pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. மனிதாபிமானமற்ற முறையில் கனிமொழி சிறையில் அடைப்பு: கருணாநிதி
பதில்: பேட்டி காணும் பத்திரிகையாளர்களுக்கெல்லாம் மூளையே இல்லை என அசட்டுத்தனமாக கருதும் ஒருவரது பிரலாபம்.
கேள்வி-2. மெழுகுவத்தி தயாரிப்பது எப்படி: ஓய்வு நேரத்தில் கனிமொழி பயிற்சி
பதில்: சோம்பி இராமல் வேலை செய்வது நல்லதுதானே..
கேள்வி-3. சென்னையில் துணை நகரம் அமைக்கும் திட்டத்திற்கு புத்துயிர்
பதில்: அது காலத்தின் கட்டாயம். பொருளாதார முன்னேற்றங்கள் அதிகமாகும்போது இதெல்லாம் தேவைப்படும்.
கேள்வி-4. லோக்பால் விவகாரத்தில் தி.மு.க.,வின் சுருதி மாறுகிறது
பதில்: வரவேற்கத்தக்க மாறுதல்.
கேள்வி-5. முதியோர் உதவித்தொகை கேட்டு மனுக்கள் குவிகின்றன : 1000 ரூபாயாக உயர்ந்ததால் ஆர்வமோ ஆர்வம்
பதில்: அவ்வாறு உதவித் தொகை பெறுபவரிடம் கூட மாமூல் கேட்கும் அல்பங்களை நினைத்தால் மனம் ஆறவில்லையே,
கேள்வி-6. ஏழைகளுக்கு ஆடு, மாடு கொடுக்கும் திட்டம்: ஜெ., ஆலோசனை
பதில்: அவற்றை பராமரிக்கும் செலவை யார் தருவார்கள் என சிலர் கேட்டாலும் கேட்கலாம்.
கேள்வி-7. "சமூக பிரதிநிதிகள் நெருக்கடிக்கு பணிய வேண்டாம்': காங்கிரஸ்
பதில்: ஊழல் செய்யாமல் இருந்தால் பின்னால் ஏன் நெருக்கடி வரப்போகிறது?
கேள்வி-8. இந்தக்காலத்தில் கடவுளுக்கு அடுத்தபடியாக பொதுவாக எல்லோராலும் மதிக்கப்படுவது பணம். பணம் இல்லாவிட்டால் பிணம் என்ற பழமொழி கூட உண்டு. காசையே கூட கடவுள் என்று சொல்பவர்கள் கூட உண்டு.
பதில்: பணம் பத்தும் செய்யும், பணமென்றால் பிணமும் வாயைத் திறக்கும் போன்ற பழமொழிகள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருப்பவை. ஆகவே அது என்ன இந்தக் காலத்தில் என்ற பேச்சு?
கேள்வி-9. சோதனையும், தோல்வியும் தி.மு.க.,வுக்கு பழக்கப்பட்டது தான் : தமிழச்சி தங்கபாண்டியன்
பதில்: அக்கட்சியின் முக்கிய பிரச்சினையே அதன் தலைமைதான். சீர் செய்ய முடியாத அளவுக்கு மாசுபட்டு விட்ட அதை துறந்தால்தான் கட்சி சரியாகும் வாய்ப்பு உண்டு.
கேள்வி-10. அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதியை நீக்க 75 வழக்கறிஞர்கள் மனு
பதில்: அடேடே வழக்கறிஞர்கள் சில சமயங்களில் நல்ல காரியங்கள் கூட செய்வார்கள் போலிருக்கிறதே.
கேள்வி=11. நிலக்கரி விலை உயர்வு, சூரிய மின்சக்தி கவர்ச்சியாகிறது!
பதில்: நிலக்கரியின் இருப்பு வேகமாக குறைந்து வரும் இக்காலத்தில் இப்போதே மாற்று ஏற்பாடுகளை கவனிப்பதும் நல்லதுதானே.
கேள்வி-12. ஹசாரே, ராம்தேவுக்கு பதிலடி கொடுக்க ராகுல்: காங்கிரசில் வலுக்கிறது கோரிக்கை
பதில்: எப்படி பதிலடி தருவாராம்? இன்னும் அதிக ஊழலுக்கு வழிவகுத்தா?
கேள்வி-13. எந்திரிச்சதும் குடி... ஏழை குடும்பங்களுக்கு "வெடி!'
பதில்: அவரவருக்கு அவரது நியாயங்கள். இரு தலைமுறைகளாக குடி வாசனையே அறியாதவர்களுக்கு குடியை அறிமுகப்படுத்திய மகானுபாவர் கருணாநிதியைத்தான் சொல்லணும். சோவியத் யூனியன் அழிந்ததற்கு அதன் தொழிலாளிகளின் குடிப்பழக்கமும் ஒரு காரணமே.
14. வேண்டவே வேண்டாம்... ஆறு வழிச்சாலை!
பதில்: ஊர் மக்கள் கூறுவதும் நியாயமாகத்தானே உள்ளது? பாதிக்கப்படும் கட்டுமானங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதையும் பிராஜக்டின் நோக்கமாகக் கொள்வது அவசியம்.
15. தனியாரிடம் கூடுதலாக 1,200 மெகாவாட் மின்சாரம் வாங்க முடிவு: மின்வாரியம் டெண்டர் அறிவிப்பு
பதில்: எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்னும் நிலையில் தமிழக அரசு உள்ளது. மோதி ஆட்சிக்கு வந்தபோது குஜராத்தும் இந்த நிலையில்தான் இருந்தது. ஆனால் இப்போது? அவரது ஆலோசனை நமக்கு இப்போது அவசியம். அரசுக்கு அதை செய்ய மனம் வருமா?
ரமணா
கேள்வி-16. பாண்டிச்சேரி முதல்வரின் சந்திப்பு சோனியாவுடன், அதிமுக தலைவி என்ன சொல்வார்?
பதில்: என்னதான் அரசியலில் இதெல்லாம் ஜகஜம் எனக் கூறினாலும் ரங்கசாமி செய்தது ஓவர்தான் என்பது என் அபிப்பிராயம்.
கேள்வி-17. சுப்பிரமணியசாமி வீசும் ஊழல் வெடிகுண்டுப் புகார் அடுத்து யாரை தாக்கும்?
பதில்: அவருக்கே அது தெரியாது என இருக்கும் பட்சத்தில் நான் என்ன கூறுவது?
கேள்வி-18. தாத்தா சூரியப்பேரனை கைவிட்டுவார் போலுள்ளதே?
பதில்: மகள் பாசம்.
கேள்வி-19. செட்டி நாட்டுச் சீமானுக்கு சிக்கலாமே?
பதில்: தவறான லின்க் கொடுத்துள்ளீர்கள் போலிருக்கிறதே. அதனால் என்ன பரவாயில்லை. திருமாவின் முகமூடி கிழிந்ததல்லவா? செட்டிநாட்டுச் சீமான் செய்த முன்வினை இப்போது வந்துள்ளது.
கேள்வி-20. ஊடக வாய்களுக்கு மெல்வதற்கு அவல் தொடர்ந்து கிடைத்துக் கொண்டேயிருக்கிறதே?
பதில்: அது எக்காலத்திலும் நடப்பதுதானே. அயோத்தி ராமன் காலத்தில் கூட பல வீடுகளில் தசரதர் கைகேயிக்கு தோப்புக்கரணம் போட்டதையெல்லாம் சொல்லிச் சிரித்திருந்திருப்பார்களாக இருக்கும்.
கேள்வி-21. டீசல் லிட்டருக்கு ரூபாய் 3 விலையேற்றம் காரணம் காட்டி லாரி வாடகையை 20 % ஏற்றுவது பற்றி?
பதில்: இதில் என்ன தவறு? புரிந்து கொல்ளக்கூடிய செயல்தானே.
கேள்வி-22. தமிழக முதல்வர் மேற்கு வங்க முதல்வரை பின்பற்றி வரிச் சலுகை தருவாரா?
பதில்: ஒவ்வொரு மாநிலத்தின் நிலைக்கேற்பத்தான் அந்தந்த அரசு செயல்பட வேண்டும். அப்படியே பின்பற்ற வேண்டும் என்றால் மோதி இருக்க மற்றவரை பின்பற்றுவது கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.
கேள்வி-23. மின்வெட்டு தொடர்கிறதே?
பதில்: இவ்வளவு ஆண்டுகளாக கெட்டிருந்த நிலையை சரியாக்க நேரம் தேவைப்படும் என்றாலும் அதை முடிந்த அளவுக்கு துரிதப்படுத்தும் அரசு என்பதே எதிர்பார்ப்பு.
கேள்வி-24. தேமுதிக எம்.எல்.ஏ பார்த்திபனின் சமீபத்திய நடவடிக்கைகள் பற்றி?
பதில்: எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. ஆனதற்கே இந்த ஆட்டமா? முளையிலேயே கிள்ளீ எறிய வேண்டிய விஷயம் இது. இவரை மாதிரி கூட்டாளிகள் இருந்தால் விஜயகாந்துக்கு தனியாக விரோதிகளே தேவை இல்லை.
கேள்வி-25. முதல்வர் ஜெயலலிதாவின் 27.6.11 ஆங்கில டீவிக்கு (TIMES NOW) அளித்த பேட்டி பற்றி?
பதில்: நான் அதை பார்க்கவில்லை. ஆகவே கருத்து ஏதுமில்லை.
மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இரா.முருகன் விமர்சனப்போட்டி
-
விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம்
விருது இரா.முருகனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை ஒட்டி ஒரு கட்டுரைப் போட்டி
அறிவிக்கிற...
10 hours ago