நண்பர் ஜெயமோகனது இடுகையான யோகமும் பித்தும் என்ற பதிவு எனக்குள் எழுப்பிய எண்ணங்களே இப்பதிவு. அதிலிருந்து முதலில் சில வரிகள்.
பிரக்ஞையை மழுங்கடிக்கக்கூடிய சில அம்சங்கள் உண்டு. முக்கியமானது சீரான தாளம். பிரக்ஞை என்பது பெருமளவுக்குத் தாளத்தால் கட்டுப்பட்டது. ஒரு குறிப்பிட்ட தாளத்தைக் கேட்டுக்கொண்டிருந்தால் நம்முள் பிரக்ஞையாக ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் அந்தத் தாளத்திற்கு இயைப அமைவதைக் காணலாம் –ரயில்தாளத்தில் இதைப் பெரும்பாலானவர்கள் உணர்ந்திருப்பார்கள். தாளத்துடன் ஒளியும் காட்சிகளும் இணைக்கப்பட்டிருந்தால் அது இன்னும் தீவிரமாகிறது. ஒரு தாளத்துக்கு ஏற்பப் பத்துப்பேர் நம்மைச்சுற்றி ஆடினால், அந்தத் தாளத்துக்கு ஏற்ப வண்ணவிளக்குகள் மின்னினால் நம்மை அந்தத் தாளம் ஆட்கொள்கிறது. அது பிரக்ஞைநிலையை மழுங்கடிக்கிறது.
அதை சமீபத்தில் 1968-ல் வெளி வந்த ஷிகார் என்னும் இந்தி படத்தின் இப்பாடல் காட்சியில் காணலாம். ஆஷா, பரேக், பேலா போஸ் என்னும் இரு நாட்டிய நாரீமணிகளின் அந்த ஆட்டத்தில் பாடல் வரிகள் அற்புதமான ஹிந்தியின் ஒரு வட்டார வழக்காக அமைந்துள்ளன. என்னைப் போன்றவர்களுக்கு அது கூடுதல் போனஸ். நிற்க.
அப்பாடலில் டிரம்ஸ் இசை ஆஷா பரேக்கை படிப்படியாக ஆட்கொள்வதை இப்பாடல் காட்சியில் அற்புதமாக காட்டியுள்ளனர். அவரது அவஸ்தையை தர்மேந்திரா உற்று நோக்குவதும் கதையின் போக்குக்கு உதவி செய்வதாகவே அமைந்துள்ளது. பை தி வே அப்படத்தை நான் பார்க்கவில்லை. அப்பாடலை கீழே காணுங்கள்.
அதே போல சமீபத்தில் 1964-ல் வெளி வந்த நவராத்திரி படத்தில் வரும் கூத்துப் பாடலில் ஆரம்ப வரிகள் என்னை ஒரு மோன நிலைக்கே கொண்டு செல்லும். அப்பாடலின் வீடியோ கிடைக்கவில்லை. யாருக்காவது கிடைத்தால் சுட்டி தாருங்கள் அப்பு.
நண்பர் காளிராஜ் அவர்கள் தயவால் அக்காட்சியின் வீடியோவை கீழே எம்பெட் செய்கிறேன். என்ன ஆரம்ப வரிகள் மிஸ்ஸிங். பரவாயில்லை. காளிராஜ் அவர்களுக்கு என் நன்றி.
மற்றப்படி நான் சினிமா படங்கள் சில ஏன் இன்னும் மனதில் நிற்கின்றன? என்ற தலைப்பில் நான் வெளியிட்ட செண்டிமெண்டுகள் இங்கும் பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.
காதலிக்க நேரமில்லை: சமீபத்தில் 1964-ல் வெளிவந்த இப்படத்தை பார்க்கும்போதெல்லாம் விடுமுறை மூட் வந்து விடுகிறது. கதையிலும் ராஜஸ்ரீயும் காஞ்சனா கோடை விடுமுறைக்குத்தானே வீட்டுக்கு வருகிறார்கள். நான் கூட அப்படத்தை எனது முதல் ஆண்டு தேர்வுகள் முடிந்து கடை நாள் மாலை காட்சியில்தான் அப்படம் பார்த்தேன். ஸ்ரீதர் கூறியிருந்தது போல ஒருவரும் அப்படத்தில் அழவில்லை. சோகக் காட்சியே லேது. எல்லாமே ஜாலியாகப் போயிற்று. "என்னப் பார்வை இந்தப் பார்வை, இந்தப் பார்வை" பாடல் படமாக்கப்பட்டதுதான் அப்படத்தின் கடைசி ஷூட்டிங் என கேள்விப்பட்டேன்.
கலங்கரை விளக்கம்: இப்படத்தை நான் பார்க்கவில்லை. எனது முரட்டு வைத்தியம் - 1 பாதிப்பில் நான்கு ஆண்டுகள் படம் பார்க்காது இருந்தேன். அதில் மிஸ் செய்த படங்களில் இதுவும் ஒன்று. ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கின் Vertigo (starring James Stewart, kim Novak) படத்தின் தழுவல் இப்படம். படம் ரொம்ப சுமார்தான். ஆனால் அதன் பாடல்கள் என்னை மிகவும் பாதித்தன. "பொன்னெழில் பூத்தது"என்ற பாடல் மனத்துள் இன்னும் ஒலிக்கிறது. இதனுடைய இன்னொரு பாடல் "காற்று வாங்கப் போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன், அதை கேட்டு வாங்கிப் போனாள் அந்த கன்னி என்னவானாள்" பாட்டு நான் மாலை நேரத்தில் பரீட்சையில் தோல்வியடைந்த வெறுப்பில் கடற்கரையில் பைத்தியம் போல உலவும்போது ட்ரான்ஸிஸ்டர்களிலிருந்து நான் போகுமிடமெல்லாம் என்னைத் தொடர்ந்து வந்தது. அப்பாட்டைக் கேட்கும் போது சமீபத்திய 1965 இன்னும் சமீபத்தில் வருகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
9 hours ago
6 comments:
I was told that the music director for "Kalangarai Villakkam" was MSV and it was the first movie that he did after parting with Ramamurthy. While MSV tuned many good songs later, in my opinion, he could never reach the heights of wonderful melody that MSV- Ramamurthy pair had given earlier. I also feel that KV Mahadevan, a versatile music director didn't get due credit for all his excellent carnatic raga based creations. A beautiful song tuned in by Govardhan, I guess, was "Andha Sivakami maganidam" from the movie Pattanathil Bootham. It was a sheer beauty, for Kannadasan's lyrics, soulfully sung by Suseela.
டோண்டு சார் பிடிங்க இதை ,
தங்க சரிகைச் சேலை
http://www.youtube.com/watch?v=DqWKRny75nc
-காளிராஜ்
ஐயா வணக்கம்..
இவை காலத்தால் அழியாத பொக்கிசமல்லவா...
வால்பையன்(9994500540) உங்களை அழைக்க சொன்னார்.நன்றி.
"ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்" புத்தகம் எந்த பதிப்பகத்தின் வாயிலாக வநதுள்ளது?கொஞ்சம் சொல்லுங்கள் சார்
@chandramohan
தமிழ் பதிவுக்கு தமிழில் பதில் அளிக்கலாமே?
Post a Comment