11/28/2008

காலை வாரிவிட்ட நிஷா

என்ன தோன்றியதோ எனக்கு தெரியவில்லை. சாதாரணமாக வியாழனன்று இரவு கேள்வி பதில்களை பிழை திருத்தி விட்டு வரைவு ரூபத்திலேயே வைத்திருந்து வெள்ளியன்று காலைதான் அச்சிடுவேன். ஆனால் நேற்று இரவு எல்லாம் செய்து முடிந்ததும் அடுத்த நாள் விடியற்காலை (அதாவது இன்று காலை) 5.00-க்கு தானே அச்சுக்கு செல்லுமாறு பிளாக்கரில் முன்அமைவு செய்து விட்டுத்தான் படுக்கப் போனேன்.

கடந்த இரண்டு நாட்களாக ஆட்டம் போட்ட நிஷா புயல் காரைக்காலருகே கரை கடந்திருந்தாலும் சமத்தாக மேற்கு நோக்கி நகராமல் காரைக்காலுக்கு வடமேற்கே ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் தாழ்வழுத்த மண்டலமாக மையம் கொண்டுள்ளது என்று கூறினார்கள். படுக்கப் போகும்போது வெளியே மயான அமைதி. வீட்டுக்கு வெளியே தேங்கியிருந்த நீர் எல்லாம் கூட வடிந்து விட்டிருந்தது.

இன்று விடியற்காலை 04.30-க்கு திடீரென முழிப்பு வந்தது. மின்சாரம் நின்று போயிருந்தது. கட்டிலிலிருந்து காலை தரையில் வைத்ததும்தான் தெரிந்தது கணுக்காலளவு ஆழத்துக்கு தண்ணீர் என. எல்லா அறைகளுக்குள்ளும் தண்ணீர். இதற்கு முன்பு நான் நவம்பர் 2005-ல் குறிப்பிட்டது போல வெள்ளம் உள்ளே வந்திருக்கிறது. இம்முறை பரவாயில்லை. எல்லாம் எங்கள் தெருவில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால்களின் உபயம். தெருவில் தண்ணீர் தேங்கவில்லை. நான்கு நாட்கள் இம்மாதிரி மழை பெய்த பிறகுதான் வெள்ளம் உள்ளேயே வந்தது. ஆனால் கடந்த முறைகளில் ஒரு நாள் விடாது மழை பெய்தாலே கதை கந்தல்தான்.

இன்று காலை எங்கள் கவுன்சிலர் குமார் (காங்கிரஸ் - தமாகா) நகராட்சி இஞ்சினியருடன் சேர்ந்து வீடுகளுக்கெல்லாம் விஜயம் செய்தார். அவருக்கு நன்றி. இரண்டு நாட்களுக்கு முன்னால் எங்கள் தெருவில் அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸ் கட்டுபவர் வடிகால்களில் ஜல்லி எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்ததை சத்தம் போட்டு நீக்கச் செய்திருக்கிறார். இல்லாவிட்டால் இன்றைய நிலைமை இன்னமும் மோசமாகியிருக்கும்.

டாய்லட்டிலும் பீங்கானை தாண்டி தண்ணீர் தேங்கியிருந்தது. ஆனால் பார்த்து கொண்டிருக்கும்போதே அது வடிய ஆரம்பித்தது. இன்று காலை சற்று நேரம் முன்னால்தான் மின்சாரம் வந்தது. அறைகளிலிருந்து தண்ணீரை பக்கெட்டுகளில் நிரப்பி வெளியே கொட்ட வேண்டியிருந்தது. இப்போதுதான் கணினியில் அமர முடிந்தது. பதிவு அதற்குள் காலை சரியாக 5 மணிக்கு பப்ளிஷ் ஆகிவிட்டது. இரண்டு பின்னூட்டங்கள் வேறு. முதல் பாராவில் நான் கூறியபடி ஏதோ உள்ளுணர்வு இருந்திருக்க வேண்டும்.

ரொம்பத்தான் படுத்துகிறாள் நிஷா. இன்னும் மேக மூட்டமாகத்தான் உள்ளது. மறுபடியும் ஏதேனும் ஏடாகூடமாக செய்வாளோ என்ற பயம் இருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு பதில்கள் 28.11.2008

AnonyM/AnonyT (November 22, 2008 1:14 PM - 1:33 PM):
1. உங்களாலோ அல்லது நீங்கள் சொல்லி உங்கள் வீட்டாரே கேட்காததையோ ஊருக்கு உபதேசம் என்ற பெயரில் சொல்லுவீர்களா?
பதில்: எனக்கு வேறு வேலை இல்லையா? நான் என்ன கருத்து கந்தசாமியா?

2. 1.மனைவி 2.துணைவி. 3.______?
பதில்: ஜெமினி கணேசனை கேட்க வேண்டிய கேள்வி. ஆனால் அதற்கும் டூ லேட்.

3. கருணாநிதி ஆட்சிக் காலத்தில் மட்டும் சாதிக் கலவரங்கள் அதிகமாக நடக்கிறதே, ஏன்?
பதில்: இது பற்றி ஓரிடத்தில் இவ்வாறு எழுதியிருந்தார்கள். அதாகப்பட்டது, அதிமுக தேவர்கள் வசம் இருப்பதால், அக்கட்சி பதவியில் இருக்கும் காலத்தில் தேவர்கள் ஆட்சிக்கு பங்கம் வரக்கூடாது என அடக்கி வாசிக்கின்றனர். ஆகவேதான் அந்த ஆட்சியில் கலவரம் குறைவாகவே உள்ளது எனவும் படித்தேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

4. காமராசர் முதல்வராக இருந்த போது தானே (சமீபத்தில்) தேர்தலில் சீனிவாசனிடம் தோற்றுப் போனார்? கிழக்குப் பதிப்பக மு.க. புத்தகத்தில் முதல்வராக இருந்தவர் தேர்தலில் தோற்றுப் போனது ஜெ. மட்டும் தான் என்று எழுதியிருக்கிறார்களே?
பதில்: தவறு. 1963-ல் காமராஜ் கட்சிப் பணிகளை ஏற்க முதன் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். பக்தவசலம் முதல் மந்திரியானார். ஆக 1967-ல் காமராஜ் தோற்றபோது அவர் முதல் மந்திரியாக இல்லை. இதில் மேலும் ஒரு சுவையான விஷயம் உள்ளது. காமராஜ் தோற்றதற்கு அண்ணா நிஜமாகவே வருந்தினர். அவர் தோற்பார் என எதிர்பார்க்கவில்லையாதலால் அதிகம் பலம் இல்லாத வேட்பாளரையே நிறுத்தினார். இது பற்றி நான் எழுதிய பள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் என்னும் பதிவிலிருந்து சில வரிகள்:
“1967 தேர்தலில் காமராஜர் தோல்வி கண்டார். தி.மு.க.வைச் சேர்ந்த பெ.ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றார் அல்லவா. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்னமோ தான் பெரிய சாதனை படைத்ததைப் போல எண்ணிக் கொண்டு பீற்றிக் கொண்டு காமராஜரது நடவடிக்கைகளியெல்லாம் தரக்குறைவாக விமரிசனம் செய்து வந்தார். அவரைத் தனியாகக் கூப்பிட்டு அண்ணா அவர்கள் கண்டித்தார். பிறகு அவர் தயாரித்த அமைச்சரவைப் பட்டியலில் அந்த வேட்பாளரின் பெயர் இல்லை. அந்த வேட்பாளர் ராஜாஜி அவர்களிடம் போய் தனக்காக அண்ணா அவர்களிடம் சிபாரிசு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு மூதறிஞர் ராஜாஜி தெரிவித்தக் கருத்து இது:
"கென்னடி ரொம்ப ரொம்பப் பெரிய மனுஷன்தான. ஒரே ஒரு துப்பாக்கிக் குண்டு அந்த ஆளை கீழே சாய்ச்சுடுச்சு. அதுக்காக அந்த புல்லட்டை எடுத்து வெச்சி அங்கே எவனாவது கொண்டாடினானா என்ன?"

5. கையாலாகாதவருக்குத்தானே கோபம் அதிகம் வரும்? (இதற்கும் கருணாநிதி அடிக்கடி பார்ப்பனர்கள் மீது கோபப்படுவதற்கும் சம்பந்தம் ஏதும் இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல)
பதில்: “நீதாண்டா கொலைகாரன்” என்று கோபப்பட்டது அதனால்தானோ. நல்லது.

6. சோ நேரடி அரசியலில் குதித்திருந்தால் வெற்றி பெற்றிருப்பாரா?
பதில்: கண்டிப்பாக மாட்டார். அதை அவரே பலமுறை கூறிவிட்டார். அதேபோல மூதறிஞர் ராஜாஜி அவர்களுக்கும் தெரிந்திருந்தது, தான் தேர்தலில் நின்றால் வெற்றி பெற முடியாது என்று.

7. சோவுக்கு கொம்பு முளைத்தால் விகடன் லோகோவைப் போலத்தான் இருப்பார். சரியா?
பதில்: இது சோவுக்கு நல்ல காம்ப்ளிமெண்ட் என்றுதான் நான் பார்க்கிறேன்.

8. ஐ.டி. மோகம் குறைகிறதா?
பதில்: இன்னும் நிலைமை அவ்வளவு மோசமில்லையென்றாலும் முன்போல் கண்மூடித்தனமான மோகம் இருக்காது.

AnonyL (November 22, 2008 5:27 PM):
1. வீரப்பன் இருந்திருந்தால் யாருக்கு ரொம்பவே லாபமாக இருந்திருக்கும்?
பதில்: பல அரசியல்வாதிகளுக்கு.

2. நயந்தாராவைப் பிடிக்குமா, த்ரிஷாவைப் பிடிக்குமா, இலியானாவைப் பிடிக்குமா?
பதில்: சொல்ல காசா, பணமா என்ன? மூவரையுமே பிடிக்கும்.

கம்யூனிசம் பிடிக்காதவர் (பெயர் திருத்தம் செய்தது டோண்டு ராகவன்):
1. தா. பாண்டியன் என்பவர் தமிழகத்திலிருந்து வெங்காயம் போகவில்லை என்றால் ஸ்ரீலங்காவில் சாம்பார் இல்லை, என்றும் ஆவடியிலிருந்துதான் பீரங்கிகள் ஸ்ரீலங்காவிற்குப் போவதாகவும் பிதற்றுகிறாரே...இதைப் பற்றிய தங்கள் மேலான கருத்து? சாம்பார் இல்லை என்றால் வத்தக்குழம்பு சாப்பிட்டுக் கொள்வார்கள் என்று சமாளிக்கவேண்டாம்.
பதில்: வெங்காயத்தை விடுங்கள். துவரம் பருப்பே இங்கிருந்துதான் போகிறது என்று படித்திருக்கிறேன். ஆவடியிலிருந்த்கு பீரங்கிகள் போவது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

2. சோ சொல்வது போல் தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் காணாமல் போய்க் கொண்டிருப்பதால் இப்படி லூசுத்தனமாக எதையாவது எடுத்துக் கொண்டு பேசுகிறார்களா?
பதில்: ஐம்பதுகள், அறுபதுகளுக்கு பிறகு கம்யூனிஸ்டுகள் தமிழகத்தில் சோபிக்க இயலவில்லை. இப்போது அவர்கள் செய்வது ஒரு desperate measure.

3. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு 1992 முதல் நடந்த எல்லா குண்டு வெடிப்புகளையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அறைகூவல் விடுகிறது பற்றி?
பதில்: செய்ய வேண்டும்தான். அண்டை நாட்டுக்கு இங்கிருந்து கொண்டு விசுவாசமாக இருப்பவர்களை இன்னும் நன்றாக இனம் காணவேண்டும்.


குப்புக்குட்டி:
1. "சமீபத்தில்"என்பதை உங்கள் brand- ஆக வைத்திருக்கிறீர்கள் சரி! அது என்ன முரளி மனோகர் உங்கள் மனசாட்சியா?
பதில்: ம்ரளி மனோகர் வேறு நான் வேறு அல்ல. என்ன அவ்வப்போது அவன் என்னை கிண்டலடிப்பான். மனசாட்சி என்றும் வச்சுக்கலாமே. கேட்க நல்லாத்தான் இருக்கு.

2. தென்காசி படத்தில் வருகிற மாடு காமெடிக்கு இணையாக இப்போதைய விவேக் காமெடிகள் இருப்பதில்லையே ஏன்?
பதில்: இந்தக் காட்சியையா கூறுகிறீர்கள்? சமீபத்தில் 1969-ல் ஹிந்தி நடிகர் ராஜேந்திரநாத் இந்த காமெடியை “ப்யார் கா மவுசம்” என்னும் படத்தில் செய்து விட்டாரே. என்ன, அதில் அவர் பசுவாக வர, நிஜக் காளையிடம் மாட்டிக் கொள்கிறார்.

3. ஹிந்தி கஜினி பாடல்கள் கேட்டீர்களா?
பதில்: இல்லை. தமிழ் கஜினியும் பார்த்ததில்லை.

4. அவுட்லுக்-ல் வெளியான ஹிந்து தீவிரவாதம் கட்டுரை படித்தீர்களா?
பதில்: படிக்கவில்லை. ஆகவே கருத்து ஏதும் இல்லை.

5. ஊர் சுற்றப பிடிக்குமா ? சமீபத்தில் சுற்றிய ஊர் பற்றிய தகவல், 1978 என்ற சமீபமாக இருந்தாலும் பரவாயில்லை
பதில்: எனக்கு இருக்குமிடமே சொர்க்கம். Wanderlust எல்லாம் கிடையாது. என் வீட்டம்மாதான் நான் கதறக் கதற என்னை வைணவத் தலங்களுக்கு இழுத்து செல்வார். எப்போதடா திரும்ப கணினிக்கு வருவோம் என காத்திருப்பேன்.

6. வாரணம் ஆயிரத்தில் யார் நிலை ரொம்ப பரிதாபம்?
பதில்: தயாரிப்பாளர் நிலை என கேள்விப்படுகிறேன்.

7. தி.ஜா.ரா கதைகள் படித்திருக்கிறீர்களா?
பதில்: தி. ஜானகிராமனைத்தானே சொல்கிறீர்கள். நிறைய படித்திருக்கிறேன். எனக்கு பிடித்த கதை “அன்பே ஆருயிரே”. சமீபத்தில் 1961-ல் கல்கியில் தொடர்கதையாக வந்தது.

8. எக்ஸ்பிரஸ் குருமூர்த்தியின் அலசல்கள் "சோ"அளவுக்கு சரியானதாக இருக்கிறதா?
பதில்: சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தாலும் (அணுசக்தி ஒப்பந்தம், 123 சட்டம்) ஒட்டுமொத்தமாக இருவருக்கும் ஒரே அலைவரிசை.

9. ஒருகாலத்தில் வங்காளம் வரிசையாக புரட்சிக்காரர்களையும் சிந்தனவாதிகளையும் தந்தது (சுவாமி விவேகானந்தர், போஸ், தாகூர், அரவிந்தர் இப்படி...) ஆனால் இபோது ஏன் மம்தா போல ஆட்களைத் தருகிறது, ஏதேனும் manufacturing defect- ஆகிப் போச்சா?
பதில்: அந்த ஆட்கள் திரும்ப வந்தால் அவர்களை யார் ஆதரிப்பார்கள் என நினைக்கிறீர்கள்?

10. சுவாமி விவேகானந்தர் மற்ற துறவிகள் போல ஆன்மிக வழிபாடுகளில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை (அந்த நிலையையும் கடந்தவர்) என்று நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன?
பதில்: பரமஹம்சரிடம் யோகா செய்யும் முறையை கற்று ஆழ்நிலைக்கு போனார் விவேகானந்தர். அதில் மயங்கி அதிலேயே ஆழ்ந்துவிடப் போவதாக கூற, பதறிப்போன பரமஹம்சர் விவேகானந்தர் மக்களுக்கு அதிக சேவை செய்ய வேண்டும் என அவருக்கு வழிகாட்டினார். ஆகவே நீங்கள் சொல்வது போல அவர் ஆன்மீகத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக் கொள்ளவில்லைதான்.

11. கருப்பு வெள்ளை சபாபதி படம் பார்த்திருக்கிறீர்களா? சமீபத்தில்தான் சன் டி.வியில் போட்டார்கள்.
பதில்: சில ஸ்கிட்டுகள் பார்த்துள்ளேன். முழுக்கப் பார்த்ததில்லை. அதிலிருந்து சில காட்சிகளை எங்கள் சாரணர் இயக்க முகாம்களில் கேம்ப்ஃபைர் சமயத்தில் போட்டுள்ளோம். ஒரு படத்தில் ஒருவர் தாயார் இறக்க, கவுண்டமணி அவரிடம் “வருத்தப்படாதே அப்பா, உன் அன்னை ஊருக்கே அன்னையாக இருந்தார்” என ஆறுதல் கூற அதை அப்படியே எடுத்து கொண்ட செந்தில் மனைவியை இழந்த வடிவேலுவிடம் அன்னைக்கு பதிலாக மனைவியை கூறி உதை வாங்குவார். அந்த ஐடியா சபாபதியில்ருந்துதான் வந்தது.

12. டி எஸ் பாலையா, டி ஆர் ராமசந்திரனுக்கு இணையாக இப்போது யாரைச் சொல்லலாம்.
பதில்: மக்கள் ரசனை மாறி விட்டதே. இருப்பினும் பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா இருக்கிறார்தானே. ஆனால் அவர் அதுஇகம் சோபிக்க இயலவில்லை. இப்போதிருக்கும் விவேக், கருணாஸ் ஆகியோருக்கு என்ன குறைச்சல்?


AnonyX:
1. 'உண்மை' கண்டறியும் குழுன்னா என்னங்க?
பதில்: யாருக்கு சாதகமான உண்மை என உணர்ந்தால் பொது மக்கள் இதை கண்டு கொள்ள மாட்டார்கள்.

2. வீராணம் குழாயில கொள்ளையடிச்சு நாறிடுச்சே. இன்னும் எதுக்காக அதையெல்லாம் அப்புறப்படுத்தாம ரோட்டோரத்திலே போட்டு வெச்சிருக்காங்க?
பதில்: வீராணம் குழாயின் தவறான கான்சப்டே தலைநகர் சென்னையின் நலனை வீராணம் ஏரியாவில் உள்ள மக்களது நலனுக்கும் மேலாக பாவித்ததுதான். அவனவன் அங்கு விவசாயம் செய்ய போதுமான தண்ணீர் இல்லாது தத்தளிக்கும் நிலையில் இவ்வளவு பணம் செலவழித்து சென்னைக்கு ந்நுற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திலிருந்து பைப் போட்டு தண்ணீர் வரவழைப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஜெயலலிதா ஆரம்பித்து வைத்த மழைநீர் சேமிப்பு திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்றினால் இந்த குழாய்களுக்கெல்லாம் அவ்வளவு தேவை இல்லை. இப்போது கட்டப்படும் அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸ்களில் அது பொருத்தப்படுகிறதா என கண்குத்தி பாம்பாக பார்த்தாலே போதுமே. ஆனால் அதை செய்ய அரசியல் வியாதிகளுக்கு மனம் வராது.

3. எந்த வெளிநாட்டுக்கு போக ஆசை? ஏன்?
பதில்: எனக்கு இந்தியாவே போதும். என்னிடம் பாஸ்போர்ட் கூட இல்லை. அப்படியே போக வேண்டும் என்றால் இஸ்ரேல் போக ஆசை. முடிந்தால் பாகிஸ்தானுக்கும் செல்ல வேண்டும்.

4. இவ்வளவு பெரிய கோயில்களை அந்தக் காலத்திலேயே எப்படி கட்டினார்கள்?
பதில்: பாலகுமாரனின் உடையார் நாவலின் எல்லா பகுதிகளையும் படித்தால் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கலாம். தஞ்சை பெரிய கோவில் கட்டப்படும்போது நடந்த அரசாங்க காரியங்களை பற்றியும் அதில் எழுதப்பட்டுள்ளது. அரசு நடவடிக்கைகளில் பொதுமக்கள் பட்ட அவதிகள், அதனால் விளைந்த அவர்தம் அதிருப்திகள் பற்றியும் அதில் எழுதியுள்ளார்.

5. பார்க்க நினைத்து கடைசி வரை பார்க்க முடியாமலேயே போன பிரபலம்?
பதில்: அப்படி யாரும் இல்லையே. சுஜாதா அவர்களை சமீபத்தில் 1971 ஜனவரியில் பார்த்து பேசினேன்.

6. இந்திய தேர்தல் முறை சரியானதுதானா?
பதில்: சரியானதுதான். பல நாட்டு தேர்தல்களில் நமது தேர்தல் கமிஷனின் ஆலோசனைகளை கேட்கிறார்களே. நமது மின்னணு ஓட்டளிக்கும் பொறி அமெரிக்காவில் உள்ளதை விட அதிக அனுகூலமானது. இப்போதைக்கு கொடுங்கோல் ஆட்சியை மக்கள் அகற்ற இது ஒன்றுதான் வழியாக இருந்து வந்திருக்கிறது.

7. ஜு.வி. - நக்கீரன், விகடன் - குமுதம், சன் டி.வி. - கருணாநிதி டி.வி, ஜெயலலிதா - கருணாநிதி, அத்வானி - சோனியா
பதில்: நக்கீரன் அதிகம் படிப்பதில்லையாதலால் சரியாக ஒப்பிட இயலாது. விகடன், குமுதம் இரண்டின் அட்டைகளையும் பிய்த்து எரிந்து விட்டால் வித்தியாசம் காண்பது கடினம். சன் டி.வி.யின் மிக வெளிறிய நகல் கலைஞர் டி.வி. திமுக ஆட்சியை இழந்தால் அது காலி. ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் ஊழலில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றாலும் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் ஜெயலலிதாவின் ரிகார்ட் பிரகாசமாகவே உள்ளது. அதவானி தன் சொந்த முயற்சியால் அரசியலில் முன்னுக்கு வந்தவர். சோனியாவோ நேரு குடுமப்த்தின் மருமகள் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே வந்தவர்.

8. ஏண்டா பதிவெழுத வந்தோம் என்று யோசித்தது உண்டா>?
பதில்: கிடையவே கிடையாது. நான் பல இடங்களில் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல எனது தமிழ் சொல்லாட்சியை மேம்படுத்தவே இங்கு வந்தேன். அதன் மூலம் எனது ஆங்கிலம் < > தமிழ் மொழிபெயர்ப்பு வேலைகளில் எனக்கு அபார வெற்றி. ஏண்டா பதிவு எழுத வந்தேன் என நான் யோசிப்பதை விடுங்கள். டோண்டு ராகவன் ஏண்டா பதிவு எழுத வந்தான், யார் அவனுக்கு இன்ஸ்பிரேஷன் என யோசித்து கோபப்படுபவர்கள்தான் அதிகம் என நினைக்கிறேன். இது விஷயமாக அவர்கள் இந்தப் பதிவரிடம் கோபப்படுகிறார்கள் என அப்பதிவரே என்னிடம் கூறியுள்ளார். :)))))))

9. ஜாதி இல்லை என்று சொல்லிக் கொண்டு தினமும் 'பார்ப்பான், பாப்பாத்தி' என்று எதிர்ப்பவர் எல்லோரையும் திட்டும் கருணாநிதியின் செயல்பாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: “நான் சூத்திரன், அதனால்தான் இப்படி எல்லோரும் என்னை சாடுகின்றனர்” என்று அழுவாச்சியாக பேசும் இவரின் செயல்பாடு குறித்து பேச என்ன இருக்கிறது?

10. யாராவது தவறை சுட்டிக் காட்டினால் 'ஜெயலலிதா ஆட்சியில் நீ இந்தக் கேள்வியை கேட்டாயா?' என்று எதிர் கேள்வி கேட்கிறாரே? இவ்வாறு கூறத்தான் இவரை நாற்காலியில் உட்கார வைத்தார்களா?
பதில்: “அது மட்டும்தான் கூறுவாரா? நிருபரை நீதாண்டா கொலைகாரன் என்றுகூடத்தான் கூறுவார். மேலும் இவரை யார் உட்கார வைத்தது? இது மைனாரிட்டி அரசு என்பதை மறந்து விடாதீர்கள். பல்வேறு காகுலேஷன்களில் கூட்டணிக் கட்சியினர் இவரை உட்கார வைத்திருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.

அனானி (24.11.2008 மாலை 04.19-க்கு கேட்டவர்):
1. கேள்விகளை எடிட் செய்வது ஏன்? ஆட்டோ வரும் என்ற பயமா? ('அனானியாக' கேள்வி கேட்பதற்கு அதான் காரணம்!)
பதில்: வேறொரு இடத்தில் நான் கூறியதையே இங்கும் கூறுவேன்.
கருணாநிதி/ஜயலலிதா/பெரியார்/சோ/ராஜாஜி ஆகியோரைப் பற்றி பலர் பலவிதமான அபிப்பிராயம் வைத்திருக்கின்றனர். அவற்றை வெளிப்படையாகவும் கூறுகின்றனர். பிரச்சினை இல்லை. ஆனால் சில சமயங்களில் வரம்பு மீறுகின்றனர். உதாரணத்துக்கு கருணாநிதி அவர்களது பெயரை சிதைத்து எழுதி அசிங்கமான பொருள் வருவதுபோல எழுதுகின்றனர். அவரது நடத்தையை கொச்சையாக எழுதி விமரிசனம் செய்கின்றனர்.
ஆனால் அவ்வாறு செய்யும்போது பிளாக்கராக வராமல் (அப்படியே வந்தாலும் ப்ரொஃபைல் பகிர்ந்து கொள்ளாத பிளாக்கர்கர்களாக) வருகின்றனர். உதாரணத்துக்கு கலைஞர் அவர்களது சபையறிந்து பேசுதல் பற்றிய பதிவையே எடுத்து கொள்ளலாம். அனானி ஒருவர் அவரை எவ்வளவு மட்டம் தட்ட முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக எழுதியிருந்தார். ஐயா அனானி உமக்கு அவர் மேல் விமரிசனம் இருக்கலாம், ஆனால் அதற்காக இப்படியா? அதுவும் அனானியாக வந்து அசிங்கம் செய்கிறீர்? டோண்டு என்ன காதில் பூவைத்து கொண்டுள்ளானா? இந்த அழகில் அவரது பின்னூட்டத்தை சென்சார் செய்து விட்டேனாம். அதற்க்காக 'தார்மீக' கோபம் வேறு படுகிறார்”.
இங்கு ஒரே ஆறுதல் ஏடாகூடமாக கேள்வி கேட்ட அனானி தான் பயந்திருப்பதையும் ஒத்து கொள்கிறார்.
அனானிகளாக வருபவர்கள் எல்லோரையுமே நான் குறை சொல்லவில்லை. அவர்கள் தங்கள் சொந்தப் பெயரில் கூறினால் வேறுவிதமாக திசை திருப்பல்கள் நடக்கலாம் என்று கூட அனானிகளாக வரும் வாய்ப்பு உண்டு.
ஆகவே பாயிண்ட் எதுவும் இல்லாத வசை சொற்களை கொண்ட கேள்விகளை மொத்தமாக நிராகரிப்பது, அதில் பாயிண்ட் ஏதேனும் இருந்தால் வசையை நீக்கி (எழுத்தே தொழிலான எனக்கு இது என்ன பிரும்மவித்தையா) கருத்தை குலைக்காது கேள்வியை மட்டும் வெளியிடுவது என்று செயல்படுகிறேன்.

2. ரத்னா கபே இட்லி பிடிக்குமா, சாம்பார் பிடிக்குமா?
பதில்: ஒரு mug நிறைய சாம்பாரை பிளேட்டில் விட்டு, அதில் இட்லிகள் தோய்ந்து அன்னப்பட்சிகள் போல மிதப்பது. இரண்டு ஸ்பூன்களை இரு கைகளிலும் பிடித்து கொண்டு இட்லியை விண்டு உண்பது அவசியம். அதை விட முக்கியம் அடிக்கடி வெறும் சாம்பாரை ஸ்பூன்களில் எடுத்து உண்பது. அப்படியே சாம்பார் தீர்ந்து விட்டாலும் செர்வர் உடனே இன்னும் சாம்பாரால் இட்லிகளை முழுக அடித்து விடுவார். இரண்டு இட்லிகள் போதாது. இன்னும் இரண்டு இட்லிகளாவது அதே பிளேட்டில் போடச் செய்வது எனது பழக்கம். சாம்பார் பாட்டுக்கு தேவைப்படும்போதெல்லாம் ஊற்றப்படும்.


AnonyL:
1. ஜாங்கிரி, ஜிலேபி ரெண்டுக்கு என்ன வித்தியாசம்? ரொம்பப் பேரு ரெண்டையும் ஒன்றாக குழப்பிக் கொள்கிறார்களே?
பதில்: ஜிலேபி என்பது வட இந்தியர்களிடம் பிரபலம். மொறுக் மொறுக்கென பற்களில் அறைபடும். தேன்குழல் பக்குவத்தில் இருப்பதை சர்க்கரை பாகில் தோய்த்து வைக்கிறார்கள். ஜாங்கிரி செய்யும் முறை சரியாகத் தெரியாவிட்டாலும், அதன் எண்ட் ரிசல்ட் மிருதுவான பண்டம், வாயில் போடும்போதே கரையும் தன்மையுடையது. பல் உடைந்த பெரிசுகளுக்கு பிடிக்கும்.

2. சமையலில் நீங்கள் எப்படி? உங்கள் கேள்வி பதில்களை தொகுத்து புத்தகமாக வெளிக் கொணரும் ஐடியா ஏதாவது இருக்கிறதா?
பதில்: நான் சமையல் செய்த அனுபவத்தை எழுதிய பதிவு ஒன்றிலிருந்து: “அதற்கு முன்னால் எனக்கு சமையல் கலையை சொல்லிக் கொடுத்த திரு. W.P.K. ஐயங்காருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர் திருவல்லிக்கேணியில் 15, வெங்கடாசல செட்டித் தெருவில் நாங்கள் குடியிருந்தப்போது அந்த வீட்டின் சொந்தக்காரர். சமீபத்தில் 1968-ல் எங்கள் வீட்டு சமையற்காரர் வேலையிலிருந்து நின்று விட நானும் என் தந்தையும் சரியான சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்பட்டோம். W.P.K. அவர்கள் மிக நன்றாக சமைப்பார். அவரிடம் எனக்கு சமையல் கற்றுத் தரச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன்.

சமையலைச் சொல்லிக் கொடுத்ததில்தான் அவர் செய்தப் புரட்சி அடங்கியுள்ளது.

முதல் பாடம்: சமையல் கஷ்டமே இல்லை. இந்தப் பொம்மனாட்டிகள்தான் தேவையில்லாது பந்தா செய்கிறார்கள்.

இரண்டாம் பாடம்: சாமான்கள் போடும் அளவுகள் ஒரு தகவலுக்காகவே கொடுக்கப்படுபவை. சிறிது முன்னே பின்னே இருந்தால் ஒன்றும் குடி முழுகிப் போகாது. சுவையில் மாற்றம் ஏற்படும். சில சமயம் அதுவே நமக்குப் பிடித்தும் போகலாம்.

மூன்றாம் பாடம்: சமையல் ஆரம்பிக்கும் முன்னர் வெவ்வேறு நிலைகளை மனதில் ஒத்திகைப் பார்த்துக் கொள்ளல் நலம். அதாவது அடுப்பு பற்ற வைப்பது, அரிசி களைவது, பருப்பு நனைப்பது, அரிசி மற்றும் பருப்பை இட்லிப்பானையில் ஒன்றாகச் சேர்த்து வேக வைப்பது, இதற்கிடையில் புளியை ஊற வைத்துக் கொள்ளல், கறிகாயை நறுக்கிக் கொள்ளல் ஆகிய நிலைகள் மனதில் குழப்பமின்றி அதனதன் வரிசையில் இருக்க வேண்டும். வேகவைக்க வேண்டியிருந்தால் கறிகாயையும் அரிசியுடன் கூடவே வேகவைத்துக் கொண்டால் நேரம் மிச்சமாகும்.

அக்காலக் கட்டத்தில் திரி ஸ்டவ்தான் உபயோகித்தோம். அதை எவ்வாறு பராமரிப்பது என்பதும் அவர் சொல்லிக் கொடுத்தப் பாடத்தில் அடங்கும். இதன் பலனாக நானும் என் தந்தையும் மிக விரைவாக சமையலில் தேர்ச்சி பெற்றோம்.

எல்லாவற்றையும் விட ஐயங்கார் அவர்கள் மனநிலையைத்தான் புரட்சிகரமானது என்றுக் குறிப்பிடுவேன். நங்கநல்லூரில் அப்பாவுடன் இருந்தக் காலத்தில் வீட்டில் எங்கள் இருவரில் யார் முதலில் வீட்டுக்கு வந்தாலும் சமையல் செய்து வைத்து விடுவோம். முக்கால் மணியளவில் ஒரு முழு சாப்பாடு தயார். ரேடியோவில் சினிமா பாட்டு கேட்டுக் கொண்டு, கையில் ஒரு ஜெர்மன் நாவலுடன் சமையல் செய்தக் காலம் நிஜமாகவே பொற்காலம்தான். உடம்பும் கண்ட ஹோட்டல் சாப்பாடு சாப்பிடாததால் பிழைத்தது.

இப்போது கூட அவ்வப்போது சமையல் செய்யும்போது அவரை நன்றியுடன் நினைத்துக் கொள்வேன். ஆனால் சமைக்கத்தான் வாய்ப்புகள் தருவதில்லை என் வீட்டம்மா”.

மற்றப்படி எனது கேள்வி பதில்களை புத்தகமாக போடும் அளவுக்கு அவை ஒரு விசேஷமும் கொள்ளவில்லை என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன்.

3. ஐயர், ஐயங்கார் - ஆறு வித்தியாசம் ப்ளீஸ்.
பதில்:1. ஐயர் சாம்பல் (விபூதி) அய்யங்கார் மண் (திருமண்); 2. ஐயர் பரமசிவனை வழிபடுபவர், ஐயங்கார் திருமால் பக்தர்; 3. ஐயர் தன் பெயராக வைணவப் பெயர்களையும் வைத்து கொள்வார், ஐயங்கார் சைவப் பெயரை சாதாரணமாக வைத்து கொள்வதே இல்லை; 4. ஐயர் பூணூல் மெல்லியதாக இருக்கும், ஐயங்கார் பூணல் தடிமனாக இருக்கும்; 5. ஐயர் சங்கரரை பின்பற்றுபவர், ஐயங்கார் ராமானுஜரை; 6. பிராமணர்களில் ஐயர்கள் எண்ணிக்கை அதிகம்.


அனானி (26.11.2008, காலை 05.36-க்கு கேட்டவர்):
1. பார்ப்பன-தேவர் சாதிக் கூட்டு ஆனந்த விகடனில் இருந்து கொண்டு பொது மக்களிடம் தலித்துக்கள் பற்றிய பொய்யான சித்திரத்தை ஏற்படுத்த முயல்கிறது பதிவர் வினவு தொடுக்கும் குற்றச்சாட்டைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: அவரவருக்கு அவரவர் பார்வை கோணம். சமீபத்தில் 1978-ல் சாவித்திரி என்ற படம் வந்தது. அதில் குருக்கள் மனைவி சோரம் போவதாக காட்டியிருப்பார்கள். அதாவது பார்ப்பனரின் மனைவி. அதுவே கதாநாயகனின் தாய் விபசாரி என்றும் கதையில் வரும். ஆனால் அவன் சாதி சொல்ல மாட்டார்கள். இப்படம் பற்றிய வாசகர் கருத்துரையாடல் நடந்தபோது இதே விகடன் இம்மாதிரி படத்தில் ஒரு தரப்பின் சாதி மட்டும் கூறியதை இவ்வாறு ஞாயப்படுத்தியது, அதாவது ஒரு பார்ப்பனர் ஒரு பார்ப்பனரில்லாதவர் என்ற முறையில் இரு தரப்பையுமே கூறியிருக்கிறார்கள் என்று. கதையில் கோவில் குருக்கள் என சித்தரித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அவரையும் சாதி குறிப்பிடாது விட்டிருக்கலாம். அதை விடுங்கள், ஆனால் விகடனின் சப்பைக்கட்டு கேவலத்திலும் கேவலம்.
வினவுவின் பதிவுக்கு இப்போது வருவோம். அதில் வந்துள்ள ஒரு பின்னூட்டத்தைப் பாருங்கள்.
“இப்போது ‘பார்ப்பன-தேவர் சாதிக் கூட்டு ஆனந்த விகடனில் இருந்து கொண்டு’ என்று
கூறுகிறார்கள். இனி எந்தப் பத்திரிகையாளர், எந்தப் பத்திரிகை, எந்த சாதி என்று பட்டியல் வரும் என்று நினைக்கிறேன். பார்பனர்கள் எதற்கு தேவர் சாதி விகடனில் அத்தனை பொறுப்புகளை பெற அனுமதித்தார்கள்.விகடன் அம்பேதக்ர் வாழ்க்கையை தொடராக வெளியிட்டதே அது ஏன்.அ.மார்க்ஸ் உட்பட இடதுசாரிகளை அடிக்கடி கருத்து கேட்கிறதே அது ஏன்.முன்பு ஒருமுறை மருதையனிடம் கட்டுரை கேட்டு வாங்கிப் போட்டதே அது ஏன். இதெல்லாம் பார்ப்பனர்-தேவர் கூட்டு சதியா?
‘வெறுமனே வன்முறையைக் கற்றுக்கொடுக்காமல், சமூகப் பிரச்னைகளின் அடிப்படைகளையும் கற்றுத்தர முன்வர வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் அஜிதா’. இதிலும் குறை கண்டுபிடிக்கிறீர்கள். நீங்கள் சொல்வதை வார்த்தை பிசகாமல் சொன்னால்தான் சரி என்று நினைக்கிறீர்கள். அல்லது குறைந்த பட்சம் ஒரு குறிப்பிட்ட சாதியை திட்டி ஏதாவது சொல்லவேண்டும் என்பது உங்கள் விருப்பம்.அது அவர்களுக்குத் தெரியவில்லை. ஊடகங்கள் உங்களிடம் பத்து நிமிடம் பேசினால் அதிலிருந்து சிலவற்றைத்தான் வெளியிடுவார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா?. நீங்கள் நூறு வாக்கியங்கள் சொன்னால் அச்சில் பத்து கூட முழுதாக வராது. இது கூடத் தெரியாதா? நல்லக்கண்ணு,அஜிதா போன்றவர்கள் வினவுகளிடம் சான்றிதழ் பெற்றுத்தான் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் இல்லை”. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


நக்கீரன் பாண்டியன்:
இவர்களுக்கிடையே நேற்றைய/இன்றைய /நாளைய உறவுகளில் இணக்கமான நல்லுணர்வு /இறுக்கமான சூழ்நிலை/முழு மோதல் காரணங்களை பட்டியலிடவும்.
1. தாத்தா -பேரன்கள்(DMK-FAMILY-BUSINESS)

பதில்: அதிகப் பணம் வந்தாலே எல்லா குடும்பங்களிலும் வரும் பிரச்சினைகள்தான் இங்கும் வந்துள்ளன. அவை தவிர்க்க முடியாதவை. பெண் கொடுத்து பெண்ணெடுத்து எல்லாம் செயல்படும் குடும்பமாக இருந்தாலும் அதைத் தவிர்க்க இயலாது.

2. அண்ணா-தம்பி(DMK-POLITICAL- HEIR)
பதில்: திமுகவே ஒரு குடும்பத்தில் அடங்கும் விபரீத நிலை வந்தபிறகு அக்கட்சியில் இருந்த பழைய தலைவர் தொண்டர் உறவை எதிர்ப்பார்ப்பது வீண் ஆசை.

3. தோழிகள்(ADMK)
பதில்: இதைத்தான் என்னால் புரிந்து கொள்ளவே இயலவில்லை. மன்னார்குடிகாரர்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான சமன்பாடு என்ன என்பதை நான் அறிய இயலவில்லை.

4. ரஜினி-ரசிகர்கள்(FANS ASSOCIATION- entry in politics)
பதில்: விசிறிகள் பாவம். ரொம்பவே காத்திருந்து பார்த்து விட்டார்கள், ரஜனி கட்சி ஆரம்பிப்பார், தாங்கள் ஏதேனும் ஆதாயம் தேடலாம் என்று. தமிழகத்தின் சாபக்கேடு இங்குள்ளவர்களின் சினிமா மோகம்.

5. வலது-இடது பொது உடைமைக் கட்சி.(ALLAIANCE FOR NEXT ELECTION- sri lankan issue)
பதில்: கம்யூனிஸ்டுகள் தமிழ்நாட்டில் ரொம்பவுமே பாவம். அவர்களை விட்டு விடுங்கள்.

6. தமிழக காங்கிரஸ் தலைவர்கள்( TO FORM KAMARAJ RAJ IN TAMIL NADU)
பதில்: 1967-க்கு பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் நிலை இப்படி காமெடியாகி விட்டது. அக்கட்சி பிளவுபடாமல் இருந்திருந்தால் 1971-ல் வெற்றி பெற்றிருக்கலாம்தான். ஆனால் என்ன செய்வது, இந்திரா அம்மையார் கட்சியை பிளந்து கருணாநிதியிடம் அடிமை ஒப்பந்தம் போட்டதுமே காங்கிரசின் கதி தமிழகத்தில் அதோகதியே.

7. வை.கோ-இலங்கைப் பிரச்சனை (விடுதலைப் போராளிகள்)
பதில்: Vaiko is just taken for granted by the LTTE. The Tamilnadu people now see him as joker. LTTE will like to concentrate on others to get their support. Vaiko is already in their bag.

8. பணவீக்கமும்-gdp வளர்ச்சியும் (இந்தியாவில்)
பதில்: பணவீக்கம் குறைகிறது என இன்று படித்தேன், அதாவது 9 சதவிகிதத்துக்கும் குறைவாக. ஜிடிபி-ஐ பொருத்தவரை இங்கு இவ்வாறு கூறுகிறார்கள். 21-07-2007 நிலவரத்தின்படி “India's GDP recently crossed the trillion-dollar mark for the first time and with this India has joined the elite club of 12 countries with a trillion dollar economy. Countries that have breached trillion-dollar GDP level in the past are he US, Japan, Germany, China, UK, France, Italy, Spain, Canada, Brazil and Russia”. மீதியை அப்பக்கத்துக்கு சென்று பார்த்து கொள்ளவும்.

9. பங்கு வணிகத் தரகர்களும் - முதலீட்டாளர்களும்.(ஹர்சத் மேத்தாக்கள்)
பதில்: ஏமாறுபவர்கள் இருக்கும்வரைக்கும் ஏமாற்றுபவர்கள் எண்ணிக்கையில் குறைவு இருக்காது.

10. டோண்டு ராகவன் ஐயாவும்- எதிர்ப்பாளர்களும் (அரசியல், உலக நடப்பு, பொருளாதாரம், ஜாதி மதம் சார்ந்த கருத்துக்கள்)
பதில் (முரளி மனோஹர் தருகிறான்) அப்படியெல்லாம் பேசி இந்தப் பெரிசை தூக்கி விடாதீர்கள் என நான், முரளி மனோஹர், கேட்டு கொள்கிறேன்.

ரமணா:
அ. சந்தைப் பொருளாதார பிதாமகரான அமெரிக்கா வீட்டுக் கடன், கடன் அட்டை, முறையற்ற பங்கு வர்த்தகம் ஆகிய காரணிகளாலும் பேராசையாலும் பெரும் நஷ்டத்தில் முழி பிதுங்கும் பெரிய வங்கிகளை காப்பாற்றி கரை சேர்க்க மக்களின் வரிப் பணத்தை வாரி இறைக்கப்படுவது இந்தியாவில் தேசியமயமாக்கப் பட்ட வங்கி விசயம் போலா?
பதில்: இல்லை. இந்தியாவில் வங்கிகள் தேசீயமயம் இந்திரா காந்தி தனது அரசியல் ஆதாயத்துக்கு செய்தது. அமெரிக்காவில் நிலைமை இன்னமும் சீரியஸ். முட்டாள்தனமாக மக்கள் பணத்தை ரூட் விட்டவர்களுக்கு அரசு முட்டு கொடுக்கிறது.

ஆ) 700-800 பில்லியன் டாலர் பண உதவிக்கும் பிறகும் நிலமை சரியானதாய் தெரியவில்லையே? ஏன்?
பதில்: கோமணத்தால் மலத்தை அடக்கும் முயற்சியாகத்தான் இது எனக்கு படுகிறது.

இ)முறைகேடு செய்து நஷ்டம் ஏற்பட்டால் அரசு காப்பாற்றும் என்ற எண்ணம் வந்துவிடாதா?
பதில்: மிகவும் உண்மையான கவலை. நமக்கு புரிகிறது. அமெரிக்க முட்டாள்களுக்கு புரியவில்லையே.

ஈ)தனியார் நிறுவனங்களில் செலவீனக் கட்டுப்பாடுகள், சம்பளவெட்டு, ஆட்குறைப்பு, உற்பத்தி குறைப்பு என நடவடிக்கைகள் தொடங்கிய பிறகும் அரசின் செல்லக் குழந்தைகளாம் பொதுத் துறை நிறுவன பணியாளர்களுக்கு இரண்டு மடங்கு சம்பள உயர்வு. தேவையா?
பதில்: மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுத்தால் மற்றவருக்கும் கொடுக்கும் நிர்ப்பந்தம் தானே வருகிறது. அதற்கும் பொது நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்கும் ஒரு தொடர்பும் இல்லையே.

உ) கச்சா எண்ணெய் விலை 147 லிருந்து 48 டாலருக்கு வந்த பிறகும் பெட்ரோல் விலை குறைப்பு பற்றி சாக்கு போக்கு சொல்லுவது? அடுக்குமா?
பதில்: இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரும் தருணம் இதை கொடுத்தால் சில ஓட்டுகள் அதிகம் கிடைக்காதா என்ற நப்பாசைதான் காரணம் என நினைக்கிறேன்.

ஊ) தொலை தொடர்பு அமைச்சர் சொல்வது போல் செல்பேசி கட்டணங்கள் 20-40 பைசா என குறையுமானால் நல்லது தானே? பின் ஏன் அலைவரிசை ஏல விற்பனைபற்றி விவாதம்?
பதில்: 2001-ல் நிர்ணயித்த விலைக்கு விற்ற புத்திசாலிகள் சைடில் காசு பார்க்காமல் இருந்திருப்பார்களா என்பதுதான் இங்கு கேள்வி. அதுவும் இத்துறையில் முன் அனுபவம் இல்லாது முதலில் வந்தவருக்கு தருவதென்பது என்ன சுண்டல் வினியோகமா? அரசு இந்த லைசன்ஸை ரத்து செய்ய வேண்டும். முதலில் வந்தவர்களா அல்லது ரகசியமாக முதலில் சொல்லப்பட்டு வந்தவர்களா என்பதையும் பார்க்க வேண்டும். இந்த விஷயத்தில் செல்பேசி கட்டணங்கள் குறைகிறதே என அல்ப சந்தோஷம் படுவது சரியல்ல.


சேதுராமன்:
1. After the Mumbai terrorists attack, resulting in many deaths including ATS cops, should Shivraj Patil continue in office?
பதில்: அப்படியெல்லாம் தட்டையாகக் கூறிவிட இயலாது. தீவிரவாதிகள் தாக்குதல் எங்கு வேண்டுமானாலும் வரலாம். அதற்காகவெல்லாம் பதவி விலக வேண்டுமென்றால் ஒரு அரசும் நிலைக்காது. ஆனால் ஒன்று, தாக்குதல் வந்தால் எப்படி அதை கையாள்கிறார்கள் என்பதைப் பார்த்து வேண்டுமானால் ஏதேனும் கூறலாம். அப்படியே தீவிரவாதிகளைப் பிடித்தாலும் அஃப்சலுக்கு சப்பை கட்டும் அறிவில்லாஜீவிகள் இங்கும் வந்து அவர்களுக்காக ஒப்பாரி வைத்தாலும் அதற்கும் கலங்காது இருக்கும் அரசே நமக்கு தேவை. அந்தவகையில் பார்த்தால் போக வேண்டியவை மத்திய அரசும் தமிழக அரசும். மகாராஷ்டிர அரசு என்ன செய்கிறதென்று பார்ப்போம்.

இது சம்பந்தமாக நான் என்றென்றும் அன்புடன் பாலாவின் இது பற்றிய பதிவில் போட்ட பின்னூட்டத்தை இங்கும் தருகிறேன்.
“நான் கூற நினைத்ததை இட்லிவடை கூறிவிட்டார். அதையே எனது பின்னூட்டமாக வைக்கிறேன்.
அமெரிக்காவில் செப்டம்பர் 11 அன்று நடந்த தீவீரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இன்று வரை ஒரு தாக்குதல் கூட அதே இஸ்லாமியத் தீவிரவாதிகளால் நடத்த முடிவதில்லை. காரணம் என்ன? உறுதியான தலமை. உளவுத் துறையின் திறமை. அர்ப்பணிப்பு உணர்வு மிக்க அதிகாரிகள், தலைவர்கள். புஷ் மீது நாம் வேறு என்ன குறை வேண்டுமானாலும் கூறலாம் ஆனால் இன்று வரை அமெரிக்கா தாக்குதலுக்கு உள்ளாகாமல் தப்பித்ததன் காரணம் புஷ்ஷின் உறுதியான தலைமையும், துணிவான சட்டங்களுமேயாகும். அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு முஸ்லீம்களின் ஓட்டுக்களை வாங்கித்தான் ஜெயிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கிடையாது. அதே நிலமை இந்தியாவிலும் வர வேண்டும். அமைதியை விரும்பும் இந்திய தேசியத்தின் மீதும் சகோதரத்துவம் மீதும் நம்பிக்கை உள்ள ஒவ்வொரு முஸ்லீம்களும் இதை உணர்ந்து அரசின் கடுமையான சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அப்படி ஒரு உறுதியான தலைமை இன்று இந்தியாவில் நரேந்திர மோடியைத் தவிர வேறு எவருக்கும் இல்லை. ஒன்று நரேந்திர மோடியைப் பிரதமராக்க வேண்டும் அல்லது இந்தியாவை ராணுவத்திடம் ஒப்படைத்து விட வேண்டும். அவர்கள் இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு கொடுக்கிறார்களோ அதை செய்து முடித்த பிறகு இந்தியாவுக்கு மீண்டும் ஜனநாயகம் திரும்பினால் போதுமானது. இப்பொழுது தேவை ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகள் இல்லாத உறுதியான துணிவான தலமை ஒன்று. அது மோடியிடமும் ராணுவத்திடமும் மட்டுமே உள்ளது. இரண்டு பேர்களில் ஒருவரிடம் இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கா விட்டால் இந்தியாவை முப்பது முக்கோடி தேவர்களாலும் கடவுள்களாலும் கூடக் காப்பாற்ற முடியாது. என்ன செய்யப் போகிறது இந்தியா? என்ன செய்யப் போகிறார்கள் இந்திய வாக்காளர்கள். இந்தியக் குடிமக்களின் உயிர் அவர்கள் கையில் உள்ள வாக்குச் சீட்டுக்களில் மட்டுமே உள்ளது அதை உணர்ந்து உரிய துணிவான திறமையான தலமையைத் தேர்ந்தெடுக்கா விட்டால் இப்படி அனு தினமும் அநாதையாகச் செத்து செத்து மடிய வேண்டியதுதான்.
இப்போது டோண்டு ராகவன் இன்னும் ஒன்று கூற ஆசைப்படுவான். இஸ்ரவேலர்களை நமது அதிகாரிகள் கலந்தாலோசிப்பது நலம். அவர்களைவிட அதிகத் திறமைசாலிகள் இந்த விஷயத்தில் வேறு யாரும் இல்லை”.


குப்புக்குட்டி
1. மும்பை சம்பவத்திற்கு பிறகாவது பொடா தேவை என்று ஒத்துக் கொள்வார்களா? இல்லை மனித உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது என்று கிரிமினல் சட்டங்களையே தூக்கி விடுவார்களா?
பதில்: அரசியல் விரோதங்களுக்காகவெல்லாம் அதை பயன்படுத்திய ஜெயலலிதா போன்றவர்களும் பொடா நீக்கப்பட்ட நிலைமைக்கு பொறுப்பேற்க வேண்டும். மற்றப்படி அதனால் எல்லாம் சட்டமே இருக்கக் கூடாது என்றால் எல்லா சட்டங்களையும் தூக்க வேண்டியிருக்கும்.

2. புல்லட் ப்ரூப் அணிந்த பிறக்கும் எப்படி ஏ.டி.எஸ் தலைவருக்கு குண்டு பாய்ந்தது?
பதில்: உடலில் எல்லா பாகங்களுக்கும் புல்லட் ப்ரூஃப் போட இயலுமா என்ன? மகாபாரதத்தில் ஒரு காட்சி. துரோணரின் கவசத்தை துரியன் போட்டு கொண்டு வர, அருச்சுனன் அதை அறிந்து துரியனின் நகக்கணுக்களிலெல்லாம் அம்பு செலுத்தி அவனை பீடித்தான் என வியாசர் எழுதியுள்ளார்.

3. இத்தனை அதிகாரிகள், கமேண்டோக்கள் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள், இந்நிலையில் பிடிபட்டவர்களுக்கு மரண தண்டனை (நம்ம கோர்ட் இதை விசாரிச்சு, முடிச்சு பெரியமனது பண்ணி) கிடைத்தால், அதை நிறைவேற்றுவார்களா? இல்ல அப்சல் குருவுக்கு துணைக்கு வைப்பார்களா?
பதில்: சேதுராமன் அவர்களுக்கு நான் மேலே தந்த பதில்தான் இங்கும்.

4. அப்பாவிகளை இப்படி கொல்வதில் என்ன சாதிக்கிறார்கள் இந்த அறிவிலிகள்?
பதில்: யுத்தத்தில் அப்பாவிகளும் கொல்லப்படுவது துரதிர்ஷ்டவசமாகத்தான் என்றாலும், அது அனாதிகாலமாக நடக்கிறதே.

5. எத்தனை பேருடைய வாழ்க்கை ஒரு சில நிமிடத்தில் சூன்யமாகி விடுகிறது? பொடா வேண்டாம் என்றவர்கள் இப்போது எங்கே போய்விடார்கள்?
பதில்: சப்பைக்கட்டு பதிவுகளை தயார் செய்து கொண்டிருப்பார்கள் என நம்பலாம்.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/26/2008

செம்புலப் பெயல் நீர்போல

நேற்று மாலை (25.11.2008) முதல் இன்று இன்னேரம் (முற்பகல் 11.00) வரை மழை விடவில்லை. எங்கள் ஏரியாவில் நல்ல வேளைஆக மழைநீர் வடிகால்கள் சரிவர அமைக்கப்பட்டிருப்பதால் பிரச்சினை இல்லை. சும்மா சொல்லக்க்கூடாது, நகராட்சி ஊழியர்கள் அங்கங்கு தடை ஏற்படும் வடிகால்களை தூர் எடுத்த வண்ணம் இருந்தனர்.

காலை வழக்கமான ஐந்தரை கிலோமீட்டருக்கான வேக நடைக்கு எல்லா பாதுகாப்புகளுடனும் - அதாவது, பர்ஸ் செலஃபோன் பேப்பருக்குள், கடிகாரம், செல்பேசி லேது - குடையின்றி மழையில் இறங்கினேன். இந்த பிராம்மணனுக்கு மூளையும் லேது, இப்படி மழையில் இறங்குகிறதே என்ற முகபாவத்துடன் வீட்டம்மா வழியனுப்பினார்.

எங்கள் வீட்டிலிருந்து தெருவில் மேற்கே நடந்து பக்தவத்சலம் நகர் தெருவில் வலது பக்கம் திரும்பி நேரே நடந்தால் ஜெயின் கல்லூரி விளையாட்டு மைதானத்தை ஒட்டிய தெரு பின்னி இஞ்சினியரிங் அருகில் ரயில்வே பாதைக்கு, மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் வந்து முடியும். இதற்கு நடை நேரம் 15 நிமிடங்கள். சப்வே கட்டுவதால் சற்றே ஜாக்கிரதையாக நடந்து லைன் கிராஸ் செயய வேண்டும். பிறகு ஜி.எஸ்.டி. சாலையை பிடித்து வலது புறம் திரும்பி சென்றால் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் ஹோட்டல் ட்ரைடண்டுக்கு முன்னால் உள்ள தெருவில் வலது பக்கம் திரும்பி நடந்தால் பழவந்தாங்கல் சப்வே வரும். சாதாரண தினங்களில் வேகமாக நடை போடும் நான் இன்று சாலையில் தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் சற்றே ஜாக்கிரதையாக நடக்க வேண்டியிருந்தது. ஏதேனும் கண்ணுக்கு தெரியாத பள்ளங்களுக்கு மட்டும் தயங்க வேண்டியிருக்கிறதுதானே. சுமார் அரை மணி நேர நடைக்கு பிறகு வரும் மீன்ம்பாக்கம் ஆராய்ச்சி நிலையத்தில் வைத்திருந்த போர்டில் அதிகபட்ச வெப்பம் 29.2 டிக்ரி செல்சியஸ், குறைந்த பட்ச வெப்பம் 25.2 டிகிரி செல்சியஸ், ஈரப்பதம் 82%, மழையளவு 1.6 மிமி என்று காணப்பட்டது. அவ்வளவு மழை கொட்டுகிறது, மழைமானி இவ்வளவுதான் காட்டுகிறதா? இது என்ன புதுக்கதை? பழைய செய்தியாகத்தான் இருக்க வேண்டும். அதுவும் ஈரப்பதம் 82% என்பதும் நம்பும்படியாக இல்லை. மழைமானியில் அவ்வளவு குறைந்த அளவு காட்டுவதை பார்த்ததும் கல்கியில் சமீபத்தில் 1966-ல் படித்த ஜோக் நினைவுக்கு வந்தது. அதையும் பார்த்து விடுவோமே.

அதிகாரி: என்னய்யா இவ்வளவு மழை பெஞ்சிருக்கு, இவ்வளவு குறைச்சலா கருவி காட்டறதே?
ஊழியர்: ஹி, ஹி சார், நாந்தான் தாகம் தாங்கமுடியாமல் அதில் இருந்த தண்ணீரையெல்லாம் குடிச்சுட்டேன்.

இந்த ஜோக்கையும் கூடவே மற்ற கல்கி ஜோக்குகளையும் அக்காலக் கட்டத்தில் நண்பர்களிடம் கூற “இனிமேல் கல்கி ஜோக் சொல்லுவியா, சொல்லுவியான்னு உன்னை உன் நண்பர்கள் போட்டு அடிச்சாங்களே அதையும் சொல்லுடா டோண்டு ராகவா” என்று போட்டுக் கொடுக்கும் முரளி மனோஹர் தயவு செய்து அமைதி காக்கவும்.

சாலையில் இருந்த செம்மண் மழைநீருடன் கலந்து முகம் சிவந்து ஓடியது. அது எனக்கு இந்தப் பாடலை நினைவுபடுத்தியது. இது குறுந்தொகையில் வருவதாக அறிகிறேன்.

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"

"உன் தாய்க்கும் என் தாய்க்கும் என்ன தொடர்பு? என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையில் உறவினர்கள்? நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் பார்த்து கொண்டது இல்லையே. பாலை மண்ணில் பெய்த மழை போல நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன" என்பது இப்பாடல். செம்புலம் என்பது பாலை, செம்மண் என்ற இரண்டு அர்த்தங்களைக் கொண்டுள்ளது. மணலில் தண்ணீர் சிந்திப் பார்த்ததுண்டா நீங்கள்? தண்ணீர் விழுவதும் அதை மணல் உறிஞ்சிக் கொள்ளலும் கண்ணிமைக்கும் நொடிகளில் நிகழும். அதைப் போல பிரித்தறிய முடியாத கணங்களில் உள்ளங்கள் கலந்தன என்றும் கொள்ளலாம். செம்மண்ணில் புழுதியும் வாசனையும் கிளப்பியடி பெய்யும் மழை நீர் மண்ணோடு கலந்த வினாடியில் சுயமிழந்து தானும் செந்நிறம் கொள்வதுபோல நெஞ்சங்கள் ஒன்றாய்க் கலந்தன என்றும் கொள்ளலாம். என்னைப் பொருத்தவரை நான் சமீபத்தில் 1962-63 காலக் கட்டத்தில் புதுக்கல்லூரியில் பியுசி வகுப்பு படிக்கையில் இப்பாடல் எங்கள் பாடத்தில் வந்தது. அதில் செம்மண் என்ற பொருளில்தான் செம்புலம் கூறப்பட்டது. எதுவான போதிலும் கண்டதும் காதல் என்ற அனுபவத்தைப் பெற்றவர்களுக்கு இந்த பாடல் மறக்க முடியாததாக இருக்கும் என்பது வெள்ளிடைமலை.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த வரிகளைத்தான் “பொன் விலங்கு” என்னும் நாவலில் நா. பார்த்தசாரதி அவர்கள் கதைத் தலைவன் சத்தியமூர்த்திக்கும் தலைவி மோகனாவுக்கும் இடையே வந்த காதலை விளக்க உபயோகப்படுத்தினார்.
"நீரும் செம்புலச் சேறும் கலந்தது போல கலந்தோம் நாமே" என்ற வரிகளை இன்னும் மறக்க இயலவில்லை.

இதையெல்லாம் நினைத்து கொண்டே போனதில் பழவந்தாங்கல் சப்வே வந்து விட்டது. மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. தெருவில் நடமாட்டமே இல்லை. சப்வே தாண்டி, காலேஜ் சாலை தாண்டி காதர் தோட்டம் அருகில் வருகையில் ஒரு பெரிய கும்பல் குடையுடன் நின்று கொண்டிருந்தது. பொங்கி வரும் மழை நீரை சரியான வழியில் ஒதுக்கி விடும் சிறப்பான பணியை அது செய்து கொண்டிருந்தது. நடுமையமாக நின்று கொண்டு இருந்தவர் உள்ளூர் கவுன்சிலர் என்பதை அறிந்து வியந்தேன்.

எம்ஜிஆர் ரோடை அங்கிருந்து பிடித்து அதில் நடந்து வீட்டுக்கு போன போதும் மழை. ஆக ஐந்தரை கிலோமீட்டர் தூரம் செல்ல எடுத்து கொண்ட கிட்டத்தட்ட 55 நிமிடங்களும் அடை மழைதான். மிகவும் ஜாலியான அனுபவம். மெரினா கடற்கரையில் பதிவர் மீட்டிங்கிற்கு செல்லும்போது இதே போல கொட்டும் மழையில் அலைகளில் நிற்பது போன்ற அனுபவம் போலவே இதுவும் இருந்தது.

இவ்வாறு செல்லும்போது கவனிக்க வேண்டிய சில பாதுகாப்புகளை மறக்கலாகாது. உடல், உடை நனைவது பொருட்டில்லை என்றாலும் அதற்காக பணமும் நனையலாம் என்று விட முடியாதல்லவா? ஆகவே பர்சை செலஃபோன் தாளில் வைத்து சுற்றிக் கொள்ள வேண்டும். கைகடிகாரம், செல்பேசி ஆகியவை இருக்கக் கூடாது. அதே போல பர்சில் உங்கள் விசிட்டிங் கார்ட் இருப்பதும் நலம். ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தாலும் வீட்டிற்கு தகவல் தெரிவிக்க மற்றவர்களுக்கு உபயோகப்படும் அல்லவா? (நெருப்பு என்றால் வாய் வெந்து விடாது)

அதே போல தெருக்களில் தண்ணீர் தேங்கிக் கிடந்தால் ஜாக்கிரதையாக இருப்பது நலம். பள்ளங்களில் காலைவிடும் அபாயம் உண்டு. சுற்று முற்றும் பார்வை இருந்த வண்ணமே இருக்க வேண்டும். எங்கேனும் எலெக்ட்ரிக் ஒயர்கள் தொங்கிக் கொண்டு இருந்தால் அது வேறு பிரச்சினை.

இவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் மழையில் நடப்பது ஒரு சுகானுபவம்.

மழையில் நடப்பது சம்பந்தமாக எனது முரட்டு வைத்தியம் - 5 பதிவில் கூறியதை இங்கு மீண்டும் கூற விரும்புவேன்.

“சென்னை வந்ததும் இதை (நடைப்பயிற்சி) பல முறை ஆரம்பித்து பாதியில் விட்ட நான் இப்போது என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருளால் கடந்த 2 மாதங்களாக செய்து வருகிறேன். சாதாரணமாக சில தினங்கள் வரிசையாக மழை பெய்து எனது உறுதியைக் குலைக்கும். இம்முறை அதையும் மீறியுள்ளேன். கையில் கடிகாரம் இல்லாது, செல்பேசி எடுத்து கொள்ளாது, பணத்தை பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்துகொண்டு கொட்டும் மழையில் பலமுறை சென்று விட்டேன். உடலுக்கு ஒரு கெடுதலும் வரவில்லை. ஆக, மழையால் வேலை கெட்டது என்று இனிமேல் இருக்காது. இதில் என்ன வேடிக்கை என்றால் போடா ஜாட்டான் என மழையை ஒதுக்கியது மேலும் உற்சாகத்தையே அளிக்கிறது. நம் கட்டுப்பாட்டிலேயே எல்லா விஷயங்களும் உள்ளன என்ற எண்ணமே மகிழ்ச்சியை வரவழைக்கிறது”.

கடவுள் அருளால் இதுவரை ஜலதோஷம், ஜுரம் என்று எதுவுமே இதனால் வரவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/22/2008

கலைஞர் ஒரு தீராத விளையாட்டு பிள்ளை

ஒரு படத்தில் (பெயர் தெரியவில்லை, யாரேனும் பின்னூட்டத்தில் தெரிவித்தால் நன்றி) கவுண்டமணி மற்றும் செந்தில் ஓடும் பஸ்ஸில் இருப்பார்கள். அப்போது கவுண்டமணி அவரை கரம் வைத்து தேடும் ரௌடியிடம் மாட்டிக் கொள்வார். அச்சமயம் பார்த்து போலிசார் சோதனைக்காக அடுத்த ஸ்டாப்பில் பஸ்ஸில் ஏற அவர்களிடம் செந்தில் கவுண்டமணியை பிக்பாக்கெட் திருடர் என போட்டு கொடுப்பார். முதலில் மயங்கிய கவுண்டமணி, செந்திலின் ஜாடையை புரிந்து கொண்டு தான் பிக் பாக்கெட்காரதான் என ஒத்து கொண்டுவிடுவார். போலீசார் அவரையும் செந்திலையும் பஸ்ஸை விட்டு இறக்கியதில் அப்போதைக்கு கவுண்டமணி ரௌடியிடமிருந்து தப்பிப்பார்.

ஆனால் அந்தோ, அவர் தான் பிக்பாக்கெட் இல்லை எல்லாம் நடிப்புக்குத்தான் என்று கதறினாலும் போலீசார் அவரை முதுகில் நொங்கு நொங்கு என்று அடிப்பார்கள். அடிகளை கைவிரல்களில் எண்ணிய செந்தில் நான்கைந்து அடிகளுக்கு பிறகு போலீசாரிடம் “ சார், இவர் நிஜமான பிக்பாக்கெட் இல்லை, இவரை ஒரு ரௌடி கிட்டேயிருந்து காப்பாற்றத்தான் சும்மா லூலூலாயிக்குத்தான் சொன்னேன்” என்ற உண்மையைக் கூற, போலீசார் அவரையும் கன்னத்தில் அறைவார்கள்.

அந்த நேரம் பார்த்து ஒரு பெரியவர் வந்து போலீசாரிடம் தன்னிடம் வாடகைக்கு எடுக்கப்பட்ட போலீஸ் உடைகளை திரும்பத் தருமாறு கேட்பார். அதிர்ந்து போன கவுண்டமணி “அப்ப நீங்க நிஜ போலீஸ் இல்லையா” என்று அழாக்குறையாகக் கேட்க, அவர்கள் “சும்மா, லூலூலாயிக்காகத்தான் அப்படி நடிச்சோம்” என்று கூறிப் போவார்கள்.

“கல்லூரி மாணவர்களைத் தூண்டிவிட்டது ஜெயலலிதாதான் என்று தான் கூறியது சும்மா லூலூலாயிக்குத்தான் என்று கலைஞர் காமெடி செய்ததுதான் மேலே சொன்ன சீனை எனக்கு நினைவுபடுத்தியது. அவருக்கு என் நன்றி.

இப்படியே கலைஞர் கூறிக்கொண்டு போனால் என்ற கற்பனையில் ஜூனியர் விகடன் இறங்கியுள்ளது இந்த இதழில் (26.11.2008). கலைஞர் இவ்வாறு கூறினாலும் நாம் ஏற்று கொள்ளத்தான் வேண்டும்!!!!!!!! நன்றி ஜூனியர் விகடன்!

“தம்பிகள் அமீர், சீமான் ஆகியோரை தமிழக போலீசார் சும்மா தமாஸுக்குத்தான் கைது செய்தார்கள். அந்த அளவுக்கு தமிழக போலீசாருக்கு தமிழ் உணர்வு அற்றுபோய்விடவில்லை”

“காடுவெட்டி குரு ஒரு பண்புமிக்க பேச்சாளர். கழகக் கண்மணிகளை கோபப்படுத்தியதாக நான் சும்மா லூலூலாயிக்குத்தான் சொன்னேன். அதை உண்மையென்று நம்பி போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளி விட்டார்கள்”

“மின்சாரக் கட்டணம் உயர்வு என்று சொல்லி அடுத்த நாளே அதை வாபஸ் பெற்றது, துணைநகரதிட்டத்தை அறிவித்த அதே வேகத்தில் கைவிட்டது, மரக்கானம் மற்றும் கடலூர் அனல் மிந்திட்டங்களை மறந்தது, தமிழக எம்பிக்கள் அத்தனை பேரும் ராஜினாமா செய்வார்கள் என்று மத்திய அரசை மிரட்டியது... இப்படி விளையாட்டுக்காக பேசி நான் பல சாதனைகளை படைத்திருக்கிறேனே”!

“டி.கே. ரங்கராஜனை திட்டி நான் கவிதை எழுதியதாக சொல்கிறார்கள். தம்பி வைரமுத்துவை கேட்டுப்பாருங்கள். கவிதைக்கு பொய் அழகு. சும்மா கிண்டலுக்காகக்கூட இல்லை, உண்மையிலேயே விளையாட்டுக்காகத்தான் அதை எழுதினேன்”.

கருத்துடன்: வேல்ஸ், ஓவியத்துடன்: முத்து

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: படத்தின் பெயர் “சொக்கத் தங்கம்” என்று தகவல் அளித்த அத்திரிக்கு நன்றி.

11/21/2008

டோண்டு பதில்கள் - 21.11.2008

AnonyT:
1. கருணாநிதி நிர்வாகத் திறமையானவர் என்று அவரது ஆதரவாளர்கள் பெருமையாகக் கூறிக் கொள்வர். ஆனால் கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் வன்முறைகளும், கரண்ட் கட் போன்ற மக்களை பாதிக்கும் பிரச்னைகளும் அதிகம் என்பது உண்மையா?
பதில்: நிர்வாகத்திறன் என்று பார்த்தால் அவரும் ஜெயலலிதாவும் கிட்டத்தட்ட சமமே. என்ன, மழைநீர் சேமிப்புத் திட்டம் போல உருப்படியான திட்டம் கலைஞர் ஆட்சியில் கண்டிப்பாக நிகழ்ந்திருக்காது. இந்த விஷயத்தில் ஜெயலலிதா காட்டிய உறுதியை அவர் காட்டியிருப்பார் என நம்ப இயலவில்லை. வன்முறைகள் கரெண்ட் கட் ஆகிய விஷயங்களில் இருவருமே சமமான நிலையில் உள்ளனர். ஆனால் புலிகள் விஷயத்தில் கருணாநிதி ஆட்சிக்கு வரும்போது மட்டும் அவர்களது அட்டகாசம் அதிகரிக்கிறது. அது ஜெயலலிதா காலத்தில் குறைவு. அவ்வளவுதான். இப்போதைய தமிழகத்தில் திமுக அல்லது அதிமுகாதான் பதவிக்கு வரும் வாய்ப்பு உண்டு. ஆகவே ஒப்பீடு அவர்கள் இருவருடன் நிறுத்தி கொள்கிறேன்.

அனானிM:
1. உங்களுக்கு பிடித்த சிற்றுண்டி போண்டாவா, பக்கோடாவா? (உங்களை போண்டா என்று சிங்கம் & அல்லக்கைகள் சொல்கிறதே, அவர்களை பக்கோடா (தேங்க்ஸ் : மெட்ராஸ் டு பாண்டிச்சேரி) என்றால் ஒப்புக் கொள்வீர்களா?
பதில்: எனக்கு பிடித்தது காஞ்சீபுரம் இட்லி. என்னை போண்டா என்று சொன்னால் சொல்லிவிட்டு போகட்டுமே. எனக்கு என்ன போச்சு? அவர்களுக்கு பிடித்ததை வைத்து கூப்பிடவேண்டுமானால் சுண்டக்கஞ்சி என்று வேண்டுமானால் கூறலாம்.

அனானிT:
1. மந்த்ராவை (தமிழ் நடிகை) உங்களுக்கு பிடிக்காதா? பரந்த மனம் கொண்டவராமே?
பதில்: தாராளமாக பிடிக்கும்.

2. சட்டக் கல்லூரி பிரச்னை நடந்த அன்று கருணாநிதி சட்டசபை பக்கம் தலைகாட்டாமல் ஓடி விட்டாரே?
பதில்: ஏனாம்? எங்காவது டாக்டர் பட்டம் தந்தார்களாமா அல்லது மானாட மயிலாட நிகழ்ச்சி நடந்ததா?

அதே அனானி:
1. அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஜெ. தைரியமாக தனிப்பட்ட நபர்களின் பெயரை நீக்கி உத்தரவிட்டது போல அரசு கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பஸ்ஸ்டாண்டுகள் போன்றவற்றுக்கு தனிப்பட்ட தலைவர்கள், நபர்களின் பெயரை நீக்கினால் என்ன?
பதில்: செய்தால் நன்றாகத்தான் இருக்கும். முதலில் நகரில் உள்ள எல்லா சிலைகளையும் எடுத்து விட்டு அவற்றை மியூசியத்தில் வைத்து விடலாம். காந்தி சிலையையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

அனானிA:
1+1=3; Is this correct?
கணவன் + மனைவி சில காலம் கழிந்த பிறகு குழந்தை. மொத்தம் 3.

AnonyT:
1. கருணாநிதியின் வாரிசுகளில் உங்களை கவர்ந்தவர் யார், ஏன்?
பதில்: ஸ்டாலின். இவர்தான் அடிநாட்களிலிருந்து தி.மு.க. வில் பணியாற்றியுள்ளார்.

AnonyA:
1. பாத்திமா பாபு என்றவுடன் உடனடியாக உங்கள் நினைவுக்கு வரும் அரசியல் பிரபலம்?
பதில்: தெரியவில்லையே.

November 14, 2008 5:10 PM
AnonyM:
1. கெட்ட வார்த்தைகளை உபயோகிப்பீர்களா? அடிக்கடி வாயில் வந்து விழும் கெ.வா. என்ன?
பதில்: உபயோகித்தது உண்டு, சமீபத்தில் 1956-57 கல்வியாண்டில் ஆறாவது படித்த போது. (அப்போதுதான் அதிகம்). அவை என்ன என்பது இப்போது வேண்டாமே.

AnonyT:
1. இத்தனை கேள்விகள் திடீரென வரத் தொடங்கும் என்று எதிர்பார்த்தீர்களா? யார் இப்படி கேள்வி கேட்கிறார்கள் என்று மண்டை காய்கிறதா?
பதில்: மண்டை காய்வதற்கு வேறு ஆளைப் பாருங்கள். கேள்விகள் வந்தால் பதிவு, இல்லாவிட்டால் அந்த வெள்ளியன்று பதிவு இல்லை. வரும் கேள்விகள் அத்தனைக்கும் பதில் போட்டு தீர்த்து விடுவது என்பது டீஃபால்ட் அமைவு. ஆக பதிவு வரும் வெள்ளியன்று காலை கைவசம் கேள்விகள் இருக்காது. ஒவ்வொரு முறையும் க்ளீன் ஸ்லேட்டில்தான் கணக்கு துவங்கும். மற்றப்படி சில கேள்விகளை கேட்பவர்களை ஊகிக்க முடிகிறது. அது எனக்குள் ஒரு புன்முறுவலையும் வரவழைக்கிறது.

அனானிM
1. வருஷத்துக்கு எவ்வளவு income tax கட்டுறீங்க? எவ்வளவு ஏமாத்துறீங்க?
பதில்: தனிப்பட்ட/அந்தரங்க/சென்சிடிவ் விஷயங்களை கேட்கும் இம்மாதிரி கேள்விக்கு பதில் தருவதற்கில்லை.

நியாயவான்:
1. நீங்க எவ்வளவு கரண்ட் சார்ஜ் கட்டுறீங்க?
பதில்: இரண்டு மாதங்களுக்கு 1200 ரூபாய் போல பில் வருகிறது. சும்மா சொல்லக் கூடாது நங்கநல்லூர் துணை மின்நிலையத்தில் வேலைகள் ரெகுலராக, பக்காவாக நடக்கின்றன.

அனானிA:
1. அடுத்தது கிளிண்டனின் பெண்ணுக்கு தான் வாய்ப்பாமே?
பதில்: அமெரிக்கா என்ன இந்தியாவா என்ன, நேருஜி --> இந்திரா --> ராஜீவ் --> பிரியங்கா என்று போக. அப்படியே அப்பெண் வருவதாக இருந்தாலும் அடியைப்பிடிடா பாரத பட்டா என்றுதான் அடிமட்டத்திலிருந்து வர வேண்டும்.

அனானிI:
1. ஏண்டா இந்தியாவில் வந்து பொறாந்தோம் என்று என்றைக்காவது நினைத்ததுண்டா?
பதில்: என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என பதிவு போட்ட டோண்டு ராகவனைப் பார்த்து கேட்கும் கேள்வியா இது?

அனானிM:
1. வாரத்துக்கு எத்தனை தடவை **** வைத்துக் கொள்வீர்கள்? எத்தனை முறை தன் கையே தனக்குதவி?
பதில்: தனிப்பட்ட/அந்தரங்க/சென்சிடிவ் விஷயங்களை கேட்கும் இம்மாதிரி கேள்விக்கு பதில் தருவதற்கில்லை.

அனானிT:
1. உங்கள் வலைப்பூ பின்னூட்டமிடுபவர்களை(யும்) சைபர் போலீஸ் கண்காணித்து வருகிறதாக சொல்கிறார்களே? சைபர் போலீஸ் வேலை வெட்டி இல்லாமல் உட்கார்ந்திருக்கிறார்களா என்ன?
பதில்: விஷயம் என்னவென்றால், தேவைப்பட்டால் சைபர் கிரைம் முறையாக விண்ணப்பித்து பிளாக்ஸ்பாட்டில் அசிங்க கமெண்ட் போடுபவர்களின் ஐபி-ஐ கூகள் நிர்வாகம் துணை கொண்டு கண்டுபிடிக்க ஏலும்.

அனானிM:
1. வூட்டுக்காரம்மா தவிர வேறு யாரையாவது 'கண்டுக்கிட்டது' உண்டா? 'துணைவி' எல்லாம் உண்டா?
பதில்: தனிப்பட்ட/அந்தரங்க/சென்சிடிவ் விஷயங்களை கேட்கும் இம்மாதிரி கேள்விக்கு பதில் தருவதற்கில்லை.

அனானிG:
1. உங்களுக்கு நெருக்கமான பதிவர்கள் லிஸ்டில் உங்கள் நெருங்கிய நண்பர் மாயாவரத்தான் பெயர் காணோமே? ரெண்டு பேரும் டுக்கா விட்டு விட்டீர்களா?
பதில்: அப்படியில்லை. அவருக்கு என் மேல் ஜெயராமன் விஷயத்தில் சற்றே மனவருத்தம். அவ்வளவுதான்.


ராமகிருஷ்ணஹரி:
1. BJP LEADER ADVANI TODAY MET ACTOR RAJNI AND DISCUSSED FOR 30 MINUTES ABOUT FUTURE COURSE OF ACTION. WILL BJP,RAJINI AND J.LALITHA FORM AN ALLIANCE IN TAMIL NADU?
பதில்: அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பெர்சனலாக எனக்கு ரஜினி அரசியலுக்கு வருவார் எனத் தோன்றவில்லை. 1972-ல் எம்.ஜி.ஆர், 1982-ல் என்.டி.ஆர். ஆகியோர் சரியான சமயத்தில் சரியான முடிவெடுத்து வந்தனர். வெற்றி பெற்றனர். அதே போல ரஜினி 1996-ல் வந்திருக்க வேண்டும். வாய்ப்பை தவறவிட்டார். இப்போது புலி வருது கதைதான். வந்தாலும் ரொம்ப ரியேக்சன் இருக்காது.

2. WHAT WILL HAPPEN TO TAMIL NADU GOVT IF SRILANKA REFUSES TO END THE WAR IN SRILANKA (EVEN AFTER THE REQUEST OF CENTRAL GOVT)?
பதில்: மத்திய அரசு சீரியசாக போர் நிறுத்தத்தை கோருவதாகத் தெரியவில்லை. இந்தியாவுக்கு இலங்கை அரசிடம் செல்வாக்கு உண்டு. சீரியசாகக் கேட்டால் நடக்கலாம்.

3. IT IS TOLD DMK LEADER IS VERY MUCH WORRIED ABOUT THE ACTION OF SOME OF HIS CLOSE ASSOCIATES IN CONNECTION WITH LIBERATION TIGERS SUPPORT. IS IT TRUE?
பதில்: பாவம் கலைஞர் எதற்க்த்தான் கவலைப்படுவார், எத்தனை விஷயங்களுக்காக மனம் நோவார்?

4. IT IS LEARNT THAT SOME OF THE CONGRESS LEADRS AND MLAS ARE TRYING FOR AN ALLIANCE WITH ADMK? WILL IT BE POSSIBLE?
பதில்: இந்தத் தேர்தலில் கஷ்டம் என நினைக்கிறேன். சோனியாவை ஜெயலலிதா அந்தளவுக்கு வசை பாடியுள்ளார்.

5. WHICH IS BETTER ALLAINCE HAVING BRIGHT CHANCE OF WINNING AND FOR THE WELFARE OF TAMIL NADU AT PRESENT
1. SET1:ADMK+MDMK+PMK, ADMK+BJP+MDMK+RAJINI, ADMK+PMK+CONGRESS, ADMK+CPI+CPIM+MDMK
2. SET 2: DMK+PMK+CONGRESS, DMK+CONGRESS+VIJAYKANTH, DMK+BJP+RAJINI,
DMK+CPI+CPM+BMK+CONGRESS
3. SET 3: VIJAY KANTH+RAJINI+S.KUMAR+CPI+CPM
4. SET 4: MDMK+CPI+CPM+PMK+OTHERS

பதில்: ADMK+BJP+MDMK+RAJINI

புரட்சித் தமிழன்:
1. அமெரிக்காவின் புதிய அதிபர் ஒபாமாவுக்கு ஜாதகப் படி 1-03-2009-to 12/2010 வரை சிக்கலாமே?
பதில்: ஒபாமாவுக்கு சிக்கல் வருவது இருக்கட்டும். ஒபாமாவால் அமெரிக்காவுக்கு சிக்கல் வராதிருந்தால் சரிதான். டெமாக்ரடிக் கட்சியினர் கீழ் அமெரிக்கர்கள் அதிகம் சோபிக்கவில்லை என்பதை நான் ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளேன். எனது நிலை அப்படியேதான் உள்ளது.

2. அமெரிக்காவில் துப்பாக்கி வியாபாரம் படு சூடாய் இருக்காமே? இன மோதலுக்குக்கான அறிகுறியா?
பதில்: துப்பாக்கி வியாபாரம் அமெரிக்காவில் எப்போதுமே சூடாகத்தான் இருக்கும்.

3. பிரபல கேரள ஜோதிடர் கணிப்புப்படி, அத்வானிக்கு கிரக நிலை சரியில்லையாம்,காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்குமாம். கிரகங்கள்தான் எதிர்காலத்தை முடிவு செய்கின்றன நம்புகிறிர்களா?
பதில்: இல்லை. இது பற்றி எனது பதிவு இங்கே.

4. சட்டக் கல்லுரி மோதலில் தாங்கள் சொல்லிய வகுப்பினருக்கு தொடர்பில்லை என்பது உண்மையா?
பதில்: எந்த வகுப்பினரையும் நான் குறிப்பிட்டு சொன்னதாக நினைவில்லையே.

5. வழக்கம் போல் இதுவும் மக்களின் கவனத்தை திசை திருப்பும் செயலா?
பதில்: அப்படி திசை திரும்பினால் அதை வேண்டாம் கூறுவார் யார்?

அனானி (16.11.2008 மாலை 06.36-க்கு கேட்டவர்)
1. எமர்ஜென்சி வருமா?
பதில்: 1977-ல் கொண்டுவரப்பட்ட அரசியல் நிர்ணயச் சட்ட மாற்றங்களால் எமெர்ஜென்சியை சுலபமாக கொண்டு வர இயலாது.


நக்கீரன் பாண்டியன்:
1. சென்னையில் நடிகர் விஜய் தாய் தந்தையருடன் உண்ணாவிரதம். அடுத்த நடிகர் அரசியலுக்கா? அதற்கான வெள்ளோட்டமா?
பதில்: அப்படித்தான் தோன்றுகிறது. ஏமாளி மக்கள் இருக்கும்வரை இம்மாதிரி எல்லோருமே அரசியலுக்கு வர முயற்சிப்பது தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்.

2. நடிகர் ரஜினிக்கு எம்.பி பதவி கொடுத்து அரசியலுக்கு இழுக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன பார்த்தீர்களா?
பதில்: தமிழகத்தை பொருத்தவரை தேசீய கட்சிகள் சொந்தக் காலில் நிற்பது கடினம்தான். ஆனால் அதற்கு முயற்சி கூட செய்யாதிருந்தால் எப்படி? இப்போது பாஜக வையே எடுத்து கொள்ளுங்கள். அவர்களுடன் கூட்டணி வைக்க யாருமே தயாராக இல்லை. ஆகவே அவர்களுக்கு கிடைத்தவருடன் கூட்டு தேடும் நிலைமை. பாவம்.

3. இங்கே இவ்வளவு பரபரப்பில் -நடிகர் விஜய்காந்த் அமராவாதி அணையில் மரியாதை செய்ய?
பதில்: கேள்வியின் காண்டக்ஸ்ட் புரியவில்லை. என்ன செய்தார் அங்கு விஜயகாந்த்?

4. இலங்கையில் போர் இறுதிக்கட்டம் எனும் செய்தி உண்மையா?
பதில்: அங்கிருப்பது யுத்தச் சூழ்நிலை. அதில் இரு தரப்பினருமே பிரசாரத்தில் ஈடுபடுவர். அங்கு கிடைப்பது செய்தி அல்ல, பிரசாரம்தான். ஆகவே, இலங்கை அரசானாலும் சரி புலிகளானாலும் சரி அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்க இயலாது. உண்மை எங்கேயோ நடுவில் உள்ளது. அல்லது அவர்கள் இருவரில் ஒருவர் கூறியது முழு உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் நமக்கு அது நிச்சயமாக்த் தெரியாது, என சோ கூறியதை விட நான் என்ன அதிகமாகக் கூறப் போகிறேன்.

5. சீனா மீண்டும் அருண்சாலப்பிரதேசப் பகுதியை சொந்தம் கொண்டாட முயலுகிறதே?
பதில்: கேள்வியே தவறு. எப்போது அது சொந்தம் கொண்டாடுவதை நிறுத்தியது?

6. மீண்டும் பா.ம.க -தி.மு.க வின் அணியில் அதனால் சட்டக்கல்லூரி மாணவர் மோதலில் அமைதி காக்கிறதா?
பதில்: அதிமுகவிடமிருந்து சரியான சமிஞை வராத நிலையில் மருத்துவர் என்ன செய்ய இயலும்?

7. ஹெல்மெல்ட் கட்டாயச் சட்டம் அமுல்படுத்தப்படுகிறதா?
பதில்: நான் டூ வீலர் பாவிக்காததால் எனக்கு சரியாகத் தெரியவில்லை.

8. புகை புடிக்கும் தடைச் சட்டம் எந்த நிலையில் உள்ளது?
பதில்: போலிசாருக்கு மாதக் கடைசியில் இன்னொரு வருமானத்துக்கான சோர்ஸ்.

9. பணவீக்கம் குறைந்ததாய் அரசின் அறிக்கை கூறுகிறது ஆனால் விலைவாசிகள் உச்சத்தில். இது என்ன கணக்கு?
பதில்: விலைவாசி உயர்ந்தது உயர்ந்ததுதான். என்ன, அது உயரும் வேகம் மாறுபடுகிறது. கணித முறையில் கூற வேண்டுமானால், dy/dx அப்படியே உள்ளது. d²y/dx² மட்டும் ஏறுகிறது/குறைகிறது.

10. மின்வெட்டு->இலங்கைத் தமிழர்->மாணவர் மோதல்-> அடுத்து?
பதில்: மாநில சட்டசபைக்கு இடை தேர்தல்?

அனானி (18.11.2008 காலை 09.13-க்கு கேட்டவர்):
அ. காலையும் மாலையும் இணையும் சந்தியா காலத்தில் உணவருந்தக் கூடாது ஏன்?
பதில்: கையெழுத்து மறையும் நேரம் எனக் கூறுவார்கள். அப்போது சாப்பிட்டால் இரவு தூங்கப் போகும் முன்னாலேயே இன்னொரு முறை பசியெடுக்கலாம். அல்லது, பூச்சி ஏதாவது ஆகாரத்தில் விழலாம் என்பதற்காகவே இவ்வாறு கூறியுள்ளனர் என நினைக்கிறேன்.

ஆ. தாமரை இலையில் மட்டும் உணவை பின்பிறத்தில் வைத்து சாப்பிடலாம் ஏன்?
பதில்: முன்பக்கத்தில் தண்ணீர் சரியாக நிற்காது. அதே போல ரசம் குழம்பு ஆகியவையும் நிற்காது. ஆகவேதான் இலைக்கு பின்னால் வைத்து சாப்பிடுகிறார்கள் என நினைக்கிறேன்.

இ. சேர்ந்து சாப்பிடும் போது ஒருவருக்கொருவர் தொட்டுக்க்கொள்ளக்கூடாது ஏன்?
பதில்: சாப்பாடு என்பது தனி மனிதனின் அந்தரங்க வேலைகளில் ஒன்று. இன்னொருவரை தொடுவதை எச்சில்படுத்துவது எனக் கூறுவார்கள்.

ஈ. பாயசம்,வடைகளை தெய்வங்களுக்கு படைத்துவிட்டு சாப்பிடவேண்டும் ஏன்?
பதில்: பாயசம் வடை மட்டுமே, எதையுமே தெய்வத்துக்கு படைத்து விட்டுத்தான் உன்ணும் பழக்கமுள்ளவர்கள் உள்ளனர். எதற்கும் இக்கேள்விகளை இந்த வலைப்பூவிலும் கேட்டு பாருங்கள், நல்ல பதில் கிடைக்கும் என நினைக்கிறேன்

எம் கண்ணன்:
1. ஸ்டாலினுக்கு என்னதான் உபாதை ? எந்த பத்திரிக்கையிலும் இது பற்றிய அதிகவிபரங்கள் வெளிவருவதில்லையே? ஏன்? (அடிக்கடி வெளிநாடு சென்று மருத்துவம் செய்து கொள்வதால் இந்தக் கேள்வி)
பதில்: அவர் உடல் உபாதை அவருக்கு. அதைப் பற்றி கேட்பது நாகரிகமல்ல.

2. ஸ்டாலினின் இளமைக்குக் காரணம்? உணவு, உடற்பயிற்சி மட்டுமே காரணமா இல்லை அவரும் தந்தையைப் போன்று யோகா பயில்கிறாரா?
பதில்: இந்த வயதிலும் சுறுசுறுப்பாகச் செயல் படுகிறார். இளமை சிந்தனைகளுடன் இருக்கிறார்.

3. சமீப வருடங்களில் பெண்கள் அதிகம் கலப்பு மணம் புரிவது / துணிவது எதனால் ? ரிபெல்லியன் காரணமா? இல்லை அதிகம் பேர் தற்போது ஹாஸ்டலில் தங்கி படிப்பது/வேலை பார்ப்பது/ பெற்றவர்களிடமிருந்து வேறு ஊரில் வாழ்வது (வேலைக்காக) கொடுக்கும் சுதந்திரமா? இல்லை இதற்கு ஏதேனும் உளவியல் ரீதியான காரணம் உண்டா?
பதில்: முக்கியமானக் காரணம் அவர்களது பொருளாதார சுதந்திரம்.

4. சென்னை பதிவர் சந்திப்புகள் ஏன் கடற்கரை காந்தி சிலைக்கருகே மட்டும் நடத்தப்படுகின்றன? ஏன் நகரின் மற்ற மத்தியப் பகுதிகளான கோடம்பாக்கத்திலோ சைதாப்பேட்டையிலோ நடத்தப்படுவதில்லை?
பதில்: முதலில் எல்லாம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன்னில் நடந்தது. பிறகு தி.நகர் நடேசன் பூங்கா. இப்போது காந்தி சிலைக்கு பின்னால். ஒரு முறை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சிடி செண்டரிலும் நடந்தது. கடற்கரை காந்தி சிலை என்றால் எந்த ஆட்டோக்காரனும் கொண்டு விட்டு விடுவான். அதுவும் காரணமே.

5. சென்னையிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும், அரசியலில் அன்றாடங்காய்ச்சியாய் இருந்து பின்னர் ஏதோ ஒரு கட்சிப்பொறுப்பிலும் பின்னர் கல்வித்தந்தையாகி பல ஏக்கர்களை வளைத்தும் கட்டப்பட்டுள்ள கல்லூரிகளின் (நன்றி: குமுதம் - அன்று- இன்று) தரம் எப்படி? எந்த கல்லூரி பெஸ்ட்? எந்தக் கல்லூரி டுபாக்கூர்?
பதில்: இது சம்பந்தமாக எனக்கு தனிப்பட்ட விஷயம் எதுவும் தெரியாது.

6. விவேக் பல படங்களிலும் கறுப்புக் கண்ணாடி அணிந்தே வருகிறாரே? என்ன காரணம்?
பதில்: அப்படியா, நான் கவனிக்கவில்லையே. ஏதாவது படத்தில் அம்மாதிரி கண்ணாடி போட்டு நடித்து படம் வெற்றி பெற்றிருக்கலாம். அதையே செண்டிமெண்டாக அவரும் தயாரிப்பாளர்கள் பிடித்து கொண்டிருக்கலாம்.

7. சுஜாதாவுக்கே ஏற்பட்ட இந்த சந்தேகத்திற்கு உங்களுக்கு விடை தெரியுமா? (காலையில் எழும் போது ஆண்களின் தொப்புளின் பஞ்சு ஏன்?)
பதில்: பஞ்சு மனித உடல்களுக்கே பொது என்றுதான் நினைக்கிறேன். இதில் ஆணென்ன பெண்ணென்ன?

8. சுமார் 20 வருடங்களாக விகடன் கட்டுரைகளில் அவர்களது மாணவ/நிருபர்கள் எழுதும்போது - பன்மையில் எழுதி வந்தனர் - நாம் , சென்றோம், கவனித்தோம், கேட்டோம் - என. புது சைஸ் விகடனில் எல்லாம் ஒருமையில் -தான் - என தன்னை முன்னிலைப் படுத்தி எழுதப்படுகிறதே (நான், வந்தேன், சென்றேன்..)? நான் எனவும் நிருபர் / புகைப்படக்காரரின் பெயர் மற்றும் செய்கைகளும் கட்டுரையில் இடம் பெறுகின்றன. என்ன காரணமாக இருக்கும்?
பதில்: தன்னிலை ஒருமையில் எழுதுவதை எப்போதுமே கண்டித்து வந்துள்ளனர். முக்கியமாக பள்ளிக் கட்டுரைகளில். என் தந்தை இந்து நிருபராக இருந்தபோது ரிப்போர்ட் அளிப்பவரின் பெயரைப் போடக் கூடாது. கட்டுரையில் தன்னைக் குறிக்குக்போது கூட “உங்கள் நிருபர் அவரை இது பற்றி கேட்டபோது” என்ற ரேஞ்சில் எழுதுவார்கள். இப்போ காலம் மாறிப்போச்சு. அவ்வளவுதான்.

குப்புக்குட்டி:
1. Do you accept Modi govt as transparent govt? What about Nitesh Kumar's Govt?
பதில்: அதில் என்ன சந்தேகம்?

அனானி (18.11.2008 இரவு 19.57-க்கு கேட்டவர்):
1. இப்போ உள்ள ரைட் டு இன்பர்மெஷன் ஆக்ட் பல உண்மைகளை வெளிப்படை ஆக்குகிறதா?
பதில்: ஓரளவுக்கு ஆக்குகிறது. அதற்காக நடிகை ஜலஜாஸ்ரீயை யார் வைத்திருக்கிறார்கள் என்று செந்தில்தனமாக கேள்வி கேட்டால் கவுண்டமணி தரும் உதைக்கு ரேஞ்சாகா ஏதாவது பெற வேண்டியதுதான்.

புரட்சித் தமிழன்:
புரட்சி நடிகர் M.G.R திரையுலக வாழ்வில்:
1. பெற்ற உச்சம் எதில்

பதில்: வசூல் ராஜா என்ற பெயர். இப்போது கூட அவரது படங்களை போட்டால் ஹவுஸ் ஃபுல் ஆகிறது, மற்ற எந்த நடிகருக்கும் அதை சொல்ல இயலாது.

2. பெரிய தோல்வி
பதில்: வசூலில் எதுவும் தோல்வியுற்றதாகத் தெரியவில்லை. அதே சமயம் நல்ல சினிமா என பார்த்தால் அவரது படங்கள் எல்லாமே பி மற்றும் சி செண்டர்காரர்களுக்குத்தான் பிடிக்கும். பேசப்படும் அளவுக்கு படங்கள் இருக்காது.
3. அவரால் வாழ்ந்தவரில் முக்கியமானவர்
பதில்: ஜெயலலிதா
4. அவரால் வீழ்ந்தவரில் முக்கியமானவர்
பதில்: கலைஞர், அவரும் விழவில்லை, தேர்தலில் எம்.ஜி.ஆரிடம் மோசமான தோல்வியை பெற்று வீழ்ந்தார்.
5. திருப்பத்தை ஏற்படுத்திய படம்
படம்: நாடோடி மன்னன்

6. நீங்கள் விரும்பி பார்த்த படம்
பதில்: படகோட்டி (பாடல்களுக்காக) புதியபூமி (இன்னொரு காரணத்துக்காக)
7. பிடிக்காத அவரது படம்
பதில்: அப்படி என்று எதுவுமே இல்லை, ஏனெனினில் அவர் படங்கள எதற்கும் நான் எதிர்பார்ப்புகளுடன் சென்றதில்லை.
8. பெரும் வெற்றிபெற்ற படம்
படம்: உலகம் சுற்றும் வாலிபன்
9. பெரும் தோல்விப் பட்ம்
பதில்: அப்படிக் கூறும் அளவுக்கு எனக்குத் தெரிந்து ஒரு படமும் இல்லை.
10. திரையுலகில் ஆட்சி செய்த மொத்த காலம்.
பதில்: 1958-ல் நாடோடி மன்னனில் அவரது ஆட்சி உண்மையாக ஆரம்பித்தது. அது அவர் 1977-ல் மீனவ நண்பன் எடுக்கும்வரை இருந்தது. பிரபலத்தின் உச்சியில் அவர் அரசியலில் முழு பிரவேசம் செய்தார். ஆக 20 ஆண்டுகள் எனக் கூறலாம்.

ஸ்ரீராம்:
1. காலம் இவ்வளவு மாறிய பிறகும் அந்த பிராமண எதிர்ப்பை விடாமல் இருப்பது மனவேதனையை தரவில்லையா?
பதில்: இல்லை. ஏன் தர வேண்டும்?

2. போன தலைமுறையினர் செய்ததாய் சொல்லப்படும் ஒரு சில நல்லது அல்லாத செயல்களுக்கு 2வது, 3வது தலைமூறையை துவஸ்தம் பண்ணுவது நியாயமா?
பதில்: செய்ததாகக் கூறப்படுவது என்பதுதான் முக்கியம். நியாயம் இல்லைதான். ஆனால் ஏன் அதற்காக மனம் வருந்த வேண்டும்? போடா ஜாட்டான் என்று போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதானே.

3. பிராமண (ஆசிரியர் ,மருத்துவர் ,வக்கீல்,ஆடிட்டர்,முதலாளி......)வேண்டும், ஆனாலும் எதிர்ப்பை காட்டுவேன் இது சரியா?
பதில்: இது சரியா என்று ஏன் பார்க்க வேண்டும்? அது வேறு, இது வேறு.

4. ஒடுக்கப் பட்டவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற கொள்கைக்காக ஒரு முன்னேறிய அறிவுசால் இனத்தையே ஒளித்து கட்ட நினைக்கிறார்களே?
பதில்: என்னதான் தலைகீழாக தண்ணீர் குடித்தாலும் பார்ப்பனர்கள் முன்னேறுவதை யாராலும் தடுக்க இயலாது.

5. இப்படி இவர்களுக்கு தவறுதலாய் போதிக்கும் பல தலைவர்களின் அம்மா, மனைவி, மருமகள், பேத்தியின் கணவன் பிராமண சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பது புரியவில்லையே? இதை சரி செய்வது எப்படி?
பதில்: அவர்களை சரி செய்வது நம் வேலை அல்ல. நமக்கு நேரம் போதவில்லை, வேறு உருப்படியான வேலைகளை கவனிக்க.


அனானி (19.11.2008 இரவு 08.19-க்கு கேட்டவர்):
1. இன்று இறைவனடி சேர்ந்த நடிகர் நம்பியார் சுவாமியின் கலைப்பணி/ஆன்மிகப் பணி பற்றிய செய்திகள் விரிவாய் சொல்லவும்?
பதில்: ஒரு சகாப்தம் முடிந்தது. மர்மயோகி படத்தில் அவரை காமெடியனாகப் பார்த்தேன். சிவந்த மண்ணில் கொடூர வில்லனாக. இந்த சோக நினைவுகளுக்கு நடுவில் எஸ்.வி.சேகர் நாடகம் ஒன்றில் (எல்லோரும் வாங்க) வரும் ஒரு சிறு சீனை இங்கே கூறுவேன். சேகரின் காதலியின் அம்மாவுக்கு அவரது அண்ணனின் கடிதம் இவ்வாறு வரும்: “அன்புள்ள மகாலட்சுமி, இங்கு தம்பி நம்பியார் உள்பட எல்லோரும் நலம். இப்பவும் எனது மகன் மனோஹர் உன் மகளை பெண் பார்க்க நாளை மறு நாள் வருவான். இப்படிக்கு அப்பா வீரப்பா சொற்படி, உன் அண்ணன் அசோகன்” இக்கடிதத்தை அம்மாக்காரி படிக்க பக்கத்தில் நிற்கும் சேகரின் முகபாவங்கள் அபாரமாக இருக்கும். நம்பியார்கள் எல்லாம் மரிப்பதில்லை. மிமிக்ரி கலைஞர்கள் உபயத்தில் அவரது குரலை இன்னும் கேட்டு கொண்டே இருக்கலாம்.

2. அஞ்சலி செலுத்த வந்த புன்னகை அரசிக்கு( கே.ஆர்.விஜயா) என்னாச்சு? உடல் நலக் குறைவா?
பதில்: எனக்கும் சொரேல் என்றது. காரே மூரே என இளைத்துள்ளார். வயது நன்றாகத் தெரிகிறது. மேக்கப் இல்லாமல் பார்ப்பதால் இருக்குமோ?

3. அவரது 90 ஆண்டு வயதில் எல்லாக் கடமைகளையும் முடித்து உடல் நலக் குறைவின் காரணமாய் (Heart attack) இயற்கை எய்திவிட்டார். சினிமாவில் நடிப்பதை நிறுத்திய பிறகும் ,அஞ்சலி செலுத்த வருகிறவர்கள் அழுது ஆர்பாட்டம் (குறிப்பாக நடிகை மனோரமா ஆச்சி) செய்து கலைஉலகத்துக்கு பெரிய இழப்பு என உபசார வார்த்தை சொல்வது பற்றி -டோண்டு சாரின் கமெண்ட் என்ன?
பதில்: என்ன இப்படி கூறிவிட்டீர்கள்? அவருடன் நேரில் பழக்கமில்லாத நானே வருத்தப்படும்போது ஆச்சி போன்றவர்களது எதிர்வினைகளை சந்தேகிக்கலாகாது.

4. அரசியல் தலைவர் ஒருவர் மற்றொருவர் மீது போட்ட மானநஷ்ட வழக்கில் யாருக்காவது பணம் கிடைத்துள்ளாதா?
பதில்: எனக்கு தெரிந்து இலை. எம்.ஜி.ஆருக்கு அவரது மனைவி ஜானகியே விஷம் கொடுத்ததாகவும் யாரோ கூறியதாக ஞாபகம். கவர்னரே ஈவ் டீஸிங் செய்ததாகவும் கூறப்பட்டது. கவுண்டமணி சொல்வது போல அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா.

5. மீண்டும் சோ/மோடி/டோண்டு எதிர்ப்பாளர்கள் பார்ப்பன துவேசத்தை,புலிகள் ஆதரவு/எதிர்ப்பு போர்வையில் தொடங்கிவிட்டார்களே?
பதில்: பார்ப்பன வெறுப்பு எப்போது விடப்பட்டது, மீண்டும் தொடங்கி விட்டார்கள் என்று சொல்ல?

தென்காசி:
புகழ்பெற்ற திரைப்பட பாடல் வரிகளுக்கு உங்கள் ஸ்டெயிலில் விளக்கம் கொடுக்கவும்.
அ. தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம், அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
பதில்: சில சமயம் தெளிவா தெரிஞ்சுதுன்னா சே இவ்வளவுதானா விஷயம்னு தோணும். முக்கியமா மேஜிக்கிலே அது நடக்கும். ஆகவே வெற்றி பெற விழையும் வித்தைக்காரர் கண்கட்டி வித்தையிலும் தேர்ந்தவராக இருக்க வேண்டும்.

ஆ. கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை, காத்திருந்தால் பெண் கனிவதில்லை
பதில்: ஆம், ரொம்ப காத்திருந்தால் ஃபிகரை வேறு எவனாவது தள்ளிக் கொண்டு போய் விடுவானுங்கள். ஆகவே சட்டுபுட்டென்று ஃபிகரிடம் காதலை சொல்லிவிடு. கிடைச்சால் சரி, இல்லையா அடுத்த ஃபிகர்னு போயிட்டிருக்கணும்.

இ. ஒவ்வொரு உறவாய் இழந்த பின்னும், வலியுடன் வாழ்க்கையை தொடர்ந்து வந்தான், கடைசி உறவையும் இழந்த பின்னே, கல்லைப் போலே கிடந்து விட்டான் ........
பதில்: அப்பவும் கல்லு போன்ற நிலையுடன் இருந்தானா? மனுஷனா இரும்பா?

ஈ. காசை எடுத்து நீட்டு, கழுதை பாடும் பாட்டு, ஆசை வார்த்தை காட்டு, உனக்குங்கூட ஓட்டு
பதில்: ஆகவே, சிரிப்பு வருது, சிரிப்பு வருது, சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது.

உ. மேடை ஏறிப் பேசும்போது ஆறு போல பேச்சு, கீழே இறங்கிப் போகும்போது, சொன்னதெல்லாம் போச்சு
பதில்: சாதி மற்றும் மூட நம்பிக்கை ஒழிப்பு மகாநாட்டில் வீர உரையாற்றிய தலைவர், சீக்கிரம் வீட்டுக்கு விரைந்தார். தனது மகளுடைய ஜாதகத்தை மாப்பிள்ளை தேடும் பொருட்டு தனது சாதி சங்கத்தில் பதிய வைக்க மனைவி சமேதராக நல்ல நேரம், சகுனம் பார்த்து புறப்பட்டார்.

ஊ. செப்பு கொஞ்சம் சேர்க்கலன்னா தங்கம் ஆபரணமாகாது, தப்பு கொஞ்சம் பண்ணலன்னா சங்கு கனியாது
பதில்: அதுக்காக தப்பை ரொம்பவும் பண்ணா சங்கை அறுத்துடுவானுங்களே. அவ்வ்வ்வ்வ்.

எ. கொடுத்தத திருப்பி நான் கேட்க கடனா கொடுக்கலையே, உனக்குள்ளதானே நான் இருக்கேன், உனக்கது புரியலையே
பதில்: பம்பாய் வாடகை கட்டுப்பாட்டு சட்டத்தை வைத்து காமெடி பண்ணல்லயே?

ஏ. கொஞ்சம் நாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா
பதில்: அது வரைக்கும் பிரச்சினையை சமாளிக்க அதை கையில் எடுத்து கொள்ளவும்.

ஐ. நீ நடக்கும் புல்வெளியில், பனித்துளிகள் துடைத்து வைப்பேன், நீ பேசும் தாய் மொழியில், வல்லினங்கள் களைந்து வைப்பேன்
பதில்: அப்போ உன் வேலையை எப்பப்பா கவனிப்பே? இதான் வேலைங்கறியா, கிழிஞ்சது கிருஷ்ணகிரி.

ஒ. ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை, இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை, பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்
பதில்: அதானே, கொன்னா பாவம், தின்னா போச்சு.

ஓ. சந்தோசம் , சந்தோசம் , வாழ்கையின் பாதி பலம், சந்தோசம் இல்லை என்றால் , மனிதர்க்கு எது பலம்
பதில்: சில சமயம் அடுத்தவரை சந்தோஷமுறச் செய்து பார்ப்பதிலே வரும் சந்தோஷம் எல்லாவற்றையும் விட அதிகம்.

ஓள. காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி, அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

பதில்: ஏன், ஏன் என்று கேள்விகளாக கேட்டு, பதில்களும் பெற்று கடைசியில் கேள்விகள் இல்லாமல் போகும்போது கேட்காத கேள்விக்கு பதிலாக வருவது ஒரு பிடி சாம்பலே.


நக்கீரன் பாண்டியன்:
1. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பொருளாதாரப்போட்டி, எல்லைத் தகராறு, நதிநீர் பங்கீட்டு தாவா இந்தியா சீனா தேசத்துக்கிடையே உள்ள ராஜீய உறவுகளில் உள்ள உரசல் பெரிய அளவு மோதலுக்கு வழிவைக்கும் எனும் அரசியல் பார்வையாளர்களின் இன்றையப் பத்திரிக்கை செய்தி பற்றிய தங்களின் கருத்து?
பதில்: இச்செய்தியை நான் பார்க்காவிட்டாலும், மேலே சொன்ன விஷயங்கள் எந்த இரு அண்டை நாடுகளுக்கிடையே நடந்தாலும் பெரிய அளவு மோதல்தான் விளைவு.

2. அதிமுக மீண்டும் 3 வது அணியை நோக்கியா?
பதில்: மூன்றாம் அணி தமிழகத்தில் அவருக்கு பொருந்தாது. ஏனெனில் இங்கு மூன்றாவது அணி என்றாலே திமுக மற்றும் அதிமுக இல்லாத அணிதான் என்ற நிலை. மத்தியில் பார்த்தாலும் மூன்றாம் அணிக்கு வாய்ப்பு மிகவும் குறைவு. வேண்டுமானால் ஜெயலலிதா எம்பி சீட்டுகளை அதிகமாக பெற்று மத்தியில் வரும் ஆட்சிக்கு ஆதரவு அளித்து மந்திரிசபையில் கூட்டணி வேண்டுமானால் வைத்து கொள்ளலாம். அது கூட இப்போதைய நிலையில் பி.ஜே.பியுடன் மட்டுமே சாத்தியம். ஏனெனில் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலை திமுகவுடனான கூட்டணியில்தான் இருந்து சந்திக்கும் என தற்போதைய நிலைகள் தெரிவிக்கின்றன.

3. ஜெ.யின் ஒரு கோடி கேட்டு வழக்கு?
பதில்: மதுரை சம்பவத்தைப் பற்றி கேள்வி கேட்ட நிருபரை “நீதாண்டா கொலைகாரன்” என்று பதில் கூறிய ஞாபகத்தில் கலைஞர் அவ்வாறு கூறிவிட்டார் என நினைக்கிறேன். அதை தான் கிண்டலுக்காகவே கூறியதாக வேறு பிறகு சொன்னார் என படித்தேனே. ஒரு கோடி ரூபாய் கிடைக்கிறதோ இல்லையோ ஒரு சில சங்கடங்கள் கலைஞருக்கு வரலாம்.

4. மின்சார சுடுகாட்டுப் பராமரிப்பு தனியார் வசம்? (build/operat/transfer)
பதில்: நல்ல ஐடியாவாகத்தானே இருக்கு?

5. டெல்லி யாருக்கு? இலவச திட்டங்கள் அறிவிப்பு ஒட்டுகளைபெற -பா.ஜ.வும் - இது நல்லதிற்கில்லயே?
பதில்: பாஜகவும் ஒரு அரசியல் கட்சிதானே. இலவசங்கள் தராமலேயே தேர்தலை வெற்றி பெறலாம் என வழி காண்பித்த மோடியை பின்பற்றவேண்டுமானாலும் அவர் அளவுக்கு எவன் நேர்மையாக இருந்து கஷ்டப்படுவதாம்?


விக்ரம்:
1) மான‌மிகு(!!) த‌மிழர் த‌லைவ‌ர்(!!) வீர‌ம‌ணியின் ச‌மீப‌த்திய‌ விடுத‌லையில் பார்ப்ப‌ன‌ர்க‌ளை கிழிகிழியென்று கிழித்துள்ள‌ன‌ர்!! க‌வ‌னித்தீர்க‌ளா? புலி ஜால்ரா போடாத‌தால் பார்ப்ப‌ன‌ர்க‌ள் தமிழ் எதிரிக‌ள் என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்ற‌ன‌ராம்!! உங்க‌ள் கருத்து இதைப்ப‌ற்றி?
பதில்: புலிகளின் சுயரூபத்தை தெரிந்தவர்கள் ஒன்று அமைதி காக்கின்றனர், பயத்தால் இல்லையெனில் தைரியமாக வெளியில் பேசுகின்றனர், சோ, ராம் போல. அவர்கள் பார்ப்பன ஜாதியில் பிறந்திருப்பது இதற்கு சற்றும் சம்பந்தமில்லாத விஷயம் என்பதை பகுத்தறிவு கொண்டவன் எவனுமே கூறிவிடுவான். இதில் விஷயத்தை பற்றி பேசாது பாப்பாந்தான் காரணம்னு குதிக்கறவங்களுக்கு பகுத்தறிவு சுத்தமா லேது.

2) 'மான‌மிகு', 'த‌மிழர் த‌லைவ‌ர்' இந்த்த‌ப்ப‌ட்ட‌ங்க‌ள் யார் வீர‌ம‌ணிக்கு கொடுத்த‌து?. அத‌ற்கு அவ‌ர் த‌குதியான‌வ‌ரா? உங்க‌ள் கருத்து?
பதில்: தனிப்பட்ட முறையில் வீரமணி பழகுவதற்கு எளியவர் என கேள்விப்பட்டுள்ளேன். மற்றப்படி மானமுள்ள, தமிழர் தலைவர் என்பது பற்றியெல்லாம் வேறு கருத்து இல்லை. வீரமணிக்கும் வேறு கவலைகள் அதிகம் உண்டு. அவரது அறக்கட்டளை நடத்தும் கல்விநிறுவன வேலைகளின் கணக்கு வழக்குகளே அவருக்கு வேணது உள்ளன.

3) 'த‌மிழர் த‌லைவ‌ர்' வீர‌ம‌ணி!! 'த‌மிழின‌த் த‌லைவ‌ர்' க‌ருணாநிதி!! பின் யார்தான் த‌மிழ‌ருக்கு த‌லைவ‌ர்?!! 'மான‌மிகு' என்றால் என்ன‌ அர்த்த‌ம்?
பதில்: காமெடியெல்லாம் ஆராயக் கூடாது. அனுபவிக்கணும். எனக்கும் வேறு வேலைகள் வேணது உள்ளன. முக்கியமாக இந்த வாரம் வந்துள்ள கேள்வி பதில்களை முடிக்கும் வேலை வேறு மலையாக முன்னால் நிற்கிறது. இப்போதைக்கு ஜூட்.

4) பார்ப்ப‌ன‌ருக்கு என்று தாய்மொழி இல்லையாம்!! தாய்நாடு இல்லையாம்!!! த‌மிழ் நாட்டில் ஒட்டிக்கொண்டு த‌மிழை வைத்துதான் பொழைப்பு ந‌ட‌த்திக்கொண்டு உள்ளார்க‌ளாம்!!! உங்க‌ள் கருத்து?
பதில்: பார்ப்பனருக்கு எந்த கலாச்சார தாசில்தாரின் அனுமதியும் தேவையில்லை. போடா ஜாட்டான் என கூறிவிட்டு அவர்கள் தம் வேலையை பார்ப்பார்கள்.

5) வீர‌ம‌ணி போன்ற‌வ‌ர்க்கு ஏன் பிராம‌ண‌ர் மீது இத்த‌னை வெறுப்பு? ஏன் விடுத‌லையில் ம‌ற்ற‌ உய‌ர்சாதி துவேஷ‌ங்க‌ள் ப‌ற்றி பேசுவ‌தில்லை? ஏன் பிராம‌ண‌ரை ம‌ட்டும் குறி வைக்கின்ற‌ன‌ர்?
பதில்: நியாயமாக பேசுங்கள். திராவிட முகாமில் பார்பனர் அல்லாத மற்ற உயர்சாதியினரின் ஆதிக்கம்தானே. அவர்கள் எப்படி தங்களது ஜாதிக்கு விரோதமாகப் போவார்கள்? கீழ் வெண்மணியில் தலித்துகளை உயிருடன் எரித்தது ஒரு பார்ப்பனராக இருந்தால் ஆட்டம் போட்டிருக்கக் கூடிய பெரியாரே அது ஒரு நாயுடு என்றவுடன் அடக்கி வாசிக்கவில்லையா?

6) பார்ப்ப‌ன‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள் அல்ல‌ என்று சொல்ல‌ வீர‌ம‌ணி போன்றோருக்கு என்ன‌ த‌குதி? அவ‌ர்க‌ள் என்ன‌ த‌மிழின் உரிமையாள‌ர்க‌ளா அல்ல‌து த‌மிழ் அவ‌ர்க‌ள் முப்பாட்ட‌ன் வீட்டு சொத்தா? இப்ப‌டிச்சொல்லும் இவ‌ர்க‌ள் எப்ப‌டி ஒரு த‌மிழ‌ர் அல்லாத‌ (க‌ன்ன‌ட‌ர்) பெரியாரை ஏற்றுக்கொண்டார்க‌ள்?
பதில்: இக்கேள்விக்கு பெரியாரே ஒரு முறை பதில் கூறிவிட்டாரே, தமிழனுக்கு தலைமைப் பதவி பெறும் தகுதி இல்லையென்று.

கிருஷ்ணன்:
1) Give us a list of books (both Tamil and English) you enjoyed reading this year.
பதில்: அமரர் வி.எஸ். திருமலை எழுதிய “கிருஷ்ணன் பொம்மை” என்னும் சிறுகதை தொகுதி எதேச்சையாகக் கிடைத்தது. படித்ததும் பிரமித்து போனேன். அதில் உள்ள பல கதைகளை வெவ்வேறு தருணங்களில் பத்திரிகை கதைகளாக படித்துள்ளேன். அப்போதே அவை என் மனதைக் கவர்ந்தன. இப்போது அவை அனைத்தும் இவர் எழுதியதே என்று அறிந்ததும், அடடா இது மட்டும் முன்னாலேயே தெரிந்திருந்தால் அவரை நேரில் பாராட்டியிருக்கலாமே எனத் தோன்றியது. அவர் எனது மாமாவின் மாப்பிள்ளை.

2) With just 41 days to go for 2008 to fade into history, what are your impressions of this year?
பதில்: இதுவரை நன்றாகவே போயிற்று. ஆனால் ஒன்று. இந்த ஆண்டு கணக்கெல்லாமே மனிதனாகவே உருவாக்கி கொண்டது. நேரம் என்பது அதை உணர்வதற்கு யாரேனும் இருந்தால்தான் பொருளுடையது. இதை ஐசக் அசிமோவ் தனது “கடைசி கேள்வி” என்னும் கதையில் கூறியிருப்பார்.

குப்புக்குட்டி:
a) மசால் தோசை junk food -லிஸ்டில் வருமா? anything fried/cooked in oil comes under this classification?
பதில்: இல்லை வராது. உளுந்து, அரிசி, சிறிது வெந்தயம் போட்டு அரைத்து புளிக்கச் செய்வதில் வரும் ஈஸ்ட் ஜீரண சக்தியை தூண்டுகிறது. அதில் நார்ச்சத்தும் உண்டு. நல்லெண்ணெய் போட்டு தோசை வார்த்தால் அதன் மணமே தனிதான். ஜங்க் உணவில் இருக்கும் அஜீனோ மோட்டோ சமாசாரங்கள் இதில் இல்லை.

b) மாடு பிடிக்கப் போனதுண்டா? ஜல்லிக்கட்டுக்கு
பதில்: இல்லை. இந்தக் கொடூரமான விளையாட்டை தொலைக்காட்சியில் பார்க்கக்கூட விரும்ப மாட்டேன்.

c) கோவை அண்ணபூர்ணாவில் காபி சாப்பிட்டு இருக்கிறீர்களா?
பதில்: சமீபத்தில் 1978-ல் அங்கு சில நாட்கள் தங்கியிருந்தபோது கௌரிசங்கர் என்னும் ஓட்டலில் சாப்பிட்டிருக்கிறேன். அன்னபூர்ணாவில் சாப்பிட்டதில்லை. ஏன் நன்றாக இருக்குமா?

d) காந்தி சிலைக்கு மாலை அணிவித்ததுண்டா? காந்தி ஜெயந்தி அன்று அவரை நினைப்பதுண்டா?
பதில்: இல்லை

e) கடலில் கால் நனைக்க துணை தேடுவது எதானால்? சுனாமி வந்து விடுமோ என்ற பயமா?
பதில்: கொட்டும் மழையில் குடையின்றி கடலலையில் காலை நனைக்க, உடல் முழுவதும் மழையில் நனைய அந்த அனுபவமே தனிதான். யாராவது வருகிறார்களா என கேட்டுவிட்டு கடலலைக்கு செல்வதுண்டு. யாம் பெற்ற இன்பம் வையகம் பெறட்டுமே என்ற நோக்கம்தான். இம்முறை பதிவர் மீட்டிங்கில் மீட்டிங் முடிந்தவுடன் சென்றிருக்கலாம்தான். ஆனால் நேரம் ஆகிவிட்டது. கடலிடம் பயமில்லாவிட்டாலும் திருடர்களிடம் பயம் அதிகமாகவே உண்டு. ஆகவே செல்லவில்லை. மற்றப்படி சுனாமி வந்தால் எல்லோருமே காலி. இதில் துணை கூட இருந்தால் என்ன பலன்?

f) முடிவெட்டிக் கொள்ளும் போது உங்களுக்கு தூக்கம் வருமா?
பதில்: சிலருக்கு வரும் என்பதைப் பார்த்திருக்கிறேன். எனக்கு வராது.

g) சகோதரி நிவேதிதா -ஐ சந்தித்த பிறகுதான் பாரதி பெண் விடுதலை பற்றி எழுத ஆரம்பித்தாராமே?
பதில்: பாரதி படத்தில் அவர் ஒரு வெள்ளைக்கார பெண்மணியுடன் பேசும்போது தன் மனைவி படிக்காத பெண் என்று பேச, அவர் கையில் குட்டு வாங்கினார் என்பதை பார்த்தேன். அது நிவேதிதாவா? கவனிக்கவில்லை.

h) நமக்கு வால் மட்டும் இருந்தா இப்ப மாதிரி பாண்ட் போட்டுக்க முடியுமா? பஞ்சக்கச்சம்தான் சரியா வரும்னு நினைகிறேன். உங்கள் கருத்து என்ன?
பதில்: வால் பையன் என் வீட்டிற்கு வந்தபோது பேண்ட் அணிந்துதானே வந்தார்?

i) English தான் என் உயிர், பிரெஞ்சுதான் என் மூச்சு என்ற கோஷ்டிகள் அவர்களிடம் இருக்கிறதா?
பதில்: ஆங்கிலத்தில் எனக்கு தெரிந்து இல்லை. ஆனால் பிரெஞ்சில் அதுவும் கனடாவில் உள்ள கியூபெக்கில் அமோகமாக உண்டு. இது பற்றி நான் “தாய்மொழி வெறியர்கள்” என்ற தலைப்பில் போட்ட இப்பதிவிலிருந்து: “நான் பார்த்த ஜெர்மானியர் முடிந்த வரைக்கும் தாங்களே ஆங்கிலம் பேசி என்னைப் போன்ற துபாஷிகளின் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட்டனர். அவர்களை துரோகிகள் என்று நான் பாதி விளையாட்டாகவும் பாதி வினையாகவும் கூறுவதுண்டு. அப்போதிலிருந்து இன்று வரை நான் செய்த ஜெர்மானிய துபாஷி வேலைகள் ஃபிரெஞ்சு துபாஷி வேலைகளுடன் ஒப்பிடும்போது அவ்வளவாக இல்லை என்றுதான் கூறவேண்டும்.

பிரெஞ்சுக்காரர்கள்? ஆங்கிலம் தெரிந்தாலும் அதில் பேச விரும்ப மாட்டார்கள். அவ்வளவு தாய்மொழிப் பற்று அவர்களுக்கு. அவர்களைத்தான் எனக்கு பிடிக்கும். என் போன்றவர்களுக்கு வேலை கிடைக்கிறதல்லவா? ஹி ஹி ஹி.

அவர்களது மொழிவெறிக்கு ஒரு உதாரணம் Gerge Pompidou என்பவர். அவர் ஃபிரான்ஸின் குடியரசுத் தலைவராக இருந்தபோது நடந்த விஷயம் இது. அப்போது இங்கிலாந்து ஐரோப்பிய பொதுச் சந்தைக்குள் நுழைய முயற்சி செய்து கொண்டிருந்தது. எல்லோரும் ஒத்து கொண்ட நிலையில் ஃபிரான்சு மட்டும் முட்டுக்கட்டை போட்டது.

அப்போது Pompidou சொன்னார். "இந்த ஆங்கிலேயர்கள் உள்ளே வந்தால், ஐரோப்பிய சந்தையின் பொது மொழியாக ஆங்கிலம் வந்து விடும். எனக்கு அது பிடிக்கவில்லை" என ஒரு குண்டைப் போட்டார். அச்சமயத்தில் சில ஃபிரெஞ்சுக்காரர்களுக்கே இது கொஞ்சம் ஓவராகப் பட்டது. ஒரு பத்திரிகையில் இவ்வாறு தலைப்பு குடுத்தார்கள். "Monsieur le Président, vous êtes chauviniste!!" (குடியரசுத் தலைவர் அவர்களே, நீங்கள் ஒரு வெறியர்). அதற்காகவெல்லாம் அவர் அசரவில்லை. உண்மையைத்தானே கூறுகிறார்கள் என்று விட்டுவிட்டார் போல.

எது எப்படியானாலும் பிரெஞ்சுக்காரர்களுடன் ஒப்பிடும்போது நாம் இந்த விஷயத்தில் சற்று பின்தங்கித்தான் இருக்கிறோம். எல்லா ஆங்கில வார்த்தைக்கும் தமிழ் பதங்களை காண்பதை பலர் கண்டிக்கிறார்கள். இந்த மனப்பான்மையை நாம் கண்டிக்க வேண்டும்.

உதாரணத்துக்கு கப்பல் சம்பந்தப்பட்ட கலைச் சொற்களையே எடுத்து கொள்வோம். பழந்தமிழர்கள் கடற்பயணங்களில் விரும்பி ஈடுபட்டவர்கள். கப்பல்களை கட்டி, கடலில் செலுத்தியவர்கள். நான் கூறுவது சோழர்கள் காலத்தை. கண்டிப்பாக கப்பலின் எல்லா பகுதிகளுக்கும் தமிழ்ப் பெயர் வைத்திருப்பார்கள். அவற்றை கண்டறிந்து இக்காலக் கப்பல்களுக்கு ஏற்ற மாதிரி கொடுக்க முடியாதா? உதாரணம் மாலுமி, மீகாமன், சுக்கான், நங்கூரம் போன்றவை.

அதைத்தான் ஃபிரெஞ்சுக்காரர்களும் செய்கிறார்கள். பல புதிய தொழில்நுட்ப ஆங்கில வார்த்தைகளை முதலில் அப்படியே எடுத்துக் கொள்கிறார்கள். பிறகு அவற்றுக்கேற்ற பிரெஞ்சு வார்த்தைகளை உற்பத்தி செய்கிறார்கள். நம்ம வைகைப்புயல் ஒரு படத்தில் சொன்னது போல இதுக்குன்னே ஒக்காந்து யோசிப்பாங்க போல.

உதாரணத்துக்கு:
Walkman --> Baladeur
Email --> Courriel
Spam --> Pourriel or Polluriel
Hardware --> Matériel
Software --> Logiciel

இந்த மாதிரி ஒக்காந்து யோசிக்கறதுக்குன்னே எனக்கு தெரிந்து இரண்டு அமைப்புகள் உள்ளன. அவை:

Académie Française,
L'enrichissement de la langue française (ELF)

நிஜமாகவே உக்காந்துதான் யோசிக்கிறாங்க. அவ்வப்போது பயங்கர சண்டையெல்லாம் ஏற்படும். அது வேறு கதை. ஆனால் ஒன்று யாராவது சரியான வார்த்தையை உபயோகிக்காவிட்டால் அவர்களுக்கு சங்குதாண்டி. அதே போல பெயர்ப்பலகை வைக்கும்போது ஃபிரெஞ்சில் இல்லையேன்றால் கையில் அகப்பட்டதை வெட்டி விடுவார்கள்”.

j) சட்டக் கல்லூரி முன்னால் அன்று நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் -
பதில்: அந்த இடத்தை விட்டு பைய நகர்ந்திருக்கலாம். அல்லது பதிவு போடும் நோக்கத்தில் நோட்ஸ் எடுத்திருக்கலாம். என்ன செய்திருப்பேன் என்ற்பதை சொல்லத் தெரியவில்லை.


அனானி (20.11.2008 மாலை 05.31-க்கு கேட்டவர)
1. will the world be destoyed-in 2012 as said by a boy (who came from mars)?
பதில்: இம்மாதிரி பல ஜோசிய அனுமானங்களை கேட்டாகி விட்டது. ஆளை விடுங்கள்.

2. already threats to obama is comming in news?( from extremists)
பதில்: அமெரிக்க அரசியல் வாழ்வில் இது சகஜம்.

3. what is the real reason for the downward trend in stock market?
பதில்: Because the upward trend was not growth. It was only an inflammation. It had to break.

4. 2.75 lak crores of money released by reserve bank .where it has gone?
பதில்: சுவிட்ஸர்லாந்து

5. what will happen to indian economy?
பதில்: பயப்படாமல் செயல்பட்டால் சமாளித்து விடலாம். நமக்கு இயற்கையாகவே சேமிக்கும் பழக்கம் உண்டு. ஆகவே பிரச்சினை அதிகம் இருக்கக் கூடாது.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/20/2008

அடியைப் பிடிடா பாரத பட்டா

நண்பர் சந்திரசேகரன் இன்று ஃபார்வேர்ட் செய்த மின்னஞ்சல் சுவாரசியமான விஷயத்தை சொல்லியது. அரசு செலவினங்களை பற்றிய விஷயங்களை அது கூறியது. இப்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க பலர் 1932-ல் அமெரிக்க ஜனாதிபதி ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் கையாண்ட புதிய ஏற்பாட்டை சிபாரிசு செய்கின்றனர். குறைந்த பட்சம் பொருளாதாரம் மீண்டும் தலையெடுக்கும் வரைக்குமாவது இதை கோருகின்றனர்.

ஆனால் கஷ்டம் என்னவென்றால் அரசு ஆரம்பிக்கும் புதிய திட்டங்களில் தற்காலிகம் என்று எதுவும் கிடையாது. அவற்றின் தேவை தீர்ந்த பிறகும் அவை பல ஆண்டுகள் நடைமுறையில்தான் இருக்கும். முக்கிய உதாரணம் பம்பாய் மற்றும் சென்னையில் இயற்றப்பட்ட வாடகை கட்டுப்பாட்டு சட்டமே. இதை முதலில் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் கொண்டு வந்தார்கள். இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பிறகு வாடகைகள் எக்குத் தப்பாக உயர்ந்ததால் இதை கொண்டு வருவதாக கூறினார்கள். ஆனால் அது இன்னமும் அப்படியே உள்ளது, என்ன நடந்ததென்றால், மாதுங்கா போன்ற இடங்களில் வீட்டு வாடகை முப்பது ரூபாய் மாதம் என்ற அளவில். யாருக்கும் புதிய வீடுகள் கட்டும் எண்ணமே வரவில்லை. கட்டுவானேன், வாடகைக்கு விட்டு அவதிப்படுவானேன் என்றெல்லாம் யோசித்து யாரும் அக்கறை காட்டவில்லை. இந்த சுண்டைக்காய் வாடகையில் மராமத்தாவது மயிராவது. இப்போது பம்பாயில் இடியும் நிலையில் உள்ள எல்லா வீடுகளிலும் இம்மாதிரி பழைய குடித்தனக்காரர்களே உள்ளனர். வீடு கட்டியவர்களும் தாங்கள் வசிக்க முடியாமல் போனால் பூட்டி வைப்பதையே விரும்பினர்.

இருந்தாலும் நாமெல்லாம் கற்று கொள்வதாக இல்லை என்று வருந்துகிறார் Christopher Lingle அவருடைய "கட்டி வராத பொய்யை மீண்டும் அரங்கேற்றல்" என்னும் கட்டுரையில். Christopher Lingle என்ன கூறுகிறார் என்பதை முதலில் பார்ப்போம். டோண்டு ராகவனும் முரளி மனோஹரும் பிறகு வருவது இருக்கவே இருக்கிறது.


பற்றாக்குறை நிதி நிலைமையை அரசின் செலவினங்கள் மூலம் சமாளிப்பது என்பது யதார்த்தத்திலும் சரி, சரித்திர பூர்வமாகவும் சரி, நிரூபிக்க முடியாத ஒரு கோட்பாடு.

இக்கொள்கையை கொன்று சமாதி கட்டிய பிறகும் மீண்டும் கிளர்ந்தெழுகிறது, ட்ராக்குலா போல. அது எழுபதுகளில் உருவாக்கிய பொருளாதார மந்த நிலையை சம்பந்தப்பட்டவர்கள் மறந்தனரோ? ஆம் என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில், சமீபத்தில் நடந்து முடிந்த G-20 சந்திப்பில் அரசு செலவு செய்வதன் மூலம் வேலைகளை உருவாக்க முடியும் என்ற முடிவுக்கு சம்பந்தப்பட்டவர்கள் வந்ததாகத் தெரிகிறது.

எத்தனை முறை தன்ணீரில் முக்கினாலும் மேலே பாய்ந்து வரும் கார்க்கை போன்று இக்கொள்கை வந்த வண்ணம் இருக்கிறது. எண்பதுகளின் முடிவில் ஜப்பானியர் இதை செய்து பார்த்தனர். அரசு கடன் அதிகரித்ததுதான் மிச்சம். பொருளாதார வீழ்ச்சியை என்னவோ தடுக்க இயலவில்லை.

இன்னும் சமீப காலத்தில் (அமெரிக்காவில்) பொருளாதார ஊக்குவிப்பு சட்டம் (Economic Stimulus Act) 2008 மூலம் பத்தாயிரம் கோடி டாலர்கள் அளவில் வரிச்சலுகைகள் தரப்பட்டன. அதனால் எல்லாம் மக்கள் செலவு செய்வது அதிகரிக்கவில்லை. அப்பணம் சேமிப்பிற்கும் பழைய கடன்களை அடைக்கவும் மட்டுமே பயன்பட்டது.

ஒறை முறை வரிச் சலுகைகளல் பலன் இல்லை என்பதை பல ஆய்வுகள் காட்டியுள்ளன. ஏனெனில் அம்மாதிரி கிடைக்கும் உபரிப்பணம் பொருட்களை வாங்குவதில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால், பொதுத்துறையின் பற்றாக்குறைகள் அவற்றின் மூலம் நாட்டின் கடன்கள் அதிகரிப்பது என்னவோ நிச்சயம்.

அதிகப் பொருட்களை வாங்குவதால் மட்டுமே பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்ற தட்டையான சிந்தனைதான் இந்த தவறான அணுகுமுறைக்கு காரணம். நுகர் பொருட்களும் சேவைகளும் கடவுள் தந்த வரம் என்ற ரேஞ்சுக்கு நம்புவதால் வரும் நிலைதான் இது.

உணமை கூறப்போனால், நிலையான பொருளாதார முன்னேற்றத்துக்கு சேமிப்புகளும் அவசியம். அப்போதுதான் தொழில் மூலதனத்துக்கான பொருட்களை உற்பத்தி செய்ய இயலும். அப்பொருட்கள் அதிக உற்பத்தி மற்றும் அதிக சம்பளங்களுக்கான அடிப்படையாகும். அவற்றை உருவாக்க வேண்டுமானால் வெறும் நுகர்வு பொருட்களுக்கான செலவை கட்டுப்படுத்த வேண்டும்.

சேமிப்பு என்பது மனிதனின் இயற்கையான தன்மைகளில் ஒன்று. சிக்கனத்தின் சிறப்பை கூறும் பல கதைகள் சும்மா பொழுதுபோக்குக்காகக் கூறப்பட்டதல்ல. ஆனால் இதையெல்லாம் வங்கிகள் மறந்து சேமிப்புக்கான ஊக்குவிப்பை அலட்சியம் செய்து செலவுக்கு தூபம் போட்டன. அடிமாட்டு விலைக்கு ஈடான குறைந்த வட்டி விகிதங்களால் சேமிக்கும் பழக்கம் கிட்டத்தட்ட அடியோடு ஒழிந்தது என்று கூறினாலும் மிகையல்ல.

இதனால் என்ன ஆயிற்றென்றால் ஒரு புறம் சேமிப்பு இல்லை. அதற்கு மாறாக குறைந்த வட்டியில் கடன் தந்து நுகர்வோர்களை செலவு செய்ய ஊக்குவித்தனர். இந்த பொது கொள்கைகள் காரணமாக தனிப்பட்டவர்கள் தத்தம் நெடுங்கால நலனை மறந்து இப்போது நன்றாக வாழ்ந்தால் போதும் என்ற மன நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் என்ன ஆயிற்று என்றால் பொருட்களை வாங்கும் சக்தியை இழந்தனர் மக்கள். வாங்குபவர் குறைந்ததால் உற்பத்தி குறைந்து பல வேலையிடங்கள் அழிக்கப்பட்டு வேலையில்லா திண்டாட்டம், மீண்டும் உற்பத்தி குறைவு போன்ம்று சீட்டுக் கட்டு மாளிகைகள் போல எங்கும் சரிவுகள்.

சக்திக்கு மீறி செலவு செய்து அர்சுகள் எதிர்காலத்து பொருளாதார முன்னேற்றத்தையே அடகு வைக்கின்றன. வேலையில்லா திண்டாட்டமும் அதிகரிக்கிறது.

அரசு புதிய வேலைகளை உருவாக்கும் என்ற நம்பிக்கை இன்னும் அசையாமல் அப்படியே உள்ளது. தனது தேர்தல் பிர்சாரத்தில் ஒபாமாவும் $150 பில்லியன் டாலர் பட்ஜெட்டில் புதிய காற்றாலைகள், சூரிய வெளிச்சத் தகடுகள் ஆகியவற்றை பொருத்தப் போவதாகக் கூறியுள்ளார். அதன் மூலம் ஐம்பது லட்சம் அளவில் "பசுமை" வேலைகள் உருவாகுமாம்.

முதலில் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். அரசின் மூலம் வேலை உருவாக்குவது தனியார் துறையில் உருவாக்குவதை விட அதிக செலவு பிடிக்கும். ஏனெனில் அரசு விஷயத்தில் அதன் அதிகாரிகளின் எண்ணிக்கையும் இதனால் அதிகரிப்பது தவிர்க்க முடியாதது. வரி செலுத்துவோரின் சுமைதான் இதனால் அதிகரிக்கும். அதனால் அவர்களது சேமிக்கும் திறன் குறையும். அப்படியே புது முதலீடுகளும் குறையும், வேறு நல்ல பலன் எதுவும் பொருளாதாரத்துக்கு இல்லை.

அரசு துவங்கும் முயற்சிகளால் வேலைகள் அதிகமாவது போலத் தோன்றினாலும், அவற்றின் ஒட்டுமொத்த விளைவு மலையைக் கொல்லி எலியை பிடிப்பது போலத்தான். போட்ட முதலுக்கு ஏற்ப முன்னேற்றம் இந்த முயற்சிகளில் இல்லை.

பொருளாதார மேம்பாட்டுக்கான வேலைகளை உருவாக்க அரசின் முயற்சி இல்லாமலே முடியும். அதன்றி வேலைத் திறன் இல்லாத தொழில் நுட்பத்துக்கு முட்டு கொடுக்கும் தொகைகளை தருவதன் மூலம் திறமையின்மைக்குத்தான் ஊக்கம் அளிப்பதாக முடியும். நல்ல விளைவுகள் இல்லாத நிலையில் உண்மையான சம்பள உயர்வு என்று ஒன்றும் இருக்காது.

இது போதாதென்று அரசின் தற்காலிக ஏற்பாடுகளால் வருங்காலத் தலைமுறையினரின் சுமைகள் வேறு அதிகரிக்கும். நாம் இப்போது படும் கடன்களை அவர்கள் அடைக்க வேண்டியிருக்கும்.

ஆகவே இம்மாதிரியெல்லாம் நடக்காமல் இருக்க திவாலான பல பழைய பொருளாதார கோட்பாடுகளை சரித்திரத்தின் குப்பைத் தொட்டியில் போடுவதே வழி.


[Christopher Lingle is a research scholar at the Centre for Civil Society in New Delhi and a visiting professor of economics at Universidad Francisco Marroquin in Guatemala. Comments are welcome at theirview@livemint.com]

இப்போது மீண்டும் டோண்டு ராகவன். எத்தனை முறைகள் பட்டாலும் தெரியாமல் போனால் என்ன செய்வது?

“ஒவ்வொரு தலைமுறையும் தானும் அதே தவறை செய்வேன் என்றில்லாமல் வேறு ஏதாவது புதிய தவறாவது செய்யுங்களப்பு எனக் கூறும் முரளி மனோஹரை சீரியசாக பேசுமாறு தீவிரமாக எச்சரிக்கிறேன். அரசு செய்வது என்னவென்றால் புது துறைகளை உருவாக்குவது, செக்ரட்டரி, ஜாயிண்ட் செக்ரட்டரி, கிளர்க்குகள் ஆகிய வேலையிடங்களை உருவாக்குவது. அவற்றுக்கெல்லாம் செண்ட்ரல் டி.ஏ. அளிப்பது ஆகியவை மட்டுமே. கூடவே இருக்கிறது பார்க்கின்ஸன் விதி. எவ்வளவு போஸ்டுகள் உருவானாலும் அத்தனைக்கும் ஏற்ற அளவில் உருப்படாத வேலைகளும் அதிகரிக்கும். வேறு பலன் லேது.

1932-ல் உருவான பொருளாதார மந்த நிலை ரூஸ்வெல்ட்டின் புதிய ஏற்பாட்டினால் (New Deal) நீங்கியது என்று பலர் கூறுவர். உணமை கூறப்போனால் இரண்டாம் உலக மகாயுத்தம் 1939-ல் வந்ததால்தான் பொருளாதார நிலை மேம்பட்டது. அதாவது சுட்டிப் பையன் பி. லட்சுமணன் கண்ணாடி ஜன்னலை உடைத்தான். ஜெர்மனியில் கூட ஹிட்லர் ஜெர்மனியின் படைபலத்தை அதிகரித்ததால்தான் வேலையில்லா திண்டாட்டம் பெரும் அளவில் குறைந்தது. ஆனால் இரண்டாம் உலக மகா யுத்தமும் வந்தது.

இது நமக்கு தேவையா? அப்படியே மூன்றாம் உலக மகா யுத்தம் வந்தால் என்ன நடக்கும்? கூறுவது கடினம். ஆனால் ஒன்று கூறலாம், நான்காம் உலக மகா யுத்தத்தில் விற்களும் அம்புகளும் மட்டுமே பயன்படும், ஆனால் அது வர கண்டிப்பாக நூறாண்டுகள் போல ஆகும்

(இப்பதிவின் ஆங்கில மூலம் இங்குள்ளது) .

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/19/2008

ரீடிஃப்-ல் சோவின் செவ்வி

ரீடிஃப்-ல் சோ அவர்கள் அளித்த பேட்டியின் தமிழாக்கம் இது. நன்றி ரீடிஃப். ஓவர் டு ரீடிஃப். (மொழி பெயர்ப்பு: டோண்டு ராகவன்)

துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் இந்தியாவின் மிகவும் மரியாதைக்குரிய அரசியல் ஆய்வாளர்களில் ஒருவர்

அவர் தனக்கே உரித்தான முறையில் ஷோபா வாரியருடன் ஸ்ரீலங்கா பிரச்சினை பற்றியும் புலிகள் பற்றியும் பேசுகிறார்.

கேள்வி: திடீரென தமிழகத்தின் எல்லா அரசியல் கட்சிகளும் ஒட்டுமொத்தமாக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஏன் இத்தனை ஆர்வம் காண்பிக்கிறார்கள்?

பதில்: முதலில் கம்யூனிஸ்டுகளிடம் இது ஆரம்பித்தது. அவர்களுக்கு தமிழகத்தில் பேச வேறு விஷயங்கள் இல்லை. அணுசக்தி ஒப்பந்தத்தில் மக்களின் கவனத்தைத் திருப்ப இயலாது. இத்தனை நாட்களாக மத்தியில் காங்கிரசையும் மாநிலத்தில் திமுகவையும் ஆதரித்து வந்துள்ளனர். இப்போது இப்பிரச்சினை அவர்களிடம் சிக்கியது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமே.

ஜெயலலிதா உடனேயே மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். வைக்கோ அதை எப்போதுமே செய்து வந்துள்ளார். அவரை மிஞ்சுவதற்காக ராமதாசும் பேச வேண்டியதாயிற்று. இவ்வளவு நடந்த பிறகு கருணாநிதியால் எவ்வாறு சும்மா இருக்க இயலும்? தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கெல்லாம் தான் தலைவர் என சொல்லிக் கொள்கிறவர் அல்லவா அவர்? அதனால்தான் அவர் இவ்வாறெல்லாம் செயல்பட வேண்டியுள்ளது.

அவருக்கு அத்தனை அக்கறை இருந்தால் தனது அரசின் ராஜினாமாவை சமர்ப்பித்து சட்டசபையைக் கலைக்கச் பரிந்துரை செய்து தான் மக்களிடம் போகப் போவதாகச் சொல்ல வேண்டியதுதானே. அவர் அவ்வாறு செய்யவில்லை.

மாநில அனைத்து கட்சிகள் தீர்மானத்தில் காங்கிரசுக்கும் பங்கு உண்டு என்பது தெரிந்ததே. காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள் மத்திய அரசை கவிழ்ப்பதாகக் கூறி பயமுறுத்துவார்கள் என யாரும் நினைத்து பார்த்திருக்க முடியாது!

கேள்வி: தமிழக மக்களுக்கு புலிகள்பால் அனுதாபம் இருக்கிறது என நினைக்கிறீர்களா?

பதில்: புலிகள்பால் அனுதாபம் இல்லை. இலங்கைத் தமிழர்கள்பால் இருக்கலாம். ஆனால் அதை ஒரு தேர்தல் பிரச்சினையாக பார்க்கும் அளவுக்கு அது இல்லை. அதன் மேல் மக்கள் ஓட்டளிக்குக் நிலையில் இல்லை.

பதில்: எந்த அளவுக்கு அவர்களுக்கு இலங்கைத் தமிழர்கள் மேல் அனுதாபம் உண்டு?

இலங்கைத் தமிழர்கள் அமைதியான சூழ்நிலையில் சம உரிமை அடிப்படையில் சிங்களவர்களுடன் வாழ வேண்டும் எனத் தமிழ் நாட்டினர் விரும்புவார்கள். புலிகளை கடுமையாக விமரிசனம் செய்யும், புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கைகளில் தலையிடுவதை தீவிரமாக எதிர்க்கும் நானே இந்திய-ஸ்ரீலங்கா ஒப்பந்தம் செயலாக்கப்பட வேண்டும் என கூறி வருகிறேன்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழர்களுக்கு சுயாட்சி கிடைக்கும், சிங்களவர்களுடன் சம உரிமையோடு அமைதியாக வாழ இயலும். இது மிகவும் நல்ல விஷயமாக இருக்கும். இந்த ஒப்பந்தம் நிறைவேறாமல் போனதற்கு புலிகள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

கேள்வி: புலிகள் அதிகாரம் செலுத்தும் பகுதிகளை இலங்கை ராணுவம் கைப்பற்றும் என நினைக்கிறீர்களா? இலங்கை அரசு அதை மிக விரைவில் செய்யப்போவதாகக் கூறுகிறது. ஆனால் நான் பழநெடுமாறனுடன் இது பற்றிப் பேசும்போது இலங்கை அரசு புருடா விடுவதாகக் கூறினார்...

பதில்: அங்கிருப்பது யுத்தச் சூழ்நிலை. அதில் இரு தரப்பினருமே பிரசாரத்தில் ஈடுபடுவர். அங்கு கிடைப்பது செய்தி அல்ல, பிரசாரம்தான். ஆகவே, இலங்கை அரசானாலும் சரி புலிகளானாலும் சரி அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்க இயலாது. உண்மை எங்கேயோ நடுவில் உள்ளது. அல்லது அவர்கள் இருவரில் ஒருவர் கூறியது முழு உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் நமக்கு அது நிச்சயமாக்த் தெரியாது.

ராணுவம் முன்னேறுகிறது என்பதில் ஐயமில்லை. புலிகளுக்கு இழப்புகள் உண்டு. ஆனால் முன்னமும் இம்மாதிரி நடந்துள்ளது. இலங்கை ராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது. ஆனால் அதனால் விவகாரம் முடிந்து விடவில்லை. எனக்கு உண்மை நிலவரம் தெரியாது. ஆகவே ராணுவத்தின் கை ஓங்கியுள்ளது, புலிகள் தோற்கின்றனர் என ஒட்டுமொத்தமாகக் கூற நான் தயாராக இல்லை. ஆனால் அது நடக்க வேண்டும் என விரும்புகிறேன்

கேள்வி: சர்வதேசத் தடைகளால் புலிகளுக்கு எந்தளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது?

பதில்: புலிகளுக்கு பாதிப்பு நிச்சயம் ஏற்பட்டுள்ளது. பணம் மற்றும் ஆயுதங்கள் பெறுவதில் அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கேள்வி: வடக்கு பகுதியைக் கைப்பற்றியவுடன் அரசியல் தீர்வு காணப்படும் என மஹிந்த ராஜபக்‌சே கூறுகிறாரே. அவரை நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: அங்குள்ள தமிழர்களின் நலனுக்காக புலிகள் செயல்படுவதாகக் கருதப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை. எது எப்படியானாலும் அங்கு அவர்கள் பிரதிநிதிகளாக உருவகப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஏனெனில் மற்ற எல்லா பிரதிநிதிகளையும் அவர்கள் கொன்று விட்டார்கள். மற்ற எல்லா மிதவாத, தீவிரவாதத் தலைவர்களை கொன்றது அவர்களே, இலங்கை அரசு அல்ல. ஆயிரக்கணக்கான தமிழர்களை அவர்கள் கொன்று குவித்துள்ளனர். தாங்கள்தான் ஒரே பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதை செய்தனர். பெருமளவுக்கு இதை அவர்கள் நிறைவேற்றவும் செய்தனர் .

ஆகவே, புலிகள் கிட்டத்தட்ட ஒடுக்கப்பட்டு ராணுவ ரீதியாகச் செயலிழக்கச் செய்யப்பட்டவுடன் -- கொல்லப்பட்டு என்ற அளவுக்கு நான் சொல்ல மாட்டேன் ஏனெனில் அங்கு அவர்கள் பல காலமாக இருக்கின்றனர் -- இந்தியா தலையிட வேண்டும். அந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேச வேறு யாரும் இருக்க மாட்டார்கள்

இந்தியா தலையிட்டு ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை அமுலுக்கு கொண்டுவர இலங்கை அரசைக் கட்டாயப்படுத்த வேண்டும். அங்கு ஒரு சமஷ்டி அரசு நிறுவப்பட்டு தமிழர்கள் சிங்களவர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும்.

கேள்வி: அவ்வாறு இந்தியா தலையிட்டால் இலங்கை அரசு அது தனது உள்விவகாரம் எனக் கூறினால்?

பதில்: இந்தியாவுக்கு தான் சொல்வதை நிறைவேற்ற தேவையான செல்வாக்கு உண்டு. முன்னமும் இதைத்தான் கூறினார்கள், ஆனால் ஒரு இலங்கை ஜனாதிபதி இந்திய அமைதிப் படையை அனுப்புமாறு கோர வேண்டியிருந்தது.

கேள்வி: கருணா வெளியேறியதால் புலிகள் எந்த அளவு பலவீனம் அடைந்துள்ளனர்?

கிழக்கில் பலவீனம் அடைந்ததில் சந்தேகம் இல்லை. வடக்குப் பகுதிகளில் அவ்வளவாக இல்லை. இந்தக் கடினமான சூழ்நிலையிலும் கிழக்கு பகுதியில் தமிழர் ஒருவர் தலைமையில் தற்காலிக அரசு அமைப்பதில் இலங்கை அரசு வெற்றியடைந்துள்ளது. இதில் ராஜபக்சேவின் பங்கை ஒத்து கொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு நிஜமாகவே அக்கறை இருந்தால் அவர்கள் சண்டை நடக்கும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வேறு இடங்களுக்கு செல்ல அனுமதிக்குமாறு பிரபாகரனை வற்புறுத்த வேண்டும். இப்போது என்ன நடக்கிறதென்றால் பொது மக்களை புலிகள் தங்களுக்கு கவசமாக பயன்படுத்தி வருகின்றனர். இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கைகளை மக்கள் கொலையாக (genocide) சர்வதேச அரங்கில் காட்டுவதே புலிகளின் இச்செயல்பாட்டின் நோக்கம். இது மக்கள் கொலை அல்ல.

இதை மக்கள் கொலையாக வர்ணிப்பது பிதற்றல் என அறிக்கை கொடுத்துள்ளார் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர் ஆனந்த சங்கரி. புலிகள்தான் பொதுமக்களை பத்திரமான இடங்களுக்கு செல்லவிடாமல் தடுக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆகவே தமிழக கட்சிகள் பிரபாகரனிடம்தான் தங்கள் கோரிக்கையை வைக்க வேண்டும். மத்திய அரசிடமோ இலங்கை அரசிடமோ அல்ல.

கேள்வி: பிரபாகரனிடம் அவர்களுக்கு இம்மாதிரி கோரிக்கை வைக்கும் அளவுக்கு செல்வாக்கு உண்டா?

பதில்: இல்லை என நினைக்கிறீர்களா? அதிமுக மற்றும் காங்கிரசைத் தவிர்த்து மீதி எல்லோரிடமும் அம்மாதிரி செல்வாக்கு உண்டு. வைக்கோ, திருமாவளவன், ராமதாஸ் மற்றும் திமுகாவுக்கு அதிகமாகவும் மற்றவர்க்கு சற்றே குறைவாகவும் செல்வாக்கு உண்டு.

இலங்கைத் தமிழர்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் அம்மாதிரி கூற வேண்டும். அதன்றி பிரபாகரன் மேல்தான் அக்கறை என்றால் இப்போது செயல்படுவது போலத்தான் செய்ய வேண்டும், செய்கிறார்கள்.


அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது