Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

12/12/2010

ராஜாவை அழைத்து கருணாநிதி கேள்வி : சி.பி.ஐ., ரெய்டு குறித்து விளக்கம் கேட்டார்

முதலில் தினமலரில் வந்த இச்செய்தியை பார்த்து விடுங்கள். பிறகு என் கருத்தைத் தெரிவிக்கிறேன்

ராஜாவை அழைத்து கருணாநிதி கேள்வி : சி.பி.ஐ., ரெய்டு குறித்து விளக்கம் கேட்டார்
ஸ்பெக்ட்ரம் "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, டில்லியிலும், தமிழகத்திலும் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி முடித்துள்ள நிலையில், முதல்வர் கருணாநிதி நேற்று ராஜாவை சென்னைக்கு அழைத்து விளக்கம் கேட்டார். "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது, சி.பி.ஐ., ரெய்டில் நடந்தது என்ன?' என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி, முதல்வர் விரிவாக விசாரணை நடத்தினார்.

ஸ்பெக்ட்ரம் "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் காரணமாக, 1.76 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பியதை அடுத்து, சி.பி.ஐ., களத்தில் இறங்கியது. கடந்த 8ம் தேதி, முன்னாள் அமைச்சர் ராஜா, அவரது முன்னாள் உதவியாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலரது வீடுகளிலும், சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். டில்லி, சென்னை, பெரம்பலூர் என 14 இடங்களில் நடந்த சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்களையும், பண பரிமாற்றம் தொடர்பான ராஜாவின் முக்கிய டைரி ஒன்றையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைப்பற்றினர். சி.பி.ஐ., நடவடிக்கையால், முதல்வர் கருணாநிதி கடும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், ராஜாவை அழைத்து முதல்வர் விரிவாக விசாரணை நடத்தினார்.

சி.ஐ.டி., காலனியில் உள்ள இல்லத்தில் முதல்வர் கருணாநிதியை, நேற்று காலை ராஜா சந்தித்தார். சந்திப்பின் போது, ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியும், சி.பி.ஐ., ரெய்டு குறித்தும், அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும், முதல்வர் விளக்கம் கேட்டறிந்தார். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும், அடுத்த கட்டமாக ராஜாவை அழைத்து விசாரணை நடத்தி, அவர் தரும் பதில்களின் அடிப்படையிலும், சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ராஜாவை விசாரணைக்கு அழைத்தால், அடுத்து என்னென்ன விளைவுகள் ஏற்படும், அதனால் யார், யார் சிக்குவார்கள், டைரியில் யார், யாருடைய பெயர்கள் எல்லாம் இருக்கின்றன, விசாரணையை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும், முதல்வர் விரிவாக விவாதித்ததாக தெரிகிறது. சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் மக்கள் மத்தியில் ஆளுங்கட்சிக்கு பெரிய இழப்பு ஏற்படுமோ என்று, தி.மு.க., தலைமை அஞ்சுகிறது. இதனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்தடுத்து பெரிய நெருக்கடி ஏற்பட்டால், கட்சியில் ராஜா வகித்து வரும் கொள்கை பரப்பு செயலர் பதவிக்கும் ஆபத்து வரலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விசாரணைக்கு தயார்: நேற்று முன்தினம் இரவு 12.10 மணிக்கு, டில்லியில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் ராஜா, சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் பேட்டியளிக்கும்போது, "ஸ்பெக்ட்ரம் புகார் குறித்த சி.பி.ஐ., விசாரணை என்பது வழக்கமான நடைமுறை. சி.பி.ஐ.,யின் இந்த நடவடிக்கைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்து, குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்' என்றார்.


இப்போது டோண்டு ராகவன்.

கருணாநிதி நிச்சயமாகவே கேட்டிருக்கக் கூடிய ஒரு கேள்வியை நான் ஊகிக்கிறேன்.

“என்ன ராசா, நீங்கள் பதவி இழந்து இவ்வளவு நாட்கள் ஆச்சு. உங்களை விசாரிக்கவில்லையேன்னு எல்லோரும் கேள்வி கேட்டு, சுப்ரீம் கோர்ட்டும் அரசுக்கும் சிபிஐக்கும் கிடுக்கிப் பிடி போடுவதும் பல நாட்களாகவே எல்லோரும் பார்த்துத்தான் வந்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் இப்படியா அஜாக்கிரதையாக டயரியை ரெய்டில் சிக்குமாறு வைப்பது”?

ராசா என்ன பதிலளித்திருப்பார் என்பதை நான் உங்களது ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.

ஆனால் ராசா அப்பால் சென்றதும், கருணாநிதி மேலும் இம்மாதிரி யோசித்திருக்கலாம். டயரியை சி.பி.ஐ. கண்டுபிடிக்க வேணும் என்பதே ராசாவின் நோக்கமாகக் கூட இருக்கலாம். அப்போதுதானே தன்னுடைய கூட்டாளிகள் மற்றும் புரவலர்களும் மாட்டுவர்? மேலும், இந்த நடவடிக்கைக்கு தான் முழு ஒத்துழைப்பு கொடுத்து, குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பதாக ராசா கூறுவது எந்த வரைமுறையில் வரும்? அப்ரூவராக மாறினால் தண்டனை கிடைக்காது/கணிசமான அளவில் குறையும் என்பது அவருக்குத் தெரியாதா?

இதனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்தடுத்து பெரிய நெருக்கடி ஏற்பட்டால், கட்சியில் ராஜா வகித்து வரும் கொள்கை பரப்பு செயலர் பதவிக்கும் ஆபத்து வரலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிப்பதும் கருணாநிதி தன்னைத் தானே கேட்கும் கேள்வியின் விளைவுதானோ?

அது சரி, சுப்பிரமணியன் சுவாமியின் கூற்றுப்படி 10% (ராசா) 30% (கருணாநிதி) சம்பாதித்தவருக்கே இந்த மன உளைச்சல் என்றால் 60% சம்பாதித்தவர் (சோனியா) எவ்வளவு யோசிக்க வேண்டும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/08/2010

2-G Spectrum சம்பந்தமாக ஜெயா டிவியில் வந்த பேட்டிகள் - 3. சுப்பிரமணியன் சுவாமியுடன் பேட்டி

சுப்பிரமணியன் சுவாமியை கே.பி. சுனில் கண்ட பேட்டியின் ஒன்பது வீடியோக்கள்
சுவாமியின் கொச்சைத் தமிழ் சற்றே படுத்துகிறது. இப்போது பேட்டிக்கு போவோம். அது நடக்குமிடம் புது தில்லியில் இந்தியா கேட்டுக்கு அருகில்.

சுனில் வைத்த முதற் கேள்வி என்னவென்றால் முதலில் சுப்பிரமணியன் சுவாமி சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பிய விண்ணப்பத்தில் பிரதம மந்திரி ஒரு நடவடிக்கையையும் எடுக்காததை சாடி இருந்தார். ஆனால் இப்போது நிலைமை இவ்வளவு தீவிரமாக வந்த நிலையில் சுவாமி பிரதம மந்திரிக்கு ஆதரவு அளிப்பது போல ஏன் பேசுகிறார் என்பதே. இதற்கு சுவாமியின் பதிலில் பிறகுதான் தனக்கு பிரதம மந்திரி அவரது புகார்களின் மேல் எடுத்த நடவடிக்கை தெரிய வந்தது என்றார். தனது ஒவ்வொரு கடிதத்தையும் பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு ஆக்‌ஷன் எடுக்குமாறு நோட் போட்டதாகவும், அந்த அதிகாரிகள் அவற்றை தாமதமாக சட்ட அமைச்சகத்துக்கிஉ அனுப்பியதாகவும், சட்ட அமைச்சகம் பிரதமருக்கு தவறான அறிவுரைகள் தந்தது என்கிறார். அவருக்கு இதில் உள்ள சட்ட நுணுக்கங்களை யாருமே அவருக்கு எடுத்துக் கூறவில்லை என்கிறார்.

அதாவது பிராசிக்யூஷனுக்கு அனுமதி கேட்டு சுவாமி எழுதியதில் ப்ரிமா ஃபேசி கேஸ் இருந்தால் அனுமதி தருவதோ அல்லது மறுப்பதோதான் பிரதமர் செய்ய வேண்டியது. அதை விடுத்து அவரும் அவற்றை இன்வெஸ்டிகேட் செய்யப் புகலாகாது. ராசாவுக்கு இது பற்றி ஒரு தகவலும் தரலாகாது போன்ற விஷயங்களை சுப்ரீம் கோர்ட் கூறியது. இது பற்றி பிரதமருக்கு ஐடியாவே இல்லை. அவர் சட்ட நிபுணர் இல்லை, பொருளாதார நிபுணரே.

இம்மாதிரி தவறாக தகவல் தந்து அவரை திசை திருப்பவைத்து, அவர் பெயரைக் கெடுத்து அவரை பதவிலிருந்து நீக்கி ராகுலை கொண்டுவரவும் சதி இருக்கிறது என்பதை தான் உணர்ந்ததாலேயும், அதற்கு தான் ஏன் துணை போக வேண்டும் என நினைத்ததாலேயுமே தான் இப்போது பிரதமர் விஷயத்தில் அடக்கி வாசிப்பதாக சுவாமி கூறுகிறார். பிரதமரை எப்போது வேண்டுமானாலும் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் சோனியாவுக்கு இருந்தாலும். நல்லவர் என பெயர் எடுத்திருக்கும் பிரதமரின் பெயரை கெடுத்து பிறகு அவரை வெளியேற்றுவதுதான் அஜெண்டா என்றும் கூறுகிறார்.உங்களுக்கு எப்படித் தெரியும் என சுனில் கேட்க, சுவாமி தனக்கும் காங்கிரசில் தகவல் சொல்ல ஆட்கள் உள்ளனர் என்றார்.

பிரதமர் நிஜமாகவே ஒன்றும் செய்யாது அமர்ந்திருந்தால் தானும் அவர் ராஜினாமாவை கோரியிருப்பார் என்றும் அவர் கூறினார். பிரதமருக்கு தான் கடைசியாக எழுதிய கடிதத்தில் பிரதமர் இரு விஷயங்களை உடனுக்குடன் செய்தால் தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

1. தவறாக பெறப்பட்ட லைசன்சுகலை ரத்து செய்வது. 2. பணம் தவறாக ஈட்டியவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பது. கபில் சிபல் இப்போது செய்யும் நடவடிக்கைகள் அரைமனதாகத்தான் உள்ளன என்றும் அவர் கூறுகிறார். இவ்வளவு நாட்கள் ஆகியும் ராசாவை விசாரிக்கக் கூட இல்லை, அவர் பெயரைக்கூட குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கவில்லை. இதெல்லாம் செய்யக் கோரி தான் நடவடிக்கை எடுக்க இருப்பதாக சுவாமி கூறுகிறார். இனிமேலும் பிரதமர் வெறுமனே லெட்டர்களை மட்டும் அதிகாரிகளுக்கு பாஸ் ஆன் செய்யாது தீவிரமாகச் செயல்பட வேண்டும் எனக் கூறப்போவதாவும் கூறுகிறார். இனிமேலும் அவரது சட்ட அறிவுக்குறைவு சாக்காக அமையலாகாது எனவும் சிரித்துக் கொண்டே கூறுகிறார்.

வெறுமனே ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட வெத்துவேட்டுக் கம்பெனிகள் பற்றியும் கூறுகிறார் (வீடியோ-4-ன் இறுதி, வீடியோ-5). அவற்றில் தாவூத் இபரஹீம் ஆகிய கொலைகாரர்களின் ஈடுபாடும் இருப்பதையும் கோடி காட்டுகிறார். ராசா, கருணாநிதி, அவர் குடும்பத்தினர் ஆகியோரும் இன்வால்வ் ஆகியிருப்பதையும் எடுத்துரைக்கிறார். கருப்புப் பணம் இந்த நிலையில் வெளுப்பாக மாற்றப்படும் வித்தை பற்றி சுனில் கேட்க அதையும் சுவாமி ஆமோதிக்கிறார். ஐ.எஸ்.ஐ. யின் தொடர்பையும் சுவாமி குறிப்பிடுகிறார்.

இதனால் எல்லாம் நாட்டின் பாதுகாப்புக்கே குந்தகம் என்றும், இந்த ஊழலை நடத்தியவர்கள் நாட்டுக்கே துரோகம் செய்கிறார்கள் என்றும் சுவாமி எச்சரிக்கிறார்.

தான் சிபிஐக்கும் பிரதமருக்கும் ராசா மேல் கேஸ் போடச் சொல்லி கடிதம் எழுதி ஒரு வாரம் அவகாசம் தரப்போவதாகவும், அப்போதும் ஆக்‌ஷன் இல்லாவிட்டால் தானே கேஸ் ஃபைல் செய்யப் போவதாகவும் கூறுகிறார். இந்த ஊழலில் ரியல் எஸ்டேட் கம்பெனிகள் புகுந்திருப்பது ஹவாலா ஆப்பரேஷன்களுக்காக என்றும் அவர் கூறுகிறார்.

சோனியா காந்தியின் சகோதரிகளது இன்வால்வ்மெண்ட் பற்றியும் சுவாமி பேசினார். கருப்புப் பணச் சலவை விஷயங்களை அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதலுடன் அவதானித்து வருவதாகவும், அதன் கணினிகளில் எல்லா விவரங்களும் இருப்பதாகவும் சுவாமி கூறுகிறார். பிரதமர் பணச்சலவை என்னும் காரணத்தைக் கூறி அத்தகவல்கலை அதிகாரபூர்வமாகவே பெறலாம் என்றும், தன்னிடம் அவை ஏற்கனவேயே இருந்தாலும் அவற்றுக்கு அதிகார பூர்வ அந்தஸ்து இல்லை என்றும் சுவாமி கூறுகிறார். ஆனால், இவை எல்லாவற்றையும் தான் கோர்ட்டில் கூறி பிரதமரை நிர்பந்தத்துக்கு உட்படுத்த முடியும் என்றும் சுவாமி கூறுகிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக சர்காரியா கமிஷனால் விஞ்ஞானபூர்வ ஊழலாய் செய்து வருவதாகக் கூறப்பட்ட திமுக தற்போது எலெக்ட்ரானிக் ஊழலாக செய்து திருடன் முன்னேற்றக் கழகமாக நடந்து கொள்கிறது. அதைத் தோற்கடிக்க மக்களாலேயே முடியும் என்றும் சுவாமி கூறுகிறார்.

வரவிருக்கும் தேர்தலில் தமிழக மக்களை விலைக்கு வாங்கும் திருமங்கலம் ஃபார்முலா பற்றி சுனில் கேட்க, அது கண்டிப்பாக நடக்கும், ஆனால் தனக்கு மக்கள் மேல் இன்னும் நம்பிக்கை உண்டு என சுவாமி கூறுகிறார். 1977-ல் இந்திரா காந்தி வெர்றி பெறுவார் என அமெரிக்காவே அவதானித்தபோது, மக்கள் அவருக்குப் படுதோல்வி தரவில்லையா என சுவாமி குறிப்பிட்டார். இப்போது திமுக தரும் பணத்தை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு மக்கள் அதற்கெதிராக வாக்களித்தாலும் வியப்பதற்கில்லை என்றும் அவர் கூறுகிறார்.

சோனியாவின் சகோதரிகளின் பெயர் அனுஷ்கா மற்றும் நாடியா. அவை இத்தாலியப் பெயர்கள் இல்லையே எனக் கேட்க, அனுஷ்கா ஒரிஜினல் பெயர் அலெக்ஸாண்ட்ரா, நாடியாவின் பெயர் அலீஷியா (அலீச்சா என்பதுதான் சரியான இத்தாலிய உச்சரிப்பு என்று கூறுவது டோண்டு ராகவன்). சோனியாவின் பெயரோ அந்தோனியா. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஹிட்லரின் படையில் போர்வீரராக சென்ற சோனியாவின் தந்தை மெயினோ ரஷ்யாவில் யுத்தக் கைதியாக நான்கு ஆண்டுகள் இருந்ததாக சுவாமி கூறுகிறார். யுத்தம் முடிந்ததுமே ரஷ்ய யதார்த்தத்துக்கு மாறாக மெயினோ விடுதலை ஆனதே அதிசயம், ஏனெனில் ஸ்டாலின் காலத்தில் மினிமம் சிறை தண்டனையே 20 ஆண்டுகள். இவர் கேஜிபியில் சேர்ந்து பணிபுரிந்ததால் இந்த நிலை. அவரது ரஷ்ய ஆதரவுக்கு அடையாளமாகத்தான் அவரது பெண்களின் பெயர்கள் சோனியா, அனுஷ்கா மற்றும் நாடியா என மாற்றப்பட்டன.

இன்னும் சுவாமி ஆற்ற வேண்டிய பணிகள் அனேகம் என்றும் அவரும் ஜெயா டிவிக்கு அடிக்கடி வருவார் என்ற நம்பிக்கையை சுனில் கூற, பேட்டி முடிந்தது.

டோண்டு ராகவனுக்கு இப்போது ஒரு பயங்கர டவுட்டு. சோனியாவே கொள்ளை அடித்திருக்கும் நிலையில் (60%) பிரதமரால் ஹானஸ்டாக எப்படி செயல்பட முடியும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/07/2010

2-G Spectrum சம்பந்தமாக ஜெயா டிவியில் வந்த பேட்டிகள் - 2. பிரகாஷ் காரத்துடன் பேட்டி

பிரகாஷ் காரத்தை கே.பி. சுனில் கண்ட பேட்டியின் ஒன்பது வீடியோக்கள்
பிரகாஷுக்கு தமிழ் தெரியாததால் வேறு வழியின்றி பேட்டி ஆங்கிலத்திலேயே நடந்தது.

தன் அறிமுக உரையில் சுனில் அரசியலில் இரு துருவங்களாக செயல்படும் பாஜகாவும் சிபிஐ மார்க்சிஸ்டும் ஒன்று சேர்ந்து செயல்பட 1,76,000 கோடி அளவில் மோசடி செய்யப்பட வேண்டியிருந்தது எனக் கூறுகிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கும்மேலாக நடந்து வரும் இவ்வளவு பெரிய ஊழல் விவகாரத்தை காரத்தின் கட்சி எப்போது உணர்ந்தது என சுனில் கேட்க, 2007-ன் இறுதியிலேயே அதை உணர்ந்ததாகவும், 2008 பிப்ரவரில் அக்கட்சியின் ராஜ்யசபா தலைவர் பிரதமருக்கு இது பற்றிக் கடிதம் எழுதியதாக காரத் கூறுகிறார். தங்கள் கட்சி நஷ்டத்தின் அளவை மதிப்பிட்டதின் அடிப்படையையும் கூறுகிறார். இருப்பினும், தலைமை தணிக்கை அதிகாரியின் ரிப்போர்ட் வந்ததும்தான் நிலையே சூடு பிடித்தது என சுனில் சுட்டிக் காட்டுகிறார்.

பிறகு நான் மேலே அவரது அறிமுக உரை சம்பந்தமாகக் குறிப்பிட்ட விஷயத்தை சுனில் தொட, காரத்தோ இவ்வளவு பெரிய அளவில் ஊழல் நடந்தால் எதிர்க்கட்சிகள் அதை எதிர்ப்பதில் ஒன்றாவது ஒன்றும் புதிது இல்லை எனக் கூறுகிறார். அரசும் பாராளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க மறுப்பதில் தீவிரமாக இருப்பதை சுட்டிக் காட்டிய சுனில் அரசின் மோட்டிவேஷன் பற்றி கேள்வி கேட்கிறார்.

அரசு சிபிஐயிடம் கேஸை ஒப்படைத்து ஓராண்டுக்குன் மேல் ஆகியும் பலன்கள் லேது. பாராளுமன்ற கூட்டுக்குழுவால்தான் மொத்தமாகப் பார்க்க இயலும். சிஏஜியோ பப்ளிக் அக்கௌண்ட்ஸ் கமிட்டியோ எல்லா விஷயங்களையும் தொட முடியாது என்றும் காரத் கூறுகிறார். இருப்பினும் ஏன் அரசு பிடிவாதமாக எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மறுக்க வேண்டும் என்பதற்கு காரத் இதை அரசு தரப்பிலிருந்து ஒரு damage limiting exercise ஆகவே பார்க்கிறார். ராசாவின் ராஜினாமாவுக்கு பிறகு விவகாரத்தை பூசிமொழுகவே அரசு நினைக்கிறது என்கிறார் அவர்.

ஜேபிசி மட்டுமே போதாது, அரசு நிலைமையை கட்டுக்கு கொண்டு வரவும், 1,76,000 கோடி ரூபாயை திரும்பப் பெற வேண்டும் என காரத் கூறுகிறார். முதல் ஸ்டெப்பாக ட்தவறான முறையில் அளிக்கப்படும் லைசன்சுகள் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது விசாரணையை உத்தேசித்து சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என ஆலோசனை தருகிறார். இந்த விஷயத்தில் ஜேபிசியும் உதவ முடியும் என்கிறார். கூடவே வெளியே சென்ற பணத்தையும் ட்ரேஸ் செய்ய வேண்டும். இது சம்பந்தமாக ராடியா டேப்புகளும் பிக்சருக்கு வந்தன.

டெலிஃபோன்களை ஒட்டுக் கேட்பது சரியா தவறா என்றும் கேள்வி எழுந்தது. அரசியல் கட்சிகளின் தலைவர்களது போன்களை ஒட்டுக் கேட்பதை காரத்தின் கட்சி முன்னால் ஆட்சேபித்தது. ஆனால் ராடியா டேப்பில் வெளியான விவரங்கள் ஏற்கனவேயே சிபிஐக்கு தெரிந்தாலும் அது ஏன் செயல்படவில்லை என சுப்ரீம் கோர்ட் கேட்பதற்கும் இந்த டேப்புகள் வழிவகை செய்துள்ளன என காரத் கூறுகிறார். ஆகவே இந்த விஷயத்தில் ஒட்டுக் கேட்டலை அவர் ஆதரித்தார் என்றுதான் நாம் முடிவு செய்ய வேண்டியுள்ளது.

இந்த விஷயத்தில் பாராளுமன்றம் முடக்கப்படுவது தவிர்க்க இயலாது என காரத் கூறினார். போஃபோர்ஸ் விவகாரத்தில் 45 நாட்கள் பாராளுமன்றம் முடக்கப்பட்டது பற்றி இத்தருணத்தில் அவர் குறிப்பிட்டார்.

மேலும் ஜேபிசி கவர் செய்ய வேண்டிய காலகட்டம் 1998-லிருந்து கூட இருக்கலாம் என எதிர்க்கட்சிகள், பிஜேபி உட்பட, ஒத்துக் கொண்டதையும் காரத் சுட்டிக் காட்டினார்.

கருணாநிதி ராசா தலித் என்னும் விஷயத்தை வைத்து விளையாடுவது பற்றி பேச்சு வர, காரத் அது ஒரு நொண்டிச் சாக்கு எனக்கூறி, அதைப் புறந்தள்ளினார்.

ராடியா டேப்புகள் பற்றி மீண்டும் குறிப்பிடுகையில் மந்திரி சபை அமைக்கும் விஷயத்தில் பெரு முதலாளிகள் மூக்கை நுழைப்பது பற்றியும், இது தனியார்மயமாக்கப்படாதாலும் வந்த விஷய்மா எனக் கேள்வி கேட்கப்பட்டது. காரத்தோ, அரசியல் கட்சிகளே தனியார்மயமாக்கபபட்டு விட்டதாகக் கூறினார்.

சுப்ரீம் கோர்ட் அரசின் அன்றாட அலுவல்களில் தலையிடுவது மகிழ்ச்சி அளிக்காவிட்டாலும் இந்த விஷயங்களில் அது தவிர்க்க முடியாதது என காரத் கூறினார்.

இனிமேல் நடக்கப் போவது பற்றி பேசுகையில் அரசு இதை பூசிமொழுக முயற்சி செய்யலாம் என்பதை சுனில் மற்றும் காரத் இருவருமே ஒத்துக் கொண்டனர்.

இந்த ஊழலில் திமுக தான் ஈட்டிய பணத்தை வைத்து வரும் தேர்தலில் ஜெயிக்க முயலுமா என சுனில் கேட்க, அப்பணம் ஏற்கனவேயே 2008, 2009-ல் நடந்த தேர்தல்களில் ஒரு பகுதி செலவாகி விட்டது என்ற குண்டைத் தூக்கிப் போட்டார். இது கவலையளிக்கும் விஷயம் என்றும் இதை மக்களாக விழிப்புடன் இருந்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சுனில் நன்றி தெரிவிக்க, பேட்டி முடிவுக்கு வந்தது.

என் தரப்பிலிருந்து இன்னும் குறையாக இருப்பது காங்கிரஸ் இந்த விவகாரத்தில் கொள்ளை அடித்தது பற்றி இருவருமே பேசவில்லை.

ஞாநி பேட்டிக்கான பதிவில் நான் எழுதியதை சற்றே மாடிஃபை செய்து எழுதுகிறேன்.

காங்கிரசுக்கும் ஊழல் பணத்தில் பங்கு போயிருக்கும் என்னும் எண்ணத்தைக் கூட வெளியிடாது சுனிலும் காரத்தும் பூசி மெழுகியது ஆயாசத்தையே வரவழைக்கிறது. அதிமுக வரும் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டு சேரும் வாய்ப்பைக் கெடுக்கக் கூடாது என்பதற்காகவே ஜெயா டிவி அடக்கி வாசித்திருப்பதாகத் தோன்றியது. ஆனால் காரத்துக்கு என்ன கம்பல்ஷன் அதை மறைப்பதில்?

சரி, சரி. அடுத்த பேட்டி சுப்பிரமணிய சுவாமியினுடையது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2-G Spectrum சம்பந்தமாக ஜெயா டிவியில் வந்த பேட்டிகள் - 1. ஞாநியுடன் பேட்டி

ஞாநியை கே.பி. சுனில் பேட்டி கண்டதன் 9 வீடியோக்கள்
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ஆதியிலிருந்தே ட்ரேஸ் செய்து ஞாநி அளித்த தகவல்கள் இவற்றில் காணப்படுகின்றன.

அரசுக்கு வருவாய் இழப்பு என்பது அனுமானத்தின் அடிப்படையில் வந்தது என்று ராஜா கூறிவருவதை ஞாநி அழுத்தமான வாதங்களால் தகர்க்கிறார். ஒரு குறைந்த விலையில் லைசன்சுகளை பெற்றதுமே சம்பந்தப்பட்ட கம்பெனிகளது ஷேர்களின் விலை பல மடங்கு உயர்ந்ததே ராஜாவின் கூற்றைப் பொய்யாக்குகிறது. ஆனால் அதே சமயம் லைசன்சுகளை முதலில் வந்தவர்களுக்கு அளிப்பதாகக் கூறியதிலும் பல தில்லுமுல்லுகள் நடந்திருப்பதை ஞாநியின் பேட்டி கவர் செய்யவில்லை என்பதும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது.

அழகிரி வீட்டு திருமணத்தில் கலைஞர் குடும்பத்தின் அத்தனை உட்குழுக்களை சார்ந்தவர்களும் மேடையில் நின்று போஸ் கொடுத்த விஷயத்தில் அனைவருமே நடிப்புக்கான ஆஸ்கர் பெறத் தகுதியானவர்கள் என ஞாநி குறிப்பிட்டதும் தமாஷாக இருந்தது.

அதே போல ராசா மட்டுமே ஊழல் செய்திருக்க முடியாது, அவரது கட்சியினருக்கும் கணிசமான பங்குகள் போயுள்ளன என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறிய ஞாநி, ராசாவை இவ்வளவு காலம் காங்கிரசும் பிரதமரும் சகித்துக் கொண்டிருந்ததற்கு ஒரே காரணமாக கூட்டணி தர்மம் என ஜயந்தி நடராஜன் உளறியதை அப்படியே ஏர்றுக் கொண்ட பாவனையில் பேட்டி அமைந்திருந்தது என்பதும் ஏமாற்றமளிக்கிறது.

காங்கிரசுக்கும் ஊழல் பணத்தில் பங்கு போயிருக்கும் என்னும் எண்ணத்தைக் கூட வெளியிடாது சுனிலும் ஞாநியும் பூசி மெழுகியது ஆயாசத்தையே வரவழைக்கிறது. அதிமுக வரும் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டு சேரும் வாய்ப்பைக் கெடுக்கக் கூடாது என்பதற்காகவே ஜெயா டிவி அடக்கி வாசித்திருப்பதாகத் தோன்றியது. ஆனால் ஞாநிக்கு என்ன கம்பல்ஷன் அதை மறைப்பதில்? ஒரு வேளை அது பர்றியும் அவர் பேச விரும்பியிருக்கலாம், ஆனால் அலவ் செய்யப்படவில்லை என்றால் அந்த விஷயத்தை அவர் கல்கியில் வெளியாகும் தனது ஓ பக்கங்களில் குறிப்பிடுவாரா என்பது இப்போது எனக்குள் எழும் முக்கியக் கேள்வி.

இந்தப் பேட்டி வெளியான தேதி வீடியோக்களில் காணப்படவில்லை என்பதை ஒரு தகவல் குறைபாடாகவே காண்கிறேன்.

இந்த விஷயத்தில் இன்னும் பலருடைய பேட்டிகளும் வந்துள்ளன, உதாரணத்துக்கு ஜெயலலிதா, சோ, வைக்கோ, தா. பாண்டியன், சுப்பிரமணியன் சுவாமி, பிரகாஷ் காரத் ஆகியோர்.

சோவின் பேட்டியை நான் ஏற்கனவே கவர் செய்து விட்டேன்.

அடுத்த பதிவில் சுப்பிரமணியன் சுவாமியின் பேட்டியா அல்லது பிரகாஷ் காரத்தின் பேட்டியா என்பதைப் பார்க்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/06/2010

நரேந்திர மோதியை கொல்ல சதி திட்டம்: விக்கி லீக்ஸ் வெளியிட்ட தகவல்

நரேந்திர மோதியை கொல்ல சதி திட்டம் பற்றி விக்கி லீக்ஸ் வெளியிட்ட தகவல் மூலம் தெரிய வந்தது. அது பற்றிய கீழே உள்ள வரிகள் நக்கீரனில் வந்துள்ளன. நன்றி: நக்கீரன்

குஜராத் முதல்வர் நரேந்திர மோதியை படுகொலை செய்ய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

விக்கிலீக்ஸ் என்ற இணைய தளம், அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள தூதரகங்கள் பரிமாறிக்கொண்ட ரகசிய தகவல்களை அம்பலப்படுத்தி உள்ளது. அதில் இந்தியா தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

கடந்த 2009ம் ஆண்டு ஜுன் மாதம் 19ந் தேதி அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்ட ரகசிய தகவல் ஒன்றில் பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்பட்டுவரும் லஸ்கர் இ தொய்பா இயக்கம், தமிழகம் மற்றும் கேரளாவில் தளம் அமைக்க முயன்ற தகவலும் அதில் இடம் பெற்றுள்ளது.

அதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு சதித்திட்டம் தீட்டியிருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய இந்தியாவின் தென்மாநிலங்களில் முகாம்கள் அமைத்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட அந்த அமைப்பு முயற்சி மேற்கொண்டதும் அம்பலமாகியுள்ளது.

பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலும் லஷ்கர் இ தொய்பாவின் செயல்பாடுகள் பரந்துவிரிந்துள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அது என்னவோ தெரியவில்லை, மோதி என்றாலே ஒன்றுக்கு இரண்டாக கருப்புக் கண்ணாடிகளை போட்டுக் கொண்டுதான் பார்க்கின்றனர். அது போதாது என்று கூடவே காதுகளுக்கு அடைப்பு பிளக்குகள் வேறு.

உதாரணத்துக்கு மோடிக்கும் கோத்ரா படுகொலைகளுக்கு பின்னால் நிகழ்ந்த கலவரங்களும் தொடர்பு இல்லை என சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப் பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் ரிப்போர்ட்டே கூறியது சம்பந்தமாக நான் இட்ட இடுகைக்கு மோதி வெறுப்பாளர்கள் கிட்டத்தட்ட அனைவருமே இடிபோன்ற மௌனம் சாதித்தனர்.

எனக்கு தெரிந்து இன்னமும் ஹிந்து பத்திரிகை மிகவும் அமுக்கமாகவே மோடியை SIT க்ளியர் செய்யும் செய்திகளை அடக்கி வைத்துள்ளது.

துபாய் சரவணன் என்னும் பதிவர் சில வெறுப்பு வரிகளை உளறினார். (பை தி வே, அவர் இதுவரை ஒரே ஒரு பதிவைக் கூட இடாதவர்)
இந்த நாட்டின் மதச்சார்பின்மையின் மீதும் நீதி நெறிகளின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கின்ற மக்களுக்கு பின்வரும் இந்த செய்தி ஆச்சரியமளிக்கலாம். ஏன் ஆவேசத்தைக் கூட தரலாம். ஆம்.
குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனப்படுகொலைகளில் இரத்தம் குடிக்கும் ஓநாய் நரேந்திர மோடிக்கு சம்பந்தமில்லையாம்.

ஆனால் என்னைப் பொறுத்தவரை இது ஆச்சரியத்தை அளிக்கவில்லை. ஏனெனில் கண்ணுக்கு தெரிந்து 1992 வரை மசூதியாக இருந்த பாபர் மசூதியையே மசூதி இல்லை என்று ஒரு காவி வெறியன் நீதிபதி பதவியில் அமர்ந்து கொண்டு தீர்ப்பளிக்கிறான். அதுவும் உயர்நீதிமன்றத்தில் நீதியை காப்பாற்ற போவதாய் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டு நீதிபதியாய் இருந்து கொண்டு நீதியை சாகடிக்கும் போது சிறப்பு விசாரணைக் குழுவில் இருக்கின்ற விசாரணை அதிகாரிகள் மட்டும் நீதியை காப்பாற்றி விடவா போகிறார்கள்? ஆகவே ஆர்.எஸ்.எஸ் அம்பிகளும் பார்ப்பனீய ஓநாய்களும் இதை வைத்துக் கொண்டு மோடி குற்றமற்றவர் என்று ஊளையிடட்டும்.
http://athikkadayan.blogspot.com/2010/12/blog-post.html


ஒரு நீதிபதியை ஒருமையில் குறிக்கும் சரவணன் துபாயிலேயே இருப்பது நலம். இந்தியாவெல்லாம் அவருக்கு சரிபடாதுதான். அவர் சவுதிக்கு போவதுதான் சரி.

அது மட்டுமின்றி பொய்சாட்சி புகழ் டீஸ்டா டெசல்வாட் பற்றிய செய்திக்கு நான் இட்ட ட்விட்டுகளுக்கு சக ட்விட்டராளர்கள் எதிர்வினை தரவேயில்லை. அது சம்பந்தமாக நான் இட்ட ட்விட்டுகள் கீழே chronologically reverse order-ல் தரப்பட்டுள்ளன.

dondu1946 dondu1946
How come The Hindu that was powerfully eloquent on Modi getting questioned by SIT in March 2010 is now maintaining a thunderous silence?
15 hours ago

dondu1946 dondu1946
SC refuses to entertain her plea challenging trial court order on Rais who said that Teesta-tutored witnesses and filed false affidavits
16 hours ago

dondu1946 dondu1946
Teesta Setalvad faced the ire of the Supreme Court for taking her grievances in the Godhra riot cases to an international h.rights agency
16 hours ago

dondu1946 dondu1946
Teesta Setalvadடுக்கு நிஜமாகவே தலைவலி ஆரம்பம் போலிருக்கே. பார்க்க: http://www.dailypioneer.com/300970/Teesta-in-real-trouble.html
16 hours ago

அது மட்டுமல்ல, இப்போது அமெரிக்காவில் இருக்கும் கொலைகார தீவிரவாதி ஹெட்லீயின் வாக்குமூலம் குஜராத்தில் செயல்பட்டு, போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்ட பெண் தீவிரவாதி பற்றிய உண்மையைக் கூறுகிறது. அது பற்றி தினமலரில் வந்த செய்தி இதோ:

ஹெட்லி மூலம் மோடி மீதான களங்கம் குறைகிறது
புதுடில்லி: மும்பை தாக்குதலுக்கு திட்டம் தீட்டி கொடுத்த அமெரிக்காவில் வசித்து வரும் ஹெட்லி சில முக்கிய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். இதில் குஜராத்தில் நடந்த ஒரு என் கவுன்டர் விவகாரம் தொடர்பாக அவர் கூறியிருப்பது குஜராத் மாநில பா.ஜ., அரசு மீதான களங்கம் குறைகிறது. அமெரிக்க போலீஸ் வசம் இருக்கும் ஹெட்லியிடம் அந்நாட்டு அரசு அனுமதி கேட்டு விசாரணை இந்திய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இவர்களிடம் ஹெட்லி குஜராத்தில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட பெண் இஸ்ரத் ஜகான் லஷ்கர் இ.தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர் என கூறியுள்ளார். இஸ்ரத் ஜகான் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 2 பேருடன் கடந்த 2004 ம் ஆண்டில் போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டவர். இவர்கள் மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக போலீசார் தரப்பு தெரிவித்திருந்தனர்.
இது போலி என் கவுன்டர் என இவரது தாயார் ஷகீமா கவுசர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு .சி.பி.ஐ போலீசாரால் விசாரிக்கப்பட்டது.இந்நிலையில் ஹெட்லி , தனது வாக்குமூலத்தில் இஸ்ரத் லஷ்கர் இ. தொய்பாவை சேர்ந்தவர் என்று ஹெட்லி கூறியுள்ளதாக புலனாய்வு வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த விஷயம் குஜராத் மாநிலத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும்.


பை தி வே, மோடி சரியான உச்சரிப்பு அல்ல, மோதிதான் சரி. நீச்சல்காரனுக்கு நான் இது சம்பந்தமாக கொடுத்த எதிர் ட்வீட்:

dondu1946 dondu1946
@
@Neechalkaran சரியான உச்சரிப்பு மோதிதான். தேவநாகரியில் அவர் பெயர் नरेन्द्र दामोदरदास मोदी. காந்தியை ஆங்கிலேயர்கள்தான் Gandy என்பார்கள்.
4 Dec

இதுக்குத்தான் கிரந்த எழுத்துக்கள் அதிகம் தமிழுக்கு தேவை என்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/03/2010

கோத்ராவுக்கு பிறகு வந்த ஹிந்து முஸ்லிம் கலவரம் சம்பந்தமாக மோதியின் மேல் வைத்தக் குற்றச்சாட்டுகள் விலக்கப்பட்டன

கோத்ராவுக்கு பிறகு வந்த ஹிந்து முஸ்லிம் கலவரம் சம்பந்தமாக மோதியின் மேல் வைத்தக் குற்றச்சாட்டுகள் விலக்கப்பட்டன என மோதியை பற்றிய இந்த வெப்சைட் தெரிவிக்கிறது.

The Supreme Court-appointed Special Investigation Team probing the Gujarat riots cases has given a clean chit to Gujarat Chief Minister Narendra Modi in a post-Godhra riots case citing that there is no substantial evidence to show that the CM willfuly allowed the carnage.

The SIT, which was investigation a case filed by Zakia Jafri, wife of late Congress MP Ehsaan Jafry who was killed by rioters in the Gulbarga Society housing Complex Zakia, alleged that Modi as the then chief minister wilfully stopped the police from stopping the rioters from attacking the society.

The SIT had informed the Supreme Court that it had completed investigations into the murder of Congress MP Ehsaan Jafry during the riots.


இது சம்பந்தமாக இன்னொரு உரல் இங்கே.

தமிழ் பதிவர்கள் இடி போன்ற மௌனம் இந்த விஷயத்தில் அனுஷ்டிப்பதாகத் தோன்றுகிறதே!

பிற்சேர்க்கை: Times Now சேனலில் மட்டும் இந்த breaking news வருகிறது. கீழே அதன் வீடியோ க்ளிப்பிங் (என்னதான் தலைகீழாக நின்றாலும் பதிவுக்குள்ளேயே வரமாட்டேன் என்கிறது. தமிழ்மணம் லோகோவுக்கு கீழேதான் வருவேன் என்கிறது)

பிருந்தா காரட் கூறுகிறார், “அதிர்ச்சி தரும் ரிப்போர்ட், இது எப்படி லீக் ஆச்சு? மக்களை பொருத்தவரை மோதி குற்றவாளியே”.

பொய்சாட்சி புகழ் டீஸ்டா செடால்வாட் கூறுகிறார், “ஒண்ணுமே புரியல்லை, இதுக்கு எப்படி எதிர்வினை புரியறதுன்னு”.

@பிருந்தா: நீங்கள் எந்த மக்களைச் சொல்கிறீர்கள்? ஆங்கில மீடியா, தமிழ் பதிவர்கள் ஆகியோரை விடுங்கள். முக்கியமா குஜராத் மக்களுக்கு மோதியைப் பற்றி நன்றாகத் தெரிஞ்சதுனாலத்தான் அவருக்கு இவ்வளவு தேர்தல் வெற்றிகள். அதுவும் அந்தந்த சமயத்தில் இருந்த தலைமை தேர்தல் கமிஷனர்கள் வெளிப்படையாகவே தங்கள் மோதி விரோதப் போக்கைக் காட்டி, கிட்டத்தட்ட காங்கிரஸ் பூத் ஏஜெண்டுகளாக செயல் பட்டனர் என்பதையும் மறக்கலாகாது.

@டீஸ்டா: ஹாரி பாட்டர் கடைசி நாவலில் வோல்டமோரிடம் கூறியதையே நானும் உங்களுக்கு கூறுவேன், “Try for some remorse".

அது சரி, 1984 சீக்கியக் கொலைகள் புகழ் ராஜீவுக்கு இப்படியெல்லாம் டீம் எல்லாம் வைக்கலை போல இருக்கே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/02/2010

தலித் மாணவிகளை குப்பையைத் தின்ன வைத்த ஆசிரியர் - படிக்கும்போதே ரத்தம் கொதிக்கிறதே என்ன செய்வேன்

மாற்று வலைப்பூவில் படித்த இச்செய்தி என்னைப் பதறவைத்து விட்டது. சம்பந்தப்பட்டப் பதிவரின் அனுமதியுடனே இங்கேயும் காப்பி பேஸ்ட் செய்கிறேன். இந்த அக்கிரமத்துக்கு பொறுப்பானவர்களை சிறையிலிட்டு செருப்பால் அடிக்க வேண்டும்.

விசாரணையில் பிரியங்கா, அருகில் அழும் தந்தை

பள்ளிக்குச் சென்ற குழந்தையை ஒரு ஆசிரியர், வகுப்பறையைச் சுத்தம் செய்யச் சொன்னார். அதை மறுத்த அக்குழந்தையை வகுப்பறையை சுத்தம் செய்யச்சொல்லி அக்குப்பைகளை தின்னச்சொன்ன கொடூரம் நிகழ்ந்து ஒரு ஆண்டாகியும் சம்பந்தப்பட்டவர் மீது பள்ளியோ, காவல்துறையோ நடவடிக்கை எடுக்கவில்லை.

சென்னையில் தேசிய குழந்தைகள் நலன் குறித்த நீதிவிசாரணை நடைபெற்றது. இவ்விசாரணையில் 337 வழக்குகள் தில்லிக்கு அனுப்பப்பட்டன. இதில் 57 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அவை சென்னையில் விசாரிக்கப்பட்டன. தலித் மாணவர்களை பள்ளி விடுதி கழிவறையை சுத்தம் செய்யச் சொல்லி துன்புறுத்தியது, 5 வயது மாணவியை 2 ஆசிரியர்கள் கடுமையாக தாக்கியதால், மாணவி இறந்தது, மாணவன் கல்வி கட்டணம் கட்டாததற்காக பள்ளியில் இருட்டறையில் அடைத்தது என கொடூரமான பல வழக்குகள் விசாரணைக்கு வந்தன. இவ்விசாரணையில் தேசிய குழந்தைகள் நல ஆணையத் தலைவர் சாந்தா சின்கா, நீதிபதி ராமமூர்த்தி, பிலால் இசாகி, லோ வர்மா, கிரண்பேடி, நீதிபதி கிருஷ்ணன் ஆகியோர் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல மாணவ, மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
அங்கு விசாரணைக்கு வந்த ஒரு பெற்றோர், “தங்கள் குழந்தையை ஆசிரியர் ஒருவர் வகுப்பைச் சுத்தம் செய்யச்சொல்லி, அந்தக்குப்பையைத் தின்ன வைத்தார்“ என்று அவர்கள் கண்ணீர் மல்கச் சொன்னது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை வைத்தியநாதபுரம் கங்காணி லைனைச் சேர்ந்தவர் தனபால் (40). இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு பிரியங்கா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். தனபால் குறவர் இனத்தைச் சேர்ந்தவர். செப்டிக் டாங்க் அடைப்பை எடுப்பது, ஆட்டோ ஓட்டுவது எனத் தொழில் செய்து தனது குடும்பத்தை பாது காத்து வருகிறார். இவரது மகள் பிரியங்கா மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார்.அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து அவர் கூறியவை யாருக்கும் நிகழக்கூடாதவை.

நான் ஏழாம் வகுப்பு ஏ பிரிவில் படித்து வந்தேன். கடந்த 19.3.2010 அன்று மாலை 3.30 மணியளவில் எங்கள் பக்கத்து வகுப்பு ஆசிரியர் லதா என்பவர், மாணவிகள் பிரிஜிதா, பாண்டி பிரியா, மற்றும் என்னை அழைத்து,“ ஏன் கடந்த 2 நாட்களாக வகுப்பறையை சுத்தம் செய்யவில்லை” என்று அதட்டினார். உங்கள் வகுப்பு ஆசிரியர் சொன்னால் தான் கேட்பீர்களா? நான் பக்கத்து வகுப்பு ஆசிரியர் என்பதால் என் பேச்சைக் கேட்க மாட்டோம் என்ற திமிரில் இருக்கிறாயா என மிரட்டினார். நீங்கள் அனைவரும் வகுப்பறையை சுத்தம் செய்யாத காரணத்தால் நீங்கள் இப்போ வகுப்பறையை கூட்டி என் கண்முன்னால் அள்ளிச் சாப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டார். நாங்கள் எல்லோரும் எப்படி மிஸ் சாப்பிட முடியும் என்றும் வகுப்பறையை சுத்தம் செய்யாதது தப்புதான் என்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்டோம். அப்படி இருந்தும் லதா மிஸ், கொஞ்சம் கூட இரக்கப்படவில்லை, நீங்க இந்த வகுப்பறையை சுத்தம் செய்து அதை தின்ன வேண்டும் என்றும் மீண்டும் கூறினார். எங்க வகுப்பில் உள்ள லீடரை அழைத்து, இவர்கள் கூட்டின குப்பைய ஆளுக்கொரு கை அளவு கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். இல்லையென்றால் அதை நீ தான் சாப்பிட வேண்டும் என்றும் லீடரையும் மிரட்டினார்.
அதன் பிறகு வேறு வழியில்லாமல் சுத்தம் செய்து ஆசிரியர் சொன்னபடி, லீடர் எங்கள் மூவருக்கும் ஆளுக்கொரு கை அளவு குப்பையை அள்ளிக் கொடுத்தார். அப்போது நாங்கள் அந்த குப்பையைப் பார்த்த போது அதில் பழைய வெள்ளச்சோறு, அழுக்குப் பேப்பர், மண் எல்லாம் இருந்தது.மிஸ் அதட்டியவுடன் வேறு வழியின்றி இந்த குப்பையைச் சாப்பிட்டோம்”
என பிரியங்கா கூறினார். குப்பையைச் சாப்பிட்ட குழந்தைகள் மூவரும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று குழந்தைகளும் உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பிரியங்காவின் தந்தை தனபால், எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து 21.3.2010 அன்று மூன்று குழந்தைகளிடம் தனித்தனி வாக்குமூலம் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் இது வரை சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் தேசிய குழந்தைகள் நலவிசார ணையில் அளிக்கப்பட்ட புகாராகும். பிரியங்கா தவிர மற்ற இரண்டு குழந்தைகளும் சமாதானம் ஆகி விட்டதாகக்கூறப்படுகிறது.

தனபால் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் மூலம் மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் ரிட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்பிரச்சனையில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் கூறினார்.

இதுகுறித்து பிரியங்காவின் தந்தை தனபாலிடம் பேசிய போது, எனது குழந்தையைக் குப்பையைத் தின்ன வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் அளித்த புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேளாங்கண்ணிக்கு குடும்பத்தோடு சென்ற போது, திருச்சியில் பிரியங்காவிற்கு வலிப்பு வந்து விட்டது. திருச்சி மருத்துவமனையில் அனுமதித்து அவளுக்கு சிகிச்சை அளித்தோம். அதற்கு முன்பு வரை அவளுக்கு இப்படி வந்ததில்லை.

அனைத்து குழந்தைகள் மத்தியிலும் குப்பையைத் தின்ன வைத்ததால் எனது குழந்தையின் மனநலன் பாதிக்கப்பட்டுள்ளது. 35 ஆயிரம் ரூபாய் வாங்கித் தருகிறோம், பிரச்சனையை இத்தோடு விட்டு விடுங்கள் என்று பலர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். என் குழந்தையைப் போல வேறு எந்த குழந்தைக்கும் இந்த கொடுமை நடக்கக் கூடாது. ஆகவே, சம்பந்தப் பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் இதுவரை உறுதியாக இருக்கிறேன் என்று கூறினார்.

தற்போது வேறு பள்ளியில் பிரியங்கா 9-வது வகுப்பு படித்து வருகிறார். அவர் முதலில் படித்த பள்ளியில் பள்ளிச்சான்றிதழ் வாங்கச் சென்ற போது தனபாலிடம், வெள்ளைப் பேப்பரில் எழுதி வாங்கியதாக் கூறப்படுகிறது. இதுநாள் வரை சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது மாநகராட்சி நிர்வாகமோ, காவல் துறையோ நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் தலித் மக்கள் மீதான வன்முறைகள், பாகுபாடுகள், தாக்குதல்கள் என்பது பள்ளியில் குழந்தைகள் வரை நீடிப்பதற்கு தமிழக அரசின் செயல்பாடுகளே காரணம்.

எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த வழக்கை காவல்துறையில் பதிவு செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதுரை கல்வித்துறை முதன்மை அலுவலர், மதுரை மகபூப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட மாணவியின் படிப்புக்கு எந்த குந்தகமும் ஏற்படக்கூடாது எனவும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

வெளியே தெரிய வருகிற இதுபோன்ற வன்கொடுமைகளுக்கான தண்டனையும், பாதிக்கப்பட்டவ்ர்களுக்கான நீதியும் அரிதாகவே கிடைக்கின்றன. வெளியே தெரியாமல் எவ்வளவோ இந்த தேசத்தில் மௌனங்களுக்குள்ளும், பெருந்துயரங்களுக்குள்ளும் புதைந்து கிடக்கின்றன. ஜாதி வெறியும், தீண்டாமையும் சபிக்கப்பட்ட நிலமெங்கும் வரலாற்றின் கறைகளாவும், அழுகிப்போன குப்பைகளாகவும் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் யார் வாயில் திணிப்பது?
நன்றி: மாற்று


இங்தத் துயர நிகழ்வுக்கு பொறுப்பானவர்கள் எந்தக் கொம்பர்களாக இருந்தாலும் சரி, கடுந்தண்டனை தர வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/29/2010

ஸ்பெட்ரம் ஊழல் சம்பந்தமாக சோவின் பேட்டி ஜெயா டிவியில்

இட்லி வடையின் இப்பதிவில் வந்த சோவின் பேட்டியின் வீடியோக்கள் யூட்யூப்பில் வந்தன. அங்கிருந்தே நானும் அவற்றை எம்பெட் செய்து இங்கும் போடுகிறேன். இது பரவலாக எல்லோரையும் போய்ச் சேர வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம். யூ ட்யூபின் வீடியோக்களின் சுட்டிகளை காட்டித் தந்த இட்லி வடைக்கு நன்றி. இப்போது வீடியோக்களுக்கு போகலாமா:

வீடியோ-1


வீடியோ-2


வீடியோ-3


வீடியோ-4


வீடியோ-5


வீடியோ-6


வீடியோ-7


வீடியோ-8


இப்போது டோண்டு ராகவன். சி.பி.ஐ., பிரதம மந்திரி, கருணாநிதி, கனிமொழி ஆகிய யாவரும் சோவின் பார்வையிலிருந்து தப்பவில்லை. ராசா சின்ன ராசா கைய வச்சான்னு ஏற்கனவேயே பாடிவிட்டதால், அவரை ஏற்கனவேயே சேர்த்தாகி விட்டது.

ஆனால் மேலே சொன்ன பேட்டிக்கு பிறகு நேற்று சுப்பிரமணியன் சுவாமியின் பேட்டி ஜெயா டிவியில் வந்தது. அதில் அவர் தெளிவாகவே கூறிவிட்டார், ராசாவுக்கு 10%, கருணாநிதிக்கு 30% மற்றும் சோனியா & அவர் சகோதரிக்கு 60% என பணப்பங்கீடு என்று. பிறகு ஏன் சர்தார்ஜி ரியேக்ட் செய்யப் போகிறார்? அவர் தனிப்பட்ட முறையில் பெரிய பதவிகளில் இருந்தவர். உலக வங்கிக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்தானே. இங்கிருந்து கொண்டு சீப்பட வேண்டுமா என எனக்குத் தோன்றுகிறது.

சுப்பிரமணியன் சுவாமி வீடியோ கிடைத்தால் எனது வலைப்பூவில் எம்பெட் செய்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/28/2010

ஊரே சிரிச்சா கல்யாணம்னு சொல்லுவாங்க

இப்போது அமெரிக்காவின் முறை. சம்பந்தப்படாத மற்றவர்கள் சந்தோஷப்படலாம். ஆனால் மற்றவர்களது முறை வரும்போது சந்தோஷப்படுவார்களா கேள்விக்கு மாட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

எல்லா மேற்பூச்சுகளையும் எடுத்துப் பார்த்தல் இந்த விக்கிலீக்ஸ் அமைப்பு உண்மையை காப்பாற்றவே அவதாரம் எடுத்திருப்பதாக நான் நம்பவில்ல்லை. அதற்கும் ஒரு மறைக்கப்பட்ட அஜெண்டா உண்டு என்றே நான் உறுதியாகவே நினைக்கிறேன். ஆகவே இன்று நான் நாளை நீ என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

ஆகவே அதன் பொறுப்பாளர்கள் ஒன்று மௌனமாக்கப்படுவார்கள் அல்லது அப்புறப்படுத்தப்படுவார்கள். நான் இட்ட ஊழல் பற்றிய மேக்ரோ பார்வை தேவை, மனச்சோர்வுகளைத் தவிர்க்க பதிவில் கூறப்பட்ட சில வரிகள் இங்கும் பொருந்தும்.

ஓர் அரசு என்பது இடைவிடாத அதிகாரப் போட்டிகளாலும், பேரம் பேசல்களாலும், பேச்சு வார்த்தைகளாலும், சமரசங்களாலும் ஆனதாகவே இருக்க முடியும். அதிகாரத் தரகர்கள், அதிகாரத் தூதர்கள், அதிகாரப் பிரதிநிதிகள் எப்போதும் அந்த மையத்தில் செயல்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அதிகாரத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு வன்முறை பலத்தாலும் பணபலத்தாலும் ஆனது. ஜனநாயகத்தில் எண்ணிக்கை பலத்தாலும்.

அந்த அதிகாரச் சமநிலை குலையும்போது, சமரசம் மூலம் அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லாமல் ஆகும்போது, அதிக அதிகாரம் கொண்ட தரப்புகள் குறைவான அதிகாரம் கொண்ட தரப்புகளை வன்முறை மூலம் அடக்குகின்றன. முன்பெல்லாம் நேரடி ஆயுத வன்முறை. இப்போது பொருளியல் வன்முறை. சமரசத்துக்கான நிபந்தனையாக வன்முறை எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது.


உள்ளூர் விஷயங்களுக்கே இது பொருந்தும்போது வெளிவிவகார விஷயங்களில் அது இன்னும் அதிகமாகவே பொருந்தும். எழுபதுக்ளில் அப்போதைய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஃபோர்ட் கிஸிங்கருடன் இந்தியா வ்ந்தபோது தாங்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்கா திரும்பியதும் அதற்கு கண்டிப்பான, கடுமையான தொனியில் கடிதம் அனுப்ப வேண்டியதுதான் என கிசிங்கரிடம் கூறினார். அவரது மைக்ரோஃபோன் ஆன் செய்யப்பட்டிருப்பதை அவர் கவனிக்கத் தவறியதால் அது தெளிவாக வெளியில் கேட்டுவிட்டது. அமெரிக்காவுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது.ஆனால் அதையெல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்ளலாகாது என்றும், அவ்வாறு செய்தால் அமெரிக்க உதவிக்கு சங்குதான் என்பதை உணர்ந்த இந்தியா அதை பூசி மெழுகிவிட்டது.

இன்று ஹிந்துவில் வெளியான விக்கிலீக்ஸ் பற்றிய செய்தியே இப்பதிவுக்கு தூண்டுதல். அதிலிருந்து சில வரிகள்.

Indian embassy in Washington alerted
NEW DELHI: American diplomats have warned India to prepare itself for potential embarrassment from the expected release by WikiLeaks of three million confidential U.S. diplomatic cables. The message was conveyed to the Indian embassy in Washington after a senior State Department official tried unsuccessfully to reach Foreign Secretary Nirupama Rao, who is travelling in Sri Lanka.

India is not the only country the U.S. has alerted. The documents, which will go live on the Internet beginning in the next 24 to 48 hours, consist of cables sent by American embassies around the world — especially in India, Israel, Russia, Turkey, Canada and Britain — to the State Department in Washington. Since such cables are meant to be confidential, it is a standard practice for the diplomats writing them to be candid and blunt in their assessments and sometimes even disrespectful to officials and leaders in their host countries. It is this aspect of the forthcoming leak which is particularly worrying U.S. diplomats. Some cables could also contain information about surreptitious activity by U.S. missions.

It is not clear what time period the cables cover but previous WikiLeaks disclosures tended to range over the past five or six years. This is a period when the U.S. and India were locked in detailed and sometimes testy negotiations over nuclear commerce and defence cooperation.

அதாகப்பட்டது, இப்போ அமெரிக்கா என்ன சொல்லறதுன்னா, “அய்யா சாமியோவ், எங்க ஆளுங்க தங்களோட ரிப்போர்ட்டுகளிலே உங்களைப் பத்தியெல்லாம் வண்டை வண்டையாக திட்டியிருக்காங்க (உதாரணத்துக்கு பலரைக் குறித்த உறவுமுறை சந்தேகங்கள்). அதையெல்லாம் கண்டுக்காதீங்கோ, தந்தானா, தந்தானா” இந்தத் தோரணையில் சில சொற்களே.

கூடவே இந்தியத் தரப்பில் ஏதாவது மேல் வருமானம் பற்றி பேச்சு வந்து, அதுவும் அந்தரங்க ரிப்போர்ட்டில் இடம் பெற்றிருந்தால் உங்களுக்கும் சங்குதாண்டீன்னும் சொல்லாம சொல்லறாங்க.

ஆனால் எந்த தேசமுமே இம்மாதிரி பல ரிப்போர்ட்டுகளை அவ்வப்போது தயாரித்து உள்ளுக்குள் சர்குலேட் பண்ணிக் கொள்ளாமல் இருந்திருக்காது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருக்கும் அமெரிக்க அரசு தளங்களையே பிளந்தவர்கள், மற்ற அரசு தளங்களையும் விட்டு வைப்பார்களா என்ன?

உதாரணத்துக்கு நம்மிடமே பாகிஸ்தான், சீனா, ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளைத் தாக்கும் சினோரியோக்கள் டெவலப் செய்யப்பட்டு ஆர்கைவ்சில் உறங்கிக் கொண்டிருக்கும். அதே போல இந்தியாவைத் தாக்குவது பற்றியும் அந்தந்த நாடுகள் சினேரியோ தயார் செய்து வைத்திருக்கும். இதில் எல்லாமே எல்லோருக்கும் தெரிஞ்சால் என்ன ஆகும்? யாரும் யாரையும் விரல் நீட்டிப் பேச முடியாது. இதைத்தான் ஊரே சிரிச்சா கல்யாணம்ங்கறாங்க.

எனது ஷ்டாஸி பற்றிய பதிவில் இது பற்றி நான் எழுதிய வரிகள்:

கிழக்கு ஜெர்மனியின் ஷ்டாஸிதான் இப்பதிவுக்கான விஷயம். அதிலும் முக்கியமாக அதன் ஆவணங்களில் வெளியான பல ரகசியங்கள். இவ்வமைப்பு ஒரு பெரிய தகவல் மையத்தையே தன்னுள் வைத்துக் கொண்டிருந்திருக்கிறது. அதற்கு செய்தி அளித்தவர்கள் நாட்டின் குடிமக்களில் கணிசமான பகுதியினர். பெற்றோரைப் பற்றி பிள்ளைகள் தத்தம் வீடுகளில் பெற்றோர் எந்த டிவி சேனலை பார்க்கின்றனர், என்னென்ன ரேடியோ நிகழ்ச்சிகள் கேட்கின்றனர். வீட்டில் தங்களுக்குள் என்ன பேசிக் கொள்கின்றனர், இத்யாதி, இத்யாதி என்றெல்லாம் கூறினர். அதே போல பக்கத்து வீட்டு மாமா, எதிர்வீட்டு சித்தப்பா என்ன செய்தார் என்பதும் கூறப்பட்டன. நண்பன் மேற்கு ஜெர்மனி பேப்பர்களுக்கு தனது பின்னூட்டத்தை மாற்றுப் பெயரில் கடிதங்களாகப் போட்டதும் இந்த உளவு விஷயங்களிலிருந்து தப்பவில்லை. வெளிநாட்டுகாரர்கள் கிழக்கு ஜெர்மனிக்காக உளவு செய்ததும் வெளிவந்தன.

சோவியத் யூனியன் மறைந்து கே.ஜி.பி. கலைக்கப்பட்ட போது கூட கேரள கம்யூனிஸ்டு தலைவர்கள் சோவியத் யூனியனிடமிருந்து பணம் பெற்றதும் வெளியில் வந்ததையும், அதை அக்காலக் கட்டங்களில் ஹிந்துஸ்தான் டைம்ஸில் படித்ததையும் இங்கு போகிறபோக்கில் குறிப்பிட்டு விட்டுப் போகிறேன்.

இப்பதிவின் முக்கியக் கருப்பொருளுக்கு வருகிறேன். ஷ்டாஸி ரகசியங்கள் வெளியானதும் பல குடும்பங்கள், நண்பர்கள் வட்டாரங்களில் பூகம்பங்கள் ஏற்பட்டன. யாரைத்தான் நம்புவதோ எனத்துவண்டான் ஒருவன், அவன் பெயரும் இன்னொரு ஷ்டாஸி ஆவணத்திலிருந்து வெளிவரும் வரை. பிறகு அசடு வழிந்தான். ஓரளவுக்கு மேல் எதுவும் பழகிப் போகும், ஊரே சிரித்தால் கல்யாணம் என்ற கோட்பாட்டில் மறப்போம் (ரொம்ப கஷ்டம்) மன்னிப்போம் (சற்றே சுலபம்) என மனதைத் தேற்றிக் கொண்டனர்.


நாசர் பதவிக்கு வந்ததும் தனது நாட்டில் இருந்த முந்தைய அரசின் தலைவர்களது ஸ்விஸ் வங்கிக் கணக்கின் விவரங்களை தருமாறு நெருக்கினார். ஆனால் அவையோ தாங்கள் அவற்றைத் தருவதற்கு தயார் ஆனால் எகிப்து பற்றிய முழுவிவரங்களையும் பகிரங்கமாக வெளியிடுவதாகக் கூற எகிப்து தனது கோரிக்கையை அவசரம் அவசரமாக வாபஸ் வாங்கியது. ஏன் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.

ஊரே சிரிச்சா கல்யாணங்கறதை ஒத்துக்கிறீங்களா?

சில விஷயங்களைத் தெளியப்படுத்துகிறேன்.

1. அமெரிக்கர்களுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. அவர்களுக்கு அது தேவை இல்லை.

2. விக்கிலீக்ஸ் அமைப்பிலும் பல ரகசியங்கள் இருக்கும். அவர்கள அடிப்படையில் ஹாக்கர்கள். அவர்கள் எவ்வாறு ஹாக் செய்கிறார்கள் என்பதும் பலரால் அறிய விரும்பப்படும் ரகசியமே. அவ்வாறு பெறப்படும் போது அந்த அமைப்பின் சமரசங்களும் வெளியில் வரும் வாய்ப்பு உண்டு. அப்போது அந்த அமைப்பின் பொறுப்பாளர்களும் தாங்கள் முதுகில் குத்தப்பட்டதாக ஊளையிடுவார்கள்.

3. இன்று நீ, நாளை நான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/24/2010

ஆ. ராசாவின் உயிருக்கு ஆபத்து - ஆகவே அவரை வீட்டுச் சிறையில் வைக்கவும் - சுப்பிரமணியன் சுவாமி

ஜூனியர் விகடன் சார்பாக ஆர்.பி. என்பவர் சுப்ப்ரமணியன் சுவாமியை ஸ்பெக்ட்ரம் விவகாரம் சம்பந்தமாக பேட்டி எடுத்துள்ளார். அப்பேட்டி இன்று சென்னையில் கடைகளில் வெளியான, 28.11.2010 தேதியிட்ட ஜூவி இதழில் பக்கங்கள் 4, 5, 6-ல் வந்துள்ளது. முழு பேட்டியை படிக்க ஆவல் உள்ளவர்கள் கடைக்கு சென்று வாங்கவும். இப்பதிவு அதன் சுருக்கம், கூடவே டோண்டு ராகவனது சொந்தக் கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது.

அந்தப் பேட்டியில்தான் சுப்பிரமணியன் சுவாமி இப்பதிவின் தலைப்பில் கூறியதை சொன்னார். அது பேட்டியின் போக்கிலே வரும். முதலிலே பேட்டியின் சுருக்கத்தைப் பார்ப்போம்.

சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு இப்போது ராசா அம்பலப்பட்டு நிற்பதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்றாகும். தனது கட்டுரைகள் மூலம் ராஜாவை வீழ்த்திய சாமான்யன் கோபி கிருஷ்ணா பற்றி நான் ஏற்கனவேயே குறிப்பிட்டுள்ளேன். இப்போது சுவாமியை கவனிப்போம்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை நினைத்தாலே தனக்கு “அலிபாபாவும் 40 திருடர்களும்” கதைதான் நினைவுக்கு வருகிறது என சுவாமி நகைச்சுவையாக பேட்டியின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டு விடுகிறார்.

1. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் காசு பார்த்ததாக தான் நினைக்கவில்லை, ஆகவே அவர் பதவி விலகத் தேவையில்லை என சுவாமி கருதுகிறார்.

2. அவர் பல மாதங்கள் தன் கடிதங்களுக்கு பதில் போடாததில் அவருக்கு கூட்டணி சம்பந்தமான நிர்ப்பந்தங்கள் ஏதேனும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பலனை அவருக்கு அளிக்கிறார்.

3. மத்திய அமைச்சர்களிடம் சொத்துக்கணக்கைத் தருமாறு பிரதமர் கேட்பது சரிதான், அதே சமயம் அந்த விவரங்கள் உண்மையா என்பதையும் அவர் பார்க்க வேண்டும்.

4. ராசா ராஜினாமா செய்தது ஆரம்பமே. இனிமேல்தான் மேலும் பல விஷயங்கள் நடக்க வேண்டும்.

5. இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளிலும் விசாரணை நடக்க வேண்டும். பணப்பரிமாறல்களை பர்றிய ரகசிய விஷயங்களை கண்டறிய அமெரிக்காவின் உதவியை நாடலாம். தான் அதற்கு பாலமாக இருக்கத் தயார் என அவர் கூறுகிறார்.

6. 1.76 லட்சம் கோடி என்பது வருவாய் இழ்ப்பே. ஆக்சுவலாக கைமாறிய தொகை 60 ஆயிரம் கோடிகள் என்பது அவர் கருத்து. விரிவான கணக்குகளை அவர் நீதிமன்றத்தில் சொல்லவியலும் என்றும் அவர் கூறினார்.

7. பாராளுமன்ற மைய மண்டபத்தில் ராசா தன்னிடம் தானும் சுவாமியும் தமிழரே என்ற விஷயத்தைக் கூற, சுவாமியோ ராசா போன்றவர்கள் தன்னை கைபர் போலன் கணவய்க்கு அப்புறத்திலிருந்து வந்தவர்கள் எனக் கூறுவதாகக் கூறி, ராசா பதில் பேசாமல் அப்பால் சென்றார்.

8. இப்போதே யார் யாருக்கெல்லாம் பணம் போயிற்று என ராசா கூறிவிட்டால் அவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு உண்டு.

9. ஆகவே ஆ. ராசாவின் உயிருக்கு ஆபத்து. அதனால் அவரை வீட்டுச் சிறையில் வைக்கவும் என்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.

அதே ஜூவி இதழில் கருணாநிதி தன் குடும்பத்தினர் தன்னை நம்பாது நீரா ராடியா என்னும் பெண்மணியையே தமது பதவிகளுக்காக நம்பியுள்ளனர் எனப் பொதுவாகச் சொல்லிக் கண் கலங்கி விட்டாராம். என்ன செய்வது, உப்பைத் தின்னவன் தண்ணி குடிச்சுத்தானே ஆகணும்னு இருக்கே.

இப்படி பூதாகாரமாக வெளிவந்துள்ள ஸ்பெக்ட்ரம் ஊழலை மாறன் சகோதரர்களுடன் சமாதானமாகப் போய், இதயம் உருகியது, கண்கள் பனித்தன என்ற ரேஞ்சுக்கெல்லாம் பேசுவது கோமணத்தால் மலத்தை அடக்க நினைத்தக் கதைதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/22/2010

எனது அபிமான நடிகர் ஜெமினி கணேசன் பற்றி நான் இன்றுதான் முதல்முறையாக அறியும் தகவல்

எனது அபிமான நடிகர் ஜெமினி கணேசன் பற்றி நான் இன்றுதான் முதல்முறையாக அறியும் தகவல் எனக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தது. நன்றி: அந்திமழை. முதலில் கட்டுரைக்கு செல்வோம்.

ஜெமினிகணேசன் எனக்கு உறவினர்: கருணாநிதி
Created On 22-Nov-10 09:28:03 AM
நடிகர் ஜெமினி கணேசனின் 90-வது பிறந்தநாள் விழா, சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாறு குறித்த குறுந்தகடை இயக்குனர் கே.பாலசந்தரும், வரலாற்று புத்தகத்தின் முதல் பிரதியினை கவிஞர் வாலி, வைரமுத்து ஆகியோரும் முதலமைச்சர் கருணாநிதியிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் அவர் பேசியது:

ஜெமினியை எல்லோரும் நேசிக்கக் கூடியவர்கள். அத்தகைய அருமை நண்பர், மறைந்தும் மறையாத மாணிக்கம். நம்முடைய கவிப்பேரரசு, மகன் தந்தைக்கு ஆற்றுகின்ற உதவி அல்லது காட்டுகின்ற நன்றி என்ற திருக்குறளின் பொருளை எடுத்துரைத்து, மகன் என்று இல்லாவிட்டாலும் மகள் என்ற முறையிலே கமலா செல்வராஜ் இந்த விழாவை அற்புதமாக இன்றைக்கு நடத்தியிருக்கிறார் என்று கூறினார். விழாவை சிறப்பாக நடத்திய கமலா செல்வராஜ், ஆண்கள் கூடி, ஏன் மகன்கள் இருந்து நடத்தினால் கூட, இவ்வளவு சிறப்பாக இந்த விழாவை நடத்தியிருக்க முடியுமா என்று எண்ணுகின்ற வகையில் இந்த விழாவை நடத்தியிருப்பது பாராட்டத்தக்கது. அவருக்கு ஜெமினி சார்பில் என் வாழ்த்துகள்.

ஜெமினி கணேசன், 17.11.1920-ல் புதுக்கோட்டையில் பிறந்தவர். அவருடைய தாயார் கங்கம்மா. தந்தையார் ராமு. ஜெமினியின் அத்தை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. ஜெமினியின் சின்ன தாத்தா நாராயணசாமி. அவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டன. எனவே அவர் குழந்தைக்காக இரண்டாம் தாரமாக எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த "சந்திரம்மா'' என்ற பெண்ணை மணந்தார். அந்த மணம் கலப்பு திருமணம். இதை ஜெமினி கணேசன் பிறந்த பிராமண சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரைச் சாதியிலிருந்தே தள்ளி வைத்தது. ஆகவே, ஜெமினி பிறந்தபோதே ஒரு புரட்சி முழக்கத்தோடு பிறந்திருக்கிறார் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.

முத்துலட்சுமி ரெட்டியை பெருமைப்படுத்தியது கழக அரசு. இந்த கலப்பு திருமணத்திற்கு பிறகு, சந்திரம்மா மூலம் நான்கு குழந்தைகள் பிறந்தன. அவற்றுள் முதல் குழந்தைதான் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி என்று சொன்னால் உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்.

ஆக, முத்துலெட்சுமி ரெட்டி இசை வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். புதுக்கோட்டை மருத்துவமனையில் டாக்டராகப் பணிபுரிந்த சுந்தர ரெட்டி என்பவரைக் காதலித்து மணந்தார். சாதி, மொழி வேறுபாடு கடந்து அவர்களின் திருமணம் நடைபெற்றது. ஆகவே, அந்த கலப்பு திருமணத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் சமுதாய சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டார்கள்.

இன்னும் சொல்லப் போனால், சென்னை மருத்துவ கல்லூரியில் முதல் முதலாக டாக்டராகப் படித்த ஒரு பெண்மணி முத்துலெட்சுமி ரெட்டி. அதனால்தான், மேலவை உறுப்பினராக இருந்து அவர் ஆற்றிய பணியை எடுத்துக்காட்ட, விளக்கிக் காட்ட மேலவையிலும், பேரவையிலும் அவருடைய திருவுருவப்படத்தை இந்த அரசு வைத்து பெருமைப்படுத்தியிருக்கிறது என்பதை நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

சென்னை மாகாண சட்டசபையில் 1929-ல் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துலெட்சுமி ரெட்டி, ``பொட்டுக் கட்டும்'' வழக்கத்தை - அதாவது தேவதாசி முறையை அகற்ற வேண்டும், ஒழிக்க வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தினார். இது காமராஜர் அரங்கம். இந்த அரங்கத்தில் அவருடைய குருநாதர் சத்தியமூர்த்தியைப் பற்றி நினைவூட்டுவதைப் பற்றி தவறில்லை.

தீரர் சத்திய மூர்த்தி, என்னதான் காங்கிரஸ் தியாகி ஆக இருந்தாலும்கூட, அவர் சனாதன கொடுமைக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டவர்தான். ஒரு சட்டத்தை தமிழக சட்டசபையிலே கொண்டு வந்தபோது - தேவதாசிகளை ஒழிக்க வேண்டும். பெண்களுக்கு பொட்டுக்கட்டி அவர்களை கேவலப்படுத்துவது என்பது முறையல்ல, ஆகவே, அந்தப் பொட்டுக்கட்டும் வழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று சட்டம் வந்தபோது - ஒருவர் எழுந்து ``இல்லை, இல்லை. அந்த வழக்கம் இருப்பது நல்லது, அது தொடர வேண்டும், ஏனென்றால் காளைகள் வெறித்தால் சாந்தப்படுத்தும் சமுதாயம் அந்தப் பெண்கள் சமுதாயம்தான், எனவே, பொட்டுக்கட்டும் வழக்கம், தேவதாசி முறை தொடர்ந்து அனுமதிக்கப்பட வேண்டும்'' என்று சொன்னார். அவர்தான் தீரர் சத்தியமூர்த்தி என்று கூறுவார்கள்.

அதை எதிர்த்து ஒரு பெண் குரல் கிளம்பியது. அந்தப் பெண் குரல்தான் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் குரல். பெண்கள் சமுதாயம் காளைகள் வெறித்தால் சாந்தப்படுத்துகின்ற சமுதாயம் என்றால், அப்படிப்பட்ட பெண்களை உங்களுடைய வீட்டிலிருந்து அனுப்புங்கள் பார்க்கலாம் என்று முத்துலெட்சுமி ரெட்டி சிம்மக்குரல் கொடுத்து முழங்கினார் - முழங்கினார். மன்னிக்க வேண்டும் - ஒரு வரலாற்று உண்மையை எடுத்துச் சொல்லும்போது, அதிலே பிசிறு வரக்கூடாது. அதிலே குறைபாடு வரக்கூடாது என்பதற்காக உண்மையை அப்பட்டமாக அப்படியே சொல்கிறேன். அந்த முத்துலெட்சுமி ரெட்டிதான் இந்தியப் பூபாகத்தில் அன்றைக்கு புரட்சிகரமான மங்கையாக விளங்கி - அப்படி விளங்கிய காரணத்தால் இந்த இயக்கத்தின் ஆட்சி நடைபெறும்போது, அவருடைய திருவுருவப்படத்தை நாங்கள் சட்டமன்ற மேலவை யிலும், பேரவையிலும் வைத்து கௌரவப்படுத்தி யிருக்கிறோம்.

இதை இந்த விழாவில் ஏன் சொல்ல வேண்டு மென்றால், இந்த விழாவிற்கு சம்பந்தம் இருக்கிறது. ஜெமினி கணேசனுடைய அத்தை முத்துலெட்சுமி ரெட்டி. ஆகவே, எனக்கும், ஜெமினி கணேசனுக்கும் சொந்தம் இருக்கிறதா, இல்லையா? என்னை வாலியோ அல்லது நம்முடைய இயக்குநர் சிகரம் அவர்களோ பிரித்துப் பார்த்து ``உனக்கு சொந்தம் இல்லை'' என்று சொல்ல முடியாது. சொந்தக்காரர் அவர்கள். அதனால்தான் இந்த விழாவை அவர்கள் வற்புறுத்தினாலும், வற்புறுத்தாவிட்டாலும் வந்திருந்து நடத்திக் கொடுத்திருப்பேன். காரணம், எங்கள் சொந்தக்காரர்கள் வீட்டு விழா இது.

அவருடைய படத்தை வைத்திருப்பது மாத்திரம் இல்லை; அந்த அம்மையார் பெயரால் இன்றைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், கர்ப்பிணிப் பெண்களின் நலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக "டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம்'' என்ற பெயர் சூட்டி கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம்.

அத்திட்டத்தின்கீழ் 2006-க்குப்பின் கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச் சத்து உட்கொள்ள 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. குழந்தை பிறப்பதற்கு முன்பு 3 ஆயிரம் ரூபாய், குழந்தை பிறந்த பிறகு 3 ஆயிரம் ரூபாய் - ஆக, 6 ஆயிரம் ரூபாய் அந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுக்கிறோம் என்றால், அந்தத் திட்டத்திற்குப் பெயரே "டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம்'' என்றுதான் அந்தப் பெயரை வைத்திருக்கிறோம்.

அந்த முத்துலெட்சுமி ரெட்டியின் குடும்பத்துப் பிள்ளை - அவரால் வளர்க்கப்பட்ட பிள்ளை, ஜெமினி கணேசன். அந்த ஜெமினி கணேசன் பள்ளிப் பருவத்திலேயே எந்த அளவுக்கு புரட்சிகரமாக விளங்கினார் என்பதற்கு ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

அவர் படித்த பள்ளிக்கூடத்திலே - ஒரு சமஸ்கிருத ஆசிரியர் பற்றிய விவரம் (இதெல்லாம் நான் சொல்வதல்ல, ஜெமினி அவர்களே எழுதி, கமலா செல்வராஜ் வெளியிட்ட புத்தகத்தில் வந்திருக்கின்ற உண்மை விவரங்கள்). ஜெமினி, ராஜா முத்தையாச் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பிலே படித்த போது, அப்பள்ளியில் இருந்த சமஸ்கிருத ஆசிரியர் பற்றி இந்நூலில் குறிப்பிடும் ஜெமினி கணேசன், "இருபது பிராமண மாணவர்கள் மத்தியில் பிராமணர் அல்லாத ஒரே மாணவன் கோவிந்தராஜீலு. ஆனால், அவனுடைய சமஸ்கிருத உச்சரிப்புதான் மிக நன்றாக இருக்கும். அப்படியும் ஆசிரியர், `பிராமணனே இல்லாத நீயெல்லாம் ஏன் சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள வருகிறாய்?' - என்று கேட்கும்போது, எனக்கு கோபம் வரும். ஒரு பிராமணர் அல்லாத சூத்திரனைப் பார்த்து சமஸ்கிருத ஆசிரியர் ``நீ பிராமணன் இல்லையே, ஏன் சமஸ்கிருதம் படிக்க வேண்டும்?'' என்று கேட்டவுடன், கோபத்தால் கொதித்து, இனம், குலம், மதம் என்ற சின்ன வட்டத்துக்குள் சிக்கி வாழ்வது தவறு. பரந்த உலகத்தில் பரந்த மனதுடையவனாக, இந்தியன் என்ற உணர்வோடு வாழ வேண்டுமென்பது பிறப்பில், வளர்ப்பில், எனக்குள் ஊறிப்போன ஒன்று'' -என்று முழங்கியவர் ஜெமினி கணேசன். எங்கள் சுயமரியாதை இயக்கத்திற்கும், அவருக்கும் இதுபோன்ற பிரச்சினைகளில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை என்றே கருதுகின்றேன்.

ஜெமினி கணேசன் அவர்கள் அவருடைய வாழ்க்கையில் சீர்திருத்தவாதியாக, சாதி, மதம் இவைகளையெல்லாம் மறுப்பவராக, ``ஒன்றே குலம், ஒருவனே தேவன்'' என்ற கருத்து கொண்டவராக, எல்லோரையும் நண்பர்களாகப் பெறுகிற அந்த பரந்த மனப்பான்மை உள்ளவராக வாழ்ந்து காட்டினார் - அவருடைய வாழ்க்கைப் பாதை, நடந்து பார்த்து, உணர்ந்து பார்த்து, அவர் வழியிலே நாமும் புகழொளியைப் பரப்ப வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழின்பால் அவருக்குள்ள ஆர்வத்தை நான் பல நேரங்களில் பார்த்திருக்கிறேன். ஒருமுறை நான் கோலாலம்பூரில் தமிழ் மாநாட்டிற்குச் சென்றிருக்கி றேன். அந்த மாநாட்டிலே திரும்பிப் பார்த்தால், ``வணக்கம்'' என்ற ஒலி கேட்கிறது. யாரென்று பார்த்தால், ஜெமினி கணேசன். அந்த மாநாட்டிற்கு வந்து எங்களோடு இரண்டொரு நாட்கள் தங்கி பொழுதைப் போக்காமல், தமிழைப் பருகி, கருத்துக்களை ஏற்றுச் சென்றவர் அருமை நண்பர் மறைந்த ஜெமினி கணேசன் என்று கருணாநிதி பேசினார்.


இப்போது டோண்டு ராகவன்.

சும்மா சொல்லப்படாது பலரால் “சாம்பார்” என அன்புடனும், சிலரால் இளப்பமாகவும் அழைக்கப்பட்ட ஜெமினியின் பின்னால் இத்தனை விவரங்களா?

ஒரு காலகட்டத்தில் மும்மூர்த்திகளாக அறியப்பட்ட சிவாஜி, எம்ஜிஆர் மற்றும் ஜெமினி ஆகிய மூவரில் எனக்கு ஃபேஃபரைட் ஜெமினியே. அதுவும் சாவித்திரியுடன் நடித்தால் டபுள் ஓக்கே.

பல கோடிகள் சம்பாதித்தும் ஊதாரித்தனமாக செலவழித்து கடைசி நாட்களில் பஞ்சப் பரதேசியாக மறைந்த நட்சத்திரங்கள் மெஜாரிட்டியாக இருந்தபோது ஜெமினி போன்ற சிலர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு பலருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்திருக்கிறார்கள்.

மகிழ்ச்சியுடன்,
டோண்டு ராகவன்

11/16/2010

The man who felled a king (ராஜாவை வீழ்த்திய சாமான்யன்)

டெயிலி பயனியர் பத்திரிகையின் இக்கட்டுரையின் சுட்டியை எனக்குக் கொடுத்த நண்பர் எம். அருணாச்சலம் அவர்களுக்கு என் நன்றி. வழக்கம்போல முதலில் கட்டுரையின் தமிழாக்கம், பிறகு டோண்டு ராகவன் வருவான். கட்டுரையின் பின்னூட்டங்கள் ஆங்கிலத்திலேயே விடுகிறேன்.

ராஜாவை வீழ்த்திய சாமானியன்
நவம்பர் 16, 2010 3:38:18 PM

சந்தன் மித்ரா | புதுதில்லி

ஸ்பெக்ட்ரம் ஊழலை தோண்டியெடுத்த ஜே. கோபிகிருஷ்ணனுக்கு பயனியர் தரப்பிலிருந்து பாராட்டு

இந்த ஜே.கோபிகிருஷ்ணன் என்பவர் திருவனந்தபுரத்தில் இருந்தவாறு பயனியரின் இப்போது இல்லாமல் போயிருக்கும் கொச்சி எடிஷனில் பகுதி நேர நிருபராக இருந்தார் என்பதுகூட ரொம்ப நாட்களாக எனக்குத் தெரியாது. ஆகவே அவர் 2007ல் கொச்சி எடிஷனை ஏறக்கட்டியதும் தில்லிக்கு வந்து தலைமை ஆஃபீசில் வேலை தருமாறு கோரியபோது எனக்கு அவர் மேல் அவ்வளவு நம்பிக்கை வரவில்லை. ஆகவே அவரால் கையெழுத்திடப்பட்டு வந்த சில ஸ்டோரிகளை நான் பார்த்திருந்தாலும், அவருக்கு தில்லி அவ்வளவு பரிச்சயம் இல்லை, ஆகவே இங்கு அவருக்கு உருப்படியான தொடர்புகள் இருக்காது என்று நான் அலுவலக தலைமையதிகாரி நவீன் உபாத்யாயாவிடம் கூறினேன். ஆனால் நவீன்தான் என்னுடன் பேசி ஒரு மூன்று மாதத்துக்கு ட்ரியலாக அவரை எடுத்துக் கொள்ள சம்மதிக்க வைத்தார். அவருக்கு தில்லியின் அளவுகோல்களுக்கு ஒவ்வாத சிறுதொகை ஸ்டைபண்ட் வழங்கப்பட்டது.

அந்த மூன்று மாதங்களில் அவர் ஒன்றும் பிரமிக்கத்தக்க ஸ்டோரீஸ் எதுவும் எழுதவில்லை. இருப்பினும், அவரது உண்மையான உழைப்பு, பிறருடன் இனிமையாக பழகும் தன்மை, விடாமுயற்சி ஆகியவை அவருக்கு முழுநேர வேலையை வாங்கித் தந்தது. சம்பளம் என்னவோ இன்னும் கட்டை சம்பளம்தான். ஆனால் பாரளுமன்றத்தின் மத்திய ஹாலில் அவரது செயல்பாட்டை விதந்தோதினர் இடதுசாரி கட்சிகளில் உள்ள சில நண்பர்கள். தகவல் தொடர்பு விவகாரங்களில் அவரது அறிவின் ஆழத்தைப் பற்றியும் கேள்விப்பட்டேன். ஆனால் அவர் அதிகாரபூர்வமாக இடது சாரிகளை கவர் செய்ததால் நான் அதற்கெல்லாம் ரொம்ப முக்கியத்துவம் தரவில்லை.

பிறகு ஆரம்பித்ததையா அவரது கட்டுரைகளின் ஊர்வலம். 2ஜி பெக்ட்ரம் ஊழலின் பரிமாணங்களை அவர் கவர் செய்ய ஆரம்பித்தார். அந்த பிரச்சினை ரொம்ப சிக்கலானது, இப்போது கூட பலருக்கு அதன் நுட்பங்கள் புரியாது. ஆனால் கோபி ஊழலை வெளியாக்கி புட்டு புட்டு வைத்தார்.

அவரிடமிருந்து ஒன்றன்பின் ஒன்றாக பிரத்தியேக கட்டுரைகள் வரவர அவரை நோக்கி தகவல்களும் காந்தத்தை நோக்கி வரும் இரும்பு போல வர ஆரம்பித்தன. நவின் எல்லா இணைப்புகளையும் அவதானித்து, அந்த ரிப்போர்டுகளை நகாசுபடுத்தினார். இணையத்திலிருந்து கோபியும் பலவிவரங்கலை தோண்டி எடுத்தார். 2ஜி ஊழலை அவர் விடாது பின் தொடர்ந்தார். அதிகாரிகலை சந்தித்தார். எல்லா அரசியல் கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் இருந்தனர். கேரளாக்காரர் ஆனாலும் அவர் நடுநிலை அரசியலில்தான் இருந்தார்.

அவர் மேல் கொண்டுவரப்பட்ட அழுத்தங்களை நான் அறியேன், ஆனால் என் மேல் அவை கொண்டுவரப்பட்டன. எனது 27 ஆண்டு வாழ்க்கையில் இது மிக அதிகமாக இப்போது நடந்தது. இருப்பினும் அவர்றை மீறி நான் செயல்பட்டேன் என்பதைப் பெருமையாகக் கூறிக் கொள்வேன். ஆனால் எல்லாவற்றையும் மீறி நான் பெருமை கொள்வது கோபிகிருஷ்ணனுக்கு நான் எல்லா வசதிகளையும் தந்து, தேசீய ஊடகத்தில் அவரை வளையவிட்டேன் என்பது. கோபியின் பெருமைதரும் சாதனையில் இப்போது பயனியரும் ஆனந்தமாக அமர்ந்திருக்கிறது

பயனியரின் புலனாய்வுக் குழு கோபியுடன் இது பற்றி பேசியதிலிருந்து சில வரிகள்:

கேள்வி: 2-ஜி ஊழலை எப்போது கண்டுகொண்டீர்கள்?

விடை: Swan மற்றும் Unitech நிறுவனங்கள் தங்கள் பங்குகளை அமோக விலைகளுக்கு விற்றதுமே (4,500 கோடி மற்றும் `6,200 கோடி, செப்டம்பர் 2008-ல்). எங்கள் மூக்கு ஊழலை முகர ஆரம்பித்து விட்டது. அலுவலக தலைவர் நவீன் உபாத்யாயா என்னிடம் மேலும் தகவல்களை தேடி எடுக்குமாறு கூறினார். நல்லவேளையாக தகவல் தொடர்பு அமைச்சகத்தின் உள்ளும் புறமும் நன்றி அறிந்த ஒரு நம்பிக்கையான எட்டப்பர் கிடைத்தார். பிரதமர் ராஜாவின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்து ராஜாவிடமே என்ன நடக்கிறது எனக் கேட்டதாகவும் ஒருமுறை அந்த எட்டப்பர் கூறினார்.

மெதுவாக எட்டப்பர்மூலம் அமைச்சகத்தின் ஊழல்களின் பரிமாணங்கள் புலப்படத் துவங்கின. அன்னாட்களில் தான் தனக்கு முன்னால் இருந்தவர்கள் செய்ததையே தானும் செய்ததாக ராஜா பொய்யுரைத்து வந்தார். அந்த எட்டப்பரோ ராஜாவும் அவரது உறவினர்களும் பினாமி கம்பெனிகளில் செய்த முதலீடுகளை விளக்கினார். இந்த ஊழலின் பலன்கள் பல பெரிய நிறுவனங்கள், அரசியல்வாதிகள் லயசன் முதலைகள் ஆகியவருக்குத்தான் சென்றது என அவர் என்னிடம் சொன்னார்.

எனது எடிட்டருடன் பேசி அவரது ஒப்புதலைப் பெர்றால் மட்டுமே தான் மற்றத் தகவல்கலை தரவியலும் எனவும் இந்த எட்டப்பர் கூறினார். எடிட்டரும் ஒப்புதலைத் தர தகவல்கள் சரிபார்ப்பு எட்டப்பரது அலுவலகத்திலும் வேறு பல இடங்களிலும் ரகசியமாக நடந்தது.

கேள்வி: எது உங்களது முதல் ஸ்டோரி, அதன் எதிர்வினைகள் என்ன?

பதில்: ஊழலின் அளவைப் பார்த்ததுமே ராஜாவின் ரியல் எஸ்டேட் பினாமிக் கம்பெனிகளின் விவரங்களை எடுத்தோம். ராஜாவின் தகுதிக்கு மீறிய சொத்து சேர்ப்பை வெளிக்கொணர முடிவு செய்தோம். சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களையும் சந்தன் மித்ராவும் நவீன் உபாத்யாயாவும் சரிபார்த்தனர். 11 திசம்பர் 2008-ல் வெளியான முதல் ஸ்டோரியில் ராஜாவின் பிரதான ரியல் எஸ்டேட் கம்பெனியான Green House Promoters பற்றிய விவரங்களை கூறியிருந்தோம். மற்ற பினாமி கம்பெனியின் விவரங்கள் அடுத்துவரும் நாட்களில் வர ஆரம்பித்தன.

கே: எல்லாவற்றையும் நிறுத்துமாறு உங்கள் மேல் அழுத்தம் வந்ததா? எப்படி சமாளித்தீர்கள்?

ப: முதல் ரிப்போர்ட் வந்ததுமே எடிட்டர் சொன்னபடி நான் ராஜாவை சந்தித்தேன். அவரது கட்சியில் உள்ள அவரது விரோதிகள்தான் இதற்கு பின்னால் உள்ளனரா எனக்கேட்டு சில பெயர்களையும் கூறினார். அவரது தனிப்பட்ட சொத்து விவரங்கள் எனக்கு எப்படிக் கிடைத்தன என்று அவர் என்னை கேட்டார். அப்படியே ஆடிப்போயிருந்தார் அவர். எல்லாவற்றையும் நிறுத்துமாறு அவர் கேட்டார். நான் எடிட்டர் சொன்னதாலேயே அவரது வெர்ஷனைப் பெறவே அவரைப் பார்க்க வந்தேன், வேறு எதற்கும் இல்லை என்று அவரிடம் கூறிவிட்டேன். ராஜா என்னுடன் பேச ஒப்புக்கொண்டாலும் திரும்பத் திரும்ப நான் எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். பல பெரிய நிறுவனங்களும் என்னிடம் அதையே கேட்டன. அதே நேரம் யாரும் என்னிடம் தவறாக நடந்ததாகவோ என்னை பயமுறுத்தியதாகவோ கூற மாட்டேன்.

அச்சமயம் ராஜா 3G ஏலத்தை கேபினட்டின் ஒப்புதல் இன்றி மலிவான விலைக்கு நடத்தத் திட்டமிட்டிருந்தார். பெரிய நிறுவனங்களின் ஏஜெண்டுகள் நான் நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டன. இல்லாவிட்டால் மத்திய அரசு 3G ஏலத்தை ஒரு EGoM-விடம் ரெஃபர் செய்யும் என அவர்கள் பயந்தனர். அதைத்தானே நாங்களும் விரும்புகிறோம் என நாங்கள் பதிலளித்தோம். அதே சமயம் என்னைக் குறி வைப்பார்கள் என்றும் பலர் எச்சரித்தனர். அதை நான் அலட்சியம் செய்தேன். 3G விஷயத்தை எப்படியாவது EGoM-க்கு கொண்டு போகக்கூடாது என்பதுதான் அவர்கள் நோக்கம். அதற்காக எனக்கு என்னவெல்லாம் ஆசை காட்டினார்கள் என்பதை நான் இங்கே கூறுவது சரியாக இருக்காது. ஆனால் கடைசியில் EGoM வந்தது, ராஜா பிக்சரில் இருந்து விலகினார், நாட்டுக்கு 1.06 லட்சம் கோடிகள் கிடைத்தன.

Q: நீங்கள் இதையெல்லாம் நிறுத்த உங்களுக்கு யாரேனும் பணம் கொடுப்பதாகச் சொன்னார்களா?

A: ஆகா செய்தார்களே. ஆஃபர் செய்த தொகைகள் மிக பெரியன. நிறுவன மற்றும் ராஜாவின் ஏஜெண்டுகளும் நான் எடிட்டரிடம் ஒன்றுமே கூறாது கட்டுரைகளை நிறுத்த வேண்டும் என்றெல்லாம் கேட்டுக் கொண்டார்கள். நான் ஒப்புக் கொள்ளவில்லை. அதில் சிலர் டபுள் கேம் எல்லாம் ஆடினார்கள். ஒருவர் ராஜாவைப் பற்றி பல தகவல்கள் தந்து அதே சமயம் ராஜாவுக்கும் பல தகவல்கள் தந்தார். ஆனால் முதல் எட்டப்பர் ஸ்டெடியாக நின்றார் பயமின்றி. பல அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், போலீஸ்காரர்களும் உதவி செய்தனர்.

கே: ராஜாவின் ராஜினாமாவோடு விஷயம் நிற்குமா அல்லாது மேலும் தலைகள் உருளுமா?

ப: நான் என்ன நினைக்கிறேன் என்றால் சுப்பிரமணியன் ஸ்வாமி மற்றும் சாந்தி பூஷன் தொடுத்த வழக்குகள் அவற்றின் கோர்சை முடித்து, சட்டவிரோதம் என சியேஜியால் அடையாளம் காணப்பட்ட லைசன்சுகள் எல்லாமே கேன்சலாகும். பெட்ரோல் பம்ப் ஊழல் வழக்கில் நடந்தது போல அரசு ஏலம் நடத்தச் சொல்லும். ராஜா போன்ற சிலர் சட்டத்தின் சீற்றத்துக்கு ஆளாகலாம். அதே சமயம் நிறுவனங்களுக்கு ரொம்ப பாதிப்பு இராது. ஏலம் நடந்து அரசுக்கு சுமார் 2-3 லட்சம் கோடி ரூபாய்கள் கிடைக்கலாம்.

கே: Howஸ்பெக்ட்ரம் கொள்கையில் வெளிப்படை தன்மையைக் கொணர்ந்து தில்லுமுல்லு நடக்கதிருக்க அரசு என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?

ப: ஸ்பெக்ட்ரம் மேலாண்மை ISROவிடம் தரவேண்டும், ஆனால் எந்த அரசியல்வாதியும் இதை விரும்ப மாட்டான், காரணம் தெரிந்ததே. ஸ்பெக்ட்ரம் ஆடிட் இன்னும் இந்தியாவில் நடக்கவில்லை. இந்த நிலை வேண்டுமென்றே உருவாக்கப்பட்டது எளிதாக பணம் பண்ணும் பொருட்டு. இஸ்ரோ மாதிரி ஒரு நிறுவனம் ஆடிட் செய்தால்தான் வெளிப்படைத் தன்மை வரும்.

கே: ஸ்பெக்ட்ரமுக்கு பிறகு என்ன செய்வதாக உத்தேசம்?

ப: தெரியவில்லை. ராஜாவின் ராஜினாமா பற்றி தெரிந்ததும் ஒரு களைப்பு வந்துள்ளது. இப்போதைக்கு ஏதும் ஐடியா இல்லை.

முதுகில் ஒரு ஷொட்டு பயனியருக்கும் கோபிக்கும்.

ராஜாவின் ராஜினாமா பற்றித் தெரிந்ததுமே ட்வீட்டுகள் ஆரம்பித்தன. பல ட்வீட்டுகள் ரிபீட்டு என்று ஆயின. கோபி கிருஷ்ணாவுக்கும் பயனியருக்கு பாராட்டு மழை குவிந்தது. பெரிய பேப்பர்களோ பல 24x7 நியூஸ் சேனல்களோ தொடவே பயந்த விஷயத்தை பயனியரும் கோபியும் கையாண்டதை பல ட்வீட்டுகள் திரும்பத் திரும்பக் குறிப்பிட்டன. தோல்வி ராஜாவுக்கு மட்டுமல்ல, பெரிய ஊடகங்களுக்கும்தான்!

பின்னூட்டங்கள்: (அவற்றை ஆங்கிலத்திலேயே விடுகிறேன்)

BRAVO GOPI !!
By H.Balakrishnan on 11/16/2010 1:08:58 PM

'GOPI' deserves all the accolades for his fantastic investigative journalism. Living in 'far-away' Chennai, I owe the 'Pioneer' my debt of gratitude for bringing to light the '2G Spectrum Scam' of 'Spectrum Raja'. I have read all the reports filed by 'Gopi'.Credit is also due to Dr.Chandan Mitra for writing this emocium to 'Gopi'. Not many Indians are blessed with this large heart to praise their 'Juniors'.God Bless 'Gopi'

THE MAN WHO FELLED A KING
By PVENKATASUBRAMANIAN on 11/16/2010 12:31:54 PM

Shri. Chandan Mitra,
Excellent. I am one of the few in Chennai could know the truth on the entire 2G spectrum scam only because of relentless reporting in your daily. Thanks to you and Mr. Gopi. Regards, P.Venkat

Salute your bravery
By Ramesh on 11/16/2010 12:13:52 PM

As a proud Indian, we salute your bravery and patience in getting this man out of the ministry. Hope all the money lost is regained. Better still if the Nehru clan is thrown out of India

Gopi and Pioneer
By ShaD on 11/16/2010 11:39:20 AM

Million Salutes to Gopi and Pioneer team!!

The man who felled a king
By Kumar on 11/16/2010 11:31:53 AM

The Pioneer and Mr. Gopikrishnan have done a tremendous national service by exposing this gross irregularity done by high level public officials. Hope Pioneer's continued effort will succeed in exposing all involved in spite of an all out effort by the present government to stonewall and cover up.

The man who felled a king
By s subramanyan on 11/16/2010 11:31:31 AM

Hearty congratulations to J Gopirkshnan; the country needs many such. We are grateful. Kudos to the editor ho potted him and e ncouraged dhim. I have hopeds now that the India n nmedia ahs enopujgh talent waiting to be tapped by editoros. It is they who could unravel the severasl scams that occur almost daily. Kudos once again to The Pionner. COntginue the godo work.

bravo mr gopalkrishnan & pioneer
By hitesh on 11/16/2010 11:24:39 AM

its great to read that v still have courageous reporter..hats off

the man who reinforced democracy
By d v sridharan on 11/16/2010 8:50:12 AM

a journalist raised far from the centres of power in delhi, has taken on power and venality and slayed a monster. it is our free, democratic society that has produced a man like gopi, making us believe that someone somewhere will arise at the right time to avenge evil

The World Hails J Gopikrishna and the Whistleblower
By Maheswar in Kathmandu on 11/16/2010 6:41:35 AM

These two truly served the poor and demoracy in India with their courageous act I am sure they will inspire all moral and ethical citizens to punish the corrupt and end graft in Indian politics

Spectrum, Gopi the winner
By krishnan on 11/16/2010 6:05:47 AM

It is the greatest story ever told and the outcome is unforgettable! We are all proud that there are patriotic citizens still! We in tamilnadu urge chandan and his team to investigate the entire bandwagon of the Tamilnadu Cm, his family, his close aides, loyal ministers. The whole government is reeling under corruption. This old man is surviving on sheer opportunsm and is escaping everytime. I will say Marans escaped. In the spectrum case the role of kanimazi and her mother should also revealed.

Congratulations.
By R. Gopalakrishnan Nair on 11/16/2010 1:56:58 AM

I wholeheartedly congratulate The Pioneer, Messrs Chandan Mitra (whom I knew from his TOI stint), N Upadhyay and above all the unrelenting and fearlessly dedicated Gopikrishnan. I am very disappointed to know that the Kochi edition of the Pioneer was aborted. Because, I strongly feel that if there is any state in India which warrants the existence of a newspaper like the Pioneer with its dedicated staff, it is none but Kerala.


இப்போது டோண்டு ராகவன். இந்த மொழிபெயர்ப்பு வேலை மனதுக்கு நிறைவாக இருந்தது. எளிமையான ஆங்கிலம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/13/2010

கிரேஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உள்ள ரகசிய கேமரா பற்றிய இச்செய்தி உண்மையிலேயே நக்கீரனில் வந்ததுதானா?

முதலில் இணையத்தில் உலாவும் இச்செய்தியை பார்த்து விடுவோம். பிறகு எனது கருத்தைக் கூறுகிறேன்.

கீரிட வைத்தது நமது அலுவலகத்துக்கு வந்த தொலைபேசி அழைப்பு… “சார்… என் மனைவிக்கு உடம்பு சரியில்லைன்னு அந்த பிரபல மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போயிருந்தேன். செக்கப் பண்ற அறைக்கு கூட்டிட்டுப் போயி உடைகளை எல்லாம் கழட்டி டாக்டர் செக்கப் பண்ணியிருக்காங்க. பிறகு, இடுப்புல இன்ஜெக்ஷன் போடும்போது எதார்த்தமா பார்த்தவ அதிர்ச்சியாயிருக்கா. அவ ஆடைகள் இல்லாம படுத்துருக்குற பெட்டுக்கு நேரா கேமரா இருந்திருக்கு. பார்த்துட்டு வந்தவ எங்கிட்ட சொல்லி அழுதுக்கிட்டிருக்கா சார். பெண்களை பரிசோதனை பண்ணி இன்ஜெக்ஷன் போடுற அறையில எதுக்கு சார் கேமரா? அதுவும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவமனையில். என் மனைவி மாதிரி எத்தனை பெண்களோட அந்தரங்கத்தை ரகசியமா படம்பிடிச்சு மிஸ்யூஸ் பண்றாங்கன்னு தெரியல. இந்த கொடூரக் குற்றத்தை நக்கீரன்தான் சார் அம்பலப்படுத்தி… அந்த வக்கிர மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வைக்கணும்” -என்றார் தழுதழுத்த குரலில் ஒருவர்.

அந்த நபர் குறிப்பிட்டது சென்னை ஆவடிக்குப் பக்கத்திலுள்ள பட்டாபிராம் ரயில்வே கேட் அருகில் இருக்கும் பிரபல கிரேஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைதான். பிரசவத்துக்குப் பெயர் பெற்ற மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் இளம்பெண்களின் அந்தரங்கங்களை ரகசியமாக படம்பிடிக்கிறார்களா? என்கிற அதிர்ச்சியுடனும்… அந்த மருத்துவமனையின் புகழைக் கெடுக்க தவறான தகவலை கொடுத்திருப்பாரா? என்கிற சந்தேகத்துடனும் அந்த மருத்துவமனையை நோட்டமிடக் கிளம்பினோம். நமக்கு தகவல் வந்த 21-ந்தேதி மதியமே.

சி.டி.ஹெச். மெயின்ரோட்டிலிருந்து நாம் உள்ளே நுழையும்போதே மருத்துவமனை கேமரா கண் இமைக்காமல் முறைத்தபடி நம்மை கண்காணித்துக் கொண்டிருந்தது. ரிசப்ஷனில் இன்னொரு கேமரா. மதிய நேரம் கூட்டம் எதுவும் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்களின் கண்கள் நம்மை சந்தேகத்துடன் பார்க்க… வெளியில் வந்து காத்திருந்தோம்.

மணி… மாலை 6. இளம்பெண்களின் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. கர்ப்பிணி மனைவியை அழைத்து வந்த கணவர்களில் ஒருவரைப்போல் உள்ளே நுழைந்து ரிசப்ஷனில் நின்றோம். ரிசப்ஷனின் இடதுபுறத்தில் ஃபார்மஸிக்கு பக்கத்து அறையில்தான் கேமரா பொருத்தப் பட்டிருப்பதாக நமக்கு வந்த தகவல். டாக்டரை பார்த்துவிட்டு வரும் இளம் கர்ப்பிணி பெண்கள்… திருமணமாகாத இளம்பெண்கள்… அந்த அறைக்கு சென்று பரிசோதனை + சிகிச்சை பெற்றபடி வெளியே வந்து கொண்டிருந்தனர்.
அந்த நேரம் பார்த்து ஒரு வயதான பாட்டி சிகிச்சைக்காக அந்த அறைக்குள் நுழைய… பட்டென்று அந்தப் பாட்டியின் பேரன்களைப் போல் உள்ளே நுழைந்து “பாட்டிக்கு எப்படிங்க இருக்கு?’ என்று நர்ஸிடம் பேச்சு கொடுத்தபடியே அந்த அறையில் கண்களை சுழல விட்டோம்.

அடிவயிற்றில் ஆணி அடித்தது போல் இருந்தது. பாட்டி பெட்டில் படுத்திருக்க… அவரின் கால் வைத்திருப்பதற்கு நேராக மேலே சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டிருப்பது நம் கண்ணில் பட்டுவிட்டது. அதற்குள் “”சரிங்க… நீங்க வெளியில் போங்க சார்… பாட்டிக்கு இன்ஜெக்ஷன் போடப் போறோம்” என்றபடி நர்ஸ் கதவை சாத்த அடப்பாவமே… எத்தனை எத்தனை இளம்பெண்கள் இந்த இடத்திலே ஆடைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்? இதையெல்லாம் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டு யார் யார் பார்க்கிறார்களோ… என்கிற பதைபதைப்புடனும் அந்த வீடியோ கேமரா பொருத்தப்பட்டிருப்பதை எப்படியாவது ஃபோட்டோ எடுக்க வேண்டுமே என்கிற படபடப்புடனும்… பாட்டியைப் பற்றி விசாரிப்பது போல் திரும்பவும் அந்த அறைக்கு உள்ளே நுழைய முயற்சிக்க… அதற்குள் அந்த பாட்டிக்கு சிகிச்சை முடிந்து ஒரிஜினல் பேரன்கள் பாட்டியை அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள்.

இனி வேறு இளம்பெண் அந்த அறைக்குள் சிகிச்சை பெறும்போது நாம் கேமராவுடன் உள்ளே நுழைந்தால் பரபரப்பாகிவிடும்… என்ன செய்வது? நகத்தை கடித்துத் துப்பிக் கொண்டிருக்கும் போதே… ஒரு சின்ன “கேப்’ கிடைத்தது.

நர்ஸ் மருந்து எடுக்க… வேறு அறைக்குப் போக… பெண் நோயாளியும் அந்த அறையில் இல்லாத நேரம்… பட்டென்று அந்த அறைக்குள் நுழைந்து… கண்காணித்துக் கொண்டிருக்கும் கேமராவையே “க்ளிக் க்ளிக்’ என்று ஃப்ளாஷ் போட்டு க்ளிக்கினார் நமது புகைப்படக் கலைஞர்.
அடிவயிற்றில் ஜிலிருடன்… நாம் அந்த அறையிலிருந்து வெளியேற… நல்லவேளை ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பெண்களும், ஊழியர்களும் அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் சீரியலை சீரியஸாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
வெளியேறிய நாம்… க்ரேஸ் மருத்துவ மனையின் எம்.டி.யும்… மகப்பேறு மருத்துவ நிபுணருமான டாக்டர் செல்லராணியை 044-26853808 என்ற மருத்துவமனை எண்ணில் தொடர்பு கொண்டோம் -சிகிச்சைக்கு கர்ப்பிணி மனைவியை அழைத்து வந்த கணவனைப் போல்.

“”எதுவா இருந்தாலும் மேடம்கிட்ட நேர்ல வந்து பேசிக் கோங்க” என்று மருத்துவமனை ஊழியர் சொல்ல… நாம் விடாப் பிடியாக கெஞ்சி டாக்டரை லைனில் பிடித்தோம்… நைஸாக.

“”ஹலோ வணக்கம்… டாக்டர் செல்லராணி மேடம்ங்களா?”
“”ம்…?”
“”ஆஹ்… நேத்து என் மனைவியை ட்ரீட்மெண்ட் டுக்காக உங்கக்கிட்ட கூட்டிட்டு வந்தேன் மேடம்…”
“”சரி…”

“”அது… வந்து… இன்ஜெக்ஷன் போடுற ரூம்ல கேமரா இருக்கிறதை பார்த்துட்டு வந்து அழுறா மேடம்.”
“”அப்படியெல்லாம் எதுவும் கேமரா வைக்கலையே?”

“”கேமரா இருக்குங்களே மேடம்?”

“”ப்ச்… கேமரா வைக்கலேங்குறேன்ல” (டென்ஷனாகிறார்.)

“”அதில்ல மேடம்… நானும் வந்து பார்த்தேன் மேடம்… கேமரா இருக்குறதை. எனக்கென்னன்னா… நீங்க டாக்டர், பார்க்கலாம். ஆனா… வேற யாராவது பார்ப்பாங்களேன் னுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு”.

“”இங்க பாருங்க… கேமரா கண்ட்ரோல் என் ரூம்லதான் இருக்கு. நான் மட்டும்தான் வாட்ச் பண்ணுவேன். வேற எங்கயும் டிஸ்ப்ளே பண்றதில்ல…”.

“”ஓ… அப்படிங்களா? ட்ரீட்மெண்ட் ரூம்ல கேமரா வெச்சிருக்கீங்களே தப்பில்லையா மேடம்?”.

“”இதுல என்ன தப்பு இருக்கு? இந்த ஹாஸ்பிட்டலில் 14 கேமரா இருக்கு. நீங்க சொல்ற அந்த அறையில் இருக்கிறது சின்ன கேமராதான். ஸ்டாஃப்கள் வேலை பார்க்குறதை கண்காணிக்கத்தான் கேமரா வெச்சிருக்கோம் என்றபடி போனை துண்டித்தார். நக்கீரன்தான் வந்து ஃபோட்டோ எடுத்திருக்கிறார்கள் என்று முன்பே தெரிந்திருந்தால் மருத்துவமனை நிர்வாகம் உஷாராகியிருக்கும். மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் செல்லராணி டேவிட்டின் “கேமரா பொருத்தப்பட்டிருப்பது உண்மைதான்’ என்ற ஒப்புதல் வாக்குமூலமும் நக்கீரனுக்கு கிடைத்திருக்காதே? அதனால்தான் இந்த சைலண்ட் ஆபரேஷன்.

கிரேS மருத்துவமனை ஊழியர் ஒருவரோ “”எல்லா ரூம்லேயும் சி.சி.டி.வி. கேமரா வெச்சிருக்குறதால… நர்ஸ், லேப் டெக்னீஷியன்கள்னு வேலை பார்க்குற பொம்பளப் பிள்ளைங்க ட்ரெஸ் மாத்துறது கூட இந்த கேமராவில் பதிவாகுது. பாவம்… அந்தப் பிள்ளைங்களுக்கு தெரியாது. இவங்களோட இன்னொரு கிரேஸ் ஹாஸ்பிட்டல் பக்கத்துல இருக்கிறதால… டாக்டர் செல்லராணி அங்கே போய்டுவாங்க. அந்த நேரத்துல அவருடைய கணவர் டேவிட்தான் கேமரா மானிட்டரில் உட்கார்ந்திருப்பாரு. அவர் டாக்டருமில்ல… ஆனா… இப்படி எல்லா ரூம்லயும் என்ன நடக்குதுன்னு பார்ப்பாரு. கேமராவில் பதிவானதைக் காண்பித்து ப்ளாக் மெயில் பண்ணியே சில சீனியர் டாக்டர்கள் அந்தப் பெண்களை தங்கள் வலையில் வீழ்த்தியிருக்காங்க. கர்ப்பிணி பெண்கள் மட்டுமில்ல… திருமணமாகாத இளம்பெண்களும், கல்லூரி மாணவிகளும் இந்த மருத்துவமனைக்கு வந்து அந்த அறையில்தான் சிகிச்சை எடுத்துக்குறாங்க” என்று வேதனையுடன் சொன்னவர் “”ஏற்கனவே நோயாளியின் கிட்னியை திருடியதா பெரும் பரபரப்பானாங்க இந்த டாக்டர். அப்புறம் இளம்பெண்ணுக்கு ஆபரேஷன் பண்றேன்னு பாதி ஆபரேஷன் பண்ணிட்டு மீதியை வேற ஹாஸ் பிட்டலுக்குப் போயி பண்ணிக்கோங்கன்னு திடீர்னு கைவிரிக்க… அந்த இளம்பெண் இறந்துட்டாங்க…. இவ்வளவு நடந்தும் இந்த மருத்துவமனைக்கு பெண்கள் கூட்டம் குவியும். அதை இப்படி வக்கிரமா வீடியோ பதிவு செஞ்சு கணவனை ரசிக்க வைக்கிறாங்களே ச்சே” என்கிறார் நொந்தபடி.

“கூச்சம், பயம் காரணமாக ஒரு நோயாளி தனது உடலை காண்பிக்க மறுத்துவிட்டால்… வற்புறுத்தி டாக்டர் பரிசோதனை செய்வதே சட்டப்படி குற்றம். அப்படியிருக்க… அதே அந்தரங்கத்தை நோயாளிகளுக்கு தெரியாமலேயே இரகசியமாக படம்பிடித்து டாக்டரோ அல்லது வேறு யாரோ ரசிப்பது… மிஸ் யூஸ் பண்ணுவது பெரும் குற்றம்” என்கிறார்கள் பிரபல மருத்துவர்கள்.

கிரேஸ் என்றால் மகிமை என்று அர்த்தம். இப்படிப்பட்ட வக்கிர கேமராவால் மகிமை இழந்து நிற்கிறது கிரேஸ் மருத்துவமனை. காவல்துறைதான் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி: நக்கீரன்


நக்கீரனில் வந்ததாக நான் படித்த இச்செய்தி எந்த இஷ்யூவில் வந்தது என்பது குறித்து தகவல் இல்லை. வாரத்துக்கு இருமுறை வரும் அந்த இதழில் எந்த தேதியினுடையது இச்செய்தி என்பதைப் பார்க்க இயலவில்லை. நக்கீரன் வலைத்தளத்திலும் தேட இயலவில்லை. அதில் தேடுபொறிக்கான பெட்டியே என்னால் காண முடியவில்லை.

கூகளில் பார்த்தால் வந்திருக்கும் ரிசல்டுகளில் ஒன்றில் கூட நக்கீரனின் தளம் இல்லை.

இவ்வளவையும் நான் இங்கே எழுதுவதற்கு காரணமே வெளிப்படைத் தன்மை அதிகம் இச்செய்தியில் இல்லை என்பதாலேயே.

இதை கூறிய பிறகு, குற்றச்சாட்டு மிகத் தீவிரமானது என்றுதான் கூற வேண்டும். புனிதமான மருத்துவத் தொழில் இவ்வாறு மலிவாகப் போனது மனதுக்கு விசனத்தை அளிக்கிறது.

இதில் கூறிய விஷயங்கள் பொதுமக்கள் பெரும்பான்மையோர் காண வேண்டும் என்ற நோக்கிலேயே இங்கும் அதை வெளியிடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/01/2010

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்த நியாயமான தீர்ப்பு

முதலில் தீர்ப்பின் சாரம்:


* சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்களும் முஸ்லிம்களும் பிரித்துக்கொள்ள வேண்டும்.

* சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டும். (1/3 + 1/3 + 1/3)

* மூன்றாக பிரிக்கப்படும் நிலத்தின் ஒரு பகுதி – இந்து சாதுக்களின் நிர்மோகி அகாரா அமைப்புக்கும், இரண்டாவது பகுதி – சன்னி வக்ஃப் வாரியத்துக்கும், மூன்றாவது பகுதி – இந்து மகா சபைக்கும் பிரித்து வழங்கப்பட வேண்டும்.

* நிலத்தை பிரிக்கும் நடவடிக்கை, மூன்று மாதங்களுக்குள் தொடங்கப்பட வேண்டும்.

* அவ்வாறு, மூன்றாக பிரிக்கப்படும் வரை தற்போதை நிலை தொடர வேண்டும்.

* சர்ச்சைக்குரிய நிலத்துக்கு (முழு) உரிமை கோரிய நிர்மோகி அகாரா அமைப்பு மற்றும் சன்னி வஃபு வாரியத்தின் மனுக்கள் தள்ளுபடி.

* சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் பிறந்தது உண்மையே என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

* 1949 டிசம்பர் 22-ல் சர்ச்சைக்குரிய இடத்தில் வைக்கப்பட்ட ராமர் சிலைகள் அகற்றப்படக் கூடாது.

* சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம், இரண்டு சமூகத்துக்குமே சொந்தம் என்றார், நீதிபதி எஸ்.யு.கான்.

இப்போது டோண்டு ராகவன் கூற விரும்புவது.

இந்துக்கள் செய்யக் கூடாத விஷயம் என்னவென்றால், அரசின் இந்து அறநிலைத்துறையை கிட்டவே சேர்க்கக் கூடாது. ஏற்கனவேயே பல இந்துக் கோவில்களின் வருவாயை வேறு செலவினங்களுக்கு திருப்பிய (முக்கியமாக நாத்திகக் கழக அரசுகள், கிறித்துவ ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டி) கூத்தே போதும்.

பை தி வே, மற்ற மதக்கோவில்களை எல்லாம் விட்டுவிட்டு ஹிந்துக் கோவில்களை மட்டும் அரசு குறிவைப்பது அடாவடிச் செயல் என்பதை இங்கு குறிப்பிட்டு விடுகிறேன்.

மதசார்பற்றவர்களாக காட்டிக் கொண்ட அரசியல் வியாதிகள் கிட்டே வந்து குளறுபடி செய்யாதிருப்பது நலம். எது எப்படியானால் தேச விரோத சக்திகள் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்ட குழப்பங்கள் விளையவில்லை இது வரைக்கும் (touchwood).

இன்னும் விளக்கமாக பின்னால் பதிவு போடும் உத்தேசம். இப்போதைக்கு என் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜய் ஸ்ரீராம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/05/2010

அவனவன் பாம்பை பத்திரமா பாத்துக்கோங்கப்பா

தலைப்பு சுஜாதா கதையில் வந்த வரியிலிருந்து எடுக்கப்பட்டது. அக்கதை வந்து பல ஆண்டுகளாயின.

ஆனால் இப்போது கிட்டத்தட்ட அதே நிகழ்ச்சி நடந்தது பற்றி தினமலரில் வந்த செய்தியை முதலில் பார்ப்போம், பிறகு சுஜாதாவின் அக்கதைக்கு வருவோம். (பை தி வே நிகழ்ச்சி ப.வேலூரில் நடந்தது என குறிக்கப்பட்டுள்ளது. வேலூருக்கு எப்போ இனிஷியல் கிடைத்தது)?

பைக்கில் புகுந்து கண்ணாமூச்சி காட்டி பதற வைத்த பாம்பு
ப.வேலூர்: பைக்கினுள் பாம்பு புகுந்ததால், அந்த பைக் தனித்தனியாக பிரித்துப்போடப்பட்டது. மூன்று மணி நேரத்துக்கு பின், பைக்கின் இண்டிகேட்டரில் இருந்த பாம்பை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்.
ப.வேலூரை சேர்ந்த சேகர் என்பவர் சுல்தான்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேலாளரக பணிபுரிந்து வருகிறார். நேற்று மதியம் ஒரு மணியளவில் மருத்துவமனைக்கு சென்ற அவர், பைக்கை மருத்துவமனை முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். சிறிது நேரத்துக்கு பின், அவர் பைக்கை எடுக்க வந்தபோது, அங்கிருந்தவர்கள் பைக்கினுள் சிறிய பாம்பு புகுந்துள்ளது எனத் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த சேகர் பைக்கை அப்படியும்- இப்படியும் ஆட்டி பாம்பை தேடினார். பாம்பு வெளியே வராததால், மெக்கானிக்கை வரவழைத்து பைக் பாகங்களை தனித்தனியாக பிரித்தனர். எதிலும் பாம்பு தென்படாததால், "பாம்பு வெளியேறியிருக்கும்' என, மெக்கானிக் தெரிவித்துள்ளார்.
பயத்தில் பைக்கை எடுக்க சேகர் தயக்கம் காட்டினார். அப்போது, பைக்கின் பின்பக்க இண்டிகேட்டரில் இருந்து பாம்பு எட்டிப்பார்த்தது. அங்கு நின்றிருந்தவர்கள் பாம்பை அடித்துக் கொன்றனர். பைக்கில் புகுந்து மூன்று மணிநேரம் ஆட்டம் காட்டிய பாம்பால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இப்போது சுஜாதாவின் அக்கதைக்கு செல்வோம். கதை ஸ்ரீரங்கத்தில் நடந்ததாக எழுதியிருப்பதாக நினைவு. சுஜாதா, அவர் வீட்டில் அவரது தங்கை வத்சலா, அந்தத் தங்கையை சைட் அடிப்பதற்காகவே வரும் அவர் நண்பன் (சீமாச்சு?), கிரிக்கெட் புகழ் கே.வி., பக்கத்தாத்து எதிராத்து மாமாக்கள், சைக்கிள், சைக்கிளுக்குள் பாம்பு ஆகியவைதான் இக்கதையில் இடம் பெறும் முக்கியப் பாத்திரங்கள். நினைவிலிருந்தே கதையை கொண்டு செல்கிறேன்.

முதலில் பாம்பை பார்த்தது சீமாச்சுதான். “டேய் பாம்புடா” என அவன் கத்த, எல்லோரும் திடுக்கிட்டு அதை பார்க்க, பாம்போ இவர்கள் எல்லோரையும் பார்த்து மிக மிக அதிகமாகவே திடுக்கிட்டு விறுவிறுவென சுஜாதாவின் சைக்கிள் சீட்டுக்கடியில் போய் சுருண்டு கொண்டது.

இப்போது சீமாச்சு பாம்பை அடிக்க முஸ்தீபுகள் செய்கிறான். “வத்சலா கிட்டே வராதே, பயந்துக்கப் போறே” என அனாவஸ்யமாக கூறுகிறான். வத்சலாவோ ஆவலுடன் அருகில் வருகிறாள். சுற்று வட்டார ஆண்கள் குழுமுகின்றனர். தலைக்குத் தலை ஆலோசனை. எல்லோரும் பத்திரமாக இருக்க வேண்டும் என அறிவுறைகள் சரமாரியாக வீசப்படுகின்றன.

“அவனவன் பாம்பை பத்திரமா பாத்துக்கோங்கப்பா” என்ற ஒரு இளவட்டக் குரல் கேட்க, “எவண்டா அது செவுள் பிஞ்சிடும் பாத்துக்கோ” என ஒரு பெரிசு உறுமுகிறது. (அப்பாடி தலைப்பை ஜஸ்டிஃபை செய்தாயிற்று).

அதற்குள் பாம்பு சற்றே யோசனையுடன் சைக்கிளை விட்டு இறங்குகிறது. அச்சமயம் கிரிக்கெட் புகழ் கே.வி. (அது வேறு கதை, யாராவது பின்னூட்டத்தில் சொல்லாவிட்டால் நான் சொல்கிறேன்) வந்து சேருகிறான். விஷயம் தெரிந்து தலைமைப் பொறுப்ப ஏற்கிறான். யார் யார் எங்கே நிற்பது என்றெல்லாம் வியூகம் வகுக்கிறான். “வேண்டாம் கேவி அதை விட்டுவிடு. அது சாதாரண தண்ணிப்பாம்பு” என வத்சலா கூற அதை அலட்சியம் செய்கிறான்.

சட்டென வத்சலா ஒரு கம்பை எடுத்து பாம்பின் மேல் வைக்க அது கம்பைச் சுறிக் கொள்கிறது. அப்படியே அதை கம்புடன் எடுத்து சீமாச்சுவிடம் “இந்தா பாம்பு, அடி” என அவள் கூற சீமாச்சுவா வேட்டி அவிழ்வதுகூட உணராது அந்த இடத்தை விட்டு ஓடுகிறான். பிறகு கீழே விழுந்த பாமு சாக்கடை நோக்கி நகர, கேவி அதன் தலையில் தடியால் அடித்து கூழாக்குகிறான். ஏன் அவன் பாம்பை அடித்தான் என வத்சலா தேம்பித் தேம்பி அழுகிறாள்.

கதை முடிவில் தன் தங்கையை இன்னும் நன்றாக புரிந்து கொண்டதாக சுஜாதா கூறுகிறார். சீமாச்சு சைட் அடிக்கும் வேலையை விட்டான் என்றும் கூறுகிறார். (அவருக்கு சகோதரிகளே கிடையாது. இந்த மற்றும் ஏனைய கதைகளில் வரும் அவர் தங்கை ஒரு கற்பனை பாத்திரமே).

இந்தப் பாம்பை வைத்து பல காமெடி சீன்கள் வந்து விட்டன. அவற்றில் ஒன்றில் லிவிங்ஸ்டன் மற்றும் தேவயானி வருகின்றனர். லிவிங்ஸ்டன் வெறும் பந்தா காட்டியபடி மவுத் ஆர்கனில் படையப்பா டியூனை வாசிக்க, தேவயானி அனாயாசமாக ஒன்றுக்கு இரண்டு பாம்புகளை கையால் பிடித்து வீசுகிறார். படத்தின் பெயர் மறந்து விட்டது. யாராவது சொல்லுங்கப்பூ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/25/2010

விஸ்வநாதன் ஆனந்துக்கு இழைக்கப்பட்ட அவமானம்

தினகரனில் வந்த செய்தி

ஐதராபாத்: உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இந்திய குடிமகனா? என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கிளப்பிய சந்தேகத்தால், ஆனந்துக்கு ஐதராபாத் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. ஆனந்திடம் மத்திய அமைச்சர் கபில்சிபல் பேசியதை தொடர்ந்து இந்த பிரச்னை தீர்ந்தது.
தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், உலக செஸ் சாம்பியனாக உள்ளார். இதை பாராட்டி ஐதராபாத் பல்கலைக் கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தது. இந்த பல்கலைக் கழகத்தில் இப்போது சர்வதேச கணித மாநாடு நடைபெற்று வருகிறது. அப்போது, விஸ்நாதன் ஆனந்துக்கும் ஹார்வர்டு பல்கலைக் கழக கணித பேராசிரியர் டேவிட் மும்போர்டுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டது. அதற்கான விழா நேற்று முன்தினம் நடைபெற இருந்தது.

பல்கலைக் கழகங்கள் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், டாக்டர் பட்டம் வழங்குவதற்கு அதனிடம் அனுமதி பெற வேண்டும். அதன்படி, விஸ்வநாதன் ஆனந்துக்கும், மும்போர்டுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க அனுமதி கேட்டு, பல்கலைக்கழக நிர்வாகம் கடிதம் எழுதியது. சர்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்பதற்கு வசதியாக, விஸ்நாதன் ஆனந்த் தனது குடும்பத்துடன் ஸ்பெயின் நாட்டில் தங்கி இருக்கிறார். அங்கு அவருக்கு சொந்தமாக வீடும் உள்ளது.

இதனால், ஸ்பெயின் குடியுரிமையை அவர் பெற்றுக் இருக்கக் கூடும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக பல்கலைக் கழகத்துக்கும், ஆனந்துக்கும் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியது. அவர் இந்திய குடிமகன்தான் என்பதை நிருபிப்பதற்காக, ஆனந்த்தின் இந்திய பாஸ்போர்ட் நகல் கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த பிரச்னையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வேகமாக முடிவு எடுக்காமல் கடிதத்தை கிடப்பில் போட்டுள்ளது. இதனால், நேற்று முன்தினம் நடைபெற வேண்டிய பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை.

பட்டமளிப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்து வரும் பல்கலைக் கழகத்தின் கணிதத் துறை தலைவர் ரஜத் தாண்டன் அளித்த பேட்டியில், “விஸ்வநாதன் ஆனந்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது நிறுத்தவோ, மறுக்கவோ படவில்லை. தாமதம் ஆகிறது அவ்வளவுதான். அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்கு அனுமதி கேட்டு நாங்கள் அனுப்பிய கடிதம், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிசீலனையில்தான் இன்னும் இருக்கிறது’. இந்த விவகாரத்தால் நாங்கள் மிகவும் தர்மசங்கடத்துக்கு ஆளாகி இருக்கிறோம்’ என்றார். பல்கலைக் கழகத்தின் பார்வையாளராக ஜனாதிபதி இருப்பதால், அவருடைய கவனத்துக்கும் இந்த பிரச்னையை பல்கலைக் கழகம் எடுத்துச் சென்றது.
அமைச்சர் மன்னிப்பு:

இந்த நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் நேற்று காலை விஸ்வநாதன் ஆனந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொள்ளும்படி வலியுறுத்தினார். நடைமுறை தவறால் இந்த குழப்பம் ஏற்பட்டு இருப்பதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் ஆனந்திடம் கபில் சிபல் கூறினார்.
இதைத் தொடர்ந்து, பிரச்னை முடிவுக்கு வந்தது. ‘பட்டம் வேண்டாம்’ என்று கூறிய ஆனந்த், கபில்சிபல் பேசியதைத் தொடர்ந்து அதை பெற்றுக் கொள்ள சம்மதித்தார். முன்னதாக, கணித மாநாட்டில் ஆனந்த் நேற்று கலந்து கொண்டார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கபில்சிபல் மன்னிப்பு கேட்டதால் திருப்பம்.

(நன்றி தினகரன்).

ஒரு திருப்பமும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை. ஆனந்த் டாக்டர் பட்டம் வேண்டாம் எனக்கூறிவிட்டதாக ஹிந்துவில் வந்த செய்தி கூறுகிறது.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில் இருக்கும் அறிவுக் கொழுந்துகள் வேண்டுமென்றே இவ்வாறு செய்திருக்க வேண்டும். கபில் சிபல் வேண்டாவெறுப்பாக மன்னிப்பு கேட்டுக் கொண்டால் ஆயிற்றா?

அன்னை தெரசாவுக்கு சமாதான நோபல் பரிசு கிடைத்தபோது அவர் வாங்கிய பரிசு பணத்துக்கு வருமான வரி போடாமல் விலக்கு அளிக்கலாம் என ஒரு நோட் போடப்பட்டு அது நிறைவேறியதாம். அச்சமயம் ஒரு கார்ட்டூனிஸ்ட் இத்தருணத்தில் ஒரு சிவப்பு நாடா அதிகாரி போடக்கூடிய ஆட்சேபணை நோட்டை இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “இப்போது தெரசாவுக்கு விதிவிலக்கு கொடுத்தால், பல இந்தியர்கள் நோபல் பரிசு பெற்று, வரிகொடாது அதனால் அரசுக்கு வரி நஷ்டமாகிவிடும்”. இது கிண்டலுக்குத்தான் என்றாலும் இப்போது நடந்ததைப் பார்க்கும்போது அதிலும் உண்மை இருக்கத்தான் வேண்டும்.

சிவப்புநாடா பிரச்சினைகள் பற்றி நான் இட்ட இந்தப் பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்.

இப்போதிருப்பது போல முன்பெல்லாம் ஓய்வூதியம் தொகை வங்கிக்கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படவில்லை. பென்ஷன் வாங்கும் தினத்தன்று அரசு கருவூலங்களில் ஓய்வு பெற்றவர்களால் சூழப்பட்டிருக்கும். அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் இருக்க வேண்டும். அப்போதுதான் போனால் போகிறதென்று சில மணிநேரத் தாமதங்களில் பென்ஷன் தொகையை கடனே என்று பட்டுவாடா செய்வார்கள். இது சம்பந்தமாக உண்மையாக நடந்த ஒரு விஷயம் இதோ.

பிரணதார்த்தி ஹரன் (கற்பனை பெயர்) ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் தன் மகள் இருக்கும் இன்னொரு ஊருக்கு சென்றிருந்ததால் அவ்விரு மாதங்களும் ஓய்வூதியம் வாங்க வரவில்லை. மார்ச் மாதம்தான் வந்தார். மூன்று மாதங்களுக்கும் சேர்த்து பணம் பெறும் விண்ணப்பத்துடன் தான் உயிருடன் இருக்கும் சான்றிதழையும் எடுத்து வந்திருந்தார். ஆனாலும் பென்ஷன் மறுக்கப்பட்டது. காரணம்? அவர் மார்ச் மாதத்துக்கு மட்டும் உயிருடன் இருக்கும் சான்றிதழை எடுத்து வந்திருந்தார். அதற்கு முந்தைய மாதங்களான பிப்ரவரி மற்றும் ஜனவரி மாதங்களுக்கு எடுத்து வரவில்லையாம்! இது எப்படி இருக்கு?


ஸ்பெயினில் வீடு எடுத்திருக்கிறாராமா? அவரால் எடுக்க முடிகிறது எடுக்கிறார். அரசு அனுமதிகள் வாங்கியிருப்பாராக இருக்கும். இவன்களுக்கு ஏன் இந்த காண்டு? அவர் இந்தியரா இல்லையா என்பதில் என்ன சந்தேகமாம் இவன்களுக்கு?

ஆனந்த் அவர்களே, உங்கள் மறுப்பில் உறுதியாக இருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/30/2009

பலே எஸ்.வி. சேகர்

இது ஒரு மீள்பதிவு. புது பதிவாகத்தான் போட நினைத்தேன். ஆனால் போன ஆண்டின் பதிவையே சற்றே இற்றைப்படுத்தினாலே போதும் என மனதுக்கு பட்டதாலேயே இந்த மீள் பதிவு. முதலில் பழைய பதிவைப் பார்ப்போம். பிறகு இற்றைப்படுத்துகிறேன்.

“நகைச்சுவையில்தான் இவர் தூள் கிளப்புவார் என நினைத்திருந்தேன். பலே, மனிதர் அதிமுக செயற்குழு/பொதுக்குழு கூட்டங்களுக்கு தனக்கு அழைப்பு அனுப்பாத விஷயத்தில் முனைந்து சிக்சர்களாகவும் கோல்களாகவும் அடித்து தூள் கிளப்பி விட்டார்.

போன ஜூ.வி. இதழில் எப்படியும் தான் வானகரத்தில் நடக்கவிருந்த பொதுக்குழு மீட்டிங்கிற்க்கு அழைப்பில்லாவிட்டாலும் போகப்போவதாக எஸ்.வி.சேகர் அவர்கள் கூறியதை பற்றி கழுகார் ஒரே வரியில் க்ரிப்டிக்காகக் குறிப்பிட்டு பறந்தார். உண்மையாக அந்த மீட்டிங்க் நடந்த தினத்தில் அவர் செய்த வியூகங்கள் கலகலப்பை உண்டாக்கின என்றால் மிகையாகாது. பொதுக்குழு பபரப்பையும் 'ஹைஜாக்' செய்து எல்லோரும் தன்னை பார்க்கும்படி செய்து விட்டார் 'அன்றைய தினத்தில்'.

பிப்ரவரி 13-ஆம் தேதி வானகரம் ஏரியாவே பரபரப்பில் இருந்த போது எஸ்.வி.சேகர் அவர்கள் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் பொருட்டு கோட்டைக்கு சென்று கொண்டிருக்கிறார் என்ற தகவல் சூடாக வந்தது. ஜெயலலிதா அவர்களை வரவேற்பதற்காக பொதுக்குழு வளாகத்தில் காத்திருந்த செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் ஆகியோரது செல்போன்கள் எல்லாம் அடுத்த நிமிஷம் பிஸியாகி விட்டன. ஆனால் எஸ்.வி.சேகரின் மொபைலோ 'ஸ்விட்ச் ஆஃப்'பில்'.

அது போதாது என்று ஜெயலலிதா அவர்கள் காரில் வந்து இறங்கி, "எஸ்.வி. சேகர் வந்தாரா" என்று கேட்க அடிப்பொடிகள் டரியல் ஆனார்கள். அதே சமயம் கோட்டையில் மொத்த மீடியாவும் எஸ்.வி.சேகரை சூழ்ந்து கொள்ள, தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் வைத்தி அங்கே ஆஜராகி, "அண்ணே, அம்மாவை விட்டு போயிடாதீங்கண்ணே" என்று அவர் காலில் விழுந்து கெஞ்ச, ஒரே ரகளைதான். எம்.நடராஜனின் தம்பி ராமச்சந்திரனும் வந்து சேகரிடம் பேசினார். பிறகு மீடியாவிடம் பேசிய சேகர், "நான் அதிமுகவை விட்டு போக மாட்டேன். நான் வாங்கியிருக்கும் புது காருக்கு ஃபேன்ஸி நம்பர் வாங்கவே வந்தேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பினார். :))))))))

சேகர் வானகரம் வந்தபோது பொதுக்குழு முடிந்துவிட்டது. இருந்தும் ஜெயலலிதாவுக்கு பெரிய வணக்கம் வைத்தார். தனக்கு அழைப்பு அனுப்பவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி விட்டார்.

முழு விவரங்களை காண லேட்டஸ் ஜூனியர் விகடன் இதழ் (20-02-2008) பார்க்கவும்.

எது எப்படியோ என்ன செய்தால் காரியம் நடக்குமோ அதற்கேற்ப செயல்பட்டு சேகர் தான் நினைத்ததை சாதித்து விட்டார்.

இது சம்பந்தமாக சில எண்ணங்கள். அதிமுகவில் ஜெயலலிதாவை மீறி செயல் புரியும் தைரியம் யாருக்கும் இல்லை. ஆக, அழைப்பு அனுப்பாத விஷயம் அவருக்கு தெரியாமல் போயிருக்காது. தன் கீழ் இருப்பவர்களை இம்மாதிரி மோதவிட்டு யார் வெற்றிபெறுகிறார்களோ அவருக்கு ஆதரவளிப்பது பல தலைவர்களின் உத்தியே. எல்லோரையும் திரிசங்கு நிலையில் வைப்பதே ஜெயலலிதா அவர்களின் ஸ்டைல். இம்முறை எஸ்.வி. சேகர் சாதித்திருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் அவர் ஒன்றை மறக்கக் கூடாது. அதாவது ஜெயலலிதா அவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி. எஸ்.வி.சேகர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஜெயலலிதாவை ரொம்பவும் நெருங்கி விடக்கூடாது. தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பதுவே பலன் தரும்.

அதே சமயம் எந்த சொந்த விஷயத்துக்கும் out of the way உதவி கேட்கக்கூடாது. சோ அவர்கள் சிறந்த பத்திரிகையாளராக செயல்படுவதன் சூட்சுமமே அதுதான். தனக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை பாஜக தந்தபோது, தனது சுதந்திரம் பாதிக்கும் வகையில் தான் செயலாற்ற இயலாது என்று கூறியே அவர் அப்பதவியை ஏற்று கொண்டார். கடந்த 38 ஆண்டுகளில் தனது தனிப்பட்ட விஷயங்களில் யாரிடமும் போய் சிபாரிசுக்கு அவர் நின்றதாகத் தெரியவில்லை. அம்மாதிரி அணுகுமுறையை எஸ்.வி. சேகர் அவர்களும் பாவிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்”.

இப்போது இற்றைப்படுத்தலை பார்ப்போம். வெகு நாட்களாகவே சேகரின் அதிமுக வாழ்க்கை நாட்கள் எண்ணப்பட்டன என்பதில் எனக்கு ஐயமே இல்லை. எப்போது அது முடியும் என்பதுதான் கேள்வி. சாதாரணமாக ஜெயலலிதா என்றாலே வெளிக்கு போகும் அதிமுக உறுப்பினர்கள் மத்தியில் எஸ்.வி. சேகர் மிக பளிச்சென்ற விதிவிலக்காக இருந்தார். அதுவே தலைவிக்கு பொறுக்கவில்லை என்பது க்ளியராகத் தெரிகிறது. மகாபாரதத்தில் கூறப்படும் கணிக நீதியை ஏறக்குறைய மாற்றமேயின்றி அப்படியே பாவிப்பவ்ரகள் நமது அரசியல் தலைவர்கள். அந்த நீதியின் சில அம்சங்கள் இதோ.

தண்டனை வழங்க எப்போதும் தயாராக இருக்கும் அரசனைக் கண்டு குடிமக்கள் அஞ்சுவார்கள். அதே போல எதிரிகளை ஒழிப்பதில் தாட்சண்யமேயின்றி நடந்து கொள்ள வேண்டும். எதிரி முழுமையாக அழிக்கப்படவேண்டும். எதிரி மிக பலவானாக இருந்தால் சமயம் பார்த்து அவனை கொல்ல வேண்டும். அதற்கு சாம, தான, பேத, தண்ட முறைகளை முறையாக பிரயோகிக்க வேண்டும். அம்முறையில் எதிரியை அழித்த பிறகு, அவர்கள் சாவுக்கு வருந்துவது போன்ற பாவனை செய்ய வேண்டும். அம்மாதிரி செய்தால் எதிரியின் நண்பர்கள் இவன் பக்கமே இருந்து விடுவார்கள். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் எதிரிகள் என்பது உறவினர்களையும் சேர்த்து, உள் எதிரிகளையும் குறிக்கும். ஆக மனிதாபிமானம் என்பதை சுத்தமாக கண்பித்தலே கூடாது. இந்த ரீதியிலேயே இந்த கணிக நீதி கூறிக்கொண்டு செல்கிறது.

மீண்டும் சேகர் விஷயத்துக்கு வருவோம். அவர் இத்தனை அவமானங்களை சகித்து கொண்டு கட்சியில் எப்படி தொடர்ந்தார் என்பது பலருக்கு புரியாதிருந்தது. விஷயம் என்னவென்றால், அவராக ராஜினாமா செய்திருந்தால் அவரது எம்.எல்.ஏ. பதவி கட்சித் தாவல் தடுப்பு சட்டப்படி பறிபோயிருக்கும். இப்போது கட்சியே அவரை நீக்கியதால் அவர் கட்சித் தாவியராக கருதப்பட மாட்டார். ஆகவே அவரது பதவி அப்படியே இருக்கும். இனிமேல் அவர் சட்டசபையில் பேச தடை ஏதும் இருக்கக் கூடாது.

அதிமுக வரலாற்றில் சேகர் ஒரு மைல்கல். சாதாரணமாக அதிருப்தியாளர்கள் தலைவியின் காலில் விழுவதுதான் நடந்து வந்துள்ளது. இவர் வித்தியாசமாக நடந்து கொண்டிருக்கிறார் இதுவரைக்கும். இனிமேலும் அப்படித்தான் நடப்பார் என கருதுகிறேன்.

இந்தத் தருணத்தில் திருநாவுக்கரசர் பற்றி பேசாமல் இருக்கவியலாது. தனக்கென ஒரு ஃபால்லோவிங் வைத்திருந்த அவர் தேவையின்றி ஜெயிடம் பலமுறை சரணடைந்தது என் மனதை உறுத்துகிறது. இப்போதும் கூட அவர் பாஜகவை விட்டு அதிமுகவுக்கு திரும்பலாமா என்ற யோசனையில் இருப்பதாக செய்திகளில் படித்தேன். அவ்வாறு செய்தால் அவர் இருக்கும் சுயமரியாதையை இழப்பார் என்பதே நிஜம்.

எது எப்படியானால் என்ன. Sekar has won the war of nerves. ஆகவே மீண்டும் கூறுவேன், சபாஷ் எஸ்.வி. சேகர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/03/2009

ஸ்ரீலங்கா கிரிக்கெட் குழு மீது பாகிஸ்தானிய ரௌடிகளின் துப்பாக்கி தாக்குதல்கள்

திடீரென வெடித்துள்ள இந்த வன்முறை பாகிஸ்தானில் உள்ள ஏற்கனவேயே நிலையற்ற நிலையை இன்னும் மோசம் ஆக்கியுள்ளது.

லாகூர்: ஸ்ரீலங்காவின் 8 கிரிக்கெட் வீரர்கள் துப்பாக்கி சூட்டில் காயமடைந்துள்ளனர் என ஒரு பாக் அதிகாரி தெரிவித்துள்ளார். அவர்கள் லாகூரில் இரண்டாம் கிரிக்கெட் டெஸ்ட் ஆட சென்று கொண்டிருந்தபோது அவர்களது பேருந்து தாக்கப்பட்டது என AP தெரிவிக்கிறது

தாக்குதலை ஊர்ஜிதம் செய்த ஸ்ரீலங்கா டீமின் மேனேஜர் Brendon Kruppu குமார் சங்ககாரா மற்றும் அஜந்தா மெண்டிஸ் உட்பட பலர் காயம் அடைந்துள்ளனர் என கூறியுள்ளார்.

"நிலைமையை அவதானித்து வருகிறோம்," என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவர் Ejaz Butt கூரியுள்ளார்.

ஸ்ரீலங்காவின் ஸ்போர்ட்ஸ் மந்திரி Gamini Lokuge-ன் கூற்றுப்படி இன்னும் இரண்டு விளையாட்டு வீரர்கள், அதாவது தரங்கா பரணவிதனா மற்றும் திலன் சமரவீரா ஆகியோரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்

தாக்குதல் அடையாளம் அறியப்படாத கொலையாளிகளால் நடத்தப்பட்டதாக நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்களும் கிரிக்கெட் அதிகாரிகளும் கூறுகின்றனர்.

ஐந்து போலீஸ்காரர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என லாக்க்ரின் தலைமை போலீஸ் அதிகாரி கூறுகிறார்.

ஸ்ரீலங்கா மற்றும் பாகிஸ்தானுக்கிடையேயான டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு விவகாரம் வெகு நாட்களாகவே பாகிஸ்தானில் தொல்லை அளித்து வந்திருக்கிறது. சில வெளி நாட்டு டீம்கள் இந்த நாட்டில் விளையாட ஏற்கனவே மறுத்து வந்துள்ளன.

என்னதான் நடக்கிறது இவ்வுலகில்?


அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது