8/18/2011

டோண்டு பதில்கள் - 18.08.2011

ரமணா has left a new comment on your post "டோண்டு பதில்கள் - 04.08.2011":

கேள்வி-1. கருணாநிதியின் குடும்பத்தில் அதிக கலக்கத்தில் யார்?
பதில்: கருணாநிதி, obviously.

கேள்வி-2. வைகை புயல் வடிவேலு ?
பதில்: புயலே புயலில் காணாமல் போகும் நிலை.

கேள்வி-3. தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமைதி?
பதில்: இவ்வாறு இருப்பது அவரது அரசியல் எதிர்காலத்துக்கு உகந்ததல்ல

கேள்வி-4. தமிழக அரசின் முதல் பட்ஜெட் எப்படி?
பதில்: இலவசங்களை அறிவிக்கும் நிர்ப்பந்தம், ஆகவே அடுத்த பட்ஜெட்டில்தான் சரியான நிலையை அவதானிக்க இயலும்.

கேள்வி-5. சென்னை சிங்கப்பூராயிடும் போலுள்ளதே?
பதில்: நிறைய சீனாக்காரங்க வந்து குடியேறினால்தான் உண்டு.

கேள்வி-6. சமச்சீர்கல்வி என்னவாகும்?
பதில்: எல்லோரையும் சமமாக கீழே கொண்டு செல்லாதிருக்கும்வரை இது ஆதரவுக்குரியதே.

கேள்வி-7. நில அபகரிப்பு வழக்குகள் சரியா?
பதில்: பழி வாங்கும் நோக்கத்தில் இல்லாது, செய்த குளறுபடிகளை திருத்துவதாக இருக்கும் பட்சத்தில், அதாவது அழகிரி அண்ட் கோவுக்கு தண்டனை கிடைக்கும் பட்சத்தில் அவை சரியே

கேள்வி-8. மத்திய அரசு இன்னும் எத்தனை நாள் தாக்கு பிடிக்கும்?
பதில்: கூட்டுக் களவாணிகள் ஒரேயடியாக பிய்த்துக் கொண்டு போகாத வரைக்கும் தாக்கு பிடிக்கும்.

கேள்வி-9. அன்னா ஹாசாரேவை தேர்தல் வம்புக்கு இழுக்கும் காங்கிரஸ் ?
பதில்: அன்னா ஹசாரேவை எதில் சேர்ப்பது என்பது எனக்குப் புரியவில்லை.

கேள்வி-10. அரிசி, ஆடு, மாடு, கிரைண்டர், மிக்ஸி, பேன், லேப்டாப், தாலிக்கு தங்கம் அடுத்து?
பதில்: ரூம் போட்டாவது யோசித்து மேலும் இலவசங்களை அதிகரித்தாலும் வியப்படைவதற்கில்லை.

pt has left a new comment on your post "டோண்டு பதில்கள் - 11.08.2011":
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-11. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள கடைசி பாதாள அறையைத் திறந்தால், கோயில் பொக்கிஷங்கள் கொள்ளை போகும் ...
பதில்: பத்மநாபசாமியின் அருள் இருந்தால் எல்லாம் நல்லபடியாகவே முடியும் என நம்புகிறேன்.

கேள்வி-12.  தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளி விலை ஏற்றத்தால் எரிச்சல்
பதில்: மிகவும் கவலையளிக்கக் கூடிய செய்திதான் இது.

கேள்வி-13. லண்டனில் ஆரம்பித்த கலவரம் மற்ற ஊர்களுக்கு பரவி, இங்கிலாந்து தேசமே எரிந்து கொண்டிருப்பதாக செய்திகள் ஒளிபரப்பாகின்றன.
பதில்: சமீபத்தில் 1968-ல் பாரீசிலும் இப்படித்தான் கலவரம் மூண்டது. காலனி ஆதிக்க செய்த நாடுகள் பல சரித்திர காரணங்களுக்காக முன்னாள் காலனி மக்களுக்கு தத்தம் நாட்டில் குடியுரிமை அளிக்க வேண்டியிருக்கிறது. பல முறை கலாச்சார மோதல்கள் நடக்கின்றன, சில சமயங்களில் இம்மாதிரி கலவரங்களாக மாறுகின்றன.

கேள்வி-14. புத்தகங்களில் கிழித்தல், திருத்தல் தீவிரம் 16ம் தேதி முதல் சமச்சீர் பாடம்
பதில்: முதலிலேயே அரசு செய்திருக்க வேண்டிய விஷயம் இது. தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்த்திருக்கலாம்.

கேள்வி-15. தெலுங்கானா மாநிலம் அமைக்க தற்கொலைக்கு தயார் - விஜயசாந்தி
பதில்: யாருடைய தற்கொலைக்கு அவர் தயாராம்?

கேள்வி-16. IS INDIA HEADED INTO A RECESSION?
பதில்: அதைத்தான் நானும் அஞ்சுகிறேன்.

கேள்வி-17. CAN TECHNOLOGY BE BLAMED FOR THE LONDON RIOTS?
பதில்: தொழில்நுட்பம் என்பது நடுநிலைமை வகிப்பது. அதை பயன்படுத்துவோரை பொருத்துத்தான் நன்மை தீமை எல்லாம்.

கேள்வி-18. DO YOU THINK ANNA WILL WIN THE WAR AGAINST 750 PARLIAMENT MEMBERS ON LOKPAL BILL?
பதில்: No.

கேள்வி-19. RAJA'S REVELATIONS IN 2G SCAM: IS PM'S INTEGRITY QUESTIONED?
பதில்: பிரதமரது நாணயத் தன்மை எப்போதிலிருந்தே சந்தேகத்துக்குரியதாகி விட்டதே, இப்போ என்ன புதிதாக நடந்து விட்டது?

கேள்வி-20. DO YOU THINK INDIANS ARE MORE INFLUENCED BY WESTERN BRANDS?
பதில்: மேல்நாட்டு மோகம் பல இந்தியர்களை ஆட்கொண்டுள்ளது. அவர்களுக்கு உங்கள் கேள்வி பொருந்தும்.

மீண்டும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11 comments:

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.ஊழல் புரிந்தவர்களுக்கும் திகார்; அதை எதிர்ப்பவர்களுக்கும் திகாரா?
2.திராவிடக் கட்சிகளுடனான கூட்டணிக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: ராமதாஸ்
3.முதல்வருடன் சேர்ந்து நிற்போம்: வைகோ
4.ஊழலை ஒழிக்க மந்திரக்கோல் எதுவும் இல்லை: பிரதமர்
5.
வெளிநாட்டவர் பணிபுரிய சிங்கப்பூரில் கடுமையான விதிமுறைகள்

கோகுல் said...

அன்னா ஹாசாரேவை தேர்தல் வம்புக்கு இழுக்கும் காங்கிரஸ் ?
பதில்: அன்னா ஹசாரேவை எதில் சேர்ப்பது என்பது எனக்குப் புரியவில்லை//

புரியாத புதிராகத்தான் இருக்கிறார்.

ரமணா said...

1.ஊழல் எதிர்ப்பு வலுக்கிறதே நாடு முழுவதும் என்னவாகும்?
2.கபில் சிபில் அவர்களின் சமீபத்திய பேட்டிகள் பற்றி?
3.அதிமுக தலைவியின் திடீர் குற்றச்சாட்டு மத்திய அரசு மீது சரியா?
4. காங்கிரசின் அதிரடி தலைவர் இளங்கோவனின் அதிரடி சமீபத்திய பேச்சுகள்?
5.ரசிகனால் கட்டபட்டுள்ள எம்ஜிஆரின் கோவில் பற்றி?

Simulation said...

//அன்னா ஹசாரேவை எதில் சேர்ப்பது என்பது எனக்குப் புரியவில்லை.//

அண்ணா ஹசாரே பற்றி 'சோ' குழப்பமாக இருப்பதால் உங்களுக்கும் குழப்பமாக உள்ளதா?

Arun Ambie said...

//கேள்வி-5. சென்னை சிங்கப்பூராயிடும் போலுள்ளதே?
பதில்: நிறைய சீனாக்காரங்க வந்து குடியேறினால்தான் உண்டு.//
காமெடியான கேள்விக்கு சீரியஸான பதில்.... :)

pt said...

Please read it & pass on to everyone you know .

A couple lost their 25year old son, Arun Gopal Ratnam, in a fire at home on June 4th. The son who had graduated with MBA from the University of Wisconsin-Madison two weeks earlier had come home for a while. He had lunch with his dad at home and decided to go back to clean up his hostel room. His father told him to wait, to meet his mother, before he went back for a few days. Arun decided to take a nap while waiting for his mom to come back home from work.

Some time later their neighbors called 911 when they saw black smoke coming out of the house. Unfortunately, 25 years old Arun died in the house. It took several days of investigation to find out the cause of the fire. It was determined that the fire was caused by the lap top resting on the bed.

When the lap top was on the bed cooling fan did not get the air to cool the computer and that is what caused the fire. He did not even wake up to get out of the bed because he died of breathing in carbon monoxide.

The reason I am writing this to all of you is that I have seen many of us and also our sons & daughters using the lap top while in bed and in the Arabic mattress salon . Let us all decide and make it a practice not to do that. The risk is real. Let us make it a rule not to use the lap top on bed or on the Arabic mattress with blankets and pillows around.



PLEASE EDUCATE YOUR NEAR AND DEAR ALSO AS MANY AS YOU CAN.

dondu(#11168674346665545885) said...

//அண்ணா ஹசாரே பற்றி 'சோ' குழப்பமாக இருப்பதால் உங்களுக்கும் குழப்பமாக உள்ளதா?//

ஆமாம், ஏனெனில் சோவின் வாதங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவையே.

அதே சமயம் ஜெயமோகன் சொல்வதையும் அலட்சியப்படுத்த முடியாதுதானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

thenkasi said...

இந்தப் பாடல் வரிகளுக்கு நிகழ்கால அரசியல்/பொருளாதார‌ சூழ்நிலையின் அடிப்படையில்டோண்டு அவர்களின் விளக்கம் என்ன?

1)"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்"


2)"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெரும்"


3)"கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்"


4)"கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்"

தஞ்சை இரா.மூர்த்தி said...

அண்ணா அசாரே: சுற்றுலா போராட்டமா? சுதந்திர போராட்டமா?

http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_20.html

அண்ணா அசாரேவின் மறுபக்கமும் மேட்டுக்குடிகளின் வலிக்காத போராட்டமும்!

http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_19.html

pt said...

Who is Anna Hazare?

Anna Hazare is a Padma Bhushan-awarded, 72-year old social activist from Maharashtra.
What is known about his early life?

Anna started his career as a driver in the Indian Army. He also fought in the 1965 Indo-Pak war. After voluntary retirement from the army, Hazare came to Ralegaon Siddhi village in Maharashtra and engaged himself in the activities of social welfare.

What have been his special achievements?

He built a self-sustained model village called Ralegan Siddhi (District Ahmednagar, Maharashtra). In 1975, it was village replete with poverty and devoid of development. Anna helped in tackling problems of alcohol addiction, untouchability in the village. He revived the agricultural practices in the village. Ralegan Siddhi is now one of the richest villages in India. It has become a model for self-sustained, eco-friendly & harmonic village.
What is he campaigning for now?

On April 5 2011, Hazare started a 'fast unto death' to exert pressure on the Government of India to enact a strong anti-corruption act and constitute an independent body called the Office of the Jan Lokpal which would have the power to prosecute corrupt politicians and government officials without seeking permission from the government.

The bill has been drafted by the members of civil society.

Will he be able to bring a change?

Most likely he would be able to bring about a drastic change. Because, last time when Anna sat on fast -

* 6 corrupt ministers in Maharashtra had to resign
* 400 corrupt officers were dismissed from job
* 2002 - Maharashtra RTI Act was passed
* 2006 - Central Government withdrew its proposal to amend Central RTI Act (MensXP.com)

ரமணா said...

6.லாரி ஸ்டிரைக் வாபஸ் யாருக்கு வெற்றி?
7.இளங்கலை படிப்புக்கும் அகில இந்திய நுழைவுத்தேர்வு சரியா?
8.தமிழ் புத்தாண்டு மாற்றம் பற்றிய கருணாநிதி கருத்து சொல்லும் போது ?
9.செப்டம்ர் 15ல் இலவச மழை போலுள்ளதே?
10.கருணாநிதிகட்டிய புதிய தலமை செயலகத்தை மருத்துவ மனையாக்கும் ஜெ. யின் திடீர் முடிவு எப்படி?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது