2/27/2012

சில சொற்களின் சிதைவு

பஞ்சதந்திரம் படத்தில் எல்லாமே அமர்க்களமான சீன்கள்தான். அவற்றில் சிறந்தது வண்டியை போலீஸ் சோதனையிடும் காட்சி. “பின்னாடி, முன்னாடி என்ன இருந்தது என தெளிவாக இன்ஸ்பெக்டர் வாசு விக்ரம் கேட்க ஆரம்பிக்கும் குழப்படி சீனைத்தான் நான் குறிப்பிடுகிறேன்.

அதில் பின்னாடி டிக்கி, ஸ்டெப்னி, மாகி என ஒவ்வொருவராக உளற, ஐஸ் காப்பி என நினைத்து போதை பொருளை உட்கொண்ட நாகேஷ் மாகி ஸ்டெப்னியில்லை, மனைவி என உளற மேலே செல்கிறது அந்த சீன். நமக்கு இங்கு வேண்டியது ஸ்டெப்னி என்னும் சொல்தான். சரியோ தவறோ ஸ்டெப்னி என்பது சின்ன வீட்டைக் குறித்துச் சொல்லப்படும் சொல்லாகி விட்டது. அதே சின்ன வீடு வைப்பாட்டியைக் குறிக்கும் சொல்லாக மாறியது நான் கூற வருவதற்கு வலு சேர்க்கிறது என்றால் மிகையாகாது.

இது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். ஹிட்லர் காலத்தில் Endlösung (கடைசி தீர்வு என்னும் சொல் 60 லட்சம் யூத மரணத்தில் முடிந்தது எல்லோருக்கும் தெரிந்தது. இப்போது ஜெர்மனியில் வேறு எந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக பேசும்போதும் போதும் அதே Endlösung வார்த்தையை பிரயோகிக்கும்போது டிஸ்கியெல்லாம் போட நேர்ந்தாலும் ஆசசரியப்படுவதற்கு இல்லை.

அதே போல அந்த கால கட்டத்தில் ஒரு ஊரிலுள்ள யூதர்களை ஓரிடத்தில் திரட்டி அவர்களை ஒரு வதைமுகாமுக்கு அனுப்புவதும் வழக்கம். அவ்வாறு எல்ல்லோரையும் வரச்சொல்லும் இடத்துக்கு Umschlageplatz (எல்லோரையும் திரட்டி வழி அனுப்பும் இடம்) என்று அழைத்தார்கள். அந்த சாதாரண ஜெர்மன் வார்த்தையை இப்போதும் உபயோகித்தாலும் கேட்பவர் மனதை என்னவோ செய்வதைத் தடுக்க முடிவதில்லை.

முதலிரவு முடிந்ததும் பெண்ணின் தாயார் பெண்ணிடம் சந்தோஷமாக இருந்தீர்களா என கேட்பது வழக்கம். அதற்கு தூய தமிழில் உவத்தல் எனப்பெயர். அதுவே ஓத்தாவாயிற்று. அது பலரது தினசரி வார்த்தையாடல்களில் அனாயாசமாக புகுந்து செல்லும்போது வேறும் ஓசையாகி விட்டது. தன் கையிலிருந்து தங்கை தனது பேனாவை பறித்துக்கொண்டு ஓடுவதை குறிக்க பையன் “அம்மா தங்கச்சி என் கிட்டேயிருந்து பேனாவை ஓத்துட்டு போயிடுத்தும்மா என சொல்லும் அள்விற்குக் கூட சென்று விட்டது.

பல வசை சொற்கள் இவ்வாறு தினசரி வார்த்தையாடல்களில் வருவது குறித்து ஜெயமோகன் இவ்வாறு எழுதுகிறார்.

உதாரணமாக கேரளத்தில் மயிர் என்றால் கெட்ட வார்த்தை. அந்தரங்கமயிரை இது குறிக்கும். முடி என்றால் நல்ல வார்த்தை. ஆக, உடலில் ஒருபகுதியை வெளியே காட்டக்கூடாது, அதைப்பற்றிப் பேசக்கூடாது என்ற சமூகச் சீராக்கத்தின் விதிக்கு எதிரான ஒரு மீறலே இங்கே கெட்டவார்த்தையாக ஆகிறது.

நூற்றுக்கு தொண்ணூறு கெட்டவார்த்தைகள் வரைமீறிய பாலுறவைச் சார்ந்தவை. நம் சமூகசீராக்கத்தின் மிகமுக்கியமான, மிகக் கடுமையான விதி என்பது தாயுடனான பாலுறவை தடைசெய்தல்தான். ஆகவே கெட்டவார்த்தைகளில் தாயோளி போன்ற வார்த்தைகள் பெரிதும் புழங்குகின்றன. இதற்கு அடுத்தபடியாக அக்கா தொடர்பானவை. தாயின் அந்தரங்க உறுப்புகள் தொடர்பான சொற்கள் கெட்டவார்த்தையாக ஆவது அவற்றை எண்ணவும் பேசவும் சமூகத்தடை இருக்கிறது என்பதனாலேயே.

///////////////////////////////////////////////////////////////////////////////////////////

மேலும் கெட்டவார்த்தைகள் எல்லா சமூகங்களிலும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நிபந்தனையுடன் — சொல்லிச்சொல்லி அவை தேய்ந்துபோயிருக்க வேண்டும்! கேட்டால் அது கெட்டவார்த்தையாகவே காதுக்குப் படக்கூடாது. பலவருடங்கள் முன்பு நானும் நண்பரும் சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த ஒரு படம் பார்த்தோம். அதில் ஸ்டாலோன் ‘·பக்‘ என்ற வார்த்தையை தவிர்த்து நாலைந்து வார்த்தைகள் மட்டுமே சொல்கிறார். ”ஹாலிவுட் படமுல்லா மச்சான்..உலகம் முழுக்க போகணுமில்லா…அதனாலதான் உலகம் முழுக்க தெரிஞ்ச டைலாக்க மட்டும் வச்சிருக்கான்”என்றார் நண்பர்.

///////////////////////////////////////////////////////////////////////////////////////////

எங்களூர் இயக்குநர் ஒருவர் உண்டு. அவருக்கு கமா என்ற எழுத்துக்கான ஒலி தாயளி தான். அது மருவி தாளி. ”எங்கப்பா என்னமாதிரி மேடையிலே பேசுவார்னு நெனைக்கிறீங்க…சைவசித்தாந்தம் பத்தி பேசினா தாளி கொன்னு எடுத்திருவார்” கெட்டவார்த்தைகள் அர்த்தபூர்வமாக அமரும் இடங்களும் உண்டு


மீண்டும் டோண்டு ராகவன். அடப்பாவி என கருணாநிதி எம்ஜிஆரை ஒரு சமயம் குறிப்பிட, எம்ஜீஆரோ பாவி என்றால் சாது எனவும் பொருள் உண்டு எனக்கூறி நிகண்டு ஆதாரம் காட்டியதில் கருணாநிதி அசடு வழிந்ததும் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது.

சொற்கள் சிதைவு என்னளவிலும் நடந்துள்ளது. இப்போதெல்லாம் பல பிளாக்கர்கள் சமீபத்தில் என்று குறிப்பிட நேரும்போது டோண்டு ராகவனின் சமீபம் அல்ல என டிஸ்கி போடுவதும் சமீபகாலமாக புழங்கி வருகிறது’

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/16/2012

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 16.02.2012

Children should be seen but not heard
ஆங்கிலத்தில் உள்ள இந்தச் சொலவடை நிரம்பவும் பிரசித்தி பெற்றது. குழந்தைகள் முந்திரிக் கொட்டையை போல எல்லோரும் இருக்கும் சபையில் பேசலாகாது என்ற நோக்கத்தில் கூறப்பட்டதை பலரும் தவறாகவே புரிந்து கொள்கின்றனர். குழந்தைகள் இயல்பாக உற்சாகத்துடன் இருப்பதை தடை செய்யும் நோக்கத்தில் இதையே உரக்கக் கூறுகின்றனர்.

The honorable Prime Minister wants to be obscene but not heard
பிரிட்டன் பாராளுமன்றத்தில் பிரதமர் ஆவேசமாக உரையாற்றும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களை பார்த்து பேசிக் கொண்டே இருந்தவர் திடீரென சப்தம் செய்யாமல் “அடப் போங்கடா தேவடியாப் பசங்களா” என வாயசைத்தார். இதை பார்த்து டென்ஷனான எதிர்க் கட்சியினர் கத்த ஆரம்பிக்க, பிரதமரோ தான் ஒன்றுமே கூறவில்லை என சாதித்தார். ஸ்பீக்கர் தமாஷாகக் கூறினார், “The honorable Prime Minister wants to be obscene but not heard”.

போன பதிவில் பார்த்தீர்களே, எல்ல்லோரும் தாங்கள் படிக்கும் பத்திரிகை டைம்ஸ் ஆஃப் இந்தியா என்பது வாயசைப்பின் மூலமே காட்டுகிறார்கள்.

இது போலத்தான் தேமெனென்று என வடிவேலு வெற்றிலை பாக்கு போட்டு மெல்ல, அவரை தூரத்திலிருந்து பார்க்கும் ஒரு மொட்டை அவர் தன்னை வண்டை வண்டையாக திட்டுகிறார் என்றும், தன் குடும்பத்தையும் திட்டினார் எனக் கூறி அவரை சாத்தோ சாத்து என சாத்துகிறார். படத்தின் பெயர் மறந்து விட்டேன். யாராவது தெரிஞ்சால் சொல்லுங்கப்பூ.

நைஜீரியா மோசடி 419
திடீரென மின்னஞ்சல் ஒன்று வரும். அதில் ஒரு பணக்காரன் வாரிசில்லாது இறந்துவிட்டதாகவும், சொத்து மதிப்பு பல மில்லியன் லாலர்கள் எனவும் வரும். அத்தனையும் உங்களுக்கே கிடைக்கும் என ஆசையெல்லாம் காட்டுவார்கள். டெபாசிட்டாக சில ஆயிரம் டாலர்கள் அனுப்பச் சொல்வார்கள். அப்படி அனுப்பி ஏமாந்த அசடுகள் அனேகம். ஆமாம் அதென்ன 419? வேறு ஒன்றுமில்லை, நம்ம ஊரில் செக்‌ஷன் 420 என்றால் அங்கெல்லாம் 419 அவ்வளவுதான்.

அப்படிப்பட்ட மோசடிக் காரர்களையே கலாய்ப்பவர்களும் உண்டு. இங்கே பாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின்குறிப்பு: வடிவேலு வந்த அப்படத்தின் பெயர் “பிறகு”. அக்காட்சி கீழே தந்துள்ளேன், எஞ்சாய்!!

ஒரு கன்னத்தில் அடித்தால் அடிப்பவனின் இரு கன்னங்களிலும் மாற்றி மாற்றி அடி

ஒருவர் உன்னை சீண்டினால் அதற்கு ரியேக்ட் செய்யும் சிறந்த முறையை இப்பதிவில் பார்க்கலாம்.

உறங்கிக் கிடக்கும் கிருஷ்ண சர்ப்பத்தை தூண்டும் விதமாக டைம்ஸ் ஆஃப் இந்தியா இந்த விளம்பரத்தை வெளியிட்டது.ஹிந்து பத்திரிகை சும்மா இருக்குமா? அதன் விளம்பரங்களை பாருங்கள்.இதே மாதிரி கோக்கோ கோலாவுக்கும் பெப்சிக்கும் இடையே நடந்த விளம்பர யுத்தங்கள் அமெரிக்காவில் பிரபலமானவை.

இங்கே தமிழ்நாட்டில் நாற்பதுகளில் விகடனுக்கும் கல்கிக்கும் இடையே கூட இம்மாதிரி சொற்போர்கள் நடந்துள்ளன.

ஒரு முறை விகடன் ராஜாஜிக்கு வார்ணிங் கொடுக்க, கல்கி அதை ஒரு கார்ட்டூனாக்கினார். சிங்கத்துக்கு (ராஜாஜி) எலி (விகடன்) வார்ணிங் கொடுப்பது போல இருந்தது அது.

அதே கார்ட்டூனை விகடன் மேற்கொண்டு, சிங்கத்தின் வாலில் ஒரு ஈயை வரைந்து அதற்கு கல்கீஈஈஈ என பெயரிட்டது.

கல்கி இவ்வாறு எழுதினார்.

“இதில் ஒன்று நிச்சயமாகி விட்டது. ராஜாஜி சிங்கம்தான், விகடன் எலிதான், மற்றப்படி அப்படிப்பட்ட சிங்கத்தின் வாலில் ஈயாக இருப்பதில் எமக்கு ஆட்சேபணை இல்லை”

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/13/2012

சாதியை நிஜமாகவே ஒழிக்க இயலுமா? அது தேவைதானா?

இந்தப் பதிவு இரு பாகங்களை கொண்டது. அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக பார்ப்போம்.

சாதியை நிஜமாகவே ஒழிக்க இயலுமா?
கஷ்டம்தான், முடியவே முடியாது என்றும் சொல்லலாம். முதலில் மாற்று தளத்தில் வந்த கருப்பாயி என்கிற நூர்ஜஹான் என்ற தலைப்பில் வந்துள்ள இப்பதிவிலிருந்து சில வரிகளை பார்ப்போம்.


திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை நகரத்தின் அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம் மீனாட்சிபுரம். இக்கிராமத்தில் வாழ்ந்துவந்த தேவந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த 180 குடும்பங்கள் 19.2.1981 அன்றும் 27 குடும்பங்கள் 23.5.1981 அன்றும் இஸ்லாம் மதத்தைத் தழுவின. ஏறத்தாழ 1500 பேர் ஒரு குழுமமாக மதம்மாறிய இந்நிகழ்ச்சி அகில இந்தியாவையும் இக்கிராமத்தின் பக்கம் ஈர்த்தது.
இந்துமடாதிபதிகளும், இந்து சமய அடிப்படைவாத இயக்கம் சார்ந்தோரும், அரசியல்வாதிகளும் இக்கிராமத்தை நோக்கி வரத் தொடங்கினர். இது ஒரு படையெடுப்பு போல் அமைந்தது.
///////////////////////////////////////////////////////////////////////////////////

மீனாட்சிபுரம் தேவேந்திரகுல வேளாளர்கள் முஸ்லிம்களாக மாறியதன் வாயிலாக தம் பாதுகாப்புக்கும், சுயமரியாதைக்கும் உத்தரவாதம் செய்து கொண்டனர். இம்மதமாற்றம் நிகழ்ந்து ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கழிந்த நிலையில் தமிழ்ச்சமூகம் இந்நிகழ்ச்சியைப் பெரும்பாலும் மறந்துவிட்டது. தற்போது ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’ என்ற இந்நாவலின் வாயிலாக எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கலை நாவலாசிரியர் அன்வர் பாலசிங்கம் வெளிக்கொணர்ந்துள்ளார்.

மீனாட்சிபுரத்திற்கு அருகில் உள்ள ‘கலங்காதகண்டி’ ஊரைச் சார்ந்த அன்வர் பாலசிங்கம் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமியராக மதம்மாறிய இவர் அதே ஊரில் தம்மைப்போன்றே புதிய மதம்மாறிய தம் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை மணம் முடித்துக் கொண்டவர். மீனாட்சிபுரம் பள்ளிவாசலுக்குத் தொழுகைக்கு வருபவர். மீனாட்சிபுரம் முஸ்லிம் ஜமாத்தின் உறுப்பினர்.

நாவலின் கதை

காமாட்சிபுரத்தில் (மீனாட்சிபுரத்தில்) முதல் முதலாக மதம்மாறிய தேவேந்திரகுல வேளாளர் குடும்பங்களில் ஒன்று கருப்பசாமி என்பவரின் குடும்பம். மதமாற்றத்தை அடுத்து தம்பெயரை காதர் என்றும், தன் மகள் கருப்பாயியின் பெயரை நூர்ஜஹான் என்றும் மாற்றிக் கொண்டவர். தம் மகளை உயர்கல்வி படிக்க வைத்த இவரால் உரிய வயதில் அவளுக்குத் திருமணம் செய்துவைக்க முடியவில்லை. காரணம், இவர் ‘நவ்முஸ்லீம்’ (புதிய இஸ்லாமியர்), அதுவும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகத்திலிருந்து மதம்மாறியவர் என்பதுதான்.

தனக்கு மணம் முடிக்க மணமகனைத் தேடி அலையும் தந்தையின் துயரத்தைப் பொறுக்க இயலாது நாற்பது வயதைக் கடந்த அவரது மகள் நூர்ஜஹான் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். மகளின் பிரிவைத் தாங்க இயலாத காதரும் அவரது மனைவியும் நஞ்சுகுடித்து இறந்து போகிறார்கள். காதரின் கொழந்தியாள் ‘பன்னீர்’ மதம் மாறாதவள். ஆனாலும் காதரின் மகள் நூர்ஜஹான் மீது அன்பைப் பொழிபவள். நூர்ஜஹானின் பிரிவைத் தாங்க இயலாது கிணற்றில் விழுந்து அவளும் தற்கொலை செய்து கொள்கிறாள்.

அடுத்தடுத்து நிகழும் இந்த நான்கு தற்கொலைகள், நாவலை வாசிப்பவனின் உள்ளத்தில் சோக உணர்வைத் தோற்றுவிக்கின்றன. நூர்ஜஹானின் தற்கொலை, அவளது பெற்றோர் மற்றும் சித்தி பன்னீரின் தற்கொலை, அவர்களது சவ அடக்கம் என அனைத்து நிகழ்வுகளும் ஒரே நாளில் நடந்து முடிந்துவிடுகின்றன. இந்த ஒரு நாள்தான் நாவல் நிகழும் காலமாகும். ஆனால் உரையாடல்கள் வாயிலாக முப்பதாண்டுகால நிகழ்வுகளையும், மதம் மாறியோர் எதிர்கொள்ளும் ஓர் முக்கியப் பிரச்சனையையும் இந்நாவல் பேசுகிறது.
////////////////////////////////////////////////////////////////////////////////////////

மதமாற்றம் என்பது ஒரு சமூகத்தின் எதிர்க் குரலாக அமைந்தாலும், காலப்போக்கில் சில புதிய பிரச்சனைகளுக்கு அது வழிவகுக்கும் என்பதை இந்நாவல் வெளிப்படுத்தி நிற்கின்றது. இவ்வகையில் இந்நாவலின் மையப்பிரச்சனையாக நவ்முஸ்லிம்களது பெண்பிள்ளைகளின் திருமணம் அமைகின்றது.

தமது சாதி அடையாளத்தையும் துறந்து இஸ்லாத்தை தழுவியவர்களை அன்புடன் வரவேற்ற பரம்பரை இஸ்லாமியர்கள், திருமண உறவு என்று வரும்பொழுது தம் அடையாளத்தைத் துறக்க விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக நவ்இஸ்லாமியர்களின் பூர்வீக சாதி அடையாளத்தை மறக்கவும் இல்லை. நவ்இஸ்லாமியர்களின் உரையாடல்கள் வாயிலாக இவ்வுண்மையை நாவலாசிரியர் ஆங்காங்கே பதிவு செய்து உள்ளார்.

நவ்முஸ்லிமான ‘முஸ்தபாவாத்தியார்’ எம்.ஏ., பி.எட்., படித்தவர். தம் திருமணப் பத்திரிக்கையில் தம் தந்தையின் பெயருக்கு பின்னும், தன் பெயருக்குப் பின்னும் ‘இராவுத்தர்’ என்று போட்டு அச்சிட்டுவிட்டார். அவர் திருமணம் செய்த பெண், பரம்பரை முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர். திருமணப் பத்திரிக்கையை பார்த்த பெண் வீட்டார் ‘நவ்முஸ்லிமெல்லாம் ராவுத்தராயிட்டா அப்புறம் ராவுத்தர் என்னாவதுன்னு’ (பக்கம் 56) கேட்டு அசிங்கப்படுத்தினர்.

மீனாட்சிபுரத்து நவ்முஸ்லிமான ‘உசேன்’ என்பவர், வெளியூர் பள்ளிவாசல் ஒன்றில் ‘அசரத்’ ஆகப்பணிபுரிகிறார். இஸ்லாமியராக மதம்மாற விரும்பிய தலித் இளைஞர் ஒருவரைச் சந்திக்க விரும்பினார். அப்போது அசரத்து, நாம அங்கயெல்லாம் போகக்கூடாது. அந்தப் பையன் எஸ்ஸி யாக்கும். அதனால் அவன் இங்க வரட்டும். நம்ம அங்க போனமுன்னா சரிவராது என்கிறான் பரம்பரை முஸ்லிம் இளைஞன் ஒருவன் (பக்கம் 58). இதற்கு விடையாக அசரத் கூறியதும், அதை அவன் ஏற்க மறுத்துக் கூறிய பதிலும் நாவலில் இவ்வாறு இடம் பெறுகின்றது.

ஏத்தா... இப்படிப் பேசக்கூடாது. இந்த உலகத்தையே அல்லாஹ்தான் படைச்சான்னு சொல்லிகிட்டு அதுலயும் மனுசங்கள்ல நாம எஸ்ஸி, பீஸின்னு பிரிக்கலாமான்னு கேட்டேன். அதுக்கு அவன் சொல்லுறான். நீங்க என்ன வேணா சொல்லுங்க அசரத்து, அவங்க அவங்கதான்... நாம நாமதாங்கிறான் (பக்கம் 58).

தான் உரையாடிக் கொண்டிருக்கும் அசரத், மீனாட்சிபுரத்தில் மதம்மாறிய தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திலிருந்து வந்த ‘நவ்முஸ்லிம்’ என்பது அந்த இளைஞனுக்குத் தெரியவில்லை. பரம்பரை இஸ்லாமியர் ஒருவர் நடத்திவந்த தேநீர் விடுதியில் நவ்முஸ்லிம்களின் நிலையை
‘‘கம்பிளி தைக்கா முக்குக்கு போனாத்தான் தெரியுது நான் பள்ளனா... பாயான்னு. அங்க சந்தை முக்கில கடை வச்சிருக்கிற முல்லாபாய்ட்ட போயி டீ தாங்க பாய்ன்னு கேட்டமுன்னா... நமக்குனு ஒரு டீ வரும். அவருக்கு தெரிஞ்ச வித்தியாசமெல்லாம் பேரு மட்டும்தான்’’ என்று குறிப்பிடுவது அதிர்ச்சியான செய்தி. அரபு நாடுகளிலிருந்து கோடிகோடியாக மீனாட்சிபுரத்தில் பணம் கொட்டியதாக வெளியூர்க்காரர்கள் நம்ப, அதற்கு மாறான நிலையே அங்கு நிலவியுள்ளது. நவ்முஸ்லிம்களின் பெயரைச் சொல்லி நிதி திரட்டப்பட்டதையும், அதில் கையாடல் செய்த அவ்வட்டாரத்தின் பரம்பரை முஸ்லிம் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர்குறித்த சில செய்திகளும் நாவலில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளன. (பக்கம் 24-25, 43-46, 59-61).

இவையெல்லாம் போகிறபோக்கில் என்பது போன்ற பதிவுகள். நாவலின் மையச் செய்தியாக இடம் பெறுவது, நவ்முஸ்லீம்கள் வீட்டு இளம் பெண்களுக்கு மணமகன் கிடைக்காது திருமணம் தடைப்பட்டு நிற்பதுதான். நாவலின் தொடக்கத்தில் இடம் பெறும் நூர்ஜஹானின் மரணக்கடிதம் இந்த அவலத்தை மிக உருக்கமாக எடுத்துரைக்கிறது. நாவலின் வளர்ச்சிப்போக்கில் இச்சிக்கல் பல்வேறு கதைமாந்தர்களின் கூற்றாக எடுத்துரைக்கப்படுகின்றது.
//////////////////////////////////////////////////////////////////////////////////////////

கீரனூர் ஜாகிர்ராஜாவின் நாவல்களில் அடித்தள இஸ்லாமியர்களின் வாழ்வு இடம் பெற்று ஒரு வேறுபாடான இஸ்லாமியர் சமூகம் அறிமுகப்படுத்தப்படுவது போல், இந்நாவலும் வேறுபாடான ஓர் இஸ்லாமிய சமூகத்தை அறிமுகம் செய்கிறது. முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுவதுபோல் இது ஓர் விவாதத்திற்குரிய நாவல்.

1981-இல் மீனாட்சிபுரத்தில் நிகழ்ந்த மதமாற்றத்திற்கான சமூகக் காரணிகளையும், மதமாற்ற நிகழ்வுகளையும் நன்றாக உணர்ந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றவர் நாவலாசிரியர். ஆனால் ‘இவையெல்லாம் கடந்த கால வரலாற்றின் நிகழ்வுகள்’ ஆகிவிட்டன. மதமாறியவர்களின் வாழ்வியல் சிக்கல்கள், நிகழ்காலம் சார்ந்தவை. இதையே நாவலின் கருவாக இவர் எடுத்துக் கொண்டுள்ளார்.

இதனால் கடந்த கால நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்வதை அவர் தவிர்த்துள்ளார். தாமும் ஒரு நவ்முஸ்லிம் என்பதன் அடிப்படையில் தன் சமூகத்தின் நிகழ்கால அவலத்தை இந்நாவலில் நன்றாகவே பதிவு செய்துள்ளார்.

பொதுவாக, குழும மதமாற்றங்கள் ஒரு கலகச் செயலாக அல்லது எதிர்க்குரலாக நிகழும். அத்துடன் மதம் மாறியவர்களுக்குத் தற்காலிகமாகவேணும் ஒரு பாதுகாப்புவளையமாக அமையும் தன்மையது. மீனாட்சிபுரம் மதம் மாற்றமும் இத்தகையதுதான். ஆனால் ஒரு கட்டத்தில் இதன் தேவை முடிந்துபோய், புதிய சிக்கல்கள் உருவாகின்றன. மீனாட்சிபுரம் தேவேந்திரக்குல வேளாளர்கள் மேற்க்கொண்ட, இஸ்லாமிய மதமாற்றம், சில சமூகக் கொடுமைகளிலிருந்து விடுபட துணை நின்றுள்ளது என்பது உண்மை. ஆனால், ஒரு கட்டத்தில் தேக்கநிலை அடைந்து இறுதியில் தடைகள் ஆகிவிட்டது என்பதே நாவல் விடுக்கும் செய்தி.
/////////////////////////////////////////////////////////////////////////////////////////

இஸ்லாமும் சாதியும் பற்றி ஜெயமோகனின் பதிவிலிருந்து சில வரிகள்:
இஸ்லாமுக்குள் சாதி இல்லை என அவர் எப்படி நம்பினார் என்று கேட்டேன். சாதி என்ற சொல் ஜாத என்ற வேர்ச்சொல் கொண்டது. பிறப்பு என்று பொருள். பிறப்பு சார்ந்த குல,குடி, இனக்குழு அடையாளம் இல்லாத மக்கள் உலகில் எங்குமே இல்லை. நவீன ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும்தான் குலம்,குடி சார்ந்த அடையாளம் சென்ற இருநூறாண்டுக்காலத்தில் மெல்லமெல்ல மழுங்கியுள்ளது.

ஆனால் அங்கும் இனம் சார்ந்த அடையாளங்கள் திட்டவட்டமானவை. அமெரிக்க சமூகத்த்தின் உச்சியில் ஆங்கிலோ சாக்ஸன் இனம்தான் இன்றும் உள்ளது. யூதர்கள், இத்தாலியர்கள், ஹிஸ்பானியர்கள், சீனர்கள், கறுப்பர்கள் எனத் தெளிவான இனப்பிரிவினை அங்குள்ளது. அது உண்மையில் ஒரு நவீன சாதியடுக்குத்தான். சென்ற நூற்றாண்டில் இந்தியாவில் இருந்தது போல அங்கே ஒவ்வொரு இனமும் தங்களுக்குரிய குடியிருப்புப்பகுதிகளில் தனித்தனியாகத்தான் வாழ்கிறார்கள். பொதுவான புழங்குதளத்தில் ஒரு சுமுகமான உறவிருக்கிறதென்பதைத் தவிர்த்தால் அவர்களுக்குள் தனிப்பட்ட, குடும்ப உறவுகள் ஏதுமில்லை. ஆம், அக்ரஹாரங்களும் சேரிகளும் புதிய வடிவில் அங்கே உள்ளன.

அரேபிய சமூகத்தின் இனக்குழு அடுக்குகளைப்பற்றி இன்று எந்த ஒரு சமூகவியல் நூலிலும் வாசிக்கலாம். அதன் உச்சியில் இன்றும்கூட குறைஷிக்குலமே உள்ளது, நபி அக்குலத்தில் பிறந்தாரென்ற தனி அடையாளத்துடன்.
இஸ்லாம் பரவிய எந்த நாட்டிலும் அங்குள்ள இனக்குழு வேறுபாடுகள் இல்லாமலானதில்லை. இன்னும்கூட மன்னராட்சியும், பாரம்பரியப் பதவிமுறைகளும் நிலவும் இஸ்லாமிய நாடுகளில் இனம்,குடி,குலம் போன்ற பிறப்படையாளங்களைத் தவிர்ப்பது சாத்தியமே அல்ல என்பதே உண்மை.மனிதர்கள் அவர்களின் பாரம்பரியத்தாலன்றி உழைப்பாலும் திறனாலும் அடையாளப்படுத்தக்கூடிய நவீனக்கருத்துக்கள் வளரக்கூடிய சூழல் கொண்டஒரு சமூகத்திலேயே சாதி போன்ற பிறப்படையாளம் காலப்போக்கில் வலுவிழக்க வாய்ப்புள்ளது. ஐரோப்பாவை விட்டால் இந்தியாவில்தான் அதற்கான வாய்ப்பு அதிகம்.

இந்திய இஸ்லாமிய சமூகம் எக்காலத்திலும் அதற்கான பிறப்படிப்படையிலான பிரிவினைகளைப் பேணி, அப்பிரிவினைகளுக்குள் கடுமையான வெறுப்புகளை வளர்த்துக்கொண்டு செல்வதாகவே இருந்துள்ளது. சுன்னி-ஷியா என்ற பிரிவினைகூட இன்று நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல, பிறப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் அவர்கள் மாறிமாறிக் கொன்றுகுவித்துக்கொண்டிருக்கிறார்கள். கேரளத்தில் எழுநூறாண்டுகளுக்கு முன்னால் மதம் மாறியவர்கள் இன்றும்கூட முஜாஹிதுகள் என்று சுன்னிகளால் சற்றே தள்ளித்தான் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அரசியல் ரீதியாகக்கூட அவர்கள் ஒன்றுபடமுடியவில்லை. தமிழகத்தில் இன்றும்கூட பட்டாணிகளும் மரைக்காயர்களும் தங்களை ஒரே சமூகமென உணர்வதில்லை.
////////////////////////////////////////////////////////////////////////////////////////

இப்போது டோண்டு ராகவன். எனது இப்பதிவுக்கு நான் அதிகமாக இசுலாமிய உதாரணங்களை காட்டியதன் நோக்கமே இசுலாமில் சாதி இல்லை என்ற ஒரு பொது புத்திதான். மனித இனம் உருவாகி வரும்போதே சாதிகள் உருவாகி விட்டன. அவற்றை மதங்கள் வரையறுத்துள்ளன என்று வேண்டுமானால் கூறலாம், அவ்வளவுதான்.

இது இப்படியிருக்க என்னவோ பாப்பானே சாதிகளுக்குக் காரணம் என பல பதிவர்கள் கும்மி அடிப்பதுதான் சகிக்கவில்லை. அவ்வாறு கும்மி அடிப்பவர்களை ஊன்று கவனித்தால் தத்தம் சாதி சங்கங்களில் முக்கிய பணியார்றுபவராகக் கூட இருக்கலாம். ஆளை விடுங்கள்.

இப்போது பதிவின் இரண்டாம் பகுதிக்கு வருவோம். சாதியை ஒழிப்பது தேவைதானா? இல்லை என்றுதான் நான் கூறுவேன். அவற்றை ஒழிக்க நினைப்பது மனித இயற்கைக்கு புறம்பானது. ஒரு செட் சாதி அடையாளங்களை அழித்தால் அது வேறொரு செட்டாக சில ஆண்டுகள் கழித்து வரப்போகிறது, மீனாட்சிபுரத்தில் நடப்பதுபோல.

பொருளாதாரக் காரணங்களால் சாதிக்கொடுமைகள் அழிந்தால் நல்லதுதான். எந்த சாதியும் உயர்ந்தது அல்ல, எதுவும் தாழ்ந்ததும் அல்ல என்ற எண்ணப் போக்கை மேற்கொள்வது நலம். முடியுமா? தெரியவில்லை. முடிய வேண்டும் என்று மட்டும் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/10/2012

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 10.02.2012

ஆ, எம்ஜிஆரா வில்லத்தனமான ரோலில்?
எம்ஜிஆர் வில்லன் ரோலில் நடித்த ஒரு க்ளிப் பிரஹலாக்தா படத்தில். இதில் அவர் காமாந்தகார இந்திரனாக நடித்து ஹிரண்யகசிபுவின் மனைவி லீலாவதியை ஈவ் டீசிங் செய்யும் காட்சி.லோக்கலைசேஷனுக்காக செய்யும் காமெடிகள்
பம்மல் சம்பந்த முதலியார் பல ஷேக்ஸ்பியர் நாடகங்களை தமிழாக்கி நடத்தி இருக்கிறார். அவற்றில் பாத்திரங்களுக்கு தமிழ்ப் பெயர்களாக வைப்பார். உதாரணத்துக்கு ஹாம்லெட் அமலாதித்யன், ஒஃபீலியா அபலை, ஜூலியஸ் சீசர் வீரசிம்மன், ப்ரூட்டஸ் பரதன், ஆண்டனி ஆனந்தன், கமில்லெ கமலா போன்றவை. அவர் செய்தது ஒரு லாஜிக்குடன் இருக்கும். பார்ப்பவர்களுக்கும் அவை விபரீதமாகத் தென்படாது.

ஆனால் தற்போது? அவள் ஒரு தொடர்கதை படத்தில் காட்டப்படும் சென்னையின் பல இடங்களை கேரளாவில் உள்ள ஊர்களாக காட்டிய கூத்து நடந்தது. மின்சார வ்ண்டியை பார்த்து கேரள சகோதரர்கள் கைகொட்டி சிரித்தனர். ஏன் இந்தக் கொலை வெறி என்றுதான் கேட்கிறேன். அப்படியே சென்னை என காண்பித்துவிட்டு பாத்திரங்களின் பெயரை மட்டும் மலையாளப் பெயர்களாக வைத்திருக்கலாமே. லாஜிக் அடிபடாதே.

லாஜிக் பார்ப்பது
நான் சமீபத்தில் 1960-61-ஆம் கல்வியாண்டில் பத்தாவது படிக்கும்போது ஒரு நாள் எங்கள் ஆசிரியர் சங்கரராமன் அவர்கள் கோபத்துடன் வகுப்புக்கு வந்தார். கட்டுரை நோட்டுகளையும் எடுத்து வந்திருந்தார். என்னை பெயரிட்டு அழைத்து நிற்கச் சொன்னார். நானும் ஏதும் புரியாது நின்றேன். அன்றைய கட்டுரை வணிகக் கடிதம் எழுதுவது பற்றியது.

அதில் நான் ஒரு புத்தக கம்பெனிக்கு எழுதி புத்தகங்களை ஆர்டர் செய்வது போல இருக்கும் கட்டுரை அது.

நான் ஆர்டர் செய்தது:
1. ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி - 10,
2. என்சைளோப்பீடியா பிரிட்டானிக்கா - ஒரு முழு செட்

இவற்றை விபிபியில் அனுப்புமாறு எழுதியிருந்தேன்.

ஆசிரியர் ஒரே ஒரு கேள்விதான் கேட்டார், “ஏண்டா தபால்காரன் மேல் உனக்கு என்ன அவ்வளவு கோபம்? இடுப்பெலும்பு முறிந்து விடுமேடா அத்தனை புத்தகங்களையும் தூக்கினால்”? அப்போதுதான் நான் எழுதிய அபத்தம் எனக்கே புரிந்தது.

வெறும் மொழி எழுதினால் மட்டும் போதாது பொது அறிவும் அதில் சேர்ந்திருக்க வேண்டும் என்பதை அவர் எனது உதாரணத்தை வைத்து விளக்கினார்.

பார்த்தசாரதி இன்னொரு திருவாழத்தான். புது சொற்களை வாக்கியங்களில் பிரயோகிக்கச் சொன்னால், அவன் இவ்வாறு வாக்கியங்களாக எழுதுவான்.

1. விட்டெறிதல்: அவன் லட்ச ரூபாயை விட்டேறிந்தான்.
2. தாவுதல்: அவன் குளத்துக்குக் குளம் தாவினான்.
3. அநேகமாக: அனேகமாக நாளை உலகம் முடிவடையும்.

துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்
லேட்டஸ்ட் துக்ள்க். ராசா பயத்துடன் ஜெயில் காவலாளியை கேட்கிறார்: “ஒரு சந்தேகம் வருது. யாராவது சாமியார் நரபலி கொடுத்தா அவங்க தப்பிச்சுக்கலாம்னு சொல்லியிருப்பாரோ? நைஸா விசாரியுங்களேன், திக்கு திக்குங்குது”.


பாவம் ராசா. எத்தனை பேருக்குத்தான் பயப்படுவார்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/05/2012

வால்பையன் இட்ட இப்பதிவுதான் எனது இப்பதிவுக்குனான தூண்டுதல்

வால்பையன் இட்ட இப்பதிவுதான் எனது இப்பதிவுக்குனான தூண்டுதல்.

அதில் வடக்குப்பட்டு ராமசாமி வால்பையனுக்கு ஒரு கேள்வியை முன்வைக்கிறர். “ஆதாம் எவாளில் இருந்து மனித இனம் தோன்றியது என்றால் ஆதாம் ஏவாளுக்கு ஒரு ஆண் ஒரு பெண் பிறந்து அந்த இருவரும் உடலுறவு கொண்டிருக்க வேண்டும்!
அல்லது ஆதாம் ஏவாளுக்கு பிறந்த மகளுடன் ஆதாம் உறவு கொண்டிருக்க வேண்டும்!அன்றேல் ஏவாள தனது மகனுடன் உறவு கொண்டிருக்க வேண்டும்!இந்த சான்ஸ் இல்லாமல் வேறு வழியில் அடுத்த தலைமுறை உருவாவதற்கு வழியில்லையே!அப்போ மொத்த மனித இனமே ஹராமா”?

அதற்கு நான் அளித்த பதில்: “கசப்பானாலும் அதுதான் உண்மை. வேறு வழியில்லை. மோசஸின் தந்தை தனது அத்தையைத்தான் மணம் புரிந்ததாக பழைய ஏற்பாடு கூறுகிறது. பார்க்க: http://bible.cc/exodus/6-20.htm

நடத்தை விதிகள் மோசஸ் காலத்துக்கு அப்புறம்தான் வந்தன. அதற்கு என்ன இப்போது”?

நெருங்கிய உறவினரிடையே உடலுறவு என்பது பல கலாச்சாரங்களில் குற்றமாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. நம்மவரிடையே சகோதரியின் மகளை ஒருவன் மனம் முடிக்கலாம். அதற்கும் மேலாக அம்மாதிரியின்றி வெளியில் மணம் முடித்தவர்களிடையே மனைவி கணவனை மாமா என்றே கூப்பிடுவார், அல்லது அத்தான் என்று. மாமியாரை அத்தை என்றும் மாமனாரை மாமா என்றும் அழைப்பார்கள். மாமியார் மாமனாரை அம்மா என்றும் அப்பா என்றும் கூட அழைப்பதுண்டு? காரணம் என்ன? யோசிக்க வேண்டிய விஷயம்.

அதுவே வட இந்தியாவில் இம்மாதிரி எல்லாம் திருமண விஷயத்தில் அங்குள்ளவர்கள் யோசித்தால் பல்லின் மேலேயே போடுவார்கள். இந்து சட்டப்படி முந்தைய பாராவில் உள்ள உறவு முறைகள் சட்டப்படி விரோதம். இருப்பினும் தென்னிந்தியர்களின் வழக்கத்துக்கு மட்டும் விதி விலக்கு தரப்பட்டுள்ளது.

வால்பையனின் பதிவுக்கு வருவோம். நான் ஏற்கனவேயே கூறியபடி ஆதாம் ஏவாளைன் குழந்தைகள் தங்களுக்குள்ளிருந்துதான் வாழ்க்கைத் துணையை நாட வேண்டிய கட்டாயம். ஈதன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஆதமும் ஏவாளும் கடவுளின் ஆணைப்படி கூடி குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால்தான் மனித இனம் பெருகி, இம்மாதிரியான திருமணங்களை தடுக்கும் சட்ட திட்டங்கள் வரமுடிந்தது.

இதையெல்லாம் முன்கூட்டியே யோசிக்க முடியாதவரா கடவுள் என்று கேட்பது விதண்டாவாதமே.

கடவுள் பற்றி வால்பையனிடம் வைக்கப்பட்ட கேள்வியும் அவர் பதிலும்:

கேள்வி 2)
கடவுள் இல்லை என்று தெளிவாக அறிந்து கொண்ட பின்பும், இன்னும் அறிய விரும்புகிறேன், விவாதிக்கலாம் என்று ஒவ்வொரு பதிவின் முடிவிலும் போடும் டிஸ்கி யின் அர்த்தம் என்ன? இல்லாத கடவுளுக்கு நீட்சி ஏதும் உண்டா என இன்னும் தேடுகிறீர்களா ?

தேடல் முடியுறா இன்பம், அதன் பொருட்டே அறிய விரும்புகிறேன் என விவாதத்திற்கு அழைப்பது, என்று நீ கற்பதை என்று நிறுத்துகிறாயோ அன்று பிணத்திற்கு சமமாவாய் என என் தந்தை(அய்யம்பேட்டை அறிவுடை நம்பி இல்லங்க) அடிக்கடி சொல்லுவார், சாவிற்கு முதன் நாள் சாக்ரடீஸ் அவரது நண்பர்களுடன் புதிதாய் ஒரு விசயத்தை எடுத்து விவாதித்தாராம்.

கடவுள் என்ற பதம் இன்று ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. உருவம் உண்டு, உருவம் இல்லை, இயற்கையே கடவுள், உலகம் உருவாக கடவுள் என்ற பதம் தேவையில்லை, அப்படியே கடவுள் இருந்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாத பொம்மை என்று ஒரு கூட்டம் என பல பிரிவுகள்.


கடவுள் இல்லை என்று முடிப்பதை விட ஏன் கடவுள் என்ற கேள்வியை நான் முன் வைக்கிறேன், நான் நலமாக, வசதியாக வாழ கடவுள் எனக்கு தேவையா?


ஒழுக்கமாக வாழ கடவுள் இல்லையென்றால் நம்மால் முடியாதா? தனிமனித ஒழுக்கத்திற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம் போன்ற கேள்விகளை முன் வைக்கிறேன்!


நீங்கள் கேட்ட கடவுளின் நீட்சி எதை வைத்து என எனக்கு புரிகிறது, அன்பே சிவம் படத்தில் கமலால், மாதவன் கடவுள் என்று அழைக்கப்படுவார் அதுப்போலத்தானே :), சக மனிதனுக்கு உதவுவதற்கு பெயர் தர்மம் அல்ல கடமை!


கமல் பற்றி பேசும்போது அவரது தசாவதாரம் படம் நினைவுக்கு வருகிறது.

கடைசி காட்சியில் அசின் அவரிடம் கூறுவார், இப்படியெல்ல்லாம் அவர் பெருமாள் இல்லையென்றால் அவர்களது மணவாழ்க்கைக்கு சாத்தியம் இல்லையென்று. கமல் கூறுவார், பெருமாள் இல்லையென்று நான் எப்போது சொன்னேன், இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதனே சொன்னேன்”. அசின் இதில் சமாதானம் அடைவார்.பூர்வஜன்ம கணவன் மனைவியர் இங்கும் ஒன்று சேர்ந்தது குறித்து எனக்கும் மகிழ்ச்சி கலந்த திருப்தியே. ஆனால் யோசித்து பாருங்கள் கமல் தன் ஐடியாவை மார்றிக் கொள்ளவே இல்லை. அசினும் முட்டாள் இல்லை. இப்போதைக்கு அது போதும், கமலை விடாமல் பிடித்துக் கொள்வதே முக்கியம் என நினைக்கிறார்.

ஆத்திகர் நாத்திகராவதும், நாத்திகர் ஆத்திகராவதும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். இது முடிவடையாத விவாதம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/03/2012

தவறவிடும் வருவாயும் நஷ்டத்தில்தான் சேரும்

நான் ஐடிபிஎல்-ல் ப்ணியாற்றியபோது பல ஒப்பந்த புள்ளிகள் அல்ஜீரியாவிலிருந்து வரும்.அவற்றை ஃபிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்க வேண்டும். அவை எல்லாவற்றிலும் ஒரு ஷரத்து நிச்சயமாக இருக்கும். அதை à l’exclusion de tout tiers (புரோக்கர்கள் வரக்கூடாது என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும்). புரோக்கர்கள் என்பதையும் ஒப்பந்த ஷரத்துகளில் வரையறுப்பார்கள்.

வேலையை ஒப்பந்தப் புள்ளிதாரர்களுக்கு வாங்கித் தருவதாகக் கூறி கமிஷன் பெறுபவர்கள் அவர்கள். (போஃபோர்ஸ் விஷயத்தில் க்வாட்ரோக்கியை போல). அந்த புரோக்கர்கள் நிஜமாகவே அதைச் செய்ய சக்தி வாய்ந்தவர்களாக இருக்கலாம் அல்லது உதார் பார்ட்டியாகக் கூட இருக்கலாம். அவ்வாறானவர்களுக்கு கமிஷன் தருவது சட்டப்படி குற்றம். நிரூபிக்கப்பட்டால் அதற்கான பெனால்டி புரோக்கருக்கு கொடுத்த தொகைக்கு குறைவாக இருக்கலாகாது என்றும் குறிப்பிட்டிருப்பார்கள்.

இதை மொழி பெயர்க்கும்போது அதன் லாஜிக் எனக்கு புரியவில்லை. எங்கள் மேலாளர் ஜலானியிடம் கேட்டேன். அவர் அதை விளக்கினார். வேலை தருபவன் ஒருவன் அதைப் பெறுபவன் இன்னொருவன், இந்த புரோக்கர்கள் நோகாமல் நோம்பு கும்பிடுபவர்கள் என்று அவர் கூறினார். ஆனால் புரோக்கர் இல்லாமல் வேலை கிடைக்காது என்பதே பல இடங்களில் எதார்த்தம். ஏனெனில் வேலை கொடுப்பவனின் ஆட்களே புரோக்கர்களாகவும் செயல்படுவர். நம்ம ஸ்பெக்ட்ரம் ஊழல் புகழ் ராசா போல.

1,76,000 லட்சம் நஷ்டம் எனக்கூறுவது மிகைப்படுத்தல் அல்ல. ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற வெத்துவேட்டு நிறுவனங்கள் தமது பங்குகளை ஆகாய விலைக்கு ஏற்றி விற்றது வெளிப்படை. அந்த விலையை கொடுக்க முட்டாளகளா அவற்றை வாங்கியவர்கள்? கபில் சிபல் ரேஞ்சுக்கு நஷ்டம் ஏதுமில்லை எனக் கூறிய பத்ரி அவர்களே இப்போது ஊழல்/லஞ்சம் இருந்திருந்தால் அதுவும் சில ஆயிரம் கோடிகள் மட்டும்தான் என்பது என் கருத்து. அந்தக் கருத்துதான் இப்போதும என்று கூறுகிறார். நான் அவருக்கு கூறுவேன், பங்குகளை விற்ற அதிகவிலை அரசுக்கு ஏல முறையில் வந்திருக்கும் ஆகவே இழப்பு அல்லது வருமான இழப்பு. செய்த வியாபாரத்தில் மட்டும் நஷ்டம் வராது. செய்யத் தவறிய வியாபாரமும் நஷ்டக்கணக்கில்தான் வரும்.

சரி ஆயிரம் கோடி என்றே வைத்துக் கொள்வோம். மாதம் ஐந்து லட்சம் சம்பாதிக்கும் ஒருவன் 2000 மாதங்கள் (160 ஆண்டுகளுக்கு மேல்) சம்பாதித்தால் வரக்கூடிய தொகை அது. வெறுமனே பதவியை வைத்து துஷ்பிரயோகம் செய்து சம்பாதிக்கப்பட்டதை எவ்வாறு மன்னிப்பது?ஆனால் பல ஆயிரம் கோடிகள்? அவற்றையெல்லாம் பூசி மெழுக முடியுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது