கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?
ஷிர்டி சாயிதாசன்
1. சுதந்திர மென்பொருட்களின் (Free/Libre Open Source Software) எதிர்காலம் பற்றி தங்களின் மேலான கருத்து என்ன? Example : Firefox
பதில்: இம்மாதிரி கேள்விகளுக்கு நான் அணுகும் தளங்களில் இந்த வலைப்பூ மிக முக்கியமானது. அதில் ஏன் சுதந்திர மின்பொருள் தேவை என்பது ஆணித்தரமாகக் கூற்ப்பட்டுள்ளது. ஆனால், எதேச்சையாக அந்த வலைப்பூவின் ப்ரொஃபைலை பார்க்கலாம் எனப் பார்த்தால் அவர் பெயர் ஷிர்டி சாயிதாசன் எனத் தெரிய வருகிறது. அவ்வ்வ்வ்.
சற்றே சீரியசாக கூறுகிறேன். ஃபைர்ஃபாக்ஸ் என்பது எனக்கு பிடித்த உலாவி. கூகள் குரோமும் அவ்வாறே. அவை இரண்டும் இருக்கும்போது இண்டெர்னட் எக்ஸ்ப்ளோரர் என்னைப் பொருத்தவரை அன்செலெக்ட்டட். ஆனால் லினக்ஸில் ஈடுபட இன்றுவரை சற்றே பிரத்தியேக கணினி அறிவு தேவைப்படுகிறது. அது எல்லோராலும் முடியுமா எனத் தெரியவில்லை. 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக பயனர்கள் ஏதோ கம்ப்யூட்டர் வாங்கினோமா அதைச் செயல்படுத்தினோமா என்றுதான் இருக்க ஆசைப்படுகிறார்கள். புது மென் பொருளை நிறுவும்போது அனேகம் பேர் இன்ஸ்டல்லேஷன் விஜார்டின் உபயோகத்தைத்தான் தெரிவு செய்கின்றனர்.
இந்த மனத்தடையை உடைத்து விட்டால் லினக்ஸ் வருவதற்கு ஒரு தடையும் இல்லை.
அனானி (24.09.2009 காலை 06.19-க்கு கேட்டவர்)
1. அன்பழகன், அண்ணாவின் மறைவுக்குப் பின் நடந்த முதல்வர் பதவி பிடிக்கும் சண்டையில் தினத்தந்தி ஆதித்தனாரின் பணபலத்துடன், எம்ஜிஆரை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியும் முதல்வர்-திமுக தலைவர் பதவிக்கு வர முயற்சி செய்யும் கலைஞரின் தகிடுதத்தங்களை கண்ட பிறகு வெகுண்டு, பொதுக்கூட்டங்களில் கலைஞரை தலைவராய் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.அப்படி நடந்தால் நான் வேட்டிகட்டிய ஆண்பிள்ளை என் எனது மனவிகூட ஏத்துக்கொள்ளமாட்டாள் என் கொக்கரித்தவ்ர் திடிரென பதவிக்காக கருணாநிதியின் காலில் விழுநதவர் இன்று வரை எழவில்லையே? இடையில் நடந்தது என்ன?
(இதை கொச்சையாக அப்போது பத்திரிக்கைகள் ஒரு சில விவரித்து எழுதியதை இந்த நாடறியும்)
பதில்: என்ன நடந்திருக்கும் என நினைக்கிறீர்கள்? மேலும் அப்போது கன்சிடெரேஷனில் இருந்தது நெடுஞ்செழியன்தான். அவரும் பிகு செய்து பார்த்தார். பிறகு வேறு வழியின்றி கருணாநிதியுடன் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கும் தனது பலவீனம் புரிந்து போனதால் மட்டுமே அவ்வாறு செய்தார். அன்பழகனுக்கும் அதே நிலைதான்.
2. சுகாதாரத்துறை அமைச்சராய் இருந்தபோது, தன் சொந்த மகளின் தோழியை (இளவயது மங்கை) இரண்டாம் தாரமாய் ஆக்கிகொண்டார் என சொல்லப்பட்டதே? அது உண்மையா?
பதில்: இந்த விஷயத்தை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இதில் பார்க்க வேண்டியது ஒன்றுதான். சம்பந்தப்பட்ட இளநங்கையை அவர் ஃபோர்ஸ் எல்லாம் செய்ததாகக் கூற முடியுமா? இல்லையென்றால் இது அன்பழகனின் தனிப்பட்ட விவகாரம். அந்த இளமங்கை ஒத்துக் கொண்டால் அன்பழகனின் மகள் கூட இதில் தலையிட்டிருக்க முடியாது. அப்படியிருக்க வெளி ஆட்களாகிய நமக்கு அதை பற்றி பேச ஒரு விஷயமும் இல்லை.
கேடி/பேடி கண்ணன் (எப்படியெல்லாம் பேர் வைக்கிறாங்கப்பா!)
1. வட்ட வடிவு கிராமபோன் காலாவதி ஆன பின் சிடி தட்டாக வந்தது. பழமை என்றும் அழிவதில்லையா?
பதில்: சுற்ற வேண்டிய எதுவுமே வட்டமாகத்தான் இருக்கும், அதுதான் மிகச் சிக்கனமான கன்ஃபிகரேஷன். கிராமஃபோன், சிடி தட்டு என்று மட்டும் ஏன் நிறுத்த வேண்டும்? வெளியில் சதுரமாக தெரியும் ஃபிளாப்பி கூட தன்னுள்ளே ஒரு வட்டத்தைத்தான் வைத்துள்ளது.
2. தினகரன் நாளிதழ் புதுதில்லி பதிப்பு தொடங்கியுள்ளதே. தில்லியில் வெளிவரும் முதல் தமிழ் நாளிதழ் தினகரனா?
பதில்: எனக்குத் தெரிந்து அப்படித்தான் என நினைக்கிறேன். அதாவது தில்லியிலிருந்தும் அச்சிடப்படுவதைத்தானே கூறுகிறீர்கள்?
எம். கண்ணன்
1. நேஷனல் செக்யூரிடி அட்வைசர் எம்.கே நாராயணன் போன்றோர் (70+ வயதுடையவர்கள்) யாருடைய வழிகாட்டுதல்படி செயல்படுகிறார்கள் ? பரந்து விரிந்த நமது தேசத்தின் பல்வேறு பிரச்னைகளை, அன்னிய நாட்டின் தாக்குதல்கள், உள்நாட்டு / வெளிநாட்டு தீவிரவாதங்கள் போன்ற பலவற்றிற்கும் இப்படித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கும், சோனியாவுக்கும், ப.சிதம்பரத்திற்கும் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்களுக்கும், அட்வைஸ் கொடுக்குமளவிற்கு அவருக்கு (அந்த பதவியில் இருப்பவருக்கு) எப்படி எல்லா விஷயங்களிலும் நாட்டு நலன் பற்றியே சிந்திக்கத் தோன்றும்?
பதில்: எப்படித் தோன்றும் என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. தோன்றியே ஆக வேண்டும். நட்டுக்கு நிரந்தர எதிரிகள் அல்லது நண்பர்கள் என்றெல்லாம் இல்லை. நாட்டின் நலமே நிரந்தரம் என்பதுதான் ஒரு நாட்டின் அயல்நாட்டுக் கொள்கையின் மூலாதாரம். சாணக்கியர் காலத்திலும் அதையே சொன்னார்கள். இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்தும் அதையே சொல்வார்கள்.
2. உன்னைப் போல் ஒருவன் - கமல் போட்டிருக்கும் வெள்ளைச் சட்டைக்குள் பூணுல் தெரிகிறதா? பெயர் பட்டியலில் இரா.முருகன் பேர் இருட்டடிப்பு ஏன்? (நான் சில வாரங்கள் முன்பு கேட்டிருந்த 'தமிழ் படங்களில் படத்தில் பணியாற்றியவர்கள் பெயர் போடும்' கேள்வியை மீண்டும் பார்க்கவும்?
பதில்: இது சம்பந்தமாக நான் இரா. முருகன் அவர்களுக்கே போன் செய்து கேட்டேன். தமிழ்த் திரையுலகின் சில நடைமுறைகளை விளக்கினார் அவர். மேலும் எல்லா மீட்டிங்குகளிலும் சம்பந்தப்பட்ட டைரக்டர் வெளிப்படையாகவே கூறி அவரை கூப்பிட்டு கௌரவித்தார் என்றார். இன்னும் சில நாட்கள்தான், நம்ம முருகன் சாருக்கும் சுஜாதா அளவுக்கு பெயர் கிடைக்கும். அப்போது அவர் பெயரை போஸ்டரில் போடுவது தயாரிப்பாளருக்கு படத்தை விற்பதில் உதவி செய்யும். அதுவரை போடுவதும் போடாததும் தயாரிப்பாளர் இஷ்டம்.
அம்முறையில் அபூர்வ ராகங்கள் படம் என நினைக்கிறேன், அதன் தெலுங்கு வெர்ஷனின் தயாரிப்பாளர் எல்லோர் பெயரையும் விட்டு விட்டு ஆஃபீஸ் பாயின் பெயரை மட்டும் போட்டதாகவும் கூட அக்காலக் கட்டத்தில் படித்ததாக ஞாபகம். அபூர்வ ராகங்கள் படம் இல்லையென்றால், வேறு ஏதோ கே. பாலசந்தர் படம்.
3. விஜய்யின் அழகிய தமிழ் மகன் படத்தை சிலாகித்து எழுதியிருந்தீர்கள். அந்தப் படம் தற்கால இளைஞர்களின் (பெரும்பாலான) நடைமுறையை காட்டும் படம் - குடி, சிகரெட், போதைப் பொருள், பெண்ணை ரிசார்ட்டுக்குத் தள்ளிக் கொண்டு போவது, ஆள் மாறாட்டம், மோசடி என - இளைஞர்களின் சீரழிவைத்தான் காட்டுகிறது. அதுவும் படம் அவ்வளவாக ஓடவில்லை.
பதில்: அப்படத்தை நான் எதேச்சையாக டிவியில் எந்த எதிர்பார்ப்பும் இன்றிதான் பார்த்தேன். ஒருவன் மனக்கண்ணின் மூலம் எதிர்க்காலம் தோன்றுவது என்பது சுவாரசியமான விஷயம்தானே. அப்படத்தின் கிளைமாக்சுக்கும் ஒருவித மனோதத்துவ கான்சப்ட்தான் அடிப்படையாக இருந்தது. அதெல்லாம் இப்படித்தான் ரூம் போட்டு யோசிப்பாங்களோ என்னும் எனது இப்பதிவில் எழுதியுள்ளேனே.
4. கண்ணதாசனின் வனவாசம் புத்தகத்தில் கருணாநிதியைப் பற்றி எழுதியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: அப்புத்தகம் இதுவரை படித்ததில்லை. வெறுமனே கேள்விப்பட்டுள்ளேன்.
5. சாதாரண வைரல் ஜுரத்துக்கு கொடுக்கப்படும் ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகளின் விலை (சில வருடங்களுக்கு முந்தைய விலையை விட) மிக அதிகமாகிவிட்டதே? இது மாதிரி மருந்து கம்பெனிகள் அதிக விலை வைத்து விற்பதில் எத்தனை பங்கு மத்திய சுகாதார அமைச்சருக்கு?
பதில்: வைரல் ஜுரங்களுக்கு ஓய்வு மட்டுமே தேவை. எங்கள் டாக்டர் அதைத்தான் சொன்னார்.
6. மருந்து கம்பெனிகளின் தொழிற்சாலைகள் பெரும்பாலும் சில்வாச, ஹிமாச்சல், பாண்டிச்சேரி என யூனியன் பிரதேசமாக உள்ளதே? எத்தனை வருடங்களுக்கு அவர்களும் வரிச்சலுகைகள் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்?
பதில்: வரிச்சலுகைகள் எல்லாம் ஒரு ஸ்டேட் தனது மாநிலத்தில் உற்பத்தியை அதிகரிக்க தருவது. மேலும் பல நோக்கங்களும் உண்டு. என்னிடம் அவற்றைச் சொல்வதற்கான தகவல்கள் இல்லை.
7. சி பி எஸ் இ பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்புக்குத் தேர்வு இல்லை எனவும் இனிமேல் மதிப்பெண்கள் கிடையாது - கிரேடுகள் எனவும் சொல்கின்றனரே? உங்கள் கருத்து என்ன? நமது இந்திய கல்வித்திட்டத்தில் எத்தனையோ குளறுபடிகள் இருந்தாலும் இத்தனை வருடங்களாக இருந்த மனப்பாடம் முறைதானே நமது நாட்டு மாணவர்களுக்கு இளைஞர்களுக்கு இவ்வளவு உயரம் செல்ல உதவியிருக்கிறது. மற்ற நாட்டவரைக் காட்டிலும் (சீனா, அமெரிக்க, ஐயோப்பிய) நமது மாணவர்கள்/இளைஞர்கள் தானே கணக்கிலும், அறிவியலிலும் புலியாக இருந்து வந்துள்ளார்கள்? அதனால்தானே பெரிய பெரிய தொழில் நுட்ப நிறுவனங்கள் அவர்களுக்கு இது நாள் வரை சிவப்புக் கம்பளம் வரவேற்பு கொடுத்துள்ளது ? நாமும் அமெரிக்க முறைக்கு மாறிவிட்டால் பெரும்பான்மை அமெரிக்க மாணவர்களைப் போல மந்தமான கூட்டங்களைத் தான் உற்பத்தி செய்யப் போகிறோமா?
பதில்: இந்த கிரேடுகள் முறை எனக்கு பிடிபட்டதே இல்லை. இதிலிருந்து முதல் ரேங்கில் பாஸ் செய்ததை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள் என்றும் புரியவில்லை. அதற்கு மட்டுமாவது மதிப்பெண்களை பார்ப்பார்களாக இருக்கும்.
முன்பெல்லாம் எட்டாம் வகுப்பு முடிந்ததுமே ஒரு பரீட்சை வைத்தார்கள். சில வேலைகளுக்கு அதையே குறைந்தபட்சத் தகுதியாகவும் வைத்தார்கள். பிறகு அம்மாதிரி வேலைகளுக்கு பள்ளியிறுதிப் பரீட்சையையே குறைந்தபட்சத் தகுதியாக மாற்றினார்கள். இப்போது 12-ஆம் வகுப்பாக மாற்றுவார்களோ? என்னைப் பொருத்தவரை இம்மாதிரி பொதுக் கல்வியின் காலகட்டத்தை அதிகரிப்பது நல்லதல்ல. உதாரணத்துக்கு பத்தாம் வகுப்பில் கணக்கு வராதவர்கள் வேறு குரூப்புகளுக்கு போக முடிந்தது. இப்போது அவர்களுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் சித்திரவதை அதிகம்.
8. விஜய் டிவியில் (கடந்த 3 நாட்களாக) இரவு பத்து மணிக்கு ரஜினி சென்ற பாபா குகைக்கு ஜூ.வி (உ)ஆசிரியர் செல்லும் வழிப்பயணத்தை 'நடந்தது என்ன' நிகழ்ச்சியில் காட்டி வருகிறார்கள். இன்று கடைசி எபிசோட். அநேகமாக குகையைக் காட்டிவிடுவார்கள் என நினைக்கிறேன். நீங்கள் டெல்லியில் வசித்தபோது ஹரித்வார், ரிஷிகேஷ் எல்லாம் சென்றதுண்டா? பத்ரிநாத்? கேதார்நாத்? மழை, குளிர், மலைச்சரிவு என இயற்கையின் பிடியில் எப்படி அங்கேயே வசிக்கும் மக்களால் வாழமுடிகிறது?
பதில்: கேதார்நாத் போனதில்லை. மீதி இடங்களுக்கு சென்றுள்ளேன். பத்ரிநாத்தில் குளிர்காலத்தில் சாதாரண மக்கள் வாழ அனுமதியில்லை. சம்மரில் கோவில் திறக்கும் காலத்தில்தான் ராணுவத்தினர் அவர்களை அனுமதிக்கின்றனர். இது முக்கியமாக ராணுவம் சம்பந்தப்பட்ட விஷயம். மற்றப்படி மக்களால் எங்குமே வாழவியலும். எஸ்கிமோக்களை விடவா?
9. தினமும் வாக்கிங் எனப்படும் நடைப்பயிற்சி தவிர, எளிதாக செய்யக்கூடிய யோகா அல்லது பயிற்சி ஏதேனும்?
பதில்: யோகாவுக்கு நல்ல குரு தேவை. தேகப் பயிற்சிகளுக்கும் அவ்வாறே. எனது மனநிலைக்கு நடைப் பயிற்சியே உத்தமம்.
10. ஜூ.வி.ஆசிரியர் வெங்கடேஷ் எனப்படும் விகேஷ் - வருமானத்திற்கு அதிகமான சொத்து என கண்டுபிடித்து அனுப்பினார்களாமே ? நீதித்துறை (பி.டி.தினகரன்), பத்திரிக்கைத்துறை என எல்லா தூண்களிலும் கரையான் அரிக்க ஆரம்பித்துவிட்டதே?
பதில்: விகேஷ் விஷயமாக முன்னாள் விகடன் ஆசிரியரை சந்தித்து நான் கேட்டபோது அவர் நடந்த உண்மை விகேஷுக்கும் விகடன் மேலிடத்துக்கும் மட்டுமே தெரியும் எனக் கூறிவிட்டார். விகேஷை சில மாதங்களுக்கு முன்னால் நான் வேறு விஷயமாக ஒரே ஒரு முறை சந்தித்துள்ளேன். அவ்வளவே.
மற்றப்படி ஊழல் புகார் இப்போது எந்த துறையையுமே விட்டுவைப்பதில்லை. வருவாய்க்கு மீறிய சொத்து என்பது சாதாரணமாக அவமானமாகக் கருதப்படாததே காரணம். பணம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.
அனானி (24.09.2009 பிற்பகல் 03.40-க்கு கேட்டவர்)
1. What is your view/comments on Umberto Eco’s view in Guardian about good handwriting?
பதில்: எந்த ஒரு திறமையுமே அதன் தேவை இருக்கும்வரை மட்டுமே போற்றப்படும். முன்பெல்லாம் பத்திரம் எழுதுபவர்கள் என்று ஒரு ஒரு தனி குழாமே இருந்தது. அவர்கள் எழுத்துக்களை கம்பீரமாகத் தோன்றுமாறு எழுதுவார்கள், முக்கியமாக லத்தீன எழுத்துகளில். இப்போது அந்த எழுத்துக்கள கணினிமயமாக்கப்பட்டு யார் வேண்டுமானால் தட்டச்சிட வசதியுடன் வந்து விட்டது. இப்போதெல்லாம் அலுவலகங்களில் ஸ்டெனோ டைப்பிஸ்டுகளை பார்க்க முடிகிறதா எனத் தெரியவில்லையே. ஒரு வேளை அரசு அலுவலகங்கள், நீதி மன்றங்கள் ஆகிய இடங்களில் மட்டுமே மட்டுமே நாம் மெகானிகல் தட்டச்சுப் பொறிகளை பார்க்கவியலும் என நினைக்கிறேன். எல்லாம் கணினியிலேயே அடித்து வன்தகட்டில் சேமித்தும் வைக்க முடியும்போது ஸ்டெனோக்கள், டைப்பிஸ்டுகள் தேவை அனேகமாக மறைந்தே விட்டது என்றே கூறலாம். அதே போலத்தானே கையெழுத்தில் எழுதுவதும்? இனிமேல் எதிர்காலத்தில் வேறு வகையான தேவைகளுக்கு அத்திறமைகள் மீண்டும் தேவைப்படலாம் யாரே அறிவர்? பை தி வே, நாங்கள் பொறியியல் கல்லூரியில் படித்தபோது உபயோகித்த ஸ்லைட்ரூல்கள் எங்கே போயின?
2. எஸ்ரா, பாரா, இரா அடுத்து நராவிற்கு வாய்ப்பு வருமா?
பதில்: நராவா அது யார்? அவரை நான் நேரில் பார்த்ததே இல்லையே?
கிறுக்கன்
1. ஆன்மீகத்தின் எல்லை எது? (அனுபவத்தில், சாதாரண மனிதனுக்கு)
பதில்: அமைதி, பேரமைதி, எல்லோருக்குமே.
2. குடும்பத்திற்காக ஆண்மகன் எதையெதை விட்டுக் கொடுக்கலாம்?
பதில்: குடும்பத்தின் நியாயமான ஆசைக்காக வேண்டுமானால் விட்டுக் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் அதே சமயம் தன்னை மெழுகுவர்த்தியாக எல்லாம் கருதிக் கொண்டு தன்னை வருத்தி செயல்படுவது அனாவசியம். குடும்பத்திலுள்ள மற்றவர்களும் பொதுக் கஷ்டத்தை உணர்ந்து தத்தம் பொறுப்புகளை சுமக்கச் செய்ய வேண்டும்.
சுதாகர்
//எனது ஆட்சியில் ”பொதுப் பணித்துறை“ அமைச்சராக நீ இருந்தபொழுது, “பொதுப்பணியை“ கவனிக்காமல், “கலைப்பணி“ யில் ஈடுபட்டு, “காகிதப்பூ“ கதாநாயகியை கர்ப்பிணியாக்கி நான் சொன்னதால், இரண்டாவதாக மணம் புரிந்ததையும் நான் அறிவேன்.//
இது உண்மையா?
பதில்: உண்மையா பொய்யா என்பது சம்பந்தப்பட்டவரது தனிப்பட்ட பிரச்சினை. கண்டிப்பாக வெளி ஆட்கள் அதைப் பற்றிப் பேசலாகாது. இந்த பதிலைத் தரவேண்டும் என்பதற்கு மட்டுமே இந்தக் கேள்வியை அனுமதித்தேன்.
ரமணா
1. தண்ணீர் கட்டணம் கட்டுகிறோம் ஆனால் குழாயில் குடி தண்ணிர் வரவில்லையே?
பதில்: கோர்ட்டில் பொதுநலவழக்கு போட்டு சொத்துவரி வாங்காமல் இருக்க ஸ்டே வாங்கலாம். பலர் பலமுறை செய்துள்ளனர். முக்கியமாக அறுபதுகளில் பழைய மாம்பலவாசிகள் செய்துள்ளனர். வெற்றியும் பெற்றுள்ளனர்.
2. குளத்தை,கால்வாயை தூர்வாரியதாய் செய்தி போட்டு விழாவும் எடுகிறார்கள் ஆனால் மழைகாலத்தில் அவையெல்லாம் பல்லிளிக்கின்றனவே?
பதில்: தகவல் அறியும் சட்டம், பொதுநல வழக்கு.
3. பட்டவர்த்தனமாய் பகல் கொள்ளையாய் லஞ்சம் வாங்கும் தமிழக அரசு (அரசு கொள்ளை கொள்ளையாய் 6 வது ஊதியக் குழுவில் கொட்டிக் கொடுத்த பிறகும்) பத்திரப்பதிவுத் துறை, போக்குவரத்துத் துறை, ரெவினியு துறை,நெடுஞ்சாலைத் துறை, மின்பகிர்மானத்துறை, ரேசன் கடைகள்) ஊழியர்களில் ஒரு பகுதியினர் செய்யும் ஊழல்கள்
பதில்: பத்திரிகைகளில் எழுதுதால், குறிப்பிட்ட உதாரணங்களுடன், பொதுப்படையாக அல்ல.
4. பேட்டை தாதாக்கள் போல் கப்பம் வாங்கும் ஒரு சில அரசுத்துறைகள்
பதில்: பொதுநல வழக்கு
5. எதுவும் செய்யாமல் தன் வயிறு வளர்க்கும் அரசியல் சுரண்டல் பெருச்சாளிகள்?
பதில்: தில் இருந்தால் (பை தி வே மேலே சொன்ன கேள்விகள் சம்பந்தமான நடவடிக்கைகளிலும் அந்த தில் தேவைதான்) பத்திரிகைகளுக்கு தகவல் தரலாம்.
6. உணவுப் பொருட்களை பதுக்கி விற்கும், பகாசுரக் கொள்ளையர்கள்
பதில்: அன்னியன் வெப்சைட் அப்படியே உள்ளதா?
7. நச்சு கலந்த வேதியப் பொருட்களை குடி தண்ணிரில் கலக்கும் கயவர்கள்?
பதில்: அன்னியன்?
8. காற்றினை மாசுபடுத்தும் கல்நெஞ்சக்காரர்கள்?
பதில்: அன்னியன். அவர்களையும் அதே காற்றை அதிக அளவில் சுவாசிக்க விடவேண்டும்.
9. மரபுஅணு மாற்றத்தோடு இந்திய விவசயத்தை குழி தோண்டி புதைக்க நினைக்கும் அறிவு ஜீவிகள்?
பதில்: மக்களின் விழிப்புணர்வை தூண்ட வேண்டும்.
10. பொய்யான போலி விளம்பரம் தந்து தன் சொத்தை பெருக்கும் பேராசைக்காரர்கள்?
பதில்: இம்மாதிரி விளம்பரங்கள் மக்களது பேராசை உணர்வுக்கு தீனிபோட்டே வளர்கின்றன. எதுவுமே வாழ்க்கையில் இலவசம் இல்லை என்னும் அறிவு மக்களிடம் வளர வேண்டும். அது இல்லாதவரைக்கும் இம்மாதிரி ஏமாற்றங்கள சகஜமே.
இவ்வாரத்துக்கான பதில்களுக்கான பதிவு திங்களன்றே ஃபைனலைஸ் செய்யப் பட்டு முன்னமைவு கொடுக்கப்பட்டு விட்டது. 32 கேள்விகள் கேட்கும் அனானி புதனன்று கேட்டதாலும், அவரது கேள்விகள் நான் அன்றையதினம் பெரிய துபாஷி வேலைக்கு செல்வதால் பதிலளிக்க நேரம் இல்லாததாலும் என்பதாலும் அவற்றை அடுத்த பதிவுக்கு கொண்டு செல்கிறேன். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஷார்ஜா புத்தகவிழாவில்…
-
ஷார்ஜா புத்தகவிழாவில் மலையாள- ஆங்கில எழுத்தாளராக டி.சி.புக்ஸ் (மலையாளம்)
சார்பில் கலந்துகொள்கிறேன். எட்டாம்தேதி காலையில் ஷார்ஜா. பத்தாம்தேதி
மாலையில் ஒரு ச...
6 hours ago
26 comments:
Given a choice where would you like to live among these three places
1. Munich
2. Then thirupperai
3. Triplicane
1.மத்திய பல்கலைகழகம் திருவாரூரில் அமைவதால் என்ன நண்மை? அந்த கல்லூரியில் என்ன பாடங்கள் சொல்லி தருவார்கள்.
2.இம்முறை ஏன் பதிவர் சந்திப்பு பதிவு போடவில்லை
ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு சீனாவர சீன அரசு விசா தேவை இல்லை என்று சொல்லி இருக்கிறதே , உங்கள் கருத்து என்ன?
http://www.hindu.com/2009/10/01/stories/2009100156021200.htm
//லினக்ஸில் ஈடுபட இன்றுவரை சற்றே பிரத்தியேக கணினி அறிவு தேவைப்படுகிறது.//
உண்மைதான் சார். யாராலும் மறுக்க முடியாது.
//இந்த மனத்தடையை உடைத்து விட்டால் லினக்ஸ் வருவதற்கு ஒரு தடையும் இல்லை. //
உங்களை மாதிரி அனைவரும் Open-minded (ready to entertain new ideas/ Willing to consider new and different ideas or opinions) ஆக இருந்துவிட்டால் இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லது.
ஐயா. உங்கள் பதிலுக்கு நன்றி.
சிட்டுகுருவி லேகியம் ருசித்துண்டா?
//வைரல் ஜுரங்களுக்கு ஓய்வு மட்டுமே தேவை. எங்கள் டாக்டர் அதைத்தான் சொன்னார்.//
பிழைக்க தெரியாத டாக்டர்!
//இத்தனை வருடங்களாக இருந்த மனப்பாடம் முறைதானே நமது நாட்டு மாணவர்களுக்கு இளைஞர்களுக்கு இவ்வளவு உயரம் செல்ல உதவியிருக்கிறது.//
சைக்கிள், பைக், கார் எப்படி ஓட்ட வேண்டுமென்று மனப்பாடம் செய்து கொள்வார்களோ!
//நச்சு கலந்த வேதியப் பொருட்களை குடி தண்ணிரில் கலக்கும் கயவர்கள்?
பதில்: அன்னியன்?//
இதெல்லாம் சாடிஸ்ட் அல்லது தீவிர மனநோய் தான்!
அந்நியனை வெப்சைட்டில் தான் தேட முடியும்!
நேரில் அனைவரும் கை சூப்பும் அம்பிகள் தான்!
பார்த்த இடத்திலேயே கட்டி வைத்து உதைத்தால் ஒழுங்காக இருப்பார்கள்!
தனியாக செய்தால் குற்றம்
கூட்டமாக செய்தால் கலவரம்!
குற்றம் செய்யாதீர்கள்!
பிராமண குடும்பங்களில் கூட இது மாதிரி நடக்க ஆரம்பித்துவிட்டதே ?
http://thatstamil.oneindia.in/news/2009/10/01/tn-chennai-double-murder-police-arrest-accuseds.html
Comment in the site
பதிவு செய்தவர்: ஏதேதோ
பதிவு செய்தது: 01 Oct 2009 11:44 am
ஆனந்டலக்ஷ்மி சாக வேண்டிய பொம்பளை தான்..நள்ளிரவு நேரம் அவளுக்கு இத்தனை பேருடன் மணிக்கணக்கில் என்ன பேச்சு வேண்டிகிடக்கு...அவள் ஒரு நடத்தை கேட்டவள் என்று நிரூபணம் ஆகிறது... எனவே அவள் சாக வேண்டிய ஜென்மம் தான்...ஆனால் அந்த சூரஜ் ரொம்ப பாவம்...ராமசுப்ரமனியும் ரொம்ப பாவம்...கடவுள் இவருக்கு நல்ல மன தைரியத்தை குடுக்கட்டும்.
???????????????
//மரபுஅணு மாற்றத்தோடு இந்திய விவசயத்தை குழி தோண்டி புதைக்க நினைக்கும் அறிவு ஜீவிகள்?//
இயற்கையை அழிக்க நினைக்கும்
முட்டாள்கள்!, நம் நாட்டின் உழைப்பை சுரண்ட நினைக்கும் அன்னிய நாடுகளின் கைகூலிகள்!
//பொய்யான போலி விளம்பரம் தந்து தன் சொத்தை பெருக்கும் பேராசைக்காரர்கள்?//
குங்குமத்தில் வரும் ”சும்மா பகவானை” தானே சொல்கிறீர்கள்!
நரா என ஒரு அனானி, நரசிம்மன் ராகவனைக் குறிப்பிட்டார் என நினைக்கிறேன்
எம்.கண்ணன்.
கேள்விகள்:
1. வரலாறு, புவியியல் என முன்பெல்லாம் பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் தனியாக பரீட்சைகள் இருந்தது. தற்போது சமூக அறிவியல் (Social Science) என ஒரே பரீட்சையாகவும் வரலாறுக்கு முக்கியத்துவத்தை குறைத்துவிட்டனரா ? சேரர், சோழர், பாண்டியர், அசோகர், பாபர், அக்பர் என தற்போது சிறார்கள் படிப்பதில்லையா ?
http://www.textbooksonline.tn.nic.in/
2. கோயில் கருவறைக்குள் குஜால் என்றெல்லாம் ஜூவி கவர் ஸ்டோரி போடுகிறதே ? அதுவும் பலான சிடி படங்கள் எல்லாம் காட்டி ? இதுமாதிரி (அல்லது பாதிரியாரின் செக்ஸ் சம்பந்தப்பட்ட கட்டுரைகள்) செய்திகள் அதிகம் வெளியாவதால் தான் மக்களும் பலவித செக்ஸ் வக்கிரங்களுக்கு தூண்டப்படுகிறார்களா ?
3. வாத்தியார் சுப்பையா சார், ஸ்வாமி ஓம்கார், சாரு நிவேதிதா (நித்யானந்தர்) - யாருடைய ஜோதிட / ஆன்மீக பதிவுகள் சுவாரசியமாக இருக்கிறது (உங்களைப் பொறுத்தவரை) ? யாருடைய எழுத்து நல்ல நடை ? படிக்க சுவாரசியம் ? (விஷயங்களில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம் / இல்லாதிருக்கலாம் - அது வேறு) ? யாருடைய பதிவுகளில் இருந்து பல நல்ல விஷயங்கள் தெரிய வருகிறது ?
http://classroom2007.blogspot.com/
http://vediceye.blogspot.com
http://www.charuonline.com
4. மகாராஷ்டிர தேர்தலில் அதிமுக 2 இடங்களில் போட்டியிடுகிறதே ? தாராவி / மாதுங்கா / சயான் தமிழர்களை நம்பித்தானே ? ஜெயலலிதாவோ இன்னும் கோட நாட்டை விட்டே வர மனமில்லை. இப்படி இருக்கையில் மும்பையில் போட்டியிட்டு என்ன ஆகப் போகிறது ? அங்கிருக்கும் தமிழர்கள் எல்லாம் எதற்காக அதிமுகவுக்கு ஓட்டுப் போடவேண்டும் ? ஒரு அவசரம் உதவி என்றால் அவர்களுக்கு உதவப் போவது லோக்கல் கட்சிகள் தானே ?
5. மகாராஷ்டிர தேர்தலில் சிவசேனா, பாஜக ஜெயித்து உத்தவ் தாக்கரே முதல்வராகிவிட்டால் - ராஜ் தாக்கரே என்ன செய்வார் ? சென்றவாரம் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் அர்நாப் கோஸ்வாமி கேட்ட ஆங்கிலக் கேள்விகளுக்கு முழுவதும் மராட்டியில் பதிலளித்த (ஆங்கிலம் தெரிந்திருந்தும்) ராஜ் தாக்கரே போன்ற மொழி வெறியர்கள் ஏதாவது ஒரு வகையில் மும்பை சாமானியர்களுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனரே ? மக்கள் பாடம் புகட்டுவார்களா ?
http://www.timesnow.tv/Frankly-Speaking-with-Raj-Thackeray---Part-1/videoshow/4328082.cms
இதில் மருமான் ராஜ் தாக்கரே, மகாராஷ்டிராவின் ஜின்னா என பால் தாக்கரே அறிவித்துள்ளாரே ? பிள்ளைப் பாசம் இந்தளவுக்கா ?
http://timesofindia.indiatimes.com/news/india/Raj-Thackeray-is-Jinnah-of-Maharashtra-Saamna/articleshow/5074257.cms
6. சீனாவில் மாவோவின் பேரன் ராணுவத்தில் முக்கிய பதவியிலும், அரசியல் கமிட்டியிலும் முக்கிய பதவிக்கு வந்திருப்பது - சீனாவிலும் வாரிசு அரசியல் என்பதைத் தானே காட்டுகிறது ?
http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6845441.ece
http://beta.thehindu.com/news/international/article27209.ece
7. தற்போது சாதாரண போஸ்ட் கார்டு, இன்லேண்ட் லெட்டர் போன்றவற்றின் விலை என்ன ? சமீபத்தில் யாருக்கேனும் கார்டில் கடிதம் அனுப்பியதுண்டா ?
http://www.indiapost.gov.in/Netscape/MeghdootPC.html
8. ஐடிபிஎல் போன்றே ஏர் இண்டியாவும் மறைய விட வேண்டும் என்றெல்லாம் கட்டுரையாளர்கள் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். உங்கள் கருத்து என்ன ? ஐடிபிஎல் என்ன செய்திருக்கவேண்டும் ? ஏர் இண்டியா என்ன செய்யவேண்டும் ?
http://economictimes.indiatimes.com/Opinion/Columnists/Swaminathan-S-A-Aiyar/Let-Air-India-fade-away-like-HMT-IDPL/articleshow/4794533.cms
9. பா.ரா தவிர எல்லா எழுத்தாளர்களும் பின்னூட்டப் பெட்டி வைக்காமல் கடிதப் போக்குவரத்தையே வைத்து கடிதங்களையும் பதிவுகளை வெளியிட்டு பதிவு எண்ணிக்கை அதிகரித்துக் கொள்கிறார்களே ?
10. காந்திஜி, லதா மங்கேஷ்கர் போன்ற பலர் தமிழில் எழுதவும் தெரிந்து வைத்திருந்தார்களே (விகடன் பொக்கிஷம்) - தமிழ் மீது அவர்களுக்கு என்ன அப்படியொரு பாசம் ?? (அப்பாடா காந்தி பிறந்த நாள், லதா 80 இரண்டையும் சேர்த்து கனெக்ட் பண்ணியாகிவிட்டது)
சார் அப்படியே இதற்குமொரு பதில் சொல்லிவிடுங்கள்!! வீட்டில் மகாபாரதம் புத்தகத்தைப் படிக்ககூடாது என்கிறார்களே? எந்தளவுக்கு உண்மை. நான் இரண்டு முறை படுத்த போதும் விரும்பத்தகாத அதிர்ச்சி செய்தி வந்தது. எனக்கும் அது சரியோ என்று தோன்றி விட்டது. மகாபாரதம் வீட்டில் படிக்கலாமா, கூடாதா?
1. டான் புரொனின் புதிய படைப்பான, The Lost Symbol, படித்தீர்களா? அல்லது, படிக்க வேண்டுமென எண்ணம் உள்ளதா?
2. இந்திய விமான நிறுவன ஊழியர்கள் வரிசையாக வேலை நிறுத்தம் செய்கிறார்களே, அவர்கள் கோரிக்கை சரியா (அ) அவர்களை கட்டுப்படுத்த முடியாதா?
//
ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு சீனாவர சீன அரசு விசா தேவை இல்லை என்று சொல்லி இருக்கிறதே , உங்கள் கருத்து என்ன?
http://www.hindu.com/2009/10/01/stories/2009100156021200.htm
//
அப்படி விசா இல்லாமல் செல்பவர்கள் திரும்ப வர இந்திய விசா சீனாவில் இருந்து வாங்கவேண்டும் என்று இந்தியா சொன்னால் பிரச்சனை தீர்ந்துவிடும்.
// கேடி/பேடி கண்ணன் said...
1.மத்திய பல்கலைகழகம் திருவாரூரில் அமைவதால் என்ன நண்மை? அந்த கல்லூரியில் என்ன பாடங்கள் சொல்லி தருவார்கள்.
2.இம்முறை ஏன் பதிவர் சந்திப்பு பதிவு போடவில்லை
October 01, 2009 10:10 AM
Anonymous சவ கிருஷ்ணா said...
:-)
October 01, 2009 10:11 AM/
டோண்டு சார் , வகுப்புக்கு போகாமல் ஜெர்மன் மொழி கற்று கொள்ள சில டிப்சுடன் பதிவு போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் :)
தூக்குத் தண்டனை கைதிகளுக்காக போராட்டம் நடத்த: ஒரு மில்லியன் டாலர்கள்
துலுக்கத் தீவிரவாதிகளை விடுவிக்க போராட்டம் நடத்த: 500000 டாலர்கள்.
கவர்மெண்ட் கட்டும் அணைகளை கட்டக்கூடாது என்று போராட்டம் நடத்த: 250000 டாலர்கள்.
மோடிக்கு எதிராக போராட்டம் செய்ய: வெறும் 100000 டாலர்கள் மட்டுமே
புத்தாண்டு சிறப்பு சலுகை 50% டிஸ்கவுண்டுடன் கூடிய பாக்கேஜ் உண்டு.
அழைக்கவேண்டிய நபர்கள்:
அருந்ததி சுசான்னா ராய்
எஸ்.ஏ.ஆர்.கீலானி
டீஸ்டா செடல்வாத்
பாகிஸ்தானிலிருந்து போன்கால்கள் இலவசம்.
சுவிஸ்வங்கி நிர்வாகம் மத்திய அரசு விண்ணபித்தால் இந்திய பகாசூரக் கொள்ளையர்கள் களத்தனமாய் சேர்த்து வத்துள்ள 70 லட்சம் கோடிகள்(வல்லான் பொருள் குவிப்பு அல்ல இது- வழிப்பறி,மொள்ள மாறித்தனம்,மக்களின் உழைப்பை உறிஞ்சிய அட்டைக் கூட்டம், வரிஏய்ப்பு வல்லூறுகள்)பற்றிய தகவல் தரத்தயார் என் அறிவித்துள்ளதே!
1.என்ன நடக்கும்?
2.இதுவும் இன்னொரு கீரி-பாம்பு சணடை காட்டுவேன் என சொல்லி 100 ஆண்டுகளாய் வேடிக்க பார்க்க கூடும் பாமர மக்களை ஏமாற்றும் குறளி/மோடி வித்தையா?
3.இந்த சுநலமிகளுக்கு தெய்வ தண்டனையாவது கிடைக்குமா?
(அரசன் அன்று கொல்வான்,தெய்வம் நின்று கொல்லும்)
4.இவர்கள் அநீயாமாய் சேர்த்த அட்ட கருப்பு பணம் இவர்களுக்கும் இவர்கள் சந்ததியினருக்கு உதவமால் போக என்ன நடந்தால் நல்லது?
5.வால் பையனின் கருத்து இதில் என்னவாயிருக்கும்?
எல்லா கேள்விகளும் பதில்களும் அருமை.
1.Who is more dengerous to World peace u.s.a or china ?why?
2.Female population always less than male population reason?
3.There is H2O in the moon. will you want to go & live there?
4. tell does LOVE needs SACRIFICE ?
5.Does your childhood deeds still haunt you ?
Dondu Sir, from your point of view, could you explain more on the below topic.
http://www.dinamalar.com/new/General_detail.asp?news_id=17529
Anbudan
Raghav.
1.பரிசுகளை வென்றுள்ள திரைப்படங்களில் 98 சதவிகித திரைப்படங்களின் டிவி ரைட்ஸ்கள் கலைஞர் டிவியிடம்தான் உள்ளனவாம். திரைப்படங்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கியதால் அவர்களுக்கு பரிவு காட்டும் பொருட்டு இந்த ஏற்பாடு?
2.யாருக்காக யாரால் ஆட்சி செய்யப்படுகிறது?
3.ஜீ தமிழ்த் தொலைக்காட்சியும், சன் தொலைக்காட்சியும் ஒரே நாளில் அரை மணி நேர வித்தியாசத்தில் 'சுப்பிரமணியபுரம்' திரைப்படத்தை ஒளிபரப்பியதில் இருக்கும் மர்மம்?
4.'பூ' பார்வதியையும், 'பொம்மலாட்டம்' ருக்மணியையும் தாண்டி த்ரிஷாவுக்கா?
5. கமலஹாசனின் 50 ஆண்டு திரையுலக வாழ்க்கை?
1Dmk leader mr.karunanithi has donated his gopalapuram house for the use of hospital for the treatement of poor people.His sons have given their consent for this . what is your comment for this?
2.Is saratkumar going to the dmk fold once again?
3.will ramadoss join with dmk again?
4.why jeyalaitha is doing all to damage the admk?
5.it seems the tamil nadu will be ruled by dmk for ever.is it true?
( based on state govt employees'100 %support,huge money power,huge cadre power,free schems,free medical help to poor, strong allainace,weak admk)
@Rajan & anonymous
Replies will come in the post for the 15th October 2009.
Regards,
Dondu N. Raghavan
1.கந்து வட்டி பிசினஸ்காரர்கள்,பதுக்கல் வியாபாரம் செய்பவர்கள் ,அடுத்தவர் சொத்தை அபகரிக்கும் எத்தர்கள்,அரசுக்கு வரிக்ட்டமால் ஏய்ப்பு செய்யும் களவாணிகள்,வாங்கும் சமபளத்திற்கு நியாயமாய் வேலை செய்யமால் லஞ்சம் வாங்கும் கபோதிகள்,நியாயமற்ற அரசியல் வாதிகள்,இவர்களில் ஒரு பகுதியினர் திருப்பதி வெங்கடாசலபதியை பார்ட்னராய் பாவித்து வரும் கொள்ளையில் ஒரு பகுதியை கோவில் உண்டியலில் போடும் செயல் பற்றி உங்கள் கமெண்ட்?
2.இது மாதிரி நம் மாநிலத்தில் நடை பெறும் ஒரு செயலாய் எதை சொல்வீர்கள்?(அரசியல் சம்பந்தப்பட்டது)
3.இலவசம் கொடுத்து இளிச்சவராய் ஆக்கும் போக்கு பற்றி?
4.உலகவெப்பமயமாதலின் இயற்கையின் கோபம்தான் ஆந்திர கர்நாடக வெள்ளமா?
5.ஒருகிலோ அரிசி ரூபாய் 100 ஆந்திராவில்,இனி?
Post a Comment