10/29/2009

டோண்டு பதில்கள் - 29.10.2009

கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?எம். கண்ணன்

1. விக்ரம் புத்தி எனும் பர்டியூ யுனிவர்சிடி மாணவர்(முன்னாள் ஐஐடி) 2006ல் புஷ்ஷுக்கு எதிராக இணையத்தில் எழுதினார் என்பதற்காக அவர் செய்தது 'குற்றம்' என தண்டிக்கப்பட உள்ளார். கடந்த 3 வருடங்களாக சிறை. (சுமார் 30 வருடம் சிறை என தீர்ப்பு வரலாம் என பேச்சு.. நவம்பரில் தீர்ப்பு வரும்). அப்படியென்றால் தமிழ் பதிவுலகில் பலரும் இந்திய / தமிழக / அமெரிக்க ஆளுவோர்களை எதிர்த்து எழுதும் கன்னா-பின்னா பதிவுகளுக்கும் தண்டனை சாத்தியமா ?
பதில்: விக்ரம் செய்தது கொலைமிரட்டலில் வரும். மற்றப்படி புஷ் ஒரு முட்டாக்கூ.. என்ற ரேஞ்சில் எல்லாம் எழுதியிருந்தால் அமெரிக்காவில் பிரச்சினை இருந்திருக்காது.

2. அக்டோபர் முடியப் போகிறது. ஆனாலும் வெயில் இப்படி வறுத்தெடுக்கிறதே ? ஆந்திர / கர்நாடக வெள்ள நீரை பாலாற்றில் திருப்பி விட்டிருக்கக் கூடாதா?
பதில்: அதற்கு தோதாக வடிகால்கள் வேண்டுமே. அவை ஓவர் நைட்டில் வரக்கூடியவையா?


3. ஆனந்த விகடன் 'நிருபன்' பகுதி கட்டுரைக்காக புறநகர் கமிஷனர் ஜாங்கிட் பற்றிய செய்திக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறதே ? விகேஷ் விவகாரத்தின் நீட்சியோ ?
பதில்: தவறான செய்தி என்பது வெளிப்படையாக தெரியும் நிலையில் இதைச் செய்வதைத் தவிர விகடனுக்கு வேறு என்ன வழி இருக்கிறது?

4. உங்களைப் போல மொழிபெயர்ப்பு வேலை தவிர வீட்டிலிருந்தபடியே கணினி / இணையம் மூலம் சுமாராக (Rs.10000 pm) சம்பாதிப்பதற்கு என்ன என்ன வழிகள் (சென்னையில் / தமிழ்நாட்டில் வசிப்பவருக்கு) உண்டு ? இந்த மாதிரி வேலைகள் தேடுவதற்கு சுட்டிகள் உண்டா ?
பதில்: முதலில் மொழிகளில் ஆர்வம் வேண்டும். அவற்றை முறையாக கற்க வேண்டும். அந்த வேலை செய்ய பொறுமை வேண்டும். வாடிக்கையாளர்களை பிடிக்க வேண்டும். ஆரம்ப பின்னடைவுகளை தாங்கும் மன உறுதி வேண்டும், இத்தொழிலில் நிலைக்கும் வரை வேறுவகை வருமானம் வேண்டும். ப்ரோஸ்.காம் போன்ற மொழிபெயர்ப்பு தலைவாசலில் உறுப்பினராக வேண்டும். அதற்கு கட்டணம் ஏதுமில்லை.


ஓ, மன்னிக்க வேண்டும். கேள்வியைச் சரியாக பார்க்கவில்லை. வீட்டிலிருந்தபடியே கணினி மூலம் சம்பாதிக்க பலவழிகள் உள்ளன. ப்ரிண்ட் அவுட்டுகள் எடுத்துத் தரலாம். ஸ்கேனிங் செய்து தரலாம். மெடிகல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் வேலை செய்யலாம். டேட்டா எண்ட்ரி வேலை செய்யலாம். கதை எழுதலாம்.


எல்லாவற்றையும் விட வாடிக்கையாளர்களை அணுகும் முறைகள் குறித்து எழுதியுள்ளதையும் பார்க்கலாம். நான் மொழிபெயர்ப்பு துறையில்ருந்தே உதாரணங்கள் தந்தாலும் அவற்றில் கூறப்பட்டவை எல்லா ஃப்ரீலேன்சர்களுக்கும் பொருந்தும்.

5. விவேக்குக்கு விகடன் குரூப் மேல என்ன கோபம் ? தினமலரை விட அதிகமாக விகடன் மீது பொங்கி எழுந்துள்ளாரே ?
பதில்: ஏதாவது உள்விவகாரமோ? எனக்கும் தெரியவில்லை. ஆனால் ஒன்று, கலைஞர்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள். ஆகவே பலர் பேசுவதில் அர்த்தமே இருக்காது.

6. கமல் 'உன்னைப் போல் ஒருவன்' படத்தில் டைட்டிலில் இரா.முருகன் பேர் போடாவிட்டாலும் குமுதம், கல்கி போன்றவை முருகனாரிடம் கட்டுரை வாங்கி போடச்செய்து அவர் தான் 'ரைட்டர் சார்' என்பதை வெளிப்படுத்தி விட்டதே ? அதிலும் குமுதம் அவரை 'சிற்றிலக்கிய இதழ்' எழுத்தாளர்கள் வரிசையிலேயே இன்னும் வைத்திருக்கிறது போல - தீபாவளி 'இலக்கிய'ச் சிறப்பிதழில் அவரது உபோஒ கட்டுரை ?? (இதிலும் நமீதா மீது இடிக்காத குறையை விடமாட்டேனென்கிறாரே :-)) (விகடன் ஏன் முருகனை இன்னும் ஒதுக்கி வைத்திருக்கிறது ?)
பதில்: டைட்டிலில் ஏன் போடவில்லை? நீங்கள் போஸ்டர்களை சொல்கிறீர்களா? மற்றப்படி திரைப்படத்தில் டைட்டில்ஸ்கள் போடும்போது கண்டிப்பாக அவர் பெயர் இருந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன். விகடன் அவரை ஒதுக்கி வைத்திருப்பதாக நினைக்கவில்லை.

7. நக்சலைட்டுகள் (மாவோயிஸ்டுகள்) பிரச்னை சிக்கலாகிக் கொண்டிருக்கிறதே ? அரசு (மற்றும் ப.சிதம்பரம்) என்ன செய்ய வேண்டும் - உங்கள் கருத்துப்படி ?
பதில்: கடுமையான நடவடிக்கைகள் தேவை. அதே சமயம் அபிவிருத்தித் திட்டங்களும் மக்களை சென்றடைய வேண்டும்.

8. உச்சநீதிமன்றத்தில் வாதாடும் வக்கீல்களான ஹரீஷ் சால்வே, நாரிமன், பராசரன், ராம் ஜெத்மலானி போன்றோர் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு சார்ஜ் செய்வார்கள் ? ரூ.25000 ? அம்பானி, மாநில அரசுகள் என பலருக்கும் வாதாடுகிறார்களே ? அரசுக்காக வாதாடும் போது பணம் சரியாக பைசல் ஆகுமா ?
பதில்: பல சமயங்களில் கோர்ட்டுகளே வக்கீல் வசதி பெறமுடியாத குற்றவாளிக்காக வக்கீலை நியமிக்கும். ஆனால் அது அடிமாட்டு விலைதான். மற்றப்படி ஜெத்மலானி போன்றவர்கள் பெறும் சம்பளங்கள் பெரிய ஸ்கேலில்தான் இருக்கும். எனது சுவிஸ் வாடிக்கையாளருடன் வக்கீலை சென்று பார்த்தபோது கன்சல்டேஷன் மற்றும் வக்கீல் நோட்டீஸ் வழங்க 1500 ரூபாய் ஆயிற்று. சும்மா சொல்லக் கூடாது வக்கீலும் எங்களுடன் போலீஸ் அதிகாரிகளை எல்லாம் வந்து பார்த்தார். கிட்டத்தட்ட 4 மணி நேர வேலை.


நீங்கள் சொல்வதும் உண்மைதான். அரசால் நியமிக்கப்பட்டு வாதாடும் வெளி வக்கீல்களுக்கு பணம் வாங்க பல சிரமமான விதிமுறைகள் உண்டுதான். ஆனால் முழுநேர அரசு ஊழியராக இருக்கும் வக்கீல்களுக்கு சம்பளம் அதுபாட்டுக்கு வந்துவிடும். ஆக, அரசால் நியமிக்கப்படுபவர்கள் அந்த வேலையை ஏற்க பல வேறுகாரணங்களும் உண்டு. அது சம்பந்தப்பட்டவர்களை பொருத்த விஷயம்.

9. சமையல் கேஸ் தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லையே ? இதில் ஸ்டீல் சிலிண்டர் வேறு அறிமுகப்படுத்துகிறார்களாமே ?
பதில்: சமையல் கேஸ் தட்டுப்பாடு தீரவில்லைதான். மணலி கேஸ் நிரப்பும் தொழிற்சாலையில் தொழிலாளிகள் பிரச்சினை. மேலும் அளவுக்கு அதிகமாக சப்டிசைஸ் செய்யப்பட்ட சிலிண்டர்களை பெறுவதற்காக தகாத முறையில் அதிக பணம் கொடுப்பவர்களால் ஏற்படும் பிரச்சினைகள், இது போதாது என்று கூறுவதுபோல இலவச கேஸ் அளிப்பு ஆகிய அரசியல் ஸ்டண்டுகள் ஆகியவை இருந்தால் இதுவும் நடக்கும், இதற்கு மேலும் நடக்கும். ஸ்டீல் சிலிண்டர்களா? இப்போது எந்த உலோகத்தில் அவற்றை செய்கிறார்களாம்?


10. மடிக்கணினி வாங்கியதற்கு வாழ்த்துக்கள். ஏன் காம்பேக் வாங்கினீர்கள் ? டெல், மற்றும் இன்ன பிற இந்திய நிறுவனங்களில் மடிக்கணினிகள் நல்ல மாடல் குறைந்த விலையில் நன்றாக இருக்கிறதே ?
பதில்: எனக்கு அது பற்றியெல்லாம் என்ன தெரியும்? முகுந்தனை கூட அழைத்து சென்றேன். அவன் வாங்கிக் கொடுத்தான். 2002-லும் அவனது ஆலோசனைதான். இதுவரை பிரச்சினைகள் அதிகம் இல்லை. அப்படியே வந்தாலும் அவன் ஆலோசனைகளை பெற்று அவற்றை சந்தித்திருக்கிறேன். இப்போதைக்கு மடிக்கணினி மற்றும் டெஸ்க் டாப் இரண்டையுமே உபயோகிக்கிறேன். தரவுகள் இருகணினிகளிலும் உள்ளன. நல்ல backup ஆயிற்று. ஊர்களுக்கு செல்வதில் பிரச்சினை இனிமேல் இருக்காது. வேறு என்ன வேண்டும்?
துபாய் நாரா

1. டி.வி.யில் நிகழ்ச்சி வரும் போது இருக்கிற ஒலியின் அளவு விளம்பரம் வரும் போது தானாகவே கூடி அலறுகிறதே ஏன் ? இந்த அக்கிரமத்தை அரசு கண்டுகொள்ளாது இருப்பதேன் ?

பதில்: விளம்பரங்கள் ஏற்கனவேயே ரிகார்ட் செய்யப்பட்டவை. நிகழ்ச்சிகள் பிற்பாடு ரிகார்ட் செய்யப்படுகின்றன அல்லது லைவ் ஆக ஒளிபரப்பப் படுகின்றன. ஆகவேதான் இந்த வேறுபாடு தெரிகிறது. மேலும் விளம்பரங்கள் பலத்த ஒலியுடன் வந்தால்தான் மக்களை சென்றடைய இயலும் என்ற தவறான கன்ணோட்டம் வேறு உள்ளது.


2. தமிழுக்கு மாநாடு நடப்பது போல் வேறு எதேனும் மொழிக்கு நடக்கிறதா ?

பதில்: நடக்கிறது, எனக்கு தெரிந்து பிரெஞ்சுக்கு.

3. விவேக் சாதியைச் சாடி இனியும் காமெடி பண்ணுவது சாத்தியமா.(சாதி சங்க ஆலோசனை கூட்டத்தில் எல்லாம் கலந்து கொள்கிறார். இந்தவார கழுகு ஜீ.வி பார்க்கவும்)
பதில்: நடிப்பு வேறு, நடைமுறை வாழ்க்கை வேறு.
ரமணா:
1. இந்தத் தடவை கலைஞரின் செல்லம் சிபிஐ பிடியிலிருந்து தப்புவது சாத்யமில்லை போலுள்ளதே?
பதில்: அவரும் ராசாவை டிஃபண்ட் செய்வது போல தோன்றவில்லையே?

2. இதில் ராகுலின் தலையீடு உண்டா?

பதில்: இருந்தால் வியப்படைய ஒன்றுமில்லை.

3. எமர்ஜன்சி தண்டனைகளை மீண்டும் திமுக பெறும் போலுள்ளதே?(மிசா மஹானுபவங்கள்)

பதில்: அதற்கு இன்னொரு அவசரநிலை சட்டம் வரவேண்டும். தற்போது அது சாத்தியமில்லை.

4. 2010 ல் உங்கள் கணிப்பு (திமுகவுக்கு குட்பை) நிறைவேறும் போலுள்ளதே?

பதில்: அப்படியாவது தமிழகத்துக்கு நல்லது நடக்கட்டுமே.

5. தொலைபேசி/தகவல் தொடர்புத்துறைக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்த மீண்டும் தயாநிதி ?

பதில்: திமுக முதலில் மத்திய மந்திரி சபையில் நீடிக்கிறதா என்பதை பார்ப்போம்.
அனானி (26.10.2009 காலை 06.25-க்கு கேட்டவர்)
1. ராமதாஸ் எப்படியிருக்கிறார்?
பதில்: எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் உள்ளார். திமுகாவோ அதிமுகாவோ எக்கட்சியுடன் கூட்டு சேர்ந்தாலும் அவரது கட்சியின் நிலை ஐயோ பாவம்தான்.


2. 2010ல் தமிழக அரசியல்?
பதில்: தேர்தல் சமயத்தில் கவர்னர் ஆட்சி வருவது நலம்.3. காங்கிரஸின் முயற்சி சூரியாவிடம் பலிக்கவில்லையா?
பதில்: எந்த சூர்யா? ஜோதிகா நாயகனா? அவரது தந்தையின் அறிவில் சிறிதளவேனும் அவரிடம் இருந்தாலும் சூர்யா மாட்டிக் கொல்ளாமல் இருக்கலாம்.

இல்லை, எஸ்.ஜே. சூர்யாவை சொல்கிறீர்களா? காங்கிரசுக்கு ஏன் இந்த விபரீத ஆசை?


4.ஆதவன் -பேராண்மை ஒரு ஒப்பீடு?
பதில்: இவ்விரு படங்களில் ஒன்றைக்கூட நான் பார்க்கவில்லையே. ஆதவன் துரத்தல் காட்சி க்ளிப்பிங் மட்டும் பார்த்தேன். அயன் படத்தை நினைவுபடுத்தியது.


5. சென்னையில் தண்ணீர் தண்ணீர் சொல்ல வேண்டுமா?
பதில்: வடகிழக்கு பருவ மழையே துணை.


6. ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்குகள் ?
பதில்: சீக்கிரம் முடிந்தால் தேவலை. அவரை போன்று ஊழலில் ஈடுபட்ட எல்லோருக்குமே தண்டனைகள் கிடைத்தால்தான் மற்ற அரசியல்வாதிகள் பயப்படுவார்கள்.


7. பா.ம.க. விலகலால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு?
பதில்: இப்போதைக்கு இல்லை. பாமகவின் நம்பகத்தன்மை குறைந்து போய்விட்டது.


8. சீனா மறுபடி வாலாட்டத் தொடங்கிவிட்டதா?
பதில்: இந்தியா விழிப்புடன் இருக்க வேண்டும்.


9.‘வெங்கி’ ராமகிருஷ்ணன் அவ்ர்களின் நோபல் பரிசுக்குப் பின் பேச்சுகள்-உங்கள் விமர்சனம்?
பதில்: இயல்பாகவே இருக்கிறார். நம்மவர்கள்தான் ரொம்பவும் அவர் மேல் விழுந்து பிறாண்டி விட்ட்டார்கள்.


10. இலங்கைக்கு இந்தியப் பாராளுமன்றக் குழு திக் விஜயம் பற்றி?
பதில்: ராஜபக்சேவுக்கு ஜால்ரா அடித்தலில்தான் முடிந்துள்ளது.


11. இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை-திமுக தலைவரின் கோரிக்கை-காங்கிரசுக்கு எச்சரிக்கையா?
பதில்: அப்படியெல்லாம் செய்தால் கருணாநிதியின் கல்லாதானே காலியாகும். ஆகவே அதையெல்லாம் கூட்டணி இருக்கும்போது செய்ய மாட்டார். அவரை காங்கிரஸ் கழற்றிவிட்டால் அப்போது செய்யலாம், அதுவும் மீண்டும் காங்கிரசுடன் ஒட்டிக் கொள்ளவே இயலாது என்னும் நிலை வந்தால்தான்.


12. சீனா, காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு விசா கொடுப்பது-விஷமம் அல்லவா?
பதில்: இதில் என்ன சந்தேகம்? ஆனால் சீனா நமது எதிரி. அப்படித்தான் செய்யும். அதை மறந்து நாம் செயல்படுவது நமக்குத்தான் ஆபத்தை வரவழைக்கும்.13. டாஸ்மார்க் சரக்குகள் தீபாவளி விற்பனை 220 கோடியாமே? குடிமகனே போற்றி போற்றி?
பதில்: குடி பற்றி ஏதும் அறியாத ஒரு தலைமுறைக்கே குடியை அறிமுகப்படுத்தினார் சமீபத்தில் 1972-ல் கலைஞர். அவர் ஆட்சிதானே இப்போதும் நடக்கிறது. ஆக இதில் என்ன வியப்பு?


14. கிரிக்கெட் சூதாட்டம் தொடர்கிறதா?
பதில்: ஜாம் ஜாம் என தொடர்கிறது.


15. ஐஐடி 80 % மார்க் விவகாரம் மந்திரியின் அந்தர் பல்டி?
பதில்: கபில் சிபலையா குறிப்பிடுகிறீர்கள்? ஓட்டு அரசியல் பாதிக்கும் என்ற நிலை வந்தால் அதைத் தவிர்க்க எத்தனை பல்டி வேண்டுமானாலும் அடிக்கப்படும். இதிலெல்லாம் உச்சவரம்பு கிடையாதாக்கும்.


16. வாரணம் ஆயிரம் சூர்யா- ஆதவன் சூர்யா?
பதில்: இந்த இரண்டில் ஒரு படத்தைக்கூட பார்க்கவில்லை. அப்புறம் என்ன கருத்து கூறுவது இதற்கு?

மீண்டும் அடுத்த வாரம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் சந்திப்போமா?அன்புடன்,
டோண்டு ராகவன்10/28/2009

மடிக்கணினி அனுபவங்கள்

நேற்று காலை என் வீட்டம்மா சில கோவில்க்ளுக்கு போக வேண்டும் எனக்கூற பழக்க தோஷத்தில் முதலில் அதை ஏற்க மறுத்தேன். அவரும் மேலே வற்புறுத்தாது சென்று விட்டார். பிறகு எனக்கு கொஞ்சம் உறுத்தியது.

எனது முக்கிய ஆட்சேபணையே எனது மொழிபெயர்ப்பு வேலைதான். அது எப்போது வேண்டுமானாலும் மின்னஞ்சல் மூலம் வரும். ஆகவேதான் கணினி திறந்து, இணையத் தொடர்புடன் ஒரு நாளின் பெரும்பாலான பகுதிகளில் இருக்கும். ஆனால் இப்போதுதான் மடிக்கணினி வந்து விட்டதே. மேலும் ரிலையன்ஸ் டேட்டா கார்ட் வேறு இருக்கிறது.

முதலில் ரிலையன்ஸின் வாடிக்கையாளர் பிரிவுக்கு ஃபோன் செய்து எனது சேவைகள் தெரிவுக்கு அகில இந்திய அளவில் இணையத்தில் மேய இயலுமா என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு, முதன் முறையாக சென்னைக்கு வெளியில் செல்வதால் ஏதேனும் பிரத்தியேக அமைவுகள் செய்து கொள்ள வேண்டுமா எனக் கேட்டதற்கு, அவர் அமைவுகளில் ஹைப்ரிட் தரவுகளை பெற்றுக் கொள்ளும் தெரிவை டிக் செய்யச் சொன்னார். அதன்படித்தான் எற்கனவே தெரிவு இருந்தது என்பதை உறுதி செய்து கொண்டேன்.

பிறகு வீட்டமாவை அழைத்து கோவில்களுக்கு செல்லலாம் எனக் கூற, அவர் மகிழ்ச்சியுடன் கரூர், நாமக்கல், திருச்சி ஸ்ரீரங்கம், திருவிண்ணகர ஒப்பில்லா அப்பன் கோவில், திருநள்ளாறு என்று நிகழ்ச்சி நிரல் தயார் செய்தார்.

காலை 8 மணிக்கு இந்த முடிவு செய்தவுடன், எனது காருக்கு சொல்லி, அதை 09.30 மணிக்கு வர ஏற்பாடு செய்தேன். வீட்டுக் காவலுக்கு ஆளை நிறுத்தினோம். கிட்டத்தட்ட 10 மணிக்குத்தான் கிளம்ப முடிந்தது.

போன தடவை செல்லும்போது கரூர் பெருமாள் தரிசனம் செய்ய இயலாது போயிற்று. சொல்லிவைத்தாற் போல கோவில் நடையை மாலை 7 மணிக்கே சாத்தி விடுவதே காரணம். இம்முறை ஆகவே முதலில் கரூர், பிறகு நாமக்கல் எனச் சென்றதில் இரண்டு இடங்களிலும் நல்ல தரிசனம். இந்த இடத்தில் பெருமாள் கோவில்களுக்கே உரித்தான ஒரு அசௌகரியத்தையும் கூறத்தான் வேண்டும். அதாகப்பட்டது கோவில் நடை திறப்பது மிகக் குறுகிய கால அளவில்தான். அதிலும் ஒரு கோவிலில் திடீரென நடுவில் திரையெல்லாம் போட்டு படுத்துகிறார்கள். வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களின் நலன் புறக்கணிக்கப்படுகிறது.

சிவன் கோவில்களில் இப்பிரச்சினை இல்லை. அதிகம் இல்லை. அதிக நேரம் திறந்து வைத்திருக்கிறார்கள். ரொம்ப நாளாக மனதில் உறுத்தும் விஷயம் இது. இப்போதுதான் அதைக்கூற சந்தர்ப்பம் வந்தது.

உடனேயே திருச்சி வந்து ஹோட்டலில் ரூம் போடும்போது, இரவு 11 மணி ஆகிவிட்டது.

மடிக்கணினியை திறந்து டேட்டா கார்டை பொருத்தி, இணைய இணைப்புக்கு க்ளிக் செய்தால் அது அமர்க்களமாக வந்தது. வாடிக்கையாளர் 4 மின்னஞ்சல்கள் மொழிபெயர்ப்புக்காக அவர் ஏற்கனவேயே எனக்கு தொலைபேசி மூலம் கூறியது போல வந்திருந்தன. அவற்றை முடித்து விட்டு படுக்கச் செல்லும்போது நள்ளிரவைத் தாண்டி முப்பது நிமிடங்கள் ஆகிவிட்டிருந்தன. இப்போது இந்தப் பதிவை போட்டு விட்டு திருவரங்கம் செல்ல வேண்டும். ஒரு ஏவிஜி ஸ்கேன் செய்தாயிற்று, Adaware ஸ்கேனும் இப்போதுதான் ஓக்கேயாக முடிந்தது.

செல்பேசிக்கு எனது லேண்ட் லைனுக்கு வரும் அழைப்புகளை திசை திருப்பியதன் மூலம் ஏதாவது வாடிக்கையாளர் அழைப்புகள் தவறுமோ என்ற ஐயம் அகன்றது. அது நடந்து 6 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது கணினியும் நம்முடன் கூடவே வரும் என்பதால் இன்னொரு சுதந்திரமும் வந்தது.

அதற்காக டெஸ்க்டாப்பை விட்டுவிட இயலுமா? இப்போதே எனது மடிக்கணினியில் உருவாக்கும் கோப்புகளை எனக்கே மின்னஞ்சல் செய்து கொண்டு அவற்றை வீட்டுக்கு சென்றதும் டெஸ்க் டாப்பிலும் இறக்கி கொள்கிறேன். ஆகவே தரவுகள் இரு வெவ்வேறு இடங்களில் பத்திரமாக இருக்கின்றன.

இந்த அனுபவம் சில நாட்களிலேயே பழகிவிடுமாகத்தான் இருக்கும். இருப்பினும் இப்போதைக்கு இந்த சுதந்திரம் தரும் மனநிறைவு வந்தது வந்ததுதான். அதை ரிகார்ட் செய்வதே இப்பதிவு.

வாழ்க்கை அற்புதமயமானது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/25/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 25.10.2009

எந்த மொழியில் பேசுவது என்னும் பிரச்சினை
ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் இந்த வலைப்பூவில் வந்த இப்பதிவே எனது இந்த இடுகைக்கு காரணம்.

அதிலிருந்து சில வரிகள்:

அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்கள் அனைத்தும் பெரும்பான்மையாக ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

எனக்கு கிடைத்த பதில்கள் இங்கு மாதிரிக்கு:

1. அப்ப தான் எல்லோருக்கும் புரிகிறது. 2.
புரிகின்ற மொழியில் பேசுவது ஒன்றும் தப்பு இல்லை. 3. தமிழர்களை தவிர மற்றவர்களும் வரலாம் இல்லையா? 4. நமக்கே தமிழ் ஒண்ணும் வர மாட்டேங்குது ? 5. தமிழ் வளர்ப்பதற்கு ஒன்றும் வர வில்லை. (இந்த இடுகையின் சௌகரியம் கருதி எண்கள் டோண்டு ராகவனால் கொடுக்கப்பட்டன)

இதை நான் விமர்சிப்பதற்குள் உங்களின் விமர்சனங்களையும் கேட்க விரும்புகிறேன்.

அமெரிக்கா என்று மட்டும் இல்லை. தமிழகத்தின் பல அமர்வுகளிலும் இதே நிலைதான். சில மாதங்களுக்கு முன்னால் சென்னை பல்கலைக்கழக வைணவத் துறைக்கு அதன் தலைவரும் எனது நண்பருமாகிய முனைவர் வி.கே.எஸ்.என். ராகவன் அவர்களது அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். முனைவர் பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பணம் செய்தார் ஒரு மாணவி. அதற்கான இறுதி நேர்காணல். அதைக் காணவே என்னையும் அழைத்திருந்தார்கள்.

அதை நடத்தியது ராகவன் அவர்களுக்கு முன்னால் வைணவத்துறையின் தலைவராக இருந்த முனைவர் நரசிம்மாச்சாரி அவர்கள். சமீபத்தில் 1969-ஆம் ஆண்டில் நான் ஜெர்மன் பயில ஆரம்பித்தபோது என்னுடன் கூடப்படித்தவர்.

ஆராய்ச்சிக்கட்டுரை துவங்கியது. கர்மம் என்னும் கோட்பாட்டைப் பற்றித்தான் கட்டுரை. விசிஷ்டாத்வைதம், த்வைதம், அத்வைதம் ஆகிய முறைகளில் அது எவ்வாறு கையாளப்பட்டிருக்கிறது என்பது பற்றித்தான் கட்டுரை.

எனக்கு சுருக்கெனப்பட்டது என்னவென்றால் அமர்வு முழுக்க ஆங்கிலத்தில் நடந்ததுதான். கட்டுரையை வாசித்தவர் தமிழர், பார்வையாளர்கள் அனைவரது தாய்மொழியும் தமிழே. விவாதத்துக்குரிய பொருளோ தமிழில் அல்லது மிஞ்சிமிஞ்சிப் போனால் வடமொழியில்தான் பாந்தமாக இருக்கும். அதைப்போய் ஆங்கிலத்தில் கையாளுவதா என்பதுதான் எனது நிலைப்பாடு.

கட்டுரை முடிந்ததும் முனைவர் நரசிம்மாச்சாரி அவர்கள் பார்வையாளர்களிடமிருந்து கேள்விகளை வரவேற்றார். நான் உடனே எழுந்து நின்று முதலில் சொன்னது, “நான் தமிழிலேதான் கேள்விகள் கேட்பேன்”. அவரும் புன்முறுவலுடன் ஒத்து கொண்டார். கட்டுரையாளர் அவரை முகத்தில் கேள்வியுடன் நோக்க, ராகவன் ஜெர்மனில் கேள்வி கேட்கவில்லை என மகிழ்ச்சியடையுமாறு அவரிடம்சிரித்து கொண்டே கூறினார். பிறகு நான் கேள்வி கேட்டேன், பதிலும் வந்தது. அதெல்லாம் இப்பதிவுக்கு அப்பாற்பட்டது. நான் குறிக்க எண்ணுவது என்னவென்றால் எல்லாவற்றையும் ஆங்கிலத்திலேயே நடத்துவது என்னும் நிலையைத்தான்.

ஒடெஸ்ஸா கோப்பு (Odessa file)
இப்படம் எழுபதுகளில் வந்தது. Frederic Forsyth என்பவர் எழுதிய அதே தலைப்புள்ள புதினத்தின் திரையாக்கம் அது. அது சமீபத்தில் 1963 நவம்பர் 22-ஆம்தேதி அமெரிக்கக் குடியரசுத் தலைவர் கென்னடியின் கொலை பற்றிய செய்தியுடன் ஆரம்பிக்கிறது. பொழுதுபோக்காக அப்புத்தகத்தை படிக்க ஆரம்பித்த நான் இஸ்ரேல் பற்றியது அது என்றதும் எங்கோ குத்திவிட்டது போல நிமிர்ந்து உட்கார்ந்தேன். Odessa --> Organisation der ehemaligen SS-Angehörigen என்பதன் சுருக்கம். ஆகவே நாஜிகள் காலகட்டம் பற்றி பல ஃப்ளாஷ்பேக்குகள் உண்டு.

இப்படத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் கிட்டத்தட்ட ஜெர்மனியிலேயே நடந்தன. ஆனால் படம் என்னவோ ஆங்கிலத்தில்தான். இருப்பினும் இதில் வேடிக்கை என்னவென்றால் நாஜிகள் வரும் சீன்கள் மட்டும் ஜெர்மனில் வந்தன, கீழே சப்டைட்டில்கள் ஆங்கிலத்தில். இதில் ஒரு நுண்ணிய விஷயம் உண்டு. திடீரென ஜெர்மன் மொழியை கொண்டு வந்ததில் அந்தந்த காட்சிகளில் வந்தவர்களை நம்மிடமிருந்து அன்னியமாக்கியதுதான் நடந்தது. அதுதான் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் நோக்கமாகவும் இருந்திருக்க வேண்டும்.

நான் ஜெர்மன் கற்றுக்கொள்வதற்கு முந்தைய காலத்தில் எல்லாம் இரண்டாம் உலகப்போர் பற்றிய படங்களில் ஜெர்மானியர் தோற்கும்போது பார்வையாளர்களுடன் சேர்ந்து நானும் மகிழ்ந்திருக்கிறேன். ஆனால் அதுவே நான் ஜெர்மன் கற்ற பிறகு அவ்வாறு மகிழ இயலவில்லை. அதே போல பாகிஸ்தானி சீரியல்களை பார்க்கும்போது உருது நன்கு புரிந்ததால் அவை அன்னியமாகத் தோன்றவில்லை. அதுவும் அங்கும் முறைப்பையன்/முறைப்பெண் என்றெல்லாம் வந்தபோது இன்னும் அதிகப் பாந்தமாகவே தெரிந்தது.

சப்டைட்டில்கள் பற்றி சில எண்ணங்கள்
சப்டைட்டில்கள் போடும்போது பலவிஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கும். எழுத்துக்களின் பின்புலனுக்கு தகுந்த முறையில் வண்ணத்துடன் இருக்க வேண்டும். அதை கவனியாது பல ஃபிரெஞ்சு படங்களில் இரண்டும் ஒரே வண்ணத்தில் இருக்க சப்டைட்டில்களை படிக்க இயலாமல் போனதுதான் நடந்தது. அதை விட இன்னொரு கொடுமை நடந்தது. Jean Paul Belmondo என்னும் பிரஞ்சு நடிகர் நடித்த L'heritier என்னும் படத்த்தை ஆங்கில சப்டைட்டில்களுடன் காட்டினார்கள். அதில் ஒரு காட்சியில் இத்தாலிய மொழியில் பேசுவார்கள். அதற்கு ஃபிரெஞ்சு சப்டைட்டில்கள் போட்டிருக்கிறார்கள். ஆங்கில சப்டைட்டில்கள் போட்ட மூதேவி இந்தக் காட்சியில் அவற்றை ஃபிரெஞ்சு சப்டைட்டில்கள் மேலேயே போட்டு படுத்தியது. ஆக பிரெஞ்சையும் பார்க்க இயலவில்லை, ஆங்கிலத்தையும் பார்க்க இயலவில்லை. என்ன, சொதப்பல்கள் எல்லா நாட்டிலும் நடக்கின்றன என்று வேண்டுமானால் அல்ப திருப்தி அடையலாம்.

ரிச்மண்டு தமிழ்சங்க இடுகையில் வந்த ஒரு சமாதானத்தையும் டோண்டு ராகவன் ஒத்துக் கொள்ளவில்லை என்பதைக் கூறவும் வேண்டுமோ?

ரோசா வசந்த் ஜ்யோவ்ராம் கருத்து வேற்றுமை
இரு தரப்பிலிருந்தும் அவரவர் வெர்ஷன்கள் வந்து விட்டன. என்ன கூறுவது? நான்கைந்து பெக்குகள் உள்ளே போய்விட்டால் என்னவெலாம் ஒரு மனித்னுக்குள் மாறிவிடுகிறது? நேற்று மாலை நண்பர் என்றென்றும் பாலாவின் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவர் சாதாரணமாக பதிவர் சந்திப்புகளுக்கு வரமாட்டார். ஒருவரின் எழுத்துக்களை படிப்பது வேறு, அந்த எழுத்துக்களை எழுதியவரை சந்திப்பது வேறு என்னும் கொள்கையுடையவர் அவர். நான் அதற்கு நேர்மாறானவன்.

இந்த விவகாரம் பற்றி பேசியபோது ஒருவேளை அவரது நிலைப்பாடுதான் சரியாக இருந்திருக்குமா என்ற எனது ஐயப்பாட்டை வார்த்தைகளில் கூறினேன். அவரும் கடந்த காலத்தில் பலமுறை நான் சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஈடுபட்டிருந்தாலும் பதிவர் சந்திப்புகளுக்கு சென்றது குறித்து அவரது வியப்பை வெளிப்படுத்தினார். பிறகு எனது வயது காரணமாக பதிவர்கள் மனதில் என்னைப் பற்றிய வன்முறை எண்ணங்கள் வராது தடுத்திருக்கும் என்றும் கூறினார்.

ஆக வயதாவதும் நல்லதுதான் போலிருக்கிறது. பை தி வே அடுத்தப் பதிவர் மீட்டிங் எப்போ?

அன்புடன்,
டோண்டு ராகவன்10/23/2009

இன்னும் அதிக புதிர்கள்

போன புதிர்கள் பதிவிலிருந்து இன்னும் விடையளிக்கப்படாத கேள்விகள் இங்கே முதல் மூன்று கேள்விகளாக வருகின்றன.

1. ஒரே தெருவில எதிரெதிரா வந்த காருங்க மோதிக்கலைதான். ஆனாலும் ஒவ்வொரு காரிலிருந்தும் ஒரு பயணிங்கற கணக்குல மொத்தம் ரெண்டு பேர் அவுட்டு. எப்படி?

2. விஷத்தை சாப்பிடலைன்னா கூட இந்த தம்பதிங்க இறந்துட்டாங்க, ஏன்? இத்தனைக்கும் அவங்க சாப்பிட்டது ஒரே ஒரு பழம்தான்.

3. அடிக்கடி சிலேடையால் ஆங்கிலேய மன்னனை வெறுப்பேற்றியதால் விதூஷகனுக்கு தூக்கு தண்டனை தந்தான் மன்னன். பிறகு மனமிரங்கி இனிமேல் சிலேடை பண்ணாமலிலிருந்தால் மன்னிப்பு என செய்தி அனுப்ப, அப்பவும் சிலேடையை விடாததால் விதூஷகன் தூக்கிலிடப்பட்டான். என்ன நடந்தது?

4. கண்ணப்பர் அந்த 26 மாடி கட்டடத்தின் மேல் மாடி ஜன்னலிலிருந்து பார்க்கிறார். ஒரே போர் அடிக்கிறது. ஜன்னல் கதவைத் திறந்து அதன் வழியே குதிக்கிறார். செங்குத்தான கட்டிடம். கீழே மெத்தை போன்று ஒன்றையும் காணோம். அப்படியும் கீழே விழுந்தும் கண்ணப்பருக்கு அடி ஏதும் படவில்லை. அவர் பாரச்சூட்டும் உபயோகிக்கவில்லை. என்ன நடந்தது?

5. இரண்டு கார்கள் மலைப்பாதையில் வளைந்து வளைந்து வந்து அந்த பூங்காவின் வாசலில் வந்து நிற்கின்றன. ஏழு பேர் இறங்கி பார்க்கில் செல்கின்றனர். திடீரென மழை ஆறு பேரிடம் குடை எல்லாம் இருந்தன. ஏழாமவரிடம் அது ஒன்றும் இல்லை. ஆனால் அந்த ஆறுபேர் நனைந்து விடுவோமா என அஞ்ச, ஏழாமவர் அலட்டிக் கொள்ளவே இல்லை. அந்த ஆறு பேர் சொட்டச் சொட்ட நனைகின்றனர் ஆனால் ஏழாமவர் நனையவேயில்லை. இது எங்கனம்?

6. கோவிந்தசாமி கொலைக்குற்றச்சாட்டுக்கு இலக்காகி தூக்கு தண்டனை கிடைக்கிறது. கண்டம் செல்லிலிருந்து தப்பித்து ஓட்டம் எடுக்கிறான் அவன். கைவசம் ஒரு துப்பாக்கி வேறு. ஒரு விமானத்தில் திருட்டுத்தனமாக ஏறி, அதையும் ஹைஜாக் செய்கிறான். பிறகு துப்பாக்கி முனையில் எல்லோரையும் பயமுறுத்தி 5 லட்சம் ரூபாய் பணமும் ஒரு பாரச்சூட்டும் கேட்டு பெறுகிறான். துப்பாக்கி முனையில் பைலட்டை பயமுறுத்தி பிளேனை ஓட்டச் செய்கிறான். பிளேன் சிறிது தூரம் பறந்ததும் பாரச்சூட் துணையுடன் கீழே குதிக்கிறான். ஆனால் பணத்தை மறதியாக பிளேனிலேயே விட்டு விடுகிறான். பிறகு விசாரணைக்கு வந்த போலீஸ் அதிகாரி பணத்தை மட்டும் எடுத்து அரசு கஜானாவில் செலுத்தி விட்டு, கேஸ் அவ்வளவுதான் என்கிறார். தப்பிய குற்றவாளியை பிடிக்க வேண்டாமா?

7. ஒருவன் திநகர் பனகல் பார்க்கிலிருந்து ஜெமினி வரை நடக்கிறான். பட்டப் பகல் வேளை. தெருவெல்லாம் கும்பல். இருப்பினும் அவ்வாறு நடந்து செல்லும்போது ஒருவரையும் அவன் பார்க்கவில்லை. வேறு யாரும் அவனைப் பார்க்கவும் இல்லை. எவ்வாறு?

8. ஒரு ஐந்து கிலோமீட்டர் நீளம் கொண்ட பாலம். அது பத்தாயிரம் கிலோகிராமுக்கு மேல் ஒரு கிராம் கூட அதிகம் பாரம் தாங்காது. ஒரு லாரி, அதன் எடை சரியாக 10,000 கிலோகிராம், பாலத்தில் விரைந்து செல்கிறது. பாலத்தின் நடுவில் ஒரு சிறுபறவை முப்பது கிராம்தான் எடையிருக்கும். அது பறந்து வந்து லாரியின் மேல் உட்காருகிறது. அப்போதும் பாலம் உடையவில்லை? ஏன்?

9. ஒரு தந்தை தன் பெண்ணிடம் கூறுகிறார். “நீ அன்னிக்கு ரொம்ப லேட்டாக விடியற்காலை மூன்று மணிக்குத்தான் வந்தாய். உனக்காக நானும் உன் அம்மாவும் ரொம்பக் கவலையுடன் காத்து கொண்டிருந்தோம். இனிமேலும் இம்மாதிரி நடக்கவே கூடாது என விரும்புகிறேன்” கண்டிப்பாக அம்மாதிரி நடக்க சான்ஸே இல்லை அப்பா” என பெண் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறாள். அவள் எப்படி அதை அவ்வளவு நிச்சயமாகக் கூறினாள்?

10. ஒரு குறிப்பிட்ட நாட்டின் அரசு தனது ஒரு துறையில் வேலை செய்பவர்களுக்கு தினம் இலவசமாக பிஸ்கட்டுகள் தருகிறது. அவை அவர்கள் சாப்பிட அல்ல, பாதுகாப்புக்காக வழங்கப் படுகிறது. என்ன நடக்கிறது இங்கே?

அன்புடன்,

டோண்டு ராகவன்

10/22/2009

டோண்டு பதில்கள் - 22.10.2009

கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?

அனானி (09.10.2009 மாலை 07.16-க்கு கேட்டவர்)
1. What will be the reaction of dinamalar after the arrest of the editor lenin in connection with actress issue?(actress Bhuvaneswari arrest affair)
பதில்: என்ன ரியேக்ஷன் புடலங்காய்? துக்ளக் போன்ற வெகு சில பத்திரிகைகளைத் தவிர்த்து ஆர்த்தால், எல்லா இந்தியப் பத்திரிகைகளுமே அரசு விளம்பரங்களை நம்பியே இருக்கின்றன. காம்ப்ரமைஸ்தான் நடக்கும்.

2. Thaanaith thalaivar Karunanidthi has once again proved his unconditional support to thirai ulagam. your comment please?
பதில்: திரையுலகில்தானே குத்தாட்டம் போடும் நடிகையர் உள்ளனர். பத்திரிகை ஆசிரியர்கள் குத்தாட்டம் போட்டால் அதை பார்ப்பது யாராம்?

3. Suppose the press publish thirai ulaga rakasiyangkal with valid proof. what the sangam will react?
பதில்: முக்கிய திரையுலகப் புள்ளிகளுக்கு எதிராக எத்தனை சான்றுகள் தந்தாலும், உண்மை செய்தி வெளியிடுபவர் பாடு திண்டாட்டம்தான்.

4. It is reported in some journals that some actress who have acted in one or two films are able to build big houses with costly car? is it true or false news by the press to increase circulation?
பதில்: சில சமயம் உண்மை, சில சமயம் பொய் கலந்த உண்மை மற்ற சமயங்களில் உண்மை கலந்த பொய்.

5. Can you cite one senior Tamil actress who was very popular and termed as fire by the senior male actors?( not at all involved like this)
பதில்: பி. பானுமதி அவர்கள். ஆனால் அவர்களைப் பற்றியும் அக்காலகட்டத்தில் கிசுகிசு செய்திகள் வந்துள்ளன. என்ன, அவர் அதற்கெல்லாம் கவலைப்படாது போடா ஜாட்டான் என்ற ரேஞ்சில் தன் செயல்பாட்டை வைத்து கொண்டார்.


அனானி (11.10.2009 காலை 05.34-க்கு கேட்டவர்)
1. இவர் நல்ல நகைச்சுவை நடிகர். பாடவும் தெரியும்.ஆனால் வாய் கொழுப்பால் சினிமா வாய்ப்பை இழந்து, சினிமா தயாரித்து வறுமையில் இறந்தார் யார் இவர்?
பதில்: ஜே.பி. சந்திரபாபு. அவருக்கு திருநாவுக்கரசர் என்ற பட்டப் பெயரும் இருந்ததாக படித்துள்ளேன்.

2. இவர் நல்ல நகைச்சுவை நடிகர். ஆடவும் தெரியும். தன் பையன் திரையுலகில் பிரகாசிக்க முடியாமல் போன வருத்ததிலும், பையனின் குடி பழக்கத்தாலும் நொந்து இறந்தார் யார் இவர்?
பதில்: நீங்கள் நாகேஷை சொல்கிறீர்களா?

3. இவர் நல்ல நகைச்சுவை நடிகர்.ஆனால் பஞ்ச் டயலாக் விட்டு இப்போது பஞ்சரய் உள்ளார். யார் இவர்?
பதில்: விவேக்?

4. இவர் நல்ல நகைச்சுவை நடிகர். ஒரு பெரிய நட்ச‌த்திரத்தோடு மோதி ஒரு வழி ஆனார் யார் இவர்?
பதில்: வடிவேலு?

5. இவர் நல்ல நகைச்சுவை நடிகர்.பிறருக்கு உதவி செய்து நலிந்தார்.தனக்கு மிஞ்சித்தான் தான தருமம் என்பது புரியாத இவர் யார்?
பதில்: என்.எஸ். கிருஷ்ணன்

6. புகழின் உச்சியில் இருந்தபோது குடியால் அழிந்த நகைச்சுவை நடிகர் யார்?
பதில்: சுருளிராஜன்

7. எம்ஜிஆரின் காலில் அரசியல் பொதுக்கூட்டங்களில் விழுந்தே பேர் பெற்ற நகைச்சுவை நடிகர் யார்?
பதில்: ஐசரி வேலன்.

8. திற‌மை இருக்கு ஆனால் விருத்தி இல்லா நகை. நடிகர் யார்?
பதில்: தெரியவில்லை.

9. 60 வருடங்களுக்கு முன்னால் திரைப்பட நகைச்சுவைக்கும் இன்றையதற்கும் என்ன வேறுபாடு?
பதில்: ஒன்றும் அதிக வித்தியாசம் இல்லை. ஒரு திரைப்படத்தில் காமெடி ட்ராக்கை ஓட்டுவது அப்படியே மாறாமல் உள்ளது.

10. மேலே சொல்லப்ப‌ட்டவர்கள் தவிர நகைச்சுவையில் பிற பிரபலமானவார்களாய் யார் யார் உங்கள் நினைவில் நிழலாடுகின்றனர்?
பதில்: டணால் தங்கவேலு, எஸ்.வி.சேகர், கிரேசி மோகன் இன்னும் பலர்.

குப்புக்குட்டி
1. பின்னூட்டத்தில் அண்டா அண்டாவா "கட் அண்ட் பேஸ்ட்" செய்தே கலவரப் படுத்தும் பதிவர்(?!) யார்?

பதில்: தமிழ் ஓவியா. அவரது பதிவுகள் கூட பெரும்பாலும் கட் அண்ட் பேஸ்ட்தான்.

2. அப்படியிருந்தும் அவரை விடாமல் சீண்டுவதேன்? நிஜமாவே அந்த பின்னூட்டங்களை வெளியிடுவதற்கு முன் படிப்பீர்களா?
பதில்: எல்லா பதிவுக்கும் வரமாட்டார். பெரியார் பற்றிய அசௌகரியமான உண்மைகளைக் கூறினால் சப்பைக்கட்டு கட்ட வருவார். என்ன எழுதியிருப்பார் என்பது தெரியும், ஆகவே கூர்ந்தெல்லாம் படிப்பதில்லை.

3. ஆம் எனில் பொறுமைக்கு ஏதேனும் நோபல் பரிசு இருந்தால் அதை தங்களுக்குத் தர பரிந்துரைக்கலாமா?
பதில்: கட் அண்ட் பேஸ்ட் பொறுமையாக செய்யும் அவருக்குத்தான் ஏதேனும் பரிசு தர வேண்டும் என நினைக்கிறேன்.

4. சாதி மதம் பத்தி எந்த சந்திலாவது யாரவது பேசினால் உடனே டார்ஜான் போல ஆங்கே பிரசன்னமாகி கருத்து மழை பொழியும் பதிவர் யார்? தேவை இருக்கோ இல்லையோ அடிக்கடி நான் நாத்திகவாதி என்று கூறவும் செய்வார்? அப்பப்ப சரக்கு கவிதை எல்லாம் போடுவாரு, யார் அவர்?
பதில்: வால் பையன். நமக்கு தோஸ்த். இக்கேள்விக்கான அவரது பதில் உங்களுக்கு இருக்கிறது மண்டகப்படி. பார்க்க நானும் ஆவலாக உள்ளேன்.

5. அடுத்த தரப்பு நியாங்களை கேட்காமல் கருத்து சொல்லாத நாட்டாமை யார்?
பதில்: யார், தெரியவில்லையே!

6. தமிழ் தேசிய உணவின் பெயரில் குழுவா கும்மியடிக்கும் பதிவு எது ?
பதில்: இட்டிலிவடை

7. சிரங்கூன் ரோடு என்.ஆர்.ஐ பதிவரின் கருத்துக்களை பிடிக்குமா ? (இந்த தொழில் அதிபருங்கோ தொல்லை தாங்கலைப்பா)
பதில்: யாரைக் கூறுகிறீர்கள் என புரியவில்லை.

8. உங்க பதில்களை இப்படி விடுகதை ரேஞ்சுக்கு வாசகர்கள் இட்டு செல்வார்கள் என்று நினைத்தீர்களா?
பதில்: குறிப்பாக இதுதான் வரும் என எதிர்பார்த்திருக்க இயலாதுதான். ஆனால் ஏடாகூடமான கேள்விகள் வரும் என பொதுவாக எதிர்பார்த்தது உண்மையே.


ரமணா
1.தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு சிலர் சொந்தக் காசு செலவழித்து இலங்கை சென்றது உங்களுக்கு எப்படி படுகிறது?
பதில்: தணல் வலைப்பூவில் வந்துள்ள இலுப்பைப்பூ என்னும் இப்பதிவில் உங்களுக்கு வேண்டிய விஷயம் கிடைக்கலாம்.

2. இதற்கு முதல்வர் கருணாநிதி அவ்ர்களின் வழக்கமான சமாளிப்பு எப்படி?
பதில்: சமாளிப்பு திலகம் என அவருக்கு பட்டம் தரலாம்.

3. இதுக்கு ஜெ.ன் ரியாக்ஷன் என்ன?
பதில்: எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து என்ன எதிர்பார்க்க இயலும்?

4. நெல்லையில் துணை(மிகச் சிறிய எழுத்துகளில் -நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்ற விளம்பரம் போல) முதல்வர்( மெகா சைஸ் எழுத்துகளில்)சாலையில் இருமருங்கும் 5 அல்லது 10 அடிக்கு இடை வெளிவிட்டு -ஸ்டாலின் புகழாரம் கலர் பேனர்கள்-நாம் எங்கே போகிறோம்?
பதில்: நெல்லைக்கு போகிறோம்.

5. ஸ்டாலினை கருணாநிதியால் திட்டம் போட்டு திமுகவில் திணிக்கபட்ட தலைவர் என்று சொல்லி (மாவட்டம் முழுவதும் அன்று வை கோபால் சாமியோடு எதிர்த்த பெருந்தலைகள் இன்று ஸ்டாலின் துதிபாடும் செயல் பார்த்து அண்ணா (அவருக்கு பாவம் ஒரே ஒரு பேனர்)வின் ஆத்மா என்ன நினைக்கும்?
பதில்: அவருக்குத்தான் எதையும் தாங்கும் இதயம் ஆயிற்றே.

6. இந்த வரலாறு காணாத(கருணாநிதியை மிஞ்சிய)வரவேற்பிக்குபின்னால் தென்மண்டலச் செயலர் அழகிரியின் நடவடிக்கை மாறுமா?
பதில்: அது பற்றி ஸ்டாலின் அல்லவா கவலைப்பட வேண்டும்?

7. மீண்டும் அரசியல் சாணக்கியர் தில்லை அரசர் ஜெ யுடனா?
பதில்: அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.

8. இலங்கை வாழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை சட்டம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளுமா?
பதில்: அபத்தமான கோரிக்கை. எந்தக் கட்சியாக இருந்தாலும் ஏற்கக் கூடாது.

9. சுவிஸ் பண விவகாரம் என்னவாச்சு?
பதில்: ஸ்விஸ் வங்கிக் கணக்குகள் ரகசிய பாதுகாப்பில் அரசியல்வாதிகளுக்கு மிகவும் அக்கறை உண்டு.

10. வடஇந்தியாவில் ஒரு சில பகுதிகளில் கொடுரமான தீவிரவாதச் செயல்கள் மீண்டும். எதிரி நாடுகளின் சித்து விளையாட்டா?
பதில்: அதுவும் முக்கியக் காரணமே. வேறு காரணங்களும் உள்ளன.

கேப்டன் விஜயகாந்த் நாயுடு
1. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் மொத்தம் ஏழு பேர். அவற்றில் தமிழர்கள் மொத்தம் மூன்று பேர். அந்த மூன்று பேருமே பிராமணர்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: தமிழர்கள், அதிலும் பிராமணர்கள் என்பதில் மகிழ்ச்சிதான். ராமனின் சகோதரர் மகன் சந்திரசேகர்.


அனானி (15.10.2009 மாலை 05.56-க்கு கேட்டவர்)
1) ஒபாமா கொண்டாடிய தீபாவளியிலும் ஐயங்கார் புரோகிதர்? ஐயங்கார் கொடி வொயிடவுஸ் வரைக்கும் பறக்க ஆரம்பித்துவிட்டதே ?
பதில்: இது என்ன கூத்து? செய்திக்கான சுட்டி ஏதேனும்?

2) மைசூர் மகாராஜாவின் ஒட்டியாணம்? கருணாநிதி ஜெயலலிதாவைப் பற்றி சொன்னதற்கு என்ன பின்புலம்?
பதில்: அசிங்கமான எண்ணங்கள்.

3) புவனேஸ்வரியை சிக்க வைத்து பிடித்த மாதிரி ஃபிஷ் நடிகையையும், நட்பு நடிகையையும் பல சமயங்களில் போலீஸ் ஏடாகூட நிலையில் பிடித்த போதும் கேஸ் போடாமல் விட்டது ஏன் ? பெரிய இடத்து கனெக்ஷனா?
பதில்: நீங்கள் குறிப்பிட்டுள்ள நடிகையர்கள் பற்றி இவ்வகையில் நான் செய்தி படித்ததாக நினைவு இல்லை.


வஜ்ரா
1. இந்திய ஊடகங்களில் பெரும்பாலும் பேசப்படாமல் போன Goldstone report பற்றியது. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா இஸ்ரேலுக்கு எதிராக தனது வாக்கைப் பதிவு செய்துள்ளது. இந்தியாவுடன் சேர்ந்து, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பஹ்ரின், கத்தார், சவுதி அரேபியா, போன்ற ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நாடுகள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளது. குறைந்த பட்சம், இங்கிலாந்து, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளைப்போல் வாக்களிக்காமல் இருந்து நடுநிலமையை நாட்டிக்கொண்டிருக்கலாம் அல்லவா? இந்தியா இப்படி இஸ்ரேலுக்கு விரோதமாகச் செல்வதனால் diplomatic recourse ஆக, இஸ்ரேல் நமக்குக் கொடுக்க வேண்டிய தளவாடங்களில் விளையாண்டால், நாம் என்ன செய்ய முடியும்?
பதில்: என்ன செய்வது, அது இஸ்ரேலின் விதியாகவே அமைந்து விட்டது. இந்த அரேபியர்கள் என்ன அட்டூழியம் செய்தாலும் அவர்களிடம் இருக்கும் எண்ணெய்க்காக இந்தியா போன்ற நாடுகள் அவர்களுக்கு சாதகமாக பேச வேண்டியிருக்கிறது. அப்படியிருந்தும் இந்தியா பாகிஸ்தான் விவகாரம் என்றால் அரேபியர்கள் பாகிஸ்தானுக்குத்தான் ஜால்ரா அடிப்பார்கள்.

இஸ்ரேலுக்கும் இதெல்லாம் தெரியும். ஆகவே அது நமக்கு தரவிருக்கும் தளவாடங்களில் விளையாடாது. அம்மாதிரியெல்லாம் அல்பத்தனமாக செய்வது அரேபியர்களுக்கே உரித்தானது.


மீண்டும் அடுத்த வாரம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/21/2009

விமரிசனத்தை நேருக்கு நேர் நின்று கொண்டு எதிர் கொள்ளும் கமலஹாசன் - 2

இப்பதிவின் முதற்பகுதி இங்கே.

சம்பந்தப்பட்ட மரைக்காயர் பதிவில் பேட்டியின் அடுத்தப் பகுதியும் வந்துள்ளது. முழுமை கருதி இங்கும் அது சுட்டப்படுகிறது. அதன் வரிகளை முதலில் பார்ப்போம்.

மக்கள் உரிமை: செப்.11, 2001 (அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தகர்ப்பு) சம்பவத்திற்குப் பிறகு முஸ்லிம்கள் மீது உலகளாவிய ஒடுக்குமுறை ஏவப்பட்டுள்ளது. பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பிறகு வளர்ந்தோங்கிய மதவாதத்தால் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லிம்கள்தான். எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்ல, ஆனால் பயங்கரவாதிகள் அனைவரும் முஸ்லிம்களே! என்ற கருத்து பரப்பப்படுகிறது. வலுவான குரலில்லாத முஸ்லிம் சமுதாயத்தை சினிமா போன்ற சக்தி வாய்ந்த ஊடகங்கள் ஒடுக்குவது சரியா?

கமல்: விவாதம் செய்வது என்று தொடங்கி விட்டால், விவாதங்கள் தொடர்ந்து கொண்டேதான் போகும். என்னைப் பொறுத்தவரை எல்லா சமுதாயங்களிலும் நல்லவர்களும், கெட்டவர்களும் கலந்தே இருக்கிறார்கள். குறிப்பிட்ட சமுதாயத்தில் எல்லோரும் நல்லவர்கள் என்றோ, குறிப்பிட்ட சமுதாயத்தில் எல்லோரும் கெட்டவர்கள் என்றோ சொல்ல முடியாது. ஆர்.எஸ்.எஸ். பரப்பி வருகின்ற கருத்தான 'எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்ல, ஆனால் பயங்கரவாதிகள் எல்லோரும் முஸ்லிம்கள்'' என்ற கருத்தில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை.

'உன்னைப் போல் ஒருவன்' படம் பிடிக்காத பத்து முஸ்லிம் இளைஞர்கள் என் வீட்டின் மீது கல் வீசினால் அந்த பத்து பேர் மீது பத்து நாளைக்கு நான் கோபப்படலாம். ஆனால் அந்தக் கோபம் முஸ்லிம் சமுதாயமே இப்படித்தான் என்று திரும்பிவிடக் கூடாது. ஆனால் நடைமுறையில் அதுதான் நடக்கிறது. யாரோ சிலர் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பொறுப்பாக்குவது மிகத் தவறானது.(அருகிலிருந்த இயக்குநர் அமீரை சுட்டிக்காட்டி நகைச்சுவையாக) இவர் ஒரு கொலையே செய்துவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு அவர்தான் பொறுப்பு. அவர் சார்ந்திருக்கும் மதம் அவரது செயலுக்கு பொறுப்பாகாது. பயங்கரவாதத்தை மதத் தோடு சம்பந்தப்படுத்துவது தவறு. இன்றுகூட (9.10.2009) மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பலரும் பலியான செய்தி பத்திரிகைகளில் வந்துள்ளது. அவர்களை மதத்தோடும், இனத்தோடும் சம்பந்தப்படுத்துவதில்லை. அவர்கள் ஏன் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

மக்கள் உரிமை: உன்னைப் போல் ஒருவன் படம் முஸ்லிம்களுக்கு ஆழமான காயத்தைத் தந்திருக்கிறது இதற்கு என்ன பரிகாரம் காணப் போகிறீர்கள்?

கமல்: முஸ்லிம்களைக் காயப்படுத் துவது என்பது என் நோக்கமல்ல. முஸ்லிம் களைக் காப்பாற்ற வேண்டும் என்பதும் என் நோக்கமல்ல. நானும் இவரும் (அமீர்) இணைந்து சமுதாயத்திற்கு நிறைய செய்ய வேண்டியுள்ளது. இவர் (அமீர்) என்றால் இவருக்கு சமய நம்பிக்கை உள்ளது. எனக்கு இல்லை.

முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றி படத்தில் தவறான செய்திகளைத் தந்துவிட்டு பிறகு, தெரியாமல் 'அறியாமையில் அவ்வாறு செய்துவிட்டேன்' என்று அறி யாமையை சிலர் கேடயமாக்கிக் கொள்ள லாம். ஆனால் நான் அறியாமையைக் கேடயமாக்கிக் கொள்ள விரும்பவில்லை. மேலும் நான் என்னைத் தற்காத்துக் கொள்ளவும் பேசவில்லை. படம் நன் றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை எதிர்த்து ஏதாவது செய்தால் அது ஒருவகையில் படம் மேலும் விளம்பரமாவதற்கு உதவும். மனக்காயப்பட்டிருந்தால் அந்தக் காயத்தை நான்தான் ஆற்றவேண்டும். அதை வெறும் விவாதங்களின் மூலம் செய்ய விரும்பவில்லை. செயல்பாடுகளின் மூலம் சரிசெய்ய விரும்புகிறேன்.

'நாம் மீண்டும் சந்தித்துப் பேசுவோம்'' என்று புன்னகையோடு பேட்டியை நிறைவு செய்தார்.


உன்னைப் போல் ஒருவன் படம் குறித்த 'கூர்மையான விமர்சனக் கணைகளை பிரதியெடுத்து கமலிடம் வழங்கினோம்.
நமது நியாயங்களை உணர்ந்து கமல் என்ன செய்யப் போகிறார்...? பொறுத்திருந்து பார்ப்போம்.


மீண்டும் டோண்டு ராகவன். நான் முன்பு சொன்னதுபோலத்தான். அதாவது, கமலஹாசனை எனக்கு நல்ல நடிகர் என்னும் முறையில் மிகவும் பிடிக்கும். மற்றப்படி அவரது தனி அபிப்பிராயங்கள் மற்றும் அவரது சொந்த வாழ்க்கை பற்றி நான் அலட்டிக் கொண்டதில்லை. அவரே ஏற்கனவே பலமுறை பல இடங்களில் கூறியது போல அவை முழுக்க முழுக்க அவரது சொந்த விஷயங்கள். எனது பார்வை கமல் என்னும் நடிகருடன் முடிந்து விடுகிறது. அதற்கு மேல் சென்றதில்லை.

இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்ப்பேனா என்றும் தெரியாது. ஆகவே அது பற்றி வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பற்றியோ அவற்றுக்கான எதிர்வினை பற்றியோ எனது கருத்துகள் முன்முடிவு ஏதும் இல்லாமல்தான் இருக்கும். நான் இங்கு பார்ப்பது கமல் என்னும் கலைஞர் விமரிசனங்களை எவ்வாறு கையாளுகிறார் என்பது பற்றியே. பார்த்தவரை நன்றாகவே எதிர்வினையாற்றியுள்ளார்.

தீவிரவாதிகள் அனைவருமே இசுலாமியர் என்ற உணர்வு வருதலுக்கு முக்கியக் காரணமே, தாங்கள் நிகழ்த்திய ஒவ்வொரு தீவிரவாத நிகழ்வுக்கு பிறகும் அல்கொய்தா, தாலிபான் போன்ற அமைப்புகள் அந்த நிகழ்வை ஒரு புனிதப் போராகவே வர்ணிப்பதுதான் என நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/20/2009

ரொம்ப நாட்களுக்கு பிறகு மீண்டும் புதிர்கள்

புதிர்கள் விஷயம் வழக்கம் போலத்தான். விடைகள் தர இயலாத கேள்விகள் அடுத்த புதிர்கள் பதிவுக்கு கேரி ஓவர் ஆகும். அம்புட்டுதேன்.

1. ராமகிருஷ்ணமாச்சாரிக்கு கோபமான கோபம். “அதெப்படி? நான் அறுபது மைல் வேகத்துலே காரை ஓட்டினேன் போல. அதனால போலீஸ் பிடிச்சுட்டாங்க. ஆனால் அதே தெருவில் எழுபது மைல் வேகத்துக்கு குறையாத அளவில் காரை ஓட்டின அந்தக் கட்டேல போனவங்க ரெண்டு பே ரை மட்டும் ஒண்ணுமே சொல்லாம விட்டுட்டாங்க”? அதானே, ஏன் அப்படி நடந்தது?

2. வேலை செய்யற இடத்துல துணி கிழிஞ்சதாலே வடிவேலு செத்துட்டான். இது நியாயமா?

3. ஒரே தெருவில எதிரெதிரா வந்த காருங்க மோதிக்கலைதான். ஆனாலும் ஒவ்வொரு காரிலிருந்தும் ஒரு பயணிங்கற கணக்குல மொத்தம் ரெண்டு பேர் அவுட்டு. எப்படி?

4. விஷத்தை சாப்பிடலைன்னா கூட இந்த தம்பதிங்க இறந்துட்டாங்க, ஏன்?

5. நாற்காலியோட முருகனை அவங்க அப்பா அம்மாவே கட்டறாங்க. ஆனால் முருகன் கோபித்து கொள்ளவில்லை.

6. மஞ்சுளா சென்னையில் செத்தாள். ஆனால் கமலாவோ கடலிலேயே செத்தாள். கமலா செத்ததற்கு மட்டும் எல்லோரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். மஞ்சுளா செத்ததுக்கு அவளைத் திட்டினர். என்ன வில்லத்தனம்?

7. அடிக்கடி சிலேடையால் ஆங்கிலேய மன்னனை வெறுப்பேற்றியதால் விதூஷகனுக்கு தூக்கு தண்டனை தந்தான் மன்னன். பிறகு மனமிரங்கி இனிமேல் சிலேடை பண்ணாமலிலிருந்தால் மன்னிப்பு என செய்தி அனுப்ப, அப்பவும் சிலேடையை விடாததால் விதூஷகன் தூக்கிலிடப்பட்டான். என்ன நடந்தது?

8. 1964-ல் பிறந்த ஒருவன் 28 வயதில் 1968-ல் இறக்கிறான். எப்படி சாத்தியம்?

9. மாட்டை 30 அடி நீளக் கயிற்றாலே கட்டியிருக்காங்க, ஆனாக்க அதனால் நாற்பது அடிதூரத்துல இருக்கற வைக்கோற்போரை மேய இயலுகிறது, எப்படி?

10. இந்த இரு சொற்களில் நிறையா எழுத்துக்கள் உள்ளன. அவை என்ன?


அன்புடன்,
டோண்டு ராகவன்

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 20.10.2009

சூட்சுமம் புரியும் வரைதான் பிரமிப்பும்
தில்லியில் இருந்தவரை நான் கணினியை தொட்டுக்கூட பார்த்ததில்லை. தொண்ணூறுகளின் துவக்கத்தில் ஐ.டி.பி.எல்.லில் முதன் முறையாக கணினிகள் வர ஆரம்பித்தன. எனது காட்ஃபாதர் ஜலானி அவர்கள்தான் அதற்கு இன்சார்ஜ். அப்போது கற்றுக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் என்ன செய்வது, அலுவலக அரசியல் கூத்துக்களால் என்னால் அது செய்ய முடியாது போயிற்று.

பிறகு 1993-ல் வீ.ஆர்.எஸ். வாங்கி முழுநேர மொழிபெயர்ப்பு ஆரம்பித்தபோது கணினியின் விலை கிட்டத்தட்ட 70 ஆயிரம் ரூபாய்கள். அவ்வளவு பணம் செலவழிக்க மனம் இல்லை. மேலும் மொழிபெயர்ப்புகளை கையாலேயே எழுதி, ஜாப் டைப்பிஸ்டுகளிடம் தந்து தட்டச்சு செய்வித்து கொண்டதால் அதன் அவசியமும் புலப்படவில்லை.

ஆனால் ஒன்று. எனது மொழிபெயர்ப்புகளை ஏஜென்சிக்காரர்கள் கணினியில் தட்டச்சு செய்யும்போது ஆச்சரியத்துடன் பார்ப்பேன். எலிக்குட்டியை அடிக்கடி நகர்த்தி, க்ளிக் செய்து என்றெல்லாம் எனக்கு அச்சமயம் புரியாத விஷயங்களை செய்த வண்ணம் இருப்பார்கள். அதுவும் டெக்ஸ்ட் பாக்ஸ் விவகாரம் மிகவும் பிரமிப்பூட்டியது.

மொத்தத்தில் கூறப்போனால் இப்போது நான் அனாயாசமாக, தன்பாட்டுக்கு செய்யும் கணினி ஆப்பரேஷன்கள் அப்போது எனக்கு பிடிப்படாதவை என்பதே நிஜம். ஆனால் இப்போது கூட என்னால் அந்த நிலையை கற்பனை செய்ய இயலும். என்ன, இப்போது அவற்றில் பல விஷயங்களை நானே போகிறபோக்கில் செய்வதால் பிரமிப்பு போயிந்தி.


ஷெர்லாக்ஸ் ஹோம்ஸ்
இப்பெயரைத் தெரியாதவர்கள் ஆங்கில புத்தகங்கள் படிப்பவர்களில் மிகச்சிலரே இருப்பார்கள். அவரது துணைவர் மருத்துவர் வாட்ஸனும் ஒரு மறக்கவியலாத பாத்திரம். ஒவ்வொரு முறையும் தர்க்க சாஸ்திர முறைப்படி ஹோம்ஸ் தனது கண்டுபிடிப்புகளைக் கூற, அவற்றுக்கான பிரமிப்பை வெளிப்படுத்துபவர் வாட்ஸன். இப்படித்தான் ஒரு புது வாடிக்கையாளர் வந்த போது, அவரிடம் ஹோம்ஸ் புது வாடிக்கையாளர் பற்றி தான் அதுவரை ஊகித்த விஷயங்களைக் கூற, அவர் எங்கோ ஊசியால் குத்தப்பட்டது போல துள்ளி எழுந்து எப்படி கண்டுபிடித்தார் ஹோம்ஸ் இவற்றையெல்லாம் என அரற்ற, ஹோம்ஸ் சாவகாசமாக விளக்குகிறார். “ஓ, அவ்வளவுதானா, இப்போ பார்த்தால் ரொம்ப சுலபமாகத்தானே தெரிகிறது என வாடிக்கையாளர் சூள் கொட்ட, ஹோம்ஸ் வாட்ஸனிடம், “இதனால்தான் நான் எப்போதுமே விஷயங்களை எவ்வாறு கண்டுபிடித்தேன்” எனக்கூற விரும்புவதில்லை என்கிறார்.

எதற்கு சொல்கிறேன் என்றால், விஷயம் தெரியும் வரைக்குத்தான் மதிப்பு. தெரிந்தபிறகு சப்பென்று ஆகிவிடுகிறது. பார்த்திபன் கனவு கதை கல்கியில் வாராவாரம் வெளியானபோது, அந்தச் சிவனடியார் யார் என்பதைக் குறித்து பலரும் பலமுறையில் தலை பிய்த்துக் கொண்டார்கள். ஒரு வாசகர் படகோட்டி பொன்னன்தான் அது என்ற தனது ஊகத்தை வெளியிட்டார்.

ஆனால் அதே கதை படமாக்கப்பட்டபோது சிவனடியார் யார் என்பது ஆரம்பத்திலேயே தெரிந்து விடுகிறது. அந்த அளவுக்கு சுவாரசியம் போகிறது. ஆகவேதான் சிவனடியார் சிலரிடம் தனது வேடத்தைக் களையும்போது, கேமரா நகர்ந்து அவரது முகத்தை மறைப்பதை பார்வையாளர்கள் கேலிச் சிரிப்புடன் எதிர்கொண்டனர். திரையாக்கம் வேறு, கதை வேறு என்பதை டைரக்டர் உணராததாலேயே இந்த தடுமாற்றம் வந்தது.

நானும் உஜாலாவுக்கு மாறுகிறேன்
பலர் செய்வது போலவே நானும் ஒரு பலான ஜோக்குடன் இந்த பஞ்சாமிர்தத்தை முடிக்கிறேன்.

அவன் கட்டிளங்காளை, அவள் திமிறும் பருவஎழிலுடன் கூடிய மங்கை. இருவருக்கும் திருமணம் நடக்கிறது. தேன் நிலவுக்கு ஊட்டிக்கு செல்கின்றனர். முதலிரவும் அங்கேதான். இதற்கெனவே பல புத்தகங்கள் படித்து, நண்பர்களுடன் கலந்துரையாடியிருக்கிறான் காளை. கன்னியின் படிப்பும் இந்த விஷயத்தில் சோடை போகவில்லை.

ஆயிற்று, திருப்தியுடன் ஒரு முறை உறவு. பிறகு ஒரு மணி நேரம் இளைப்பாறலுக்கு பின்னால் இன்னொரு முறை, அதன் பிறகு மூன்று மணி நேர இடைவெளிக்கு பின்னால் மூன்றாம் முறை உறவு கொள்கின்றனர். அதற்கு மேல் அவனால் முடியவில்லை. இருவரும் தூங்க ஆரம்பிக்கும்போதுதான் கவனிக்கின்றனர், பக்கத்து அறையில் இருக்கும் ஆணும் பெண்ணும் விடாது கும்மாளம் போடுவதை. “இந்த முறை வலது பக்கம்” என ஆண்குரல் கூற, “இல்லை இடது பக்கம்தான்” என பெண்ணின் குரல் எதிர்க்க, சில நொடிகளுக்கு பிறகு ஒரே சிரிப்பு, கைத்தட்டல் ஆகிய கலாட்டாக்கள். இம்மாதிரியே இரவு முழுவதும் வலது, இடது என மாறிமாறி கலாய்ப்பு நடக்கிறது.

இளைஞனுக்கு ஒரே திகைப்பு. “சே நாமும் இருக்கிறோமே, அத்லெட்டிக்கான உடம்பு என்றுதான் பெயர், ஆனால் மூன்று முறையிலேயே ஆட்டம் க்ளோஸ். ஆனால் இங்கே பாருடா, ராத்திரி முழுக்க வலது இடது என மாறி மாறி போடறாங்க” என்று வியக்கிறான்.

அடுத்த நாள் காலையில் இளைஞனும் இளைஞியும் அறைக்கு வெளியே வருகின்றனர். பக்கத்து அறையிலிருந்து ஒரு எண்பது வயது வயது கிழவனும், எழுபத்தைந்து வயது கிழவியும் வெளியே வருகின்றனர். இளையவயதினர் இருவருக்கும் மூச்சே நின்றுவிட்டது. இளைஞன் கிழவனாரை தன்னுடன் அழைத்து சென்று காப்பி வாங்கிக் கொடுத்து பேச்சு கொடுக்கிறான். பல விஷயங்கள் பேசிய பிறகு அவரிடம் கூறுகிறான், “ சார் நான் இளைஞன், என்னாலேயே மூன்று முறைக்குமேல் உறவு கொள்ள இயலவில்லை. அதெப்படி நீங்கள் இரண்டு பேரும் ராத்திரி முழுக்க பஜனை செய்ய முடிந்தது”?

கெக்கே கெக்கே என சிரித்த கிழவர், “அடே பையா, நீ நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லை. நான் என்ன பண்ணுவேன் என்றால் மல்லாக்க படுத்து கொள்வேன். கிழவி என்னுடையதை பிடித்து மத்து கடைவது போலக் கடைவாள். விறைப்பு வந்ததும் அதை விட்டுவிடுவாள். ஒரு நொடி நின்று விட்டு அது தொப்பென்று கீழே விழும். அப்போது இடதுப் பக்கம் விழுமா, வலதுப் பக்கம் விழுமா என்பதில் நாங்கள் பந்தயம் வைப்போம் அவ்வளவுதான்” என்றார்.

ஆக, சூட்சுமம் புரியும் வரைதான் பிரமிப்பும் எனபது மீண்டும் உண்மையாகிறதல்லவா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/19/2009

விமரிசனத்தை நேருக்கு நேர் நின்று எதிர் கொள்ளும் கமலஹாசன்

ட்விட்டரில் மேயும் போது உன்னைப்போல் ஒருவன் படத்தில் கமலஹாசன் இசுலாமியருக்கு எதிர்ப்பு நிலையை கொண்டதாக அவர் மேல் பல இசுலாமியர் விமரிசனம் வைத்தனர் என்றும், அவர்களில் சிலர் இயக்குனர் அமீர் வழியாக சென்று கமலஹாசனை கேள்விகள் கேட்டனர் என்றும் அறிந்தேன். அப்பதிவிலிருந்து சிலவரிகளை முதலில் பார்ப்போம்.

இதற்காக கமல்ஹாசனுக்கு நெருக்கமானவரான திரைப்பட இயக்குநர் அமீரிடம் நமது கண்டனத்தைக் கூறி கமல்ஹாசனிடம் தெரிவிக்கக் கூறினோம். அதற்கவர் கமல்ஹாசன் இந்துத்வா சிந்தனை கொண்டவரில்லை. நீங்களே அவரை சந்தித்து விவாதியுங்கள் என்று கூறி கமல்ஹாசனுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் 09.10.2009 அன்று திரைப்பட விருது நிகழ்ச்சி, முதலமைச்சருடன் சந்திப்பு, மாலை அமெரிக்க பயணம், எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்த நிலையிலும், நமக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒதுக்கித்தந்தார் கமல். வழக்குரைஞர் ஜெய்னுல் ஆபிதீன் மற்றும் ஜி.அத்தேஷுடன் 'முஸ்லிம் சமுதாயத்தின் மீதான ஊடக வன்முறை, உன்னைப் போல் ஒருவன் படம் தந்துள்ள பாதிப்பு'' ஆகியவை குறித்து விரிவாக உரையாற்றினோம். அந்த உரையாடலின் சில பகுதிகள்...

கேள்வி: உள்நாட்டு அளவிலும், உலகளாவிய அளவிலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும், அமைதியைக் குலைப்பவர்களாகவும் சித்தரிக்கும் மதவாத செயல்கள் முழுவீச் சில் நடந்து வருகின்றன. திரைப்படத் துறையில் ஒரு மேதையாகவும், நியாயவானாகவும் அறியப்படுகின்ற நீங்கள் இந்த அநீதிக்குத் துணை போகலாமா?

கமல் : உன்னைப்போல் ஒருவன் படத்தின் மூலம் முஸ்லிம்களை கொச்சைப்படுத்துவதோ, பயங்கரவாதத்தோடு அவர்களை மட்டும் சம்பந்தப்படுத்துவதோ என் உள்நோக்கம் அல்ல. நான் யாருக்கும் எதிரானவன் அல்ல. குறிப்பாக முஸ்லிம்களுக்கு நான் எதிரி அல்ல என்பதை என்னோடு பழகியவர்கள் அறிவார்கள்.

''வெட்னஸ்டே'' என்ற வெற்றிப் படத்தை தமிழில் தயாரித்தால் பெரும் வெற்றிபெறும் என்று என்னை அணுகினார்கள்.

வெட்னஸ்டே படத்தின் கதாநாயகன் நஸ்ரூதீன் முஸ்லிம் என்பதாலும், ஆரிஃப் என்ற ஒரு நல்ல முஸ்லிம் அதிகாரி காட்டப்படுவதாலும், இந்திப்பட உலகில் இப்படம் முஸ்லிம்களுக்கு எதிரானதாக பார்க்கப்படவில்லை.

நான், ஆரிஃப் என்ற பாத்திரத்தை நல்லவராகக் காட்டுவது மட்டும் போதாது என்று மேலும் பல மாற்றங்களைச் செய்தேன். அதற்குப் பிறகும் கூட இது முஸ்லிம்களைப் பாதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறுவது ஆச்சர்யம்தான்.

நான் 'ஹேராம்' படம் எடுத்தபோது முஸ்லிம்களின் தரப்பைக் கூறுவதற்கு ஏகப்பட்ட இடங்களைத் திட்டமிட்டு உருவாக்கினேன். திரைப்பட வர்த்தகர்கள் ஹேராமில் எத்தனைப் பாட்டு, எத்தனை சண்டை? என்று கேட்டபோது, காந்தியை இந்துத்துவ தீவிரவாதி சுட்டுக்கொல்வதுதான் உச்சக்கட்ட சண்டை என்றேன்.

'ஹேராம்' முஸ்லிம்களுக்கு எதிரானபடம் என்றார்கள் சிலர். ஆனால் இந்துத் தீவிரவாதத்தை எடுத்துக்காட்டிய படம். மறக்கடிக்கப்பட்ட மாபெரும் போராளியான யூசுப்கானின் வரலாற்றை 'மருதநாயகம்' என்ற பெயரில் படமாக எடுக்கத் துணிந்தவனும் நான்தான். முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்துவது என் நோக்கமல்ல.

கேள்வி : நீங்கள் முஸ்லிம்களுக்கு இணக்கமானவர்தான். ஆனால் உங்கள் படம் காயப்படுத்தும் வகையில் தானே அமைந்துள்ளது. உதாரணத்திற்கு கோவை குண்டு வெடிப்பு சம்பவம் 1998ல் நடந்தது. குஜராத் கலவரம் 2002ல் நடந்தது. குஜராத் கலவரத்தில் முஸ்லிம் ஒருவருடைய மூன்றாவது மனைவி (வயது 16) உயிரோடு எரிக்கப்பட்டதால், அவர் பயங்கரவாதியாக மாறி கோவையில் குண்டுவைப்பது போல் கூறியிருக்கிறீர்கள் இப்படி வரலாற்றைத் திரிப்பதால்தானே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நடக்கிறது. 2002ல் நடந்த சம்பவம் 1998ல் நடந்த சம்பவத்துக்கு எப்படி காரணமாக இருக்க முடியும்?

கமல்: வரலாறு முன்பின்னாகத் திரிவடைந்து மொத்தமாகவே குழப்பி இருக்கிறது. நடந்ததை மட்டும் சொல்வதுதான் வரலாறு. நடந்த சம்வத்தின் மீது தன் கருத்தையும், பார்வையையும் கூறுவது வரலாற்றாசிரியனின் வேலை அல்ல. அதனால் ஹிந்தியில் இதிஹாஸ் (இவ்வாறு நடந்தது) என்று குறிப்பிடுகிறார்கள்.

நம்மவர் என்ற படத்தில் நான் வரலாற்று ஆசிரியராக நடித்தேன். வரலாற்றுக் குளறுபடிகளைப் பற்றி நான் செய்த விமர்சனத்தை என்ன காரணத்திற்காகவோ சென்சாரில் வெட்டிவிட்டார்கள். அதைச் சேர்க்க வேண்டும் என்று நான் வாதாடிய போதும் அவர்கள் ஏற்கவில்லை! அந்தப் பகுதி இதுதான்.

முகலாயர் படையெடுப்பு என்றும் வெள்ளையர் என்றும் நாம் பாடம் சொல்லித் தருகிறோம். முகலாயர்கள் இங்கு வந்து, இங்குள்ள பெண்களையே திருமணம் செய்து கொண்டு இங்கேயே அரண்மனைகளைக் கட்டி ஆட்சி செய்தார்கள். இந்த நாட்டை அவர்கள் வளப்படுத்தினார்களே தவிர, இங்கு சுரண்டி ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு போய் சேர்க்கவில்லை.

ஆனால் ஆங்கிலேயேர்கள் இங்கு வளங்களைச் சுரண்டி பிரிட்டனில் சேர்த்து வைத்தார்கள். அவர்கள் இந்த நாட்டைத் தம் நாடாக ஒரு போதும் கருதியதே இல்லை. ஆனால் முகலாய மன்னர் பஹதூர் 'இந்த நாட்டில் தன் உடலைப் புதைக்க ஆறுகெஜ நிலம் கிடைக்க வில்லையே என்று கண்ணீர்க் கவிதையை பர்மா சிறையிலிருந்து எழுதினார். (அந்த உருது கவிதையை கமல் மனப்பாடமாகவும் சொன்னார்.

இந்த நாட்டை வளப்படுத்தியவர்களை படையெடுத்தவர்கள் என்றும், சுரண்டியவர்களை வருகை தந்தவர்கள் என்றும் எப்படி சொல்லாம் என்பது தான் நான் வைத்த விவாதம்.

கேள்வி : தற்போதைய தமிழ்த் திரையுலகம் மீது எங்களுக்கு மரியாதை இல்லை. ஆனால் நியாயத்திற்காகக் குரல்கொடுப்பவர் என்ற முறையில் உங்கள் மீது ஒரு மதிப்பு உண்டு. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது, நீங்கள் கண்டனம் செய்ததை நாங்கள் மறக்க வில்லை.

கமல் : நான் நடிகனாக அல்ல மனிதனாக இருந்து அந்த அராஜகத்தைக் கண்டித்தேன். ராமஜென்ம பூமி என்கிறார்கள். ராமர் பிரந்த இடம் என்று சதுரஅடிவரை கணக்கிட்டுச் சொல்கிறார் கள். பிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் அதுதான் என்கிறார்களா?. இதில் கலைஞரின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.

தலைப் பிரசவத்திற்கு பெண்கள் பிறந்த வீட்டிற்கு செல்வதுதான் தொன்று தொட்ட வழக்கம். அப்படிப்பார்த்தால் கோசலையின் சொந்த ஊர் கந்தஹார் ஆப்கானிஸ்தானில் இருக்கிறது. ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பவர்கள் ஆப்கானிஸ்தானில் போய் வேண்டுமானால் கட்டலாம் என்றார். அதுதான் எனது நிலைப்பாடும்.

கேள்வி : அப்போது பிரதமர் நரசிம்மராவைக்கூட சந்தித்தீர்களே?

கமல் : பம்பாய் கலவரத்தின் (1993) கொடுமைகளை நேரில் பார்த்து என்னால் மனம்தாள முடியாமல் அங்கேயே அழுது விட்டேன். உடனே சென்று திரைப்படப் பிரமுகர்களுடன் பிரதமர் நரசிம்மராவை சந்தித்தேன். நடந்த சம்பவங்கள் குறித்துக் கேட்டேன். மஹா ஆரத்தி பற்றி எதுவுமே தெரியாது என்றார். என்னுடன் வந்த நண்பர் இதைக்கேட்டு கேலியாக சிரித்து விட்டார் (அவர் முஸ்லிம் நண்பர்) இதனால் அவருக்கு கொஞ்சம் கோபம்.

கலவரங்களின் போது மகாத்மா காந்தி வீதியில் இறங்கி நடந்துள்ளார். வாருங்கள், நாங்கள் உங்களோடு வருகிறோம். பம்பாய் வீதிகளில் நடந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்போம் என்றேன்.

அது எனக்குப் பாதுகாப்பானதில்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் சொல்கிறார்கள் என்றார்.

பிரதமருக்கே பாதுகாப்பில்லை என்றால் சாதாரண பாதசாரிகளுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும்? என்றேன்.

சற்று கோபமாக முறைத்த நரசிம்மராவ் நினைத்த உடன் கிளம்புவதற்கு இது ஒன்றும் சினிமா 'ஷுட்டிங் இல்லை என்றார். நீங்கள் நினைப்பது போன்றதல்ல சினிமா 'ஷுட்டிங். அதற்கும் ஏராளமான முன் திட்டங்கள் வேண்டும். மக்களைச் சந்திப்பதற்காக எங்களுடன் வரமுடியுமா? என்றேன்.

நிலைமையின் வளர்ச்சியைப் பார்த்து முடிவு செய்யலாம்'' என்றார்.

உடனே நான் இந்த நிலைமை மேலும் வளர அனுமதிக்கப் போகிறீர்களா?'' என்றேன்.

உடனே கோபமான அவர், எனக்கு நீங்கள் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கிறீர்களா?

Do you teach me english? என்றார். வேறெதுவும் கேட்க வேண்டுமா? என்று வேறுபக்கம் பார்த்துக் கொண்டு கேட்டார்.

பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு வெளியேறினோம். அப்போது ஆனந்த விகடன் இதழில் இச்சம்பவம் விரிவாக வந்திருந்தது.

கேள்வி : மணிரத்தினத்தின் பம்பாய் திரைப்படம் இந்தக் கலவரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. அந்தப் படமும் முஸ்லிம்களை வன்முறையாளர் களாகத்தானே சித்தரித்தது?

கமல்: இதை நான் அப்போதே எதிர்த்தேன்.

(முஸ்லிம்களைத் தொடர்ந்து குற்றவாளிகளாக சித்தரிப்பது தவறானது மணிரத்னத்தின் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கமல்ஹாசன் பம்பாய் படம் குறித்து பேட்டியளித்திருந்தார்) இவ்வளவுக்கும் மணிரத்னம் எனது உறவுக்காரர். அவருக்கு எங்கள் பெண்ணைக் (மணிரத்தினம் மனைவி சுஹாசினி கமலின் அண்ணன் மகள்) கொடுத்திருக்கிறோம். அவர் எனக்கு மாப்பிள்ளை முறை, ஆனாலும் கூட நியாயத்தை நான் கூறினேன். அவரது படத்தின் விளைவாக எதாவது விபரீதம் நடந்திருந்தால், எங்கள் பெண்ணுக்குதானே பாதிப்பு...

கேள்வி : செப்-11, 2001 சம்பவத்திற்குப் பிறகு (அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தகர்ப்பு) ரஹழ் ர்ய் பங்ழ்ழ்ர்ழ்ண்ள்ம் என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது உலகளாவிய அளவில் ஒடுக்கு முறை ஏவப்பட்டுள்ளது. நம் நாட்டில் பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப்பிறகு வளர்ந்தோங்கிய மதவாதத் தால் பாதிக்கப்படுவர்களும் முஸ்லிம்கள்தான்.

எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல, ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லிம்கள் என்ற கருத்து பரப்பப் படுகிறது. ஊடகங்களிலும் வலுவான குரலற்ற (Voiceless Community) சமுதாயமாக உள்ள முஸ்லிம் சமுதாயத்தை சினிமா போன்ற சக்திவாய்ந்த ஊடகங்கள் மேலும் ஒடுக்குவது சரியா?

கேள்வி : பயங்கரவாதிகள் ஏன் உருவாகிறார்கள்?

கேள்வி : உன்னைப் போல் ஒருவன் உருவாக்கிய காயத்தை எப்படி ஆற்றப் போகிறீர்கள்?

போன்ற கேள்விகளுக்கு கமலின் பதில்கள் தொடரும்........ இன்ஷாஅல்லாஹ்


மீண்டும் டோண்டு ராகவன். கமலஹாசனை எனக்கு நல்ல நடிகர் என்னும் முறையில் மிகவும் பிடிக்கும். மற்றப்படி அவரது தனி அபிப்பிராயங்கள் மற்றும் அவரது சொந்த வாழ்க்கை பற்றி நான் அலட்டிக் கொண்டதில்லை. அவரே ஏற்கனவே பலமுறை பல இடங்களில் கூறியது போல அவை முழுக்க முழுக்க அவரது சொந்த விஷயங்கள். எனது பார்வை கமல் என்னும் நடிகருடன் முடிந்து விடுகிறது. அதற்கு மேல் சென்றதில்லை.

இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்ப்பேனா என்றும் தெரியாது. ஆகவே அது பற்றி வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பற்றியோ அவற்றுக்கான எதிர்வினை பற்றியோ எனது கருத்துகள் முன்முடிவு ஏதும் இல்லாமல்தான் இருக்கும். நான் இங்கு பார்ப்பது கமல் என்னும் கலைஞர் விமரிசனங்களை எவ்வாறு கையாளுகிறார் என்பது பற்றியே. பார்த்தவரை நன்றாகவே எதிர்வினையாற்றியுள்ளார். இனிமேல் வரும் பகுதிகளையும் பார்ப்போமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/15/2009

அப்பாடி, ஒரு வழியாக மடிக்கணினி வாங்கி விட்டேன்

நான் பலமுறை பல இடங்களில் கூறியது போல என்னை எனது கணினியின் அருகாமையிலிருந்து பலவந்தமாக இழுத்துக் கொண்டுதான் என் வீட்டம்மா கோவில்கள் டூருக்கு அழைத்து செல்வார். நானும் நடுவில் வரும் ஊர்களில் ஏதேனும் உலாவி மையங்களை தேடிச் செல்வேன்.

சில மாதங்களுக்கு முன்னால் ஒரு புது வாடிக்கையாளர் என்னை ஒரு மாதகாலத்துக்கு ஹைதராபாத் வந்து அங்கு மொழிபெயர்ப்பு/துபாஷி வேலை செய்யவியலுமா எனக் கேட்டதற்கு நோ சான்ஸ் எனக் கூறிவிட்டேன். ஏனெனில் எனது மற்ற வாடிக்கையாளர்களது வேலையை புறக்கணிக்க இயலாது அல்லவா? அப்போதுதான் நான் ஏன் ஒரு மடிக்கணினி வாங்கிக் கொள்ளக் கூடாது என யோசிக்க ஆரம்பித்தேன்.

ஆனால் அது மட்டும் போதாதே, இணைய இணைப்பும் நான் செல்லுமிடத்திலெல்லாம் இருக்க வேண்டுமே. அதற்குத்தான் டேட்டா கார்ட் வாங்கிக் கொள்ளலாம் என எனது கணினி குரு முகுந்தன் கூறினான்.

பல நாட்கள் யோசித்த பிறகு போன சனியன்றுதான் காம்பாக் மடிக்கணினியும் ரிலையன்ஸ் டேட்டா கார்டும் வாங்கினேன். மடிக்கணினி மொத்தமாக 34000 ரூபாய் ஆயிற்று. டேட்டா கார்ட் ரூபாய் 3500. மடிக்கணினியை செட் செய்வதில் சிறிய பின்னடைவு ஏற்பட்டது. விண்டோஸ் எக்ஸ்.பி. மீடியா செண்டரை அதில் ஏற்ற இயலவில்லை. கடையில் போய் கேட்டால் ஏதோ பயாஸில் ஒரு ஆப்ஷனை செயலிழக்கச் செய்ய வேண்டும் எனக் கூறி அதை செய்தும் காட்டினார்கள். மீதியை முகுந்தன் பார்த்து கொண்டான். ஆனால் அதெல்லாம் செவ்வாயன்றுதான் நடந்தது. அதற்குள் டேட்டா கார்டும் செயலாக்கப்பட்டது.

இப்போது அமர்க்களமான வேகத்தில் இணையத்தில் உலாவ முடிகிறது. ஸ்கைப்பும் போட்டுக் கொண்டேன். அதற்காக மேஜை கணினியை விட்டு விட முடியுமா. அதையும் பராமரிக்கிறேன். இப்போது எனது கோப்புகள் இரு கணினிகளிலும் ஏற்றப்படுகின்றன. இதுவே நல்ல Backup ஆகவும் ஆகிவிட்டது. இப்போது என்னிடம் மூன்று இணைய இணைப்புகள் உள்ளன, டாட்டா இண்டிகாம், ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் டேட்டாகார்ட். சரியான முன்ஜாக்கிரதை முத்தண்ணா என்று வேண்டுமானாலும் கூறிக் கொள்ளுங்கள்.

இதில் என்ன வேடிக்கை என்றால் 2002-ல் நான் டெஸ்க்டாப் வாங்கியபோது அதன் விலை கிட்டத்தட்ட 35,000 ரூபாய். அப்போது மடிக்கணினி கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்கள், எனக்கு தெரிந்து டேட்டா கார்டுகள் லேது. வெறுமனே தொலைபேசி இணைப்புகள்தான் பெரும்பாலும். நவம்பர் 2002-ல்தான் டிஷ்னெட் போட்டுக் கொள்ள முடிந்தது. அதற்கு அப்போதைய செலவு 32,000 சொச்ச ரூபாய்கள்.

எல்லாவற்றுக்கும் ஒரு வேளை வரவேண்டும் என நினைக்கிறேன். 2000 ஆண்டில்தான் எனது மிகப்பெரிய வாடிக்கையாளரை தில்லியில் பிடித்தேன். 2001-ல் சென்னைக்கு வந்தபிறகும் அவரது வேலைகளால்தான் முதல் மூன்று ஆண்டுகளுக்கு சென்னையில் குப்பை கொட்ட முடிந்தது. இப்போது சென்னையிலும் நல்ல பிக்கப் ஆகிவிட்டது. இனிமேல் எங்கு சென்றாலும் கவலையில்லை என்னும் நிலைதான். எல்லாம் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனின் அருள்தான். ஆகவே 2000 ஆண்டுக்கு முன்னால் வந்திருந்தால் வாடிக்கையாளரை பிடிப்பதில் பிரச்சினையாக இருந்திருக்கும்.

பை தி வே மடிக்கணினியில் சிறு பிரச்சினை. ஷட் டௌன் செய்யும்போது கடசியில் மூடாது சிஸ்டம் தொங்குகிறது. நானும் சரியான வழிமுறைகளையே உபயோகித்தாலும் அப்படித்தான் நடக்கிறது. ஆகவே ஒவ்வொரு முறையும் பவர் ஸ்விட்ச் மூலம்தான் அணைக்க நேரிடுகிறது.

மறுபடியும் சிஸ்டத்தை ரீலோட் செய்ய வேண்டும் என முகுந்தன் அபிப்பிராயப்படுகிறான். ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை. ஏனெனில் மிகவும் சள்ளை பிடித்த வேலை. எனது ஏவிஜி, அட்அவேர், பிராக்டிகௌண்ட் & இன்வாய்ஸ் ஆகிய மென்பொருட்களை மீண்டும் நிறுவ வேண்டும். அவற்றில் பலவற்றுக்கு பல இற்றைப்படுத்தல்களும் செய்ய வேண்டும். விண்டோஸ் எக்ஸ்பிக்கும் பல இற்றைப்படல்கள் தேவைப்படும்.

நண்பர்கள் யாரேனும் ஆலோசனை த்ரவியலுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு பதில்கள் - 15.10.2009

கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?

ராஜன்
1. பரிசுகளை வென்றுள்ள திரைப்படங்களில் 98 சதவிகித திரைப்படங்களின் டிவி ரைட்ஸ்கள் கலைஞர் டிவியிடம்தான் உள்ளனவாம். திரைப்படங்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கியதால் அவர்களுக்கு பரிவு காட்டும் பொருட்டு இந்த ஏற்பாடு?
பதில்: கேள்விலேயே பதில் தொக்கி நிற்கிறதே. ஆமாம் உளியின் ஓசையின் கதை என்ன? அதை யார் துணிந்து வாங்கினார்கள்? சன் குழுமம்?

2. யாருக்காக யாரால் ஆட்சி செய்யப்படுகிறது?
பதில்: முதல்வர்தம் மக்களால் அவர்தம் மக்களால் நடத்தப்படுகிறது அவரது மக்கள் ஆட்சி.

3. ஜீ தமிழ்த் தொலைக்காட்சியும், சன் தொலைக்காட்சியும் ஒரே நாளில் அரை மணி நேர வித்தியாசத்தில் 'சுப்பிரமணியபுரம்' திரைப்படத்தை ஒளிபரப்பியதில் இருக்கும் மர்மம்?
பதில்: உண்மைத் தமிழனின் இப்பதிவைப் பார்க்கவும்.

4. 'பூ' பார்வதியையும், 'பொம்மலாட்டம்' ருக்மணியையும் தாண்டி த்ரிஷாவுக்கா?
பதில்: கிளாமராய நமஹ

5. கமலஹாசனின் 50 ஆண்டு திரையுலக வாழ்க்கை?
பதில்: பிரமிக்க வைக்கிறது.

அனானி (06.10.2009 மாலை 05.2-க்கு கேட்டவர்)
1. DMK leader Mr.Karunanithi has donated his Gopalapuram house for the use of hospital for the treatment of poor people. His sons have given their consent for this. What is your comment for this?
பதில்: காரணங்கள் எதுவாக இருப்பினும் கலைஞரின் இந்த சமிக்ஞை வரவேற்புக்கு உரியதே.

2. Is Saratkumar going to the dmk fold once again?
பதில்: சரத்துக்கு வேறு போக்கிடம்தான் ஏது?

நான் நினைக்கிறேன், ஒரு நேரத்தில் ஒரு நடிகர் மட்டுமே தமிழக அரசியலில் பிரகாசிக்க முடியும். எம்ஜிஆர் இருக்க சிவாஜி, பாக்கியராஜ், டி. ராஜேந்தர் ஆகியோர் பிசுபிசுத்து போனார்கள். அதே போல விஜயகாந்த் ஒரு மாதிரி முன்னேற கார்த்திக், சரத் ஆகியோர் அடிபடுகின்றனர். எஸ். வி சேகர் கூட இதை நினைத்து யோசிக்க வேண்டியுள்ளது.

3. Will ramadoss join with dmk again?
பதில்: 2011-க்குள் என்னென்னவோ நடக்கலாமே. இப்பவே ஏன் மண்டையை உடைத்துக் கொண்டு யோசிக்க வேண்டும்?

4. Why is Jeyalaitha doing all the damage the admk?
பதில்: தெரியவில்லையே. விநாசகாலே விபரீத புத்தி.

5.it seems the tamil nadu will be ruled by dmk for ever. is it true? (based on state govt employees'100 %support, huge money power, huge cadre power, free schems, free medical help to poor, strong allainace,weak admk)
பதில்: அரசியலில் எதுவும் நடக்கலாம். விஜயகாந்தை குறைத்து மதிப்பிடலாகாது. தமிழக வாக்காளர்களையும் குறைத்து மதிப்பிடலாகாது. திடீரென ஜனாதிபதி ஆட்சி தேர்தல் நேரத்தில் வந்தால், தேர்தலில் கண்டிப்பான செயல்பாடுகள் வந்தால், பணபலம் பிரயோசனப்படாது.

கந்தசாமி
1. கந்து வட்டி பிசினஸ்காரர்கள், பதுக்கல் வியாபாரம் செய்பவர்கள், அடுத்தவர் சொத்தை அபகரிக்கும் எத்தர்கள், அரசுக்கு வரிகட்டாமல் ஏய்ப்பு செய்யும் களவாணிகள், வாங்கும் சமபளத்திற்கு நியாயமாய் வேலை செய்யாமல் லஞ்சம் வாங்கும் கபோதிகள், நியாயமற்ற அரசியல்வாதிகள், இவர்களில் ஒரு பகுதியினர் திருப்பதி வெங்கடாசலபதியை பார்ட்னராய் பாவித்து வரும் கொள்ளையில் ஒரு பகுதியை கோவில் உண்டியலில் போடும் செயல் பற்றி உங்கள் கமெண்ட்?
பதில்: இந்த வழிமுறை ஆண்டாண்டுகாலமாக நடந்து வருவதுதானே. இதில் புதிது ஒன்றும் இல்லையே. தனது திருட்டில் பாதியை நாணயமாக உண்டியலில் போடும் திருடனின் கதை மதனகாமராஜன் காலத்திலிருந்தே இருந்து வருகிறதே.

2. இது மாதிரி நம் மாநிலத்தில் நடை பெறும் ஒரு செயலாய் எதை சொல்வீர்கள்? (அரசியல் சம்பந்தப்பட்டது)
பதில்: இலவச டிவி, இலவச வாயு இணைப்புகள் ஆகியவை என்னவாம்?

3. இலவசம் கொடுத்து இளிச்சவாயராய் ஆக்கும் போக்கு பற்றி?
பதில்: உங்கள் முதல் கேள்வியில் கூறிய உதாரணங்களே.

4. உலகவெப்பமயமாதலின் இயற்கையின் கோபம்தான் ஆந்திர கர்நாடக வெள்ளமா?
பதில்: அப்படித்தான் என்று பல சீரியஸ் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். அதே சமயம் கோபம் என்றெல்லாம் நான் கூற மாட்டேன். எதிர்வினை என்றுவேண்டுமானால் கூறலாம். எதற்கும் பாலாவின் பதிவைப் பாருங்கள்.

5. ஒரு கிலோ அரிசி ரூபாய் 100 ஆந்திராவில், இனி?
பதில்: ஆந்திராவில் துவரம் பருப்பு என்ன விலை ஒரு கிலோவுக்கு?

எம். அருணாச்சலம்
1. நடிகை புவனேஸ்வரியின் செயலுக்கும், மருத்துவரின் அரசியல் flip-flop க்கும் ஏதாவது வேறுபாடு காண்கிறீர்களா?
பதில்: புவனேஸ்வரிக்கும் மருத்துவருக்கும் என்ன சம்பந்தம்?

2. நடிகர் வடிவேலுவின் விஜயகாந்துக்கு எதிரான வீராப்பு பேச்சும், பின்பு தேர்தல் சமயத்தில் அதே வடிவேலு பேச்சுமூச்சே இல்லாமல் போனதற்கும், திருமா, குருமா போன்றவர்களின் இலங்கை வீராப்பு பேச்சுகள் சமயம் வரும்போது (தேர்தல் சமயம்) சத்தமின்றி மறந்து போய் அதுவரை எதிர்த்து வந்த காங்கிரஸ் கட்சியுடனேயே கூட்டு வைப்பதற்கும் ஏதாவது வேறுபாடு காண்கிறீர்களா?
பதில்: அது பற்றிக் கூறவேண்டுமானால் பின்புலனில் நடந்த பேரங்கள், கொடுக்கல் வாங்கல்கள் ஆகியவை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். அவை எனக்குத் தெரியாதே.

அனானி (08.10.2009 காலை 10.52-க்கு கேட்டவர்)
1. நோபல் பரிசுக்கு தெரிவாகியுள்ள, சிதம்பரத்தில் பிறந்த, அமெரிக்கர், இங்கிலாந்தில் வசிப்பவர், டாக்டர்.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - பிராமணர் என்ற ஒரே காரணத்திற்காக தமிழக அரசியல் வட்டாரத்தில் கொண்டாடப்படவில்லையே? என்ன கொடுமை சார் இது?
பதில்: அவர் என்ன சாதி என்று தெரியவில்லை. ஆனால் பிராமணராக இருக்கும் வாய்ப்பு அதிகமே. ஆகவே அதனால் மட்டுமே தமிழக அரசு அவரைக் கண்டு கொள்ளவில்லையென்றால் நஷ்டம் அவருக்கல்ல. அவர் எப்போதோ தமிழகத்தின் சுழற்சியை விட்டுப் போய்விட்டார்.


சவகிருஷ்ணா
1. புவனேசுவரி வழக்கில் தினமலர் ஆசிரியர் கைது செய்யபட்டது சரிதானே ஏன் ரமேசை கைது செய்யவில்லை
பதில்: முக்கியமாக பத்திரிகைகளுக்கு லீக் செய்த போலீசாரைத்தான் கண்டிக்க வேண்டும். SITA சட்டத்தின் அக்கிரமங்களை சாடவேண்டும். நடிகை புவனேஸ்வரியை போலீசார்களே போலி வாடிக்கையாளரை ஏற்பாடு செய்து அவரை வரவழைத்து பிடித்த நிகழ்ச்சி முதல் பார்வையிலேயே provocation policière என அறிய முடிகிறது. இப்போது பத்திரிகைகளுக்கும் அவ்வாறு செய்தி தந்த போலீசார்தான் முதல் குற்றவாளி.

எம். கண்ணன்
1. மது அருந்தும்போது அதை நல்ல கோப்பையில் ஊற்றி அதில் ஐஸ் கட்டியோ, சோடாவோ, லெமனேட், கோலா, தக்காளி சாறு என கலந்து அரைக் கப்பை அரை மணிநேரம் உறிஞ்சியபடி, வறுத்த முந்திரிகளையோ, நல்ல உருளை சிப்ஸ் அல்லது கடலை/வெங்காய மிக்ஸ் என நண்பர்களுடன் அளவளாவியபடி எஞ்சாய் செய்யாமல் டாஸ்மாக்கில் பல்வேறுவித மணங்கள், வாந்தி மற்றும் இன்னபிற சமாச்சாரங்களுடன் கல்ப் அடிப்பதில் என்ன சுகம் கிடைக்கப்போகிறது ? ஃபைவ் ஸ்டார் பார் எல்லாம் வேண்டாம். ஏன் தமிழக அரசு டாஸ்மாக்கை கள்ளுக்கடை சாராயக்கடை ரேஞ்சுக்கே வைத்திருக்கிறது ? (ஒருவித குடோன் போல)
பதில்: இதற்கான பதிலைக் கூற வேண்டியவர் வால்பையனே. ரோசா மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தரைக் கூட கேட்களாம். ஆனால் வெறும் தம்ஸ் அப்புக்கு ஃபிளாட் ஆகும் முக்கிய மடிப்பாக்கம் பதிவர் இதற்கான விடையைக் கூறுவாரா எனத் தெரியவில்லை.

2. டில்லியிலும் சரி சென்னையிலும் சரி மத்திய/மாநில அரசுப் பணிகளில் இருப்போர் வெளியூர் செல்லும்போது அந்த அந்த ஊர் அரசு அதிகாரிகளை ரூம் புக் பண்ணி, கார் புக் பண்ணி என ஒருவிதமாக வேலை வாங்கிக்கொள்கிறார்களே? இவர்கள் பண்ணும் அலம்பல் (அதைக் கொண்டா, இதைக் கொண்டா என) ஜாஸ்தியாக இருக்கிறதே ? மேலும் இவர்கள் மக்கள் பணத்தில் தானே 2 அல்லது 3 கார், ஜீப் என எல்லாவற்றிற்கும் உபயோகிக்கிறார்கள்?
பதில்: இதெல்லாம் காலத்தின் கட்டாயம். இல்லாவிட்டால் ரிப்போர்ட் நல்லபடியாக இருக்காது. உதாரணத்துக்கு மிக யோக்கியமான ஆய்வு அதிகாரி வந்து தனக்குரிய படிகளுக்குள் தங்கி செலவு செய்து காலணாவுக்குக் கூட ஓசி பெறாது உண்மையான அட்வெர்ஸ் ரிப்போர்ட் தருபவர்கள் மகாத்மாக்கள் என போற்றப்படுவார்களா? ஏண்டா போயும் போயும் இந்த யோக்கிய மொட்டை நாய் நம்ம இன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்தான் என்றுதானே நொந்து கொள்வார்கள் கீழ்மட்ட அதிகாரிகள்?

3. தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் கைதுக்குப் பிறகு அனைத்து நாளிதழ், வார இதழ்களும் சுதாரிக்குமா? விவேக்கின் பேச்சு ஓவராகத் தெரிகிறதே?
பத்திரிகைகளும் சரி நடிக நடிகையரும் சரி ஒருவரைச் சார்ந்து மற்றவர்கள் இருப்பதுதான் நிஜம். நடிகர்கள்/நடிகைகள் மிகவும் உணர்ச்சிப்படுபவர்கள். சிலருக்கு அம்மாதிரி தருணங்களில் ஓவரா சீன் காட்டுவது வழக்கமே.

4. விஜய் டிவியில் கோபிநாத் நடத்திய 'உங்களில் ஒருவன் உலகநாயகன்' நிகழ்ச்சியில் கமல்ஹாசன் 'பார்ப்பண மகளிர் - ஷாப்டாச்சா என்றெல்லாம் பேசி தமிழை கொலைசெய்கின்றனர். அதை கேலிசெய்துதான் தான் சில தமிழ் சம்பந்தப்பட்ட கேலிகளை படத்தில் வைத்ததாகவும் சொன்னார். எந்த பார்ப்பண மகளிர் தற்போதெல்லாம் 'ஷாப்டாச்சா' என்று பேசுகின்றனர் ? கமல் பழகிய பார்ப்பன மகளிர் 20- 25 ஆண்டுகள் முந்தைய பார்ப்பன மகளிராக இருக்கலாம். இவரின் 'ஹே ராம்' படத்தில் இந்தி ட்ரீம் கேர்ள் ஹேமமாலினி இதே 'ஷாப்டாச்சா' வசனத்தை எப்படி பேசினார்? அவருக்கு இயக்குனராக சொல்லிக் கொடுத்தது யார்?
பதில்: கமலஹாசன் ஒரு கலை வியாபாரி. நல்ல சரக்கைத் தருகிறார். அது போதுமே. அவரது தனிப்பட்ட கருத்துகள் அவருடையவை.

5. அதென்ன பார்ப்பண மகளிர்? தற்போது பார்ப்பனர் அல்லாத இளைஞிகளும் சிவா என்பதை ஷிவா எனவும் சக்தி என்பதை ஷக்தி எனவும் தானே உச்சரிக்கின்றனர். (அலைபாயுதே முதல் ஆரம்பித்த பழக்கம்)
பதில்: சிவா என்பதற்கு சரியான வடமொழி உச்சரிப்பு ச-வுக்கும் ஷ-வுக்கும் இடையில் இருக்கும். அதற்கான எழுத்துரு தமிழில் வேண்டுமானால் ஸ்லோக புத்தகங்களில்தான் தேட வேண்டும். மேலும் அவை கிரந்த எழுத்துக்களே.

6. கர்நாடகம் - ஆந்திரம் வெள்ள சேதத்திற்குப் பிறகு நதி நீர் இணைப்பு முயற்சிகள் வலுப்பெறுமா? இல்லை எதிர்ப்பு வலுக்குமா? இந்த அளவிற்கு சேதமடைய நேர்ந்ததற்கு ஆந்திராவில் முதல்வர் ரோசைய்யாவின் கட்டளைகளைக் கேட்டு நடக்க விருப்பமில்லாத அதிகாரிகள்/அமைச்சர்களும் காரணமா?
பதில்: வெள்ளம் பாட்டுக்கு வரும், போகும். அவற்றால் எல்லாம் நதிநீர் இணைப்பு வரும் என நான் நம்பவில்லை. நாட்கள் ஆக ஆக அதற்கான சாத்தியக் கூறுகள் குறைந்துதான் வருகின்றன. மற்றப்படி ரோசையாவின் வார்த்தைகளை அதிகாரிகள் கேட்கவில்லை என்பது எனக்கு புதிய செய்தி.

ஆந்திராவில் வெள்ளம் பற்றி நம்ம என்றென்றும் அன்புடைய பாலா பதிவு போட்டுள்ளார். படியுங்கள், சுவாரசியமாக இருக்கிறது.

7. ஜெ. நாளை சென்னை வருகிறாராமே? மழை பெய்யுமா?
பதில்: வந்தால் மட்டும் போதாது. உளறவும் வேண்டும். அப்போதுதானே நல்லார் ஒருவர் உளறேல் எல்லோர்க்கும் பெய்யெனப் பெய்யும் மழை என்ற வாக்கு பலிக்கும். ஆனால் அதற்கு முதலில் அவர் நல்லாராக இருக்க வேண்டுமே என்கிறீரா? சரி, சரி.

8. பொக்ரான் அணுகுண்டு சோதனை ஃபெயிலியர் என விஞ்ஞானி சந்தானம் சொல்லுகிறாரே ? ஏன் இத்தனை வருடம் கழித்து? அதை மறுக்கும் அரசு மற்றும் கலாம் கூறும் பதில்கள் ஆணித்தரமாக இல்லையே?
பதில்: சந்தானத்தின் மோட்டிவேஷன் புரியவில்லை. இருப்பினும் நமது குழப்பங்களை அம்மாதிரி வெளிச்சத்தில் காட்டுவது துரதிர்ஷ்டவசமானது.

9. பாமக மூன்றாவது அணி என்கிறதே? அடுத்த தேர்தலில் திமுக, அதிமுக இருவரும் பாமகவை சேர்த்துக் கொள்ளாவிட்டால் மருத்துவர் ஐயா என்ன செய்வார்?
பதில்: அதனால்தான் மூன்றாம் அணி என்கிறாரோ அவர்.

10. விஜய் டிவி புதிது புதிதாக நிகழ்ச்சிகளை வைத்தாலும், தாம்பரம் தாண்டி (அதாவது பெருநகரங்களைத் தவிர) அதன் ரீச் இல்லையாமே? ஆனாலும் க்ரியேடிவிடி என்பதைவிட - வெளிநாட்டு டிவி நிகழ்ச்சிகளை ஸ்டார் டிவி இந்தியில் காப்பி அடிக்க, அதை அப்படியே தமிழ்ப் படுத்துகிறது விஜய். இதைப் பார்த்து சன், கலைஞர் மற்ற டிவிக்கள் காப்பி அடிக்கிறது. டி.ஆர்.பி.யில் வெற்றி பெற ஒரிஜினலாக நிகழ்ச்சியே தயாரிக்க முடியாதா?
பதில்: அப்படியே கிரியேட்டிவிடி வைத்தால் மட்டும் என்ன ஆகிவிடுமாம்? கலைஞர் டிவி நோகாமல் அதையும் நகல் செய்யப் போகிறது. ஆகவே இதற்கென ஒரு கான்சப்டை ஏன் மெனக்கெட்டு யோசித்து வைத்துக் கொள்ள வேண்டும்?


எம். அருணாச்சலம்
1. இன்னும் ஏன் "தமிழக மனித உரிமை கழகம்" நடிகைகளின் மானம் காக்க களத்தில் குதிக்கவில்லை?
பதில்: யார் அவர்கள்?

2. கூடவே, "பெண் உரிமை சங்கமோ அல்லது கழகமோ" ஒன்று உள்ளதே, அதுவும் சேர்ந்து கோதாவில் குதித்தால், "சபாஷ், சரியான போட்டி" என்று சொல்ல இயலுமா?
பதில்: ஆக, இதெல்லாம் தமாஷ்தான் மச்சி என்கிறீர்கள்!

3. Do you think Immoral Traffic Act provides for the arrest of gigolos also for indulging or soliciting in immoral acts? If so, do you think any present day "actors" will be a prime suspect for the TN police?
பதில்: ஆண்விபசாரிகளும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. இந்த SITA சட்டம் புகுந்து பார்த்தால் பல முன்முடிவுகளை வைத்துள்ளது. ஊசி வழிவிடாது நூல் வரமுடியாது என்னும் தோரணையில் சிந்திக்கிறது. சட்டத்தின் நோக்கம் குழப்பமாக உள்ளது. உடல் உறவு குற்றமில்லை, ஆனால் அதற்காக ஆசைகாட்டி வரவழைப்பது குற்றம் என்கிறது. மற்றவரை அதில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிப்பது குற்றம் என்கிறது. எல்லாமாக சேர்ந்து இச்செயலில் ஈடுபடும் ஒரு சாராரை மட்டும் தண்டிக்கிறது.

அனானி (32 கேள்விகள் கேட்பவர்)
1. தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர் லெனினை, போலீசார் கைது செய்ததற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு. தானும் ஒரு பத்திரிக்கையாளர் எனச் சொல்லி பெருமைப்படும் கலைஞரின் அடுத்த மூவ்?
பதில்: தான் திரைத்துறையிலும் இருப்பதாகவும் கூறிக்கொள்கிறாரே?

2. முல்லைப் பெரியாறில் புதிய அணை விவகாரத்தில் ஜெ-யின் சப்போர்ட் கலைஞருக்கு,இது எப்படி இருக்கு?
பதில்: மாநிலத்தின் நலன் என வரும்போது அவ்வாறு இணைவது நல்லதே. இப்பவாவது புத்தி வந்ததே.

3. தீவிரவாதம் மற்றும் தீவிரவாதிகளை ஒழிக்க ராணுவ உதவி என்கிற பெயரில் அமெரிக்கா அளித்த கோடிக்கணக்கான பணத்தை பாகிஸ்தான் மிஸ்யூஸ் பண்ணியது கண்டு இனி அமெரிக்கா என்ன செய்ய்யும்?
பதில்: இத்தனை நாள் தெரியாமலா இருந்திருக்கும்? என்ன், இப்போது அவர்களுக்கும் தெரியும் என்பது மற்றவருக்கும் தெரிந்து விட்டது, அவ்வளவே.

4. காந்தியின் விடுதலை இயக்கம், பெரியாரின் தன்மான இயக்கம், அண்ணாவின் தமிழியக்கம், ஜெயப்பிரகாஷ் நாராயணனின் எதேச்சாதிகார எதிர்ப்பு இயக்கம், லோகியா, கிருபளானிகளின் சோஷலிச இயக்கம் பற்றி?
பதில்: காலத்தின் கட்டாயங்கள். ஆனால் அவற்றில் பெரியாரின் தன்மான இயக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியாரை அளவுகடந்த முறையில் அவமரியாதை செய்வதாக ஆகிப்போனது கோமாளித்தனமே. அவரை சீரியசாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

5. இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை:திமுகவின் ஆதரவு பற்றி?
பதில்: போகாத ஊருக்கு வழியாகத்தான் எனக்குப் படுகிறது..

6. இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை:ஜெ-யின் எதிர்ப்பு?
பதில்: ஜெ அவர்களின் ஆட்சேபணை ஏற்கக் கூடிய்தே.

7. தமிழ்குடிதாங்கிகளின் நிலை இதில்?
பதில்: அவர்களோ இடிதாங்கிய நிலையில் பதவி சுகம் இன்றி அவதிப்படுகின்றனர். அவர்களது நிலை பற்றி இங்கே என்ன வந்தது?

8. காங்கிரசுடன் உறவில் சிக்கல் வருமா திமுகவுக்கு?
பதில்: பண/அதிகார பங்கீட்டில் சிக்கல் வந்தால் வரும்.

9. அமைச்சர் சிதம்பரம் இந்த விசயத்தில்?
பதில்: அவர் என்ன ஸ்பெஷல் இதில்?

10. பொருளாதாரச் சரிவு, வேலைவாய்ப்பின்மை, சாமானியனுக்கு மருத்துவக் காப்பீடு கிடைப்பதில் கூடச் சிரமம் எனச் சொல்லப்பட்ட அமெரிக்காவின் இன்றைய நிலை?
பதில்: ஒன்றும் மாறுதல்கள் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

11. அமெரிக்காவின் பணக்காரர்கள் பாடு இப்போது எப்படி?
பதில்: எல்லா பிரச்சினைகளையும் மீறி, கடனின்றி நல்ல நிலைமையில் ஒருவன் தேவையான பணத்துடன் இருந்தால்தான் அவன் பணக்காரன் எனக் கருதப்படுவான். இது எங்குமே பொருந்தும். அதன்றி கடன் தொல்லைகளால் பீடிக்கப்பட்டு அதே சமயம் பந்தா காட்டுபவன் பணக்காரனாக இருக்க முடியாது. அதுதான் பணக்காரர்கள் என அழைக்கப்படும் இப்போதைய பணக்கார அமெரிக்கர்களது நிலை. அவர்கள் ஒரு பெரிய ரோல்லர் கோஸ்டரில் பயணம் செய்கின்றனர். பாவம் அவர்கள்.

12. முல்லைப்பெரியாறு விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் வழக்கு. இது காலம் கடந்த ஒன்றா?
பதில்: இப்போதைக்கு அப்படித்தான் தோன்றுகிறது. தனது குடும்பத்தினருக்கு மட்டும் அமைச்சகப் பதவிகள் கேட்டு காவடி எடுக்கும் முயற்சிகளை இதிலெல்லாம் கலைஞர் காட்ட மாட்டார்.

13. இந்த விசயத்தில் கலைஞரின் அடுத்த கடிதம் என்ன சொல்லும்?
பதில்: கண்ணீர் விடும் தமாஷாகத்தான் இருக்கும். நமக்கும் சிரித்து சிரித்து கண்ணீர் வரும்.

14. மத்திய அரசுக்கு எப்போதும் கேரளா மேல் ஒரு எக்ஸ்ட்ரா பாசம்? ஏன்?
பதில்: அம்மாநிலத்தில் காங்கிரஸ் பதவிக்கு வரும் வாய்ப்பு உண்டு, தமிழகத்தில் வாய்ப்பு லேது. அவ்வளவுதான் விஷயம்.

15. ஹோகனேக்கல் தண்ணிர் வருமா வராதா?
பதில்: மழை பெய்தால் வரலாம், வானத்திலிருந்து.

16. தளபதி துணைமுதல்வர்-மாவீரன் அண்ணன் மத்திய இரசாயன அமைச்சர்- 3 மாத செயல் பாடு -ஒரு ஒப்பீடு?
பதில்: அழகிரி சந்தோஷமாக இல்லை. குறுநில மன்னர் பேரரசன் அவையில் துணையின்றி இருப்பதாக உணருவது போல அவர் தில்லியில் உணர்கிறார் என நினைக்கிறேன்.

17. புவனேஸ்வரி பேட்டி பற்றிய கசமுசா பற்றி உங்கள் விமர்சனம்?
பதில்: நடிகை புவனேஸ்வரியை போலீசார்களே போலி வாடிக்கையாளரை ஏற்பாடு செய்து அவரை வரவழைத்து பிடித்த நிகழ்ச்சி முதல் பார்வையிலேயே provocation policière என அறிய முடிகிறது. முதலும் கோணல் முற்றும் கோணல்.

18. ரஜினிகூட?
பதில்: ஏன் அவர் மட்டும் என்ன ஸ்பெஷல்?

19. இந்த விசயத்தில் தினகரன் சம்பந்தப்பட்டிருந்தால் தலைவர் என்ன செய்திருப்பார்?
பதில்: மாறன் சகோதரர்களுடன் அவருக்கு இருக்கக்கூடிய உறவுதான் அதை தீர்மானிக்கும். இப்போதைக்கு நல்லபடியாக இருப்பதால் தலைவர் அடக்கி வாசித்திருப்பார்.

20. நடிகர் சங்கம் இந்த அளவுக்கு பெரிது பண்ணியிருக்குமா?
பதில்: இந்தளவுக்கு பண்ணியிருக்காது என்றுதான் நினைக்கிறேன். மேலும் அது பார்ப்பனர்களால் நடத்தப்படும் பத்திரிகை இல்லையே?

21. பொதுவாய் நடிகை என்றாலே ஏன் இப்படி கிசு கிசு?
பதில்: சம்பந்தப்பட்ட நடிகையின் துயரம் அறியாத வக்கிரம் பிடித்தவர்களுக்கு நடிகை என்றாலே கிசுகிசுதான்.

22. உங்கள் அனுபவத்தில் இது மாதிரி காயப்படாத இந்தி நடிகைகள் யார் யார்?
பதில்: காயப்பட்ட நடிகைகளா? காயப்படாத நடிகைகளா? கேள்வி புரியவில்லையே? மேலும் நான் தில்லியில் வசித்தபோது பாலிவுட் பற்றிய கிசுகிசு பத்திரிகைகள் எல்லாம் படித்ததில்லை. (உதாரணம் ஸ்டார்டஸ்ட்).

23.தமிழ் நடிகைகள்?
பதில்: முந்தைய கேள்வியின் குழப்பம் இங்கும் தொடர்கிறது.

24. ஆந்திர, கர்நாடக வெள்ளச்சேதம் உலக வெப்பமயமாதலின் எச்சரிக்கையா?
பதில்: அது ஒரு புறம் இருக்க, சம்பந்தப்பட்ட மாநிலங்களில் நடந்த பல முன்நிகழ்ச்சிகள் காரணமாக அமைந்து விட்டன. என்றென்றும் அன்புடன் பாலாவின் இப்பதிவை மறுபடியும் நான் இங்கு சுட்டுகிறேன்.

25. நதிநீர் இணைப்பு இதற்கு ஒரு தீர்வாகுமா?
பதில்: நதிநீர் இணைப்பு இப்போதைக்கு கஷ்டமே. காலம் செல்லச் செல்ல மேலும் அதிகம் சிக்கலாகும்.

26. ராஜகுமாரன் ராகுல்ஜி இனியாவது இதற்கு எதிர்ப்பு செய்வதை நிறுத்துவாரா?
பதில்: சுற்றுப்புறச் சூழலுக்கு அதனால் வரும் பாதிப்புகளையும் அலட்சியம் செய்ய முடியாதில்லையா?

27. அவரின் தலித் பாசம்? உண்மையா?
பதில்: அப்படிப் பார்த்தால் எந்தத் தலைவருமே தேற மாட்டார்களே.

28. தமிழ் நாட்டில், அடைமழை, கனமழை, புயல்மழை எனக் கொட்டும் இலவசங்களில் மூழ்கியிருக்கும் பாமர மக்களை காங்கிரஸ் பக்கம் மாற்ற அவரால் முடியாது போலுள்ளதே?
பதில்: கஷ்டம்தான் ஆனால் முயன்றால் முடியும். அதற்கு முன்னால் ஒரு காரியம் செய்ய வேண்டும். தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னாலேயே திமுக மந்திரிசபைக்கு தாங்கள் தரும் ஆதரவை நிறுத்தி குடியரசுத் தலைவர ஆட்சியை நிறுவி, நல்ல கவர்னரை நியமித்து பாரபட்சமற்ற முறையில் தமிழகத் தேர்தலை நடத்த வேண்டும். இலவச வைபவங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். முடியுமா?

29. ராஜீவ் காந்தி படுகொலை கேஸ் நளினி, இப்போது?
பதில்: இன்னும் சிறையில்தான் இருக்கிறார். விடுதலைப் புலிகள் ஒடுங்கியுள்ள இந்த நிலையில் அவரைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார் என்று தெரியவில்லை.

30. அ.தி.மு.க., வுடன் இனி உறவு இல்லை! பா.ம.க.வின் திடீர் அறிவிப்பு ஏன்? எதற்கு அச்சாரம்?
பதில்: அது மருத்துவருக்கே தெரியாது. எனக்கு மட்டும் எப்படித் தெரியும்?

31. டெல்லி மேல்சபை உறுப்பினர் பதவி நஷ்டமா டாக்டருக்கு? (அதிமுகவின் ஒப்பந்தம் இனி?)
பதில்: அது கண்டிப்பாகக் கிடைக்காது என்று ஏதேனும் சமிக்ஞை அவருக்கு கிடைத்திருக்கும் என நினைக்கிறேன். அதனால்தான் இப்போது அவர்களாகவே வெளியேறியுள்ளனர் எனத் தோன்றுகிறது.

32. திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம்,அடுத்து மதுரையில் அழகிரியாரின் கோரிக்கை பற்றி?
பதில்: அவரது கோரிக்கை என்ன? மதுரையிலும் மத்தியப் பல்கலைக்கழகம்? எனக்கு தெரியவில்லையே.


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது