11/15/2012

பிராமணாள் கபே

சமீபத்தில் ஐம்பதுகளில் சென்னை திருவலிக்கேணியில் முரளி கபேக்கு முன்னால் பிறாமணாள் ஹோட்டல் பெயர் அகலவைக்கும் போராட்டாம் ஈ.வே. ராமசாமி நாயக்கர் தலைமையில் நடந்த போது எனக்கு 10 வயது.

நாயக்கர் தார்சட்டியுடன் ஏணிமேல் ஏற, முரளி கபே ஓனர் மேலே வென்னீர் நிறைந்த பாத்திரத்துடன், “ஐயா நாயக்கரே, மேலே வென்னீர் ஊற்றுவேன்” என்று கூற மரியாதையாக நாயக்கர் கீழே இறங்கினார். பிறகு நீண்ட கோல் உதவியால் தார் பூச, செதுக்கிய கல்லில் பிறாமணாள் பெயர் இன்னும் பிரகாசிக்க ஆரம்பித்தது.

பிறகு காஞ்சிப் பெரியவா சொன்னதன் பேரில் முரளியாகவே அதை செதுக்கி வெளியே எடுத்தார். இதைப்போய் த்மது வெற்றியாக திராவிட குஞ்சுகள் பறை சாற்றிக் கொண்டது வேறு கதை.

ஸ்ரீராங்கத்தில் இது ரிபீட் ஆகியியுள்ளது. பிராமணாள் பெயர் வைத்த ஹோட்டல் வாடகை கட்டடத்தில் இருந்ததாலும், மீதி வாடிக்கையாளர்க்ளுக்கு பிரச்சினை வந்ததாலும், திகவின்ர் ரௌடி செயல்களில் ஈடுபட்டதாலுமேயே இச்சமயம் அது நீக்கப்பட்டது.

இப்போது தேவை முரளி ஐயர் போன்று துணிச்சல் உள்ள பேர்வழியும், சொந்த கட்டிடமும்தான். பிறகு பார்க்கலாம், எவன் என்ன சொல்லுகிறான் என்று.  

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/02/2012

உணர்ச்சி வசப்படுதல் தவறா?

என்னுடன் திரைப்படம் பார்க்க வரும் நண்பர்களுக்கு அது ஒரு பொழுதுபோக்கு, கூடவே சங்கடமும் கூட. அதாகப்பட்டது, நான் சினிமாக்களில் உணர்ச்சிகரமான கட்டங்களில் கூச்சமேயின்றி கண்ணீர் விட்டு அழுதுவிடுவேன்.

ஏண்டா பொட்டை மாதிரி அழுது மானத்தை வாங்கறே என்பான் என் நண்பன் ராமச்சந்திரன்.. உறவினர்களுடான் சினிமா பார்க்கச் செல்லும்போது “டோண்டு அழறான் பாரு” என்று கூறுவது என் காதுகளில் விழுந்தாலும் நான் கேர் செய்ததில்லை.

சமீபத்தில் 1969-ல் வெளியான ஆராதனா படத்தில் காஹே கோ ரோயே என்னும் இப்பாடலின்போது பேசாமல் அரங்கை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று, அவ்வளவு அழுவாச்சி.பாட்டு முடிந்ததும்தான் திரும்ப வந்தேன்.

அதை விடுங்கள் இந்த டோண்டு அப்படித்தான். நான் வேறொரு தருணத்தில் உணர்ச்சி வசபட்டது பற்றி இங்கே கூறியுளேன்.

அழுகை மட்டும்தான் உணர்ச்சி வசப்படுதலா? ஏன், சில சமயம் பெருமிதமும் அதை செய்யும். இன் ஃபேக்ட் அதை கூறுவதற்கான முன்னோடிதான் மேலே நான் எழுதியது.

ஃபிரெஞ்சில் ஃப்ரான்ஸ்வா காவன்னா என்னும் எழுத்தாளரிடம் அந்த மொழி குழந்தை மாதிரி விளையாடுவ்தை பார்த்த எனக்கு ஜெயமோகன் அவர்களிடம் தமிழ் விளையாடுகிறது என்ற ஸ்டேட்மெண்ட் விடுவதில் எத்தயக்கமும் இல்லை. அவரது காந்தியின் உடை பற்றிய பதிவிலிருந்தே உதாரணம் தருவேன். காந்தி சம்பந்தமான நமது பெருமிதத்தால் உணர்ச்சிவ்சப்பட்டேன் என்பதைக்கூற வெட்க்ப்படவில்லை.

அவ்வரிகள்:
காந்தி பிரிட்டிஷ் மாமன்னரைச் சந்திக்கச்சென்றபோது சொன்ன அந்த இருவரிகளும் திட்டவட்டமாக அவரது எண்ணத்தைக் காட்டுகின்றன. தன்னுடைய உடை தனக்கு இயல்பானது என்கிறார் காந்தி. அந்த உடையே தான் என்கிறார். அடுத்தபதில் இன்னும் நுட்பமானது. தன்னுடைய உடையையும் சேர்த்து மாமன்னர் அணிந்திருக்கிறார் என்பது சுரண்டப்படும் இந்தியாவாக அவரையும் சுரண்டும் பிரிட்ட்ஷ் சாம்ராஜ்யமாக மாமன்னரையும் நிறுத்திவிட்டது. இந்தியாவை பிரிட்டன் சுரண்டி அழிக்கிறது என்பதற்கு அவர்கள் இருவரும் நிற்கும் படங்களே போதுமான ஆதாரமாக அமைந்தன. அவை வெளியானபோது காந்தியும் காங்கிரசும் சொல்ல விரும்பியவை அனைத்தையும் அவையே உலகமக்களிடம் சொல்லின.
===================================================================
சாதாரணமாக இருக்கையில் வேட்டிகட்டி சட்டை போட்டிருக்கும் மகாராஜாக்கள் தர்பாருக்குச் செல்லும்போது முழங்கால்வரை வரும் பளபளப்பான பூட்ஸுகளையும் அதற்குள் செருகும்விதமான தொளதொளப்பான கால்சட்டைகளும் அணிந்திருப்பதை காந்தி கவனிக்கிறார். லண்டனில் படித்த அவருக்குத்தெரியும் அது பிரிட்டிஷ் அரண்மனையின் சேவகர்களின் சீருடை என்று. அவர் அந்த மகாராஜாக்களிடம் பேசுகிறார். அப்போது தெரிகிறது அவர்களுக்கும் அது தெரியும் என்று.
‘எங்களுடைய துர்ப்பாக்கிய நிலைமை எங்களுக்குத்தான் தெரியும். எங்கள் செல்வத்தையும் பட்டங்களையும் காப்பாற்றிக்கொள்வதற்காக எவ்வளவு அவமானங்களுக்கெல்லாம் நாங்கள் உள்ளாகவேண்டியிருக்கிறது என்பதையும் நாங்கள் மட்டுமே அறிவோம். ‘ என்று ஒரு மன்னர் சொல்கிறார். ’இருந்தாலும்கூட வேலைக்காரர்கள் மட்டுமே அணியக்கூடிய இந்தக் கால்சட்டையையும் பூட்ஸுகளையும் அணியத்தான் வேண்டுமா?’ என்று காந்தி வேதனையுடன் கேட்கிறார். ‘எங்களுக்கும் வேலைக்காரர்களுக்கும் ஏதாவது வேறுபாடு இருப்பதாகக் காண்கிறீர்களா?” என்று துயரத்துடன் மகாராஜா பதில்சொல்கிறார்.
========================================================================
ஆம், உடையரசியலின் தொடக்கம் அங்கேதான். இந்திய மகாராஜாக்களை வேலைக்கார வேடமிட்டுத் தன் வேலைக்காரர்களுடன் சேர்த்து நிறுத்திய பிரிட்டிஷ் ஆதிக்க மனநிலைக்கு எதிரான கலகம் காந்தியின் உடை. தார்ப்பாய்ச்சிய ஒற்றை உடையும் மேல்துண்டுமாக அந்த வைஸ்ராயின் சபைக்குச் சென்றார் காந்தி. அதற்கு முன்பு அவர் தனக்குப்பின்னால் இந்தியதேசத்தையே அணிவகுத்து நிறுத்தியிருந்தார். தன் உடைமூலம் காந்தி பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மனத்திடம் சொன்னார் ’என்னை சமமாக மதித்து அமரச்செய்து என்னிடம் நீங்கள் பேசியே ஆகவேண்டும். முடியாதென்று சொல்லுங்கள் பார்ப்போம்’ என்று . ’நீங்கள் மகாராஜாக்களுக்கு வேலைக்கார வேடம் போட்டு நிற்கச் செய்யலாம். ஆனால் இந்தியாவின் ஏழைக்குடிமகனை நீங்கள் உங்களுக்குச் சமானமாக நடத்தியாகவேண்டும்’ என்று.
=======================================================================
காந்தி எவரையும் தன்னைவிடக் கீழாக நினைப்பவரல்ல, ஆகவே எவரையும் மேலானவராகவும் அவர் நினைக்கவில்லை. ஆனால் வரலாற்றுமனிதராக அவர் அக்கணத்தில் விஸ்வரூபம் கொண்டு எழுந்தார். யார் அந்த ஐந்தாம் ஜார்ஜ்? எங்கே அந்த போப் பதினொன்றாம் பயஸ்? இன்று வரலாற்றின் ஆழத்திலுறங்கும் கூழாங்கற்கள் அவர்கள். காந்தி ஒரு வரலாறு. ஒரு மலைச்சிகரம்.
=======================================================================
ஞானம்பெற்றபின் இல்லம்திரும்பும் புத்தரின் சிலை ஒன்றை மதுரா அருங்காட்சியகத்தில் காணலாம். யசோதரையும் சுத்தோதனரும் யானைகளும் அரண்னை முகடுகளும் அந்த நகரமேகூட புத்தரின் முழங்காலுக்குக் கீழேதான் இருக்கும். 1931 கோடையில் காந்தி தன் பாதங்களின் அளவுக்கே உயரமாக நின்ற மாமன்னரிடம் மிகமிகக் குனிந்துதான் பேசியிருப்பார். அவருக்கே உரிய கனிவுடன்.
==========================================================================
மீண்டும் டோண்டு ராகவன். மேலே சொன்ன வரிகள் என் பெருமித உணர்ச்சிகளைத் தூண்டி கண்களில் நீர் பெருக்கோடச் செய்தன.

அன்புடன்,
டோண்டு ராகவன்
.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது