இந்த ஐ.பி.எல். பிரச்சினை எனக்கு பிடிபடவில்லையே. நாட்டில் தேர்தல் என்பது அரசியல் நிர்ணயச் சட்டத்தின்படி கட்டாயம். அதுவும் இப்போது வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் குறிப்பிட்ட நாட்களில் நடந்து முடிந்து புது லோக்சபை ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் வர வேண்டிய கட்டாயம்.
ஆனால் ஐபிஎல் நடத்தும் இந்த இழவு கிரிக்கெட் விளையாட்டுகள் அப்படியா? அதுவும் விளையாடுபவர்கள் யார்? ஏலத்தில் எடுக்கப்பட்ட அடிமைகள். என்ன விலையுயர்ந்த அடிமைகள், அவ்வளவுதான். அடிமைகள் ஆடும் இந்த ஆட்டத்துக்கு என்ன இந்த அலம்பல்கள்? லோக்சபா தேர்தல் எப்போது வரும் என்பது எல்லோருக்கும் தெரிந்த நிலையில், என்ன திமிர் இருந்தால் அதே தேதியில் ஐபிஎல்லில் கிரிக்கெட் விளையாட்டுகளை வைப்பார்கள்?
அதுதான் புரியவில்லை என்றால், அவர்களை அரசு கெஞ்சுவதும் பார்க்க சகிக்கவில்லையே. என்ன பிரச்சினை ஐயா, அரசுகளிடம்? ஏதேனும் கட்டிங் பெறுகிறார்களா என்ன?
தேர்தல் எல்லாம் முடிந்த பிறகு இந்த ஐபிஎல் இழவு மேட்சுகளை வைத்துக் கொண்டால் யார் குடி முழுகிவிடுமாம்?
அரசு செய்யக்கூடியவையாக எனக்கு தோன்றுவன:
1. வெளிநாட்டு பிளேயர்களுக்கு விசா மறுக்கலாம்.
2. விளையாட்டு வீரர்களது பந்தோபஸ்துக்கு ஒரு கான்ஸ்டபிளைக் கூட அனுமதிக்கக் கூடாது. தேவையானால் ஐ.பி.எல்லே எல்லா பந்தோபஸ்துகளையும் தமது செலவிலே பார்த்து கொள்ளட்டும் என விட்டுவிடுங்கள். கொள்ளையடிக்கப்படும் பணத்தில் ஒரு பகுதி இம்முறையிலாவது தனியார் பாதுகாப்பு மையங்களுக்கு செல்லட்டும்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
தமிழ்விக்கி- தூரன் விருதுவிழா- நாதஸ்வர இசை .கலைஞர்கள், பாடல்கள்.
-
தமிழ் விக்கி- தூரன் விருது தமிழ்விக்கி- தூரன் விருது யோ.ஞான சந்திர
ஜாண்ஸனுக்கு. யோ. ஞான சந்திர ஜாண்சன் சிறப்பு நாதஸ்வரம் : ” சுகநாத இசை
பேரரசு ”, “ஸ்வரா...
3 hours ago












