வால்பையன்:
1. தமிழில் இரண்டு மெய் எழுத்துக்கள் தொடர்ச்சியாக வரக்கூடாது என்கிறார்கள், உதாரணமாக "இதற்க்கு" ஆனால் நான் வழக்கம் போல் மல்லாக்கப் படுத்து யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு தமிழ் வார்த்தை தோன்றியது. அதில் இரண்டு மெய் எழுத்துக்கள் தொடர்ச்சியாக வருகின்றன, எவ்வளவு யோசித்தும் அதற்கு மாற்று வழி தெரியவில்லை, எனது சந்தேகம் அது உண்மையிலேயே தமிழ் வார்த்தைதானா? அந்த வார்த்தை: "அர்த்தம்".
அப்படி ஒன்றும் விதி இருப்பதாக நான் கேள்விப்பட்டதில்லையே. ஆனாக்க மல்லாக்க படுத்து யோசிக்கும்போது தொடர்ச்சியாக பார்த்தாலோ பார்க்கும்போதோ நீங்கள் சொல்வது போலத்தானே பொருத்தமாக வருகின்றன? அதே சமயம் அர்த்தம் என்பது வடமொழிச் சொல்லே. இதற்கும் மேலே பதில் தேவைப்பட்டால் நான் அம்பேல். இராமகி ஐயாதான் பதிலளிக்கத் தகுதியானவர்.
அவனும் அவளும்:
1) வாயை பிடுங்குவது என்றால் என்ன?
பதில்: சங்கடமான கேள்விகளை கேட்பதையே அது குறிக்கும். உதாரணத்துக்கு "நீங்கள் சூதாடுவதை நிறுத்தி விட்டீர்களா, உண்டு அல்லது இல்லை என்று பதில் சொல்லவும்" என்பதும் அம்மாதிரிக் கேள்வியே. போப் பற்றி ஒரு கதை சொல்வார்கள். அவர் ஒரு முறை நியூயார்க் வந்தபோது அந்த நகர நிருபர்களைப் பற்றி கூறி அவரை எச்சரித்திருக்கிறார்கள். வாயைப் பிடுங்கும் கேள்விகளை கேட்பதில் அவர்களை மிஞ்ச இயலாது. போப் பிளேனிலிருந்து இறங்கியதுமே அவரை ஒரு கேள்வி கேட்டார்கள். அதாவது, "இங்குள்ள இரவுவிடுதிகளுக்கு போவீர்களா"? என்று. அவரும் "அவை எல்லாம் நியூயார்க்கில் உண்டா"? என என எதிர்க் கேள்வியான பதிலை போட்டு எஸ்கேப் ஆகியுள்ளார். அடுத்த நாள் பேப்பர்களில் கொட்டை எழுத்தில் செய்தி வந்தது, "நியூயார்க்கில் இரவு விடுதிகளை பற்றி தகவல் கேட்டு பொப் அவர்கள் விசாரிக்கிறார்" என்று.
2) வாயை பிடுங்கினாலும் அசராமல் (அசையாமல்) பதில் அளிப்பவன் புத்திசாலியா? இல்லையேல் பதில் சொல்லாமல் இருப்பவன் புத்திசாலியா? இதில் நீங்கள் எந்த வகை?
பதில்: நிலைமைக்கேற்ப நடக்கவேண்டும். நல்ல பதில் இருந்தால் அதை உடனுக்குடன் சொல்லிவிடுதல் உத்தமம். அதேபோல அப்படிப்பட்ட பதில் லேது என்றால் நெடுமால் திருமருகா என்ற தோரணையில் தீவட்டி தடியன் போன்று மௌனமாக இருப்பதுவே மேல்.
3) நைஜீரியா மற்றும் அங்கோலாவில் தாங்கள் ஆதரிக்கும் கட்சி எது?
பதில்: அந்த நாடுகளில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நமக்கு அதனால் ஏதேனும் பாதிப்பு இருக்க வேண்டும், அல்லது அந்த நாடுகளை பற்றி ஏதேனும் கருத்து எனக்கு இருக்க வேண்டும். அந்த இரு நாடுகளை பொருத்தவரை அவை இரண்டுமே இல்லை என்பதால் அங்கு ராமன் ஆண்டாலென்ன, ராவணன் ஆண்டாலென்ன?
4) கேள்வி - பதில்கள் மற்றவருக்கு சலிப்பூட்டாமல் திரு சோ அவர்கள் இவ்வளவு வருடமாக எப்படி தாக்கு பிடிக்கிறார்?
பதில்: கடந்த 38 ஆண்டுகளில் அவர் இரண்டுக்கும் மேல் தலைமுறைகளை சந்தித்து விட்டார். தன் செயல்பாடு மற்றும் கொள்கைகளில் உறுதியாக உள்ளார். எப்போதுமே தன்னை புதுப்பித்து கொள்கிறார். தான் ஏதேனும் தவறு செய்தால் அதை உடனடியாக திருத்தி கொள்கிறார். அப்புறம் அவர் சுவாரசியமான மனிதராக இருப்பதில் என்ன வியப்பு இருக்க முடியும்?
5) போலிகளை கண்டுபிடிக்கும் தங்கள் முயற்சியால் பயனடைந்த மற்றவர்களை தாங்கள் குறை கூறுவீர்களா?
பதில்: ஏன் குறை கூற வேண்டும்? செந்தழல் ரவி, குழலி, ஓசை செல்லா, உண்மைத் தமிழன் போன்றவர்கள் எனக்கு உதவியல்லவா செய்தனர். நான் தேவையில்லாது போலிக்கு கொம்புசீவி விட்டேன் என்று கூறியவர்களும் இப்போது அவன் கொட்டம் அடக்கப்பட்டதில் நிம்மதியாக இருக்கின்றனரே. அது போதும் எனக்கு.
6) சுவாரசியமாகக் கேள்வி கேட்பது எப்படி?
பதில்: இது ஒரு 64000 டாலருக்கான கேள்வி. கேள்வி கேட்பதுவும் ஒரு கலையே. உபநிஷத்துகளைப் பார்த்தால் குருவை சிஷ்யன் கேட்கும் கேள்விகள் அனந்தம். குரு அளிக்கும் பதில்கள்தான் உபநிஷத்துகளின் பெரும்பாகத்தை ஆக்கிரமிக்கின்றன. சில கேள்விகளுக்கு நித்திய ஆயுசு உண்டு. கடவுள் இருக்கின்றாரா என்பது அதில் முக்கியமானது. அதற்கு வெவ்வேறு விதமான பதில்கள் வந்துள்ளன. இருப்பினும் அக்கேள்வி தொடர்கிறது. பொருளாதாரம் எடுத்து படித்த ஒருவர் பல ஆண்டுகள் கழித்து தனது பேராசிரியரை அவரது கல்லூரிக்கு சென்று சந்தித்தார். பேராசிரியர் அப்போதுதான் மாணவர்களது விடைத்தாள்களை திருத்தி கொண்டிருந்தார். வினாத்தாளை பார்த்த முன்னாள் மாணவர் கேள்விகள் அப்படியே தனது கடைசி ஆண்டு தேர்வுக்கானவை, ரிபீட் ஆகியுள்ளன எனக் கண்டுகொண்டார். ஏன் அப்படி எனக் கேட்டதற்கு, பேராசிரியர் அலட்டிக் கொள்ளாமல் கூறினார், "கேள்விகள் அப்படியே உள்ளன, ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல விடைகள் மட்டும் மாறிக் கொண்டே வருகின்றன".
ஜெரூசலம் ஜக்கு:
1. வலைப்பதிவுகளில் அதுவும் தமிழ் வலைப்பதிவுகளில் பரவலாகக் காணப்படும் அமெரிக்க எதிர்ப்பு ஏன்?
பதில்: அமெரிக்காவை ஒன்று ஆதரிக்க வேண்டும் அல்லது அதை எதிர்க்க வேண்டும். அதைத் தவிர அதை அலட்சியப்படுத்துவது என்பது மிகக் கடினம்.
2. அத்தகைய எதிர்ப்பு மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கும் வட கொரியா, சீனா, போன்ற நாடுகளின் மேல் பாய்வதில்லையே?
பதில்: அவை தண்ணீர் தெளித்துவிடப்பட்ட நாடுகள். அவை நன்றாக ஏதேனும் செய்தால்தான் நியூஸ்.
3. தமிழ் ஈழ அகதிகள் ஏன் ஜெர்மனி, கனடா, போன்ற நாடுகளுக்கு குடி புகுகின்றனர்? அவர்கள் நலம் விரும்பிகள் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்கள் விரும்பும் வட கொரியாவுக்கு, க்யூபா, வெனிசூலாவுக்கு புலம்பெயரவேண்டியது தானே?
பதில்: அப்படி செய்தால் உதைவாங்குவது அகதிகளா நலம் விரும்பிகளா? அகதிகள் மேல் உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி?
4. சமாஜ்வாதி பார்ட்டி அர்ஜுன் சிங் நிதி அமைச்சரானால்?
பதில்: எம்.பி.களுக்கு நியாயவிலை நிர்ணயம் செய்வார் என நம்பலாம்.
பாண்டு:
1. ராஜஸ்தான் மாநிலத்தில் கோவர்த்தன மலையை நம் பி.ஜே.பி அரசு தகர்ப்பது உண்மையா?
பதில்: இது பற்றி இணையத்தில் தேடியும் கிடைக்கவில்லை. நீங்கள் கூறித்தான் முதன்முறையாக கேள்விப்படுகிறேன். மேலதிகத் தகவல்கள் பெற முயற்சித்து கொண்டிருக்கிறேன். அவை கிடைத்ததும், ஏதேனும் பதில் இருந்தால் போடுகிறேன்.
சுகுமாரன்:
ஆனந்த கணேஷ் என்பவர் எழுதியிருப்பதைப் படித்தால் பயம் வருகிறது. அந்த அளவுக்கா நிலமை மோசமாக இருக்கிறது?
இன்னும் அந்த அளவுக்கு நிலைமை மோசமாகவில்லை. ஆனால் இந்த கிறித்துவ மதவெறியர்களை விட்டால் இதைவிட மோசமான நிலைமை வந்தாலும் வரலாம். ஜாக்கிரதையாக இருப்பது நம் கையில்தான் உள்ளது. இந்து மதத்தில் தீண்டாமைக் கொடுமையை சாடுபவர்கள் வெட்கமே இல்லாது கிறித்துவ மதத்திலும் அதைத் தொடர்வதை என்னவென்று சொல்வது? மேலும் இவர்கள் செய்த இந்த புளுகுப் பிரசாரங்களே பெரியார் அண்ட் கம்பெனி லிமிட்டட் செய்யும் பார்ப்பன எதிர்ப்புக்கான அடிப்படியாக உள்ளது. என்ன செய்வது, அத்தகையோர் மனதில் ஏற்கனவே உள்ள பொறாமை மற்றும் வெறுப்புக்கு தூபம் போட இவ்வாறு நடக்கிறது. இங்காவது பரவாயில்லை, ருவாண்டாவில் ரத்த ஆறுகளே ஓடின இந்த மிஷ "நரிகள்" செய்த பிரசாரத்தால்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
9 hours ago
12 comments:
அவனும் அவளும் என்பது யார் என்று கண்டு பிடிக்க என்ன வழி?
அவனோ அவளோ தானே சொன்னால்தான் உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அந்தப் பணமெல்லாம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தது! இங்கேதான் முட்டாள்கள் வாராவாரம் சர்ச்சுக்கு போகிறேன் என்று பணத்தை வாரியிறைக்கிறர்களே! இருந்தாலும், இங்கே "அப்படிப்பட்ட"வர்களை general public or majority of Americans treat them as piece of sh*t!
******இத கண்டுபிடிச்சு என்ன பண்ண போறீங்க ?*****
இத கண்டுபிடிச்சு என்ன பண்ண போறீங்க அனானி ?
//4. சமாஜ்வாதி பார்ட்டி அர்ஜுன் சிங் நிதி அமைச்சரானால்?
பதில்: எம்.பி.களுக்கு நியாயவிலை நிர்ணயம் செய்வார் என நம்பலாம்.\\
அர்ஜூன் சிங் எப்போது சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார்??????
//அர்ஜூன் சிங் எப்போது சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார்??????//
சமாஜ்வாதி கட்சியில் அர்ஜுன் சிங் என்ற பெயர் கொண்ட தலைவர் யாருமே இல்லையா என்ன? ஹி ஹி ஹி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ஐயா
புதியவன் நான் எனது பதிவு பாருங்கள். பிடித்தால் நாலு பேரிடம் சொல்லுங்கள்.
1. விகடன் சில தினங்களுக்கு முன் இலங்கை பிரச்சனை தொடர்பாக நடத்திய கருத்து கணிப்பை பற்றிய தங்கள் கருத்து எண்ண? ( படிகக்வில்லை என்று எஸ்கேப் ஆகவேண்டாம் :) )
2. தமிழ் நாட்டுக்கு நியாயமாக வர வேண்டிய ரயில்வே திட்டங்கள் தள்ளி போகும் நிலையில்.. அதிக நழ்டத்தில் ஓடும் பீகார், உபி மாநிலத்தில் வரும் ரயில்வேக்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு போகிறதே..??
3. புது தில்லிக்கு ஒரு நாளைக்கு வேலை தேடி வரும் பீகாரிகள் எண்ணிக்கை 30,000 ஆயிரம் என்று படித்தேன்.. எண்ணிக்கையில் வேறுபாடுகள் இருந்தாலும் பீகாரிகள் அதிக அளவில் தில்லியில் குவிவது உண்மைதானே.. பீகார் உபி மாநிலங்களில் இப்படி சீர் கெட்டு போனத்துக்கு என்ன காரணம்? எப்படி இந்த நிலை மாறும்?
4. அனுசக்தி ஒப்பந்தம் எல்லாம் முடிந்து போய் விட்டது.. ஆதாயம் கிடைக்க நமக்கு பல வருடங்கள் ஆகலாம்.!! பொது பணி துறை பொறியாளர் என்ற முறையில் உங்களுக்கு மரபு சாரா எரிசக்தியால் தயாரிக்கபடும் மின்சாரத்துக்கு ஏன் அத்துணை முக்கியதுவம் இல்லை என்று கூற முடியுமா?
5. தில்லி வாழ்க்கை சென்னை வாழ்க்கை எது உங்களுக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.. விளக்கம் தேவை
அது அமர் சிங்.
அதை நீங்களாவது திருத்தியிருக்கலாமே டோண்டு சார்.
//அதை நீங்களாவது திருத்தியிருக்கலாமே டோண்டு சார்.//
உங்கள் காதோடு ஒரு ரகசியம். எனக்கும் அர்ஜுன் சிங் என்பது தவறாகப் படவில்லை. ஆகவேதான் திருத்தவில்லை.
உண்மை தெரிந்தபோது டூ லேட். என் தவறும் பதிவு செய்யபடவேண்டியதே. அது அப்படியே இருக்கட்டும் என விட்டுவிட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"அவனும் அவளும் said...
******இத கண்டுபிடிச்சு என்ன பண்ண போறீங்க ?*****
இத கண்டுபிடிச்சு என்ன பண்ண போறீங்க அனானி ?"
நீ ஆம்பளையா? பொம்பளையா? இல்லை ரெண்டும் கெட்டானா? உண்மை பேரைச் சொல்லைய்யா/சொல்லம்மா/சொல்லம்மைய்யா.
Anonymous has their option. You are under which option?
Answer to da 1st question -
வல்லின ’ற’கர எழுத்தைத் தொடர்ந்து மற்றொரு வல்லைனம் வந்தால் ‘ற’ மிகாது. (எ-கா) ’அதற்கு’ அதற்க்கு என்பது தவறு.
’பிறர்க்கு’ சரி. இதில் குழப்பம் ஏதும் இல்லை.
தேவ்
Post a Comment