ்வளவுதான்.

பல ஆயிரம் ஆண்டுகளாக நம்மிடையே புழங்கும் சாதிகள் வரலாற்று உண்மைகளே அதை திட்டியாவது ஒழிப்போம் என்பது குழந்தைத்தனமானது. நிற்க.

நான் இங்கு கூற நினைப்பது வரலாற்றை நாம் பூசி மொழுகலாகாது என்பதே. இரண்டாம் உலக யுத்தத்தில் டங்கிர்க் என்னும் இடத்தில் பிரிட்டிஷ் துருப்புகள் பலமாக அடிவாங்கின. இங்கிலாந்துக்கு அது மகத்தான தோல்வி. இருப்பினும் அதைப் பற்றி அதிகமாகப் பேசுவதும் இங்கிலாந்துக்காரர்களே. அதன்றி அதை கம்யூனிஸ்டுகள் செய்வதுபோல வரலாற்றுப் பாடங்களிலேயிருந்து ஒதுக்கினால் பின்னால் ஒருகாலத்தில் அதே தவறை இங்கிலாந்துக்காரர்கள் மீண்டும் செய்யும் வாய்ப்பு அதிகம்.

ஆக நான் கூறுவது என்னவென்றால் சரியோ தவறோ நடந்ததை அப்படியே ஒப்புக் கொண்டு தவற்றை திருத்துவதே புத்திசாலித்தனம். நம்மூர் சரித்திர பாடங்களை பள்ளிகளுக்காக எழுதுபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் அது. செய்கிறார்களா? இல்லையே. பல குழுக்களை திருதி செய்யும் நோக்கத்தில் பூசி மெழுகுவதுதான் நடக்கிறது. இந்தியாவின் பழஙால சிறப்புகளை எடுத்துரைக்க தயக்கம் வருகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/16/2012

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 16.02.2012

Children should be seen but not heard
ஆங்கிலத்தில் உள்ள இந்தச் சொலவடை நிரம்பவும் பிரசித்தி பெற்றது. குழந்தைகள் முந்திரிக் கொட்டையை போல எல்லோரும் இருக்கும் சபையில் பேசலாகாது என்ற நோக்கத்தில் கூறப்பட்டதை பலரும் தவறாகவே புரிந்து கொள்கின்றனர். குழந்தைகள் இயல்பாக உற்சாகத்துடன் இருப்பதை தடை செய்யும் நோக்கத்தில் இதையே உரக்கக் கூறுகின்றனர்.

The honorable Prime Minister wants to be obscene but not heard
பிரிட்டன் பாராளுமன்றத்தில் பிரதமர் ஆவேசமாக உரையாற்றும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களை பார்த்து பேசிக் கொண்டே இருந்தவர் திடீரென சப்தம் செய்யாமல் “அடப் போங்கடா தேவடியாப் பசங்களா” என வாயசைத்தார். இதை பார்த்து டென்ஷனான எதிர்க் கட்சியினர் கத்த ஆரம்பிக்க, பிரதமரோ தான் ஒன்றுமே கூறவில்லை என சாதித்தார். ஸ்பீக்கர் தமாஷாகக் கூறினார், “The honorable Prime Minister wants to be obscene but not heard”.

போன பதிவில் பார்த்தீர்களே, எல்ல்லோரும் தாங்கள் படிக்கும் பத்திரிகை டைம்ஸ் ஆஃப் இந்தியா என்பது வாயசைப்பின் மூலமே காட்டுகிறார்கள்.

இது போலத்தான் தேமெனென்று என வடிவேலு வெற்றிலை பாக்கு போட்டு மெல்ல, அவரை தூரத்திலிருந்து பார்க்கும் ஒரு மொட்டை அவர் தன்னை வண்டை வண்டையாக திட்டுகிறார் என்றும், தன் குடும்பத்தையும் திட்டினார் எனக் கூறி அவரை சாத்தோ சாத்து என சாத்துகிறார். படத்தின் பெயர் மறந்து விட்டேன். யாராவது தெரிஞ்சால் சொல்லுங்கப்பூ.

நைஜீரியா மோசடி 419
திடீரென மின்னஞ்சல் ஒன்று வரும். அதில் ஒரு பணக்காரன் வாரிசில்லாது இறந்துவிட்டதாகவும், சொத்து மதிப்பு பல மில்லியன் லாலர்கள் எனவும் வரும். அத்தனையும் உங்களுக்கே கிடைக்கும் என ஆசையெல்லாம் காட்டுவார்கள். டெபாசிட்டாக சில ஆயிரம் டாலர்கள் அனுப்பச் சொல்வார்கள். அப்படி அனுப்பி ஏமாந்த அசடுகள் அனேகம். ஆமாம் அதென்ன 419? வேறு ஒன்றுமில்லை, நம்ம ஊரில் செக்‌ஷன் 420 என்றால் அங்கெல்லாம் 419 அவ்வளவுதான்.

அப்படிப்பட்ட மோசடிக் காரர்களையே கலாய்ப்பவர்களும் உண்டு. இங்கே பாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின்குறிப்பு: வடிவேலு வந்த அப்படத்தின் பெயர் “பிறகு”. அக்காட்சி கீழே தந்துள்ளேன், எஞ்சாய்!!

2/10/2012

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 10.02.2012

ஆ, எம்ஜிஆரா வில்லத்தனமான ரோலில்?
எம்ஜிஆர் வில்லன் ரோலில் நடித்த ஒரு க்ளிப் பிரஹலாக்தா படத்தில். இதில் அவர் காமாந்தகார இந்திரனாக நடித்து ஹிரண்யகசிபுவின் மனைவி லீலாவதியை ஈவ் டீசிங் செய்யும் காட்சி.



லோக்கலைசேஷனுக்காக செய்யும் காமெடிகள்
பம்மல் சம்பந்த முதலியார் பல ஷேக்ஸ்பியர் நாடகங்களை தமிழாக்கி நடத்தி இருக்கிறார். அவற்றில் பாத்திரங்களுக்கு தமிழ்ப் பெயர்களாக வைப்பார். உதாரணத்துக்கு ஹாம்லெட் அமலாதித்யன், ஒஃபீலியா அபலை, ஜூலியஸ் சீசர் வீரசிம்மன், ப்ரூட்டஸ் பரதன், ஆண்டனி ஆனந்தன், கமில்லெ கமலா போன்றவை. அவர் செய்தது ஒரு லாஜிக்குடன் இருக்கும். பார்ப்பவர்களுக்கும் அவை விபரீதமாகத் தென்படாது.

ஆனால் தற்போது? அவள் ஒரு தொடர்கதை படத்தில் காட்டப்படும் சென்னையின் பல இடங்களை கேரளாவில் உள்ள ஊர்களாக காட்டிய கூத்து நடந்தது. மின்சார வ்ண்டியை பார்த்து கேரள சகோதரர்கள் கைகொட்டி சிரித்தனர். ஏன் இந்தக் கொலை வெறி என்றுதான் கேட்கிறேன். அப்படியே சென்னை என காண்பித்துவிட்டு பாத்திரங்களின் பெயரை மட்டும் மலையாளப் பெயர்களாக வைத்திருக்கலாமே. லாஜிக் அடிபடாதே.

லாஜிக் பார்ப்பது
நான் சமீபத்தில் 1960-61-ஆம் கல்வியாண்டில் பத்தாவது படிக்கும்போது ஒரு நாள் எங்கள் ஆசிரியர் சங்கரராமன் அவர்கள் கோபத்துடன் வகுப்புக்கு வந்தார். கட்டுரை நோட்டுகளையும் எடுத்து வந்திருந்தார். என்னை பெயரிட்டு அழைத்து நிற்கச் சொன்னார். நானும் ஏதும் புரியாது நின்றேன். அன்றைய கட்டுரை வணிகக் கடிதம் எழுதுவது பற்றியது.

அதில் நான் ஒரு புத்தக கம்பெனிக்கு எழுதி புத்தகங்களை ஆர்டர் செய்வது போல இருக்கும் கட்டுரை அது.

நான் ஆர்டர் செய்தது:
1. ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி - 10,
2. என்சைளோப்பீடியா பிரிட்டானிக்கா - ஒரு முழு செட்

இவற்றை விபிபியில் அனுப்புமாறு எழுதியிருந்தேன்.

ஆசிரியர் ஒரே ஒரு கேள்விதான் கேட்டார், “ஏண்டா தபால்காரன் மேல் உனக்கு என்ன அவ்வளவு கோபம்? இடுப்பெலும்பு முறிந்து விடுமேடா அத்தனை புத்தகங்களையும் தூக்கினால்”? அப்போதுதான் நான் எழுதிய அபத்தம் எனக்கே புரிந்தது.

வெறும் மொழி எழுதினால் மட்டும் போதாது பொது அறிவும் அதில் சேர்ந்திருக்க வேண்டும் என்பதை அவர் எனது உதாரணத்தை வைத்து விளக்கினார்.

பார்த்தசாரதி இன்னொரு திருவாழத்தான். புது சொற்களை வாக்கியங்களில் பிரயோகிக்கச் சொன்னால், அவன் இவ்வாறு வாக்கியங்களாக எழுதுவான்.

1. விட்டெறிதல்: அவன் லட்ச ரூபாயை விட்டேறிந்தான்.
2. தாவுதல்: அவன் குளத்துக்குக் குளம் தாவினான்.
3. அநேகமாக: அனேகமாக நாளை உலகம் முடிவடையும்.

துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்
லேட்டஸ்ட் துக்ள்க். ராசா பயத்துடன் ஜெயில் காவலாளியை கேட்கிறார்: “ஒரு சந்தேகம் வருது. யாராவது சாமியார் நரபலி கொடுத்தா அவங்க தப்பிச்சுக்கலாம்னு சொல்லியிருப்பாரோ? நைஸா விசாரியுங்களேன், திக்கு திக்குங்குது”.






பாவம் ராசா. எத்தனை பேருக்குத்தான் பயப்படுவார்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/05/2011

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 05.10.2011

விட்டலன், புதிய தென்றல் மற்றும் நான்
எனது இப்பதிவில் இது சம்பந்தமாக நான் இட்ட கடைசி பின்னூட்டம் பற்றி சில வரிகள்:
தமிழ்மணத்தின் இப்பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இதோ:
//ஒவ்வோர் இடுகையையும் எங்களாலே பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதால் இவ்விடத்தில் பதிவர்களும் பயனர்களும் இருகண்களாக இருந்து தெரிவிக்கக் கோருகிறோம். தமிழ்மணத்தின் சிறப்பிற்கு டி.எம்.ஐ நிர்வாகக் குழுவினர் மட்டுமன்றி, பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் காரணமே.//
அதைத்தான் நானும் காவ்யாவும் விட்டலன் போன்றவர்கள் விஷயத்தில் செய்தோம்.
நான் கேட்டுக் கொண்டபடி அம்மாதிரியான விளம்பரப் பதிவுகள் அதற்கான ஏதேனும் ஓர் அடையாளத்துடன் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் யாரேனும் நிஜமாகவே தில்லாலங்கடி வேலை செய்து தமது பதிவை முகப்புப் பக்கத்திலேயே நிலைக்கச் செய்தால், நான் அவை விளம்பரப் பதிவாக இருக்கலாம் என்னும் சந்தேகத்தின் பலனாய் ஒன்றுமே கூறாது விட்டுவிடும் வாய்ப்பு உண்டு.

இப்போதெல்லாம் விட்டலனோ புதிய தென்றலோ காணப்படவில்லை.

சந்தேகம் கேள் மகனே, அப்போதுதான் உனக்கு அறிவு வளரும்!!!
மகன்: அப்பா நீராவி இஞ்சின் எப்படி வேலை செய்கிறது?
தந்தை: (பேப்பர் படித்தவாறு) தெரியாது மகனே.

மகன்: உலகிலேயே அதிக மழை பொழியும் ஊர் எது?
தந்தை: (கொட்டாவி விட்டவாறு) தெரியாது மகனே.

மகன்: தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்?
தந்தை: கககபோ

மகன்: கொதிக்கும் நீர் முழுவதும் ஆவியாகும் வரைக்கும் உஷ்ண அளவு 100 டிகிரி செல்சியாகவே நிற்கிறது அது ஏன்?
தந்தை: நான் என்னத்தைக் கண்டேன்.

அரை மணி நேரம் மௌனம் நிலவுகிறது.

தந்தை: என்ன மகனே கேள்வி கேட்பதை நிறுத்தி விட்டாய்? கேள்வி கேட்டுக் கொண்டேயிரு, அப்போதுதான் அறிவு வளரும்.

Any resemblance with actual events is purely intentional!

பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதும் கல்வி அமைச்சர்
ஒரு விவேக் படத்தில் ஒரு காட்சி. விவேக்குக்கு தவறாக ஆபரேஷன் செய்து விடுகிறார் டாக்டர். விவேக் தட்டிக் கேட்க அவர் பம்முகிறார். அப்போது அங்கு வரும் கம்பவுண்டர் “டாக்டர், நீங்கள் ப்ளஸ் டூவுல பாஸ் பண்ணிட்டீங்க” எனக்கூற, விவேக் டரியலாகிறார். படம் பெயர் யாராவது சொல்லுங்கப்பூ.

இப்போ பார்த்தால் பத்தாவது கூட பாஸ் செய்யாத கல்யாணசுந்தரம் புதுவையில் கல்வி அமைச்சர்! சட்டப்படி தவறில்லைதான், இருந்தாலும் இடிக்கிறது. இந்த அழகில் அவர் இப்போது பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதும் நிலையில் சமூக அறிவியல் தேர்வில் வசூல்ராஜா கிரேசி மோகன் மாதிரி இவர் சார்பில் இன்னொருவர் பரீட்சை எழுதுவதாக பீதியை கிளப்புகிறார்கள்.

அசாம் முதன் மந்திரியாக தெரிவு செய்யப்பட்ட பிரஃபூல்ல குமார் மொஹந்தாவும்தான் பிறகு ஒரு பரீட்சை சக மாணவர்களுடன் சேர்ந்து பந்தா ஏதுமில்லாமல் வெளிப்படையாகவே எழுதினார். நிருபர்கள் அதை கவர் செய்தனர். புதுவை கல்வி அமைச்சருக்கு மட்டும் இங்கு என்ன பிரச்சினை?

மெகா சீரியல்கள் என்றால் கிள்ளுக்கீரையா?
ஒரு சீரியலை தொய்வு ஏதும் இல்லாமல் கொண்டு செல்வதில் உள்ள கஷ்டம் நம்மைப் போன்ற வெளி ஆட்களுக்கு புரியாதுதான். இந்த முயற்சியில் பல டைரக்டர்கள் லேடீஸ் செண்டிமெண்டை பிழிந்தெடுக்க முயற்சி செய்து அபத்தமான அளவுக்கு செல்வதும் நடப்பதுதான். “கோபுரங்கள் சாய்வதில்லை” என்னும் அருமையான திரைப்படத்தை இப்போது கடந்த பல ஆண்டுகளாக கஸ்தூரி என்னும் சீரியலாக எடுத்து கொலை செய்வதையும் பார்க்கிறோம்.

அதே சமயம் “எங்கே பிராமணன்” போன்ற சீரியலையும் பார்க்கிறோம். எப்படி ஒரு சீரியலை எடுக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக் காட்டுதான் எங்கே பிராமணன் என நான் பலமுறை சொல்லியாகி விட்டது.

இப்போது நான் மிகவும் ரசிக்கும் ஒரு சீரியல் “நாதஸ்வரம்”. அது வந்த புதிதில் நான் பல்வேறு காரணங்களுக்காக அவற்றின் ஆரம்ப எபிசோடுகள் பலவற்றை பார்க்கவில்லைதான். இருப்பினும் என் வீட்டம்மாவிடம் கதை சுருக்கம் பெற்றுக் கொண்டு பிறகு பார்க்க ஆரம்பித்தது முதல் விடாமல் பார்த்து வருகிறேன். அதிலும் சில எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் காட்டப்பட்டபோது சம்பந்தப்பட்ட பதிவுகளை பார்க்காமல் புறக்கணிக்கவும் செய்தேன் என்பதும் நிஜம்.

இப்போதுதான் சில நாட்களாக விட்டுப்போன ஆரம்ப எபிசோடுகளை டெக்சதீஷ் உபயத்தில் பார்த்தேன். அசந்து விட்டேன். சும்மா சொல்லப்படாது, திருமுருகன் சீரியலின் மேல் தனது முழு கண்ட்ரோலையும் வைத்துள்ளார். முதல் நான்கு எபிசோடுகளிலேயே பாத்திரங்கள் அழகாகச் செதுக்கப்பட்டு விட்டனர்.

கீழே நான் காட்டும் க்ளிப்பிங்க் அக்டோபர் மூன்றாம் தேதியுடையது. காவிய ரேஞ்சுக்கு இதை டைரக்டர் இயக்கியுள்ளார். கோபி, மலருக்கு இனிமேல்தான் பல சோதனைகள் வரப்போகின்றன என்றாலும், அவர்கள் இருவருமாக சேர்ந்தே அவற்றை எதிர்கொள்வார்கள் என்ற நிச்சயமும் மனதில் ஏற்படுகிறது. வசனகர்த்தாவுக்கு ஒரு சல்யூட். திருமுருகனுக்கும், கோபிக்கும் மலருக்கும், காஜாவுக்கும் ரோகிணிக்கும்தான்.


அன்புடன்,
டோண்டு ராகவன்

8/28/2011

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 28.08.2011

சபாஷ் மேனேஜர்
கணினிமயமாக்கப்படும் முன்னால் ஆலந்தூர் மாநகராட்சியினர் கையால் எழுதித்தான் ரசீதுகள் தந்து வந்தனர். அப்போதெல்லாம் வரி செலுத்தும்போது பழைய ரசீதை காண்பிக்க வேண்டும். நான் 2001-ல் சென்னைக்கு வந்த புதிதில் தண்ணீரை பொருத்தவரை என்னால் 1999-க்கான ரசீதை மட்டுமே காட்ட முடிந்தது. எல்லா வரிகளையும் கட்டியிருந்தாலும், 1999-லிருந்து கணக்கிட்டு அதிக தொகை செலுத்த வேண்டியிருந்தது.

கணினிமயமாக்கப்பட்டதில் இந்தப் பிரச்சினை ஒழிந்தது. அசெஸ்மெண்ட் என்ணைக் உள்ளிட்டாலே கணினியானது வரிசெலுத்திய முழுவிவரங்களையும் தரும்.

ஆனால் பிரச்சினை வேறு ரூபத்தில் வந்தது. எனது சொத்துவரி, பாதாள சாக்கடை வரிக்கான பக்கங்களில் எனது சரியான முகவரி கொடுக்கப்பட்டிருந்தாலும், தண்ணீர் வரி விஷயத்தில் மட்டும் சம்பந்தமேயில்லாத வேறு ஒரு முகவரி காணப்பட்டது. வருடத்துக்கு ஒருமுறை வரி செலுத்தும் நானும் முதல் சில முறைகள் இதை கவனிக்கவில்லை. பிறகு கவனித்து கேட்டால், கணினியில் டேட்டா எண்ட்ரி செய்தபோது தவறாக குறித்து விட்டார்கள் எனக் கூறப்பட்டது.

அதை சரி செய்ய நான் ஆலந்தூர் நகராட்சிக்கு இம்மாத துவக்கத்தில் சான்றுகளுடன் சென்றேன். என்னிடம் பேப்பர்களை வாங்கிய க்ளெர்க்கும் எல்லாம் சரி செய்யப்படும் என்று உறுதி கூறினார். ஆனால் பத்து நாட்கள் ஆகியும் ஒன்றும் செய்யப்படவில்லை. மீண்டும் நகராட்சிக்கு போய் பார்த்தால் அந்த க்ளெர்க் வேறு இடத்திற்கு மாற்றல் பெற்று சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது. மேனேஜரை பார்த்தால், அவரோ சம்பந்தப்பட்ட புது க்ளெர்க்கை பார்க்கச் சொன்னார். அப்பெண்மணியோ தனக்கு இன்னும் பேப்பர்கள் தரப்படவில்லை என சாதித்தார். மீண்டும் மேனேஜர்.

இப்போது மேனேஜர் செய்ததுதான் நான் மிகவும் எதிர்பாராதது. அப்பெண்மணியைக் கூப்பிட்டு, என் கைவசம் இருந்த எனது நகல்களை பெற்று, கணினி அறைக்கு சென்று அப்போதே தேவையான மாறுதல்களை செய்யச் சொன்னார். அவரும் செய்து விட்டார். மேனேஜருக்கு நன்றி கூறினேன். அவரோ, இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. வரி செலுத்துபவர்களையெல்லாம் தேவையில்லாமல் அலையவிடக்கூடாது என்று தான் எண்ணியதாலேயே அதை செய்யச் சொன்னதாகக் கூறினார்.

சபாஷ் மேனேஜர்.


Form 26 AS பிரச்சினைகள்
Tax deducted at source (TDS) சார்பாக நமக்கு வரும் தொகைகளிலிருந்து வாடிக்கையாளர் பிடித்தம் என்னவோ செய்து விடுகிறார்கள். ஆனால் படிவம் 16-A தருவதற்கு மட்டும் மிகவும் பிகு செய்து கொள்வார்கள். ஜூலை-31-க்குள் அதை பெறுவதற்குள் தாவு தீர்ந்து விடும்.

எனது வங்கியில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் எனக்கு படிவம் 16 ஏ தரும்போது Form 26 AS பற்றி கூறினார், நான் அதற்கான பதிவுகள் செய்து கொண்டால் இம்மாதிரி படிவம் 16 ஏ பெற அலைய வேண்டாம் எனக் கூறினார்.

நானும் அதையெல்லாம் செய்து கொண்டு பார்த்தால், வங்கி எனக்கு தந்த படிவம் 16-ஏ-கூறுவதற்கும் படிவம் 26 ஏஎஸ் கூறுவதற்கும் சம்பந்தமே இல்லை என தெரிய வந்தது. வங்கியில் efiling செய்யும்போது சொதப்பியுள்ளனர். இப்போது நான் அதை சரி செய்ய விண்ணப்பம் தந்து வங்கியை படுத்தி வருகிறேன். போயும் போயும் இந்த பெரிசிடம் போய் படிவம் 26 ஏஎஸ் பற்றி கூறினோமே என்று தன்னைத் தானே நொந்து கொண்டிருப்பார் அந்த அதிகாரி என நினைக்கிறேன்.

ஜனலோக்பால் குறித்த சிந்தனைகள்
இது பற்றி பலரும் எழுதி வைத்து விட்டார்கள். நான் முக்கியமாக படிப்பது சோ மற்றும் ஜெயமோகனையும்தான். இருவரது நிலைப்பாடுகளுமே ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. இருவரது எண்ணங்களுமே அவற்றைப் படிக்கும்போது ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவே உள்ளன. மேலும் இன்புட்டுகளை பெற்றுதான் நான் கருத்து கூற வேண்டும். இப்போது நிலைமையை அவதானித்து வருகிறேன். பார்ப்போம்.

பேரறிவாளன், சாந்தன், முருகன்
நான் இப்பதிவில் கூறியதற்கு தொடர்ச்சி.

ஜெயமோகன் கூறியது போல, “இந்திய நீதித்துறையின் உயர் மட்டத்தில் நீதிபதிகள் அடிப்படைநேர்மையுடனும் நீதிபதி என்ற இடம் குறித்த பெருமிதத்துடனும்தான் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். சமீபத்தைய பல வழக்குகளை அதற்கு உதாரணமாக கூறலாம். திருப்பூர் சாயக்கழிவு வழக்கு முதல் ஸ்பெக்ட்ரம் வழக்கு வரை கோடிகளைக் கொட்டத் தயாராக இருக்கும் குற்றவாளிகளால் நீதிபதிகளை நெருங்கவே முடியவில்லை என்பதே அதற்குச் சான்று. இன்றும் அரசாங்கத்தின் ஏகாதிபத்தியப் போக்கையும் அரசியல்வாதிகளின் ஆணவத்தையும் கட்டுப்படுத்தும் சக்தியாக நம் நீதிமன்றங்கள் இருப்பது எத்தனையோ வழக்குகள் வழியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்திய நீதித்துறை இன்றைய ஊழல்மிக்க இந்தியாவின் பெருமிதம் மிக்க முகங்களில் ஒன்றுதான்.

ஆகவே எனக்கு இந்திய நீதிமன்றங்கள் மேல் நம்பிக்கை உண்டு. இந்திய நீதித்துறையின் உச்சிவரைச் சென்ற ஒரு வழக்கில் அநீதி இழைக்கப்பட்டிருக்க வாய்ப்பு மிகமிகக் குறைவு. அதிலும் சர்வதேசக் கவனம் பெறும் வழக்குகளில் அந்த வாய்ப்பு கண்டிப்பாக கிடையாது. போதிய ஆதாரங்களை கொடுக்காமல் நீதிமன்றத்திலிருந்து ஒருவரை அரசால் தப்பவைக்கமுடியும், ஆனால் ஒரு நிரபராதியை அப்படி எளிதாக தண்டிக்கச் செய்யமுடியாது.

ஒரு குறிப்பிட்ட இன-மொழி-சமூகக் குழுவைச் சேர்ந்தவர்கள் தண்டிக்கப்படும்போது, அது எவ்வளவு பெரிய சமூகக் குற்றமாக இருந்தாலும், அதை உணர்வுபூர்வமான ஒரு விஷயமாக அந்த குழுவினர் எடுத்துக்கொண்டு இந்திய நீதித்துறைக்குக் களங்கம் கற்பிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அப்சல் குரு போன்று பாராளுமன்றத் தாக்குதலில் எளிய மக்களை கொன்று குவித்த தேசவிரோதச் சதிகாரர்களைக்கூட உச்சநீதிமன்றம் வரை எல்லா வாய்ப்புகளும் வழங்கப்பட்டு தண்டிக்கப்பட்ட பின்னரும் இந்திய அரசு தண்டிக்க தயங்குகிறது. காரணம் அது இங்கே மதப்பிரச்சினையாக ஆக்கப்பட்டுவிட்டது.

இந்தப் போக்கு மிகமிக ஆபத்தானது. காலப்போக்கில் நீதிநடைமுறைப்படுத்தப்படுவதையே இல்லாமலாக்கும். நீதி நிகழும் என்ற நம்பிக்கையை சமூகத்தில் இருந்து அழிக்கும். ஆகவே இம்மூவரும் நிரபராதிகள் என்றும் நீதிமன்றம் இந்திய அரசின் கைப்பாவையாக அநீதியில் ஈடுபட்டுள்ளது என்றும், வடவர் தமிழரைக் கொல்கிறார்கள் என்றும் இன்று செய்யப்படும் பிரச்சாரம் மிகப்பிழையானது. இந்த காலியான உணர்ச்சி வேகம் நடைமுறையில் இன்று மரண முனையில் நிற்கும் இம்மூவருக்கும்கூட பெரும் தீங்கு செய்யக்கூடியது.

ஆகவே ராஜீவ் காந்தி கொலைவழக்கின் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இங்கே எழுப்பபடும் நீதிமன்றம் மீதான அவதூறும் சரி, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு பிரிவினைவாதக் கசப்புகளை உருவாக்கும் குறுகிய அரசியல்முயற்சிகளும் சரி, அதை ஒட்டி உருவாகும் மனக்கொந்தளிப்புகளும் சரி என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதவையே”
.

ஆனால் அதற்காக அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதற்காக அவர் கூறும் காரணங்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அவருக்கு எதிர்வினையாக நண்பர் ராஜன் முன்வைக்கும் கருத்துகள் இந்த விஷயத்தில் ஏற்றுக் கொள்ளத் தக்கவையே, “இளம் வயதில் செய்து விட்டது. ஆகவே தவறிழைத்தவர்களாகக் கருதப் பட வேண்டும் என்ற அதே நியாயத்தையே நாளைக்கு இவர்களையெல்லாம் விட இள வயதில் பலரையும் கொன்ற கசாப்பும் வைக்கக் கூடும் அல்லவா? மனிதாபிமானத்தில் இதைச் சொல்லலாம் சட்டப் படி இதை சொல்ல முடியாது. இன்று இந்த அடிப்படையில் இவர்களுக்கு மன்னிப்பு வழங்கினால் நாளைக்கே இதே அடிப்படையில் கசாபுக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும். இப்படியே நீட்டித்தால் யாருக்கும் மரண தண்டனை என்றே வழங்கி விட முடியாது. நன்கு வளர்ந்த கல்மாடி கூட எனக்கு அல்சைமர் ஆகவே நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்கிறார். ஆக இளம் வயதில் செய்தவர்களுக்கு எல்லாம் தவறிழைத்தவர்கள் நியாயமும் முதிய வயதில் செய்பவர்களுக்கு எல்லாம் ஞாபக மறதி நோயையைக் காரணம் காட்டியும் மன்னிப்பு வழங்கி விடலாம் என்ற கோரிக்கை பின்னாளில் வலுவாகி விடும்.

அடுத்ததாகச் சொல்லப் படுவது இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் இன்றும் வலுவோடு இயங்கி வருகின்றன ஆகவே அப்சல் குருவுக்கும், கசாப்புக்கும் மன்னிப்பு வழங்க முடியாது ஆனால் புலிகள் இயக்கம் அழிந்து விட்டது ஆகவே இவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதில் ஏதும் அபாயம் இருக்க முடியாது என்பது. இதை நீங்கள் சொல்கிறீர்கள் ஆனால் தமிழ் நாட்டிலும் இணையத்திலும் வெளிநாடுகளிலும் இவர்களுக்கு மன்னிப்பு வழங்கப் போராடும் எவரும் அவ்வாறு பேசவில்லையே. புலிகள் இயக்கம் மீண்டும் முன்னெப்பொழுதையும் விட வலுவாக மீண்டும் எழும் அது தமிழ் நாட்டைத் தனியாகப் பிரிக்கும் என்றுதானே வை கோபாலசாமி, சீமான் இவர்களுக்கு ஆதரவாகச் அயல்நாடுகளில் செயல்பட்டு வருபவர்கள் வரை மேடைக்கு மேடை இந்திய ஒருமைப்பாடுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். இன்று இவர்களுக்கு மன்னிப்புக் கொடுக்கா விட்டால் நாளைக்கு இந்திய வரை படத்திலேயே தமிழ் நாடு இருக்காது என்றெல்லவா மிரட்டல் விடுக்கிறார்கள். ஆக இவர்கள் ஈடுபட்ட வன்முறை இயக்கம் அழிந்து விட்டது நாளைக்கு மீண்டும் இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தலாக எழாது என்பதற்கான எந்தவொரு அறிகுறியையும் இவர்கள் எவரது நடவடிக்கையிலும் நான் காணவில்லையே. இந்த சூழலில் எப்படி இந்த அமைப்பே அழிந்து வரலாற்றின் பக்கங்களில் ஒன்றாக ஆகிப் போனதாக உறுதியாகச் சொல்கிறீர்கள்? அதை அவர்களில் எவருமே சொல்லவில்லையே? மாறாக இந்த இயக்கம் இன்னும் பெரிய இயக்கமாக மாறும் என்றுதானே சொல்லி வருகிறார்கள்? அழிந்து விட்டது இனி இவர்களால் இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை நீங்கள் சொல்வதை விட இவர்களுக்கு மன்னிப்பு கேட்ப்பவர்கள் அல்லவா உறுதியாகச் சொல்ல வேண்டும். அவ்வாறான ஒரு உறுதி மொழியையும் இது வரையும் அவர்கள் தரப்பில் இருந்து நான் கேட்க்கவில்லையே. ஆகவே இந்தக் கருதுகோளையும் ஏற்றுக் கொள்ள என்னால் இயலவில்லை.

மரண தண்டனை என்பது வருத்தத்திற்குரியதுதான். இவர்களுக்கு மரண தண்டனை அளிக்கலாமா மன்னிக்கலாமா என்பதை ராஜீவுடன் தேவையில்லாமல் உயிரிழக்க நேர்ந்த மக்களின் குடும்பங்கள் முடிவு செய்யட்டும். இளம் வயதில் செய்த தவறு என்பதை ஏற்றுக் கொண்டால் அது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். இயக்கம் அழிந்து விட்டது ஆகவே அபாயம் இல்லை என்பதை உறுதி செய்யும் வண்ணம் அந்த இயக்கத்தை ஆதரிப்பவர்களின் நடவடிக்கை இல்லை. ஆகவே இதற்கு ஒரே வழி பாதிக்கப் பட்டவர்களிடம் கேட்ப்பது மட்டுமே. அதற்கு சட்டத்தில் இடமிருக்காது. கசாப்பையும், அப்சல் குருவையும் சிறையில் நீண்ட காலம் வைப்பது இந்தியர்களின் பாதுகாப்புக்குப் பெருத்த அச்சுறுத்தலாகவே முடியும். நாளைக்கு ஒரு விமானக் கடத்திலிலோ இன்னும் பல பயங்கரவாத தாக்குதல்களிலும் மிரட்டல்களிலும் கொண்டு போய்ச் சேர்க்கும். ஜெயலலிதா இன்று தமிழர்கள் என்பதினால் இன ரீதியாக மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் நாளைக்கே இன்னும் ஒரு முதல்வரிடம் மத ரீதியாக மன்னிப்பு வழங்கச் சொல்லும் கோரிக்கையும் எழும் அதுவும் ஒரு தவறான முன்னுதாரணத்தையே ஏற்படுத்தும்”
.

மீண்டும் டோண்டு ராகவன். நகலெடுத்து ஒட்டினாலும் அவையும் என் கருத்துக்களுடன் ஒத்துப் போவதாலேயே அவ்வாறு செய்துள்ளேன். அது சரி, கசாப்பையும் அஃப்சல் குருவையும் எப்போது தூக்கிலிடப் போகிறார்களாம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/20/2011

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 20.08.2011

மீண்டும் மகரநெடுங்குழைகாதன்
தமிழ்பதிவுலகில் குறுக்கெழுத்துப் போட்டி வைத்தால், கொடுக்கப்படும் பல சமிக்ஞைகளில் மிகச் சுலபமானது “மகரநெடுங்குழைகாதனின் பக்தர் (மூன்றெழுத்து) என்பதாகும். எல்லோரும் சுலபமாகவே “டோண்டு” என்னும் விடையை அதற்கான கட்டங்களில் பூர்த்தி செய்து விடுவார்கள்.

என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை தரிசித்து விட்டு நேற்றுதான் சென்னை திரும்பினேன்.

2005-ல் அவனை முதன்முதலாக தரிசித்த பிறகு மீண்டும் ஒரு முறை சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்றாலும், அச்சமயம் நாங்கள் கோவிலை அடையும் தருணம் நடை சாத்தும் நேரம். அவசர அவசரமாக ஓடிச் சென்று தரிசிக்கவும், திரை போடவும் சரியாக இருந்தது. என் மனம் மிகச் சஞ்சலம் கொண்டது. அடுத்த நாளைக்கு வர இயலாத அளவு வேறு நிகழ்வுகள்.

ஆகவே இம்முறை நான் மிகப்பிடிவாதமாக முதலிலேயே கூறிவிட்டேன், அவன் ஆலயம்தான் முதல் பிரையாரிட்டி என்று. அதே போல தரிசிக்கவும் முடிந்தது. இப்போதுதான் மனம் அமைதி கொண்டுள்ளது.

கடந்த செவ்வாயன்று (16.08.2011) காலை 9.30 மணியளவில் எனது காரில் புறப்பாடு. மாலை நாலரை மணியளவில் மதுரை. ஷட்டகர் வீட்டுக்கு செல்லும் முன்னால் போகும் வழியிலே ஒத்தக்கடை நரசிம்மர், கள்ளழக்ர் ஆலய தரிசனம். அடுத்த நாள் காலை மதுரையிலேயே கூடலழகர் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவில். பிறகு 11 மணியளவில் கார் திருநெல்வேலிக்கு புறப்பட்டது. மதியம் 3 மணிக்கு திருநெல்வேலி. ஹோட்டலில் ரூம் புக் செய்துவிட்டு, அங்கிருந்து நவதிருப்பதிகளுக்காக புறப்பாடு. முதலில் ரெட்டைத் திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன், திருக்கோளூர், ஆழ்வார் திருநகரி தரிசனங்கள். பாக்கியிருந்தவை ஸ்ரீவைகுண்டம், நத்தம் மற்றும் திருப்புளிங்குடி. ஆனால் அப்போது (மாலை 6 மணியளவில்) திடீரென பெய்த பேய்மழையில் மின்சாரம் அந்த ஏரியா முழுக்க கட். ஆகவே திருநெல்வேலிக்கே திரும்பினோம்.

வியாழன்று காலைக்கு விட்டுப்போன அந்த 3 கோவில்களுக்கும் சென்று திரும்பினோம். பிற்பகல் இரண்டு மணி வாக்கில் அங்கிருந்து கிளம்பி ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாள், பத்ரசாயி கோவில்களுக்கு சென்றோம். அங்கிருந்து மதுரை. நேற்று காலை 10 மணியளவில் மதுரையிலிருந்து கிளம்பி சென்னைக்கு மாலை வந்து சேர்ந்தோம்.

மடிக்கண்iனி மற்றும் ரிலையன்ஸ் டேட்டா கார்டின் உபயத்தால் அவ்வப்போது எனது மொழிபெயர்ப்பு வேலைகளையும் பார்க்க முடிந்தது. விட்டுப்போன சீரியல்களையும் (முந்தானை முடிச்சு, நாதஸ்வரம், தென்றல் ஆகியவை) பார்த்துக் கொள்ள முடிந்தது.

இண்டேன் கேஸ் புக்கிங் செய்தல்
இப்போதெல்லாம் கேஸ் புக்கிங் செய்வது எளிமையாக்கப்பட்டு விட்டது. நமக்கு சிலிண்டர் தரும் கம்பெனிக்கு போன் செய்யும் தொல்லை இல்லை. இண்டேனின் மையப்படுத்தப்பட்ட சேவை மையத்துக்கு போன் செய்தால் போதும். என்ன, அதை செல்பேசி மூலமாகத்தான் செய்ய வேண்டும்.

நாள் முழுக்க எப்போது வேண்டுமானாலும் புக் செய்யலாம். இண்டெர்-ஆக்டிவ் முறையில் அது நிகழ்கிறது. முதன் முறையாகச் செய்யும்போது, உங்களுக்கு சிலிண்டர் தரும் ஏஜென்ஸியின் ஏதேனும் ஒரு டெலிஃபோன் எண்ணை அழுத்தச் சொல்வார்கள். பிறகு அவர்களே கம்பெனியின் பெயரைக் கூறி, சரி பார்ப்பார்கள். பிறகு உங்கள் பயனர் எண்Nணை அழுத்த வேண்டும். அதையும் சரிபார்த்த பிறகு, உங்கள் புக்கிங்கை ஏற்று புக்கிங் எண்ணைக் கூறி, பிறகு அதையே எஸ்.எம்.எஸ் ஆகவும் அனுப்புவார்கள். தேவைப்பட்டால் உங்கள் செல்பேசி எண்ணையே ரிஜிஸ்தர் செய்து கொள்ளலாம். ஆனால் அடுத்த முறைக்கு அதே செல்பேசியிலிருந்துதான் புக் செய்ய வேண்டும். இரண்டே ஸ்டெப்புகளில் உங்கள் புக்கிங் நடந்து முடிந்து விடும்.

இதில் நான் இடைஞ்சலாகப் பார்ப்பது செல்பேசி தொலைந்து போனால் வரும் சிக்கல்களே. அவற்றுக்கும் ஏதேனும் வழிவைத்திருப்பார்களாக இருக்கும். இப்போது நல்ல விஷயம் என்னவென்றால், டெலிவரி பையன்கள் சிலிண்டர்களை டீக்கடைகளுக்கு தரும் ஓல் பஜனை வேலைகள் நடக்காது. நமது புக்கிங்கை சிலிண்டர் தரும் வரைக்கும் மானிட்டர் செய்கிறார்கள்.

ஆனால் ஒரு சந்தேகம். செல்பேசி எல்லோரிடமும் இருக்குமா? அதை இயக்கத் தெரியாதவர்கள் கதி?

பேரறிவாளன் ஆகியோருக்கான தூக்கு தண்டனை
எப்போதோ பைசல் செய்திருக்க வேண்டிய விஷயம். அப்படி இப்படி என எல்லோருமாக இழுத்து விட்டார்கள். தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதோ அல்லது ஆயுள் தண்டனையாக அதை ஆக்குவதோ உடனடியாக செய்யப்பட்டிருக்க வேண்டும். 20 ஆண்டுகள் எல்லாம் டூ மச்.

 அது என்ன எல்லோரும் சோனியா காந்தி மனது வைக்க வேண்டும் என்கிறார்கள்? ராஜீவ் மட்டுமா கொல்லப்பட்டார்? கூடவே பலரும் இறந்தார்கள்தானே. அவர்களது குடும்பத்தினரின் ஒப்புதலும் தேவைதானே. யாருமே இதை யோசித்ததாகத் தெரியவில்லையே.

எனக்குள்ள ஒரே வருத்தம் என்னவென்றால், முதல் குற்றவாளியான பிரபாகரன் தூக்கு தண்டனையிலிருந்து தப்பித்ததுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/10/2011

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 10.06.2011

எம். எஃப். ஹுசைன் மறைவு
ஒரு வழியாக ஒரு விவாதத்துக்குரிய மனிதர் இறந்து போனார். அவரைப் பற்றிய விவாதங்களும் முடிவடையும் என நம்புவோம். இறந்தவர் செய்த கெடுதல்களை பேசக்கூடாது என்பார்கள். ஆகவே அவர் செய்த நல்ல காரியத்தைப் பற்றிப் பேசுவோம். நன்றாக படம் வரைவார். மாதுரி தீட்சித்துக்கு ரசிகர். வேறு என்ன நல்லது செய்தார்? நினைவுக்கு வரவில்லை.

நினைவுக்கு வருவது ஒரு ஜோக்குதான். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் பற்றி நான் ஏற்கனவேயே எழுதியுள்ளேன். முத்துசாமி தீட்சிதரின் படைப்புகளிலேயே சிறந்தது என என்று ஒருவனிடம் கேட்க, அவன் அழுத்தந்திருத்தமாக “மாதுரி தீட்சித்” என்றானாம். பரவாயில்லை ஹுஸேன். இந்த ஜோக்கையாவது நினைவுபடுத்தினாரே.

கழுத்தைப் பிடித்துத் தள்ளப்படும் வேண்டாத விருந்தாளி
பாவம் காங்கிரசாரும் என்னென்னவோ செய்து பார்த்து விட்டனர். சோனியா காந்தி, ராகுல் காந்தியாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. மகளையும் சிறையில் அடைத்தாயிற்று. இப்போது பேரனின் முறை எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் என்ன, கருணாநிதி கூட்டணியில் தொடர்கிறார். மிஞ்சி மிஞ்சிப் போனால் வெளியே இருந்தாவது ஆதரவு கொடுப்பாராக இருக்கும்.

இப்படித்தான் ஒரு வேண்டாத விருந்தாளி விட்டை விட்டுப் போகாமல் அழிச்சாட்டியம் செய்தானாம். அவனிடம் ஜாடையாகக் கூறி பார்த்திருக்கிறார்கள், “உன் வீட்டார் உன்னைப் பிரிந்து ரொம்பக் காலம் ஆகி விட்டது போலிருக்கிறதே, வருந்த மாட்டார்களா” என்று. வே.வி.யிடம் இந்தப் பாச்சா பலிக்குமா? “அதற்குத்தான் நேற்றே என் வீட்டாருக்கு எழுதிப் போட்டு விட்டேன். நாளை எல்லோரும் இங்கேயே வந்து விடுவார்கள்” என்று சொன்னானாம்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
ஃபேஸ்புக், லின்க்ட் இன் ஆகிய தளங்களிலிருந்து நட்பு கோரி பல அழைப்புகள் வருகின்றன. அங்கெல்லாம் நான் போவதே இல்லை. முதலில் உறுப்பினர் ஆனதுடன் சரி. தனிப்பட்டத் தகவல்கள் திருடப்படும் இக்காலத்தில் அங்கெல்லாம் போகாமல் இருப்பதே உத்தமம் என நான் நினைப்பதே அதற்குக் காரணம். ஆகவே அம்மாதிரி நட்பு அழைப்புகளுக்கு நான் எதிர்வினை கூடச் செய்வதில்லை.
உங்கள் புரிதலுக்கு நன்றி.

கொத்துக் கொத்தாக மின்னஞ்சல்கள் அனுப்புவது பற்றி
இது இன்னொரு தலைவலி. ஆனால் சில சமயங்களில் அவை நல்ல பதிவுகளுக்கும் காரணமாகின்றன என்பதையும் மறுக்கவியலாது. ஆகவே இது குறித்து எனது கருத்து நடுநிலையில்தான் உள்ளது.

ஆனால் எனது நண்பனுக்கு ஒரு சங்கடம் ஏற்பட்டது. எல்லோருக்கும் இம்மாதிரி மெயில்களை அனுப்பும்போது தவறுதலாக தன்னுடைய பே ஸ்லிப்பையும் அட்டாச் செய்திருக்கிறான் அந்தப் பேர்வழி. பிற்கு நான் ஃபோன் செய்து என்ன விஷயம் எனக் கேட்க, தவறுதலாக அனுப்பியதாகவும், அம்மின்னஞ்சலைத் திரும்பப் பெறும் முயற்சியில் இருப்பதாகவும் கூறுகிறான் அவன். டூ லேட் எனக்கூறிவிட்டு ஃபோனைக் கட் செய்தேன் நான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/22/2011

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 22.04.2011

சோ, குஷ்பு, ராஜ்தீப் சர்தேசாய் செவ்வி
தமிழகத் தேர்த்தலில் பணம் விளையாடியது பற்றி சோ மற்றும் குஷ்புவுடன் முன்னாள் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரரான சர்தேசாயின் புதல்வரும் பிரபல பத்திரிகையாளருமான ராஜ்தீப் சர்தேசாய் பேசுகிறார்.

முதலில் வீடியோக்களைப் பாருங்கள்.

வீடியோ 1:


வீடியோ-2: ஆ, அந்தோ! என்ன ஏமாற்றம்! மொத்தம் மூன்று வீடியோக்கள் என்றார்கள், ஆனால் மீதி இரண்டுமே முதல் வீடியோவாகத்தான் உள்ளன. அதாங்க இது என்கிறார்களா? (நன்றி செந்தில்)

கடன் கொடுத்தல் பற்றிய மேலும் சில எண்ணங்கள்
நர்சிம் பற்றி பதிவர் வெண்பூ எழுதியிருந்தது எனக்கு அதிர்ச்சியைத்தான் தந்தது. தான் ஃபோர்ட் கம்பெனியில் பெரிய பொறுப்பில் இருப்பதாகவெல்லாம் பலரிடம் தேவையற்றப் பொய்களை கூறி வந்திருக்கிறார். பலருக்கு கடன்கள் தந்திருக்கிறார் (பைத்தியக்காரன் மற்றும் பலர்), வெண்பூ போன்றவர்களிடம் பணமும் பெற்றிருக்கிறார். பெற்ற பணத்தைத் திருப்புவதில் சுணக்கமும் காட்டியுள்ளார். கடைசியில் கடனைத் திருப்பித் தந்துவிட்டார் என வெண்பூ எழுதியுள்ளார். இருப்பினும் நர்சிம்மின் இமேஜ் விழுந்தது விழுந்ததுதான்.

ஒரு பதிவுக்லக நண்பருக்கு போன் போட்டு பின்புலன் பற்றி கேட்டதில், அவரோ வெண்பூ எழுதியது பனிப்பாறையின் முனை மட்டுமே என பொருள்படக் கூறினார். இது பற்றி நான் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன். இருப்பினும் ராம்ஜி யாஹூவிடமிருந்து வந்த கேள்வி என்னை இது பற்றி குறிப்பிட வைத்து விட்டது.

ராம்ஜி_யாஹூ said...
பதிவர் நரசிம் அவர்களின் பண, நட்பு விவகாரங்கள் குறித்து உங்களின் கருத்து என்ன. புதிய பதிவர்கள், பஸ்சர்கள், த்விட்டர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

கடன் வாங்குவது இருவகைப்படும். ஒன்று தினசரி வாழ்க்கைக்கான செலவுகளுக்கே தன்னால் சமாளிக்க முடியாமல் கடன் வாங்குவது. என் தந்தை கூறுவார், “யாராவது ரேஷன் வாங்க வேண்டும் என கடன் கேட்டால் கடன் தருவதும் தராததும் உன் விருப்பம். ஆனால் அது முக்கால்வாசி நேரங்களில் திரும்ப வராது என்பதையும் மனதில் வைத்துக் கொள்வது நலம்”. சத்தியமான வார்த்தைகள்.

இன்னொரு வகை, தான் மற்றவருக்கு கடன் தருவதற்காக வேறு பலரிடம் கடன் வாங்குவது. அவர்கள் ஆபத்தானவர்கள். அவர்களுக்கு காலணா கடன் கூட தரலாகாது. வேறு சிலர் உதார் விடுபவர்கள், தேவையற்ற பொய்களைக் கூறி தமது இமேஜை உயர்த்திக் கொள்ள முனைபவர்கள். இதில் ஒரே ஒரு கஷ்டம் என்னவென்றால், உண்மை எப்போதாவது வெளியானால் இருந்த இமேஜும் கோவிந்தா.

ராம்ஜியின் கேள்வியின் அடுத்த பாகம், இணையத்தில் இவ்வாறெல்லாம் மாட்டிக் கொள்ளாமல் எவ்வாறு செயல்படுவது? சூதனமாக இருந்து கொள்ள வேண்டும். உங்களைப் பற்றியத் தகவல்களை கண்டவருக்கும் தர வேண்டாம். இணையத்தில் நண்பர்களாக வருபவர்களிடம் ஒரு எல்லைக்குள் பழகுவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல்களை அவ்வாறானவர்களிடம் தவிர்ப்பது நல்லது.

உங்கள் தொழில் தொடர்புகளையும் பதிவர் தொடர்புகளையும் வெவேறு தளங்களில் வைத்துக் கொள்வது நலம்.

எதற்குத்தான் கோபப்படுவது என்றில்லையா?
நடிகர் விக்ரம் நடிக்கவிருக்கும் “தெய்வத் திருமகன்” என்னும் திரைப்படத்தில் அவர் மூளை வளர்ச்சி குறைந்தவராக வருகிறாராம். அது சம்பந்தமாக வந்த இச்செய்தியைப் பார்க்கவும்.

சென்னை: விக்ரம் நடிப்பில் மே மாதம் ரிலீஸாகவிருக்கும் 'தெய்வத் திருமகன்' படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தேவர் குல கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று இந்த கூட்டமைப்பின் தலைவர் சண்முகையா பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

நடிகர் விக்ரம் நடித்து வெளிவர உள்ள 'தெய்வத் திருமகன்' தமிழ் திரைப்படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். தெய்வத் திருமகன் என்று மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மட்டுமே நாங்கள் அழைத்து வருகிறோம். இந்த நிலையில் அந்த பெயரில் திரைப்படம் வருவதை எங்கள் சமுதாய மக்களால் ஏற்க முடியாது.

எனவே அந்த படத்தின் பெயரை மாற்றி வெளியிட வேண்டும். அவ்வாறு படத்தின் பெயரை மாற்றி வெளியிடா விட்டால் தமிழகம் முழுவதும் அந்த படம் திரையிடப்படும் திரையரங்கங்களை முற்றுகையிடுவோம். திரைப்பட பிரதிகளையும் கைப்பற்றுவோம். கோர்ட்டுக்கும் போவோம்.


தெரியாமல்தான் கேட்கிறேன், இதைவிட முட்டாள்தனமாக யாராவது எதிர்வினை தரமுடியுமா? இவ்ர்களாகவே ஒருவரை ஒரு பெயரை வைத்துக் கூபிடுவார்களாம். ஆனால் அப்பெயரை வேறு யாருக்கும் வைக்க முடியாதாம். என்ன காப்பிரைட்டா வாங்கியுள்ளனர் அப்பெயருக்கு?

அதே போலத்தான் நீல பத்மநாபன் அவர்களது நாவலான பள்ளிகொண்டபுரம் தலைப்பை ஒரு திரைப்படத்துக்கு வைத்ததை ஆட்சேபித்து அவர் கடிதம் எழுதியது நினைவுக்கு வருகிறது. இதிலும் எனது கருத்து அதுவேதான். நீல பத்மநாபன் தனது நாவலின் தலைப்பை திரைப்படத் தலைப்பாக அதற்கான அமைப்பில் பதிவு செய்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அது இல்லாத பட்சத்தில் அவர் கேஸ் ஆட ஒன்றுமே இல்லை என்பதுதான் என் கருத்து. அதே கருத்தை வெளியிட்டு ரவிஸ்ரீனிவாசின் பதிவிலும் நான் மேலே சொன்னதன் சாரமாகத்தான் பின்னூட்டமிட்டேன்.

இது நடந்து கிட்டத்தட்ட மூன்றுகள் ஆகிவிட்ட நிலையில் மேலே என்ன நடந்தது என்று பார்த்தால் இச்செய்தி கிடைக்கிறது. நீல பத்மநாபனின் தரப்பை நீதிபதி ஒத்துக் கொண்டதாக அறிகிறேன். வியப்பாகத்தான் இருக்கிறது. ஒருவேளை கேஸ் பேப்பர்களில் மேல் விவரங்கள் தந்திருப்பார்களாக இருக்கும். எனக்கென்னவோ திரைப்படத் தயாரிப்பாளர் அப்பீலுக்கு போனால் அவர் பக்கம் தீர்ப்பு வரும் வாய்ப்பே அதிகமாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/25/2011

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 25.03.2011

நான் திரும்ப பதிவு போட முனைவதில் மிக அதிகமாக மகிழ்ச்சி அடைந்தவன் முரளிமனோகர்தான். “உடனடியாக நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் பதிவு ஒன்று வேண்டும் பெரிசு எனக் கேட்டான். ஆகவே இப்பதிவு.

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார்
சமீபத்தில் 1966-ல் காஞ்சீபுரம் பிரும்மோத்சவம் காண சின்னக்காஞ்சீபுரம் சென்றிருந்தேன். எங்கள் வீட்டுக்கார மாமா W.P.K. ஐயங்கார் என்னை தன் குடும்பத்தாருடன் சேர்த்து அழைத்துச் சென்றிருந்தார். அவரது ஷட்டகர் ஜீயப்பையங்கார் வீட்டில் சன்னிதித் தெருவில் தங்கியிருந்தோம். தான் எங்கு சென்றாலும் என்னையும் கூடவே அழைத்துச் செல்வார் அவர். எங்கள் இருவரையும் ஒருசேர பார்த்ததில் உள்ளூர்க்காரர்கள் அதிர்ச்சியடைந்ததைக் காணமுடிந்தது. இல்லையா பின்னே, தென்கலை நாமக்காரரும் வடகலை நாமக்காரரும் (அடியேன்) ஒன்றாக உலா போவது ஆச்சரியம்தானே. சாதாரண சமயங்களில் உயிர்த்தோழர்களாக இருப்பினும் பிரும்மோத்சவ சமயத்தில் மட்டும் வடகலையாரும் தென்கலையாரும் கீழே இருப்பதுபோல ஒன்றாக சேரமாட்டார்கள் என எங்கள் வீட்டுக்கார மாமா கூறியுள்ளார். பை தி வே இவ்வளவு ஆண்டுகளாக சொந்த வீட்டில் வசித்தாலும் நான் வீட்டுக்கார மாமா என குறிப்பது அவரைத்தான்.



அதை விடுங்கள். பதிவில் இனி நாமங்கள் வராது. நான் கூற வந்தது பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் அவர்கள் பற்றித்தான். திருப்பாவை பற்றிய அவரது உபன்யாசங்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம். நல்ல ஞானஸ்தர். அவரை அண்ணா என்றும் குறிப்பிடுவார்கள். அவர் பற்றி இன்று வெளியான துகள்க்கில் சாரு நிவேதிதா எழுதியுள்ளார் (30.03.2011, பக்கம் 16-17). வாங்கி படிக்கவும், சுவாரசியமாகவே உள்ளது. அவர்தான் உண்மையான பேரறிஞர் அண்ணா என சாரு கூறுவதும் ஏற்கத் தக்கதே. [அவர் கூறியது, “தமிழில் எல்லா சொற்களுமே அவற்றின் உண்மையான அர்த்தத்தை இழந்து விட்டன. பெர்னாட் ஷாவைப் படித்திருந்ததால் ‘தென்னகத்து பெர்னார்ட் ஷா’ என்ற பட்டம், ஆங்கிலம் அறிந்ததால் ‘அறிஞர்’ பட்டம்’].

30.03.2011 தேதியிட்ட துக்ளக்
மன்மோகன் சிங் பற்றி சில வரிகள்.
1. அன்றைய பாராளுமன்றத்தில் நடந்ததை, இன்றைய பாராளுமன்றத்தில் கவனிக்க முடியாது - என்றும் கூறியிருக்கிறார். உண்மைதான். ஆனால் இன்றைய பிரதமரின் புகழ்பெற்ற ‘நேர்மை’ அன்றே என்ன கதி ஆகியது என்பதை இன்றாவது அறிந்து கொள்ள மக்கள் கடமைப்பட்டவர்கள்.

2. [மன்மோகன் சிங் பெயரளவுக்கு மட்டுமே பிரதமர் என விக்கி லீக்ஸ் கூறியதற்கு பதில்]: விக்கிலீக்ஸ் ரகசியத் தகவல்களைத்தானே வெளியிடும்? இதில் என்ன ரகசியம் இருக்குது?

டோண்டுவின் கேள்வி. எதுவுமே தமக்குத் தெரியாது என வெட்கமில்லாமலேயே கூறுகிறாரே, சோறுதானே சாப்பிடுகிறார்?

96 வயது வரை வாழவேண்டும் மாமா
என் அத்தைப் பிள்ளையும் பிற்காலத்தில் என் மைத்துனனாகவும் தங்கையின் கணவனாகவும் வரவிருந்த ஸ்ரீதரனும் நானும் என் அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்த போது அவன் சொன்னதுதான் மேலே உள்ளது. எங்கள் இருவருக்கும் அப்போதைய வயது 12. அவன் சொன்னதைக் கேட்டுத் திடுக்கிட்ட என் தந்தை அது மிகக் கொடுமையாக இருக்கும் என்பதை எடுத்துக் காட்டினார்.

அவர் கூறியதாவது, “உன் சமகாலத்தவர் யாருமே உயிருடன் இருக்க மாட்டார்கள். உன் நினைவுகளை உனக்கு ஈடாகப் பகிர்ந்து கொள்ளவும் ஆட்கள் கிடைக்காது. அது ஒருவித சித்திரவதையே”.

இந்திரா பார்த்தசாரதி அவர்களது ‘ஔரங்கசீப்’ நாடகத்தில் கடைசி காட்சியில் அவரது தனிமை மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்தனை உறவினர்களைக் கொன்று வெற்றி பெற்ற அவருக்கு கடைசியில் அத்தனையும் வியர்த்தமே எனத் தோன்றுவதாக எனக்குப் பட்டது. ஏனெனில் அவர் வெற்றியை ஒரு புரிதலோடு ஏற்றுக் கொண்டு அட்மைர் செய்யவோ, பொறாமைப்படவோ யாருமே இல்லை என்பதுதான் நிஜம். He was just left alone and only an ignored man knows what this means.

பாண்டவ குமாரர்களை அவர்கள் தூங்கும்போது கொன்ற அசுவத்தாமனுக்கு அவன் இறப்பின்றி காலகாலத்துக்கும் பூமியில் அலைய வேண்டும் என்பதே பெரிய சாபமாக கிருஷ்ணர் தருகிறார். அதற்கு அவன் பதறுகிறான், புலம்புகிறான். ஆனால் பலன் ஏதுமில்லை. பல ஆண்டுகளாகத் திரியும் அவன் தனது கடந்தகால கசப்பான நினைவுகளுடனேயேதான் வளைவர வேண்டும். கூடவே புதிதாக அவனது செயல்பாடுகள் குறித்து சீறலோடு கேட்பவர்களையும் சமாளிக்க வேண்டும். ஆகவே என்ன செய்திருப்பான் என்றால் ஆட்டமேட்டிக்காக கிருஷ்ணர் சொன்னது போல் பூமியில் இங்குமங்கும் அலைய வேண்டும். அதுவும் தான் யார் என்பதை சட்டெனக் கூற முடியாத நிலை. யாருமே அவனது செயலை மறக்கத் தயாராக இல்லை என்பதுதானே அவனைப் பொருத்தவரை நிஜம்?

இங்கு ஸ்ரீதரன் விஷயத்துக்கு வருவோம். நீண்ட நாள் வாழ்வதின் வியர்த்தங்களை எடுத்துக் கூறிய என் தந்தை அவரது 67-ஆம் வயதில் இவ்வுலகை விட்டுச் சென்றார்? ஸ்ரீதரன்? 53 வயதுகூட நிரம்பாத நிலையில் எங்களை தவிக்க விட்டுச் சென்றான். உறவினன் பல வகையில் எனக்கு என்பதைவிட அவன் என்னுடைய சிறந்த நண்பன் என்பதுதான் நிஜம்.

நான்? இப்போதும் எங்களது பல பொது நினைவுகளை என்னால் பலருடன் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை. அவற்றில் ஒன்றுதான் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய விடுமுறை நாட்களில் திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெருவில் இருந்த மாதவராவ் என்னும் பையனை வம்புச்சண்டைக்கிழுத்து அடிப்பது. ஸ்ரீதரன் அவன் மரணத்துக்கு சில மாதங்கள் முன்னால் கூட நானும் அவனும் அதைச் சொல்லிச் சொல்லி சிரித்து மாளவில்லை. அவன் மனைவி (என் தங்கை) “ ரெண்டு பேரும் துஷ்டப்பசங்களாகத்தான் இருந்திருக்கீங்க” என நொடித்தாள்.

இனி எனக்கு என்ன வாய்த்திருக்கிறதோ தெரியவில்லை.

ஒரு வேளை 96 வயது வரை வாழும் நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? இளைஞ்ர்களை அதிகம் நண்பர்களாகப் பெற்றுச் செல்வதுதான் ஒரே வழி. செய்ய முடியுமா என்பது தெரியவில்லை. யார் கண்டது, நான் ஏற்கனவே சொன்னதுபோல 2078-லும் உயிரோடு இருந்து, நான் பதிவிடும்போது சமீபத்தில் 2008-ல் என எழுத, அப்போதைய மடிப்பாக்க ஆஸ்தான பதிவர், “நம்ம கொள்ளுத் தாத்தா அடிக்கடி சொன்னது போலவே இந்த மாதிரி ஆள் ஒருத்தர் நிஜமாகவே இருந்திருக்கிறார் போலிருக்கே” எனப் புழுங்கலாம்.

கிரிக்கெட் மேட்சில் இந்தியா வெற்றி
நானும் கிரிக்கெட் பார்க்கும் விஷயத்தில் எங்கள் வீட்டுக்கார மாமா W.P.K. அய்யங்காரைப் போலத்தான்.

அவர் பம்பாயில் பல ஆண்டுகள் ரயில்வேயில் வேலை செய்துவிட்டு ரிடையர் ஆனவர். அவருக்கு பம்பாய் டீமை பிடிக்காது. அந்த டீம் இந்திய கிரிக்கெட் டீமை ரொம்பத்தான் ஆளுமை செய்கிறது என்பது அவர் எண்ணம். ஆகவே கிரிக்கெட் செலக்ஷன் கமிட்டி மேலும் அவருக்கு சுத்தமாக நல்ல அபிப்பிராயம் கிடையாது.

அறுபதுகளில் ஒரு சமயம் மேற்கிந்தியத் தீவுக்கு இந்திய கிரிக்கெட் டீம் சென்றது. டீம் உறுப்பினர்களை செலக்ட் செய்து ரேடியோவில் அறிவித்தார்கள். அச்சமயம் W.P.K. ஐயங்கார் அவர்கள் வீட்டில் இல்லை. வந்ததும் வராததுமாக என்னை அழைத்து கேட்டார்:
"என்ன டோண்டு, கிரிக்கெட் டீமை சொல்லிட்டாங்களா?"
நான்: "ஆயிற்று மாமா"
அவர்: "வெங்கடராகவன் டீமில் இருக்கானா?"
நான்: "இல்லை மாமா."
அவர்: "உருப்படாதுன்னா, நம்ம டீமுக்கு அஞ்சு மேட்சிலும் உதைதான்".

மேலே பேச விருப்பமின்றி அவர் சென்றார். ஆனால் அந்தோ, அவர் கூறியது அப்படியே பலித்தது. நன்றாக வேண்டும் இந்தியாவுக்கு என்றுதான் எனக்கும் அவருக்கும் அப்போது தோன்றியது.

நல்லதுக்கு காலம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.


அதை விடுங்கள். நேற்று இந்தியா ஆஸ்திரேலியா உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தை இந்தியா ஆடும்போது பார்த்தேன். ட்விட்டரில் இந்தியர்கள் கோட்டை விடும்போது பாரா, மாயவரத்தான், போன்றவர்களது எதிர்வினைகளையும் பார்த்தேன். மாயவரத்தான் மடிக்கணினியுடன் ஆஜராகியிருந்திருக்கிறார். ஆகவே பந்துக்கு பந்து கீச்சுகள் அவரது கணினியிலிருந்து வந்த வண்ணம் இருந்தன.

ஆனால் நான் மேட்சை முழுமையாக பார்த்ததாகக் கூற முடியாது. முந்தானை முடிச்சு, நாதஸ்வரம், தங்கம், தென்றல் ஆகிய சீரியல்கள் மிஸ் பண்ண முடியாத கட்டங்களில் உள்ளன. இருப்பினும் மேட்சையும் அவ்வப்போது விளம்ப்ர சீரியல்களின் இடைவேளைகளில் பார்த்தேன் என வைத்துக் கொள்ளுங்கள்.

கடைசியில் நானும் மடிக்கணினியுடன் டிவி முன்னால் ஆஜர் ஆனேன். மற்றவர்களைப் போலவே உடனுக்குடன் கமெண்ட் போடுவதும் நன்றாகவேதான் உள்ளது.

கடைசியில் இந்தியா வெற்றி பெற்றது என்பது இதற்குள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்தானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/22/2010

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 22.12.2010

நண்பர்களுக்கு நன்றி
இந்தப் பதிவை போடும்போது அது அந்த குறிப்பிட்ட வகைக்கான கடைசி பதிவு என்பது எனக்கு அப்போது தெரியாது.

எனது ஹிட் கவுண்டர் 8 லட்சம் எண்ணிக்கையை தாண்டியதற்காக போட்டது அப்பதிவு. இன்று என்ன தோன்றியதோ, பேசாமல் ஹிட் கவுண்டரையே தூக்கி விட்டேன் (அப்போதிலிருந்து 27000-க்கும் மேலாக ஹிட்கள் வந்திருந்தன). அந்த ஸ்பீடில் வரும் பிப்ரவரி மாதம் போல 9 லட்சம் தாண்டியிருக்கும் வாய்ப்பு இருந்தது.

ஆனால் திடீரென இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக தோன்ற, கவுண்டரையே ஒரு க்ஷணநேர தீர்மானத்தில் தூக்கி விட்டேன். இப்போது விடுதலையானது போன்ற உணர்வு.

பொய்யை நிலைநிறுத்துவது மிகக்கடினம்
நான் மத்தியப் பொதுப் பணித்துறையில் வேலை செய்த போது பால் பாக்கியசாமி என்னும் ஒப்பந்தக்காரர் எனக்கு மிகப் பரிச்சயமானார். அவர் வாழ்க்கையில் மிகவும் அடிபட்டவர். சிறுவயதிலேயே தந்தையை இழந்து அவரும் அவர் தாயும் தந்தை வீட்டாரால் விரட்டப்பட்டு அன்னையின் அன்னை வீட்டில் வளர்ந்தவர். அப்போது தான் பட்ட அவமானங்கள், தான் அவற்றை சமாளித்த விதம் எல்லாவற்றையும் என்னிடம் விவரிப்பார்.

அவர் கதை விடுவதாக எனக்கு முதலில் சந்தேகம். ஆகவே பல குறுக்கு கேள்விகள் பல தருணங்களில் வெவ்வேறு கோணங்களிலிருந்து போட்டேன். எல்லாவற்றுக்கும் பொருத்தமான பதில்களே வந்தன. உண்மையைக் கூறியிருந்தால் ஒழிய இது சாத்தியமே இல்லை என்பதை தெரிந்து கொண்டேன். அப்போதுதான் உண்மை கூறுவதன் பலனை புரிந்து கொண்டேன். பொய் சொல்ல ஆரம்பித்தால் எந்த பொய்யை எங்கு யாரிடம் கூறினோம் என்றெல்லாம் நினைவில் வைக்க வேண்டும் சள்ளை பிடித்த வேலை. கால விரயம் வேறு. உண்மை கூறிவிட்டால் நாம் நம் வேலையை பார்த்துக் கொண்டே போகலாம்.

நான் பொறியியல் கல்லூரியில் கற்க முடியாத பல பாடங்களை அவரிடமிருந்து கற்றேன். மறக்க முடியாத மனிதர் அவர்.

உண்மை என்பது ஒன்றுதான். ஆனால் பொய்கள் அனேகம். அதுவும் சமயோசிதப் பொய்கள் சள்ளை பிடித்தவை. “ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்களைக் கூறுவது” தவிர்க்க முடியாததாகி விடும்.

ராசா, கருணாநிதி, நீரா ராடியா ஆகிய பலே பேர்வழிகள் இனிமேல் கூறும் பொய்களை வகைப்படுத்தினாலே போதும்.

குற்றமும் எல்லா நேரத்திலும் கண்டுபிடிக்கப்படாமல் தப்பிக்காது
இதற்கு கராலரிதான் குற்றங்கள் விஷயத்திலும். மத்தியப் பொதுப்பணித்துறையில் அளவுகளை பதிக்கும் புத்தகம் (measurement book - m.book) என்பதை ஒவ்வொரு பொறியாளரும் பாவித்தாக வேண்டும். ஒப்பந்தக்காரர்கள் செய்யும் வேலைகளை அளவெடுப்பதை உடனுக்குடன் பதிக்க வேண்டும். மிஞ்சிப் போனால் அன்றைய நாள் முடியும் முன்னரே பதித்து விடுவது நல்லது.

என் நண்பன் கணேசன் சோம்பேறி. அவன் எல்லாவற்றையும் தனித்தாளில் குறித்துக் கொண்டு பிறகு சாவகாசமாக முந்தைய தேதியிட்டு நிரப்புவான். அவன் அவ்வாறு நிரப்பியதை ஒரு நாள் என்னிடம் எதேச்சையாகக் காட்ட, நான் என்னிடம் மெதுவாக ஒட்டிக் கொண்ட திறமையின் துணையால், அப்புத்தகத்தில் குறிப்பிட்ட முந்தைய தேதி ஞாயிற்றுக் கிழமையாயிற்றே என எடுத்துக் கூற அவன் மூன்றாம் பேஸ்த் அடித்தது போல ஆனான். அதை வைத்து பில்லும் அனுப்பி அது டிவிஷன் ஆஃபீசில் பாஸ் ஆகி ஒப்பந்தக்காரர் பணமும் பெற்றாயிற்று. ஆகவே தவற்றைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பும் இல்லைதானே.

யாரும் பார்க்காதவரை க்ஷேமம் என்றுதான் அவனைத் தேற்றினேன். பல நாட்களுக்கு அவனுக்கு உதறல்தான். என்ன செய்வது. நானே அவ்வாறு ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் சொல்லி மூன்றாண்டுகளுக்கு சிக்கலில் மாட்டிக் கொண்டவன்தானே. அக்கதை இதோ.

என் அத்தையின் கணவர் திடீரென இறக்க அத்தையும் அவரது ஐந்து குழந்தைகளும் சென்னையில் இருந்த எங்கள் பெரியப்பா வீட்டுக்கும் எங்கள் வீட்டுக்கும் குடிபுகுந்தனர். என் வயதுடைய ஸ்ரீதர் மற்றும் என் அக்காவின் வயதுக்கு ஈடான அவன் அக்காவும் எங்கள் வீட்டுக்கு வந்தனர். ஸ்ரீதர் என்னைவிட 4 மாதம் சிறியவன். ஆனால் ஒரு வகுப்பு அதிகமாக படித்தான் (நான்காம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்புக்குத் தாவியிருக்கிறான்). அவனை என் பள்ளியில்தான் தெலுங்கு மீடியம் கிளாசில் சேர்த்தார்கள். (அவன் தந்தை இறந்த சமயம் அவர் ஆந்திராவில் பத்தாண்டுகளாக போஸ்டிங்கில் இருந்தார்).

எல்லோரிடமும் அவன் எனது சொந்த தம்பி என சும்மா கூறிவைத்தேன். அது பிறகு பல சங்கடங்களை வரவழைத்தது. முதலில் என் எட்டாம் வகுப்பு உபாத்தியாயர் ஜயராம ஐயங்காரிடம் மாட்டிக் கொண்டேன். அவர் ஸ்ரீதரிடம் “உனக்கும் ராகவனுக்கும் எவ்வளவு வயசு வித்தியாசம்” என யதார்த்தமாகக் கேட்டு வைக்க, அந்த உண்மை விளம்பி 4 மாதம் என்றான். வாத்தியார் தான் குடித்துக் கொண்டிருந்த காப்பியை துப்பி அவருக்கு புரைக்கேறிவிட்டது. பிறகு நான் ஒருவாறு சமாளித்து “இல்லை, சார், ஒரு வயது 4 மாதங்கள்” எனக் கூறி சமாளித்தேன்.

ஸ்ரீதரின் வகுப்பாசிரியர் எவெரெஸ்ட் அவர்கள் (அவரது உண்மைப் பெயர் தெரியாது, விசு அவர்கள் மன்னிப்பார் என நினைக்கிறேன். பிறகுதான் அவர் பெயர் ஸ்ரீனிவாசாசார்லு என்பதை அறிந்து கொண்டேன்) இன்னும் டீப்பாக சென்றார். “ஆக உன் தந்தை ஆர். நரசிம்மன் இவனுக்கு தந்தை அல்லவா”? எனக்கேட்டார். நான் ஆமாம் எனச் சொல்லி வைக்க, பிறகு அவன் என்ன் அவரை தனது கார்டியனாக ஸ்கூல் அப்ப்ளிகேஷன் ஃபார்மில் குறிப்பிட்டுள்ளான் என ஒரு கூக்ளியை வீசினார். அசருவேனா நான், என் அத்தைக்கு பிள்ளைக் குழந்தை இல்லாததால் அவன் குழந்தையாக இருக்கும்போதே ஸ்வீகாரம் கொடுத்து விட்டார்கள் என ஒரு சிக்ஸர் அடித்தேன். நல்ல வேளையாக மேலே கேள்விகள் வரவில்லை. நான் பள்ளியிறுதி வகுப்பைத் தாண்டும்வரை மனதில் லேசாக உதறல்தான்.

இதை விடுங்கள். அலுவலகத்துக்கு லேட்டாக வரும்போது காரணத்தை ஒரு ரிஜிஸ்டரில் பதிவு செய்ய வேண்டும் என்ற நிலையில் ஒரு பெண்மணி தனக்கு ப்ரெக்னன்சி டெஸ்ட் என எழுத, அவள் என்ன எழுதினாள் என்பதையும் கவன்க்காது பின்னால் வந்த 3 ஊழியர்கள் அதையே டிட்டோ என குறித்த கூத்தும் நடந்திருக்கிறது.

ஆனால் நான் இங்கு கூற விரும்புவது ஒரு சீரியசான கிரைம் விஷயம். இரண்டே கால் கிலோ தங்கத்துக்காக கொலை செய்த நேமி சந்த் என்ற குற்றவாளி மாட்டியதும் மேலே சொன்னது போலத்தான். செல்பேசி Tower lapping signal என்ற தொழில் நுட்பம் பற்றி அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால்தான் முக்கியமாக மாட்டியிருந்திருக்கிறான்.

ஆனால் இச்செய்தியை நான் இங்கே கொணர்வதற்கான முக்கியக் காரணமே வேறு. இறந்துபோன சுரேஷ்குமாரின் குடும்பம் அனாதையாக நின்றது. சுரேஷ்குமாரிடம் நகைகளை விற்பதற்காக கொடுத்து வைத்திருந்த சுனிலிடம் போலீசார் அந்த நகைகளை திருப்பிக் கொடுத்து விட்டு ஒரு வேண்டுகோள் வைத்தனர். அதாவது மனிதாபிமான அடிப்படையில் இறந்தவர் குடும்பத்துக்கு ஏதேனும் உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டனர். அவரும் சுரேஷ் குமாரின் வாரிசுகளுக்கு இரண்டு லட்சம் ரூபாய் அளித்தார். அது மட்டுமல்ல, இறந்தவரின் மகன்கள் படிக்கும் தனியார் பள்ளியின் நிர்வாகி அந்த மாணவர்கள் பிளஸ் டூ வரைக்கும் தனது பள்ளீயிலேயே இலவசமாக படிக்க உதவி செய்துள்ளார். மனித மனத்தின் அதல பாதாள வீழ்ச்சியை காட்டிய இதே குற்றம், அதே மனித மனத்தின் எவரெஸ்ட் உச்சியையும் காட்டியுள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/21/2010

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் 21.11.2010

தமிழ்மணத்துக்கு என்னாயிற்று? தன்னிச்சையான இற்றைப்படுத்தல் இல்லை. இது சம்பந்தமாக நான் அளித்த ட்வீட்டுகள்
மாயவரத்தானைத் தவிர வேறு யாருமே கண்டுகொள்ளவில்லை. எல்லோருக்கும் இப்பிரச்சினை பற்றி ஏற்கனவேயே தெரியும், ஆகவே யாரும் இது ஓல்ட் நியூஸ் எனக்கண்டு கொள்ளவில்லை என நினைக்கிறேன். இப்போது ட்வீட்டுகளைப் பார்ப்போம்.

டோண்டு
தமிழ்மணத்துக்கு என்னாயிற்று? தன்னிச்சையான இற்றைப்படுத்தல் இல்லை. தேவையானால் நாம்தான் அதை செய்ய வேண்டியிருக்கிறது.

மாயவரத்தான்
@dondu1946 இம்மாம் பெரிய பதிவு போடுற நீங்க இன்னும் ஒரு நிமிஷத்திலே அதையும் செஞ்சா என்னவாம்?! ;)

டோண்டு
@mayavarathaan செய்யலாம்தான், செய்யவும் செய்கிறேன். ஆனால் என்ன ஆச்சு என்கிற தகவலும் முக்கியம்தானே.

டோண்டு
கூடவே தமிழ்மணத்தில் பதிவுகளை இணைக்க முடியவில்லை. என்ன நடக்கிறது இங்கே?

டோண்டு
பின்னூட்டங்களை இற்றைப்படுத்துவதிலும் சில முடிச்சுகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்னால் இட்டப் பின்னூட்டம் திடீரென இற்றைப்படுத்தப்படுகிறது.


மோடி - மகத்தான மன்னன்! முன்னேறும் முதல்வன்! by B.R.ஹரன்
தமிழ் ஹிந்துவில் வந்த இப்பதிவிலிருந்து நான் கோட் செய்வேன்.
உலக அளவில் வேகமாக முன்னேறும் மிகவும் சக்தி வாய்ந்த நகரங்களுள் ஒன்றாக, இந்தியாவில் முதலாவதாக, அகமதாபாத் நகரைத் தேர்ந்தெடுத்துள்ளது ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை.

உணவு உற்பத்தி, கல்வி, சுகாதாரம், நீர் ஆதாரம், மின்சாரம், விவசாயம், தொழில்துறை, மகளிர் மேம்பாடு, சமூகநலம், சாலை வசதி, அனைத்திற்கும் தேவையான கட்டுமானங்கள் என்று எல்லா துறைகளிலும் முதன்மை மாநிலமாக குஜராத் திகழ்கிறது.

கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து முதலமைச்சராக இருந்துவரும் பா.ஜ.க. தலைவர் நரேந்திர மோடி மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வது ஒன்றையே கடமையாகக்கொண்டு செயல்பட்டு வருகிறார். நாட்டில் உள்ள கல்வி, சுகாதார மற்றும் தொழில் வல்லுனர்கள் அனைவரும் அவரின் ஊழலற்ற சிறப்பான ஆட்சிமுறையைப் பெரிதும் பாராட்டுகின்றனர்.

இத்தனைக்கும் மற்ற மாநிலங்கள் போல் வருமானத்திற்காக, மக்களின் ஆரோக்கியத்தையும் ஏழைக் குடும்பங்களின் குடியையும் கெடுக்கும் மதுபான வியாபாரத்தை மேற்கொள்ளாமல், பூரண மதுவிலக்கு அமலில் இருக்கின்றபோதும் திறமையாக ஆட்சிபுரிந்து நிதிநிலையை அதிக இருப்புடன் வைத்துள்ளார் மோடி.

ஐநா சபையின் பொருளாதார மற்றும் சமூக சங்கதிகளுக்கான துறை (Economic & Social Affairs), ஒளிவு மறைவு அற்ற, பொறுப்புமிக்க நிர்வாகமும் பொதுமக்கள் சேவையும் (Better Management; Better Public Service- Improving Transparency, Accountability and Responsiveness in the Public Service Category) தந்ததற்காக உலக அளவில் இரண்டாம் பரிசைத் தந்து, மோடி அரசைப் பெருமைப்படுத்தியுள்ளது. இது இரண்டாவது முறை. முதல் முறை சென்ற ஆண்டும் ஐ.நா. பரிசு பெற்றது குஜராத் அரசு. அந்த நற்சான்றிதழைத் தன்னுடைய அலுவலகத்தில்- தன் அறையில்- மாட்டி வைத்துவிட்டு, ஆரவாரமின்றி, அமைதியாகத் தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் முதல்வர் மோடி.

இந்தியா டுடே பத்திரிகை நாடு முழுவதும் எடுத்த கருத்துக் கணிப்பின்படி, சிறந்த முதல்வர் விருதை மூன்றுமுறை வென்றுள்ளார் மோடி.

மத்திய அரசு, தனியார் ஆராய்ச்சி மையங்கள், வெளிநாட்டு அமைப்புகள், பத்திரிகைகள் என ஒட்டு மொத்தமாக மோடி 90 விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார். அனைத்து விருதுகளும் அவரின் தன்னலமற்ற மக்கள் சேவைக்காகவும் மாநிலத்தின் அனைத்துத் துறை முன்னேற்றத்திற்காகவும் கொடுக்கப்பட்ட விருதுகள் என்பது குறிப்பிடத்தக்கது. (Ref:- http://gujaratindia.com/state-profile/awards.htm )

இவற்றின் எதிரொலியாகத்தானோ என்னவோ சமீபத்தில் குஜராத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில் மொத்தமுள்ள ஆறு மாநகராட்சிகளிலும் மற்றும் நகராட்சிகள், மாவட்ட பஞ்சாயத்துகள், தாலுக்கா பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கான தேர்தல்களிலும் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸை இருக்கின்ற இடம் தெரியாமல் செய்து விட்டனர் குஜராத் மக்கள்.

குஜராத்தில் நடந்து முடிந்துள்ள உள்ளாட்சி தேர்தலிகளில் மோடியின் பிரம்மாண்ட வெற்றி எதிர்க்கட்சியான காங்கிரஸை ஒட்டு மொத்தமாக ஆட்டம் கொள்ள வைத்திருக்கிறது. மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளையும் 53 நகராட்சிகளில் 42 நகராட்சிகளையும் 24 மாவட்டப் பஞ்சாயத்துகளில் 21-ஐயும், 208 தாலுக்கா பஞ்சாயத்துகளில் 155-ஐயும் கைப்பற்றியுள்ளது பா.ஜ.க. இந்தத் தேர்தலில் பா.ஜ.கட்சிக்கு 80 சதவீத வெற்றியும் காங்கிரஸ் கட்சிக்கு 18 சதவீத வெற்றியும் மற்ற கட்சிகளுக்கு 2 சதவீத வெற்றியும் கிடைத்துள்ளன.

மோடியின் நல்லாட்சிக்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.

- பத்து வருடத்திற்கு முன்னால் 6700 கோடி ரூபாய் பற்றாக்குறையுடன் இருந்த குஜராத்தின் நிதிநிலைமை, தற்போது 500 கோடி ரூபாய் அதிக இருப்புடன் இருக்கிறது.
- அரசின் அனைத்துத் துறைகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, ஊழலற்ற சிறப்பான பணிபுரிதலால், எல்லாத் துறைகளிலும், தேசிய சராசரியை விட பல மடங்கு அதிகமான வளர்ச்சி காட்டி சாதனை செய்து வருகிறது மோடி அரசு.
- மற்ற மாநில அரசுகள் “நலத்திட்டம்” என்ற பெயரில் இலவசங்களை அள்ளி வீசும்போது, எதையுமே இலவசமாகக் கொடுக்காமல் ஏழை மக்களுக்குத் தேவையான பொருள்களை, தரமான நிலையில் நியாயமான விலையில் தடங்கல் இன்றி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் கிடைக்குமாறு செய்கிறது மோடியின் அரசு.
- குஜராத்தில் 185 சிற்றாறுகளும் 8 அழியாத ஆறுகளும் உள்ளன. இவற்றை இணைத்ததன் மூலம் நிலத்தடி நீர் பெருமளவில் அதிகரித்துள்ளது. மோடி தலைமையேற்று கடந்த 10 ஆண்டுகளில் விவசாயப் பொருளாதார வளர்ச்சி 9% ஆக (தேசிய சராசரி 2% தான்) உயர்ந்துள்ளது.
- பத்து வருடங்களுக்கு முன்னால் 2500 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்த குஜராத் மின்சார வாரியம் தற்போது 500 கோடி ரூபாய் லாபத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் மின்சாரக் கட்டணம் கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை.
- “ஜோதிக்ராம் யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் குஜராத்தில் உள்ள 18000 கிராமங்களுக்கும் 24 மணிநேரமும் 3 பகுதி (3 Phase) மின்சாரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை அமல்படுத்தச் சொல்லி இந்திய அரசு மற்ற மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்திருக்கிறது.
- மேலும், பெரும்பான்மையான மாநில அரசுகள் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் தருவதாகச் சொல்லிக்கொண்டு, பல நேரங்களில் மின்தடை மூலம் விவசாய உற்பத்தியைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கும்போது, மோடி அரசு 24 மணிநேரம் மின்சாரமும் பாசனத்திற்குத் தங்குதடையின்றி நீரும் கொடுத்து, மின்கட்டணம் கட்டாத விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கிறது. 24 மணிநேரமும் மின்சாரமும், தண்ணீரும் கிடைக்கப் பெற்று உற்பத்தியைப் பெருக்கிக்கொள்ளும் விவசாயிகள் - சந்தோஷமாக, கட்டணங்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டிச் செல்கின்றனர்.
பொதுமக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், தேங்கியுள்ள வழக்குகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், 810 புதிய நீதிமன்றங்கள் (700 தற்காலிக நீதிமன்றங்களையும் சேர்த்து) அமைத்துள்ளார். ஒவ்வொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு ஒரே வருடத்தில் தீர்க்கப்படவேண்டும் என்கிற கட்டாயமும் பின்பற்றப்படுகிறது. மாலை நேர நீதிமன்றங்களும் நடத்தி, வழக்குகளை விரைவாக முடிக்கிறது குஜராத் அரசு. உச்ச நீதிமன்றம் மாலை நேர கோர்ட்டுகளை நடத்தச்சொல்லி மற்ற மாநிலங்களுக்கும் பரிந்துரை செய்திருக்கிறது.
அரசு, தொழிலாளர் நலனைப் பாதுகாப்பதாலும் தொழிலாளர்களுடன் நல்ல உறவு முறை பராமரிப்பதாலும் வேலைநிறுத்தங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல், ஒரு வேலைநாள் கூட வீணாகாமல் மாநிலம் நடக்கிறது.
- ”சிரஞ்சீவி” திட்டத்தின் மூலம் சிசுக்கொலைகள் முழுவதுமாகத் தடுக்கப்பட்டுவிட்டது. இத்திட்டத்தை மற்ற மாநிலங்களும், உலக வங்கியும் ஆராய்ந்து வருகின்றன.
குழந்தைகள் ஆரம்பக் கல்வி பெற அனைத்துக் கிராமங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு, அனைத்துக் குழந்தைகளும் நாள் தவறாமல் வகுப்புகளுக்கு ஆஜராவதற்கான அனைத்து வழிகளும் மேற்கொள்ளப் படுகின்றன. குழந்தைகளுக்கு சீரான சுகாதாரம், சிறப்பான கல்வி ஆகியவை கிடைக்க புதிய வழிமுறையைக் (ஒவ்வொரு குழந்தையையும் கண்காணிக்கும் விதமாக- Child Tracking System) கையாள்கிறது அரசாங்கம்.
- மகளிர் கல்வியில் 100% பெண் குழந்தைகள் பள்ளியில் படிக்கின்றன. ஆரம்பக் கல்வி முடித்தவுடன் மாணவர்கள் படிப்பை நிறுத்துவது (Drop-out rate) 40%-லிருந்து 2%-மாக குறைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 14 பல்கலைக் கழகங்கள் துவக்கப்பட்டுள்ளன. தொழிற் கல்விக்கான இடங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. கப்பல் பொறியியல் (Marine Engineering), தடயவியல் விஞ்ஞானம் (Forensic Science) போன்றவற்றிற்கான பிரத்தியேகக் கல்வி நிறுவனங்களும், மிகவும் புதிய திட்டமாக “பாதுகாப்பு-சக்தி” (Raksha Shakti) பல்கலைக் கழகம் ஒன்றும் துவங்கப்பட்டுள்ளன. தேசப்பாதுகாப்புக்கென்றே பாடத்திட்டம் அமைத்து அதற்கு ஒரு பல்கலையும் துவங்கியள்ளது மோடி அரசின் ஒப்பற்ற சாதனை. அதே போல் குழந்தைகளுக்கென்று ஒரு பிரத்தியேகமன பல்கலையும திட்டமிடப் படுகின்றது.
- இவ்வளவு நலத்திட்டங்கள் மட்டுமில்லை; வருவாய்க்காக மற்ற மாநிலங்களில் ஆறென ஓடும் குடும்பங்களைக் குலைக்கும் மதுபானம் அறவே இல்லை. மதுபானத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் இல்லாமலே இத்தனை நலத்திட்டங்களும் செயல்படுத்தியுள்ளார் மோடி.
- நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5% மட்டுமே உள்ள குஜராத் மாநிலம், தொழில்துறையில் 16% உற்பத்தியும், 16% முதலீடும், 15% ஏற்றுமதியும், 30% சந்தை ஆக்கிரமிப்பும் செய்கிறது.
ஊழலற்ற திறமையான அரசாட்சி நடப்பதால், தொழிலதிபர்கள் பலரும் குஜராத் மாநிலத்தில் முதலீடு செய்வதை விரும்புகின்றனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் கட்டுமானங்களையும் வேகமாகவும் சிறப்பாகவும் செய்து கொடுப்பதால், அவர்கள் மோடியின் குஜராத் மாநிலத்தில் விரும்பி முதலீடு செய்கின்றனர். டாடா நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலை துவங்குவதற்குத் தேவையான அனைத்து வேலைகளையும் இரண்டே நாள்களில் குஜராத் அரசு முடித்து கொடுத்ததே ஒரு சிறந்த உதாரணம்.
நன்றி: தமிழ் ஹிந்து


மீதி விஷயங்கள் மற்றும் பின்னூட்டங்களை அங்கு சென்று பார்த்துக் கொள்ளலாம்.

மீண்டும் மார்க்கச்சுகள் தொழிற்சாலையில் ஜெர்மன் துபாஷியாக அசைன்மெண்ட்
இது பற்றி நான் இட்ட முந்தையப் பதிவு தையல் மெஷினை இயக்கி தைப்பவர்களுக்கு அளிக்கும் பயிறசிக்காக வந்த இரு ஆஸ்திரிய தொழில்நுட்ப நிபுணிகளுக்காக ஜெர்மன் துபாஷியாகச் சென்றதைக் குறிக்கிறது.

திடீரென 17-ஆம் தேதி டெலிஃபோன் அழைப்பு வந்தது. 18, 19 மற்றும் 20-ஆம் தேதிகளுக்காக மீண்டும் கூப்பிட்டனர். நானும் சென்றேன். ஆனால் இம்முறை மெஷிகளை பரமாரிக்க வேண்டிய மெக்கானிக்குகளுக்கான பயிற்சி. இப்போது வந்தது இரு ஆண்கள். மெக்கானிக்குகள் அத்தனைப் பேரும் ஆண்களே. போன முறையோ தைப்பவர்கள் அனைவருமே பெண்களே. இந்த வேலை பங்கீடு இயற்கையாகவே அமைந்து விட்டது. ஏன், பெண்கள் உடையைத் தைக்கும் ஆண் தையற்காரர்கள் பிரபலம் ஆயிறே. அதே போல பெண் மெக்கானிக்குகளும் உண்டுதானே. ஆனால் இங்கே அம்மாதிரி இல்லைதான்.

சும்மா சொல்லக்கூடாது, நம்மூர் மெக்கானிக்குகள் கற்பூரம் மாதிரி எல்ல விவரங்களையும் பிடித்துக் கொள்கிறார்கள். அவர்கள் பிறகு கேட்கும் கேள்விகளில் ஜெர்மானியர் சற்றே திக்குமுக்காடினர். சிலவற்றுக்கு வெகு நேரம் யோசனை செய்ய வேண்டியிருந்தது. இங்குதான் ஒரு சராசரி ஐரோப்பிய தொழிலாளியும் இந்தியத் தொழிலாளியும் மாறுபடுகின்றனர் எனத் தோன்றுகிறது. நம்மவர்கள் கொடுத்த வேலையுடன் நின்று விடாது சம்பந்தப்பட்ட பிற விஷயங்களையும் கவனிக்கின்றனர். ஆனால் ஐரோப்பாவிலோ சொன்ன வேலையை சொன்னபடியே முடித்தாக வேண்டும் என்ற கட்டாயம் என்று எனக்குப் படுகிறது.

நம்மவர்கள் பலாபட்டறை வேலை செய்வதென்னவோ உண்மைதான். இது பற்றி மணியன் அவர்களும் தனது “இதயம் பேசுகிறது-ஜப்பான் பயணம்” என்னும் புத்தகத்தில் ஒரு ஜப்பானிய நிபுணரின் உதாரணத்துடன் விளக்கியுள்ளார். அதாவது நகர லே-அவுட் தயாரிப்பதில் நிபுணரான அவரிடம், சற்றே வேறுபட்ட விஷயம் பற்றிக் கேட்க அவர் குழம்பி விட்டார்.

அதே சமயம் இந்தியாவில் ஒருவர் காலையில் வக்கீலாக வேலைக்கு செல்கிறார். அதை வெற்றிகரமாக செய்கிறார். மாலையில் நாடகங்கள் போடுகிறார், அனைத்தும் வெற்றி நாடகங்கள். கூடவே ஒரு பத்திரிகையையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என அவர் கொடுத்த உதாரணங்கள் சோ அவர்களை குறித்துத்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/01/2010

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் 01.11.2010

அலாரம் படுத்தும்பாடு
நான் வழக்கமாக பேப்பர் வாங்கும் கடை முதலாளியுடன் பேசிக் கொண்டிருந்தேன். மனிதர் தினமும் விடியற்காலை 4 மணியளவில் எழுந்தால்தான் பேப்பர்களை விநியோக பூத்திலிருந்து பெற்றுக் கொண்டு எல்லோருக்கும் வீட்டில் போட ஏலும். கூடவே பால் வியாபாரம் வேறு, பால் பாக்கெட்டுகளை கடைக்கு முன்னால் க்ரேட்டில் வைத்துவிட்டு போய் விடுவார்கள்.

வழக்கமாக உற்சாகத்துடன் வேலை செய்யும் அவர் இன்று சற்றே சோர்வுடன் இருந்தார். உடம்பு சரியில்லையா என விசாரிக்க அவர் இன்று விடியற்காலை வழக்கம் போல நான்கு மணிக்கு அலாரம் அடிக்க, சிறிது நேரம் கோழித்தூக்கம் போடலாம் என நினைத்து, அலாரத்தை நிறுத்தி விட்டு தூக்கத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார். மறுபடியும் முழிப்பு வந்தது காலை 6 மணிக்கு! பதறி அடித்து ஓடி எல்லாவற்றையும் கிரமமாக செய்து முடித்து விட்டு நான் அவர் கடைக்கு சென்றபோது சோர்வுடன் இருந்தார்.

அவரை உற்சாகப்படுத்த எண்ணி நான் சமீபத்தில் 1966-ல் கல்கியில் படித்த ஒரு துணுக்கு பற்றி பேசினேன். அதாவது கல்லூரி ஹாஸ்டலில் வசித்த பொறியியல் கல்லூரிப்பெண் விடுமுறை தினங்களிலும் காலை 5 மணிக்கு அலாரம் வைப்பாளாம். அவள் தோழி கேட்கிறாள், “ஏண்டி தினமும்தான் காலையில் சர்வே ப்ராக்டிகலுக்காக எழுந்து தொலைக்கணும். நாளைக்குத்தான் விடுமுறை ஆச்சே, ஏன் அலாரம் வைக்கறே? எங்காவது வெளியில் போகப் போறயா என கேட்க, அப்பெண்ணோ, “சீச்சீ அதெல்லாம் ஒண்ணுமில்லை. கால்யில் அலாரம் அடிச்சதும், ஆசை தீர அதன் தலையில் தட்டிட்டு இன்னும் 3 மணி நேரமாவது குற்ற உணர்ச்சி இல்லாமல் கோழித் தூக்கம் போடணும், அதுக்குத்தான்”.

இதைக் கேட்டது கடைக்காரர் கண்களில் பிரகாசம். தீபாவளிக்கு அடுத்த நாள் பேப்பர்கள் ஏதும் வெளிவராது ஆகையால் அன்னிக்கு இந்த வேலையை தான் ஆசை தீர செய்யப் போவதாகக் கூறினார்.

முத்துராமன் - எந்த பாத்திரத்தையும் ஏற்கும் பெருந்தன்மை
இன்று காலை, பொதிகை சேனலில் நடிகர் முத்துராமன் பற்றி ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் சொல்லப்பட்ட ஒரு விஷயம் என் கவனத்தை ஈர்த்தது. அதாகப்பட்டது, முத்துராமன் நடிப்பில் மிகுந்த அக்கறை உடையவர். தன் இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாது பிடித்த ரோல் என்றால் மிகச் சிறியதானாலும் தயங்காமல் செய்வார் என்று சொல்லப்பட்டது. அதற்கு உதாரணமாக சமீபத்தில் 1962-ல் வெளியான நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் அவர் தேவிகாவின் கணவன் வேணுவாக வருவதையும் “நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்” என்னும் பாடல் காட்சியையும் காட்டினார்கள். அதைப் பார்த்து நான் ஆலோசனையில் ஆழ்ந்தேன். அப்படம் வந்த போது முத்துராமன் புதுமுகமே. அதாவது, அதுவரை பிட் ரோல்கள் பல செய்தாலும் (பூலோக ரம்பை, படிக்காத மேதை ஆகிய படங்கள்) இப்படத்தில் அவருக்கு பிரமோஷன் என்றே கூற வேண்டும். ஏனெனில் கல்யாண்குமார் அளவுக்கு அவருக்கும் எக்ஸ்போஷர் கிடைத்தது. ஆகவே இது ஒன்றும் நிகழ்ச்சியில் கூறப்பட்டதை நிரூபிக்கவில்லை.

வேண்டுமானால் இதற்கு உதாரணமாக சமீபத்தில் 1969-ல் வெளியான் சிவந்த மண் படத்தில் ஆனந்த் ரோலில் வந்து முதலிலேயே இறப்பதை குறிப்பிடலாம் (பை தி வே, சிவந்த மண்ணின் ஹிந்தி ரீமேக் தர்த்தி-யில் சிவாஜி அதே ரோலில் நடித்தார்).

பொதிகை டீம் சற்றே ஹோம் வொர்க் செய்வது நலம்.

Das doppelte Lottchen
சமீபத்தில் 1970-ல் Das doppelte Lottchen என்னும் தலைப்பில் பிரபல ஜெர்மானிய எழுத்தாளர் Erich Kaestner எழுதிய புத்தகத்தை படித்தேன். முதல் சேப்டரை படிக்கும்போதே அடேடே இது ஏற்கனவே ஆங்கிலத்தில் Parent Trap என்னும் தலைப்பில் சினிமாவாக வந்து நானும் அதை சமீபத்தில் 1964-ல் பார்த்தேனே என நிமிர்ந்து உட்கார்ந்தேன். அதே ஆங்கிலப் படம் தமிழில் சமீபத்தில் 1965-ல் குழந்தையும் தெய்வமும் என்னும் தலைப்பிலும், அதன் பிறகு ஹிந்தியில் தோ கலியான் என்னும் தலைப்பிலும் வந்ததும் நினைவுக்கு வந்தது.

தமிழ் மற்றும் ஹிந்தி வெர்ஷன்களை நான் அவை முதன் முதலாக வந்த சமயம் பார்க்கவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழ் வெர்ஷன்களில் சம்பந்தப்பட்ட குழந்தை நடிகைகள் இரட்டை பாத்திரத்தில் வந்தனர். ஆனால் சமீபத்தில் 1950-ல் Erich Kaestner-ராலேயே திரைக்கதை எழுதப்பட்ட Das doppelte Lottchen படத்தில் நிஜ இரட்டையரே நடித்தனர். இப்போது அந்த சகோதரிகளின் வயது 72-க்கு மேல் இருக்கும்.

ராமானந்த் சாகரின் உத்தர ராமாயணத்தில் வந்த லவன் குசனும் இரட்டை பிறவிகள். அப்படி இருந்தால் பல ட்ரிக் ஷாட்டுகள் மிச்சம்தானே.

டப்பிங் அபத்தங்கள்
Odessa file (பிரெடெரிக் ஃபோர்சைத்தின் நாவல்), Liberation (யூகோஸ்லேவிய படம்) ஆகிய படங்களில் ஒரு வேடிக்கையான அம்சம் பார்த்தேன். முதல் படத்தையே எடுத்து கொள்ளுங்கள். கதை ஜெர்மனியில் கென்னெடி சுட்டுக் கொல்லப்பட்ட தினத்தில் ஆரம்பிக்கிறது. சம்பவங்கள் விறுவிறென நகர்கின்றன. இது ஆங்கிலப் படமாதலால் வசனங்கள் ஆங்கிலத்தில்தான், ஆனால் தெருவில் உள்ள விளம்பர பலகைகள் ஆகியவை ஜெர்மனில். ஓக்கே. ஆனால் இதென்ன, அவ்வப்போது நாஜிகளின் காலகட்டத்து நிகழ்வுகள் ஃப்ளாஷ் பாக்குகளாக வரும்போது மட்டும் வசனங்கள் ஜெர்மனி, கீழே சப் டைட்டில்கள். இது மட்டும் ஏன் அப்படி? யோசித்தால் ஒன்று புலப்பட்டது நாஜியினர் நம்மவர் இல்லை என்னும் கருத்தை வலியுறுத்த வேண்டும் அல்லவா அதானால்தான்.

அதே போல இரண்டாவது படத்தில் யூகோஸ்லேவியரும் சரி ஆங்கிலேயரும் சரி அவர்கள் தோன்றும் காட்சிகள் எல்லாம் ஆங்கிலத்தில். ஆனால் நாஜி ஜெர்மானியர் வரும்போது மட்டும் அவர்கள் ஜெர்மனில் பேசுவதாக காண்பிக்கின்றனர். மேலே சொன்ன காரணமே இங்கும் செல்லுபடியாகும் என நினைக்கிறேன்.

அது இருக்கட்டும், நம்ம ஊரில் என்ன செய்கிறார்கள்? ஒரு தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங்கில் கதை கோதவரி கரையில் உள்ள திருச்சியிலும், கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள நாகப்பட்டினத்திலும் நடக்கிறது? ஏதேனும் புரிகிறதா? புரியவில்லை என்றால் விட்டுத் தொலையுங்கள். எனக்கும்தான் புரியவில்லை.

ஹைதராபாத்தில் நடக்கும் கமலஹாசனின் இந்த்ருடு சந்த்ருடு படத்தின் தமிழ் டப்பிங்கில் ஹைதராபாத்தில் ராயப்பேட்டையையும் அண்ணா நகரையும் காட்டுகிறார்கள். டெக்னாலஜி ஈஸ் இம்ப்ரூவிங் யூ நோ?

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/24/2010

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் 24.10.2010

ஆனால் ப்ரூட்டஸ் நெம்பவுமே நியாயஸ்தர்
ஜூலியஸ் சீசரை ப்ரூட்டஸ் கூட்டாளிகள் கொன்றாயிற்று. “நீயுமா ப்ரூட்டஸ்” என நொந்த வண்ணம் சீசரும் பிராணனை விட்டாயிற்று. பிறகு மக்களுடன் ப்ரூட்டஸ் பேசி, தன்னிலை விளக்கம் கொடுத்தாயிற்று.

ஆனால் பின்னால் வரும் ஆண்டனி வேறொரு பிரசங்கம் ஆற்றி, மக்களை ப்ருட்டஸ் % கூட்டாளிகளுக்கு எதிராக மாற்றுவான். அவ்வாறு செய்யும் போது, “ப்ரூட்டஸ் நெம்பவுமே நியாயஸ்தன்” என்பதைத் திரும்பத் திரும்பக் கூறுவான். முதலில் சாதாரணமாக புகழ்ச்சியாகத் தோன்றும் இதே வாக்கியம் பிற்பாடு அதுவே குற்றச்சாட்டாக மாறும். ஷேக்ஸ்பியரின் மாஸ்டர்பீசான ஜூலியஸ் சீசர் நாடகத்தின் முக்கியத் தருணம் இது.

காங்கிரஸ் கூட்டங்களில் இம்மாதிரி பொடி வைத்து பேசுவதில் சத்தியமூர்த்தி தேர்ந்தவர். ஜஸ்டிஸ் கட்சியின் ஒரு வேட்பாளரை அவர் முதலில் மகானுபாவர் என சித்தரித்தார். பிறகு அந்த வேட்பாளருக்கு எதிராக ஒவ்வொரு விஷயமாகக் கூறி, “இப்படித்தான் அவர், அந்த மகானுபாவர்” எனக்கூறி முத்தாய்ப்பு வைப்பார். பிறகு ஒரு தருணத்தில், புது விஷயம் கூறி, “இப்படித்தான் அவர்...” எனக் கூறிக் கொண்டே சோடா எடுத்து குடிக்க, கூட்டத்தினர் “அந்த மகானுபாவர்” என முடிப்பார்கள்.

பால் எட்டிங்க்டன் நடித்த யெஸ் மினிஸ்டர் சீரியலில் வரும் ஒரு எபிசோடின் கடைசி காட்சி கீழே தரப்பட்டுள்ளது. அதில் பிபிசி-யை பயங்கரமாகவே கலாய்த்திருப்பார்கள். அதில் பிபிசியின் தலைவர் பிபிசி அரசால் கட்டுப்படுத்தப்படலாகாது எனக் கூறிக் கொண்டே உண்மையிலேயே மினிஸ்டரும் அவர் செக்ரட்டரியும் தரும் அழுத்தத்துக்கு பணிந்து போதல் மேலே சொன்ன ப்ரூட்டஸ்/சத்திய மூர்த்தி உதாரணங்களுக்கு இன்னொரு எடுத்துக் காட்டாகும். எஞ்சாய்!



குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பாஜகாவின் தொடர்ந்த வெற்றி மழை
இது சம்பந்தமாக நான் போட்ட முந்தைய பதிவின் தொடர்ச்சியாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
பிஜேபியை குறை கூறுவதையே வேலையாக வைத்திருக்கும் ஹிந்துவும் வேண்டாவெறுப்பாக இதை ஒத்துக் கொள்ள வேண்டி வந்தது. இம்முறை காங்கிரசாலும் ஓட்டுப் பதிவில் தில்லுமுல்லு என்ற பல்லவியைக் கூட பாட முடியவில்லை என ஹிண்டு மேலும் கூறுகிறது. இப்போ என்ன செய்யலாம்? இத்தாலிய சோனியா காந்திக்கு தனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறார் காங்கிரஸ் தலைவர் பட்டேல் அவர்கள். வேறு வழியில்லை அவருக்கு. தேர்தல் கமிஷனரே காங்கிரஸ் மாவட்ட கட்சித் தலைவர் ரேஞ்சுக்கு செயல்படும் சினோரியோவில் இந்தக் குற்றச்சாட்டை வெட்கமேயில்லாமல் முன்னால் வைக்க காங்கிரசால்தான் முடியும்.

தினத்தந்தியில் சிந்துபாத் கதை
அதற்கு முன்னால் ஒரு சிறு டைவர்ஷன். ஒரு தொழிலதிபர் ஒரு கூட்டத்தில் பேச வேண்டிய கட்டாயம். அவர் தனது செக்ரட்டரியிடம் தனது பேச்சை எழுதித் தரச் சொல்கிறார். ஐந்து நிமிடத்துக்கான பேச்சு என்று வேறு கூறுகிறார். அவ்வாறே பேச்சு எழுதப்பட்டு தரப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்ததும் தொழிலதிபர் தனது செக்ரட்டரியை கூப்பிட்டு திட்டுகிறார், “என்னய்யா சொதப்பிட்டே. ஐந்து நிமிடத்துக்கு உரை எழுதித் தரச்சொன்னால் 15 நிமிடத்துக்கான உரை எழுதினாய்” என்று. செக்ரட்டரி பணிவுடன் கூறுகிறார், “சார் நான் ஐந்து நிமிடத்துக்குத்தான் உரை எழுதினேன், அதை 1+2 என தட்டச்சிட்டேன், அதாவது ஒரு ஒரிஜினல், இரண்டு கார்பன் காப்பிகள். பியூன் தவறுதலாக எல்லாவற்றையும் சேர்த்து பின் போட்டு விட்டான் போல. நீங்கள் அந்த பேச்சை மூன்று முறை படித்து விட்டீர்கள்”.

இது வெறும் கற்பனை எனக் கூறுபவர்கள் மேலே படிக்கவும். சமீபத்தில் 1997-ஆம் ஆண்டு நான் தில்லியில் ஒரு வாடிக்கையாளர் அலுவலகத்தில் பிரெஞ்சு மொழிபெயர்ப்புக்காக சென்றேன். என்னிடம் ஒரு பெரிய கோப்பைத் தந்தார்கள் (காகிதக் கோப்பு, மென் கோப்பு அல்ல). நானும் அதை வேகமாக புரட்டிப் பார்த்து, எத்தனை பக்கங்கள் உள்ளன என்பதை துரிதமாக எண்ணி ஒரு டிபிகல் பக்கத்தில் எவ்வளவு வரிகள் என்பதெல்லாம் அவதானித்து, அது இரண்டு நாட்களுக்கான வேலை, கிட்டத்தட்ட 16 மணி நேரம் பிடிக்கும், எனது ஒரு மணிக்கான சேவை 375 என்னும் கணக்கில் 16 மணி நேரத்துக்கு 6000 ரூபாய்கள் பிடிக்கும் என்றேன்.

வாடிக்கையாளர் என்னிடம் மொத்தம் 3000 ரூபாய்தான் தருவேன், இஷ்டமிருந்தால் செய், முடிந்தால், சீக்கிரமே ஒரு நாளைக்குள்ளேயே அதை முடித்து பணம் பெறலாம் என்றும் அதில் தனக்கு ஆட்சேபம் இல்லை என்றும் கூறினார். நானும் சரி எனக்கூறி அடுத்த நாள் அவரது அலுவலகம் சென்றேன். விறுவிறென பக்கங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. மதியம் இரண்டு மணியளவில் உணவு கொடுத்தார்கள். அதன் பிறகு பக்கங்களை புரட்டினால் ஆரம்பப் பக்கமே மீண்டும் வந்தது. மேலும் சோதித்ததில் மொத்த கோப்பே அவ்வளவுத்தான். ஒரிஜினல் மற்றும் டூப்ளிகேட் இரண்டு என்னும் கணக்கில் எல்லாமே சேர்ந்து பைண்ட் செய்யப்பட்டிருந்தன.

இப்போதுதான் தமாஷ் ஆரம்பித்தது. இது பற்றி எந்த ஐடியாவும் இல்லாதிருந்த வாடிக்கையாளர் நான் அடுத்த நாள் எத்தனை மணிக்கு வேலையை முடிப்பேன் எனக் கேட்க, நான் புத்தர் மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு வேலை முடிந்தது எனக்கூறி நடந்ததை விளக்க, அவரின் முகத்தைப் பார்க்க வேண்டுமே. ஆனால் என்ன செய்வது அவரே ஒத்துக் கொண்டபடி எனக்கு 3000 தர வேண்டியிருந்தது. இதை ஏன் நான் நேற்றே கூறவில்லை என அவர் கவுண்டமணி பாணியில் கேட்க, நான் செந்தில் மாதிரி, “அண்ணே நேற்றைக்கு நான் வெறுமனே பேப்பர்களைத்தான் எண்ணினேன், படித்துப் பார்க்க நேரமெல்லாம் இல்லை” என்று கூற அவ்ர் மேலும் மெர்சலானார்.

இதெல்லாம் இங்கே ஏன் பெரிசு என முரளி மனோகர் கேட்கிறான். அதுதான் கன்னித்தீவின் மகிமை. சில நாட்களுக்கு முன்னால் எதேச்சையாக பார்த்தேன். அதில் அரசகுமாரி லைலாவை முதலில் சிறையெடுப்பது காட்டப்படுகிறது. இந்தக் காட்சியை சமீபத்தில் 1960-லிருந்து பல முறை பார்த்த ஞாபகம் வேறு வந்தது. ஆகவே என்ன நடக்கிறதென்றால், அதே கதையை திரும்பத் திரும்பப் போடுகிறார்கள். வாசகர்கள் யார் பார்ப்பார்கள் என்ற தெனாவெட்டுதான், வேறென்ன?

நீங்களே நெஞ்சைத் தொட்டு கூறுங்கள்? பொறுமையாக படிப்பீர்களா அத்தொடரை. இருப்பினும் அது வருகிறது என்றால், தினத்தந்தி வாசகர்கள் தத்திகள்தான் என நிர்வாகமே நினைக்கிறது. உதாரணத்துக்கு ஒரு அத்தொடரில் நாளைக்கான வாசகங்கள்.

1. சிந்துபாத் நிமிர்ந்து பார்க்கிறான்.
2. மந்திரவாதி நிற்கிறான், சிரித்துக் கொண்டு.
3. ஆ, நீயா என்கிறான் சிந்துபாத்
(தொடரும்).

ஆகவே லைலா சிறைபிடிக்கப்படும் காட்சி திரும்பவும் வர கண்டிப்பாக 10 ஆண்டுகள் பிடிக்கும். அதுவரை எந்த வாசகர் தொடர்ச்சியாக படிப்பார்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/10/2010

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் 10.09.2010

காந்திக் கணக்கு
பொது வாழ்க்கையில் தூய்மையாக இருக்க வேண்டும், கணக்கு விஷயங்களில் நியாயமாக நடந்து கொண்டால் மட்டும் போதாது, நியாயமாக நடப்பதும் வெளிப்படையாகத் தெரிய வேண்டும் என்றெல்லாம் ஸ்ட்ரிக்டாக தானும் இருந்து தம்மைச் சார்ந்தவர்களும் இருக்க வேண்டும் என கண்டிப்பாக இருந்த காந்தியார் பெயரை இவ்வாறு ஏன் தவறாக பயன்படுத்துகின்றனர்?

சின்ன அண்ணாமலையோ சாவியொ இப்போது நினைவில்லை. அவர் எழுதிய ஒரு விஷயம் இதை சற்றே விளக்குகிறது என நினைக்கிறேன்.

1942-ல் வெள்ளையனே வெளீயேறு இயக்கத்தின் உச்சக்கட்டத்தில் நாடே கொதிப்பில் இருந்தது. காங்கிரஸ்காரர்கள் கதர் உடையில் எல்லா ஊர்களுக்கும் சென்று காந்தியின் கொள்கைகளை பரப்பினர். அவர்களோடு சேர்ந்து கொண்டு சந்தடிசாக்கில் சிலர் செயல்பட்டனர். கும்பலாக ஏதேனும் ஹோட்டலுக்கு போவது, மூக்குப் பிடிக்க கொட்டிக் கொள்வது. பிறகு கல்லாவருகில் வந்து “மகாத்மா காந்திக்கு” என ஒருவர் கோஷம் போட மீதிப்பேர் எல்லோரும் (ஹோட்டல் முதலாளியும் அதில் அடக்கம்) ஜே என்று கத்துவார்கள். அவ்வாறு கோஷம் போட்டுக் கொண்டே அவர்கள் பில்லுக்கு பணம் தராது நடையைக் கட்டுவார்கள். அதுதான் காந்திக் கணக்குக்கு சோர்ஸ் என நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

டோண்டு ராகவன் அடாவடியாக நடந்து கொண்ட தருணங்கள்
அவ்வப்போது பின்னால் திரும்பிப் பார்ப்பது நலம் என நான் நினைக்கிறேன். சமீபத்தில் 1958-59 கல்வியாண்டில் நான் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளியில் எட்டாவது படித்துக் கொண்டிருந்தேன். ஆசிரியர் ஜயராம ஐயங்கார். (எனது ஆங்கில ஆளுமைக்கு அவரும் என் அன்னையும் காரணம் என்பதை இங்கு போகிறபோக்கில் கூறிவைக்கிறேன்).

அப்போதெல்லாம் ஆசிரியர் பயிற்சிக்கு பி.டி (B.T.) பட்டம் பெற வேண்டும். அவர்கள் பயிற்சியின் ஒரு பகுதி ஏதேனும் வகுப்புக்கு ஒரு பீரியட் பாடம் நடத்த வேண்டும். வழமையான வகுப்பாசிரியரும் மாணவர்களின் பக்கத்தில் அமர்ந்து பயிற்சியாளர் பாடம் எடுப்பதை அவதானித்து பிறகு அவருக்கு மார்க் போடுவார்கள்.

அன்று ஒரு பயிற்சியாளர் எங்களுக்கு ஆங்கில இலக்கணப் பாடம் எடுத்தார். ஜயராம ஐயங்கார் அவர்கள் மாணவர்கள் வரிசையில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்தார். பாடம் எடுத்தவர் ஆங்கில இலக்கணத்தைத் தப்பும் தவறுமாக எடுத்தார். நான் சீறி எழுந்தேன். ஜயராம ஐயங்கார் அவர்கள் எனக்கு சைகைகள் காட்டி பேசாமல் உட்காரச் சொன்னதை நான் ஓரக்கண்ணால் கவனித்தாலும் அப்போதிருந்த சண்டைக்கார மனோபாவத்தில் அதை அலட்சியம் செய்தேன். பயிற்சியாளர் நான் சொன்னதை ஒத்துக் கொள்ளாது நான் நம்பத் தகுந்தவனல்ல எனக்கூறினார். ஆசிரியரையே கேட்டுக் கொள்ளுமாறு கூறி நான் அமர, ஆசிரியருக்கு நான் சொல்வதுதான் சரி என்று சொல்வதைத் தவிர வேறு வழியின்றிப் போயிற்று.

அப்பயிற்சியாளரின் முகத்தில் அதிர்ச்சி, அவமானம் எல்லாம் ஒரு சேர வந்ததை இப்போது நினைத்துப் பார்த்தாலும் என் மனம் துவள்கிறது. ஆனால் அப்போதிருந்த அந்த 12 வயது துடுக்குப் பையனான டோண்டு ராகவனுக்கு அது உரைக்கவில்லை என்பதை இப்போது வெட்கத்துடன் ஒப்புக் கொள்கிறேன். அன்று மாலையே ஆசிரியர் என்னை அழைத்து நான் செய்த தவறைக் கூறினார். அப்போதாவது எனக்கு அது உரைத்தது என்று பொய் கூற எனக்கு மனம் வரவில்லை.

என்ன செய்வது, என்னைப் புரட்டிப் போட்ட அந்த ஞாயிற்றுக்கிழமை வர இன்னும் 13 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்ததே.

துக்ளக்கின் தூள் பதில்கள் (துக்ளக் 15.09.2010)


கே: தமிழகத்தில் போலி மருந்துகள், போலி டாக்டர்கள், போலி சாமியார்கள், போலி அதிகாரிகள், போலி மார்க் ஷீட்கள்... என்று தொடரும் நிலையில், தற்போத் வாகனப் போக்குவரத்துக்கு ‘போலி இன்ஷூரன்ஸ்’ தயாரித்து வினியோகித்தவர் சென்னையில் சிக்கியுள்ளாரே?
ப: இது ஒரு போலி மாநிலம். ஒரு குடும்பத்தின் பண்ணை, ஒரு மாநிலம் போல தோற்றமளிக்கிறது. நம்பிவிடக்கூடாது.

கே: காமராஜ் என்றால் கல்வி, எம்.ஜி.ஆர். என்றால் வள்ளல், கருணாநிதி என்றால்...?
ப: குடும்பம்.

கிருஷ்ணலீலை
திண்ணையில் வெளிவந்த மலர்மன்னனின் சிறுகதை மேலே சொன்ன தலைப்பில் மனதுக்கு நிறைவாக உள்ளது. தேவைக்கதிகமாக எளிமையாக்கம் என்று கூறத் தோன்றினால், அது நிஜமாகவே உண்மையாக இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்.

தசாவதாரத்தில் கடவுள் இருக்காருங்கறதை நம்பறேளா என அசின் கேட்க கமலோ கடவுள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் எனக்கூறும் பதில் போல என வைத்துக் கொள்ளுங்களேன். நிற்க:

சமீபத்தில் 1961-ல் ஆனந்த விகடன் இதழ் ஒன்றில் பாண்டிச்சேரியில் பாரதியாரின் பக்கத்து வீட்டில் இருந்தவரை (அப்போதும் அங்குதான் அவர் இருந்தார்) பேட்டி கண்டு பாரதியாரைப் பற்றிக் கேட்டிருக்கிறார்கள். “சார் அவரை நாங்கள் எல்லாம் அச்சமயம், பிழைக்கத் தெரியாத பயித்தியக்காரர் என்றுதான் நினைத்தோம். அப்போது எங்களுக்குத் தெரியுமா அவர் பின்னால் அடையப்போகும் புகழ்” என்று கூறியிருப்பது நிஜத்துக்கு அருகே இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது