5/25/2005

என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களை பற்றி

அன்பு வலைப்பதிவு நண்பர்களே,

இப்போதெல்லாம் சில பதிவுகளில் என் பெயரைத் தாங்கி ப்ளாக்கர் பின்னூட்டங்கள் வருகின்றன. நான் கனவிலும் நினைக்க முடியாத அளவில் அவை அவதூறுகளைத் தாங்கியுள்ளன. முதலில் முகமூடி அவர்களின் பதிவுகளில் அவை ஆரம்பித்தன. இப்போது குமரேஸின் பதிவிலும் அவை தொடர்ந்துள்ளன. இன்னும் எங்கெல்லாம் அவை வரப்போகின்றன என்பது புரியவில்லை. ஆகவே என் பெயரைக் காத்து கொள்ள இப்பதிவினை ஆரம்பித்துள்ளேன். நான் எங்கு என்ன பின்னூட்டமிட்டாலும் இங்கும் அப்பின்னூட்டத்தை இடுவேன்.

ரோஸ வசந்த் அவர்களுக்கும் இம்மாதிரியே நடந்தது. அதற்கு எதிராக அவர் செய்ததையே செய்வது என்று தீர்மானித்துள்ளேன். இப்போது என் பெயரைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் என்னுடைய இப்பதிவிலும் என் பெயரில் பின்னூட்ட்மிடலாம். அவை உடனடியாக அழிக்கப்படும். ஏதோ என்னால் முடிந்ததை செய்யலாம் என்று உத்தேசம்.

நண்பர்களே, உங்களில் பலருக்கு என் மேல் கோபம் இருக்கலாம். இருப்பினும் எனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இது சம்பந்தமாகக் கடைசியாக குமரேஸ் அவர்கள் பதிவில் இது சம்பந்தமாக வந்தவை இதோ:

(http://kumaraess.blogspot.com/2005/05/blog-post_21.html)

At Saturday, May 21, 2005 6:48:54 PM, Dondu said…

[[கமல் "திருமணம் என்கிற சடங்கிலேயே உடன்பாடில்லைனு சொன்ன...." தில் மிகவும் கோபமடைந்த இரசிகர்களில் நானும் ஒருவன்.]]

கல்யாணம் செய்தால் கழட்டி விடுவது ரொம்ப கஷ்டம். கோர்ட் படியேறி வக்கீல், வாய்தா என்று அலைய வேண்டும். பின்னர் ஜீவனாம்சம் என்ற தொந்தரவு வேறு உண்டு. கல்யாணம் செய்யாமல் என்றால் சிம்ரனைக் கூப்பிட்டோமா உறை போட்டு அடிச்சோமா, அபிராமியைக் கூப்பிட்டோமா.. அந்த நாள் கணக்கு பார்த்து செஞ்சோமா, கெளதமியைக் கூப்பிட்டோமா காப்பர்டீ மாட்டி செஞ்சோமா என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு பாணியில் சென்று விடும். இதுகூடத் தெரியாத மண்டுவாக இருக்கிறீர்களே?


At Wednesday, May 25, 2005 2:16:24 PM, அன்பு said…

டோண்டு-சார் சும்மா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க...!?


At Wednesday, May 25, 2005 3:02:26 PM, Dondu said…

This is getting more and more ridiculous. The 4th comment above is given in my name after creating a new blogger identity. It leads to http://bramin.blogspot.com
If you click the blog title in that URL, it leads to my regular blog.
I am sure I saw some other name when I saw this comment sometime back.
This is a sure way of destroying the trust in the blogging world.
I can only hope that this madness will stop.
By the way, my original blogger number is 4800161, whereas the number of the misleading blogger is 9267865. I request the fellow bloggers to remember that such a thing can happen to anybody else.
Regards,
N.Raghavan

At Wednesday, May 25, 2005 3:06:59 PM, Dondu said…
The same thing has happened in Mugamoodi's two blogs as well. Some mad fellow is at large. I reproduce Mugamoodi's comments in this connection in http://mugamoodi.blogspot.com/2005/05/blog-post_18.html
"யாருக்குமே தெரியாது என்றாலும் நீ என்ன சிந்திப்பாய், என்ன செய்வாய் என்பதுதான் நீ 'உண்மையிலேயே' யார் என்பதை கண்டுபிடிக்க எளிய வழி என்று ஒரு ஞானி சொல்லியிருக்கிறார். நகைச்சுவையாக எழுதப்பட்ட பதிவு இது. சம்பந்தமே இல்லாமல் ஒரு தனி மனிதனை பற்றி கேவலமாக பின்னூட்டம் இட்டு துர்வாசர் என்பவர் திசைதிருப்பும் வேலையை ஆரம்பித்தார். பின்பு பாப்பான் என்ற பெயரிலும் அதனை தொடர்ந்தார். அது hackingல் முடிந்திருக்கிறது... துர்வாசர் இப்பொழுது தன் வெற்றி குறித்து மிகவும் மகிழ்ச்சியில் இருப்பார்.... வெற்றிக்களிப்பில் குதூகலமாக சிரித்துக்கொண்டிருக்கலாம்... துர்வாசர் உங்கள் வீட்டில் கண்ணாடி இருந்தால் அதன் முன் நின்று சிரித்துப்பாருங்கள்.... பெருமையக இருக்கிறதா... எனில் உங்களுக்கு உடனடி தேவை ஒரு மாறுதலான வாழ்க்கை முறை... அட்லீஸ்ட் சிறிது காலத்துக்காவது... குழந்தைகளின் சிரிப்பை ரசிக்கப்பாருங்கள்... காலையில் முடிந்தால் கடற்கரை பக்கம் போய் வாருங்கள்... நகைச்சுவை படங்கள் பாருங்கள்... கண்ணியை ஒரு வாரத்துக்கு மூட்டை கட்டி வையுங்கள்... நீங்கள் தற்போது பார்க்கும் வேலையில் ஒரு படி முன்னேற உங்கள் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்துங்கள்.... எல்லா குற்றவாளியும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்ற எண்ணத்தில்தான் குற்றத்தை ஆரம்பிக்கிறார்கள். கண்டுபிடிக்காத குற்றங்களின் விழுக்காடு மிக மிக குறைவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்... ஒருவரை துன்பப்படுத்தி அதன் மூலம் மகிழ்ச்சி கொள்ளும் sickest mentality (ஸாடிஸ்ட் மனோபாவம்) மனிதனை மனிதன் என்ற நிலையில் இருந்து கீழிக்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்... என் திருப்திக்காக இதையெல்லாம் சொன்னேன்.... சிந்தித்துப்பார்ப்பதும் பார்க்காததும் உங்கள் நோயின் தீவிரத்தை பொறுத்தது.

illegitimate பின்னூட்டங்கள் அனைத்தையும் அழித்துவிட்டேன்... எதிர்கால தேவையை மனதில் கொண்டு linkஐ அழிக்கவில்லை. பின்னூட்டங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பபற்று இருப்பது நெருடலாக இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது."

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/16/2005

வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 9

உங்கள் அப்போதைய நிலை எதுவாக இருப்பினும் அதன் சாதகமான அம்சங்களையே வலியுறுத்தவும். 2002 வரை என்னிடம் கணினி இல்லை. இப்போது உண்டு. இரண்டு நிலைகளையும் நான் எனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டேன். அது பற்றிப் இப்போது பேசுவோம்.

என் மொழிபெயர்ப்பு வேலைகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். 1975 முதல் 1981 வரை சென்னையில் செயல்பாடு, பிறகு 2001 வரை தில்லி வாசம், தற்சமயம் திரும்ப சென்னையில். முதல் ஆறு வருடங்களுக்கு வேலை மந்தகதியிலேயே சென்றது. மத்தியப் பொதுப்பணி துறையில் இளநிலைப் பொறியாளராகவும் இருந்தேன். வேலை பளு மிக அதிகம். தினமும் நங்கநல்லூரிலிருந்து ஆவடிக்கு செல்ல வேண்டும். ஒரு வழிப்பயண நேரமே கிட்டத்தட்ட இரண்டு மணிகள். சென்ட்ரலிலிருந்து ஆவடி வரையானப் பயணம் மட்டும் ஒரு மணிநேரம் எடுக்கும். மின்ரயில் இன்னும் புழக்கத்துக்கு வரவில்லை. வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் மொழிபெயர்ப்பு வேலையைத் துவங்கி விடுவேன். அலுவலகத்திலும் மதிய உணவு நேரத்தில் மொழிபெயர்ப்பு வேலைதான். எங்கள் அலுவலக குமாஸ்தாவே தட்டச்சு செய்து கொடுத்து விடுவார். அவருடைய தொகையை உடனுக்குடன் செட்டில் செய்துவிடுவேன்.

1981-ல் தில்லி சென்றேன். உதவிப் பொறியாளர் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் வேலை ஐ.டி.பி.எல்லில். இந்த அனுபவத்தைப் பற்றி ஏற்கனவே முந்தையப் பதிவில் எழுதி விட்டேன். இப்போது, இருக்கும் நிலையை எவ்வாறு தனக்கு சாதகமானதாக மாற்றிக் கொண்டு மற்றவர்களையும் அவ்வாறே கருத வைப்பது என்பதைப் பார்ப்போம்.

தில்லியில்தான் என்னுடைய இந்த சைட் பிஸினஸ் மிக விரிவடைந்தது. அப்போதெல்லாம் இம்மாதிரி வேலைகள் தில்லி மற்றும் பம்பாயில்தான் மிக அதிகமாக தேவைப்பட்டன. தில்லியில் வேலைகளைத் தட்டச்சு செய்து தரவேண்டும் அதை சமாளித்ததை ஏற்கனவே கூறிவிட்டேன். 1995-க்குப் பிறகு கணினி உபயோகம் அதிகரிக்க ஆரம்பித்தது. வாடிக்கையாளர்கள் என்னிடம் கணினியில் தட்டச்சு செய்து பிளாப்பியில் மொழிபெயர்ப்புகளைத் தருமாறு கேட்டனர். அப்போதைய நிலையில் என்னால் அது முடியாத காரியம். சொல்லப்போனால் சென்னைக்கு 2001-ல் திரும்ப வந்தவுடன்தான் 2002-ல் கணினியை வாங்கவே முடிந்தது. அது வரை என்ன செய்தேன்? அதுதான் தமாஷ்.

வாடிக்கையாளரின் கண்ணைப் பார்த்து சீரியஸாகப் பேச வேண்டும். "ஐயா, த்ங்கள் வேலைகளின் ரகசியம் காப்பாற்றப்பட வேண்டாமா?" என்று கேட்க, எந்த வாடிக்கையாளர்தான் அதை இல்லை என்று மறுப்பார்? ஆகவே அவரிடம் கூறுவேன்: "உங்கள் அலுவலகத்துக்கு வந்து நேரடியாகவே மொழிபெயர்ப்பை கையெழுத்தில் தொடங்கி விடுகிறேன். நான் வேலையை ஆரம்பித்து ஒரு மணி நேரம் கழித்து நீங்கள் தட்டச்சளரிடம் நான் எழுதிய காகிதங்களை சேர்ப்பித்து கொண்டேயிருங்கள். மாலை 4.30 மணிவாக்கில், தட்டச்சுகளின் ப்ரின்ட்-அவுட்டுகள் என்னிடம் வந்தால் அவற்றை நான் பிழைதிருத்தி விடுகிறேன். அன்றைய வேலை உங்கள் வன்தகட்டில் ஏறி விடும். வேறு யாருடையக் கணினியிலும் இருக்காது." சொல்லும் விதத்தில் சொன்னால் வாடிக்கையாளர் நிச்சயம் ஒத்துக் கொள்வார். நானும் ஏற்கனவே 1993-ல்விருப்ப ஓய்வு ஐ.டி.பி.எல்லிலிருந்து பெற்று கொண்டு விட்டதால் வாடிக்கையாளரின் அலுவலகம் செல்ல ஒரு தடையும் எனக்கு இருந்ததில்லை. என் மாதிரி வாடிக்கையாளர் அலுவலகத்துக்கு நேராக வந்து வேலை செய்யும் அளவுக்கு அப்போது தில்லியில் ஒரு ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர்கள் கிடையாது. பிறகு என்ன, என் காட்டில் மழைதான்.

சென்னைக்கு திரும்பி கிட்டத்தட்ட ஒரு வருடம் கயித்துத்தான் கணினி வாங்கினேன். அது வரைக்கும் தில்லியில் உள்ள என் வாடிக்கையாளருக்கு வேலைகளைத் தட்டச்சு செய்வித்து மின்னஞ்சல் இணைப்பாக கோப்புகளை அனுப்ப வேண்டியிருந்தது. நல்ல வேளையாக சென்னையில் தட்டச்சு செய்ய ஆட்களுக்குப் பஞ்சம் இல்லை. கணினி வாங்கிய பிறகு நிலமையில் மறுபடி மாற்றம். எல்லாவற்றையும் மின்னஞ்சல் மூலம் அனுப்ப முடிந்தது. பிளாப்பி கூட கிடையாது. என்னைப் பொருத்தவரை தொழில் நுட்பத்தில் ஒரு பெரிய தாவல் என்று கூற வேண்டும். ஆகவே இப்போதெல்லாம் வாடிக்கையாளர்களிடம் பேசும் விஷயத்தின் ரேஞ்சே தனி. வாடிக்கையாளர்கள் தட்டச்சு செய்து கொடுக்க வேண்டும் அல்லது பிளாப்பியில் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கூறினால், அவரிடம் நான் அதை விட சிறந்தமுறையில் சேவை தர முடியும் என்று கூறிவிடுகிறேன்.

சரி, இப்போது ஒரு வாடிக்கையாளர் தன் ஆவணங்களின் ரகசியம் பாதுக்காப்பதைப் பற்றிக் கூறினால் அதை எப்படி எதிர்கொள்வது? ரொம்ப சிம்பிள் ஜென்டில்மென். இப்போதும் வாடிக்கையாளர் அலுவலகத்துக்கே செல்வேன். நான் கேட்பதெல்லாம் ஒரு கணினி, அகலப்பட்டை இணையத் தொடர்பு ஆகியவை மட்டுமே. விருவிருவென்று வேலையைத் துவங்க வேண்டியதுதான். வாடிக்கையாளர் ஆனந்தக் கண்ணீர் விடாத குறைதான். சம்பந்தப்பட்ட மொழிக்கான ஆன்லைன் அகராதி, கூக்ளே ஒரு சாளரத்தில். தூள் கிளப்ப வேண்டியதுதான். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் சென்னையில் என்னளவுக்கு வேகமாக ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் வாடிக்கையாளர் அலுவலகத்துக்கே வந்து செய்பவர்கள் இல்லை என்று உறுதியாகக் கூறுவேன். கூடவே பொறியாளராக 23 வருடங்கள் வேலை செய்த அனுபவம் வேறு.

இன்னும் கணினி சம்பந்தமாக புது அனுபவங்கள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றையும் தொழிலில் பிரயோகிப்பதால் புது வாடிக்கையாளர்களைப் பிடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மேலே கூறிய நேர்மறை விஷயங்கள் என்னை வாடிக்கையாளர்களுடன் தைரியமாகப் பேரம் பேசுவதில் எல்லா வகையிலும் துணையாக உள்ளன.

என்னுடைய அனுபவங்களைக் கூறும்போதும் அவற்றை இவ்வாறு வெளியிடுவேன். பொறியாளராக 23 வருடம் அனுபவம், பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக 27 வருடம் அனுபவம், ஜெர்மன் மொழிபெயர்ப்பாளராக 30 வருட அனுபவம் ஆக 80 வருடங்கள் கூட்டு அனுபவம், ஆனால் வயதோ 59 என்பேன். எப்படி என்று வாடிக்கையாளர் கேட்க, ஓவர்டைம் என்பேன் சிரிக்காமல்.

சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால், நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதையே வலியுறுத்துங்கள். என்ன செய்ய முடியாது என்பதை வெறுமனே ஒரு முறை கூறி அதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கவும். அது ஒரு பெரிய விஷயமே இல்லை என்பது போல நடந்து கொள்ள வேண்டும்.

மீண்டும் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/09/2005

வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 8

எப்போதும் உங்களைத் தொடர்பு கொள்ள ஏதுவாக உங்கள் தகவல் வழிகளைத் திறந்து வைக்கவும். தொலைபேசி வைத்திருப்பது மிக முக்கியம். தொலைபேசி அழைப்புகளை நீங்களே கையாளுவது முக்கியம். குழந்தைகளைத் தொலைபேசியை எடுக்க விடாதீர்கள். அது முடியாது என்றால் உங்களுக்கென்றுத் தனியாக செல்பேசி வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களிடம் மட்டும் இருக்க வேண்டும். செல்பேசி "யூனிவர்செல்"பேசியாக மாறக் கூடாது. இதில் பல சாத்திய கூறுகள் உள்ளன.

இது மிகவும் முக்கியமான தேவையாகும். சந்தை உலகில் இப்போதெல்லாம் அவசரம் அதிகமாகி விட்டது. வாடிக்கையாளர்கள் உங்களை எப்போதும் தொடர்பு கொள்ள ஏதுவாக நீங்கள் ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். நல்லவேளையாக இப்போதெல்லாம் தொலைபேசி இணைப்புகள் உடனுக்குடன் கிடைத்து விடுகின்றன. நான் தொழில் ஆரம்பித்தபோது அதற்கு வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால் அப்போதெல்லாம் மொழிபெயர்ப்பு வேலைகள் இன்ஸ்டாக் எனப்படும் அரசுசார் அமைப்பின் மூலமாகத்தான் கிடைத்தன. அவர்கள் பதிவுத் தபாலில் வேலை அனுப்புவார்கள். அவற்றை மொழிபெயர்த்து தட்டச்சு செய்து இரண்டு காப்பிகள் தர வேண்டும். அது ஒரு காலம். கணினியில் தட்டச்சு செய்வது பற்றியெல்லாம் கனவிலும் நினைத்ததில்லை.

சரி, நிகழ்காலத்துக்கு வருவோம். நான் கூறப்போவது எவ்வளவு பேருக்கு தெரியும் என்று எனக்கு தெரியாது. இருந்தாலும் எதற்கும் கூறிவிடுகிறேன். வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில் தொலைபேசி அழைப்புகளை எதிர்க்கொள்ளுதல் மிகவும் முக்கியம். இதற்கெல்லாம் தனி ஆளா வைக்க முடியும்? மனைவி இருக்கிறார்தான். இருந்தாலும் அவர் எங்காவது வெளியில் செல்ல நேரிடலாம். அப்போது அழைப்புகள் யாரும் ஏறுக்கொள்ள இல்லாததால் வீணாகலாம். அதனால் வரும் நட்டம் கணக்கிட முடியாது. இதற்கு நான் மேற்கொள்ளும் முறை இதோ.

நான் எப்போது வெளியில் கிளம்பினாலும் என்னுடையத் தொலைபேசியில் கால் ட்ரான்ஸ்பரை செயலாக்கி விடுவேன். என் தொலைபேசிக்கு வரும் அழைப்புகள் என் செல்பேசிக்கு திருப்பப்படும். நான் இந்தியாவில் எங்கிருந்தாலும் அவை எனக்கு வந்து விடும். என்ன, நான் எங்கிருக்கிறேனோ அந்த இடத்தில் சிக்னல் இருக்க வேண்டும் அவ்வளவுதான். அது சாதாரணமாக எல்லா இடத்திலும் கிடைக்கும். ஆகவே வாடிக்கையாளரின் அழைப்புகளை நான் தவற விட்டேன் என்பதெல்லாம் இப்போதில்லை. இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள தொலைபேசி அலுவலகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். டாடா இண்டிகாம் தொலை பேசிகளில் இது ஏற்கனவே உள்ளது. ஆகவே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். உங்கள் தொலைபேசியில் 114 டயல் செய்து கூடவே நீங்கள் எந்த என்ணுக்கு அழைப்புகளை திசைதிருப்ப வேண்டுமோ அந்த என்ணை விடாது டயல் செய்யவும். அதாவது 13 எண்கள் ஒரேயடியாக டயல் செய்ய வேண்டும். ஒரு நீண்ட ஒலி கேட்கும். அப்போது உங்கள் கால் ட்ரான்ஸ்பர் ஏற்கப்பட்டது என்று பொருள். தொலைபேசியை ஒரு தடவை கீழே வைத்துவிட்டு மறுபடி எடுத்து கேட்டால், ஒரு வித்தியாசமான டயல் டோன் கேட்கும். இந்த நிலையிலும் நீங்கள் உங்கள் த்ப்லைபேசியிலிருந்து மற்ற இடங்களுக்கு டயல் செய்து பேசலாம். கால் ட்ரான்ஸ்பரை எடுக்க 115 டயல் செய்தால் போதும். நான் குடும்பத்துடன் தமிழ்நாடு டூர் செல்லும்போது வீட்டில் இருக்கும் இரண்டு தொலைபேசிகளுக்கும் கால் ட்ரன்ஸ்பர் செய்து விடுவேன். நிற்க.

உங்கள் செல்பேசி உங்களிடம்தான் இருக்கவேண்டும், யாரிடமும் தரக்கூடாது. இதில் நான் மிக கடுமையாக இருப்பேன். இல்லாவிட்டால் முக்கிய அழைப்புகள் வரும்போது யாராவது தேவையில்லாமல் உங்கள் செல்பேசியில் பேசிக் கொண்டிருப்பார்கள். இதில் முகதாட்சண்யத்துக்கு இடமில்லை. செல்பேசி செல்பேசியாக இருக்கட்டும் யூனிவெர்செல்பேசியாக வேண்டாம். அதே போல உங்கள் தொலைபேசிக்கு வரும் அழைப்புகளை நீங்கள்தான் எதிர்கொள்ள வெண்டும். கண்டிப்பாக குழந்தைகள் எடுக்கக் கூடாது. தொலைபேசியில் பேசும்போது மனதை லேசாக்கி பேசவேண்டும். மிருதுவாகப் பேசுதல் முக்கியம். கோபம் கூடவே கூடாது.

மீதியை அடுத்தப் பதிவில் பர்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/05/2005

வாடிக்கையாளர்களை அணுகும் முறைகள் - 7

நான் முதல் பதிவில் கூறிய அடுத்த விஷயத்தை இப்போது பார்ப்போம். நான் கூறியது:

"தேவையில்லாத விவரங்கள் கொடுக்காதீர்கள். உதாரணத்துக்கு நீங்கள் ஒரு முழு நேர வேலை வைத்திருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பு என்பது பகுதிநேரவேலை. அவ்வேலைக்கான வாடிக்கையாளரிடம் நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை ஒரு போதும் கூறக்கூடாது. அவர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை அடிக்கடி கேட்பார்கள். மரியாதையுடன் அதே நேரத்தில் உறுதியுடன் தகவல் தர மறுத்து விடவும். இது பற்றி நான் சந்தித்த சுவாரஸ்யமான அனுபவங்களைப் பிறகு கூறுகிறேன்."

ஐ.எஸ்.ஓ. 9001 பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே. அதில் கூறப்பட்ட முக்கிய விஷயங்களில் ஒன்று தகவல் மேலாண்மை ஆகும். கம்பெனியில் ஒருவரிடமோ அல்லது ஒரு குழுவிடமோ வேலை கொடுக்கும்போது அவ்வேலைக்குத் தேவையான எல்லா தகவல்களையும் தர் வேண்டும் ஆனால் தேவைப்படாத தகவல்கள்? மூச், தரவே கூடாது. இது என்னப் புதுக் கதை என்று வியப்பவர்களுக்கு: தகவல் என்பது சக்தி. தேவையற்றவருக்கு கொடுத்தால் கெட்டது குடி. இதில் மொழிபெயர்ப்பாளர் எங்கு வருகிறார் என்று கேட்கிறீர்களா? மேலே கூறிய சினேரியோவைப் பாருங்கள்.

உங்களிடம் உள்ளத் தகவல்கள் என்னென்ன?

நீங்கள் பொறியாளர். எவ்வளவு வருட அனுபவம்? உங்களுக்குத் தெரிந்த மொழிகள் என்னென்ன? ஒவ்வொன்றிலும் எவ்வளவு ஆண்டுகள் அனுபவம்? எவ்வளவு வேகமாக மொழிபெயர்க்க இயலும். ஒரு குறிப்பிட்ட வேலையை எப்போது முடித்துக் கொடுக்கத் தோதுப்படும்.

இவையெல்லாம் வாடிக்கையாளரிடம் கொடுக்க வேண்டுமா? கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். அவையும் உண்மையானத் தகவல்களாக இருக்க வேண்டும்?

கொடுக்கக் கூடாதத் தகவல்கள் என்ன என்பதைப் பார்ப்போம். நான் மேலே கூறியபடி நீங்கள் முழுநேர வேலையிலும் இருக்கிறீர்கள். எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதைத் தெரிந்துக் கொள்ள பல வாடிக்கையாளர்கள் முயலுவர். இதைத் தெரிந்து என்ன நல்லது ஆகப் போகிறது? ஒன்றுமேயில்லை என்பதுதான் பதில்.

என்ன கெட்டது ஆகப் போகிறது என்றக் கேள்விக்கோ அனேக பதில்கள் உள்ளன. ஒரு தகவலைக் கொடுத்தப் பிறகு அது உங்கள் கட்டுப்பாட்டில் இனிமேல் இருக்காது. அதற்கு மாறாக உங்கள் தலை மேல் தொங்கும் கத்தியாகிவிடும். வாடிக்கையாளர் உங்களை பயமுறுத்த ஓர் ஆயுதத்தைத் தேவையில்லாமல் நீங்களே அவர் கையில் கொடுக்கிறீர்கள். வேண்டுமென்றோ அல்லது எதேச்சையாகவோ கூட உங்கள் முழுநேர வேலை கொடுத்த முதலாளிக்கு நீங்கள் செய்யும் சைட் பிசினெஸ் தெரிய வந்தால் வீட்டிற்கு அனுப்புமளவுக்கு அது போய் விடலாம். அப்படித்தான் என் கம்பெனியில் ஒரு ஆடிட்டருக்கு வேலை போயிற்று.

என் விஷயம்? இருவருக்கே என் கம்பெனியில் தெரியும். ஒருவர் டைப்பிஸ்ட், இன்னொருவர் அந்த டைப்பிஸ்டின் அடுத்த மேல்நிலையில் உள்ள அதிகாரி. அவர்களுக்குக் கூட நான் வெளிவேலை செய்கிறேன் என்பதுதான் தெரியுமே ஒழிய, எங்கிருந்து அவற்றைக் கொண்டு வருகிறேன் என்பது தெரியாது. ஏனெனில் அது அவர்களுக்குத் தேவையற்றத் தகவல். டைப்பிஸ்ட் இதில் எங்கு வந்தார்? என் மொழிபெயர்ப்புகளைத் தட்டச்சு செய்வது அவரே. அவருக்கு ஒரு பக்கத்துக்கு இத்தனை ரூபாய் என்று ஏற்கனவே பேசி வைத்துக் கொண்ட விலையில் எவ்வளவு பக்கங்கள் தட்டச்சு ஆகிறதோ அதற்கான முழுதொகையையும் உடனுக்குடனே செட்டில் செய்துவிடுவேன். ஆகவே அவர் நான் செய்யும் வேலை குறித்து வாய் திறக்கப் போவதில்லை. அந்த டைப்பிஸ்டின் மேலதிகாரி? இது சுவாரஸ்யமானது. முதலில் அவர் எனக்கு நெருங்கிய நண்பர். அதை விட டைப்பிஸ்டுக்கு வேலை கொடுக்குமுன் அவரிடம் நான் கம்பெனி வேலையில் ஒரு பாக்கியும் இருக்கக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டேன். ஒரு தற்பாதுகாப்பு என்று வைத்து கொள்ளுங்களேன். ஆக நடந்தது என்ன? மேலதிகாரி கொடுக்கும் காகிதங்கள் கடகடவென்றுத் தட்டச்சுச் செய்யப்பட்டு, அவர் மேஜைக்குத் திரும்பச் சென்றன. அவருக்கு அதில் மிக்க மகிழ்ச்சி. என் வேலையைச் செய்வதால் அவர் வேலை தாமதமின்றி நடந்தது. அவரும் என்னைப் பற்றி ஒன்றும் கூறப் போவதில்லை. உண்மையைக் கூறப்போனால் நான் 10 நாள் விடுமுறைக்குப் பிறகு வேலைக்குச் சென்ற போது என்னை உற்சாகமாக வரவேற்றது அந்த டைப்பிஸ்டும் அவர் மேலதிகாரி மட்டும்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆக ஐ.டி.பி.எல்லில் இருந்த 12 வருடங்களும் கனவுபோலக் கடந்தன.

டில்லிக்கருகில் இருந்த நோய்டாவில் ஒரு வாடிக்கையாளர். முதலாளியே என்னை நான் எங்கே வேலை செய்கிறேன் என்பதையெல்லாம் ஒன்றுமே கேட்கவில்லை. கீழ்மட்டத்தில் இருக்கும் பொறியாளர் ஒருவர் ரொம்பவும் தொந்திரவு கொடுத்தார். நான் எங்கெ வேலை செய்கிறேன் என்பதை அடிக்கடி என்னிடம் கேட்டு வந்தார். நானும் பொறுமையாக அவருக்கு தகவல் எதையும் கொடுக்க மறுத்தேன் "ராகவன், நான் உங்கள் நண்பன், என்னிடம் கூறக் கூடாதா?" என்று கேட்டார். எனக்கு கோபம் வந்தது. இருந்தாலும் அதை வெளியில் காண்பிக்காமல் அவரிடம் கூறினேன். "ஐயா, நீங்கள் என் நண்பனல்ல விரோதி" என்று. "என்ன அப்படிக் கூறிவிட்டீர்கள்" என்று கேட்டதற்கு "அப்படித்தான்" என்று பதில் கூறி இடத்தைக் காலி செய்தேன் விருப்ப ஓய்வு பெர்று கொண்டப் பிறகு அந்த அலுவலகம் சென்றேன். அப்போது அவர் மறுபடியும் நான் வேலை செய்யும் இடத்தைப் பற்றிக் கேட்டபோது உண்மையைக் கூறினேன். நான் அந்த வேலையில் இல்லை என்பதையும் கூறினேன். அப்போது அவர் கூறியது என்னை வியப்பிலாழ்த்தியது. "அடேடே ஐ.டி.பி.எல்லா? அங்கேதானே என் மனைவியின் தம்பி வேலை செய்கிறான் என்று அவன் பெயரைக் கூற அவன் எனக்கும் தெரிந்தவன்! முன்னாலேயே உண்மையைக் கூறியிருந்தால் அதோகதிதான் என்று நினைத்துக் கொண்டேன்.

தெரிவிக்க வேண்டியத் தகவல்கள், தெரிவிக்கக் கூடாதத் தகவல்கள் ஆகியவை அதே கேடகரியில் இருப்பதில்லை; அவை மாறக்கூடியவை. இப்போதெல்லாம் ஐ.டி.பி.எல்லில் முழுநேர மொழிபெயர்ப்பாளராக இருந்ததைச் சொல்வது மிக முக்கியம். புது வாடிக்கையாளருக்கு நம் மேல் அதிக நம்பிக்கை வரும்.

அடுத்த விஷயம் அடுத்தப் பதிவில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது