பொருளாதாரத்தில் பொருளாதார மனிதன் என்ற ஒரு கோட்பாடு கடைபிடிக்கப்படுகிறது. அந்த மாதிரி உண்மையிலேயே ஒரு மனிதன் இருப்பானா என்பதே கேள்விக்குரியதே. இருப்பினும் அந்த கோட்பாட்டை உபயோகித்து சில பொருளாதாரப் புரிதல்களை அளிக்க முடிந்தது என்பதும் உண்மையே. ஒரு பொருளாதார மனிதன் பொருளாதார நிர்பந்தத்திற்கேற்ப நடந்து கொள்வதாக ஐதீகம்.
ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியையாகவும், உதவி முதல்வராகவும் பணி புரியும் என் தங்கையிடம் பல ஆண்டுகளுக்கு முன்னால் இது பற்றி பேசிக் கொண்டிருந்த போது அவள் "உன்னை மாதிரி நாலுபேர் இருந்தா போதும் பொருளாதார மனிதன்னு ஒருத்தன் இருக்கானா என்பதே சந்தேகமாகி விடும். உன்னை மாதிரி பொருளாதார லாஜிக்கை மீறும் சில நபர்களால் பல பொருளாதார தியரிகள் விதிவிலக்குகளை பற்றிப் பேச வேண்டியிருக்கிறது" என்று சிரித்துக் கொண்டே கூறினாள். அதாவது நான் பொருளாதாரக் கோட்பாட்டுக்கு உட்பட்டு நடக்கவில்லையாம். சம்பாத்தியம் அதிகரிக்க, அதிகரிக்க செலவை அதற்கு ஏற்ப அமைத்துக் கொள்வதில்லையாம். இத்யாதி, இத்யாதி. அப்போது அவளிடம் நான் கேட்டேன், நான் எம்மாதிரி மனிதன் என்று அவள் ஒரே வார்த்தையில் பதில் கூறினாள், அதன் ஹிந்தி மொழி பெயர்ப்பு "வன மானுஷ்". அதை பற்றி மேலும் அறிய இப்பதிவை பார்க்கவும். ஆனால் இம்மாதிரி இருக்கக் கொண்டுதான் நான் டெலிமார்க்கெட்டிங் கூத்திலிருந்து தப்பித்துக் கொள்ளவும் முடிகிறது!
நான் மட்டும்தான் இப்படியா என்று யோசித்துக் கொண்டிருந்த போது நண்பர் சந்திரசேகரனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் அவர் சுட்டியுள்ள இந்தக் கட்டுரையை பாருங்கள். என்னை மாதிரியே பலர் இருக்கின்றனர். ஏன் அவ்வாறு அவர்கள் இருக்கின்றனர் என்பதற்கும் ஒரு தியரி வைத்திருக்கிறார் ஆசிரியர். புரிகிறதா என்று பாருங்கள். ஆல் தி பெஸ்ட்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஷார்ஜா புத்தகவிழாவில்…
-
ஷார்ஜா புத்தகவிழாவில் மலையாள- ஆங்கில எழுத்தாளராக டி.சி.புக்ஸ் (மலையாளம்)
சார்பில் கலந்துகொள்கிறேன். எட்டாம்தேதி காலையில் ஷார்ஜா. பத்தாம்தேதி
மாலையில் ஒரு ச...
6 hours ago
4 comments:
Not so simple, I am afraid. The concept of economic man does not differentiate between good and bad deeds. This concept is very impartial on that score.
Supply and demand are opposing in trend. More income leads to more expenditure, and ideas similar to them abound in this concept.
Regards,
Dondu N.Raghavan
பின்னூட்டம் 8-க்கான நன்றியும் பதிலும். பொருளாதார மனிதன் என்று மட்டும் இல்லை, சட்டத்தில் reasonable man என்று கூறும் கோட்பாடும் கற்பனைக்குரியதே.
இருந்தாலும் அவை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அவசியம். அதை வைத்துத்தான் முதல் படிவமாக ஒரு விஷயத்தைக் கூறுகின்றனர். பிறகு படிப்படியாகத் தவறுகளைத் திருத்திக் கொள்கின்றனர். இன்னும் அந்த திருத்தங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நித்தம் நித்தம் புது கண்டுபிடிப்புகள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்னூட்டம் எண் 9-க்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட அந்த நபர் எனக்கு ரொம்ப பரிச்சயமானவராகத் தென்படுகிறார். பல ஹைப்பர் லிங்குகள் என மனதில் உதிக்கின்றன. அவை உண்மையாக இருக்கக் கூடாது என்று உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்னூட்டம் 10-க்கு நன்றி. கண்டிப்பாகப் போடுகிறேன். விசாலாட்சி அவர்களே. என்னுடைய ஊகம் சரியாகப் போவது போலத் தோன்றுகிறது. மறுபடியும் கூறுவேன் அது பொய்ய்யாகட்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment